Political Column 2007 (2)

மாகாண அவைத் தேர்தலில் புதிய மக்களாட்சிக் கட்சிக்கு வாக்களியுங்கள்!

நக்கீரன்


அந்தக் காலத்தில் மன்னர்கள் மக்களை ஆண்டார்கள். தமிழர்களைப் பொறுத்தளவில் எல்லாமே மன்னன்தான். “மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” என்பது அவ்வையார் வாக்கு. மன்னன் உயிர் மக்கள் உடல் என்பது இதன் பொருள். பின்னால் வந்த கம்பர்; இந்தக் கோட்பாட்டை தலைகீழாக மாற்றிச் சொன்னார்.

வயிர வான் பூண் அணி மடங்கல் மொய்ம்பினான்
உயிரெலாம் தன் உயிர் ஒக்க ஓம்பலால்
செயிர் இலா உலகினில் சென்று நின்று வாழ்
உயிர் எலாம் உறைவது ஓர் உடம்பும் ஆயினான்.

“உயிர்களெல்லாவற்றையும் தன் உயிர்போல ஓம்புவதனாலே, இவ்வுலகில் வாழும் உயிர்கள் எல்லாம் உறைகின்ற உடம்பு ஆயினான் தசரதன்” என்கிறார்.

கிரேக்கர் உரோமர் போலல்லாது தமிழர்கள் முடியாட்சியை ஒழித்துவிட்டுக் குடியாட்சி நிறுவ வேண்டும் எனச் சிந்திக்கவே இல்லை. தமிழ் மன்னர்கள் செங்கோல் வளையாது – குடி தழீஇக்கோலோச்சியது – காரணமாக இருக்கலாம்.

இந்தக் காலத்தில் மன்னர்கள் இல்லை. அவர்கள் இடத்தில் மக்களால் தெரிவு செய்யப்படும் அரசியல்வாதிகள் மக்களை ஆட்சி செய்கிறார்கள். இப்படி மக்களால் தெரிவு செய்யப்படுவோர் ஆட்சி செய்யும் ஆட்சிமுறை மக்களாட்சிமுறை என அழைக்கப்படுகிறது.

மக்களாட்சி முறையில் பல ஓட்டை ஒடிசல்கள் இருக்கலாம். ஆனால் அதைவிட வேறு சிறந்த ஆட்சிமுறையை யாரும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. மக்களாட்சி முறைக்கு அறைகூவலாக எழுந்த தொழிலாளர்களின் சர்வாதிகார ஆட்சி (னுiஉவயவழசளாip ழக வாந pசழடநவயசயைவ) தோல்வி கண்டுவிட்டது. சோவியத் ஒன்றியம் 1990 இல் சிதறுண்டு போனபின் உலகில் வட கொரியா மற்றும் கியூபா ஆகிய நாடுகளே பொதுவுடமை நாடுகள் என அழைக்கப்படுகின்றன. சீனா அரசியலில் ஒரு கட்சி ஆட்சியையும் பொருளாதாரத்தில் முதலாளித்துவ முறையையும் கொண்டுள்ளது.

ஒன்ராறியோ மாகாண நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் எதிர்வரும் ஒக்தோபர் 10 ஆம் நாள் (புதன்கிழமை) நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்ற நான்கு கட்சிகள் போட்டியிட்டாலும் உண்மையான போட்டி ஆட்சியில் இருந்த லிபரல் கட்சிக்கும் முற்போக்கு பழைமைவாதக் கட்சிக்கும் இடையேதான் நிலவுகிறது. காலம் காலமாக இந்த இரண்டு கட்சிகளுமே மாறி மாறி ஆட்சிக் கட்டிலில் இருந்து வந்துள்ளன.

செப்தெம்பர் 21 – 25 இல் நுnஎசைழniஉள குழுமம் நடத்திய கருத்துக்கணிப்பு லிபரல், பழைமைவாதக் கட்சி, புதிய மக்களாட்சிக் கட்சி, பசுமைக் கட்சி ஆகியவற்றுக்கு முறையே 39, 34, 20, 7 விழுக்காடு ஆதரவு இருப்பதாகத் தெரிவிக்கிறது.

ஒன்ராறியோ மாகாண நாடாளுமன்றத்துக்கான 38 ஆவது பொதுத் தேர்தல் ஒக்தோபர் 2, 2003 இல் நடைபெற்றது. தேர்தலுக்கான அறிவித்தல் முன்னைய முதல்வர் ஏர்னி ஈவ்ஸ் (நுசnநை நுஎநள) செப்தெம்பர் 2 இல் விடுக்கப்பட்டது. வட அமெரிக்காவில் சடுதியாக ஏற்பட்ட மின்சார வெட்டுக்காரணமாக ஒன்ராறியோ முற்போக்குப் பழமைவாதக் கட்சியின் செல்வாக்கு அதிகரித்திருந்தது. அதை மனதில் கொண்டே ஏர்னி ஈவ்ஸ் தேர்தலை அறிவித்தார். ஆனால் அவரது எதிர்பார்ப்புக்கு மாறாக டால்ரன் மக்கின்ரி (னுயடவழn ஆஉஞரiவெல) தலைமையிலான லிபரல் கட்சி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பறியது.

கலைக்கப்பட்ட ஒன்ராறியோ மாகாண நாடாளுமன்றத்தில் இருந்த இருக்கைளின் எண்ணிக்கை 103 ஆகும். 1999, 2003 ஆண்டுகளில் நடந்த பொதுத் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

1999 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் முடிவுகள்

கட்சி
கட்சித் தலைவர்
வேட்பாளர் சூ

இருக்கைகள்
விழுந்த வாக்குகள்
1995
வெற்றி
மூ மாற்றம்
மொத்தம்
மூ
மூ  மாற்றம்

முற்போக்கு பழைமைவாதக் கட்சி
மைக் ஹரிஸ்
103
82
59
-28.0மூ
1இ978இ059
45.1மூ
ூ0.3மூ

லுpபரல்
டால்ரன் மக்கின்ரி
103
30
35
ூ16.7மூ
1இ751இ472
39.9மூ
ூ8.8மூ

புதிய மக்களாட்சிக் கட்சி
ஹாவார்ட் ஹம்ரன்
103
17
9
-47.1மூ
551இ009
12.6மூ
-8.0மூ

பசுமை
பிராங்க் டி ஜொங்
57



30இ749
0.7மூ
ூ0.3மூ
p

2003 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் முடிவுகள்

கட்சி
கட்சித் தலைவர்
வேட்பாளர் சூ

இருக்கைகள்
விழுந்த வாக்குகள்
1999
வெற்றி
மூ மாற்றம்
மொத்தம்
மூ
மூ  மாற்றம்

லிபரல்
மைக் ஹரிஸ்
103
35
72
-100மூ
2இ090இ001
46.4மூ
ூ6.6மூ

முற்போக்கு பழைமைவாதக் கட்சி
ஏர்னி ஈவ்ஸ்

103
59
24
-57.1மூ
1இ559இ181
34.6மூ
-10.5மூ

புதிய மக்களாட்சிக் கட்சி
ஹாவார்ட் ஹம்ரன்
103
9
7
-22.2மூ
660இ750
14.7மூ
-2.1மூ

பசுமை
பிராங்க் டி ஜொங்
102



126இ651
2.8மூ
ூ2.1மூ

இந்தத் தேர்தலில் பிடித்த கட்சி வேட்பாளருக்கு வாக்குப் போடுவதோடு நில்லாமல் தற்போது உள்ள கம்பத்தை முதலில் தாண்டும் (குசைளவ- Pயளவ –வாந-Pழளவ) தேர்தல் முறையா? அல்லது ஒத்தளவு கலப்பு உறுப்பினர் (ஆiஒநன ஆநஅடிநச Pசழிழசவழையெட) தேர்தல் முறையா? இதில் எதற்கு உங்களது ஆதரவு என்பதற்கான நேரடி வாக்கெடுப்பும் இடம் பெறுகிறது. எனவே வாக்காளர்கள் இரண்டு வாக்குச் சீட்டுக்களில் புள்ளடி போட வேண்டும்.
தேர்தல் முறை மாற்றி அமைக்கப்படுவதற்கு ஆதரவாக 28 விழுக்காடும் தற்போதைய தேர்தல் முறை தொடர்வதற்கு 37 விழுக்காடும் ஆதரவு காணப்படுகிறது.  35 விழுக்காட்டினர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
முதலில் வருபவருக்கு வெற்றி என்ற தேர்தல் முறை பிரித்தானிய நாடாளுமன்ற மரபை ஒட்டியது. இந்த முறை நியூசீலந்து, ஜெர்மனி, தென் ஆபிரிக்கா போன்ற நாடுகளில் ஒத்தளவு வாக்களிப்பு முறைக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
ஒன்ராறியோவை எடுத்துக் கொண்டால் மைக் ஹரிசின் கட்சி 45 விழுக்காடு வாக்குகளை மட்டும் பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால் அந்த ‘சிறுபான்மை அரசு’ வரி, சமூகப் பணிக் கொடுப்பனவு மற்றும் மாநகர அவை நிருவாகம் போன்றவற்றில் பாரிய மாற்றங்களை கொண்டு வந்தது. 1990 இல் ஆட்சியைப் பிடித்த பொப் றே (டீழடி சுயந) இன் புதிய மக்களாட்சிக் கட்சிக்கு 38 விழுக்காடு மக்களே வாக்களித்திருந்தார்கள். 1937 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பதவிக்கு வந்த ஆட்சிக்கும் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கவில்லை.
வாக்கு விழுக்காடும் பெற்ற இருக்கைகளும்

ஆண்டு
வெற்றி பெற்ற
கட்சி
வாக்கு
விழுக்காடு
இருக்கைகள்
அதிகப்படி
விழுக்காடு
1981
பழைமைவாதக் கட்சி
44.4
56.0
11.6
1985
லிபரல்
37.9
38.4
.5
1987
லிபரல்
47.3
73.1
25.8
1990
புதிய மக்களாட்சிக் கட்சி
37.6
56.9
19.3
1995
பழைமைவாதக் கட்சி
45.0
63.1
18.1
1999
பழைமைவாதக் கட்சி
45.1
57.3
12.2
2003
லிபரல்
46.5
69.9
23.4

முதலில் வருபவருக்கு வெற்றி என்ற தேர்தல் முறை சிறு கட்சிகளின் கால்களை வாரிவிடு;கிறது. எடுத்துக்காட்டாக கடந்த நடுவண் நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் பசுமைக் கட்சி 4.49 விழுக்காடு வாக்குகளை (665,000 வாக்குகள்) பெற்றும் ஒரு இருக்கை கூடக் கிடைக்கவில்லை. இது ஒரு பகுதி வாக்காளர்களை வாக்குரிமை அற்றவர்களாக ஆக்குகிறது.
2003 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 103 ஆக இருந்த தொகுதிகளின் தொகை நடுவண் அரசின் தொகுதிகளின் எண்ணிக்கைக்கு ஒப்ப 107 ஆக அதிகரித்துள்ளது. புதிய தேர்தல் முறையின் கீழ் 90 உறுப்பினர்கள் கம்பத்தை முதலில் தாண்டும் முறையின் கீழ் தெரிவு செய்யப்படுவர். மிகுதி 39 இருக்கைகள் கட்சிகளின் வேட்பாளர் பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவர். இந்தப் பட்டியல் தேர்தல் நடக்கு முன்னரே வெளியிடப்படும். மூன்று விழுக்காடு வாக்குகள் பெற்ற கட்சி மொத்த வாக்குகளில் அக்கட்சி எடுத்த வாக்குகளின் அடிப்படையில் இருக்கைகள் கிடைக்காதவிடத்து வேட்பாளர் பட்டியலில் இருந்து அந்தக் கட்சிக்குக் கிடைக்க வேண்டிய குறை இருக்கைகள் ஒதுக்கப்படும்.
தற்போது நடைமுறையில் இருக்கும் தேர்தல் முறையை மாற்றியமைக்க நேரடி வாக்கெடுப்பில் 60 விழுக்காடு வாக்காளர்களது ஆதரவு தேவை. மேலும் மொத்தத் தொகுதிகளில் (107) 60 விழுக்காடு தொகுதிகளின் ஆதரவும் தேவை.
ஆனால் தலைவலி போய் திருகுவலி வந்த கணக்காக கம்பத்தை முதலில் தாண்டும் தேர்தல் முறையை ஒத்தளவுக் கலப்பு உறுப்பினர் முறைக்கு மாற்றினால் மொத்த உறுப்பினர் தொகை 107 இல் (2007 தேர்தல்) இருந்து 129 ஆக (மேலதிகமாக 22); ஆக உயர்ந்துவிடும். அவர்களுக்கும் அவர்களது உதவியாளர்களுக்கும்  ஆகும் செலவு வாக்காளர் தலையிலேயே ஏற்றப்படும்! இப்போதுள்ள  107 தொகுதிகளை அப்படியே வைத்துக்கொண்டு எஞ்சிய 22 தொகுதிகளை ஒத்தளவு கலப்பு உறுப்பினர் முறைக்கு மாற்றுவது புத்திசாலித்தனமாக இருக்கும்.
ஒன்ராறியோ வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையைப் பயன்படுத்துவதில் அதிக அக்கறை காட்டுவதில்லை. சென்ற தேர்தலில் (2003) 56.9 (2000 – 61.3) விழுக்காட்டினரே வாக்களித்தார்கள். 1929 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இதுவே குறைந்த விழுக்காடாகும். 1980 – 2000 வரை அண்ணளவாக வாக்களிக்காதவர்கள் விழுக்காடு 50.8 (1,962,867) ஆகும்.
வாக்காளர்களது அலட்சியத்துக்கு இரண்டு காரணங்களைச் சுட்டிக் காட்டலாம். ஒன்று, வாக்காளர்கள் கவலைப்படும் அளவிற்கு ஆட்சி எந்தச் சிக்கலும் இல்லாமல் இருப்பது. எடுத்துக்காட்டு வேலையில்லாத் திண்டாட்டம். இரண்டு, போட்டியிடும் கட்சிகளுக்கிடையே
கொள்கை – கோட்பாடு பற்றிய இடைவெளி குறைவாக இருப்பது.
அரசியல் சித்தாந்த அடிப்படையில் பழைமைவாதக் கட்சியை ஒப்பீட்டளவில் ‘வலதுசாரி’க் கட்சி என வரையறை செய்யலாம். புதிய மக்களாட்சி கட்சியை ‘இடதுசாரி’க் கட்சி என வருணிக்கலாம். லிபரல் இந்த இரண்டுக்கும் இடையிலான (உநவெசளைவ) கட்சி எனக் கூறலாம்.
ஆட்சிக்கு வந்தால் தொழிலாளர்களது குறைந்த பட்ச கூலி மணித்தியாலம் 10.00 டொலராக அதிகரிக்கப் படும் என புதிய மக்களாட்சிக் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது. இதனால் தொழிலாளர்கள், குறிப்பாகத் தமிழ்த் தொழிலாளர்கள் பயன் அடைவார்கள். லிபரல் கட்சி ஆண்டொன்றுக்கு 75 சதம் என 2010 ஆம் ஆண்டு மணித்தியாலம் 10.25 ஆகக் குறைந்தபட்ச கூலி உயர்த்தப்படும் என அறிவித்துள்ளது. பழமைவாதக் கட்சித் தலைவர் யோன் ரோறி (துழாn வுழசல) குறைந்தபட்ச கூலி சரிசெய்யப்பட வேண்டும் என்பதை மட்டும் ஒத்துக் கொண்டுள்ளார். எப்படி, எந்த மட்டு என்பதைத் தெரிவிக்கவில்லை. தற்போது மணித்தியாலம் குறைந்தபட்ச கூலி 8.00 டொலர் ஆகும்.
வேடிக்கை என்னவென்றால் பிச்சைக்காரன் சத்தியெடுத்தது போல ஒரு தொழிலாளியின்  குறைந்தபட்ச மணித்தியாலக் கூலியை 75 சதம் ஆக மட்டும் உயர்த்தும் லிபரல் கட்சித் தலைவர் டால்ரன் மக்கின்ரி தனது சம்பளத்தை நத்தாருக்கு நான்கு நாள் இருக்க (டிசெம்பர் 21, 2006) 39,000 டொலராக அதிகரித்துள்ளார்! அதாவது அவரது சம்பளம் 159,620 இல் இருந்து 198,620 ஆக (25 விழுக்காடு) உயர்ந்துள்ளது. அமைச்சர்களின் சம்பளம் 126,633 இல் இருந்து 157,633 (31,000) ஆகவும்  நாடாளுமன்ற உறுப்பினர்களது சம்பளம் 88,000 இல் இருந்து 110,000 (22,000) ஆகவும் அதிகரித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இந்தச் சம்பள உயர்வை எதிர்த்து வாக்களித்த ஒரே கட்சி மக்களாட்சி கட்சி மட்டுமே. பழைமைவாதக் கட்சி மற்றும் லிபரல் கட்சி இரண்டும் கைகோர்த்துக் கொண்டு சம்பள உயர்வை ஆதரித்து வாக்களித்தன!
ஒரு ஆணின் ஆண்டு வருமானம் சராசரி 41,000 டொலர் மட்டுமே. ஒரு பெண்ணின் வருமானம் 26,800 டொலர் ஆகும். ஆனால் டால்ரன் மக்கின்ரியின் சம்பள உயர்வு மட்டும் 39,000 டொலர்கள்!
எல்லாம் ஊரார் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே என்று சொன்னவன் கதைதான். தங்களது சம்பளத்தைத் தாங்களே தாராளமாக  உயர்த்துவதில் முதலாம் உலக அரசியல்வாதிகள் மூன்றாம் உலக அரசியல்வாதிகளுக்குக் கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்லர் என்பதை இது காட்டுகிறது!
வரியை உயர்த்தமாட்டோம், மாணவர்களது பல்கலைக்கழக – கல்லூரி கட்டணத்தை அதிகரிக்க மாட்டோம் போன்ற தேர்தல் வாக்குறுதிகள் டால்ரன் மக்கின்ரி ஆல் காற்றில் பறக்கவிடப் பட்டுள்ளன.
ஒன்ராறியோவில் வாழ்பவர்களில் 7 இல் ஒருவர் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கிறார். சமூக ஏணியின் கீழ்த்தட்டில் உள்ள 10 விழுக்காடு குடும்பத்தின் சராசரி ஆண்டு வருமானம் 15,000 டொலர் மட்டுமே.  அதே நேரம் மேல்தட்டில் உள்ள 10 விழுக்காடு குடும்பத்தின் சராசரி ஆண்டு வருமானம் 160,500 டொலர்கள் ஆகும். அதாவது 11 மடங்கு அதிகம்! இதனால் ஏழை மேலும் ஏழையாகவும் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும் மாறி வருகின்றனர்.
நல்வாழ்வு திட்ட முறையில் (ர்நயடவா ஊயசந ளுலளவநஅ) பழைமைவாதக் கட்சியும் லிபரல் கட்சியும் இரட்டைத் தட்டு முறைக்கு (வசதி படைத்தவர், வசதியற்றவர்)  ஆதரவாக இருக்கின்றன. சொல்லாட்சியில் மட்டும் லிபரல் கட்சி கொஞ்சம் வேறுபடுகிறது. புதிய மக்களாட்சிக் கட்சி அதனை முற்றாக எதிர்க்கிறது.
கத்தோலிக்க மதப் பள்ளிகள் போல ஏனைய மதப் பள்ளிகளுக்கும் நிதியுதவி அளிக்கும் திட்டத்தை பழைமைவாதக் கட்சித் தலைவர் யோன் ரோறி அறிவித்திருந்தார். ஆனால் இந்த யோசனை பலத்த எதிர்ப்புக்கு ஆளாகியதால் நாடாளுமன்றத்தில் கட்சி உறுப்பினர்கள் சுதந்திரமாக வாக்களிக்க அனுமதிக்கப்படுவர் என அவர் இப்போது மாற்றி வாசிக்கிறார். மதத்தையும் அரசியலையும் கலக்காதிருப்பதே எல்லோருக்கும் நல்லது. கலந்தால் இங்கேயும் தலிபான் முளைவிடும் என்பது நிச்சயம். இன்னும் சொல்லப்போனால் கத்தோலிக்கப் பள்ளிகளுக்கு நிதி வழங்குவது நிறுத்தப்பட்டு அவற்றையும் பொது கல்வித் திட்டத்துக்குள் கொண்டுவர வேண்டும்.
இந்தத் தேர்தலில் நான்கு தமிழர்கள் போட்டியிடுகிறார்கள். நீதன் சண்முகராசா புதிய மக்களாட்சி கட்சி சார்பில் ஸ்காபரோ – கில்வுட் தொகுதியில் போட்டியிடுகிறார். மற்றவர் சாமி அப்பாத்துரை முற்போக்கு பழைமைவாதக் கட்சி சார்பில் ஸ்காபரோ மத்தியில் போட்டியிடுகின்றனர்.
இந்தத் தேர்தலில் தமிழர்கள் தங்களது வாக்குரிமையைத் தவறாது பயன்படுத்த வேண்டும். தேர்தல் நாளன்றோ அல்லது அதற்கு முந்தியோ வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிக்க வேண்டும்.
அடுத்து கட்சி அடிப்படையில் தேர்தல் நடப்பதால் போட்டியிடும் கட்சிகளில் எந்தக் கட்சி குடிவரவாளர்கள் நலன், குடியிருப்பாளர்கள் நலன், தொழிலாளர்கள் நலன், அடித்தட்டு மக்களின் நலன் சார்ந்ததாக இருக்கிறது என்பதை சீர்தூக்கிப் பார்த்து வாக்களிக்க  வேண்டும். அப்படிப் பார்க்கும் போது தமிழர்கள் புதிய மக்களாட்சிக் கட்சிக்கே வாக்களிக்க வேண்டும்.
எனவே பதிய மக்களாட்சி கட்சி சார்பில் போட்டியிடும் நீதன் சண்முகராசா, சதீஸ்குமார் பாலசுந்தரம் (மிசுசாகா – ருக்வில்ஸ்) பாலா தவராஜசூரியன் (ஏஜக்ஸ் – பிக்கரிங்) ஆகியோருக்கு தமிழர்கள் வாக்களிக்க வேண்டும்.
வெற்றி வாய்ப்பு ஒளிமயமாக இருக்கும் நீதன் சண்முகராசாவை வெல்ல வைப்பதன் மூலம் மாகாண அரசியலில் தமிழர்கள் கணக்கைத் திறக்க முடியும். அது ஒரு கல்லில் இரண்டு மாங்காயை விழுத்தியதாகவும் இருக்கும். (முழக்கம் – ஒக்தோபர் 5, 2007)


இந்திய அரசியலைக் கலக்கும் அணுசக்தி உடன்பாடும் இராமர் பாலமும்!

இந்திய அரசியல் சூடு பறக்கத் தொடங்கி விட்டது. தில்லி அரசியல் ஆய்வாளர்கள் கணிப்புப்படி பார்த்தால் பெப்ரவரி மாதத்தில் இருந்து ஏப்ரில் மாதத்துக்குள் லோக்சபா தேர்தல் நடக்கலாம்!
இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் கழுத்துப் பிடிக்குள் திணறிக் கொண்டிருந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணிக்கு இராமர் பற்றிய சொற்போரும் சேர்ந்து அதனைத் திக்கு முக்காட வைத்துள்ளது.
கடந்த மூன்றரை ஆண்டுகளாக அய்க்கிய முற்போக்கு அரசு ஆட்சி நடத்த வெளியிலிருந்து ஆதரவு கொடுத்து வந்த இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும  அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்யவே கூடாது, செய்தால் அரசுக்குக் கொடுக்கும்  ஆதரவு திரும்பப் பெறப்படும் என் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளன.
“அமெரிக்காவோடு செய்த அணுசக்தி ஒப்பந்தம் செய்தது செய்ததுதான். அந்த ஒப்பந்தத்தைக் கைவிட முடியாது.  தள்ளிப்போடவும் முடியாது. கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது ஆதரவை விலக்க விரும்பினால் தாராளமாக விலக்கிக் கொள்ளலாம்” என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தன் பங்குக்குச் சூடாகப் பதில் அளித்திருக்கிறார்.
நடுவண் அரசு  “அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்வதால் பல நன்மைகள் உள்ளன. இந்தியாவின் மின்சார தட்டுப்பாடு தீரும்’ என்று சொல்கிறது. இந்த முடிவுக்கு  காங்கிரஸ் தலைவி சோனியாவும் பச்சைக்கொடி காட்டிவிட்டார்.
இப்படி ஆளும் கூட்டணியில் காரசார மோதல் நடந்து கொண்டிருக்கும் போது, எதிர்க்கட்சியான பாரதிய .ஜனதா கட்சியோ ஓசைப்படாமல் லோக் சபா தேர்தல் பரப்புரையில் இறங்கியுள்ளது.
“லோக்சபாவுக்கு தேர்தல் வரப்போகிறது  எல்லோரும் தயாராக இருங்கள்’ என்று தன் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டசவை உறுப்பினர்கள்  மாநில, மாவட்டத் தலைவர்கள் ஆகியோரை காங்கிரஸ் விழிப்போடு இருக்குமாறு கட்டளை பிறப்பித்து விட்டது.
“இன்னும் சில மாதங்களில் லோக்சபாவுக்குத் தேர்தல் நடந்தால் மீண்டும் ஆட்சியைத் தனியாகவே பிடித்துவிடலாம்;. தேவைப் பட்டால் பகுஜன் சமாஜ் உட்பட சில கட்சிகளை சேர்த்துக் கொள்ளலாம்’ என்று பா.ஜ. கட்சித் தலைவர்கள் கணக்குப் போடுகிறார்கள்.
இதற்கு மாற்று மருந்தாகவே காங்கிரஸ் மேலிடம் இத்தனை நாள் இழுத்தடித்து வந்த கட்சியின் தலைமைப் பொறுப்புப் பொதுச் செயலர் நாற்காலியில் ராகுலை அவசர அவசரமாக அமர்த்தி; விட்டது.
எதிர்வரும் 15 ஆம் தேதிக்குப் பின்னர் பரபரப்பு அதிகரிக்கும். அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அனைத்துலக அணுசக்தி கூட்டமைப்புக் கூட்டம் வியன்னாவில் நடக்கிறது. அதில், இந்தியா பங்கேற்கக்கூடாது என்று இடதுசாரிகள் வற்புறுத்தி வருகின்றன. ஆனால், அதை மீறி நடுவண் அரசு பங்கேற்க உள்ளது. அப்படிப் பங்கேற்றால் இடதுசாரிகளின் கோபம் உச்சகட்டத்தை அடைந்துவிடும். ஆட்சிக்குக் கொடுத்துவரும் ஆதரவைத் திரும்பப் பெறுகிறோம் என அறிவிக்க வேண்டிய நிலை ஏற்படும். அப்படி அறிவித்தால், நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரலாம்.
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை பாரதிய ஜனதாவோ வேறு கட்சியோ கொண்டு வருமானால் அதன் மூலம் அரசு கவிழ்க்கப்படும். தேர்தலை விரும்பும் சமாஜ்வாடி, ஜனதா தளம் போன்ற கட்சிகள் பா. ஜனதா கொண்டு வரும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிப்போம் என்று கூறிவிட்டன.
இன்னும் இரண்டொரு மாதங்களில் எந்தக் கட்சிகள் எந்த அணியில் இருக்கின்றன என்பது தெரிய வரும். இப்போதுள்ள கூட்டணிகளில் உள்ள கட்சிகள் நிலை மாறலாம்.  சில கட்சிகள் அணிமாறித் தாவலாம். நொவெம்பர் இறுதியில் தேர்தல் காய்ச்சல் பல கட்சிகளைத் தொற்றிக் கொள்ளும். சனவரியில் இருந்து தேர்தல் பரபரப்பு ஆரம்பித்துவிடும்.
காங்கிரசைப் பொறுத்தவரை சனவரி, பெப்;ரவரிக்குள் தேர்தலை நடத்தி விட வேண்டும் என்று விரும்புகிறது. பஞ்சாப், அரியானா, ஆந்திராவில் செல்வாக்கு சரிந்திருக்கிறது என்பதை காங்கிரஸ் மேலிடம் ஒப்புக் கொண்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில் அங்கு காங்கிரசுக்குச் செல்வாக்கு அதிகரித்து இருக்கிறதா என்பது தெரியவில்லை.
இப்போதுள்ள நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியோ, சமாஜ்வாடியோ தனது  கூட்டணியில் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. சமாஜ்வாடியை பொறுத்தவரை, காங்கிரசுடன் சேர முலாயம் தயாராய் இல்லை. பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி விதிக்கும் நிபந்தனைகளுடன் கூட்டுச் சேர காங்கிரஸ் கட்சிக்குக் கடடாயம் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது. “இப்போதைக்கு எந்த முடிவையும் காங்கிரஸ் எடுக்கத் தயாராய் இல்லை நிலைமையை உன்னிப்பாக கவனித்து பின்னர் தான் முடிவு எடுக்கும்’ என்று தெரிகிறது.
கம்யூனிஸ்ட் கட்சிகளின் நெருக்குவாரதத்துக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் காங்கிரசுக்கு இராமர் பாலம் உருவில் இன்னொரு தலைவலி ஏற்பட்டுள்ளது.
“இராமாயணம் நடந்த கதை அல்ல இராமர் – இராவணன் போன்றவர்கள் கற்பனைப் பாத்திரங்களே தவிர உண்மையில் வாழ்ந்தவர்கள் அல்லர்” என இராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தொல்பொருள் ஆய்வுத்துறை திட்டவட்டமான ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தது.
அந்த அறிக்கையைப் பார்த்துவிட்டு பாரதிய ஜனதா கட்சியினரும் – இந்து மதவாதிகளும் வெகுண்டு எழுந்தார்கள். “இராமர் கற்பனைப் பாத்திரம் அல்ல. இராமாயணம் நடந்த கதைதான.;; இராமர் திருமாலின் அவதாரம். இராமர் சேதுசமுத்திரத்தைக் கடந்து இலங்கைக்குப் போகப் பாலம் கட்டினார். இராமர் பாலம் கட்டவில்லை என்று சொல்லி நடுவண் அரசு இந்துக்களின் மனதைப் புண்படுத்தி விட்டது” எனப் போர்க் குரல் எழுப்பினார்கள். பயந்து போன காங்கிரஸ் அரசு அறிக்கையில் இராமர் பற்றிய கூற்றுக்களை திரும்பப் பெற்றுவிட்டது. அதோடு நின்றுவிடாமல் இராமர் பாலத்தை இடிக்காமல் வேறு பாதை வெட்டலாமா? எனச் சிந்திக்கிறது என்ற உறுதிமொழியை உச்ச நீதிமன்றத்துக்குத் தெரிவித்துள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த தமிழக முதல்வர் கருணாநிதி “இராமர் என என்ஜினியரா? எப்போது அவர் பாலம் கட்டினார்?” எனக் கேட்டு எரியும் கொள்ளிக்கு எண்ணெய் ஊற்றினார்.
சேது சமுத்திரத்திட்டத்தை கால தாமதம் இல்லாது செயல்படுத்தக் கோரி தமிழகத்தில் முழுக் கடையடைப்பை முதல்வர் கருணாநிதி அறிவித்தார். கடையெடுப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்த போது நாடு முழுவதும் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது.
உண்ணாவிரதம் மேற்கொண்டது நீதிமன்றத்தை அவமதிப்பது போன்றது என்றும் தமிழக அரசைக் கலைக்க மத்திய அரசும் ஆட்சித்தலைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி அகர்வால் கோபத்தோடு கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி இராமாயணம் நடந்த கதை அல்ல, இராமர் கற்பனைப் பாத்திரம், வால்மீகி இராமாயணத்தில் இராமன் குடிகாரன் எனச் சித்திரிக்கப்பட்டுள்ளான் என்று சொன்னது சொன்னதுதான் உடனே விஸ்வ இந்து பரிஷத் முன்னணித் தலைவரும், முன்னாள் பா. ஜனதாக் கட்சி நாடளுமன்ற உறுப்பினருமான ராம் விலாஸ்  வேதாந்தி என்பவர் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசும்போது “முதல்வர் கருணாநிதி கடவுள் ராமரை “குடிகாரன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இது இந்து மக்களின் உணர்வுகளை அவமதிக்கும் செயல். கடவுளை நிந்திப்பவர்களின் தலையைத் துண்டிக்க வேண்டும் என்று பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது. எனவே கருணாநியின் தலையையும் நாக்கையும் துண்டித்துக் கொண்டு வருபவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் பரிசளிக்கப்படும்” எனக் கூறினார்.
வேதாந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று திராவிட இயக்கங்கள் சொன்னதை அவர் நிராகரித்துவிட்டார். மாறாக “நொவெம்பர் 20 ஆம் தேதிக்குள் இச் சிக்கலுக்குத் தீர்வு ஏற்படாவிடில் இந்து சாமியார்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபடுவர். சிறுபான்மையினரின் ஓட்டு வங்கியை கைப்பற்றவே பெரும்பான்மையான இந்துக்களுக்கு எதிரான சதித் திட்டத்தில் காங்கிரசும், தி.மு.கழகமும் ஈடுபட்டுள்ளன. ராமர் பாலத்தைக் காப்பாற்ற எனது உயிரையும் கொடுப்பேன். கருணாநிதிக்கு எதிராக நான் “பாத்வா’ அறிவித்தேன். கடவுள் ராமர் குறித்து தெரிவித்த கருத்துக்கு கருணாநிதி நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும். அவர் குறித்து நான் ஏற்கனவே தெரிவித்த கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. கடவுள் ராமர் குறித்து விவாதம் நடத்த அவருக்கு நான் அழைப்பு விடுக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
வேதாந்திக்கு ஆதரவாக இராமர் பாலத்தை இடிக்கக் கூடாது எனவும் கருணாநிதி இந்துக்களின் மனதைப் புண்படுத்தி விட்டார் எனவும் அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா கூறுகிறார். அவருக்கு ஆதரவாக சுப்பிரமணியன் சுவாமி, துக்ளக் சோ, தினமணி ஆசிரியர் போன்றோர் பக்கப்பாட்டுப் பாடுகிறார்கள். சேது கால்வாய்த் திட்டத்தை நனவாக்குவோம் என்று தேர்தல் அறிக்கையில் திட்டவட்டமாக அறிவித்த ஜெயலலிதா அரசியல் இலாபத்திற்காக இன்று அதன் முதல் எதிரியாக மாறியுள்ளார்.
“நேருவின் பேச்சைத் தூக்கி எறிந்து விட்டு ராமன் பாலம் கட்டினான் என்பதா? அண்ணாவை இராமனுக்கு அடிமை ஆக்குவதா?” என தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் பார்த்துக் கேட்டிருக்கிறார்.
இராசாசியும் கே.எம். முன்ஷியும் பண்டித நேருவும் நீலகண்ட சாஸ்திரியும் இந்து மதத்தை உலகெங்கும் பரப்பிட முயன்ற சுவாமி விவேகானந்தர் ஆகியோர் “இராமாயணம் நடந்த கதை அல்ல! வால்மீகியின் கற்பனை! கற்பனை மட்டுமே!” என எழுதியுள்ளார்கள் என கருணாநிதி வாதம் செய்கிறார்.
இந்து அமைப்புக்களோ “இராமர் பாலத்துக்குக் காவலாக அனுமான் இருக்கிறார்.  பல யுகங்களாகத் தனுஷ்கோடிக்குப் பக்கத்தில் தங்கியிருந்து கொண்டு இராமனை நோக்கித் தவம் புரிகிறார்.  தெய்வக் குற்றம் வந்ததால்தான் மணல்வாரிப் பொறிகள் பழுதுபட்டன.  ஆகவே, சேது கால்வாய் வெட்டக்கூடாது” என்கின்றன.
“சேது சமுத்திரத் திட்டத்தைக் கொண்டு வருவோம் என்று மக்களிடம் வாக்குறுதி தந்தவர்கள் உச்சநீதி மன்றம் சென்று அந்தத் திட்டத்தையே தடுக்க முயற்சிக்கிறார்கள். கம்பரசம் எழுதிய அண்ணா வையும் இராமாயண ஆராய்ச்சி எழுதிய பெரியாரின் பெயரை யும் களங்கப்படுத்துகிறார்கள். மக்களை தவறான தத்துவார்த்தங்களுக்கு ஆளாகாமல் பாதுகாத்து அவர்களை வீரர்களாக அறிவியல் உலகில் உலவவிட வேண்டும். நீங்கள் மறந்துவிடக் கூடாது. இராமர் பாலத்தைக் காட்டி  17 ¼ இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இராமாயண காலத்தில் இராமர் பாலம் கட்டினார் அந்தப் பாலத்தை இடித்தால் நாங்கள் சும்மா விடமாட்டோம் என்று பா.ஜ.கட்சியவினர், புராணிகர்கள் இன்றைக்குப் போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள்.  கூட்டம் போடுகிறார்கள், ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்,  அணி வகுத்துக் கிளம்புகிறார்கள்.  நான் அவர்களைக் கேட்கிறேன் –  17 ¼ இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இராமாயணம் நடந்ததாகச் சொல்கிறீர்களே, அதிலே இராமர் ஒரு அவதாரமே அல்ல. இராமர் என்று ஒருவர் இல்லை அது ஒரு கற்பனைக் கதாபாத்திரம் என்று மத்திய அரசு சார்பிலேயே; உச்ச நீதிமன்றத்திலே எழுதிக் கொடுத்துவிட்டு, நேற்றைக்கு எழுதிக் கொடுத்து இன்றைக்கு அதைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறார்கள் என்றால் – ஆட்சி கிடக்கட்டும்  நாம் ஏற்றுக் கொண்ட பகுத்தறிவு என்ன ஆவது? நாம் ஏற்றுக் கொண்ட சுயமரியாதைக் கொள்கை என்ன ஆவது? அந்தத் தன்மான உணர்ச்சி என்ன ஆவது? ” என சேலத்தில் நடந்த திமுக மாநாட்டில் முதல்வர் கருணாநிதி காட்டமாகக் கேட்டுள்ளார்.
உண்மை என்னவென்றால் சேது கால்வாய்த் திட்டம் அரசியல் மயப்படுத்தப்பட்டு விட்டது. அதன் தலைவிதி ஊசலாடிக் கொண்டிருக்கிறது.
சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறினால் கப்பல்கள் போக்குவரத்து இலங்கையைச் சுற்றி வரத் தேவையில்லை. இப்போது இலங்கையைச் சுற்றிக் கொண்டுதான் கப்பல்கள் போகன்றன.  500 மைல் அதிகமாகப் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. இந்தப் பாதை அமைந்து விட்டால் குறுக்கே போகலாம். இலங்கைத் தீவைச் சுற்றிச் செல்ல வேண்டிய அவசியமில்லை. பயணச் செலவும் குறையும் தூரமும் குறையும் என்று வல்லுனர்கள், அறிவியலாளர்கள், பொருளாதார நிபுணர்கள் சொல்கிறார்கள். இப்போது கடவுள் பெயரைச் சொல்லி அதற்கு முட்டுக்கட்டை போடப்படுகிறது.
தொல்பொருள் ஆராய்ச்சித் துறையினர் இராமாயணம் நடந்ததல்ல கற்பனை என்று அறிக்கை கொடுத்ததற்கு எதிராக “ இராமாயணமும் மகாபாரதமும் இதிகாசங்கள் என அழைக்கப்படுபவை. இதிகாசம் என்றால் நடந்தவை என்று பொருள். இராமாயணத்தில் குறிப்பிட்டுள்ளபடி இராமர் வாழ்ந்துள்ளார் என்பதே இதற்குப் பொருள். முனிவர்கள் பலர் புராணங்களுக்கும் இதிகாசங்களுக்கும் உள்ள வேறுபாட்டை நன்கு விளக்கியுள்ளனர். புராணங்கள் என்பவை கற்பனையானவை. இதிகாசங்கள் என்பவை உண்மையில் நடந்தவை” என இந்துமதவாதிகள் கூறுகிறார்கள்.
புராணங்கள்  கற்பனை இதிகாசங்கள் நடந்தவை என்பது புதிய கதை. புராணங்கள் கற்பனை என்றால்; இந்துக்கள் மத்தியில் புகழ் பெற்றிருக்கும் கந்த புராணம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் ஆகிய புராணங்கள் எல்லாம் பொய்; – கற்பனை என்றாகி விடும்.
இதிகாசங்கள் நடந்தவை என்றால் அதன் காலம் எது என்று கேட்டால் குத்து மதிப்பாக பதினேழரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு – கிரேதாயுகத்தில் நடந்தது என்று சொல்கிறார்கள்.
அப்படியென்றால் சோழப் பேரரசு (கி.பி. 800 – கி.பி.1300) பாண்டியப் பேரரசு (கி.பி. 1300 – 1400) விஜய நகரப் பேரரசு (கி.பி. 1400- கி.பி. 1550) என்பது போல்  ஏன் இராமாயணத்தை ஆண்டு குறிப்பிட்டு தசரதன் ஆட்சிக்காலம் – இராமர் ஆட்சிக் காலம் – லவகுசர்களின் ஆட்சிக்காலம் என்று பட்டியல் போட்டுக் காட்ட முடியவில்லை? என திராவிட இயக்கங்கள் திருப்பிக் கேட்கின்றன.
சேது கால்வாய்த் திட்டம் முன்னைய திட்டத்தின்படி 2008 இல் நிறைவு பெற வேண்டும். ஆனால் இராமர் பாலம் பற்றிய சொற்போர் – அதற்குப் பயந்து காங்கிரஸ் கட்சி பின் வாங்கியிருப்பது – அந்தத் திட்டத்தையே கேள்விக் குறியாக்கி இருக்கிறது. (உலகத்தமிழர் – ஒக்தோபர் 5,2007)


மியான்மாரில் 42 ஆண்டுகள் நீடிக்கும் இராணுவ ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்படுமா?

மக்களாட்சி முறையில் பல ஓட்டை உடைசல்கள் இருக்கலாம். பல்லின மக்கள் வாழும் நாட்டில் மக்களாட்சி முறை பெரும்பான்மை இனத்தின் சர்வாதிகார ஆட்சிக்கு வழிகோலலாம். இருந்தும் மக்களாட்சி முறைக்கு மாற்றாக வேறு அரசியல் முறை இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை. காரல் மார்க்ஸ், லெனின் போன்றோரது சித்தாந்தங்களில் கட்டியெழுப்பப்பட்ட பொதுவுடமை நாடுகளும் இன்று ஏறக்குறைய உலகப் பந்தில் இருந்து ஒவ்வொன்றாக மறைந்து விட்டன.
இன்று மியான்மார் என்று அழைக்கப்படும் பர்மா நேற்றுவரை யார் கவனத்தையும் ஈர்க்கவில்லை. காரணம் அந்த நாடு ஒரு; இரும்புத் திரைக்குப் பின்னால் இராணுவ ஆட்சியில் சிக்கி இருந்ததுதான்.
இரும்புத் திரை நாடுகளில் ஒன்றான பர்மா  1989 ஆம் ஆண்டு மியான்மார் (ருnழைn ழக ஆலயnஅயச) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.  தலைநகர் இரங்கூன் யாங்கோன (லுயபெழn ); எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

12,000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் இங்கு வாழ்ந்தனர். ஆனால் அரசாட்சி கிமு முதல் நூற்றாண்டில் தான் தொடங்கியது என நம்பப்படுகிறது. மியான்மாரில் சுமார் 130 இனங்கள் வாழ்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளும் வட்டார வழக்குகளும் உள்ளன.

புவத்த நாடான மியான்மாரில் பல்லாயிரக்கணக்கான புத்த கோயில்கள் நாடு முழுவதும் பரவிக் காணப்படுகின்றன. இதனால் இந்த நாடு ‘டுயனெ ழக Pயபழனயள’ என அழைக்கப்படுகிறது.  யாங்கோனில் உள்ள தங்கத்தால் வேயப்பட்ட “ஷ்வே டகோன் பவுத்தகோயில்”  (ளூறநனயபழn Pயபழனய) மிகவும் புகழ் பெற்றது. மாண்டலேயில் உள்ள குத்தோடாவ் பகோடாவில் உலகின் மிகப் பெரியப் புத்தகம் (729 பளிங்குப் பலகைகளால் ஆனது) உள்ளது.

மியான்மார் அடிப்படையில் ஒரு வேளாண்மை நாடு. நாட்டின் ;மக்கள் தொகையில் 67.4 விழுக்காட்டினர் கமத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அய்ராவதி நதிப் படுகையில் உலகின் வளமான நெல் விளையும் நிலங்கள் உள்ளன. பெருந் தொழில்கள் எல்லாம் அரசின் கையிலும் சிறுதொழில்கள், போக்குவரத்து போன்றவை தனியார் வசமும் உள்ளன.

1824 முதல் 1885 வரை நடந்த அங்லோ – பர்மா போர்களில் பர்மாவை ஆண்ட  மன்னர் தோற்றதன் காரணமாக பிரிட்டிஷார் அவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மன்னர்  மஹாராஷ்டிர சிறையில் அடைக்கப்பட்டார். இதனை அடுத்து பிரிட்டிஷார் பர்மாவை இந்தியாவின் ஒரு மாநிலமாகப் பிரகடனப் படுத்தினார்கள்.

பர்மாவை அடிமையாக்கிய பிரிட்டிஷ் வல்லரசை விரட்டியடிக்க இரங்கூன் பல்கலைக்கழகத்தில் படித்து கொண்டிருந்த ஆங் ஸான் முன்வந்தார். பல்கலைக் கழக மாணவ சங்க தலைவராக இருந்த ஆங் ஸான் விடுதலைப் போராட்டத்தில் குதித்தார்.  இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த சூழ்நிலையில் யப்பான் நாட்டுடன் கூட்டுச் சேர்ந்து பிரிட்டிஷ்சாரை விரட்டியடித்தார். ஆனால் யப்பான் தன்னை பிரிட்டிஷ்சார் இருந்த இடத்தில் வைத்துக்கொண்டது.  பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சிக்கும் யப்பானிய ஆட்சிக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதை அப்போதுதான் ஆங் ஸான் புரிந்து கொண்டார். மீண்டும் பர்மா மக்களின் விடுதலைக்கான முயற்சியில் ஆங் ஸான் இறங்கினார்.  இக்காலத்தில் பி.ஐ.ஏ ( பர்மா சுதந்திர இராணுவம்) என்ற அமைப்பை உருவாக்கி செஞ்சேனை உதவியுடன் பர்மாவிலிருந்து யப்பானை அவர் விரட்டியடித்தார்.

பிரித்தாளும் சூழ்ச்சியில் கைவந்த பிரிட்டிஷார் இந்திய போர் வீரர்களின் துணையோடு; மீண்டும் பர்மாவைத் தங்கள் பிடிக்குள் கொண்டு வந்தனர். அப்போது ஆங் ஸான் பர்மாவின் விடுதலை – சுதந்திரம் குறித்து இங்கிலாந்து சென்று அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் கிளமென்ட் அட்லியுடன் பேசி உடன்பாடு ஒன்றை எழுதிக்கொண்டார். இக்கால கட்டததில்  பர்மா முழுவதும் ஆங் ஸானின் புகழ் பரவியது. பர்மா மக்கள் அனைவரும் அன்போடு பர்மாவின் தந்தை என அவரை அழைத்தனர்.  இதைப் பொறுத்துக் கொள்ளாத பிரிட்டிஷ் ஆட்சியாளர் அவரைச் சதிசெய்து கொலை செய்ய முயன்றது.
சா என்பவரின் உதவி-யோடு ஆங் ஸான் நடத்திக் கொண்டிருந்த செயல் குழுக் கூட்டத்தில் இயந்திரத் துப்பாக்கிகளோடு புகுந்த ஒரு குழு ஆங் ஸான், அவரது உடன்பிறப்பு  பாவின் மற்றும் அவரது கூட்டாளிகள் அனைவரையும் சுட்டு கொன்றது.  இக்கொலையைக் கண்டித்துப் பர்மா முழுவதும் இலட்சக்கணக்கான மக்கள்  போராட்டம் நடத்தினர். அரச  நிர்வாகம் முழுவதும் முடக்கப்பட்டது. இச்சூழலில் 1948 சனவரி 4 ஆம் நாள் பர்மா சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

பர்மாவின் முதல் பிரதமராக ஊநூ 1962 வரை பதவி வகித்தார். ஆனால் சுதந்திர பர்மாவில் மக்களுக்கான எந்தத் திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. மாறாக ஆளும் கட்சியின் உட்கட்சிப் போராட்டம் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை உருவாக்கியது.

பர்மாவில் அமைதியை நிலைநாட்டுகிறேன் என்று சொல்லிக்கொண்டு  இராணுவ  துணைத் தளபதியாக இருந்த நீ வின் 1962 மார்ச் 2 ஆம் நாள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிவிலியன் ஆட்சியைக் கவிழ்த்து விட்டு இராணுவ ஆட்சியைப் பிரகடனப்படுத்தினார்.

இராணுவம்  ஆட்சியைக் கைப்பற்றியதற்கு எதிராக இலட்சக்கணக்கான மாணவர்களும் தொழிலாளர்களும்; போராட்டங்களை நடத்தினார்கள். ஆனால் இராணுவம் அடக்குமுறைகளைக் கட்டவிழ்து விட்டு துப்பாகிகளைப் பேச வைத்துப் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவந்தது. பல மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இராணுவத்துக்கு எதிரான போராட்டங்களுக்கு தலைமை தாங்க ஆங் ஸானின் மகளான சூ கீ முன்வந்தார்.  பர்மா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இலட்சக்கணக்கான மக்களைத் திரட்டி பர்மாவில் முறையான தேர்தல் நடத்தி மக்களுக்கான அரசு  அமைக்க வேண்டும் என்று போராடி வந்தார். சூ கீ செல்லும் இடம் எல்லாம் இராணுவத்தின் தடையையும் மிரட்டலையும் மீறி இலட்சக்கணக்கான மக்கள் அவருக்கு ஆதரவு நல்கினார்கள்.

ஆங் ஸான் மறைந்த யூலை 19 அன்று பர்மா முழுவதும் தியாகிகளின் நினைவு நாளாக  அனுட்டிக்க சூ கீ யின் மக்களாட்சிக்கான தேசிய கழகம் (யேவழையெட டுநயபரந கழச னுநஅழஉசயஉல (Nடுனு) முடிவு செய்தது. ஆனால் இராணுவ அரசு முந்திக்கொண்டு 1989 ஆம் ஆண்டு யூலை மாதம் 16 ஆம் நாளன்று சூ கீ யை கைது செய்து வீட்டுக் காவலில் வைத்தது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

1990 ஆம் ஆண்டு மக்களாட்சி முறையில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.  இத்தேர்தலில் மக்களாட்சிக்கான தேசிய கழகத்தை சார்ந்த தலைவர்கள் 485 தொகுதிகளில் போட்டியிட்டு 392 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். மொத்த வாக்குகளில் 80 விழுக்காடு வாக்குகளை அந்தக் கட்சி பெற்றது. இராணுவத் தளபதி நீ வின் தலைமையில் இயங்கிய கட்சி; அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டது.

———————————————————-
மியான்மார் புள்ளி விபரங்கள்
மியான்மார் – அதிகாரபூர்வ பெயர் பர்மா யூனியன் (ருnழைn ழக டீரசஅய )
இருக்குமிடம் – தென்கிழக்கு ஆசியா, அந்தமான் கடலின் எல்லை, வங்காள விரிகுடா, பங்களாதேஷ், தாய்லாந்து
பூகோள குறியீடு –  22 00 வடக்கு, 98 00 கிழக்கு
மொத்த நிலப்பரப்பு   – 657,740 சதுர கிமீ
கடற்கரை  –  20,760 சதுர கிமீ
நாணயம்  –   க்யாட் (ஆஆமு)
அண்டை நாடுகள் (எல்லை) – பங்களாதேஷ் 193 கிமீ, சீனா 2,185 கிமீ, இந்தியா 1,463 கிமீ, லாஸ் 235 கிமீ, தாய்லாந்து 1,800 கிமீ
தலைநகர் –  இரங்கூன் (லுயபெழn)
————————————————————————————–
ஆனால் வெற்றி பெற்ற மக்களாட்சிக்கான தேசிய கழகம் ஆட்சி அமைக்க இராணுவம் அனுமதிக்கவில்லை. ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாத நீ வீன் மீண்டும் இராணுவ ஆட்சியை நடைமுறைப்படுத்தினார்.
அய்யன்னாவின் தீர்மானத்-தின் அடிப்படையில் 2002 மே 6 அன்று சூ கீ விடுதலை செய்யப்பட்டார். ஆனால் 2003 ஆம் ஆண்டு பர்மா முழுவதும் சுற்றுப் பயணம் செய்ய முயற்சி செய்த சூ கீ யை  அதே மாதம் மீண்டும் இரங்கூன் சிறையில் அடைத்தனர்.
இன்றுவரை சூ கீ யை சிறையில் இருந்து விடுவிக்க எந்த நாடும் உருப்படியான நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை.
சூ கீ யை கைது செய்து சிறையில் அடைத்து விட்டால் போராட்டம் முடிந்து விடும் என்று கனவு கண்ட இராணுவ அரசிற்கு அதிர்ச்சி வைத்தியம் செய்ய மக்கள் கிளர்ந்து எழுந்துள்ளனர். மக்களின் போராட்டம் பெரும் புயலாய் வீசிக் கொண்டிருக்கிறது.

இராணுவ அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்ட ஊர்வலங்களுக்கு பவுத்த தேரர்கள் தலைமை தாங்கி நடத்தி வருகிறார்கள். அவர்களுடன் மாணவர்களும் மக்களாட்சிக்கான தேரிய கழகமும் சேர்ந்துள்ளது. இது வரை நடந்த ஆர்பாட்டங்களிலேயே மிகப் பெரிய ஆர்ப்பாட்டமொன்றில் சுமார் 20 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். போராட்டத்தை முறியடிக்க இராணுவம் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இராணுவத் துப்பாக்கி பேசியதில் பவுத்த பிக்குகள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.  31 இராணுவத்தினர் காயப்பட்டுள்ளனர். பல்லாயிரம் பேர் கைது செய்யப்பட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நீண்ட காலமாக இராணுவ ஆட்சி நடைபெறும் மியான்மாரில் கட்டுப்பாடான நிருவாகம் மட்டுமல்ல கைதுப்பரவான நிருவாகம் இயங்கும் எனப் பலர் நினைக்கலாம். ஆனால் நிலைமை அப்படியல்ல.

வுசயnளியசநnஉல ஐவெநசயெவழையெட என்ற அனைத்துலக அமைப்பு ஊழலில் உலகில் உள்ள 180 நாடுகளில் மியான்மார் 179 ஆவது இடத்தைப் பிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. மியான்மார் தோற்கடித்த ஒரே நாடு; சோமாலியா!

பவுத்த தேரர்களின் இந்தக் கிளர்ச்சிக்கு எரிபொருள் உட்பட மற்றும் அத்தியாவசியமான பொருட்களின் விலையை இரண்டு மடங்கு உயர்த்தியது காரணம் என்று சொல்லப் பட்டாலும் உண்மையான காரணம் மக்களாட்சிக்கும் மனிதவுரிமைக்கும் ஆன அவா என்றே எண்ணப்படுகிறது.

இராணுவ ஆட்சி ஒரு புதிய யாப்பை எழுத எடுத்த முயற்சி 15 ஆண்டுகள் கழிந்தும் முற்றுப் பெறவில்லை.

இராணுவ ஆட்சிக்கு எதிராகக் கடுமையான பொருளாதாரத் தடைகளைப் போட வேண்டும் என்ற வேண்டுகோள் அனைத்துலக சமூகத்தில் அதிகரித்து வருகிறது. அய்யன்னா மன்றத்தின் பாதுகாப்பு அவை இராணுவ அரசு தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுள்ளது. அமெரிக்க ஆட்சித்தலைவர் யோர்ஜ் புஷ் அய்யன்னா பொதுச் சபையில் பேசும் போது இராணுவ ஆட்சியைக் கண்டித்துள்ளார். அவரது துணைவியார் இன்னும் ஒருபடி மேலே போய் படையினர் தங்கள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
மொத்தம் 42 ஆண்டுகள் மியான்மார் தொடர்ந்து இராணுவ ஆட்சியின் பிடியில் இருந்து வருகிறது. ஆனால் அமெரிக்க ஆட்சித்தலைவர் சர்வாதிகார ஆட்சியின் பிடியில் அகப்பட்டுள்ள இராக்கிய மக்களை விடுவித்து மக்களாட்சி முறையை நிலைநிறுத்த இராக் மீது படையெடுத்தது போல மியான்மார் மீது ஒரு படையெடுப்பை நடத்தும் நோக்கம் எதுவும் அவருக்கு இல்லை.
1988 ஆம் ஆண்டு இராணுவ தளபதிகள் பர்மாவை இராணுவ ஆட்சிக்குள் கொண்டுவந்ததிலிருந்து மியான்மாரைத்  தீவிரமாக ஆதரித்து வரும் நாடு  சீனா மட்டுமே. அப்போதிலிருந்து இரங்கூனும் பீய்ஜிங்கும் நெருங்கிய அரசியல், இராணுவ, இராசதந்திர உறவுகளை வைத்திருக்கின்றன.

சென்ற பத்தாண்டுகளில் மியான்மாரும் சீனாவும் உளவு வேலைகளிலும் நெருங்கி வந்திருக்கின்றன. மியான்மாரின் அனைத்து இராணுவத் தளபாடங்களும் சீனாவிலிருந்தே வருகின்றன. தாங்கிகள், போர்ப் படகுகள், போர் விமானங்கள் அனைத்தும் சீனாவிடமிருந்தே மியான்மார் வாங்குகிறது. இராணுவத்துக்குப் பயிற்சியும் போர்விமானம் ஓட்டும் பயிற்சியும்கூட சீனாவே அளிக்கிறது. சமீபத்தில் அந்தமான் தீவுகளுக்கு அருகில் பர்மாவின் இடமான மெர்குயி என்ற இடத்தில் ஆழ்கடல் துறைமுகம் கட்ட பர்மாவுக்கு சீனா உதவி அளித்தது.

அண்மைக் காலத்தில் மியான்மாரும் இந்தியாவும் இராணுவ மட்டத்தில் நெருங்கி வந்திருக்கின்றன. மியான்மார் அண்மையில் உருசியாவிடமிருந்து போர் விமானங்களைக் கொள்வனவு செய்திருந்தது.’இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியாவை உளவு பார்க்க சீனாவை பர்மா அனுமதித்திருக்கிறது என்பதில் எந்த வித அய்யமும் இல்லை ‘ என்று இந்தியா நினைக்கிறது.

இம்முறையாவது மியானமாரில் 42 ஆண்டுகள் நீடிக்கும் இராணுவ ஒடுக்குமுறை ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு அங்கு மக்களாட்சி மலருமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். (உலகத்தமிழர் – செப்தெம்பர் 28, 2007)


அமெரிக்கா தாக்கினால் இரான் பதில் தாக்குதல் நடத்தும்
மேற்குலக நாடுகளுக்கு இரான் தொண்டைக்குள் சிக்கிய ஒரு முள்ளாக இருந்து வருகிறது. குறிப்பாக அமெரிக்காவுக்கு இரான் தீராத தலைவலியாக இருக்கிறது.
அமெரிக்க ஆட்சித்தலைவர் யோர்ஜ் புஷ் இரானை “தீவினையின் அச்சு” (யுஒளை ழக நுஎடை_ என்று வருணித்திருக்கிறார். அவர் குறிப்பிட்ட எஞ்சிய நாடுகள் சிரியா மற்றும் வடகொரியா ஆகும். இதில் வடகொரியா அமெரிக்காவோடு நடத்திய பேச்சுவார்த்தைகளை அடுத்துத் தனது அணு ஆராய்ச்சியை நிறுத்தி உலைகளை மூடிவிட்டது.
இரான் பேரழிவை ஏற்படுத்தும் அணு ஆயுதங்களை தயாரிக்க முயற்சிப்பதாகவும் அணு ஆராய்ச்சி திட்டத்தை இது கைவிட வேண்டும் என்றும் அமெரிக்கா கேட்டு வருகிறது.

ஓகஸ்ட் 31 ஆம் திகதிக்குள் இரான் தனது யுரேனியம் செறிவூட்டல் திட்டத்தை நிறுத்த வேண்டும் என அய்யன்னா காலக்கெடு விதித்திருந்தது. மேலும் இத்திட்டம் தொடர்பாக ஒக்தோபர் மாதத்திற்குள் இரானுடன் உடன்பாடு காண அய்ரோப்பிய ஒன்றியத்தின் பேச்சுவார்த்தையாளர் சோலோனாவை அமெரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளும் கேட்டுக் கொண்டன. இரான் அந்தக் காலக் கெடுவுக்கு அசைந்து கொடுக்கவில்லை. எனவேதான் இரான் மீது இராணுவத் தாக்குதல் நடத்தப்படும் என்ற பேச்சு எழுந்துள்ளது.
“அணு ஆற்றல் தொழில் நுட்பத்தை வைத்திருப்பது எமது உரிமையாகும். நாங்கள் எதற்கும் தயாராக இருக்கிறோம். அமெரிக்காவின் பயமுறுத்தலுக்கு நாம் அஞ்சப் போவதில்லை. எங்களது அணுசக்தி ஆராய்ச்சி குண்டுகள் செய்வதற்கல்ல, அதனை அமைதி நோக்குக்காகப் பயன்படுத்தவே ஆராய்ச்சி செய்கிறோம். அப்படிச் செய்ய இரான் நாட்டுக்கு உரிமை உண்டு. ; எந்த நிலையிலும் அணு ஆராய்ச்சியை நிறுத்தமாட்டோம்” என இரானின் ஆட்;சித் தலைவர் மஃஹ்மூத் அகமெதிநஜாத்  (ஆயாஅழரன யுhஅயனiநெதயன ) தெரிவித்துள்ளார். இது தொடர்பாகப் பேச்சு வார்த்தை நடத்தவும் இரான் மறுத்து வருகிறது.
இந்த நிலையில் இரானின் அணு உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே இரானைச் சுற்றியுள்ள நாடுகளில்  அமெரிக்கா தனது  படைகளைக் குவித்து வைத்துள்ளது.  இரானும் தனது பங்குக்கு படை பலத்தை அதிகரித்து வருகிறது. இரானின் ஆட்சித்தலைவர் மஃமூது அஃமதினெஜ்ஜாத்தும்  தனது நாடு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் பதில் தாக்குதல் நடத்தப்படும் எனச் சொல்கிறார்.
ஆனால் இரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தயக்கம் காட்டி வருகிறது. இராக் போர்தான் அதற்குக் காரணம் ஆகும்.

இராக் மீது அமெரிக்கா படையெடுத்த போது (2003) கூடியது இரண்டு ஆண்டுகளில் போரை முடிவுக்குக் கொண்டு வந்து அங்கிருந்து வெளியேறிவிடலாம் என புஷ் கணக்குப் போட்டார். ஆனால் அந்தக் கணக்குப் பிழைத்து விட்டது. போர் தொடங்கி நாலு ஆண்டுகளுக்கு மேலாகியும் அமெரிக்கா இராக்கில் இருக்கவும்  முடியாது விட்டு  வெளியேறவும்  முடியாது சிக்குண்டுள்ளது. அமெரிக்கா தனது படை பலத்தை 160,000 ஆக அதிகரித்தும் இராக் தீவிரவாதிகளின் பதில் தாக்குதல்கள் ஓய்ந்தபாடாயில்லை. ஒவ்வொரு நாளும் அங்கு தற்கொலைத் தாக்குதல்கள் நடந்த வண்ணம் உள்ளன.
அமெரிக்காவைப் பொறுத்தளவில் இராக் ஒரு பொறிக்கிடங்கு போல் ஆகிவிட்டது.

இரான் அமெரிக்காவுக்கு அறைகூவல் விடுவதோடு நில்லாமல் ஆயுதக் கொள்வனவையும் ஆயுத உற்பத்தியையும் அதிகரித்து வருகிறது.
இன்று (வியாழக்கிழமை) இரான் தனது உள்ளுர் தயாரிப்பான ஜெட் விமானம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. இரான் தொலைக்காட்சிகள் இரண்டு ளுயநபாநா (வுhரனெநச) கiபாவநச pடயநௌ) ஒளிப்படங்களைக் காட்டியது. இது அமெரிக்க தயாரிப்பான கு-18 குண்டு வீச்சு விமானத்துக்கு நிகரானது. “இடி போன்ற எமது விமானங்கள் எங்கள் எதிரியின் கண்களைக் குருடாக்கும் எதிரி படை முகாம்களைச் சுட்டெரிக்கும்” எனப் பாதுகாப்பு அமைச்சர் முஸ்தாபா மொகமது நஜ்ஜார் (ஆழளவயகய ஆழாயஅஅயன யேககயச) கூறினார்.
மேலும் 2000 கிமீ தூரம் பறந்து சென்று தாக்கும் ஏவுகணைகளைப் பயன் படுத்தி அமெரிக்க படை முகாம்களைத் தகர்க்க இரான் தயாராகி வருகிறது. இதுபற்றி இரானின் படைத் தளபதி முகமது ஹாசன் –
“இரானிடம் ஷகாப்-3 ஏவுகணைகள் உள்ளன. இந்த ஏவுகணைகள் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படை முகாம்களை 2000 கிமீ தூரம் பறந்து சென்று தாக்கும் ஆற்றல் கொண்டது. இரானில் 2000 இலக்குகள் மீது அமெரிக்கா குறி வைத்துள்ளது. அதே போல அமெரிக்காவின் 2000 இலக்குகளை நாங்கள் கண்டு பிடித்து வைத்திருக்கிறோம். அவற்றைத் தாக்கி அழிப்போம். பலவீனமாக இருக்கும் எங்கள் படை முகாம்களைக் கண்டு பிடித்து அவற்றைப் பலப்படுத்தி வருகிறோம்” எனக் கூறியுள்ளார்.

அமெரிக்க – இரான் வாய்ச் சண்டையில் பிரான்ஸ் நாடும் இப்போது மூக்கை நுழைத்துள்ளது. இரானின் அணு ஆயுத திட்டத்துக்கு தற்போது பிரான்சும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

“இரான் அணுகுண்டு தயாரிப்பதைத் தடுக்க அந்நாடு மீது போர் தொடுக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம்”; என பிரான்ஸ் அறிவித்துள்ளது.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் பெர்னார்டு கவுச்னர் “இரான் அணுகுண்டு தயாரிப்பதை தடுக்க, அந்நாடு மீது வல்லரசு நாடுகள் மேலும் பல தடைகளை விதிக்க வேண்டும். அந்நாடு மீது போர் தொடுக்க நாங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறோம். இதுபற்றி உடனடி முடிவும் எதுவும் எடுக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் வலதுசாரி ஆட்சித்தலைவர் நிகோலஸ் சர்கோசி “இரான் அணு குண்டு தயாரிப்பதை உலக நாடுகள் தடுக்க வேண்டும் அல்லது இரான் மீது குண்டு வீச வேண்டும்” என ஏற்கனவே கூறியுள்ளார.

தன்னுடைய அணுத் திட்டத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லையென்று இரான் தெளிவாக அய்யன்னாவுக்குத் தெரிவித்துள்ளது. இரானியத் தலைநகர் தெஃஹ்ரானில் பேசிய இரானிய ஆட்சித்தலைவவர் மஃஹ்மூத் அகமெதிநஜாத் அவர்கள் “இரானின் அணுத் திட்டம் தடுப்பு (டிசயமந) அல்லது பின் செல்லும் கியரோ (சநஎநசளந பநயச)  இல்லாத தொடர்வண்டி போன்றது என்றார். அவரது துணை வெளியுறவுத்துறை அமைச்சர்களில் ஒருவர், போர் உட்பட எதைச் சந்திக்கவும் தாங்கள் தயாராகியுள்ளதாகத் தெரிவித்திருக்கிறார்.

யுரேனியம்  செறிவூட்டல் வேலையை நிறுத்த அய்யன்னா வழங்கியிருந்த காலக் கெடுவை இரான் ஏற்கனவே புறக்கணித்து விட்டது. இதனை அடுத்து அமெரிக்காவும் அதன் தோழமை நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி வேறு தடைகளைக் கொண்டுவர முயற்சி செய்து வருகின்றன.

ஆனால் உருசியா இரான் மீது அய்யன்னா மேலதிக தடைகள் விதித்தால் அதனை எதிர்க்கப் போவதாகத் தெரிவித்துள்ளது. இது இரானுக்கு ஆறுதல் தரும் செய்தி. அய்யன்னாவின் பாதுகாப்பு அவையில் உருசியாவுக்கு வீட்டோ அதிகாரம் இருக்கிறது.

கடந்த ஆண்டு இதே மாதம் (செப்தெம்பர் 22, 2006) அய்யன்னா அவையில் பங்கேற்கச் சென்ற இரானின் ஆட்சித்தலைவர் மஃமூது அஃமதினெஜ்ஜாத்தும்  வெனிசுவேலா அதிபர் சாவேசும் அமெரிக்காவை மிகக் கடுமையாகச் சாடிப் பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

அமெரிக்க ஆட்சித்தலைவர் யோர்ஜ் புஷ்ஷை சாத்தான் என்று சாவேஸ் வருணித்தார்.  அய்யன்னா அவை இப்போது அமெரிக்காவின் முழுக் கட்டுப்பாட்டில் இருப்பதால் அந்த அமைப்பால் எந்தப் பயனும் இல்லையென்றும் அது ஒரு வெட்டியான அமைப்பு என்றும் அவர் தாக்கினார்.

அதே போல இரான் அதிபர் மஃமூது அஃமதினெஜ்ஜாத்தும் அமெரிக்காவைச் சொல் அம்புளால்  சாடத் தவறவில்லை.

அய்யன்னா தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு செவ்வி கொடுக்க  முன்பு திருக்குரானிலிருந்து சில வாசகங்களை வாசித்தார்.

“யுரேனியம் செறிவூட்டல் திட்டத்தை நிறுத்தி வைக்க அய்யன்னா அவை வேண்டுகோள் விடுத்துள்ளது. நாங்கள் இந்த யுரேனியத்தை அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யப்  பயன்படுத்தப் போவதில்லை. மின் ஆற்றல் திட்டத்திற்காகவே இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளோம். இது தொடர்பாக பேச்சுவார்த்தைக்குத் தயாராகவே இருக்கிறோம். ஆனால் எப்போது பேச்சுவார்த்தை என்பதற்கு காலக் கெடு விதிக்க முடியாது. நியாயமான முறையில் வல்லரசு நாடுகள் எங்களுக்கு உறுதிமொழிகள் தந்தால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வருவோம். யுரேனியத் திட்டத்தையும் நிறுத்தி வைப்போம்.

எங்களுக்கு மட்டும் அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா எங்களது அண்டை நாடுகளான பாகிஸ்தான், இந்தியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் அணு ஆயுத உற்பத்தித் திட்டங்களை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? இவையும் அணு ஆயுத நாடுகள்தானே?

அய்யன்னா பாதுகாப்பு அவையில் உள்ள எல்லா நாடுகளும் அணு ஆயுதங்களைக் குவித்து வைத்துள்ள நிலையில் அந்த நாடுகள் இரானைப் பார்த்து யுரேனியத்தைத் தயாரிக்காதே என்று சொல்வது ஏன்? அமெரிக்கா தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களை அழித்துவிட்டதா? யுரேனியம் தயாரிப்பை நிறுத்திவிட்டதா?

இரான் யுரேனியம் செறியூட்டலை நிறுத்தினால் நாங்கள் யுரேனியம் தருகிறோம் என்று அமெரிக்காவும் ஜெர்மனியும் பிரான்சும் சொல்கின்றன. இவர்களை நம்பி 50 ஆண்டுகளாக நாங்கள் பல வகையிலும் மோசம் போய்விட்டோம்.

இரானுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் இவர்கள் முறையாக நிறைவேற்றியதில்லை. இந் நிலையில் இவர்களை எப்படி மீண்டும் இரான் நம்ப முடியும்?

எங்களது அணு சக்தித் திட்டம் அமைதியானது. அமைதிக்காகவே இந்த்த திட்டம். அணு ஆயுதம் தயாரிக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இல்லை. எங்களுக்கு அது தேவையும் இல்லை. எங்களது திட்டத்தில் எந்தவித ஒளிவுமறைவும் இல்லை.

அனைத்துலக அணு ஆற்றல் கழகத்திற்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். எங்களது அணு ஆற்றல் நிலையங்களை ஆய்வு செய்ய அனுமதித்துள்ளோம். இதைத் தவிர உங்களுக்கு வேறு என்ன வேண்டும்?.

வேண்டுமானால் அமெரிக்கா தனது யுரேனியம் செறிவூட்டும் திட்டத்தைக் கைவிடட்டும். இன்னும் 5 ஆண்டுகளில் நாங்கள் அமெரிக்காவுக்கு யுரேனியம் விற்கத் தயார். அதுவும் 50 விழுக்காடு விலை தள்ளுபடியுடன்”  என்றார் மஃமூது அஃமதினெஜ்ஜாத்  சிரித்தபடி.

அத்தோடு அவர் நிறுத்தவில்லை. அமெரிக்கா மீதான அவரது தாக்குதல் தொடர்ந்தது. கைதிகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் “அமெரிக்க மக்கள் தொகை 21.9 கோடி. இரான் மக்கள் தொகை 6.8 கோடி. அமெரிக்க சிறைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை 30 இலட்சம். இரான் சிறைகளில் 1.3 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர். எது அதிகம் என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்” என்றார் புன்னகையுடன்.

“கடந்த 27 ஆண்டுகளாக இரான் மீது கடுமையாக நடந்து கொள்கிறது அமெரிக்கா. இது தேவையில்லாதது. மேலாண்மை மனப்பான்மையின் வெளிப்பாடுதான் இது. பல தலைமுறைகளாக அணு ஆயுதங்களைத் தயாரித்துக் குவித்துக் கொண்டிருக்கும் நாடு அமெரிக்கா. இப்போதும் கூட அவர்கள் ஏதாவது ஒரு புது ஆயுதத்தைத் தயாரித்துக் கொண்டுதான் உள்ளனர்.

ஆனால் நாங்கள் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். எங்கள் மீது அழுத்தத்தைக் கட்டாயமாகத் திணிக்க முயன்றால் அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதெல்லாம் இனி நடக்கவே நடக்காது.

உலகில் உள்ள ஒவ்வொரு இனத்தையும், சமூகத்தையும் நாங்கள் மதிக்கிறோம், அன்பு செலுத்துகிறோம். அது யூதர்களாக இருந்தாலும் சரி, கிறிஸ்தவர்களாக இருந்தாலும் சரி, முஸ்லீம்களாக இருந்தாலும சரி, அனைவரையும் நாங்கள் மதிக்கிறோம். யூதர்களும் மனிதர்கள்தான். அவர்களை நாங்கள் வெறுக்கவில்லை.

அய்யன்னா பாதுகாப்பு அவையை அமெரிக்காவும் அதன் தோழமை நாடானான பிரிட்டனும் இணைந்து கொண்டு தவறாக பயன்படுத்திப் பிற நாடுகளை ஆக்கிரமிப்பதை வேலையாகக் கொண்டுள்ளன. இதைத் தடுத்து நிறுத்துவோம்” என்றார்.

உலகின் ;ஒரே வல்லரசு என வருணிக்கப்படும் அமெரிக்காவிற்கு பல்லை நரும்புவதைவிட வேறு வழியிருப்பதாகத் தெரியவில்லை.
“அமெரிக்காவும் அதன் தோழமை நாடான இஸ்ரேலும் இரான் மீது இராணுவத் தாக்குதலை மேற்கொண்டு அதனைத் தண்டிக்கும் திட்டத்தைக் கைவிடவில்லை” என அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் றொபேட் கேற்ஸ் (சுழடிநசவ புயவநள) சூளுரைத்துள்ளார். கைவசம் இரண்டு போர் முனைகள் (இராக் மற்றும் ஆப்கனிஸ்தான்) இருக்கும் போது இன்னொன்றையும் யோர்ஜ் புஷ் திறப்பார் என்பது அய்யமே!
பாகிஸ்தான், இந்தியா, இஸ்ரேல் இந்த நாடுகளிடம் அணுக்குண்டுகள் தயாரிப்பதைத் தடுத்து நிறுத்தாத அமெரிக்கா இரானோடு மல்லுக்கு நிற்பது எதற்காக?

இஸ்லாமிய நாடான பாகிஸ்தானிடம் ஏற்கனவே அணுக்குண்டுகள் இருக்கின்றன. இரான் இன்னொரு இஸ்லாமிய நாடு. அதனிடம் அணுக்குண்டுகள் இருந்தால் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆபத்து என அமெரிக்கா அஞ்சுகிறது. குறிப்பாக இஸ்ரேலின் பாதுகாப்புக்கு மட்டுமல்ல அதன் இருப்புக்கே ஆபத்து என அமெரிக்கா எண்ணுகிறது.

சரியோ பிழையோ இன்று உலகில் அமெரிக்கா தாக்கினால் பதில் தாக்குதல் நடத்துவோம் என்று கூறும் ஒரு நாடு இரான்தான்! (உலகத்தமிழர் – செப்தெம்பர் 21,2007)


இஸ்லாமிய மதசார்புக் கட்சியின் பிடிக்குள் துருக்கி;

துருக்கி நாட்டின் ஆட்சித்தலைவர் பதவிக்கு ஆட்சியில் இருக்கும் நீதி மற்றும் மேம்பாட்டுக் கட்சி (துரளவiஉந யனெ னுநஎநடழிஅநவெ Pயசவல (யுமுP) சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட முன்னாள் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா குல் (யுடினரடடய புரட) என்பவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வாக்கெடுப்பின் போது மூன்றாவது சுற்றில் மொத்தம் உள்ள 550 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 339 பேர்களது ஆதரவைப் பெற்று வெற்றிபெற்றார். அவருக்கு 276 உறுப்பினர்களது வாக்குகள் கிடைத்திருந்தாலே போதுமானதாக இருந்திருக்கும். முதல் இரண்டு சுற்றிலும் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் (367) பெற்று வெற்றி ஈட்டத் தவறியிருந்தார். மூன்றாவது சுற்று வாக்கெடுப்பில் வெறும் பெரும்பான்மையே (ளiஅpடந அயதழசவைல) போதுமானதாக இருந்தது.
தடைசெய்யப்பட்ட தீவிரவாத இஸ்லாமியக் கட்சியைச் சார்ந்த குல் இப்போது மதசார்பற்ற அரசியல் யாப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இருந்தும் குல்லும் அவரது கட்சியும் இன்னமும் தீவிர இஸ்லாமிய நிகழ்ச்சித் திட்டத்தை கைவிடவில்லை என எதிர்க்கட்சிகளும் இராணுவமும் குற்றம் சாட்டுகின்றன.
துருக்கி வட அட்லாந்திக் உடன்படிக்கை அமைப்பிலும் (ழேசவா யுவடயவெiஉ வுசநயவல ழுசபயnணையவழைn (Nயுவுழு) அய்ரோப்பிய ஒன்றியத்திலும் (நுரசழிநயn ருnழைn)  முழு உறுப்பினராகச் சேர விண்ணப்பித்துள்ளது.
துருக்கி இராணுவம் நீமமே கட்சி குல்லை கடந்த ஏப்ரில் 27 இல் தனது கட்சி வேட்பாளராக அறிவித்த உடனேயே அதனைக் கடுமையாக எதிர்த்தது. குல் வெறும் வார்த்தைகள் மூலம் அல்லாது செயலில் மதசார்பற்ற நிலைப்பாடு பேணப்படும் என எண்பிக்க வேண்டும் என இராணுவம் தனது இணைய தளத்தில் கேட்டிருந்தது.
கடந்த யூலை மாதம் 22 ஆம் நாள் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நீதி மற்றும் மேம்பாட்டுக் கட்சி (நீமமே கட்சி) மதசார்பற்ற எதிர்க்கட்சி மற்றும் இராணுவத்தின் பலத்த எதிர்ப்புக்கும் இடையில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. தனது வாக்குப் பலத்தை 34 விழுக்காட்டில் இருந்து 47 விழுக்காட்டாகக் கூட்டியது.
மொத்தம் 24 அமைச்சர்களைக் கொண்ட புதிய அமைச்சரவi ஓகஸ்ட் 16 ஆம் நாள் பதவியேற்றது. அதன் முதல் அமர்வு ஓகஸ்ட் 18 இல் இடம்பெற்றது.
பிரதமர் எர்டொகன் 1954 ஆம் ஆண்டு இஸ்தான்புள் நகரத்தில் பிறந்தவர். மார்மரா பல்கலைக் கழகத்தில் பொருளாதரம் படித்து பட்டம் பெற்றவர். இஸ்தான்புள் மாநராட்சியின் மேயராக இருந்தபோது 6 மாதம் சிறை சென்றவர். இவர்தான் நீமமே கட்சியின் நிறுவனராவர்.
துருக்கியின் 11 ஆவது ஆட்சித் தலைவராக குல் பதவி ஏற்ற சடங்கின் போது இராணுவத் தளபதிகள் அதில் கலந்து கொள்ளவில்லை. பின்னர் அவரை அலுவலகத்தில் சந்தித்த இராணுவ தளபதி (ஊhநைக ழக ளுவயகக புநநெசயட லுயளயச டீரலரமயnவை ) அவருக்கு வணக்கம் (ளயடரவந) செலுத்த மறுத்து விட்டார். ஆட்சித் தொடக்கமே இராணுவமும் ஆட்சித் தலைவரும் ஒத்துப் போகமாட்டார்கள் என்பதைக் காட்டிவிட்டது. தன்னோடு ஒத்துழைக்குமாறு குல் விடுத்த வேண்டுகோளை இராணுவம் புறக்கணித்துவிட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் குல்தான் – பெயரளவில் ஆவது – இராணுவத்தின் கட்டளைத் தளபதி (ஊழஅஅயனெநச-in- ஊhநைக ழக வாந யுசஅல) ஆவார்!
“இராணுவத்தினால் நாடாளுமன்றத் தேர்தல் முடிவு சரி அல்லது ஆட்சித்தலைவர் தேர்தல் முடிவு சரி மாற்ற முடியவில்லை. ஆனால் இராணுவம் குல் மற்றும் ஆளும்கட்சியின் போக்கை உன்னிப்பாகக் கவனிக்கும் என்பதில் அய்யமில்லை. குல் அல்லது ஆளும் நீமமே கட்சி இஸ்லாமிய நிகழ்ச்சி நிரல் ஒன்றுக்குச் சாயும் பட்சத்தில் இராணுவ தலையீடு இருக்கும்” என ஒரு துருக்கி குடிமகன் சொல்கிறார்.
1950 ஆம் ஆண்டு தொடங்கி துருக்கி இராணுவம் ஆட்சியைப் பிடித்த நான்கு அரசுகளைக் கவிழ்த்துள்ளது. ஆட்சித் தலைவர் தேர்தலின் போது குல்லின் பெயரையோ அவரது கட்சியின் பெயரையோ குறிப்பிடாது மதசார்பு நடவடிக்கைகளுக்கு எதிராக அறிக்கை விட்டது.
துருக்கியின் அரசியல் யாப்பு துருக்கி நாட்டுக்கு எதிரான உள்நாட்டு அல்லது வெளிநாட்டு அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்கும் பொறுப்பை இராணுவத்துக்கு வழங்கியுள்ளது. ஆனால் நாடாளுமன்றத்தையும் ஆட்சித் தலைமையையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நீமமே கட்சி ஒரு புதிய “குடிமக்கள்” அரசியல் யாப்பைக் கொண்டுவரத் திட்டமிடலாம்.
57 அகவை உடைய குல் ஒரு பொருளியல் பட்டதாரி. சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமிய காப்பகத்தில் கொஞ்சக் காலம் பணி புரிந்தவர். துருக்கிப் பிரதமரும் நீமமே கட்சியின் தலைவருமான எர்டொகனோடு (சுநஉநி ஐயலலip நுசனழபயn) ஒப்பிடும் போது குல் மென்மையான போக்கு உடையவர். மற்றவர்களோடு குழைவாகப் பேசுபவர். பிரதமர் எர்டொகன் முற்றிலும் எதிர்மாறான குணாதிசயஙகளைக் கொண்டவர். வாதாடுவதில் அதிகளவு நாட்டம் கொண்டவர்.
ஆங்கிலத்திலும் துருக்கியிலும் புலமை படைத்த குல் 1991 ஆம் ஆண்டு தொடக்கம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்தவர். இப்போது வழக்கற்றுப் போன இஸ்லாமியக் கட்சியில் இருந்து 2001 இல் விலகி நீமமே கட்சியில் சேர்ந்தார்.
குல் தனது 30 ஆவது அகவையில் 15 அகவை பெண் ஒருவரை (ர்யலசரnnளைய ) மணம் செய்து கொண்டார். இனி ஆட்சித்தலைவரது மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் போது முஸ்லிம் பெண்கள் அணியும் முக்காட்டை முதல்பெண்மணி அணிவாரா அல்லவா என்பது தெரியவில்லை. அப்படி அணியும் பட்சத்தில் எதிர்க்கட்சியும் இராணுவமும் ஆட்சித் தலைவர் மாளிகையில் நடைபெறும் வைபவங்களைப் புறக்கணிக்கக் கூடும். முக்காடு அணிவது பல்கலைக் கழகங்களிலும் அரச திணைக்களகங்களிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக துருக்கிக்குத் தலையிடியாக இருந்து வரும் சிக்கல் ஒன்றிருக்கிறது. அது அதன் சிறுபான்மை இனக்குழுவான குர்திஷ் மக்களது தன்னாட்சிப் போராட்டம் பற்றியது.
குர்திஷ் மக்கள் தனிநாடு கேட்டுப் போராடி வருகிறார்கள். அந்தப் போராட்டத்துக்கு குர்திஷ்தான் தொழிலாளர் கட்சி (முரசனளைவயn றுழசமநசள Pயசவல) 1984 ஆம் தொடங்கி தலைமை தாங்கி நடத்தி வருகிறது.
அதன் தலைவர் அப்துல்லா ஒகாலன் (யுடினரடடய ழுஉயடயn) நைரோபியில் 1999 ஆம் ஆண்டு பெப்ரவரி 16 இல் கைது செய்யப்பட்டார். இவர் 15 ஆண்டுகளாக துருக்கியின் “மிகவும் வேண்டப்பட்டவர்” பட்டியலில் இருந்தவர். இவர் 35,000 பேரது சாவுக்குக் காரணமாக இருந்தார் என்று குற்றம்சாட்டித் தொடரப்பட்ட வழக்கில் 1999 ஆம் ஆண்டு யூன் 29 இல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. தனக்குக் கருணை காட்டப்பட்டால் போராளிகளுக்கும் துருக்கி அரசுக்கும் இடையில் அமைதிக்குப் பாடுபடுவேன் என்று கூறினார். அந்த வேண்டுகோள் மறுக்கப்பட்டால் நாட்டில் குருதி ஆறு ஓடும் என்றும் அவர் எச்சரிக்கை தெய்தார். குர்திஷ் மக்கள் ஒகாலன் மீது பெரிய நம்பிக்கை வைத்திருந்திருந்தார்கள். ஆனால் அவர் தனக்கு எதிரான விசாரணையின் போது ஆயுதஙகளைக் கீழே போட்டு சரண் அடையுமாறு கெரில்லாப் போராளிகளைக் கேட்டுக் கொண்டது குர்திஷ் மக்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவர் சாவதற்குப் பயப்படுகிறார் அதற்காக எல்லாவற்றையும் விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கிறார் என மக்கள் நினைக்கிறார்கள். இதனால் அவர் ஒரு கதாநாயகன் என்ற படிமம் அடிவாங்கியுள்ளது.
ஒகாலன் இறந்தால் பல நூற்றாண்டு காலமாக ஒரு சுதந்திர குர்திஷ் அரசை உருவாக்க நடக்கும் போராட்டம் பலவீனம் அடையும் என பெரும்பான்மை குர்திஷ் மக்கள் நினைக்கிறார்கள். அண்மைக்காலமாக கெரில்லாப் படைகள் சந்தித்த இராணுவத் தோல்விகள் மற்றும் ஆயுதங்களைக் கீழே வைத்தால் மன்னிப்பு வழங்கப்படும் என்ற துருக்கி அரசின் அறிவிப்பும் அமைப்பை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆயலெ முரசனள கநநட ழுஉயடயn’ள னநயவா றழரடன னநயட ய உசவைiஉயட டிடழற வழ வாநசை உநவெரசநைள-டழபெ ளவசரபபடந வழ பயin ய டயனெ வாநல உயn உயடட வாநசை ழறn. சுநஉநவெ அடைவையசல னநகநயவளஇ யள றநடட யள வாந வுரசமiளா பழஎநசnஅநவெ’ள ழககநசள ழக டநnநைnஉல வழறயசனள பரநசசடைடயள றாழ டயல னழறn வாநசை யசஅளஇ hயஎந யடசநயனல வாசழறn வாந அழஎநஅநவெ iவெழ னளையசசயல.
ஒகாலனது மரண தண்டனையை எதிர்த்து குர்திஷ் கெரிலாக்கள் துருக்கி இராணுவத்துக்கு எதிராக பல கெரில்லாத் தாக்குதல்களை மேற்கொண்டார்கள்.
2000 சனவரி 12 ஆம் நாள் ஒகாலனுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை அய்ரோப்பிய நீதிமன்றம் மீளாய்வு செய்யுமட்டும் ஒத்திப்போடப் பட்டுள்ளதாக துருக்கி அரசு அறிவி த்தது. ஒகாலன் தூக்கில் இடப்பட்டால் துருக்கி அய்ரோப்பிய ஒன்றியத்தில் சேரும் வாய்ப்பைப் பாதிக்கும் என நம்பப்படுகிறது.
உலகில் குர்திஷ் மக்களின் மொத்தத் தொகை 20 – 25 மில்லியன் எனக் கணக்கிடப்படுகிறது. இவர்களில் 12 மில்லியன் பேர் துருக்கியில் மட்டும் வாழ்கிறார்கள். துருக்கியின் மக்கள் தொகையில் குர்திஷ் 20 விழுக்காடு ஆகும். இராக்கில் 15 – 20 விழுக்காட்டினர் குர்திஷ் இனத்தவர். சிரியாவில் 10 விழுக்காடும் ஈரானில் 7 விழுக்காடும் குர்திஷ் இனத்தவர் ஆவர். பெரும்பான்மை குர்திஷ் மக்கள் சுன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள். ஒரு அகண்ட சுதந்திர குர்திஷ்தான் நாட்டை உருவாக்குவதே குர்திஷ் மக்களது கனவாகும்.
கடந்த காலங்களில் சுமார் 3,000 குர்திஷ் குடியிருப்புக்களை துருக்கி இராணுவம் தாக்கி அழித்தபோது 2 மில்லியன் மக்கள் இடப்பெயர்வுக்கு ஆளானார்கள். குர்திஷ் மக்களை துருக்கி மொழியைக் கட்டாயமாகப் படிக்கவும் அவர்களது பண்பாட்டைச் சிதைக்கவும் துருக்கி முனைகிறது.
சத்தியப் பிரமாணம் செய்த பின்னர் உரையாற்றிய குல் தனது தெரிவு துருக்கியின் மக்களாட்சியைப் “பலப்படுத்தி” இருப்பதாகக் கூறினார். தான் பக்கம் சாராது எல்லோரையும் அணைத்துப் போக இருப்பதாகவும் துருக்கி ஒரு “ சட்டத்தின் ஆட்சியை மதிக்கும் மதசார்பற்ற மக்களாட்சி அரசு” எனவும்  வருணித்தார். ஆனால் மதசார்பற்ற சக்திகள் அவரை எளிதில் நம்பத் தயாரில்லை போல் தெரிகிறது.
நான்குமுறை ஆட்சியைக் கவிழ்த்த துருக்கி இராணுவம் அய்ந்தாவது தடவையும் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பை மேற்கொள்ளுமா? என்பதே இன்றைய கேள்வியாகும்.
இராணுவம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் துருக்கி வாக்காளர்கள் துருக்கியின் மதசார்பற்ற கோட்பாட்டைக் கைவிட்டு இஸ்லாமிய மதசார்பு கோட்பாட்டைக் கைக்கொள்ளும் அரசையே விரும்புகிறார்கள் என்பதை நாடாளுமன்றம் மற்றும் ஆட்சித் தலைவர் இரண்டுக்கும் நடந்த தேர்தல் எண்பிக்கிறது.
——————————————————————————————————-
துருக்கி ஒரே பார்வையில்
பெயர்  – துருக்கி குடியரசு
மக்கள் தொகை – 71.1 மில்லியன் (அய்யன்னா – 2006)
தலைநகர் – அங்காற
பெரிய பட்டினம் – இஸ்ரான்புல்
பரப்பளவு – 779,452 சதுர கிமீ ( 300,948 சதுர மைல்
முக்கிய மொழி – துருக்கி
முக்கிய சமயம் – இஸ்லாம்
அகவை எதிர்பார்ப்பு – 68 (ஆண்) 73 (பெண்)
நாணயம் – புதிய துருக்கி லிரா
முக்கிய ஏற்றுமதி – புடவை, துணிமணி, பழங்கள் மற்றும் மரக்கறி, இரும்பு மற்றும் உருக்கு
தனியாள் வருவாய் – 4,710 அ.டொலர்
இராக் – அமெரிக்க போரையும் ஆப்கனிஸ்தான் – அமெரிக்க போரையும் இஸ்லாமிய நாகரிகத்துக்கு எதிரான மேற்குலக கிறித்தவ நாடுகளது போர் எனப் பெரும்பான்மை முஸ்லிம்கள் நினைக்கிறார்கள். இஸ்லாமிய நாடான துருக்கியை அய்ரோப்பிய ஒன்றியத்தில் ஒரு உறுப்பு நாடாகச் சேர்த்துக் கொள்வதன் மூலம் அந்தப் படிமத்தைத் துடைக்க அமெரிக்க தலைமையில் உள்ள மேற்குலக நாடுகள் முயற்சி செய்கின்றன. அதற்காகவேனும் துருக்கி அய்ரோப்பிய ஒன்றியத்தில் சேர்த்துக் கொள்ளப்படலாம். (உலகத்தமிழர் – ஓகஸ்ட் 31,2007)


சுடான் நாட்டின் எதிர்காலம் நிரந்தர அமைதி நிலவுமா நிலவாதா என்பதில் தங்கியுள்ளது

இந்தக் கிழமை அய்யன்னா பாதுகாப்பு அவை சுடானின் டார்பூர் பகுதிக்கு மேலதிக துருப்புக்களை அனுப்பி வைக்க தீர்மானித்துள்ளது. எட்டு மாத காலம் நீடித்த பேச்சு வார்த்தையைத் தொடர்ந்தே பாதுகாப்பு அவை ஒரு மனதாக அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இந்தத் தீர்மானத்தின் கீழ் இப்போதுள்ள 7,000 ஆபிரிக்க ஒன்றியத் துருப்புக்களுக்கு பக்கபலமாக 12,000 அய்யன்னா நாடுகளின் துருப்புக்கள் இந்த ஆண்டின் இறுதியில் அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த அய்யன்னா – ஆபிரிக்க ஒன்றியத்தின் கூட்டுப் படை கடந்த நான்கு ஆண்டுகளாக கிளர்ச்சிக்காரர்களுக்கும் சுடான் நாட்டு அரசின் ஆதரவு ஆயுதக்குழுவுக்கும் இடையில் நடந்து வரும் சண்டையை நிறுத்த நடவடிக்கை எடுக்கும். இந்த உள்நாட்டுப் போரில்  இதுவரை 200,000 பொதுமக்கள் இறந்துள்ளாhகள். இருபது இலட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளார்கள்.

ருவாண்டாவிற்குப் பிறகு பல மடங்கு கொடூரமான இனப்படுகொலைகள் சுடான் நாட்டின் டார்பூர் பகுதியில்தான்  நடந்து வருகிறது. சுடான் அரசின் ஆதரவோடு ஜஞ்சாவீத் ஆயுதக் குழு (துயதெயறநநன அடைவையை) கருப்பின மக்கள் மீது வன்முறையை கட்டவுவிழ்த்து விட்டிருக்கிறது. மானிடம் வெட்கித் தலை குனியும் அளவிற்குப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கும் ஆண்கள் சிறுவர்கள் படுகொலைக்கும் ஆளாகியுள்ளார்கள். இன அழிப்பிற்கு பாலியல் வன்கொடுமை ஒரு முக்கியமான ஆயுதமாகப் பயன் படுத்தப் படுவதாக மனிதவுரிமை அமைப்புக்கள் சுடான் மீது குற்றம் சுமத்தியுள்ளன.

அய்யன்னா பாதுகாப்பு அவையின் தீர்மானத்தை மாதக்கணக்கான இழுபறிக்குப் பின்னர் சுடான் ஆதரவு நல்கியுள்ளது. இதுவரை காலமும் இடம்பெற்று வந்த கொலைகள், பாலியல் வன்கொடுமை, இடப்பெயர்வு ஆகியவற்றுக்கு  சுடான் அரசு துணை போயுள்ளது. நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள மனிதநேய அமைப்புக்களுக்கு உரிய ஒத்துழைப்பை சுடான் அரசு  நல்கவில்லை.

டார்பூரில் நடந்த – நடந்துவரும் இனப் படுகொலை தற்செயலான நிகழ்வுகள் அல்ல. இது சுடான் அரசின் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள ஆட்சித்தலைவர் பஷீர் (டீயளாசை)  துணைத் தலைவர் தாஹா (வுயாய) மற்றும்  பாதுகாப்பு அதிகாரி கோஷ் (புழளா) ஆகியோரது திட்டமிட்ட இனப் படுகொலையாகும். இந்த மூவரும் இனப்படுகொலை இழைத்த குற்றத்துக்காக கைது செய்து விலங்கு மாட்டி அனைத்துலக குற்றவியல் நடுவர்மன்றத்தில் (ஐவெநசயெவழையெட ஊசiஅiயெட ஊழரசவ) நி;றுத்தப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை மனிதவுரிமை அமைப்புக்கள் விடுத்துள்ளன. அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகள் சுடான் மீது காட்டப்படும் மெத்தனப் போக்கைக் கைவிட்டு இனப் படுகொலைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்றும் கேட்டுள்ளன. “நீதி நிலைநாட்டப் படவேண்டும் நீதியொன்றே அமைதியைக் கொண்டுவரும்” என்பது இந்த அமைப்புக்களின் நிலைப்பாடாகும்.
ரொறன்ரோ ஸ்ரார் நாளேட்டில் வெளிவந்த செய்தியின் படி (ஆகஸ்ட் 02) கனடிய அரசு மனிதநேய உதவிப் பணிக்கு மேலதிகமாக 48 மில்லியன் டொலரை வழங்கியுள்ளது. இதனையும் சேர்த்து கடந்த 3 ஆண்டுகளில் கனடிய அரசு வழங்கிய உதவி நதி 441 மில்லியன் டொலராக உயர்ந்துள்ளது. கனடிய அனைத்துலக மேம்பாட்டு முகாமை (ஊயயெனயைn ஐவெநசயெவழையெட னுநஎநடழிஅநவெ யுபநnஉல) மூலம் இந்த உதவிநிதி உணவு கொள்வன செய்யவும் மனிதநேயப் பணிக்கும் பயன்படு;த்தப்படும்.
அய்யன்னா – ஆபிரிக்க ஒன்றிய நாடுகளின் அமைதிப் படைக்கு துருப்புக்களை கொடுத்து உதவுமாறு கனடிய அரசை அய்யன்னா இதுவரை கேட்கவில்லை. கனடிய வெளியுறவு அமைச்சர் பீட்டர் மக்கேயும் பாதுகாப்பு அமைச்சர் ஓ கோன்னரும் ஆசிய – ஆபிரிக்க நாடுகள் படைகளைக் கொடுத்து உதவ வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். தலிபானுக்கு எதிரான போருக்குப் பெருந்தொகைப் படையினரை ஈடுபடுத்தியுள்ள கனடிய அரசு மேற்கொண்டு படையினரை அனுப்பி வைப்பதில் தயக்கம் காட்டுகிறது. இது தொடர்பான கேள்விகளுக்கு நேரடியான பதிலைச் சொல்லாமல் இரண்டு அமைச்சர்களும் மழுப்பி விட்டார்கள். ஆனால் இந்தோனிசியா, பிரான்ஸ், டென்மார்க் போன்ற நாடுகள் துருப்புக்களைக் கொடுத்துதவ முன்வந்துள்ளன.
டார்பூர் அமைதி உடன்பாடு (னுயசகரச Pநயஉந யுபசநநஅநவெ (னுPயு)  ஒன்று மே 05, 2006 இல் கைச்சாத்திடப்பட்டது. அதில் சுடானிய அரசும் மூன்று கலகக் குழுவில் ஒரு கலகக் குழுவும் கைச்சாத்திட்டன. ஆனால் அதன்பின் மோதல் அதிகரித்ததேயொழிய குறையவில்லை. ஆயுதக் குழுக்களின் தாக்குதல்கள் மேலும் அப்பகுதியின்; அமைதியைக் குலைத்துள்ளது. 2007 பெப்ரவரி நடுப்பகுதியில் தென் டார்பூர் பகுதியில் இனக்குழுக்களுக்கு இடையிலான மோதல்கள் இடம்பெற்றன. 2006 இல் கைச்சாத்திடப்பட்ட அமைதி உடன்பாட்டில் கையெழுத்திடாத கலகக் குழுக்கள் ஒன்றிணைந்து தேசிய மீட்பு முன்னணி (யேவழையெட சுநனநஅpவழைn குசழவெ (Nசுகு) என்ற அமைப்பை யூன் 2006 இல் உருவாக்கி சுடானிய அரச படைகள் மீது தாக்குதல்ககளை மேற்கொண்டன. இந்த அமைப்புக்கு அண்டை நாடுகளான எரித்தியா (நுசவைசநய) மற்றும் சாட் (ஊhயன) நாடுகள் ஆதரவு நல்கின்றன.
சுடானிய படைகள் தோல்விகளால், கட்டுப்பாடு, மனவுறுதி ஆகியவற்றை இழந்துவிட்டது எனக் குற்றம்சாட்டிய அய்யானாவின் சிறப்புத் தூவர் துயn Pசழமெ சுடான் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்.
———————————————————————-
சுடான் ஒரே பார்வையில்
முழுப்பெயர் – சுடான் குடியரசு
மக்கள் தொகை – 35 மில்லியன் (அய்யன்னா 2005)
தலைநகர் – கார்ட்ரூம்
பரப்பு – 2.5 மில்லியன் சதுரகிமீ (966,757 சதுர கிமீ)
மொழிகள் – அரவு, நுபியன்
அகவை எதிர்பார்ப்பு – 55 ஆண்டுகள் (ஆண்கள்) 58 ஆண்டுகள் (பெண்கள்)
நாணயம் – சுடானிய டினார்
தனி ஆன் வருமானம் – 640 அ.டொலர் (உலக காப்பகம் 2006)

——————————————————————————————————————————-

இந்த இடத்தில் சுடானின் வரலாற்றுப் பக்கங்களைக் கொஞ்சம் திருப்பிப் பார்ப்பது நல்லதென்று நினைக்கிறேன்.
ஆபிரிக்காவின் மிகப் பெரிய நாடு சுடான். அது ஒரு நாடாக விளங்குவதற்கு கொலனித்துவ படையெடுப்பே காரணம். சுடான் மட்டுமல்ல. ஏனைய ஆபிரிக்க நாடுகளும் செயற்கையாக மேற்குலக கொலனித்துவ நாடுகளால் உருவாக்கப்பட்டவைதான். இனக் குழுக்களாக தனித்துவமான மொழி, பண்பாடு, பழக்கவழக்கம் ஆகியவற்றோடு வாழ்ந்த மக்கள் ஒரே நாடென்ற கூட்டுக்குள் அடைக்கப்பட்டார்கள். ஆபிரிக்க நாடுகளில் நடைபெறும் இனக்குழு மோதல்களுக்கு இதுவே அடிபடைக் காரணமாகும்.
நைசீரிய நாட்டை எடுத்துக் கொண்டால் அங்கு நிலைத்திருந்த தனித்தனி ஹவுசா, ஈபோ, யொறூபா அரசுகள் ஒரே குடையின் கீழ் இணைக்கப்பட்டன. வட நைசீரியாவில் வாழும் ஹவுசா இனததவர் மதத்தால் இஸ்லாமியர். தெற்கிலும் தென்கிழக்கிலும் வாழும் ஈபோ மற்றும் யொறூபா மக்கள் மதத்தால் கிறித்தவர்கள். இதனால் அங்கு இந்த இரண்டு மதத்தவர்களுக்கு இடையில் முறுகல் நிலை நிலவி வருகிறது. அது அவ்வப்போது இனக் கலவரமாகவும் வெடிக்கின்றன. 1960 ஆம் ஆண்டு ஒக்தோபர் 1 ஆம் நாள் சுதந்திரம் பெற்ற நைசீரியாவில் நிலையான ஆட்சி அமையவில்லை. அங்கு அடிக்கடி இராணுவப் புரட்சி அரங்கேறுகின்றன.
1880 களில் ஒட்டோமன் – எகிப்து ஆட்சி வீழ்ச்சி கண்டது. 1898 இல் அங்லோ – எகிப்திய படைகள் கார்ட்ரூமைக் (முhயசவழரஅ) கைப்பற்றியது. இருநாடுகளதும் ஒருங்கிணைந்த ஆட்சி நிறுவப்பட்டது. பிரித்தானியா வடக்கையும் தெற்கையும் பிரித்து வைத்திருந்தது. ஆனால் 1956 இல் சுடானுக்கு சுதந்திரம் வழங்கு முன்னர் பிரித்தானியா வடக்கையும் – தெற்கையும் 1947 இல் இணைத்து விட்டது. ஆட்சி அதிகாரம் வடக்கில் வாழ்ந்த மேட்டுக் குடியினரது பிடிக்குள் போனது. பெரும்பான்மை மக்கள் வாழ்ந்த வடக்கின் மேலாண்மையை வெறுத்த தெற்கு சுடானிய இராணுவ தளபதிகள் 1955 இல் கலகம் செய்தார்கள். அவர்கள் அன்யா – நியா (யுலெய – லேய) என்ற கெரில்லா இயக்கத்தைத் தொடங்கினார்கள்.
1958 இல் தளபது அபூத் (புநநெசயட யுடிடிழரன) இராணுப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார். அவர் இஸ்லாமிய மயப்படுத்தல் கொள்கையைத் தீவிரமாக நடைமுறைப் படுத்தினார். 1964 இல் தளபதி அபூத் அவர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்த போது அவர் பதவி துறந்தார். அதனைத் தொடர்ந்த அரபு இனத்தவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஆட்சிகள் மாறி மாறிப் பதவிக்கு வந்தன.
1969 இல் தளபதி நிமேரி (புநநெசயட Niஅநைசi) ஆட்சியைக் கைப்பற்றினார். 1971 இல் கம்யூனிஸ்டுகள் மேற்கொண்ட சதிப் புரட்சி முறியடிக்கப்பட்டது. அரசியலில் தனிமைப்படுத்தப்பட்ட நிமேரி அண்டை நாடுகளான எத்தியோப்பியா மற்றும் தென்பகுதிக் கலகக்காரர் ஆகியரோடு அமைதி உடன்பாடுகள் எழுதிக் கொண்டார்.
அன்யா-நியா கெரில்லா அமைப்போடு 1972 மார்ச்சு மாதத்தில் ஒரு அமைதி உடன்பாடு ; எழுதப்பட்டது. அதற்கு அடிஸ் அபாபா (யுனளை யுடியடிய)  உடன்பாடு என்று பெயர். இந்த உடன்பாடு தென்பகுதிக்கு தன்னாட்சி உரிமையை வழங்கியது. கெரிலா வீரர்கள் தேசிய இராணுவத்தோடு இணைக்கப்பட்டார்கள்.
ஆனால் அடிஸ் அபாபா உடன்பாடு இரு பக்கத்தாலும் மீறப்பட்டு வந்தது. நாட்டை இஸ்லாமியப் படுத்தும் முயற்சி முடுக்கிவிடப்பட்டது. இவற்றுக்கும் மேலாக தென் சுடானில் எண்ணெய் வளம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தத் திருப்பத்தால் உள்நாட்டுப் போர் மீண்டும் மூண்டது. 1977 இல் நாட்டின் யாப்பு அரசியல் விதிமுறையை மீறி திருத்தப்பட்டது. வட சுடானிய  இராணுவம் எண்ணெய்வளம் படைத்த தென் சுடானின் பென்தியு (டீநவெரை)  நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தெற்கின் எண்ணெய் வளம் அதற்குச் சாதகமாக இருப்பதற்குப் பதில் பாதகமாக அமைந்துவிட்டது.
1983 ஆம் ஆண்டு தென்சுடானிய படைகள் வட சுடானிய ஆட்சிக்கு எதிராகக் கலகம் செய்தார்கள்.
நிமேரி அடிஸ் அபாபா உடன்பாட்டை 1983 இல் கிழித்தெறிந்தார். தென் சுடானுக்கு அரசியல் யாப்பில் கொடுக்கப்பட்ட உரிமைகள் பறிக்கப்பட்டன. அரபு மொழி நாட்டின் உத்தியோக மொழியாக அறிவிக்கப்பட்டது. இஸ்லாமிய சாரியா சட்டம் நாட்டின் நீதித்துறையின் ஒரே சட்டம் என அறிவிக்கப்பட்டது.
தென் சுடானின் மனக்குறைபாடுகள்  சுடானிய மக்கள் விடுதலை இராணுவ இயக்கம் (ளுரனயn Pநழிடந’ள டுiடிநசயவழைn யுசஅலஃஆழஎநஅநவெ (ளுPடுயு)  ஆக யோன் கறாங் (துழாn புயசயபெ) என்பவரது தலைமையில் உருப்பெற்றது.
நிமேரி 1985 இல் வெடித்த மக்கள் எழுச்சி மூலம் கவிழ்க்கப்பட்டார்.  1986 இல் நடந்த தேர்தலில் சாதிக் அல் – மாதி தலைமையில் உள்ள உம்மா கட்சி தேர்தலில் வெற்றிபெற்றுப் பதவிக்கு வந்தது.
1989 இல் தேசிய இஸ்லாமி முன்னணி (யேவழையெட ஐளடயஅi குசழவெ(Nஐகு) இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றியது. சாரியா சட்டத்தை உறைய வைக்கும் வரைவு நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரப்பட இருந்த முதல் நாள் இந்த இராணுவப் புரட்சி நடந்தேறியது. இராணுவப் புரட்சியின் சூத்திரதாரியான தளபது ஒமார் அல் -பஷீர் நாட்டின் யாப்பை முடக்கினார். எதிர்க்கட்சிகளை தடை செய்தார். நீதித்துறையில் இஸ்லாமிய சட்டங்களைப் புகுத்தினார். இவற்றோடு நிறுத்திக் கொள்ளாமல் இஸ்லாம் அல்லாத தெற்கோடு ஜிகாத் போரைப் பிரகடனப்படுத்தினார்.
சுடானின் இன்னல்கள் முடிந்த பாடாயில்லை. அவை தொடர்ந்தன. 1991 இல் எத்தியோப்பியாவில் மெங்கிஸ்து (ஆநபெவைளர)  ஆட்சி முடிவுக்கு வந்தது இது எஸ்பிஎல்ஏ (ளுPடுயு) யை பலவீனப்படுத்தியது. இதனால் எஸ்பிஎல்ஏ எரித்தியாவைத் தளமாகக் கொண்டு இயங்கியது. எரித்தியா இஸ்லாமிய ஜிகாத் தீவிரவாதிகளை கார்ட்ரும் (முhயசவழரஅ) ஆதரிப்பதாக குற்றம் சாட்டியது. 1955 இல் எகிப்பதிய ஆட்சித்தலைவர் முஹாரப்பைக் கொலை செய்ய முயற்சிக்கப்பட்டது. இந்த முயற்சிக்கு எத்தியோப்பியா சுடானைக் குற்றம் சாட்டியது.
கார்ட்ரும் இஸ்லாமிய ஜிகாத் போராளிகளுக்கும் மற்றும் பின் லேடனுக்கும் அடைக்கலம் கொடுப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. 1988 இல் நைரோபி மற்றும் டார் –எஸ் – சலாம் நகரங்களில் இயங்கிய அமெரிக்க தூதுவராலயங்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா சுடான் மீது ஏவுகணைகளை ஏவியது.
2002 யூலை இல் தென் சுடானுக்கு தன்னாட்சி உரிமை வழங்குவதற்கு ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 2005 சனவரி 9 இல் ஒரு அமைதி உடன்பாடு கையெழுத்தானது. இதன் மூலம் 20 ஆண்டுகள் தொடர்ச்சியாக நடந்து வந்த உள்நாட்டுப் போருக்கு முடிவு கட்டப்பட்டது.
2005 ஒக்தோபரில் புதிய யாப்பும் புதிய அரசும்  நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம் வடக்குக்கு 52 விழுக்காடு நிறைவேற்றுப் பதவிகளும் தெற்கிற்கு 28 விழுக்காடு நிறைவேற்றுப் பதவிகளும் வழங்கப்பட்டன. தென் சுடானில் தன்னாட்சி சட்டசபையும் அரசு நிருவாகமும் ; நடைமுறைக்கு வந்தது.
இந்தப் பின்னணியில்தான் ஆயுதம் தரித்த அய்யன்னா – ஆபிரிக்க அமைதிப் படைகள் சுடானில் நிலைகொள்ள சுடானிய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.
எண்ணெய் வளம் படைத்த சுடான் நாட்டின் எதிர்காலம் நிரந்தர அமைதி நிலவுமா நிலவாதா என்பதில் தங்கியுள்ளது. (உலகத்தமிழர் ஓகஸ்ட் 03, 2007)


தன்னிச்சையாகச் சுதந்திரப் பிரகடனம் செய்ய இருக்கும் கொசோவோ!

அய்யன்னாவின் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கிறது ஒரு நாடு. அய்யனாவின் கதவுகள் திறக்கப்படும் பட்சத்தில் கொசோவோ அதன் 193 ஆவது உறுப்பு நாடாகத் திகழும்.
அமெரிக்காவும் அய்ரோப்பிய நாடுகளும் உருசியாவின் எதிர்ப்புக் காரணமாக கொசோவோவின் சுதந்திரம் தொடர்பான அய்யன்னா தீர்மானத்தைக் கைவிட்டதை (யூலை 13) அடுத்து கொசோவோ நவம்பர் 28 ஆம் திகதி தன்னிச்சையான சுதந்திரப் பிரகடனம் (ருnடையவநசயட னுநஉடயசயவழைn ழக ஐனெநிநனெநnஉந) ஒன்றைச் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. அது தொடர்பாக கொசோவோ பிரதமர் அஜிம் செகு (யுபiஅ ஊநமர)  கொசோவோ நாடாளுமன்றத்தைக் கூட்ட இருக்கிறார்.
கொசோவே தன்னிச்சையான சுதந்திரப் பிரகடனத்தைச் செய்துவிட்டு அய்யயனாவை கொசோவோவை விட்டு வெளியேறுமாறு கேட்கக் கூடும். கேட்டுவிட்டு அய்ரோப்பிய நாடுகளை வரவழைக்கலாம். அந்தக் கட்டத்தில் கொசோவேவின் சுதந்திரத்தை எத்தனை நாடுகள் ஏற்றுக் கொள்ளும் என்பது முக்கியமானது.
அமெரிக்கா ஒரு சுதந்திர கொசோவோவை ஏற்றுக்கொள்ளும் என அறிவித்துள்ளது.  பிரித்தானியா, பெல்ஜியம், இத்தாலி, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளும் அவ்வாறு செய்யக்கூடும். சீனா, இந்தோனிசியா மற்றும் தென் ஆபிரிக்கா அய்யம் எழுப்பியுள்ளன.
கொசோவோ தலைவர்கள் அய்யன்னா ஒருமித்த கருத்தை எட்டாது என்பதை எதிர்பார்த்தே வந்தனர். அய்யன்னாவின் அனுமதியோடு சுதந்திரம் அடைய விரும்பினாலும் அதற்காக ஆண்டுக்கணக்கில் காத்திருக்க அவர்கள் தயாராயில்லை.
நாடுகளின் மாகாணங்களை துண்டாடுவது சுதந்திரத்துக்காகப் போராடும் பிரிவினைவாதிகளது கைகளைப் பலப்படுத்தும் எனக் கூறி உருசியாவின் அய்யன்னாவுக்கான தூதுவர் ஏவையடல ஏhரசமin எதிர்புத் தெரிவித்தார். உருசியாவிற்கு முதுகில் புண். உருசியாவில் செச்சீனிய மக்கள் சுதந்திரம் கேட்டுப் போராடுவது குறிப்பிடத்தக்கது.
நொவெம்பர் 28 அண்டைநாடான அல்பேனியாவின் சுதந்திர நாள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சுதந்திர நாளைக் கொசோவோவில் வாழும் 90 விழுக்காடு அல்பேனியர்களும் கொண்டாடுகிறார்கள்.
தன்னிச்சையான சுதந்திரப் பிரகடனத்துக்கு நொவெம்பர் 28 யை கொசோவோ தேர்ந்தெடுத்திருப்பது ‘அகண்ட அல்பேனியா’ வை உருவாக்கும் முயற்சி என சேர்பியா வருணித்துள்ளது. ஆனால் அந்தக் குற்றச்சாட்டை கொசோவோவும் அல்பேனியாவும் மறுத்துள்ளன.
கொசோவோ சேர்பிய நாட்டு நாகரிகத்தின் தொட்டில் என்பது சேர்பியாவின் வாதமாகும்.
சேர்பியரைப் பொறுத்தளவில் கொசோவோ அவர்களது ஆன்மீக “ஜெரூசலமாகும்” ஆகும்!


கொசோவோ ஒரே பார்வையில்
மக்கள்தொகை – 2 மில்லியன் ( தமிழீழம் 3.6 மில்லியன்)
நிலப்பரப்பு – 10,887 சகிமீ (தமிழீழம் 19,509 சகிமீ)
தலைநகர் – பிறிஸ்ரீனா (Pசளைவiயெ – மக்கள் தொகை 400,000)
புலம்பெயர்ந்த அல்பேனியர் – 400,000 – 700,000 (தமிழீழம் 800,000)
புலம்பெயர்ந்த அல்பேனியர் அனுப்பி வைக்கும் வெளிநாட்டுப் பணம் – ஆண்டொன்றுக்கு 500 மில்லியன் டொலர்
நாணயம் – யூறோ
மொத்த உள்நாட்டு உற்பத்தி (புனுP) – 1,895 மில்லியன் (மதிப்பீடு)
__________________________________________________________________________________
கொசோவோ அல்பேனியர் தனிநாடு கேட்டுப் போராடிய போது அவர்களது போராட்டத்தை முறியடிக்க அன்றைய சேர்பிய நாட்டு ஆட்சித் தலைவராக இருந்து ஸ்லோபடன் மிலோசெவிக் (ளுடழடிழனயn ஆடைழளநஎiஉ) இராணுவத்தைக் கொண்டு அடக்க முற்பட்டார். அதனை நிறுத்த நேட்டோ நாடுகள் சேர்பியா மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்தியது.
அந்தச் சண்டையில் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து பட்டார்கள். இலக்கக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்தார்கள். சண்டை முடிந்த போதும் சேர்பியர்களும் அல்பேனியர்களும் ஒற்றுமையாக இருக்கவில்லை. பகை உணர்வோடு பிரிந்தே வாழ்ந்தார்கள்.
நேட்டோ நாடுகள் சேர்பியா மீது தாக்குதல் நடத்திய போது அன்றைய யூகோசி;லாவியா நாட்டின் ஆட்சித் தலைவர் ஸ்லோபொடன் மிலோசொவிக் சண்டையை நிறுத்துவதற்கு அவமானமான நிபந்தனைகளை ஏற்க வேண்டி இருந்தது. அதே சமயம் கொசோவோ விடுதலை இராணுவம் சுதந்திர கொசொவோ பற்றிய தீர்மானம் தள்ளிப்பட்டுப் போனதினால் கவலை அடைந்தது. அதற்கு மேலாக கொசோவோ விடுதலை இராணுவம் ஆயுதங்களைக் கீழெ வைக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் அது விரும்பவில்லை.

கொசோவோ அய்யன்னாவின் கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டாலும் நேட்டோ நாடுகளது படைகளே அங்கு நிலைகொண்டு இருந்தது. கொசோவோ அய்க்கிய நாடுகள் அவையின் கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டதன் நோக்கம் அங்கே காலப் போக்கில் மக்களாட்சிக்கு வேண்டிய நிலையான அமைப்புக்களைக் (iளெவவைரவழைளெ)  கட்டி எழுப்புவதே ஆகும்.
1914 யூன் 14 இல் அவுஸ்திரிய மன்னர் யுரளவசயைn யுசஉhனரமந குசயணெ குநசனiயெனெ பொஸ்னிய சேர்பியர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தக் கொலை முதலாவது உலக மகா யுத்தத்திற்கான கொடியேற்றம் ஆக அமைந்தது.
யுத்த முடிவில் வெற்றி பெற்ற நட்பு நாடுகள் போல்க்கன் பிரதேசத்தை கூறுபோட முனைந்தன. அதற்காக அவுஸ்றோ – ஹங்கேரி பேரரசு ( யுரளவசழ-ர்ரபெயசயைn நஅpசைந) துண்டாடப்பட்டது. 1918 இல் சேர்பியர், குரோசியர், பல்N;கரியர், அல்பேனியர், மசிடோனியர் ஒன்றாக இணைந்து சேர்பியர்களின் இராச்சியம் (முiபெனழஅ ழக ளுநசடிள) ஒன்றை உருவாக்கினார்கள். பின்னர் 1929 ஆம் ஆண்டு அது யூகோசிலாவியா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. யூகோசிலாவியா என்றால் தென் ஸ்லாவ் அரசு (ளுழரவா ளுடயஎ ளவயவந) என்று பொருள்படும்.
1934 ஆம் ஆண்டு யூகோசிலாவியா மன்னர் அலெக்சாந்தர் மசிடோனியா புரட்சிவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து போல்க்கன் நாடுகளில் புரட்சி இயக்கங்கள், தேசிய இயக்கங்கள் தலைதூக்கின.
இரண்டாவது உலக யுத்தத்தின்போது நாசி ஜெர்மனி அய்ரோப்பிய நாடுகள் மீது படையெடுத்து அவற்றை ஆக்கிரமித்தபோது யூகோசிலாவியா இனக் குழுக்களிடம் பிளவு ஏற்பட்டது. பாதிப் பேர் ஜெர்மனியரை “விடுவிப்பாளர்” (டுiடிநசயவழசள) எனக் கூறி வாழ்த்தி வரவேற்றனர். மீதிப் பேர் நாசி ஜெர்மனியை எதிர்த்தனர்.
ஜெர்மனியின் ஆக்கிரமிப்பை எதிர்த்து இரண்டு கெரில்லா இயக்கங்கள் போரிட்டன. அதில் ஒன்று மார்ஷல் யோசிப் புறஸ் ரிட்ரோ (துழளip டீசழண வுவைழ ) தலைமையில் சோவியத் நாட்டின் ஆதரவோடு போரிட்டது.
1943 ஆம் ஆண்டு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு ரிட்ரோ தலைமையில் சேர்பியா, குரோசியா, ஸ்லோவினா, பொஸ்னியா – ஹெர்ஸ்கொவினா, மசிடோனியா, மொன்ரெநீக்றோ குடியரசுகள் அடங்கிய சமவுடமை யூகோசிலாவிய இணைப்புக் குடியரசு (லுரபழடழஎயை குநனநசயட ளுழஉயைடளைவ சுநிரடிடiஉ ) பிரகடனப் படுத்தப்பட்டது. ஆட்சித்தவைர் ரிட்ரோ கலப்பு இனத்தவர். இந்தக் குடியரசில் சேர்பியர்களே பெரும்பான்மை இனத்தவராக விளங்கினார்கள்.
1974 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட புதிய அரசியல் யாப்பு குரோசியர், ஸ்லோவினியர், முஸ்லிம்கள் மற்றும் அல்பேனியர்களது தேசிய உணர்வையும் பிரிவினை உணர்வையும் அதிகரிக்க வழிகோலியது.
1980 இல் அதிபர் ரிட்ரோ காலமானார். அவரது மறைவோடு இரும்புப் பிடிக்குள் அவர் வைத்திருந்த யூகோசிலாவியா குடியரசு குலையத் தொடங்கியது.
சேர்பியாவில் வாழ்ந்த அல்பேனிய சிறுபான்மையினர் தங்களுக்கு யூகோசிலாவிய குடியரசின் கீழ் தன்னாட்சி வேண்டும் என்று வலியுறுத்திப் போராடினார்கள்.
இவற்றால் யூகோசிலாவியாவின் அரசியல் ஒருமைப்பாடு ஈடாடிப் போனது. யூகோசிலாவியா குடியரசில் உறுப்புரிமை வகித்த குரோசியாவும் ஸ்லோவேனியாவும் யூன் 25, 1991 இல் சுதந்திரப் பிரகடனம் செய்துவிட்டுத் தனி நாடுகளாகப் பிரிந்தன. இந்த இரண்டு நாடுகளையும் அய்க்கிய .நாடுகள் அவை 1992 சனவரியில் புதிய நாடுகளாக அங்கீகரித்தது.
1991 ஆம் ஆண்டு நொவெம்பர் மாதம் மசிடோனியா சுதந்திரப் பிரகடனம் செய்தது. சண்டை இல்லாமல் அமைதி வழி யூகோசிலாவியாவில் இருந்து பிரிந்த ஒரே நாடு மசிடோனியாதான்.
இதனைத் தொடர்ந்து பொஸ்னியா 1992 பெப்ரவரி மாதத்தில் தன்னைச் சுதந்திரநாடாகப் பிரகடனப்படுத்தியது. அதே ஆண்டு ஏப்ரில் மாதத்தில் அதற்கு அய்க்கிய நாடுகள் அவையின் அங்கீகராரம் கிடைத்தது. அதே சமயம் யூகோசிலாவியா (எஞ்சிய) அய்க்கிய நாடுகள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டது.
இன்று சேர்பியா – மொன்ரெநீக்றோ இரண்டும் மட்டுமே பழைய யூகோசிலாவியா குடியரசில் எஞ்சி இருக்கும் நாடுகள் ஆகும். அண்;மையில் மொன்ரெநீக்றோ தனிநாடாகப் பிரிந்து போக முடிவு செய்துள்ளது.
கொசோவோ பற்றிய சேர்பியரின் ‘தவனம்’ எவ்வாறு இருப்பினும் நிலைமை நடைமுறை உலகில் முற்றாக மாறிவிட்டது. கொசோவோ சேர்பியாவின் ஒரு பகுதியாக இன்று இல்லை. சேர்பிய படை 1999 ஆம் ஆண்டே வலுக்கட்டாயமாக நேட்டோ படையால் வெளியேற்றப்பட்டு விட்டது. அப்போது நடந்த சண்டையில் 10,000 அல்பேனியர்கள் இறந்தார்கள். எட்டு இலக்கம் மக்கள் தங்கள் வீடு வாசல்களை கைவிட்டு ஓடினார்கள். கொசொவோவில் வாழும் அல்பேனியர்கள் மீண்டும் சேர்பியாவின் கொடுங்கோல் ஆட்சியின் கீழ் வாழமுடியாது என்ற முடிவில் ஒருமனத்தராக இருக்கிறார்கள். ஒரு தாராள தன்னாட்சி அரசியல் அமைப்பின் கீழும் சேர்பியரின் கட்டுப்பாட்டில் கொசோவோ மக்கள் வாழச் சம்மதிப்பார்களா என்பதை கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாது இருக்கிறது. (ஐவ ளை iஅpழளளiடிடந வழ iஅயபiநெ வாநஅ யஉஉநிவiபெ ய சநவரசn வழ ளுநசடியைn உழவெசழட நஎநn ரனெநச வாந அழளவ பநநெசழரள கழசஅ ழக யரவழழெஅல)
கொசோவோவிற்கான அய்க்கிய நாடுகளின் சிறப்புப் பிரதிநிதி மார்ட்டி அஹ்ரிசாரி (ஆயசவவi யுhவளையயசi ) அந்த நாட்டிற்கு சுதந்திரம் வழங்குவது தொடர்பாக சமர்ப்பித்த திட்டத்தின் முக்கிய யோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்காக பாதுகாப்புச் சபையில் தீர்மானமொன்றை கொண்டு வருவதற்கான முயற்சியை மேற்குநாடுகள் மேற்கொண்டிருந்தன. சேர்பியாவின் முக்கிய நேசநாடான உருசியா வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தப் போவதாக எச்சரித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து கொசோவோவிற்கு சுதந்திரம் வழங்கும் யோசனையை அமெரிக்காவும் அய்ரோப்பிய ஒன்றிய நாடுகளும் பாதுகாப்புச் சபை தீர்மானம் தொடர்பான தமது முயற்சியை கைவிடத் தீர்மானித்ததுடன கொசோவோ தொடர்பான ஆறு நாடுகளிடம் அதனை கையளிக்கத் தீர்மானித்துள்ளன. அமெரிக்கா, பிரித்தானியா, பெல்ஜியம், இத்தாலி, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளே அந்த ஆறு நாடுகளாகும். இந்த நாடுகளே பாதுகாப்பு அவையில் கொசோவோ தொடர்பான சுதந்திரத்துக்கு ஆதரவாகத் தீர்மானம் கொண்டு வந்த நாடுகளாகும். இந்த ஆறு நாடுகளில் ஒன்றுக்காவது வீட்டோ அதிகாரம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
அய்யன்னாவின் வரைவுத் தீர்மானம் அய்யன்னாவின் கட்டுப்பாட்டில் உள்ள கொசோவோ நிருவாகத்தை அய்ரோப்பிய ஒன்றியத்திடம் கையளிக்க வழிகோலி இருக்கும். அப்படிக் கையளிப்பதை உருசியாவின் வீட்டோ தடுத்துவிட முடியாது. மேலும் கொசோவோ மீதான உருசியாவின் செல்வாக்கு அகற்றப்பட்டுவிடும்.
அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகளின் முடிவை உருசியா வரவேற்றுள்ளது. வியன்னாவில் நடைபெறவுள்ள கொசோவோ தொடர்பான நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதாக உருசியா தெரிவித்துள்ளது. பாதுகாப்புச் சபையில் தீர்மானமொன்றை கொண்டு வரும் முயற்சி கைவிடப்பட்டதை சேர்பியாவும் வரவேற்றுள்ளது.
சேர்பியாவின் இறைமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாத்ததன் மூலம் உருசியாவும் சேர்பியாவும் கூட்டுக் கொள்கையொன்றில் முக்கிய வெற்றியைப் பெற்றுள்ளன என சேர்பியப் பிரதமர் தெரிவித்துள்ளார். சேர்பியாவின் பெருமளவு நிலப்பரப்பை கைப்பற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு எதிராகக் கிடைத்த வெற்றி இதுவெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் கொசோவோ பிரதமர் அஜிம் செகு (யுபiஅ ஊநமர) பாதுகாப்பு சபையின் முடிவு குறித்து கவலை வெளியிட்டுள்ளார். கொசோவோ ஆட்சித்தலைவர் பாதுகாப்புச் சபையில் வீட்டோ அதிகாரமுள்ள நாடொன்று தனது நாட்டின் சுதந்திரத்தை தடுத்து விட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
பாதுகாப்புச் சபையில் கொண்டு வரப்படவிருந்த தீர்மானம் கொசோவோ தொடர்பாக பொது இணக்கப்பாட்டிற்கு வர முடியுமா எனக் கண்டறிவதற்காக 120 நாள்களுக்குள் பெல்கிரேட்டும் கொசோவோ அல்பேனியர்களும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தது.
கொசோவோ மாகாணத்தின் மொத்த மக்கள் தொகையில் (2,000,000) அல்பேனியர்கள் 90 விழுக்காட்டினர். எட்டு விழுக்காட்டினர் (160,000) சேபியர்.
1999 ஆம் ஆண்டு நேட்டோ படைகள் சேர்பியன் படைகளை கொசோவோவில் இருந்து கட்டாயமாக வெளியேற்றியதைத் தொடர்ந்து அய்யன்னாவின் நிருவாகத்தின் கீழ் இருந்து வருகிறது. நேட்டோ அமைப்பின் 16,000 படையினர் தற்போது கொசோவோவில் நிலைகொண்டுள்ளார்கள்.
கொசோவோ கெரிலாக்களுக்கு எதிராக சேர்பியா இரண்டு ஆண்டுகளாக நடத்திய சண்டையில் ஆயிரக்கணக்கான கொசோவோ மக்கள் கொல்லப்பட்டார்கள்.
எலி வளை என்றாலும் தனி வளை இருக்க வேண்டும். வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் சிறிய நாடுகளை அவற்றின் விருப்பத்துக்கு மாறாக பெரிய நாட்டோடு இணைப்பது தோல்வியில் முடிந்துள்ளது.
இன்று உலகளாவிய அளவில் சிறுபான்மை தேசிய இனங்களைச் சார்ந்த 80 கோடி மக்கள் தங்கள் சுதந்திரத்துக்கும் விடுதலைக்கும் போராடிவருகிறார்கள்.
புலம், வரலாறு, மொழி, பண்பாடு இவற்றின் அடிப்படையில் தேசிய இனங்களாகக் கணிக்கப்படும் ஒவ்வொரு இனத்துக்கும் தன்னாட்சி உரிமை வழங்கப்படவேண்டும். அப்படிச் செய்வதன் மூலமே நிரந்தர உலக சமாதானத்தை உருவாக்கலாம்.
அய்க்கிய நாடுகள் அவை தோற்றம் பெற்றபோது அதில் உறுப்புரிமை வகித்த நாடுகளின் எண்ணிக்கை வெறுமனே 51 மட்டுமே. இன்று அதன் எண்ணிக்கை 192 ஆகும்.  கடந்த 12 ஆண்டுகளில் (1990-2002) அய்யன்னா  அவையின் உறுப்பினர் தொகை 159 இல் இருந்து 192 ஆக உயர்ந்துள்ளது.
நாடுகளின் எல்லைகள் அழித்தெழுத்த முடியாத தெய்வீகம் வாய்ந்தவை அல்ல. நாடுகளின் தொகை கூடியதால் வானம் இடிந்து விழுந்துவிட வில்லை. அல்லது பூமி பிளந்து விடவில்லை. மாறாக நாடுகளின் அதிகரிப்பு உலக அமைதிக்கு வழிகோலியுள்ளது. (உலகத்தமிழர் – யூலை 27-07-2007)


பிரித்தானியாவுக்கும் உருசியாவுக்கும் இடையில் வெடித்துள்ள இராசதந்திரச் சண்டை!

உருசியாவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் ஒரு இராசதந்திரச் சண்டை மூண்டுள்ளது. கடந்த யூலை 16 ஆம் நாள் பிரித்தானிய துணை வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபான்ட் (னுயஎனை ஆடைiடியனெ) 4 உருசிய இராசதந்திரிகளை நாட்டை விட்டு வேளியேறுமாறு கட்டளை இட்டதாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
உருசியா பதிலடியாக விட்டேனோ பார் என்று 4 பிரித்தானிய இராசதந்திரிகளை நாட்டை விட்டு 10 நாள்களில் வெளியேறுமாறு கேட்டுள்ளது. அத்தோடு நின்றுவிடாமல் “பிரித்தானியாவின் ஆத்திரம் ஊட்டும் செயல்கள் பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளில் மேற்கொண்டு எந்த ஒத்துழைப்பும் உருசியா வழங்காது” என உருசிய வெளியுறவுப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும் பேசுகையில “பிரித்தானியா உருசிய இராசதந்திரிகளுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைக்கு எதிராக இப்படியான நடவடிக்கையை நாம் எடுக்க பிரித்தானியா எம்மைத் தள்ளியுள்ளது” என்றார்.
“2002 ஆம் ஆண்டில் இருந்து உருசியா பிரித்தானியாவிடம் விசாரணைக்குத் தேவைப்படும் 21 பேரை எங்களிடம் ஒப்படைக்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள்களை நிராகரித்து விட்டது” என உருசிய துணை வெளியுறவு அமைச்சர் அலெக்ஸ்சான்டர் குறுஷ்கோ (யுடநஒயனெநச புசரளாமழ) குற்றம் சாட்டியுள்ளார்.
உருசியாவும் பிரித்தானியாவும் ஏன் இப்படி அடிக்கு அடி என நடந்து கொள்கின்றன?
உருசிய பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றிய அலெக்சான்டர் லிட்வினென்கோ (யுடநயனெநச டுவைஎiநெமெழ) சாவுக்குக் காரணம் என எண்ணப்படும் உருசிய வணிகர் அந்திரேய் லுகோவொய் (யுனெசநi டுரபழஎழi) என்பவரைத்  தம்மிடம் ஒப்படைக்குமாறு உருசியாவிடம் பிரித்தானியா கேட்டது. உருசியா மறுத்துவிட்டது. இதுதான் இருநாடுகளுக்கும் இடையில் நடக்கும் குடுமிச் சண்டைக்குக் காரணம்.
பனிப்போர் முடிவுற்ற பின்னர் உருசியாவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் எழுந்துள்ள மோசமான நெருக்கடி இதுவாகும்.
இலண்டனில் வாழ்ந்த அலெக்சான்டர் லிட்வினென்கோ மர்மமான முறையில் கொல்லப்பட்டார். அந்திரேய் லுகோவொய் குடிக்கும் தேநீரோடு கலந்து கொடுத்த கதிர்நஞ்சு மூலம் கொல்லப்பட்டார் என்கிறது பிரித்தானிய காவல்துறை (ளுஉழவடயனெ லுயசன). அது மேற்கொண்ட விசாரணையில் அது தெரியவந்துள்ளது. அப்படி நஞ்சூட்டி லுகோவொயைக் கொன்றவர் லிட்வினென்கோ என்ற வணிகர் என்பது காவல்துறையின் கண்டுபிடிப்பு.
உருசியா – பிரித்தானியா இராசதந்திரப் போர் இரண்டாவது உலகப் போரின் பின்னர் கடந்த நான்கு சகாப்தங்களாக அனைத்துலக அரசியல் தளத்தில் காணப்பட்ட ஒழுங்கைக் குலைத்து மீண்டும் இருதுருவ அரசிலுக்கு உலகை எடுத்துச் செல்லப்போகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
முன்னைய காலத்தில் உலகத்தை இரண்டு கோட்பாடுகள் பிரித்தது. ஒன்று தாராளமான மேற்கு நாடுகளின் சுதந்திர சந்தைக் கோட்பாடு. இதற்கு அமெரிக்கா தலைமை தாங்கி வழி நடத்தியது. மற்றது சோசலீச கிழக்கு நாடுகளின் கட்டுப்படுத்தப்பட்ட சந்தைக் கோட்பாடு. இதற்கு சோவியத் ஒன்றியம் தலைமை தாங்கி வழி நடத்தியது.
அமெரிக்கா தனது இராணுவ பலத்தை அதிகரிக்க நேட்டோ (ழேசவா யுவடயவெiஉ வுசநயவல ழுசபயnளையவழைn)  ளுநுயுவுழு (ளுழரவா நுயளவ யுளயைn வுசநயவல ழுசபயnளையவழைn) யுNணுருளு (யுரளவசயடயைஇ நேற ணுநயடயனெ யனெ யுஅநசiஉய) போன்ற பாதுகாப்பு உடன்பாடுகளை எழுதிக் கொண்டது.
சோவியத் ஒன்றியமும் அதன் நேச நாடுகளான கிழக்கு அய்ரோப்பிய நாடுகளும் வோர்சோ உடன்பாட்டை (றுயசளயற Pயஉவ) எழுதிக் கொண்டன.
1990 இல் கம்யூனிசம் வீழ்ச்சி கண்டது. சோவியத் ஒன்றியம் குலைந்து போயிற்று. பனிப் போர் முடிவுக்கு வந்தது. உருசியா ஒரு நடுத்தர அரசாகத் தோற்றம் கொண்டது. சோவியத் ஒன்றிய காலத்தில் உருவாக்கப்பட்ட அணு ஆற்றல் நிலையங்களை உருசியா கொண்டிருந்தாலும் பொருளாதார தளத்தில் தனது காலில் நிற்க முடியாது தவித்தது.
உருசியாவின் முதல் ஆட்சித்தலைவர் பொறிஸ் யெல்சின் (டீழசளை லுநடவளin) அவர்கட்கு உருசியா இழந்த வல்லரசு தகுதியைப் பற்றி சிந்திக்க நேரம் இருக்கவில்லை. செச்சென்யா (ஊhநஉhலெய) பிரிவினைப் போர், தேசிய அரசியல் வாதிகள் நடத்திய இராணுவப் புரட்சி, பொருளாதார நெருக்கடி போன்றவற்றுக்கு முகம் கொடுக்கவே அவருக்கு நேரம் சரியாக இருந்தது. போதாக்குறைக்கு அவரது உடல் நலம் சொல்லும்படியாக இருக்கவில்லை. பலத்த குடிகாரரான அவர் அடிக்கடி உடல்நலத்தையும் இழந்தார். ஆனால் அவரது ஓய்வை அடுத்து பதவிக்கு வந்த விலடிமிர் புட்டின் (ஏடயனiஅசை Pரவin) உருசியாவை மீண்டும் அதன் காலில் நிற்க வைத்தார்.
உலகத்தில் அதிகளவு மதகு எண்ணெய் மற்றும் இயற்கை வாயு உற்பத்தி செய்யும் நாடு உருசியா. இந்த உண்மை பலருக்குத் தெரியாது. கடந்த 10 ஆண்டுகளாக அதிகரித்து வரும் எரிபொருட்களின் விலை மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகரித்தது உருசியாவின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தியுள்ளது. இன்று பல ஆயிரம் கோடி பெறுமதியான நேரடி முதலீடுகளை உருசியா பெற்றுள்ளது.
அணு ஆற்றல், வலுவான பொருளாதாரம் மற்றும் வலுவான படையணிகள் உருசியாவை மீண்டும் ஒரு வல்லரசாக உயர்த்தியுள்ளது. உருசியாவை மீண்டும் ஒரு புகழ்வாய்ந்த வல்லரசாக உயர்த்தப் போவதாக புட்டின் சூளுரைத்துள்ளார்.
அமெரிக்க – உருசிய உறவு பனிப்போர் காலத்தைப் போன்றே நம்பிக்கையற்ற நிலையில் உள்ளது. 1991 ஆம் ஆண்டு வோர்சோ உடன்பாடு முடிவுக்கு வந்தது. ஆனால் அமெரிக்கா நேட்டோ அமைப்பைக் கலைக்க மறுத்துவிட்டது. அத்தோடு நில்லாமல் நேட்டோ அமைப்பை அமெரிக்க விரிவாக்கி வருகிறது. முன்னர் கம்யூனிச நாடுகளாக இருந்த அல்பேனியா, பல்கேரியா, செச்கோசிலாவக்கியோ, கிழக்கு ஜெர்மனி, கங்கேரி, போலந்து, உரோமேனியா நாடுகள் இன்று நேட்டோ அமைப்பில் சேர்ந்துவிட்டன. இதனை உருசியா இரசிக்கவில்லை என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
உருசியா அமெரிக்காவின் அசைவுககளை மட்டுப்படுத்த 1991 ஆம் ஆண்டு 8 ஆம் நாள் ஊழஅஅழறெநயடவா ழக ஐனெநிநனெநவெ ளுவயவநள (ஊஐளு) என்ற அமைப்பை உருவாக்கியது. இதில் பல முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள் உறுப்புரிமை வகித்தன. ஆனால் இந்த அமைப்பு நின்று பிடிக்கவில்லை. கல கலக்கத் தொடங்கியது. பல உறுப்பு நாடுகள் அமெரிக்கா பக்கம் சாயத் தொடங்கின. லத்தீவியா மற்றும் லித்துயானியா நேட்டோ அமைப்பில் சேர்ந்து விட்டன. உக்பெனிஸ்தான், உக்கிரேன், யோர்ஜியா (சர்வாதிகாரி ஸ்டாலின் பிறந்த நாடு) போன்ற நாடுகள் இன்று அமெரிக்காவின் நேச நாடுகளாக விளங்குகின்றன.
உருசியா இந்த நாடுகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யும் எரிபொருள்களின் விலையை அதிகரித்தது. எண்ணெய் மற்றும் இயற்கை வாயுக் குழாய்களைக் கூட முடிப் பார்த்தது. ஒன்றும் பெரிதாகப் பலிக்கவில்லை.
உருசியாவை விட அமெரிக்கா பக்கம் சாய்ந்து நின்றால் நன்மை அதிகம் என்று இந்த நாடுகள் நினைக்கின்றன. இதனால் தனது பின் கொல்லைக்குள் வந்த வாலை ஆட்டும் அமெரிக்காவை உருசியா வெறுப்போடும் அய்யத்தோடும் பார்க்கிறது.
———————————————————————————————————————–
உருசியா பற்றிய புள்ளி விபரம்
மக்கள் தொகை – 143.8 மில்லியன் (2006 அய்யன்னா மதிப்பீடு)
தலைநகர்; – மொஸ்கவு
பரப்பளவு – 17 மில்லியன் சதுர கிமீ (6.6 மில்லியன் சதுர கல்) பத்து நேர வலயங்கள்
முக்கிய மொழி – உருசியன்
முக்கிய மதம் – கிறித்தவம், இஸ்லாம்
முக்கிய ஏற்றுமதி – எண்ணெய் மற்றும் இயற்கை வாயு. மரப்பலகைகள், வேதிப்பொருள்கள், இராணுவ தளபாடங்கள் மற்றும் ஆயுதங்கள்.
தனி ஆள் வருமானம் – 4,460 அமெரிக்க டொலர்கள்.
——————————————————————————————————————————–
அமெரிக்கா என்னதான் சொன்னாலும் உருசியாவைத் தலைதூக்க விடாமல் தனிமைப்படுத்தவே உள்ளுர விரும்புகிறது. அண்மையில் அமெரிக்கா போலந்து மற்றும் செக் குடியரசு நாடுகளில் ஏவுகணை எதிர்ப்பு கவசங்களையும் ரடார் கருவிகளையும் நிறுவப்போவதாக அறிவித்தது. வெளியில் இந்த பாதுகாப்பு ஏற்பாடு இரான் மற்றும் வட கொரியா போன்ற குழுமாட்டு நாடுகளுக்கு எதிரானது என்று சொல்லப்பட்டாலும் உருசியா ஏவும் ஏவுகணைகளைத் தடுப்பதற்கே இந்த ஏற்பாடு என்பது சொல்லாமலே விளங்கும். அமெரிக்காவின் கிடுக்குத் தாக்குதலுக்குப் பதிலடியாக உருசியா அய்ரோப்பிய மரபுவழி படை அணிகளுக்கான உடன்பாட்டில் (வுசநயவல கழச ஊழnஎநவெழையெட யுசஅநன குழசஉநள in நுரசழிந (ஊகுநு) இருந்து விலகுவதாக கடந்த கிழமை அறிவித்துள்ளது.
உருசியாவில் இருக்கும் பித்தானிய தூதுவருக்கு எதிரான ஆர்ப்பட்ங்கள் நடந்துள்ளன.
இந்தப் பின்னணியில்தான் அமெரிக்காவின் நட்பு நாடான பிரித்தானியா நான்கு உருசிய இராசதந்திரிகளை வெளியேற்றியது.
உருசிய – பிரித்தானிய இராசதந்திரச் சண்டையில் அமெரிக்கா எதிர்பார்த்தது போலவே தனது ஆதரவை பிரித்தானியாவிற்குத் தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவு செயலாளர் கொன்டலீசா றைஸ் உருசியா பிரித்தானியாவின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து அலெக்சான்டர் லிட்வினென்கோவை பிரித்தானியாவிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார். ஆனல் அய்ரோப்பிய ஒன்றிய நாடுகள் இந்த இழுபறியில் தற்போதைக்காவது ஒரு பக்கமும் சாராது நிற்கின்றன.
பிரித்தானியாவுக்கும் உருசியாவுக்கும் இடையில் தேடப்படுபவர்களை ஒப்படைக்கும் உடன்பாடு இல்லை. அது மட்டுமல்ல உருசியாவின் யாப்பு தனது குடிமகன் ஒருவரை இன்னொரு நாட்டிடம் ஒப்படைப்பதைத் தடைசெய்கிறது.
அப்படியென்றால் பிரித்தானியாவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைக்கு உண்மையான காரணம் என்ன?
கடந்த அய்ந்து ஆண்டுகளாக உருசியாவிற்கும் பிரித்தானியாவிற்கும் இடையில் உள்ளான உறவு நட்பும் இல்லை பகையும் இல்லை என்ற நிலையில் இருந்து வருகிறது. இதற்குக் காரணம் புட்டினின் எதிரிகளுக்கு பிரித்தானியா அரசியல் அடைக்கலம் கொடுத்து வருகிறது. செச்சீனியாவின் பிரிவினை கோரும் தலைவர்களில் முக்கியமான அகமது சக்கயெவ் (யுமாஅநன ஓயமயலநஎ) புட்டினின் பரம எதிரி. அவ்வாறே முன்னாள் கேஜிபி (முபுடீ) உளவு நிறுவனத்தின் உளவாளியான அந்திரேய் லுகோவொய் புட்டினுக்கு வேண்டப்படாதவர்.
இவர்கள் எல்லோரும் பிரித்தானியணாவில் அரசியல் அடைக்கலம் புகுந்தது மட்டுமல்ல புட்டினுக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் தாரளமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏறக்குறைய அவர்கள் பிரித்தானியாவின் விருந்தாளிகளாகவே நடத்தப்படுகிறார்கள்.
அதே நேரம் பிரித்தானியாவும் உருசியாவால் தேடப்படும் புட்டினின் அரசியல் எதிரியான பொரிஸ் பெரெஸ்கியை ஒப்படைக்குமாறு விடுத்த கோரிக்கையை பிரித்தானியா நிராகரித்து விட்டது. புண்ணில் உப்பைக் கரைப்பது போல  பிரித்தானியா பெரெஸ்கிக்கு அரசியல் அடைக்கலம் கொடுத்துள்ளது.
உருசியா – பிரித்தானிய இராசதந்திரச் சண்டை எதுவரை போகும்? அல்லது எங்கு போய் நிற்கும்? காலந்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். இப்போதைக்கு உருசியாவோ பிரித்தானியாவோ படியிறங்கி வருவதற்கான அறிகுறி எதுவும் கண்ணுக்குத் தென்படவில்லை. (உலகத்தமிழர் – யூலை 20,2007)


About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply