பாலியல் பலாத்கார வழக்கில் ராம் ரஹீம் சிங்கிற்கு 20 வருடம் கடுங்காவல் சிறை:நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பாலியல் பலாத்கார வழக்கில் ராம் ரஹீம் சிங்கிற்கு 20 வருடம் கடுங்காவல் சிறை:நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Monday, August 28, 2017,

‘தேரா சச்சா சவுதா’ என்ற ஆன்மிக அமைப்பு தலைவரான குர்மீத் ராம் ரஹிம் சிங், இரண்டு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த 15 வருடகால வழக்கில் குற்றவாளி என, சிபிஐ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. இதையடுத்து, வன்முறையில் இறங்கினர் ராம் ரஹிம் ஆதரவாளர்கள். இதனிடையே குற்றவாளிக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பதை, நீதிமன்றம் இன்று அறிவித்தது. நீதிபதி முன்னிலையில் சிபிஐ மற்றும் ராம் ரஹிம் தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடியபிறகு அவர்கள் வாதத்தை கருத்தில் கொண்டு நீதிபதி ராம் ரஹீம் மீதான தண்டனையை அறிவிப்பதாக கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, வன்முறையில் இறங்கினர் ராம் ரஹிம் ஆதரவாளர்கள்.

இதனிடையே குற்றவாளிக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பதை, நீதிமன்றம் இன்று அறிவித்தது. நீதிபதி முன்னியில் சிபிஐ மற்றும் ராம் ரஹிம் தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடியபிறகு அவர்கள் வாதத்தை கருத்தில் கொண்டு நீதிபதி ராம் ரஹிம் மீதான தண்டனையை அறிவிப்பதாக கூறப்பட்டிருந்தது.

பாதுகாப்பு காரணங்களுக்காக சிபிஐ நீதிமன்ற நீதிபதியான ஜக்திப் சிங், பஞ்ச்குலா கோர்ட்டில் வாதத்தை நடத்தாமல், ராம் ரஹிம் அடைக்கப்பட்டுள்ள ரோத்தகி மாவட்ட சிறையிலுள்ள நூலகத்தை தற்காலிக நீதிமன்றமாக மாற்ற உத்தரவிட்டார். சாலை மார்க்கமாக வருவது நீதிபதிக்கு பாதுகாப்பு இல்லை என கருதியதால் ஹெலிகாப்டர் மூலம் சிறை வளாகத்திற்கு நீதிபதியும் அவரின் உதவியாளர்களும் வந்தனர். இதையடுத்து இரு தரப்பு வழக்கறிஞர்களையும் தலா 10 நிமிடங்களுக்குள் வாதிடுமாறு நீதிபதி கேட்டுக்கொண்டார். முதலில் வாதத்தை தொடங்கிய சிபிஐ தரப்பு, ராம் ரஹீமுக்கு அதிகபட்ச தண்டனையான ஆயுள் தண்டனை வழங்க கேட்டுக்கொண்டது. அதேநேரம், ராம் ரஹிம் தரப்பு வழக்கறிஞர் கார்க் நர்வானா, தனது கட்சிக்காரர் வயது முதிர்வை கருத்தில் கொண்டு சிறை தண்டனையை குறைக்க வேண்டும் என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, ராம் ரஹீமுக்கு 20வருட கால கடுங்காவல் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

இரண்டு வழக்குகளில் தலா பத்தாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்துகண்ணீர் விட்டு கைகூப்பியும்... அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க நான்கு மாநிலங்களில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் 3 வழக்கு பிரிவுகளுக்காக தலா ரூ.50,000, ரூ.10,000, ரூ.5000 அபராதம் விதித்தார் நீதிபதி. மேலும், மற்ற கைதிகளை போலவே சாதாரணமாக இவரை நடத்த வேண்டும், சிறப்பு சலுகைகள் வழங்க கூடாது என கண்டிப்புடன் கூறினார் நீதிபதி.

Read more at: http://tamil.oneindia.com/news/india/prosecution-demands-maximum-sentence-ram-rahim-294129.html

 

blob:http://tamil.oneindia.com/504af99d-73f8-4ded-879b-ec95f5ad9e3a

 

 

 

 

கண்ணீர் விட்டு கதறியும் கைகூப்பியும் பலனில்லை… ராம் ரஹீமுக்கு 20 ஆண்டுகள் சிறை!

சண்டிகர்: கடந்த 2002-ஆம் ஆண்டு இரு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இறுதி வாதத்தின்போது தன்னை மன்னித்து விடுமாறு ராம் ரஹீம் சிங் கண்ணீர் விட்டு அழுத போதிலும் அது பலனளிக்கவில்லை. ஹரியாணா மாநிலம், சிர்சாவில் தேரா சச்சா சவுதா அமைப்பை தொடங்கியவர் ராம் ரஹீம் சிங். சாமியாரான இவர் கடந்த 2002-ஆம் ஆண்டு இரு பெண் பக்தர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை சிபிஐ நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. வலுவான ஆதாரம்

14 ஆண்டுகள் கழித்து… இந்நிலையில் சம்பவம் நடந்து 14 ஆண்டுகள் கழித்து சாமியார் ராம் ரஹீம் சிங் மீதான பாலியல் புகாரில் அவர் குற்றவாளி என்பதை பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் கடந்த 25-ஆம் தேதி உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். சாமியாரின் தண்டனை விவரங்களை அறிவிக்க சுனாரியா சிறையில் தற்காலிக நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது.

ரோட்டக் சிறையில்… தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஜெகதீப் சிங் ஹெலிகாப்டர் மூலம் ரோட்டக்கில் உள்ள சிறைக்கு சென்றார். அங்கு இரு தரப்பு வாதங்களும் நடந்தன. அப்போது சாமியாருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று சிபிஐ கோரியது.

Read more at: http://tamil.oneindia.com/news/india/ram-rahim-singh-got-10-years-prison-though-apologises-before/articlecontent-pf259712-294133.html


 

சாமியார் ராம் ரஹீம் சிறை செல்ல காரணமான பெண் சீடரின் உருக்கமான கடிதம் இதுதான்..!

டெல்லி: குர்மீத் ராம் ரஹீம் மூலம் பாலியல் தொல்லைக்கு ஆளானது தொடர்பாக அப்போதைய பிரதமர் வாஜ்பாய்க்கு பாதிக்கப்பட்ட பெண் கடிதம் எழுதினார். அந்தக் கடிதம் இப்போது ஊடகங்கள் மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் பலாத்கார வழக்கில் ‘தேரா சச்சா சவுதா’ என்ற மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என்று கடந்த வெள்ளியன்று சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதனால் அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் பயங்கர கலவரம் ஏற்பட்டது.

31 பேர் கொல்லப்பட்டனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். நாடு முழுவதும் குறிப்பாக டெல்லி, பஞ்சாபி, ஹரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.ராம் ரஹீம் பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கியதற்கு அடிப்படையாக இருந்தது, பெண் துறவியின் கடிதம்தான். பெண் துறவி கடந்த 2002-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் வாஜ்பாய்க்கும், அரியானா – பஞ்சாப் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆதர்ஷ் குமாருக்கும் கடிதம் எழுதினார்.

வலுவான ஆதாரம்

தனக்கும், அங்கிருக்கும் பெண் துறவிகளுக்கும் நேர்ந்த பாலியல் கொடூரங்கள் தொடர்பாக அதில் விளக்கமாக எழுதி இருந்தார். இக்கடிதமே வழக்கில் வலுவான ஆதாரமாக இருந்தது. சிபிஐ விசாரணையும் அதனடிப்படையிலேயே நடந்துள்ளது.

 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை

 

பாதிக்கப்பட்ட பெண் சீடர் எழுதிய கடிதத்தில் என்னை போன்று ஆசிரமத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வருகின்றனர் என எழுதியுள்ளார்.

 பாதாள அறையில் ராம் ரஹீம்

 

“நான் பஞ்சாபை சேர்ந்தவள். எனது குடும்பத்தினர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் தீவிர பக்தர்கள். அவர்களின் விருப்பத்தின்பேரில் நான் சிர்ஸா ஆசிரமத்தில் பெண் துறவியானேன். ஆசிரமத்தின் பாதாள அறையில் குர்மீத் ராம் ரஹீம் வசித்தார்.

 ஆபாச படம் காட்டினார்

ஒருநாள் காலை 10 மணிக்கு என்னை, தன்னுடைய அறைக்கு வரவழைத்தார். அங்கு சென்றபோது அவர் படுக்கையில் அமர்ந்திருந்தார். அங்கிருந்த தொலைக்காட்சி பெட்டியில் ஆபாச படம் ஓடிக் கொண்டிருந்தது.

 கைத் துப்பாக்கி வைத்திருந்தார்

 

அவரது தலையணை அருகே ஒரு கைத்துப்பாக்கி இருந்தது. இந்த காட்சிகளைப் பார்த்ததும், சுவாமி குர்மீத் ராம் ரஹீம் சிங் இப்படிப்பட்டவரா என்று திகைத்துப் போனேன். குர்மீத் ராம் இப்படிபட்டவர் என நான் கனவிலும் நினைக்கவில்லை.

 விருப்பமான பெண் துறவி

 

தொலைக்காட்சி பெட்டியை அணைத்த அவர், என்னை தனக்கு விருப்பமான பெண் துறவியாகத் தேர்ந்தெடுத்திருப்பதாக கூறினார். எனக்கு குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்தார். அத்தோடு நிற்காமல் தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினார். என்னுடைய மறுப்பை தெரிவித்தேன்.

 நான் கிருஷ்ணரை போல

 

‘கடவுள்’ என்று கூறும் நீங்கள், இத்தகைய இழிவான செயலில் ஈடுபடலாமா? என கேள்வியை எழுப்பினேன். ஆனால் குர்மீத் ராம், பகவான் கிருஷ்ணருக்கு 360 கோபியர்கள் இருந்தனர். அவர்களோடு கிருஷ்ணர் தினமும் காதல் கொண்டார். அவரை கடவுள் என்று மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லையா? என்று கேள்வி எழுப்பினார்.

 கொலை மிரட்டல்

 

அவரது விளக்கத்தை ஏற்க மறுத்த காரணத்தினால் என்னை மிரட்டினார். என்னை கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார். எனக்கு அரசியல் பலமும் உள்ளது, பண பலமும் உள்ளது, அவர்கள் எனக்கு எதிராக ஒன்று செய்யமாட்டார்கள் என கூறினார்.

 கட்டாய பாலியல் உறவு

 

அதன்பின் என்னை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக அவரது அத்துமீறல் தொடர்ந்தது. நான் மட்டுமல்ல. என்னோடு தங்கியிருந்த சக பெண் துறவிகளையும் பலாத்காரம் செய்தார்.

 மருத்துவ பரிசோதனை

 

மருத்துவ பரிசோதனை

சுமார் 45 பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர். எனது பெயரை பகிரங்கமாக குறிப்பிட்டால் நான் கொல்லப்படுவது உறுதி. எனக்கும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் பாதுகாப்பு அளித்தால் உண்மையை கூறத் தயாராக இருக்கிறோம். எங்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தினால் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் கொடுமைகள் வெளிச்சத்துக்கு வரும்” என்று அந்தப்பெண் துறவி கூறியிருந்தார்.

பாலியல் பலாத்கார வழக்குகளில் குற்றவாளி வசமாக சிக்குவது என்பது அரிதான விஷயமாகிவிட்டது. காரணம், பெண்களுக்கே உரித்தான அச்சம்தான். பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெரும்பாலான பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடூரத்தை பொதுவெளியில் சொல்லத் தயங்குகின்றனர். அவர்களின் பெற்றோர், உறவினர்களும் இதை அனுமதிப்பதில்லை. காலம் காலமாக நிலவி வரும் பெண்களின் அச்சத்தைப் பயன்படுத்திக்கொண்டுதான் குர்மீத் ராம் ரஹீம்களும், பல சமூக விரோதிகளும் கொடூரச் செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். குர்மீத் ராம் ரஹீம் சிங்


பிரதமர் முதல் மனித உரிமை ஆணையம் வரை

தேரா சச்சா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் சிறைக் கம்பிகளை எண்ணுவதற்கு மூலகாரணமாக இருந்தது, ஒரு பெண் அனுப்பிய மொட்டைக் கடிதம்தான். தம் பெயரை சொல்ல விரும்பவில்லை என்று சொல்லி பிரதமரில் தொடங்கி மனித உரிமை ஆணையம் வரை அத்தனை பேருக்கும் கடிதம் அனுப்பியிருக்கிறார் அந்தப் பெண். 2002-ம் ஆண்டு மே 5-ம் தேதி என தபால் முத்திரையிடப்பட்ட மொட்டைக் கடிதம், அப்போதைய பிரதமர் வாஜ்பாய், பஞ்சாப்-அரியான உயர் நீதிமன்றம், மத்திய உள்துறை அமைச்சகம், சி.பி.ஐ., மனித உரிமை ஆணையம் ஆகியோருக்கு ஒரே சமயத்தில் அனுப்பப்பட்டது.

பட்டதாரிப் பெண்

இந்தி மொழியில் டைப் செய்யப்பட்டிருந்த அந்தக் கடிதத்தை எழுதிய பெண், தாம் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் தேரா அமைப்பில் சன்யாசியாக இருந்ததாகவும் கூறி இருந்தார். தாம் ஒரு பட்டதாரி என்றும், தம்முடைய பெற்றோரின் தூண்டுதலின் பேரில் தேரா அமைப்பில் சன்யாசியாகச் சேர்ந்ததாகக் கூறியுள்ளார். தேராவின் ஆசிரமத்துக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், தன்னை அழைத்த குர்மீத் ராம் ரஹீம் சிங்,  தம்முடைய அறைக்கு வரும்படி சொல்லியுள்ளார். தயக்கத்துடன் அந்தப் பெண் அறைக்குள் சென்றார். அப்போது அவர்  தொலைகாட்சி பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்கு அருகில் ஒரு ரிவால்வார் இருந்தது.

மிரட்டி பாலியல் பலாத்காரம்

அந்த துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, குர்மீத் ராம் ரஹீம் சிங்  தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்தப் பெண் சன்யாசி அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். தொடர்ந்து பல முறை தம்மை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கடிதத்தில் சொல்லி இருக்கிறார். என்னை எந்த ஒரு அமைப்பும் கேள்வி கேட்க முடியாது என்று திமிராகவும் ராம் ரஹீம் கூறி இருக்கிறார். தன்னைப் போலவே மேலும் பல பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக, தனக்குத் தெரியவந்தது என்றும் கடிதத்தில் கூறி இருந்தார்.   பஞ்சாப் மாநிலம் Sangrur மாவட்டத்தைச் சேர்ந்த இன்னொரு பெண்ணும் தம்மைப்போல பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் கூறியுள்ளார்.  ‘இந்த விஷயத்தில், பிரதமர் மற்றும் நீதிமன்றங்கள் தலையிட்டு உரிய தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார். இந்தக் கடிதத்தை யார் எழுதியது என்று தெரியவந்தால், தனக்கும் தன் குடும்பத்துக்கும் பெரிய பாதிப்புகள் ஏற்படும் என்றும் அச்சம் தெரிவித்திருந்தார்.

நீதிமன்றம் நடவடிக்கை

இதை வழக்கம் போல மொட்டைக் கடிதம் என்று கருதி, யாரும் அதன்பேரில் நடவடிக்கை எடுக்கவில்லை.பிரதமர் வாஜ்பாய், இந்தக் கடித்தத்தின் பேரில் நடவடிக்கை எடுக்கும்படி தமது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  உயர் நீதிமன்றம், இந்தக் கடித்தத்தை ஒரு கிரிமினல் வழக்காக மாற்றி, 2002-ம் ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சண்டிகரில் உள்ள சி.பி.ஐ அதிகாரிகள், கடந்த 2002-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர். பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.  முறைப்படியான விசாரணை அப்போதுதான் தொடங்கியது.

சி.பி.ஐ விசாரணை

சி.பி.ஐ விசாரணையைத் தடுக்க  ராம் ரஹீம் சிங் எல்லா வகையான முயற்சிகளையும் மேற்கொண்டார். நீதிமன்றங்களில் தடை வாங்கினார். இதனால், 2003-ம் ஆண்டுக்கும் 2004-ம் ஆண்டுக்கும் இடையே ஒன்றரை வருடங்கள் வழக்கு  விசாரணை தாமதம் ஆனது. குர்மீத் ராம் ரஹீம் சிங்கால் பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்ட இரண்டு பெண்களை, மிகுந்த சிரமங்களுக்கு இடையே சி.பி.ஐ அதிகாரிகள் சந்தித்துப் பேசினர். அவர்களின் வாக்குமூலத்தைப் பதிவுசெய்தனர். இதையடுத்து, கடந்த 2007-ம் ஆண்டு ராம் ரகீமுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்செய்தனர்.

பெண்கள் கொடுத்த விலை

பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களும் துணிச்சலாக அளித்த வாக்குமூலம்தான்  ராம் ரஹீம் சிங்குக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையைப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சொல்லலாம். வழக்கம்போல பயந்துகொண்டு, ‘நமக்கு ஏன் வம்பு’ என்று ஒதுங்கிப் போயிருந்தால், குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் அநியாயம் இன்னும் கட்டுக்கடங்காமல் போயிருக்கும். முற்றுப்புள்ளி வைத்த பெண்கள் பாராட்டத் தகுந்தவர்கள். ஆனால், அதற்கு அவர்கள் கொடுத்த விலை, வாழ்நாள் முழுவதும் வலி தரக்கூடிய துயரமாக இருக்கிறது.http://www.vikatan.com/news/coverstory/100629-how-to-cbi-cought-ram-rahim-a-daring-woman-had-wrote-letter-to-pm-and-human-rights-commission.html

About editor 3092 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply