மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திரமோதி தலைமையிலான பாஜகஆட்சிபீடம் ஏறப் போகிறது!

இந்தியாவின் மிகப்பெரிய மக்களாட்சித் தேர்தல் திருவிழா  நாளை ஏப்ரில் 19, 2024 இல் தொடங்குகிறது. இந்தியாவின் 18 ஆவது மக்களவைக்கு  28 மாநிலங்கள், 9 ஒன்றியப் பிரதேசங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் 543 நா.உறுப்பினர்களை  தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள்.  543 நா.உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க இருக்கிறார்கள். தேர்தல் முடிவுகள் யூன்  04, 2024 அன்று அறிவிக்கப்படும்.

தொகுதிகளின் அடிப்படையில், உத்தர பிரதேசத்தில் அதிகபட்சமாக 80 தொகுதிகளும், மகாராஷ்டிராவில் 48, மேற்கு வங்கத்தில் 42, பிகாரில் 40 மற்றும் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளும் உள்ளன. இந்தத்  தேர்தலில்  97 கோடி மக்கள் வாக்களிக்க இருக்கிறார்கள். இதில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 47.15 கோடி. மேலும் 1.82 கோடி வாக்காளர்கள் முதல்முறையாக வாக்களிக்க உள்ளனர். 21 முதல் 30 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் 19.7 கோடி பேர். மேலும் 82 லட்சம் வாக்காளர்கள் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

2024 மக்களவைத் தேர்தலில் 10.5 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும், அதில் 55 இலட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. அதிகாரிகள், ஊழியர்கள், காவலர்கள் என 1.5 கோடி பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இந்தத் தேர்தல், பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணிக்கும் (NDA) மதசார்பற்ற இந்தியா கூட்டணிக்கும் இடையிலான போட்டியாகத் தான் பார்க்கப்படுகிறது. தேசிய சனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக நரேந்திர மோதியின் தலைமையில் தேர்தலைச் சந்திக்கிறது.  தேசியக் கட்சிகளில், பகுசன் சமாஜ் கட்சியைத் தவிர, அனைத்துக் கட்சிகளும் ஏதோ ஒரு கூட்டணியில் உறுப்பு வகிக்கின்றன. மேற்கு வங்காளத்தில் முதலமைச்சர் மும்தா பானர்ஜி தலைமை வகிக்கும்  அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.

பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய சனநாயக கூட்டணியில் பிஏ சங்கமாவின் தேசிய மக்கள் கட்சி, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் என்சிபி, ஜெயந்த் சவுத்ரியின் இராஷ்ட்ரிய லோக் தளம் மற்றும் எச்டி தேவகவுடாவின் சனதா தளம் ஆகியவை அடங்கும்.

இந்தியா கூட்டணியில், காங்கிரஸ் தவிர, இடதுசாரிக் கட்சிகள், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி, திமுக, ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, உத்தவ் தாக்கரே குழுவின் சிவசேனா, சரத் பவாரின் என்சிபி, ஆம் ஆத்மி கட்சி உட்பட சுமார் இருபத்து நான்கு கட்சிகள்  சேர்க்கப்பட்டுள்ளன.

Image result for இந்திய தேர்தல் 2024
Image result for இந்திய தேர்தல் 2024
Image result for இந்திய தேர்தல் 2024

தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும்   2024 ஏப்ரல் 19 இல் தேர்தல்  நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம்  6.19 கோடி வாக்காளர்கள்  வாக்களிக்க இருக்கிறார்கள்.  அதில் 3.15 கோடி பெண் வாக்காளர்கள்,  3.04 கோடி ஆண் வாக்காளர்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் 4,32,805 வாக்காளர்கள்  மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் எனக்  குறிக்கப்பட்டுள்ளனர்

தமிழ் நாட்டில் 2019 இல் நடந்த மக்களவைத் தேர்தலில் திமுக அணி 38 இடங்களில் வெற்றிவாகை சூடியது. எஞ்சிய ஒரு தொகுதியில் (தேனீ) அதிமுக வேட்பாளர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.இரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கேஸ் இளங்கோவனை 76,693 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

திமுக கூட்டணி கணிசமான இடங்களை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2019 தேர்தலில், தமிழகத்தில் 39 இடங்களில் 38 இடங்களில் திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி வெற்றி பெற்றது. இம்முறை, பாஜகவுடன் அதிமுக பிரிந்துள்ளதால் திமுக கூட்டணியின் வெற்றி பிரகாசமாக இருக்கிறது.  இருப்பினும், பாஜக தலைமையிலான ஒரு கூட்டணி உட்பட மூன்று கூட்டணிகள் களத்தில் நிற்பதால், தேர்தல் களம்  சூடு பிடித்துள்ளது. வழக்கம் போல வாக்காளர்களுக்கு தித்திக்கும் வாக்குறுதிகள்,  பணம், பரிசுப் பொருட்கள்  தாராளமாக வழங்கப்பட்டுள்ளன.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தமிழ்நாட்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் இதுபோல பலமுனைப் போட்டி நிலவுவது ஒன்றும் புதிதல்ல. 1951ல் நடந்த பொதுத் தேர்தலில் துவங்கி, 1991 வரையிலான தேர்தல்களில் 1962, 1967ஆம் ஆண்டு தேர்தல் தவிர்த்த அனைத்து நாடாளுமன்றத் தேர்தல்களிலுமே இரு முனைப் போட்டிதான் நிலவியது. 1962, 1967 ஆகிய தேர்தல்களில் மட்டும் காங்கிரஸ் – திமுக  – இடதுசாரிகள் என மும்முனைப் போட்டி நிலவியது.

ஆனால், 1991க்குப் பிறகு தமிழ்நாட்டில் கட்சிகள் உடைந்ததால், புதிய கட்சிகள் துவங்கப்படுவதால் காட்சிகள் மாறின. ஆகவே, 1996ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டில் பலமுனைப் போட்டிதான் நடைபெற்று வருகிறது.

Supporters of India's opposition party, Indian National Congress (INC) during the election campaign in Puducherry on April 15, 2024.

2024 இல்  தமிழ்நாட்டில் நான்குமுனைப் போட்டி நிலவுகிறது.  திமுக தலைமையிலான மதசார்பற்ற இந்தியா அணியில் இந்திய தேசிய காங்கிரஸ் (9) விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (2), மதிமுக(1) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (2), இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்)  கட்சி (2), இந்திய முஸ்லிம் கட்சி (1) கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி (1) திமுக (21)  இடம்பெற்றுள்ளன.

அதிமுக தலைமையிலான அணியில்  புதிய தமிழகம் (1) சமூக சனநாயகக் கட்சி (1)  தேசிய முற்போக்குத் திராவிட கழகம் (5) அதிமுக (32) இடம்பெற்றுள்ளன.

பாரதிய ஜனதா  அணியில் பாட்டாளி மக்கள் கட்சி (10) தமிழ் மாநில காங்கிரஸ் (3)  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (2) தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் (1) புதிய நீதிக் கட்சி (1) இந்திய சனநாயகக் கட்சி (1)  சுயேட்சை ஓ.பன்னீர்செல்வம் (1)சுயேட்சை (1) பாஜக (19) இடம்பெற்றுள்ளன.  நாம் தமிழர் கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் தலா 39 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகின்றன.

அணிமாறுவதில் கைதேர்ந்த மருத்துவர் இராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சி இம்முறை அதிமுக கட்சியை கைகழுவி விட்டு பாஜக இல் சேர்ந்து கொண்டுள்ளது. இது பலரது புருவத்தை உயர வைத்துள்ளது. போதாக்குறைக்கு தனது உறவினர் யாரையும்  கட்சியில்  சேர்க்க மாட்டேன் சேர்த்தால் என்னை முச்சந்தியில் வைத்து சவுக்கால் அடியுங்கள் என்று முழக்கமிட்ட மருத்துவர் இராமதாஸ் தனது மருமகள்  சவுமியா அன்புமணியை வன்னியர் செறிந்து வாழும் தர்மபுரியில் வேட்பாளாராக நிறுத்தியுள்ளார். பாஜக மூன்றாம் முறையாக ஆட்சியைப் பிடித்தால் தனது மகன் அல்லது மருமகளுக்கு  ஓர் அமைச்சர் பதவியாவது கிடைக்கும் என மருத்துவர் இராமதாஸ் கணக்குப்  போடுவதாகத் தெரிகிறது. சாதிக்கணக்கு எடுக்கப்பட வேண்டும் சாதியடிப்படையில் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக் குரல் கொடுத்து வந்த மருத்துவர் இராமதாஸ் இப்போது இட ஓதுக்கீட்டின் பரம வைரியான பாஜக உடன் கைகோர்த்திருப்பது சந்தப்பவாத அரசியல் என விமர்ச்சிக்கப்படுகிறது.

நான்குமுனைப் போட்டி என்றாலும் தமிழ்நாட்டில் மூன்றுமுனைப்  போட்டியே நிலவுகிறது. அதிலும் உண்மையான போட்டி திமுக மற்றும்  அதிமுக இடையில்தான். பாஜக தமிழ்நாட்டில் இரண்டொரு தொகுதிகளிலாவது வெற்றிபெற நினைக்கிறது. 2019 இல் நடந்த மக்களவைக்கான போட்டியில் பாஜக எந்தத் தொகுதியிலும் வெற்றிபெறவில்லை. எனவே தமிழ்நாட்டில் தனது கணக்கைத் துவக்க பாஜக துடியாய்த் துடிக்கிறது. இந்தியப் பிரதமர் மோதி 8 முறை தமிழ்நாட்டுக்குத் தேர்தல் பரப்புரை செய்யச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் தமிழ்நாட்டில் மோதி ஒரு இந்துத்துவாதி, இந்தி வெறியர் எனப் பார்க்கப்படுகிறார்.

இந்தத் தேர்தலில் முன்னிலைப்படுத்தும் சிக்கல்களில்  கூட்டாட்சி குறித்த திமுக- இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டணியின் நிலைப்பாடு, சிறுபான்மையினர் மற்றும் தலித் சமூகங்களுக்கு பாஜகவை அச்சுறுத்தலாக சித்தரித்தல் மற்றும் நீட் போன்ற தேர்வுகளில் தமிழ் மாணவர்களுக்கு எதிரான பாரபட்சத்தை விமர்சித்தல், தமிழ்நாட்டுக்கு எந்தவொரு பாரிய பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தாமை, வெள்ளத்தில் தமிழ்நாடு, குறிப்பாக சென்னை புயல் மற்றும் வெள்ளத்தில் மூழ்கியபோது பிரதமர் தமிழ்நாட்டின் பக்கம் தலைகாட்டாதது,  பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு  இழப்பீடு மறுக்கப்பட்டது போன்ற சிக்கல்கள் சுற்றி தேர்தல் பரப்புரையில் திமுக பரப்புரை செய்தது. . ஸ்டாலின் குடும்பத்தினர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், போதைப்பொருள் வர்த்தகம், மாநிலத்தில் மின்சார கட்டண உயர்வு போன்ற  சிக்கல்களை எதிர்க்கட்சிகள் முன்னிலைப்படுத்திய போதும் அது மக்களிடம்  எடுபடவில்லை.

மாறாக தமிழக முதலமைச்சரின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு ரூபா 1,000 கொடுப்பனவு, சென்னை பேருந்துகளில் பெண்களுக்கு  கட்டணமில்லா பயணம், ஆதி திராவிட மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை மத்திய அரசுக்கு இணையாக உயர்த்தியது, அரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு ‘தமிழ் புதல்வன்’ என்ற திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 உதவித்தொகை இப்படி அடித்தட்டு மக்களை சமூக ஏணியில் உயர்த்திவிட நல்ல பல திட்டடங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின்  நடைமுறைப்படுத்தியுள்ளார்.

 “எல்லா சமூகங்களுக்குமான வளர்ச்சி. எல்லா மாவட்டங்களையும் சமூகத்தின் எல்லா பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி. இது தான் திராவிட மாடல். எல்லோரையும் உள்ளடக்கிய இந்த பாணியில் தமிழ்நாடு வளர வேண்டும்,  தொழில்துறை வளர்ச்சி, சமூக மாற்றம், கல்வியில் சாதனை போன்ற எல்லாமும் ஒரே சமயத்தில் நடக்க வேண்டும். வளர்ச்சி என்பது வெறும் பொருளாதார வளர்ச்சியாக மட்டும் இருக்க முடியாது. சமூக முன்னேற்றமும் இருக்க வேண்டும். பொருளாதாரம், கல்வி, சமூகம், சிந்தனை, செயல் ஆகிய ஐந்தும் முன்னேற்றமடைய வேண்டும். அம்மாதிரியான ஒரு வளர்ச்சியைத்தான் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் காண விரும்பினர். அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி” என்று முதலமைச்சர் ஸ்டாலின்  தேர்தல் பரப்புரையின் போது வலியுறுத்தி வந்தார்.

தமிழ்நாட்டைப் பொறுத்தளவில்  திமுக தலைமையிலான இந்தியா  கூட்டணி 51.8 சதவிழுக்காடு  வாக்குகள் பெற்று பாரிய வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. அடுத்தப்படியாக, அதிமுக கூட்டணி 23 விழுக்காடு,  பாஜக தலைமையிலான தேசிய சனநாயகக்  கூட்டணி 19 விழுக்காடு  வாக்குகளையும் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.  நாம் தமிழர் கட்சி உட்பட இதர கட்சிகள் 6.2 விழுக்காடு  வாக்குகளைப் பெறக்கூடும் எனவும் கணிப்புகள் வெளியாகியுள்ளன.  இதைத் தொகுதிகளின் அடிப்படையில் பார்க்கும்போது,  தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில், அனைத்திலும் திமுக கூட்டணியே வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.

Tamil Nadu (39)

Main article: 2024 Indian general election in Tamil Nadu

Polling agencyDate publishedMargin of Error    Lead
INDIAAIADMKNDAOthers
ABP News-CVoterApril 2024[335]±3-5%39000I.N.D.I.A.
India TV-CNXApril 2024[336]26445I.N.D.I.A.
ABP News-CVoterMarch 2024[337]±3-5%39000I.N.D.I.A.
India Today-CVoterFebruary 2024[338]±3-5%39000I.N.D.I.A.
Puthiya Thalaimurai-AptFebruary 2024[339]29-314-64-60-2I.N.D.I.A.
Times NowETGDecember 2023[340]±3%30-363-60-10-2I.N.D.I.A.
India TV-CNXOctober 2023[341]±3%32511I.N.D.I.A

இந்திய அளவில் கருத்துக் கணிப்புக்கள் பின்வருமாறு அமைந்துள்ளன.

Polling agencyDate publishedSample sizeMargin of error   Lead
NDAINDIAOthers
ABP NewsCVoterApril 2024[1]57,566±3–5%37315515NDA
Times Now-ETGApril 2024[39]271,292[40]±3%38411841NDA
India TV-CNXApril 2024[41]179,19039911331NDA
News18March 2024[42]118,616[43]±4%41110527NDA
ABP NewsCVoterMarch 2024[44]41,762±5%36615621NDA
India TV-CNXMarch 2024[45]162,900[46]±3%3789867NDA
Times Now-ETGMarch 2024[47]323,357±3%358–398110–13040–50NDA

இந்தக் கருத்துக் கணிப்புகளின் https://en.wikipedia.org/wiki/Opinion_polling_for_the_2024_Indian_general_election)  அடிப்படையில் மோதி தலைமையிலான தேசிய சனநாயக முன்னணி மூன்றாவது முறையும் ஆட்சியைப் பிடிப்பது உறுதியாகிறது.  இதற்கு முக்கிய காரணம்  விலைவாசி உயர்வு, பணவீக்கம், உரூபாயின் மதிப்பில் சரிவு போன்றவற்ளின் மத்தியிலும் இந்தியாவின் பொருளதாரம் அசுர வளர்ச்சி கண்டுள்ளது என்பதாகும். 

இந்தியாவின் பொருளாதாரம் கொள்வனவு ஆற்றல் சமநிலை அடிப்படையில் 3.363 டிரிலியன் அ.டொலர் என்ற அளவில் உலகில் நான்காவது இடத்தில் இருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விழுக்காடு 7.2 என்ற அளவில் இருக்கின்றது. எனினும் இந்திய மக்கள்தொகை 1,438 மில்லியனுக்கும் (143.8 கோடி)   அதிகமாக இருப்பதால் தனி ஆள் வருவாய் 3100  அ.டொலர்  (இலங்கை அ.டொலர் 3,833) என்ற குறைந்த அளவிலேயே இருக்கிறது.

இந்தியாவின் இந்த பொருளாதார வளர்ச்சியே பிரதமர் மோதியும் அவரது கட்சியும் பொதுமக்கள் மத்தியில் செல்வாக்கோடு – குறிப்பாக இந்தி பேசும் வட மாநிலங்களில் – விளங்கக் காரணமாக இருக்கிறது. தனிப்பட்ட முறையிலும்  இந்தியா கூட்டணியின் தலைவர்களில் ஒருவரான இராசீவ் காந்தியை விட  பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிகளவு செல்வாக்கு காணப்படுகிறது.

இதனால் மோதி அரசு சமூக நீதிக்கு எதிரானது, சாதிமத  அடிப்படையில் சிறுபான்மையருக்கு எதிராகச்  செயற்படுகிறது,  அதிகார முறைகேடுகளில் ஈடுபடுகிறது,  கோடீசுவர முதலீட்டார்களுக்குச்  சலுகைகளை வாரி வழங்குகிறது, எங்கும் எதிலும் ஊழல்  என அடுக்கடுக்காக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள்  பொது மக்கள் மத்தியில் எடுபடாமல் போய்விட்டன.

மொத்தத்தில்  தமிழ்நாட்டில் பாஜக க்கு பின்னடைவு ஏற்பட்டாலும்  மத்தியில்  பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான பாஜக மூன்றாவது முறையும் 300 + பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி பீடம் ஏறப்  போகிறது என உறுதியாகச்  சொல்லலாம். 

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply