அரச சாட்­சி­யாக மாற்­றி­னால் சிஐ­டிக்கு ரூ. 2 கோடி வழங்க சுவிஸ்குமார் பேரம்

அரச சாட்­சி­யாக மாற்­றி­னால் சிஐ­டிக்கு ரூ. 2 கோடி வழங்க சுவிஸ்குமார் பேரம்

“அரச சாட்­சி­யா­கத் தன்னை மாற்­றி­னால் குற்­றப் புல­னாய்வு அதி­கா­ரிக்கு 2 கோடி ரூபா பணம் தரு­வ­தாக வித்­தியா படு­கொலை வழக்­கின் 9ஆவது எதி­ரி­யான சுவிஸ் குமார் தன்­னி­டம் பேரம் பேசி­னார்” என்று ஆறா­வது சாட்­சி­யான முஹ­மட் இப்­ரான் தீர்ப்­பா­யத்­தி­டம் நேற்­றுச் சாட்­சி­ய­ம­ளித்­தார்.

புங்­கு­டு­தீவு மாணவி சிவ­லோ­க­நா­தன் வித்­தியா 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி கூட்டு வன்­பு­ணர்­வின் பின் கோர­மா­கக் கொலை செய்­யப்­பட்­டார். இந்­தக் கொடூ­ரச் சம்­ப­வம் தொடர்­பான விசா­ர­ணை­கள் யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்­றில் 3 மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­கள் அடங்­கிய தீர்ப்­பா­யம் முன்­னி­லை­யில் இடம்­பெற்று வரு­கி­றது.

மேல் நீதி­மன்ற நீதி­பதி பாலேந்­தி­ரன் சசி­ம­கேந்­தி­ரன் தலை­மை­யில் மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­கள் அன்­ன­லிங்­கம் பிரே­ம­சங்­கர், மாணிக்­க­வா­ச­கர் இளஞ்­செ­ழி­யன் ஆகி­யோர் அடங்­கிய தீர்ப்­பா­யத்­தின் மூன்­றாம் நாள் அமர்வு நேற்­றுக் காலை 9 மணி­ய­ள­வில் யாழ்ப்­பா­ணம் நீதி­மன்­றக் கட்­ட­டத் தொகு­தி­யின் 2ஆவது மாடி­யி­லுள்ள திறந்த மன்­றில் கூடி­யது.

வழக்­குத் தொடு­னர் சார்­பில் பிரதி மன்­றா­டி­யார் அதி­பதி பி. குமா­ர­ரட்­ணம் தலை­மை­யில் அரச சட்­ட­வா­தி­கள் நாக­ரத்­தி­னம் நிஷாந்த், ஷகிப் ஸ்மாயில் , லக்சி டீ சில்வா மற்­றும் மாலினி விக்­னேஸ்­வ­ரன் ஆகி­யோர் முன்­னி­லை­யாகி இருந்­த­னர்.

1ஆம், 2ஆம் , 3ஆம் மற்­றும் 6ஆம் எதி­ரி­கள் சார்­பில் அரச தலை­வர் சட்­டத்­த­ரணி சரங்க பால­சிங்க மற்­றும் சட்­டத்­த­ரணி மகிந்த ஜெய­வர்த்­தன ஆகி­யோ­ரும் 5ஆம் எதி­ரி­யின் சார்­பில் சட்­டத்­த­ரணி ஆறு­மு­கம் ரகு­ப­தி­யும் 4ஆம், 7ஆம் , மற்­றும் 9ஆம் எதி­ரி­கள் சார்­பில் சட்­டத்­த­ரணி சின்­ன­ராசா கேதீஸ்­வ­ரன் ஆகி­யோர் முன்­னி­லை­யாகி இருந்­த­னர். அத்­து­டன் தீர்ப்­பா­யத்­தால் அரச செல­வில் 9 எதி­ரி­கள் சார்­பில் நிய­மிக்­கப்­பட்ட சட்­டத்­த­ரணி விக்­னேஸ்­வ­ரன் ஜெயந்­தா­வும் முன்­னிலை ஆகி­யி­ருந்­தார்.

எதி­ரி­க­ளான பூபா­ல­சிங்­கம் இந்­தி­ர­கு­மார், பூபா­ல­சிங்­கம் ஜெயக்­கு­மார், பூபா­ல­சிங்­கம் தவக்­கு­மார் , மகா­லிங்­கம் சசி­த­ரன் , தில்­லை­நா­தன் சந்­தி­ர­கா­சன் , சிவ­தே­வன் துஷாந்த் , பழனி ரூப­சிங்­கம் குக­நா­தன் , ஜெய­த­ரன் கோகி­லன் , மற்­றும் மகா­லிங்­கம் சசிக்­கு­மார் ஆகிய ஒன்­பது எதி­ரி­க­ளும் யாழ்ப்­பாண சிறைச்­சாலை உத்­தி­யோ­கத்­தர்­க­ளால் தீர்ப்­பா­யத்­தில் முற்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

தீர்ப்­பா­யத்­தால் வழக்­கின் 6ஆவது சாட்சி முஹ­மட் இப்­ரான் சாட்­சி­ய­ம­ளிக்க அழைக்­கப்­பட்­டார். அவ­ரி­டம் பிரதி மன்­றா­டி­யார் அதி­பதி விசா­ர­ணையை முன்­னெ­டுத்­தார்.

நான் கணணி மென்­பொ­ருள் பொறி­யி­யல் துறை சார்ந்­த­வன். 2014ஆம் ஆண்டு காலப் பகு­தி­யில் எனது வங்கி அட்­டை­யைப் பிறி­தொ­ரு­வ­ருக்கு வழங்கி இருந்­தேன். அவர் அதனை வைத்து பண மோச­டி­யில் ஈடு­பட்டு இருந்­தார். அந்த வங்கி அட்­டைக்கு உரி­ய­வன் நான் என்­ப­த­னால் எனக்கு எதி­ராக கொழும்பு கோட்டை நீதி­மன்­றம் , புத்­த­ளம் நீதி­மன்­றம் மற்­றும் வவு­னியா நீதி­மன்­றில் 11 வழக்­கு­கள் உள்­ளன. அவை­ய­னைத்­தும் நிதி மோசடி வழக்­கு­கள். மொத்­த­மாக 13 இலட்­சம் ரூபா நிதி மோசடி செய்­தேன் என்­ப­து­தான் என் மீதான வழக்­கு­கள்.

6ஆவது சாட்­சி­யி­டம் விசா­ரணை

நான் கண­ணித் துறை­யில் ஆர்­வம் இருந்­த­த­தால் அது சார்ந்து கற்று இருந்­தேன். மென்­பொ­ருள்­களை பயன்­ப­டுத்­தி­யும் , நேர­டி­யா­க­வும் பிறி­தொ­ரு­வ­ரின் கண­ணியை என்­னால் ஹக் பண்ண முடி­யும். அதில் எனக்கு அனு­ப­வம் நிறைய உண்டு.

அதே­போன்று அலை­பே­சி­யில் அழிக்­கப்­பட்ட தர­வு­களை என்­னால் மீள எடுக்க முடி­யும். அதற்­கான மென்­பொ­ருள் ஒன்­றை­யும் நான் தயா­ரித்து உள்­ளேன்.

வவு­னியா நீதி­மன்­றில் நடை­பெ­றும் வழக்கு தவ­ணைக்­காக என்னை வவு­னியா சிறைச்­சா­லை­யில் தடுத்து வைத்து இருந்­தார்­கள். அப்­போ­து­தான் இந்த வழக்­கின் எதி­ரி­க­ளைச் சந்­திக்க நேர்ந்­தது. அதாவது நான்­தான் முத­லில் சிறை­யில் இருந்­தேன். பின்­பு­தான் இவர்­களை வவு­னியா சிறைச்­சா­லைக்­குக் கொண்டு வந்­தார்­கள்.

வவு­னியா சிறைச்­சா­லை­யில் தடுத்து வைக்­கப்­பட்டு இருந்த காலப் பகு­தி­யில் , ஒரு நாள் மருத்­துவப் பரி­சோ­த­னைக்­காக மருத்­து­வர்­கள் சிறைச்­சா­லைக்கு வந்து இருந்­தார்­கள். மருத்­துவப் பரி­சோ­தனை நடை­பெற்ற இடம் சிறைச்­சாலை அத்­தி­யட்­ச­க­ரின் அறைக்கு அரு­கா­மை­யில் இருந்த அறை­யில், அப்­போது அதன் முன் பகு­தி­யில் வித்­தியா படு­கொலை வழக்­கின் சந்­தே­க­ந­பர்­க­ளி­டம் குற்­ற­பு­ல­னாய்வு துறை­யி­னர் வாக்­கு­மூ­லத்­தைப் பெற்­றுக்­கொண்டு இருந்­தார்­கள்.

சிறை­கூ­டத்­தில் இருந்து மூன்று மூன்று கைதி­க­ளாத்­தான் மருத்­துவ பரி­சோ­த­னைக்கு அழைத்து வரு­வார்­கள். அப்­போது நான் முத­லா­வ­தாக மருத்­துவ பரி­சோ­த­னையை முடித்­துக்­கொண்டு வெளி­யில் வந்து, என்­னு­டன் வந்த மற்­றைய இவர்­க­ளின் மருத்­துவ பரி­சோ­தனை முடி­யும் வரை­யில் காத்­தி­ருந்­தேன்.

அந்­த­வேளை வித்­தி­யா­வின் கொலை வழக்­கில் குற்­றஞ்­சாட்­டப்­பட்ட நபர்­க­ளி­டம் குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வின் அதி­காரி நிஷாந்த சில்­வா­வும் அவ­ரது அலு­வ­ல­க­ளும் வாக்­கு­மூ­லம் பதிவு செய்து கொண்டு இருந்­த­னர். குற்­றப் புலா­னய்வு அதி­காரி நிஷாந்த சில்வா அந்த இடத்­தில் நின்று இருந்­தார்.

சுவிஸ் குமார் அறி­மு­க­மா­னார்

அவர்­தான் என்­னு­டைய வழக்­குத் தொடர்­பி­லும் விசா­ரணை செய்­த­வர். அத­னால் நான் ஒரு கணணி மென்­பொ­ருள் பொறி­யி­ய­லா­ளன் என்­பது அவ­ருக்­குத் தெரி­யும். “ அலை­பே­சி­யில் அளிக்­கப்­பட்ட தர­வு­களை மீள எடுக்க முடி­யுமா ? “ என என்­னி­டம் அவர் கேட்­டார். அதற்கு நான் ஆம் என்­றேன். அதனை அங்கே வாக்­கு­மூ­லம் கொடுக்க இருந்த சுவிஸ் குமார் கேட்டு இருக்க வேண்­டும்.

அதன் பின்­னர் சுவிஸ் குமார் என்­னைச் சந்­தித்து கேட்­டார், “அலை­பே­சி­யில் அழிக்­கப்­பட்ட தர­வு­களை மீள எடுக்க முடி­யுமா?” எனறு. நான் ஆம் என்­றேன். அப்­போது திரும்ப கேட்­டார் “மென்­பொ­ருளை பயன்­ப­டுத்தி அழிக்­கப்­பட்ட தர­வு­க­ளை­யும் எடுக்க முடி­யுமா ?” என்று. அதற்கு நான் ஆம் என்­னால் முடி­யும் என்­றேன்.

சுவிஸ் குமா­ரில் சந்­தே­கம் வந்­தது

சாத­ர­ண­மாக அலை­பேசி பாவிக்­கின்­ற­வர்­கள், அதில் உள்ள தர­வு­களை அழிப்­பது என்­றால் சாத­ர­ண­மா­கத்­தான் அழிப்­பார்­கள். மென்­பொ­ருள் ஊடாக அழிப்­பது என்­றால் அதில் எதோ பிரச்­சனை இருப்­ப­தா­கப் புரிந்து கொண்­டேன். ஏனெ­னில் நான் இப்­பொ­ழுது தண்­டனை அனு­ப­வித்­துக்­கொண்­டி­ருப்­பதே இன்­னொ­ரு­வர் செய்த தவ­றால்­தான். ஆகவே என் கண்­ணுக்கு முன்பு இன்­னொரு பிழை­யான விட­யம் நடப்­பதை விரும்­ப­வில்லை.

அந்த நேரம் சுவிஸ்­கு­மார் ஒரு அலை­பே­சி­யைத் தந்து, இதில் அழிந்­துள்­ள­வற்றை எடுக்க முடி­யுமா? என்று கேட்­டார். நான் ஆம் என்­றேன். மறு­நாள் கொழும்பு கோட்டை நீதி­வான் மன்­றில் உள்ள வழக்­குக்­காக என்னை மக­சீன் சிறைக்கு மாற்­றப்­பட்­டு­விட்­டார்­கள்.

நான் வவு­னியா நீதி­வான் மன்­றால் விளக்­க­ம­றி­ய­லில் தடுத்து வைக்­கப்­பட்டு இருந்­த­மை­யால் 14 நாட்­க­ளுக்கு ஒரு முறை என்னை வவு­னியா நீதி­மன்­றில் முற்­ப­டுத்த வேண்­டும். ஆனால் அந்த தவணை எனக்கு கொழும்­பில் வழக்கு இருந்­த­மை­யால் வவு­னி­யா­வுக்கு அழைத்து வர­வில்லை. அடுத்த தவ­னைக்கே என்னை அழைத்து வந்­தார்­கள்.

அப்போது என்னை சந்­தித்த சுவிஸ் குமார் “ஏன் போன தவ­ணைக்கு அழைத்து வர­வில்லை ?” எனக் கேட்­டார். அதற்கு நான் சொன்­னேன், “கொழும்­பில் பிறி­தொரு வழக்கு இருந்­த­மை­யால் அழைத்து வர­வில்லை” என்று . அப்­போது சுவிஸ் குமார் கேட்­டார் , “வழக்­குக்­கா­கத்­தான் வர­வில்­லையா? அல்­லது குற்ற தடுப்பு புல­னாய்வு துறை­யி­னரை சந்­திக்க போனீயா ? என்று .

அப்­போது நான் சொன்­னேன் “அவர்­களை சந்­தித்­து­விட்­டுத்­தான் வந்­தேன்” என்று. அவர்­கள் உங்­கள் அலை­பேசி பற்றி என்­னு­டன் கதைத்­தார்­கள் என அவ­ரி­டம் சும்மா சொன்­னேன், “உன்­னைத் தனி­யா­கச் சந்­திக்க வேண்­டும், நான் சந்­திப்­பது ஏனைய 8 பேருக்­கும் தெரிய கூடாது” என்று கூறிய சுவிஸ் குமார் என்னை தனி­யாக மறு­நாள் சந்­தித்­தார்.

பேரம் பேசி­னார் சுவிஸ் குமார்

மறு­நாள் சுவிஸ் குமாரை நான் தனி­யாக சந்­தித்த போது, அவர் என்­னி­டம் கேட்­டார், “பொலிஸ் பரி­சோ­த­கர் நிஷாந்த சில்­வா­வின் பல­வீ­னம் என்ன?” எனறு. அதற்கு நான் அது தெரி­யாது உங்­க­ளுக்கு அவ­ரி­டம் என்ன வேண்­டும்? என்று கேட்­டேன். “வித்­தியா வழக்­கில் நாங்­கள் மூன்று பேர் சகோ­தர்­கள், நாம் அரச சாட்­சி­யாக மாற வேண்­டும். அதற்கு பரி­சோ­த­கர் நிஷாந்த சில்­வா­வு­டன் கதைத்து ஏற்­பாடு செய்து தர­வேண்­டும்” என்று சுவிஸ் குமார் கேட்­டார்.

அவ்­வாறு செய்­தால் பரி­சோ­த­கர் நிஷாந்த சில்­வா­வுக்கு என்ன கொடுப்­பீர்­கள்? என்று நான் சுவிஸ் குமா­ரி­டம் கேட்­டேன். 2 கோடி ரூபா பணம் கொடுக்க முடி­யும் என அவர் தெரி­வித்­தார். இவ்­வாறு நாம் பேசிக்­கொண்டு இருந்­த­வேளை சுவிஸ் குமாரை யாரோ சந்­திக்க சிறைச்­சா­லைக்கு வந்து இருக்­கின்­றார்­கள் என தெரி­வித்து அவர் சென்று விட்­டார்.

மீண்­டும் என்னை திரும்ப சந்­தித்த சுவிஸ் குமார், “மூன்று பேரை அரச சாட்­சி­யாக மாற்ற முடி­யாது. ஒரு­வ­ரைத்­தான் மாற்ற முடி­யும் என தெரி­வித்து தன்னை மட்­டும் பரி­சோ­த­கர் நிஷாந்த சில்­வா­வு­டன் கதைத்து அரச சாட்­சி­யாக மாற்­றி­வி­டுங்­கள்” என்று என்­னி­டம் கேட்­டார். இந்­தத் தக­வல் ஏனைய 8 பேருக்­கும் தெரியக் கூடாது என்­றும் அவர் சொன்­னார்.

அதன் பின்­னர் மறு­நாள் என்னை மக­சீன் சிறைச்­சா­லைக்கு அழைத்­துச் சென்று விட்­ட­னர். பின்­னர் சிறிது காலத்­தில் நான் மீண்­டும் வவு­னியா சிறைச்­சா­லைக்கு கொண்டு வந்த போது, மீண்­டும் சுவிஸ் குமாரை சந்­தித்­தேன். அப்­போது அவ­ருக்கு சொன்­னேன், “பரி­சோ­த­கர் நிஷாந்த சில்­வா­வு­டன் கதைப்­பது என்­றால் எனக்கு கார­ணம் தெரிய வேண்­டும்” என்று.

சுவிஸ் மாபி­யாக் கும்­ப­லு­டன் சுவிஸ் குமா­ருக்­குத் தொடர்பு

அப்­போது சுவிஸ் குமார் சொன்­னார், “நான் சுவி­ஸில் இருந்­தேன். அங்­குள்ள மாபி­யாக் கும்­பல் ஒன்று தெற்­கா­சிய நாட்டு இளம் பெண் ஒரு­வரை கூட்டு வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்தி படு­கொலை செய்­வ­தனை வீடியோ எடுத்து தரு­மாறு என்­னு­டன் உடன்­ப­டிக்கை செய்­தி­ருந்­த­னர்.

அதனைத் தொடர்ந்து நான் இலங்­கை­யில் உள்ள ஒரு­வ­ரு­டன் தொடர்பு கொண்டு அது பற்றி கூறி­னேன். 20 வய­துக்கு உட்­பட்ட பெண் பிள்ளை ஒரு­வர் தேவை என அவ­ரி­டம் கேட்­டேன். அவர் ஒரு பெண்­ணின் புகைப்­ப­டத்தை எனக்கு அனுப்பி வைத்­தார். அந்த பெண் சரி­யா­ன­வர் என்­றேன்” என்று சுவிஸ் குமார் என்­னி­டம் கூறி­னார்.

நான் யாரு­டன் இலங்­கை­யில் உள்ள நப­ரு­டன் தொடர்பு கொண்­டீர் என கேட்­ட­தற்கு, இங்கு எதிரி கூண்­டில் ஆறா­வது நப­ராக உள்­ள­வரை (சிவ­தே­வன் துஷாந்த் ) சுவிஸ் குமார் எனக்கு காட்டி இருந்­தார்.

“இதில் ஆறா­வ­தாக உள்ள நப­ரு­டன் சேர்ந்து இலங்­கை­யில் உள்ள ஏனை­ய­வர்­கள் ஏற்­பாடு செய்­த­னர். அதற்­காக அந்த பெண்­ணின் தாயா­ரு­டன் பெரி­தொரு வழக்­கில் தொடர்­பு­டைய ஏனைய மூன்று பேரை­யும் தம்­மு­டன் கூட்­டுச் சேர்ந்­த­னர்.

வித்­தியா கொலை செய்­யப்­பட்ட போது நான் கொழும்­பில் இருந்­தேன். அங்­கு­தான் தங்­கி­யி­ருந்­தேன் என்­ப­தற்கு சி.சி.ரி. கமெ­ரா­வில் பதி­யப்­பட்­டி­ருந்­தது. மற்­ற­வர்­கள் யாழ்ப்­பா­ணத்­தில் இருந்து நான் கேட்­டது போன்றே காணொ­லிப் பதிவை எடுத்­தார்­கள்” என்று சுவிஸ் குமார் என்­னி­டம் கூறி­னார்

பின்­னர் மீண்­டும் நான் மக­சீன் சிறைக்கு கொண்டு செல்­ல­பட்­டேன். அங்கே பரி­சோ­த­கர் நிஷாந்த சில்­வா­வி­டம் சுவிஸ் குமார் சொன்ன விட­யங்­க­ளைச் சொன்­னேன். அவர் அங்கு வைத்து எனது வாக்­கு­மூ­லத்­தைப் பதிவு செய்­தார்.

சுவிஸ் குமார் மிரட்­டி­னார்

அது எப்­ப­டியோ சுவிஸ் குமா­ருக்கு தெரிந்­து­விட்­டது. நான் மீண்­டும் வவு­னியா சிறைக்கு வந்த போது, “குற்­றத் தடுப்பு புல­னாய்வு துறை­யி­ன­ருக்கு சொன்ன விட­யத்தை நீதி­மன்­றில் சொல்ல கூடாது. சொன்­னால் ஏனைய வழக்­கு­க­ளுக்­குப் போய் வரும் வேளை­க­ளில் உனக்கு உயிர் ஆபத்து ஏற்­ப­டும் என என்னை மிரட்­டி­னர். அத்­து­டன் உன் மனை­விக்­கும் வித்­தி­யா­வுக்கு நடந்து போன்றே நடக்­கும்” என்று சுவிஸ் குமார் என்னை மிரட்­டி­னார்.

இந்த அச்­சு­றுத்­தல்­கள் தொடர்­பில் மக­சீன் சிறைச்­சாலை உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்­கும் , புத்­த­ளம் நீதி­வான் மன்­றி­லும் தெரி­யப்­டுத்­தி­னேன். புத்­த­ளம் நீதி­வான் எனக்கு பாது­காப்பு கொடுக்­கும் படி கட்­ட­ளை­யிட்­டார். எனி­னும் எனக்கு அவ்­வாறு பாது­காப்­புத் தர­வில்லை.

கூகிள் ரைவ் மூலமே காணொ­லிப் பதிவு அனுப்­பப்­பட்­ட­தாம்

சுவிஸ் குமா­ருக்கு வித்­தி­யாவை வன்­பு­ணர்வு செய்­வதை எடுத்த காணொ­லிப் பதிவை அலை­பேசி ஊடாக அனுப்­பி­யுள்­ளார்­கள். அவர் அதனை கூகிள் டிரைவ் மூலம் வெளி­நாட்­டுக்கு அனுப்­பி­யுள்­ளார்.

அத்­து­டன் வித்­தி­யாவை வன்­பு­ணர்வு செய்த நேரத்­தில் நான் அங்கு இருந்து இருந்­தால் நான்­தான் முத­லில் வன்­பு­ணர்ந்து இருப்­பேன். அவ­ரின் உடலை பார்க்­கும் போது ஆசை­யாக இருக்­கின்­றது என­வும் என்­னி­டம் சுவிஸ் குமார் தெரி­வித்து இருந்­தார்.

அர­சி­யல்­வா­தி­யின் தம்­பி­யின் உத­வி­யு­டன் கொழும்­புக்­குத் தப்­பி­னேன்

“நான் யாழ்ப்­ப­ணத்­தில் இருந்து அர­சி­யல்­வா­தி­யின் தம்பி ஒரு­வ­ரின் உத­வி­யு­டன்­தான் தப்பி கொழும்­புக்கு வந்­தேன். அர­சி­யல்­வா­தி­யின் தம்­பியே வாகன ஒழுங்­கு­களை செய்­தி­ருந்­தார். அதன் ஊட­கப் பொலிஸ் உயர் அதி­காரி ஒரு­வ­ரின் துணை­யு­டன் யாழ்ப்­ப­ணத்­தில் இருந்து கொழும்­புக்கு தப்பி வந்து வெள்­ள­வத்­தை­யில் மற்­று­மொரு சுவிஸ் நாட்டை சேர்ந்த ஒரு­வ­ரு­டன் தங்கி இருந்த போதே என்னை வெள்­ள­வத்­தைப் பொலி­ஸார் கைது செய்­த­னர்” என்று சுவிஸ் குமார் என்­னி­டம் தெரி­வித்­தார்.

ஒரு­வ­ருக்கு வழக்­கில் சம்­பந்­தம் இல்லை

ஒரு­நாள் இந்த வழக்­கில் உள்ள அண்­ணன் தம்­பி­கள் மூவ­ரும் இந்த வழக்­கு­டன் சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள் இல்லை போல உள்­ளதே? என சுவிஸ் குமா­ரி­டம் நான் கேட்­டேன். அதற்கு அவர், “ஆம் அதில் இரு­வரே சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள். மற்­றைய ஒரு­வ­ருக்கு இந்த வழக்­கில் சம்­பந்­தம் இல்லை” என்று சொன்­னார். ஆனால் அது யார்? என்று சொல்­ல­வில்லை என தனது சாட்­சி­யத்தை பதிவு செய்­தார்.

அதனை தொடர்ந்து எதிரி தரப்பு சட்­டத்­த­ர­ணி­யான மகிந்த ஜெய­வர்த்­தன குறுக்கு விசா­ர­ணை­யின் போது, சாட்­சி­யத்­தி­டம் இந்த வழக்­கின் எதி­ரி­களை சிறைச்­சா­லை­யில், சித்­தி­ர­வ­தைக்கு உட்­ப­டுத்­தி­யதை நீர் கண்­டீரா? எனக் கேட்­டார்.அதற்கு தீர்ப்­பா­யம் எதி­ரி­கள் தம்மை சித்­தி­ர­வதை செய்­த­னர் என எங்­கும் முறைப்­பாடு செய்­ய­வில்லை. எனவே அந்­தக் கேள்­வியை நிரா­க­ரிப்­ப­தாக அறி­வித்­தது.

அதனைத் தொடர்ந்து , சாட்­சி­யத்­தி­டம் “ உமக்கு நிதி தேவைப்­பட்டு உள்­ளது. அத­னால் பொலிஸ் பரி­சோ­த­கர் நிஷாந்த சில்­வாவை தெரி­யும் என எதி­ரி­க­ளுக்கு கூறி, அவர்­களை மிரட்டி, அவர்­க­ளி­டம் இருந்து பணம் பறிக்க முற்­பட்­டீர் என கூறு­கி­றேன்” என எதிரி தரப்பு சட்­டத்­த­ரணி கூறி­னார். அதற்கு சாட்சி அவ்­வாறு இல்லை எனப் பதி­ல­ளித்­தார்.

அதனைத் தொடர்ந்து எதிரி தரப்பு சட்­டத்­த­ரணி சி. கேதீஸ்­வ­ரன், “இந்த எதி­ரி­க­ளு­டன் பணம் கேட்டு முரண்­பட்­டுள்­ளீர். அது தொடர்­பில் நீதி­மன்­றின் கவ­னத்­துக்கு எதி­ரி­கள் கொண்டு வந்­து­வி­டு­வார்­களோ எனும் பயத்­தின் கார­ண­மாக இவர்­க­ளுக்கு எதி­ராக பொய் சாட்­சி­யம் அளிக்­கின்­றீர்?” என்று சாட்­சி­யத்­தி­டம் கேள்­வி­யெ­ழுப்­பி­னார். அதற்கு சாட்சி அவ்­வாறு இல்லை எனப் பதி­ல­ளித்­தார். அதை­ய­டுத்து 6ஆவது சாட்­சி­யத்­தின் சாட்சி பதிவு முடி­வு­றுத்­தப்­பட்­டது.

திங்­கள் வரை வழக்கு ஒத்­தி­வைப்பு

அதனைத் தொடர்ந்து வழக்கு விசா­ர­ணை­கள் நாளை­ம­று­தி­னம் திங்­கட்­கி­ழமை காலை 9 மணிக்கு ஒத்­தி­வைத்த தீர்ப்­பா­யம் அது­வ­ரை­யில் எதி­ரி­களை விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­மாறு உத்­த­ர­விட்­டது.

About editor 3002 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply