நான்தாண்டா ஆத்தாள்!

குறுநாவல்

நான்தாண்டா ஆத்தாள்!

நக்கீரன்
(1)

அந்தப் பொல்லாத செய்தி இறக்கை கட்டின பறவை மாதிரி அந்த ஊர் எங்கும் பறந்தது. யாரைப் பார்த்தாலும் அந்த வசனத்தையே திரும்பத் திரும்பக் கிளிப்பிள்ளை சொன்னமாதிரிச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இரண்டு பேர் சந்தித்து விட்டால் போதும். உடனே செய்திப் பரிமாற்றம் ஆரம்பமாகி விடும். இரண்டொருவர் இந்தச் செய்தி பரிமாற்றத்தை முழுநேரப் பணியாகக் கொண்டிருந்தார்கள். அதனால் அவர்களுக்கு “வீரகேசரி” என்ற பட்டம் கூடக் கொடுக்கப்பட்டிருந்தது. சரி விடயத்துக்கு வருவோம். அப்படி என்ன தலை போகிற செய்தி?

“புவனத்தை விட்டு ஓடிப் போன பேய் மீண்டும் வந்து அவளைப் பிடிச்சிட்டுதாம். இப்போ அவ (பேய்) ஆடுறா!” என்பதுதான் அந்தப் பொல்லாத செய்தி. கிட்டத்தட்ட ஓராண்டு காலம் செல்லையர் வீட்டிலும் சரி, அந்தக் கிராமத்திலும் சரி நிலவி வந்த ஆனந்தத்தையும் அமைதியையும் இந்தச் செய்தி அடியோடு கலைத்து விட்டது.

செல்லையரின் குடும்பம் அந்தக் கிராமத்தைப் பொறுத்தளவில் சராசரிக் குடும்பம் என்று சொல்ல முடியாது. சராசரிக்கு மேல் நடுத்தட்டு என்றுதான் சொல்ல வேண்டும். அந்தக் குடும்பத்துக்கு வழி வழிவந்த முதிசச் சொத்து இருந்தது. பூனகரி கோரைப்பற்றில் நல்லா விளையக்கூடிய ஐம்பது பரப்பு வயல் காணி. ஊரில் சின்னதும் பெரியதுமான பத்துப் பன்னிரண்டு பரப்பு வடலி-தென்னங்காணிகள். இவற்றை வைத்துக் கொண்டு செல்லையர் குடும்பம் ஒப்பீட்டளவில் வசதியாக வாழ்ந்து வந்தது.

Related Image

அந்தக் கிராமத்தில் முதல் கல்வீடு செல்லையர் கட்டியதுதான். மின்சாரம் வந்தபோதுகூட அந்த வீட்டுக்குத்தான் முதன் முதலில் இணைப்புக் கொடுக்கப்பட்டது. நாற்சாரப் பாணியில் வீடு கட்டப்பட்டிருந்தது. கூரை ஒல்லாந்தர் காலத்து ஓடுகளால் வேயப்பட்டிருந்து. கிணறு அடிவளவுக்குள் இருந்தது. கிணறு கடற்கரையை அண்டி இருந்ததால் அதன் தண்ணீர் உவர்ப்பாய் இருந்தது. கொஞ்சம் மெனக்கெட்டு தண்ணீரைக் காய்ச்சினால் உப்பு எடுத்து விடலாம்! எனவே குளிக்க முழுகக் கிணற்றுத் தண்ணியும் குடிப்பதற்கு அந்த ஊர் பிள்ளையார் கோயில் கிணற்றுத் தண்ணியும் பயன்பட்டன.

அது என்னவோ தெரியாது. அந்த ஊரில் உள்ள மூன்று கோயில்களில் உள்ள கிணறுகள் அத்தனையும் நல்ல தண்ணீர்க் கிணறுகளாக இருந்தன. ஊர்க் கோடியில் இருந்த பிள்ளையார் கோவிலைவிடக் கடல் அருகே இருந்த கண்ணகி அம்மன் கோயில் கிணறு மூன்றிலும் நல்ல தண்ணீர். அள்ளிக் குடித்தால் தண்ணீர் “ஐஸ்” மாதிரி குளிர்ச்சியாக இருக்கும். இதனால் தூர இடத்தில் இருந்து மக்கள் நடந்தும் மிதிவண்டிகளில் வந்தும் குடம் குடமாக நிரப்பிக் கொண்டு போவார்கள்.

ஆனால் ஐயனார் கோயில் தண்ணி மட்டும் பிற்காலத்தில் உப்புக் கரிக்கத் தொடங்கியது. அதற்கான காரணம் தெரியவில்லை. கோயில் வளவுக்குள் இன்னொரு கிணற்றைத் தோண்டினார்கள். அந்தத் தண்ணீரும் உப்புக் கரித்தது. பிள்ளையார் கோயில் தண்ணீரும் காலம் போகப் போக உவர்க்கத் தொடங்கியது. ஆரம்பத்தில் இந்தக் கிணற்றில் சவர்க்காரம் போட்டுக் குளிக்கவும், உடுப்புக்கள் தோய்க்கவும் தடை எதுவும் இருக்கவில்லை. இதனால் சோடியம் உப்பு மழை நீரோடு கலந்து மண்ணூடாக இறங்கி கிணற்று ஊற்றோடு சேர்ந்து விட்டது. அதுதான் தண்ணீர் உப்பானதற்குக் காரணமாக இருக்க வேண்டும் என அந்தக் கிராமத்து மக்கள் பேசிக் கொண்டார்கள்.

செல்லையருக்கு ஒரே ஒரு பிள்ளை. பெயர் சிவராசா. ஆள் நல்ல நிறம். நடுத்தர உயரம். பார்ப்பதற்கு நல்ல எடுப்பான தோற்றம். பிற்காலத்தில் ‘செல்ல’ வண்டியும் சேர்ந்து கொண்டது. இதனால் ஊரில் அவரைச் ‘செட்டியார்’ என்றே எல்லோரும் அழைக்க ஆரம்பித்தார்கள்.

பெற்றோர்கள் சிவராசாவை மிகவும் செல்லமாக வளர்த்தார்கள். பிள்ளை எதையெதைக் கேட்டதோ அவற்றை எல்லாம் வாங்கிக் கொடுத்தார்கள். பக்கத்து நாவலர் தமிழ்ப் பாடசாலையில் நாலாம் வகுப்பை முடித்தவுடன் சுண்டிக்குழி பரி. பரியோவான் கல்லுரரியில் மேற்படிப்புப் படிக்கச் சேர்க்கப் பட்டார். பரி.யோவான் கல்லூரி என்ற பெயர் யார் நாவிலும்; இலேசில் நுளையாததால் அதனை பாதிரிப் பள்ளிக்கூடம் என்றோ அல்லது சிலேட்டுப் பள்ளிக்கூடம் என்றோ ஊரார் அழைத்தார்கள். பள்ளி வளவுக்குள் இருந்த தேவாலயத்தின் செங்குத்தான கூரை சிலேட்டுப் போன்ற நிறமும் வடிவும் உடைய ஓட்டினால் வேயப்பட்டிருந்தது. அதனால்தான் அந்தப் பள்ளிக்கு சிலேட்டுப் பள்ளிக்கூடம் என்ற பெயர் வந்தது.

Search results for "columbuthurai jaffna"

பாதிரி பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படித்தால் நாளடைவில் அவர்கள் பிள்ளைகளைக் கிறித்துவ மதத்திற்கு மாற்றிவிடுவார்கள் என்ற பயம் சைவப் பெற்றோர்களுக்கு இருந்தது. அதனால் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மேற்படிப்பு படிக்காவிட்டாலும் பருவாயில்லை, பாதிரிமாற்றை பள்ளிக் கூடத்துக்கு அனுப்பக் கூடாது என்று முடிவெடுத்து அவர்களை வீட்டோடு வைத்துக் கொண்டார்கள்.அந்தக் கல்லூரியில் சேருவதற்கு சில நாட்களுக்கு முந்தித்தான் சிவராசாவின் குடுமி வெட்டப்பட்டது. அது மட்டும் அவர் தலையை ஒரு குடுமி அலங்கரித்தது. பின்னால் இருந்து பார்ப்பவர்கள் அவரைப் பெண்பிள்ளை என்று நினைத்தார்கள். ஆங்கிலப் பள்ளியில் படிக்கிற பிள்ளை கொஞ்சம் நாகரிகமாக இருக்க வேண்டும் என்று சிவராசாவின் பெற்றோர் நினைத்ததில் தப்பில்லை. அந்த நினைப்பு குடுமியோடு நிற்கவில்லை. காதில் இருந்த தோடும் கழட்டப்பட்டது.

படிப்பில் சிவராசா மிகவும் கெட்டிக்காரனாக விளங்கினார். ஆங்கிலப் பாடந்தான் ஆரம்பத்தில் கொஞ்சம் இடக்குச் செய்தது. ஆனால் பயிற்று மொழி ஆங்கிலமாக இருந்ததால் வரலாறு புவியியல் பாடங்களையும் அந்த மொழியிலேயே கற்க வேண்டி இருந்தது. மேலும் ஆங்கிலப் பாடத்தை ஆங்கிலேயப் பாதிரியார் ஒருவரே படிப்பித்தார். அதனால் ஆங்கில மொழி கொஞ்சம் கொஞ்சமாக சிவராசாவுக்குக் கைவந்தது. கணக்குப் பாடம் தமிழ்ப் பாடம் இரண்டிலும் நல்ல புள்ளி வாங்கினார். ஆண்டொன்றாக ஒவ்வொரு வகுப்புகளைத் தாண்டி கடைசியாக யூனியர் மெற்றிக்குலேசன் பரீட்சை எடுத்து அதிலும் முதல் வகுப்பில் சித்தி எய்தினார். என்ன காரணமோ அதற்குமேல் படிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கும் தோன்றவில்லை. அவரது பெற்றோர்களுக்கும் தோன்றவில்லை.

யூனியர் மெற்றிக்குலேசன் மட்டும் சித்தி எய்தியதே பெரிய சாதனையாகக் கருதப்பட்டது. அந்த ஊரில் அதுவரை யூனியர் மெற்றிக்குலேசன் பரீட்சையில் சித்தி எய்திய இரண்டாவது ஆள் சிவராசாதான். அந்தக் காலத்தில் ஜே.எஸ்.சி. வகுப்புவரை படித்தவர்களுக்கு மிகச் சரளமாக ஆங்கிலம் பேசும் வல்லமை வந்துவிடும். பிற்காலத்தில் எஸ்.எஸ்.சி. எடுத்துச் சித்தி எய்தியவர்களுக்குக் கூட அப்படியான வல்லமை இருக்கவில்லை.

ஆங்கிலம் ஒரு கடுமையான மொழி. ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொள்ளாதவர்கள் அல்லது முதல் மொழியாகக் கொள்ளாதவர்கள் அதனை இலகுவாகப் பேசவோ எழுதவோ கற்றுக் கொள்ள முடியாது. ஆங்கில எழுத்துக்களுக்குத் தமிழில் இருப்பதுபோல ஒரே சீரான ஒலி பெரும்பாலும் இல்லை. அது சொல்லுக்குச் சொல் வேற்றுமைப்படும். தமிழ் எழுத்துக்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரே சீரான ஒலி இருக்கிறது. நெடில் எழுத்துக்கள் என்பன நீண்ட ஓசையுடையன. அதாவது இரண்டு மாத்திரை காலம். மாத்திரை நேரம் என்பது கண் சிமிட்டும் காலம். அல்லது கை நொடிக்கும் காலம். குறில் எழுத்துக்கள் குறுகிய ஓசையுடையன. அதாவது ஒரு மாத்திரை காலம்.

எண் திணை பால் இவற்றிலும் ஆங்கிலத்துக்கும் தமிழுக்கும் வேற்றுமை உண்டு. எடுத்துக்காட்டாக ர்ந என்றால் அவன் ர்ளை என்றால் அவனுடையது. ளூந என்றால் அவள். ர்நச என்றால் அவளுடையது. உண்மையில் ர்ந ர்ளை என்றாகும் போது ளூந- ளூளை என்றுதான் இருக்க வேண்டும். ஆனால் அது ளூந என்று மாறிவிட்டது. இப்படியான இடர்ப்பாடு தமிழில் அவ்வளவாக இல்லை. இருந்தும் ல ள ழ, ர ற ன ண போன்ற எழுத்துக்களை எழுதும் போதும் உச்சரிக்கும்போதும் இடர்ப்பாடு ஏற்படுவது உண்மை. அதேபோல் திணை வேறுபாடு தமிழில் உண்டு. ஆங்கிலத்தில் இல்லை. மேலும் சந்தி சேர்த்து எழுதுதல் சந்தி பிரித்து எழுதுதல் தமிழில் இடர்ப்பாட்டை உண்டாக்குகின்றன.

செயற்க்கை என்று எழுதுவது பிழை. காரணம் ‘ற்’ என்ற மெய்யெழுத்துக்குப் பின் எந்த மெய்யெழுத்தும் வராது. அது மட்டுமல்ல ‘ற்’ என்ற மெய்யெழுத்து எந்தச் சொல்லின் கடைசியிலும் நிற்காது! சந்தி சேரும்போது பொன் சக குடம் பொற்குடம். கண் சக செவி-கட்செவி. பசி பிணி பசிப்பிணி இரண்டுக்கும் பொருள் மாறுபடுகிறது. பசி பிணி என்றால் பசியும் பிணியும் என்று பொருள் (‘உம்” மறைந்திருக்கிறது). பசிப்பிணி என்று சேர்த்துச் சொன்னால் அது உருவகம் ஆகி விடுகிறது. பசி ஒரு நோயாக உருவகம் செய்யப்பட்டிருக்கிறது. இதே போல் உருளை கிழங்கு என்றால் உருளையும் கிழங்கும் என்றும் பொருள் கொள்ளலாம். உருண்டையான கிழங்கு என்றும் பொருள் கொள்ளலாம். ஆனால் ‘க்’ சேர்த்து உருளைக் கிழங்கு என்று எழுதினால் எந்தக் குழப்பமும் இல்லாது உண்ணும் கிழங்கையே குறிக்கும். ஒரு எழுத்துப் பொருளை மாற்றி விடுகிறது.

அந்தக் காலத்தில் யூனியர் மெற்றிக்குலேசனோடு அரசாங்கத்தில் ஏதாவது எழுதுவினைஞர் போன்ற பணியில் சுலபமாகச் சேர்ந்து விடலாம். சிவராசாவுக்கு தெரிந்த ஒருவர் மூலம் வவுனியா காணிக் கந்தோரில் எழுது வினைஞர் நியமனம் கிடைத்தது. அந்த ஊரில் இருந்து அரசாங்க உத்தியோகத்தில் அமர்ந்தவர்களில் சிவராசா இரண்டாவது ஆள்.

யாழ்ப்பாணக் குடாநாட்டை விட்டு பண்டித்தலைச்சிக்கு அப்பால் என்றுமே பயணம் செய்திராத சிவராசா மூட்டை முடிச்சுகளோடு வவுனியாவிற்குப் போகப் புறப்பட்டார். அன்று வவுனியாவிற்குப் பயணம் புறப்படுவது இன்று வெளிநாடொன்றுக்குப் பயணம் புறப்படுவது போன்றது. கால் நடையாக வன்னிக்கு பூநகரி ஊடாகப் போய் வர அந்தக் காலத்தில் ஒரு மாதம் பிடித்தது. வண்டில் மாடுகள் வாங்கவே பலர் வன்னிக்குப் போய் வந்தார்கள்.

பூநகரி கச்சாய் கறுக்காத் தீவில் உள்ள சிலர் வன்னிக் காட்டுக்கு வேட்டைக்குப் போய் மான் மரை பன்றி என்று சுட்டுக் கொண்டு வந்து அவற்றின் இறைசியை வெய்யிலில் காய வைத்து எடுத்து வற்றலாக்கி யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வாணிகம் செய்தார்கள். மரை வற்றலோடு கத்தரிக்காய் சேர்த்து சமைத்த கறி மெத்த உருசியாக இருக்கும் என்று சப்புக் கொட்டுகிறவர்கள் இன்றும் இருக்கிறார்கள்.

தங்கள் ஒரே பிள்ளையை கண்காணாத வன்னிக் காட்டுக்குத் தனியாக அனுப்ப மனம் இல்லாத பெற்றோர் துணைக்கு சிவராசாவின் மச்சான் கந்தவனத்தையும் கூட அனுப்பி வைத்தார்கள். யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் ஊரே திரண்டு வந்து அவர்களை ஏதோ இந்த நாளில் வெளிநாட்டுக்குப் பயணம் போகிறவர்களைப் பயணம் அனுப்பி வைப்பது போல அனுப்பி வைத்தார்கள். அவர்களை ஏற்றிக் கொண்டு கரிக் கோச்சி வவுனியா புறப்பட்டது.

சிவராசாவுக்கு ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு எழுத்துக்களோடும் எண்களோடும் கோப்புக்களோடும் நாளும் மல்யுத்தம் செய்யும் வேலை அடியோடு பிடிக்கவில்லை. இரவில் பெரிய கொட்டன் நுளம்புகள் குண்டு வீச்சு விமானங்கள் போல் இரைச்சலோடு தாழப் பறந்து காசு வாங்காமல் உடம்பு முழுதும் ஊசி போட்டன. தெரியாத்தனமாக வந்து வசமாக வன்னியில் மாட்டுப்பட்டுப் போனதாக அவர் நினைத்தார். எல்லாவற்றிற்கும் மேலாக வன்னிக் கடைச் சாப்பாடும் தண்ணீரும் அவருக்கு ஒத்துவரவில்லை.

வாய்க்கு உருசியாக பூநகரி மொட்டைக் கருப்பன் நெல்லை அவித்து பக்குவமாகப் பாயில் கொட்டிக் காயவைத்து பின்னர் உரலில் போட்டு கைக்குத்தலாக இடித்த அரிசியைச் சோறாக்கி துறையூர் மீன் குழம்பும் சொதியோடு உருசியாக வீட்டுச் சாப்பாடு சாப்பிட்ட சிவராசாவின் வாய்க்கு வவுனியா கடைச்சாப்பாடு உப்புச் சப்பில்லாமல் இருந்தது. உள் மனம் வீட்டையும் பெற்றோரையும் நினைத்து அழுதது.

எப்படியோ ஒரு மாதத்தை தாக்குப் பிடித்த சிவராசா முதல் மாதச் சம்பளமான தொண்ணூறு ரூபா எழுபத்து ஐந்து சதம் கைக்கு வந்ததும் பேசாமல் பறையாமல் “மச்சான்ம் இனிமேலும் இங்கிருந்து சரிப்பட்டு வராது. வா வீட்டுக்குப் போவோம்” என்று சொல்லிக்கொண்டு மீண்டும் கரிக் கோச்சியில் ஏறி எPடு வந்து சேர்ந்து விட்டார்!



‘நான்தாண்டா ஆத்தாளு!
(2)

நல்லகாலமாக “உத்தியோகம் புருச இலட்சணம்” என்பது அவரது பெற்றோர்களது கொள்கையாக இருக்கவில்லை. தங்களது ஒரே பிள்ளை நில புலங்களைப் பார்த்துக் கொண்டு தங்களுக்குத் துணையாக வீட்டோடு இருப்பதையே அவர்கள் விரும்பினார்கள்.

அதன் பின்னர் சிவராசாவிற்கு திருமணப் பேச்சுத் தொடங்கியது. ஊரில் காணி பூமியோடு படித்த ஒரு இளந்தாரி இருந்தால் குமர்ப் பிள்ளைகளை வைத்திருப்பவர்கள் சும்மா இருப்பார்களா? நான் முந்தி நீ முந்தி என்று பலர் தங்கள் பிள்ளைகளை எக்கச் செக்கமான சீதனத்தோடு கட்டிக் கொடுக்க முன்வந்தார்கள். கடைசியாக அவரைக் கைப்பிடிக்கிற பாக்கியம் புவனேஸ்வரிக்குக் கிட்டியது.

புவனம் (அப்படித்தான் அவளை எல்லோரும் கூப்பிட்டார்கள்) சுமாராகப் படித்த பெண். “நாளைக்கு ஒருத்தனைக் கல்யாணம் செய்து கொண்டுபோகிற பெண்பிள்ளைக்கு அதிகம் படிப்பெதற்கு. நாலு எழுத்து வாசிக்கத் தெரிந்தால் போதும்” என்று பெற்றோர் நினைத்ததால் எட்டாம் வகுப்போடு புவனத்தின் படிப்புக்கு முற்றுப்புள்ள வைக்கப் பட்டு விட்டது. அதிகப் படிப்பில்லாத ‘குறையை’ அவரது மேனி அழகும் முகவெட்டும் உடல் கட்டும் தாராளமாக ஈடு செய்தது. முதல் முதல் புவனத்தைப் பார்க்கிறவர்கள் “பிராமணத்தி” போல் இருக்குது என்று பெருமையோடு தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

முற்றத்தில் பெரிய பந்தர். அதற்கு நல்ல நாள் பார்த்து முள்முருக்கை மரத்தில் போடப்பட்ட பந்தர்க் கால். பந்தரின் கீழ் உள்ள தரை முழுதும் மணியன் தோட்டத்தில் இருந்து வண்டில் வண்டிலாகக் கொண்டு வந்து பறிக்கப்பட்ட பால்போன்ற வெள்ளை மண். பந்தர் கிடுகுகளை மறைக்க சேலைகளால் வெள்ளை கட்டு. அதில் பச்சை சிவப்பு நிறங்களில் வெட்டி ஒட்டிய சருகை நட்சத்திரங்கள். பந்தரின் இரண்டு பக்கமும் செவ்வரத்தை அலரிப் பூக்களிவில் கட்டி நெருக்கமாகத் தொங்கவிடப்பட்ட சரங்கள். வாசலில் இரண்டு பக்கமும் புகைபோட்டு எடுத்த பத்துப் பதினைந்து பழுத்த குலைகளோடு கூடிய வாழைமரங்கள். வீட்டு வாசலில் இருந்து படலை வரை இருமருங்கும் வெளியில் வீதியின் இரு மருங்கும் கட்டித் தொங்க விடப்பட்ட தென்னந் தோரணங்கள். இரண்டு பெரிய ஆளிகளோடான அழகான மணவறை மற்றும் ஓம குண்டம்.

உள்ளுர் குருக்கள் போதாதென்று வெளியூர்களில் இருந்து தருவிக்கப்பட்ட குருக்கள்மார். அன்று யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்று விளங்கிய நாகசுர வித்துவான்கள் சின்னராசா- தம்பிராசா கூட்டம் மேளம். பண்ணாகத்தில் இருந்து சிறப்பாக வரவழைக்கப் பட்டவர்கள் சமைத்த பத்துவிதக் கறிகள் பதினாறுவித பொரியல் கரியல் பால்பாயாசத்தோடு கல்யாணச் சோறு. சிவராசா வீட்டுக் கல்யாணத்தினால் அந்த ஊரே அமர்க்களப் பட்டது.

மாப்பிள்ளையை மேள தாளத்தோடு இரு வீட்டாரும் அழைத்துச் சென்று கோயில் கிணற்றில் தோய வார்த்தார்கள். தோழன் முதல் வாளித் தண்ணீரை வாங்கித் தலையில் ஊற்றினார். ஏற்கனவே பெண்வீட்டார் வாங்கிக் கொடுத்த சரிகைப் பட்டு வேட்டியை உடுத்தினார்கள். தலையில் பட்டுச் சால்வையில் தலைப்பா. சிவராசாவின் காதுத்தோடு கழட்டப்பட்டாலும் ஊர் வழக்கத்தின்படி அன்று காதுக்கு கடுக்கன் போடப்பட்டது.

திருமணம் ஏதோ உடையார் அல்லது முதலியார் வீட்டுத் திருமணம் போல நடந்தது. சிவராசா வீட்டார் தங்களது ஒரே பிள்ளையின் திருமணத்துக்கு காசு கரியாவதைப் பார்க்காமல் ஆடம்பரமாகச் செலவழித்தார்கள்.

யாழ்ப்பாண சமூகத்தில் கல்யாணம் என்று வரும்போது மூன்று நேரம் நன்றாகச் சாப்பிட வழியில்லாதவர்கள் கூடக் கடன்பட்டோ காணியை ஈடு வைத்தோ தங்கள் சக்திக்கும் மேலாகச் செலவழித்து மிகவும் எடுப்பாக அதனை நடத்தி முடித்து விடுகிறார்கள். தாலி மட்டும் குறைந்தது பத்துப் பவுணில் செய்ய வேண்டும் என்பது ஒரு எழுதாத சட்டம்.

படுகிற கடனைப் பின் எப்போது அடைப்பது எப்படித் திருப்பிக் கட்டுவது என்பது பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல் ஊராரும் உறவினரும் மெச்ச வேண்டும் என்பதற்காக இப்படியான மடைத்தனமான காரியத்தை செய்கிறார்கள். இன்னும் சிலர் சரியாகப் சாப்பிடாமல் வயிற்றைக் கட்டி வாயைக் கட்டிச் சேமித்த தேட்டத்தை ஒரே நாளில் கரைத்து விடுகிறார்கள்!

இதில் பெண் வீட்டார் பாடுதான் தொல்லை அதிகம். கல்யாணம் பேசும்போதே மாப்பிள்ளை வீட்டார் வீடு காணி எத்தனை தங்கப் பவுணில் காப்பு, சங்கிலி, பதக்கம், அட்டியல், கம்மல,் மோதிரம் என்று கராராய் பெண் வீட்டாரோடு உடன்பாடு  செய்து கொண்டு விடுவார்கள். காணி உறுதியை பிரக்கிராசியாரிடம் காட்டி அது போலி இல்லை என்று உறுதி செய்து கொள்பவர்களும் இருக்கிறார்கள். நகையைப் பொறுத்தளவில் அவற்றை உரசிப் பார்த்து தராசில் நிறுத்து எடை சரியாக இருக்கிறதென்று சரிபார்த்துக் கொள்பவர்களும் உண்டு.

முரசு இயம்பின முருடு அதிர்ந்தன
முறை எழுந்தன பணிலம் வெண்குடை
அரசு எழுந்தது ஓர்படி எழுந்தன
அகலுள் மங்கல அணி எழுந்தது
மாலை தாழ் சென்னி வயிர மணித் தூணகத்து
நீல விதானத்து நித்திலப் பூம்பந்தர்கீழ்
சாலிஒரு மீன் தகையாளைன் கோவலன்
மூதுறு பார்ப்பான் மறைவழி காட்டிட
தீவலம் செய்வது காண்பார்கண் நோன்பு என்னை!

ன இளங்கோ அடிகள் இற்றைக்கு கிட்டத்தட்ட ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கண்ணகி-கோவலன் திருமண நிகழ்ச்சியை வர்ணிப்பார்.

அதாவது ‘முரசுகள் ஒலித்தன மத்தளங்கள் அதிர்ந்தன சங்குகள் முழங்கின வெண்குடை அரசு எழும்போது எழும் நிலையில் எழுந்தன. தெருவுள் மங்கல அணி எழுந்தது மாலைகள் தொங்குகின்ற உச்சியை உடைய வயிர மணிகளால் இழைக்கப் பெற்ற தூணில் நீலநிறமுடைய மேல்கட்டியும் முத்துக்களால் இயன்ற பொலிவுடைய பந்தலின் கீழ் வானத்தில் ஊர்கின்ற நிலாவும் உரோகிணியும் சேர்கின்ற நாளில் அருந்ததி போன்ற ஒப்பற்ற பண்புடையளாகிய கண்ணகியைக் கோவலன் பெரிய முதிர்ச்சியுடைய அந்தணன் வணிகர்க்குரிய மறை நெறிகளின் படி வழிகாட்ட மணமக்கள் நெருப்புக் குண்டத்தை வலம் வந்தனர். அக்காட்சியைக் காண்பவர் கண்கள் என்ன நோன்பு செய்தனவோ?’

கண்ணகி – கோவலன் குடும்பத் திருமணம் மேட்டுக்குடித் திருமணம். இருவரது தந்தையரும் இருநிதிக் கிழவர்கள். அரசரோடு ஒப்ப வைத்து எண்ணக் கூடிய உயர் குடியில் வான் பொருள் குன்றம் படைத்த செல்வந்தர்கள். புகழுடைய கொற்கைமுத்து வணிகர்கள். கண்ணகியின் தந்தை மாநாய்க்கன் “வான்நிகர் வண்கை படைத்தவன்.” கோவலன் தந்தை மாசாத்துவான் “வருநிதி பிறர்க்கு ஆர்த்துபவன்.”

முத்துப் பரல்களால் ஆன கண்ணகியின் காற்சிலம்புக்கும் மாணிக்கப் பரலால் ஆன தன் தேவி கோப்பெருந்தேவியனது சிலம்புக்கும் வேற்றுமை தெரியாது பாண்டியன் மயங்கினான் என்றால் இளங்கோ அடிகள் மாநாய்க்கன மாசாத்துவான் இருவரையும் அரசரோடு ஒப்பிட்டுப் பேசியதில் தவறில்லை.

பூம்புகாரில் நடந்த கண்ணகி-கோவலன் திருமண விழாவோடு துறையூரில் நடந்த சிவராசா-புவனம் திருமண விழாவை ஒப்பிட முடியாது. உறை போடவும் காணாது. ஆனால் காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு. அந்த ஊர் மக்களுக்கு சிவராசா – புவனம் திருமணம் கண்கொளாக் காட்சியாக இருந்தது!

மணவறையில் மாப்பிள்ளை சிவராசாவையும் மணப்பெண் புவனத்தையும் பார்த்த ஊரவர்கள் பார்வதி, பரமசிவன் திருமகள் திருமால் போலப் பொருத்தமான சோடி எனத் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

கண்பட்டுவிடும் என்று பயந்த சிவராசாவின் தாயார் கிழமைக்கு ஒரு முறையாவது மகனுக்கும் மருமகளுக்கும் பத்து மிளகாய் சுற்றி அடுப்புக்குள் போட்ட வண்ணம் இருந்தார். மிளகாய் வெடிக்கும் சத்தத்தை வைத்துக் கொண்டு உண்மையிலேயே பிள்ளைகளுக்குக் கண்ணூறு பட்டுவிட்டது என்று அந்தத் தாயுள்ளம் நம்பியது.

சிவராசா வீட்டோடு இருந்தபடியாலோ என்னமோ இரண்டாண்டுக்கு ஒன்று என்ற வேகத்தில் குழந்தைகள் பிறந்தன. எல்லாம் பெண் குழந்தைகள். மூன்றாவது குழந்தை பிறந்த சில மாதங்களுக்குப் பிறகுதான் அந்த அனர்த்தம் தொடங்கியது.

ஒரு வெள்ளிக்கிழமை நாள். மாலைக் கருக்கல் நேரம். கோயில் கிணற்றில் சருவக் குடத்தில் தண்ணீர் மொண்டு கொண்டு வந்த புவனம் வீட்டு வாசலில் மயக்கம் போட்டு விழுந்தார். அதைப் பார்த்த மாமன் மாமி சிவராசா என்று எல்லோரும் பதறி அடித்துக் கொண்டு ஓடிவந்தார்கள். மயக்கம் தெளிவதற்கு முகத்தில் தண்ணீர் அடித்தார்கள். சுமார் முப்பது நிமிடங்களுக்குப் பிறகு கண்ணைத் திறந்த புவனம் அங்கு நின்றவர்களை வெறித்து வெறித்து உருட்டி உருட்டிப் பார்த்தார். அவரது உடல் இலேசாக நடுங்கியது. எல்லோரும் அவரைக் கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டுபோய் கட்டிலில் படுக்க வைத்தார்கள்.

புவனத்துக்கு ‘கெட்ட காற்றுப் பட்டுவிட்டது” என்று எல்லோரும் முடிவு கட்டினார்கள். கோயிலுக்குப் போகிற வழியில் ஒரு பெரிய புளிய மரம் இருந்தது. அதில் முனி இருப்பதாகவும் இரவில் அதைச் சுற்றி அது நடமாடுவதை அடிக்கடி தாங்கள் கண்ணால் கண்டதாகவும் ஊர்ப் பெரிசுகள் தங்களுக்குள் காதும் காதும் வைத்தது போலப் பேசிக் கொண்டன. ஊரில் மாரடைப்பால் செத்தவர்களை முனி அடித்துச் செத்தவர்கள் என்றும் நீரிழிவு போன்ற வியாதியால் செத்தவர்களை காடேறிப் பேய் அல்லது சுடலைமாடன் உறிஞ்சிச் செத்தவர்கள் என்றும் ஊரார் இறப்புச் சான்றிதழ் கொடுத்தார்கள்!

சுடலைமாடன் என்பதும் சிவன் என்பதும் இரண்டும் ஒன்றே. மேட்டுக் குடியினர் வழிபடுகிற கடவுள் சிவன். அதே சிவனைக் கீழ்க் குடிமக்கள் வழிபட்டால் சுடலைமாடன். சுடலையாடி என்பது சிவனுக்கு இன்னொரு பெயர். அது காரணப் பெயர்.

எவரும் இயற்கை மரணம் எய்தினார்கள் என்று ஊரார் நம்புவதில்லை. பேயோ பிசாசோ காடனோ மாடனோ அடித்துத்தான் செத்தார்கள் என்பதுதான் பொதுவான தீர்ப்பு.

முத்தரைக் கூட்டிக் கொண்டு வந்து வேப்பிலை அடித்து மந்திரித்து பார்வை பார்த்தால் (புவனத்துக்கு) எல்லாம் சரியாகப் போய்விடும் என்று அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் சொன்னார்கள். அதோடு அம்மாளாச்சிக்கும் ஐயனாருக்கும் சர்க்கரைப் பொங்கல் பொங்கிப் படைப்பதாக நேர்த்தி வைக்குமாறும் ஆலோசனை சொல்லப்பட்டது.

அடுத்த நாள் முத்தரைக் கூட்டிக் கொண்டு வந்தார்கள். புவனத்தை அவருக்கு முன் தரையில் ஒரு பாயில் இருக்க வைத்தார்கள். முத்தருக்கும் புவனத்துக்கும் இடையில் ஒரு கும்பம். குத்துவிளக்கு மாவிலை எலுமிச்சம் பழம் வெற்றிலை பாக்கு தட்டில் சாம்பிராணி கிண்ணத்தில் திருநூறு வைக்கப்பட்டிருந்தன.

முத்தருக்கு அகவை அறுபதைத் தாண்டியிருக்கும். ஆனால் பார்த்தவர்கள் அவரது வயதைக் குறைத்தே மதித்தார்கள். நெற்றி கைகள் மார்பு முழுதும் திருநீற்றைப் பட்டை பட்டையாகப் பூசியிருந்தார். அவரது கருத்த மேனியில் திருநூற்றுப் பூசல் பளிச்சென்று இருந்தது. நெற்றியின் நடுவில் ஒரு சதம் அளவில் சந்தனப் பொட்டு. அதற்கு மேல் அரைச்சத அளவில் குங்குமப் பொட்டு வைத்திருந்தார். முத்தர் வாய்க்குள் மந்திரத்தை முணுமுணுத்துக் கொண்டு வேப்பிலையை ஒவ்வொரு பிடியாக எடுத்து புவனத்தின் தலையில் இருந்து கால்வரை நீண்ட நேரம் தடவித் தடவி மந்திரித்தார்.

“ஓம் கிரீம் கிரீம்…. காளி மாகாளி சூ மந்திரகாளி ….” போன்ற சொற்களை அவர் வாய் முணுமுணுப்பது மட்டும் இலேசாக மற்றவர்கள் காதுக்குக் கேட்டன. பின்னர் அந்த வேப்பிலையை தெருவில் போட்டு எரித்து அதன் சாம்பலை எடுத்து புவனத்தின் நெற்றியில் முத்தர் பூசினார். அந்த ஊரைப் பொறுத்தளவில் யாருக்கு என்ன நோய் வந்தாலும் முத்தரின் வேப்பிலைப் பார்வைதான் “முதலுதவி” வைத்தியம். புவனத்துக்கு இனிச் சுகம் வந்துவிடும் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டார்கள்.


நான்தாண்டா ஆத்தாள்!

(3)

முத்தர் என்ன இலேசுப்பட்டவரா என்ன? எத்தனையோ பேரை ஒரு திருநூற்றுப் பார்வையால் மட்டுமே அவர் குணப்படுத்தி இருக்கிறார். புவனத்திடம் இருந்து விடைபெற்ற கலகலப்பு மீண்டும் வந்து சேர்ந்தது. வீட்டில் எல்லோர் மனதிலும் மகிழ்ச்சி கூத்தாயது.

ஆனால் சொல்லி வைத்ததுபோல சரியாக ஒரு கிழமை கழித்து ஒரு வெள்ளிக்கிழமை அன்று புவுனம் மீண்டும் மயக்கம் போட்டு விழுந்தார். இம்முறை கண் விழித்து எழுந்தபோது உருவந்தவர்கள் போல ஆவேசத்தோடு ஆடிக் கொண்டு வீட்டைச் சுற்றி ஓடத் தொடங்கினார். படலைக்கும் வீட்டுக்குமாக ஓடினார். இப்படி மாறி மாறி அங்கும் இங்கும் ஓடினார். நிலத்தில் கிடந்த தண்டு தடிகளை கல்லு முள்ளுகளை உரல் உலக்கைகளை அவர் கவனித்ததாகத் தெரியவில்லை. ஒரு பதினைந்து இருபது நிமிடத்துக்குப் பின்னர் ஐந்தாறு பேர் அவரை ஒருவாறு துரத்திப் பிடித்து வீட்டுத் திண்ணையில் அமர்த்தினார்கள்.

“டேய் நான் யார் தெரியுமா? நான்தாண்டா ஆத்தாள்! ஆத்தாள் பலி கேட்கிது! அடுத்த வெள்ளிக் கிழமை மடை போடுங்கடா” என்று தலையை ஆட்டியவாறு உரத்த குரலில் கத்தினார். திமிறிக் கொண்டு மீண்டும் எழுந்து ஓட முயற்சித்தார்.

புவனம் சொன்னதைச் செவிமடுத்த எல்லோரும் பயத்தால் உறைந்து போனார்கள். சிவராசா பதறிப் போனார். பிள்ளைகள் ஆளுக்கொரு மூலையில் பதுங்கிக் கொண்டார்கள். வீடு களை இழந்தது. நிம்மதி விடைபெற்றது. இருள் குடி கொண்டது. வீட்டில் உள்ளவர்கள் ஏதோ கடமைக்குச் சமைத்துச் சாப்பிட்டார்கள். புவனம் பழைய நிலைக்குவர பத்து நாட்களுக்கு மேல் பிடித்தது.

ஒருவருக்கு கெட்ட காலம் வரும்போது துன்பங்கள் ஒவ்வொன்றாக வருவதில்லை. அவை வரிசையாக வருகின்றன என்பது பழமொழி. சிவராசாவின் குடும்பத்தைப் பொறுத்தளவில் அது முற்றிலும் சரியாக இருந்தது.

“புவனம் பேய் பிடித்து ஆடுது” என்பதே ஊரெல்லாம் பேச்சாக இருந்தது. வேலை வெட்டியில்லாத ‘கிழங்கள்’ அந்தச் செய்தியை ஊரெல்லாம் ஓடி ஓடி இருபத்து நான்கு மணித்தியாலங்களும் இன்றைய வானொலிகள் வானலைகள் ஊடாக ஒலிபரப்புவதுபோல வாயினால் ஒலிபரப்புச் செய்து கொண்டிருந்தன.

அதன் பின்னர் சொல்லி வைத்தாற் போல் ஒவ்வொரு பவுர்ணமியை அடுத்து வரும் வெள்ளிக்கிழமைகளில் புவனம் ஆடத் தொடங்கினார். பேயை ஓட்ட அக்கம் பக்கத்தில் உள்ள ‘புகழ்பெற்ற” மாந்திரீகர்களையும் பூசாரிகளையும் கூட்டி வந்து கழிப்பு மடை சாந்தி என்று செய்து பார்த்தார்கள். வீட்டில் மடைபோட்டால் போதாதென்று ஊரிலுள்ள ஐயனார் அம்மன் கோயில்களிலும் மடை போட்டார்கள். சில மந்திரவாதிகள் புவனம் ஆடும்போது பூண்போட்ட பிரம்பால் “பேயை” விளாசினார்கள். பேய்க்கு விழுந்த அடி புவனத்தின் தோலைத்தான் பதம் பார்த்தது. பேய்க்கு ஒன்றும் நடக்கவில்லை.

இப்டியான இடுக்கண் நேரும்போது படித்தவர்கள் கூட பகுத்தறிவை ஒருபுறம் மூட்டை கட்டி வைத்து விட்டு பூசாரி மந்திரவாதி பேயாடி சோதிடர் காண்டம் வாசிப்பவர் மை பார்ப்பவர் நினைத்தகாரியம் சொல்பவர் குறி சொல்பவர் எனப் பெரிய பட்டாளத்தைத் தேடி அலைய ஆரம்பிக்கிறார்கள்.

இந்தப் பூசாரி, மந்திரவாதிகள் கூட்டம் தங்களது மனதில் படுகிறதை, தங்கள் அறிவுக்கு எட்டியவாறு சிக்கலுக்கு தீர்வு சொல்லிவிடுகிறார்கள்.

மனித நாகரிகம் தொடங்கிய காலந்தொட்டு மக்களுக்கு இப்படியான மந்திர தந்திரங்களிலும் பேய் பிசாசுகளிலும் கடவுள் தெய்வங்களிலும் நம்பிக்கை இருந்து வந்திருக்கிறது. மக்கள் தம்மைச் சுற்றியுள்ள இயற்கையைக் கண்டு அஞ்சினர். சூரிய -சந்திர கிரகணத்தின்போது பாம்பொன்று அவற்றைக் கவ்வுவதாக நினைத்துப் பயந்தார்கள். சிலர் மேளங்கள் அடித்து அந்தப் பாம்பை விரட்டினார்கள்! அவர்கள் இயற்கையின் இயக்கத்தைச் சரிவரப் புரிந்து கொள்ளும் திறன் இல்லாது குழம்பினார்கள்.

அவர்கள் பல புறச் சக்திகளுக்கு நடுவே பிறந்து அவற்றினால் தாங்கள் இயங்கிச் செல்வதாக நினைத்தார்கள். மேலும் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒவ்வொரு சக்தி காரணம் எனக் கருதினர்.

பழந்தமிழர் அச் சக்தியை அணங்கு சூர் பேய் கடவுள் தெய்வம் எனப் பெயர் சொல்லி அழைத்தனர். நன்மை செய்யும் சக்தியை கடவுள் தெய்வம் என்றும் தீமை செய்யும் சக்தியை அணங்கு சூர் பேய் என்றும் கொண்டனர்.

மக்கள் இயற்கைக்கு அஞ்சி அதன் இயக்கத்தை நன்கு புரிந்துகொள்ள முடியாத சூழ்நிலையில் தங்கள் வாழ்க்கைக்கு வகுத்துக் கொண்ட வழியே மந்திரச் சடங்காகும் (Magic rituals).

பிறப்பு இறப்பு பூப்பெய்தல் திருமணம், மழை, வேட்டை, வளம், விதைப்பு, அறுவடை, போர் போன்ற நிகழ்வுகளின்போது மந்திரச் சடங்குள் இடம்பெற்றன. இந்தச் சடங்குகள் சங்க காலத்தில் இடம்பெற்றதை சங்க இலக்கியங்களில் பரக்கக் காணலாம். இயற்கையை இத்தகைய மந்திரச் சடங்குகள் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்பது அக்கால நம்பிக்கை ஆகும்.

வணங்குதல், வேண்டுதல் பலியிடுதல் நோன்புதல் ஆகியவற்றால் ஒருவர் தாம் விரும்பிய காரியத்தை சாதித்துக் கொள்ள முடியும் என்ற மந்திரகால நம்பிக்கையே பின்னர் ஆரம்பகால சமயம் ஆயிற்று.

மந்திர யுகத்தில் மந்திரவாதி வகித்த இடத்தை புராதன சமயகாலத்தில் மந்திரவாதிப் பூசாரி கைப்பற்றினான். அதன்பின் உருவான சமய காலத்தில் புரோகிதன் வந்தான். ஒரே சமூகத்தில் இந்த மூவரும் ஏக காலத்திலும் இருந்ததும் உண்டு.

மந்திரச் சடங்குகளை முற்றிலும் வெறும் அறியாமை என்று கூறிவிட முடியாது. நோய் உளவியல் சம்பந்தமானது என்றால் இம்மாதிரியான சடங்குகள் அதற்குரிய மருந்தாக அமைய வாய்ப்பு இருந்தது. இனக்குழு மக்களிடம் அவநம்பிக்கையைப் போக்கி நம்பிக்கையை உண்டாக்கியது. சோர்வைப் போக்கி ஆர்வத்தை விளைவித்தது.

ஒரு நோயாளி மருந்தை உட்கொண்டதின் பின்னர் தன்னைப் பிடித்த நோய் மாறிவிடும் என்று நம்புகிறான். அந்த நம்பிக்கை அவனுக்கு மனதளவில் பிறக்கும்போது பாதி சுகம் வந்துவிடும்.

பருவமழை பொய்த்து விட்டால் மழையை வருவிக்க கொடும்பாவி கட்டி இழுப்பதும் சின்னமுத்து, பொக்கிளிப்பான் போன்ற நோய் வந்தால் அவற்றைப் போக்க அம்மன் கோயில்களில் குளிர்த்தி செய்வதும் நோய் நொடி வராமல் ஐயனார் வயிரவர், காளி, அம்மன் போன்ற காவல் தெய்வங்களுக்கு ஆடு கோழி பலியிடுதல் போன்ற சடங்குகள் மேற்கொள்வதும் அண்மைக் காலம்வரை யாழ்ப்பாணக் குடாநாட்டில் இடம்பெற்று வந்த நிகழ்சிகளாகும். ஆடு வெட்டுதல் இப்போதும் ஆங்காங்கே சில ஊர்களில் இடம்பெற்று வருகிறது. சைவ ஆகமங்கள் பலியிடுதலை அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நாளடைவில் குறிப்பிட்ட இயற்கை விதிகளை அடக்கியாளக்கூடிய மாபெரும் சக்தியாக ஊழ் (fate) உணரப்பட்டது. பெரிய தெய்வங்கள்கூட இவ் ஊழுக்கு கட்டுப்பட்டது என்ற நம்பிக்கை குடிகொண்டது. ஊழே சட்டமாயிற்று.

சங்கப் புலவர் கணியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற புறப்பாடல் (192) மனித உயிர் கல்லை அலைத் தொலிக்கும் பேரியாற்றின் நீரின் வழியே போம் மிதவை போல ஊழின் வழியே படும் என ஊழின் வலியை வலியுறுத்துகிறது.

“புவனத்தின் சாதகத்தை சோதிடரிடம் காட்டிப் பலன் கேட்டால் நல்லது என்று வீட்டுக்கு துக்கம் விசாரிக்க வந்தவர்கள் யோசனை சொல்ல அப்படியே செய்வது என்று முடிவாகியது. கொக்குவிலில் பிரபல சோதிடர் ஒருவர் இருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்டு அவரிடம் புவனத்தின் சாதகத்தைக் காட்ட அயல் வீட்டு மணியத்தாரைப் பிடித்து அனுப்பினார்கள்.

விடிகாலையில் சோதிடர் வீட்டுக்குப் போன மணியத்தார் தனக்கு முன்பே கியூ வரிசையில் சோதிடரைப் பார்க்க சாதகமும் கையுமாக பலர் நிற்பதைப் பார்த்து வியப்படைந்தார்.

தனது முறைக்குப் பொறுமையோடு காத்திருந்து பைக்குள் பத்திரமாகக் கொண்டுவந்திருந்த சாதகத்தை சோதிடரிடம் பயபக்தியோடு எடுத்துக் கொடுத்தார். ஓலையைப் பிரித்து சாதகத்தைப் படித்தவாறே சோதிடர் தான் வைத்திருந்த குறிப்புப் புத்தகத்தில  சில கணக்குகளைப் போட்டுப் பார்த்தார். திருநீறு அணிந்து பளிச்சென்று இருந்த சோதிடரின் முகத்தில் எந்தச் சலனத்தையும் மணியத்தாரால் கண்டு பிடிக்க முடியவில்லை. அவரது தொழிலில் இப்படி நூற்றுக் கணக்கான சாதகங்களைப் படித்துப் பார்த்திருப்பார். புவனத்தின் சாதகம் அதில் பத்தோடு பதினொன்று.

மணியத்தார் சோதிடரை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். நேரம் போகப் போக அவரை இனந்தெரியாத பயம் பிடித்துக் கொண்டது.

சோதிடர் நல்ல செய்தி சொல்ல வேண்டும் என்று தனக்குத் தெரிந்த தெய்வங்களை எல்லாவற்றையும் தனது மனதுக்குள் வேண்டிக் கொண்டார். அவரை அறியாமல் அவரது மனதுக்குள் “துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூடும் நிமலனருள் கந்தசஷ்டி கவசந் தனை” என ஆரம்பித்து “காக்கக் காக்க கனக வேல் காக்க, நோக்க நோக்க நொடியினில் நோக்க தாக்கத் தாக்க தடையறத் தாக்க…………” எனக் கந்தசஷ்டிக் கவசத்தை வேகமாக செபித்துக் கொண்டிருந்தார்.

பொதுவாக நன்மை தின்மை இந்த இரண்டு காரணங்களுக்காகவே மனிதர்கள் சோதிடரை அணுகுகிறார்கள். சோதிடம் பார்க்க வந்தவரின் நடை உடை பாவனையை வைத்தே சோதிடர் வந்தவர் நன்மையான காரியமாக வந்தவரா அல்லது தின்மையான காரியமாக வந்தவரா என பெருமளவு ஊகித்து விடுவார்கள். சில சோதிடர்கள் சாதகம் கொண்டு வந்தவர் வேறு ஆள், சாதகக்காரர் வேறு ஆள் என்று தெரியாமல் குழம்புவதும் உண்டு.

தொண்டையைக் கொஞ்சம் சரிசெய்து கொண்ட சோதிடர் இப்போது பலனைச் சொல்லத் தொடங்கினார். “இந்தச் சாதககாரருக்கு இப்போது ஏழரைச் சனி திசை நடக்கிறது. சனிக்கு சூரியன், சந்திரன் சத்துருக்கள். குரு பார்வை எவ்வளவுக்கெவ்வளவு சிறந்தது என்று சொல்லுகிறோமோ அதேபோல சனி பார்வை அவ்வளவுக்கவ்வளவு கொடிய பார்வையாகும். சனியின் கோளாறினால் நரம்பு சம்பந்தமான நோய் ஏற்பட்டுள்ளது. சாதககாரர் சனி விரதம் இருந்து சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு எள்ளெண்ணைச் சட்டி எரித்து வந்தால் நோய் மூன்று மாதத்தில் குணமாகிவிடும்.”

சனிக்கிரகம் வாயுவினால் ஆனது. 75 விழுக்காடு நீரகமும் (hydrogen) 25 விழுக்காடு பரிதியம் (helium)  இவற்றினால் ஆன கோள். எடைமானத்தில் மிகக் குறைந்த தனிமம் நீரகமாகும். தண்ணீரோடு ஒப்பிடும்போது அதன் வீத எடைமானம் (0.7) ஆகும். உட்புறம் பாறைகளினால் ஆனது. வியாழனுக்கு அடுத்த பெரிய கோள். பூமியில் இருந்து சுமார் 8,500,000 கிமீ (6,300,000 மைல்) தூரத்தில் உள்ளது. அதன் விட்டம் மத்திய கோட்டில் 120, 536 மிமீ. திண்மம் 5.68 கிலோகிராம். சூரியனை சராசரி 1,429,400,000 கிமீ தூரத்தில்  சுற்றி வருகிறது.

சனிக்கோளை 30 உபகோள்கள் சுற்றி வருகின்றன. வரலாற்றுக் காலத்துக்கு முன்னர் இருந்தே சனிக் கோள்பற்றி மனிதர்களுக்குத் தெரிந்திருந்தது. ரோமரது புராணக் கதையில் சனி பயிர்த்தொழிலின் கடவுள். கிரேக்கத்தில் சனியை குறோனஸ் (Gronus)  கடவுள் என அழைத்தார்கள். இந்தக் கடவுள் Zeus (வியாழன்) கடவுளின் தந்தை. சனிக் கோளை தொலைநோக்கி மூலம் பார்த்த (கிபி 1610) முதல் மனிதர் கலிலியோதான். அதனைக் காகம்போல கன்னங்கரிய கோளாகச் சித்தரித்தாலும் அது உண்மையில் பார்ப்பதற்கு மிகவும் ஒளிமயமான கோள்.

பூமியில் இருந்து இவ்வளவு தூரத்தில் உள்ள ஒரு கோள் இங்குள்ள ஒருவரது வாழ்க்கையின் போக்கை அவர் பிறந்த நேரத்தின் அடிப்படையில் எப்படிப் பாதிக்க முடியும் என்பதையிட்டு யாரும் சிந்திப்பதாகத் தெரியவில்லை. சரி அப்படித்தான் பாதிக்கிறதாக வைத்துக் கொண்டாலும் அதற்கு விரதம் இருந்து எள்ளெண்ணைச் சட்டி எரித்தால் அந்தக் கிரகத்தைத் திருப்திப் படுத்திவிட முடியுமா? திருப்திப்படுத்தலாம் என நினைத்து நவக்கிரகங்களை சுற்றுபவர்கள் இன்றும் இருக்கிறார்கள்.

மணியத்தார் இரண்டு வெற்றிலைக்குள் ஒரு ஐந்து ரூபா தாளை வைத்துச் சோதிடரிடம் கொடுத்தார். சாதகத்தை இரண்டு கையாலும் வாங்கி மடியில் பத்திரப்படுத்திக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டார்.


நான்தாண்டா ஆத்தாள்!

(4)

சோதிடர் சொன்னதுபோலவே சனிக்கு நல்லூர் சிவன் கோவிலில் சனிக்கிழமைதோறும் எள்ளெண்ணை எரிக்கப்பட்டது. சனி விரதமும் பிடிக்கப்பட்டது. மூன்று மாதம்போல இன்னொரு மூன்று மாதம் சென்றும் புவனத்தை பிடித்த சனியன் தொலையவில்லை.

இதற்கிடையில் “சிவராசா குடும்பத்தின் எதிரிகள் செய்வினை செய்து வீட்டில் எங்காவது தெரியாமல் தாட்டிருக்கலாம் அதனால்தான் புவனம் ஆடுது நல்ல மந்திரிவாதியைக் கொண்டு வந்து காட்டி அதை எடுத்து விட்டால் எல்லாம் சரிவந்துவிடும்” என்று வந்து போனவர்கள் ஆலோசனை சொன்னார்கள்.

கடலில் மூழ்கப் போகிறவன் கண்ணில் படுகிற ஒரு சிறு துரும்பைத்தானும் பிடித்துக் கரைசேர நினைப்பது போல சிவராசா குடும்பம் எல்லா மந்திர தந்திரங்களையும் எவ்வளவு பொருள் செலவானாலும் சரி செய்து பார்த்துவிட விரும்பினார்கள்.

தலையில் பூவோடும் நெற்றியில் பொட்டோடும் குடும்ப விளக்காக வீட்டில் வலம் வந்து கொண்டிருந்த புவனம் இப்போது பொட்டில்லாமல் பூவில்லாமல் களையிழந்து வீட்டு மூலையில் முடங்கிக் கிடந்ததைப் பார்த்த கணவன், மாமன் மாமி, தாய் தந்தை எல்லோருக்கும் அடிவயிறு பற்றி எரிந்தது.

தங்களது கெட்ட காலந்தான் இப்படியெல்லாம் தங்களை அலைக்கழித்து அழவைப்பதாக அவர்கள் நம்பினார்கள்.

“கண்கெட்ட கடவுள்! என்னுடைய பிள்ளை இந்தப் பாடுபடும்போது அதைச் சும்மா பார்த்துக் கொண்டிருக்கிது” என்று புவனத்தின் தாய் ஆத்திரம் வந்தபோது கடவுளை நொந்து கொண்டார். இல்லை திட்டித் தீர்த்தார். பொதுவாகவே தாங்கொணாத துன்பம் ஒன்றன் பின் ஒன்றாக வந்து தாக்கும்போது ஆத்திரத்தில் அல்லது கையறுநிலையில் இப்படிக் கடவுள் ‘அர்ச்சனை’ செய்வது கிராமத்து மக்களது வழக்கமாக இருந்தது.

எல்லாம் ஒரு சொற்ப நேரத்திற்குத்தான். கோபம் ஆறியவுடன் மறுபடியும் “பிள்ளையாரப்பா காப்பாற்று!” “அம்மாளாச்சி காப்பாற்று” என்று அவர்கள் வாய் முணுமுணுக்கத் தொடங்கிவிடும்!

ஊரிலேயே கையோடு ஒரு பூசாரி இருந்தார். அவரது பெயர் மினாயர். வயது அறுபதைக் கடந்திருக்கும். ஆண்டு தோறும் வைகாசித் திங்களில் ஐயனார் கோயிலில் நடக்கும் வேள்வியின் போது அவர் உரு வந்து ஆடுவது வழக்கம். பூசாரியின் நெற்றி மற்றும் உடம்பு முழுதும் திருநீறு அப்புவார்கள். காலிலும் கையிலும் செம்பினால் செய்த பெரிய காப்புகளை மாட்டுவார்கள். நல்ல வெள்ளிப் பூண்போட்ட பிரம்பொன்று அவர் கையில் கொடுக்கப்படும். இன்னொரு கையில் ஒரு பிடி வேப்பங் குழை. உரு சும்மா வந்திடாது. அதற்கென மந்திரம் சொல்லி உருவேற்ற ஒருவர் இருப்பார். அவர் கையில் புகை வந்து கொண்டிருக்கும் சாம்பிராணித் தட்டு இருக்கும். அதை பூசாரியின் முகத்தருகில் பிடித்த வண்ணம் ஏதோ மந்திரம் சொல்வார். பறை மேளம் அடிப்பவர் இப்போது உரக்க அடிக்க ஆரம்பிப்பார்.

பறை ஒரு தாளத்துக்கு ஒலிக்க ஒலிக்க அக்கம் பக்கத்தில் சும்மா பார்த்துக் கொண்டு நிற்கிறவர்களது கால்கள் அதற்கேற்றாப் போல் அவர்களை அறியாமலேயே ஆடத் தொடங்கும். சும்மா நிற்பவர்களது கெதியே இப்படி என்றால் பூசாரியாரைக் கேட்கவா வேணும்?

சாம்பிராணிப் புகை மந்திரத்தின் ஓசை பறையின் முழக்கம் இந்த மூன்றும் சேர்ந்ததும் பூசாரியாரது கால்கள் கைகள், உடம்பு குலப்பன் காய்ச்சல் வந்தவர் போல் உதறல் எடுக்கத் தொடங்கும். ஒரு ஐந்து நிமிடத்தில் முழு உருவும் வந்து விடும். பூசாரியார் இப்போது ஐயனார் சன்னிதி, வைரவர் சன்னிதி, அம்மன் சன்னிதி என்று ஓடுவார். அவர் கை கால்களில் கிடந்த காப்புக்கள் ஓசை எழுப்பும். அவருக்குப் பின்னால் இரண்டொருவர் திருநீற்றுத் தட்டத்தோடு ஓடிக் கொண்டிருப்பார்கள்.

கூட்டத்தில் நிற்கும் சிலருக்கு ‘ஐயனார்’ நல்ல குறி சொல்வார். அவர்களது நெற்றியில் திருநீற்றைப் பூசி ‘பயப்படாதே’ ‘நீ நினைத்தது நடக்கும்’ ‘அடுத்த ஆண்டு வேள்விக்கு ஐயனாருக்கு பொங்கல் போடு. எல்லாம் சரி வந்துவிடும்” என்று சொல்லப்படும்.

கடைசியாக அன்று தலைக் கிடாயாகப் பலிகொடுக்க கோயிலுக்கு மேள தாளத்துடன் கொண்டு வரப்பட்ட “மாப்பிள்ளை கிடாய்க்கு” ஐயனார் தண்ணீர் தெளித்து கவுரவப் படுத்துவார்.

ஐயனார் ஆடும் பூசாரியை அழைத்து வந்து குறி கேட்டார்கள். அவரும் சொல்லி வைத்ததுபோல வீட்டு முற்றத்தில் எதிரிகள் செய்து தாட்ட செய்வினை இருக்கிறது என்று சொன்னார். அடுத்த நிமிடம் அதனைத் தோண்டி எடுக்கும் வேலை துரிதகெதியில் செய்யப்பட்டது.

செய்வினை அகற்றுவதில் கெட்டிக்காரர் என்று பெயரெடுத்த ஒரு மந்திரிவாதியைக் கூட்டி வந்தார்கள். மந்திரவாதி வந்து பெரிய மடைபோட்டு கழிப்புக் கழித்து வீட்டைச் சுற்றி செய்வினை தாட்டு வைத்திருக்கும் இடத்தைத் தேடினான். கடைசியாக வீட்டு முற்றத்தின் வலது கோடியில் உள்ள ஒரு இடத்தைச் காட்டி அந்த இடத்தைத் தோண்டுமாறு கேட்டான்.

ஏற்கனவே கையில் மண்வெட்டியோடு அதற்கெனக் காத்திருந்த இரண்டுபேர் மந்திரவாதி காட்டிய இடத்தை தோண்டத் தொடங்கினார்கள். எல்லோர் மனதும் ‘திக் திக்’ என்று அடித்துக் கொண்டது. எப்படியும் செய்வினையைத் தோண்டி எடுத்துவிட வேண்டும் என்ற துடிப்பு அவர்களுக்கு.

ஒரு அடி சதுரக் கிடங்கு இப்போது கிண்டியாகி விட்டது. ஒன்றையும் காணோம். சிற்பிகள், ஊரிகள், இரண்டொரு பானை, சட்டி ஓடுகள்தான் வெளிவந்தன. இப்போது வெட்டுவதை நிறுத்துமாறு சைகை செய்த மந்திரவாதி தானே கையை விட்டு மண்ணைத் தோண்ட ஆரம்பித்தான். ஐந்தி நிமிடங்கள் கூடப் போயிராது. மந்திரவாதி முதலில் செப்பினால் செய்த சின்னத் தகட்டை எடுத்தான். அதைச் சுற்றி ஒரு பத்துப் பதினைந்து தலைமுடி மயிர் கட்டப் பட்டிருந்தது. அதனைத் தண்ணியில் கழுவிச் சுத்தம் செய்துவிட்டு அங்கிருந்தவர்கள் பார்க்குமாறு காட்டினான்.

எல்லோரும் வியப்பில் ஆழ்ந்து போனார்கள். நிச்சயமாக அது செய்வினைதான். அந்தத் தலைமயிர் புவனத்தின் தலைமயிர்தான். அவளுக்கத் தெரியாமல் செய்வினை செய்தவர்கள் அதனை எடுத்திருக்க வேண்டும்.

ஐயனார் ஆடிச் சொன்ன பூசாரி சரியாகத்தான் சொல்லி இருக்கிறார் என்று மனதுக்குள் அவரை எல்லோரும் மெச்சிக் கொண்டார்கள். எதிரிகள் புதைத்து வைத்த செய்வினை எடுத்தாச்சு இனிப் புவனத்துக்கு சுகம் வந்துவிடும் என்று சொல்லிப் பணத்தை சுளையாக வாங்கிக் கொண்டு மந்திரவாதி போனான். ஆனால் “ஆத்தாள்” மட்டும் புவனத்தை விட்டுப் போக மறுத்து விட்டாள்.

செய்வினை சூனியத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் செய்வினை எடுப்பது எல்லாம் ‘சுத்தப் புரட்டு’ ‘பிராடு’ என்று சொல்லுவார்கள். மந்திரவாதி வரும்போதே மயிர் சுற்றப்பட்ட தகட்டையும் ஆணியையும் கொண்டு வந்து, நிலத்தைச் தோண்டுகிறபோது அதனை மறைவாக மண்ணோடு மண்ணாக வைத்துவிட்டு பின்னர் அவை எப்போதோ எதிரிகள் தாட்டவை என்று எடுத்துக் கொடுத்து ஏமாற்றிவிடுவதாக கோவூர் போன்ற பகுத்தறிவாளர்கள் சொல்லியிருக்கறார்கள்.

ஆனால் படிப்பறிவில்லாத கிராமத்து மக்கள் கோவூர் அல்ல வேறு யார் சொன்னாலும் அவர்கள் கேட்க மாட்டார்கள். மாறாக பூசாரி, மந்திரவாதி இவர்கள் பேச்சைத்தான் நம்புவார்கள். அந்த நம்பிக்கையை யாரும் இலேசில் உடைக்க முடியாது. எல்லோரும் கல்விகற்று, அத்தோடு நிற்காமல் அறிவியலையும் வளர்த்துக் கொண்டால் மட்டுமே இப்படியான மூட நம்பிக்கைகளை உடைத்தெறிய முடியும்.

ஆண்டாண்டு காலமாக அந்தக் குடும்பம் கொஞ்சம் கொஞ்சமாக தேடிய தேட்டம் நாளொரு மந்திரவாதி பொழுதொரு பூசாரி எனக் கரைந்து கொண்டிருந்தது. புவனத்தை ஒரு தகுந்த மனநோய் மருத்துவரிடம் காட்டி தக்க வைத்தியம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அந்த கால கட்டத்தில் யாருக்கும் தோன்றவில்லை. அதற்கான வசதிகளும் வாய்ப்புக்களும் குறைவாகவே இருந்தன.

சிவராசா உட்பட எல்லோரும் மனம் களைத்துப் போனார்கள். பில்லி, சூனியம், சாந்தி, சாதகம், சாத்திரம், குறி, நினைத்த காரியம் என்று எல்லாம் செய்து பார்த்தாகிவிட்டது. ஐயனருக்கு அபிசேகம் பண்டித்தலைச்சி அம்மனுக்குச் சக்கரைப் பொங்கல், தில்லையம்பலப் பிள்ளையாருக்கு ஆயிரம் மோதகம், வயிரவருக்கு நூறு வடை என்று அக்கம் பக்கம் இருந்த எல்லாக் கோயில் குளங்களுக்கும் நேர்த்தி செய்தாகி விட்டது.

இந்தப் பட்டியலில் அயல் ஊரில் இருந்த அந்தோனியார் தேவாலயமும் தப்பவில்லை. அந்தோனியாருக்கும் மெழுகுவர்த்தி கொளுத்துவம், கூடு வாங்கித் தருவம் என்று நேரப்பட்டது.

மனிதர்களுக்குத் துன்பம், துயர், ஆபத்து வரும்போது ஒரு சமயத்தைச் சேர்ந்த தெய்வங்களோடு நிற்காமல் மற்றச் சமயத் தெய்வங்களது உதவியையும் நாடுகிறார்கள். தீராத வியாதியால் அல்லல்படும்போது ஒரு டாக்டர் மாறி இன்னொரு டாக்டர் என்று நோயாளியைக் காட்டுவதில்லையா? அது மாதிரித்தான் இதுவும்.

அப்போதுதான் அளவெட்டியில் மலையாள மாந்திரிகம் தெரிந்த பெரிய மந்திரவாதி இருப்பதாகவும் அவர் பேய்களை ஓட்டுவதில் வலு கியாதி பெற்றவர் என்றும், பேய் பிடித்த பலரை அவர் குணப்படுத்தி இருக்கிறார் என்றும் அவரது பெயர் கணேசமூர்த்தி ஆனால் கணேசு வாத்தியார் என்றால்தான் அந்த ஊரில் அவரைத் தெரியும் என்ற தரவுகள் கிடைத்தன.

கணேசு வாத்தியார் அந்த ஊரில் படிப்பித்துக் கொண்டிருந்தார். நடுத்தர வயது. பேய்களுக்கு மந்திரிப்பது, சூனியம் எடுப்பது, கழிப்புப் கழிப்பது, சாந்தி செய்வதை பகுதி நேரத் தொழிலாக வைத்துக் கொண்டிருந்தார். அதனால் அவருக்கு நல்ல வருமானமும் கிடைத்தது. தமிழ் சட்டம்பிகள் தங்களது சம்பளத்தை மட்டும் நம்பி குடும்பத்தை நடத்த முடியாது. வேறு அரச உத்தியோகம் போல கிம்பளம் கிடைக்கவும் வாய்ப்பில்லை. சம்பளத்தோடு பக்கவாட்டில் ஏதாவது வருமானம் இருந்தால்தான் கொஞ்சம் தளப்பம் இல்லாமல் வாழமுடியும். அதனால்தான் படிக்கிற நேரம்போக மிச்ச நேரத்தில் தோட்டந் துரவு என்று ஏதாகிலும் தொழில் செய்து வாழ முயற்சித்தார்கள்.

சிவராசா துவிச்சக்கர வண்டி ஒன்றில் அளவெட்டிக்கு வாயுவேகம், மனோவேகம் எனப் பறந்து போனார்.

கணேசு வாத்தியார் வீட்டைக் கண்டு பிடிப்பதில் சிவராசாவுக்கு எந்தச் சிக்கலும் இருக்கவில்லை. அந்த ஊரில் உள்ள குஞ்சு குருமான்களுக்கு எல்லாம் கணேசு வாத்தியார் வீடு நன்கு தெரிந்திருந்தது. ” இந்த ஒழுங்கையாலை நேரே போய் வலது பக்கம் திரும்பினால் வருகிற கல்வீடுதான் கணேசு வாத்தியார் வீடு. முற்றத்தில் ஒரு மாமரம் நிற்குது” என்று எல்லோரும் வழிகாட்ட சிவராசா கணேசு வாத்தியார் வீட்டுப் படலையில் வந்து வண்டி மணியை அடித்தார்.

“யாரோ படலையில் மணி அடிக்கினம். யாரென்று பார் மோனை” என்று வீட்டுக்குள் இருந்து ஒரு குரல் கேட்டது. அடுத்த கணம் ஒரு சின்னப் பிள்ளை படலையை நோக்கிப் பறந்து வந்தது.

மணி அடித்தது உள்@ர் ஆளாக இராது வெளியூர் ஆளாகத்தான் இருக்க வேண்டும் என்ற அனுமானத்தில் கணேசு வாத்தியாரே தான் படுத்திருந்த சாய்மனைக் கதிரையில் இருந்து எழுந்து பக்கத்தில் கிடந்த சால்வையை தோளில் போட்டுக் கொண்டு படலைக்கு வந்தார்.

“என்ன வேணும்?”

“கணேசு வாத்தியாரைப் பார்க்க வேண்டும்”

“நான்தான் கணேசு வாத்தியார். உள்ளே வாரும்”

கணேசு வாத்தியார் முன்செல்ல சிவராசா பின் தொடர்ந்தார். கணேசு வாத்தியாரது வளவு விசாலமாக இருந்தது. அதன் இடது பக்கமாக அவரது வீடு ஒரு பகுதி கட்டி மிகுதி கட்டாத நிலையில் இருந்தது. சின்ன வீடு. இரண்டு அறை. ஒரு குசினி. கொஞ்சம் தள்ளிக் கிணறு. கிணற்றைச் சுற்றி நன்றாக ஓங்கி வளர்த்த வாழை மரங்கள் இருபது முப்பது, எலுமிச்சை ஒன்று, ஐந்தாறு காய்க்கிற தென்னை மரங்கள் நின்றன. செம்பாட்டு மண்ணின் வளம் மரங்களின் செழிப்பில் தெரிந்தது. பனை ஓலையால் வேய்ந்த மாட்டுக் கொட்டில். அதில் இரண்டு பசுக்கள் கட்டப்பட்டிருந்தன. அதில் ஒன்று சின்னக் கன்றுக் குட்டியை நாவால் நக்கிக் கொண்டிருந்தது. அதுதான் குளிப்பாட்டுப் போலும்!

இவற்றையெலாம் சிவராசாவின் கண்கள் சில வினாடி நேரத்தில் நோட்டம்விட்டு அளந்து விட்டன. வாத்தியார் அரிசி, உப்பு, புளி இவற்றைத்தான் வெளியில் வாங்க வேண்டும். மற்றதெல்லாம் வீட்டோடு இருக்கின்றன என சிவராசா முடிவு கட்டினார்.


நான்தாண்டா ஆத்தா!

(5)

வீட்டு விறாந்தையில் சிவராசாவுக்கு ஒரு கதிரை கொண்டுவந்து போட்டு இருக்கும்படி கூறிவிட்டு கணேசு வாத்தியார் தனது சாய்மனைக் கதிரையில் சாவகாசமாக உட்கார்ந்து கொண்டார். விறாந்தையில் கிடந்த மேசை மீது ஓலைச் சுவடிகள், பழைய புத்தகங்கள், பஞ்சாங்கங்கள் நிறைந்து கிடந்தது. சுவரில் இரண்டு சோடி மான் கொம்பு மாட்டப்பட்டிருந்தது. அவற்றுக்கு அருகே கடவுள் படங்கள் காட்சி அளித்தன. ஒரு திருநூறுக் கூடும் தொங்கிக் கொண்டிருந்தது.

அவற்றைப் பார்த்த சிவராசா வாத்தியார் நல்ல பக்திமான் என்று மனதுக்கள் நினைத்துக் கொண்டார். அது மட்டும் அல்ல. மாந்தீரிகத் தொழில் வாத்தியாரின் குடும்பத் தொழிலாக வழி வழி வந்து கொண்டிருக்கக் கூடும் என்றும் அனுமானித்தார்.

தமிழரிடை நெடுங்காலந் தொட்டு மாந்தீரிகம், மருத்துவம், சிற்பம், ஓவியம் போன்ற கலைகள் குடும்பத் தொழிலாகவே இடம்பெற்று வந்திருக்கிறது. பொதுவாக இந்தக் குடும்பங்கள் தங்கள் வித்துவத்தையும், பட்டறிவையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளமாட்டார்கள்.

குறிப்பாக மாந்தீரிகம், மருத்துவம் இரண்டும் மிக இரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. குடும்பத்தில் வாரிசு இல்லாவிட்டால் அந்த இரகசியங்கள் அந்தத் தலைமுறையோடு புதையுண்டு போய்விடும்.

வாரிசு இருக்கும் பட்சத்தில் தகப்பனார் ஒருவர் தனது மகனுக்குத் தனது கடைசிக் காலத்திலேயே தனக்குத் தெரிந்த கலையையும் இரகசியங்களையும் சொல்லிக் கொடுப்பார். பெரும்பாலும் பெரியவரது மரணப் படுக்கையில் உயிரோடு போராடிக் கொண்டிருக்கும் போதே இந்தப் பரிமாற்றம் இடம்பெறும். பெரும்பாலும் தகப்பனாரின் அறிவில் பாதி அல்லது கால்வாசிதான் மகனுக்குப் போய்ச் சேரும்.
சிலர் தாங்கள் படித்த ஏடுகளைத் தங்கள் கண்முன்னே எரிக்கச் செய்து அதனைக் கண்ணாரக் கண்டு களித்த பின்னரே உயிரை விடுவார்கள். அது மட்டும் உயிர் போகாது!

சில மாந்தீரிகர்கள் தங்களுக்குப் பின் யாரும் அந்தத் தொழிலைச் செய்யக் கூடாது என்று நினைத்து அவற்றை பெரிய பானைகளில் போட்டு அதனைச் சுடலையில் கொண்டுபோய் தாட்டவர்களும் இருக்கிறார்கள். இதற்கு பில்லி, சூனியம், மந்திர தந்திரம் போன்ற கறுப்பு மந்திரங்களில் (டீடயஉம ஆயபiஉ) ஈடுபடும் குடும்பங்களின் சந்ததி உருப்படாது என்ற நம்பிக்கை ஒரு காரணம்.

மருத்துவர்கள் மருந்துக்குத் தேவைப்படும் புல் பூண்டு செடி கொடிகளுக்கு எல்லாம் தனித்தனி சங்கேதப் பெயர்கள் வைத்திருந்தார்கள். மற்வர்களுக்கு அவற்றின் உண்மையான பெயர்கள் தெரிந்துவிடக் கூடாது என்ற சுயநலந்தான் இதற்குக் காரணம்.

சிவராசாவை மூக்குக் கண்ணாடி மாட்டிய கண்கள் மூலம் கணேசு வாத்தியார் எடைபோட்டார். சிவராசாவின் முகம் களை இழந்து கிடப்பதை அவரது கண்கள் கவனிக்கத் தவறவில்லை.

மருத்துவமனைக்குப் பொதுவாக வருத்தக்காரர்கள்தான் போவார்கள். கோயில் குளத்துக்கும் பெரும்பாலும் சிக்கல் உள்ளவர்கள்தான் போவார்கள். அல்லது சிக்கல் வரக்கூடாது என்று வருமுன் காக்கும் நோக்கோடு வேண்டுகோள் செய்யப் போவார்கள். இவற்றைப் போலத்தான் சோதிடர், மாந்தீரிகர்கள் போன்றவர்களிடம் குடும்பச் சிக்கல்கள் உள்ளவர்கள் போகிறார்கள். அந்தச் சிக்கல்களுக்கு அவர்களால் பரிகாரம் கிடைக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.

சிவராசா அப்படியொரு சிக்கல் காரணமாகத்தான் வந்திருக்கிறார் என்பதை கணேசு வாத்தியார் கண்டுபிடிக்க அதிக நேரம் எடுக்கவில்லை.

“தம்பி எந்த ஊர்?”

“துறையூர்”

“துறையூரா? உங்கள் ஊருக்குப் பலமுறை வந்திருக்கிறேன். உங்கள் ஊர்ப் பாடசாலை அதிபரும் நானும் ஒன்றாக ஆசிரிய கலாசாலையில் படித்தவர்கள். அவரைப் பார்க்கத்தான் வந்திருக்கிறேன். அவரை உமக்குத் தெரியுமா?”

“தெரியும். அவர் என்னுடைய சொந்த மச்சான்”

“அப்படியா? மெத்தச் சந்தோசம். அதுமட்டும் அல்ல. இந்த ஊர்த் தோட்டக்காரர்கள் பூவரசம்
குழை வாங்க அங்குதான் வருவார்கள்”

” ஓமோம். பூநகரியில் இருந்து பூவரசங்குழையை வெட்டிக் கட்டுக் கட்டாகக் கட்டி தோணிகளில் துறையூருக்குக் கொண்டு வருவார்கள்”

“வாழை, கத்தரி, புகையிலை இவற்றுக்கு அது சோக்கான பசளை!”

“ஓமோம்”

“சரி இப்போது வந்த விஷயத்தைச் சொல்லும்?”

சிவராசாவுக்கு சொல்ல வேண்டியவை எல்லாம் மனப்பாடம். மேலும் வரும்போதே மனதுக்குள் பலமுறை சொல்லி ஒத்திகை பார்த்து விட்டார். மனப்பாடம் செய்து வைத்திருந்த தனது சோகக் கதையை ஒரே மூச்சில் சொல்லி முடித்தார்.

சிவராசா ஆதியோடந்தமாகச் சொல்லி முடித்த கதை கணேசு வாத்தியாருக்கு ஒன்றும் புதுமையாக இருக்கவில்லை. பலர் பலமுறை சொல்லக் கேட்ட பழக்கமான கதைதான். அவற்றைத் தொகுத்தால் நல்லதொரு சிறுகதைத் தொகுதி பிறந்து விடும்!

வாத்தியார் எழுந்து சென்று மேசையில் இருந்த ஒரு கொப்பியையும் பேனையையும் எடுத்து வந்தார். வைத்திருந்த கொப்பியில் மளமளவென்று எழுதினார்.

அவர் எழுதிக் கொண்டிருக்கும் போது வாத்தியாரின் மனைவி இரண்டு பெரிய குவளைகளில் சுடச் சுட தேநீர் போட்டுக் கொண்டு வந்து இருவருக்கும் முன்பாக நீட்டினார்.

”சாந்தி செய்ய வேண்டும், மடைபோட்டு சாந்தி செய்தால் எல்லாம் சரிவந்து விடும். ஒன்றுக்கும் பயப்படத் தேiயில்லை. நான் சுகமாக்கித் தருவேன் எப்படியும் இவற்றை வாங்கிச் சேகரிக்க ஒரு வாரம் எடுக்கும். அடுத்த வெள்ளிக் கிழமை மாலை பள்ளிக்கூடம் முடிந்ததும் நான் உங்கள் வீட்டுக்கு வருவேன்” என்று ஆறுதல் வார்த்தைகள் கூறிய கணேசு வாத்தியார் ஏற்கனவே இரண்டு ஒற்றையில் நாலு பக்கமும் எழுதி வைத்திருந்த தாள்களைக் கொடுத்தார். அதில் மடைக்கு வேண்டிய பொருட்களின் நீண்ட பட்டியல் காணப்பட்டது.

மேலோட்டமாக அதைப் பார்த்த சிவராசாவின் கண்களுக்கு அதில் நல்ல சிவப்புச் சேவல் கோழி ஒன்று என்றும் எழுதியிருந்தது தெரிந்தது. கடுதாசியை சட்டப் பைக்குள் பத்திரப்படுத்திய சிவராசா அதே சமயம் பைக்குள் இருந்த காசைத் தடவி எடுத்து அதில் இரண்டு தாளை நீட்டினார்.

“இல்லை. அவசரம் இல்லை. எல்லாம் முடிந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம். முற்பணம் வாங்குகிற பழக்கம் எனக்கு இல்லை” என்று வாத்தியார் மறுத்துரைத்தார்.

அந்தப் பட்டியலில் கண்ட அத்தனைப் பொருட்களை நல்ல நாள் பார்த்து வாங்கத் தொடங்கிச் சேகரிக்க சரியாக ஒரு கிழமை பிடித்தது.

சொன்ன வார்த்தை தவறாமல் அடுத்த வெள்ளிக்கிழமை காலை கணேசு வாத்தியார் வந்து சேர்ந்தார். சிவராசா வீட்டுக்கு வருகிற குறிப்பை ஏற்கனவே சொல்லிக் கொடுத்திருந்ததால் வீட்டைக் கண்டு பிடிக்க வாத்தியாருக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை.

சிவராசா வீட்டு உள் முற்றத்தில் வெள்ளிக்கிழமை இரவு முழுதும் அடுத்த நாள் சனி முழுநாளும் தொடர்ந்து பூசை நடந்தது.

அரிசிமா, குங்குமம் இவற்றினால் கோடுபோட்ட ஒரு சதுரத்தின் மத்தியில் நூற்றியொரு கும்பங்கள் வைக்கப்பட்டிருந்தன. இளனிகள், நீற்றுப் பூசணிக் காய்கள், எலுமிச்சம் பழங்கள் என்று பலவகைப் பொருட்கள் எங்கும் நிறைந்து காணப்பட்டன. கிண்ணங்களில் சந்தனம், குங்குமம், திருநீறு, மஞ்சள் நிரப்பிக் கிடந்தன.

இவற்றின் நடுவே புவனத்தின் உருவில் அரிசி மாவை நெய்யில் குழைத்துச் செய்த ஒரு சின்னப் பாவை. சற்றுத் தள்ளிப் புவனம். ஓம குண்டத்தில் இருந்து சாம்பிராணிப்புகை மேகம் போல எழுந்தது.

அவ்வப்போது இளனிகள், நீற்றுப் பூசணிக்காய்கள், எலுமிச்சம் பழங்கள் வெட்டப்பட்டன. வெட்டின நீற்றுப் பூசணிக்காய்கள் மீது குங்குமம் அப்பப்பட்டது.

மந்திரவாதி உடுக்கை அடித்ததும் ஓம குண்டத்துக்கு முன்னால் உட்கார்ந்திருந்த புவனம் உருவந்து மூசி மூசி ஆடத் தொடங்கினார். சரியான தூக்கம், சரியான சாப்பாடு, குளிப்பு, முழுக்கு இல்லாது புவனம் இப்போது அரைவாசியாகப் போய்விட்டார். அப்படி இருந்தும் ஆடும்போது அவருக்குப் பத்துப் பேரின் பலமும் வேகமும் எங்கிருந்தோ வந்தது.

“நீ யார்”

“சொல்ல மாட்டேன்”

“நீ காடேறியா?”

“இல்லை”

“சுடலை மாடன்?”

“இல்லை”

“மோகினிப் பேய்?”

“இல்லை”

“சொல்லு. சொல்லாவிட்டால் உன்னை சும்மா விட மாட்டேன்”

” சொல்ல மாட்டேன்”

“சொல்லா விட்டால் உன்னைக் கட்டிப்போட்டு பட்டினி போடுவேன்”

“சொல்ல மாட்டேன் என்றால் சொல்ல மாட்டேன்”

மந்திரவாதி கையில் வைத்திருந்த வெள்ளிப் பூண்போட்ட நீண்ட பிரம்பால் ஓங்கி நாலு விளாசல் விளாசினார். அந்த விளாசலைப் பொறுக்க முடியாமல் பேய் அலறியது!

“சொல்றேன், சொல்றேன் என்னை அடிக்காதே!” என்று கெஞ்சியது.


நான்தாண்டா ஆத்தாள்!

(6)

“சரி சொல்லு”

“நான்தாண்டா ஆத்தாள்”

“ஆத்தாள்?”

“ஆமாண்டா மாரி ஆத்தாள்”

“உனக்கு என்ன வேணும்?”

“ஆத்தாளுக்குப் படையல் வேணும்”

“என்ன படையல்?”

“பெரிய பானையில் பச்சையரிசிப் பொங்கல். வடை, முறுக்கு, பால், பழம், இளநீர்…… தேங்காய்….”

“அடுத்த விசாகத்திற்குப் பொங்கிப் படையல் போடுகிறேன். நீ கேட்டதெல்லாம் தருகிறேன். இது சத்தியம். தந்தால் நீ இந்தப் பெண்ணை விட்டு நீ ஓடிப் போய்விட வேண்டும்! என்ன சொல்கிறாய்?”

“போக மாட்டேன்!”

“போக மாட்டாய்?”

”போக மாட்டேன்”

“போகாவிட்டால் உன்னை என் மந்திரத்தால் கட்டிப் பட்டினி போடுவேன்!”

“எனக்குப் பலி வேணும்”

”என்ன பலி”

”இரத்தப் பலி”

“இரத்தப் பலி என்றால்?

” சேவல் கோழி”

“சரி. தருகிறேன். ஆனால் நீ சொன்னபடி இந்தப் பெண்ணைவிட்டு ஓடிப் போய்விட வேண்டும்”

“போவேன்”

“சத்தியம்”

”சத்தியம்”

“ஐயனார் மேலே சத்தியம்?”

“ஐயனார் மேலே சத்தியம்!”

“அம்மாளாச்சி மேலே சத்தியம்?”

“அம்மாளாச்சி மேலே சத்தியம்!”

ஆத்தா கேட்டபடியே பொங்கல் தவிர எல்லாம் சரிவரச் செய்யப்பட்டன. அந்தச் சேவல் கோழி முற்பிறப்பில் என்ன பாவம் செய்ததோ அதன் தலை கூரிய கத்தியால் வெட்டப்பட்டபோது இரத்தம் சீறிப் பாய்ந்தது. கழுத்து வெட்டப்பட்டாலும் உடல் இன்னும் துடித்தபடியே இருந்தது.

மந்திரவாதி அந்தக் கோழியை புவனத்தின் தலையைச் சுற்றி மூன்று முறை சுற்றிவிட்டு தூர எறிந்தார். அதன்பின் மந்திரவாதி பேயை புவனத்தின் உருவம் வரைந்த ஒரு செப்புத் தகட்டில் ஆவாகனம் செய்தார். சுந்தரியின் தலைமுடியில் கொஞ்சம், போட்டிருந்த சட்டையில் ஒரு சிறு துண்டு, உடுத்திருந்த சேலையில் ஒரு சிறு துண்டு வெட்டி அந்தத் தகட்டைச் சுற்றிக் கட்டப்பட்டது.

அதையும் பேய்க்குப் படைத்த மடையல் பலி எல்லாவற்றையும் அள்ளிக் கொண்டு துறையூருக்கு நேர் எதிரே இருந்த கடலுக்கு அப்பால் உள்ள கல்முனைக்குக் கொண்டு போய் கொட்டி விட்டு வர வேண்டும் என்று மந்திரிவாதி சொன்னார். பேயைக் கட்டிக் கொண்டு போய் அக்கரையில் உள்ள ஆலமரத்தில் அறைந்து விட்டால் அது பின்னர் அங்கு கிடந்து உயிரை விடவேண்டியதுதான். அது தப்பினாலும் கடலைக் கடந்து திரும்பி வராது என்று மந்திரவாதி மேலும் விளக்கினார்.

முன்கூட்டியே மந்திரவாதி இதுபற்றிக் கதைத்து வைத்திருந்ததால் வள்ளம், வள்ளத்தை ஓட்ட இரண்டு பேர் தயார் நிலையில் வைக்கப் பட்டிருந்தார்கள். இவர்களோடு மந்திரவாதி போகப் புறப்பட்டார். வாடைக் காற்றுக் காலமாதலால் கொஞ்சத் தூரம் போய் பாயை இழுத்தவுடன் வள்ளம் கல்முனை நோக்கி கடற் தண்ணீரைப் பிய்த்துக் கொண்டு ஓடியது.

துறையூரில் இருந்து கல்முனை காகம் பறக்கிற தூரம் என்றால் இரண்டு மைல்தான் இருக்கும். ஆனால் நேரே வள்ளம் போக முடியாது. கிழக்கே சத்தாராக ஓடிப் பின்னர் மேற்கே சத்தாராக ஓடிப் போக வேண்டும்.

கல்முனையில் குடிகள் அதிகம் இல்லை. அங்கும் இங்கும் உயர்ந்து நீண்ட வெள்ளை மண்பிட்டிகள் ஏராளம் காணப்பட்டன. நாவல் மரங்கள், ஈச்சம்பற்றைகள் கிடந்தன. கல்முனைக்கு தெற்கே இருந்த வெட்டுக்காட்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிலருக்குப் பெரிய பெரிய தென்னந் தோட்டங்கள் இருந்தன.

அந்தக் காலத்தில் மணியகாரர் உடையாராக இருந்தவர்கள் அரசுக்குச் சொந்தமாக ஆனால் தேடுவாரற்றுக் கிடந்த அந்தக் காணிகளை தங்கள் பெயர்களில் பொய் உறுதிகளை எழுதி காணிக் கந்தோரில் பதிவு செய்து தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டார்கள் என்று ஊர்ச் சனங்கள் இப்போதும் தங்களுக்குள் பேசிக் கொள்வார்கள்.

அப்படித் தேடுவாரற்றுக் கிடந்த காணிகள்தான் நாளடைவில் தென்னந் தோட்டங்களாக மாறின. பொதுவாக கடலோரமாக நடும் தென்னங்கன்றுகள் கிசு கிசு என வளர்ந்து ஐந்து ஆறு ஆண்டுகளில் காய்க்கத் தொடங்கி விடுகின்றன. நிலம் உவர் நிலமாக இருப்பது தென்னைக்கு நல்லது என்று சொல்வார்கள். இன்னொரு காரணம் கடல் அருகில் இருப்பதால் அடிநிலம் எப்போதும் ஈரலிப்பாக இருக்கும் என்பதால் கோடை காலத்திலும் மரங்கள் செழித்து வளரும்.

தென்னந் தோட்டங்களை கள்ளர் காடையர் சூறையாடாமல் பார்த்துக் கொள்ளவும், அவற்றைக் கவனமாகப் பராமரித்து பிரயோசனம் எடுக்கவும் பல குடும்பங்களை தோட்டச் சொந்தக்காரர்கள் அந்தப் பகுதியில் குடியமர்த்தி இருந்தார்கள்.

அவர்களுக்கு வேண்டிய உணவுப் பொருட்கள் மாதத்தில் ஒருக்கால் அல்லது இரண்டு மாதத்துக்கு ஒருக்கால், தேங்காய், ஓலை இவற்றை ஏற்றி வரப்போகிற தோணிகளில் தோட்டச் சொந்தக்காரர்கள் எடுத்துப் போவார்கள் அல்லது அனுப்பி வைப்பார்கள்.

இப்படித் தோட்டப் பராமரிப்புக்கு இருப்பவர்களைவிட வேறு யாரும் அங்கு குடியிருக்கவில்லை. வெட்டுக்காட்டுக்குத் தெற்குப் பக்கமாக நடந்து போனால் நாகதேவன்துறை, சங்குப்பிட்டி, கறுக்காய்த்தீவு, ஞானிமடம், நல்லூர் போன்ற இடங்களைப் பார்க்கலாம். இவை எல்லாம் சேர்ந்த பகுதிதான் பூநகரி.

பூநகரிதான் பண்டைய காலத்தில் வடக்கை ஆண்ட மன்னர்களின் தலைநகராக இருந்ததென ஆய்வாளர்கள் இப்போது கருதுகிறார்கள். அதற்கான தொல்பொருட் தடயங்கள் கிடைத்துள்ளன.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் கந்தரோடை, ஆனைக்கோட்டை போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட மேலாய்வுகள் போன்று திட்டமிட்ட மேலாய்வுகள் மேற்கொள்ளப் படாவிட்டாலும், பூனகரிப் பகுதியில் மண்ணித்தலை, பரமன்கிராய், வெட்டுக்காடு ஆகிய இடங்களில் பெருங்கற்காலக் கலாசாரத்திற்குரிய தடயங்கள் கிடைத்துள்ளன. இத்தடயங்கள் இப்பகுதியின் கால வரலாற்றையும், குடாநாட்டின் கால வரலாற்றையும் இணைத்துக் காட்டுவனவாய் அமைந்துள்ளன.

மண்ணித்தலை தொட்டு மன்னார்க் கரையோரம் வரை பாக்குநீரிணைப் பகுதியின் முக்கிய பகுதியாக அமைந்திருப்பதோடு தமிழகத்திற்கு நேரெதிரிற் காணப்படுவதாகவும், தமிழகத்தில் இருந்து பெருங்கற்காலக் கலாசாரத்தைப் பேணிய மக்கள் இக்கரையை அடைந்திருந்ததற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. என்றாலும் ஈழத்துக் கரையோரங்களில் விரிவான மேலாய்வுகள் இன்னும் மேற்கொள்ளப் படவில்லை. அப்படி மேலாய்வுகள் மேற்கொள்ளும் பட்சத்தில் மேலும் பல தடயங்கள் கிடைக்க வாய்ப்புண்டு.

வரலாற்றுக் காலத்துக்கு முன்னும் அதன் பின்னரும் இப்பகுதியில் முக்கிய இடத்தினை வகிப்பது மாந்தைத் துறைமுகமாகும். அனுராதபுரம் போன்றே மாந்தையும் மிக நீண்டதொரு கலாச்சாரம், பாரம்பரியம் கொண்ட பட்டினமாகும்.

கடல் வாணிகத்தில் தமிழகத்துக் கொற்கைத் துறைமுகம் போன்று மாந்தையும் முன்னிலை வகித்தது. நிலவள, நீர்ப்பாசன வசதிகள் இருந்ததால் மாந்தை பெரிய நகரமாக எழுச்சி பெற்றது. அகழிகள், அரண்கள் நிறைந்த நகரமாகவும் வளர்ச்சி பெற்றது. இங்கே மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகள் அதன் தொன்மையை எடுத்துக் காட்டுகின்றன.

கல்முனைக் கடற்கரை கியூபாக் கடற்கரை மாதிரி நீளத்துக்கு வெள்ளை வெளேரென்று பரந்து விரிந்து கிடக்கும். அதன் வடக்குப் பக்கம் யாழ்ப்பாணக்குடாக் கடல். ஆனால் அதன் தெற்குப் பக்கம் பாக்குநீரிணை. வடதிசைக் கடல் எப்போதும் அமைதியாக இருக்க தென்திசைக் கடல் எந்த நேரமும் ஆர்ப்பரித்த வண்ணம் இருக்கும்.

வீடுகள் கட்டுவதற்குத் தேவைப்படும் பாலியாற்று மண் அந்தக் கடற்கரை நீளம் முழுதும் பரவிக் கிடந்தது.

அங்கு கிடந்த வெறுங் காணி ஒன்றுக்குள் பெரிய ஆலமரம் நின்றது. வள்ளம் கரையை அடைந்ததும் முதலில் கணேசு வாத்தியார் இறங்கினார். முழங்கால் அளவு தண்ணி மட்டும் இருந்ததால் வேட்டியை உயர்த்திப் பிடித்துக் கொண்டு முன்னே அவர் போக மற்ற இருவரும் கடகங்களில் கிடந்த படையல் சாமான்களை தலையில் சுமந்து கொண்டு மந்திரவாதியைப் பின்தொடர்ந்து போனார்கள்.

கொண்டுபோன படையல் ஆலமரத்தின் கீழ் பரப்பப் பட்டது. கற்பூரம் கொழுத்தி, சாம்பிராணி காட்டி, அந்த நடுச் சாமத்தில் மந்திரவாதி கொஞ்ச நேரம் மந்திரங்களை முணுமுணுத்த வண்ணம் கண்ணை மூடிப் பூசை செய்தார். கொண்டுபோன செப்புத் தகட்டை ஆலமரத்தோடு வைத்து மந்திரவாதி ஒரு சுத்தியலால் அறைந்தார். அவரோடு போன இருவரும் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு சற்றுத் தொலைவில் பயபக்தியோடு நின்றார்கள்.

அப்போதுதான் கழுத்து வெட்டப்பட்ட அந்தப் பெரிய சேவல் கோழி கந்தசாமியின் கழுகுக் கண்களில் பட்டது. அந்தச் சேவலை உரித்துக் கறியாக்கி நல்ல பனங்கள்ளோடும் பூனகரி மொட்டைக் கறுப்பன் சோற்றோடும் ஒரு பிடிபிடித்தால் எப்படி இருக்கும் என்று அவனது மனதில் ஒரு ஆசை துளிர் விட்டது. மறுகணம் அவனது நாக்கில் எச்சில் ஊறியது! சிறிது நேரத்தில் அந்த ஆசை அங்கு நின்ற ஆலமரம்போல் வளர்ந்தது.


நான்தாண்டா ஆத்தாள்!

(7)

“மச்சான்”

“என்ன?”

“நிலத்தில் கிடக்கிற சேவலைப் பார்த்தியா?”

“ம்… அதற்கு இப்போ என்ன?”

“இது பெரிய அநியாயமடா!”

“அதை வெட்டிப் பலி கொடுத்ததா?”

“இல்லை! இல்லை!”

“பின்னை என்ன?”

“மனிசர் சாப்பிட வேண்டிய இந்தச் சேவலை வீணாக நாய், பூனை சாப்பிடப் போகுது!”

“உது பேய் உறிஞ்சிய கோழி. மனிசர்கள் சாப்பிட்டால் பேய் அவர்களில் தொத்திக் கொள்ளும்!”

“பேயாவது பூதமாவது! எல்லாம் எங்கடை மனப் பயந்தான்!” மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்” என்று ஒரு பழமொழிகூட இருக்குது தெரியுமா?”

“நீ பேய் இல்லை, பூதமில்லை, சாமி இல்லை என்று சொல்லித் திரிகிற நாலு இங்கிலீசு படித்த பெடியன்களுடைய பேச்சைக் கேட்டுக் கெட்டுப் போனாய்! உனக்குப் பேய்ப் பயம் இல்லாமல் இருக்கலாம். எனக்கு இருக்கிறது!”

“உனக்குக் கோழி தின்னப் பொசுப்பில்லை என்று சொல்”

“எனக்கு இந்தப் பேய்க்குக் கழித்த கோழி ஒன்றும் வேண்டாம். நான் பிள்ளை குட்டிக்காரன். என்னை விட்டுடு”

“சரி சரி மந்திரவாதி தனது வேலையை முடித்துப் போட்டார். இனித் திரும்புவம்”

வள்ளம் பத்திரமாக துறையூரை வந்து சேர்ந்தது. வள்ளத்தை எதிர்பார்த்திருந்த சிவராசா வீட்டுக்காரர் மந்திரவாதியை அழைத்துக் கொண்டு வீட்டுக்குப் போனார்கள். புயல் அடித்து ஓய்ந்த வீடுபோல் அந்த வீடு காட்சி அளித்தது. அன்றிரவு சிவராசா வீட்டில் மந்திரவாதி உட்பட எல்லோரும் நிம்மதியாகத் தூங்கினார்கள். ஆனால் ஒருவர் மட்டும் அதற்கு விதி விலக்கு.

எவ்வளவுதான் கண்ணை மூடிக் கொண்டு நித்திரை கொள்ள நினைத்தாலும் அது முடியாமல் கந்தசாமி பாயில் புரண்டான். ஒவ்வொரு முறையும் கண்ணை மூடும்போது கல்முனையில் விட்டுவந்த அந்தச் சேவல் கோழிதான் கண்ணுக்குள் சிறகடித்துப் பறந்தது. சும்மா சொல்லக் கூடாதுஅதை நிறுத்தால் ஏழெட்டு இறாத்தல் நிற்கும். கள்ளன் காடன் கையிலே கொடுத்தாலும் பத்து ரூபா தேறும். சிவராசா யாரெட்டை வாங்கினாரோ தெரியாது. கந்தசாமி மனதுக்குள் ஒரு முடிவோடு இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்துவிட்டான்.

அடுத்த நாள் காலை விடியல் கோழி கூவுமுன் ஒருவருக்கும் தெரியாமல் மீண்டும் கல்முனைக்குப் போய் அந்தக் கோழியை எடுத்துக் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதுதான் அவன் எடுத்த முடிவு!

கந்தசாமியின் வள்ளம் கல்முனை நோக்கி இரண்டாவது பயணத்தை மேற்கொண்டது. இன்னும் நிலம் நல்லா வெளுக்கவில்லை. அவன் பயந்ததுபோல நாய் பூனை எதுவும் அந்தக் கோழியைத் தின்னவில்லை. அந்தக் கோழி போட்ட இடத்திலேயே கிடந்தது. கொஞ்சம் விறைத்துப் போனதுபோல மட்டும் அவனது கண்ணுக்குத் தெரிந்தது. மெல்ல அதனை எடுத்து கையோடு கொண்டுபோன ஒரு கோணிப் பைக்குள் போட்டான். திரும்பிப் பாராமல் ஓட்டமும் நடையுமாய் வந்து வள்ளத்தில் ஏறிக் கொண்டான். எவ்வளவுதான் பேய் இல்லை பூதம் இல்லை என்று வீறாப்புப் பேசினாலும் அந்தச் சூழலில் அவனது நெஞ்சு பயத்தால் படபடத்தது.

வீடு திரும்பிய கந்தசாமி கோழியை கோடிப் பக்கமாய் வைத்து உரித்து, சின்னச் சின்னத் துண்டுகளாக வெட்டிப் பக்குவமாய் இரண்டு சட்டி நிறையக் கழுவிக் கொடுத்தான். “எங்காலே இந்தக் கோழி?” என்று மனைவி கேட்டபோது “நேற்றிரவு உரும்பிராய் காட்டு வயிரவர் கோயிலில் வேள்வி. அங்கை போனவர்கள் வாங்கி வந்து விற்றவியள்” என்று ஒரு பெரிய பொய்யைச் சொல்லி கந்தசாமி அவளின் வாயை அடைத்தான்.

பனம்பால் பருகாமல் கோழிக்கறியோடு சாப்பாடா? ஊரின் ஒரு ஒதுக்குப் புறத்தில் இருந்த பனம்பால் கொட்டிலுக்கு கந்தசாமி புறப்பட்டான். கொட்டிலுக்கு வெளியில் போடப்பட்டிருந்த தென்னங் குத்தி ஒன்றில் சாவகாசமாக உட்கார்ந்து கொண்டான். அதுதான் அவனது வழக்கமான சிம்மாசனம்.

ஒன்று, இரண்டு, மூன்று….. என்று போத்தல் கணக்கில் பனம்பால் உள்ளே போய்க் கொண்டிருந்தது. சும்மாவா சொன்னார்கள் “முள்ளுக் கொள்ளாத வேலியும் இல்லை கள்ளுக் கொள்ளாத வயிறும் இல்லை” என்று.

குடிப்பது இப்போது கொலை, களவு, கள், காமம், பொய் என்ற பஞ்சமா பாதகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. முற்காலத்தில் அப்படியான கோட்பாடு இருக்கவில்லை. சமணம், பவுத்தம் போன்ற சமயங்களின் செல்வாக்கு தமிழர்களிடையே பெருகியபோதுதான் கள் குடிப்பது இழிவாகக் கருதப்பட்டது.

சங்க கால மன்னர்கள் புலவர்கள் அரண்மனையில் ஒன்றாக இருந்து கள் குடித்தார்கள். போர்க்களத்தில் மன்னர்கள் தங்கள் படை வீரர்களோடு அருகிருந்து கள் குடித்து மகிழ்ந்தார்கள்.

அவ்வையார் பெரும் புலவர். புறநானூற்றில் அவர் பாடிய பாடல்கள் 28 இடம்பெற்றுள்ளன. இதில் இருபது பாடல்கள் குதிரைமலையை ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சி என்ற குறுநில மன்னனது வீரம், கொடை, வள்ளன்மை, அன்பு பற்றிய பாடல்கள் ஆகும். அதியமான் இறந்தபோது அவ்வையார் அவனது வள்ளன்மையை நினைவு கூர்ந்து அழுது பாடியிருக்கிறார்.

“சிறியளவே கள் இருப்பின் அதனை எங்களுக்கே தருவான். அது இன்று அவனது இறப்போடு போயிற்று. பெரிய அளவில் கள் இருப்பின் அதனை நாம் உண்டு பாட எஞ்சிய கள்ளை அவன் உண்டு மகிழ்வான். அதுவும் இன்று போயிற்று” என அவர் பாடிய பாடல் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது.

வேதகால ஆரியர்கள் சோமபானம் என்ற மதுவைப் பருகியதோடு அவற்றைக் கடவுளர்களுக்கும் படைத்தார்கள். இருக்கு வேதத்தில் சோமபானம் சோமன் என்ற ஒரு தெய்வமாகவே உருவகப்படுத்தப்பட்டிருக்கிறது.

“இந்திரனே! இந்தக் காலை உணவில் சோமரசமும், பொரித்த புரோடாசமும் (மாடு அல்லது ஆட்டின் விதை) வைத்துள்ளோம் ஏற்றுக் கொள்”

என இருக்கு வேதம் (2913) நவில்கிறது.

இதைப்போல் இன்னும் பல பாடல்கள் வெறிக்கும் சோமச் செடியில் இருந்து பிழிந்து பருகும் பானத்தைப்பற்றிக் குறிப்பிடுகின்றன. இருக்கு வேதத்தின் ஒன்பதாவது மண்டலத்தில் காணப்படும் பாடல்கள் முழுதும் சோமச் செடியை கசக்கிப் பிழிந்து அதிலிருந்து சாறை எடுக்கும் வழிமுறைகளையும் அதனை அருந்தினால் வரும் ஒருவித தெய்வீக மயக்கத்தைப் பற்றியும் பேசுகின்றன.

தங்கள் எதிரிகளான தஸ்தூக்களையும், அவர்களது இரும்புக் கோட்டைகளையும் அழித்து அவர்களது செல்வங்களை கொள்ளையடிக்க உதவிய இந்திரனுக்கு சோமபானம் உட்பட படையல்கள் படைக்கப்பட்டன. இந்திரன் மட்டுமல்லாது வருணன், அக்னி, சூரியன் போன்ற இயற்கை சக்திகளையும் ஆரியர் கடவுளர்களாக வழிபட்டனர்.

குதிரைகள் பூட்டிய தேர்களில் இருந்து கொண்டு வில், அம்பு, வேல், ஈட்டி முதலிய இரும்பு ஆயுதங்களை வைத்திருந்த ஆரியர்கள் வேழாண்மை செய்து வாழ்ந்த பழங்குடி மக்களை எளிதில் வென்றார்கள். பழங்குடி மக்கள் நிறத்தில் கருப்பாக இருந்ததும், ஆரியர் நிறத்தில் வெண்மையாக இருந்ததும் பழங்குடி மக்களைவிடத் தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தையும் விளைவித்தது.

பொதுவாக கடவுளரிடம் தங்களுக்குப் பொருள், உடல் நலம், நீண்ட ஆயுள், பாதுகாப்பு, தாஸ்துக்களுக்கு எதிரான போரில் வெற்றி வேண்டிப் பாடிய பாடல்களே இருக்கு வேதத்தில் காணக் கூடியதாக இருக்கிறது. மிக அருமையாகத் தங்கள் பாவங்களை மன்னிக்குமாறு கேட்கும் பாடல்கள் காணப்படுகின்றன.

சோமபானம் வைக்கப்பட்டிருந்த கலத்தைச் சுற்றி இருந்து பாடல்கள் பாடுவது மழை காலத்தில் குளம் நிரம்பியவுடன் அவற்றின் கரையருகில் இருந்து கத்தும் தவளைகளோடு ஒப்புவமை சொல்லப்பட்டுள்ளது! (இருக்கு, 7:83)

வேள்வி செய்து ஆடு மாடு குதிரைகளைப் பலி கொடுத்தல் கடவுளரின் அனுக்கிரகம் கிடைக்கும், தங்களது உள்ளத்து ஆசைகள் நிறைவேறும், தங்கள் எதிரிகளைப் போரில் எளிதில் வெல்லலாம் என்று ஆரியர்கள் நம்பினார்கள்.

“தெய்வங்களை வணங்காதவர்களை தெய்வங்களுக்கு வேள்வி செய்தும் பலி இட்டும் வழிபாடு செய்யும் ஆரியர்கள் வெற்றி கொள்வார்கள்.” (இருக்கு 8:31:15)

கள்ளுக் கொட்டிலில் மத்தியானம் மட்டும் அலம்பி விட்டு அரை வெறியில் தள்ளாடிக் கொண்டு வீடு திரும்பிய கந்தசாமியை வீட்டு அடுக்களையில் இருந்து வெளிவந்த கோழிக்கறியின் கம கம வாசம் படலை மட்டும் வந்து வரவேற்றது! அது அவனது பசியை அதிகரித்தது. நேரே கிணற்றடிக்குப் போய் கைகால் அலம்பி திருநூற்றுக் கூட்டில் கையைவிட்டு அள்ளி நெற்றியில் விபூதியைப் பலமாகப் பூசிக் கொண்டு வந்து சம்மாலி கோலிக் கொண்டு கந்தசாமி பெட்டிக்கு மேலே வைத்திருந்த சோற்றுக் கோப்பைக்கு முன்னாலே ஆவலோடு உட்கார்ந்தான்.

பலமாத இடைவெளிக்குப் பின்னர் மத்தியானம், பொழுதுபட இரண்டு நேரமும் கோழிக் கறியோடு கந்தசாமியும், பெண்சாதி பிள்ளைகளும் சிவராசா வீட்டுச் செலவில் மாலோகமாகச் சாப்பிட்டார்கள்!

நாட்கள் கிழமைகளாகி, கிழமைகள் திங்கள்களாக மாறி ஓடிக் கொண்டிருந்தன. புவனத்துக்கு இப்போது பூரண சுகம். வீட்டில் கலகலப்பாக ஓடியாடி பம்பரம் போல் வேலை செய்தார். குழந்தைகளைச் சீராட்டிப் பாராட்டி வளர்த்தார். மாமன், மாமியாருக்கு அன்போடு பணிவிடை செய்தார். கோயில் குளம் என்று போய்க் கும்பிட்டு வந்தார். செவ்வாய் வெள்ளி இரண்டு நாளும் விரதம் இருந்தார்.

இந்த வாட்டி கல்முனைக்குக் கொண்டு போய் விட்ட பேய் திரும்பி வரவே இல்லை!கணேசு வாத்தியாருக்கு ஊரில் நல்ல கியாதி. அவர் புகழ் அக்கம் பக்கத்து ஊருக்கும் பரவியது. அவர்தான் “ஆத்தாளை” ஆலமரத்தோடு வைத்து அறைந்து கட்டிப்போட்ட மலையாள மந்திரவாதியாயிற்றே!

ஆனால் சேவல் கோழி கல்முனையில் இருந்து திரும்பி வந்ததையும் அது சட்டிக்குள் சங்கமமான இரகசியத்தையும் எத்தனை நாட்கள்தான் கந்தசாமி தன் நெஞ்சில் வைத்துப் பூட்டிக் காக்க முடியும்?

அவனது பானை வயிற்றுக்குள் கொஞ்சம் அளவுக்கு அதிகமாக கள் இறங்கியபோதெல்லாம் மெல்ல மெல்ல அவனையும் அறியாமல் “உனக்கு மட்டும் சொல்றேன் அண்ணே வேறு யாருக்கும் சொல்லிப் போடாதே” என்று சத்தியம் வாங்கிக் கொண்டு எல்லோரிடத்திலும் கோழி திரும்பி வந்த கதையை அவிட்டுவிட ஆரம்பித்தான். அந்தக் கதை ஊரெல்லாம் கசியத் தொடங்கியது. ஒரு நாள் புவனத்தின் காதுக்கும் அது எட்டியது.

பேய்க்குக் கழித்து கல்முனையில் கொண்டுபோய் போட்ட கோழி திரும்பி வந்துவிட்டது என்ற செய்தி புவனத்தின் ஆழ் மனதில் பட்டுத் தெறித்த அடுத்த வினாடியே அவள் தலைவிரி கோலமாய் மீண்டும் ஆடத்தொடங்கினாள்! (முற்றும்)



பொன்னுருக்கலும் தமிழர் பாரம்பரியமும் 

திரு என்பது தெய்வத்தன்மை எனவும் மணம் என்பது இணைதல் எனவும் பொருள்பட்டு திருமணம் என்றால் மேன்மையுடன் கூடிய தெய்வகடாட்சம் பொருந்திய இணைதல் எனக் கொள்ளப்படுகின்றது. யாழ்ப்பாணத்து தமிழர்களின் இந்துத் திருமணங் களில் ஆகம மரபுச் சடங்குகளுடன் பல சிறப்பு அம்சங்களையும் தழுவி நடைபெறுவது வழக்க மாகும். அதுமாத்திரமல்லாமல் இந்துத் திருமணச் சடங்குக்கு முன்னரும் பின்னரும் பல சடங்குகள் நடத்தப்படுவது தமிழர்களின் மரபாகும். மூத்தோர்கள் ஆல்போல் தழைத்து அறுகுபோல் வளரவேண்டும் என திருமணச்சடங்கன்று மணமக்களை வாழ்த்துவார்கள். தமிழர்தம் பண்பாட்டில் திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிராகும். அந்தத்திருமணத்தின் பாரம்பரிய அடையாளமாகத்திகழும் தாலியை செய்வதற்கு பயன்படுத்தப்படும் தங்க நாணயத்தை உருக்குவதற்குரிய சுபநாளாக பொன்னுருக்கல் கருதப்படுகிறது.

photo_108

இரு வீட்டாரும் முதலில் சாதகப் பொருத்தத்தைப் பார்த்து பொது இடங்களில் பெண் பார்ப்பது பெரும்பாலும் நம் நாட்டில் உள்ள வழக்கமாகும். இந்த வழக்கத்தை யாழ்ப்பாணத்து மக்களும் பின்பற்றுகிறார்கள். பின்னர் இரு வீட்டார்களும் திருமணத்தை உறுதிப்படுத்துவதற்காக உறவினர்கள் மற்றும் தாம்பூலம், பழம், பலகாரத் தட்டுகளுடன் மற்றைய வீட்டுக்குச் செல்வர். இதை சம்பந்தக் கலப்பு எனச் சிறப்பாக கூறுவார்கள். இதன் பின்னர் இரு வீட்டாரும் இணைந்து சோதிடரிடம் திருமண நாளைக் கேட்டு நிச்சயிப்பார்கள். அத்துடன் திருமணநாளுக்கு முன்பு ஒரு சுப நாளை பொன்னுருக்கலுக்கும் நிச்சயிப்பார்கள். 

திருமண நாளுக்கு முன்பு பொன்னுருக்கலுக்காக நிச்சயித்த சுபநாளில் மணமகன் வீட்டில் பொன்னுருக்கல் நடைபெறுவது மரபாகும். அவ்வாறு பொன்னுருக்கலை செய்ய இயலாதவர்கள் ஆசாரி வீட்டில் செய்யலாம். நம் நாட்டில் கிராமப் புறம் தவிர்த்த நகரப்புறப் பகுதிகளில் பெருமளவானோர் ஆசாரி வீடு அல்லது நகைக் கடையில் பொன்னுருக்கலை நடத்துவது தற்போது அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த சுப நிகழ்வில் மணப்பெண்ணைத் தவிர இரு வீட்டு உறவினர்களும் நண்பர்களும் கலந்து சிறப்பிப்பார்கள்.

குறித்த சுப நாளில் மணமகன் வீட்டு வாசலில் நிறைகுடம் வைத்து, அருகில் குத்து விளக்குகள், பன்னீர்ச் செம்பு, விபூதி, குங்குமம் மற்றும் சந்தணம் ஆகியவற்றை வைக்க வேண்டும். நிறைகுடம் வைப்பதன் மூலம் சகல செல்வங்களும் வீட்டில் நிரம்பப் பெற்று இருப்பதோடு நிறைகுடத்தை மங்களத்தின் அறிகுறியாகவும் இந்துக்கள் போற்றுகின்றார்கள்.

பொன்னுருக்கும் இடத்தில் நிறைகுடம் வைப்பதற்குத் தேவையான பொருட்களுடன் மஞ்சள் துண்டு, சட்டியொன்றில் தண்ணீர், தேங்காய் உடைக்கும் கத்தி மற்றும் சாம்பிராணியும் தட்டும், கற்பூரத் தட்டும் கற்பூரம் முதலிய பொருட்களும் முக்கியமாகத் தேவைப்படுவனவாகும்.

பொன் அல்லது தங்கம் என்பது அரிய வகை உலோகமாகக் கருதப்படுகிறது. இவ்வுலோகம் மென்மையான மஞ்சள் நிறத்தில் இருப்பதோடு விரும்பியவாறு வார்க்கக்கூடிய தன்øயும் கொண்டது. இந்த உலோகம் அத என்ற குறியீட்டினால் குறிக்கப்படுவதுடன், இதன் அணு எண் 79 ஆகும். காலம்காலமாக தங்கத்தைக் கொண்டு பலவிதமான ஆபரணங்கள் உருவாக்கப் படுகின்றன. நகைகள் செய்யும்போது 22 காரட் தங்கம் பயன் படுத்தப்படுவதுடன் அதில் 91.7மூ தூய தங்கமும் உள்ளடக்கப் பட்டிருக்கும். தங்கத்தின் பாவனை தொடர்பான ஆரம்ப காலம் கி.மு 4000 ஆம் ஆண்டு என நம்பப்படுகிறது.

அந்த வகையில் தமிழர் பாரம்பரியங்களில் ஒன்றான பொன்னுருக்கலிலும் தங்கம் முதன்மையான இடத்தைப் பிடிக்கிறது. திருமாங்கல்யம் அல்லது தாலி செய்வதற்கு பயன்படுத்தப்படும் தங்க நாணயத்தை கடவுள் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து, அதன் பின்னர் பொன்னுருக்கலுக்கு பயன்படுத்தும் பழக்கம் தமிழர்களிடையே உள்ளது.

பொன்னுருக்கும் ஆசாரியர் கும்பம் வைத்து, விளக்கேற்றி தூபதீபம் காட்டி பொன்னை உருக்க ஆரம்பிப்பார். இதற்காக புதுத் திருகணை, புதுச் சட்டி, உமி மற்று சிரட்டைக் கரி ஆகியவற்றைப் பயன்படுத்துவார். ஆசாரியார் பொன்னை உருக்கிய பின்னர் ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, பழம், பூ, மஞ்சள், குங்குமம், தேசிக்காய் ஆகியவற்றை வைத்து வெற்றிலை மேல் உருக்கிய தங்கத்தை வைத்து, அந்தத் தட்டை மணமகனிடம் கொடுப்பார். மணமகன் அந்தத் தட்டுடன் சாமி அறைக்குச் சென்று வணங்கி, பொன்னுருக்கலுக்கு வந்திருக்கும் சபையோருக்கும் அதை காண்பிக்க வேண்டும். அந்த உருக்கிய தங்கத்தை வைத்து மணமக்களின் எதிர்கால வாழ்க்கையைச் சொல்லக் கூடியவர்கள் யாழ்ப்பாணத்தில் இன்றும் இருக்கிறார்கள். இதற்கு காரணம் அவர்களின் வயதா, அனுபவமா அல்லது அதையும் தாண்டி ஏதாவது சக்தியா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

பொன்னுருக்கிய தங்கத்தைத் தாலி செய்வதற்கு ஒப்படைப்பதோடு, குறித்த நாளில் இரு வீடுகளிலும் கன்னிக் கால் ஊன்ற வேண்டும். இரு வீடுகளிலும் தனித் தனியே ஈசான மூலையில் (வட கிழக்கு மூலையில்) மூர்த்தங்கள் அல்லது கன்னிக் கால் நடுதல் வேண்டும். இந்நிகழ்ச்சிக்கு முள் முருங்கையை பயன்படுத்துவார்கள். குறுகிய காலத்தில் மிக வேகமாக பரவிய ஒரு வகை நோய்த் தாக்கம் காரணமாக செழித்து வளர்ந்த முள் முருங்கைக்கு யாழ்ப்பாணத்தில் பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக கல்யாண முருங்கையை அதிகளவானோர் மாற்றீடாகப் பயன்படுத்துகின்றார்கள். குறித்த முருங்கைத் தடி நேராக இருக்க வேண்டும் என்பது ஐதீகம். இதன் காரணமாக நிறைந்த நேரான வாழ்க்கை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தமிழர் பாரம்பரியத்தில் பொன்னுருக்கல் நிகழ்வில் தெரிந்தோ தெரியாமலோ முள்முருங்கைக்கு முக்கியமான இடம் உள்ளது. இதற்கு இரண்டு விதமான காரணங்கள் பெரியோர்களால் முன்வைக்கப்படுகின்றன. நம் புராணங்களின்படி இந்திரனுக்கு ஆயிரம் கண்கள் உள்ளன. எனவே அந்த இந்திரனை திருணத்திற்கு சாட்சியாக கொள்ளும்போது ஆயிரம் கண்களுக்கு ஒப்பான முள் முருங்கையை பயன்படுத்துகிறார்கள் என்பது ஒன்று. இரண்டாவது முள்முருங்கை என்பது காலநிலை மாற்றங்களுக்கு முகம் கொடுத்து செழித்து வளரக்கூடிய ஒருவகைத்தாவரம். எனவே திருமண பந்தத்தில் இணையும் கணவன், மனைவி ஆகிய இருவரின் வாழ்வும் முள்முருங்கை போல் செழித்து வளர்ச்சியடையும் என்பது நம்பிக்கை.

முள்முருங்கைத் தடியின் மேல் மாவிலை கட்டி, இடையில் மஞ்சள் பூசிய வெள்ளைத் துணியில் ஒரு காசு முடித்து கட்ட வேண்டும். அத்தடியை நிலத்தில் நட்டு, அதற்கு தேங்காய் உடைத்து, சாம்பிராணி மற்றும் கற்பூரம் காட்ட வேண்டும். அதன் அடியில் நவதானியம் இட்டு, நீர், பால் ஊற்ற வேண்டும். இந்நிகழ்ச்சியில் மூன்று சுமங்கலிப் பெண்கள் பங்கேற்பார்கள். இக்கன்னிக்கால் நடுதல் இரு வீடுகளிலும் நடைபெறும்.

பொன்னுருக்கல் தினத்தன்று வந்தவர்களுக்கு உணவு கொடுத்து உபசரிக்க வேண்டும். இதன் பின்னர் மாப்பிள்ளை வீட்டில் இருந்து பெண்ணிற்கு உணவு கொண்டு சென்று கொடுப்பதும் வழக்கமாகும். இந்த நாளில் இருந்து திருமண நாள் வரை மணமக்கள் ஒருவரை ஒருவர் பார்க்கக் கூடாது என்பதும் மணமக்கள் வெளியில் செல்லக் கூடாது என்பதும் சம்பிரதாயமாகும்.

குறித்த நன்னாளில் இரு வீடுகளிலும் திருமணத்திற்கு உரிய பலகாரங்களைச் செய்யவும் திருமணப் பந்தல் போடவும் தொடங்குவார்கள். இதற்கு பின்னர் திருமணச் சடங்குகள் முற்றாக முடிவடையும் வரை இரு வீட்டாரும் எந்தவிதமான தூக்ககரமான நிகழ்ச்சிகளிலும் பங்குபற்ற மாட்டார்கள். இவ்வாறு தமிழர்களின் இந்து திருமணங்களில் பொன்னுருக்கல் இன்றியமையாத ஒரு சுப நிகழ்வாகக் கருதப்படுகின்றது. யாழ்ப்பாணத்து மக்களின் வாழ்க்கை முறைகளுக்கும் மற்றைய பிரதேச மக்களின் வாழ்க்கை முறைகளுக்கும் இடையில் சில பல ஒற்றுமைகளும் சில பல வேற்றுமைகளும் காணப்படுகின்றன. பல இடர்பாடுகளையும் பல துன்பங்களையும் கடந்து வந்தாலும்கூட, யாழ். குடாநாட்டு மக்கள் தம் மண்ணின் மரபைத் தம்மால் முடிந்தவரை தொடர்ந்து பேணி வருகிறார்கள்.

திரு என்பது தெய்வத்தன்மை எனவும் மணம் என்பது இணைதல் எனவும் பொருள்பட்டு திருமணம் என்றால் மேன்மையுடன் கூடிய தெய்வகடாட்சம் பொருந்திய இணைதல் எனக் கொள்ளப்படுகின்றது. யாழ்ப்பாணத்து தமிழர்களின் இந்துத் திருமணங் களில் ஆகம மரபுச் சடங்குகளுடன் பல சிறப்பு அம்சங்களையும் தழுவி நடைபெறுவது வழக்க மாகும். அதுமாத்திரமல்லாமல் இந்துத் திருமணச் சடங்குக்கு முன்னரும் பின்னரும் பல சடங்குகள் நடத்தப்படுவது தமிழர்களின் மரபாகும். மூத்தோர்கள் ஆல்போல் தழைத்து அறுகுபோல் வளரவேண்டும் என திருமணச்சடங்கன்று மணமக்களை வாழ்த்துவார்கள். தமிழர்தம் பண்பாட்டில் திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிராகும். அந்தத்திருமணத்தின் பாரம்பரிய அடையாளமாகத்திகழும் தாலியை செய்வதற்கு பயன்படுத்தப்படும் தங்க நாணயத்தை உருக்குவதற்குரிய சுபநாளாக பொன்னுருக்கல் கருதப்படுகிறது.

இரு வீட்டாரும் முதலில் சாதகப் பொருத்தத்தைப் பார்த்து பொது இடங்களில் பெண் பார்ப்பது பெரும்பாலும் நம் நாட்டில் உள்ள வழக்கமாகும். இந்த வழக்கத்தை யாழ்ப்பாணத்து மக்களும் பின்பற்றுகிறார்கள். பின்னர் இரு வீட்டார்களும் திருமணத்தை உறுதிப்படுத்துவதற்காக உறவினர்கள் மற்றும் தாம்பூலம், பழம், பலகாரத் தட்டுகளுடன் மற்றைய வீட்டுக்குச் செல்வர். இதை சம்பந்தக் கலப்பு எனச் சிறப்பாக கூறுவார்கள். இதன் பின்னர் இரு வீட்டாரும் இணைந்து சோதிடரிடம் திருமண நாளைக் கேட்டு நிச்சயிப்பார்கள். அத்துடன் திருமணநாளுக்கு முன்பு ஒரு சுப நாளை பொன்னுருக்கலுக்கும் நிச்சயிப்பார்கள்.

திருமண நாளுக்கு முன்பு பொன்னுருக்கலுக்காக நிச்சயித்த சுபநாளில் மணமகன் வீட்டில் பொன்னுருக்கல் நடைபெறுவது மரபாகும். அவ்வாறு பொன்னுருக்கலை செய்ய இயலாதவர்கள் ஆசாரி வீட்டில் செய்யலாம். நம் நாட்டில் கிராமப் புறம் தவிர்த்த நகரப்புறப் பகுதிகளில் பெருமளவானோர் ஆசாரி வீடு அல்லது நகைக் கடையில் பொன்னுருக்கலை நடத்துவது தற்போது அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த சுப நிகழ்வில் மணப்பெண்ணைத் தவிர இரு வீட்டு உறவினர்களும் நண்பர்களும் கலந்து சிறப்பிப்பார்கள்.

குறித்த சுப நாளில் மணமகன் வீட்டு வாசலில் நிறைகுடம் வைத்து, அருகில் குத்து விளக்குகள், பன்னீர்ச் செம்பு, விபூதி, குங்குமம் மற்றும் சந்தணம் ஆகியவற்றை வைக்க வேண்டும். நிறைகுடம் வைப்பதன் மூலம் சகல செல்வங்களும் வீட்டில் நிரம்பப் பெற்று இருப்பதோடு நிறைகுடத்தை மங்களத்தின் அறிகுறியாகவும் இந்துக்கள் போற்றுகின்றார்கள்.

பொன்னுருக்கும் இடத்தில் நிறைகுடம் வைப்பதற்குத் தேவையான பொருட்களுடன் மஞ்சள் துண்டு, சட்டியொன்றில் தண்ணீர், தேங்காய் உடைக்கும் கத்தி மற்றும் சாம்பிராணியும் தட்டும், கற்பூரத் தட்டும் கற்பூரம் முதலிய பொருட்களும் முக்கியமாகத் தேவைப்படுவனவாகும்.

பொன் அல்லது தங்கம் என்பது அரிய வகை உலோகமாகக் கருதப்படுகிறது. இவ்வுலோகம் மென்மையான மஞ்சள் நிறத்தில் இருப்பதோடு விரும்பியவாறு வார்க்கக்கூடிய தன்øயும் கொண்டது. இந்த உலோகம் அத என்ற குறியீட்டினால் குறிக்கப்படுவதுடன், இதன் அணு எண் 79 ஆகும். காலம்காலமாக தங்கத்தைக் கொண்டு பலவிதமான ஆபரணங்கள் உருவாக்கப் படுகின்றன. நகைகள் செய்யும்போது 22 காரட் தங்கம் பயன் படுத்தப்படுவதுடன் அதில் 91.7மூ தூய தங்கமும் உள்ளடக்கப் பட்டிருக்கும். தங்கத்தின் பாவனை தொடர்பான ஆரம்ப காலம் கி.மு 4000 ஆம் ஆண்டு என நம்பப்படுகிறது.

அந்த வகையில் தமிழர் பாரம்பரியங்களில் ஒன்றான பொன்னுருக்கலிலும் தங்கம் முதன்மையான இடத்தைப் பிடிக்கிறது. திருமாங்கல்யம் அல்லது தாலி செய்வதற்கு பயன்படுத்தப்படும் தங்க நாணயத்தை கடவுள் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து, அதன் பின்னர் பொன்னுருக்கலுக்கு பயன்படுத்தும் பழக்கம் தமிழர்களிடையே உள்ளது.

பொன்னுருக்கும் ஆசாரியர் கும்பம் வைத்து, விளக்கேற்றி தூபதீபம் காட்டி பொன்னை உருக்க ஆரம்பிப்பார். இதற்காக புதுத் திருகணை, புதுச் சட்டி, உமி மற்று சிரட்டைக் கரி ஆகியவற்றைப் பயன்படுத்துவார். ஆசாரியார் பொன்னை உருக்கிய பின்னர் ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, பழம், பூ, மஞ்சள், குங்குமம், தேசிக்காய் ஆகியவற்றை வைத்து வெற்றிலை மேல் உருக்கிய தங்கத்தை வைத்து, அந்தத் தட்டை மணமகனிடம் கொடுப்பார். மணமகன் அந்தத் தட்டுடன் சாமி அறைக்குச் சென்று வணங்கி, பொன்னுருக்கலுக்கு வந்திருக்கும் சபையோருக்கும் அதை காண்பிக்க வேண்டும். அந்த உருக்கிய தங்கத்தை வைத்து மணமக்களின் எதிர்கால வாழ்க்கையைச் சொல்லக் கூடியவர்கள் யாழ்ப்பாணத்தில் இன்றும் இருக்கிறார்கள். இதற்கு காரணம் அவர்களின் வயதா, அனுபவமா அல்லது அதையும் தாண்டி ஏதாவது சக்தியா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

பொன்னுருக்கிய தங்கத்தைத் தாலி செய்வதற்கு ஒப்படைப்பதோடு, குறித்த நாளில் இரு வீடுகளிலும் கன்னிக் கால் ஊன்ற வேண்டும். இரு வீடுகளிலும் தனித் தனியே ஈசான மூலையில் (வட கிழக்கு மூலையில்) மூர்த்தங்கள் அல்லது கன்னிக் கால் நடுதல் வேண்டும். இந்நிகழ்ச்சிக்கு முள் முருங்கையை பயன்படுத்துவார்கள். குறுகிய காலத்தில் மிக வேகமாக பரவிய ஒரு வகை நோய்த் தாக்கம் காரணமாக செழித்து வளர்ந்த முள் முருங்கைக்கு யாழ்ப்பாணத்தில் பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக கல்யாண முருங்கையை அதிகளவானோர் மாற்றீடாகப் பயன்படுத்துகின்றார்கள். குறித்த முருங்கைத் தடி நேராக இருக்க வேண்டும் என்பது ஐதீகம். இதன் காரணமாக நிறைந்த நேரான வாழ்க்கை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தமிழர் பாரம்பரியத்தில் பொன்னுருக்கல் நிகழ்வில் தெரிந்தோ தெரியாமலோ முள்முருங்கைக்கு முக்கியமான இடம் உள்ளது. இதற்கு இரண்டு விதமான காரணங்கள் பெரியோர்களால் முன்வைக்கப்படுகின்றன. நம் புராணங்களின்படி இந்திரனுக்கு ஆயிரம் கண்கள் உள்ளன. எனவே அந்த இந்திரனை திருணத்திற்கு சாட்சியாக கொள்ளும்போது ஆயிரம் கண்களுக்கு ஒப்பான முள் முருங்கையை பயன்படுத்துகிறார்கள் என்பது ஒன்று. இரண்டாவது முள்முருங்கை என்பது காலநிலை மாற்றங்களுக்கு முகம் கொடுத்து செழித்து வளரக்கூடிய ஒருவகைத்தாவரம். எனவே திருமண பந்தத்தில் இணையும் கணவன், மனைவி ஆகிய இருவரின் வாழ்வும் முள்முருங்கை போல் செழித்து வளர்ச்சியடையும் என்பது நம்பிக்கை.

முள்முருங்கைத் தடியின் மேல் மாவிலை கட்டி, இடையில் மஞ்சள் பூசிய வெள்ளைத் துணியில் ஒரு காசு முடித்து கட்ட வேண்டும். அத்தடியை நிலத்தில் நட்டு, அதற்கு தேங்காய் உடைத்து, சாம்பிராணி மற்றும் கற்பூரம் காட்ட வேண்டும். அதன் அடியில் நவதானியம் இட்டு, நீர், பால் ஊற்ற வேண்டும். இந்நிகழ்ச்சியில் மூன்று சுமங்கலிப் பெண்கள் பங்கேற்பார்கள். இக்கன்னிக்கால் நடுதல் இரு வீடுகளிலும் நடைபெறும்.

பொன்னுருக்கல் தினத்தன்று வந்தவர்களுக்கு உணவு கொடுத்து உபசரிக்க வேண்டும். இதன் பின்னர் மாப்பிள்ளை வீட்டில் இருந்து பெண்ணிற்கு உணவு கொண்டு சென்று கொடுப்பதும் வழக்கமாகும். இந்த நாளில் இருந்து திருமண நாள் வரை மணமக்கள் ஒருவரை ஒருவர் பார்க்கக் கூடாது என்பதும் மணமக்கள் வெளியில் செல்லக் கூடாது என்பதும் சம்பிரதாயமாகும்.

குறித்த நன்னாளில் இரு வீடுகளிலும் திருமணத்திற்கு உரிய பலகாரங்களைச் செய்யவும் திருமணப் பந்தல் போடவும் தொடங்குவார்கள். இதற்கு பின்னர் திருமணச் சடங்குகள் முற்றாக முடிவடையும் வரை இரு வீட்டாரும் எந்தவிதமான தூக்ககரமான நிகழ்ச்சிகளிலும் பங்குபற்ற மாட்டார்கள். இவ்வாறு தமிழர்களின் இந்து திருமணங்களில் பொன்னுருக்கல் இன்றியமையாத ஒரு சுப நிகழ்வாகக் கருதப்படுகின்றது. யாழ்ப்பாணத்து மக்களின் வாழ்க்கை முறைகளுக்கும் மற்றைய பிரதேச மக்களின் வாழ்க்கை முறைகளுக்கும் இடையில் சில பல ஒற்றுமைகளும் சில பல வேற்றுமைகளும் காணப்படுகின்றன. பல இடர்பாடுகளையும் பல துன்பங்களையும் கடந்து வந்தாலும்கூட, யாழ். குடாநாட்டு மக்கள் தம் மண்ணின் மரபைத் தம்மால் முடிந்தவரை தொடர்ந்து பேணி வருகிறார்கள்.

வைதேகி

யாழ்ப்பாணத்தில் திருமண நடைமுறைகள்

யாழ்ப்பாணத்தில் திருமண நடைமுறைகள் பண்பாட்டு ஆய்வாளனாகிய என் கவனத்தை வெகுவாகவே ஈர்த்தன. அவர்களுடைய பாரம்பரிய முறை இன்றும் காணப்படுகிறது. பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் ஜாதகப் பொருத்தம் பார்த்துப் பேசி முடித்துச் செய்யும் “ஏற்பாட்டுத் திருமணமே” மிகப் பரவலான முறை. திருமணத்திற்கு முன்னர் பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் பரிசம்போடுவதோ நிச்சயிப்பதோ இல்லை. ஆனால் பரஸ்பரம் சந்தித்து “சம்பந்தக் கலப்பு” செய்கிறார்கள். தொடக்கத்தில் மாப்பிள்ளை, மணப்பெண்ணைப் பார்ப்பதுகூடப் பொது இடங்களில் தான். இந்திய வம்சாவழியினரிடம் மட்டுமே தமிழக நடைமுறைகள் காணப்படுகின்றன.

திருமணத்திற்கு முதல் நாள் “பெண் அழைத்தல்”, “வரவேற்பு” எதுவுமில்லை. முதல் நாள் மண்டபத்தில் கூடுவதுமில்லை. திருமண நாளன்றே பெண் அழைத்தல் உள்ளிட்ட எல்லாச் சடங்குகளும் நடைபெறுகின்றன. மண்டபத்தில் திருமணம் நடைபெறுவது இன்று பெருகிவிட்டாலும், பாரம்பரியமாகப் பெண் வீட்டில் திருமணம் நடை பெறுவதையும் சில இடங்களில் காண முடிகிறது. திருமணச் செலவை இரு வீட்டாரும் ஏற்றுக்கொள்கின்றனர். மாப்பிள்ளை வீட்டார் மணப் பெண்ணுக்குச் செய்யும் தாலிக் கயிறை 5 பவுன் தொடங்கி 15 பவுன்வரை தங்களுடைய தகுதியைக் காட்டும் வகையில் செய்கிறார்கள். பெண் வீட்டார் மாப்பிள்ளைக்குக் கொடுக்கும் சீதனம் திருமணப் பதிவிற்குப் பின்னர் கொடுக்கப்படும். சீதனம் அதிகம் கொடுக்கும்போது மாப்பிள்ளை வீட்டாரிடம் “எத்தனை பவுனில் தாலிக்கயிறு செய்கிறீர்கள்?” என வலியுறுத்திக் கேட்பார்கள். திருமண நாளன்றே சாந்திமுகூர்த்தம் மாப்பிள்ளை வீட்டில் நடைபெறும். திருமணத்திற்குப் பின் மணமகன் மனைவியின் சீதன வீட்டில் வாழ்வதே மரபான பழக்கமாகும். ஆனால் இன்றைய நவீனத் தொழில்சார் வாழ்வு முறையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

தமிழகத்தில் இன்று கண்ணகி வழிபாடு முற்றிலும் இல்லை. அது மாரியம்மன் வழிபாடாக முழுவதும் உருமாறிப்போய் நிற்கிறது. ஆனால் ஈழத்தில் கண்ணகி வழிபாடு உயிர்ப்புடன் இன்றும் காணப்படுகிறது. குறிப்பாக, மட்டக்களப்பில் 30க்கும் மேற்பட்ட கண்ணகி கோயில்கள் இன்றும் உள்ளன. வன்னிவள நாட்டில் கண்ணகி வழிபாடு மிக உன்னதமான வழிபாடாக இருந்திருக்கிறது. முல்லைத்தீவு, புத்தளம், வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களில் கண்ணகி வழிபாடு மிக முக்கியமானதாகும். ஆனால் யாழ்ப்பாண மாவட்டத்தில் கண்ணகி வழிபாடு சமஸ்கிருத நெறிமுறைக்குள் வந்துவிட்டதை மாணவர்களுடனான களப் பயணத்தின் வழியே அறிந்துகொண்டேன். புங்குடுதீவு கிழக்குக் கண்ணகை அம்மனும் (ஈழத்தில் கண்ணகி அம்மன் கண்ணகை அம்மன் என்றே அழைக்கப்பெறுகிறாள்), புத்தூர் கிழக்குக் கண்ணகை அம்மனும் ராஜராஜேஸ்வரி என்று சமஸ்கிருதமயப்பட்டுவிட்டார்கள். யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயில்களும் சமஸ்கிருத வயப்பட்ட பெயர் மாற்றத்தைப் பெற்றுவிட்டதையும் களப்பயணங்களின் வழியே அறிய முடிந்தது.

யாழ்ப்பாணத்தில் சமஸ்கிருதமயமாக்கம் பல்வேறு நிலைகளில் நடைபெற்று வந்துள்ளது. முதலாவது: நாட்டார் தெய்வங்களின் பெயர்களை மாற்றி உயர்நிலைத் தெய்வங்களாக ஆக்குதல். பின்வரும் தெய்வங்களின் பெயர்களை நோக்கினால் இதைப் புரிந்துகொள்ள முடியும்.

அண்ணமார்                    – பிள்ளையார்
விருமர்                             – பிள்ளையார்
நாச்சிமார்                       – காமாட்சி அம்மன்
கண்ணகை அம்மன்       – ராஜராஜேஸ்வரி
முனி                               – முனீஸ்வரர் (சிவன்)
வைரவர்                          – ஞான வைரவர்.

இரண்டாவது: வழிபாட்டு முறைகளில் சொல் வழக்குகளை மாற்றி உயர்நிலைப்படுத்தியதையும் காண முடிந்தது. எடுத்துக்காட்டாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:

மடை – பொங்கல்
குளிர்த்தி – பொங்கல்
பொங்கல் – சங்காபிடேகம்.

பண்டைத் தமிழர் தன் வாழ்க்கையில் களவொழுக்கம், கற்பொழுக்கம் ஆகிய இருவகை ஒழுக்கங்களையும் கொண்டிருந்தனர். மணச் சடங்கினைப் பற்றி தொல்காப்பியம் கூறும் செய்திகளில் பண்டைத்தமிழர்கள் திருமணம் என்ற சடங்கு இல்லாமலேயே இல்வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் இச்செயற்பாட்டில் பொய்மையும் வழுவும் மிகுதிப்படவே அதனைக் களைய வேண்டி சில விதி முறைகளை வகுத்தனர். ‘கரணம்’ என்ற திருமணம் வாயிலாக பொய்மை நிகழாது என நினைத்தனர். இதன் காரணமாக திருமணம் என்ற சடங்கு உருவாயிற்று. இனவே, களவு மணம், கற்பு மணம் இரண்டும் தமிழர் வாழ்க்கை நெறியாக அன்று விளங்கியதை அறியலாம். பெற்றோர் நடத்தி வைக்கும் மணவாழ்க்கையே ‘கற்பு நெறி’ எனப்பட்டது.

[தொகு] மணமுறைகள்

பொருள் கொடுத்தும், சேவை புரிந்தும் மணத்தல், திறமையை வெளிக்காட்டும் வகையில் வீரத்தின் காரணமாக மணத்தல், போர் நிகழ்த்தி மணத்தல் ,தன் காதல் மிகுதியைக் காட்டி மணத்தல் ஆகிய இவ்வகை மண்முறைகள் களவுநெறி, கற்புநெறி ஆகிய இருவகை மண முறைகளிலும் இருந்தது. உறவு முறைத்திருமணம், கலப்புமணம் ஆகிய வகைகளில் கூட களவு மணமும் இருந்தது என்பதனை இலக்கியங்கள் வாயிலாக அறியலாம்.
இதன் அடிப்படையில் சங்க இலக்கியங்கள் வாயிலாக தெரியவரும் தமிழரின் மணமாக

1.மரபு வழி மணம்
2.சேவை மணம்
3.போர் நிகழ்த்தி மணம்
4.துணங்கையாடி மணம்
5.பரிசம் கொடுத்து மணம்
6.ஏறு தழுவி மணம்
7.மடலேறி மணம்

ஆகிய மண முறைகளைக் காணலாம்.

[தொகு] மரபு வழி மணம்

இதனைப் பலரறி மணம் என்றும் இயல்பு மணம் என்றும் கூறுவர்.பெண்ணின் பெற்றோர் மணமகனிடம் ‘ யான் கொடுப்ப நீ மணந்து கொள்’ என்று வேண்டி மணமுடித்தலாகும். இதுவே சமூகத்தில் பெரு வழக்காக இருந்தது

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply