சோதிடர்கள், அர்ச்சகர்கள் பணம் பறிக்கவே குருப் பெயர்ச்சியால் தோசம் என்கிறார்கள்!

சோதிடர்கள், அர்ச்சகர்கள் பணம் பறிக்கவே குருப் பெயர்ச்சியால் தோசம் என்கிறார்கள்!
திருமகள்

கிறித்தவர்கள் ஒவ்வொரு ஞாயிறும் தேவாலயத்துக்குச் சென்று வழிபட்டால் போதும். இஸ்லாமியர் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் மசூதிக்குப் போய் தொழுதால் போதும். ஆனால் இந்துக்கள் வெள்ளிக் கிழமைகளில் மட்டும் அல்ல ஆண்டில் 365 நாட்களும் கோயிலுக்குச் சென்று கும்பிடுகிறார்கள்.

தை பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம், சித்திரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆனிஉத்தரம், ஆடித் திருத்திகை, ஆவணி மூலம், புரட்டாசி சனி, ஐப்பசி கந்த சஷ்டி, கார்த்திகை விளக்கீடு, மார்கழி திருவம்பாவை எல்லாம் கோயில் விழாக்கள். இவற்றை விட கொடியேற்றம், சப்பரம், தேர், தீர்த்தம், பூங்காவனம், மாம்பழத் திருவிழா, வேட்டைத் திருவிழா, முக்களி உற்சவம், ஆடி அமவாசை, மகாசிவராத்திரி, இராம நவமி, குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) நவராத்திரி, சதுர்த்தி என ஆண்டு முழுதும் திருவிழாக்கள். இவற்றுக்கும் அப்பால் குருப் பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி, இராகு கேது பெயர்ச்சி என்று ஆண்டு முழுதும் பரிகார தோசங்கள்.

உலகில் எந்த நாட்டையும் விட இந்தியாவில்தான் அதிகமான கோயில்கள் இருக்கின்றன. இந்தியாவிலும் தமிழ்நாட்டில் தான் அதிகமான கோயில்கள் இருக்கின்றன. மொத்தம் உள்ள 38,529 கோயில்கள், அவற்றின் சொத்துகள் இந்து அறநிலைத் துறையால் நிர்வகிக்கப்படுகின்றன. இவற்றில், 36,488  கோயில்களுடன், 17 சமணத் கோயில்களும் அடங்கும். பண்டய காலத்தில் இந்த ஆலயங்கள் மூலம் அரசாங்கத்திற்குப் பண வருவாய்க்கு வழி செய்து கொள்ளும் ஏற்பாடு இருந்திருக்கிறது.

ஆகமத்திற்குப் புறம்பாக 77,450 கோயில்களை பொது மக்களுக்கு இடையூறாக, பொது இடங்கள் மற்றும் நடை பாதையில் கோயில் கட்டுவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதல் மாநிலம் என்று சாதனை படைத்திருக்கிறது.

கோயில்களை கட்டி மக்களின் மூடநம்பிக்கைகளை மூலதனமாக்கி அவர்களிடம் இருந்து காசு, பணம் பறிக்கும் தந்திரம் சாணக்கியர் அல்லது கவுடில்யர் (கிமு 350 -கிமு 283) காலத்தில் இருந்து வருகிறது. மவுரிய வம்சத்தைத் துவக்கியவர் சந்திரகுப்த மவுரியர். சந்திரகுப்த மௌரியரின் அரசியல் குரு சாணக்கியர்.

சந்திரகுப்த மவுரியரின் அரசவையில் சாணக்கியர் என்ற பார்ப்பனர் பொருளாதார நிபுணராக இருந்தார். அவர் எழுதிய அர்த்த சாஸ்திரம் என்னும் நீதி நூலில் இதைப்பற்றி விளக்கியுள்ளார். யுகம் தாண்டி – எல்லை தாண்டி ஆட்சி அதிகாரங்களில், மக்களின் அன்றாட வாழ்க்கையின் சுவடுகள் அனைத்திலும் சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் தனது ஆளுமையை உரத்த குரலோடு இன்றும் சொல்லிக் கொண்டிருக்கிறது.

இந்த சாணக்கிய அர்த்த சாஸ்திரத்தில் மத சம்பந்தமான அமைப்புக்கள் மேற்பார்வை செய்யும் அரசாங்க அதிகாரி நகரங்களிலும் ஊர்களிலும் உள்ள ஆலயங்களுக்குச் சொந்தமான சொத்துக்களின் வரும்படிகளையும் கோவில்களுக்குப் பக்தர்களிடமிருந்து பணமாக அறவிட்டு, அப்படி அறவிடும் பணத்தையும் அரசாங்க வருவாய் நிதியுடன் சேர்க்க வேண்டும் என்ற விதிகள் இருந்திருக்கின்றன. மேலும் மக்களை ஏமாற்றி அரசாங்கத்திற்குப் புதிய வருவாய் பெறுவதற்கும் பல திட்டங்கள் இருந்தன.

ஓர் இரவில் பொது மக்கள் யாருக்கும் தெரியாமல் ஒரு கடவுள் சிலையை ஓரிடத்தில் வைத்து அது தானாகத் தோன்றியது என்று பரப்புரை செய்து அதை வணங்கினால் பல கெடுதிகள், வியாதிகள், தோசங்கள் விலகுமென்று கூறி, திருவிழாக்கள் முதலியன நடத்தி அதன் மூலம் பணம் திரட்டி கருவூலத்தில் சேர்க்க வேண்டும்.

அரசாங்க ஒற்றர்களை விட்டு ஒரு மரத்தில் பிசாசு, முனி இருப்பதாகப் பொதுமக்களிடம் பயத்தை ஏற்படுத்தி விட வேண்டும். பிறகு அதை விரட்டவும் திருப்தி செய்யவும் பெரிய சாந்தி விழா நடத்தி பெருந்தொகையை அறவிட்டு கருவூலத்தில் சேர்த்துவிட வேண்டும்.

அரசரது ஒற்றர்கள் சந்நியாசி மாதிரி வேடம் பூண்டு இந்தத் தந்திரத்தைச் செய்து பணத்தை அறவிட வேண்டும். இதனால் பிசாசு நகரத்தை விட்டுப் போய் விடுகிறது பணம் அரசரது கருவூலத்தில் சேருகிறது. அந்த காலத்தில் அரசனுக்குப் பணம் தேடிக் கொடுக்கும் வேலை அதிகாரிகளுக்கும் கடுமையான வேலையாகவே இருந்திருக்க வேண்டும். மேலும் சாணக்கியர் கூறியிருப்பதாவது:

(1) அரசனது தோட்டத்தில் ஏதாவது ஒரு மரத்தில் பால் வடிகிறது, ஒரு கிணற்றில் அனேக  தலைகளை யுடைய பாம்பு ஒன்று இருப்பதாகச் சொல்லி அதைப் பார்க்க வருபவர்களிடமிருந்து ஒற்றர்கள் பணம் அறவிடலாம்.

(3) இம்மாதிரி தந்திரங்களை எளிதில் நம்பாத சனங்களுக்கு மயக்க மருந்து கலந்த நீரைத் தீர்த்தமென்றும் பிரசாதமென்றும் சொல்லி, குடிக்கும்படிச் செய்து அவர்கள் குடித்து மயங்கியவுடன் அதற்குக் கடவுள் கோபம் காரணம் என்றும் சொல்ல வேண்டியது.

(4) தெய்வங்களுக்குச் சமர்ப்பிக்கப்படும் காணிக்கைகள் அரசனது கருவூலத்தில் சேர வேண்டும். அரசனது செலவுக்காக அரசன் வாழும் பொருட்டு பணம் அறவிட ஒரே இரவில் தேவதைகளையும் பீடங்களையும் நிறுவி திருவிழாக்கள் நடத்த வேண்டும்.

சாணக்கியர்கள் சொல்லிக் கொடுத்த தந்திரங்களை அரசர்களுக்குப் பதில் இன்று கோயில் அர்ச்சகர்களும் பூசாரிகளும் முதலாளிகளும் செய்து கொண்டிருக்கிறார்கள்.          ஒரேயொரு  வேற்றுமை, அறவிட்ட பணம் அரசர்களது கருவூலத்துக்குப் போகாமல் அர்ச்சகர்கள், கோயில்  முதலாளிகள் பைக்குள் போகிறது. கனடாவில் உருவாக்கப்பட்டுள்ள கோயில்களில் 98 விழுக்காடு ஆகமமுறைப்படி கட்டப்படவில்லை. சைவக் கோயில்களை பொறுத்தளவில் மூன்று வகையான கோயில் கட்டிடக் கலை வளர்ந்து வந்திருக்கிறது.

(அ) குடைவரை,  (ஆ) சிற்பக் கோயில்கள்,  (இ) கற்றளி

குடைவரையும் சிற்பக் கோயில்களும் பிற்காலப் பாண்டியர்கள் மற்றும் பல்லவர்கள் காலத்தில் தோன்றி வளர்ந்தவைகள். அதாவது கிபி 5 ஆம் நூற்றாண்டு முதல். கற்றளி என்பது பல்லவ பேரரசின் இடையிலும் பிற்கால சோழர் காலத்திலும் வளர்ந்த கட்டிடக் கலை. இதில் குடைவரை என்பது பாறையைக் குடைந்து கோயிலாக வடிக்கும் தொழில் நுட்பம். சிற்பக் கோயில் என்பது ஒரு முழுப் பாறையை கோயிலாக வடிக்கும் தொழில் நுட்பம். கற்றளி என்பது சதுரமாக அறுக்கப்பட்ட பாறைக் கற்களை கொண்டு கோயில் கட்டும் தொழில் நுட்பம்.

கோயில்கள் கணித, வேத, ஆகம, சிற்ப விதிகளுக்கு அமையக் கட்டப்பட வேண்டும். கோவில்களை எப்படிக் கட்டுவது, எவ்வகை நிலப்பரப்பைத் தேர்ந்தெடுப்பது, அளவு, கட்டுவதற்கு ஏற்ற இடம் போன்றவற்றை முறைப்படி பின்பற்ற வேண்டும். கோயில் அமைவதற்கு பல இடங்களில் “பூ பரிட்சை” நடத்தபட்டு அதன் பின்னரே ஆலயங்கள் எழுப்பப்பட வேண்டும்.

சிவா விஷ்ணு கோயில் அமைப்பது பற்றி சைவ ஆகமத்திலோ வைண ஆகமத்திலோ எதுவும் சொல்லப்படவில்லை. இருந்தும் விதியை மீறி இன்று உலகம் முழுவதும் சிவா விஷ்ணு கோயில்கள் கட்டப்பட்டுள்ளன.

சிவன் விஷ்ணுவையாவது நாம் புராணங்களில் படித்திருக்கிறோம். ஆனால் இன்று  ஸ்ரீரடி சாய்பாபாவுக்கு ஆகம விதிகளை மீறி புராணகால கடவுளுக்கு இணையான இடம் கிடைத்துள்ளது. ஐயப்ப கோயில்களும் ஆகம மீறல்தான்.  ஐய்யப்பன் வழிபாடு 19 ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டது.  ஐயப்னை பூசை செய்வதற்கு என்ன மந்திரத்தை எப்போது அர்ச்சகர்கள் கற்றுக் கொண்டார்கள்?  அதிகபட்சமாக தாத்தாவிட மிருந்து கற்றுக் கொண்டிருப்பார்கள்!

கண்ட கண்ட இடங்களில் ஆகம விதிகளை மீறிக் கட்டப்படும் கோயில்களுக்கு பண ஆசை பிடித்த சிவாச்சாரியார்கள் பூசை புனர்க்காரம், கும்பாபிஷேகம் செய்து வைக்கிறார்கள். கோயில்களில் ஆகம விதிகள் எப்படியெல்லாம் மாற்றப்பட்டன என்பதை

நீதிபதி மகாராசன் அறிக்கை விலாவாரியாக வரிசைப்படுத்திச் சொல்கிறது.

கனடாவில் உள்ள கோயில்களில் 98 விழுக்காடு கோயில்கள் முன்னர் பண்டகசாலைகள் ஆக இருந்தவை. சில பண்டகசாலைகள் முன்பு மதுபான சாலையாக இருந்தவை.

மேலே கூறியவாறு அர்ச்சகர்களுக்கும் சோதிடர்களுக்கும் எல்லா நாட்களும் எல்லா மாதங்களும் பணம் காய்ப்பவை ஆக அமைந்துள்ளன.

எதிர் வரும் 5-07-2015 ஞாயிறு பகல் 10 மணிக்கு குருபகவான் (வியாழ கோள்) கடக இராசியில் இருந்து சிங்க இராக்கு இடப் பெயர்ச்சி பெறுகின்றார். இது சாதாரணமாக ஆண்டுக்கு ஒருமுறை இடம்பெறுகிறது. காரணம் சூரியனை சுற்றிவர வியாழ கோளுக்கு ஒரு ஆண்டு எடுக்கிறது.

இன்னயின்ன இராசியில் பிறந்தவர்களுக்குக் குருப் பெயர்ச்சி இடம்பெறுவதால் தோஷம் என்று சொல்லி அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும் என கோயில்கள்  முழுப்பக்க விளம்பரம் செய்கின்றன. தோசம் நீங்க கோயில்களில் சிறப்பு மஹாஹோமம்

Image result for வியாழன்

வியாழன் (Jupiter)

(யாகம்), கிரக பரிகாரம், அபிசேகங்கள், அருச்சனைகள் நடைபெறவுள்ளன. குறிப்பாக இடபம், மிதுனம், சிம்மம் (சிங்கம்), கன்னி, விருச்சிகம், மகரம் மற்றும் மீனம் ஆகிய இராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டியது அவசியமாம். பரிகாரம் செய்தால் மனச்சஞ்சலம், உடல்நலக் குறைவு, தொழில் நலிவு, குடும்பப் பிரச்சனை, பிரயாண கண்டம், பகைவரால் இடைஞ்சல் ஆகியவை நீங்குமாம்.

வானத்தில் கோள்கள் மற்றும் பல கோடி கோடி நட்சத்திரங்கள் பல ஆயிரம் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருப்பது உண்மை. ஆனால் அந்த நட்சத்திரங்களை ஒன்றோடு ஒன்று தொடுத்து அவற்றை இராசிகளாக சித்தரிப்பது கற்பனையாகும். அதே போல் மேடம், இடபம், மிதுனம் போன்ற 12 இராசிகள், 12 வீடுகள், 9  கோள்கள், 27 நட்சத்திரங்கள் அடங்கிய இராசி வட்டமும் மனிதனால் உருவாக்கப்பட்டவையே. இராசிகளை ஆண், பெண், அலி,  நெருப்பு,,    நிலம்,  காற்று,  நீர் என்று மனம் போன போக்கில் பிரித்து வைத்துள்ளார்கள்.

உண்மையில் கோள்களின் எண்ணிக்கை 9 அல்ல. புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் சனி மட்டுமே கோள்கள். திங்கள் ஒரு உபகோள். சூரியன் ஒரு நட்சத்திரம். இராகு, கேது என்ற கோள்கள் அண்ட வெளியில் இல்லை.

Image result for Jupiter

இப்போது வியாழ கோள்பற்றிய  வானியல்  தரவுகளைப் பார்ப்போம்.

வியாழன் ஞாயிறு மண்டலத்தில் உள்ள மிகப் பெரிய கோளாகும். புவியின் விட்டத்தைவிட 11 மடங்கு நீளமானது. அதன் காரணமாக உரோமரது முதன்மைக் கடவுளின் பெயர் (Jupiter) இதற்குச் சூட்டப்பட்டது. கிரேக்கர் இதற்கு Zeus என்ற கடவுளின் பெயரைச் சூட்டினார்கள். சுமார் 1,300 புவிகளை இதற்குள் அடக்கலாம்! தொலைநோக்கி மூலம் பார்க்கும் பொழுது வியாழன் மிக அழகாக இருக்கும். நீலம், ஊதா, மஞ்சள், செம்மஞ்சள் (Orange) நிறத் திட்டுக்கள் காணப்படுகின்றன.

விட்டம்                                   –    142,984 கிமீ (88,612 கல்)

திணிவு                                 –       1.897 x 1027 kg. புவியைவிட 317.83 மடங்கு அதிகமானது

செறிவு (density)              –      1.33

ஈர்ப்பு விசை                    –         2.4

வளிமண்டலம்             –         சுழன்றடிக்கும் முகில் கூட்டங்கள், அமோனியா, நீரகம் (hydrogen) 89.8 விழுக்காடு கீலியம் (helium) 10.2 விழுக்காடு

வெப்பம்                           –      -234 பாரன்கைட் (-148 செல்சியஸ்)

தன்னைத்தானே சுற்ற எடுக்கும் காலம்         – 9 மணி 55 மணித்துளி

தன்னைத்தானே சுற்றும் வேகம்                     –  நொடிக்கு 13.07 கிமீ ( மணிக்கு 43,500 கிமீ)

ஞாயிறைச் சுற்றி வர எடுக்கும் காலம்          – 11.8618 புவி ஆண்டு (4,333 புவி நாள் )

ஞயிறைச் சுற்றும் வேகம்                                  –  நொடிக்கு 13.06 கிமீ  அல்லது ஒரு மணிக்கு 47,051 கிமீ (29,236 மைல்)

புவியில் இருந்து பொதுமேனி தொலைவு   – 588.50 மில்லியன் கிமீ (367.04 மில்லியன் கல்)

ஞாயிறில் இருந்து பொதுமேனி தொலைவு – 778.33 மில்லியன் கிமீ (483.63 மில்லியன் கல்) ஞாயிறில் இருந்து புவியின் தொலைவை விட 5.2 மடங்கு அதிகமானது.

துணைக் கோள்கள்                             – 67

சூரிய மண்டலத்தின் உட்கோள்களான (Inner Planets) புதன், வெள்ளி, புவி, செவ்வாய் ஆகிய பாறைக் கோள்களைப் (Rocky Planets) போன்றில்லாது, புறக்கோள்களில் (Outer Planets) ஒன்றான வியாழன் சூரியனைப் போல் வாயுக்கள் திரண்ட கோளம். சூடான பாறையும், திரவ உலோகம் (Liquid Metal) சிறிதளவு உட்கரு கொண்டிருந்தாலும் மேல் தளத்தில் திரட்சியான திடப் பொருள் எதுவும் வியாழனில் கிடையாது.

இப்போது சொல்லுங்கள் 588 மில்லியன் கிமீ தொலைவில் சூரியனை வலம் வரும் வியாழ கோளினால் மனிதனுக்கு ஏதாவது நன்மை தின்மை,  தோசம் சந்தோசம்  ஏற்பட முடியுமா? முடியும் என்றால் எப்படி முடிகிறது?  அதற்கான சான்று என்ன?

வானில் ஒளிரும் வியாழ கோளை பண்டைய மனிதன் தெய்வமாக நினைத்து வழிபட்டதில் தவறில்லை. ஆனால் செவ்வாய்க் கோளுக்கு பயணம் செய்ய மனிதன் அணியமாக இருக்கும் இன்றைய கால கட்டத்திலும் அதனை தெய்வமாக நினைத்து வழிபடுவதும் வியாழன் ஒரு இராசியை விட்டு இன்னொரு இராசிக்கு இடம் பெயரும்போது சில இராசிக்காரர்களுக்கு தோஷம் இருக்கிறது என அர்ச்சகர்களும் சோதிடர்களும் சொல்வதைக் கேட்டு

அவற்றுக்குப் பரிகாரம் தேடி ஓடவேண்டாம். இந்துக்களைத் தவிர்ந்த வேறு யாரும் கோள்களால் தோசம் உண்டு என்பதை நம்புவதில்லை.

பக்தர்கள்  பனியிலும்  வெய்யிலிலும்  பாடுபட்டு உழைத்த பணத்தைப் பறிக்கவே குருப் பெயர்ச்சியால் சில இராசிக்காரர்களுக்கு தோசம் என்கிறார்கள்!

மேற்கத்திய முறையில் ஜோதிடத்தைக் குறிக்கும் Astrology என்ற பதம் Astron + Logos என்ற இரண்டு இலத்தீன் சொற்களின் தொகுப்பாகும்.  Astron என்றால் நட்சத்திரம். Logos  என்றால் ஆய்வு.  எனவே  Astrology என்ற சொல்  நட்சத்திரம் பற்றிய ஆய்வு  எனப் பொருள்படும்.

இரண்டுவிதமான சோதிட சாத்திரங்கள் இருக்கின்றன.  இந்திய மற்றும் மேற்கத்திய முறைகள் இரண்டிற்கும் அடிப்படையில் பொதுவான சோதிட நம்பிக்கைகள் காணப்படுகின்றன. வானில் வலம் வரும் கோள்கள் (கிரகங்கள்) நட்சத்திரங்கள் மற்றும் இயற்கை சக்திகளால் பூமியில் உள்ள நீர்நிலைகள், நிலப்பரப்பு, தட்பவெப்பம், பருவகாலங்கள், தாவரங்கள் மற்றும் இதர உயிரினங்கள் எல்லாமே சில மாற்றங்களை அடைவது போலவும் இயல்புகள் பாதிக்கப்படுவது போலவும் மனிதர்களும் அவர்களது நடவடிக்கைகளும் பாதிப்புக்கு உள்ளாவது தவிர்க்க முடியாதது என்பதே இந்த இரண்டு வித சோதிடத்தின் அடிப்படைத் தத்துவமாகும்.

காலத்தை நாம் இரண்டு வழிகளில் அளக்கலாம். ஒன்று புவி ஞாயிறை சுற்றிவர எடுக்கும் காலத்தை  வைத்து  அளப்பது.   மற்றது ஒரு விண்மீனைவைத்து (Spica என்ற சித்திரை நட்சத்திர மண்டலத்திற்கு நேர் எதிரே 180 பாகையில் உள்ள புள்ளியை வைத்து) அளப்பது. முன்னது சயான இராசி வட்டம் (Sayana Zodiac)  என்றும் பின்னது நிராயான இராசிவட்டம் (Nirayana Zodiac) என்றும் அழைக்கப்படுகிறது. சயான என்றால் அசைவது (Tropical or Movable Zodiac  with precession) என்று பொருள். நிராயான அசையாதது (Sidereal or Fixed Zodiac without precession) என்று பொருள்.

மேல் நாட்டவர்கள் சாயன முறையைப்  பின்பற்றுகிறார்கள்.  இந்திய சேதிடர்கள்  நிராயன முறையைப் பின்பற்றுகிறார்கள்.  நாசா வானியல் மையம் வெளியிடும் எபிமெரிஸ் (Ephemeris) போன்ற தரவுகளைப் பயன்படுத்தி  ஜாதகங்கள்  கணிக்கப்படுகின்றன.

அயனாம்சம்

தொடக்க காலத்தில் வானைப் பற்றியும்  அதில் காணப்படும் கோள்கள், நட்சத்திரங்கள் பற்றியும்  செய்யப்பட்ட ஆய்வு செய்சோதிடம் எனப்பட்டது. ஆராய்ந்தவர்கள்  சோதிடர் என அழைக்கப்பட்டனர். சோதிடர்கள் கோள்கள், நட்சத்திரங்களை தெய்வங்கள் என நினைத்தார்கள். அந்த கோள்களும் நட்சத்திரங்களும் மனித வாழ்க்கையை வழிநடத்துகின்றன என  நம்பினார்கள். முதலில் முடி  மன்னர்களின்  சாதகத்தை கணித்து பலன் சொன்னவர்கள்   பின்னர் பிழைப்புக்காக சாதாரண மனிதர்களுக்கும் சாதகம் கணித்துப் பலன் சொல்லத் தொடங்கினார்கள்.

Image result for celestial sphere

சோதிடர்கள்  புவியை  சூரியன் சுத்திவருவதாக நினைத்தார்கள். புவியும் ஒரு கோள் அது சூரியனைச் சுற்றி வருகிறது என்ற உண்மை அவர்களுக்குத் தெரியவில்லை.   சோதிட அடிப்படையை புரிந்துகொள்ள வானியல் அடிப்படைகளை ஓரளவு புரிந்து கொள்வது அவசியம். பூமி தன்னை தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சுற்றிவருகிறது.  இதை பூமியிலிருந்து பார்க்கும் ஒருவருக்கு போது சூரியன் பூமியை சுற்றி வருவது போல் தோன்றும். இந்த சூரியனின் வட்ட பதையே ecliptic எனப்படுகிறது. பூமியை சுற்றி கிழக்கு மேற்காக செல்லும் கற்பனை கோடுகளுக்கு  அகலக்கோடு (lattitude) என்று பெயர். இதில் பூமியை வடக்கு தெற்காக இரண்டாக பிரிக்கும் கோடு  நடுக்கோடு (equator) ஆகும்.  இது 0 பாகை அகலக் கோட்டில்  அமைந்துள்ளது. இதற்கு வடக்கில் அமைந்துள்ள இடங்கள் வட அகலக்கோடுகள் (north lattitude) எனப்படும். இது 90 பாகை வரை (வட துருவம் வரை) உள்ளது. தெற்கில் அமைந்துள்ள இடங்கள்  தென் அகலக்கோடு (south lattitude) எனப்படும். இது 90 பாகை வரை தெற்கே உள்ளது.

பூமியை சுற்றி வடக்கு தெற்காக மேலும் கீழுமாக செல்லும் கற்பனை கோடுகள் நிரைகோடு  (longitude) எனப்படும். இதில் இலண்டனில் உள்ள கிரீன்விச்   ஊடாகச்  செல்லும் கோடு முதன்மை நெடுங்கோடு (prime meridian) எனப்படும். இது 0 பாகை அளவுள்ளது. இதிலிருந்த கிழக்கே உள்ள பகுதிகள் east longitude எனப்படும்.மேற்கே உள்ள பகுதிகள் west longitude எனப்படும். இந்த அட்ச ரேகை தீர்க்க ரேகை அமைப்பு பூமியில் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடையாளம் காண உதவுகிறது. வான மண்டலத்தில் நடுக்கோட்டின்  நீட்சி (extension) வானியல் நடுக்கோடு (celestial equator) எனப்படும். பூமியிலிருந்து நட்சத்திர மண்டலம் வரை இதை கற்பனை செய்து கொள்ள வேண்டும். அது போல்  வானநெடுங்கோடு(celestial longitude)  உள்ளது.

zodiac எனப்படும் ராசி மண்டலம் மேடம் (Aries) முதல் மீனம் (Pisces) வரை ஒவ்வொன்றும் 30 பாகை கொண்ட 12 இராசிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பூமி தன் அச்சில் சுமார் 23.5 பாகை சாய்வாக சுற்றி வருகிறது. அதன் காரணமாக எனவே  எனப்படும் சூரியனின் சுற்றுப் பாதை (ecliptic)  வானநடுக்கோட்டுக்கு (celestial equator) க்கு 23.5 பாகையில் சாய்ந்துள்ளது. இந்த சுற்றுப்பாதை மற்றும்  வானநடுக்கோடு சந்திக்கும் இடமே  சமயிரவு (equinox) எனப்படும்.  ஓர் ஆண்டில் இரண்டு இடங்களில் இந்த சந்திப்பு ஏற்படுகிறது. சூரியன் வானநடுக்கோட்டை  தெற்கிலிருந்து வடக்காகக்  கடக்கும்போது ஒருமுறை. இது  வேனில் சமயிரவு (vernal equinox)  எனப்படும்.

இது மார்ச் 19, 20, 21 இல் ஏற்படும். இந்த நாளில் சூரியன் நிலநடுகோட்டிற்கு நேர் மேலே வருகிறது. இந்த நாளில் இரவு பகல் சமமாக இருக்கும். வடக்கிலிருந்து தெற்காக கடக்கும்போது அதனை இலையுதிர்சமயிரவு (autumnal equinox) எனப்படும்.  இது செப்டம்பர் 22,23,24 இல் ஏற்படும். இலையுதிர் சமயிரவின் போது  இராசி வட்டத்தில் சூரியன்  மேட இராசிக்கு நேர் எதிரே 180 பாகை துலா இராசியில் காணப்படும். சூரியன் வடக்கில் இருந்து தெற்கேயும் தெற்கில் இருந்து வடக்கேயும் பயணிக்கும் போது 6 மாதங்கள் நடுக்கோட்டுக்கு வடக்கேயும் அடுத்த ஆறு மாதங்கள் நடுக்கோட்டுக்கு தெற்கேயும் காணப்படும்.

இந்த வேனில் சமயிரவு  ஏற்படும் இடமே இராசி மண்டலத்தில் 0 பாகையாகும். இதுவே மேட இராசியின் தொடக்கம் ஆகும். பூமி தன் அச்சில் சுழல்வது போல இந்த அச்சும் குறிப்பிட்ட வேகத்தில் சுழல்கிறது.  இந்த அச்சு ஒரு ஆண்டில்  50.3 வில்நொடிகளும் (arc seconds)    70.6 ஆண்டில்  1 பாகை அளவு மேற்கு நோக்கி நகர்கிறது.  எனவே சுமார் 25,772 ஆண்டுளில் 360 பாகை சுழன்று மீண்டும் பழைய இடத்திற்கு வருகிறது.

Image result for விண்ணக நடுக்கோடு

இந்த மேற்கு நோக்கிய நகர்வு காரணமாக  வேனில் சமயிரவு  நிகழ்வு முன்கூட்டியே நிகழ்ந்துவிடுகிறது. ஆனால்  நட்சத்திர சோதிடத்தில் 0 பாகை மேடம்  வானில் நிலையாக உள்ள நட்சத்திர அடிப்படையில் கணிக்கப் படுகிறது. சூரியன் முழு சுழற்சியை முடித்து மீண்டும் குறிப்பிட்ட நட்சத்திரத்தின் அருகில் வருவதே  நட்சத்திர ஆண்டு (sideral year) எனப்படும். 

ஒரு வேனில் சமயிரவுக்கும் அடுத்த வேனில்சமயிரவுக்கும் இடைபட்ட காலம் வெப்பவலய ஆண்டு (tropical year) எனப்படும். இந்த வெப்பவலய ஆண்டு நட்சத்திர ஆண்டைவிட விட 20 நிமிடம் 23 நொடி  குறைவு ஆகும். ஆண்டுக்கு  20 மணித்துளி 23 நொடி என்பது 25,772 வருடங்களில்  360 பாகையை (ஒரு ஆண்டு) எட்டும். எனவே இந்த வேனில் சமயிரவு (vernal equinox) 25,772 ஆண்டுகளில் ஒரு முழு சுற்று சுற்றி மீண்டும் 0 பாகை மேடத்துக்கு வந்துவிடுகிறது. இந்த முன்னோக்கிய நகர்வே வேனில் அச்சுச்சுழலோட்டம் (precession of equinox)  எனப்படும்.

இந்த 50.3 விகலை முன்னோக்கிய நகர்வினால் மீண்டும்  தொடங்கிய புள்ளியில்  மேடம் வர மேலும் ஆண்டுக்கு 50.3 வில்நொடிகளும் (arc seconds) பாகை சூரியன் நகர வேண்டும். கிபி   293 இல் இரண்டு இராசி வட்டங்களும் (நட்சத்திர இராசி வட்டம் மற்றது வெப்பவலய இராசி வட்டம் (sideral zodiac மற்றும் tropical zodiac) ஒரே இடத்தில் இருந்தன. எனவே கிபி 293 இல் அயனாம்சம் 0 பாகை. தற்போது கி.பி 2013 இல் அயனாம்சம்: (2013-293)=1720*50.3=86516 நொடிகள்.  86516/60=1441.9333 மணித்துளிகள் 1441.9333/60=24.03222 பாகை.

இந்திய சோதிடத்திற்கும் மேற்கத்திய சோதிடத்திற்கும் உள்ள முக்கிய வேறுபாடுகளில் ஒன்று இந்த அயனாம்சம்.

THOUGHTS: ASTROLOGY - 23 : ஜோதிடம் - இராசிகள்.

. அது நகரும் இராசி வட்டத்தை (moving zodiac)  பின்பற்றுகிறது. அதாவது எப்போது vernal equinox ஏற்படுகிறதோ அதுதான் 0 பாகை மேடம். ஆனால் இந்திய சோதிடம் அயனாம்சத்தை கணக்கில் எடுத்துகொண்டு அந்த வித்தியாசத்தை கழிக்கிறது. இந்திய சோதிடத்தில் கிரக நிலைகள்  நிராயன  (அயனம் இல்லாத) நெடுங்கோடு (Nirayana longitude) எனப்படுகிறது. மேற்கத்திய முறையில்  சயான நெடுங்கோடு  (Sayana longitude)  எனப்படுகிறது.

இந்த அயனாம்ச அளவில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. வெவ்வேறு நிபுணர்கள் கணித்த அயனாம்சத்தில் சிறிது வேறுபாடு உள்ளது. இதில் பெரும்பாலானோர் ஏற்று கொள்வது லகிரி அயனாம்சம் எனப்படும் திருக்கணித முறையாகும். இது அறிவியல்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும்

இராசி வட்டம்   

உண்மையில்  வியாழ பெயர்ச்சி, சனி பெயர்ச்சி எனக் கூறப்படுவவை வெறும் தோற்ற மயக்கமே.  புவிதான் தன்னைத் தானே சுற்றிக்கொண்டு ஞாயிறையும் ஒரு நீள்வட்டப் பாதையில் (Ecliptic)  சுற்றி வருகிறது. ஆனால் புவியில் இருந்து பார்க்கும் போது ஞாயிறு புவியைச் சுற்றிவருவது போன்ற மருட்சி (illusion)  ஏற்படுகிறது.
இப்போது குருப் பெயர்ச்சி என்றால் என்ன என்பதைப் பார்ப்போம்.  ஞாயிறை வலம் வரும் கோள்கள் ஒரு இராசியில் இருந்து இன்னொரு இராசிக்கு மாறுவதையே பெயர்ச்சி (Transit) என்று சோதிடர்கள் சொல்கிறார்கள்.

மேலே எழுதுமுன்னர் சோதிடத்துக்கான  அடிப்படை என்ன என்பதைப் பார்த்து விடலாம்.

வான வீதியில் உள்ள 12   இராசிகள்

வான வீதியில் உள்ள 12   வீடுகள்

வான வீதியில் வலம் வரும் 9   கோள்கள்

வான வீதியில் உள்ள 27  நட்சத்திரங்கள்

இவற்றை  இராசி வட்டம் (இராசி சக்கரம்)  என்ற ஒரு  வட்டத்தில்  சோதிடர்கள்  இருத்தி விடுகிறார்கள். ஒரு இராசி 30 பாகை அதாவது சுமார் 120 மணித்துளிகள் – 2.25 நட்சத்திரங்கள் (9 நட்சத்திர பாகங்கள்)ஆகும்.

தற்போது வெப்ப மண்டல சோதிடக் கணிப்புக்கும் இந்திய சோதிடக் கணிப்புக்கும் இடையில் 24 பாகை (24 நாட்கள்) வித்தியாசம் காணப்படுகிறது. அதாவது இரண்டுவிதமான இராசி வட்டத்துக்கும் இடையில் சூரியன் உட்பட கோள்களின் இருப்பு நெடுங்கோடு தோராயமாக 24 பாகை (24 degree longitudinal difference between fixed zodiac and movable zodiac) வித்தியாசம் காணப்படுகிறது. சயான இராசி சக்கரத்தில் ஒரு கிரகம் 37 பாகை இடபத்தில் இருப்பது போல் காட்டப்பட்டிருந்தால், நிராயன இராசி சக்கரத்தில் அந்த கிரகம் 13 பாகை மேடத்தில் இருப்பது போல் காட்டப்பட்டிருக்கும். அதாவது 37 பாகை சயான பாகையில் இருந்து 24 பாகை அயனாம்சம் கழிக்கப்பட்டால் மீதம் 13 பாகை என்பது மேடத்திற்குள் வந்து விடும். அதாவது சயான இராசி சக்கரத்திற்கும் நிராயன இராசி சக்கரத்திற்கு இடையே உள்ள தூர வித்தியாசமே அயனாம்சம் எனக்கூறப்படுகிறது. எனவே இந்த இரண்டு முறையிலும் எழுதப்படும் ஒருவரது சாதகம் கோள்களையும், நட்சத்திரங்களையும் வேறு வேறு வீடுகளில் நிற்பதாகக் காட்டும்.

இந்திய சோதிடத்திலும்   திருக்கணித பஞ்சங்கம், வாக்கிய பஞ்சாங்கம் என இரண்டு வகை பஞ்சாங்கங்கள் இருக்கின்றன.  திருக்கணிதத்திற்கும் வாக்கியத்திற்கும் உள்ள பாகை வித்தியாசம் 1 பாகை 57 மணித்துளிகள்.  மணியில் சொல்வதென்றால் 6 மணித்துளியும் 28 நொடிகளும் (seconds) ஆகும். பெரும்பான்மை தமிழ்  சோதிடர்களுக்கு இப்படி  இரண்டு பஞ்சாங்கள் இருப்பது பற்றி எதுவுமே  தெரியாது. அதாவது 1990 ஆம் ஆண்டிற்கு முன்பாக எழுதப்பெற்ற சாதகங்கள் அனைத்தும் பொதுவாக வாக்கியமுறைப்படிதான் எழுதப்பெற்றிருக்கும். தமிழ்நாட்டு சோதிடர்கள் தங்களுக்கு வழிவழியாக வந்த வாக்கியப் பஞ்சாங்கத்தை வைத்துக் கணித்துத்தான் எழுதியிருப்பார்கள். இன்றும் எழுதுவார்கள்.

அதனால் கணினியில் கணிக்கும்போது சிலருக்கு (எல்லோருக்கும் அல்ல) இலக்கினம், பிறந்த இராசி, சில கோள்களின் இருப்பு வித்தியாசப்படும். எனவே குறைந்த பட்சம் பரிகாரம் செய்ய பணத்தைச் செலவழிக்கு முன் ஒருவர் தனது சாதகம் சரியாகக் கணிக்கப்பட்டிருக்கிறதா? இராசிகளின் இருப்பு சரியா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

இராசிகள் என்பது  நட்சத்திரக் கூட்டங்கள் (constellations). அதில் காணப்படும் நட்சத்திரங்கள் உண்மையானவை. ஆனால் இராசிகளின் உருவங்கள்  நட்சத்திரங்களைத் தொடுப்பதால் உருவான கற்பனை வடிவங்கள். இராசிச் சக்கரத்தை கற்பனையாக ஒவ்வொன்றும் 30 பாகை கொண்ட பகுதிகளாகப் பிரிப்பதால் வருவதே பன்னிரண்டு வீடுகள்.  இது ஒரு விதிக்கட்டுப்பாடற்ற (arbitrary) பிரிப்பு.  வானியல் கணிப்பின்படி  இராசிகள் 7 பாகை (விருச்சிகம்)  தொடக்கம் 45 பாகை (கன்னி) வரை சிறிதும் பெரிதும் ஆகக் காணப்படுகிறது. அதனை கீழ்க்கண்ட அட்டவணை தெளிவாக காட்டுகிறது.

  உடுமண்டலங்களில் (Constellations) ஞாயிறு புகுந்து/வெளியேறும் கால அளவு

உடுமண்டலம்ஞாயிறு புகுதல்/வெளி நாள்கள்பாகைவெட்பவலயதேதிகள்நட்சத்திர தேதிகள்
மேடம்ஏப்ரில் 19 -மே 132524.66மார்ச்சு 21 – ஏப்ரில் 20ஏப்ரில்  14 – மே 14
இடபம்மே 14 – யூன் 193736.49ஏப்ரில் 21 – மே 21மே 15 -யூன் 14
மிதுனம்யூன் 20 – யூலை 2031201/28மே 22 -யூன்21யூன் 15 – யூலை 15
கடகம்யூலை21 – ஓகஸ்ட் 92019.73யூன் 22 – யூலை 22யூலை 16 – ஓகஸ்ட் 16
சிங்கம்ஓகஸ்ட் 10 -செப்தெம்பர் 153736.49யூலை 23 – ஓகஸ்ட் 22ஓகஸ்ட் 17 – செப்தெம்பர் 16
கன்னிசெப்தெம்பர் 16 – Oct 304544.38ஓகஸ்ட் 23 – செப்தெம்பர் 23செப்தெம்பர் 17 – ஒக்தோபர் 16
துலாஒக்தோபர் 31 – நொவெம்பர் 222322.69செப்தெம்பர் 24 – ஒக்தோபர் 23ஒக்தோபர் 17 -நொவெம்பர் 15
விருட்சிகம்நொவெம்பர் 23 – நொவெம்பர் 2976.9ஒக்தோபர் 24 – நொவெம்பர் 22நொவெம்பர் 16 – டிசெம்பர் 15
பாம்பாட்டிநொவெம்பர் 30 – டிசெமபர் 171817.75இல்லைஇல்லை
தனுடிசெம்பர் 18 -சனவரி 1832311/26நொவெம்பர் 23 – டிசெம்பர் 21டிசெம்பர் 16 – சனவரி13
மகரம்சனவரி 19 – பெப்ரவரி 152827.62டிசெம்பர் 22 – சனவரி 20சனவரி 14 – பெப்ரவரி 12
கும்பம்பெப்ரவரி 16 – மார்ச்சு 112423.67சனவரி 21 – பெப்ரவரி 19பெப்ரவரி 13 – மார்ச்சு 12
மீனம்மார்ச்சு 12 -ஏப்ரில் 183837.48பெப்ரவரி 20 – மார்ச்சு 20மார்ச்சு 13 – ஏப்ரில் 13

புவி தன்னைத்தானே தனது அச்சில் ஒரு முறை சுற்றிவர 24 மணித்தியாலங்கள் எடுக்கிறது. இந்த 24 மணி நேரத்தில் இப் புவியைச் சுற்றிலும் கிழக்கு மேற்காக மேலும் கீழும் படர்ந்துள்ள 12 இராசிகளும் அடிவானத்தில் ஒன்றன் பின் ஒன்றாக தோன்றி மறைந்துவிடுகின்றன.

அன்றாடும் ஞாயிறு எழும்போது  அதனோடு  உதயமாகும் இராசியே  ஞாயிறு அன்றைய நாள்  இடம்பெற்றுள்ள இராசியாகும். எடுத்துக்காட்டாக சித்திரை முதல்நாள்  ஞாயிறு உதயமாகும் போது இடம்பெற்றுள்ள மேட இராசியே அன்றைய உதய இராசியாகும்.

குழந்தை பிறக்கும் போது அடிவானத்தில் உதயமாகிக் கொண்டிருக்கும் இராசியே ஜெனன (உயிர்) இலக்கினமாகும். இதுவே முதல் வீடாகும். ஒரு இலக்கினம் 30 பாகைகள் – காலம் சுமார் 120 மணித்துளி – 2.25 நட்சத்திரங்கள் – 9 நட்சத்திரப்பாகைகள் கொண்டது.
குழந்தை பிறக்கும் போது சந்திரன் நின்ற இராசியே ஜெனன (உடல்)  இராசியாகும். இந்த ஜெனன இராசியைக் கொண்டே இராசி பலன் காண வேண்டும் எனச் சோதிடம் சொல்கிறது.  மேலும் ஒருவரது இலக்கினம், பிறந்த சாதகத்தில் காணப்படும் நவக்கிரக நிலைகள், தற்போது கோசார அடிப்படையில் கிரகங்கள் எங்கு இருக்கின்றன என்பதை வைத்தே பலன் சொல் வேண்டும். செய்தி ஏடுகளில் வரும் இராசி பலன்கள், புத்தாண்டுப் பலன்கள், கிரகப் பெயர்ச்சிப் பலன்கள் அனைத்தும் பொதுவான பலன்களே.

சோதிடர்களில் பலர் ஒழுங்காக படிக்காது, வேறு எந்த வேலையும் செய்ய திறமை இல்லாது ஏமாற்றிப் பிழைப்பு நடத்த சோதிடத்தை கையில் எடுத்துள்ளார்கள்.   சோதிடர்கள் மூடநம்பிக்கையைப் புகுத்தி தன்னம்பிக்கையை இழக்கச் செய்கிறார்கள்.  அதற்கு இங்குள்ள செய்தித்தாள்கள் துணை போகின்றன.

உண்மையான இறை தத்துவம் என்ன சொல்கிறது? ஒருவன் முற்பிறவியில் செய்த உண்மையான இறை  தத்துவம் என்ன சொல்கிறது? ஒருவன் பிறப்பதற்கு முன் அவன் முற்பிறவியில் செய்த நல்வினை தீவினைக்கு ஏற்ப இறைவனால் படைக்கப்படுகிறான்.  இது அவனது தலையெழுத்து.  அதாவது ஒருவனது வாழ்க்கை அவன் சென்ற பிறவிகள் செய்த கர்மவினைகளுக்கு ஏற்ப இறைவனால் தீர்மானிக்கப்படுகிறது என்பது பொருள்.

ஆனால், சோதிடம் என்ன சொல்கிறது? ஒருவன் பிறக்கும்போதுள்ள கிரகங்களின் நிலையே அவன் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என்கிறது.

அப்படியாயின் ஒருவன் வாழ்வைக் கிரகங்கள் தீர்மானிக்கின்றனவே தவிர கடவுள் அல்ல என்பது உறுதியாகிறது. அதன்படி பார்த்தால் கடவுளுக்கே வேலை, ஏன் இறைவனே இல்லை என்று ஆகிறது.

ஆக,  சோதிடத்தை நம்புகிறவன் இறைவனை மறுக்கிறான். அவன் நாத்திகனாகிறான். அது போலவே வாஸ்துவை நம்புகிறவன் அதைவிடப் பெரிய நாத்திகன். காரணம், வாசலை மாற்றி அமைத்தால் வாழ்வே மாறுகிறது என்றால் வாழ்வை கடவுளும் தீர்மானிப்பதில்லை. கிரகங்களும் தீர்மானிப்பதில்லை.  ஒரு வீட்டின் வாசலும் யன்னலும் இருக்கும் இடங்களே தீர்மானிக்கின்றன என்றாகிறது. அதன்படி, வாஸ்துவை நம்புகிறவன் கடவுளையும் மறுக்கிறான்.  சோதிடத்தையும் மறுக்கிறான் என்றுதானே பொருள்?

உண்மையில் புவி ஞாயிறைச் சுற்றிவருகிறது ஆனால் எமது கண்களுக்கு ஞாயிறு புவியைச் சுற்றிவருவது போன்ற மருட்சி (illusion) ஏற்படுகிறது.  இந்த ஞாயிறின் தோற்றப்பாதைக்கு (ecliptic) இருபுறமும் 9 பாகை அளவு விரிந்துள்ள வட்டப் பட்டி போன்ற ஒரு பகுதி இராசிச் சக்கரம் (zodiac) எனப்படும்.   இது கண்ணுக்கு புலப்படாத ஒரு கற்பனையான வடிவமாகும். இந்த இராசிச் சக்கரம் ஒவ்வொன்றும் 30 பாகைகளைக் கொண்ட 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இராசிகள் பத்து,  நூறு ஆயிரம் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் காணப்படும் விண்மீன் கூட்டங்கள் (Constellations)  ஆகும். அவற்றைத் தொடுத்து வரும் உருவங்களுக்குக் கிடா (மேஷம்)  காளைமாடு ( ரிஷபம்) மிதுனம் (இரட்டையர்)  நண்டு (கடகம்) சிங்கம் (சிம்மம்) கன்னி,  துலாக்கோல் (துலாம்)  தேள் (விருச்சிகம்)  வில் (தனுசு)   மகரம் (பாதிமீன் பாதி மனிதன்)  கும்பம் (குடம்)   இரட்டை மீன்கள் (மீனம்)  எனப் பெயர் இட்டுள்ளார்கள். இட்ட பின்னர் எந்த விதிக்கட்டுப்பாடுமின்றி அந்த உருவத்துக்குரிய குணாம்சங்களை அந்த இராசியில் பிறந்தவர்களுக்கு மாடேற்றி விட்டார்கள். எடுத்துக்காட்டாக சிங்க இராசியில் பிறந்த ஒரு பெண் சிங்கம் போல மூர்க்க குணம் படைத்தவளாக இருப்பாள்!

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் புவி  இந்தப் பேரண்டத்தின் நடுவில் இருப்பதாகவும் ஞாயிறு உட்பட ஏனைய  கோள்கள் அனைத்தும் புவியைச் சுற்றி வருகின்றன என்றே மேல்நாட்டு தத்துவ அறிஞர்களும் அறிவியலாளர்களும் நம்பி வந்தனர்.    மேல் நாட்டில் கிபி இரண்டாம் நூற்றாண்டில் (AD 150)  வாழ்ந்த Ptolemy என்ற  வானியலாளர் கூட புவியை அனைத்துக் கோள்களும் சுற்றி வருகின்றன என்ற அரிஸ்தோட்டரின்  புவி மையக் கோட்பாட்டையே (Geocentric Theory)  நம்பினார்.

கிபி 1512 இல் Nicolas Copernicus என்னும் வானியலாளர்தான் ஞாயிறை மையமாகக் கொண்டு ஏனைய  கோள்கள் சுற்றி வருகின்றன என்ற கோட்பாட்டை (Heliocentric theory of Planetary Motion) நிறுவி அதுவரை புவிதான் அண்டத்தின் மையம் என்ற கோட்பாட்டை உடைந்தெறிந்து எல்லோரையும் குறிப்பாக கிறித்தவ மதவாதிகளை மிரள வைத்தார்.

நட்சத்திரக் கூட்டங்கள் (இராசிகள்) போலவே 9 கிரகங்களும் ஞாயிறைச் சுற்றி வெவ்வேறு பாதையில், வெவ்வேறு வேகத்தில், வெவ்வேறு தொலைவில்  வலம் வருகின்றன. அதனை இந்த அட்டவணை எடுத்துக்காட்டுகிறது.

அந்தந்த கிரகங்கள் பூமியை/சூரியனை சுற்றி வரும் காலத்திற்கு ஏற்ப அட்டவணையில் உள்ளவாறு ஒரு இராசியில் இருந்து இன்னொரு இராசிக்கு இடம் பெயர எடுக்கும் காலம் பின்வருமாறு:

                                         12 இராசிகளில் கோள்கள் இடம் பெயர எடுத்துக் கொள்ளும் காலம்

 
கோள்ஞாயிற்றில் இருந்து தொலைவு(மில்லியன் கிமீ) சூரியனை சுற்றிவரும் காலம் இடம் பெயரும் காலம்
சந்திரன் (திங்கள்)

150

27 ¼ நாள்

2 ¼ நாள்

புதன்

57.9

1 ஆண்டு

1 மாதம்

சுக்கிரன்

108.2

1 ஆண்டு

1 மாதம்

செவ்வாய்

227.9

1½ ஆண்டு

1 ½ மாதம்

குரு(வியாழன்)

778

12 ஆண்டு

1.0ஆண்டு

சனி (காரி)

1427

 30 ஆண்டு

2½ஆண்டு

ஞாயிறு 

ஒருமாதம்

ராகு, கேது (நிழற்கோள்கள்) 

18 ஆண்டு

1½ஆண்டு

அண்டவெளியில் காணப்படும் விண்மீன்கள், கோள்கள் எல்லாம் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அவை நகர்கின்ற வேகம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அது மாறுபடுகின்றது. சந்திரன் ஓர் இராசியை 2 1/4 நாளில் கடக்கின்றது. சூரியன் அதே இராசியைக் கடக்க ஒரு மாதம் ஆகிறது. குருவுக்கு (வியாழன்) ஒரு ஆண்டும் இராகு (Ascending Node) கேது (Descending Node)  இரண்டும் 1 1/2 ஆண்டும் சனிக்கு 2 1/2 ஆண்டும் ஆகின்றன. இராகு கேது கோள்கள் திடப்பொருளால் ஆனவை அல்ல. அவை நிழற்கோள்கள்.

வியாழன் சூரியனை சுற்றிவர 12 ஆண்டுகள் ஆகும். 12 இராசிகள் உள்ள  சூரியவீதியில் வியாழன்  ஒவ்வொரு இராசியிலும் சுமார் ஓர் ஆண்டு தரித்து நிற்கும். ஓர் ஆண்டு  கழித்து வியாழன் அந்த இராசியில் இருந்து விலகி அடுத்த இராசிக்கு இடம் பெயரும். இதனைத்தான் குருப் பெயர்ச்சி என்று கூறி அதற்குப் பலனும் சொல்கிறார்கள். உண்மையில் வியாழன் வெறுமனே ஞாயிறைச் சுற்றி வருகிறது.  அது இராசி வீடுகளில் புகுந்து வெளியேறுகிறது என்பது எமது கற்பனையாகும். அது மட்டுமல்ல அப்படிப் புகுந்து வெளியேறும் போது அந்தந்த இராசிகளில் பிறந்தவர்களுக்கு நல்லது, கெட்டது நடக்கும் என்பதும் கற்பனையே.

வியாழன் ஞாயிறு மண்டலத்தில் உள்ள மிகப் பெரிய கோளாகும். புவியின் விட்டத்தைவிட 11 மடங்கு நீளமானது. அதன் காரணமாக உரோமரது முதன்மைக் கடவுளின் பெயர் (Jupiter)  இதற்குச் சூட்டப்பட்டது. கிரேக்கர் இதற்கு Zeus  என்ற கடவுளின் பெயரைச் சூட்டினார்கள். சுமார் 1,300 புவிகளை இதற்குள் அடக்கலாம்! தொலைநோக்கி மூலம் பார்க்கும் பொழுது வியாழன் மிக அழகாக இருக்கும். நீலம், ஊதா, மஞ்சள், செம்மஞ்சள் (Orange) நிறத் திட்டுக்கள் காணப்படுகின்றன.

Image result for Jupiter in sun system

சூரிய குடும்பத்தில் வியாழன் 

அண்டவெளியில் தன்பாட்டில் ஞாயிறைச் சுற்றிவரும் வியாழன்  கோள் கெட்டது செய்யும் அதற்குப் பரிகாரமாக அருச்சனை, அபிசேகம், யாகம் செய்தால் நன்மை பெறலாம் என்பது வெறும் நம்பிக்கையே தவிர உண்மையன்று. 367  மில்லியன் மைல்களுக்கு அப்பால் இருக்கும் வியாழனுக்கு இங்கு அருச்சனை, அபிசேகம், யாகம் செய்தால் அது அந்தக் கோளைத் திருப்திப் படுத்துமா? குளிர வைக்குமா?

அறிவியல் கண்டுபிடித்த அச்சு யந்திரம், தொலைக் காட்சி, செய்தித்தாள் ஆகியவற்றைப் பயன்படுத்திச் சனிப் பெயர்ச்சியை நேரடி ஒலி, ஒளிபரப்புச் செய்யப் போகிறார்களாம்!

பண்டைக் காலத்தில் வானியல் பற்றிப் போதுமான அறிவு இல்லாத காலத்தில் வெறும் கண்ணால் வானத்தைப் பார்த்தபொழுது நகர்ந்த கோள்களை தெய்வங்கள் எனக் கிரேக்க மற்றும் உரோமானியர்கள் நம்பினர்.  அதன் காரணமாகவே  உரோம கடவுள்கள் பெயரையே அவற்றுக்குச் சூட்டினார்கள்.  இந்தியர்களும் கோள்கள் தெய்வசக்தி படைத்தவை என்று நம்பினார்கள்.
இது காறும கூறியவற்றால் வியாழன் 367 மில்லியன் (3.67 கோடி) மைல் தொலைவில் ஞாயிறைச் சுற்றிவருகிற ஒரு கோளாகும். அது ஒரு சடப்பொருள். கிரகங்கள் பனிக்கட்டிகள், பாறைகள், உலோகங்களால் மற்றும் இன்னபிறவற்றால் ஆனவை. அவை நம்மைப் பாதிக்கக்கூடிய சாத்தியம் மிகமிக மிகமிக குறைவு. ஏனென்றால் அவை பூமியிலிருந்து தொலைதூரத்தில் இருக்கின்றன.  அங்கு மனிதன் வாழ்வதற்கு வேண்டிய உயிர்க்காற்று, தண்ணீர் இல்லை. மற்றக் கிரகங்கள் எல்லாம் வெகு தொலைவில் இருப்பதால் அவற்றின் ஈர்ப்பு விசை பூமியை எட்டவே எட்டாது!  கோள்களுக்கும் மனிதனுக்கும் தொடர்பே இல்லை.

பூமியின் ஈர்ப்பு விசை கூட வானில் சில கிலோ மீட்டர் தூரம்தான்! அதுபோல மற்றக் கிரகங்களுக்கும் ஈர்ப்பு விசை சிறிது தூரத்திற்கே இருக்கும். எனவே கிரகங்களின் ஈர்ப்பு விசையால் பூமியிலுள்ள மனிதர்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பேயில்லை! அவைகளிலிருந்து எந்தத் தீங்கு தரும் வாயுவோ – கதிர்வீச்சோ ஈர்ப்பு விசையோ பூமிக்கு வர வாய்ப்பேயில்லை! பூமி உட்பட கிரகங்கள் அனைத்தும் சூரிய ஒளியையும் வெப்பத்தையும் கிரகித்துக் கொண்டிருக்கிறது.

Image result for (Proxima Centauri)

சில மில்லியன் கிமீ தூரத்தில் உள்ள கிரகங்களால்  பாதிப்பை இல்லை என்கின்ற பொழுது பல மில்லியன்  ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் நட்சத்திரங்களால் பாதிப்பு என்பது பித்தலாட்டமாகும்.  ஒளியாண்டு என்பது ஒளி ஒரு ஆண்டில் கடக்கும் தூரம். அதாவது ஒளி ஒரு நொடியில் அடிப்படை இயற்பியலின் படி ஒளியின் வேகத்தை எந்தப்பொருளாலும் எட்ட முடியாது. ஒளி ஒரு ஆண்டுக்குக் கடக்கும் தூரம் எவ்வளவு தெரியுமா? அதிகமில்லை.  பத்து ட்ரில்லியன் கிலோமீட்டருக்கு சற்றே குறைவு. நமக்கு மிக அருகே இருக்கிற நட்சத்திரம் ப்ராக்ஸிமா செந்தௌரி (Proxima Centauri)  4.22 ஒளியாண்டு தூரத்தில் இருக்கிறது. அவைகளிலிருந்து எந்த சக்தியும் நம்மை வந்தடையாது.

சூரியனிலிருந்து தான் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் அணுக்கதிர் வீச்சு, நீலக்கதிர்வீச்சு, எக்ஸ் கதிர் வீச்சு என்று பூமியை இடைவிடாமல் தாக்கிக் கொண்டே இருக்கிறது! இவ்வளவு ஆற்றல் மிக்க கதிர்வீச்சுகளையே புவியைச் சூழ்ந்துள்ள, பூமிக்கு கவசமாக அமைந்துள்ள காற்று மண்டலம் தடுத்து நிறுத்தி அவற்றை சின்னா பின்னமாக்கி, பூமியை வந்தடையாமல் செய்துவிடும் போது நீங்கள் நம்புவது போல வலிமை குறைந்த கிரகங்களிலிருந்து வரும் வலிமையற்ற எந்த ஆற்றலும் சக்தியும் காற்று மண்டலத்தைக் கடந்து பூமிக்கு வந்து சேர முடியுமா?

Image result for (Proxima Centauri)

சூரியனில் ஏற்படுவது போன்ற அணுச் சேர்க்கையோ அணு வெடிப்போ கிரகங்களில் கிடையாது. எனவே கிரகங்களிலிருந்து கதிர் வீச்சோ வேறு வகையான காந்த சக்தியோ ஏற்பட்டு மனித வாழ்வை பாதித்து விடுமோ என்ற அச்சத்திற்கே இடமில்லை!

கிரகங்களுக்கிடையே ஈர்ப்பு விசை தவிர வேறு விசைகள் இல்லை என்பதே அறிவியல் ஏற்கும் கொள்கை! என்று இயற்பியலாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஏதாவது கோள் எமது வாழ்க்கை முறையைப் பாதிக்கும் என்றால் அது நாம் வாழும் இந்தப் புவிதான்.  நாம் சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு, குடிக்கும் தண்ணீர் எமது உடல்நலத்தை தீர்மானிக்கிறது.  ஆனால் சோதிடர்களுக்கு  புவி ஒரு கோள் என்பது தெரிந்திருக்கவில்லை. அதனால் அதை கணக்கில் எடுக்காமல் விட்டுவிட்டார்கள்.

இந்நிலையில் கிரகங்களால் தனி மனித வாழ்வில் தாக்குதல் ஏற்பட்டு ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும் என்று சோதிடம் சொல்வது ஏற்கக் கூடியதேயல்ல!

தமிழினம் கல்வி, பொருண்மியம், தொழில், கலை, பண்பாட்டுத் துறைகளில் மேலோங்க வேண்டும் என்றால் எமது சமுதாயம்  மூடநம்பிக்கை, மூட பக்தி ஆகியவற்றில் இருந்து விடுதலை பெற வேண்டும். நாமே நமது மூளைக்குப் போட்டிருக்கும் விலங்கை உடைக்க வேண்டும்.

இந்த இடத்தில் முண்டாசுக் கவிஞன் பாரதி தமிழனைப் பார்த்துக் கூறிய அறிவுரையை எல்லோரும் ஊன்றிப் படிக்க வேண்டும். படிப்பதோடு நின்று விடாமல் மூடநம்பிக்கைகளை விட்டொழிக்க வேண்டும்.  புது மனிதர்களாக வாழப் பழக வேண்டும். பாடுபட்டு பனியிலும் வெய்யிலும் உழைக்கும் பணத்தைக் கரியாக்கக் கூடாது.

“புராணங்களை வேதங்களாக்க நினைத்து மடமைகள் பேசி, விலங்குகள் போல நடந்து கொள்ளாதே!

தமிழா! உனது வேலைகள் அனைத்திலுமே பொய்க்கதைகள் மித மிஞ்சிவிட்டன. உனது மதக் கொள்கைகள், லௌகீகக் கொள்கைகள், வைதீக நடை எல்லாவற்றிலுமே பொய்கள் புகுந்து தலை விரித்து ஆட இடங் கொடுத்து விட்டாய்!

இவற்றை நீக்கி விடு. வீட்டிலும் வெளியிலும் தனிமையிலும் கூட்டத்திலும் எதிலும் எப்பொழுதும் நேர்மை இருக்க வேண்டும். உண்மை இருக்க வேண்டும். நீயும் பிறரை வஞ்சிக்காதே..பிறரும் உன்னை வஞ்சிக்கலாகாது. பிறர பிறரை வஞ்சிப்பதையும் தடு. எல்லாப் பேறுகளையும் விட உண்மைப் பேறுதான் பெருமை கொண்டது. உண்மை தவங்களுக்கெல்லாம் உயிர். உண்மை சாஸ்திரங்களுக்கெல்லாம் வேர். உண்மை இன்பத்திற்கு நல்லுறுதி. உண்மை பரமாத்மாவின் கண்ணாடி. ஆதலால் தமிழா எல்லாச் செய்திகளிலும் உண்மை நிலவும்படி செய்.

தமிழா! ..எழுதிப்படிப்பெதெல்லாம் மெய்யுமில்லை. எதிர் நின்று கேட்பதெல்லாம் பொய்யுமில்லை. “முந்திய சாஸ்திரம் தான் மெய் பிந்தைய சாத்திரம் பொய்” என்று தீர்மானம் செய்து கொள்ளாதே. காலத்துக்கும். உண்மைக்கும் எதிரிடையாக ஒரு கணக்கு ஏற்பட்டிருக்கிறதா? தகப்பன் வெட்டிய கிணறு என்று சொல்லி மூடர்கள் உப்பு நீரைக் குடிக்கிறார்கள் எனப் பஞ்சத்தந்திரம் நகைக்கிறது.”

எனவே ஆண்டுக்கு  ஒருமுறை நடைபெறும் குரு  பெயர்ச்சி ஒரு இயற்கையான நிகழ்வு. குரு பார்வை கோடி பெறும் எல்லாம் கோள்கள் பற்றிய சரியான ஆய்வும் அறிவும் இல்லாத காலத்தில், குறிப்பாகத் தொலைநோக்கி, விண்வெளிக் கலங்கள் இல்லாத காலத்தில் மக்கள் கொண்டிருந்த மூடநம்பிக்கை ஆகும்.

மண்ணையும் விண்ணையும் துல்லியமாக ஆய்வு செய்வதில் வியத்தகு வளர்ச்சி அடைந்துள்ள இன்றைய அறிவியல் காலத்தில் தமிழர்கள் மூடநம்பிக்கைகளைக் கைவிட்டு பகுத்தறிவோடு வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். பகுத்தறிவு புலன் அறிவு, கவனித்தல், சோதித்து அறிதல், ஊகித்து அறிதல் ஆகியவற்றின் மூலம் பெறப்படும் அறிவை அடித்தளமாகக் கொண்டது.


குருப் பெயர்ச்சியும் அறிவியலும்!

நக்கீரன்

நாட்டில் ஆண்டில் மூன்று மாதம்தான் மழை பெய்யும். ஆனால் சோதிடர்களது காட்டில் ஆண்டு முழுதும் மழை பெய்கிறது. காரணம்குருப் பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி, இராகு கேது பெயர்ச்சி என்று ஆண்டு முழுதும் வரிசையாக வந்து கொண்டிருக்கின்றன.

இந்த மாதம் பணம் காய்க்கும் மாதம். எந்தச் செய்தித்தாளைப் புரட்டினாலும் “குருப் பெயர்ச்சிப் பலன்கள்” பற்றிய பக்கக்கள் கண்ணைக் கவர்கின்றன.

இந்த ஆண்டு மே மாதம் 31  வெள்ளிக்கிழமை (வைகாசி 17)  காலை சுமார் 8.00 மணியளவில் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி வியாழன் (குரு) இடப இராசியில் இருந்து மிதுன இராசிக்குள் நுழைகிறது.  சுமார் ஓர் ஆண்டு வியாழன்  மிதுன இராசியில் இருக்கும்.

இன்னயின்ன இராசியில் பிறந்தவர்களுக்குக் குருப் பெயர்ச்சி இடம்பெறுவதால் தோஷம் என்று சொல்லி அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும் என்கிறார்கள். கோயில்களில் சிறப்பு யாகம், கிரக பரிகாரம், அபிசேகங்கள், அருச்சனைகள் நடைபெறவுள்ளன. குறிப்பாக சிம்மம், கன்னி, துலாம், கும்பம், மீனம், இடபம், மிதுனம் ஆகிய இராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டியது அவசியமாம்.

இந்த வியாபாரத்தில் சோதிடர்களும் கோயில் பூசாரிகளும் கூட்டணி வைத்து மக்களைப் பயமுறுத்திப் பணம் பறிக்கிறார்கள். தமிழக கோயில்களில் அபிசேகத்துக்கு ரூ.500, பரிகார கோமங்களுக்கு ரூ.3,500 கட்டணம் அறவிடப்படுகிறது.  அதற்கான முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன. கனடாவிலும் கோயில்களில் குரு பகவானை சாந்தப்படுத்த பரிகார பூசை  நடைபெறுகிறது!
இப்படி தோஷத்துக்குப் பரிகாரம் தேடி ஓடுபவர்களைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது.

வடமொழியில் ஜ்யோதி-இஷா (ஒளியியல் – Science of Light) என்பதை சோதிடம் என்கிறார்கள்.  தமிழில் சோதிடம் என அழைக்கப்படுகிறது. வேதத்தின் ஆறுபாகங்களில் ஜோதிடமும் ஒன்று. தமிழிலும் ‘சோதிடக்கலை’ ஆய கலைகள் அறுபத்து நான்கினுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

மேற்கத்திய முறையில் ஜோதிடத்தைக் குறிக்கும் Astrology என்ற பதம் Astron + Logos என்ற இரண்டு இலத்தீன் சொற்களின் தொகுப்பாகும்.  Astron என்றால் நட்சத்திரம். Logos  என்றால் ஆய்வு.  எனவே  Astrology என்ற சொல்  நட்சத்திரம் பற்றிய ஆய்வு  எனப் பொருள்படும்.

இந்திய மற்றும் மேற்கத்திய முறைகள் இரண்டிற்கும் அடிப்படையில் பொதுவான சோதிட நம்பிக்கைகள் காணப்படுகின்றன. வானில் வலம் வரும் கோள்கள் (கிரகங்கள்) நட்சத்திரங்கள் மற்றும் இயற்கை சக்திகளால் பூமியில் உள்ள நீர்நிலைகள், நிலப்பரப்பு, தட்பவெப்பம், பருவகாலங்கள், தாவரங்கள் மற்றும் இதர உயிரினங்கள் எல்லாமே சில மாற்றங்களை அடைவது போலவும் இயல்புகள் பாதிக்கப்படுவது போலவும் மனிதர்களும் அவர்களது நடவடிக்கைகளும் பாதிப்புக்கு உள்ளாவது தவிர்க்க முடியாதது என்பதே இந்த இரண்டு வித சோதிடத்தின் அடிப்படைத் தத்துவமாகும்.

காலத்தை நாம் இரண்டு வழிகளில் அளக்கலாம். ஒன்று ஞாயிறை மையமாகக் (Geocentric) கொண்டு அளப்பது. மற்றது விண்மீனை (Sidereal) வைத்து (Spica என்ற சித்திரை நட்சத்திர மண்டலத்திற்கு நேர் எதிரே 180 பாகையில் உள்ள புள்ளியை வைத்து) அளப்பது. முன்னது சாயான (Sayana) என்றும் பின்னது நிராயான (Nirayana) என்றும் அழைக்கப்படுகிறது. சாயான என்றால் அசைவது (Tropical Zodiac  with precession) என்று பொருள். நிராயான அசையாதது (Fixed Zodiac without precession) என்று பொருள்.

மேல் நாட்டவர்கள் சாயன முறையைப்  பின்பற்றுகிறார்கள்.  இந்திய சேதிடர்கள்  நிராயன முறையைப் பின்பற்றுகிறார்கள். எபிமெரீஸ் (Ephemeris)  போன்ற தரவுகளைப் பயன்படுத்தி  ஜாதகங்கள்  கணிக்கப்படுகின்றன.

உண்மையில் ஞாயிறு பெயர்ச்சி, வியாழ பெயர்ச்சி, சனி பெயர்ச்சி எனக் கூறப்படுவவை வெறும் தோற்ற மயக்கமே.  புவிதான் தன்னைத் தானே சுற்றிக்கொண்டு ஞாயிறையும் ஒரு நீள்வட்டப் பாதையில் (ecliptic)  சுற்றி வருகிறது. ஆனால் புவியில் இருந்து பார்க்கும் போது ஞாயிறு புவியைச் சுற்றிவருவது போன்ற மருட்சி (illusion)  ஏற்படுகிறது.

இப்போது குருப் பெயர்ச்சி என்றால் என்ன என்பதைப் பார்ப்போம்.  ஞாயிறை வலம் வரும் கோள்கள் ஒரு இராசியில் இருந்து இன்னொரு இராசிக்கு மாறுவதையே பெயர்ச்சி (Transit) என்று சோதிடர்கள் சொல்கிறார்கள்.

மேலே எழுதுமுன்னர் சோதிடத்துக்கான வானியல் அடிப்படை என்ன என்பதைப் பார்த்துவிடலாம்.

வான வீதியில் உள்ள 12   இராசிகள்

வான வீதியில் உள்ள 12   வீடுகள்

வான வீதியில் வலம் வரும் 9   கோள்கள்

வான வீதியில் உள்ள 27  நட்சத்திரங்கள்

இராசிகள் நட்சத்திரக் கூட்டங்கள் (constellations). அதில் காணப்படும் நட்சத்திரங்கள் உண்மையானவை. ஆனால் இராசிகளின் உருவங்கள்  நட்சத்திரங்களைத் தொடுப்பதால் உருவான கற்பனை வடிவங்கள். இராசிச் சக்கரத்தை கற்பனையாக ஒவ்வொன்றும் 30 பாகை கொண்ட பகுதிகளாகப் பிரிப்பதால் வருவதே பன்னிரண்டு வீடுகள்.  இது ஒரு விதிக்கட்டுப்பாடற்ற (arbitrary) பிரிப்பு.  வானியல் கணிப்பின்படி  இராசிகள் 7 பாகை (விருச்சிகம்)  தொடக்கம் 45 பாகை (கன்னி) வரை சிறிதும் பெரிதும் ஆகக் காணப்படுகிறது.

புவி தன்னைத்தானே தனது அச்சில் ஒரு முறை சுற்றிவர 24 மணித்தியாலங்கள் எடுக்கிறது. இந்த 24 மணி நேரத்தில் இப் புவியைச் சுற்றிலும் கிழக்கு மேற்காக மேலும் கீழும் படர்ந்துள்ள 12 இராசிகளும் அடிவானத்தில் ஒன்றன் பின் ஒன்றாக தோன்றி மறைந்துவிடுகின்றன.

அன்றாடும் ஞாயிறு எழும்போது  அதனோடு  உதயமாகும் இராசியே  ஞாயிறு அன்றைய நாள்  இடம்பெற்றுள்ள இராசியாகும். எடுத்துக்காட்டாக சித்திரை முதல்நாள்  ஞாயிறு உதயமாகும் போது இடம்பெற்றுள்ள மேட இராசியே அன்றைய உதய இராசியாகும்.

குழந்தை பிறக்கும் போது அடிவானத்தில் உதயமாகிக் கொண்டிருக்கும் இராசியே ஜெனன (உயிர்) இலக்கினமாகும். இதுவே முதல் வீடாகும். ஒரு இலக்கினம் 30 பாகைகள் – காலம் சுமார் 120 மணித்துளி – 2.25 நட்சத்திரங்கள் – 9 நட்சத்திரப்பாகைகள் கொண்டது.

குழந்தை பிறக்கும் போது சந்திரன் நின்ற இராசியே ஜெனன (உடல்)  இராசியாகும். இந்த ஜெனன இராசியைக் கொண்டே இராசி பலன் காண வேண்டும் எனச் சோதிடம் சொல்கிறது.  மேலும் ஒருவரது இலக்கினம், பிறந்த சாதகத்தில் காணப்படும் நவக்கிரக நிலைகள், தற்போது கோசார அடிப்படையில் கிரகங்கள் எங்கு இருக்கின்றன என்பதை வைத்தே பலன் சொல் வேண்டும். செய்தி ஏடுகளில் வரும் இராசி பலன்கள், புத்தாண்டுப் பலன்கள், கிரகப் பெயர்ச்சிப் பலன்கள் அனைத்தும் பொதுவான பலன்களே.

சோதிடர்களில் பலர் ஒழுங்காக படிக்காது, வேறு எந்த வேலையும் செய்ய திறமை இல்லாது ஏமாற்றிப் பிழைப்பு நடத்த சோதிடத்தை கையில் எடுத்துள்ளார்கள்.   சோதிடர்கள் மூடநம்பிக்கையைப் புகுத்தி தன்னம்பிக்கையை இழக்கச் செய்கிறார்கள்.  அதற்கு இங்குள்ள செய்தித்தாள்கள் துணை போகின்றன.

உண்மையான இறை தத்துவம் என்ன சொல்கிறது? ஒருவன் முற்பிறவியில் செய்த உண்மையான இறை  தத்துவம் என்ன சொல்கிறது? ஒருவன் பிறப்பதற்கு முன் அவன் முற்பிறவியில் செய்த நல்வினை தீவினைக்கு ஏற்ப இறைவனால் படைக்கப்படுகிறான்.  இது அவனது தலையெழுத்து.  அதாவது ஒருவனது வாழ்க்கை அவன் சென்ற பிறவிகள் செய்த கர்மவினைகளுக்கு ஏற்ப இறைவனால் தீர்மானிக்கப்படுகிறது என்பது பொருள்.

ஆனால், சோதிடம் என்ன சொல்கிறது? ஒருவன் பிறக்கும்போதுள்ள கிரகங்களின் நிலையே அவன் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என்கிறது.

அப்படியாயின் ஒருவன் வாழ்வைக் கிரகங்கள் தீர்மானிக்கின்றனவே தவிர கடவுள் அல்ல என்பது உறுதியாகிறது. அதன்படி பார்த்தால் கடவுளுக்கே வேலை, ஏன் இறைவனே இல்லை என்று ஆகிறது.

ஆக,  சோதிடத்தை நம்புகிறவன் இறைவனை மறுக்கிறான். அவன் நாத்திகனாகிறான். அது போலவே வாஸ்துவை நம்புகிறவன் அதைவிடப் பெரிய நாத்திகன். காரணம், வாசலை மாற்றி அமைத்தால் வாழ்வே மாறுகிறது என்றால் வாழ்வை கடவுளும் தீர்மானிப்பதில்லை. கிரகங்களும் தீர்மானிப்பதில்லை.  ஒரு வீட்டின் வாசலும் யன்னலும் இருக்கும் இடங்களே தீர்மானிக்கின்றன என்றாகிறது. அதன்படி, வாஸ்துவை நம்புகிறவன் கடவுளையும் மறுக்கிறான்.  சோதிடத்தையும் மறுக்கிறான் என்றுதானே பொருள்?

Image result for rashis

மேற்கத்திய ஜோதிட முறை “Geo Centric” எனப்படும் பூமியை மையப்பொருளாகக் கொண்டு பூமியிலிருந்து பார்க்கும்பொழுது சூரியன் செல்லும் சுழற்சி பாதையில் அமைந்திருக்கும் இராசிகளின் அடிப்படையில் பலன்கள் கணிக்கப்படுகின்றன.
உண்மையில் புவி ஞாயிறைச் சுற்றிவருகிறது ஆனால் எமது கண்களுக்கு ஞாயிறு புவியைச் சுற்றிவருவது போன்ற மருட்சி (illusion) ஏற்படுகிறது.  இந்த ஞாயிறின் தோற்றப்பாதைக்கு (ecliptic) இருபுறமும் 9 பாகை அளவு விரிந்துள்ள வட்டப் பட்டி போன்ற ஒரு பகுதி இராசிச் சக்கரம் (zodiac) எனப்படும்.  

இது கண்ணுக்கு புலப்படாத ஒரு கற்பனையான வடிவமாகும். இந்த இராசிச் சக்கரம் ஒவ்வொன்றும் 30 பாகைகளைக் கொண்ட 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இராசிகள் பத்து,  நூறு ஆயிரம் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் காணப்படும் விண்மீன் கூட்டங்கள் (Constellations)  ஆகும். அவற்றைத் தொடுத்து வரும் உருவங்களுக்குக் கிடா (மேஷம்)  காளைமாடு ( ரிஷபம்) மிதுனம் (இரட்டையர்)  நண்டு (கடகம்) சிங்கம் (சிம்மம்) கன்னி,  துலாக்கோல் (துலாம்)  தேள் (விருச்சிகம்)  வில் (தனுசு)   மகரம் (பாதிமீன் பாதி மனிதன்)  கும்பம் (குடம்)   இரட்டை மீன்கள் (மீனம்)  எனப் பெயர் இட்டுள்ளார்கள். இட்ட பின்னர் எந்த விதிக்கட்டுப்பாடுமின்றி அந்த உருவத்துக்குரிய குணாம்சங்களை அந்த இராசியில் பிறந்தவர்களுக்கு மாடேற்றி விட்டார்கள். எடுத்துக்காட்டாக சிங்க இராசியில் பிறந்த ஒரு பெண் சிங்கம் போல மூர்க்க குணம் படைத்தவளாக இருப்பாள்!

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் புவி  இந்தப் பேரண்டத்தின் நடுவில் இருப்பதாகவும் ஞாயிறு உட்பட ஏனைய  கோள்கள் அனைத்தும் புவியைச் சுற்றி வருகின்றன என்றே மேல்நாட்டு தத்துவ அறிஞர்களும் அறிவியலாளர்களும் நம்பி வந்தனர்.    மேல் நாட்டில் கிபி இரண்டாம் நூற்றாண்டில் (AD 150)  வாழ்ந்த Ptolemy என்ற  வானியலாளர் கூட புவியை அனைத்துக் கோள்களும் சுற்றி வருகின்றன என்ற அரிஸ்தோட்டரின்  புவி மையக் கோட்பாட்டையே (Geocentric Theory)  நம்பினார்.

கிபி 1512 இல் Nicolas Copernicus என்னும் வானியலாளர்தான் ஞாயிறை மையமாகக் கொண்டு ஏனைய  கோள்கள் சுற்றி வருகின்றன என்ற கோட்பாட்டை (Heliocentric theory of Planetary Motion) நிறுவி அதுவரை புவிதான் அண்டத்தின் மையம் என்ற கோட்பாட்டை உடைந்தெறிந்து எல்லோரையும் குறிப்பாக கிறித்தவ மதவாதிகளை மிரள வைத்தார்.

நட்சத்திரக் கூட்டங்கள் (இராசிகள்) போலவே 9 கிரகங்களும் ஞாயிறைச் சுற்றி வெவ்வேறு பாதையில், வெவ்வேறு வேகத்தில், வெவ்வேறு தொலைவில்  வலம் வருகின்றன. அதனை இந்த அட்டவணை எடுத்துக்காட்டுகிறது.

அந்தந்த கிரகங்கள் பூமியை/சூரியனை சுற்றி வரும் காலத்திற்கு ஏற்ப அட்டவணையில் உள்ளவாறு ஒரு இராசியில் இருந்து இன்னொரு இராசிக்கு இடம் பெயர எடுக்கும் காலம் பின்வருமாறு:

12 இராசிகளில் கோள்கள் இடம் பெயர எடுத்துக் கொள்ளும் காலம்
கோள்ஞாயிற்றில் இருந்து தொலைவு(மில்லியன் கிமீ) சூரியனை சுற்றிவரும் காலம் இடம் பெயரும் காலம்
சந்திரன் (திங்கள்)15027 ¼ நாள்2 ¼ நாள்
புதன்57.91 ஆண்டு1 மாதம்
சுக்கிரன்108.21 ஆண்டு1 மாதம்
செவ்வாய்227.91 ½  ஆண்டு1 ½ மாதம்
குரு(வியாழன்)77812 ஆண்டு1.0 ஆண்டு
சனி (காரி)1427  30 ஆண்டு2½ஆண்டு
சூரியன் (ஞாயிறு) ஒரு மாதம்
ராகு, கேது (நிழற்கோள்கள்) 18 ஆண்டு1 ½ ஆண்டு

அண்டவெளியில் காணப்படும் விண்மீன்கள், கோள்கள் எல்லாம் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அவை நகர்கின்ற வேகம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அது மாறுபடுகின்றது. சந்திரன் ஓர் இராசியை 2 1/4 நாளில் கடக்கின்றது. சூரியன் அதே இராசியைக் கடக்க ஒரு மாதம் ஆகிறது. குருவுக்கு (வியாழன்) ஒரு ஆண்டும் இராகு (Ascending Node)கேது (Descescending Node)  இரண்டும் 1 1/2 ஆண்டும் சனிக்கு 2 1/2 ஆண்டும் ஆகின்றன. இராகு கேது கோள்கள் திடப்பொருளால் ஆனவை அல்ல. அவை நிழற்கோள்கள்.

வியாழன் சூரியனை சுற்றிவர 12 ஆண்டுகள் ஆகும். 12 இராசிகள் உள்ள சூரியவீதியில் வியாழன்  ஒவ்வொரு இராசியிலும் சுமார் ஓர் ஆண்டு தரித்து நிற்கும். ஓர் ஆண்டு  கழித்து வியாழன் அந்த இராசியில் இருந்து விலகி அடுத்த இராசிக்கு இடம் பெயரும். இதனைத்தான் குருப் பெயர்ச்சி என்று கூறி அதற்குப் பலனும் சொல்கிறார்கள். உண்மையில் வியாழன் வெறுமனே ஞாயிறைச் சுற்றி வருகிறது.  அது இராசி வீடுகளில் புகுந்து வெளியேறுகிறது என்பது எமது கற்பனையாகும். அது மட்டுமல்ல அப்படிப் புகுந்து வெளியேறும் போது அந்தந்த இராசிகளில் பிறந்தவர்களுக்கு நல்லது, கெட்டது நடக்கும் என்பதும் கற்பனையே.

வியாழன் ஞாயிறு மண்டலத்தில் உள்ள மிகப் பெரிய கோளாகும். புவியின் விட்டத்தைவிட 11 மடங்கு நீளமானது. அதன் காரணமாக உரோமரது முதன்மைக் கடவுளின் பெயர் (Jupiter)  இதற்குச் சூட்டப்பட்டது. கிரேக்கர் இதற்கு Zeus  என்ற கடவுளின் பெயரைச் சூட்டினார்கள். சுமார் 1,300 புவிகளை இதற்குள் அடக்கலாம்! தொலைநோக்கி மூலம் பார்க்கும் பொழுது வியாழன் மிக அழகாக இருக்கும். நீலம், ஊதா, மஞ்சள், செம்மஞ்சள் (Orange) நிறத் திட்டுக்கள் காணப்படுகின்றன.

Image result for Jupiter in solar system

                                                                                                                                                                           சூரிய குடும்பத்தில் வியாழன் 

அண்டவெளியில் தன்பாட்டில் ஞாயிறைச் சுற்றிவரும் வியாழன்  கோள் கெட்டது செய்யும் அதற்குப் பரிகாரமாக அருச்சனை, அபிசேகம், யாகம் செய்தால் நன்மை பெறலாம் என்பது வெறும் நம்பிக்கையே தவிர உண்மையன்று. 367  மில்லியன் மைல்களுக்கு அப்பால் இருக்கும் வியாழனுக்கு இங்கு அருச்சனை, அபிசேகம், யாகம் செய்தால் அது அந்தக் கோளைத் திருப்திப் படுத்துமா? குளிர வைக்குமா?

அறிவியல் கண்டுபிடித்த அச்சு யந்திரம், தொலைக் காட்சி, செய்தித்தாள் ஆகியவற்றைப் பயன்படுத்திச் சனிப் பெயர்ச்சியை நேரடி ஒலி, ஒளிபரப்புச் செய்யப் போகிறார்களாம்!

வியாழ பகவான் பற்றிய புராணக் கதைகளுக்குப் பஞ்சமில்லை.  ஒன்பது கிரகங்களிலேயே, இதிகாச – புராணங்களில் அதிக அளவில் இடம் பெற்றவர்கள் என்றால், அவர்கள் தேவகுருவான வியாழ பகவானும் – அசுர குருவான சுக்கிராச்சார்யாரும்தான் என்றே சொல்லலாம். குரு அருள் இன்றேல், திருவருள் இல்லை, குரு பார்க்க கோடி நன்மை உண்டாகும் என்றெல்லாம் வாக்குகளே உண்டு. தேவகுருவின் உபதேசங்களும் அசுர குருவின் உபதேசங்களும் மிகவும் புகழ் பெற்றவை, அவசியமானவையும் கூட!

ஒரு சமயம், இந்திரன் துர்வாசரின் சாபத்தால் அனைத்துச் செல்வங்களையும் இழந்தான். துயர வசப்பட்ட அவன், தேவ குருவான வியாழ பகவானைத் தேடி ஓடினான். அப்போது வியாழ பகவான் கங்கைக் கரையில், கிழக்கு நோக்கி சூரியனைப் பார்த்து நின்றபடி, ஜபம் செய்து கொண்டிருந்தார். தவம் செய்து கொண்டிருந்த அந்த பகவானின் திருவடிகளில்  இந்திரன் விழுந்து வணங்கினான். தன் துயரையெல்லாம் சொல்லி அழுதான்.

அதைக்கேட்ட வியாழ பகவான் அவனுக்கு ஆறுதல் சொல்லி உபதேசமும் செய்தார். ‘‘தேவேந்திரா! ஏன் அழுகிறாய்? விவரம் அறிந்தவன், நீதி அறிந்தவன் இப்படிப்பட்ட சிக்கல்கள் ஏற்பட்ட காலத்திலும் பயப்பட மாட்டான். ஏனென்றால், செல்வங்களும் இப்போது உனக்கு நேர்ந்ததைப் போன்ற சிக்கல்களும் நிரந்தரமானவை அல்ல! அனைத்தும் முற்பிறப்புகளில் செய்யப்பட்ட செயல்களின் விளைவாகவே உண்டாகின்றன. வாழ்வில் மேடும் பள்ளமும் வரத்தான் செய்யும். வண்டிச் சக்கரம் உருளும்போது, கீழே இருந்த பகுதி மேலே போவதும் மேலே இருந்த பகுதி கீழே வருவதுமாக இருக்கிறது அல்லவா?

அதைப்போல, நன்மைகளால் உயர்வு அடைவதும் தீமைகளால் கீழ்நிலை அடைவதும் மாறி மாறி வரத்தான் செய்யும். அப்படி இருக்கும்போது, நீ ஏன் அழுகிறாய்? நல்லதோ, கெட்டதோ எவ்வளவு காலமானாலும் சரி! அவற்றை அனுபவிக்காமல் தப்ப முடியாது. யாராக இருந்தாலும், தாங்கள் செய்த செயல்களின் பலனை அனுபவித்தே தீர வேண்டும் என்று சாமவேதத்தில் பரமாத்மா பிரம்மனுக்கு உபதேசித்திருக்கிறார்’’ என்று வியாழ பகவான் இந்திரனுக்குக் கூறினார்.

இந்தக் கதையின் படி எல்லாம் விதிப்பயன் படிதான் நடக்கும்.  அதனை மாற்ற முடியாது. ஆனால் சோதிடர்கள் ஒரு மனிதனது வாழ்க்கையின் இன்ப துன்பத்தை, உயர்வு தாழ்வை கோள்கள், நட்சத்திரங்கள் தீர்மானிக்கிறது என்கிறார்கள். இதில் எது சரி?  விதிப்படிதான் வாழ்க்கை என்றால் சோதிடர்கள் கடவுள் நம்பிக்கையில்லாத நாத்திகர்கள் எனப் பொருள் படுகிறது!

பண்டைக் காலத்தில் வானியல் பற்றிப் போதுமான அறிவு இல்லாத காலத்தில் வெறும் கண்ணால் வானத்தைப் பார்த்தபொழுது நகர்ந்த கோள்களை தெய்வங்கள் எனக் கிரேக்க மற்றும் உரோமானியர்கள் நம்பினர்.  அதன் காரணமாகவே  உரோம கடவுள்கள் பெயரையே அவற்றுக்குச் சூட்டினார்கள்.  இந்தியர்களும் கோள்கள் தெய்வசக்தி படைத்தவை என்று நம்பினார்கள்.
இது காறும கூறியவற்றால் வியாழன் 367 மில்லியன் (3.67 கோடி) மைல் தொலைவில் ஞாயிறைச் சுற்றிவருகிற ஒரு கோளாகும். அது ஒரு சடப்பொருள். கிரகங்கள் பனிக்கட்டிகள், பாறைகள், உலோகங்களால் மற்றும் இன்னபிறவற்றால் ஆனவை. அவை நம்மைப் பாதிக்கக்கூடிய சாத்தியம் மிகமிகமிகமிக குறைவு. ஏனென்றால் அவை பூமியிலிருந்து தொலைதூரத்தில் இருக்கின்றன.  அங்கு மனிதன் வாழ்வதற்கு வேண்டிய உயிர்க்காற்று, தண்ணீர் இல்லை. மற்றக் கிரகங்கள் எல்லாம் வெகு தொலைவில் இருப்பதால் அவற்றின் ஈர்ப்பு விசை பூமியை எட்டவே எட்டாது!  கோள்களுக்கும் மனிதனுக்கும் தொடர்பே இல்லை.

பூமியின் ஈர்ப்பு விசை கூட வானில் சில கிலோ மீட்டர் தூரம்தான்! அதுபோல மற்றக் கிரகங்களுக்கும் ஈர்ப்பு விசை சிறிது தூரத்திற்கே இருக்கும். எனவே கிரகங்களின் ஈர்ப்பு விசையால் பூமியிலுள்ள மனிதர்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பேயில்லை! அவைகளிலிருந்து எந்தத் தீங்கு தரும் வாயுவோ – கதிர்வீச்சோ ஈர்ப்பு விசையோ பூமிக்கு வர வாய்ப்பேயில்லை! பூமி உட்பட கிரகங்கள் அனைத்தும் சூரிய ஒளியையும் வெப்பத்தையும் கிரகித்துக் கொண்டிருக்கிறது.

சில மில்லியன் கிமீ தூரத்தில் உள்ள கிரகங்களால்  பாதிப்பை இல்லை என்கினன்ற பொழுது பல மில்லியன்  ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் நட்சத்திரங்களால் பாதிப்பு என்பது பித்தலாட்டமாகும்.  ஒளியாண்டு என்பது ஒளி ஒரு ஆண்டில் கடக்கும் தூரம். அடிப்படை இயற்பியலின் படி ஒளியின் வேகத்தை எந்தப்பொருளாலும் எட்ட முடியாது. ஒளி ஒரு ஆண்டுக்குக் கடக்கும் தூரம் எவ்வளவு தெரியுமா? அதிகமில்லை.  பத்து ட்ரில்லியன் கிலோமீட்டருக்கு சற்றே குறைவு. நமக்கு மிக அருகே இருக்கிற நட்சத்திரம் ப்ராக்ஸிமா செந்தௌரி (Proxima Centauri)  4.22 ஒளியாண்டு தூரத்தில் இருக்கிறது. அவைகளிலிருந்து எந்த சக்தியும் நம்மை வந்தடையாது.

சூரியனிலிருந்து தான் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் அணுக்கதிர் வீச்சு, நீலக்கதிர்வீச்சு, எக்ஸ் கதிர் வீச்சு என்று பூமியை இடைவிடாமல் தாக்கிக் கொண்டே இருக்கிறது! இவ்வளவு ஆற்றல் மிக்க கதிர்வீச்சுகளையே புவியைச் சூழ்ந்துள்ள, பூமிக்கு கவசமாக அமைந்துள்ள காற்று மண்டலம் தடுத்து நிறுத்தி அவற்றை சின்னா பின்னமாக்கி, பூமியை வந்தடையாமல் செய்துவிடும் போது நீங்கள் நம்புவது போல வலிமை குறைந்த கிரகங்களிலிருந்து வரும் வலிமையற்ற எந்த ஆற்றலும் சக்தியும் காற்று மண்டலத்தைக் கடந்து பூமிக்கு வந்து சேர முடியுமா?

சூரியனில் ஏற்படுவது போன்ற அணுச் சேர்க்கையோ அணு வெடிப்போ கிரகங்களில் கிடையாது. எனவே கிரகங்களிலிருந்து கதிர் வீச்சோ வேறு வகையான காந்த சக்தியோ ஏற்பட்டு மனித வாழ்வை பாதித்து விடுமோ என்ற அச்சத்திற்கே இடமில்லை!

கிரகங்களுக்கிடையே ஈர்ப்பு விசை தவிர வேறு விசைகள் இல்லை என்பதே அறிவியல் ஏற்கும் கொள்கை! என்று இயற்பியலாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஏதாவது கோள் எமது வாழ்க்கை முறையைப் பாதிக்கும் என்றால் அது நாம் வாழும் இந்தப் புவிதான்.  நாம் சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு, குடிக்கும் தண்ணீர் எமது உடல்நலத்தை தீர்மானிக்கிறது.  ஆனால் சோதிடர்களுக்கு  புவி ஒரு கோள் என்பது தெரிந்திருக்கவில்லை. அதனால் அதை கணக்கில் எடுக்காமல் விட்டுவிட்டார்கள்.

இந்நிலையில் கிரகங்களால் தனி மனித வாழ்வில் தாக்குதல் ஏற்பட்டு ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும் என்று சோதிடம் சொல்வது ஏற்கக் கூடியதேயல்ல!

தமிழினம் கல்வி, பொருண்மியம், தொழில், கலை, பண்பாட்டுத் துறைகளில் மேலோங்க வேண்டும் என்றால் எமது சமுதாயம்  மூடநம்பிக்கை, மூட பக்தி ஆகியவற்றில் இருந்து விடுதலை பெற வேண்டும். நாமே நமது மூளைக்குப் போட்டிருக்கும் விலங்கை உடைக்க வேண்டும்.

இந்த இடத்தில் முண்டாசுக் கவிஞன் பாரதி தமிழனைப் பார்த்துக் கூறிய அறிவுரையை எல்லோரும் ஊன்றிப் படிக்க வேண்டும். படிப்பதோடு நின்று விடாமல் மூடநம்பிக்கைகளை விட்டொழிக்க வேண்டும்.  புது மனிதர்களாக வாழப் பழக வேண்டும். பாடுபட்டு பனியிலும் வெய்யிலும் உழைக்கும் பணத்தைக் கரியாக்கக் கூடாது.

“புராணங்களை வேதங்களாக்க நினைத்து மடமைகள் பேசி, விலங்குகள் போல நடந்து கொள்ளாதே!

தமிழா! உனது வேலைகள் அனைத்திலுமே பொய்க்கதைகள் மித மிஞ்சிவிட்டன. உனது மதக் கொள்கைகள், லௌகீகக் கொள்கைகள், வைதீக நடை எல்லாவற்றிலுமே பொய்கள் புகுந்து தலை விரித்து ஆட இடங் கொடுத்து விட்டாய்!

இவற்றை நீக்கி விடு. வீட்டிலும் வெளியிலும் தனிமையிலும் கூட்டத்திலும் எதிலும் எப்பொழுதும் நேர்மை இருக்க வேண்டும். உண்மை இருக்க வேண்டும். நீயும் பிறரை வஞ்சிக்காதே..பிறரும் உன்னை வஞ்சிக்கலாகாது. பிறர பிறரை வஞ்சிப்பதையும் தடு. எல்லாப் பேறுகளையும் விட உண்மைப் பேறுதான் பெருமை கொண்டது. உண்மை தவங்களுக்கெல்லாம் உயிர். உண்மை சாஸ்திரங்களுக்கெல்லாம் வேர். உண்மை இன்பத்திற்கு நல்லுறுதி. உண்மை பரமாத்மாவின் கண்ணாடி. ஆதலால் தமிழா எல்லாச் செய்திகளிலும் உண்மை நிலவும்படி செய்.

தமிழா! ..எழுதிப்படிப்பெதெல்லாம் மெய்யுமில்லை. எதிர் நின்று கேட்பதெல்லாம் பொய்யுமில்லை. “முந்திய சாஸ்திரம் தான் மெய் பிந்தைய சாத்திரம் பொய்” என்று தீர்மானம் செய்து கொள்ளாதே. காலத்துக்கும்..உண்மைக்கும் எதிரிடையாக ஒரு கணக்கு ஏற்பட்டிருக்கிறதா? தகப்பன் வெட்டிய கிணறு என்று சொல்லி மூடர்கள் உப்பு நீரைக் குடிக்கிறார்கள் எனப் பஞ்சத்தந்திரம் நகைக்கிறது.”

எனவே ஆண்டுக்கு  ஒருமுறை நடைபெறும் குரு  பெயர்ச்சி ஒரு இயற்கையான நிகழ்வு. குரு பார்வை கோடி பெறும் எல்லாம் கோள்கள் பற்றிய சரியான ஆய்வும் அறிவும் இல்லாத காலத்தில், குறிப்பாகத் தொலைநோக்கி, விண்வெளிக் கலங்கள் இல்லாத காலத்தில் மக்கள் கொண்டிருந்த மூடநம்பிக்கை ஆகும்.

மண்ணையும் விண்ணையும் துல்லியமாக ஆய்வு செய்வதில் வியத்தகு வளர்ச்சி அடைந்துள்ள இன்றைய அறிவியல் காலத்தில் தமிழர்கள் மூடநம்பிக்கைகளைக் கைவிட்டு பகுத்தறிவோடு வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். பகுத்தறிவு புலன் அறிவு, கவனித்தல், சோதித்து அறிதல், ஊகித்து அறிதல் ஆகியவற்றின் மூலம் பெறப்படும் அறிவை அடித்தளமாகக் கொண்டது.

எனவே தான் “திருநள்ளாறு சென்றாலும் திருவாரூரை விடாதே’ என்று கூறப்படுகிறது.

சோதிடர்களிடம் சனிப் பெயர்ச்சி பற்றிய காலத்தையும் நேரத்தையும் கணிப்பதில் கருத்தொற்றுமை இல்லை.

நிகழும் விரோதி ஆண்டு புரட்டாசி மாதம் 10 ஆம் நாள் (26.09.2009) சனிக்கிழமை சுக்ல பட்சத்து அஷ்டமி திதி, நட்சத்திரம் மூலம் நடைபெறும் நாளில், சித்தயோகத்தில் சூரிய உதயநேரம் போக சரியாக மதியம் மணி 3.18 க்கு சனி பகவான் சிம்ம இராசியிலிருந்து கன்னி இராசிக்குள் நுழைகிறார் என வாக்கிய பஞ்சாங்கம் சொல்கிறது. ஆனால் திருக்கணித பஞ்சாங்கம் 2009 செப்டம்பர் 9 ஆம் நாள் சனிப் பெயர்ச்சி இடம்பெறுகிறது என்கிறது. இந்த கால வேறுபாட்டுக்கு என்ன காரணம்?

2007 இல் ஏற்பட்ட சனிப் பெயர்ச்சி பற்றியும் இந்த இரண்டு பஞ்சாங்கங்களும் இருவேறு காலத்தைக் குறிப்பிட்டன.

திருக்கணிதப்படி யூலை 16 இல் சனிப் பெயர்ச்சி, வாக்கியப் பஞ்சாங்கப்படி ஓகஸ்த் 5 இல் சனிப் பெயர்ச்சி இடம் பெற்றது.

காலத்தை நாம் இரண்டு வழிகளில் அளக்கலாம். ஒன்று ஞாயிறை மையமாகக் (Geocentric) கொண்டு அளப்பது. மற்றது விண்மீனை (Sidereal) வைத்து (Spica என்ற சித்திரை நட்சத்திர மண்டலத்திற்கு நேர் எதிரே 180 பாகையில் உள்ள புள்ளியை வைத்து) அளப்பது. முன்னது சாயான (Sayana) என்றும் பின்னது நிராயான (Nirayana) என்றும் அழைக்கப்படுகிறது. சாயான என்றால் அசைவது (Tropical Zodiac  with precession) என்பது பொருள். நிராயான அசையாதது (Fixed Zodiac without precession) என்று பொருள்.  (இது பற்றிய மேலதிக தரவுகளை நான் எழுதிய சோதிடப் புரட்டு நூலைப் புரட்டிப் பார்த்து அறிந்து கொள்ளவும்)

இந்தப் பேரண்டம்  எல்லை அல்லது முடிவு அற்றது என நியூட்டன் உட்படப் பெரும்பாலான அறிவியலாளர்கள் எண்ணினர். பேரறிஞர் அயின்ஸ்தீன் இவ்வண்டத்தில் நேர்க்கோடு என்பதே கிடையாது எல்லாம் வட்டங்களே என்கிறார்.

இந்தப் பேரண்டத்துக்கு எல்லை இருக்கிறது என்று ஏன் கருத முடியாது? அப்படி எல்லை உள்ளதாகக் கருதினால் அதற்கு அப்பால் என்ன இருக்கிறது என்ற வில்லங்கமான கேள்விக்கு விடை கூற வேண்டி வந்துவிடும்! இவ்வண்டத்தின் ஆரம் 35,000,000,000 (336 கோடி கோடி கிமீ) ஆகும்.

அண்டத்தொகுதிக்குள் சூரியன் என்பது ஒரு விண்மீன் ஆகும். சூரியனைப் போன்ற கோடிக்கணக்கான வின்மீன்கள் நமது அண்டத் தொகுதிக்குள் உள்ளன. சூரியக் குடும்பத்தில் சில ஆண்டுகளுக்கு முன்வரை கோள்களின் எண்ணிக்கை 9 எனக் கணக்கிடப்பட்டது. அவை புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் புளூட்டோ என்பனவாம். ஆனால் புளூட்டோ கோள் என்னும் வரையறுக்குள் வராத காரணத்தால் அறிவியலாளர்களால் நீக்கப்பட்டுள்ளது. எனவே மேலே சொன்ன வற்றுள் புளூட்டோ நீங்கலாக 8 கோள்கள் மட்டுமே கோள்கள் என்னும் தகுதியைப் பெற் றுள்ளன. சூரியன் கோள் அல்ல விண்மீன். சந்திரன் கோள் அல்ல துணைக் கோள். அதனால் சோதிடத்தில் 9 கோள்கள் (நவக்கிரகங்கள்) இருக்கின்றன.

வெறும் கண்ணால் வானத்தில் உலா வரும் சூரியனையும் சந்திரனையும் நாம் பார்ப்பது போல சில கோள்களை நம்மால் பார்க்க இயலும். சூரியன் மறைவதற்கு முன்போ அல்லது தோன்றுவதற்கு முன்போ புதன் கோளை நம்மால் பார்க்க இயலும். வெள்ளிக் கோளை மேற்கு அடிமானப் பகுதியில் மாலை விண் மீனாகவும் கிழக்கு அடிமானப் பகுதியில் காலை விண் மீனாகவும் பார்க்கலாம். செவ்வாய் கோளை ஆண்டு முழுவதும் அநேக நேரங்களில் பார்க்கலாம். பூமியிலிருந்து நோக்கும்பொழுது செவ்வாய்க் கோள் வானத்தில் சூரியன் இருக்கும் இடத்திற்கு எதிர் திசையில் இருக்குமானால் அது தெளிவாகத் தெரிகிறது. வெற்றுக் கண்களால் செவ்வாய் கோளினைப் பார்க்கும் பொழுது .அதனுடைய நிறம் சிவப்பாகத் தோன்றுகிறது. சனிக் கோளினை வெற்றுக் கண்களால் பார்க்கும்போது மஞ்சள் நிறமாகத் தெரியும். 1610 ஆம் ஆண்டில் கலிலியோ தொலைநோக்கியைக் கொண்டு சனிக் கோளை உற்று நோக்கினார். யுரேனஸ் கோளினை தொலை நோக்கியினைக் கொண்டு பார்த்தால் பச்சை நிறமாகத் தெரியும்.

பழங்காலத்தில் வெறும் கண்ணால் வானத்தைப் பார்த்தபொழுது நகர்ந்த கோள்களை தெய்வங்கள் எனக் கிரேக்க மற்றும் உரோமானியர்கள் நம்பினர். அவற்றிற்கு உரோம கடவுள்கள் பெயரையே சூட்டியுள்ளனர். சாதக சோதிடம் அண்மையில் புனையப் பட்டது. எனவே கோள்களின் எண்ணிக்கை 9 என்று கூறியிருக்கிறார்கள்.

சீன சோதிடத்தில் கண்ணுக்குத் தெரிந்த 5 கிரகங்களை மட்டும் வைத்துக்கொண்டு பலன் சொல்லுகின்றார்கள்- ஆனால் அவர்கள் இந்த 5 கிரகங்களும் சூரியன், சந்திரன் இரண்டிலிருந்தும் வேறுபட்டது என்று தெரிந்து வைத்திருந்தார்கள். விண்மீன்களைப் பார்த்த மனிதன் தனக்குப் பழக்கப்பட்ட விலங்குகளின் பெயரைக் கொடுத்திருக்கின்றான். சீன சோதிடத்தில் எலி, காளை மாடு, புலி, முயல், முதலை, பாம்பு, குதிரை, குரங்கு, செம்மறி ஆட்டுக் கிடா, சேவல், நாய், பன்றி என்ற 12 விலங்குகள் இராசிகளாகக் கொள்ளப்பட்டுள்ளன.

சீனாவில், 12 விண்மீன் கூட்டங்களுக்கு எலி, காளை, மாடு, புலி, முயல், முதலை, பாம்பு எனக் கொடுத்திருப்பது போல மேலைச் சோதிடத்தில் (Tropical Zodiac) நாடுகளில் Aries, Gemini, Leo, Libra, Sagittarius and Aquarius, whereas the feminine signs are Taurus, Cancer, Virgo, Scorpio, Capricorn and Pisces என கிரேக்க – உரோம பெயர்களைக் கொடுத்திருக்கின்றார்கள்.
நகரும் கோள்கள் மற்றும் நகராத ஏதோ ஒரு உருவ அமைப்புள்ள விண்மீன் கூட்டங்கள் (Constellations)  இவைதான் இந்திய சோதிடத்தின் (Vedic or Sidereal Zodiac)  அடிப்படை.

இந்திய சோதிடர் மேடம், இடபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் எனப் பெயர் கொடுத்திருக்கின்றார்கள். இதற்கான சில உருவப் படங்களையும் (Sign) கொடுத்திருக்கின்றனர்.

கோள்கள் சூரியனைச் சுற்றி வருவது அறிவியல். ஆனால் சனிக் கோள் நகர்வதை சனிப் பெயர்ச்சி என்றும் அதனால் தனிப்பட்ட மனிதர்கள் வாழ்வில் மாற்றங்கள் வரும் என்கிறார்களே? அது எப்படி? சனிப் பெயர்ச்சி என்னும் புரட்டுக்குக் கூட்டம் சேர்கிறது, படித்தவர்களிடம் இருந்தும் படியாத பாமரர்களிடம் இருந்தும் பரிகாரம் என்னும் பெயரில் சோதிடரும் கோயில் குருக்கள்மாரும் பணம் கறக்கிறார்கள்.

அண்மைக் காலத்தில் சனி பெயர்ச்சி போலவே குருப் பெயர்ச்சி, இராகு பெயர்ச்சி, கேது பெயர்ச்சி ஆகியவற்றை வைத்துப் பணம் சம்பாதிக்கிறார்கள. இதன் மூலம் தமிழ்ச் குமுகம் ஒரு அறிவுடைய குமுகமாக மாறவிடாது தடுக்கிறார்கள். இதற்கு ஊடகங்கள் துணை போகின்றன. இன்று சுப நேரம், இராகு காலம், யமகண்டம், இராசி பலன், ஆண்டு பலன், போடாத ஏடுகளையே பார்க்க முடியாது.

நோபல் பரிசு பெற்ற வானியலாளர் சோதிடம் என்பது பொய் என அறிவித்த பிறகும் சோதிடம் அறிவியல் எனச் சோதிடர்கள் எழுதிக்கொண்டும் சொல்லிக் கொண்டும் இருக்கிறார்கள்.

சூரிய மண்டலத்தில் பூத வடிவான வியாழக்[Giant Jupiter] கோளுக்கு அடுத்தபடி மிகப் பெரிய கிரகம் சனிக் கோள் ஆகும். சனிக் கோளம் புவியிலிருந்து குறைந்தது 720 மில்லியன் மைல் தூரத்தில் உள்ளது. கோள வடிவில் சனி, பூமியை விட சுமார் பத்து மடங்கு பெரியது. ஒரே மட்ட அமைப்பில் ஏகமைய வட்டங்களில் [Concentric Circles] பல வளையங்களை அணிந்து மிக்க எழிலுடன் இலங்கும் சனிக் கோளுக்கு ஈடு, இணை சூரிய மண்டலத்தில் எந்தக் கோளும் இல்லை.

Image result for Galileo Galilei

சனிக் கோள் உரோமரின் வேளாண்மைத் தெய்வத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது. சனிக் கோளே பண்டைக் கால மக்களுக்குத் தெரிந்திருந்த கடைசித் தொலைக் கோளாகும். வியாழனுக்கு அடுத்த இரண்டாவது பெரிய கோளும் இதுவே.  ஏனைய கோள்களைப் போலவே சனிக் கோள் ஓர் அழகான கோள். சோதிட சாத்திரம் சொல்வது போல் அதன் நிறம் கறுப்பு அல்ல. அதன் நிறம் கறுப்பு என்பதோ, அதன் வாகனம் காக்கை என்பதோ வெறும் மூடநம்பிக்கை. இந்தக் கோளைச் சுற்றிலும் வளையங்கள் காணப்படுகின்றன. இந்த வளையங்களை முதன் முதலில் கலிலியோ கலிலி (Galileo Galilei (1564-1642) என்ற வானியலாளரே தனது சிறிய தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்தார்.

ஞாயிறிடம் இருந்து இந்தக் கோள் பெறும் ஒளியும் வெப்பமும் மிகக் குறைவாகும். சனிக் கோள் சூரிய குடும்பத்தில் 798.30 மில்லியன் மைல் தொலைவில் வரிசையில் ஆறாவது கோளாக சுழல்வீதியில் சுற்றி வருகிறது.

விட்டம்                                                    –     120,660 கிமீ (74,978 மைல்)
மேற்பரப்பு                                               –     வாயு மற்றும் நீர்மம் (Gas and liquid)
ஈர்ப்பு விசை                                            –     1.16 (புவி 1)
திணிவு                                                      –     95.2 (புவி 1)
வளிமண்டலம்                                         –     நீரகம் (hydrogen) 88 விழுக்காடு கீலியம் (helium) 11 விழுக்காடு
வெப்பம்                                                    –     288 பாரன்கைட் (-178 செல்சியஸ்)
அச்சின் சாய்வு                                        –     26.73 பாகை
தன்னைத்தானே சுற்ற எடுக்கும் காலம்     –     10 மணி 40 மணித்துளி, 0 வினாடி (0.436 புவி நாள்)
தன்னைத்தானே சுற்றும் வேகம்                  –     நொடிக்கு 9.87 கிமீ (மணிக்கு 35,500 கிமீ)
ஞாயிறைச் சுற்நி வர எடுக்கும் காலம்        –     29 ஆண்டுகள் 167 நாள்கள் (29.46 புவி ஆண்டுகள்)
ஞாயிறைச் சுற்றும் வேகம்                             –     நொடிக்கு 9.64 கிமீ
புவியில் இருந்து பொதுமேனி தொலைவு  –     1280.00 மில்லியன் கிமீ (798.30 மில்லியன் மைல்)
உங்கள் எடை (200)                                         –     சனியில் 212.8 கிலோ
நிலாக்கள்                                                             –     31

சனியின் உட்பகுதியில் விரைவில் உச்சமாக்கி நீரகம் திரவமாய்த் தணிவடைகிறது ஜஊழனெநளெநள iவெழ ய டுஙைரனைஸ. உட்கருவில் திரவ நீரகம் மிக்கப் பேரழுத்தத்தால் இரும்பாய் இறுகி, உலோக நீரகம் (Metallic Hydrogen) பாறை ஆகி, மின்கடத்தியாக ஜநுடநஉவசiஉயட ஊழனெரஉவழசஸ மாறுகிறது. சனிக்கோளம் ஒரு பிரமாண்டமான காந்தக் களமாக ஜஆயபநெவiஉ குநைடனஸ இருப்பதற்கு இதுவே காரணம்.

சனியின் நடுவே ஒரு வேளை கடும் பனிக்கரு [Icy Nucleus] உறைந்துபோய் இருக்கலாம்! அல்லது கன மூலகங்கள் [Heavy Elements]பேரழுத்தத்தில் பாறையாகி சுமார் 15,000 பாகை ஊ வெப்பம் உண்டாகியிருக்கலாம்! 4.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய சூரிய குடும்பத்தில் பிறந்த வியாழன் சனி இரண்டும் ஈர்ப்பியல் கொந்தளிப்பு [Gravitational Settlement]அடங்கி இன்னும் நிலைப்பாடு [Stability] பெறவில்லை. அதனால் அண்டத்தின் கருச் சுருக்கம்[Contraction] வெப்பத்தை மிகுந்து வெளிப்படுத்தி, சனிக்கோள் தான் சூரியனிடமிருந்து பெறும் வெப்பத்தைவிட மூன்று மடங்கு மிகையாக விண்வெளியில் அனுப்புகிறது!

பூமியில் உள்ள நவீன தொலை நோக்கி மூலம் பார்த்தாலும் சனி மண்டலத்தில் ஒரு சில ஆயிரம் கிலோ மீட்டர் இடைவெளிக்கு மேல் ஆராய முடியாது. புவிச் சுழல்வீதியில் [Earth ‘s Orbit] சுற்றி வரும் ஹப்பிள் விண்வெளித் தொலை நோக்கியில் [Hubble Space Telescope]  1990 ஆம் ஆண்டு, முதன் முதலில் சனிக் கோளில் ஒரு மாபெரும் வெண்ணிறத் தளம் [White Spot]  கண்டு பிடிக்கப் பட்டது. பல மில்லியன் மைல் தூரத்தில் சூரிய மண்டலத்தின் வெளிக்கோள்களில் ஒன்றாக, ஆமை வேகத்தில் சுற்றி வரும் சனிக்கோளை, விண்வெளி ஆய்வுக் கலங்கள் [Space Probes] மூலமாகத்தான் அறிய முடியும்.

இது காறும கூறியவற்றால் சனி என்பது ஏனைய கோள்கள் போலவே 798.30 கோடி மைல் தொலைவில் ஞாயிறைச் சுற்றிவருகிற ஒரு கோளாகும். அது ஒரு சடப்பொருள். அங்கு மனிதன் வாழ்வதற்கு வேண்டிய உயிர்க்காற்று இல்லை. சனிக்கோள் மட்டுமல்ல வேறு எந்தக் கோளிலும் மனிதன் வாழ்வதற்கு வேண்டிய உயிர்க்காற்று, தண்ணீர் இல்லை. கோள்களுக்கும் மனிதனுக்கும் தொடர்பே இல்லை. அப்படியிருக்க இந்த 21 நூற்றாண்டிலும் சனி கெட்ட (நீச கிரகம்) சனி பகவான் பொல்லாதவன் – அவன் கோபத்தைத் தணிக்க எண்ணெய் தேய்த்து முழுக வேண்டும் கோயிலுக்குச் சென்று எள்ளெண்ணை எரிக்க வேண்டும் விரதம் இருக்க வேண்டும் பூசை, அருச்சனை செய்ய வேண்டும் என்று படியாத பாமர மக்கள் மட்டும்மின்றி படித்த முட்டாள்களும் நம்புகிறார்கள்.

தமிழினம் கல்வி, பொருண்மியம், தொழில், கலை, பண்பாட்டுத் துறைகளில் மேலோங்க வேண்டும் என்றால் எமது குமுகம் மூடநம்பிக்கை, மூட பக்தி ஆகியவற்றில் இருந்து விடுதலை பெற வேண்டும். நாமே நமது மூளைக்குப் போட்டிருக்கும் விலங்கை உடைக்க வேண்டும்.

Image result for Bharathi poet

இந்த இடத்தில் முண்டாசுக் கவிஞன் பாரதி தமிழனைப் பார்த்துக் கூறிய அறிவுரையை ஊன்றிப் படியுங்கள். படிப்பதோடு நின்று விடாமல் மூடநம்பிக்கைகளை விட்டொழியுங்கள். புது மனிதர்களாக வாழக் கற்றுங்கள். உங்கள் பணத்தையும் நேரத்தையும் மிச்சம் பிடியுங்கள்.

புராணங்களை வேதங்களாக்க நினைத்து மடமைகள் பேசி, விலங்குகள் போல நடந்து கொள்ளாதே!

தமிழா! உனது வேலைகள் அனைத்திலுமே பொய்க்கதைகள் மித மிஞ்சிவிட்டன. உனது மதக் கொள்கைகள், லௌகீகக் கொள்கைகள், வைதீக நடை எல்லாவற்றிலுமே பொய்கள் புகுந்து தலை விரித்து ஆட இடங் கொடுத்து விட்டாய்!

இவற்றை நீக்கி விடு. வீட்டிலும் வெளியிலும் தனிமையிலும் கூட்டத்திலும் எதிலும் எப்பொழுதும் நேர்மை இருக்க வேண்டும். உண்மை இருக்க வேண்டும். நீயும் பிறரை வஞ்சிக்காதே..பிறரும் உன்னை வஞ்சிக்கலாகாது. பிறர பிறரை வஞ்சிப்பதையும் தடு. எல்லாப் பேறுகளையும் விட உண்மைப் பேறுதான் பெருமை கொண்டது. உண்மை தவங்களுக்கெல்லாம் உயிர். உண்மை சாஸ்திரங்களுக்கெல்லாம் வேர். உண்மை இன்பத்திற்கு நல்லுறுதி. உண்மை பரமாத்மாவின் கண்ணாடி. ஆதலால் தமிழா எல்லாச் செய்திகளிலும் உண்மை நிலவும்படி செய்.

தமிழா! ..எழுதிப்படிப்பெதெல்லாம் மெய்யுமில்லை. எதிர் நின்று கேட்பதெல்லாம் பொய்யுமில்லை. “முந்திய சாஸ்திரம் தான் மெய் பிந்தைய சாத்திரம் பொய்” என்று தீர்மானம் செய்து கொள்ளாதே. காலத்துக்கும்..உண்மைக்கும் எதிரிடையாக ஒரு கணக்கு ஏற்பட்டிருக்கிறதா? தகப்பன் வெட்டிய கிணறு என்று சொல்லி மூடர்கள் உப்பு நீரைக் குடிக்கிறார்கள் எனப் பஞ்சத்தந்திரம் நகைக்கிறது.

எனவே இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப் பெயர்ச்சி ஒரு இயற்கையான நிகழ்ச்சி. சனீசுவரனைப் போல் கொடுப்பவரும் இல்லை கெடுப்பவரும் இல்லை என்பது எல்லாம் சனிக் கோள் பற்றிய சரியான ஆய்வும் அறிவும் இல்லாத காலத்தில், குறிப்பாகத் தொலைநோக்கி, விண்வெளிக் கலங்கள் இல்லாத காலத்தில் முன்னோரின் மூடநம்பிக்கை ஆகும்.

மண்ணையும் விண்ணையும் துல்லியமாக ஆய்வு செய்வதில் வியத்தகு வளர்ச்சி அடைந்துள்ள இன்றைய அறிவியல் காலத்தில் தமிழர்கள் மூடநம்பிக்கைகளைக் கைவிட்டு பகுத்தறிவோடு வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். பகுத்தறிவு புலன் அறிவு, கவனித்தல், சோதித்து அறிதல், ஊகித்து அறிதல் ஆகியவற்றின் மூலம் பெறப்படும் அறிவை அடித்தளமாகக் கொண்டது.


2011 சனிப்பெயர்ச்சி

“ஏழரை சனி” சோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இப்பெயரைக் கேட்டாலே பயந்து நடுங்குகிறார்கள் அல்லது இவர்களை பயமுறுத்துவதற்காக தினசரிகள், வார இதழ்கள், சோதிடத்திற்கு மட்டுமென வெளிவரும் பத்திரிக்கைகள் உள்ளன. இவ்வாண்டு 2011 டிசம்பர் மாதம் 21ஆம் தேதி அதிகாலையில் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு சனி இடம் பெயர இருக்கிறது. இதையொட்டி சனியால் எந்த ராசிக்கு என்ன பலன் என்றும் அதனால் வரும் விளைவுகளுக்கு பரிகாரத்தைத் தேடி காக்கையை தனது வாகனமாகக் கொண்டு திருநள்ளாரில் எழுந்தருளி இருக்கும் சனி பகவானின் நளன் குளத்தில் நீராடவும் மற்ற வகையான பரிகாரங்களை செய்யவும் ஆயத்தமாக இருக்கிறார்கள்.

இனி செய்திக்கு வருவோம் முதலில் இந்த சனிப்பெயர்ச்சி பஞ்சாங்க அடிப்படையில் ஒரே நாளில் நிகழ்கிறதா என்றால் இல்லை, வாக்கியப் பஞ்சாங்கத்தின் படி 21 ஆம் தேதியும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 15 ஆம் தேதியும் நிகழ்கிறது. இதில் என்ன நகைச்சுவை என்றால். பஞ்சாங்கத்திலேயே துல்லியமானது திருக்கணிதப் பஞ்சாங்கம் என கூறப்படுகிறது. ஆனால் சனிப்பெயர்ச்சி மட்டும் வாக்கியப் பஞ்சாங்கத்தின்படியே கணிக்கப்பட்டு 21 ஆம் தேதி திருநள்ளாரில் சனிப்பெயர்ச்சி மிகவும் விமரிசையாக நடத்தப்பட உள்ளது. இவ்வாறு முரண்பட்ட சோதிட நம்பிக்கையின் அடிப்படையில் நடைபெறும் சனிப்பெயர்ச்சியை சற்று அறிவியல் கண்ணோட்டத்துடன் அலசுவோம்.

ஜாதகமும் சோதிடமும் 

ஜாதகம் என்பது ஒருவன் பிறந்த நேரதில் வானில் காணப்பட்ட மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள், 9 நவக்கிரகங்கள் ஆகியவற்றைக் கொண்டு பதியும் பதிவு அவ்வளவே. வானவீதியில் கோள்களின் இயக்கம் சீரான காலமுறையை (Uniform Motion) சார்ந்தது என்பதினால் ஜாதகம் என்பது நமது முன்னோர்கள் பயன்படுத்திய பிறப்பு பதிவு எனக் கொள்ளலாம். ஆனால் ஜாதகம் சோதிடத்தின் கருவியாக மாறும்போதுதான் சீரழிந்து புனைவுகளுக்கு ஆளாகிறது.

சோதிடத்தில் ராசி, நட்சத்திரங்கள் மற்றும் கோள்களுக்கு சில குணங்கள் இருப்பதாக கற்பிதம் செய்யப்படுகிறது. பொதுவாக ஜாதகமும், சோதிடமும் பழமையான பூமிக்கொள்கை (Geo System) எனப்படும் பூமியை மையமாக வைத்து கோள்கள் அனைத்தும் சுற்றி வருவதாகக் கொண்டே இன்றளவும் கணிக்கப்பட்டு வருகின்றது. இன்று அறிவியலால் நிரூபிக்கப்பட்டு உண்மையென எல்லோராலும் குறிப்பாக ஆன்மீகவாதிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சூரியனை சுற்றி அனைத்துக் கோள்களும் இயங்குகின்றன (Solar system) என்ற அறிவியல் உண்மைக்கு எதிராக இச்சோதிட தத்துவம் உள்ளது.

இதில் நிலையாக பேராற்றல் உள்ள நட்சத்திரமான சூரியனும், ஆற்றல் ஏதும் இல்லாமல் பூமியை சுற்றும் துணைக்கோளான சந்திரனும், கோள்களே அல்லாத ராகுவும் கேதுவும் கிரகங்களாக குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் பூமி, யுரேனஸ், நெப்டியூன் போன்ற கோள்கள் இதில் இடம் பெறவில்லை (அப்போது தொலைநோக்கிகள் இல்லை அதனால் இருந்திருக்கும்). அதைப்போலவே ராசி என்பதும் வானில் உள்ள விண்மீன்களின் வடிவங்களின்     கற்பனையான தராசு (துலாம் இராசி-Libra), வில்(தனுசு இராசி-Sagittarius) போன்ற வடிவங்களேயாகும். இந்த வடிவங்களிலான விண்மீன் கூட்டங்களுக்கென தனித்தனியே குணங்களும் ஆற்றலும் உள்ளது எனவும் சோதிடம் கூறுகிறது. இவற்றையே அடிப்படையாகக் கொண்டு அவரவர்களுக்கான தினம், வாரம், மாதம், வருடம் என வாழ்நாள் முழுதும் நல்லதும் கெட்டதுமான பலன்கள் அவ்வப்போது சோதிடர்களால் கணிக்கப்படுகிறது.

கோள்கள் (நவ கிரகங்கள்)
வரிசை எண். ஜாதகத்தில் உள்ளவை  சூரிய மண்டலத்தில் இருப்பவை
1ஞாயிறுவெள்ளி

2

சந்திரன்புதன்
3செவ்வாய்பூமி
4புதன்செவ்வாய்
5குரு (வியாழன்)வியாழன்
6சுக்கிரன்(வெள்ளி)சனி
7சனியுரேனஸ்
8ராகுநெப்டியூன்
9கேதுபுளூட்டோ

                                           ஜாதகம்          

மீனம்

 

12

 மேஷம்

 

1

ரிஷபம்

 

2

மிதுனம்

 

3

கும்பம்

 

11

சோதிடம் கணிக்கும்

இராசிக்கட்டம்

கடகம்

 

4

மகரம்

 

10

சிம்மம்

 

5

தனுசு

 

9

விருச்சிகம்

 

8

துலாம்

 

7

கன்னி

 

6

மனிதர்களிடையே சாதி பார்ப்பது போதாது என்று கோள்களையும் வர்ணப்பாகுபாடு செய்கிறது சோதிடம்

                                      வர்ணாசிரம – பாலின பாகுபாடு 

வர்ணம்கிரகங்கள்
பிராமணர்வியாழன்(குரு)வெள்ளி
சத்திரியர்ஞாயிறு,செவ்வாய்
வைசியர்சந்திரன், புதன்
சூத்திரர்சனி, ராகு, கேது

ஆக சோதிடத்தை ஏற்பதன் மூலம் நால் வர்ணக்கொள்கையை ஆதரிப்பதாகவே கொள்ளவேண்டும்.

பாலினம்இராசிகள்நட்சத்திரங்கள்
ஆண்

மேஷம்,மிதுனம்,சிம்மம், துலாம்

தனுசு,கும்பம்

8
பெண்ரிஷபம்,கடகம்,கன்னி,விருச்சிகம்,மகரம், மீனம்16
அலி 3

இப்படி உயிரற்ற கிரகங்களுக்கும் நட்சதிரங்களுக்கும்கூட சோதிடத்தில் பாலின வேறுபாடு கற்பிக்கப்பட்டு உள்ளது.


சனிப்பெயர்ச்சி 

இனிப்  பெயர்ச்சி என்றால் என்னவென்று பார்ப்போம். பொதுவாக சோதிடத்தில் குருப்பெயர்ச்சியும், சனிப்பெயர்ச்சியுமே மிகவும் பிரபலமானதாகவும் முக்கியமானதாகவும் எடுத்துக்கொள்ளப்படுகிறது. சனி, குரு மட்டுமல்லாமல் எல்லா கிரகங்களுக்கும் பெயர்ச்சி உள்ளது. அந்தந்த கிரகங்கள் பூமியை/சூரியனை சுற்றி வரும் காலத்திற்கு ஏற்ப அட்டவணையில் உள்ளவாறு ஒரு இராசியில் இருந்து இன்னொரு இராசிக்கு இடம் பெயர காலம் எடுத்துக்கொள்ளும்.

மொத்தம் உள்ள 12 இராசிகளில் கோள்கள் இடம் பெயர எடுத்துக் கொள்ளும் காலம்

 
கோள்களின் பெயர் சூரியனை சுற்றிவரும் காலம் இடம் பெயரும் காலம்
சந்திரன்27 நாட்கள்2 ¼ நாள்
ராகு, கேது18 ஆண்டுகள்1 ½  ஆண்டு
குரு (வியாழன்)12 ஆண்டுகள்ஒர் ஆண்டு
செவ்வாய்18 மாதங்கள்1 ½ மாதம்
சுக்கிரன், புதன் ஒரு மாதம்
சூரியன்ஒரு மாதம்

சனிக்கோள் சூரியனை சுற்றிவர 30 ஆண்டுகள் ஆகும். 12 இராசிகள் உள்ள சூரியவீதியில் சனி ஒவ்வொரு இராசியிலும் சுமார் 2½ ஆண்டுகள் காணப்படும். இதனைத்தான் அந்த இராசியை சனி பிடித்துள்ளதாக கூறுகிறார்கள். 2½ ஆண்டுகள் கழித்து சனி அந்த இராசியில் இருந்து விலகி அடுத்த இராசிக்கு இடம் பெயரும். இதனைத்தான் சனிப்பெயர்ச்சி என்று கூறுகிறார்கள்.

ஏழரை சனி  

ஏழரை நாட்டுச் சனி என்பது சனிக்கோளானது இராசிக்கும் அந்த இராசியின் முன் வீடு இராசியின் அடுத்த வீடு ஆகிய மூன்றிலும் உள்ளதைக் குறிக்கும். சனி கிரகமானது ஒரு இராசியில் இருந்து அடுத்த இராசிக்கு செல்வதற்கு 2½ ஆண்டுகள் ஆகும் என்பதை முன்னரே கண்டோம். இராசிக்கு முன் இராசியில் 2½ ஆண்டுகள், பிறந்த இராசியில் 2½ ஆண்டுகள், அடுத்த இராசியில் 2½ ஆண்டுகள் ஆக 7½ ஆண்டுகளைத்தான் ஏழரை நாட்டுச் சனி என்பர். உதாரணமாக தற்போது சனி கன்னி இராசியில் இருந்து துலாம் இராசிக்கு இடம் பெயர உள்ளது அடுத்து 2½ ஆண்டுகள் கழித்து விருச்சிக இராசிக்கு செல்லவிருக்கிறது. சோதிடத்தின்படி துலாம் இராசிக்காரருக்கு 2½ ஆண்டுகளுக்கு முன்னரே ஏழரை சனி ஆரம்பித்துவிட்டது இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்தே அவரை அது விடும். ஒருவரின் முப்பது ஆண்டுகால வழ்க்கையில் ஏழரை ஆண்டுகள் சனியின் தொல்லையில் கொடுமைக்கு ஆளாகவேண்டும் என்பது அவரின் விதி என்பதே சோதிடத்தின் நியதி ஆகும்.

சனிப்பலன் 

நீண்ட கால வாழ்விற்கும், மரணத்திற்கும் காரணமாக இருப்பது சனி என்று சோதிடம் கூறுகிறது. வறுமை, கலகம், நோய், அவமரியாதை ஆகியவற்றின் காரணி சனியாகவே வருணிக்கப்படுகிறது. லக்னத்திற்கு 3.6,9,10,11 இடங்களில் சனி இருந்தால் குவியல் குவியலாக பணமும் பொருளும், வேலையாட்களுடன் கூடிய வாழ்வு அமையுமாம். லக்னத்திற்கு 2,4,8,12 இடத்தில் இருந்தால் துன்பமும், துயரமும், கஷ்ட நஷ்டங்களும் தொடர்கதையாய்த் தொடரும் எனக் கதை விடுகிறார்கள். இந்தியாவில் வறுமைக் கோட்டின் கீழ் 40 சதவீதத்திற்கு மேல் இருக்கிறார்கள் இவர்களின் வாழ்க்கை லக்னத்திற்கு 3,6,9,10,11 இடங்களில் சனி வராமல் இல்லை, ஆனால் நாளுக்கு நாள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டுதான் இருக்கிறது மறுபுறம் பெருமுதலாளிகளின் சொத்தும் பெருகிக்கொண்டுதான் இருக்கிறது. இதற்கு காரணம் சனிதான் என்று சொல்லி அதுதான் விதி விதிப்படிதான் நடக்கும் எனக்கூறி மக்களை ஏமாற்றி அவர்களின் போராட்டக் குணங்களை மழுங்கடிக்கச்செய்கிறது ஒரு கூட்டம் அதற்கு தூபம் போட ஏற்பட்டதே சோதிட குவியல்கள்.

Image result for Saturn in solar system

                                                                                                                                                                  சூரிய குடும்பத்தில் சனி 

பூமியிலிருந்து தூரம்127 கோடி கி.மீ
சூரியனிலிருந்து தூரம்142 கோடி கி.மீ
சுற்றளவு1,21,000 கி.மீ (பூமியைப் போல் 9 மடங்கு)
சுற்றிக்கொள்ளும் நேரம்10½ மணி (பூமி 24 மணி)
சூரியனை சுற்றி வர காலம்30 ஆண்டுகள் (பூமி ஒரு ஆண்டு)
அடர்த்திதண்ணீரை விட குறைவு (தண்ணீரில் மிதக்கும்)
துணைக்கோள்கள்31 (பூமிக்கு ஒரே ஒரு சந்திரன் மட்டும்)
சூரியனில் இருந்து உள்ள இடம்6 (பூமி 3 ஆவது இடம்)
சூரியனில் இருந்து உள்ள இடம்6 (பூமி 3 ஆவது இடம்)
வடிவம்இரண்டாவது பெரிய கிரகம் (பூமியைவிட 1000 மடங்கு பெரியது)
தன்மைபெரும்பகுதி காற்றால் ஆனது (பூமி- நிலம், நீர், காற்றால் ஆகிய மூன்றால் ஆனது)
சனிக்கோளில் இருந்து வரும் ஒளி பூமியை வந்தடைய எடுத்துக் கொள்ளும் நேரம்1 மணி 28 நிமிடம் (விநாடிக்கு 3,30,000 கி.மீ வேகம்)

வாயுக்கிரகமாக உள்ளதால் இதன் அடர்த்தி தண்ணீரைவிட மிகக்குறைவானது. சனியைவிட மிகப்பெரிய கடல் நம்மிடம் இருந்து அதில் சனியை தூக்கி போட்டால் சனி மூழ்காமல் மிதக்கும் என்பது ஆச்சரியமான உண்மை. இதன் காரணமாக மனிதன் அனுப்பும் செயற்கை கோள்கள் செவ்வாயிலும் சந்திரனிலும் தரை இறங்குவதைப்போல சனியில் தரை இறங்கமுடியாது. ஏனென்றால் இதற்கு உறுதியான தரைப்பரப்பு இல்லை குளிரால் ஆண்டு முழுவதும் வறண்டு கிடக்கும் இக்கோளை மிகவும் சக்தி வாய்ந்தது என்று கூசாமல் எப்படித்தான் பொய் சொல்கிறார்களோ?

 கோள்களிடம் உள்ள சக்தி

சோதிடத்தில் கிரகங்களுக்கு அளப்பறிய சக்தி உள்ளதாக சித்தரிக்கப்பட்டு உள்ளது. சனி, செவ்வாய், குரு போன்ற கிரகங்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாக காட்டப்பட்டுள்ளது. உண்மையில் சூரிய குடும்பத்தில் சக்தி உள்ள ஒன்று உள்ளதென்றால் அது சூரியனே ஆகும். சூரியன் மிகப்பெரிய அணுவுலையாகும். இதன் அளப்பரிய வெப்ப ஆற்றல், ஒளி ஆற்றல், காந்த ஆற்றல், ஈர்ப்பு விசை, புற ஊதாக்கதிவீச்சு போன்றவை மற்ற எந்த கிரகங்களுக்கும் இல்லை. உண்மையில் சூரியனுக்கு அடுத்த நிலையில் உள்ள கிரகம் பூமியே ஆகும். இதில் மனித உயிர்வாழ்க்கைக்குத் தேவையான தண்ணீரில் இருந்து, காற்று மண்டலமும் உள்ளது. வேறு எந்த கிரகமும் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் ஈர்ப்பு விசையைத்தவிர (அதுவும் குறிப்பிட்ட தூரத்திற்கு மட்டும்) வேறு சக்தி இல்லை. அவ்வளவு ஏன் சொந்தமாக ஓளி ஆற்றால்கூட இல்லை சூரியனிடம் இருந்து ஒளியை கடன்வாங்கி பிரதிபளிக்கக்கூடிய அளவிலேயே இவை உள்ளன. வெறும் வெற்று கிரகங்களான இவை அறிவியல் விதியான ஈர்ப்புவிசையின்படி சூரிய மண்டலத்தில் உள்ளனவே தவிர இவற்றிற்கு என எந்த சொந்த ஆற்றலும் இல்லை. இக்கிரகங்கள் பூமியில் இருந்து கோடிக்கணக்கான கி.மீ தூரத்தில் உள்ளதால் இந்த ஈர்ப்பு விசையும் பூமியை எட்டவே எட்டாது. ஆனால் சோதிடத்தில் பேராற்றல் உள்ள சூரியனும் டம்மி பீஸ்களாக செத்துப்போன எரிமலையும், வறண்டு போன ஆறுகளும், கடுங்குளிரும் கொண்ட மற்ற கிரகங்களும் சக்தி உள்ளவைப் போல் சித்தரிக்கப்பட்டு உள்ளது வேடிக்கையான ஒன்று.

கிரக நிலை மனிதனின் வாழ்க்கையை பாதிக்குமா? 

1993 ஆம் ஆண்டுகளில் டெல்லியில் உள்ள சனிபகவானின் கோவிலுக்கு சனிக்கிழமைகளில் 100 முதல் 200 பேர் வந்து கொண்டிருந்தனர். ஆனால் தற்போது 1000 பேருக்கு மேல் வருவதாகக் கணக்கிட்டுள்ளனர். வந்தவர்களின் பிரச்சினைகள் தீர்ந்துள்ளதா எனக்கேட்டால், அப்படி ஒன்றும் இல்லை என்கின்றனர். பிரபலமான வானவியல் அறிவியலாளர் ஜெயாண்டி வி.நார்லிக்கர் கூறும்போது சனியைப் பற்றி பேசப்படும், சொல்லப்படும் கருத்துக்கள் அனைத்தும் தவறானது ஆகும். இதில் எந்தவித அறிவியல் உண்மையோ, செயல்பாடோ கிடையாது என்கிறார்.

உலகில் உள்ள மனிதர்களையும் ஜீவராசிகளையும் தங்களுடைய அதிகார பலத்தினால் ஆட்டிப்படைப்பவர்கள் இந்த ஒன்பது கிரகங்கள்தான் என்கிறது சோதிடம். இந்தியாவில் தற்போதைய மக்கள் தொகை 120 கோடி ஆகும். இவர்கள் அனைவரும் 12 இராசிக்குள்தான் வருவார்கள். அப்படி என்றால் ஒரு இராசியில் 10 கோடி பேர் உள்ளனர். இவர்களின் வாழ்க்கை நிலை ஒன்றுபோல் உள்ளதா? என்றால் இல்லை.

சமுதாயத்தில் உள்ள சாதி, தீண்டாமை, ஏற்றத்தாழ்வு, வேலையின்மை, உலகமயம், தனியார் மயம், தாராள மயம் மற்றும் அரசு கடைபிடிக்கும் தவறான பொருளாதாரக் கொள்கைகள்தான் மனிதனின் வாழ்க்கையைப் பாதிக்கிறது. வறுமைக்கும் கூட இவைகள்தான் இன்றளவும் காரணமாகவுள்ளது.

அறிவியல் பார்வை 

பழக்கத்தின் காரணமாக பிடிவாதமாக நமது முன்னோர்கள் நம்பி வந்த நம்பிக்கை இதுவரை தொடர்ந்து வந்துள்ளது. நம்மீது விடாப்பிடியாக உள்ள அந்த நம்பிக்கை மீது நாம் சந்தேகிக்க மறுக்கிறோம். வானவியலை நன்கு அறிந்துகொள்வதின் மூலம் நமக்கு உண்மை புலப்படும்.

உண்மையில் சனிக்கிரகத்தின் வளையமானது அதற்கு அழகைக் கூட்டுகிறது. சிறந்த ஓவியரால்கூட தீட்ட முடியாத வண்ணங்கள் அதில் உள்ளன. வேறு எந்த கிரகத்திற்கும் இல்லாத அழகும், அதிசயமும் சனிக்கிரகத்திற்கு மட்டும்தான் உண்டு.

இனி சனியன் என யாரும் திட்டினால் அதற்குக் கோபமோ, வருத்தப்படவோ வேண்டியதில்லை. சனியைப் பற்றிய முழு உண்மைத் தெரிந்தவர்கள் சனியன் என்றால் மிகவும் மகிழ்ச்சியடையலாம்.

– அன்பு தனசேகர் ( kuanbu@gmail.com இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்  www.nakkeran.com


குரு – சீடன்

அண்டவெளியைச் சுற்றும் அமெரிக்கன்! நவக்கிரகங்களைச் சுற்றும் தமிழன்!

திருமகள்

குரு –  வா உன்னைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்!

சீடன் –  மன்னிக்க வேண்டும் குருவே! ஒரே வேலைப் பளு! மரம் சும்மா இருந்தாலும் காற்று அதனை விடுவதாக இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை திட்டுவதற்கு என்றே ஒரு கூட்டம் தாயகத்திலும் புலத்திலும் அலையோ அலை என அலைகிறது.   போன வார ஈழநாடு  ஏட்டைப் (டிசெம்பர் 16) படித்திருந்தால் நான் சொல்வது புரியும்.

குரு – குக்கல்கள் எப்போதும் குரைத்துக் கொண்டுதான் இருக்கும். அதற்காக நாம் திருப்பிக் குரைக்க முடியுமா?

சீடன் – ஓம் குருவே! ஆனால் சில குக்கல்கள் கடிக்கவும் வருகின்றன. அதனால் அவ்வப்போது கல் எடுத்து எறிய வேண்டியுள்ளது!

குரு – ஏதோ சனிப்பெயர்ச்சியாமே?  அது என்ன சனிப் பெயர்ச்சி? சனிபகவான் மூட்டை முடிச்சோடு வேறு வீட்டுக்கு இடம் மாறிவிட்டாரா?

சீடன் –  சனி ‘பகவான்’ கிடையாது. அது சோதிடர்கள், பூசாரிகள் போன்றவர்களால் கட்டவுழ்த்து விடப்பட்டுள்ள புலுடா. மனிதர்களைப் பயமுறுத்தி அவர்களது பைக்குள் இருக்கும் பணத்தைப் புடுங்கச் செய்யப்பட்டுள்ள தந்திரம்.  சனிக்கோள்  அது ஏனைய கோள்கள் போலவே   127 கோடி கிமீ (798.30 கோடி மைல்)  தொலைவில் ஞாயிறைச் சுற்றிவருகிறது.  மேலதிக புள்ளிவிபரங்களைச் சொல்கிறேன் கேளுங்கள்:

                                                  சூரிய குடும்பத்தில் சனி 

பூமியிலிருந்து தூரம்127 கோடி கி.மீ
சூரியனிலிருந்து தூரம்142 கோடி கி.மீ
சுற்றளவு1,21,000 கி.மீ (பூமியைப் போல் 9 மடங்கு)
சுற்றிக்கொள்ளும் நேரம்10½ மணி (பூமி 24 மணி)
சூரியனை சுற்றி வர காலம்30 ஆண்டுகள் (பூமி ஒரு ஆண்டு)
அடர்த்திதண்ணீரை விட குறைவு (தண்ணீரில் மிதக்கும்)
துணைக்கோள்கள்31 (பூமிக்கு ஒரே ஒரு சந்திரன் மட்டும்)
சூரியனில் இருந்து உள்ள இடம்6 (பூமி 3 ஆவது இடம்)
சூரியனில் இருந்து உள்ள இடம்6 (பூமி 3 ஆவது இடம்)
வடிவம்இரண்டாவது பெரிய கிரகம் (பூமியைவிட 1000 மடங்கு பெரியது)
தன்மைபெரும்பகுதி காற்றால் ஆனது (பூமி- நிலம், நீர், காற்றால் ஆகிய மூன்றால் ஆனது)
சனிக்கோளில் இருந்து வரும் ஒளி பூமியை வந்தடைய எடுத்துக் கொள்ளும் நேரம்1 மணி 28 நிமிடம் (விநாடிக்கு 3,30,000 கி.மீ வேகம்)

குரு – சனிப் பெயர்ச்சி என்றால் என்னவென்று சொல்லவில்லையே?

சீடன்சொல்கிறேன் கேளுங்கள். பொதுவாக சோதிடத்தில் குருப் பெயர்ச்சியும் (வியாழன்)  சனிப் பெயர்ச்சியுமே மிகவும் பிரபலமானதாகவும் முக்கியமானதாகவும் கருதப்படுகிறது. சனி, குரு மட்டுமல்லாமல் எல்லாக் கோள்களுக்கும் பெயர்ச்சி இருக்கிறது.  ஒவ்வொரு கோளும் வெவ்வேறு தொலைவில் வெவ்வேறு வேகத்தில் ஞாயிறைச்  சுற்றி வருகின்றன.  கோள்கள் ஓர்  இராசியில் இருந்து இன்னொரு இராசிக்கு இடம் பெயர  எடுத்துக்கொள்ளும் காலம் பின்வருமாறு.

மொத்தம் உள்ள 12  இராசிகளில்  கோள்கள் இடம் பெயர எடுத்துக் கொள்ளும் காலம்
கோள்களின் பெயர் சூரியனை சுற்றிவரும் காலம் இடம் பெயரும் காலம்
சந்திரன்27 நாட்கள்2 ¼ நாள்
ராகு, கேது18 ஆண்டுகள்1 ½  ஆண்டுகள்
குரு (வியாழன்)12 ஆண்டுகள்ஓர் ஆண்டு
செவ்வாய்18 மாதங்கள்1 ½ மாதம்
சுக்கிரன், புதன் ஒரு மாதம்
ஞாயிறுஒரு மாதம்

சனிக் கோள் ஞாயிறைச் சுற்றிவர 30 ஆண்டுகள் ஆகும். 12 இராசிகள் உள்ள ஞாயிறுவீதியில் சனி ஒவ்வொரு இராசியிலும் சுமார் 2½ ஆண்டுகள் காணப்படும். இதனைத்தான் அந்த இராசியில் பிறந்தவர்களைச் சனி பிடித்துள்ளதாகக் கூறுகிறார்கள். 2½ ஆண்டுகள் கழித்து சனி அந்த இராசியில் இருந்து விலகி அடுத்த இராசிக்கு இடம் பெயரும்.  பன்னிரண்டு இராசிகள் இருப்பது போல் ஒவ்வொன்றும் 30 பாகை கொண்ட 12 வீடுகளும் இருக்கின்றன. இந்த இடப்பெயரைத்தான் சனிப் பெயர்ச்சி என்று கூறுகிறார்கள்.

குரு – அப்படியா?  ஏழரை நாட்டுச் சனி என்றால் என்ன?  சனியைக் கண்டு ஏன் மக்கள் பயப்படுகிறார்கள்?

சீடன் – ஏழரை நாட்டுச் சனி என்பது சனிக் கோளானது ஒரு இராசிக்கும் அந்த இராசியின் முன் வீடு இராசியின் அடுத்த வீடு ஆகிய மூன்றிலும் உள்ளதைக் குறிக்கும். சனிக் கோளானது ஒரு இராசியில் இருந்து அடுத்த இராசிக்கு செல்வதற்கு 2½ ஆண்டுகள் ஆகும் என்பதை முன்னரே சொல்லிவிட்டேன். இராசிக்கு முன் இராசியில் 2½ ஆண்டுகள், பிறந்த இராசியில் 2½ ஆண்டுகள், அடுத்த இராசியில் 2½ ஆண்டுகள் ஆக 7½ ஆண்டுகளைத்தான் ஏழரை நாட்டுச் சனி என்பர். உதாரணமாக தற்போது சனி கன்னி இராசியில் இருந்து துலாம் இராசிக்கு இடம் பெயர உள்ளது. அடுத்து 2½ ஆண்டுகள் கழித்து விருச்சிக இராசிக்கு செல்லவிருக்கிறது. சோதிடத்தின்படி துலாம் இராசிக்காரருக்கு 2½ ஆண்டுகளுக்கு முன்னரே ஏழரைச் சனி  தொடங்கி விட்டது இன்னும் 5 ஆண்டுகள் கழித்தே அவரை அது விடும். ஒருவரின் 30 ஆண்டுகால வாழ்க்கையில் ஏழரை ஆண்டுகள் சனியின் தொல்லைக்கு ஆளாகவேண்டும் என்பது ஒவ்வொருவரின் விதி என்று சோதிடம் பயமுறுத்துகிறது.

குரு – ஆக இந்த ஏழரைச் சனி, அட்டமத்துச் சனி, பொங்கு சனி என்பவற்றுக்கு  அறிவியல் அடிப்படை கிடையாது என்கிறாய்?

சீடன் – சரியாகச் சொன்னீர்கள் குருவே.  சனிக் கோள்  ஒரு சடப்பொருள். அங்கு மனிதன் வாழ்வதற்கு வேண்டிய உயிர்க்காற்று இல்லை.  சனிக் கோள் வெகு தொலைவில் இருக்கிறது. அதனால் அது மனிதனது கண்களுக்கு மங்கலாகத் தெரிகிறது.  சனிக் கோளே பண்டைக் கால மக்கள் கண்ணால் பார்க்கக் கூடிய கடைசித் தொலைக் கோளாகும். இதை  வைத்துக் கொண்டு சனியின் நிறம் கறுப்பு, அதன் வாகனம் காகம் என்றெல்லாம் புராணிகர்கள் கதை கட்டிவிட்டார்கள்.

உண்மையில் சனிக் கோளின் வளையமானது அதற்கு அழகைக் கூட்டுகிறது. சிறந்த ஓவியரால் கூடத் தீட்ட முடியாத வண்ணங்கள் அதில் உள்ளன. வேறு எந்த கோளுக்கும் இல்லாத அழகும் அதிசயமும் சனிக் கோளுக்கு மட்டும்தான் உண்டு.

சனிக் கோள் மட்டுமல்ல வேறு எந்தக் கோளிலும் மனிதன் வாழ்வதற்கு வேண்டிய உயிர்க்காற்று, தண்ணீர் இல்லை. கோள்களுக்கும் மனிதனுக்கும் தொடர்பே இல்லை. அப்படியிருக்க இந்த 21 நூற்றாண்டிலும் சனி கெட்ட கோள் (நீச கிரகம்) சனி பகவான் பொல்லாதவன், அவன் கோபத்தைத் தணிக்க எண்ணெய் தேய்த்து முழுக வேண்டும் கோயிலுக்குச் சென்று எள்ளெண்ணை எரிக்க வேண்டும் விரதம் இருக்க வேண்டும் பூசை, அருச்சனை செய்ய வேண்டும் என்று படியாத பாமர மக்கள் மட்டுமின்றி படித்த முட்டாள்களும் நம்புகிறார்கள்.  மனிதர்களின் பயத்தை தமது தொழிலுக்கு  மூலதனமாக்கி சோதிடர்களும் கோயில் பூசாரிகளும் மக்களைச் சுரண்டி வாழ்கிறார்கள்.

குரு –  முதலாம் உலக நாடுகளில் ஒன்றான கனடாவில் கூட இந்தச் சனிப் பெயர்ச்சி என்றால் பக்தர்கள் கோயில்களுக்குப் படையெடுக்கிறார்களே?

சீடன் –  நாய்க்கு நடுக்கடல் என்றாலும் நக்குத் தண்ணீர்தான். தமிழன் செவ்வாய்க் கோளுக்குக் குடியேறினாலும்  மூடநம்பிக்கையைக் கைவிட மாட்டான். எந்தக் கோளுக்கும் சொந்தமாக ஓளி இல்லை. ஞாயிறில் இருந்துதான் ஒளியை கடன்வாங்கிக் கொள்கின்றன.  ஞாயிறின் ஈர்ப்பு விசையின்படியே இக்கோள்கள் அதனைச் சுற்றிவருகின்றன. இக் கோள்கள் புவியில் இருந்து கோடிக்கணக்கான கிமீ  தொலைவில் இருப்பதால் அவற்றின் ஈர்ப்பு விசையும் புவியை எட்டவே எட்டாது. ஆனால் சோதிடத்தில் பேராற்றல் உள்ள சூரியனும்  செத்துப்போன எரிமலையும் வறண்டு போன ஆறுகளும் கடுங்குளிரும் கொண்ட மற்ற கோள்களும் ஆற்றல் உள்ளவை போல் சித்திரிக்கப்பட்டுள்ளது வேடிக்கையான ஒன்று.  இந்த ‘நவக்கிரகங்களில்”  வெள்ளி, புதன், செவ்வாய், வியாழன், சனி ஆகியவையே கோள்களாகும். நிலா கோள் அல்ல. அது ஒரு துணைக் கோள். இராகு கேது நிழல் கோள்கள். ஞாயிறு ஒரு விண்மீன் (நட்சத்திரம்).

குரு – பன்னிரண்டு இராசிகள்?

சீடன் – இராசிகளும் கற்பனைதான்.  இராசிகள் பத்து,  நூறு ஆயிரம் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் காணப்படும் விண்மீன் கூட்டங்கள் (Constellations)  ஆகும். அவற்றைத் தொடுத்து வரும் உருவங்களுக்குக் கிடா (மேஷம்)  காளைமாடு ( ரிஷபம்) மிதுனம் (இரட்டையர்)  நண்டு (கடகம்) சிங்கம் (சிம்மம்) கன்னி,  துலாக்கோல் (துலாம்)  தேள் (விருச்சிகம்)  வில் (தனுசு)   மகரம் (பாதிமீன் பாதி மனிதன்)  கும்பம் (குடம்)   இரட்டை மீன்கள் (மீனம்)  எனப் பெயர் இட்டுள்ளார்கள். அதன் பின்னர் எந்த விதிக்கட்டுப்பாடுமின்றி அந்த உருவத்துக்குரிய குணாம்சங்களை அந்த இராசியில் பிறந்தவர்களுக்கு மாடேற்றி விட்டார்கள். எடுத்துக்காட்டாக சிங்க இராசியில் பிறந்த ஒரு பெண் சிங்கம் போல மூர்க்க குணம் படைத்தவளாக இருப்பாள்!

குரு – அப்ப இந்த இராசி பலன்கள்?

சீடன் – அத்திவாரம் பிழை என்றால் கட்டுமானம் எப்படிச் சரியாக இருக்கும்?  இராசிகளே கற்பனை என்னும் போது அதற்கான பலன் எப்படிச் சரியாக இருக்க முடியும்?

சாதகம்

மீனம்

 

12

 மேஷம்

 

1

ரிஷபம்

 

2

மிதுனம்

 

3

கும்பம்

 

11

சோதிடர்களின் சாதகம்

கடகம்

 

4

மகரம்

 

10

சிம்மம்

 

5

தனுசு

 

9

விருச்சிகம்

 

8

துலாம்

 

7

கன்னி

 

6

குரு – தேசியத்தின் உத்தியோக பூர்வ வார ஏடு என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் ஏடும் இராசி பலன் போடுகிறதே?

சீடன் –  அதுதான் சோகம் குருவே!   இப்ப ஒருபடி மேலே போய் சோதிட விளம்பரங்களையும் அது வெளியிடத் தொடங்கியுள்ளது. பணம் என்றால் பிணமும் வாய்திறக்கும்!  உலநாடுகளின்  மக்கள் தொகை கடந்த சென்ற ஒக்தோபர் 31 ஆம் நாள்  700 கோடியை எட்டியதாக  அய்யன்னா அவை அறிவித்துள்ளது.  இந்த 700 கோடியும் 12 இராசிக்குள்தான் வரும்.  அப்படி என்றால் ஒரு இராசியில்  கிட்டத்தட்ட 60 கோடி பேர் உள்ளனர். இவர்கள் எல்லோரது பலனும் ஒன்றுபோல் இருக்க முடியுமா?

குரு – சோதிடம் பற்றிய விளம்பரங்களைப் போடுவதில்லை என்ற கோட்பாடுடன் தொடக்கம் தொட்டு இன்றுவரை கடைப்பிடித்து வரும் தமிழ்த் தொலைக் காட்சி, கனடிய தமிழ் வானொலி, கனடிய தமிழ் பண்பலை வானொலி ஆகியவற்றைப் போற்ற வேண்டும் என்கிறாய்?

சீடன் – ஆமாம் குருவே!  தமிழர்கள் அறிவியல் மனப்பான்மையோடு (Scientific temperament)  வாழ வேண்டும். அமெரிக்கா சனி, செவ்வாய் போன்ற கோள்களுக்கு றோவர் கருவியுடனான விண் கலங்களைத் தொடர்ச்சியாக  ஏவி ஆய்வு நடத்துகிறது.    கடந்த நொவெம்பர் 25 இல் நாசா அனுப்பிய றோவர் (ஒரு கார் அளவு) செவ்வாயில் திரவ வடிவிலான தண்ணீர் உள்ளதா? மனிதர்கள் வாழும் சூழ்நிலை இருக்கிறதா? எவ்வளவு காலம் வரை மனிதர்கள் வாழ முடியும்? என்பது போன்ற ஆராய்ச்சியை மேற்கொள்ளும்.   செவ்வாய்க்  கோளில்  தரை இறங்கி ஆராய்ச்சி செய்ய உள்ள இந்த ரோவர் கருவியில் ரோபாட் கைகள் உள்ளன. 10 கருவிகள் இருக்கின்றன. மலைப்பாங்கான பகுதியில் கூட 154 கிமீ அளவுக்கு விசாலமாகப் பயணம் செய்யக் கூடியது. மேலும், தரை தளத்தில் இருந்து சுமார் 5 கிமீ உயரம் வரை மேலெழும்பும் ஆற்றல்  கொண்டது. அணுசக்தியால் இயங்கக் கூடியது. விண்வெளியில் 9 மாத காலம் பயணம் செய்து செவ்வாய்க் கோளை அது சென்றடையும். இந்தத் திட்டத்துக்காக ரூ.12,500 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. 2016 இல் செவ்வாய்க் கோளில் மனிதனை இறக்க நாசா திட்டமிட்டுள்ளது.

குரு – அமெரிக்கா அறிவியலில் கொடி கட்டிப் பறப்பதால்தான் அது ஒரு பெரிய வல்லராசாக வலம் வருகிறது.  அறிவுதான் பலம்    (Knowledge is power)  என்று சும்மாவா சொல்கிறார்கள்?

சீடன் – இதில் என்ன அய்யம் குருவே!   அமெரிக்கன் அண்ட வெளியைச் சுற்றுகிறான். தமிழன் கோயில்களில் உள்ள நவக்கிரகங்களைச் சுற்றுகிறான். இரண்டு பேருக்கும் இடையில் உள்ள வேற்றுமை இதுதான்!


பிரபஞ்சத்தில் சூரியக் குடும்பம் – மு.பாண்டியன் நெடுஞ்செழியன்

அம்மாவின் புடவையை மடிக்க முடியாது! அப்பாவின் சில்லரையை எண்ண முடியாது? என்ற விடுகதைக்கு _ வானத்தையும், நட்சத்திரங்களையும் பதிலாக குறிப்பிடுவார்கள்! அந்த விடுகதையையே பொய்யாக்கி விட்டனர் நமது விண்ணியல், இயற்பியல் விஞ்ஞானிகள். பிரபஞ்சத்திலுள்ள மொத்த நட்சத்திரங்களின் எண்ணிக்கை 1019 (லட்சம் கோடி கோடி) என்று கண்டறிந்துள்ளனர்.

நெபுலாக் கொள்கையின்படி ஒட்டு மொத்த பிரபஞ்சம் தோன்றி சுமார் 1500 கோடி ஆண்டுகள் _ பூமி உள்ளிட்ட சூரியக்குடும்பம் தோன்றி சுமார் 500 கோடி ஆண்டுகள் ஆகின்றன _ என்ற உண்மையும் கண்டறியப்பட்டுள்ளன.

கற்பனைக்கும் எட்டாத அளவில் பரந்து  விரிந்திருக்கும் பிரபஞ்சத்தின் எல்லை சுமார் 1000 கோடி ஒளி ஆண்டுகள் தூரம்! அதாவது நொடிக்கு 3 லட்சம் கி.மீ. பயணம் செய்யும் வெளிச்சம் ஒரு ஆண்டு முழுவதும் பயணம் செய்தால் அடையும் தூரம் ஒரு ஒளி ஆண்டு _ அதைப் போல 1000 கோடி ஒளி ஆண்டு _ அதாவது 100 கோடி கோடி கோடி கி.மீ. தூரம்! அதுதான் பிரபஞ்சத்தின் எல்லை! _ அதாவது _ பூமி முதன்முதலாக தோன்றியபோது பிரபஞ்சத்தின் ஒரு மூலையிலிருந்து புறப்பட்ட வெளிச்சம் நொடிக்கு 3 லட்சம் கி.மீ. பயணம் செய்தும் _ இன்னும் நம்மை வந்தடையவில்லை! என்னே விந்தையிது!

பூமியைச் சுற்றி காற்று மண்டலம் வியாபித்திருப்பதால் பகலில் நாம் வெளிச்சத்தைப் பார்க்கிறோம்! விண்வெளியில்? -_ எங்கும் இருட்டு _ கும்மிருட்டு _ இரவும் பகலும் _ எப்போதும்!

இந்தப் பிரபஞ்சத்தில் ஏராளமான பேரண்டங்கள் (Universe) – கோடிக்கணக்கான அண்டங்கள் (Galaxy) – அதில் ஒரு அண்டம்தான் _ நமது சூரியக் குடும்பத்தையும், சூரியன் போன்ற பல கோடி நட்சத்திரங்களையும் உள்ளடக்கிய பால்வெளி மண்டலம் (Milky way galaxy)! ஒரு பூரிக்கட்டையைப் போன்ற (Spiral galaxy) தோற்றம் கொண்ட நமது பால்வெளி மண்டலத்தின் ஒரு ஓரத்தில் நமது சூரியக் குடும்பம்!

Image result for galaxy

நமது கோள்களுக்கு துணைக்கோள்கள் _ பூமிக்கு நிலவுபோல _ பால்வெளி மண்டலத்திற்கும் துணை அண்டங்கள் இருக்கின்றன _ பெரிய மெகல்லன் வான்முகில், சிறிய மெகல்லன் வான்முகில் என்பவைதான் அவை! பால்வெளி மண்டலத்தின் ஒட்டுமொத்த விட்டம் மட்டும் ஒரு லட்சம் ஒளி ஆண்டுகள் தூரம்! பால்வெளி மண்டலத்தின் மய்யப் பகுதிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூரம் மட்டும் சுமார் 32 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தூரம்! நமக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம் 15 கோடி கி.மீ. அதாவது சூரியனிடமிருந்து புறப்படும் வெளிச்சம் நம்மை வந்தடைய சுமார் 8 மணித்துளிகள் எடுத்துக்கொள்கிறது. நமது சூரியக் குடும்பத்தில் ஒரே நட்சத்திரம் சூரியன் _ அது 15 கோடிக் கி.மீ. தூரத்தில்!

நமது சூரியக் குடும்பத்துக்கு மிக மிக அருகில் இருக்கும் அடுத்த நட்சத்திரம் ஆல்பா சென்டாரி. அதற்கும் நமக்கும் உள்ள தூரம் 4.3 ஒளி ஆண்டுகள்! அதாவது 43 லட்சம் கோடி கிமீ! நமது சூரியக் குடும்பத்திற்கு அடுத்த நட்சத்திரமே 43 லட்சம் கோடி கி.மீ. தூரத்தில்! ஒவ்வொரு நட்சத்திரமும் எவ்வளவு தூர இடைவெளியில் வியாபித்து இருக்கின்றன என்பதை எண்ணிப் பாருங்கள்!

எல்லாம் சரி _ நமது பூமி ஒரு நொடிக்கு 0.5 கி.மீ. வேகத்தில் தன்னைத்தானே சுற்றுகிறது! நொடிக்கு 30 கி.மீ. வேகத்தில் சூரியனைச் சுற்றுகிறது! சூரியன் பால்வெளி மண்டலத்தைச் சுற்றுகிறதா? சுற்றுகிறது _ நொடிக்கு 220 கி.மீ. வேகத்தில்! பால்வெளி மண்டலம் (Galaxy) பிரபஞ்சத்தைச் சுற்றுகிறது _ நொடிக்கு 600 கி.மீ. வேகத்தில்! கூட்டிக் கழித்துக் கணக்குப் போட்டால் _ இந்த உலகத்தில் வாழும் உயிரினங்கள் _ மனிதன் உட்பட வெறுமனே உட்கார்ந்து கொண்டும் உறங்கிக் கொண்டிருந்தாலும் கூட _ ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் சுமார் 2 ஆயிரம் கோடி கி.மீ. பயணம் செய்கிறோம்! புதிராக இல்லை? ஆனால் இதுதான் பிரபஞ்ச உண்மை! அதேபோல் சூரியன் தன் குஞ்சுகுளுவான்களுடன் _ குடும்பத்துடன் தன் தாய்வீடான பால்வெளி மண்டலத்தை ஒருமுறை சுற்றிவர 25 கோடி ஆண்டுகளை எடுத்துக் கொள்கிறது! அதை ஒரு காஸ்மிக் ஆண்டு (Cosmic Year) என்பார்கள்! சூரியன் தோன்றி இதுவரை தன் தாய் வீட்டை 20 முறைதான் வலம் வந்திருக்கிறது _ அதுபோல இன்னும் 20 முறைதான் வலம் வரும் _ தன் வாழ்நாளில்.

பரிணாம வளர்ச்சி என்பது உலகிலுள்ள உயிர்களுக்குத்தான் உண்டு சூரியனுக்கு உண்டா? ஆம்! சூரியனுக்கும் பரிணாம வளர்ச்சி உண்டு _ சுமார் 5000 கோடி ஆண்டுகளுக்கு முன்பாகவே சூரியன் கருக் கொண்டது! அது சுருங்கிச் சுருங்கி தற்போதைய நிலைக்கு வந்தது 500 கோடி ஆண்டுகளுக்கு முன்னர்தான்! அதையே சூரியன் வயதாக நாம் கணக்கிலெடுத்துக் கொள்கிறோம்.

பிரபஞ்சத்திலுள்ள லட்சம் கோடி கோடி நட்சத்திரங்களில் _ ஒரேயொரு நட்சத்திரமான சூரியனில்  13 லட்சம் பூமிகளை உள்ளடக்கி விடலாம்! என்னே பிரபஞ்சத்தின விஸ்தீரணம்! நினைக்கவே மலைப்பாக இல்லை?

சூரியக் குடும்பத்தின் நிறையில் 99%  சூரியன் எடை  மற்ற 1% தான் பூமி உள்ளிட்ட மற்ற கோள்கள்  இத்யாதிகளின் எடை! சூரியனின் எடை  2 பக்கத்தில் 30 சுழிபோட்டால் எத்தனை எண் வருமோ  அத்தனை கிலோ எடை! பிரமிப்பாக இல்லை?

பிரபஞ்சத்திலுள்ள அனைத்துப் பொருட்களும் கம்பிச்சுருள் போன்ற வடிவில் சுழன்று சுழன்றே நகர்ந்து கொண்டிருக்கின்றன. நமது சூரியக் குடும்பமும், சூரியனும் அதற்கு விதிவிலக்கல்ல! நாம் இருசக்கர வண்டியோட்ட  8 போட்டால்தான் உரிமம் கிடைக்கும். அதுபோல சூரியனும் நகர்கிறபோது ஓர் ஆண்டில் 8 போடுகிறது! நமக்கும் சூரியனுக்கும் எத்தனை ஒற்றுமை பாருங்கள்!

இப்போது நாம் அவ்வப்போது காணுகின்ற சூரிய கிரகணம் _ அதாவது நிலவின் நிழல் சூரியனை மறைப்பது _ இன்னும் 60 கோடி ஆண்டுகளுக்குப்பின் நிகழவே நிகழாது! ஏனென்றால் நம்மைவிட்டு ஒவ்வொரு வருடமும் 3.8 செ.மீ. தூரம் விலகிச் சென்று கொண்டிருக்கும் நிலவுக்கும் நமக்கும் உள்ள இடைவெளி 60 கோடி ஆண்டுகளில் 25 ஆயிரம் கி.மீ. அதிகமாகி விட்டிருக்கும்!

அதேபோல இந்த நூற்றாண்டின் மிக நீண்ட முழு சூரிய கிரகணம் 2009ஆம் ஆண்டு ஜுலை 22ஆம் நாள் நிகழ்ந்தது _ சுமார் 7 மணித்துளிகள் சூரியன் மறைக்கப்பட்டது! இதைப் போன்ற முழு சூரிய கிரகணத்தை இன்னும் 100 ஆண்டுகள் கழித்து கி.பி.2114 இல்தான் மீண்டும் காணமுடியும்!

சூரியன் தோன்றி இந்த 500 கோடி ஆண்டுக் காலத்தில் அது வெளிப்படுத்திய ஆற்றலைக் கணக்கிட்டால் _ அது எப்போதோ தீர்ந்து போயிருக்க வேண்டும் _ ஆனால் உண்மை என்ன? சூரியன் ஒரு கிராம் நிறையை இழந்தால் _ அது 9 இலட்சம் மடங்கு பெருக்கி ஆற்றலாக வெளிப்படுகிறது. இதைத்தான் அறிஞர் அய்ன்ஸ்டீன் _E=MC2[E=Energy, M=Mass, C=Velocity of light] என்று கண்டறிந்தார்.

அதேபோல _ நமக்குத் தெரிந்து 3 பரிமாணங்கள்தான் (3D) – நீளம், அகலம், உயரம் _ நான்காம் பரிமாணமான விண்வெளி நேரம் (Space time) என்பதைக் கண்டறிந்து சொன்னவரும் அய்ன்ஸ்டீன்தான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சூரியனின் மய்யப் பகுதியின் (Core) வெப்ப நிலை 15 கோடி செல்சியஸ் _ சூரியனின் வளிமண்டலத்தின் வெளிப்புற வெப்பநிலை 6000ஷீ நீ! அதேபோல _ சூரியனிடமிருந்து வெளிப்படும் புறஊதாக் கதிர்கள்தான் உயிர்களை உண்டாக்கும் அடிப்படைப் பொருளான அமினோ அமிலத்தை உண்டாக்குகின்றன _ அதுதான் உலகத்தில் உயிர்கள் தோற்றத்துக்கான அடிப்படை!

8 கோள்கள்_88 துணைக்கோள்கள் _ கோடிக்கணக்கான ஆஸ்டிராய்ட்கள் _ எண்ணிலடங்கா வால் நட்சத்திரங்கள் _ இவையெல்லாம் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன! சூரியக் குடும்பத்தின் விட்டம் மட்டும் சுமார் 15 லட்சம் கோடி கி.மீ.! பூமியின் விட்டம் சுமார் 40 ஆயிரம் கி.மீ.!

அதேபோல நிலவின் விட்டம் சுமார் 3500 கி.மீ. _ அதாவது முழு நிலவின் விட்டத்தில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை உள்ள தூரத்தை நாம் வெறுங் கண்ணால் பார்க்கிறோம்!

இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் ஒரு ஹீலியம் மூலக்கூறாக மாறுகின்ற அணுச்சேர்க்கைதான் (Nuclear fusion) சூரியனின் ஆற்றலுக்கு அடிப்படை! ஹைட்ரஜன் அணுகுண்டின் அடிப்படையும் அதுதான்!

பூமியிலுள்ள சக்திக்கெல்லாம் மூல சக்தி சூரியன்தான்!

அதனால் அதைக் கடவுளாக வழிபடலாமா? தேவையில்லை _ ஏனென்றால் _ அது ஒரு அணு உலை அடுப்பு அவ்வளவுதான்.

ஹைட்ரஜன் 71 சதமும் _ ஹீலியம் 27 சதமும் _ மற்ற தனிம வாயுக்கள் 2 சதமும் கொண்ட அணு உலை அடுப்பான சூரியனும் ஒரு நாள் இறந்து போகும்! கவலைப்பட வேண்டாம்! அது நடக்க இன்னும் 500 கோடி ஆண்டுகள் ஆகும்! அப்போதைக்கு சூரியனின் பெயர் சிவப்பு அரக்கன் (RedGiant) என்று விஞ்ஞானிகள் நாமகரணம் சூட்டியிருக்கிறார்கள்! சிவப்பு அரக்கனான சூரியனின் இறுதிப் பயணத்தில் _ பூமிப்பந்தும் இன்ன பிற கோள்களும் என்னவாகும்? வெப்பமும் ஈர்ப்பும் குறைந்து போன சிவப்பு அரக்கனின் பிடியிலிருந்து பூமிப்பந்து கழன்று ஓடி தப்பித்துக்கொள்ளும்! மனிதர்களாகிய நம் கதி என்னவாகும்? அந்தக் காலம் _ காலச்சக்கரத்தின் அந்திமக்காலம் வருவதற்குள் நம்மை _ வேற்றுக் கிரகவாசிகளாக நம்முடைய விஞ்ஞானத்தின் அசுரவேகம் மாற்றிவிட்டிருக்கும்! _ சிவப்பு அரக்கனாக சுருங்கிப்போன சூரியன் வெண்குள்ளர் (White Dwarf) என்ற நிலையை அடைந்துவிட்டிருக்கும்!

இந்த ஆராய்ச்சிக்குத்தான் _ நமது தமிழகத்தைச் சேர்ந்த, அமெரிக்காவில் வாழ்ந்து மறைந்த விஞ்ஞான மேதை சந்திரசேகர் _ நோபல் பரிசைப் பெற்றார்! நட்சத்திரக் கூட்டங்களின் பிறப்பும் இறப்பும் பற்றி பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்த விண்ணியற்பியல் அறிஞர் சந்திரசேகர் பிரபஞ்சத்தில் கடவுள் நாற்காலி இன்னும் காலியாகவே கிடக்கிறது என்ற உண்மையைச் சொன்னவர் என்பதை நினைவில் வைப்போம்!

அறிந்ததும், அறியாததும் _ புரிந்ததும், புரியாததுமான ஏராளமான புதிர்களை உள்ளடக்கிய _ நாம் வாழும் இந்த பூமியே நமது ஆச்சரியத்தின் எல்லையாக பரந்து கிடக்கிறது.

அவ்வளவு பெரிய பூமியைப்போல _ சுமார் 13 லட்சம் பூமிகளை உள்ளடக்கக்கூடிய அளவிற்கு பெரிய நட்சத்திரம் _ நமது சூரியன்! நமது சூரியன் அடிப்படையில் ஒரு நடுத்தர வகைப்பட்ட _ நட்சத்திரம்! அவ்வளவுதான்! சூரியனைப்போல பெரியதும் சிறியதுமான நட்சத்திரங்கள் சுமார் 1019 (லட்சம் கோடிகோடி) நட்சத்திரங்களை உள்ளடக்கியதுதான் பிரபஞ்சம் (Space)!  என்னே அதன் விஸ்தீரணம்!

இதில் _ கடவுள் எங்கே இருக்கிறார்? கொஞ்சம் யோசித்தாலும் கடவுள் தத்துவம் ஒரு அப்பட்டமான புளுகு மூட்டை _ கட்டுக்கதை என்பது புரிந்துவிடும்!

விஞ்ஞானிகளுக்கும், மேதைகளுக்கும் புலப்படாத கடவுளை _ மூட நம்பிக்கையோடு வழிபடும் அஞ்ஞானிகளை _ பக்தர்களைக் கண்டு எள்ளி நகையாடுவதைத் தவிர நமக்கு வேறு வழி தெரியவில்லை.

கடவுள் இல்லை! கடவுள் இல்லை!! கடவுள் இல்லவே இல்லை!!!

என்று உண்மையை உரத்து முழங்கிய சமுதாய விஞ்ஞானி தந்தை பெரியாரின் தத்துவம் இந்த பூமிக்கான தத்துவம் மட்டுமல்ல – பிரபஞ்சத்துக்கான தத்துவம்!


About editor 3046 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply