பொலிஸ் உத்தியோகத்தர் வீட்டில் அஞ்சலிக்காக உடல் – நெகிழ வைக்கும் காட்சிகள்
உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் உடல் அவரது சொந்த இடமான சிலாபத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பெருந்திரளான மக்கள் மற்றும் வடமாகாண நீதிபதிகள், அரச உத்தியோகத்தர்கள் போன்றோர் அஞ்சலி செலுத்தினர்.
யாழ்ப்பாணம் நல்லூர் பின்வீதியில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரான 51 வயதுடைய ஹேமரத்ன உயிரிழந்தார்.
உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் உடலை அவரது உறவினர்களிடம் கையளிப்பதற்காக வடமாகாண நீதிபதிகள் சிலாபத்துக்குச் சென்றிருந்தனர். தற்போது பாதுகாப்பு உத்தியோகத்தரின் உடலை அவரது உறவினர்களிடம் கையளித்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.