ஜனாதிபதி, பிரதமர் இருவரும் நான்கு விடயங்களுக்கு பதில் அளிக்க வேண்டும் – இ.சாள்ஸ் நிர்மலநாதன், நா.உ
முல்லைத்தீவு மாவட்டத்தில் திணைக்களங்களின் பணிகள் தொடர்பில் திணைக்களங்களால் பதிலளிக்க முடியாது போன நான்கு விடயங்களை இந்த நாட்டின் ஜனாதிபதியின் முன் மக்களின் சார்பில் முன் வைக்கின்றேன் இதற்கு ஜனாதிபதியாவது பதிலளிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் வேண்டுகோள் விடுத்தார்.
முல்லைத்தீவு மாவட்டம் கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் ஜனாதிபதி செயலக நடமாடும் சேவை நேற்று முன்தினம் பிரதேச செயலகத்தில் இடல்பெற்றது. இதில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,
முல்லைத்தீவு மாவட்டத்தில் திணைக்களங்களின் பணிகள் தொடர்பில் திணைக்களங்களால் பதிலளிக்க முடியாது போன நான்கு விடயங்களை இந்த நாட்டின் ஜனாதிபதியின் முன் மக்களின் சார்பில் முன் வைக்கின்றேன் இதற்கு ஜனாதிபதியாவது பதிலளிக்க வேண்டும். அதாவது இந்த மாவட்ட மக்களிற்கு கடந்த பல ஆண்டுகளாக இழைக்கப்படும் கொடுமைகள் தொடர்பில் நாம் உட்பட பலரும் சுட்டிக்காட்டி வருகின்றோம். ஆனால் அதற்கு எவருமே இன்றுவரையில் பதிலளித்தது கிடையாது. குறிப்பாக உரிய திணைக்களங்களைக் கேட்டால் தெரியாது ஆக கவலைக்குரிய விடயம் மாவட்ட அரச அதிபருக்கும் தெரியாதாம்.
அதனாலே இந்த நாட்டின் தலைவரிடம் மக்கள் பிரதிநிதி என்ற வகையிலே முன்வைக்கின்றேன், தற்போது இடல்பெறும் பிரதேச மட்ட நடமாடும் சேவை நிறைவு பெற்றதும் மாவட்ட மட்டத்திலான நடமாடும் சேவையும் விரைவில் இடம்பெறவுள்ளது. அதில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர். இங்கே பிரதேச மட்டத்தில் தீர்வு எட்டப்படாத விடயங்களே அங்கே கொண்டு செல்லப்படவுள்ளது. அதனால் பிரதேச மட்டத்தில் அல்ல திணைக்கள மட்டத்திலோ அரச அதிபர் மட்டத்திலோ பதிலளிக்காத நான்கு முக்கிய விடயங்களை நான் இங்கே முன்வைக்கின்றேன்.
இவ்வாறு முன்வைக்கப்படும் இந்த 4 முக்கிய விடத்திற்கும் இந்த நடமாடும் சேவையின் தலைவரும் நாட்டின் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனா பதிலளித்தே ஆகவேண்டும். அதற்காக அவற்றினை நான் இப்போதே முன்வைக்கின்றேன் அதாவது இந்த முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு , கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளில் காலம் தாழ்த்தி மீள்குடியேற்றம் செய்யப்பட்ட. கிராமத்தில் இன்றுவரை ஒரு குடும்பத்திற்கேனும் சமுர்த்தி கொடுப்பனவு கிடையாது இதற்குப் பதில் என்ன?. இதேபோன்று 1984ம் ஆண்டு யுத்தம் காரணமாக இடல்பெயர்ந்த தமிழ் மக்களின் காணிகளை அடாத்தாகப் பிடித்து தென்பகுதியினருக்கு வழங்கப்படுகின்றது ஆகவே தமிழ் மக்களின் நிலைதான் என்ன?
முன்றாவது விடயமாக இந்த முல்லைத்தீவு மாவட்டத்திலே தென்பகுதியைச் சேர்ந்த 78 மீனவர்கள் மட்டுமே பதிவில் உள்ளதாக 2012ம் ஆண்டில் அமைச்சர் ராஜித சேனாரட்ன பகிரங்கமாகவே கூறினார் ஆனால. இன்று சுமார் ஆயிரம்பேர் வந்துள்ளனர் அவ்வாறானால் அவர்கள் ஆரின் அனுமதியின் பேரில் எதற் அடிப்படையில் அத்து மீறுகின்றனர். இவை அனைத்திலும் விட பாரிய விடயமாக இன்றுவரை எவருமே பதிலளிக்காத விடயமாக உள்ள கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் எல்லைக்குள் கானப்படும் வனப்பகுதியில் 300 ஏக்கர் காடு இடிக்கப்பட்டது. இது திணைக்களத்திற்கும் தெரியாதாம் அரச அதிபருக்கும் தெரியாது என்கின்றார்.எனவே மக்கள் பிரதிநிகளாகிய நாமும் இது தொடர்பில் வாய்மூடி மௌனிகளாக இருக்க முடியாது.
எனவே குறித்த நான்கு விடயங்கள் தொடர்பிலும் அனைவரும் கைவிரித்த நிலையில் ஜனாதிபதி பதிலளித்தே ஆகவேண்டும் என கோரக்கை விடுக்கின்றேன் என்றார். –
Leave a Reply
You must be logged in to post a comment.