No Picture

தமிழ்நாட்டில் எல்லா ஜாதியினரும் அர்ச்சகராக தடைக்கல்லாக இருப்பது யார்?

October 15, 2017 VELUPPILLAI 0

தமிழ்நாட்டில் எல்லா ஜாதியினரும் அர்ச்சகராக தடைக்கல்லாக இருப்பது யார்? கேரள மாநிலத்தில் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் தனது கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் 6 தலித்துகள் உள்பட பிராமணரல்லாத 36 பேரை அர்ச்சகர்கள் பணிக்கு நியமித்திருக்கும் […]

No Picture

புலம் பெயர் நாடுகளில் தமிழ் வாழுமா? அல்லது மெல்லச் செத்துவிடுமா?

October 8, 2017 VELUPPILLAI 0

புலம் பெயர் நாடுகளில் தமிழ்வாழுமா?  அல்லது மெல்லச் செத்துவிடுமா? நக்கீரன்  தங்கவேலு (தலைவர்,  தமிழ்ப் படைப்பாளிகள் கழகம், கனடா) மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பிறந்து, வளர்ந்து, மறைந்தவர். ஆங்கிலேயர்ஆட்சியில் ஆங்கிலமொழி கோலோச்சியது. அதற்கு அடுத்ததாக சமற்கிருதம் போற்றப்பட்டது. தமிழ் ஆதீனங்களிலும்தமிழ்ப் பண்டிதர்களது வீடுகளிலும் உயிர் வாழ்ந்து கொண்டிருந்தது. பாரதியார் ஆங்கிலம், சமற்கிருதம் உடபட பல மொழிகள் படித்தவர். ஆனால் பாரதியாரது காதல் தமிழ்மொழி மீதுதான்இருந்தது. அதனை அவர் பல பாடல்களில் வெளிக்கொணர்ந்திருக்கிறார். நாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்  வானம் அளந்ததனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே வானம் அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழியவே என்று பிறந்தனள்  என்றறியாத  இயல்பினள் எனத்  தமிழை ஏற்றிப் போற்றிப் பாடிய பாரதியாருக்கு உள்ளுர ஓர் அச்சம் இருந்தது.  எதிர்காலத்தில் தமிழ்  மெல்லச்சாகும்   மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்  என்ற அச்சம்  அவரிடம் இருந்தது. அதனைத் தமிழ்த் தாய் சொல்வது போல் பாரதியார்  பாடியிருக்கிறார். புத்தம் புதிய கலைகள் – பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் மெத்த வளருது மேற்கே – அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை சொல்லவும் கூடுவதில்லை – அவை சொல்லும் திறமை தமிழ் மொழிக்கில்லை என்ற கருத்து பாரதியார் காலத்தில் உரம் பெற்றிருந்தது.   இன்றும்  அப்படியான கருத்து  ஆங்கிலம் கற்ற  பல தமிழ்அறிவாளிகள், கல்விமான்கள் இடையே உள்ளது. இன்று  உலகில் வாழுகின்ற 600  கோடி மக்கள்  மொத்தம் 6,000  மொழிகளைப் பேசுகின்றார்கள் எனக் கூறப்படுகிறது. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த 6,000  மொழிகளிலே வெறுமனே 600  மொழிகள் மட்டுமே மிஞ்சியிருக்குமாம். எஞ்சிய 5,400  மொழிகளும் அழிந்து விடும் என்று மொழியியலாளர்கள் எதிர்கூறுகிறார்கள்.  மேலும் இன்றைக்குப்பேசப்படுகின்ற 6,000 மொழிகளில் 3,000  மொழிகளை 1,000  க்கும் குறைவானவர்களே பேசுகின்றார்கள். ஏறக்குறைய1,500 மொழிகளை 100 பேர் வரையிலானவர்களே பேசுகிறார்கள்.  அய்ந்நூறு மொழிகளை வெறும் 10 துப் பேர்தான்பேசுகிறார்கள். ஒரு மொழி அழிவதற்கான முக்கிய காரணங்களை சமூகவியலாளர்கள் பட்டியல் போட்டிருக்கிறார்கள். (அ) பிற மொழி ஊடுருவல் மற்றும்  அதன் ஆதிக்கம். (ஆ) வட்டாரப்  பேச்சு வழக்குகள் தனி மொழிகளாக உருவாவது. எடுத்துக்காட்டு  மலையாள மொழி. (இ) தாய்மொழிக்குப் பதில் வேற்றுமொழி கற்கை மொழியாக, முதல்மொழியாக  மாறிவிடுவது. (ஈ)  […]

No Picture

மல்லாவியில் பண்டாரவன்னியன் சிலை திறப்பு: வரலாற்றுப்பதிவை ஆரம்பித்தார் வன்னி எம்.பி.சி.சிவமோகன்

September 29, 2017 VELUPPILLAI 0

மல்லாவியில் பண்டாரவன்னியன் சிலை திறப்பு: வரலாற்றுப்பதிவை ஆரம்பித்தார் வன்னி எம்.பி.சி.சிவமோகன் January 2, 2017 335 Views மல்லாவியில் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகனின் பாராளுமன்ற நிதியில் அமைக்கப்பட்ட பண்டாரவன்னியன் சிலை தொடர்பில் நேற்றுமுதல் கருத்துமுரண்பாடுகள் ஏற்பட்டிருந்தது. […]

No Picture

மட்டக்களப்பில் இஸ்லாமிய இளைஞர்களால் சீரழியும்  தமிழ்ப் பெண்கள்! மடக்கிப் பிடித்த பொதுமக்கள்!

September 29, 2017 VELUPPILLAI 0

மட்டக்களப்பில் இஸ்லாமிய இளைஞர்களால் சீரழியும்  தமிழ்ப் பெண்கள்! மடக்கிப் பிடித்த பொதுமக்கள்! http://www.jvpnews.com/srilanka/04/142886      

No Picture

தேரிலே வடத்தை விட்டு செம்பை வைத்து இழுக்கின்றீர்!  

September 26, 2017 VELUPPILLAI 0

குரு – சீடன் தேரிலே வடத்தை விட்டு செம்பை வைத்து இழுக்கின்றீர்!   திருமகள் சீடன் – முள்ளிவாய்க்காலில் அந்த இறுதிநாட்களில் உன் உறவுகள் விட்ட கண்ணீரும் குருதியும் இன்னும் காயவில்லை… பரவாயில்லை..புலத்துத் தெருக்களில் […]

No Picture

திருக்குறள் இந்துத்துவ நூலா? சமண மத கருத்துப் பேழையா?

September 23, 2017 VELUPPILLAI 0

திருக்குறள் இந்துத்துவ நூலா? சமண மத கருத்துப் பேழையா?   கோ பிரின்ஸ் 2007-ஆம் ஆண்டு… நான் பள்ளிப் படிப்பை நிறைவு செய்திருந்த வேளையில், சென்னையில் அரசியல் பிரமுகர் ஒருவர் வீட்டின் மாடியில் நடைபெற்ற […]

No Picture

 சோதிடம் சாத்திரப் பேய்கள் சொல்லும் பொய்! (1-15)

September 22, 2017 VELUPPILLAI 0

 சோதிடம் சாத்திரப் பேய்கள் சொல்லும் பொய்! (1) கடந்த ஆகஸ்ட் 17 ஆம் நாள் (வியாழக்கிழமை) செக் குடியரசின் தலைநகரான பிராக் நகரில் பன்னாட்டு வானியலாளர்கள் மாநாடு இடம்பெற்றது. இந்த மாநாட்டில் உலகளாவிய அளவில் […]