பிராமணிசம் தேசதர்மத்துக்கு புறம்பானது. இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 99 -100 – 1,2,3

 நேருவின் கோபம். இந்து மதம் எங்கே போகிறது? பகுதி 99. to 100-1


இந்து மதத்திற்கு தனி உரிமையோ சிறப்புரிமையோ இந்தியாவில் கிடையாது, நீங்கள் மதத்தின் தனியுரிமை சிறப்புரிமை குறித்து பேசவிரும்பினால்… இந்த நாட்டுக்கு வெளியே எங்கே வேண்டுமானாலும் சொல்லலாம்’ என கடுமையாகச் சொல்லிவிட்டார் நேரு.மடங்களுக்காவது தனியுரிமை கிடைக்குமா?

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 99

சனாதன மதானுஷ்டானங்களுக்கு இம்மிளவும் பாதிப்பு வரக்கூடாது. வர்ணாஸ்ரம வரையறைகள் மாறக்கூடாது என பட்டேலிடம் சங்கராச்சாரியாரின் விண்ணப்பத்தை கேட்கப்போய்…

‘மடாதிபதிகளை திருத்த முடியாது. அவர்களை நம்பி நீங்கள் வராதீர்கள்’ என கடுமையாகவே சொல்லி என்னை அனுப்பிவிட்டதைச் சொன்னேன். இதை சங்கராச்சாரியாரிடம் சொன்னபோது… ‘இதுவும் உண்மைதான்’ என ஒத்துக் கொண்டதையும் குறிப்பிட்டேன்.

இதன் பிறகுதான் பண்டிட் நேருஜியை இதே விண்ணப்பத்துடன் பார்க்கப் போனேன்.

அதற்கு முன்னதாக பல ஆச்சாரியார்களிடம் ஆலோசனை பண்ணி… லௌகீகர்கள் சிலரையும் சேர்த்துக் கொண்டு பிறகு பண்டிட் நேருஜியை பார்க்கப் போனேன்.

என்ன விஷயம்? என்றார் நேருஜி. நாங்கள் மெமோரண்டத்தின் சாரத்தை எடுத்துச் சொல்ல ஆரம்பித்ததுமே… கொஞ்ச நேரம் கேட்டு விட்டுப் பிறகு மெமோரண்டத்தையும் பார்த்தார்.

உடனே… நிமிர்ந்தவர் என்னைப் பார்த்து “If you want to talk about religion, You should go to outside from this nation. We don’t allow speciality to any religion. Here all are equal…Dont’ talk me about religion… understand?”என்றார் ரோஜாவின் ராஜா. நான் அதிர்ந்து விட்டேன். அவர் என்ன சொன்னார் என்று புரிகிறதா?

“நீங்கள் மதத்தைப் பற்றி மதத்தின் தனியுரிமையைப் பற்றி பேச வேண்டுமென்றால் இங்கு… பேசாதீர்கள். இங்கு எந்த மதத்திற்கும் தனிப்பட்ட உரிமையோ, ஸ்பெஷாலிட்டியோ கிடையாது. எல்லா மதங்களும் சமம்தான். All are equal.

மீண்டும் நீங்கள் மதத்தின் தனியுரிமை சிறப்புரிமை குறித்து பேசவிரும்பினால்… இந்த நாட்டுக்கு வெளியே எங்கே வேண்டுமானாலும் சொல்லலாம்’ என கடுமையாகச் சொல்லிவிட்டார் நேரு.

இவ்வளவு நடந்தும் சங்கராச்சாரியார் அலட்டிக் கொள்ளவில்லை. மதத்துக்குத்தான் தனியுரிமை சிறப்புரிமை கிடைக்கவில்லை. மடங்களுக்காவது தனியுரிமை கிடைக்குமாஎன்று பார்ப்போம் என சொல்லி களத்தில் இறங்கிவிட்டார்.

‘பட்டேல் சொன்ன மாதிரி மதங்களின் பிரதிநிதிகளான மடங்கள் மக்கள் சேவைக்கு வரவேண்டும். மடாதிபதிகள் ராஜபோகங்களில் துயில்கிறார்கள், மிதக்கிறார்கள் என்ற தத்துவத்தை தகர்க்க வேண்டும். அதனால் தேஸத்தின் எல்லா மடங்களையும் இதற்காக நாம் வலியுறுத்த வேண்டும். எனவே பாரதிய மடங்களின் சபையை நாம் கூட்ட வேண்டும்.

பாரதிய மடங்களின் சபையை கூட்டுவதற்கு முன்… அவரவர்கள் மடத்துக்குப் போய் ‘புது அரசியல் மூலம் ஸ்வதந்திர தேசமாகப் போகிறோம். இதுவரை இருந்த நிலை வேறு. இனிமேல் நான் இருக்கப் போகும் நிலை வேறு. ஆகவே நம் மடங்களுக்கும் ஜீவாதார உரிமை பெற முயற்சிக்க வேண்டும்’ என்று சொல்லச் சொன்னார். அதன்படி அகில பாரதிய மடங்கள் மாநாட்டை டெல்லியில் கூட்டச் சொன்னார்.

அதற்குப் பட்டபாடு அப்பப்பா…! இந்த மாநாட்டைக் கூட்ட குளித்தலை அண்ணாதுரை அய்யங்கார் என்ற உத்தமமான புருஷன் முன் வந்தார். இவர் சங்கராச்சாரியாரிடம் அபார பக்தி கொண்டவர். மடங்களைப் பார்த்து பேசுவதற்காக மோட்டார் காரில் திருச்சியில் இருந்து புறப்பட்டு உடுப்பி, அதைத் தொடர்ந்துள்ள சிருங்கேரி மடம் ஆகிய மடங்களை நேருக்கு நேராய் போய்ப் பார்த்து விஷயங்களை விக்ஞாபித்தோம். உடுப்பியில் மாத்வ சம்ப்ரதாயத்தைச் சேர்ந்த 8 மடங்கள் உள்ளன. இவை தவிர உத்தராதி மடம், சோதன மடம். சுமுதிர்த்த மடம். மந்த்ராலய மடம் எல்லாரையும் சந்தித்தோம்

மேற்குத் தொடர்ச்சி மலையின் கடைசியில் உள்ள ‘சுப்ரமண்யம்’ என்ற மடத்துக்குப் போனோம். இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை குறிப்பிட்டாக வேண்டும். சிருங்கேரி மடத்துக்குப் போன போது, மடாதிபதி நவராத்திரி உற்சவத்துக்கு வெளியே எழுந்தருளியிருந்தார். மாஜி ஜில்லா ஜட்ஜ் ஒருத்தர், இன்னொரு ஹைகோர்ட் ஜட்ஜ் ஒருத்தர் என முக்கியஸ்தர்களுடன் சிருங்கேரி மடாதிபதியை பார்த்தபோது…” பெரியவர் சுத்தமான தமிழில் பேசினார். பெரியவாளின் கர்மானுஷ்டத்துக்கு நேருக்கு நேராக உதவி செய்ய முடியாதே என்று சொல்லிவிட்டார்.

பின், அங்கிருந்து பாலேஹி என்னும் மடத்தின் மடாதிபதியை கடும் மழைக்கிடையே பார்த்து, மடங்களின் மாநாட்டுக்கு அழைத்தோம். சகடபுரம், அரிஹரப்பூர் மடங்களுக்கு அலைந்துவிட்டு ஷிமோகா வந்து சங்கமேஸ்வர மடாதிபதியையும் பார்த்தாச்சு. அப்படியே மைசூர் போய் வைஷ்ணவ மடமான பரக்கால மடத்தைப் பார்த்து விஷயத்தை விளக்கிவிட்டு கிழக்கு கர்நாடகாவில் வீர சைவ மடங்கள், வடக்கு கர்நாடகாவில் கோதே, தும்கூர் இப்படியாக பாரதம் முழுதும் சுற்றி பூரிஜெகன்னாத் போனோம்.

அங்குள்ள பல வைஷ்ணவ மடங்களின் பிரதான மடத்தின் தலைவரான கிரிதாரிதாஸ் ராமானுஜர், அவரது வித்வான் துர்பலாச்சாரி மூலம் பல மடங்களை பார்த்தோம் பின் அயோத்திக்குப் போனேன்.

அங்குள்ள மடங்களைப் பார்த்து புது அரசியல் சாசனத்தில் மடங்களுக்கு சுதந்திரம் வேண்டி மகா பெரியவர் எடுத்து வரும் முயற்சிகளை விளக்கினோம்.

பின்… இன்றைய பாகிஸ்தான் கராச்சியில் உள்ள சிந்து நகரத்தின் மடத்தையும் சென்றடைந்தோம். செட்டி நாட்டு குன்னக்குடி மடம், திருநெல்வேலி செங்கோல் மடம் முதல் சிந்து நகர மடம்வரை… எல்லோரும் நாங்கள் பார்த்தபோது எங்களுக்கு ஆட்சேபணையே தெரிவிக்கவில்லை சரி…டெல்லியில் மட மாநாடு நடந்ததா?- அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.

பகுதி 100 – 1.  மத உரிமைகளுக்காக.. அவற்றை நிறைவேற்றுவதற்காக கன்னியாகுமரி முதல் கராச்சி வரை, அலைந்து… பல்வேறு மடங்களையும் நேரில் அடைந்து, மடாதிபதிகளையும் மாநாட்டுக்கு அழைத்த கஷ்டமான காரியத்தை விளக்கினேன். டெல்லியில் இந்துமகாசபை என்ற இடத்தில் மாநாடு நடந்தது. யார் யார் கலந்து கொண்டனர்?

கல், காடு, மலை, வெயில் என கடந்துபோய் நாங்கள் சந்தித்த பாரதத்தின் நூற்றுக்கணக்கான மடங்களிலிருந்து எவரும் கலந்து கொள்ளவில்லை. கராச்சி சிந்துநகர மடப்ரதிநிதியை தவிர.

சின்ன வருத்தம்தான் அதற்காக என்ன செய்வது? பேருக்குக் கூடிய அந்த மாநாட்டில்.‘Freedom of religion and maintaining religious institutions…’ வேண்டும் என ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு கலைந்தோம் எங்கே?

கலைவதற்குக்கூட ஆட்கள் இல்லை. இதன் பிறகும் சளைக்காமல் மடங்களுக்கான தனியுரிமை குறித்து… Parliament Bill கொண்டுவர ஏற்பாடு செய்தோம். புது பார்லிமென்ட் வந்த பிறகு அந்த பில்லை யாரும் கண்டு கொள்ளவில்லை.

ஸ்வதந்த்ரம் பெற்று பாகிஸ்தான் – இந்தியா என தேசம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இந்தியாவான நமது தேசத்தில் ‘All are equal… All religions are equal…’ என்று பிரகடனப்படுத்தப் பட்டது. அதாவது Secular State என அரசமைப்பு சாசனம் அறிவித்தது.அதாவது எத்தனை மதங்கள் எத்தனை தர்மங்களை பின்பற்றினாலும் இந்த தேசத்தின் பொதுதர்மம் All are equal என்பதுதான்.

நமது மதாசாரப்படி… தர்மம் எல்லார்க்கும் ஒன்றுதான் அரசனும் தர்மத்துக்கு கட்டுப்பட வேண்டும். ஏன் பகவானே கூட தர்மத்துக்கு, தர்ம நெறிமுறைகளுக்கு எதிராக நடந்தால் பகவானையே தண்டிக்கவும் நமது மதக்கலாச்சாரம் கற்றுத்தருகிறது. இதனைத்தான் ‘தர்மவிகிக்ரமம்’ என்கிறோம். — அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். (தொடரும்)


பக்தையை சூறையாடிய விஷ்ணு. இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி. 100 – 2.

பக்தையை சூறையாடிய கடவுள்..

பார்வதியை கட்டிப்பிடித்த பக்தன்.

கடவுளை கற்சிலையாக்கிய பக்தை.

இதனை விஸ்தாரமாக விவரிக்கும் ஒரு புராணக் காட்சியைப் பார்க்கலாமா?

அதாவது தர்மம் எல்லார்க்கும் ஒன்றுதான். யார் தவறு செய்தாலும் அவர்களுக்கு தண்டனை உண்டு. இதனை விஸ்தாரமாக விவரிக்கும் ஒரு புராணக் காட்சியைப் பார்க்கலாமா?

இந்த காட்சி நிகழும் இடம் இன்றைய பஞ்சாப் மாநிலத்தில் Jalandhar, Punjab  ஜலந்தர் ஓர் இடம்   கதையைப் படிக்கும் போதே அந்த ஊரின் பெயர்க்காரணம் உங்களுக்கு விளங்கும்.

அந்த ஊரில் ஜலந்தர்-பிருந்தா என்ற தம்பதி வாழ்ந்து வந்தனர். நல்ல கணவன் மனைவியாக வாழ்ந்து வந்த இவர்களுடையே ஒரேயொரு விஷயத்தில் மட்டும் கருத்து வேறுபாடு என்ன விஷயத்தில் என்றால் கடவுள் விஷயத்தில்.

அப்படி என்ன கருத்து வேறுபாடு? பிருந்தா விஷ்ணுவை தவிர வேறு கடவுளே இல்லை என்னும் அளவுக்கு விஷ்ணு பக்தை. அவளது ஆம்படையான் ஜலந்தருக்கோ சிவன் மீது அபார நாட்டம்.

இந்த விசித்திரமான விஷயத்தை கேள்விப்பட்ட நாரதர், அந்த குடும்பத்தில் சிறிது விளையாடிப் பார்க்க நினைத்தார். ஒருநாள் ஜலந்தர் தனியாக இருக்கும் போது அவனை சந்தித்தார்.

என்ன ஜலந்தர்?…  நீயோ சிவனை வழிபாடு செய்கிறாய். உன் மனைவியோ விஷ்ணுவை வழிபடுகிறாள். நீ பின்பற்றும் சிவபக்தியால் சிவனுடைய மனைவி பார்வதி தேவியையே நீ அடையலாமே… எதற்கு இந்த பிருந்தாவுடன் போராடிக் கொண்டிருக்கிறாய். இந்த பிருந்தாவை விட அந்த பார்வதி எவ்வளவு அழகு தெரியுமோ?… என ஜலந்தரின் மனதில் பற்றவைத்து விடுகிறார் நாரதர்.

உடனே ஜலந்தரும்… ‘நான் பார்வதி தேவியை அடைய முடியுமா?’…எப்படி? என கேட்கிறான். அதற்கு நாரதரே யோசனையும் கொடுக்கிறார். “சிவனுக்கு சாமவேதம் என்றால் உயிர். எங்கே சாமவேதம் ஒலித்தாலும் மயங்கி அந்தப் பக்கம் போய்விடுவார். நீ என்ன பண்ணு… சாமவேதம் பாராயணம் செய்பவர்களை பிடித்து நல்ல சத்தமாக சாமவேதம் ஒலிக்கச் செய்.

அதனைக் கேட்டு சிவபெருமான் மயங்கியிருக்கும் வேளையில் கைலாயத்துக்கு சென்று காரியத்தை முடித்துவிடு ” சிந்திக்கத் தெரியாத ஜடமாகிவிட்ட ஜலந்தரும் நாரதரின் கலக யோசனையை காது கொடுத்து கேட்ட பின், அப்படியே… சாமகானம் பாட ஏற்பாடு பண்ணினான்.

இதைக் கேட்டு சிவன் லயித்திருக்க… அவர் இல்லாத நேரமாய்ப் பார்த்து கைலாயத்துக்குள் காலடி எடுத்து வைத்தான். அங்கே பார்வதி தேவி தனிமை அழகில் தத்தளித்துக் கொண்டிருக்க, நாரதர் கொடுத்த யோசனைப்படி பார்வதியை போய் கட்டிப்பிடித்து விட்டான் ஜலந்தர்,

பார்வதி… தன் மேல் சிவன் அல்லாத ஒருவன் சில்மிஷம் செய்கிறான் என்பதை அறிந்து ‘ஸ்வாமீ’ என ஏழுகடல் கொந்தளிக்க கத்துகிறாள். கைலாயத்தில் இப்படி…

ஜலந்தரின் வீட்டுத்தோட்டத்தில்?… கணவனைக் காணாது மனைவி பிருந்தா தனித்துத் தவித்திருக்கிறாள். தனது பரம தெய்வமான விஷ்ணுவிடம் தன் கணவன் எங்கே என வேண்டுகிறாள்.

இதைப் பார்த்த விஷ்ணு… ‘நமது பக்தைக்கு நாம் ஏன் சந்தோஷம் தரக்கூடாது? தன் கணவனை காணோமே என பாவம் தேடிக்கொண்டிருக்கிறாள். நாமே ஜலந்தராக உருவெடுத்து அவளை மகிழ்ச்சிப்படுத்துவோம் என முடிவெடுத்து… கணவன் ஜலந்தர் போலவே உருவம் எடுத்து பிருந்தாவை நெருங்கினார் விஷ்ணு.

‘ஆஹா… என் கணவர் வந்துவிட்டார்’ என சந்தோஷம் பொங்கிய பிருந்தா… தன் கணவர் ரூபத்தில் வந்திருந்த விஷ்ணுவை கட்டிப்பிடித்துக் கொண்டாடினாள் இருவரும் தோட்டத்தில் ரொம்ப இஷ்டமாக இழைந்து கொண்டிருக்கும் நேரத்தில்…‘நெருக்கமாக இருக்கும் அவர்களுக்கு நெருக்கமாக வந்து பொத்’தென வந்து விழுந்தது ஒரு தலை. ரத்தம் கொட்ட கழுத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட அந்தத்தலை, ஜலந்தரின் தலை.

ஆமாம்… சாமவேதத்தில் சிவனை மயக்கிய ஜலந்தர்… பார்வதியை கட்டிப் பிடிக்க இதனால் பார்வதி ஏழுகடல் அதிர சத்தம் போட்டாள் இல்லையா?

வேதத்தின் மயக்கத்தை… பார்வதியின் கூக்குரல் கலைக்க, ஓடிப்போய் பார்த்தார் சிவன். தன் மனைவியை இன்னொருவன் பலாத்காரப்படுத்துவதா?… என ஜலந்தரின் தலையை சீவியெறிந்தார்.

அந்த ஜலந்தரின் தலைதான்… பிருந்தாவும் ஜலந்தர் போல் ரூபம் எடுத்து வந்த விஷ்ணுவும் இழைந்து கொண்டிருந்தபோது இடையில் வந்து விழுந்தது.

பார்த்தாள் பிருந்தா… உடலோடு விழுந்தவன் கணவனா? இல்லை தலைமட்டும் விழுந்தவன் கணவனா? சந்தேகம் அதிகரிக்க…அப்போது திடுக்கென உடலோடு கூடிய ஜலந்தர் மறைந்து விஷ்ணுவாகிறார். ‘நான்தான் பக்தையே…’ என அறிமுகம் கொடுக்கிறார்.

இதைக்கேட்டு பொங்கியெழுந்த பிருந்தா…’அடப்பாவி… பக்தையை இப்படி பண்ணிவிட்டாயே? என் கணவன் ரூபத்தில் வர நீ யார்? தவறு செய்துவிட்டாய். பகவானாக இருந்தாலும் தவறு தவறுதான். உனக்கு சாபமிடுகிறேன்.

கடவுளாக இருந்தாலும் நீ கல்லாய் போவாயாக’ பிருந்தாவின் சாபம்தான் பகவானை சாலக்ராமம் என்ற சிலையாக்கிவிட்டதுஎன்பது புராணம்

அதாவது கடவுளே தர்மத்தை மீறி தவறு செய்திருந்தாலும் தண்டனை உண்டு என்பதுதான் இக்கதை சொல்லும் நீதி. — அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். (தொடரும்)


பிராமணிசம் தேசதர்மத்துக்கு புறம்பானது. இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 100 – 3


ப்ராமண்யத்தின்படி பிராமணன்தான் தெய்வம். இது இப்போதைய நமது தேச தர்மத்துக்கு முரணானது.மதமென்ற‌ பெயரால் அழியாதே.மதம் என்ற பெயரில் அனுமதித்து தன்னைத்தானே பாழ்படுத்திக் கொண்டிருக்கிற மூளையிடம் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.பிராமணத்துவத்தை (இந்துதுவம்) பின்பற்றினால் அதில் சூத்திரர் , பஞ்சமர் என இனபிரிப்புகளை அடக்கியுள்ளது. ஆகையால் தேசிய அமைப்பு சட்டத்தின் பிரகாரம் பிராமணத்துவம் தேசிய அமைப்பு சட்டத்திற்கு முரணாணது.
இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 100-3.

இப்போது நம் தேசத்தில் சட்ட பூர்வமாக தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால் ஆகமரீதியாக இன்னமும் இது உயிர் வாழ்ந்து வருகிறது.

ப்ராமண்யத்தின்படி பிராமணன்தான் தெய்வம். இது இப்போதைய நமது தேச தர்மத்துக்கு முரணானது.

If you follow Bhraminism, there is Sutra and Punchamas. So, according to constituion Bhraminism is antilaw. பிராமணிசத்தை பின்பற்றினால் அதில் சூத்திரர், பஞ்சமர் என இனபிரிப்புகளை அடக்கியுள்ளது. ஆகையால் தேசிய அமைப்பு சட்டத்தின் பிரகாரம் பிராமணிசம் தேசிய அமைப்பு சட்டத்திற்கு முரணாணது.

அதனால்… மநுதர்மத்தை பின் தொடர்ந்து செல்லும் பிராமணீயம் (நன்றாக புரிந்து கொள்ளவேண்டும்.நான் சொல்வது கொள்கை தத்துவத்தை ) என்பது நமது அரசியல் தர்மத்துக்கு மட்டும் அப்பாற்பட்டது.

அதனால் All are equal என்ற தர்மம்தான் இப்போது நம் மதத்தை காப்பாற்ற ஒரே வழி.

விவேகானந்தர் சிகாகோ மாநாட்டில் ஹிந்து தர்மத்தைப் பற்றி பேசிப் புகழ் சேர்த்துவிட்டு… சென்னை வந்தபோது அவர் ஆற்றிய உரையில் சிலவற்றை உங்களுக்குத் தருகிறேன்.

“இளைஞர்களே… இதை நினைவில் கொள்ளுமாறு தனிப்பட்ட முறையில் உங்களை கேட்டுக் கொள்கிறேன். இந்திய ஆன்மிகச் சிந்தனைகளால் உலகத்தை நாம் வெல்லவேண்டும். ஆன்மிகச் சிந்தனைகள் என்று நான் கூறியது… உயிருணர்வு அளிக்கக்கூடிய கோட்பாடுகளையே தவிர…நாம் நெஞ்சோடு நெஞ்சாக இறுகப்பிடித்துக் கொண்டிருக்கிற மூட நம்பிக்கைகளை அல்ல.

கண்ட கண்ட மூடநம்பிக்கைகளை எல்லாம் மதம் என்ற பெயரில் அனுமதித்து தன்னைத்தானே பாழ்படுத்திக் கொண்டிருக்கிற மூளையிடம் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

இந்த மூடநம்பிக்கைகளின் பின்னால் ஓடாதீர்கள். அதைவிட நீங்கள் உறுதியான நாஸ்திகர்கள் ஆகிவிடுங்கள் இது உங்களுக்கும் நல்லது. உங்கள் இனத்துக்கும் நல்லது…’ என்று மதராஸ் ராஜதானியில் பேசினார் விவேகானந்தர்.

இது ‘இளையபாரதமே எழுக’ என்று ராமகிருஷ்ணா மடம் விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகளை வெளியிட்டுள்ள புஸ்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேதம் வகுத்த இயற்கை வழிபாட்டு நெறிமுறைகள் லோகசேமத்துக்கே
‘இந்தா பால் இதைக் குடித்து வளமோடு வாழு…’ என்கிறது வேதம். மதம் என்னும் கோப்பையில் நல்லபாலை ஊற்றி அருந்துங்கள்… லோக சேமம் பெறுங்கள்!.
உண்மையைத் தேடும் தமிழ் அறிவுலகத்துக்கு
சமர்ப்பணம். —
அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் .
(இந்து மதம் எங்கே போகிறது? நிறைவு)
——————–

இந்து மதத்தின் பேரால் ஏனைய சாதியினரை அடக்கவும், ஒடுக்கவும், அறியாமையில் ஆழ்த்தவும், அவமதிக்கவும் ஒரு குறிப்பிட்ட சாதியினரால் பாரபட்சமான ஓர வஞ்சனையாக நடத்தப்படும் அக்கிரமங்களை, அட்டூழியங்களை, பரப்பிடும் மூடநம்பிக்கைகளை செயல்களை அவர்களின் வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து அச்சுறுத்தலுக்கோ எச்சரிக்கைகளுக்கோ பணிய மறுத்து உள்ளம் குமுறி மூடநம்பிக்கைகளுக்கு எதிராகக் குரல் எழுப்பி

“சுருதி ஸ்மிருதி இதிஹாஸ”, “புராண மீமாம்ஸாத்வாய ஸுத்ர விஷாரத்”,“வேதார்த்த ரத்னாகர வேதவாஸஸ்பதி”, “மஹோ பாத்யாய”, “மகா மஹோ பாத்யாய”,
“டாக்டர்”
அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்

தனது 100ஆவது வயதில்
“உண்மையைத் தேடும் தமிழ் அறிவுலகத்துக்கு சமர்ப்பணம்”என்ற முகமனோடு எழுதியுள்ள

“இந்து மதம் எங்கே போகிறது? ”

இங்கு ப‌திவு செய்ய‌ப்பட்டுள்ள‌து.
********************

அவரது 100வது வயது வரையில்
சுருதி ஸ்மிருதி இதிஹாஸ” , “புராண மீமாம்ஸாத்வாய ஸுத்ர விஷாரத்” ,“வேதார்த்த ரத்னாகர வேதவாஸஸ்பதி”, “மஹோ பாத்யாய”, “மகா மஹோ பாத்யாய” “டாக்டர்” “
அக்னிஹோத்திரம் ராமானுஜ‌ தாத்தாச்சாரியார்என்று நீட்டி மூழக்கி போற்றிப் புகழ்ந்தார்கள். இந்துமத சடங்குகளையும் அதில் அடங்கியுள்ள மூட நம்பிக்கைகளையும் அவர் அம்பலப்படுத்தியதால் இப்போது அவர் நினைவே அவர்களுக்கு வேம்பாகக் கசக்கிறது.



 

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply