வாழ்கை சுழற்சி – பட்டினத்தார் பாடல்
பிறந்தன இறக்கு மிறந்தன பிறக்கும்
தோன்றின மறையு மறைந்தன தோன்றும்
பெருந்தன சிறுக்குஞ் சிறுத்தன பெருக்கும்
உணர்ந்தன மறக்கு மறந்தன வுணரும்
புணர்ந்தன பிரியும் பிரிந்தன புணரும்
அருந்தின மலமாம் புனைந்தன அழுக்காம்
உவப்பன வெறுப்பாம் வெறுப்பன உவப்பாம்
என்றிவை யனைத்து முணர்ந்தனை யன்றியும் – பட்டினத்தார்
பிறந்த உயிர்கள் அனைத்தும் இறக்கின்றன் இறந்த உயிர்கள் மீண்டும் பிறக்கின்றன.
பெரிய பொருள் சிறிய பொருளாகும் சிறிய பொருள் பெரியவையாகும்.
அறிந்தவை அனைத்தும் மறந்துபோகும் மறந்தவை அனைத்தும் தெரியவரும்.
சேர்ந்தவை அனைத்தும் பிரியும். பிரிந்தவை அனைத்தும் சேரும். உண்டவை அனைத்தும் மலமாம்.
புனைந்த அனைத்தும் அழுக்கு ஏறிவிடுமாம்.
இன்று விரும்புபவை நாளை வெறுக்க தோன்றும் நேற்று வெறுத்தவை இன்று விரும்ப தோன்றும் என்று அனைத்தையும் உணர்ந்து விட்டேன்,
Leave a Reply
You must be logged in to post a comment.