நெடுங்கேணி வெடுக்குநாறிமலை பிராமிச் சாசனம் ஒரு பார்வை
மிதுன்
நயினாமடுவிலிருந்து சுமார் மூன்று மைல் தொலை தூரத்தில் வெடுக்குநாறி மலையுள்ளது. நயினாமடுக் குளத்திற்கு இந்த மலையில் இருந்தே தண்ணீர் வருவதாகத் தெரிவிக்கப் படுகின்றன. இந்த மலையானது ஏறத்தாள 300 அடி உயரம் கொண்டதாகக் காணப்படுகின்றது. இந்த மலையைச் சுற்றியுள்ள பகுதியில் ஏராளமான சிறுசிறு மலைக் குன்றுகளும் காணப்படுகின்றது. இதற்கு அண்மையில் நாகர்குளம் எனப்படும் புராதன சிறு குளமும் ஒன்று உள்ளது. மேலும், இந்த மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இலங்கையில் கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த நாகர் இனத்தின் குடியிருப்புகள் இருந்ததற்கான தொல்லியற் சான்றுகள் ஏராளமாகக் கிடைக்கின்றன.
குறிப்பாகக் நாகர்கள் கட்டுமானங்களுக்குப் பயன்படுத்திய “தூண்தாங்கு கல்” அதாவது உருண்டை அல்லது சமச்சீரற்ற கற்களில் சிறு சதுரமாகத் துளையிடப்பட்ட கற்கள் இந்த வெடுக்குநாறி மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமாக உள்ளன. எனவே வெடுக்குநாறி மலைக்கு அருகில் உள்ள நாகர் குளம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படும் நாகர்களின் தொல்லியற் சிதைவுகள் என்பன அப்பகுதியில் நாகர்கள் வாழ்ந்தமைக்குச் சான்று பகிர்கின்றன.
1970 களில் செனரத் பரணவிதான 54 பிராமிக் கல்வெட்டுக்களின் மற்றும் மொழி பெயர்ப்புக்களையும் வெளியிட்டார் அதில் வவுனியா மாவட்டத்தில் நான்கு பிராமிச் சாசனங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார். அதில் ஒன்று வெடுக்குநாறிமலையில் உள்ள பிராமிச் சாசனமும் ஒன்றாகும்.
வெடுக்குநாறி மலையில் உள்ள பிராமி எழுத்துக்கள் தொடர்பாக நோக்குகின்றபோது பொதுவாக இலங்கையின் பிராமிச் சாசன காலம் எனப்படுவது கி.மு 03 ஆம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி 04 ஆம் நூற்றாண்டு இடைப்பட்ட காலப்பகுதியாகும். இக்காலப்பகுதியில் பிராமி வரிவடிவத்தினைப் பயன்படுத்தி பிராகித மொழியில் கல்வெட்டு மட்பாண்டங்கள். குகைகள், நாணயங்கள், முத்திரைகள் போன்றவற்றில் எழுதப்பட்டதாகும்.
அவ்வாறான சாசனங்களில் தமிழ் மொழிக்குரிய சிறப்பெழுத்துக்களான ற, ன, ழ, ள என்பவற்றின் பயன்பாடும். தமிழக பிராமியின் சிறப்பெழுத்துக்களான ஈ. ம போன்ற எழுத்துக்களும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. அதனடிப்படையில் வவுனியா பெரிய புளியங்குளம், அம்பாறை குடுவில், திருகோணமலை சேருவில, வெல்கம் விகாரைக் கல்வெட்டு போன்றவை தமிழர்கள் பற்றிக் கூறுகின்ற பிராமிக் கல்வெட்டுக்களாகும். இலங்கையில் தமிழர்கள் பற்றிக் குறிப்பிடும் ஐந்து கல்வெட்டுக்களில் அனுராதபுரத்தில் உள்ள ஒன்று தவிர மீதி நான்கு கல்வெட்டுக்களும் தமிழர்களின் பூர்வீக இடங்களான வட, கிழக்கு இலங்கையில் உள்ளன. எனவே கி.மு 03 ஆம் நூற்றாண்டிலிருந்தே தமிழர்கள் ஒரு இனமாகவும், தமிழ் மொழியில் பரீட்சாத்தியமுடையவர்களாகவும் இருந்துள்ளனர்.
வெடுக்குநாறி மலையில் நீர்வடி விளிம்புகள் உள்ள இரண்டு குகைகளும், நீர்வடி விளிம்புகள் உள்ள இரண்டு சாய்வான மலைக்குன்றுகளும் காணப்படுகின்றன. இவற்றில் இரண்டு குகைப்பகுதியில் நீர்வடி விளிம்பிற்கு சற்று கீழ் பகுதியில் பிராமி எழுத்துக்கள் காணப்படுகின்றன. அவை தற்போது சேதமடைந்த நிலையில் காணப் படுகின்றது. அவ்வெழுத்துக்கள் கி.பி 02ஆம் நூற்றாண்டிற்கும் கி.மு 01 ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட பிராமி எழுத்துக்களாகும். இதில் தமிழகப் பிராமிக்குரிய சிறப்பெழுத்துக்களின் பயன்பாடுகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
வெடுக்குநாறி மலையில் இரண்டு சாசனங்கள் காணப்படுகின்றன. அதில் ஒரு சாசனத்தின் பெரும்பாலான பகுதிகள் சிதைவடைந்துள்ளன. மற்றைய சாசனம் நல்ல நிலையில் உள்ளது. இதில் ஒரு சாசனத்தில் “மகா சமுதஹு” என்ற வசனம் தெளிவாக உள்ளது. இப்பெயரானது தென்னிந்திய வணிகக்குழு ஒன்றின் பெயராகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் அழகன்குளம் என்னுமிடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் பானை ஓடு ஒன்றில் “சமுத”, “சமுதஹு என்ற இரண்டு பெயர்கள் காணப் படுகின்றமை குறிப்பிடத்தக்கது(புஷ்பரட்ணம் 2017).
—————————————————————————————————————
ஊடக அறிவித்தல் மார்ச் 19, 2024
தமிழ் கலாசார இனவழிப்புக்காக பெளத்தமயமாக்கலை ஆயுதமாக்குதல்!!
தமிழர் தாயகத்தில் பெளத்தமயமாக்கலை முன்னெடுக்க உதவ வேண்டாம்
இந்துக்களின் சிறப்பு மிக்க புனித நாளான மகா சிவராத்திரியன்று வவுனியா மாவட்டத்திலுள்ள வெடுக்குநாரி இந்து ஆலயத்தில் தமிழ்ப் பக்தர்கள் மீது சிறீலங்கா பொலிஸ் வன்முறையை இம்மாதம் எட்டாம் திகதி கட்டவிழ்த்து விட்டுள்ளது. ஆலயம் அமைந்துள்ள வடகிழக்கானது வரலாற்று ரீதியாக இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களான தமிழர்களின் தாயக பிரதேசம் ஆகும். சிறீலங்கா பொலிஸானது எட்டுப் பேரைக் கைது செய்துள்ளது
தலைமுறைகளாக தமிழ்ப் பக்தர்களின் வழிபாட்டிடமாக வெடுக்குநாறி இந்து ஆலயம் இருந்து வருகின்றது. சிறீலங்கா தேசத்தின் நடவடிக்கையானது அடிப்படை உரிமையொன்றான இந்துக்களின் வழிபாடு செய்யும் உரிமையை மிக மோசமாக மீறுகிறது. “பக்தர்களின் கைதை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வன்மையாக கண்டிக்கிறது. பெளத்தத்த மதத்தை பலப்படுத்துவதற்காக சிறீலங்காவுக்கு வழங்கப்பட்ட எந்தவொரு நிதியும் இந்து மதத்தையும் , ஏனைய மதங்களையும் நலிவற்றத்தாக்குவதற்கு பயன்படுத்தப்படக்கூடாது என உறுதிமொழி வழங்குமாறு இந்திய அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம்” என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
தொல்லியல் அடையாளங்களை பாதுகாத்தல் என்ற போர்வையின் கீழ் தமிழ் அடையாளங்களை அழித்தலில் யுத்தத்தின் பின்னர் சிறீலங்கா அரசானது களமிறங்கியுள்ளது. தொல்லியல் சட்டமானது எந்தவொரு வரலாறு, சமூக மற்றும விஞ்ஞான ஆராய்ச்சி இல்லாமல் எந்தவொரு இடத்தையும் தொல்லியல் தளமாகப் பிரகடனப்படுத்த தொல்லியலுக்கு பொறுப்பாகவுள்ள அமைச்சருக்கு அதிகாரத்தை வழங்குகிறது. வரலாற்று ரீதியிலான தமிழர் தாயகமான சிறீலங்காவின் வடகிழக்கு பகுதியில் ஏறத்தாழ 1,500 இடங்களை பெளத்த இடங்களாக அடையாளப்படுத்த சிங்கள பெளத்த பேரினவாதம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. தமிழர் தாயகத்தில் 1970களில் இவ்வாறான ஏறத்தாழ 2,000 நிலையங்களை அடையாளங்காண சிங்கள பேரினவாதி அமைச்சர் சிரில் மத்தியூ திட்டமிட்டிருந்ததை நாங்கள் ஞாபகப்படுத்த விரும்புகிறோம்.
தமிழர் பகுதிகளில் குடியேற்றத்தை மேற்கொள்ள, தமிழ் மரபை, தமிழ் அடையாளத்தை அழித்து கலாசார இனவழிப்பை மேற்கொள்ள பெளத்த இடங்களை ஆய்தமாக்க சிங்கள பெளத்த பேரினவாதம் பாவிக்கிறது. பெளத்த இடத்தை அடையாளப்படுத்தல், காப்பாளரொருவராக சிங்களப் பிக்கு ஒருவரை நியமித்தல், இடத்தைப் பாதுகாப்பதற்கு சிங்கள இராணுவத்தை தரையிறக்கல் தொடர்ந்து சிங்கள விவசாயிகள் குடியேறுதல் என்பன சிறீலங்கா அரசால் மேற்கொள்ளப்படும் நிகழ்ச்சி நிரல் ஆகும். இந்த நிகழ்ச்சி நிரலே அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள குருந்தூர்மலையிலும் நிறைவேற்றப்பட்டிருந்தது.
பெளத்தத்தை முன்னெடுப்பதற்கு சிறீலங்காவுக்கு 15 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை கடந்தாண்டு நவம்பரில் இந்திய அரசாங்கம் நன்கொடையாக வழங்கியிருந்தது. 1987 இந்திய – சிறீலங்கா ஒப்பந்தத்தில் அங்கீகரிக்கப்பட்ட தமிழர் தாயகத்தில் “பெளத்த தடங்களை அடையாளங்காண” அல்லது மீளமைப்பதற்கு இந்திய அரசாங்கத்தின் நன்கொடையானது பயன்படுத்தப்படமாட்டாதென உறுதிப்படுத்தும்படி இந்திய அரசாங்கத்தை நாங்கள் வேண்டுகிறோம்.
சிறீலங்காவின் வடகிழக்கு பகுதி சிங்கள மயமாக்கலைத் தடுப்பது அறஞ்சார் கட்டாயம் மட்டுமின்றி, இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்குக் கட்டாயமும் ஆகும்.
பிரதமர் பணிமனை,
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.
pmo@tgte.org
Minister of Media,
TGTE,
416-830-4305
media.team@tgte.org
—————————————————————————————————————–
2024.03.12.
My No.: MP/JF/KN/Si.Sh/Gen/2024
His Excellency.Shri Narenthira Modi.
Prime Minister of India,
Prime Minister’s Secretariat,
South Block, New Delhi,
India.
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நிகழ்த்தப்பட்ட பொலிஸாரின் அத்துமீறல்கள்.
வவுனியா மாவட்டம், நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவின் ஒலுமடு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் 3000 ஆண்டுகால பழமையுடையது என்பதையும் அப்பகுதியைச்
சூழ தமிழர்களான நாகர் இனத்தவர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதையும் வரலாற்று ஆய்வாளர்கள்
எண்பித்துள்ளனர்.
பழமையும்ää பாரம்பரிய வரலாறும் மிக்க வெடுக்குநாறிமலையின் அடிவாரத்தில் தமிழ் பிராமியக் கல்வெட்டுகள்
மற்றும் வட்டெழுத்துகள் போன்றவற்றைக் காணமுடியும். இம்மலையின் உச்சியில் ஆதிலிங்கேஸ்வரர் எனும்
சிவனுடைய புராதன ஆலயம் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட ஐந்து தலைமுறைகளைக் கடந்தும் அப்பிரதேச
மக்கள் இந்த ஆலயத்தை வழிபட்டு வருகிறார்கள். 1988இல் இந்திய அமைதிகாக்கும் படையின் கட்டுப்பாட்டில்
அப்பகுதி இருந்தபோது, இந்திய இராணுவத்தின் துணையுடன் மகா சிவராத்திரி விழா மிகச்சிறப்பாக
அனுஷ்டிக்கப்பட்டிருந்தது. 1990 களின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவுடன் ஒவ்வொரு ஆண்டும்
மகா சிவராத்திரிப் பெருவிழா சிறப்புற நடைபெற்று வந்துள்ளது. 2009ஆம் ஆண்டு போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர்ää 2010ஆம் ஆண்டு அப்பகுதியில் மீளக்குடியேறிய மக்கள் தமது வழமையான பூசை
வழிபாடுகளுடனும்ää மரபார்ந்த வணக்கமுறைகளுடனும் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரரை வழிபட்டு
வந்துள்ளனர்.
இந்நிலையில்ää வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தை கையகப்படுத்தும் கைங்கரியத்தை
மேற்கொண்டுள்ள இலங்கைத் தொல்லியல் திணைக்களத்தோடு இணைந்த பௌத்த துறவிகள் இவ்வாலயத்தின்
மீது தமிழர்களுக்கு இருக்கும் வழிபாட்டுரிமையைப் பறிக்கும் செயற்பாடுகளை 2018 ஆம் ஆண்டிலிருந்து
மேற்கொள்ளத் தொடங்கினர். அதன் தொடர்ச்சியாக, இவ்வாலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்ளத் தடை
விதிக்கக்கோரி B/2086/2019 ஆம் இலக்க வழக்கு 2019ஆம் ஆண்டில் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்டது.
அதன்பின்னர் மீளவும் அதே ஆண்டில் டீஃ2084ஃ19(43094) ஆம் இலக்க வழக்கு பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட
நிலையில் அவ்வழக்கை முன்னிறுத்தி ஆலய பூசகர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டு பின்
பிணையில் விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து குறித்த வழக்கு பொலிஸாரால் கை வாங்கப்பட்டது.
இதன்பின்னர் 2019 இல் தொல்லியல் திணைக்களத்தினரால்ää தொல்பொருட் சட்டத்தின் கீழ் வவுனியா நீதிமன்றில்
யுசுஃ1336ஃ19 ஆம் இலக்க வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அவ்வழக்கு நிலுவையிலுள்ள நிலையில்ää வெடுக்குநாறி
ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் மூலப் பரம்பொருளான சிவலிங்கம் உள்ளிட்ட அத்தனை விக்கிரகங்களும்
அடியோடு பெயர்த்தெறியப்பட்டுள்ளமை கடந்த 2023.03.26 ஆம் திகதி கண்டறியப்பட்டது. குறிப்பாக ஆலயத்தின்
பிரதான விக்கிரகமான ஆதிலிங்கம் அடியோடு பெயர்த்தெடுக்கப்பட்டு அருகிலிருந்த புதருக்குள்
வீசப் பட்டிருந்ததோடு, பிள்ளையார், அம்மன், வைரவர் உள்ளிட்ட தெய்வ விக்கிரகங்களும் பெயர்த் தெடுக்கப்பட்டு காணாமலாக்கப்பட்டிருந்தன.
இதுதொடர்பில் ஆலய அறங்காவலர் சபையினரால் 2023.03.27 இல் தொடரப்பட்ட b/540ஃ2023 ஆம் இலக்க வழக்குத்
தொடர்பில் எவரும் கைதுசெய்யப்படாத நிலையில்ää 2023.04.27 ஆம் திகதிய நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம்,
அப்பிரதேச மக்கள்ää ஆலய பூசகர்ää நாடாளுமன்ற உறுப்பினர்கள்ää இந்துமத அமைப்புகள் இணைந்து கடந்த
2023.04.28 ஆம் திகதி மீளவும் அவ்விடத்தில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபாடியற்றி வருகின்றனர்.
சிவஞானம் சிறீதரன் பா.உ.
2 கடந்த 2024.02.29 ஆம் திகதி குறித்த வழக்கை முன்னிறுத்தி ஆலய அறங்காவலர் சபையினர் சார்பில் தாக்கல்
செய்யப்ப்டட நகர்த்தல் பத்திரம் மூலம் ‘சிவராத்திரி தினத்தன்று பூசை வழிபாடுகளை மேற்கொள்வதற்கும்
மின்பிறப்பாக்கியைப் பயன்படுத்தி மின்குமிழ்கள் அமைத்து மின்னொளியூட்டுவதற்கும்’ நீதிமன்ற அனுமதி
பெறப்பட்டது.
அதற்கமைய மார்ச் 08ம் திகதி சிவராத்திரி தினப் பூசை வழிபாடுகளை சிறப்புற நடாத்தும் நோக்கில் ஆலய பூசகர்
மற்றும் அடியவர்கள் ஒன்றுகூடி ஏற்பாடுகளை மேற்கொண்டபோதுää 2024.03.07ஆம் திகதி மாலை ஆலயத்தின் பூசகர் திரு.தம்பிராசா மதிமுகராசா அவர்களும்ää அவரது இரு உதவியாளர்களும் நெடுங்கேணிப் பொலிசாரால்
கைதுசெய்யப்பட்டு மறுநாள் 08ம் திகதி மாலை 3.00மணிவரை வவுனியா பொலிஸ் நிலையத்தில்
தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.
மறுநாள் சிவராத்திரி தினமான 8ம் திகதி காலையில் பூசைவழிபாடுகளை மேற்கொள்வதற்காக ஆலயத்திற்குச்
செல்ல முயன்ற பொதுமக்களைத் தடுப்பதற்காக 500 ற்கும் மேற்பட்ட கலகம் அடக்கும் பொலிஸார் கண்ணீர்ப்
புகைக் குண்டுகளுடன் அவ்விடத்தில் குவிக்கப்பட்டிருந்தனர். இதன்போது பூசை வழிபாடுகளில் பங்கேற்கச்
சென்ற தவத்திரு.வேலன் சுவாமிகள், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன்இ செல்வராஜா
கஜேந்திரன் மற்றும் 300 இற்கும் அதிகமான பொதுமக்கள் உள்ளிட்டோர் 5 Km தூரம் நடந்து சென்று ஆலயத்தில்
வழிபாடாற்றும் ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
அவர்களின் குடிநீர்த் தேவைக்காகக் கொண்டுவரப்பட்ட தண்ணீர்த் தாங்கி பொலிஸாரால் தடுத்து
நிறுத்தப்பட்டது. பொலிஸாரின் அடாவடிகளால் கட்டுப்பாட்டை இழந்ததை தண்ணீர்த் தாங்கி வாகனம்
விபத்துக்குள்ளாகியதால் அதன் சாரதியான நெடுங்கேணியைச் சேர்ந்த திரு.பாலசுப்பிரமணியம் சஞ்சிவ் (வயது.21)
காயமடைந்து நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்கு வவுனியா
மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
அதேவேளைää குடிநீர்த் தேவையின் பொருட்டு வெடுக்குநாறி மலைக்கு அருகிலுள்ள ஆற்றிலிருந்து நீரைச்
சேகரிக்கச் சென்ற இளைஞர்களைத் தடுத்துநிறுத்திய பொலிஸார்ää அவர்கள் மீது மிலேச்சத்தனமான
தாக்குதலையும் நடாத்தியிருந்தனர். கோயிலுக்கு வரும் பக்தர்களின் தாகம் ஆற்றும் நோக்கில்ää வீதியோர
வீடுகளில் குடியிருக்கும் மக்கள் தமது வீடுகளுக்கு வெளியே வைத்திருந்த குடிநீர் பாத்திரங்களை சப்பாத்துக்
கால்களால் உதைத்துத் தள்ளிய பொலிஸார் பொதுமக்களுடனும் மிகமோசமாக நடந்துகொண்டனர். இதனால்
மாலை 4.00 மணிவரைää கொளுத்தும் வெயிலின் மத்தியில் அங்கிருந்த மக்கள் அனைவரும் குடிநீருக்காக
பரிதவிக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டிருந்தது. மூன்று மணி நேர போராட்டத்தின் பின்னரே, பொலிஸாரால்
தடுத்துவைக்கப்பட்டிருந்த குடிநீர் தாங்கி விடுவிக்கப்பட்டிருந்தது. இதில் நெடுங்கேணி பிரதிப் பொலிஸ்
அத்தியட்சகர் களுவாராய்ச்சி ((Assistant Superintendent of Police) பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஐ.P.அபேவர்த்தன (ழ(Officer In-Charge)) ஆகிய இருவரும் மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொண்டதை அவதானிக்க முடிந்தது.
அதன் பின்னர்ää இரவுநேரப் பூசைகளில் தவத்திரு.வேலன் சுவாமிகள், நாடாறுமன்ற உறுப்பினர் செல்வராஜா
கஜேந்திரன்ää பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தபோது, திடீரென உள்நுழைந்த பெருந் தொகையான பொலிஸார் பூசைப் பொருட்களை சப்பாத்துக் கால்களால் உதைத்தும் மிதித்தும்
அடாவடியாக நடந்துகொண்டதோடு அங்கிருந்தவர்கள் மீதும் தாக்குதல் நடாத்தியிருந்தனர். இதன்போது
ஆலயத்தின் பூசகர் உள்ளிட்ட கீழ்வரும் எட்டுப்பேரையும் வலுக்கட்டாயமாக அரைநிர்வாணமாக்கி கைதுசெய்து,
இன்றுவரை வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்துள்ளனர்.
No Name Age Address TP No
1 Mr.Thampirasa Mathimugarasa 45 Kovil’s Priest, Palamoddai, Olumadu, Nedunkerney –
2 Mr.Thurairasa Thamilchelvan 28 Kovil’s Committee Secretary, Olumadu, Nedunkerney –
3 Mr.Makenthiran Narenthiran 29 Olumadu, Nedunkerney –
4 Mr.Sivam Luxshan 28 Olumadu, Nedunkerney 077 6872 170
5 Mr.Kanthasamy Gowrikanthan 24 Olumadu, Nedunkerney 076 673 7419
6 Mr.Thilakanathan Kinthuyan 28 New Colony, Mankulam –
7 Mr.Rasaratnam Vinayagamoorthy 30 Kanagarayankulam, Vavuniya 077 974 7441
8 Mr.Subramaniyam Thavapalasingam 35 Parisankulam, Kanagarayankulam
3 இலங்கைத் தீவின் தேசிய இனங்களுள் ஒன்றான தமிழினத்தின் பூர்வீக நிலங்கள் மீது தொடரும் ஆக்கிரமிப்பின்
ஆகப்பிந்திய வெளிப்பாடாக இச்சம்பவம் நடந்திருக்கின்றது. இத்தகைய அதிகார நிலைப்பட்ட செயல்கள்
ஏற்கனவே இரு துருவங்களாக உள்ள இலங்கைத் தீவின் இரண்டு தேசிய இனங்களுக்கு இடையிலான முரண் நிலையை மேலும் மேலும் வலுவாக்குவதாகவே அமையும் என்பதில் தாங்களும் கரிசனையோடிருப்பீர்கள்
என எதிர்பார்க்கிறேன்.
எந்தவித குற்றச் செயல்களிலும் ஈடுபடாது உணர்வுநிலைப்பட்ட உந்துதலினால் தமது பூர்வீக மதத்தல மொன்றில் வழிபாடாற்றச் சென்ற நிலையில்ää வலுவான காரணங்களோ நியாயங்களோ இன்றி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ள மேற்படி எட்டுப்பேரையும் உடனடியாக விடுதலை செய்வதற்கும் தமிழர்கள்
மது பூர்வீக நிலங்களிலும் வளங்களிலும் இயல்பாகவும்ää நிம்மதியாகவும் வாழவும் வழிசெய்யுமாறு தங்களைத்
தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
மேற்படி சம்பவங்களின் போது பதிவாகிய புகைப்படங்கள் இணைப்பு.
இங்ஙனம்.
மக்கள் பணியிலுள்ள
சிவஞானம் சிறீதரன்
பாராளுமன்ற உறுப்பினர்
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம்
கிளிநொச்சி.
Leave a Reply
You must be logged in to post a comment.