ஒரு எழுத்தையே முழு பாட்டாக்கி கண்ணதாசன் செய்த அற்புதம்

ஒரு எழுத்தையே முழு பாட்டாக்கி கண்ணதாசன் செய்த அற்புதம்

மார்ச் 15, 2024

கண்ணதாசனும், எம்.எஸ்.விஸ்வநாதனும் திரையில் செய்த அற்புதங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. பாடலுக்கு மெட்டு, மெட்டுக்குப் பாட்டு என இரு கலவைகளாக இயலா… இசையா என ஒருவருக்கொருவர் போட்டி போட்டு காலத்தால் அழிக்க முடியாத பல காவியப் பாடல்களைக் கொடுத்தவர்கள்.

வெறும் ‘காய்‘ என்ற வார்த்தையை வைத்து ‘அத்திக்காய் காய் காய்.. ஆலங்காய்..‘ என்ற பாடலும், தேன் என்ற வார்த்தையை வைத்து ‘பார்த்தேன்.. சிரித்தேன்.. பக்கம் வரத் துடித்தேன்..‘ போன்ற அழகான பாடல்களைக் கொடுத்து மிரளவைத்த கண்ணதாசனுக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் கொடுத்த அடுத்த சாவல் தான் ஒரு எழுத்தில் பாடல் வேண்டும் என்பது.

பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்

பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்
அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன்
பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்
உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன்

கொடித் தேன் இனி எங்கள் குடித் தேன் என
ஒரு படித் தேன் பார்வையில் குடித்தேன்
கொடித் தேன் இனி எங்கள் குடித் தேன் என
ஒரு படித் தேன் பார்வையில் குடித்தேன்
துளித் தேன் சிந்தாமல் களித்தேன் ஒரு
துளித் தேன் சிந்தாமல் களித்தேன் கைகளில்
அணைத்தேன் அழகினை ரசித்தேன்

பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்
உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன்

மலர்த் தேன் போல் நானும் மலர்ந்தேன் உனக்கென
வளர்ந்தேன் பருவத்தில் மணந்தேன்
மலர்த் தேன் போல் நானும் மலர்ந்தேன் உனக்கென
வளர்ந்தேன் பருவத்தில் மணந்தேன்
எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன்
எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன் இனி தேன்
இல்லாதபடி கதை முடித்தேன்

பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்

நிலவுக்கு நிலவு சுகம் பெற நினைத்தேன்
உலகத்தை நான் இன்று மறந்தேன்
உலகத்தை மறந்தேன் உறக்கத்தை மறந்தேன்
உன்னுடன் நான் ஒன்று கலந்தேன்

பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்

1977-ல் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான படம்தான் பட்டினப் பிரவேசம். டெல்லி கணேஷ் முதன் முதலாக இந்தப் படத்தில் தான் அறிமுகமானார். மேலும் இந்தப் படத்தில் சிவசந்திரன், ஜெய்கணேஷ், சரத்பாபு உள்ளிட்ட பலர் நடித்திருப்பர். இந்தப் படத்தில் இடம்பெற்ற ஹிட் பாடல் தான் ‘வான் நிலா.. நிலா.. அல்ல உன் வாலிபம் நிலா‘.

எம்.எஸ்.வி-யிடம் பாலச்சந்தர் சொல்ல எம்.எஸ்.வி. லா லலா என்று டியூன் போட்டிருக்கிறார். இதைக் கேட்ட கண்ணதாசன் என்ன இது லா..ல.லலா என்று போட்டிருக்கீங்க.. தமிழ்ல இத்தனை ‘லா‘-க்கு எங்க போறது என்று கேட்டு கோபத்துடன் எழுந்து போய் விட்டார்.

அதன்பிறகு எம்.எஸ்.வி கண்ணதாசனை இப்போ நீங்க பாட்டு எழுதலன்னா நீங்க கவிஞரே இல்ல என்று அவரை ஏற்றி விட கோபத்தில் கண்ணதாசன் மளமளவென ‘லா‘ எழுத்தில் உதிர்த்த பாடல் தான் இது.

ஆண் : வான் நிலா நிலா அல்ல…
உன் வாலிபம் நிலா…
வான் நிலா நிலா அல்ல…
உன் வாலிபம் நிலா…

ஆண் : தேன் நிலா எனும் நிலா…
என் தேவியின் நிலா…
தேன் நிலா எனும் நிலா…
என் தேவியின் நிலா…

ஆண் : நீ இல்லாத நாள் எல்லாம்…
நான் தேய்ந்த வெண்ணிலா…

ஆண் : வான் நிலா நிலா அல்ல…
உன் வாலிபம் நிலா…
மான் இல்லாத ஊரிலே…
சாயல் கண்ணிலா…

ஆண் : மான் இல்லாத ஊரிலே…
சாயல் கண்ணிலா…
பூ இல்லாத மண்ணிலே…
ஜாடை பெண்ணிலா…

ஆண் : வான் நிலா நிலா அல்ல…
உன் வாலிபம் நிலா…

BGM

ஆண் : தெய்வம் கல்லிலா…
ஒரு தோகையின் சொல்லிலா…
தெய்வம் கல்லிலா…
ஒரு தோகையின் சொல்லிலா…

ஆண் : பொன்னிலா பொட்டிலா…
புன்னகை மொட்டிலா…
அவள் காட்டும் அன்பிலா…

ஆண் : இன்பம் கட்டிலா…
அவள் தேகம் கட்டிலா…
இன்பம் கட்டிலா…
அவள் தேகம் கட்டிலா…

ஆண் : தீதிலா காதலா ஊடலா கூடலா…
அவள் மீட்டும் பன்னிலா…

ஆண் : வான் நிலா நிலா அல்ல…
உன் வாலிபம் நிலா…

ஆண் : வாழ்க்கை வழியிலா…
ஒரு மங்கையின் ஒளியிலா…
வாழ்க்கை வழியிலா…
ஒரு மங்கையின் ஒளியிலா…

ஆண் : ஊரிலா நாட்டிலா…
ஆனந்தம் வீட்டிலா…
அவள் நெஞ்சின் ஏட்டிலா…

ஆண் : சொந்தம் இருளிலா…
ஒரு பூவையின் அருளிலா…
சொந்தம் இருளிலா…
ஒரு பூவையின் அருளிலா…

ஆண் : எண்ணிலா ஆசைகள்…
என்னிலா கொண்டது ஏன்…
அதைச் சொல்வாய் வெண்ணிலா…

ஆண் : வான் நிலா நிலா அல்ல…
உன் வாலிபம் நிலா…

ஆண் : தேன் நிலா எனும் நிலா…
என் தேவியின் நிலா…
நீ இல்லாத நாள் எல்லாம்…
நான் தேய்ந்த வெண்ணிலா…

ஆண் : வான் நிலா நிலா அல்ல…
உன் வாலிபம் நிலா…

என்று பாடல் முழுக்க வெறும் ‘லா‘ என்ற எழுத்தையே பாடலாக்கி அனைவரையும் வியக்க வைத்தார் கண்ணதாசன். இந்தப் பாடல் இன்று வர கிளாசிக் ஹிட் பாடலாகத் திகழ்கிறது. எஸ்.பி. பாலசுப்ரமணியம் இந்தப் பாடலை பாடியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

——————————————————————————————————————

தனக்குத் தானே கண்ணதாசன் எழுதிய பாட்டு

மார்ச் 17, 2024 by John

கவிஞர்கள்  எப்போதுமே கவிதைகள் புனையும் போது சமூகம், பெண்கள்,  காதல், நாட்டு நடப்பு போன்றவற்றைப் பற்றியே அதிகம் எழுதுவர். ஆனால் இவற்றில் கவியரசர் கண்ணதாசன் சற்று வித்தியாசமானவர். தனக்கு ஏற்படும் ஒரு சூழ்நிலை குறித்து தனக்குத் தானே பாடல் இயற்றி அதை திரைப்படங்களில் புகுத்தி வெற்றி காண்பவர்.

கண்ணதாசனுக்கு இப்படி அமைந்த பாடல்கள் ஏராளம். ஒருமுறை காமராசருக்கும், இவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட இருவரும் வெகுநாட்களாகப் பேசாமல் இருந்துள்ளனர். இதற்காக கண்ணதாசன் எழுதிய பாடல்தான், ‘அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி.. சேரும்  நாள் பார்த்துச் சொல்லடி..‘ என்ற பட்டினத்தில் பூதம் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்.

மேலும் தன் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை, “ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு..‘ என்ற ரத்தத் திலகம் படத்தில் எழுதியிருப்பார். மேலும் மனிதர்களின் வாழ்வியலையும், உணர்வுகளையும் கடத்தும் பல தத்துவப் பாடல்களை சினிமா உலகிற்குத் தந்து காலத்தால் அழியாத வரம் பெற்றார் கண்ணதாசன்.

காஞ்சி மஹாபெரியவரையே வியக்க வைத்த நடிகர் திலகம்.. அப்படி ஒரு மேக்கப்

அந்த வகையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1972-ல் வெளியான வசூல் சாதனைத் திரைப்படம்  தான் வசந்த மாளிகை. இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள பாடலான ‘இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்‘ என்ற சோகப் பாடலானது சிவாஜி கணேசன் காதல் தோல்வியில் பாடும் பாடலாக படத்தில் அமைந்திருக்கும்.

ஆனால் அந்தப் பாடல் கண்ணதாசன் தனக்காக எழுதியதாம். மேலும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள மற்றொரு பாடலான ‘கலைமகள் கைப்பொருளே உன்னை கவனிக்க ஆள் இல்லையோ’ என்ற பாடலையும் அவர் திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தாராம். இந்தப் பாடல் பொருளாதார ரீதியாக கண்ணதாசன் நலிவுற்ற தருணத்தில் அவருக்கு அவரே இயற்றிய பாடலாகும்.

ஆனால் கவிஞர் அதையும் திரைப்படங்களில் புகுத்தி சாகாவரம் பெற்ற காவியப் பாடல்களாக மாற்றி அற்புதம் நிகழ்த்தினார். மேலும் இதுபோன்று எம்.எஸ்.விஸ்வநாதனுடன் பல தருணங்களில் சண்டையிட்டு பல ஹிட் பாடல்களை உருவாக்கியிருக்கிறார்.

மேலும் அவர் வீடு வங்கிக் கடனால் ஜப்திக்கு வந்த போது விரக்தியின் உச்சகட்டத்தில் எழுதிய பாடல் தான் ‘சிலர் சிரிப்பார்… சிலர் அழுவார்.. நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன்..‘

—————————————————————————————————————–

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply