இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 44 -1, 44-2

இந்து மதம் எங்கே போகிறது? பகுதி 44 -2

மகன்கள் தன்தாயையே கொச்சைப்படுத்தும் திதிமந்திரம்  

தன் தாயையே சந்தேகப்படும்படியான மந்த்ரத்தை திவசம் செய்யும் போது, வாத்தியார் சொல்லச் சொல்ல ‘மகன்’கள் திரும்பச் சொல்கிறார்கள் அர்த்தம் தெரியாமலேயே.

இனியொரு முறை திவசம் செய்யும்போது இந்த மந்த்ரத்தை உச்சரிப்பார்களா?

உதடுபடக் கூட இப்படியொரு அர்த்தத்தை அறிவிக்கக் கூடாதென்று எச்சரிக்க வேண்டியவர்களை எச்சரிப்பார்களா?

இன்னொரு மந்த்ரம். இன்றும்… அம்மாவுக்கு சிரார்த்தம், திவசம், திதி செய்கிறேன் என ஆற்றங்கரைகளிலும், கடற்கரைகளிலும் பவ்யமாய் கடமைகளை நிறைவேற்றும் மகன்களை நாம் பார்ர்க்கிறோம்.

ஒரு வாத்யாரை பணம் கொடுத்து அமர்த்தி… அவர் மூலமாக, தன்னை விட்டுப் பிரிந்த தன் தாய்க்கு வருஷாவருஷம் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தும் அந்த மகன்கள் இதன் வாயிலாக அம்மாவின் அன்பையும் ஆசிர்வாதத்தையும் பரிபூரணமாக பெறுவதாக நம்பிக்கையோடு செய்கிறார்கள்.

ஆனால்…? “என்மே மாதா ப்ரலுலோபசரதிஅனனவ் வ்ரதா தன்மேரேதஹாபிதா வ்ருந்த்தாம் ஆபுரண்யஹா அவபத்யதாம்…”

நான் யாருக்குப் பிறந்தேன். என் அப்பா யாரென தெரியாது. மற்றவர்கள் சொல்வதால் நான் இன்னாருக்குத்தான் பிறந்தேன் என்பதை நம்பவேண்டியுள்ளது.

ஆனால் என் அப்பா யார் என்பது இன்னும் தெரியவில்லை. அது அம்மாவுக்குத்தான் தெரியும். அப்படிப்பட்ட அம்மாவுக்கு என் அஞ்சலியை கொண்டுபோய் சேர்ப்பீர்.

இப்படிப்பட்ட அர்த்தத்தை தன் அம்மாவையே சந்தேகப்படும் படியான மந்த்ரத்தை, வாத்தியர் சொல்லச் சொல்ல ‘மகன்’கள் திரும்பச் சொல்கிறார்கள் அர்த்தம் தெரியாமலேயே.

இந்த அர்த்தத்தை விளங்கிக் கொண்டவர்கள் இனியொரு முறை திவசம் செய்யும்போது இந்த மந்த்ரத்தை உச்சரிப்பார்களா?
உதடுபடக் கூட இப்படியொரு அர்த்தத்தை அறிவிக்கக் கூடாதென்று எச்சரிக்க வேண்டியவர்களை எச்சரிப்பார்களா?

இதுவரை வேதகாலத்தில் பெண்களின் உயர்ச்சி, தாழ்ச்சி, பொதுவான நிலைமைகள் என்று சகலத்தையும் பார்த்தோம். வேதத்தில் சாகித்யம் பெற்ற பெண்கள் இருந்திருக்கிறார்கள்.

சாபம் பெற்ற பெண்களும் இருந்திருக்கிறார்கள். சரி. அதற்கடுத்து வேதம் வகுத்த வரையறைகளை கட்டளைகளாக நெறிமுறைகளாக மாற்றியமைத்துத் தந்த மநுஸ்மிருதியில் பெண்கள் எப்படி வாழ்ந்தார்கள். எப்படி வாழவேண்டும் என்று சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்?

முதலில் மநுஸ்மிருதி என்றால் என்ன? மநு என்பவர் வகுத்த ஸ்மிருதிகள் அதாவது தர்ம நெறிகள் மது ஸ்மிருதி எனப்படும். மநு என்பவர் யார்? ஒரு மநு அல்ல இரண்டு மநு அல்ல கிட்டத்தட்ட பதினெட்டு மநுக்கள் இருக்கிறார்கள். மநு என்னும் பொதுவான பெயருக்கு கடவுளின் கட்டளைப்படி சிருஷ்டியின் போது பூமியை காக்க அவரால் நியமிக்கப் பட்டவர்தான் மநு என்கிறார்கள்.

அதாவது மனிதர்கள் இப்படித்தான் வாழவேண்டும் என்று நெறிகளை திட்டமிட்டு வகுக்கத்தான் கடவுளால் மநு அனுப்பப்பட்டார் மநு என்ற சொல்லில் இருந்துதான் மனுஷன் என்ற பதமும் வந்தது என்றொரு மொழிக் குறிப்பும் வழங்கப்பட்டு வருகிறது.

சரி… நாம் பார்க்கும்போது மநு யார்? வேதத்தை எளிமையாக்கி அவர் வகுத்த தர்மசாஸ்திரத்தில் பெண்களைப் பற்றி என்ன சொல்கிறார்?

உங்களுக்காக ஒரு காட்சியை கட்டவிழ்த்து விடுகிறேன். மனக்கண்ணால் அதைப் பாருங்கள். வீட்டு வாசலில் சின்னப் பெண்குழந்தை எட்டு வயதிருக்கும் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

விளையாடிக் கொண்டிருக்கிறாள். மரப்பாச்சி (மரப்பாச்சி என்றால் இன்றைய நகர நாகரிகம் வளர்ந்துவிட்ட சூழலில் உங்களுக்குப் புரிகிறதா. மரத்தால் செய்யப்பட்ட உருவப் பொம்மைகள் தான்) களை வைத்துக் கொண்டு மழலை மாறாத அந்தக் குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும் வேளையில்…திடீரென அந்தப் பெண் குழந்தையை…“வாம்மா… நேரம் ஆகிக்கொண்டே இருக்கிறது. சீக்கிரம் தயாராக வேண்டும். பார்… எல்லோரும் வந்துவிட்டர்கள்.

இப்போதே குளித்து முடித்து சீவி சிங்காரித்துக் கொண்டால் தானே தாமதம் ஆகாமல் சீக்கிரம் ஆரம்பிக்கலாம் வா.. வா…”என்று அழைக்கிறார்கள் அவளது அம்மாவும் அப்பாவும்.“இரும்மா.. விளையாடிட்டு இருக்கேன்… இன்னும் கொஞ்ச நேரம் விளையாடறேன்.”- ஆனால் மநுஸ்மிருதியின் விளையாட்டு இங்கேதான் ஆரம்பிக்கிறது. — அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். (தொடரும்)


கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.

பகுதி 44(1)இறந்த கணவனுடன் மனைவியையும் உயிருடன் எரித்துவிடு.அவன் சிதையிலேயே உன்னையும் வைத்து எரித்து விடுகிறோம் சரியா? வேதம்.

பகுதி 45. மகளை எட்டு வயதுக்குள் திருமணம் செய்து கொடுத்துவிடு. அவள் ருதுவாகித்தான் கல்யாணம் பண்ணி வைக்கிறான் என்றால் தகப்பனுக்கு மிக அசிங்கமான குமட்டுகின்ற‌ தண்டனை –‍ மநு


இறந்தகணவனுடன் மனைவியையும் எரித்துவிடு உயிருடன்  பகுதி 44 – 1

உன் கணவனோட நீயும் போய்விடேன். அவன் சிதையிலேயே உன்னையும் வைத்து எரித்து விடுகிறோம் சரியா?

இறந்தகணவனுடன் மனைவியையும் உயிருடன் எரித்துவிடு. வேதம்.

சரியப்பா… அவள் இப்படித்தான் வாழ்கிறாள்… கணவனின் தலையில் ஏறி உட்கார்ந்திருக்கிறாள். சந்தோஷமாக வாழ்க்கை போகிறது.

ஒருநாள்… வயதானதாலோ, தேகப் பிரச்சினைகளாலோ கணவன் தலை சாய்ந்து விடுகிறான். அதாவது மரணம் சம்பவிக்கிறது. குடும்பமே அழுகிறது. குழந்தைகள் ஒன்றும் தெரியாமல் தன் பிதாவின்மீது விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

தன்மேல் பிரேமம் வைத்தவன், இப்படி பிரேதமாகக் கிடக்கிறானே என அந்த இளம்பெண் கண்களிலிருந்து நதிகளை பிரசவித்துக் கொண்டிருக்கிற நேரத்தில்… அவளுக்கு என்ன தேவை? ஆறுதல் மொழிகள்தானே…

“கவலைப்படாதேம்மா… அவன் விதி அவனை கொண்டு போய்விட்டது. உன்னை நம்பி குழந்தைகள் இருக்கிறார்கள். பாவம், அவர்களை நீ தான் நல்லபடியாக வளர்க்கவேண்டும்… அழு… அழுதுவிட்டு உன் குழந்தைகளோடு சந்தோஷமாக இரு…’’- இப்படித்தானே சொல்லவேண்டும்?

அவளுக்கு வேதம் ஒரு மொழியை வழங்குகிறது பாருங்கள்.

`பத்யுர் ஜனித்வம் அபி சம்ப பூவ…’இப்படி தொடங்கும் மந்த்ரத்துக்கு என்ன அர்த்தம்?

“உன் ஆம்படையான் இறந்துவிட்டான். பாவம்… இனி உன்னை யார் காப்பாற்றுவது? இனி நீ அவன் வீட்டிலேயே இருந்தால் பாரம்தானே? சுமைதானே? உன்னை ஆம்படையான் குடும்பத்தினர் எப்படி தாங்குவார்கள்? அதனால்…
அதனால்…? ஆமாம்மா புகுந்த வீட்டுக்கு பாரமாக கண்ணெல்லாம் ஈரமாக இனிமேலும் நீ வாழவேண்டுமா? அதனால் உன் கணவனோட நீயும் போய்விடேன்.அவன் சிதையிலேயே உன்னையும் வைத்து எரித்துவிடுகிறோம் சரியா?

அவளாக பற்றவைத்துக் கொள்வதை தீக்குளித்தல் என்கிறோம்

வேதம் அவளை தீக்குளிப்பாட்டியது. கணவனை இழந்த கைம்பெண்ணுக்கு இதுதான் கடைசி வழியானது. இந்த சதிச் செயல்தான் சுருக்கமாக ‘சதி’ என அழைக்கப்பட்டது.

இதை எதிர்த்துதான் ராஜா ராம்மோகன்ராய் போன்றவர்கள் பிற்காலங்களில் போராடினார்கள். ஏன்… சில வருடங்கள் முன்பு கூட ராஜஸ்தான் மாநிலத்தில் ரூப்கன்வர் என்ற ஸ்த்ரீயை கணவனை இழந்தவுடன் தீவைத்து தீர்த்துக் கட்டியிருக்கிறார்கள்.

வேதத்தீயின் வெளிச்சம் காலங்காலமாக கனலடித்துக் கொண்டிருப்பதற்கு இது ஓர் உதாரணம். பெண்களைப் பற்றிய பல வகையான அலசல்களை வேதத்தை மையமாக வைத்து நாம் இதுவரை பார்த்தோம்.

இதுபோன்று ‘சதி’ச் செயல்களால் எரிக்கப்பட்ட பெயர் தெரியாத அப்பாவி ஸ்திரிகளிடம் நாம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டிக்கொள்வோம்.

இப்படி நாம் நினைத்தாலும் பொதுவாகவே பெண்களின் ஆத்மாவை சாந்தியடைய விடாது போலிருக்கிறது
—அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். (தொடரும்)


கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.

பகுதி 43. உடலுறவு கொள்ளும்போது எல்லாம் சரியாக நடக்கிறதா என்பதை கண்காணிக்க ஆபாச திருமண மந்திரங்கள். 

பகுதி 44(2) தன் தாயையே சந்தேகப்படும்படியான மந்த்ரத்தை திவசம் செய்யும் போது, ‘மகன்’கள் சொல்கிறார்கள். இனியொரு முறை திவசம் செய்யும்போது இப்படியொரு அர்த்தத்தை அறிவிக்கக் கூடாதென்று எச்சரிக்க வேண்டியவர்களை எச்சரிப்பார்களா?


 உடலுறவு சமயத்தில் தேவதைகளே உதவுங்கள்! பகுதி – 42

நான் அவளோடு உடலுறவு கொள்ளும் பொழுது தேவதைகளே நீங்கள் உதவ வேண்டும். திருமணத்தில் சொல்லப்படுகின்ற ஒரு மந்திரம் மரியாதை போய்விடும். அப்படிப்பட்ட மந்த்ரம் அது.

திருமணம் முடித்த அன்பர்களே உங்களின் எத்தனை பேரின் திருமண சடஙகில் இந்த ம‌ந்திரம் ஓத‌ப்பட்டது?
மண‌முடிக்க இருக்கும் அன்பர்களே இதெல்லாம் உங்களுக்கு வேண்டுமா?

லோபாமுத்ரை திருமணத்துக்குப் பிறகுதான் தன் கணவன் அகத்திய முனியின் சுய ரூபத்தையே தெரிந்து கொண்டாள். குள்ள ரூபம், தாடியும் மீசையுமாய் ரோமக் காடாய் முகம்.இப்படிப்பட்ட ஒருத்தர்… அழகானவர் போல் நம்மை ஏமாற்றி விட்டாரே என லோபாமுத்ரைக்குள் அழுகையும் ஆத்திரமும் பொங்கின. ஆனால்.. ஸ்த்ரி தர்மப்படி புருஷனுக்கு பணிவிடைகள் செய்வதுதானே பத்தினியின் கடமை.அதன்படி.. தன் புருஷன் அகத்தியனுக்கு பணிவிடைகள் செய்வதையே வேலையாகக் கொண்டு பதிவிரதையாக வாழ்ந்து வந்தாள் லோபா.

காலை எழுந்தவுடன் ஸ்நானம் செய்வது… பிறகு மந்திரங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபடுவது பிறகு ஆகாரம் புசிப்பது… மறுபடியும் தியானம்… மந்த்ரம்… பிறகு இரவு நெடுநேரம் தீப ஒளியில் ஏதேனும் மந்த்ரங்கள் இயற்றிக் கொண்டே இருப்பது… பிறகு தூங்கிக் கொண்டே இருப்பது… பிறகு தூங்கி விடுவது இதுதான் அகத்தியனின் வாழ்க்கை முறை.வேண்டி விரும்பி திருமணம் செய்து கொண்டவளைப் பற்றி அகத்தியன் சிந்திக்கவே இல்லை லோபாவும் தன் புருஷன் தன்னையும் கவனிப்பான் என காத்திருந்தாள் கைங்கர்யம் செய்தபடியே.

இப்படியே காலம் ஓடிக் கொண்டிருக்க.. மந்த்ரங்கள், சிஷ்யர்கள், கமண்டலம்.. என வாழ்ந்த அகத்தியனுக்கு ஒரு நாள்தான்… ‘இதுவரை லோபாவைப் பற்றி நாம் சிந்திக்கவே இல்லையே… அவளை ஒரு வேலைக்காரியாக மட்டுமே பயன்படுத்திக் கொண்டேனே தவிர…ஒரு புருஷனாக பத்தினிக்கு தரவேண்டிய சுகங்களை, அந்தஸ்தை நாம் தரவே இல்லையே.. பேரழகியை திருமணம் செய்து கொண்டு பாராமல் விட்டு விட்டோமே…’ என அகத்தியனுக்குள் அடுக்கடுக்காய் எண்ணங்கள் உதித்தன.

லோபா முத்திரையின் லோக வாழ்வைப் பற்றி அகத்தியன் நினைத்துப் பார்த்தது… கண்கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் என்பார்களே அதுபோல ஏனென்றால்… இருவருக்கும் 80 வருடங்கள் ஓடிப்போய் விட்டன.அழகு ஆட்சி செய்த லோபாவின் மேலே காலம் தன் கட்டளைகளைப் பிறப்பித்து விட்டது. அழகான அவளது முகத்திலும், சருமத்திலும் காலதேவன் தன் விளக்கத்தை சுருக்கங்களாக எழுதினான். கருகருவென்ற அவளது வசீகரமான கேஸத்திலே வெள்ளையடித்து விட்டான்.லோபாமுத்ரை என்ற பேரழகியின் மீதே காலதேவன் தன் முத்திரையை பதித்துவிட்ட போது… அகத்தியர் எப்படியிருப்பார்?நரை கூடி கிழப்பருவம் எய்தி விட்டார்.

இப்படிப்பட்ட நிலையில்தான் லோபாமுத்ரை பற்றிய நினைவு வர… அவளிடம் ஓடிப்போனார் அகத்தியர்.‘தேவி… அம்மா நான்தான் உன் ஆம்படையான் வந்திருக்கேன் என அவளது தோளைத் தொட லோபாமுத்ரை தன் புருஷனிடம் இப்போது தான் வாய் திறந்தாள்.

“உன்னாலே என் ஜென்மாவே பாழாய் போச்சு. என் அழகு வீணாப்போச்சு இப்போது வந்திருக்கிறீரே என்ன பிரயோஜனம்?… இது நியாயமா?…” என பொங்கியழுதாள் லோபாமுத்ரை.“நான் பண்ணிய மந்த்ரங்கள் எல்லாம் உனக்காகத்தானே தேவி”… என அகத்தியன் சமாதானம் சொல்ல… “மந்த்ரங்களுடனா நான் குடித்தனம் நடத்த முடியும்?… என் மணாளன் நீயா?… மந்த்ரங்களா?… என பதில் பேசுகிறாள் லோபாமுத்ரை.

அகத்தியமுனி அப்படியே நிற்கிறார்… இந்தக் காட்சியை அகஸ்தியரின் சிஷ்யர்கள் பார்த்து விடுகிறார்கள். அவர்கள் வழியே தான் இந்த வேதக்கதையே வெளியே வருகிறது.அதாவது… பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவளுக்கு கொடுக்க வேண்டிய சுகங்களை கொடுக்காவிட்டால் அது மகாபாவம் என்பதை வலியுறுத்துவதற்காக இந்தக்கதை.

சரி… திருமணத்தில் வாத்யார்கள் அர்த்தம் தெரியாமல் ஓதும் மந்த்ரங்களுக்கு மேலும் உதாரணம் சொல்கிறேன் என போன அத்யாயத்தில் சொல்லியிருந்தேனல்லவா.

அத்தகைய ஒரு மந்த்ரத்தைப் பாருங்கள்.
“தாம்பூஷன் சிவதமாம் ஏவயஸ்வயஸ்யாம் பீஜம் மனுஷ்யா பவந்த்தீயான ஊரு உஷதி விஸ்ரயாதையஸ்யா முஷந்தஹா ப்ஷரே பஷேபம்…”…

இது வேதத்தில் சொல்லப்பட்ட மந்த்ரம். இதை கல்யாண மேடையிலே பெண்ணையும், மாப்பிள்ளையையும் உட்கார்த்தி வைத்து சத்தமாக சொல்கிறார் வாத்யார். இந்த மந்த்ரத்தின் அர்த்தம் புரிந்தால்… அந்த வாத்யாரை நீங்கள் வாத்சாயணர் என்றுதான் அழைப்பீர்கள்.

அப்படி என்ன சொல்கிறது இந்த மந்த்ரம்?

நான் அவளை கட்டிப்பிடிப்பேன். (அவளோடு உறவு கொள்ளும் பொழுது) அப்போது எங்களது அந்தரங்க பாகங்களை சரியாக பொருந்தச்செய்யுமாறு… தேவதைகளே நீங்கள் உதவ வேண்டும்

.இந்த மந்த்ரத்தின் அர்த்தத்தை இதைவிட நாகரீகமாக சொல்ல முடியாது. விளக்கமாக நான் சொல்லியிருப்பேன் என்றால்… என் மீதும் என் வயதின் மீதும் உங்களுக்கு இருக்கும் மரியாதை போய்விடும். அப்படிப்பட்ட மந்த்ரம் அது.

என் இஷ்டமித்ரர் ஒருவருடைய மகளின் கல்யாணம் சமீபத்தில் நடந்தது. அந்த பெண் மகாபுத்திசாலி. சமஸ்கிருதம் பயின்றவள் அவள் மணமேடையிலே உட்கார்ந்திருக்கும் போது…வாத்யார் இந்த மந்த்ரத்தை உரக்கச் சொல்ல…
“ஸ்வாமீ… நிறுத்துங்கோ” என்றாள் அவள். வாத்யார் வாயடைத்து விட்டார்.“இதுக்கு என்ன அர்த்தம் தெரியுமோ?… பொண்ணும் மாப்ளையும் துணியில்லாம செய்யுற காரியத்தை… நீங்க பல பேர் முன்னாடி சொல்றேளே…”

“வாத்யார் அதன்பிறகு அந்த மந்த்ரத்தை சொல்லவில்லை. இதை ஏன் சொல்கிறேன் என்றால், வாத்யார்கள் சடங்குகள் என்ற பெயரில் இன்ன அர்த்தம் என்றே தெரியாமல்… பல மந்த்ரங்களை உச்சரித்து வருகிறார்கள் என்பதை சுட்டிக் காட்டத்தான்.

இதுபோல் இன்னொரு மந்த்ரம்“விஷ்ணுர் யோனி கர்ப்பயது தொஷ்டா ரூபானி பீமிசதுஆசிஞ்சது ப்ரஜாபதிதாதா கர்ப்பந்தாது…” இதன் அர்த்தம் இன்னும் ஆபாசம். அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் (தொடரும்)

கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.

பகுதி 41. கல்யாணங்களில் பொருந்தாத மந்திரங்கள். மாடு வெட்டுகிறார்களா? ஆமாம்… வேதம் வகுத்துத் தந்த திருமணத்தில் முக்கியமான அம்சம் மாட்டு மாமிசம் தான்.

பகுதி 43.உடலுறவு கொள்ளும்போது எல்லாம் சரியாக நடக்கிறதா என்பதை கண்காணிக்க ஆபாச திருமண மந்திரங்கள்.


About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply