ஐந்து நட்சத்திர ஹோட்டலை மிஞ்சும் ராம் ரஹீமின் ரகசிய அறைவெளியானது வீடியோ!
Thursday, August 31, 2017,
பாலியல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்றுள்ள பாபா குர்மீத் ராம் ரஹீமின் உட்புற அறைக் காட்சிகளை சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.
தேரா சச்சா அமைப்பின் தலைவராக 23 வயதில் பொறுப்பேற்றவர் பாபா குர்மீத் ராம் ரஹீம். தனது ஆசிரமத்தில் பெண்களை புனிதப்படுத்துவதாகக் கூறி அவர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 2 பெண் பக்தர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் நடைபெற்ற வழக்கில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதன்படி பாலியல் வழக்கில் பாபா குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு ரோத்தக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குர்மீத் ராம் ரஹீமை சிறையில் அடைத்ததால் அவருடைய பக்தர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பாபா குர்மீத் ராம்ரஹீமின் ஆசிரமத்தில் போலீசார் நுழைந்துள்ளனர். இதில் ஹரியானாவில் உள்ள ராம்ரஹீமின் அறைக்குள் போலீசார் சோதனையிடும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
பாகுபலி செட் போல மிக பிரம்மாண்டமாக இருக்கும் அந்த அறையில் இருக்கும் காட்சிகள் கண்களை அகல விரிய வைக்கின்றன.
அரண்மனை போன்ற அமைப்பு
ராஜசிம்மாசனம் போன்ற இருக்கைகள், அரண்மனைகளில் இருப்பது போன்ற டைனிங் டேபிள்கள் என மினி அரண்மனையாகவே இருக்கிறது அந்த அறை. இதையெல்லாம் தாண்டி உள்ளே படுக்கையறையை சென்று பார்த்தால் அங்கு போடப்பட்டிருக்கும் கட்டிலும், மெத்தையுமே ராம் ரஹீமின் சொகுசு வாழ்க்கையை உணர்த்துகின்றன.
வெண்பட்டு நாற்காலி
இவற்றை தாண்டி ஒவ்வொரு அறையாக புகுந்து போலீசார் தாழிடப்பட்டிருக்கும் அறைகளை கால்களால் உதைத்து திறக்கின்றனர். இதில் என்ன பிரமாதம் என்றால் பாபா ராம்தேவ் அமரும் வெண்பட்டு மெத்தையால் ஆன நாற்காலி ஒரு துணி கொண்டு மூடப்பட்டிருக்கிறது.
காவல்துறையினரே வெளியிட்ட காட்சிகள்?
படுக்கையறை மட்டுமே அகன்று விரிந்து சகல வசதிகளுடனும் அமைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல படுக்கையறையிலும் கூட பல்வேறு நாற்காலிகள் போடப்பட்டு இருக்கின்றன. இந்தக் காட்சிகளை காவல்துறையினரே பதிவிட்டு வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.
English summary Gurmit Ram rahim’s luxurios life is now open to people and made clear how he is living happily, police released videos going viral.
VIDEO : Gurmit Ram rahim’s luxurios life-Oneindia Tamil
Read more at: http://tamil.oneindia.com/news/india/gurmit-ram-rahim-s-luxurious-room-viral-videos/articlecontent-pf260433-294480.html
Read more at: http://tamil.oneindia.com/news/india/gurmit-ram-rahim-s-luxurious-room-viral-videos/articlecontent-pf260433-294480.html
Read more at: http://tamil.oneindia.com/news/india/gurmit-ram-rahim-s-luxurious-room-viral-videos/articlecontent-pf260433-294480.html
Leave a Reply
You must be logged in to post a comment.