தொண்டமானாறு கடற்கரை பகுதியில் 56கிலோ கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது
Published on June 10, 2017
தொண்டமானாறு கடற்கரைப் பகுதியில் வைத்து 56கிலோ கேரளா கஞ்சாவை இலங்கை கடற்படையினர் நேற்றிரவு கைப்பற்றி உள்ளனர். கஞ்சாவை கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் அச்சுவேலி, தொண்டமானாறு பகுதிகளை சேர்ந்தவர்களாகும். 25 சிறிய பொதிகளும் இரு பெரிய பொதிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலிருந்து இந்த கஞ்சா கடத்தி வரப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தியா தமிழ்நாட்டிலிருந்து பெருந்தொகையான கஞ்சா தொண்டமானாறு தொடக்கம் சுண்டிக்குளம் வரையான கடற்பரப்பு ஊடாக கடத்தி வரப்பட்டு இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கு அனுப்பபடுகிறது.
யுத்தம் முடிந்த பின்னர் அமைதியான சூழலை பயன்படுத்தி தமிழ்நாட்டில் உள்ளவர்களும் இலங்கையில் உள்ளவர்களும் இணைந்து இந்த சட்டவிரோத செயல்களை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மீனவர்கள் என்ற போர்வையில் இந்த சட்டவிரோத செயல்கள் நடைபெறுகின்றன.
https://thinakkathir.com/?p=68488
Leave a Reply
You must be logged in to post a comment.