Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.
1 Comment
கஜேந்திரகுமார் எப்போதும் மற்றவர்கள் செய்வதில் பிழை கண்டு பிடிப்பதே அவர் செய்யும் அரசியலாக இருக்கிறது. இப்படியான அரசியலை மலட்டு அரசியல் என வருணிக்கலாம். ஒரு தலைவர் மக்களுக்கு எப்போதும் ஒரு நேர்மறைச் செய்திகளைத்தான் சொல்ல வேண்டும். இது எமது மக்களுக்கு விளங்கும். கஜேந்திரகுமாருக்கும் அவரது அடியாட்களுக்கும்தான் விளங்குவதில்லை. ஒரு நாடு இரண்டு தேசம் என்றார். இப்போது அதுபற்றி மூச்சுப் பேச்சில்லை. ஜெனிவாவில் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் கொண்டுவந்த தீர்மானத்தை தெருக்களில் போட்டு எரித்தார். அந்தத் தீர்மானத்தில் தமிழ் என்ற சொல்லே இல்லை என்றார். இது ஒரு ஏமாற்று வித்தை என்றார். இப்போது அந்தத் தீர்மானத்தை நடைமுறைப் படுத்த இரண்டு ஆண்டு அவகாசம் கொடுத்ததை கண்டித்துப் பேசுகிறார். சுமந்திரன்தான் அந்தக் காலஅவகாசத்தைக் கொடுத்தார் அல்லது இணங்கினார் என பாமரத்தன்மையோடு பேசுகிறார். தமிழர்களது இன்றைய அவல நிலைக்கு கஜேந்திரகுமாரின் தாத்தாவும் அவரது தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் தான்காரணம். தந்தை செல்வநாயகம் இணைப்பாட்சி கேட்டபோது ஜிஜி பொன்னம்பலம் ஒற்றையாட்சியை ஆதரித்துப் பேசினார். 10 இலட்சம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை, வாக்குரிமைக்கு டி.எஸ்.சேனநாயக்கா வேட்டு வைத்தபோது அவற்றை பொன்னம்பலம் ஆதிரித்தார். காரணம் டி.எஸ். சேனநாயக்கா அவரை மீன்பிடி மற்றும் கைத்தொழில் அமைச்சராக்கி அவரது வாயை அடைத்தார். பட்டிப்பளை சிங்களக் குடியேற்றத்தை சேனநாயக்கா திருவாளர் பொன்னம்பலத்தை கமட்டுக்குள் வைத்துக் கொண்டுதான் செய்து முடித்தார். மக்களுக்கு இந்த வரலாறு தெரியும். ஆனபடியால்தான் தேர்தல்களில் தமிழ்க் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்களித்து கட்டுப்பணத்தை இழக்கச் செய்கிறார்கள். தமிழ்க் காங்கிரஸ் இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல அடுத்த ஜேன்மத்திலும் தேர்தலில் வெல்லாது. கஜேந்திரகுமாருக்கு நாவடக்கம் தேவை. சம்மந்தரை ஒருமையில் விளிக்கிறார். அரசியல் கோமாளி என வருணிக்கிறார். இது மொட்டைத் தலைச்சி மயிரைச் சிலிப்பிக் காட்டுவது போன்றது.