உடலுறவுக்கு தட்டுபாடில்லாத சுவர்க்கம் 89
உனக்கு இப்போது ஒரு தேவடியாள் வேண்டுமா? குடும்பஸ்திரீ வேண்டுமா? அதாவது இந்த லோகத்தில் நீ விரும்பிய பெண்கள் அல்லது அந்த லோகத்தில் நீ விரும்புகிற பெண்கள் யார் வேண்டும் உனக்கு..? எவள் கூட வேண்டுமானாலும் சுற்றலாம்.
இங்கு பெண்களின் இன்பம் சிற்றின்பம். பரலோகத்தில் பேரின்பமாக மாறும்
விரஜா என்னும் நதி மிக சன்னமாக சீராக ஜலஜலவென ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நதியைத் தாண்டி அபராஜிதை என்னும் ஒரு பட்டணம் இருக்கிறதாம். பட்டணம் என்றால் அப்பேர்ப்பட்ட பட்டணம் அதாவது எங்கு பார்த்தாலும் ஆண்கள், பெண்கள் ரொம்ப சந்தோஷமா கூடிக் குலவி களித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் நிறைந்த இங்கே.. ஆயிரங்கால் மண்டபம் ஒன்று உள்ளதாம் அந்த மண்டபத்திலும் ஒரே ஆனந்த மயம்தான். அந்த ஆயிரங்கால் மண்டபத்தில் திவ்யபர்யங்கம் என்னும் உயர்ந்த கட்டில் ஒன்று இருக்கிறது அதிலேதான்.. பாம்புப் படுக்கையிலே பெருமாள் இருக்கிறார்.
பக்கத்திலே அங்குள்ளவன் தனது விருப்பத்துக்கு தக்கபடி பித்ரு லோகம், ஸ்த்ரி லோகம் முதலியவற்றை படைத்துக் கொள்கிறான் சுகத்தையும் அனுபவித்துக் கொள்கிறான். இதெல்லாம் என்ன? இதுதான் மோட்சமாம். மோட்ச லோகத்தில் குடும்பம் குட்டிகள் உண்டா? சன்னியாசிகள் உண்டா? ஒருவனுடைய பத்னியை இன்னொருவன் அபகரிப்பானா?
என்றெல்லாம் கேள்விகளைப் போன அத்தியாயத்தில் பார்த்திருப்பீர்கள்.
இதெல்லாம் நான் எழுப்பிய கேள்விகள் இல்லை.. மும்மதஸாரம் என்னும் புத்தகத்தில் சக்கரவர்த்தி ஆச்சாரியார் எழுப்பிய கேள்விகள். பின் அவரே விளக்குகிறார் பாருங்கள்.மோட்ச ஸ்வருபம் என்ற தலைப்பில் அவர் எழுதியிருக்கிறார்.
இவர்கள் இணைந்துள்ள மோட்சம் எல்லோராலும் போற்றத் தகுந்தது ஜாதி, வர்ணம், மதம், பாகுபாடு இதில் கிடையாது எல்லாரும் ஏக ஜாதியைச் சேர்ந்தவர்கள் அங்கு போகத்திலும் வேற்றுமை இல்லை அனைவருக்கும் சமமான போகம்இதைத்தான் ஸாயுஜ்யம் என்பர் எல்லா வகைகளும் எல்லாருக்கும் சமமாகப் பரிமாறப்படுகின்றன என்றிருந்தால் தான் அது ஸாயுஜ்யம்.
குயில், கிளி, கருடன், கஜானன் (யானை) செடி, கொடி, மரம் முதலியவைகளும் அங்கு வைகுண்ட லோகத்தில் உள்ளனவே.. இவர்களும் ஜீவராசியை சேர்ந்தவர்கள்தானே, இதைக் கொண்டு வேற்றுமை ஏற்பட்டுவிடாதா என்கிற அய்யம் சிலருக்கு வரலாம்.
இதற்குப் பதில்.. இவர்கள் அனைவரும் அங்குள்ள நித்ய ஸ்திரீகள் ஆண், பெண் என்கிற வேறுபாடு அங்கிருந்தாலும்.. எவ்வகையிலும் அவர்களுக்குக் குறைவில்லை. கிளி, குயில் முதலியவைகளும் தத்தம் விருப்பப்படி பல உடல்களை எடுத்துக்கொண்டு பணிவிடை செய்யலாம்.
ஒரு முக்தாத்மா பல உடல்களை எடுக்கும்போது ஆண், பெண், குழந்தை முதலிய உடல்களை எடுத்துக்கொண்டு குடும்பமாக அடிமை செய்யலாம் அல்லது மற்றொரு முக்தாத்மாவை உதவியாக வைத்துக்கொண்டு அதற்குத் தக்கபடி இரு முக்தர்களும் பல உடல்களை எடுத்து குடும்ப தாஸ்யம் செய்யலாம்.
இவ்வாறு குடும்ப தாஸ்யம் செய்யும் போது.. ஆண் உருவமும், பெண் உருவமும் உடையவர்களாக இருந்து கொண்டு விளையாடினால் காமம் என்கிற இன்பம் இவர்களுக்கு வரும். ஆகையால், அது மோட்ச சொரூபத்துக்கு விரோதமா என்று சந்தேகப்பட வேண்டாம். இவர்களது எல்லா ரமணமும் அதாவது விளையாட்டும் பகவானுடையதே..
கிருஷ்ணன் கோபி ஸ்திரிகளுடன் ஏன் காம போகத்தை அனுபவிக்கவேண்டும்?
சிறீரங்கநாதன் தனது ஆனந்த நாடிகளைக் கொண்டு சிறீ ரங்கநாயகியுடன் ஆனந்தமாகக் கலவியை அனுபவிக்கிறான் என பாரசரபட்டர் சிறீகுணாத்ர கோசத்தில் எப்படி சாதித்தார்?
இவையெல்லாம் நாம் யோசித்துப் பார்த்தால்.. இங்கு போல் அங்கும் சகல போகங்களும் உள்ளன. அங்குள்ளவர்கள் நித்ய சுத்தர்களாக இருந்தாலும் லீலையாக ஜலக்ரீடை முதலியவைகளை செய்கிறார்கள் ‘எல்லாம் பகவான் செயல்’ என விளக்கமாக சொல்லிக் கொண்டே போகிறார் சக்கரவர்த்தி ஆச்சாரியார்.
இன்னும் நாம் உபநிஷது வாக்கியங்களின் மூலமாகவே அங்கே என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போமா? “சஹ யதீ பிதுர் லோககாமோ பவதீ…சங்கல்பா தேவாஸ்யபிதர உபதிஷ்ட ந்தே…”
உனக்கு என்ன வேண்டும்? உன் அம்மாவை பார்க்கவேண்டுமா? படைத்துக் கொள் உன் அப்பாவைப் பார்க்கவேண்டுமா? படைத்துக் கொள் உன் புத்திரனை பார்க்கவேண்டுமா? படைத்துக் கொள்!
சரி.. குடும்ப உறவுகள் வெறுத்துப் போய் விட்டது உனக்கு இப்போது ஒரு பரஸ்த்ரீ வேண்டுமா? அதாவது இந்த லோகத்தில் நீ விரும்பிய பெண்கள் அல்லது அந்த லோகத்தில் நீ விரும்புகிற பெண்கள் யார் வேண்டும் உனக்கு.. நீ நினைத்தால் உன் முன்னே வந்து நிற்பாள் உன்னைப் பார்த்து சிரிப்பாள் நெருங்குவாள் அணைப்பாள் ஆனந்தம் தருவாள். இங்கு பெண்களின் இன்பம் சிற்றின்பம் அங்கே பேரின்பமாக மாறும். இந்த லோகத்தின் ஆனந்தங்கள் அல்பம் அங்கே பகவத் ஆனந்தம்.
இது Nature அது Super Nature. “யஷனன்னே க்ரீடன்னேரமமானாஹா ஸ்த்ரீபிர்வாயானிர்வா…”
என்று போகிற உபநிஷது.
இங்கு நீ மோட்டாரில் சுற்றுவது போல அங்கேயும் ஜாலியாக சுற்றலாம் அதுவும் எவள் கூட வேண்டுமானாலும் சுற்றலாம்.. அவளை நீயே படைத்துக் கொண்டு என்கிறது. அப்படியென்றால், அங்கே பகவானின் வேலை என்ன? – அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். (தொடரும்)
கர்ப்பமாகி குட்டிபோட்ட கிளி ? நம்புங்கள்.!! இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 88
குட்டிபோட்டது. புராணம் அப்படித்தான் சொல்கிறது.ரிஷிகள் காம சுகத்தை அவஸ்யத்துக்காக அனுபவிக்கிறார்கள் அப்படி காம சுகத்தை அனுபவிக்காத சந்தர்ப்பங்களில் அவர்களது ‘உயிர்த் திரவியம்’ வெளியாவது இயற்கைத்தானே.என்னடா இவ்வளவு வயதானவர் இப்படி கதை சொல்கிறாரே என வருத்தப்பட வேண்டாம். புராணங்களை புரட்டிப் போட்டு ஆராய்ந்து பார்த்தால் இப்படிப்பட்ட காட்சிகள் சர்வ சாதாரணமாக இருக்கின்றன.யாரது?… கிளி போன்ற தலை உடம்பெல்லாம் மனிதன் போன்ற தோற்றம். அதுவும் நாம் பார்த்த வ்யாஸருக்கு சம்பந்தம் உள்ளவரா?… வ்யாஸர் பிறந்த வரலாற்றை பார்த்தோம். வித்தியாசமாக இருந்தது. அதாவது… பராசரர் மச்சகந்தி என்னும் மீனவப் பெண்ணோடு கூடிக் குலவ… திடுதிப்பென பிறந்தவர் தான் வ்யாஸர்.
சரி… வ்யாஸருக்குப் பிறந்த ஒருவர் எப்படி பிறந்தார்?… இதையும் புராணங்கள் சொல்லுகின்றன?… என்னடா இவ்வளவு வயதானவர் இப்படி கதை சொல்கிறாரே என வருத்தப்பட வேண்டாம். புராணங்களை புரட்டிப் போட்டு ஆராய்ந்து பார்த்தால் இப்படிப்பட்ட காட்சிகள் சர்வ சாதாரணமாக இருக்கின்றன. சரி… Come to the subject வ்யாஸருக்கு ஒருவர் பிறந்தார். அவர் எப்படிப் பிறந்தார்.
நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். ரிஷிகள் காம்ய சுகத்தை அவஸ்யத்துக்காக அனுபவிக்கிறார்கள் என்று. அப்படி காம்ய சுகத்தை அனுபவிக்காத சந்தர்ப்பங்களில் அவர்களது ரேதஸ்… அதாவது ‘உயிர்த் திரவியம்’ வெளியாவது இயற்கைத்தானே.
அப்படியோர் பொழுது வ்யாஸரிடமிருந்து வெளிப்பட்டு விட்டது ரேதஸ். சிந்தி கிடந்த அந்த ‘ரேதஸ்’ஸை ஒரு கிளி என்ன பண்ணியது. கொத்தித் தின்றுவிட்டது.
கிளியாக வந்த அழகியுடன் கூடினார் என்றும் சொல்வார்கள். அதை கொத்தித் தின்ற கிளி சும்மாயிருக்குமா?… அந்தக் கிளி கர்ப்பமாகி விட்டதாம். கிளி கர்ப்பமானால் என்ன செய்யும்?முட்டை போடும். குஞ்சு பொரிக்கும். அது இன்னொரு அழகான கிளியாகும். ஆனால்… இந்த கிளி அப்படி அல்ல. வ்யாஸரின் வீர்யம் சாப்பிட்ட கிளியல்லவா. அதனால் கர்ப்பமான கிளி… ஒரு குட்டியைப் போட்டது. கிளி குட்டி போட்டதா?… புராணம் அப்படித்தான் சொல்கிறது.
அந்த கிளிக்குட்டி(!) எப்படி இருந்ததாம்?… தலையெல்லாம் கிளிபோல இருந்ததாம். உடல் மட்டும் மனுஷ்ய பாவணையாய் அமைந்ததாம். என்னடா இது புதுக் கொடுமையாக இருக்கிறதே என்கிறீர்களா?… இது பழம்பெரும் ‘கொடுமை’.
இருங்கள். கதை இன்னும் இருக்கிறது. அந்த ‘கிளிக்குட்டி’ வ்யாஸருக்கும் கிளிக்கும் பிறந்தது. இந்தத் தகவல் வ்யாஸருக்கு தெரிந்தது. உடனே அவர்… ‘டேய் பயலே’ என தன் குடிலுக்கு வெளியே வந்து குரல் கொடுக்க… அதற்குள் அந்த கிளிப்பயல் பறந்து விட்டான்.
வ்யாஸர் குரல் கேட்டு மரங்களெல்லாம் திரும்பிப் பார்த்ததாம். சரி… அந்த கிளிப் பிள்ளைக்கு என்ன பெயர்?…சுகஹா… என்றால் வடமொழியில் கிளி என்று பெயர். அதனால்… அவருக்கு ‘சுகர்’ என்று பெயர். சுகப்பிரம்மம் என்றும் சொல்லுவார்கள். ஏனென்றால்… வ்யாஸருக்கு வேதங்களை பிரித்து வகைப்படுத்தி தொகுத்த பின்பும், உபநிஷத்துக்கு வ்யாக்யானமாக ப்ரம்ம சூத்திரம் பண்ணியபோதும்… 18 புராணங்களை தொகுத்தபோதும் திருப்தி இல்லை.
அதனால்தான் ‘பாகவதம்’ என்று மகா காவ்யத்தை படைத்தார். பாகவதம் என்றால் கிருஷ்ண பரமாத்மாவின் முழு வாழ்க்கை வரலாற்று தகவல்கள் உள்பட பல பகவத் விஷயங்களை சொல்வது. இதைக் கேட்டாலோ, உபதேசம் பெற்றாலோ அவர்கள் மோட்சம் பெற்று பகவான் நாராயணனின் வைகுண்டத்தை அடைந்து விடலாம் என்பது நம்பிக்கை.
இந்தக் கிளிக் கதையை…“எம்ப்ரவ் விஷந்தம்அனுபேதம் உபதே ஹிருத்யம்தனவ பாயஹைவிரக காதரஹ ஆஹிஜாகாதேதீ தன்மயேதய தரவோ…” என்கிற பாகவத பாராயண ஸ்லோகமே சொல்கிறது.
சரி… வ்யாஸர் இயற்றிய இந்த பாகவதத்தை அவரை விட அறிவாளியான ஞானத்தில் சிறந்தவரான சுகர்… பரீட்சித்து என்னும் ராஜாவுக்கு உபதேசிக்கின்றார்.
அதுவும் ஒரே வாரத்தில் பரீட்சித்து ராஜா பாகவத உபதேசம் பெற்றால்தான் அவன் மோட்சம் பெறமுடியும் என்ற நிலைமை. அடித்துப் பிடித்து… உருட்டி விரட்டி… இன்று பரிட்சைக்கு ‘போர்ஷன்’ முடிக்கிறார்களே அதுபோல பரீட்சித்து ராஜாவுக்கு பாகவதக் உபதேசித்து முடித்தாயிற்று. அவன் சாபம் நீங்கி மோட்சம் பெற்றான்.
இங்கேதான் ஜெய்மினி கேட்ட கேள்விக்கு நாம் விடை தேடப் போகிறோம். அதற்காகத்தான் இந்த சுகர் கதையை உங்களுக்குச் சொன்னேன்.
மோட்சம், பெற்று வைகுண்டம் செல்கிறான் என்று சொல்கிறார்களே?… மோட்சம் என்றால் என்ன?… வைகுண்ட லோகம் எப்படி இருக்கும்?… இதற்கான விடையை நாம் உபநிஷத்துகளில் பார்க்கலாம். இங்கு போல் அங்கும் ஸகல போகங்களும் உண்டு என்கிறது உபநிஷது.
அப்படியென்றால்… வைகுண்ட லோகத்தில் வீடுகள் உண்டா?… மாடுகள், கிளிகள், மான்கள் உண்டா?… அங்கு வஸிப்பவர்கள் மனைவியுடன் இருக்கிறார்களா?… இங்கு போல் அங்கும் காம ஸூகத்தை அனுபவிக்கிறார்களா?… மகப்பேறுகளைப் பெறுகிறார்களா? … அங்கேயும் திருடர்கள் இருப்பார்களா?… ஸந்யாஸிகள் இருப்பார்களா?… ஒரு புருஷன் மற்றொருவர் மனைவியை அங்கும் விரும்புவானா?…இந்தக் கேள்விகளை நான் கேட்கவில்லை. பின்?… — அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். (தொடரும்)
கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.
கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.
Leave a Reply
You must be logged in to post a comment.