About editor 3087 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

1 Comment

  1. காவல்துறை உயர் அதிகாரி (தமிழர்) கொலையாளியின் இலக்கு நீதிபதி ஐயா இல்லை எனச் சொல்கிறார். அதற்கொரு முக்கிய காரணம் துப்பாக்கிதாரி நீதிபதி இளஞ்செழியன் உட்கார்ந்து இருந்த வாகனத்தை நோக்கி சுடவில்லை என்கிறார். விசாரணை தொடர்ந்து நடைபெறுவதாகவும் உண்மை வெகுவிரைவில் தெரியவரும் எனவும் கூறியிருக்கிறார். ஆனால் நீதிபதி ஐயா தன்னைத்தான் கொலையாளி இலக்கு வைத்தான் என தொடர்ந்து சொல்லி வருகிறார். இதனை ஆங்கிலத்தில் jumping the gun என்று சொல்வார்கள். போகிற போக்கைப் பார்த்தால் அடுத்து மரணித்த நீதிபதி ஐயாவின் மெய்பாதுகாவலருக்கு மணிமண்டபம் கூட அவரோ அவரது நண்பர்களோ எழுப்ப முன்வரக் கூடும். நீதிபதி ஐயா வின் கூற்றுக்கள் அனுமானத்தின் பேரில் அவரது நம்பிக்கையின் அடிப்படையில் உணர்ச்சியின் தூண்டுதலில் சொல்லப்படுவதாகப் படுகிறது. இப்படிப் பட்ட ஒருவரது நீதிமன்றத் தீர்ப்புக்கள் யதார்த்தத்தின் அடிப்படையில் அல்லாது உணர்ச்சியின் அடிப்படையில் சொல்லியதாகக் கொண்டால் அது நியாயமே! வடக்கில் கிழக்கில் இருக்கும் சட்டத்தரணிகளும் நீதிபதி இளஞ்செழியன் மீதான கொலை முயற்சியைக் கண்டித்து ஊர்வலம், ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அவர்கள் விசாரணை முடியும்வரை காத்திருக்கவில்லை. நீதிபதி ஐயா சொல்வது வேதவாக்கு அதற்கு சாட்சியங்கள் தேவையில்லை என்ற முடிவுக்கு எப்படி வந்தார்கள் என்பது புதிராக இருக்கிறது. எல்லோரும் கத்தியைத் தீட்டுகிறார்களேயொழிய புத்தியைத் தீட்டுவதாகத் தெரியவில்லை.

Leave a Reply