கொக்குளாய் கடற்கரையில் உள்ளூர் மீனவர்களுக்கு வழங்கப்பட்ட நிலம் தொடர்பாக அதிபர் மற்றும் கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் சட்டமா அதிபரால் கொழும்புக்கு அழைப்பு

 கொக்குளாயில் உள்ளூர் மீனவர்களுக்கு  வழங்கப்பட்ட நிலம் தொடர்பாக அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்  சட்டமா அதிபரால் கொழும்புக்கு அழைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் கடற்கரையில் உள்ளூர் மீனவர்களின் பயன்பாட்டிற்காக வாடி அமைக்க பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்ட நிலம் தொடர்பான சர்ச்சைக்கு தீர்வை எட்டுவதற்காக மாவட்ட அரச அதிபர் மற்றும் கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் ஆகியோரை சட்டமா அதிபர் அழைத்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் கடற்கரையில் உள்ளூர் மீனவர்களின் பயன்பாட்டிற்காக வாடி அமைக்க பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்ட நிலம்
தென்னிலங்கை மீனவர்களிற்கான கரைவலைப்பாட்டுப் பகுதிக்குள் உள் அடங்குவதனால் குறித்த வாடியினை தடை செய்ய வேண்டும் என 3 தென்னிலங்கை மீனவர்களின் சார்பில் நீரியல் வளத் திணைக்களம் கடந்த ஆண்டு யூலை மாதம் முல்லைத்தீவு நீதி மன்றினில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

இதனால் உள்ளூர் மீனவர்கள் அப்பகுதியில் தொழில் புரிய இடைக்காலத் தடை விதிக்கப்பட்டதோடு வழக்கும் தொடர்ந்தும் இடம்பெற்றது. இதன் பிரகாரம் கடந்த மார்ச் மாதம் 14ம் திகதிய வழக்கின்போது வாடி அமைப்பிற்காக வழங்கப்பட்ட பிரதேசம் தென்னிலங்கை மீனவர்களின் கரைவலைப் பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட பகுதிக்குள் அடங்கவில்லை என பிரதேச செயலாளரினால் அரச நில அளவையாளரின் அளவீட்டு ஆவணம் ஊடாக முல்லைத்தீவு நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இவ்வாறு சம்ப்பிக்கப்பட்ட ஆவணத்தில் வாடி அமைந்துள்ள பகுதி தென்னிலங்கை மீனவர்களிற்கு வழங்கப்பட்ட பகுதியில் இருந்து 375 மீற்றருக்கும் அப்லாலேயே உள்ளது என பிரதேச செயலாளரினால் அரச நில அளவையாளர் மூலம் மேற்கொண்ட அளவீட்டின் ஆவணத்தில் நில அளவைத் திணைக்கள அதிகாரியும் ஒப்பமிட்டிருந்தார்.
இருப்பினும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் பிரதேச செயலாளரினால் மன்றில் சமர்ப்பித்த நில் அளவை வரைபடத்தினை இரத்து செய்து அப்பகுதியினை கரைவலைப்பாடு தொழில் புரிபவர்களிடமே வழங்கப்பட வேண்டும் என கோரியிருந்தனர்.

இதனால் குறித்த பகுதியினை சகல தரப்பின் பிரசன்னத்துடன் மீண்டும் அளவை செய்யுமாறு நீதிபதி கட்டளையிட்டிருந்தார். இதன் பிரகாரம் நில அளவீடு இடம்பெற்ற சமயமும் தென்னிலங்கை மீனவர்கள் குறுக்கீடு செய்தனர். அத்துடன் குறித்த பகுதியில் தொழில் புரிவதற்கு உள்ளூர் படகுத் மொழிலாளர்களுடன் தென்னிலங்கை கரைவலைத் தொழிலாளர்களிற்கும் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவிட்டது.

இவ்வாறு இரு தரப்பிற்கும் தடை விதிக்கப்பட்டபோதும் தென்னிலங்கை மீனவர்கள் தொடர்ந்தும் சட்டத்தை மீறி கரவலை இழுத்த வண்ணமே உள்ளனர்.
உள்ளூர் மீனவர்களின் மீன்பிடிக்கு அனுமதிக்குமாறும் கோரப்பட்ட நிலையில் இன்றுவரை தடை உத்தரவு தொடர்கின்றது.

இதனையடுத்து சகல தரப்பு பிரசன்னத்துடன் மீண்டும் அளவீடு செய்ய மேற்கொண்ட முயற்சியில் ஏற்பட்ட குறுக்கீடுகள் இடையூறுகள் காரணமாக உள்ளூர் மீனவர்களும் பிரதேச செயலகப் படியாளர்களும் அவ்விடத்தில் இருந்து வெளியேறிய நிலையில் நீரியல்வளத் திணைக்களத்தின் சார்பிலான பிரதிநிதிகள் மட்டும் அளவீட்டினை மேற்கொண்டு அதன் வரைபடத்தினை நீதிமன்றில் சமர்ப்பித்திருந்தனர். இவ்வாறு வரைபடத்தினை சமர்ப்லித்த திணைக்கள அதிகாரிகள் அப்பகுதியை கரைவலைப்பாடு தொழிலாளர்களிடமே வழங்குமாறு தொடர்ந.தும் கோரினர்.

இருப்பினும் குறித்த விடயம் தொடர்பில் இறுதி முடிவினை மன்று போரியதன் பெயரில் மேற்படி விடயத்தினை சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசணையை பெறுவதற்காக சம்ப்பித்திருந்த நிலையில் இரு தவணை வழக்குகள் இடம்பெற்று சட்டமா அதிபரின் அறிக்கை கிடைக்காதமையினால் திகதியிடப்பட்டிருந்த்து. இதன் பிரகாரமே தற்போது மாவட்ட அரச அதிபர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோர் எதிர் வரும் வியாழக்கிழமை அழைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த வழக்கு மீண்டும் இதே தினத்தில் மன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

About editor 3047 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply