“சிகப்பு பையை கொண்டு வாங்க”…. இதுதான் ராம் ரஹீம் தப்பிக்க பயன்படுத்திய “கோடு வேர்டாம்”
சன்டிகர்: பாலியல் வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவுடன் போலீஸாரிடம் இருந்து தனது ஆதரவாளர்களுடன் தப்பிக்க ராம் ரஹீம் ரகசிய வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். ஆசிரமத்தில் தங்கிய இரு பெண்களை 3 ஆண்டுகளாக தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் ராம் ரஹீம் சிங் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் கடந்த 25-ஆம் தேதி குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு ரோத்தக்கில் உள்ள சுனாரியா சிறையில் அடைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் ஹரியாணாவில் கலவரத்தை உண்டு செய்தனர். இதில் 38 பேர் பலியாகிவிட்டனர்.
தண்டனை விவரங்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்காக நீதிபதியே சுனாரியா சிறைக்கு சென்று தற்காலிக நீதிமன்றம் அமைத்து கடந்த 28-ஆம் தேதி தீர்ப்பை வாசித்தார். அப்போது தன்னை மன்னித்து விடுமாறு ராம் ரஹீம் கைகூப்பி கெஞ்சி அழுது கதறினார்.
காட்டுமிராண்டி அப்போது நீதிபதி, நீங்கள் மனிதத்தன்மையுடன் நடந்து கொள்ளாமல் காட்டுமிராண்டி போல் நடந்து கொண்டுள்ளீர்கள் என்று கூறி 20 ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்தார். இதனால் நிலைக்குலைந்த ராம் ரஹீம், எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்பதற்காகவே தனக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறினார். இதைத் தொடர்ந்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர் முழு உடற்தகுதியுடன் உள்ளார் என்று சான்றிதழ் வழங்கப்பட்டது.
தண்டனை பெற்றபோது…. சிறையில் அடைக்க சாமியார் கொண்டு செல்லப்பட்டுபோது அவரது ஆதரவாளர்கள் இடையூறு ஏற்படுத்தி தப்பிப்பதற்காக ஒரு ரகசிய வார்த்தையை பயன்படுத்தியதும் தெரியவந்தது. இதுகுறித்து காவல் துறை ஐஜி கே கே ராவ் கூறுகையில், சாமியாரை கைது செய்யப்பட்டபோதே அவர் சிர்சாவில் இருந்து சிகப்பு நிறத்திலான பையை தன்னுடன் கொண்டு வந்தார்.
ஆடைகள் இருக்கு தண்டனை பெற்றபோது தனது வாகனத்தில் உள்ள சிகப்பு பையை கொண்டு வாருங்கள் என கூறினார். அதில் தான் உடுத்தும் ஆடைகள் உள்ளது என்றும் கூறினார். ஆனால் சிகப்பு கொண்டு வாருங்கள் என்பது அவர் தனது ஆதரவாளர்களுக்கு தெரிவித்த ரகிசய சொல்லாகும். இந்த வார்த்தையை அவர் பயன்படுத்தினால் அவரது ஆதரவாளர்கள் அங்கு கலவரத்தில் ஈடுபடும் சமயத்தை தனக்கு சாதமாக்கி தப்பிக்க ராம் ரஹீம் நினைத்திருந்தார்.
நாங்கள் உணர்ந்தோம் அவரது பை வாகனத்தில் இருந்தது. ஆனால் சிறைச் சாலையை சுற்றி 2 முதல் 3 கி.மீ.தூரத்தில் இருந்து கன்னி வெடி வெடித்தது போன்று சப்தம் கேட்டது. இதனால் நாங்கள் உஷாரானோம். சிகப்பு பையை கொண்டு வாருங்கள் என்றால் ஏதோ அசம்பாவிதம் நேர போகிறது என்பதை அர்த்தம் என்பதை புரிந்து கொண்டோம். முதலில் சிகப்பு பையை கொண்டு வாருங்கள் என்பதை அவரது தப்பிப்பதற்கான திட்டம் என்பதை உணர்ந்தோம், இரண்டாவது அவரது ஆதரவாளர்கள் சரியான சமயத்துக்கு காத்திருந்தது, மூன்றாவது 70 வாகனங்களில் ஆள்கள் நின்றிருந்தது ஆகியவற்றை வைத்து புரிந்து கொண்டோம்.
70 முதல் 80 வாகனங்கள் தண்டனை பெற்றவுடன் ராம் ரஹீமை அவர் வந்த வாகனத்தில் அமரவைப்பதை விட எங்களது போலீஸ் வாகனத்தில் அமரவைத்து பாதுகாப்புடன் அழைத்து சென்றோம். சாமியாரின் ஆதரவாளர்கள் 70 முதல் 80 வாகனங்களில் அங்குள்ள தியேட்டர் அருகே இருந்ததையும் நாங்கள் அறிந்தோம். இதனால் கலவரம் ஏதேனும் நடந்தால் ஏராளமான அப்பாவி மக்கள் உயிரிழிக்கக் கூடும் என்பதால் அது நடைபெறாத வண்ணம் மாற்று பாதையில் அவரை அழைத்து சென்றோம். ராம் ரஹீமை எங்கே கொண்டு சென்றோம் என்பதை தெரியாமல் அவரது ஆதரவாளர்கள் விழித்தனர். நீதிமன்ற வளாகத்தில் அவரது வளர்ப்பு மகள் எனக் கூறப்படும் ஹனிபிரீத்தும் நின்றிருந்தார் என்றார். சர்ச்சை சாமியார் ராம் ரஹீம் சிங் யார் தெரியுமா?-வீடியோ
Read more at: http://tamil.oneindia.com/news/india/get-me-the-red-bag-the-code-ram-rahim-used-try-escape/articlecontent-pf260277-294415.html
http://tamil.oneindia.com/news/india/get-me-the-red-bag-the-code-ram-rahim-used-try-escape/articlecontent-pf260278-294415.html?utm_source=spikeD&utm_medium=PR&utm_campaign=adgebra
Leave a Reply
You must be logged in to post a comment.