புரட்சிப் பாதையில் புதுமை இலக்கியம் – அண்ணாவின் பங்கு

  •  புரட்சிப் பாதையில் புதுமை இலக்கியம் – அண்ணாவின் பங்கு
  •  தமிழண்ணல்
  •   செப்தம்பர் 14, 2014
  •  இன்று ஓர் இளைஞன் மேடைமீது ஏறி நின்று தலைவரையும் அவையினரையும் பெருமிதத்துடன் விளித்து உயர் குரலில் நடைச் சிறப்புடன் பேசுகிறான். தட்டுத் தடுமாறி நில்லாமல், தவிர்த்து வியர்த்து மருளாமல் கேட்போரின் உள்ளங்களைக் கோலமயிலாகத் தானோர் கொண்டலெனச் சொற்பொழிவு செய்கிறான். ‘கல்லைப் பிசைந்து கனியாக்கும்’ அத்தத்துவத்தைக் கற்ற இளைஞனுடைய உள்ளிருந்து இயங்கும் ஓராற்றலை உலகம் உடனே ஒரு பெயரிட்டழைக்கிறது. அப்பெயர்தான் ‘அண்ணா’ என்பது. மேடைப் பேச்சின் சிறப்பை, கருத்துத் தொடுத்துக் கவிதை படைத்து வரும் ஆற்றொழுக்கு நடையை அந்த மிடுக்குமிக்க குரல் ஒலியை ஆயிரமாயிரம் இளைஞர்களிடையே உண்டாக்கிய – உருவாக்கிய பெருமை அறிஞரைச் சாரும்.பலாப்பழத்தில் மொய்க்கும் ஈக்கள் எனப் பல்லாயிரம் மக்கள் கூடுகின்றனர்; பழுமரம் நாடும் பறவைகள் எனக் கருத்துகளை நாடுகின்றனர். இவை அறிஞருக்கு மட்டுமின்றி, அவர் வழிவந்த ஒவ்வொரு பேச்சாளருக்கும் அமைந்துவிட்ட சிறப்புகளாகும். ‘ஆனாவிலே தொடங்கி ஆனாவிலே முடிக்கிறார்கள்; ஈனாவிலே தொடங்கி ஈனாவிலே முடிக்கிறார்கள்’ என்பது கூட்டம் தொடங்கிய பின்னரும் கூடுவாரில்லாக் காரணத்தால் ‘ஈயோட்டும்’ சிலர் எடுத்துக் காட்டுவதாகும். அறிஞர் அவர்கள் அங்ஙனம் செயற்கையாக, மோனை, எதுகைகளைத் தேடியலைந்ததையோ, அமைத்து வேண்டுமெனப் பேசியதையோ நான் கேட்டதில்லை. இதோ அவர் பேசுகிறார். ஒரு நிமிடம் கேளுங்கள்;இப்பகுதி அவரது பேச்சுக்கு ஒரு பொதுவான எடுத்துக் காட்டாகும். கருத்துகளை அடுக்கும் போது சொல்லடுக்கும் தானே விரவி வருதல் கூடும். இவையிரண்டையுமே அறியாதார் வெறும் வாயடுக்கச் சொல்லி வம்பை அடுக்குவது முறையாகாது; ஆற்றலும் ஆகாது.இவருடைய சிறுகதைகள் புதுப் போக்கு உடையன. ஏழ்மையின் சார்பாக வாதிடும் நோக்கமும் செல்வச் செருக்கைக் கிள்ளியெறியும் கருத்துக் கூர்மையும் மிக்கன. இவர் புதினங்களும் எழுதியுள்ளார். ஆயினும் அவற்றை முழுக்க எழுதுதற்கேற்ற ஓய்வு இவரிடம் இல்லை. எழுத்திலும் பேச்சிலும் இணையற்று விளங்கும் இவர் பிறமொழிச் சொற்கலவாது பேசும் கொள்கையுடையவரே. ஆயினும் அந்த அளவிற்குப் ‘பொறுமை’ காட்ட அரசியல் இவரை விடவில்லை.
  • ஆம், அறிஞர் அண்ணாத்துரையவர்கள் அரசியலில் ஈடுபட நேர்ந்த காரணத்தால் நாடு ஒரு சிறந்த எழுத்தாளரை முழுவதும் பயன்படுத்தி, மொழியை வளர்த்துக் கொள்ள இயலாமல் போய்விட்டது.தான் வாழும்போதே தனது எழுத்தின் பயனைக் காணுதல் பெரும்பான்மையான எழுத்தாளர்கட்கு அரிதாகும். எழுத்துப் புலமையாளரின் கருத்துகள் பல்லாண்டு சென்றே பரவும்; பயன் விளைக்கும். பல்லாயிரக் கணக்கான மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டு ஆயிரமாயிரம் இளைஞர்களின் உள்ளங்களிலே மொழி ஆர்வத்தை விதைத்து, மொழிப் புலமைக்கு நீர் பாய்ச்சி, மொழித் திறனை விளைவு செய்து வரும் இச்சொல்லேருழவராம் அறிஞர் அண்ணா அவர்கள் தாம் வாழும் நாளிலேயே பயன்கண்ட தம் எதிரிலேயே தமது பரம்பரையைக் கண்டபேறு பெற்றவராவர். அரசியல் வண்ணங்கட்கும் அப்பாற்பட்ட பேரிலக்கியங்களை கட்டுரைகளை அவர் வழங்கி, புரட்சிப் பாதையில் பூத்த புதுமை இலக்கியத்திற்கு மேலும் பொலிவேற்ற வேண்டும் என்பது தமிழ் மக்களின் பேரவாவாகும்.குறள்நெறி(மலர்1 இதழ்17): ஆவணி 31, 1995/15.09.1964
  • நாடகத்துறையிலும் திரைப்படத் துறையிலும் இவரெழுதிய ‘ஓர் இரவு’ ‘வேலைக்காரி’, ‘நீதி தேவன் மயக்கம்’ முதலியவை பெருமாற்றங்களை ஏற்படுத்தின. நாடகம், திரைப்படம் இவற்றில் வரும் உரையாடல்களில் ‘விறுவிறுப்பு’ உண்டாக்கிய பெருமை இவரையே சாரும். உள்ளத்துடன் உள்ளம் உறவாடும் நோக்கில் இவர் எழுதும் கடித வடிவான கட்டுரைகள் படிப்போரின் உள்ளத்தைச் செயற்படுத்தும் வன்மை மிக்கன.
  • இவரது சொற்பொழிவைப் பற்றித் திருவாளர் கல்கி அவர்கள் கூறிய கருத்து இங்கு நினைவு கூர்தற்கு உரியதாகும்: ‘‘அவர் சொற்பொழிவுகள் சிலவற்றை நான் கேட்டிருக்கிறேன். சொற்பொழிவு என்றால் இதுவல்லவா சொற்பொழிவு? ‘தட்டுத் தடுமாறிச் சொற்களுக்குத் திண்டாடி நிற்பதையெல்லாம் சொற்பொழிவு என்கிறோமோ’ என்று எண்ணத் தோன்றும்…’’
  • ‘‘வெடித்துக் கிடக்கும் வயல், படர்ந்து போகும் நிலையிலுள்ள விளக்கு, பட்டுக் கொண்டே வரும் நிலையிலுள்ள மரம், உலர்ந்து கொண்டு வரும் கொடி வற்றிக் கொண்டிருக்கும் குளம் – இவைபோலச்சமுதாயத்தின் நிலையும் நினைப்பும் செயலும் ஆகிவிடும்போது இந்த அவல நிலையைப் போக்கியாகவேண்டுமென்ற ஆர்வமும் போக்க முடியும் என்ற நம்பிக்கையும் போக்கக்கூடிய அறிவாற்றலும் கொண்டு ஒரு சிலர் முன்வருகின்றனர்… அவர்களை நாடு வரவேற்பதில்லை. நையாண்டி செய்யும்; மதிப்பளிப்பதில்லை மாற்சரியத்தை வளர்க்கும்; துணைபுரிவதில்லை – தொல்லை தரும் எனினும் அவர்கள் ஓயாது உழைக்கிறார்கள். புன்னகையும் பெருமூச்சும் கலந்த நிலையில் பணிபுரிகிறார்கள். வெடித்துக் கிடந்த வயல் விளையும் வரை, படர்ந்து போகும் நிலையிலிருந்த விளக்கு மீண்டும் ஒளி விடும் வரை பட்டமரம் துளிர்விடும் வரை பாடுபட்டு வெற்றி கண்டு மறுமலர்ச்சி உண்டாக்கி வைக்கிறார்கள்.”
  • அஞ்சாது வாதிடும் போக்குப் ‘பெரியாரால்’ பிறந்தது. எண்ணப் பெருக்கும் எதிர்க்கும் நெஞ்சுரமும் அவர் ஊட்டியன. அவ் வழியில் வந்த அறிஞர் தமக்கெனச்சில தனித் திறன்கள் உடையவரென ஆனார். அவருக்குப் பின்னர் பெரும் பரபம்பரையே தோன்றியது. மூடப் பழக்கத்தைச் சாடி, விடுதலை வேட்கையைப் பாடியவர் பாரதியார். அவ்வழி வந்த பாரதிதாசன் பல்லாயிரம் நெஞ்சங்களிலே கவிதையொளி பாய்ச்சி ஒப்பற்ற திறமைகளுடன் உயர்ந்தார். அவருக்கும் பெரியதொரு பரம்பரை தோன்றிற்று. புரட்சிமிக்க இவ்வுள்ளங்களைக் கண்டு அஞ்சியவர்களும் இவர்களிடம் அமைந்த இலக்கியப் புதுமை கண்டு மயங்கினார்கள்; சிலர் மருண்டார்கள். எனினும் புரட்சிப் பாதையில் பிறந்து புதுமைப் பொலிவுடன் வளரும் இப்பேரிலக்கியம் மேடைப் பேச்சுகள் கதை, கவிதை, நாடகம், திரைப்படம் எனப் பல்வேறு துறைகளில் கிளைவிட்டுத் தழைத்து வருகிறது எனலாம்.
  • இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம் தனிச் சிறப்பும் மறுமலர்ச்சிப் போக்கும் உடையதாகும். அது புரட்சியில் கிளைத்துப் புதுமை பூத்துப் பொலிகின்றது. இவ்வளர்ச்சியில் பங்கு பெறும் சான்றோர் பலருள் அறிஞர் சி.என். அண்ணாத்துரை அவர்கள் தலையாய இடம் பெறுகிறார்கள். கொள்கை வேறுபாட்டுக்காகத் தம் கண்களைக் மறைத்துக் கொண்டு உண்மையை மறுத்தல் முறையன்று. ‘‘காய்தல் உவத்தல் அகற்றி ஆய்தல்’’ நம் கடமையாகும். மொழி வளர்ச்சிக்கு இம்முழு நோக்கமே தேவை.

Critical estimate of Anna’s contribution to Tamil and the Tamils

Annadurai’s 102 nd birthday that falls on September 15th, 2010.

Mr.C.N. Annadurai the beloved disciple of Periyar owes a lot to Periyar to have shaped his multifarious career. If is not for Periyar, Annadurai may not have attained this unique position. Periyar’s language was blunt and down to earth. The illiterate masses believed in meaningless superstitions and succumbed to Bramanical domination. To quote, Swami Vivekananda, “superstition is bad but bigotry is worse. Tamils as a whole in a blind folded manner fell a prey to superstition, bigotry, and indulged meaningless and metaphysical arguments on ceremonies. The word ‘Sathi’ (caste) is an alien Sanskrit term, but the Tamils consciously and unconsciously believed in a caste system that brought their own ruination. Periyar who did not have a formal education but posseded immense commensense. He rightly thought that unless he was downright in his approach, he cannot bring in the desired revolutionary changes in the people’s mind. The revolution Periyar carried out was not a bloody revolution but a bloodless revolution. His struggle lasted nearly sixty years. Weather he achieved his desired goal may be debatable, but a visible change in the people’s thinking cannot be denied.

ANNADURAI’S APPROACH

Annadurai with his academic background did approve the approach of Periyar to revolutionize people’s thinking. The people were behaving like dump driven cattle. But while appreciating Periyars approach in the social, Political and economic fields he felt there was a need to use the mellowed language to win over the people. He felt that his bloodless revolution should be brought through Tamil youths and students of colleges and universities. He sowed the seed of revolution by attracting the youth’s mind and heart by using alliteration,similies, and metaphor in his speeches and writings. He addressed series of meeting at Pachaiyappan College,Presidency College and other universities especially at the Annamalai University and the impact was permanent. His lively debates with Tamils scholars raised the debating standard and literaly criticism entered a new

phase. His criticism of Kammban’s Ramayanam and other religious works was an eye opener to the Tamils. He was not denying the literaly acumen of the great poet Kamban. But the contents of Kamban’s work consciously or unconsciously paved the path to worship Rama and Seetha as divine beings which in turned let to Aryan domination. Following these debates the literary scene inTtamilnadu under went a sea change. Anna was a master of the English language too. The literary criticisms that he studied in the English literature helped him to view things in a dispassionate manner. Though he honoured great poets,did not want to encourage personality cults.

ANNA WAS EMBODIMENT OF GRATITUDE

Canchipuram Natarajan Annadurai was born into a humble family in Canchipuram, Taminadu on the 15th of September 1909. His father was Nadarajan mudaliar and his mother was Pangaruamma. Though his mother was living, his younger days were shaped by his mother’s younger sister. In Tamil mother’s younger sister is addressed as Chinnamma. He was deeply attached to her. He completed his masters degree at Pachaiyappan College offering economics as his major. In his young days, he was very unassuming but developed strong friendship with his colleagues. Even during his school and college days, his debating talent and oratorical skills were a well known factor. Though he was brought up and nurtured by Periyar He was originally in the Justice Party and later joined with the Thiravidar kalagam (Dravidian party) led by Periyar. He parted company in 1949 Periyar in the latter days and formed the DMK (Dravida Munnetra Kalaagam) September 17th in 1949. Though he parted company with Periyar, his love, respect and attachment to him remained undiminished. As a respect for his guru, though the DMK was formed, the post of the presidency was kept vacant and Anna functioned only as the general secretary of the movement. When the DMK came to power in 1967, the first thing he did was to go to Periyar and sought his blessings. That speaks volumes of his gratitude to Periyar. He made an open declaration that all the social reforms that Periyar envisaged will be implemented. As promised, the DMK implemented the policies and programs of Periyar.

NNA AT THE RAJASABHA DEMANDED TAMIL AS A OFFICE LANGUAGE OF THE UNION

Annadurai love for his language and the desire to give it’s due place was openly pronounced by him at the Rajasaba sessions on 05-05-1963. This what he said,

“I will say that of all the languages, barring Sanskrit which has come a dead language, Tamil has a literary tradition that goes back to five thousand years, I may tell, Madam Deputy chairman, for the information of the House that the President is going over to our part of the country to release the English edition of the ancient Tamil work tholkappiam. Tholkappiam is a grammatical work written more than three thousand years ago. We possess such an inheritance.

We are very proud people as far as language is concerned. We think that no language can stand comparison of Tamil.

D.L Senguptha(Wes Bengal) Except Bengali.

Anna: Along with Bengali….I can never forget that I have got a hoary language in which my forefathers spoke, in which my poets have given sermons and scriptures, in which we have got classics and literature of inexhaustible knowledge, I will never be content till that day when Tamil takes its due place as one of the official languages in the Union.(04-03-1965).

It is unfortunate though years are rolled down his dream and demand remains unfulfilled. I sincerely believe that in the very near future Tamil will be declared an official language of Union of India. Let us remember “that  eternal  vigilance is the  price we pay for liberty”.

The above excerpts are from the Raja Sabha speeches of Anna. They clearly point out two distinct features. The richness and the hoary past of Tamil have been clearly explained and therefore  it was a solid foundation laid by him toward declaring Tamil as a classical language. Of course, let us remember that Parithimak Kalaignar was  the first person to pronounce that Tamil is a classical language. The contribution by Maraimalai Adigal, Thiru Ve.Ka, Devenaye Pavanar and Mu.Va also paved the path for the Tamils to be conscious of the richness of their language. Their researches was also added factor to make Tamil as a classical language. But, to the eternal credit of Anna it was he who  declared Tamil as a classical language in the highest legislatures forum of India.

I WAS A WITNESS TO ANNA’S PRONOUNCEMENT

I was privileged to attend the second International Tamil Conference of Tamil Nadu at Chennai in the year 1968. Annadurai in his extempore speech which he addressed to the Tamils and the foreign audience in English said about the attachments of the Tamils to the Tamil language in this moving words. In his speech he  spoke of the ancient heritage of the Tamil language its richness its flexibility, its adaptability, its amenability and that’s why the Tamil language to able to survive down the ages, in spite of repeated on slaughts by different nations. “Tamils by nature are lethargic and indifferent on all issues, but when they know there is a danger to the Tamil language God forbid at to what they would do”. His statement is pregnant in its meaning.

ANNA’S WRITINGS

Anna started  his career as a journalist in the year 1934,  his writings covered on politics, short stories, fictions drama’s one Act plays and parodies . Within the short period of 34 years the volume of works written by him is amazing. Words fail to describe his multifarious talents. Epistles to his Tambi (Brother) or more than 290 and these letters covers more than 3000 pages when printed. His writings excel in quality & quantity. He proved that pen is mightier than the sword. Even his political opponents like Kalki could not resist to pay a tribute to Anna’s dramatical talent. His One Night drama “ஓரிரவு” was compared to Bernard Shaw’s artistic outburst.

IMPACT OF THE PURE TAMIL MOVEMENT ON ANNA

Emimant scholars Marai malai adikal thiru Ve. Ka, R.P.Sethupillai, Pavanur, and Bharathi’ dasan’s poetry paved the path for the pure Tamil movement in Tamil Nadu. Mr.Annadurai though conscious of the pure Tamil movement and its impact in the society he could not adapt the same pure Tamil style because he was dealing with the masses. But his tributes to Maraimali adikal, and Thiru Ve.Ka,  it is a clear vindication of his love to preserve the purity of the Tamil language. His alliterating, allusions subtle satires pungent and criticisms was a treat to the literates and to the illiterates.

HE DETHRONED SANSKRIT

During his period Sanskrit dominated in the field of education, religion, politics and social spheres. With determined and  calculated move he dethrone Sanskirit. He passed legislation to conduct self respect marriages and saw that marriages were conducted in Tamil to up lift the Tamil masses and make them feel proud of their language.

RENAMED MADRAS AS TAMIL NADU

He pleaded in Tamil Nadu and also in Raja Sabha that Madras be renamed as Tamil Nadu. To start with he faced opposition but he won over the opposition. When one member asked him to what satisfaction he has by renaming Madras state to Tamil Nadu?’ Typical of Anna he retorted in this manner. “What we gain, its, we gain sentimental satisfaction and status for our ancient Tamil Nadu. If in Madras we change the name of China Bazaar in to Netaji Subash Chandra Bose Road, Nothing is changed in the street, but something is changed in our thinking, in our soul and in our fibre.”

With this same enthusiasm and vigour Anna introduce the Bill for renaming in the Madras Legislative Assembly and it was passed with a thundering applause. Then he echoed “ Tamil Naadu” and the members responded “Vazhga! This emotional outburst was a unique scene in the entire history of our Tamil Nadu.

Really this was a historical event and the entire Taiml Nadu is proud of it even now and it will be so for centuries together. This was the climax of his career. But,unfortunately for him and for us he couldn’t live long to enjoy the fruits of his labor.

HIS OPPOSITION OF HINDI

Though Tamil was the made the language of curriculum; Sanskirit continued to occupy a key place by the pro Sanskrit lobby. Added to this factor, Hindi imposition was gaining foot hold from 1938.

The Indian constitution came in to vogue in 1950  and  according to the  bill, after the lapse of fifteen years Hindi was to replace English in the administrative field. This let to the anti Hindi agitation by Anna during 1964. Chief Minister Bakthavathsalam stood like a rock and dealt with situation with iron hand and took away numerous precious lives. This was a turning point in the political scenario of Tamil Nadu. The people of Tamil Nadu felt the danger they were facing due to Hindi domination and decided to hand over power to the DMK headed by Anna. Some section expressed  fear  that the Central Government might bring down the Tamil Nadu government but Annadurai in a fearless manner pronounced I have done “what I can! Let Delhi do what its wants!” This fearless clear cut pronouncement was a challenge to Delhi. At this convocation address delivered at Annamalai University , he satirically remarked.

“The Governement of Tamil Nadu, as stated in unmistakable tener that Tamil and English can server all our purposes, the former the official languages of state and the latter as the link language. What serves us to link with the outside world is certainly capable of rendering the same service inside India as well. To plead for two link languages is like boring a smaller hole for kitten while there is a bigger one for the cat”

CHAIR FOR THIRUKURAL

The International forum of Tamil studies conducted in Madrass in 1968 focussed world attention on the antiquity and greatness of the Tamil language. He was also conscious of the greatness of the unique personality of the saint, sage philosopher – Valluvar. Valluvar is considered as a bard of the universal and hence he created a chair for Thirukural at  the Madras University,  Annamalai University and Madurai University.

ANNA’S LASTING CONTRIBUTION TO THE EELAM TAMIL CAUSE WILL BE REMEMBERED BY POSTERLITY

In 1958, he focused the Eelam Tamil problems in two fronts. First, he did his best to draw attention to the Delhi government. At the time, Nehru was  the  prime minister and Kamaraj was  chief minister both turned deaf ear and blind eye to the Eelam Tamil problem. He got a cartoon drawn in the Homeland paper to show the indifference of these two personalities. In 1958,  June 22nd he declared Ceylon Tamil’s a freedom day and conducted demonstration and mass meetings. At the meeting he conducted at the Nepier Park, thousands assembled and the resolution passed focussed  on the  problem and its considered as a historic event in the Annals of Tamil freedom.

WORLD ATTENTION FOCUSED

In 1961 when Tamils demonstrated against Singala implementation in the northern and the eastern provinces in Srilanka opposite the “Kacheris(Secretariets) in a open expression of sympathy for Eelam Tamils there was a mass meeting on the 13th of March 1961 at Mareena Beech. The gathering of the masses and the resolution passed was a turning point in our freedom struggles. His articles in Thiravida Nadu in Tamil and Homeland in English focused world attention.

In 1958, in his Homeland dated June 15th he described the atrocities committed bye the Srilankan Armed forces in  very strong language. He described the plight of the Eelam Tamils as “Cinderallas in Ceylon”.  June 29th 1958 Homeland issue he brought out, articles and photos describing in a moving manner the suffering of the Eelam Tamils. Again on July 22nd 1958 the Homeland issue covered his letters addressed to the world forum appealing to their attention.

In 1958, August 10th he appealed to the Tamils to rally round to make Bandaranaike  feel guilty of his conduct. In his Homeland, in thick letters he wrote the following para:

“That does not necessarily mean, demanding a Tamil Raj comprising Tamil Nad and that portion of Ceylon wherein Tamilans are in a majority The task immediately ahead is to focus public attention on the problem. World opinion should be harnessed to the cause for justice and fair play. The plight of the Tamilins in Ceylon should be placed before the discerning public all over the world.”

ANNA’S REACTION TO KRISHNA MENON

In conclusion, let me state as to what Anna said to V.K.Krishna Menon, Defence Minister. Krishna Menon in keeping with his position said to Anna, “ His interference in the internal affairs in Sri Lanka is an embarrassment to India. He said ‘ Srilanka is a loving close neighbour  of ours and a little island, we cannot afford to offend its feelings. Typical of Anna,  he retorted by saying that Krishna Menon is a political giant, with rich experience in politics and that he is not a match to him;but he asked the question “ if I see my neighbor hugging and kissing his wife I shall not look on but out of shyness I will look the other side but if my neighbor under the protext that he is the husband and tyring to knife her to death and she cries in agony Am I to watch on? No I have to go to her rescue . The plight of the Eelam Tamils is the same. I cannot  watch on when they are dying I have to go to their rescue. This statement of his silenced Krishna Menon and he didn’t say anything after that. This is where Anna  excels in the beautiful art of diplomacy. What his diplomacy is to say the worst things in the best form.

KARUNANITHY THE BETRAYOR OF THE TAMILS

Unfortunately, for us the so called  disciples of Anna, especially Muthuvelu Karunanithy the present chief minister of Tamil Nadu doing the very negation of what Anna stood for. Much against our wish, Honorable. Karunanithy will go down in history as  வாந  greatest betrayer of Eelam Tamils. The verdict of history cannot be easily  altered.

Published on: Feb 05, 2011


பேரறிஞர் அண்ணா தமிழுக்கு மலர்ச்சியும் தமிழினத்துக்குப் புகழும் தேடித்தந்தவர்

நக்கீரன்

(பேரறிஞர் அண்ணாவின் 101 ஆவது பிறந்த நாளையொட்டி இக்கட்டுரை வெளியாகிறது)

தமிழகத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் தங்கள் பெயரை தடம்பதித்து மறைந்த அரசர்கள், புலவர்கள், அறிஞர்கள், சான்றோர்கள் பலர் இருக்கிறார்கள்.

இவர்களில் அறிஞர் அண்ணா குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர். அவர் ஈட்டிய சாதனைகள் எழுத்தில் அடங்கா. ஒரு துறையில் மட்டுமல்ல பல் துறைகளிலும் அவர் முத்திரை பதித்துள்ளார்.

அண்ணா ஒருவர்தான் முழுநேர அரசியல்வாதியாக அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதிலும் படைப்பு இலக்கியத்தில் புகழ்க் கொடி நாட்டியவர். அவர் தொடாத துறை என்று எதுவும் இருக்கவில்லை.

இலக்கியத்தில் சிறுகதை, நெடுங்கதை, வராலாற்று நெடுங்கதைகள், மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள், நாடகங்கள், திரைப்படங்கள், உரையாடல்கள், கடிதங்கள் என எல்லாவற்றையும் மாற்றாரும் போற்றும் வண்ணம் படைத்தார்.

பண்டிதர்கள் மத்தியில் இருந்த கவிதையை எப்படி பாரதி மக்கள் மன்றத்துக்கு இழுத்து வந்தாரோ அதே போல் மேடைத் தமிழை முதன்முதலில் கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய் பொதுமக்கள் வேட்பவும் கொண்டு வந்தவர் அறிஞர் அண்ணாதான். அண்ணாதான் முதன் முதலில் செய்யுள் அணிகளில் காணப்பட்ட எதுகை மோனை என்ற அடுக்குமொழியை தமிழ்ப் பேச்சிலும் எழுத்திலும் கையாண்டவர்.

தமிழகத்தில் சிறந்த மேடைச் சொற்பொழிவாளராகத் திகழ்ந்தவர் திரு.வி. கல்யாணசுந்தரனார். அவரே அண்ணாவை பாராட்டுகிறபோது “இனி திரு.வி.க நடை என்பது மறைந்து அண்ணாத்துரை நடை என வழங்கும்” எனவும்; “ஆயிரம் மேடை ஏறிய அறிஞர். பல்லாயிரம் மக்களின் உள்ளத்தை ஒருங்கே கவரும் சீரிய கூரிய சொல்லாளர். கண்ணின்று கண்ணறச் சொல்லும் திண்ணியர்” எனப் பாராட்டினார்.

அண்ணாவுக்கு மேலுமொரு சிறப்பு உண்டு அண்ணாதான் தமிழ்நாட்டில் முதன்முதலாக தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் சிறந்த சொற்பொழிவாளாராக விளங்கியவர். சொற்பொழிவுகளைக் கட்டணம் செலுத்தி மக்கள் கேட்டது தமிழகத்தில் முதன்முதலில் அண்ணாவின் சொற்பொழிவைத்தான்.

அண்ணாதான் தமிழகத்தில் 1938 இல் காங்கிரஸ் ஆட்சி கட்டாய இந்தியைத் திணித்த போது அதனை எதிர்த்துச் சிறை சென்ற முதல் மொழிப் போராளி.

அகநானூற்றைக் கரைத்துக் குடித்த புலவர்கள், புறநானூற்றைப் புரட்டி எடுத்த தமிழ் ஆசிரியர்கள், கற்றோர் போற்றும் கலித்தொகையைக் கற்றவர்கள், சங்கத் தமிழில் கரைகண்டவர்கள், இந்தி மேலாண்மையால் தமிழுக்கு ஆபத்து வந்த போதெல்லாம் அதுகுறித்துக் கவலைப்படாமல் சுயநலச் சூறாவளியில் சிக்குண்டு மொழியுணர்வும் இனவுணர்வும் இழந்திருந்த நேரத்தில் அண்ணாதான் “எப்பக்கம் வந்திடும் இந்தி அது எத்தனை பட்டாளம் கூட்டிவரும்” எனப் பரணி பாடி மதுரையை எரித்த கண்ணகி போல் ஆதிக்க இந்திக்கு மணிமகுடம் சூட்டும் அரசியல் சட்டப் பிரிவைத் தீயிட்டுப் பொசுக்கினார்!

தமிழில் கடைச் சங்க காலத்து நாடகத் தமிழ் நூல்கள் பல இறந்துபட்டுவிட்டன. சயந்தம், செயிற்றியம், முறுவல், மதிவாணர் நாடகத் தமிழ் நூல், விளக்கத்தார் கூத்து, செயன்முறை, குணநூல், நன்நூல், கூத்த நூல் என்னும் பெயர்களை மட்டுமே அறிய முடிகின்றது. அவை அனைத்துமே நாட்டியம் பற்றியும் நாடகம் பற்றியும் இலக்கண முறையில் விளக்கம் கூறும் நூல்கள் ஆகும். அடியார்க்கு நல்லார் தரும் உரை விளக்கங்களில் செயிற்றியம், மதிவாணர் நாடகத் தமிழ் நூல்களை மேற்கோள் காட்டுவதால் அத்தகைய நூல்கள் அவர் காலத்தில் இருந்துள்ளன என்பதை உறுதி செய்ய முடிகின்றது.

இன்று கூத்த நூல் என்னும் பெயருடைய நாடகத் தமிழ் இலக்கண நூல் பழைய ஏட்டுச் சுவடியிலிருந்து எடுத்து அச்சிடப்பட்டு வெளியாகியுள்ளது. அவ்வாறே கடைச் சங்க காலத்து அறிவனார் இயற்றியுள்ள பஞ்சமரபு என்னும் நூல் இன்று கிடைத்துள்ளது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை (கிபி 1855 – 1897) அவர்களால் இயற்றப்பட்ட மனோன்மணியம் சிறந்த நாடக நூல் ஆகும். இந்த நூலிலேயே ‘நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக்கு எழில் ஒழுகும்’ என்ற தமிழ்த் தெய்வ வணக்கப் பாடல் இடம்பெற்றுள்ளது. அது போலவே ‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’ என்ற வைர வரிகள் இந்த நூலிலேயே இடம்பெற்றுள்ளது.

மனோன்மணியம் Lord Litton  (19 ஆம் நூற்றாண்டு) என்ற ஆங்கிலக் கவிஞர் இயற்றிய ‘The lost Tales of Millerus ’ அல்லது ‘The Secret Way’ என்ற சிறு காவியத்தின் தழுவலாகும்.

ஆனால் நாடகத்துறையில் ஒரு பெரிய புரட்சியை – திருப்புமுனையை – ஏற்படுத்திய பெருமை பேரறிஞர் அண்ணாவையே சாரும்.

அண்ணா எழுதிய முதல் நாடகம் சந்திரோதயம் (1934) ஆகும். அடுத்து அண்ணா ஓர் இரவு, வேலைக்காரி (1945) நீதிதேவன் மயக்கம், சந்திரமோகன் அல்லது சிவாஜி கண்ட இந்து இராச்சியம், குமாஸ்தாவின் பெண் அல்லது கொலைகாரியின் குறிப்புக்கள் (1940) என்ற நாடகங்களை எழுதினார். இந்த நாடகங்கள் அதுவரை இருந்த நாடகத்தின் கட்டுமானத்தை முற்றாக மாற்றி அமைத்தன. சிறந்த நாடகப் படைப்பாளிகளாக விளங்கிய சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல்சம்பந்த முதலியார் போன்றவர்கள் கருத்துக்களைவிட பயிற்சிக்கும் தொழில் நுட்பத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்தார்கள். அண்ணாவோ கருத்துக்கு முதலிடம் கொடுத்தார்.

அண்ணா நாடக நூல்களைப் படைத்ததோடு நிற்கவில்லை. தான் எழுதிய சந்திரோதயம் எனும் சமூக நாடகத்தில் தானே மூன்று வேடங்களில் நடித்து இயக்கித் தன் பணிமனைத் தோழர்களையே நடிக்க வைத்தார்.

அண்ணா எழுதிய வேலைக்காரி மூன்று ஆண்டுகள் கழித்து அதே பெயரில் திரைப்படமாக வெளிவந்த போது திரையுலக வரலாற்றில் ஒரு புது அத்தியாயம் எழுதப்பட்டது. ஒரு நாடகத்தில் முதன்முதலில் வழக்கு மன்றக் காட்சிகளை அமைத்தவர் அண்ணாதான். வேலைக்காரி திரைப்படத்தின் மூலம் புதுமைக் கருத்துக்களைச் சொன்னார். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற திருமூலர் வாக்கை அறிவுறுத்தினார்.

அண்ணா தீட்டிய ஓர் இரவு நாடகத்தில் முதன் முதலாக இருபது ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சிகளைப் பின்னோக்கிய காட்சிகளாக (flash back) அமைத்தார். முதன்முதலில் அண்ணாதான் ஓர் இரவு திரைப்படத்திற்கு ரூ.20,000 ஊதியமாக வாங்கியவர். இயக்குநர் பெயரை விட கதை வசனம் எழுதிய அண்ணாவின் பெயருக்கு திரையில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

கல்கி கிருட்டிணமூர்த்தி ஓர் இரவு நாடகத்தைப் பார்த்துவிட்டு “இதோ ஒரு பெர்னாட்சா, இதோ ஓர் இப்சன் என்று” என்று பாராட்டினார்.

அண்ணா கம்பராமாயணம், பெரிய புராணம் போன்றவற்றைத் துறையறக் கற்றவர். அவர் எழுதிய கம்பரசம் முற்றிலும் ஒரு புதிய கோணத்தில் செய்யப்பட்ட சிறப்பான இலக்கியத் திறனாய்வு நூலாகும். அது தொடர்ச்சியாக திராவிட நாடு இதழில் வெளிவந்த போது அதனை மறுக்கப் படித்த பண்டிதர்களோ, புலவர்களோ இலக்கியவாதிகளோ, தமிழறிஞர்களோ முன்வரவில்லை. மாற்றுக் கருத்துள்ளவர்களும் மறுக்க முடியாத ஏதுக்களை எடுத்து வைத்து அண்ணா வாதிட்டிருந்தார்.

அன்றாட வழக்கில், நடைமுறையில் இருந்த வடமொழிச் சொற்களை நீக்கி, தமிழ்ச் சொற்களை புகுத்தியவர் அண்ணாதான். நமஸ்காரம், அக்ராசனர், சபாநாயகர் என்ற வடமொழிச் சொற்களை மாற்றி வணக்கம், தலைவர், பேரவைத் தலைவர் என்ற தூயதமிழ்ச் சொற்களைச் சலங்கை கட்டி நடமாடவிட்டவர் அண்ணா! முடநாற்றம் வீசும் மூடத்தனத்தை முறியடித்துப் பகுத்தறிவுக் கொள்கையைப் பரப்பியவர் அண்ணா!

இவ்வளவு புகழுக்கும் பெருமைக்கும் உரிய அறிஞர் அண்ணா ஈழத் தமிழர்களை மறந்தாரில்லை.

கடல் நீர் ஏன் கரிக்கிறது என்று கேட்டுவிட்டு அது தமிழன் விட்ட கண்ணீர் காரணம் என அண்ணா சொன்னார். ஈழத்தமிழருக்காக அன்றே ஓங்கிக் குரல் கொடுத்தவர். இனச் சிக்கலை இட்டு ஆழமாக அறிவு நிலையிலும் உணர்வு நிலையிலும் அறிந்திருந்தார்.

1956 இல் சிங்களம் மட்டும் சட்டம் திணிக்கப்பட்டபோது அதை எதிர்த்து ஈழத்தமிழர்கள் தொடர்ச்சியாக அறவழியில் போரிட்டபோது வெறிகொண்ட சிங்களக் காடையர்கள் தமிழ் மக்களைத் தாக்கினார்கள். தமிழ்மக்களது வீடு வாசல்கள், கடை கண்ணிகள் நாசமாக்கப்பட்டன. இந்தக் கொடுமைகளுக்கு எதிராக குரலெழுப்பியவர் அண்ணா.

ஈழத் தமிழர் சார்பில் சட்டமன்றத்திலும் தில்லி மாநில அவையிலும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அண்ணா பேசினார். இலங்கை அரசின் மனிதவுரிமை மீறல்களைக் கடுமையாகக் கண்டித்தார். ஈழத்தமிழர் சார்பில் உலக அய்யன்னா அவைக்கு அறிக்கைகளை அனுப்பி ஈழத்தமிழர்களது மொழியுரிமை, வாழ்வுரிமை பறிக்கப்பட்டதை அனைத்துலகச் சிக்கலாக மாற்றினார்.

மலையகக் காடுகளை வியர்வை சிந்தித் திருத்தி பொன் கொழிக்கும் தேயிலைத் தோட்டங்களாக மாற்றிய மலையகத் தமிழர்களின் குடியுரிமை, வாக்குரிமை 1948-1949 களில் பறிக்கப்பட்டு அரசியல் ஏதிலிகளாக்கப்பட்டபோது சிங்கள அரசின் இனவெறிப் போக்கினை அண்ணா கடுமையாகச் சாடினார்.

சிறிமாவோ – சாஸ்திரி உடன்பாடு என்பது இலங்கையில் நாடற்றவர்களாக இருந்த 975,000 இந்திய வம்சாவளித் தமிழர்களின் எதிர்காலம் தொடர்பாக அப்போதைய இலங்கைப் பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்காவுக்கும் இந்தியப் பிரதமராக இருந்து லால் பகதூர் சாஸ்திரிக்கும் இடையில் 1964 ஒக்தோபர் 30 இல் கையெழுத்தான உடன்பாட்டைக் குறிக்கும். இதன் கீழ் மேற் குறிப்பிட்டவர்களில் 525,000 பேரை இந்தியா ஏற்றுக்கொள்வதெனவும் 300,000 பேருக்கு இலங்கைக் குடியுரிமை வழங்குவதெனவும் முடிவானது. மீதி 150,000 பேர் பற்றி பின்னர் முடிவு செய்யப்படும் என தீர்மானிக்கப்பட்டது. இந்த உடன்பாட்டை அண்ணா மிகக் கடுமையாகக் கண்டித்தார்.

“சாத்துக்குடிப் பழத்தின் சாற்றினைப் பிழிந்த பின்பு தூக்கி எறிவது போலவே இம்மக்கள் தூக்கி எறியப்பட்டுள்ளார்கள்” என்று தன் மனிதாபிமான உணர்வினையும் தன் தமிழின உரிமை வேட்கையையும் வெளிப்படுத்தினார் அண்ணா.

அண்ணா நடத்திய திராவிட நாடு இதழிலும் Homeland (1957) Homerule  (1966) இதழிலும் தம்பிக்கு எழுதிய கடிதங்களிலும் தலைப்புச் செய்திகளிலும் ஆசிரியர் தலையங்களிலும் சிங்களத் தலைவர்களுக்கு இடித்துரைக்கும் முறையில் எடுத்துச் சொன்னார்.

ஒரு முறை ஈழத்தமிழர் சார்பாக மாநிலங்கள் அவையில் அண்ணா குரலெழுப்பியபோது, அப்போது பாதுகாப்பு அமைச்சராக விளங்கிய வி. கே. கிருஷ்ணமேனன் இலங்கையின் உள்நாட்டு அரசியலில் இந்தியா தலையிடுவது முறையல்ல என்று கூறினார்.

அதற்கு அறிஞர் அண்ணா தனக்கே உரிய பாணியில் பொடி போடும் முறையில் பேசினார். “கிருஷ்ணமேனன் பெரிய அரசியல் அறிஞர் என்பதை நான் ஏற்கின்றேன்” என்று கூறிய அண்ணா “என் வீட்டின் அயலவன் தன் மனைவியை இறுக அணைத்து முத்தம் சொரிகின்ற போது நான் பார்க்க மாட்டேன். மாறாக முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு வேறு இடம் சென்று விடுவேன். ஆனால், அதே அயலவன் தான் கணவன் என்ற உரிமையில் தன் மனைவியின் கழுத்தில் கத்தி வைக்கின்ற போது, அவள் அய்யோ என்று அலறுகின்ற போது, நான் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அது போன்று தான் என் தமிழன் இலங்கையில் கொலைக்கு ஆளாகின்ற போது நான் பார்த்துக் கொண்டிருக்க முடியாது” என்று அண்ணா பதிலிறுத்தார். இன்று போல் அன்று அண்ணா ஈழத்தமிழர்களைப் பார்த்து சிங்களவர்களுக்கு கோபம் வராதவாறு நீக்குப் போக்காக நடந்து கொள்ளுங்கள் என்று கீதா உபதேசம் செய்யவில்லை. நெஞ்சுரத்தோடும் நேர்மையோடும் தெளிவோடும் துணிவோடும் ஈழத்தமிழர் அழிவைத் தடுக்க முனைந்தார்.

அண்ணா முத்துமணித் தொட்டில், பவழமணி வட்டில், கனகமணிக் கட்டில் என்றெலாம் வளமும் வனப்பும் வாய்ப்பும் வசதியும் பூத்துக் குலுங்கிய குடும்பத்தில் பிறந்தவர் அல்லர். மிகச் சாதாரணமான எளிய குடும்பத்தில் பிறந்தவர். கோடி கோடி எனச் சேர்க்காமல் கோடான கோடி மக்களின் இதயத் தாமரையில் இடம் பிடித்தவர்.

‘அண்ணா துரையென்னும் அண்ணல்
தமிழ்நாட்டு வண்ணான் அழுக்கெடுப்பில்
வாய்மொழியில் பண்ணாவான்
சிற்பன் எழுத்தோவியத்தில்
செவ்வரசு நாவான்
அற்புதம் சூழ்மாலுமி என்றாடு’

என்று போற்றுப்பட்ட பேரறிஞர் அண்ணா தமிழ்மொழிக்கு மறுமலர்ச்சியையும் தமிழினத்துக்குப் புகழையும் தேடித்தந்தவர். அவர் நினைவு கடலும் மலையும் நிலவும் வானும் திங்களும் ஞாயிறும் இருக்கும் காலம் வரை நீடித்து இருக்கும்.


அண்ணாவின் நோக்கில் தமிழ்த்தேசியம்

தியாகு

தமிழகத்தில் இன்றைய அரசியல் போக்கை வடிவமைத்தவர் அண்ணா. அவருடைய பெயரைச் சொல்லும் தேர்தல் கட்சிகளே இன்றளவும் சட்ட மன்றத்திலும், தமிழகம் சார்பான இந்திய நாடாளுமன்ற  உறுப்பினர் தொகையிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்திய அரசியலில் பங்கெடுத்த அண்ணா இந்தியத் தேசியத்தை மறுத்தார். அது போன்றே மொழிவழித் தமிழ்த் தேசியத்தையும் புறந்தள்ளி திராவிடத்  தேசியத்தை உயர்த்திப் பிடித்தார்.

இந்திய ஓர்மையை மறுத்து திராவிடத் தேசியம் பேசிய அறிஞர் அண்ணாவுக்கு மொழி வழித் தேசியம்  பற்றித் தெரியுமா? தெரியும். அது குறித்து அண்ணா நன்றாக அறிவார்; அறிந்தும் தமிழ்த் தேசியத்தைக் கையிலெடுக்காததே அண்ணா இழைத்த வரலாற்றுப் பிழை.

மொழிவழித் தேசியம் குறித்த அண்ணாவின் புரிதல் அவருடைய சொற்களிலிருந்தே விளங்கும்:

“இந்தியாவில் ஒரு இனத்தையும் அதற்குரிய தாயகத்தையும் எதைக் கொண்டு நிர்ணயிப்பது? இது முக்கிய விடயமே. ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் ஆகியவைகளை உடையோரைத் தனி இனமாகவும், அவர்கள் சேர்ந்தாற்போல் வாழும் பிரதேசத்தை அவர்களுக்குரிய தாயகமாகவும் கொள்வதே சரியான முறை. அதன்படி பார்த்தால் இந்தியாவில் தமிழர், ஆந்திரா, கேரளர், கன்னடர், கூர்ஜரர், வங்காளத்தார், பாஞ்சாலத்தார், மராட்டியர் போன்ற பதினேழு தேசிய இனங்களும் அவற்றின் தாயகங்களும் இருக்கின்றன.

“இந்தப் பதினேழு நாடுகளும் தத்தம் எல்லையில் வேறு எவர் தயவுமின்றி, தனி அரசு புரியக்கூடிய அளவுக்கு மக்கள்தொகை, பொருள்வளம், நீர்வளம் ஆகியவைகளைப் பெற்றிருக்கின்றன.”

(திராவிடநாடு, கடிதம் 55, 24.6.1956; தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்- தமிழ் அரசிப் பதிப்பகம், சென்னை,2005, பக்.199)

ஒரு தேசம் சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் அது தேசம்தான்; தமிழ்நாடு சிறியதாக இருந்தாலும் ‘அதன் தகுதி அளவைப் பொறுத்து அல்ல’ என்ற பார்வையும் அண்ணாவுக்கு இருந்தது.

1955 இல் தட்சணப் பிரதேசத் திட்டத்தை நேருவின் அரசு கொண்டுவர முயற்சி செய்தது. மொழிவாரி மாநிலங்கள் அமைக்காமல் இந்தியாவைப் பிரதேசங்களாக அல்லது மண்டலங்களாகப் பிரித்து விடுவது என்ற வஞ்சகத் திட்டத்தை முன்வைத்தது. இத்திட்டத்தில் நேருவை விழச் செய்ததே இராசகோபாலாச்சாரியார்தான் என்று அண்ணா கூறுகிறார். இந்த தட்சணப்பிரதேசத் திட்டத்தை பெரியாரும் எதிர்த்தார்; அண்ணாவும் எதிர்த்தார். தட்சணப்பிரதேசத் திட்டம் பற்றிக் கூறும் போது, அண்ணா மொழி வழி நாடுகள் பற்றிய தம் புரிதலை வெளிக்காட்டுகிறார்:

“ஆச்சாரியார் ‘தட்சிணப் பிரதேசம்’ கேட்டார்

“தமிழ்நாடு-மிகச் சிறிய அமைப்பு-இந்திய அரசியலிலே இந்தச் சிறிய அமைப்புக்குச் செல்வாக்கு ஏற்படாதுபெரிய அளவில் உள்ள உத்தரப் பிரதேசம் வைத்ததுதான் சட்டமாக இருக்கும் என்ற காரணம் காட்டினார் ஆச்சாரியார்…..

“அப்படியானால், ‘சிறிசு பெரிசு’ பார்த்துத்தான் இந்திய அரசியல் நடந்து கொள்ளுமா? நீதி, நேர்மைக்கு இடமளிக்காதா? தமிழ்நாடு சிறிய அளவாகவும், உத்தரப் பிரதேசம் பெரிய அளவிலும் இருந்தாலென்ன? எல்லாவற்றுக்கும் ‘மேலே’ உள்ள அதிகாரி, நேர்மையுடன் நடந்து கொள்ளக் கூடாதோ? என்று யாரும் கேட்கவில்லை…!

“உலகிலே, பிரிட்டனும் பிரான்சும் அளவிலே சிறிய நாடுகள். விரிந்து பரந்து கிடக்கும் அமெரிக்காவுடன், உலக அரங்கிலே அவை சமமாகத்தான் நடத்தப்படுகின்றன. அது மட்டுமல்ல. மிகப் பெரிய சீனாவுக்கு ஐ.நா.வில் இடமளிப்பதா, வேண்டாமா என்பது பற்றி ‘முடிவு’’ காண, இந்த நாடுகளிடம் முத்திரை மோதிரம் இருக்கிறது.

”தனி அரசு நடாத்தும் நாடுகளிலேயே, அளவு பற்றி அல்ல அந்தஸ்து கிடைப்பது என்பதற்கு இது போன்ற ஆயிரத்தெட்டு எடுத்துக்காட்டுகள் உள்ளன.” (திராவிட நாடு, கடிதம் 32, 1.1.1956; தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்  , பக்.311)

அண்ணாவின் பார்வைக் குறைவுக்குக் கண்டனம்

இவ்வளவு தெளிவான புரிதல் அண்ணாவுக்கு இருந்த போதிலும் திராவிடத் தேசியம் பேசினார்; திராவிட நாடு விடுதலை கோரினார். அண்ணாவின் வாழ்நாளிலேயே பிற தமிழர் தலைவர்கள் தமிழ்த் தேசியக் கோரிக்கையை வலியுறுத்தினர்; அண்ணாவும் தமிழ்த் தேசிய உரிமைக்குக் குரல் கொடுக்க வற்புறுத்தினார்.

தமிழறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் தமிழ் முரசு இதழில்(1.5.1947) தமிழ்நாடு என்ற மொழிவழி நாட்டுக் கோரிக்கையை வலியுறுத்தினார்:

“மொழிவழி நாடு என்ற உண்மையை ஆந்திரரும் கேரளரும் கன்னடரும் உணர்ந்திருப்பது போலத் தமிழன் உணரவில்லை. தமிழ்நாட்டில் பல இடங்களில் என்ன காண்கிறோம்? என்ன கேட்கிறோம்? தமிழ்நாடு என்றால், “தமிழ்ஸ்தான் – பாகிஸ்தான் என்று கூறி விடுவதிலேயே அறிவின் அறுதியான எல்லை உண்டு என அகமகிழ்வோர் ஒருபுறம்; திராவிட நாடு,இந்திய நாடு எனப் பேசுவதே அரசியல் அறிவொளி வீசுவதாம் எனச் செருக்கித் திரிவோர் ஒருபுறம். ஆந்திர நாடு, கன்னட நாடு, கேரள நாடு எனப் பேசுவது போலத் தமிழ்நாடு என ஒரு முகமாகப் பேசக் காணோமே”.

தமிழறிஞர் கி.ஆ.பெ. விசுவநாதம் ‘தமிழர் கழகம்’’ என்ற அமைப்பை நிறுவி, ‘’தமிழர் நாடு’’ என்ற மாத இதழையும் நடத்தி வந்தார். 1940 இல் நீதிக் கட்சியின் 15ஆவது மாநாடு திருவாரூரில் நடைபெற்ற போது, நீதிக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் திராவிட நாடு கோரிக்கையை ஏற்க மறுத்தார். கட்சியின் தலைவர் பெரியாரிடமிருந்து முரண்பட்டு பொதுச் செயலர் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார். ‘திராவிட நாடு கோரிக்கை தவறானது; தமிழ்நாடு விடுத லைக் கோரிக்கையே சரியானது’ என்ற கருத்தை முன் வைத்து கருத்துப் பரவல் செய்தார். இந்தியாவிலிருந்து அரசியல் ரீதியாக விடுதலை பெற்ற தமிழரசு அமைய வேண்டும் என்பது அவரது குறிக்கோள்.

1948இல் அண்ணா பெரியாருடன்தான் இருந்தார். பெரியாரின் உரைக்கு எதிராக கி.ஆ.பெ. விசுவநாதம் வைத்த கேள்வி அண்ணாவுக்கும் உரியதுதான். அக்கேள்வியை அண்ணா சிந்தனைக்கு எடுத்துக் கொண்டிருந்திருக்க வேண்டும்.

ஆரியர், வடவர், பார்ப்பனர் மற்றும் மார்வாடி அரசாகிய இந்திய அரசிடமிருந்து விடுதலை பெற திராவிடர்கள் ஓரணியில் நிற்க வேண்டும்; அவ்வாறில்லா விட்டால் தம் போராட்டம் வலுவிழந்து போகும் என்ற பார்வையைப் பெரியார் 1948 இல் கொண்டிருந்தார்.

ஆகவே பெரியார்,    “தமிழர் என்பதும், தமிழர் கழகம் என்பதும், தமிழரசுக் கட்சி என்பதும், தமிழர் ராஜ்யம் என்பதும், தமிழ்நாடு தமிழருக்கே என்பதும் நமது முயற்சியைக் கெடுக்கும் சூழ்ச்சிகள்” என்று கூறினார்.

இத்தகைய சிந்தனைப் போக்கைக் கண்டனம் செய்து கி.ஆ.பெ. விசுவநாதம் எழுப்பிய கேள்வி திராவிட நாடு கோரிக்கை எழுப்பிய அனைவருக்கும் பொதுவானது:

….. தமிழ், தமிழர், தமிழ்நாடு, தமிழ் அரசு, என்று கூறக் கூடாதென்றும், திராவிடம், திராவிடர், திராவிட நாடு, திராவிடர் கழகம், திராவிட அரசு என்றே கூற வேண்டுமென்றும், அவர்கள் விரும்புவதாகத் தெரிகிறது. இது தமிழ்நாட்டுப் பெருமக்களுக்கு மாறுபட்ட கொள்கையாக இருந்து வருகிறது. காரணம் ஆந்திர, மலையாள, கன்னடிய மக்களாகிய சுற்றியுள்ள மூன்று நாட்டினரும் திராவிடர் எனக் கூறாமல் தங்கள் மொழியையும், நாட்டையுமே கூறி வரும் போது தமிழ்நாட்டு மக்கள் மட்டும், தங்கள் மொழியையும் நாட்டையும் பற்றி ஏன் கூறக் கூடாது? இதற்கு மாறுபட்டு இருப்பது எதன் பொருட்டு என்பது தமிழ் மக்களுக்கு விளங்கவில்லை.”

“ஆந்திர நாட்டுக்குச் சென்று ஆந்திரர், ஆந்திர நாடு என்று சொல்லுபவர்களிடம் அவ்வாறு சொல்லுகிறவர்கள் பித்தலாட்டக் கருங்காலிகள் என்று இது வரை சொல்லியிருக்கிறாரா? இனியேனும் சொல்லுவாரா?”

(மேற்கோள்: ம.பொ. சிவஞானம், புதிய தமிழகம் படைத்த வரலாறு, பூங்கொடி பதிப்பகம், சென்னை 1986, பக்.105)

இதே காலக்கட்டத்தில் இந்தியக் கூட்டாட்சிக்குள் ‘சுயநிர்ணய உரிமை’ (தன்னுரிமை) யுடன் கூடிய சுதந்திரத் தமிழகம் என்ற இலக்கை முன்வைத்து தமிழரசுக் கழகத்தை நிறுவி (தூக்கி யெறியப்படும் வரை காங்கிரசுக்குள் செயல்படும் கட்சியாக) செயல்பட்டு வந்தார் ம.பொ. சிவஞானம், இந்தியத் தேசியத்தை உயர்த்திப் பிடித்த ம.பொ.சி., ‘தமிழர்களின் உரிமைக்கு எல்லை வேங்கடம் என்றும் உறவுக்கு எல்லை இமயம்’ என்றும் இந்திய ஒருமைப்பாட்டு உணர்ச்சி தமக்கு உடன்பாடே என்றும் கூறிவந்தார். (தமிழ் முரசு, 15.4.1947) ‘ஒன்றுபட்ட இந்தியக் கூட்டாட்சிக்குள் தன்னுரிமையுள்ள தமிழகம்’ என்பது அவருடைய நிலைப்பாடு.

ஆனால்  அண்ணா இந்தியத்தை மறுப்பதில் சரியாகவும், இயல்புக்கு மாறுதலான திராவிடத்தை வலியுறுத்துவதன் மூலம் தமிழ்த் தேசிய இன விடுதலை கருத்தியலுக்குத் தடையாகவும் இருந்தார். அண்ணாவின் நாவன்மை திராவிட தேசிய உணர்வைத் தூக்கி நிறுத்தி தமிழ்த் தேசிய உணர்வைப் புறம் தள்ளியது. இதற்குச் சான்றாக ம.பொ.சி. பதிவு செய்துள்ள ஒரு நிகழ்வைக் குறிப்பிடலாம். மாகாணத் தமிழாசிரியர் மாநாட்டில் (12.3.1947) தமிழ் மாநிலம் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிகழ்ச்சியில் அண்ணாவும், ம.பொ.சியும் பங்கேற்றனர். தமிழ் மாகாணக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தும், திராவிட நாடு பிரிவினைக்கு முதன்மை தந்தும் அண்ணா பேசினார். ம.பொ.சி. இவ்வாறு பதிவு செய்கிறார்:

“தமது திராவிடர் கழகத்தின் திராவிடத் தனிநாட்டுக் கோரிக்கைக்கும், தமிழரசுக் கழகத்தின் தமிழரசுக் கோரிக்கைக்கும் வேற்றுமையில்லை யென்று கூறி (அண்ணா) எங்களிடையே உறவை வளர்ப்பதில் தமக்குள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தினார். ‘திராவிடத் தனியரசு ஓரணா போன்றதென்றும், தமிழரசு காலணா போன்றதென்றும் கூறினார். ‘நான் கேட்கும் ஓரணாவில், ம.பொ.சி. கேட்கும் காலணா இருக்கிறது. ஆனால், ம.பொ.சி. கேட்கும் காலணாவில் ஓரணா இல்லை என்றார்.”

மாநாட்டில், ‘இந்தியத் தேசிய ஒருமைப்பாட்டுக்குட்பட்ட தமிழரசு’ என்ற கோரிக்கைக்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

‘தமிழ்’ என்றும் ‘தமிழினம்’ என்றும் ‘தமிழ்நாடு’ என்றும் பேசுமுன் ம.பொ.சி. குரல் எழுப்புவதும், வாழ்க என்று வாழ்த்துக் குரலை மக்கள் எழுப்புவதும் வழக்கம். ஆனால் அன்று நடந்ததை ம.பொ.சி. இவ்வாறு பதிவு செய்கிறார்:

“ஆனால், தமிழாசிரியர் மாநாட்டிலே, எனக்கு முன் திராவிட இன உணர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் தந்து அண்ணா பேசி விட்டதால், நான் ‘தமிழினம் வாழ்க’ என்ற போது, மாநாட்டிலே தீவிர திராவிடர் பலர் ‘திராவிட இனம் வாழ்க’ என்றும், நான் ‘தமிழ்நாடு வாழ்க’ என்ற போது ‘திராவிட நாடு வாழ்க’ என்றும் போட்டிக் குரல் எழுப்பினர்.(ம.பொ.சிவஞானம், புதிய தமிழகம், பக்.101)

கூட்டத்தினரின் இப்போக்குக்குக் காரணம் தமிழினம், தமிழ்நாடு எனப் பேசுவதே இந்தியத்துக்கு உட்பட்டது என்ற பார்வையை நாவன்மை மிக்க அண்ணா உருவாக்கியிருந்ததே ஆகும். இந்தியத்துக்கு உடன்படா நிலையையும். ‘தமிழினம், தமிழ்நாடு விடுதலை’ என்ற கருத்தியலுக்கு முரண்படும் உளநிலையையும் மக்களிடையே அண்ணா உருவாக்கி வந்தார்.

அண்ணாவின் திராவிடம்

திராவிட நாடு விடுதலையை அண்ணா 1940 முதல் 1963 வரை உயர்த்திப் பிடித்தார். திராவிடம் முன்னாளில் தனியாட்சியுடன் இருந்தது என்றும் அதை ஆரியர், வடவர் அடிமைக்காடு ஆக்கி விட்டனர் என்றும் ‘இன்று திராவிடத்தின் தலைவிதி டில்லியில் எழுதப்படுகிறது’ என்றும் டில்லி ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலை பெற வேண்டும் என்றும் அண்ணா கருத்துரைத்தார்.

“திராவிட நாடு தனியாக வேண்டும்  – தனி அரசாக வேண்டும்.” (அண்ணா ‘இன்பத் திராவிடம்’. பக்.20)

தமிழகம், கன்னடம், ஆந்திரம், கேரளம் ஆகிய மாநிலங்களின் திராவிடக் கூட்டாட்சி: அவரவர் உரிமை, கலை, மொழி இவைகளில் கை வைக்கப்பட மாட்டாது; ஆங்காங்கே அந்தந்த வட்டார மொழிகள் பயிலப்படும். அகில உலகத் தொடர்பிற்கும் கூட்டாட்சி விவகாரங்களுக்கும் ஆங்கிலம் இருக்கும்”. ( மேலது, பக்.37)

“தமிழ்நாடு தமிழருக்குத்தான்  – ஆந்திர நாடு ஆந்திரருக்குத் தான்   கேரள நாடு கேரளருக்குத்தான்   கர்நாடகம் கர்நாடகருக்கே   இவையாவும் கூடிய திராவிட நாடு திராவிடருக்கே   ஆரியருக்கல்ல!  பனியாவுக்கல்ல!  “ (மேலது, பக்.34)

“நாம் நல்ல நிலை அடைய வேண்டுமானால் இன்னின்ன இணைப்புகளிலிருந்து, ஆரியம், ஆங்கிலம், வடநாடு என்னும் பிணைப்புகளிலிருந்து, ஜெபமாலை, துப்பாக்கி, தராசு எனும் கருவிகளைக் கொண்டு நமது வளத்தைக் கருக்கும் தொடர்புகளிலிருந்து விடுபட வேண்டும்…” ( மேலது, பக்.23-24). இதுவே அண்ணாவின் திராவிடம் பற்றிய பார்வை. அண்ணா கூறினார்:

“இந்த மூல நோக்கத்தை ஆந்திரமும், கேரளமும், கர்நாடகமும் ஏற்றுக் கொள்ளும் என்று நம்புகிறோம். ஏற்றுக் கொள்வதிலே இந்த நால்வருக்கும் நலமிருக்கிறது என்று நம்புகிறோம். அவர்கள் டில்லியுடன் இணைந்து இருப்பதை விட, கூட்டாட்சியாக நம்மோடு இருப்பது நல்லது என்று எண்ணுகிறோம். எடுத்துக் கூறும் அளவுக்கு நமக்கும் அவர்களுக்கும் பாத்தியதை உறவு, ஒரே இனம் என்ற உரிமை இருக்கிற காரணத்தால்.” (மேலது, பக்.24)

ஏன் திராவிட நாடு கோரிக்கையை ஏனைய திராவிடத்தார் ஏற்கவில்லை என்ற கேள்விக்கு அண்ணாவின் விளக்கம் இதுதான்:

“கேரளத்தார் சம்மதம் கிடைக்கவில்லை, இன்னும் கேட்காததால்; கன்னடத்தார் ஒப்புதல் வரவில்லை, அவர்களைக் காணாததால்; ஆந்திரர் ஆதரவு பெறவில்லை, அவர்களை நாம் அணுகாததால். கேட்டு மறுத்ததில்லை; நாம் சொல்லி எதிர்த்த தில்லை. அப்படியே மறுப்பதாக வாதத்துக்கு வைத்துக் கொண்டாலும் திராவிட நாடு எல்லை குறையுமே தவிர, பிரச்சினை மறைந்து விடாது.”           (மேலது, பக்.56)

ஆனால் திராவிட நாடு விடுதலைக் கோரிக்கையைச் சென்னை மாகாணத்தில் தமிழ் மாவட்டங்களைத் தாண்டி எவரும் ஏற்கவில்லை.

1938 முதல் 1949 வரை தந்தை பெரியாருடன் அண்ணா இருந்த போதும், பின்னர் 1949இல் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற தனிக்கட்சியை உருவாக்கித் தேர்தல் கட்சியாக வளர்த்தெடுத்த காலத்திலும், 1963 இல் அதைக் கைவிடும் வரை திராவிட நாடு விடுதலைக் கோரிக்கையை அண்ணா உயர்த்திப் பிடித்தார்.

தமிழ்த் தலைவர்கள் சிலர் ‘விடுதலை பெற்ற தமிழகம்’ அல்லது ‘இந்தியக் கூட்டாட்சிக்குள் தன்னுரிமை பெற்ற தமிழகம்’ அல்லது தமிழகமும் இலங்கையின் தமிழ்ப் பகுதிகளும் சேர்ந்து உருவாக்கப்படும் ‘தமிழப் பேரரசு’ ஆகிய இலக்குகளை வலியுறுத்திய காலத்திலும், அண்ணா திராவிட நாடு விடுதலை பேசினார். 1956க்கு முந்தைய சென்னை மாகாணத்தின் தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகள் பேசப்படும் மாவட்டங்களில் திராவிட நாடு கோரிக்கையைப் பரப்ப எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாமலே அண்ணா தொடர்ந்து திராவிட நாடு விடுதலை பற்றிப் பேசினார்.

இந்தியத் துணைக் கண்டத்திலே மொழி இன உணர்வின் வளர்ச்சி

மொழி வழி மாநிலங்கள் அமைப்பதற்கான கோரிக்கைகள் 1920கள் முதலே வலுவடைந்து வருவதை அண்ணா அறிந்திருந்தாலும் திராவிட நாடு கோரிக்கையைத் தொடர்ந்து எழுப்பினார். 1953இல் ஆந்திரா மொழிவாரி மாநிலமாகப் போராடிப் பிறப்பெடுத்தது.

ஆந்திர மாநிலம் கோரி 1952 அக்டோபர் 19ஆம் நாள் முதல் 58 நாள் பட்டினிப்போர் நடத்தி ‘போத்தி ஸ்ரீராமுலு’ உயிர் ஈகம் செய்ததைத் தொடர்ந்து தெலுங்குப் பகுதிகளில் கலவரம் வெடித்தது. இதற்கு மேலும் மொழிவாரி மாநிலம் உருவாக்காமல் தாமதிக்க முடியாது என்ற நிலையிலேயே தெலுங்குப் பகுதிகள் ஆந்திரமாக 1953 அக்டோபர் முதல் நாள் அறிவிக்கப்பட்டது. இது அண்ணாவுக்கும் தெரியும்; பெரியாருக்கும் தெரியும்.

போத்தி ஸ்ரீராமுலுவின் உயிர் ஈகமும் அதனால் தெலுங்கர்களுக்குக் கிடைத்த வெற்றியும் கன்னடர்களிடையே புதிய வேகத்தை உருவாக்கியது. ‘அன்னடனப்பா தோத்திமேதி’ என்னும் கன்னடர், ஜக்லி எனும் கிராமத்தில் சாகும் வரை பட்டினிப் போர் தொடங்கினார். கன்னடப் பகுதிகளில் கலவரம் வெடித்தது. இதன் பின்னர் மாநிலச் சீரமைப்புக் குழு நியமனம் பற்றி நேரு அறிவித்தார்; கலவரம் நின்றது. 1956 நவம்பர் முதல் நாள் மைசூர் மாநிலம் (கர்நாடகம்), கேரளம், சென்னை உள்ளிட்ட மொழிவழி மாநிலங்கள் பிறந்தன. மொழிவழி மாநிலங்களின் உருவாக்கத்தைத் தடுக்க இயலாமற் போனதாலேயே வேறு வழியில்லாமல் மாநிலச் சீரமைப்புக் குழு அமைக்கப்பட்டது. தெலுங்கர்களும், கன்னடர்களும், மலையாளிகளும் தங்கள் மொழிஇன மாநிலங்கள் அமைப்பதில் குறியாக இருந்தனர். தமிழ்ப் பகுதிகளுடன் இணைந்து ஒரே மாகாணமாக இருக்க அவர்கள் விரும்பவில்லை.

தமிழ்நாடு விடுதலைக் கோரிக்கையும் பெரியாரும்

மொழிவழி  மாநிலங்கள் அறிவிக்கப்படும் நிலையில், 1956ஆம்ஆண்டு  யூன் மாதமே பெரியார் திராவிடநாடு கோரிக்கையைக் கைவிட்டார். பெரியாரின் கோரிக்கை காலம், களம் இவற்றுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டது. இலக்கு மட்டும் முழுமையான விடுதலை என்பதிலிருந்து மாற்றம் காணவில்லை. பெரியார் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று தம் விடுதலை இதழில் அச்சிட்டார்; தனித் தமிழ்நாடு கோரினார். மொழிவழி மாநில உருவாக்கம் இந்திய ஆரிய,வடவர் ஆதிக்கத்திலிருந்து தாம் விரும்பும் விடுதலைக் கோரிக்கையை வலுவிழக்கச் செய்து விடுமோ என்று சந்தேகக் கண் கொண்டு பார்த்து வந்த பெரியார் 1956இல் தெளிவான நிலைப்பாட்டுக்கு வந்தார்.

பெரியார் எழுதினார்:

“திராவிட நாடு எது? இதற்குமுன்   1956க்கு முன் இருந்த சென்னை மாகாணந்தான் ‘திராவிடநாடு’ என்று சொன்னேன். அப்பொழுது மலையாளம், கன்னடம், ஆந்திரம், பிரிந்திருக்கவில்லை… இப்பொழுது நம்முடன் மலையாள, கன்னட நாடுகளின் சம்பந்தமில்லாமல் தனித் தமிழ்நாடாக ஆகி விட்டோம். முன்பு அவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று சொன்னோம். ஆனால், அவர்கள் பிரிந்து தனியாகப் போவதிலேயே கவனத்தைச் செலுத்திப் பிரிந்து போய் விட்டார்கள்….

“தமிழ்நாடு தனியாகப் பிரிந்தால் இருக்குமா என்று கேட்கிறார்கள். இல்லாமல் காக்கை, கழுகு தூக்கிக் கொண்டா போய் விடும்? பக்கத்தில் இருக்கும் இலங்கையும், பர்மாவும் இருக்கும் பொழுது நாம் மட்டும் இருக்க முடியாதா? நமக்குப் போதுமான வசதி இங்கேயே இருக்கிறது”.

(விடுதலை, 29.8.1956; வே. ஆனைமுத்து, பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், பக் -732)

1953இல் ஆந்திரா தனித் தெலுங்கு மாநிலமாகப் பிரிந்த உடனேயே பெரியாரிடம் மாற்றம் ஏற்பட்டது. 1955 இல் பெரியார் மொழிவாரி மாநிலப் பிரிவினையை வரவேற்றார். அது தம் விடுதலை இலக்கை அடைய உதவும் என்று கருதினார்:

“பொதுவாக ஆந்திரா பிரிந்ததிலிருந்தே நாட்டுப் பிரிவினையில் எனக்குக் கவலை இல்லாமல் போய் விட்டது. பிறகு கன்னடமும் மலையாளமும் (கர்நாடகமும் கேரளாவும்) பிரிவதில் இரண்டு மூன்று காரணங்களால்  – இவை சீக்கிரத்தில் பிரிந்தால் தேவலாம் என்கின்ற எண்ணம் தோன்றி விட்டது. என்ன காரணம் என்றால்,

“ஒன்று, கன்னடியனுக்கும் மலையாளிக்கும் இனப்பற்றோ, இனச் சுயமரியாதையோ, பகுத்தறிவுணர்ச்சியோ இல்லை என்பதாகும்….

“இரண்டு, அவர்கள் இருவருக்குமே   மத்திய ஆட்சி என்னும் வடவராட்சிக்குத் தங்கள் நாடு அடிமையாய் இருப்பது பற்றியும் சிறிதும் கவலையில்லை…. மூன்றாவது இவர்கள்   இரு நாட்டவர்களும் பெயரளவில் இருநாட்டவர்களானாலும், அளவில், எஞ்சிய சென்னை இராச்சியம் என்பதில் 14 மாவட்டங்களில் (ஜில்லாக்களில்) இரண்டே ஜில்லாக்காரர்களாவார்கள்…

“அப்படி 14இல் ஏழிலொரு பாகஸ்தர்களாக இருந்து கொண்டு, தமிழ்நாட்டின் அரசியல், பொருளாதாரம், உத்தியோகம் முதலியவைகளில் 3 இல் 2 பாகத்தை அடைந்து கொண்டு,இவை கலந்து இருப்பதால் நம் நாட்டைத் தமிழ்நாடு என்று கூடச் சொல்வதற்கு இடமில்லாமல் தடுத்து ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.

“இதை, நான் ஆந்திரா பிரிந்தது முதல் சொல்லிக் கொண்டே வந்திருக்கிறேன். ஆதலால், இவர்கள் சீக்கிரம் ஒழியட்டுமென்றே கருதி வந்தேன். அந்தப்படி நல்ல சம்பவமாகப் பிரிய நேர்ந்து விட்டது. ஆதலால், நான் இந்தப் பிரிவினையை வரவேற்கிறேன்.”

(விடுதலை – அறிக்கை, 11.10.1955; பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் -ய, பக்.730)

மொழிவாரி மாநில உருவாக்கத்தை பெரியார் வரவேற்றதன் காரணம் இதுவே. மொழிவாரி மாநிலப் பிரிவினையை அண்ணாவும் வரவேற்றார்.

தி.மு.க., தமிழரசுக் கழகம், கம்யூனிஸ்ட் கட்சி, ஜஸ்டிஸ் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் 1956 பிப்ரவரி 20 அமைதிப் போராட்டம் அறிவித்தன. அதன் குறிக்கோள்களை அண்ணா இப்படி அறிவித்தார்;

“தட்சிணப் பிரதேச யோசனையை வீழ்த்த –   தமிழகம் மொழிவழி அரசாக  –

தமிழ்ப்பகுதிகள் அனைத்தும் தமிழ்நாட்டில் சேர  –

சென்னைக்குத் தமிழ்நாடு என்று பெயர் கிடைக்க –

இத்தனைக்கும் சேர்த்தே பிப்ரவரி 20!”

(திராவிட நாடு, 5.2.1956; தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்- தீ , பக். 352)

இந்தக் கூட்டுப் போராட்டத்தில் தமிழ்நாடு விடுதலை கோரிய பெரியார் இல்லை என்பதும், போராட்ட இலக்குகளில் தமிழ்நாடு விடுதலை இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

அண்ணாவின் புதிரான போக்கு

1956 மொழிவழி மாநிலங்கள் உருவான பின்பும் அண்ணா திராவிட நாடு விடுதலைக் கோரிக்கையை மாற்றிக் கொள்ளவில்லை. அண்ணாவிடம் இரண்டு விதப் போக்குகளைக் காணலாம். கட்சித் தொண்டர்களிடம் பேசும் போது மிகை விடுதலை உணர்வு பொங்கப் பேசுவதும், அரசு மற்றும் அதிகார அமைப்புகளிடம் பேசும் போது அதை வரம்புக்கு உட்படுத்திக் கொள்ளுவதுமான போக்கு இருந்தது.

தட்சணப் பிரதேசக் கொள்கையை எதிர்த்தும் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கக் கோரியும் 1954ஆம் ஆண்டு மே 3ஆம் நாள், பஸல் அலியைத் தலைவராகக் கொண்ட மாநிலச் சீரமைப்புக் குழுவிடம் அண்ணா ஓர் அறிக்கையை அளித்தார். அதன் உள்ளீடு ஆழ்ந்து பரிசீலிக்கத்தக்கது:

“இந்த நான்கு மொழிவழிப் பிரிவுகளை அமைப்பதுதான் உடனடித் தேவை என்பதை திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்துக்காட்ட விரும்புகிறது. இதைச் செய்யும் போது எந்த ஒரு மொழிப் பிரிவும் மற்றொரு மொழிப் பிரிவின் நிலப்பரப்பை அபகரித்துக் கொள்ளாதவாறு அதிகாரத்தில் உள்ளோர் முழுக் கவனம் செலுத்த வேண்டும். விசால ஆந்திரம், சம்யுக்த கர்நாடகம், ஐக்கிய கேரளம், தமிழகம் என்ற பெயரால் உலவும் கோரிக்கைகளை தி.மு.க முழு மனதுடன் வரவேற்பதுடன் ஆதரவளித்தும் வருகிறது. அதிகாரங்கள் பரவலாக்கப்படவேண்டும், மொழிவழிப் பிரிவினை வேண்டும் என்ற இரண்டின் சேர்க்கையே திராவிட நாடு கோரிக்கையாகும்.” (மேற்கோள்: அருணன், அண்ணா ஆட்சியைப் பிடித்தது எப்படி? மதுரை, 2005, பக்.46)

மொழிவழி மாநிலங்கள் 1956 நவம்பர் முதல் நாள் அதிகார பூர்வமாகச் செயல்பாட்டுக்கு வந்தன. அண்ணாவின் அறிக்கைப்படி அதிகாரப் பரவல் மட்டுமே எஞ்சியிருந்தது. ஆனால் அண்ணா தம்பிகளிடம் மீண்டும் திராவிட நாடு விடுதலை பற்றிப் பேசினார். தமிழ்த்தேசியத்தையும், தமிழ்நாடு விடுதலையையும் அண்ணா கையிலெடுக்கவே இல்லை.

தமிழ்த் தேசியத்தை எவர் பேசினாலும் அவர்களைப் பின்னுக்குத் தள்ளினார் அண்ணா. தம் நாவன்மையால் அவர் சரியான திசைவழி வந்த தலைவர்களையயல்லாம் மக்களின் பார்வையில் ஈர்ப்பு இழக்கச் செய்தார். அது ம.பொ.சி. ஆனாலும், கட்சிக்குள் கலகக் குரல் எழுப்பி வெளியேறிய ஈ.வெ.கி. சம்பத் ஆனாலும், அண்ணாவின் பழிப்புரைகளுக்கு ஆளாயினர். தமிழ்த் தேசிய இன மறுப்பு என்பது மட்டுமின்றி, இன்றும் கலைஞர் கருணாநிதி பேசுகின்ற ‘மொழியால் தமிழர், இனத்தால் திராவிடர். நாட்டால் இந்தியர்’ என்கிற வகைபடுத்த முடியாக் குழப்பமான தேசிய அடையாளத்தின் தொடக்கப் புள்ளி அறிஞர் அண்ணாவே ஆவார்.

திராவிடராகத் தம்மை அழைத்துக் கொண்ட அண்ணா மறந்தும் தம்மைத் தமிழ்த் தேசிய இனமாகப் பார்க்கவில்லை. 1956 இல் தமிழ் மாவட்டங்கள் தனியாகப் பிரிக்கப்பட்டு சென்னை மாநிலமாக (தமிழ்நாடு) அமைக்கப்பட்ட பிறகும் கூட அண்ணா திராவிட அடையாளத்தையே உயர்த்திப் பிடிக்கக் காரணம் என்ன?

தந்தை பெரியார் ‘திராவிடர்’ என்ற சொல்லைப் பயன்படுத்தும் பொழுது பார்ப்பனர்கள் ‘தமிழர்கள்’ என்று கூறிக் கொண்டு அமைப்புக்குள் நுழையா வண்ணம் தடுக்க முடியும் என்ற கருத்தைக் கொண்டிருந்தார். ஆனால் திமுக.வில் வி.பி. இராமன் போன்ற பார்ப்பனர்கள் நுழைந்து முக்கியத் தலைவர்களாக வர முடிந்தது. அவ்வாறு இருந்தும் அண்ணா ‘திராவிடர்கள்’ என்ற சொல்லையும் ‘திராவிட நாடு’ என்ற சொல்லையும் பயன்பாட்டுக்கு வைத்துக் கொண்டதன் நோக்கம் என்ன?

அண்ணாவின் அரசியலே இதற்குக் காரணம் ஆகும். பெரியாரைப் போலன்றி அண்ணா தேர்தல் அரசியலைத் தம் வழிமுறையாகக் கொண்டார். 1952இல் நடைபெற்ற முதல் தேர்தலில் தி.மு.க போட்டியிட வில்லை. ஆனால் 1957இல் நடைபெற்ற இரண்டாவது பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 15 சட்டமன்ற இடங்களையும், 1962இல் 50 சட்டமன்ற இடங்களையும் 1967இல் தமிழக ஆட்சி பீடத்தையும் தி.மு.க. கைப்பற்றியது.

தி.மு.கவின் தேர்தல் வெற்றிகளுக்கும் அண்ணா தம்மைத் தமிழ்த் தேசியராகப் பார்க்க மறுத்தமைக்கும் தொடர்பிருக்கிறது. மொழி வாரி மாநிலப் பிரிவினைக்குப் பிறகும் தமிழகத்தில், அதிலும் குறிப்பாக தமிழக எல்லைப் பகுதி மாவட்டங்களில் பிற மொழியாளர்கள் மிக அதிக எண்ணிக்கையில் உள்ளனர். தம்மைத் தமிழ்த் தேசிய இனத்தவர் என்று அடையாளப்படுத்திக் கொண்டால், பிற மொழியாளர்களின் வாக்குகளைக் கணிசமான அளவில் இழக்க வேண்டியிருக்கும் என்பதை அண்ணா அறிவார். இன்றும் தமிழக எல்லைப் பகுதிகளில், வேலூர் இராணிப் பேட்டை போன்ற பகுதிகளில் தெலுங்கில் மட்டுமே ஆரம்பப் பள்ளிகளில் கல்விபெறும் வாய்ப்பை திமுக அரசு அளித்திருக்கிறது. கடந்த காலத் தேர்தல்களின் போது முரசொலி மாறன் போன்றவர்களே பிறமொழியாளர்களின் குடியிருப்புப் பகுதியில் இந்தியில் வாக்குக் கேட்டனர் என்ற செய்தியை இத்துடன் பொருத்திப் பார்க்க வேண்டும்.

தேர்தலில் வெற்றி பெற வாக்குகளைப் பெறும் வகையில் தன் கொள்கைகளை வடிவமைத்துக் கொள்வது, கொள்கைகளில் சமரசம் செய்து கொள்வது என்ற போக்கை அண்ணாவே தொடங்கி வைத்தார். இந்திய ஒருமைப்பாட்டுக்கு விசுவாசம் பாராட்டிப் பங்கெடுக்கும்  தேர்தல் அரசியலில் திமுக.வை ஈடுபடுத்தியதன் மூலம் இன்றைய திராவிட கட்சிகளின் பிழைப்புவாத அரசியலின் தொடக்கப் புள்ளியை அண்ணாவே அளித்தார். அண்ணா எளிமையானவராகவும் அதிகாரம் செலுத்திய காலத்தில் ஊழலுக்கு அப்பாற்பட்டவராகவும் இருந்திருந்தாலும் அவருடைய அரசியல் வழித்தோன்றல்களின் ஊழல் நிறைந்த பிழைப்புவாத அரசியல் என்பது அண்ணா ஏற்படுத்திக் கொடுத்த தொடக்கத்தின் பரிணாம வளர்ச்சியே என்பதை மறுக்க வியலாது.

தமிழ்த் தேசியக் கோட்பாட்டை முன்னிறுத்தி சரியான திசைவழியை எவர் முன்னெடுத்தாலும் அண்ணா தடைக்கல்லாக நின்று தமிழ்த் தேசிய வளர்ச்சியைக் குன்றச் செய்தார்.

சி.பா. ஆதித்தனாரின் தமிழ்த் தேசியத்துக்கு அண்ணாவின் மறுப்பு

தமிழ்த் தேசிய உணர்வாளரான சி.பா. ஆதித்தனார் உலகத் தமிழர்கள் அனைவரது பாதுகாப்பு பற்றியும் சிந்தித்தவர். 1942இல் தமிழக விடுதலையை இலக்காக் கொண்டு தமிழ் ராஜ்ய (தமிழ் அரசு) கட்சியை உருவாக்கினார். பின்னர் நாம் தமிழர் இயக்கத்தை உருவாக்கினார். தில்லி ஆதிக்கத்திலிருந்து தமிழ்நாடு விடுதலை அடைய வேண்டும் என்பதே ஆதித்தனாரின் அரசியல். 1962 தேர்தலின் போது ஆதித்தனார் தமிழ்நாடு இந்தியாவிலிருந்து பிரிய வேண்டும் என்ற சிந்தனையைப் பரப்புரை செய்தார். ஆதித்தனாரை விமர்சனம் செய்த அண்ணா இவ்வாறு கூறினார்:

“சி.பா. ஆதித்தனார் கேட்கும் தனித் தமிழ்நாடு என்பது ஒரு தொழுநோயாளியின் கையிலிருக்கும் வெண்ணெயைப் போன்றது. அது யாருக்கும் பயன்படாது.”

அண்ணாவின் இந்தக் கடுமையான விமர்சனத்துக்கு ஆதித்தனார் இவ்வாறு பதிலிறுத்தார்:

“மெத்தப் படித்த அண்ணாத்துரை அவர்களே! இன்று இந்தியக் கூட்டாட்சியில் தமிழ்நாடு அடிமைப்பட்டிருப்பதைப் போல, நீங்கள் கேட்கும் திராவிடக் கூட்டாட்சியிலும் தமிழ்நாடு அடிமை நாடாகத்தான் இருக்கும். அதை விட இந்தியக் கூட்டாட்சியிலேயே அடிமை நாடாக இருந்து விடலாமே! அது மட்டுமன்று. ‘திராவிட நாடு’ என்ற குழந்தையைப் பெற்றவர் பெரியார். அதை வளர்த்தவரும் அவரே. பின்னர் அவரே அத்திராவிட நாடு என்ற குழந்தை செத்து விட்டது, அதைக் குழிதோண்டிப் புதைத்து விட்டேன் என்று அறிவித்து விட்டார். இவ்வாறு அவர் அறிவித்த பிறகும் ‘திராவிட நாடு’ பிணத்தைத் தோண்டி எடுத்துக் கொண்டு வந்து, ‘திராவிட நாடு திராவிடருக்கே!’ என்று கதறியழுது கொண்டிருப்பதில் பொருளில்லை” (மேற்கோள்: குணா: தமிழின மீட்சி, ஒரு வரலாற்றுப் பார்வை, தமிழக ஆய்வரண், பெங்களூர், 1996, பக்.66)

ஈ.வெ.கி. சம்பத்தின் தமிழ்த் தேசியத்துக்கு அண்ணாவின் மறுப்பு

தி.மு.க.வை விட்டு வெளியேறிய ஈ.வெ.கி. சம்பத் மீதான அண்ணாவின் தாக்குதல்களும் இவ்வகையில் குறிப்பிடத்தக்கவை.

தி.மு.க.வுக்குள் 1960 முதல் ஓர் அதிகாரப் போட்டி நடந்து கொண்டிருந்தது. 1949இல் கட்சி தொடங்கப்பட்டது முதல் 1955 வரை கட்சியின் பொதுச் செயலாளராக அண்ணாவே இருந்தார். ஒரு மாறுதலுக்காக 1955 முதல் 1960 வரை நாவலர் நெடுஞ்செழியன் பொதுச் செயலாளராக இருந்தார்.1960இல் ஈ.வெ.கி. சம்பத்துக்கும் கலைஞர் கருணாநிதிக்கும் இடையிலான பனிப்போர் உச்சக்கட்டத்தை அடைந்தது. இவர்கள் போட்டியை அமைதிப்படுத்த அண்ணாவே மீண்டும் பொதுச் செயலாளர் ஆனார். உண்மையில் கட்சியே கிட்டத்தட்ட சம்பத் கட்டுப்பாட்டுக்குள் இருந்ததாக அவரது ஆதரவாளர் கண்ணதாசன் ‘வனவாசம்’ என்ற தன் வரலாற்று நூலில் குறிப்பிடுகிறார். சம்பத் அவைத் தலைவர், கருணாநிதி பொருளாளர் என்று அப்போதைக்குப் பிரச்சினை தீர்க்கப்பட்டிருந்தது.

சம்பத்தை குத்திக் காட்டும் வகையில் அண்ணா எழுதிய ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ (தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் வடிவில்) கட்டுரைக்கு எதிர்வினையாக சம்பத் தென்றல் இதழில் எழுதிய ‘அண்ணாவின் மன்னன்’ கட்டுரை மீண்டும் பிரச்சினையை எழுப்பியது.

வேலூரில் நடைபெற்ற பொதுக் குழுக் கூட்டத்திற்கு (21 -22 சனவரி 1961) முன் நடந்த செயற்குழு கூட்டத்தில் சம்பத் தாக்கப்பட்டார். பிப்ரவரி 1961இல் திருச்சியில் கண்ணதாசன் மீது செருப்பு வீசும் முயற்சி, அதைக் கண்டித்து சம்பத் பட்டினிப் போராட்டம், பிறகு அண்ணா அழுது சமாதானம் செய்தது, (1961) ஏப்ரல் மாதம் சென்னையில் டி.எம். பார்த்தசாரதி எழுதிய திமுக வரலாறு நூல் வெளியீட்டு விழாவிற்கு சம்பத் பேசச் சென்றது. ஆனால் அண்ணா வராமற் போனது  – என்ற தொடர் நிகழ்வுகளின் கசப்பு காரணமாக 1961 ஏப்ரல் 9இல் சம்பத் திமுகவை விட்டு வெளியேறினார். ஏப்ரல் 19 அன்று தமிழ்த் தேசியக் கட்சியைத் தொடங்கினார். தமிழ்த் தேசியக் கட்சி அரசியல் அறிவியலின் அடிப்படையில் சரியான புரிதலோடு தமிழ்த் தேசிய அரசியலை முன் வைத்தது.

திமுக வில் இருக்கும் போதே, சம்பத் உட்கட்சிச் சீர்கேடுகள் மீது மட்டுமின்றி, ‘திராவிட நாடு பகற்கனவாகி விட்டது’ என்றும் ‘தமிழ்நாட்டிலேயே இருந்து கொண்டு திராவிட நாடு பற்றிப்  பேசுவது பைத்தியக்காரத்தனம்’ என்றும் வெளிப்படையான விமர்சனங்களை வைத்தார்.

தமிழ்த் தேசியக் கட்சியின் முதல் மாநாடு 1961 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 -17 ஆகிய மூன்று நாட்கள் சென்னையில் நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட அரசியல் கொள்கைத் தீர்மானம்:

“மொழி வழி தேசிய இனங்களுக்கு முழுச் சுதந்திரம் அளிப்பதின் மூலம்தான் அவற்றின் தேசிய அபிலாஷைகள் நிறைவேற்றப்பட முடியும். ஒவ்வொருவரின் அறிவுத் திறனும் படைப்பாற்றலும் பூரணமாக வெளிப்பட்டு சமூக நல்வாழ்வு தழைக்க முடியும்.

“ஒவ்வொரு மொழிவழித் தேசிய இனத்திற்கும் தன்னைத் தானே ஆண்டு கொள்ளும் பூரண சுதந்திரம் அளிக்க வேண்டும். அவ்விதம் சுதந்திரம் பெற்ற தேசிய இனங்கள் தம்மிச்சையாக ஒன்று கூடி பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய ஒரு கூட்டமைப்பைக் காண வேண்டும். இதுவே இந்தியாவின் அரசியல் பிரச்சனைகளுக்கெல்லாம் ஒரு நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும் என்று த.தே.க. கருதுகிறது.

“இந்தியக் கூட்டாட்சியில் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தமிழ்த் தேசியத் தன்னாட்சி காண்பது என்ற கட்சியின் இலட்சியம் இந்த அடிப்படையில் அமைந்ததாகும். எனவே “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற இலட்சிய முழக்கத்தின் வெற்றிக்குப் பாடுபட வாரீர் என்று தமிழக மக்களை இம்மாநாடு அறைகூவி அழைக்கிறது.”

தமிழ்த் தேசியக் கட்சியின் தீர்மானம் தேசிய இனத் தன்னுரிமையை தன் சாரமாகக் கொண்டிருப்பதை உணரலாம்.

1961இல் சம்பத் முன்வைத்த பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தமிழ்த்தேச இலக்கை கொச்சைப் படுத்திய அறிஞர் அண்ணா, 1957 திமுக தேர்தல் அறிக்கையில் அதே இலக்கைத்தான் தங்கள் குறிக்கோளாகத் தெரிவித்திருக்கிறார்.

திமுக வின் 1957 தேர்தல் அறிக்கை

சுயநிர்ணய உரிமை வேண்டும்

“இந்திய அரசியல் சட்டம் உரிமை வழங்கும் சாசனமாக அமையாமல், பெரிதும் உரிமையை மறுத்த வடநாட்டு ஏகாதிபத்தியத்திற்கு அரண் செய்யும் சட்டத் தொகுப்பாக உள்ளது. இந்திய யூனியனில் பிணைக்கப்பட்டிருக்கும் எந்த மாநிலமும் வெள்ளையன் வெளியேறிய போது இந்திய யூனியன் என்னும் அமைப்பில் இணைவதற்கான விருப்பு வெறுப்பைத் தெரிவித்துக் கொள்ள வாய்ப்பே பெறவில்லை. அடுத்து யூனியன் அமைப்பிலிருந்து ஏதாவது ஒரு மாநிலம் பிரிந்து செல்ல விரும்பினால், பிரிந்து செல்லும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. ஏனைய மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் சம்மதித்தால்தான் பிரிந்து செல்ல முடியும் என்ற விதியினை அரசியல் அமைப்பு ஏற்படுத்திக் கொண்டுள்ளது. எனவே, அரசியல் அமைப்பில் செய்யப் படவேண்டிய முதல் மாற்றம், எந்த ஒரு மாநிலமும் எப்போது வேண்டுமானாலும் இந்திய யூனியனில் இருந்து பிரிந்து சென்று தனித்து இயங்கும் உரிமையைத் தானே பெற்றிருக்க வழி செய்வதுதான்”.

தமிழ்த் தேசியத்தை சம்பத் முன்னிறுத்திய போது முன்னைவிடவும் பலமாக திராவிட நாடு கோரிக்கையை அண்ணா முழங்கினார். முன்னமே திராவிடநாடு சுடுகாடு அடைந்து விட்ட நிலையில் ‘அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு ‘என்று முழங்கினார்.

சம்பத் முன்வைத்த, அறிவியலின் பாற்பட்ட ‘பிரிந்து போகும் உரிமையோடு கூடிய தமிழகம்’ என்ற, உலகளாவிய தேசிய இனத் தன்னுரிமை ஏற்பளிப்புக்கு உகந்த தமிழின அரசியல் கோட்பாட்டை அண்ணா எதிர்கொண்ட விதம் அறிவின்பாற்பட்டதோ அறிவியலின் பாற்பட்டதோ அல்ல. அண்ணாவின் கேள்விகள் இந்தக் கோணத்தில் அமைந்திருந்தன:

  1. திராவிட நாடு கோரிக்கையைத் தமிழ்நாடு என்று மாற்றிக் கொள்வதால் என்ன பெரிய பலன் கிடைத்துவிடப் போகிறது?
  2. திராவிட நாடும் கிடைக்கப் போவதில்லை, தமிழ்நாடும் கிடைக்கப் போவதில்லை. இதில் கோரிக்கை எதுவாக இருந்தால் என்ன?

இந்தக் கேள்விகளை அண்ணாவின் நீண்ட வாதங்களின் சாரமாக நாம் கொள்ளலாம். (கேள்விகளின் வடிவம் கட்டுரையாளருடையது.)

  1. பிரிந்து போகின்ற உரிமையுடள் கூடிய தமிழ்நாடு என்ற சம்பத்தின் கோரிக்கையை இந்தியாவுடன் சேர்ந்திருப்பதற்கான உத்தியாக அண்ணா சித்திரித்தார். ‘இந்தியர் ஆகின்றனர்’ என்று தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களில் நையாண்டி செய்தார். (தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் -140 (21.5.1961) கடிதம் 141 (28.5.1961)

திராவிட விடுதலையில் நம்பிக்கை இல்லா அண்ணா

திராவிட நாடு கோரிக்கையில் அண்ணாவுக்கே நம்பிக்கையில்லை ; அது கிடைக்காது என்று அவருக்கே தெரியும். ஆனால் கட்சித் தொண்டர்களுக்கு உணர்வூட்டுவதற்கும், சட்டசபையில் அதிக இடங்கள் பெறுவதன் மூலம் திராவிட நாட்டை வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கையூட்டி தேர்தல் வெற்றிகளைக் குவிப்பதற்கும் அண்ணா அதைப் பயன்படுத்தினார்.

திராவிட நாடு கோரிக்கையை விமர்சனம் செய்து பிரச்சினையை அதிகமாக்கிக் கொண்டிருந்த சம்பத்துடன் அண்ணா நடத்திய பேச்சுவார்த்தை பற்றிய பதிவு முக்கியமானது. இதைக் கண்ணதாசன் பதிவு செய்திருக்கிறார்:

“அண்ணா அவர்களுடன் இதைப் பற்றிப் பேசுவது என்று முடிவு செய்து வி.பி. ராமன் அவர்களுடைய வீட்டில் அண்ணா அவர்களைச் சந்தித்து திராவிட நாட்டுக் கொள்கையைக் கைவிட்டு விட்டால் கழகத்திற்கு நல்ல எதிர்காலம் என்று சம்பத் அவர்களும் மற்றவர்களும் பேசினார்கள். அதற்கு அண்ணா அவர்கள் கைவிட முடியாது என்று சொல்லவில்லை. அவர் சொன்னது:

காலம் வரும். காலத்தை எதிர்பார்த்துக் காரியம் செய்ய வேண்டும். ஒரு கட்டம் வரும்போது நானே அதை மாநாட்டில் அறிவித்து விடுகிறேன். அதுவரை அதை திடீரென்று வெளியிட்டால் நம்முடைய தோழனுக்கு அதிர்ச்சி ஏற்பட்டு விடும். அதனால் அதுவரையில் இதைப் பற்றி பேச வேண்டாம். விரிவாக விவாதிக்க வேண்டாம் என்பதே.” (மேற்கோள்: அருணன், அண்ணா ஆட்சியைப் பிடித்தது எப்படி?, மதுரை, 2005, பக்.100)

கண்ணதாசனின் சொற்களை அப்படியே நாம் ஏற்கவில்லையென்றாலும் கூட, அதில் உண்மை இருப்பதையும், அப்படி ஒரு கூட்டம் நடைபெற்றதையும் சமகாலத்திய உணர்வாளர்கள் உறுதிப்படுத்துகின்றனர். அண்ணா தமது அரசியல் இலக்கைப் பொறுத்த வரை நேர்மையாக இருக்கவில்லை ; திராவிடத் தேசியத்தை அண்ணா உயர்த்திப் பிடித்தது அறிந்தே செய்த தவறு.

அண்ணா திராவிட நாடு கோரிக்கையைத் தம் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் கைவிட்ட திறமையும் விதமும் விரிவாகத் தனி ஆய்வில் பேசத் தக்கவை. 1961இல் ‘அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு’ என்று முழங்கிய அண்ணா, 1962 இல் சீனப் படையயடுப்பைக் காரணம் காட்டி ‘நேருவின் கரத்தை வலுப்படுத்தியே தீருவோம்’ என்று முழங்கினார். 1963இல் இந்திய அரசியல் சட்டத்தில் 16ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டது. தேர்தலில் போட்டியிட்டு வென்றவர்கள் பதவியேற்கும் போது இந்திய இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று இத்திருத்தம் கூறியது. பிரிவினை கோருபவர்களுக்கு சிறை என்றோ அபராதம் என்றோ ஏதும் கூறாத நிலையிலேயே அண்ணா தம் திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டார். தேர்தலில் போட்டியிட்டுச் சட்ட மன்றம் செல்லும் உரிமையை திமுக காப்பாற்றிக் கொண்டது.

ஆனால், இந்திய இறையாண்மைக்கு உட்பட்டு சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் திராவிடர்களுடைய தன்னுரிமைக்காக அண்ணா எடுத்து வைத்த வாதங்களும், எடுத்துக் கொண்ட முயற்சிகளும் பாராட்டத்தக்கவை. தாம் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டாலும் அதற்கான காரணங்கள் அப்படியே இருப்பதாக அண்ணா தமிழ்நாடு சட்ட மன்றத்தில் கூறிய சொற்களின் நோக்கும், அதன் வரலாற்றுப் பரிமாணமும் விரிவாக ஆய்வு செய்யத் தக்கவை.

உலகெங்கும் விடுதலை பெற்ற தேசிய இனங்கள் ஆயினும் சரி, விடுதலை கோரிப் போராடும் தேசிய இனங்கள் ஆயினும் சரி, சிந்தனையாளர்களும், தலைவர்களும் சிந்திய விடுதலைச் சிந்தனைகள் வேர்விட்டுத் துளிர்விட்டு பெருமரமாகி உரிமைக் கனிகளைத் தன் நிழலில் தங்கும் அத்தேசிய இனத்தவர்க்கு வழங்கும்.

அண்ணா நட்டு வைத்த திராவிடத் தேசியம் வளர்ந்து விரிந்து தழைத்து மரமாக வில்லை; அது வளர்ப்புள்ள மரமன்று; அது ஏணி மரம் போன்றது. அதை நட்டு வைத்தவர்களைத் தேர்தல் படிகள் மூலம் பதவிப் பரணுக்கு ஏற்றி விட்டது. உயிர்ப்புள்ள தமிழ்த்தேசியத்தை மறுத்த அண்ணாவின் திராவிட தேசியம் வேர் பிடிக்கவில்லை; ஏணி மரம் வேர் விட்டதாக வரலாறு இல்லை.

(சமூகநீதித் தமிழ்த் தேசம் செப்டம்பர் 2009 இதழில் வெளிவந்த கட்டுரை)


தமிழ்நாட்டு பேர்நாட் ஷோ அறிஞர் அண்ணா

நக்கீரன்

‘அண்ணா துரையென்னும் அண்ணல்
தமிழ்நாட்டு வண்ணான் அழுக்கெடுப்பில்
வாய்மொழியில் பண்ணாவான்
சிற்பன் எழுத்தோவியத்தில்
செவ்வரசு நாவான்
அற்புதம் சூழ்மாலுமி என்றாடு’

எனப் போற்றுப்பட்டவர் பேரறிஞர் அண்ணா. போற்றியவர் தமிழ்த் தென்றல் திரு.வி.க. என்று அழைக்கப்படும் கல்யாணசுந்தரனார்.

சொல்லின் செல்வர் இரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள் ‘ஆயிரம் மேடை ஏறிய அறிஞர். பல்லாயிரம் மக்களின் உள்ளத்தை ஒருங்கே கவரும் சீரிய கூரிய சொல்லாளர். கண்ணின்று கண்ணறச் சொல்லும் திண்ணியர்’எனப் பாராட்டுவர்.

ஒருவர் ஒருதுறையில் புகழீட்டுவதே அரிதான செயல் ஆகும். ஒருவர் பல் துறையில் புகழீட்டுவது அதைவிட அரிதான செயல் ஆகும். பேரறிஞர் அண்ணா பல் துறைகளிலும் முத்திரை பதித்து புகழ்க் கொடி நாட்டிய சாதனையாளர் ஆவார்.

பேரறிஞர் அண்ணா சிறந்த எழுத்தாளர், கேட்டாரும் கேளாதவரும் பிணிக்குமாறு பேசும் நல்ல பேச்சாளர், கட்டுரையாளர், சிறுகதை எழுத்தாளர், நாடக ஆசிரியர், நாடக நடிகர், மக்கள் தலைவர், சமூக சிந்தனையாளர், பகுத்தறிவாளர், நாடாளுமன்றாளர்.

தமிழ் இனிமையான மொழி என்று நாம் சொல்லிவந்தாலும் அதனை உரைநடை மூலம் இக்காலத்தில் எண்பித்தவர் பேரறிஞர் அண்ணா மட்டுமே.

தமிழில் எதுகை மோனையோடு முதலில் எழுதியும் பேசியும் காட்டியவர் பேரறிஞர் அண்ணா ஒருவரே. எழுத்திலும் பேச்சிலும் பிறரைப் பின்பற்றாமல் தமக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டவர்.

1945 இல் அண்ணாமலைப் பல்கலைப் பட்டமளிப்பு விழா அரங்கில் துணைவேந்தர் எம். இரத்தினசாமி அவர்களின் தலைமையில் புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்களின் உருவப் படத்தினைத் திறந்து வைத்து ஆற்றிய ‘ஏ தாழ்ந்த தமிழகமே’ என்ற பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவு வரலாற்றுச் சிறப்புமிக்கது.

1948 இல் ‘மேடைப்பேச்சு’ என்ற தலைப்பில் பேசி மேடைப்பேச்சு எப்படி அமைய வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்தார்.

இந்தி எதிர்ப்புப் போரில் அண்ணாவின் பேச்சும் எழுத்தும் மாணவர் பட்டாளத்தை தடடியெழுப்பிக் களத்துக்கு கொண்டு வந்து சேர்த்தது.

தமிழ்மொழியை இயல், இசை, நாடகம் எனப் பிரித்து முத்தமிழ் என அழைக்கிறோம். இப்படியான பகுத்தல் வேறுமொழியில் இல்லை என்றும் பெருமை பேசுகிறோம். ஆனால் தமிழில் உள்ள நாடக நூல்களைப் பட்டியல் இட்டால் இரண்டு கைவிரல்களிலும் அடக்கிவிடலாம்.

தொல்காப்பியனார்க்கு முன்னரே நாடக வழக்கு தமிழ் நாட்டில் உருப்பெற்று வளர்ந்து வந்ததென்பது ‘நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம்’ என வரும் தொல்காப்பியச் சூத்திரத்தால் நன்கு புலனாகும்.

இடைச் சங்க காலத்திலேயே பரதம் என்ற பெயரில் நாடகத்தமிழ் நூலும் சுவைகளையும் மெய்ப்பாட்டினையும் தனித்தனியே விரித்துரைக்கும் ஏனைய தொன்னூல்களும் வழங்கியிருந்ததை சிலப்பதிகார உரையாசிரியர அடியார்க்கு நல்லார் (12 ஆம் நூற்றாண்டு) குறிப்பிடுகிறார்.

கடைச் சங்க காலத்து நாடகத் தமிழ் நூல்கள் பல இறந்துபட்டுவிட்டன. சயந்தம், செயிற்றியம், முறுவல், மதிவாணர் நாடகத் தமிழ் நூல், விளக்கத்தார் கூத்து, செயன்முறை, குணநூல், நன்நூல், கூத்த நூல் என்னும் பெயர்களை மட்டுமே அறிய முடிகின்றது. அவை அனைத்துமே நாட்டியம் பற்றியும் நாடகம் பற்றியும் இலக்கண முறையில் விளக்கம் கூறும் நூல்கள் ஆகும்.; அடியார்க்கு நல்லார் தரும் உரை விளக்கங்களில் செயிற்றியம், மதிவாணர் நாடகத் தமிழ் நூல்களை மேற்கோள் காட்டுவதால் அத்தகைய நூல்கள் அவர் காலத்தில் இருந்துள்ளன என்பதை உறுதி செய்ய முடிகின்றது.

இன்று கூத்த நூல் என்னும் பெயருடைய நாடகத் தமிழ் இலக்கண நூல் பழைய ஏட்டுச் சுவடியிலிருந்து எடுத்து அச்சிடப்பட்டு வெளியாகியுள்ளது. அவ்வாறே கடைச் சங்க காலத்து அறிவனார் இயற்றியுள்ள பஞ்சமரபு என்னும் நூல் இன்று கிடைத்துள்ளது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை (கிபி 1855 – 1897) அவர்களால் இயற்றப்பட்ட மனோன்மணியம் சிறந்த நாடக நூல் ஆகும். இந்த நூலிலேயே ‘நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக்கு எழில் ஒழுகும்’ என்ற தமிழ்த் தெய்வ வணக்கப் பாடல் இடம்பெற்றுள்ளது. அது போலவே ‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’ என்ற வைர வரிகள் இந்த நூலிலேயே இடம்பெற்றுள்ளது.

மனோன்மணியம் டுழசன டுவைவழn (19 ஆம் நூற்றாண்டு) என்ற ஆங்கிலக் கவிஞர் இயற்றிய ‘வுhந டுழளவ வுயநள ழக ஆடைடநவரள’ அல்லது ‘வுhந ளுநஉசநவ றுயல’ என்ற சிறு காவியத்தின் தழுவலாகும்.

19 ஆம் நூற்றாண்டில் பல நாடக நூல்கள் தமிழில் இயற்றப்பட்டு மேடைகளில் நடிக்கப்பட்டன. இவை பெரும்பாலும் புராண – இதிகாசக் கதைகளைத் தழுவியே இயற்றப்பட்டன. நாடகத் தந்தை என அழைக்கப்பட்ட சங்கரதாஸ் சுவாமிகள் 40 நாடகங்களை இயற்றியுள்ளார். இத்துறையில் புகழ்பெற்ற இன்னொருவர் பம்மல் சம்பந்த முதலியார் ஆவர். இவர் இயற்றிய ‘மனோரமா’ என்ற நாடகம் பின்னாளில் கலைஞர் கருணாநிதியின் கைவண்ணத்தில் திரைப்படமாகவும் வெளிவந்து வெற்றிக் கொடி நாட்டியது.

ஆனால் நாடகத்துறையில் ஒரு பெரிய புரட்சியை – திருப்புமுனையை – ஏற்படுத்திய பெருமை பேரறிஞர் அண்ணாவையே சாரும்.

அண்ணா எழுதிய முதல் நாடகம் சந்திரோதயம் (1934) ஆகும். நாடகத்தை எழுதியதோடு நில்லாமல் அதில் நடிக்கவும் செய்தார். அடுத்து அண்ணா ஓர் இரவு, வேலைக்காரி, நீதிதேவன் மயக்கம், சந்திரமோகன் அல்லது சிவாஜி கண்ட இந்து இராச்சியம், குமாஸ்தாவின் பெண் அல்லது கொலைகாரியின் குறிப்புக்கள் (1940) என்ற நாடகங்களை எழுதினார். இந்த நாடகங்கள் அதுவரை இருந்த நாடகத்தின் கட்டுமானத்தை முற்றாக மாற்றி அமைத்தன. சிறந்த நாடகக்காரர்களாக விளங்கிய சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல்சம்பந்த முதலியார் போன்றவர்கள் கருத்துக்களைவிட பயிற்சிக்கும் தொழில் நுட்பத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்தார்கள். அண்ணாவோ கருத்துக்கு முதலிடம் கொடுத்தார்.

1967 இல் திமுக ஆட்சியைப் பிடித்த போது “கூத்தாடிகள் ஆட்சியைப் பிடித்துவிட்டார்கள்” என்று ஆட்சியை இழந்த பக்தவத்சலம் வயிற்றெரிச்சலோடு கூறியது நினைவு கூரத்தக்கது. இது அண்ணாவுக்கு பக்தவச்சலம் சூட்டிய புகழாரம் என வைத்துக் கொள்ளலாம்.

1942 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா எழுதிய நீதி தேவன் மயக்கம் என்ற நாடகம் தமிழ் இலக்கிய உலகம் அதுவரை கண்டிராத புதிய படைப்பு! ஒரு புதிய புரட்சி!

“இரக்கமெனும் ஒரு பொருள் இல்லா அரக்கன்” என இராவணனைக் கம்பன் வருணித்த சொற்றொடரை மட்டும் கருப்பொருளாக்கிக் கம்பனைக் குற்றவாளிக் கூண்டில் நிற்க வைத்து, “நான் இரக்கமில்லா அரக்கன் என்றால் – கவுதமரின் மனைவி அகலிகையை, பொய் வேடம் பூண்டு கற்பழித்த இந்திரனை – நீங்கள் ஏன் இரக்கமில்லா அரக்கன் எனச் சொல்லவில்லை” என அடுக்கடுக்காகக் கேள்விக் கணைகளை இராவணன் மூலம் தொடுத்து நீதி தேவன் பதில் அளிக்க முடியாமல் மயங்கிய காட்சியை நாடகத்தில் அண்ணா தீட்டியிருந்தார். மக்கள் மனதில் இன்றும் நிறைந்திருக்கும் ஒப்பரிய படைப்பு இதுவாகும். இதில் இராவணன் பாத்திரத்தில் அண்ணாவே நடித்தார்.

நாடகங்களில் பேரறிஞர் அண்ணா கையாண்ட உரைநடை முற்றிலும் புதுமையானது, தமிழ் உரைநடையில் அதுவரை யாரும் கையாளாத புரட்சிகரமான உரையாடல். அந்த அற்புதமான உரைநடையினைப் பின்பற்றி ஒரு எழுத்தாளர் பரம்பரையே தோன்றியது.

என்.எஸ்.கே. நாடகசபா வேலைக்காரி நாடகத்தை மேடையேற்றி வந்தது. அப்போது என்.எஸ். கிருஷ்ணன் அதன் நிருவாகப் பொறுப்பை நடிப்பிசைப் புலவர் கே.ஆர். இராமசாமியிடம் ஒப்படைந்திருந்தார்.

அண்ணாவின் வேலைக்காரி நாடகம் 1949 ஆம் ஆண்டு திரைப்படமாக வெளிவந்தபோது அது பட்டி தொட்டியெல்லாம் பெரிய சிந்தனைப் புரட்சியை ஏற்படுத்தியது. ஆத்தீகர்களை அரள வைத்தது. சாதி வெறியர்களை அலற வைத்தது.

ஹரிதாஸ், சிவகவி, நந்தனார், சம்பூர்ணராமாயணம், சிவலீலா, கிருஷ்ணலீலா, சக்திலீலா எனப் புராண – இதிகாசப் படங்களே வந்து கொண்டிருந்த பின்னணியில் சாதித் திமிர், பணத்திமிர், மூடநம்பிக்கை போன்றவற்றைச் சாடி வரையப்பட்ட நாடகம் வேலைக்காரி. பெரிய மனிதர், பக்திமான் என்ற போர்வையில் சமுதாயத்தில் இரட்டை வேடம் போட்டுத் திரிபவர்களின் முகமூடியை அண்ணா கிழித்துக் காட்டினார்.

அண்ணாவின் ‘ஓர் இரவு’ நாடகத்தைப் பார்த்த கல்கி கிருஷ்ணமூர்த்தி அறிஞர் அண்ணாவை ‘தமிழ்நாட்டின் பேர்நாட் ஷோ’ என வருணித்து எழுதியிருந்தார்.
வேலைக்காரி திரைப்படத்தைப் பார்த்துவிட்டு திறனாய்வு எழுதிய கல்கி அந்தப் படத்துக்கு அண்ணா எழுதிய உரையாடல்கள் “உறையில் இருந்து உருவிய வாள் போல் மின்னியது” என மனம் திறந்து பாராட்டியிருந்தார். எதுகை மோனையோடு எழுதப்பட்ட உரையாடல் தமிழ் உரைநடைக்கு முன்னர் இல்லாத அழகையும் இனிமையையும் சேர்த்தன.
சாதித் திமிர், பணத்தமிர், மூடபக்தி ஆகியவற்றைக் கடுமையாகச் சாடிய வேலைக்காரி திரைப்படம் திரையரங்குகளில் சக்கை போட்டுக்கொண்டு ஓடியது.

வேலைக்காரி திரைப்படத்தை இயக்குனர் ஏ. எஸ். ஏ. சாமி இயக்கியிருந்தார். எம். சோமசுந்தரம் (ஜுபிட்டர் பிக்சர்ஸ்) தாயாரிந்திருந்தார். கதை, திரைக்கதை, உரையாடல் ஆகியவற்றை நாடகத்தை எழுதிய அறிஞர் அண்ணாவே தீட்டியிருந்தார்.

புகழ்பெற்ற நடிகர்கள் நடிப்பிசைப் புலவர் கே. ஆர். இராமசாமி, டி. எஸ். பாலையா, டி. பாலசுப்பிரமணியம், எம். என். நம்பியார், எஸ். ஏ. நடராஜன், வி. என். ஜானகி, எம். வி. இராஜாம்மா, பி. கே. சரஸ்வதி, லலிதா பத்மினி எனப் பலர் அதில் நடித்திருந்தார்கள்.

பாடல்களை உடுமலை நாராயணகவி எழுதியிருந்தார். இசையை சி. ஆர். சுப்பராமன் மற்றும் எஸ். எம். சுப்பைய்யா நாயுடு இருவரும் அமைத்திருந்தார்கள். படப்பிடிப்பு சென்ரல் கலையரங்கம்.

வேலைக்காரியில் அண்ணாவின் எதுகை மோனை நிறைந்த அழகுதமிழ் உறையுள் இருந்த உருவிய வாள்போல் மின்னியது என்பதற்கு பல எடுத்துக்காட்டுக்களை அடுக்கிக் காட்டலாம். வேலைக்காரிப் பாத்திரங்கள் இதோ பேசுகின்றன.

மணி – கத்தியைத் தீட்டாதே உன் புத்தியைத் தீட்டு!
வடநாட்டு வக்கீல் வேடத்தில் ஆனந்தன் – சட்டம் ஒரு இருட்டறை அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு! ஏழையால் அந்தப் பிரகாசமான விளக்கைப் பெறமுடியாது!

வேடமணியாத வேதாந்தி
மோடி செய்யாத மாது
சோடி இல்லாத மாடப்புறா
சேடி இல்லாத இராசகுமாரி
உலகிலே இருக்க முடியாதாம்!

ஆனந்தன் – பக்தன் பூசை வேளை தவறி வந்திருக்கிறானே, ஏன் என்று கேட்கிறாயா? ஏ காளி! உன்னையே நம்பித் தவம் கிடந்த என்னை நீ கைவிடலாமா? எவனுடைய சதியால், வஞ்சனையால் என் குடும்பம் நாசமாயிற்றோ அவனுக்காம்மா நீ அருள் புரிவது? இது முறையா?
தாயே! இதோ பார் என்னை! ஏழையைப் பார்! உழைத்து உழைத்து உருக்குலைந்து போன என்னைப் பார்!
பரமானந்தன் – வேலைக்காரியா நீ? பூ விற்றால் பூக்காரி, பிச்சை எடுத்தால் பிச்சைக்காரி, சிங்காரித்துக் கொண்டால் சிங்காரி. நீ வேலை செய்கிறாய் அதனால் வேலைக்காரி!

மூர்த்தி – பகலிலே இழித்தவாயர்களுக்கு உபதேசம். இரவிலே இன்பவல்லிகளுடன் சரச சல்லாபம்!
பணத்திமிரும் சாதித்திமிரும் மூடபக்தியும் ஒழிய வேண்டும் என்றும் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்றும் நாட்டு மக்களுக்கு உரைப்போம் என்ற வேதாசல முதலியாரின் சூளுரையோடு படம் முடிகிறது.

தமிழக வரலாற்றில் பேரறிஞர் அண்ணா என்ற மாமனிதரின் வரலாறு ஒரு பொற்காலம். நூறு என்ன ஆயிரம் ஆண்டுகள் கழிந்தாலும் அவரது பெயர் நீடித்து வாழும்! (1909 ஆம் ஆண்டு பிறந்த பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவையொட்டி இக்கட்டுரை வெளிவருகிறது)

பேரறிஞர் அண்ணாவின் இலக்கியப் படைப்புகள் தமிழ் இலக்கிய உலகிற்குக் கிடைத்த புதையல்கள்.

சேடி இல்லாத இராசகுமாரி
சோடி இல்லாத மாடப்புறா
மோடி செய்யாத வேதாந்தி
உலகிலே இருக்க முடியாது

இந்த உரையாடல் பேரறிஞர் அண்ணா எழுதிய வேலைக்காரி நாடகத்தில் இடம் பெற்றவை. பின்னர் அந்த நாடகம் அதே பெயரில் 1948 இல் திரைப்படமாக வெளிவந்தது. திரைப்படத்துக்கும் கதை, உரையாடல் இரண்டையும் அண்ணாவே எழுதியிருந்தார்.

சம்பூர்ண இராமாயணம், அரிச்சந்திரா, சிவகவி போன்ற புராணப்படங்கள் வந்து கொண்டிருந்த காலத்தில் சாதி வேற்றுமை, மூடநம்பிக்கை போன்றவற்றைச் சாடி வரையப்பட்ட கதை வேலைக்காரி. பெரிய மனிதர், பக்திமான் என்ற போர்வையில் சமுதாயத்தில் இரட்டை வேடம் போட்டுத் திரிபவர்களின் முகமூடியை அண்ணா இந்தத் திரைப்படம் மூலம் கிழித்துக் காட்டினார். வேலைக்காரித் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிச் சாதனை படைத்தது.

வேலைக்காரி நாடகத்தைப் பார்த்த கல்கி கிருஷ்ணமூர்த்தி அறிஞர் அண்ணாவை தமிழ்நாட்டின் பேர்நாட் ஷோ என வருணித்து எழுதியிருந்தார். வேலைக்காரித் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு திறனாய்வு எழுதிய கல்கி அந்தப் படத்துக்கு அண்ணா எழுதிய உரையாடல்கள் “உறையில் இருந்து உருவிய வாள் போல் மின்னியது” என மனம் திறந்து பாராட்டியிருந்தார். எதுகை மோனையோடு எழுதப்பட்ட உரையாடல் தமிழ் உரைநடைக்கு முன்னர் இல்லாத அழகையும் இனிமையையும் சேர்த்தன.

வேலைக்காரி மட்டுமல்ல அண்ணாவின் படைப்புகளான பார்வதி பி.ஏ. குமாஸ்தாவின் பெண், இரங்கோன் ராதா, ஓர் இரவு இன்னபிற அவர் எழுதிய தலைசிறந்த படைப்பு இலக்கியங்கள் ஆகும்.

மராட்டியத்தை ஆண்ட மாவீரன் சிவாஜி சனாதனதர்மக் கொடுமையால் மகுடம் சூட்ட முடியாதபடி சூழ்ச்சி வலை பின்னப்பட்டதை எடுத்துக்காட்டி ‘விதையாது விளையும் கழனிகளிடம் கவனம் தேவை’ என எச்சரித்து அண்ணாவே காகப்பட்டராக நடித்தார். சிவாஜி கண்ட இந்துராஜ்யம் என்ற நாடகம்; காலத்தால் என்றும் அழியாத ஒன்றாகும்.
அண்ணாவின் அடுக்குமொழி மேடைப் பேச்சும் எழுத்தும் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடக்கி வைத்தது.

தந்தை பெரியாரின் சீடராகப் பொது வாழ்வைத் தொடங்கிய அண்ணா அவர்கள், பெரியாரது சமுதாய சீர்திருத்தக் கருத்துகளை தமக்கே உரிய தனிப் பாணியில் பேசியும் எழுதியும் கற்றோரையும் மற்றோரையும் – குறிப்பாக இளையோரைக் கவர்ந்தார்.
இலக்கியத்தில் அண்ணா எந்தத்துறையையும் விட்டு வைக்கவில்லை. கட்டுரை, கடிதம், கதை, புதினம், நாடகம், திரைப்படம் என அவர் தொடாத துறை இல்லை எனலாம். அவர் விட்டுவைத்த துறை கவிதை மட்டுமே!

அண்ணா எழுதிய ஆரியமாயை, அவர் பேசிய ஏ தாழ்ந்த தமிழக இரண்டும் கால வெள்ளத்தால் அழிக்க முடியாத வரலாற்றுப் பெட்டகங்கள் ஆகும். 1942 ஆம் ஆண்டு அண்ணா எழுதிய நீதி தேவன் மயக்கம் என்ற நாடகம் தமிழ் இலக்கிய உலகம் இதுவரை கண்டிராத புதிய படைப்பு! ஒரு புதிய புரட்சி!

‘இரக்கமெனும் ஒரு பொருள் இல்லா அரக்கன்’ என இராவணனைக் கம்பன் வருணித்த சொற்றொடரை மட்டும் கருப்பொருளாக்கிக் கம்பனைக் குற்றவாளிக் கூண்டில் நிற்க வைத்து, “நான் இரக்கமில்லா அரக்கன் என்றால் – கௌதமரின் மனைவி அகலிகையை, பொய் வேடம் பூண்டு கற்பழித்த இந்திரனை – நீங்கள் ஏன் இரக்கமில்லா அரக்கன் எனச் சொல்லவில்லை’’ என அடுக்கடுக்காகக் கேள்விக் கணைகளை இராவணன் மூலம் தொடுத்து நீதி தேவன் பதில் அளிக்க முடியாமல் மயங்கிய காட்சியை நாடகத்தில் அண்ணா தீட்டியிருந்தார். மக்கள் மனதில் இன்றும் நிறைந்திருக்கும் ஒப்பரிய படைப்பு இதுவாகும்.

விடுதலை யின் ஆசிரியராக, குடிஅரசின் எழுத்தாளராக, திராவிட நாடு மற்றும் காஞ்சி இதழ்களின் ஆசிரியராக இருந்து அவர் வடித்த கட்டுரைகள் பெருமிதமானவை!

அண்ணா திராவிடநாடு கிழமை ஏட்டிலும் பின்னர் காஞ்சி ஏட்டிலும் தம்பிக்கு எழுதிய கடிதங்கள் இலக்கியத் தரம் வாய்ந்தவை. அந்தக் கடிதங்களின் மொத்த எண்ணிக்கை 290 ஆகும். Homeland மற்றும் Homerule  ஆங்கில இதழ்களின் மூலம் அண்ணா தம்பிக்கு வரைந்த கடிதங்கள் மொத்தம் 26 ஆகும். அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்களின் மொத்தப் பக்கங்கள் 3000 க்கும் அதிகமாகும்.

டால்ஸ்டாய், பெர்னாட்ஷா, நேரு, காந்தி ஆகியோரின் கடிதங்கள் வரலாற்றுப் புகழ் வாய்ந்தவை. தமிழ் உலகில் கடித இலக்கியத்தைத் தோற்றுவித்த பெருமைக்கு உரியவர் அண்ணா ஆவர். ஆங்கில இலக்கிய உலகிற்கு மட்டுமே அறிமுகமான திறனாய்வுத் துறையினை ஒரு புதிய கோணத்தில் தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியவரும் அண்ணவேதான். வாழ்க்கையைத் திறனாய்வுதான் இலக்கியம். மக்களுக்காக எழுதப்படுவதுதான் இலக்கியம். இந்த இலக்கணத்துக்கு இலக்கியமாகத் திகழ்ந்தவர் பேரறிஞர் அண்ணா!

மகாகவி பாரதியார் எவ்வாறு தமிழ்க் கவிதைக்கு அழகும் இனிமையும் புதுமையும் சேர்த்தாரோ அதே போல் அண்ணா உரை நடைக்கும் மேடைப் பேச்சுக்கும் அழகும் இனிமையும் புதுமையும் சேர்த்தார். அவரது மேடைப் பேச்சைக் கேட்க கற்றோரும் மற்றோரும் அலை அலையாகக் கூடினார்கள்.

அண்ணாவின் அழகான அடுக்குமொழிப் பொன்மொழிகள் புகழ் வாய்ந்தவை ஆகும்.

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு;
தம்பீ! கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு;
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு;
எதையும் தாங்கும் இதயம் வேண்டும்;
சட்டம் ஒரு இருட்டறை; வக்கீலின் வாதம் அந்த இருட்டைப் போக்கும் விளக்கு
திரௌபதிக்கு துச்சாதனனா சேலை தரமுடியும்?
புள்ளிமான் குட்டிக்கு புலியா பால் தரமுடியும்?
பச்சைக் கிளிக்கு வர்ணம் பூசுவதா?

சேர, சோழ, பாண்டியர் தமிழை வளர்த்தார்கள். புலவர்களும் பண்டிதர்களும் தமிழை வளர்த்தார்கள்;. சமயங்களும் ஆன்மீக மடங்களும் தமிழை வளர்த்தன. அவர்கள் தமிழை மக்களிடம் கொண்டு சென்றார்கள்! ஆனால் அண்ணாவோ மக்களைத் தமிழிடம் கொண்டு வந்தார்! ஆங்கிலமும் வடமொழியும் ஆட்சி செய்த தமிழ் மண்ணில் தமிழ்த் தாய்க்கு மகுடம் சூட்டியவர் அண்ணா! பண்டிதர்களிடம் சிறைபட்டுக் கிடந்த தமிழை விடுதலை செய்து பாமரர்களுக்கும் சொந்தமாக்கியவர் அண்ணா!

நமஸ்காரம், அக்ராசனர், சபாநாயகர் என்ற வார்த்தைகளை மாற்றி வணக்கம், தலைவர், பேரவைத் தலைவர் என்ற தூயதமிழ்ச் சொற்களைச் சலங்கை கட்டி நடமாடவிட்டவர் அண்ணா!

அகநானூறு அறிந்தவர்கள், புறநானூறு படித்தவரகள், கற்றார் போற்றும் கலித்தொகை கற்றவர்கள், சங்கத் தமிழில் கரைகண்டவர்கள், புலவர்கள், பண்டிதப் பெருமக்கள் இந்தி தமிழ்நாட்டுக்குள் நுழைந்த போது – அன்னை தமிழுக்கு இடர் வந்த போது – அது குறித்து கிஞ்சித்தும் கவலைப்படாமல் சுயநலச் சூறாவளியில் சிக்குண்டு மொழியுணர்வை இழந்து சும்மா இருந்த காலத்தில் அண்ணாவும் அவரது தம்பிமாருமே “எப்பக்கம் வந்திடும் இந்தி? எத்தனை பட்டாளம் அது கூட்டிவரும்” என ஆர்ப்பரித்து இந்தியை விரட்டி அடித்தார்கள். அண்ணா மறைந்து 40 ஆண்டுகளுக்குப் பின்னரும் இந்தியை அரசமொழியாக ஏற்றுக்கொள்ளாத ஒரே மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.

அண்ணாவின் எழுத்தும் மேடைப் பேச்சும் 1967 ஆம் ஆண்டு அவர் தொடக்கிய திமுக தமிழ்நாட்டின் ஆட்சியைப் பிடிப்பதில் பெரும்பங்கு வகித்தது.

சுயமரியாதைத் திருமணம் செல்லும்படி சட்டம், சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டல், தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை தமிழும் ஆங்கிலமும்தான்; அரச அலுவலக மொழிகள், மதச் சார்பற்ற அரசில் எந்த மதக் கடவுளர் படங்களுக்கும் இடமில்லை என்பவை முதல்வர் அண்ணாவின் நடவடிக்கைகள் ஆகும். குறுகிய காலம் ஆட்சிப் பொறுப்பில் அவர் இருந்தாலும் என்றென்றைக்கும் வரலாறாக வானோங்கி நிற்கக் கூடியவை ஆகும்.

இவற்றைவிடப் பெருமை என்னவென்றால் அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த திமுகவும் அதிமுகவும் அண்ணா பெயரைச் சொல்லியே ஆட்சியை மாறி மாறிப் பிடித்து வருகின்றன!

‘தேமதுரத் தமிழோசை தெருவெல்லாம் முழங்கவேண்டும்’ என்று இனிய கனவு கண்டவர் கவியரசு பாரதியார். முப்பத்து ஒன்பது வயதுக்குள் தன் பாட்டுத் திறத்தால் தமிழை வையத்தில் பாலிக்க வைத்தவர்.

பேரறிஞர் அண்ணா என்றுமுள செந்தமிழால் தமிழ் இலக்கிய உலகில் புதுமை செய்தவர். புரட்சி செய்தவர். கால வெள்ளத்தால் அழியாத அவரது அற்புதப் படைப்புகள் தமிழ் இலக்கிய உலகிற்குக் கிடைத்த புதையல்கள். (பேரறிஞர் அண்ணாவின் 100 ஆவது ஆண்டு நினைவாக இக்கட்டுரை வெளிவருகிறது)


அண்ணா நூற்றாண்டு கண்களைத் திறக்கட்டும்!

இன்று அறிஞர் அண்ணா அவர்கள் நூற்றாண்டு – திராவிடர் இயக்கத்தவர் மட்டுமல்ல – உலகம் முழுவதும் உள்ள பகுத்தறி வாளர்கள், உலகத் தமிழர்கள் அனைவரும் எண்ணங்களிலும் அறிஞர் அண்ணா அவர்கள் இன்று கோலோச்சுவார் என்பதில் அய்யமில்லை.

அறிஞர் அண்ணாவின் பொது வாழ்வு என்பது தந்தை பெரியார் அவர்களிடத்திலிருந்து தொடங்குகிறது. ஒரு பதினைந்து ஆண்டுகள் தந்தை பெரியார் அவர்களின் நேரிடைக் கண்காணிப்பின் கீழும், கட்டளைக்குக் கீழும் பணியாற்றிய அனுபவம் அவருக்கிருந்தது.

தந்தை பெரியார் அவர்களின் தத்துவங்களை அண்ணா. அவர்கள் தனக்கே உரித்தான தனி வசீகரத்துடனும், ஆற்றலுடனும் மேடைப் பேச்சு வாயிலாகவும், ஏடுகளின் வாயிலாகவும் கொண்டு செலுத்தி யிருக்கிறார். இளைஞர்கள், மாணவர்கள், தமிழாபிமானிகள், ஆசிரியர்கள் இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டனர்.

நீண்ட காலமாக மக்கள் நம்பி வந்த, மதிப்பு வைத்திருந்த மேல்ஜாதி ஆதிக்கம், ஜாதிய உணர்வு, ஜாதி பழக்கவழக்கம், வழிபாடுகள், சடங்குகள் ஒவ்வொன்றின்மீதும் தந்தை பெரியாரின் பகுத்தறிவு ஆயுதம் கொண்டு போர் தொடுத்தார்.

காரண காரியங்களோடு அவை நடந்தன. சிந்தனையைத் தூண்டும் வகையில் அந்த மறுப்புகள் கம்பீரமாக நடை போட்டன. அத்தகைய காலகட்டத்தில் ஒரு இயக்கத்திற்கு சிறப்பான பிரச்சாரர்கள் தேவை. அதில் அண்ணா முன்னிலை வகித்தார்.

கம்ப ராமாயணத்தைக் கொளுத்தலாமா? கூடாதா? பெரிய புராணத்தை எரிக்கலாமா? கூடாதா? என்கிற பட்டிமன்றங்கள், சட்டக் கல்லூரிகளில் நடக்கும் அளவுக்கு அந்தக் காலகட்டத்தில் மாணவர்கள் மத்தியில் புதிய சிந்தனை கிளர்ந்து எழச் செய்தார்.

அண்ணாவுடன், சொல்லின் செல்வர் என்று போற்றப்பட்ட ரா.பி. சேதுப்பிள்ளை வாதாடிப் பார்த்தார். நாவலர் சோமசுந்தர பாரதியார் சொற்போர் நடத்தினார்.

அண்ணாவின் வாயிலாக அய்யாவின் கொள்கைகள்தான் அங் கெல்லாம் ஏற்றம் பெற்றன. இளைஞர்கள் மத்தியில் பசுமரத்தாணி போலப் பதிந்தன.


சொல்லேருழவர் பேரறிஞர் அண்ணா!

 முனைவர் சே.கல்பனா (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்)

நாமொழியால் நானில மக்களின் உள்ளத்துள் எழுச்சியை ஏற்படுத்தி,எண்ணத்துள் பகுத்தறிவு சிந்தனையைச் செதுக்கிய சிந்தனைச் சிற்பிகள் பலர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் பேரறிஞர் அண்ணா என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பெறும் சி.என்.அண்ணாதுரையாவர். இவர் தம் நாமொழியால் தமிழ்நிலத்தை அசைத்துப் பார்த்தவர். பொதுமக்களிடம் மட்டுமின்றி வருங்கால இளைய சமுதாயத்தினரிடமும் பகுத்தறிவுச் சிந்தனையை வித்திட்ட பண்பாளர்.இவருடைய மேடைப் பொழிவினைக் கேட்பது திருவாடுதுறை இராஜரத்தினம் அவர்களின் நாதசுரத்தில் தோடியைக் கேட்பதை ஒக்கும் என்பர்.

நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் அண்ணாவின் பொழிவினைக் குறிப்பிடும் பொழுது ‘சிறந்த பேச்சாளர் பட்டியலின் முன்னணியில் டொமஸ் தெனியைக் கொண்டு வந்து நிறுத்துகிறது கிரேக்க நாடு; எட்மண்ட் பர்க்கைக் கொண்டு வந்து நிறுத்துகிறது இங்கிலாந்து; ராபட் கீரின், இங்கர்சாலைக் கொண்டு வந்து நிறுத்துகிறது அமெரிக்கா; சிறந்த பேச்சாளர் வரிசையில் முதலிடத்தில் திராவிடம் நிலை நிறுத்துவதற்குரிய ஒரே ஒருவர் அறிஞர் அண்ணாதான். இவரது சொற்பொழிவு சலசலவென்று ஓடும் சிற்றருவியின் பாங்கு போலவும் சொற்கள் நாணயச் சாலையில் அடிப்பட்டு ஒன்றன் பின் ஒன்றாக விழும் நாணயங்கள் போலவும் ஒன்றோடு ஒன்று மோதுதல் இன்றி வெளிவரும்’என்பர். அண்ணாவினுடைய நாநேர்த்தியாலும் கருத்து தெளிவாலும் ஈர்க்கப்பட்டு,

ஓ!அந்த குரலில் என் ஆன்மாவின்
ஆழத்தைத் தொடும்
ஏதோ ஒன்று இருக்கிறது’(லாங்பெல்லோ)

எனத் தமிழ்ச் சமுதாயம் கட்டுண்டு கிடந்த,பொழிவுகளைக் கால வரிசைப்படி தொகுத்துப் பூம்புகார் பதிப்பகம் இரண்டு தொகுதிகளாக வெளியிட்டுள்ளது. இத்தொகுப்பில் 139 பொழிவுகள் இடம் பெற்றுள்ளன.

அண்ணாவின் தனித்தன்மை

அண்ணாவின் சொல்லும்,சொல்லை வெளிப்படுத்தும் உத்திகளும் ,சொற்பொழிவாற்றும் முறையும் தனித்தன்மையுடையதாக இருக்கும் என்பதை அவருடைய பொழிவுகளை அவதானிக்கும் பொழுது உணரலாம்.சிறு வயதிலிருந்தே எழுத்திலும் பேச்சிலும் பிறரைப் பின்பற்றாமல் தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டார் என்பதை நாராண துரைக்கண்ணன் குறிப்பிடுகின்றார்.

‘1934-ஆம் ஆண்டு சென்னை ஜார்ஜ் டவுன் ஏழு கிணறு வட்டத்தில் உள்ள ஒரு வீட்டு மேல் மாடியில் பாம்வேட் லிட்டரி பார்லிமெண்ட் சார்பில் ஒரு பொதுக்கூட்டம், அதில் கோபாலரத்தினம் பேசினார், செங்கல்வராயன் சொற்பொழிவாற்றினார், பாலசுப்பிரமணியம் இன்னும் யார்யார்ரெல்லாமோ பேசினார்கள். கடைசியாக வந்தவர் ஐயா ஆசாமி ஒருத்தர்.ஐந்தடி ஒரு அங்குலம் உயரம் இருக்கும்.சம்புஷ்டியான சரீரம்,அறிவுத் தீட்சணத்தை வெளிப்படுத்தும் அகன்ற நெற்றி,ஆழ்ந்த சிந்தனையில் மிதக்கும் பெரிய கண்கள்,ஆட்களைக் கவரும் எடுப்பான மூக்கு,மீசை சரியாக கூட அரும்பவில்லை தோழர்களே என்றார் கூட்டத்தைப் பார்த்து. அவ்வளவுதான் அவர் உள்ளத்திலிருந்து எழும் சந்தர்ப்ப உணர்ச்சிக்கேற்பச் சொற்கள் சரளமாக வெளிவந்து கொண்டிருந்தன. பொருள் பொதிந்த அவர் பேச்சில் தெளிவு இருந்த்து.அவர் எடுத்துக் கொண்ட கட்சியை நிலைநாட்டத் தர்க்க ரீதியாக பேசினார்.அவர் பேச்சில் இன்னொரு விசேஷம் இருநத்து,அதாவது பிறரை இமிடேட் பண்ணாமல் சொந்த பாணியிலே பேசியதுதான் அக்காலத்தில் மேடையில் பேச விரும்பும் இளைஞர்கள் அதிலும் கல்லுரி மாணவர்கள் மகாகனம் ஸ்ரீ நிவாஸ சாஸ்திரியார், ஆற்காடு இராமசாமி முதலியார்,சத்திய மூர்த்தி முதலிய பிரபல பேச்சாளர்கள் பேசும் பொழுது செய்யும் அங்க சேஷ்டைகள்,நடையுடை பாவனைகள் இமிட்டேட் செய்பவர்கள் கூட இருந்தனர்.ஆனால் அந்த ஆள் அவ்வாறு செய்தவரல்ல.அவர் தான் நம் அண்ணா’.

மேடைப்பேச்சு

அண்ணா 1948-ஆம் ஆண்டு மேடைப்பேச்சு எவ்வாறு அமைய வேண்டும் என விளக்கி,மேடைப்பேச்சுக்கு இலக்கணம் வகுத்துள்ளார். மேடைப் பேச்சு மக்களுடைய சிக்கல்களை அறிந்து, அச்சிக்கலுக்குத் தீர்வு காணுவதாகவும், வாழ்க்கையை நெறிப்படுத்துவதாகவும் அமையவேண்டும் எனவும் எதிர்காலத்தில் மேடைப்பேச்சு ஒரு சிறந்த ஆயுதமாகவும் விளங்கும் எனக் கூறி இவ்வாய்தத்தை நல்ல வழியில் பயன்படுத்தினால் மக்களுக்கு நன்மை விளையுமெனச் சாற்றுகின்றார். மேலும் மேடைப் பேச்சுக்குத் தங்களைத் தயாரித்துக் கொள்வோர் மிக ஜாக்கிரதையாக ஊன்றி நடக்க வேண்டிய இடம் மேடை எனவும் எச்சரிக்கின்றார்.

‘மேடைப்பேச்சு காலச்சேபம் அல்ல, விவாதத்துக்குரிய உயிர்ப் பிரச்சனைகளைப் பற்றிய கருத்துக்களை வெளியிடுவது. இனிமை எல்லோருக்கும் கிடைக்கும்படிச் செய்யும் நாவணிபம் அல்ல.மேடைப்பேச்சு, வாய்பொத்தி,கைக்கட்டிக் கேட்கும் மக்கள் எதிரே நடத்தும் உபதேசமல்ல,அருள் வாக்கல்ல, பேசுபவர் கேட்பவர்களை விட மேதை என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையுமல்ல. கேட்பவர்கள் இன்னப்பொருள் பற்றிப் பேசிடுக எனப் பணித்திட,பேசுபவன் அது போலவே நடத்தும் வசன சங்கீதமுமல்ல. வாழ்க்கையுடன் தொடர்புகொண்ட பிரச்சனைகளைப் பற்றி,மக்கள் குழப்பமான கருத்துக்களைக் கொண்டிருந்தால் தெளிவு அளிப்பது,மக்கள் மருண்டிருந்தால் மருச்சியை நீக்குவது.மக்கள் கவலையற்று இருந்தால் பிரச்சனையின் பொறுப்பை உணரச்செய்வது போன்ற காரியம். நீதியை நிலைநாட்ட,நேர்மையை வலியுறுத்த,நாட்டிற்கேற்ற திட்டங்களை எடுத்துரைக்க, மடமையை மாய்க்க, கொடுமைகளை மாய்க்க, கொடுமைகளைச் சாய்க்க,சிறுமைகளைச்-சீரழிவுகளைப் போக்க ஆர்வம் தோன்ற வேண்டும். அந்த ஆர்வம் ஏற்படுத்தும் சிந்தனையிலே பூத்திடும் நல்ல கருத்துக்களை, அழகுற தொடுத்து அளிப்பதே மேடைப் பேச்சு’என எடுத்துரைக்கின்றார்.

சொல்லேருழவர்

அண்ணா பண்பட்ட சிறந்த சொற்களைக் கொண்டு மக்கள் மனங்களை உழுது பண்படுத்த முயன்ற சொல்லேருழவர்.இவருடைய மொழியாளுமையால் கவரப்பட்ட சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளையவர்கள் ‘ஆயிரம் மேடை ஏறிய அறிஞர்.பல்லாயிரம் மக்களின் உள்ளத்தை ஒருங்கே கவரும் சீரிய கூரிய சொல்லாளர்.கண்ணின்று கண்ணறச் சொல்லும் திண்ணியர்’எனப் பாராட்டுவர். திரு.வி.க அவர்களும் ,

‘அண்ணா துரையென்னும்
அண்ணல் தமிழ்நாட்டு
வண்ணான் அழுக்கெடுப்பில்
வாய்மொழியின் பண்ணாவான்
சிற்பன் எழுத்தோவியத்தில்
செல்வராசு நாவாயின்
அற்புதம் சூழ்மாலுமி
என்றாடு’

எனப் போற்றுவர்.தமிழ்நாட்டின் அன்றைய நிலையை எண்ணி வருந்தி 1945 –இல் அண்ணாமலைப் பல்கலைக்கப் பட்டமளிப்பு விழா அரங்கில் துணைவேந்தர் எம்.இரத்தினசாமி அவர்களின் தலைமையில் புரச்சிக்கவி பாரதிதாசன் அவர்களின் உருவப்படத்தினைத் திறந்து வைத்து ஆற்றிய சொற்பொழிவு வரலாற்றுச் சிறப்பு மிக்கது.

‘ஏ தமிழ் நாடே! ஏ தாழ்ந்த தமிழ் நாடே! தேய்ந்த தமிழ் நாடே!தன்னை மறந்த தமிழ் நாடே!தன்மானமற்ற தமிழ்நாடே!கலையை உணராத தமிழ் நாடே!கடவுளின் லட்சணத்தை அறியாத தமிழ் நாடே!மருளை மார்க்கத்துறை என்றெண்ணிடும் தமிழ் நாடே!வீறு கொண்டெழு!உண்மைக் கவிகளைப் போற்று!உணர்ச்சுக் கவிகளைப் போற்று!புரச்சிக் கவிகளைப் போற்று!!புத்துலகச் சிற்பிகளைப் போற்று!!! எனத் தமிழக நிலையை எண்ணி வெகுண்டெழுகிறார். இப்பொழிவால் அன்று மாணவச் சமுதாயம் விழிப்படைந்து என்றால் மிகையில்லை.

இந்தி எதிர்ப்பு

1960 களில் இந்தி எதிர்ப்பு உச்சத்தில் இருந்த காலக்கட்டம்.அறிஞர் அண்ணா அவர்கள் நம்முடைய தமிழ்மொழி பிழைத்தால்தான் நம்முடைய இனம் பிழைக்கும்,நம் நாடு நமக்கு கிடைத்தால் தான் நாம் தலை நிமிர்ந்து வாழமுடியுமென 26,27,29-6-1960,10,19-7-1960,1,7-8-1960 ஆகிய நாள்களில் தமிழ்ச் சமுதாயத்தை நோக்கி அறைகூவல் விடுத்தார். இதன் விளைவாக தமிழ் மாணவச் சமுதாயமே வீறு கொண்டெழுந்து மொழிப்போர் தொடங்கினர்.இன்னுயிரை ஈந்தாவது தமிழைக் காப்பாற்ற வேண்டுமென்ற அவருடை சொல்லினையேற்று உயிர் தியாகம் ஈந்துள்ளனர்.அப்படி பாடுபட்டுப் பெற்ற தமிழ்நாட்டில் தமிழ்மொழியின் இன்றைய நிலை?மும்மொழி கொள்கை வேண்டும் எனக் கூறும் நிலை வருந்தத்தக்கது.

புத்தகசாலை

உலக சரித்திரத்தையே மாற்றிய நூல்களும் உண்டு.மாத்மா காந்தியடிகள் அடிகள் தம்முடைய வாழ்க்கை வரலாற்று நூலில் ஜான் ரஸ்கினின் கடையருக்கும் கடைத்தேற்றம்,ஹென்றி தோராவின் சிவில் ஒத்துழையாமை,டால்ஸ்டாயின் கடவுளின் ராஜ்யம் உங்களுக்கு இருக்கிறது என்ற நூல்கள் தம் வாழ்க்கைக்கு வழிகாட்டின எனவும், அகிம்சை வழியில் செல்ல தூண்டுகோலாக அமைந்தன எனவும் குறிப்பிட்டுள்ளார். அண்ணாவும் நுண்ணறிவு திறனுடையவராகவும் பண்பட்ட அறிவுடையவராகவும் திகழக்காரணமாக அமைந்தவை பண்பட்ட நூல்களே எனலாம். நூல்களின் மீது மிகுந்த இவருக்கிருந்தது காதல் என்பதை விட பித்து எனக் கூறலாம்.கன்னிமரா நூலகத்தில் அவர் கைபடாத நூல்களே இல்லை என்பர்.நூல்களைப் படித்தார் என்பதை விட நூல்களை உயிர் மூச்சாக சுவாசித்தார் வாழ்ந்தார்.உடல்நிலை சரியில்லாமல் அறுவை சிகிச்சை செய்துகொள்ளப் போகும் நேரத்தில் கூட படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை முடிக்க நேரம் கேட்டாராம்.இவ்வாறு நூல்களின் பயனையும் வல்லமையையும் உணர்ந்த பேரறிஞர் அண்ணா வீட்டிற்கோற் புத்தகச்சாலை இன்றியமையாதது என்பதை வலியுறுத்தி 1948-ஆம் ஆண்டு சொற்பொழிவாற்றுகிறார்.

‘வீட்டிற்கோர் புத்தகச்சாலை என்ற இலச்சியம்,நாட்டுக்கோர் நல்லநிலை ஏற்படச் செய்ய வேண்டும் என்ற திட்டத்திற்கு அடிப்படை.மலை கண்டு,நதி கண்டு,மாநிதி கண்டு அல்ல,ஒரு நாட்டை உலகம் மதிப்பது.அந்த நாட்டு மக்களின் மன வளத்தைக் கண்டே மாநிலம் மதிக்கும்.மனநலம் வளர வீட்டுற்கோற் புத்தகச்சாலை நிச்சயமாக வேண்டும்.வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம்,அலங்காரப் பொருள்களுக்கும்,போகப் பொருள்களுக்கும் தரப்படும் நிலைமாறி,புத்தகச்சாலைக்கு அந்த இடம் தரப்படவேண்டும். உணவு,உடை,அடிப்படைத் தேவை.அந்த தேவையைப் பூர்த்தி செய்தானதும்,முதல் இடம் புத்தகச்சாலைக்குத் தரப்பட வேண்டும்.வீட்டுக்கோர் புத்தகச் சாலை அமைத்துக் கொண்டால், நாட்டுக்கு நல்ல நிலை ஏற்படும்.வீட்டிற்கோர் புத்தகச்சாலை தேவை. ஆனால் கேட்டினை நீக்கிடத் தக்க முறைகளைத் தரும் ஏடுகளைக் கொண்டதாக இருக்க வேண்டும்.’என அவர் கொண்ட விருப்பம் நிறைவேறியதா?

ஒரு நாட்டின் வளம் என்பது, அந்நாட்டில் இருக்கும் பண்புள்ள மக்களின் எண்ணிக்கையைப் பொறுத்துத்தான் இருக்கும்.அறிவாற்றல் பெற்று,தன்னலம் கருதாது மக்களுக்கு உழைக்கும் பண்பாளர் தான் அந்நாட்டின் செல்வம் என்ற மார்டின் லூதரின் கூற்றுக்கேற்ப,பேரறிஞர் அண்ணா அவர்கள் சிறந்த கல்விநலம் பெற்ற பண்பாளராகத் திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல்,தம்முடைய அறிவாற்றலைக் கொண்டு,தம் இன மக்களின் அக இருளை விரட்டி, பகுத்தறிவு சிந்தனைப் பெற்று வாழ்க்கையில் மேன்மையடைய அயராது உழைத்தார். அறிஞர் அண்ணாவின் நாவில் பட்ட தமிழ்,தமிழ் மக்கள் அனைவர் நாவிலும் புதுத் தமிழாக,உலக மக்கள் அனைவர் உள்ளங்களிலும் புதுத் தமிழ் புகழ் மணமாகத் தெரித்தெழத் தொடங்கிற்று என்று வருங்காலத் தமிழ் வரலாறு கட்டாயம் கூறும் என்ற பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையாரின் கருத்திற்கிணங்க அண்ணாவின் நாவில் பட்ட தமிழ்,தமிழ் மக்கள் உள்ளத்துள்ளும்,நாவிலும் நீங்கா நிற்கிறது.அவ்வாறு நிற்கும் அண்ணாரின் சொற்களும் எழுத்துக்களும் பதிவுப் பெட்டகமாக மட்டுமில்லாமல் இல்லாமல் வாழ்க்கைப் பயன்பாட்டுப் பெட்டகமாக மாறவேண்டும்.அப்பொழுதுதான்,

நீ மண்ணுக்குள் சென்றாலும்
வேராகத்தான் சென்றாய்
அதனால்தான்
எங்கள் கிளைகளில்
இன்னும் பூக்கள்
மலர்கின்றன.

என்ற கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் அடிகள் மெய்மையடைந்து, எழுத்தாய், சொல்லாய், மட்டுமல்லாமல் பொருளாகவும் என்றும் நம்முடன் வாழ்ந்துகொண்டிருப்பார்.

kalpanasekkizhar@gmail.com

ஈரோட்டில் அய்யாவின் குடிஅரசு இதழின் பொறுப்பாளர் ஆனார். அதன்பின் காஞ்சியிலிருந்து திராவிட நாடு என்ற வார இதழைத் தொடங்கி நடத்தினார்.

தனக்கே உரித்த ஆற்றலால் நாடகங்களை உருவாக்கி, அந்த நாடகங்களில் அவரே பாத்திரங்களை ஏற்று நடித்தார். பகுத்தறிவு எண்ணங்கள் பொதுமக்கள் மத்தியிலே வேர்ப் பிடிக்கும் பணியிலே வெற்றிகள் குவிந்தன.

அவர் அரசியலில் நுழைந்தார். அங்கு சென்றாலும், தாய்க் கழகத்தின் கொள்கைதான் தம் கொள்கை என்று அறிவித்தார். தி.க.வும், தி.மு.க.வும் இரட்டைக்குழல் துப்பாக்கி என்று வருணித்தார்.

அரசியலில் பார்ப்பனர்களை சாணக்கியர்கள் என்பார்கள். அந்த சாணக்கியர்களை மண் கவ்வச் செய்த சாதனை அண்ணாவைச் சார்ந்ததாகும்.

ஆட்சியைப் பிடித்தார் என்றாலும், அங்கும் – அவர் அய்யாவிடம் கற்ற, தெளிந்த, உள்ளத்தில் ஊறிப்போயிருந்த அந்தச் சமுதாய சுய மரியாதை, பகுத்தறிவுக் கொள்கைகள்தான் அப்பொழுதும் அவரிடத்தில் ஏற்றம் பெற்றிருந்தன.

அரசு அலுவலகங்களில் எந்தவித மதச் சின்னங்களுக்கும் இட மில்லை என்று ஆணை பிறப்பித்தார். சுயமரியாதைத் திருமணம் செல்லுபடியாகும் என்று சட்டமியற்றி தந்தை பெரியார் அவர்களுக்கு நன்றியைக் காணிக்கையாக்கினார். இந்த ஆட்சியே தந்தை பெரியா ருக்குக் காணிக்கை என்று சட்டப்பேரவையிலேயே பிரகடனப்படுத் தினார்.

சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார். இந்திக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை. இங்கு இருமொழிதான் ஆட்சிமொழி என்பதை சட்ட ரீதியாக ஆக்கினார்!

குறைந்த காலம் அவர் ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும், அடிப்படையில் சுயமரியாதை இயக்கத்தின் வழிவந்தவர், திராவிடர் கழகத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் என்ற எண்ணம்தான் அவரை ஆட்கொண்டது.

ஆட்சி ஆசனத்தில் அமர்ந்த நிலையிலும், நாகரசப்பட்டி பெரியார் இராமசாமி உயர்நிலைப்பள்ளி விழாவில் தந்தை பெரியாரோடு முதலமைச்சராக அவர் கலந்துகொண்ட நேரத்தில், ஆட்சிப் பொறுப்பில் தொடரவா – இல்லை மீண்டும் அய்யாவுடன் வந்து சமுதாயப் பணியை ஆற்றலா? அய்யா ஆணையிடட்டும்! என்று சொன்னார் என்றால், அந்த அண்ணாவை அந்தச் சமுதாய ஊற்றுக்கண்ணை எந்த வகையில் தான் புகழுவது – பாராட்டுவது!

பதவிதான் பொதுவாழ்வு, அதிகாரம் பெறுவதுதான் அரசியல் என்ற எண்ணத்தைத் தூக்கி எறிந்து, பொதுத் தொண்டு ஆற்றிட இளைஞர்கள் முன்வரவேண்டும் என்பதுதான் அண்ணாவின் நூற்றாண்டு நாளில் உறுதி எடுக்கவேண்டும்.

திராவிட இயக்கம் என்பது இன்றைய தினம் திராவிடர் கழகமும் – தி.மு.க.வும்தான். இளைஞர்கள் இந்த இரு இயக்கங்களையும் சார்ந்து, திராவிட இயக்கத் தத்துவங்களை உள்வாங்கி, சமூகத்தைப் பின்னிப் பிணைத்துக் கொண்டிருக்கும் ஏற்றத் தாழ்வு என்னும் முள்செடிகளை அகற்றி, தந்தை பெரியார் காண விரும்பிய, அறிஞர் அண்ணா பிரச்சாரம் செய்த அந்த பேதமற்ற சுயமரியாதை – சமதர்ம சமத்துவ ஒப்புரவுச் சமுதாயத்தைப் படைக்க உறுதி கொள்வோமாக!

வாழ்க பெரியார்! வாழ்க அறிஞர் அண்ணா!!


அறிஞர் அண்ணா மகத்தான மனிதநேயம்!

கி. வீரமணி

மனிதகுல வரலாற்றில் வீரத்தாலும், விவேகத்தாலும் இடம்பெறுபவர்களைக் காட்டிலும், இதயத்தால் சிந்தித்து, மூளையால் செயல்பட்ட மனிதநேயர்களே மக்களால் என்றென்றும் மதிக்கப்படக் கூடியவர்களாக நிலை பெற்றுள்ளார்கள்!

பிறர் நிலையில் தன்னை வைத்து பிறரது துன்பத்தை தனதாக்கி, அந்தப் பிறராகவே தன்னை ஆக்கிக் கொள்ளும் ஒத்தது அறியும் தன்மைதான் ஆங்கிலச் சொல்லான Empathy என்பதாகும்.

அறிஞர் அண்ணா அவர்கள் ஒரு சிறந்த பகுத்தறிவுவாதி; எல்லா பகுத்தறிவாளர்களும், சுயமரியாதைக்காரர்களும் தலைசிறந்த மனிதநேயர்களாவார்கள்.ஒருவருக்காக இரங்குவது, வருத்தப்படுவது வேறு; அவராகவே மாறி அவர்படும் துன்பத்தை உணர்வது என்பது வேறு. அந்நிலைதான் மனிதர்களை உயர்த்தி, தரம் பிரித்துக் காட்டுவது.

மனிதர்களை மதிக்கக் கற்றுக்கொண்டு அவர்களை சமமாகக் கருதி, அவர்களின் அறிவை, ஆற்றலை, உழைப்பை மனந்திறந்து பாராட்டுவது, உதவவேண்டிய நேரத்தில் அவர்களுக்கு ஓடோடி உதவுவதுதான் மனிதநேயம்!

இன்று நூற்றாண்டு விழா நாயகராகக் காட்சியளிக்கும் அறிஞர் அண்ணாவை அவரது பகுத்தறிவு, அரசியல் மற்றும் பல்வேறு அரிய சாதனைகளால் அளப்பதைவிட, அவருடைய மனிதநேயப் பண்பால் அளந்து பார்ப்பதே அவருக்கு அடுத்த தலைமுறை செய்யும் சரியான நீதியாக அமையும்.

1953 ஆம் ஆண்டு கைத்தறி நெசவாளர்களுக்கு ரொம்பத் துன்பம் ஏற்பட்டது.

நெய்த துணிகள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடந்ததினால் நெசவாளர்கள் கஞ்சித் தொட்டியை நாடும் அவல நிலை; சிலர் பிச்சைக்காரர்களாகி விட்ட கொடுமை!

இதை எண்ணி கைத்தறி நெசவுத் துணிகளை, தானே தோளில் சுமந்து – காங்கிரசிலிருந்தபோது அவரது தலைவர் பெரியார் கதர்மூட்டையை தலையில் சுமந்து ஊர் ஊராகச் சென்றது போல, இவரும், இவரது கட்சியின் தம்பிமார்களும் நாடு பூராவும் விற்பனை செய்து, தி.மு.க.வினர் அனைவரும் குடும்பத்தினரும் கைத்தறித் துணிகளையே அணியவேண்டும் என்று ஒரு அன்பு ஆணை பிறப்பித்தார்! இன்னமும் கைத்தறி நெசவாளர்கள் நன்றியோடு அண்ணாவை அவரது ஏழைக் கிரங்கும் மனிதநேயத்தை நினைத்துப் பாராட்டுகின்றனர் – வாழ்த்துகின்றனர்!

1961 இல் மதுரை திருப்பரங்குன்றத்தில் ஒரு மாநாடு. அதற்குத் தலைமை தாங்கிய அண்ணா, தஞ்சை மாவட்டத்திலே பெரிய வெள்ளம் ஏற்பட்டு ஆறுகள் உடைந்து ஊரெல்லாம் பாழாகி மக்கள் தவிக்கின்றனர் என்ற செய்தி கேட்டுத் துடித்து, நேரே தஞ்சை மாவட்டத்திற்கு வந்து, சாலைப் போக்குவரத்துத் துண்டிக்கப்பட்ட நிலையிலும் படகுகளில் ஏறி, நாகப்பட்டினம் வரை சென்று அந்தந்த ஊர் மக்களைப் பார்த்து ஆறுதல் கூறியது மறக்க முடியாத மற்றொரு மனிதநேய நிகழ்ச்சி!

சென்னையில் ஏழைகளுடைய குடிசைகளுக்குத் திட்டமிட்டு தீ வைத்த நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் கேட்டு துடித்து, சாப்பிடவே மனமின்றி இருப்பார் முதலமைச்சர் அண்ணா!

கீழ்வெண்மணிச் சம்பவத்தின்போது அவர் உள்ளம் பட்டபாடு ஊர் அறியும், உலகறியும்; தோழர் பி. இராமமூர்த்தி போன்ற கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் அறிவார்கள். பல் துலக்காமல் கூட பரிதாபத்தினால் கண்ணீர் விட்டவர், முதல்வர் ஆன பிறகும்கூட!

அண்ணா ரோமாபுரி வாட்டிகனுக்குச் சென்று போப் ஆண்டவரை சந்தித்தார்; கோவா நாட்டு விடுதலை வீரர் திரு. ரானடே என்பவர் நீண்ட காலமாகவே சிறை பிடிக்கப்பட்டு சிறையிலே வாடிக் கொண்டிருந்தவர். அவர் தமிழ்நாட்டுக்காரரோ, அண்ணாவுக்கு அறிமுகம் ஆனவரோ அல்ல. போர்ச்சுகீசிய அரசிடம், அந்த மதத்தைப் பின்பற்றுவோர் அரசாக அவ்வரசு இருந்ததால், போப் அவர்களிடம் மனிதாபிமான அடிப்படையில் ரானடேவை விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்; அது பலித்தது! விடுதலை பெற்று நன்றி கூறினார் ரானடே -அண்ணாவுக்கு – அவர் மறைந்த நிலையில்!

குடந்தையிலே ஒரு நோயாளி. ஒரு அவசியமான உயிர் காக்கும் மருந்து அமெரிக்காவிலேதான் கிடைக்கும் என்பதால், அமெரிக்காவிற்குச் சிகிச்சைக்காகப் போன அண்ணாவுக்குக் கடிதம் எழுதினார். அதைப் படித்த அண்ணா, அந்த மருந்தை அங்கிருந்து வாங்கி அனுப்பி, நோய் தீர்த்தார்.

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை

என்ற குறளுக்கு ஒரு அருமையான சான்று அல்லவா அறிஞர் அண்ணாவின் மனிதநேயம்!

அண்ணா அமெரிக்காவில் சிகிச்சைக்காகத் தங்கியிருந்தபோது, இங்கே தமிழ்நாட்டில் இருக்கிற ஒரு சிறைக் கைதி, அப்புக்குட்டன் என்ற மரண தண்டனைக் கைதி – ஆயுள் தண்டனையாக மாற்றிடக் கேட்டு விண்ணப்பத்தை அனுப்பியதை ஏற்று, அதை ஆயுள் தண்டனையாக்கிய மனிதநேயர் அண்ணா அவர்கள்!

இப்படி அண்ணாவின் வாழ்வில் எத்தனை எத்தனையோ நிகழ்வுகள் உண்டு.

தஞ்சையில் அண்ணாவின் 53 ஆவது பிறந்த நாளில், 53 பொருள்களை அளித்தார்கள் – நகர தி.மு.க. சார்பில்.

அப்பரிசுகளைப் பெற்றுக்கொண்டு அண்ணா அவர்கள், இந்தப் பரிசுகளை எனக்கு அளித்தது பெரிதல்ல. இவைகளைவிடப் பெரும் பரிசு ஒன்றை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். உங்களது கண்ணீரை என் கல்லறையின்மீது சிந்துவீர்களாயின், அதுவே எனக்கு மகத்தான பரிசு என்று கூறியது கேட்டு உள்ளமுருகிவிட்டனர் மக்கள்!

இயற்கையின் கோணல் புத்தியால் 60 ஆம் ஆண்டின் நிறைவினைக் கூடக் கொண்டாட இயலாது அண்ணா அவர்கள் மறைந்து புகழ் உடம்பு அடைந்து வரலாறாகி விட்டார்!

பல லட்ச மக்களின் கண்ணீரோடு, அவரை ஆளாக்கிய தலைவர் தந்தை பெரியார்தம் கண்ணீர்த் துளிகளும், அவரது சடலத்தின்மீது விழுந்தனவே – அவை வள்ளுவர் குறளை அல்லவா நினைவூட்டியது!

புரந்தார்கண் நீர்மல்ச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து.                                    (குறள் 780)

படைத்தலைவனின் கண்ணீர் படைத்தளபதியின் உடல்மீது விழுவதைவிட பெரும் பேறு வேறு என்னதான் இருக்க முடியும்!

தன்னால் வளர்க்கப்பட்டு ஆளாக்கப்பட்ட அருமைத் தளபதிக்கு வீர வணக்கம் செலுத்தினார் – அவர் கண்ட – கொண்ட ஒரே தலைவர் பெரியார். அண்ணா மறைந்தார்; அண்ணா வாழ்க என்று தந்தை பெரியார் குறிப்பிட்டதே – இருவரின் மனிதநேயத்திற்கு மகத்தான சான்றுகள் அல்லவா!


The man who still rules Tamil Nadu [TNC]

NEARLY four decades after he passed into history, C N Annadurai continues to rule Tamil Nadu with his thoughts defining the broader agenda of policy making and most parties, even those which came in after his time, making a mad scramble to appropriate his legacy.

Born on this day exactly 100 years ago, Anna — it is not just the shortened form of his name but it also means elder brother — gave shape to the aspirations of the Tamil people in his public life spanning over four decades.

Whatever the modern youth know of him, no one who has set foot in the state could have missed the name ‘Anna’. For there is nothing that has not been christened after him. The international airport, the state’s first flyover, the arterial road and the engineering university in Chennai are not just those that have the name ‘Anna’. There is not a single town that does not have his statue, and bus stands, stadiums and residential localities across the state bear his name.

But it is not the naming ritual, which has not stopped yet, that perpetuated his memory. It is his words, written and spoken, during the socially turbulent era that still ring across political platforms.

In the state where political discourse thrives on rhetoric with parables and alliterations adding glitter to the harangue, Anna, an eloquent orator himself, remains the most quoted leader.

Starting his political career as a rabble- rouser in his student days — he took an MA from Pachayappa’s College in Chennai — Anna attained an iconic status in the 1930s, drawing an entire generation of Tamil youth to the Dravidian movement of his mentor Periyar E V Ramasamy initially and subsequently to the Dravida Munetra Kazhagam, launched by him in 1949.

Though his gift of the gab endeared him to larger masses, he exploited every mass medium of the era — newspapers, magazines, cinema and theatre — to reach out to the people. It was through his incisive writing that he gave an intellectual direction to the generation that found itself at the crossroads in the midst of a socio-political ferment with Periyar stirring the collective thought process of Tamil society.

At that time when the independence struggle was on the overdrive and nationalism was the buzzword across the country, Tamil cultural nationalism, offering an alternative political identity, was slowly capturing the imagination of the people in Tamil Nadu. But with cultural nationalism seen as atavistic and a possible threat to nationhood, it needed an Anna to put the ideology in perspective.

He not only gave legitimacy to Tamil cultural nationalism by highlighting its relevance in the historical and social context and made it intellectually convincing, but also added a romantic aura to it. To put it otherwise, he used Tamil nationalism as a positive force for political mobilisation. After capturing power, too, he took decisions that articulated the demands of the people of Tamil Nadu, proving him to be a visionary — similar demands were raised in subsequent years in various states and some of them are still being aired. To give an example, Madras state was the first to be christened Tamil Nadu.

Politically, Anna was a pioneer in cobbling up alliances. The DMK captured power in 1967 by contesting the elections through an alliance formed with the Swatantara Party, the Muslim League and others. It was a hard fought election, with Periyar opposing the alliance and campaigning in favour of the Congress party. But the day before assuming power, Anna, along with his close associates, drove to the house of Periyar, thus tugging at the heartstrings of his mentor and setting an example for political decency.

In fact, even after he started the DMK, the post of president was kept vacant for Periyar to go and take it any time. In 1944, at the Salem conference of the Justice Party — the South Indian Liberal Federation started in 1916 by non- Brahmin elites was known by that name after its official publication ‘Justice’ — it was Anna who moved the historic resolution that changed the name of the organisation to Dravidar Kazhagam and also made it a party of the hoi polloi.

The resolution made it mandatory for all those holding titles like Sir, Rao Bahadur, Diwan Bahadur, Rao Sahib, etc.

to return the titles. It urged all those holding posts in local bodies and as honorary magistrates to resign their jobs and asked members to refrain from using caste appellation after their names.

Thus Anna was Periyar’s alter ego.But he also wanted to capture power through the democratic process and it was one reason that impelled him to walk out of the DK. Also through polemics, he took Periyar’s philosophy to a higher plane — ‘No God’ became ‘One community, one God’, without deviating from the basic tenets of rationalism, social justice and socialism. Till his death on February 3, 1969 — his funeral, attended by 15 million mourners, was then a world record — he remained Periyar’s follower. As a leader, too, Anna was exemplary. He not only encouraged anyone with talent to bloom, he also groomed a second line of leadership in the party. Of course, the manner in which he gave up the DMK’s demand for separate state and deciding to function within the Indian Constitution, was a valiant display of statesmanship.

That he continues to be a source of inspiration for politicians was evident in 1994 when the biography of former chief election commissioner T N Seshan by Govindankutty evoked all-round protests in the state for the remark that Anna was a CIA hand maiden. Seshan, despite holding a Constitutional post, was not able to step out of the airport one full day when protestors laid a siege. Was Anna aware of his enduring popularity? Perhaps yes. At a meeting on the Marina sands, he said that as long as the name of the state remains Tamil Nadu, the two-language formula in education continues and self-respect marriages are given legal sanctity — three revolutionary things he did as Chief Minister — he would continue to govern the state. How right, he had been.


‘எழுந்து வா எம் அண்ணா!’

ஈராயிரம் ஆண்டுகள் அன்னைத் தமிழகம் தவமிருந்து பெற்றெடுத்த தலைமகன் –

சிங்க நடையும் சிங்காரத் தென்றல் நடையும் – பொங்கு கடல் நடையும் புரட்சிக் கவி நடையும் ஒரு சேரத் தன் உரை நடையாடல் கண்ட பூமான் தம்பிமார் படை மீது விழியோட்டி வெற்றி கொள்ளும் கோமான் –

பூமிப்பந்தில் தமிழர்கள் எங்கெங்கு இருக்கிறார்களோ அங்கெல்லாம் அவர்களது இதயத்தில் தங்கச் சிம்மாசனம் போட்டு வீற்றிருக்கும் மன்னன் – சிந்தை அணு ஒவ்வொன்றையும் சிலிர்க்கச் செய்யும் வகையில் நம்மையெல்லாம் ‘தம்பீ’ என்று அழைத்திட்ட அண்ணன் – பேரறிஞர் அண்ணா அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து வங்கக் கடலருகில் நீங்காத் துயிலில் ஆழ்ந்திருக்கிறார்.

உருவ அளவில் நம்மை விட்டுப் பிரிந்தார் என்றாலும் நம் உணர்ச்சி யோடும் எழுச்சியோடும்இ ஊனோடும்இ உதிரத்தோடும்இ உயிர் மூச்சோடும் நாடித் துடிப்போடும் அண்ணா அவர்கள் இரண்டறக் கலந்துவிட்டார்கள்.

தமிழில் மூன்றெழுத்துக்கு ஒரு சிறப்பு உண்டு.

மூவேந்தர் – முக்கொடி – முக்கனி என மும்முரசார்த்தவர் தமிழர்.

அவர் வாழ்ந்த தமிழ் ‘வாழ்வு’க்கு மூன்றெழுத்து; அந்த வாழ்வுக்கு அடிப்படையான அன்பு – மூன்றெழுத்து; அன்புக்குத் துணை நிற்கும் அறிவு – மூன்றெழுத்து; அறிவார்ந்தோர் இடையிலெழும் காதலுக்கு மூன்றெழுத்து; காதலர்கள் போற்றி நின்ற கடும் வீரம் – மூன்றெழுத்து; வீரம் விளைவிக்கின்ற களம் – மூன்றெழுத்து; களம் சென்று காணுகின்ற வெற்றி – மூன்றெழுத்து; அந்த வெற்றிக்கு நமையெல்லாம் ஊக்குவிக்கும் அண்ணா – மூன்றெழுத்து.

இன்று அவர் நம்மிடையே இல்லை. இந்தச் சொல்லைக் கூறும்போது எழுகின்ற துக்கத்திற்கும் எல்லை இல்லை.

அந்த எல்லையில்லாத் துக்கம் – துயரம் பற்றி அண்ணன் கொடுத்த தமிழ் எடுத்துப் பாடுகிறேன் – ஒரு கவிதை…

அண்ணா என்ற சொல்லால்
அழைக்கட்டும் என்றே – அவர் அன்னை
பெயரும் தந்தார்.
அந்த அன்னைக் குலம் போற்றுதற்கு
ஒளவைக்கோர் சிலை
அறம் வளர்த்த கண்ணகிக்கோர் சிலை
வளையாத நெஞ்சப் பாரதிக்கும்
வணங்காமுடிப் பாரதிதாசருக்கும் சிலை
வீரமா முனிவருக்கும் சிலை
கால்டுவெல்இ போப்புக்கும் சிலை
கம்பருக்கும் சிலை
தீரமாய்க் கப்பலோட்டிய தமிழர்க்கும் சிலை
திக்கெட்டும் குறள் பரப்ப
திருவள்ளுவர்க்கும் சிலை
பத்துச் சிலை வைத்ததனால் – அண்ணன்
தமிழின்பால் வைத்துள்ள பற்றுதலை உலகறிய
அந்த அண்ணனுக்கோர் சிலை
சென்னையிலே வைத்தபோது…
ஆட்காட்டி விரல் மட்டும் காட்டி நின்றார்.
ஆணையிடுகின்றார் எம்
‘அண்ணா’ என்றிருந்தோம்.
அய்யகோ! ‘இன்னும்
ஓராண்டே வாழப் போகிறேன்’ என்று அவர்
ஓர் விரல் காட்டியது இன்றன்றோ புரிகிறது!

எம் அண்ணா… இதய மன்னா…
‘படைக்கஞ்சாத் தம்பியுண்’டென்று
பகர்ந்தாயே;
எமைவிடுத்துப் பெரும் பயணத்தை
ஏன் தொடர்ந்தாய்?
உன் கண்ணொளியின் கதகதப்பில்
வளர்ந்தோமே;
எம் கண்ணெல்லாம் குளமாக
ஏன் மாற்றி விட்டாய்?
நிழல் நீதான் என்றிருந்தோம்;
நீ கடல் நிலத்துக்குள்
நிழல் தேடப் போய்விட்டாய்
நியாயம்தானா?
கடலடியில் இருக்கின்ற
முத்தெல்லாம் முத்தல்ல;
நான்தானடா நன்முத்து எனச் சொல்லி
கடற்கரையில் உறங்குதியோ?
நாத இசை கொட்டுகின்ற
நாவை ஏன் சுருட்டிக் கொண்டாய்?
விரல் அசைத்து எழுத்துலகில்
விந்தைகளைச் செய்தாயே; அந்த
விரலை ஏன் மடக்கிக் கொண்டாய்?
கண் மூடிக்கொண்டு நீ சிந்திக்கும்
பேரழகைப் பார்த்துள்ளேன்…
இன்று –
மண்மூடிக் கொண்டுன்னைப் பார்க்காமல்
தடுப்பதென்ன கொடுமை!
கொடுமைக்கு முடிவு கண்டாய்;
எமைக் கொடுமைக்கு ஆளாக்கி
ஏன் சென்றாய்?
‘எதையும் தாங்கும் இதயம் வேண்டு’மென்றாய்
இதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்?
கடற்கரையில் காற்று வாங்கியது போதுமண்ணா;
எழுந்து வாஇ எம் அண்ணா!
வர மாட்டாய்இ வர மாட்டாய்;
இயற்கையின் சதி எமக்குத் தெரியுமண்ணா…
நீ இருக்கு மிடந்தேடி யான் வரும் வரையில்
இரவலாக உன் இதயத்தைத் தந்திடண்ணா…
நான் வரும்போது கையோடு கொணர்ந்து
அஃதை உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா!

– முதலமைச்சர் மு.கருணாநிதி

உகந்த வகையில்…

பிறப்பதும், சாகின்றதும் இயற்கை. ஆனால், மக்கள் பாராட்டுதலுக்கு உகந்த வகையில் வாழ்தல் வேண்டும். மக்கள் ஒருவரைச் சும்மா போற்ற மாட்டார்கள். நாம் மற்ற மக்களும் போற்றும்படியான வகையில் காரியமாற்ற வேண்டும்.

(விடுதலை,13.8.1961)



அண்ணா வாழ்க!

அறிஞர் அண்ணாவின் 102 ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று. அவர் வாழ்ந்த காலம் குறைவானதாக இருக்கலாம். ஆனால், அவர் விட்டுச் சென்ற எச்சங்கள் காலத்தைக் கடந்து நிற்கக் கூடியவை.

தந்தை பெரியார் என்ற பகுத்தறிவுப் பகலவனின் ஒளி வாங்கிய நிறைமதியாக வாழ்ந்தவர் அவர். அவர் கற்றதையும், அறிந்ததையும், ஆற்றலையும், பகுத்தறிவுப் பகலவன் பெரியார் அவர்களின் தத்துவச் சீலங்களை மக்கள் மத்தியில் – குறிப்பாக இளையோர் மத்தியில் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தினார் – அதில் பெரும் வெற்றியையும் கண்டார்.

அவர் அரசியலுக்குச் சென்றிருக்கலாம் – ஆட்சியையும் பிடித்திருக்கலாம்; ஆனாலும், அவர் வசந்தம் என்று கருதியது – களித்தது – தந்தை பெரியார் அவர்களுடன் காடு மேடுகளில் சுற்றிப் பயணம் செய்த அந்தப் பகுத்தறிவு – சுயமரியாதைப் பணி காலகட்டத்தைத்தான்.

மெத்த படித்த அறிஞர்கள் எல்லாம் அவருடன் கருத்து வகையில் மோதிப் பார்த்தனர். நாவலர் சோமசுந்தர பாரதியாரும், சொல்லின் செல்வன் ரா.பி. சேதுப்பிள்ளையும் – அண்ணாவிடம் வாதாடிப் பார்த்தனர் – கம்பராமாய ணத்தையும், பெரிய புராணத்தையும் கொளுத்துவதா – கூடாதா என்ற பொருள்பற்றி. அதில் அண்ணாவின் அறிவார்ந்த கருத்துகளும், எடுத்துக்காட்டுகளும்தான் மேலோங்கி வென்றன.

தன்மான இயக்கம் – திராவிடர் இயக்கத்தின் அறி வார்ந்த பணியால், மத நம்பிக்கையாளர்களும், பக்தி மார் கத்தாரும் கடவுள், மதம் சார்ந்த கருத்துகளை முன் வைத்துக் காப்பாற்ற வக்கின்றி, அவற்றிற்கு விஞ்ஞான ரீதியான வியாக்கியானங்களைக் கற்பிக்கவேண்டிய நிர்பந் தத்துக்குத் தள்ளப்பட்டனர் – ஆனாலும், அறிவாயுதத்தின் முன் அவற்றால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

அய்யா என்ற வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாக அண்ணா விளங்கினார். அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ், இந்தியாவுக்கு வழி கண்டுபிடித்த வாஸ் கோடகாமா, இந்தியாவை ஆதியில் ஜெயித்த அலெக் சாண்டர் இவர்கள் எல்லாம் ஆயுத பூஜை செய்தவர்கள் அல்லர். நவராத்திரி கொண்டாடியவர்கள் அல்லர். நூற்றுக்கு நூறு பேர் என்ற அளவில் படித்துள்ள மேனாட்டிலே சரசுவதி பூஜை, ஆயுத பூஜை இல்லை.

ஏனப்பா கொஞ்சம் யோசிக்கக் கூடாதா? மேனாட்டான் கண்டுபிடித்த அரசு இயந்திரத்தின் உதவி கொண்டு உன் பஞ்சாங்கத்தை அச்சடித்துப் படித்து மகிழ்கிறாயே! அவன் கண்டுபிடித்த ரயிலில் ஏறிக் கொண்டு உன் பழைய அற்புதம் நடைபெற்ற திருத்தலம் போகிறாயே என்ற அண்ணாவின் எழுத்தில் நையாண்டியும், கேலியும் இழைய படிப்பவர்களின் மூளைப் பகுதியையும் அதேநேரத்தில் சுத்திகரிக்கும் வேலையையல்லவா செய்தது – செய்கிறது!

18 ஆண்டுகள் தமது ஒரே தலைவரைப் பிரிந்திருந் தாலும் அரசியலில் புகுந்து ஆட்சியைப் பிடித்த நேரத்தில், அவர் மனக்கண்முன் ஒளிவிட்ட உருவம் தந்தை பெரியார் தானே! அவர் உடலால் பிரிந்திருந்தாலும், அவர்தம் இதயத்தில் மிகவும் அழுத்தமாகப் பதிந்திருந்த தலைவர் தந்தை பெரியார்தான் என்பதற்கு இதுதான் அடையாளம்.

ஆட்சிக்குச் சென்றாலும், அவசர அவசரமாக அவர் இயற்றிய சட்டங்கள் – பிற்பித்த ஆணைகள் – அவர் அய்யா வின் தலைசிறந்த மாணாக்கர் என்பதை நிரூபித்ததே! அரசு அலுவலகங்களில் மதச் சின்னங்கள் – கடவுள் படங்கள் நீக்கம் – சுயமரியாதைத் திருமணத்துக்குச் சட்ட வடிவம் – சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்ற பெயர் சூட்டல் – தமிழ்நாட்டில் இந்திக்கு இடம் இல்லை – இருமொழி மட்டுமே என்ற சட்டம் உருவாக்கம் இவை யெல்லாம் எதைக் காட்டுகின்றன? அரசியலிலும் அய்யாவின் சிந்தனைகள்தான் அவரை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன என்பதைத்தானே காட்டுகின்றன.

அண்ணாவுக்குக் கிடைத்த பெருமையெல்லாம் எனக்குக் கிடைத்த பெருமை என்று தந்தை பெரியார் சொன்னதும், நான் கண்ட கொண்ட ஒரே தலைவர் தந்தை பெரியார் என்று அண்ணா சொன்னதும், திராவிட இயக்கம் என்று சொல்லிக் கொள்பவர்கள் யாராக இருந்தாலும் எப்பொழுதும் கவனத்தில் பதித்துக் கொள்ளவேண்டிய வைகளாகும்.

அண்ணாவின் பிறந்த நாளையொட்டி சென்னை கோட்டூர்புரத்தில் தமிழ்நாடு அரசால் பன்னாட்டுத் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் மிகவும் பொருத்தமான நினைவுச் சின்னம் ஆகும்.

இதன்மூலம் அண்ணா பெருமை பெறுகிறார் என்பதைவிட, அண்ணாவுக்கு மிகப் பொருத்தமான இந்த அறிவார்ந்த பெருமைமிகு சின்னத்தை எழுப்பிய தமிழ்நாடு அரசும், முதலமைச்சர் கலைஞர் அவர்களும், கல்வி அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்களும் பெருமை பெறுவார்கள் என்பதில் அய்யமில்லை.

ஒரே நேரத்தில் 1200 பேர்கள் படிக்கக் கூடிய நூலகமாக உருவாக்கப்பட்டுள்ளது. ரூ.172 கோடி மதிப்பீட்டில், எட்டு ஏக்கர் நிலப்பரப்பில் ஒன்பது தளங்களைக் கொண்ட நூலக உலகமாக ஒளிவீசுகிறது – 12 லட்சம் நூல்கள் இடம்பெறப் போகின்றன.

தமிழ்நாடு பெருமையாகப் பேசப்படும் அம்சங்களில் கோட்டூர்புரம் அண்ணா நூலகம் முக்கிய இடம்பெறும் என்பதில் அய்யமில்லை.

ஒரு நூலைப் படித்து முடிப்பதற்காக தனக்கு நடக்க விருந்த முக்கிய அறுவை சிகிச்சையை ஒரு நாள் தள்ளி வைத்துக் கொள்ளலாமா என்று மருத்துவர்களிடம் கேட்டுக் கொண்ட புத்தகத் தேனீ – பிரியர் அறிஞர் அண்ணா அவர்களுக்குச் சிறப்பு வாய்ந்த ஒரு நூலகத்தைவிட வேறு எது பெருமைக்குரிய – பொருத்தமான நினைவுச் சின்னமாக இருக்க முடியும்?

இளைஞர்களே, கண்ட விஷயங்களில் எல்லாம் காலத்தைக் கரியாக்குவதற்குப் பதிலாக, அறிவுத் தேடுதலில் உங்களின் விலை மதிக்க முடியாத காலத்தைச் செலவழியுங்கள் என்று அண்ணாவின் 102 ஆம் ஆண்டு பிறந்த நாளில் கேட்டுக்கொள்கிறோம்!

வாழ்க அண்ணா!  (Viduthalai – September 15. 2010)


அண்ணா குடும்பத்தின் வாரிசுகள்: இன்றைய நிலை

– கோவி.லெனின்

தன்னால் கற்க முடியாமல்போன கல்வியைத் தமிழகத்தின் தலைமுறைகள் கற்பதற்கு வழியமைத்தவர் பெருந்தலைவர் காமராஜர். தான் கற்ற கல்வியையும் அதன் மூலம் பெற்ற அறிவையும் தமிழகத்தின் தலைமுறைகள் நலன் பெற பயன்படுத்தியவர்பேரறிஞர் அண்ணா.

இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாநிலக் கட்சி முதன்முதலில் அந்த மாநிலத்தின் ஆட்சியைக் கைப்பற்றியது என்றால் அது அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம்தான். 1967ல் ஆட்சிக்கு வந்த அண்ணா, ஓராண்டு பத்து மாதங்கள் மட்டுமே
முதலமைச்சராக இருந்தார்.

அந்தக் குறுகிய காலத்திற்குள் இந்த மாநிலத்திற்கு தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்டினார். அதற்கு முன் சென்னை மாகாணம் என்றுதான் அழைக்கப்பட்டது. தமிழகத்தில் இருமொழிக் கொள்கையை (தமிழும் ஆங்கிலமும்) நடைமுறைப்படுத்தினார். சுயமரியாதைத் திருமணத்திற்கு சட்ட ஏற்பளிப்பு கிடைக்கச் செய்தார். இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டை முன்னின்று நடத்தினார். பேருந்துகளை அரசுடைமையாக்கினார். ஒரு
ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, ஒரு ரூபாய்க்கான பரிசுச்சீட்டுத் திட்டம் ஆகியவையும் அண்ணாவால் கொண்டு வரப்பட்டவையாகும்.

1969 பிப்ரவரி 3ஆம் நாள் அண்ணா மறைந்தபோது அவருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட மக்களின் எண்ணிக்கை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் அளவுக்குச் சாதனைமிகு எண்ணிக்கையாக அமைந்தது.

அண்ணாவின் துணைவியார் ராணி அம்மையார். இவர்களுக்குப் பிள்ளைகள் கிடையாது. அண்ணா தனது அக்காள் மகள் சௌந்தரியின் பிள்ளைகளான பரிமளம், இளங்கோவன், கௌதமன், ராஜேந்திரன் ஆகியோரை வளர்ப்பு மகன்களாக்கிக்கொண்டார்.

தமிழகத்தின் மிகப்பெரும் தலைவராகவும், முதல்வராகவும் இருந்த அண்ணாவுக்குச் சொந்தமான சொத்துகள் என்றால் காஞ்சிபுரத்தில் ஒரு வீடு. ஒரு ஏக்கர் நிலம்.சென்னை நுங்கம்பாக்கம் அவென்யூ சாலையில் ஒரு வீடு ஆகியவையாகும். அண்ணா முதல்வரானதும் அரசு அதிகாரிகள் அவரது வீட்டில் கொண்டு வந்து வைத்த ஃப்ரிட்ஜ், சோபா செட்டுகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தச் சொல்லிவிட்டார். அண்ணா மறைந்தபோது
அவர் சேமித்து வைத்த தொகை என்பது நுங்கம்பாக்கம் இந்தியன் வங்கிக்கிளையில் 5000 ரூபாயும், மயிலாப்பூர் இந்தியன் வங்கிக் கிளையில் 5000 ரூபாயும்தான்.

தனது குடும்பத்தினருக்கு அரசியலில் பதவி எதையும் அண்ணா தரவில்லை. அவரது குடும்பத்தினர்கள் அரசியலிலோ அரசாங்கத்திலோ பொறுப்புகளை எதிர்பார்க்கவில்லை. கலைஞர், எம்.ஜி.ஆர். போன்றவர்கள் அண்ணா குடும்பத்தினருக்குப் பொறுப்புகளைக்
கொடுக்க முன்வந்தபோதுகூட அண்ணாவின் வளர்ப்புப் பிள்ளைகள், அதனை இயக்கத்தில் வேறு யாருக்கேனும் கொடுங்கள் என்று சொன்ன நிகழ்வுகள் உண்டு. அண்ணாவின் துணைவியார் ராணி அம்மையார் சட்டமேலவை உறுப்பினராக எம்.எல்.சி.) கலைஞர் ஆட்சியின்போது இருந்திருக்கிறார். அண்ணாவின் நூல்களை செல்வி.ஜெயலலிதா அரசு நாட்டுடைமையாக்கி அவரது குடும்பத்தாருக்கு 75 லட்ச ரூபாய் வழங்கியது. அண்ணா நூற்றாண்டையொட்டி (2009) அண்ணாவின் வளர்ப்பு மகன்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் வழங்கியது கலைஞர் அரசு.

அண்ணாவின் முதல் மகன் பரிமளம், மருத்துவம் பயின்றவர். டாக்டர் அண்ணா பரிமளம் என்றழைக்கப்பட்ட இவர், அரசு தோல் மருத்துவராக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர்.அண்ணா பேரவை என்ற அமைப்பை நிறுவி அண்ணாவின் படைப்புகள் அச்சில் வருவதற்கு
பாடுபட்டு, வெற்றியும் கண்டார். அண்ணாவைப் பற்றிய தகவல்களைப் பதிவு செய்வதற்காகவே www.arignaranna.info  <http://ilakkiyam.nakkheeran.in/www.arignaranna.info என்ற இணையதளத்தை உருவாக்கினார். தற்போதும் அந்த இணையதளம் மாதமிருமுறை பதிவேற்றம் செய்யப்படுகிறது. அண்ணாவுக்குப் பெருமை சேர்க்கும் பணிகளைச் செய்வதற்காகவே மருத்துவப்பணியைக் கைவிட்ட பரிமளம், சில ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டது பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது.

பரிமளத்தின் மனைவி சரோஜா பரிமளம். இத்தம்பதியரின் மூத்த மகன் மலர்வண்ணன், மலர் அச்சகம் நடத்தி வருகிறார். அவருடைய துணைவியார் ஜெயஸ்ரீ பாலர் பள்ளி நடத்தி வருகிறார். இவர்களுக்கு அகிலன், ஆதித்யன் என்ற இரு மகன்கள். பள்ளியில் படித்து வருகிறார்கள். டாக்டர் பரிமளம்-சரோஜா தம்பதியரின் மகள் இளவரசி. இவரது கணவர் முத்துக்குமார் வணிகத்தில் ஈடுபட்டுள்ளார். இவர்களுடைய மகள்கள் சுருதி,
ப்ரீத்தி ஆகியோர் பள்ளியில் பயின்று வருகிறார்கள். பரிமளம்-சரோஜா தம்பதியரின் இரண்டாவது மகன் அ.ப.சௌமியன் கட்டுமானத்தொழிலில் ஈடுபட்டுள்ளார். இவரது துணைவியார் பெயர் சரளா. இத்தம்பதியருக்கு அரவிந்த், அர்ஜூன் என இரு மகன்கள். இவர்கள் பள்ளிப்படிப்பு பயில்கிறார்கள்.

அண்ணாவின் இரண்டாவது மகன் சி.என்.ஏ.இளங்கோவன். இவர் அண்ணாவின் காஞ்சி பத்திரிகையில் பணியாற்றியதோடு, அச்சுத்தொழிலையும் மேற்கொண்டவர். முதியோர் இல்லத்தின் ஆலோசகராகவும் இருந்த இவர், காலமாகிவிட்டார். இவரது துணைவியார் விஜயா இளங்கோவன். இவர்களின் மகள் பெயர் கண்மணி. இவரது கணவர் ரமேஷ்பாபு, பொறியாளராக இருக்கிறார். இத்தம்பதியரின் மகள் பிரியதர்ஷினியும் பொறியாளராக உள்ளார்.

சி.என்.ஏ.கௌதமன். இவர் அண்ணா வளர்த்த மூன்றாவது மகன். நூல் வெளியீடு மற்றும் அச்சுத் தொழிலில் ஈடுபட்டுள்ளார். இவரது துணைவியார் துளசி கௌதமன் காலமாகிவிட்டார். இத்தம்பதியரின் மகள் சரிதா. இவரது கணவர் சிவக்குமார். இத்தம்பதியருக்கு ப்ரித்வின் என்ற மகன் உள்ளார்.

அண்ணாவின் நான்காவது மகன், பாபு என்கிற சி.என்.ஏ.ராஜேந்திரன். இவர் அரசு தகவல் தொடர்புத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் மனைவி பெயர் சாந்தா. இத்தம்பதியரின் மகன் ஆனந்தன் பொறியாளராவார். இவர்களது மகள் ராஜாமணியின் கணவர் வெங்கடேஷும் பொறியாளர். ராஜாமணி-வெங்கடேஷ் தம்பதியருக்கு ஸ்ரீஹரிஹரன் என்ற மகன் உள்ளார்.

அரசியலில் ஆர்வம் செலுத்தாமல் அண்ணா குடும்பத்தினர் தங்களுக்கு விருப்பமான துறைகளில் பணியாற்றி வருகின்றனர். அண்ணாவுக்குப் பிறகு அரசியலுக்கும் ஆட்சிக்கும் வந்தவர்கள் அண்ணா குடும்பத்தினரைப் புறக்கணித்துவிட்டனர் என்றெல்லாம் அரசியல்தளங்களில் விமர்சனம் எழுகின்ற போதும், அண்ணா குடும்பத்தினர்அரசியல் இயக்கங்களிடமிருந்தோ ஆட்சியாளர்களிடமிருந்தோ எதிர்பார்ப்பதில்லை.
தங்களுக்குக் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழ்வதிலேயே மகிழ்வும் பெருமையும் கொள்கிறார்கள்.

தகவல் உதவி: செம்பியன்


பார்புகழ் அறிஞர் பல்லாண்டு வாழ்க – பேராசிரியர் சி.இலக்குவனார்

14 செப்தம்பர் 2014     

அறிஞர் அண்ணா அவர்கள் இன்று தமிழ்க் காக்கும் தனிப்பெரும் தலைவராக விளங்கி வருகின்றார்கள். இந்தியப் பெருந் தலைவராக உலகப் பெருந் தலைவராக விளங்கப் போகும் காலம் விரைவில் வந்து கொண்டிருக்கின்றது.

மக்கள் உளங்களை வன்மையாகப் பிணித்துத் தன்பால் ஈர்க்கும் தனிப்பெரும் தலைவர் அறிஞர் அண்ணா.

‘‘விரைந்து தொழில்கேட்கும் ஞானம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்’’

எனும் திருவள்ளுவர் செம்மொழிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குபவர் அறிஞர் அண்ணா அவர்களே!

நம் அன்னைத் தமிழ், தொன்மையும், வன்மையும் தூய்மையும் இனிமையும் பொருந்தியதுதான். ஆயினும் தமிழ் மக்களே தமிழின் இத்தகைய பெருமைகளை உணராது இருந்தனர். ‘தமிழ்’ என்பது தமிழ்ப் புலவர்கட்கு மட்டும் உரிய தனி உடைமை எனக் கருதப்பட்டு வந்தது. அந்நிலையை மாற்றித் ‘தமிழ்’ யாவர்க்கும் உரியது என ஆக்கி, இனிய தமிழில் பேசுதலையும் எழுதுதலையும் நாகரிகப் பெரு வழக்கமாக நாட்டில் நிலைநாட்டிய பெருமை அறிஞர் அண்ணா அவர்களையே சாரும்.

இன்குரல் பெற்றுள்ள இசை மகள் ஒருத்தி இனிய தமிழில் பாடுங்கால் கேட்டு மெய் மறந்திருப்பது போல், தமிழ்ச் சொற்பொழிவைக் கேட்டுச் செயல் மறந்து நிற்கும் நிலையை உண்டாக்கிய சீர்த்தி அறிஞர் அண்ணாவுக்கே உரியது.

அறிஞர் அண்ணா அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும்நாவிறுபடைத்துள்ள பெருநாவலர். செஞ்சொற்கொண்டல்; எவரையும் தம்போக்குக்கு ஆட்படுத்தும் பேனா மன்னர்; பிறவி நடிகர்; ஆராய்ச்சி அறிஞர்; அமைதிப் பெரியார்; அன்புக்குரிசில்; மக்களாட்சியின் மாண்புறு காவலர்.

இன்று பாரதப் பெருங் கண்டத்தில் ஒருமைப்பாட்டின் பேரால் அஞ்சத்தக்க சூழ்நிலை ஒன்று உருவாகி வருகின்றது. ‘‘ஒற்றுமைக்கு வழி ஒரே நாடு; ஒரே மொழி’’ என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு பரத கண்டத்தில் உள்ளோர் அனைவரும் இந்தி மொழி ஒன்றையே தேசீய மொழியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற திட்டமிட்டு வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் இந்தி மொழியை ஏனைய மொழியாளர் மீது சுமத்தி வரும் செயல் விரைந்து நடைபெற்று வருகின்றது. இன்னும் சில ஆண்டுகளுக்குள் இந்தி மொழியே எல்லாத் துறைகளிலும் ஆட்சி பெற்றுவிடும்.

இதனோடு அமையாது ‘‘எல்லா மொழிகட்கும் ஒரே எழுத்து’ என்ற பெயரால் இந்தி மொழி எழுத்தாம் தேவநாகரியை இங்கு வழங்கும் அனைத்து மொழிகட்கும் உரித்தாக்கவும் திட்டமிட்டுச் செயல்புரிந்து வருகின்றனர்.

ஆகவே ஒரு கால்நூற்றாண்டுக்குள் இந்தி மொழி தவிர்த்த ஏனைய மொழிகள் உருவிழந்து மறைந்தொழிவது உறுதி. மொழியையிழந்த பின்னர் விழியை இழந்தவர்களாவோம்; விழியிழந்த பின்னர் வாழ்வேது?

இக்கொடு வினையினின்று தப்புவதற்கு வளர்ந்தோங்கி வரும் இந்தி முதன்மையைத் தடுத்தாக வேண்டும். இம்மாபெரும் தடுப்புப் பணியில் அறிஞர் அண்ணா அவர்கள் முனைந்து நிற்கின்றார்கள். அவர் தலைமையில் ஆயிரக் கணக்கான தமிழர்கள் அமைதியான அறப்போரில் ஈடுபட்டு தாய்மொழிக்காக அல்லல்பட்டு வருகின்றனர். இந்தி முதன்மைத் தடுப்பு இந்தி ஒழிந்த எல்லா மாநிலத்திற்கும் உரியது; எல்லா மக்களும் தம் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபடல் வேண்டும்.

மறைந்த மாமணி நேருவைப் போல் தென்னரசு மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட ஒரே தலைவராக விளங்குபவர் அறிஞர் அண்ணா அவர்களே. ஏனைய மாநிலத்தவரும் அறிஞர் அண்ணாவின் தலைமையில் அணிவகுத்து நிற்கும் காலம் வரப்போகின்றது. இந்தி மொழித் தனியாட்சி அப்பொழுதுதான் தன் இரும்புப் பிடியைத் தளர்த்தி தன்னிடத்திற்குச் செல்லும்.

எல்லா மொழிகளும் இடையூறின்றி வளரவும், எல்லா மாநிலத்தவரும் உரிமையோடு ஒற்றுமையுடன் வாழவும் எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற பெருமித உணர்வு தோன்றவும் இந்திமொழி முதன்மை அகற்றப்பட வேண்டும். இப்பணியில் ஈடுபட்டுள்ள அறிஞர் அண்ணா அவர்கள் பல்லாண்டு வாழ்வார்களாக. பரத கண்டப் பெருந்தலைவராக, உலகப் பெரியாராக, மக்கள் அனைவராலும் போற்றப்படும் நிலையை விரைவில் பெறுவாராக, இன்னும் பலப்பல ஆண்டுகள் இனிதே வாழ்க.

வாழ்க அண்ணா! வளர்க தமிழ்

இந்தி முதன்மை எளிதே நீங்கி

எல்லா மொழிகளிலும் இனிதே வாழ்க!

அடிமை நீங்கி மிடிமை ஒழிந்து

ஒன்றுபடுவோம் உள்ளத்தால்

நன்றே வாழ்வோம் நலம்பல பெற்றே!

குறள்நெறி(மலர்1 இதழ்17):ஆவணி 31, 1995/ 15.09.1964

http://www.akaramuthala.in/modernliterature/katturai/%e0%ae%aa%e0%ae%be%e0%

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply