இந்த ஒரேஒரு காரணத்திற்காக தி.மு.க. ஆட்சிக்கு வந்தே ஆகவேண்டும்…

*அதற்காக நாம் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்தே தீர வேண்டும்.*

*இது காலத்தின் கட்டாயம்.*

🤐*திமுகவை திட்டிக் கொண்டே இருக்கும் தமிழ்நாட்டு அன்பர்களே…*

😱 *தமிழ் நாடு அரசு வேலைகளில் (TNPSC) பிற மாநிலத்தவர்கள் சேரலாம் என்ற சட்ட மாற்றம் செய்த நாள் நவம்பர் 2016.*

🙀 *மாற்றம் செய்தவர் அப்போதைய முதல்வர் பன்னீர்செல்வம்.*

*அப்போது, ஜெயலலிதா மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தார்.*

*அதிமுக சசிகலா கட்டுப்பாட்டில் இருந்தது.*

*ஜெயலலிதா இறந்த பிறகு தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு மட்டுமல்ல, மாநில அரசுப் பணிகளிலும் வெளி மாநிலத்தவர்கள் 90 சதவீதம் பேர் புகுத்தப்பட்டுள்ளனர்.*

*மோடி உத்தரவின் பேரில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும், எடப்பாடியும், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனும், தமிழினத் துரோகி சசிகலாவின் ஒப்புதலோடு இதை செயல்படுத்தியுள்ளனர்.*

*தமிழகத்தின் வேலைவாய்ப்பில் மட்டுமல்ல, அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் இடங்கள், தமிழக மருத்துவ கல்லூரி இடங்கள் என கல்வித்துறை சார்ந்த அனைத்திலும் பிற மாநில மாணவர்களுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. அதுவும் 90 சதவீதம்.*

*அரசுக் கல்லூரியில் படிப்பு என்பதும், அரசு அலுவலகங்களில் வேலைவாய்ப்பு என்பதும் நம் ஒவ்வொரு குடும்பத்தில் உள்ளவர்களின் உச்சபட்ச கனவு வாழ்க்கை. இதில் மண்ணை அள்ளிப் போட்டிருக்கிறார்கள் மோடி, சசிகலா, எடப்பாடி, பன்னிர்செல்வம், கிரிஜா வைத்தியநாதன் கும்பல்.*

*இதனால் நமக்கு, நமது பிள்ளைகளுக்குக் கிடைக்க வேண்டிய கல்வி நமது பிள்ளைகளுக்குக் கிடைக்காமல் போவதோடு,*

*நம்முடைய வரிப் பணத்தில் வேறு மாநிலத்தவர் பயனடையும் நிலையை எடப்பாடியும், பன்னீர்செல்வமும் உருவாக்கி விட்டனர்.*

*இவற்றை ஸ்டாலின், ராமதாஸ், மணியரசன், வேல்முருகன் என பலர் ஆதாரப்பூர்வமாக தொடர்ந்து எதிர்த்து வந்தார்கள்.*

*ஆனால், சுயநலவாதியாக தமிழக மக்களுக்கு எதிரியாக ராமதாஸ் அதிமுகவோடு சேர்ந்துவிட்டார்.*

*தற்போது, ஸ்டாலின் தன் தேர்தல் அறிக்கையில் தமிழ்நாடு அரசு, மத்திய அரசுப் பணிகளில் தமிழர்கள் மட்டுமே பணியாற்ற முடியும் என்ற சட்ட திருத்தத்தினை மீண்டும் கொண்டு வருவோம் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.*

*அதற்கு, ராகுல் காந்தியும் உறுதியளித்துள்ளார்.*

*எனவே, தமிழக மக்கள் நன்றாக சிந்திக்க வேண்டும்.*

*தங்கள் தலைமுறையின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி பாதுகாக்கப்பட வேண்டும் என்பது குறித்த தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித்து திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.*

*இந்தத் தேர்தலைத் தவற விட்டால் நமது பிள்ளைகளும் அவர்களின் தலைமுறையினரும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பை இழந்து வட நாட்டானிடம் கூலிகளாக சோற்றுக்கும், துணிக்கும் கையேந்தும் நிலை ஏற்படலாம்.*

*நமது சந்ததிகளைக் காக்கும் பொறுப்பு நம்மிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது.*

*அதனை உணர்ந்து பொறுப்புடன் செயல்பட்டு கலைஞரின் மகன் ஸ்டாலின் அவர்கள் கூட்டணிக்கு வாக்களித்து வெற்றியடைய வைப்போம்.*

*எடப்பாடி, ஓ.பி.எஸ், இவர்களால் இழந்த தமிழகத்திற்கான உரிமையை மீட்டெடுப்போம்.*

*இதன் அவசியம் கருதி இதனைத் தொடர்ந்து பதிவு செய்து, தமிழகம் முழுவதும் மக்களின் எண்ணமாக செயல்வடிவம் பெறும் வரையில் தமிழக மக்களிடம் கொண்டு சேர்ப்போம்*

About editor 3188 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply