இலங்கை தமிழரசுக் கட்சி யும் உட்கட்சி பூசல்களும்

திரு சி.வி.கே. சிவஞானம்

இதஅக

வணக்கம்.
“தன்னலம் சுயநலம் பற்றிக் கதைத்தால் எதுவும் கஷ்டம். பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்க்க துணிவு தைரியம் வேண்டும். வெறுமனே கற்பனையில் கற்பிதம் செய்வதுதான் இந்த நிலை. எனவே எதிர்வரும் 23 ஆம் திகதி ஒரு கலந்து உரையாடல் இருக்கிறது. இதில் பேசித் தீர்த்து சுமுகமான தீர்வை ஏற்படுத்தலாம். சரி பிழைகளுக்கப்பால் கட்சி நலன் கருதி அனைவரும் செயற்பட வேண்டியது அவசியம்.

இதேவேளை கட்சிக்குள் போட்டியை உருவாக்கியவர் குகதாசன்தான். கட்சியின் இந்த நிலைக்கு அவருக்கு பெரிய பங்கு உள்ளது. திரு கோணமலையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஏற்றுக் கொள்வதில் எனக்கு உடன்பாடு இருக்கிறது. அதற்கமைய பேசி சுமுகமான தீர்வை ஏற்படுத்தலாம்.”

மேலே இருக்கிற பந்தி காலைமுரசில் நீங்கள் கூட்டிய ஊடக சந்திப்பை அடிப்படையாக வைத்து எஸ்.நிதர்ஷன் எழுதிய செய்தி கட்டுரை வடிவில் வெளிவந்துள்ளது.

அதில் “இதேவேளை கட்சிக்குள் போட்டியை உருவாக்கியவர் குகதாசன்தான். கட்சியின் இந்த நிலைக்கு அவருக்கு பெரிய பங்கு உள்ளது” என நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். இது மொட்டந் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்ட கதையாக இருக்கிறது.

எந்தக் கட்டத்திலும் குகதாசன் பொதுச் செயலாளர் பதவிக்கு தான் போட்டியிடப் போவதாக ஒரு முறைதானும் சொல்லவில்லை. குகதாசனை அறிந்தவர்களுக்குத் தெரியும் அவர் எக்காலத்திலும் எந்தப் பதவிக்கும் அலைகிறவர் இல்லை என்ற உண்மை.

அவரது பெயரையும் இன்னும் இரண்டு மாவட்ட தலைவர்களது பெயர்களை பரிசீலிக்கலாம் என்ற யோசனை சொன்னவர் சுமந்திரன். மும்மூர்த்திகள் ஆன சிறிநேசன், அரியநேத்திரன் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோருடன் சிறிதரன் பேசி அவர்களது இசைவைப் பெற்றபின்னர்தான் குகதாசனின் பெயர் மத்திய குழு தயாரித்த பட்டியலில் இடம் பெற்றது.  அப்படியிருக்க அவர் எங்கே? எப்போது போட்டியை உருவாக்கினார்? எப்படி அவருக்கு அதில் பெரிய பங்கிருந்தது?

மறுபுறம் சிறிநேசன் தரப்பு பொதுச் செயலாளர் பதவிக்கு நாண்டு கொண்டு நின்றது. மத்திய குழுவில் பொதுச் செயலாளர் பதவிக்கு குகதாசன் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஒப்புதல் அளித்து விட்டு, மத்திய குழு முன்மொழிவுகள் பொதுக் குழுவுக்கு வந்த போது அதனை எதிர்த்து ஒரு தேர்தல் நடாத்த வேண்டும் என்று சிறிநேசன்தான் அழுங்குப் பிடி பிடித்தார்.

வேறு வழியில்லாமல் தேர்தல் நடந்து மத்திய குழுவின் தீர்மானம் 104 -108 வாக்குகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட போது மீண்டும் தேர்தல் முறையாக நடக்கவில்லை என்று சிறிநேசன் தரப்பு வாதாடியது. தலைவருக்கான தேர்தலில் பொதுக் குழுவின் முடிவை சுமந்திரன் பெருந்தன்மையோடு ஏற்றுக் கொண்டார். அப்படியான பெருந்தன்மையை – பெரும்பான்மை முடிவை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் சிறிநேசன் தரப்பிடம் மருந்துக்கும் இல்லாது இருந்தது.

எனவே இன்று கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பத்துக்குக் காரணகர்த்தாக்கள் சிறிநேசன், அரியநேத்திரன் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோரே! பெரும்பங்கு வகித்தவர்கள் அவர்கள்தான். குகதாசன் அல்ல.
இதஅக இன் யாப்பில் பிழை இல்லை. உட்கட்சி சனநாயகத்தை நிலை நாட்டவே தலைவர் பதவிக்கு போட்டி ஏற்பட்டால் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தலைவர் தெரிவு செய்யப்படுவார் என்ற விதி இதஅக இன் யாப்பில் சேர்க்கப்பட்டது.

மீண்டம் பிழை யாப்பில் இல்லை. பிழை சனநாயக விழுமியங்களை மதிக்கத் தெரியாதவர்களால் இழைக்கப்பட்டது. கட்சியின் மானம் கந்தலாகியதற்கு அதுதான் முக்கிய காரணம்.
கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் யாரை ஒரு தொகுயில் வேட்பாளராக நிறுத்துவது என்பதை உட்கட்சி தேர்தல் மூலமே முடிவு செய்கிறார்கள்.

அமெரிக்காவில் சனநாயகக் கட்சி அல்லது குடியரசுக் கட்சி சார்பாக யாரை நிறுத்துவது என்பதை தீர்மானிக்க அந்த நாட்டின் 50 மாநிலங்களிலும் உட் கட்சி தேர்தல் நடை பெறுகிறது.

எனவே கட்சி யாப்பில் பிழை இல்லை. பிழை சனநாயக விழுமியங்களை காலில் போட்டு மிதித்தவர்களால் ஏற்பட்டது!
உங்கள் முயற்சி பெற வாழ்த்துக்கள். நன்றி.
நக்கீரன்
கனடா
 

————————————————————————————————————————–

Veluppillai Thangavelu

(1) பிரதான விடயத்தை திசை திருப்ப சுமந்திரன் சதி! ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா எச்சரிக்கை.

(2) திருகோணமலை விடுதியில் சுமந்திரன் நடத்திய அதிமுக்கிய சந்திப்பு.

(3) தமிழரசுக் கட்சியை சுமந்திரனால் காப்பாற்ற முடியுமா?

(4) தமிழ் அரசியலில் புறந்தள்ள வேண்டிய குழப்பகாரனே சுமந்திரன்.

இன்றைய தமிழ்வின் மற்றும் லங்காசிறியில் வந்த கட்டுரை மற்றும் செய்திகளின் தலைப்பே மேற்கண்டவை.

ஐபிசியின் முதலாளி கந்தையா பாஸ்கரன் நடத்தும் ஊடகங்களில் சுமந்திரனைப் பற்றி நாளும் பொழுதும் பொய், புரட்டு, கற்பனை நிறைந்த செய்திகளும் கட்டுரைகளும் வந்து கொண்டிருக்கின்றன.

ஐபிசியின் முதலாளி கந்தையா பாஸ்கரன் என்றால் அதன் நிறைவேற்று அதிகாரி நிராஜ் டேவிட். இவர் படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் யோசேப் பரராசசிங்கம் அவர்களது மருமகன் என்கிறார்கள். இன்னொருவர் தமிழரசு என்ற புனை பெயரில் ஒளிந்திருக்கும் அசோக் என்ற அரைப் பாதிரியார்.

இந்த மூன்று பேரின் தூக்கத்தை சுமந்திரன் கெடுத்துக் கொண்டிருக்கிறார். இவர்கள் ஊடக அறம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கக் கூடியவர்கள்.

சுமந்திரன் ஒரு செல்லாக்காசு அரசியல்வாதி என்றால் அவரை அவர் பாட்டில் விட்டு விடுவதுதானே? அப்படி அவர்கள் விடுவதில்லை. காரணம் சுமந்திரன் ஒரு பெரிய ஆளுமை.

சட்டம் பற்றிய அவரது ஞானம், முன்மொழிப் புலமை, நேர்படப் பேசுதல், பொதுவாழ்வில் தூய்மை, அரசியலில் நேர்மை, இலட்சியத்தில் உறுதி அகியவை அவரது பலம்.

தமிழ் அரசியலில் இருந்து சுமந்திரனை அகற்றிவிட்டால் தங்களது அரசியல் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் என அவரது எதிரிகள் கணக்குப் போடுகிறார்கள்.

2010 இல் ததேகூ யை உடைக்கும் நோக்கோடு கஜேந்திரகுமாரை வெளியில் எடுத்து ஒரு புதுக் கட்சியையும் தொடக்கினார்கள்.

பின்னர் ரெலோ, இபிஎல்ஆர்எவ், புளட் ஆகிய கட்சிகளை ததேகூ இல் இருந்து வெளியேற வைத்தார்கள்.

எஞ்சியிருப்பது இதஅக தான். அதை உடைக்க வேண்டும் என்றால் சுமந்திரனை அந்தக் கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும். அதற்கான காய்நகர்த்தல்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

2017 ஆம் ஆண்டு சுமந்திரனைக் கொல்ல ஒரு முயற்சி யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக நான்கு முன்னாள் போராளிகளை காவல்துறை கைது செய்தது.

வெளிநாடுகளில் செயல்பட்டு வரும் விடுதலை புலிகள் ஆதரவாளர்களின் வேண்டுகோளுக்கு அமைய இந்த கொலைத் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்தது. இனியும் அவரை கொலை செய்ய முயற்சி செய்யக் கூடும்.

விடுதலைப் புலிகளின் எச்சங்கள் சுமந்திரனை இதஅக இல் இருந்து வெளியேற்ற கட்சி யாப்பில் இடம் இருக்கிறதா என இப்போது ஆராயந்து கொண்டிருக்கிறார்கள் என செய்திகள் தெரிவிக்கின்றன.

இப்படியான திருப்பணிகளுக்கு தமிழ்வின், லங்காசிறி, ஐபிசி தொலைக்காட்சி போன்ற ஊடகங்களை பயன்படுத்துகிறார்கள். கட்சிக்குள் இருக்கும் கருப்பு ஆடுகளை படு கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் தலைகீழாக நின்றாலும் அவர்களது கனவு பலிக்காது.

எல்லா உணர்ச்சிகளும்:

10ஆலங்குழாய் சிவராஜா கஜன், Arun Chellappah மற்றும் 8 பேர்


Veluppillai Thangavelu

1 நா  · 

பொது உடன் பகிர்ந்தது

பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய சட்டத்தரணி தவராசா படியாத பாமரன் போல் அநாகரிகமாகப் பேசினார். தனது கிளையைச் சார்ந்த ஒருவரை தரக் குறைவாக விமர்ச்சித்தார். அவரைத் தெரிந்தவர்களுக்கு இது வியப்பாக இருக்காது.

ஆனால் மற்றவர்களுக்கு அவர் யாரை குறிபார்த்துத் தாக்குகிறார் என்பது தெரிந்திருக்கவில்லை. அவரது வாய் சும்மா இருக்காது என்பதை 2020 நடந்த பொதுத் தேர்தல் நேரத்தில் பார்த்தோம்.

தவராசாவை மிஞ்சும் வண்ணம் அம்பாறை மாவட்டத்தில் இருந்து வந்த கோடீசுவரன் பச்சைத் தமிழில் பேசினார். அதாவது கெட்ட வார்த்தைகளில் மேடையில் இருந்த தலைவர்களைப் பார்த்து ஏசினார். அதனை தலைவர் தடுக்கவில்லை. செவி மடுத்துக் கொண்டிருந்தார். தந்தை செல்வநாயகம் அவர்கள் பேசினால் அருகில் உள்ளவர்களுக்குக் கூடக் கேட்காது. ஒரு போதும் குரலை உயர்த்திப் பேசமாட்டார். அவ்வளவு பணிவு. தன்னடக்கம். நல்ல காலம் இந்தக் கண்றாவிக் காட்சிகளைப் பார்க்காமல் அவர் நேரத்தோடு போய்ச் சேர்ந்துவிட்டார்.

சுமந்திரனுக்கு எதிராக காலை, மதியம், மாலை, இரவு எனப் பாராது தவில் அடிக்கிறவர்கள் தவராசா பற்றியோ கோடீஸ்வரன் பற்றியோ விமர்ச்சிக்க மாட்டார்கள்.

கறையான் புற்றெடுக்க பாம்புகள் குடிபுகுதந்த பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. 21-02-2024


Veluppillai Thangavelu

ஐபிசி முதலாளி பாஸ்கரன் போல லைகா முதலாளி சுபாஸ்கரனுக்கும் நாடாளுமன்ற நாற்காலி ஆசை பிடித்துள்ளது. அதற்கு முன்னோடியாக தமிழர் மகாசபை என்ற கட்சியை 150 மில்லியனுக்கு வாங்கியிருக்கிறார். ஆசை யாரைத்தான் விட்டது.

தமிழர்கள் கோடீசுவரர்கள் ஆக உருவாசி இருப்பது தமிழினத்துக்குப் பெருமை. ஆனால் அவர்கள் தங்கள் தொழிலோடு நிற்க வேண்டும். மக்களுக்கு உலர்வுணவுகளை கொடுக்கப்படுவதற்குப் பதில் வீடு, கிணறு, பள்ளிக் கூடங்கள் போன்றவற்றை கட்டிக் கொடுக்க வேண்டும். அதைவிடுத்து இலங்கையில் ஒரு கால் வெளிநாட்டில் இன்னொரு கால் வைத்துக் கொண்டு தங்கள் பணப் பலத்தை நம்பி அரசியலில் ஈடுபடுவதை தமிழ் மக்கள் விரும்ப மாட்டார்கள்.

இதஅக இன் தலைவர் மற்றும் பதவிகளுக்கு ஆன தேர்தலில் லைகாவின் பணம் விளையாடியிருக்கிறது. குறிப்பாக அம்பாரை மாவட்டத்தில். தேர்தல் நடக்கும் போது சுபாஷ்கரன் கொழும்பில் ஒரு 5 நட்சத்திர ஹோட்டலில் முகாம் இட்டு இருந்து ஒரு குறிப்பிட்ட அணிக்கு ஆதரவாக காய் நகர்த்திக் கொண்டிருந்தார். டான் தொலைக் காட்சிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கொடுத்த நேர்காணலில் சட்டத்தரணி கேசவன் சயந்தன், சுபாஷ்கரன் பெயரைக் குறிப்பிடாது மறைமுகமாக அவர் பக்கம் கைகாட்டி இருந்தார்.


Veluppillai Thangavelu

திரு கேசவன் சயந்தன் ஒரு சட்டத்தரணிக்கு இருக்க வேண்டிய மூளையைப் பயன்படுத்திக் கொண்டு கேட்ட கேள்விகளுக்கு சரியாகவும் பொருத்தமாகவும் பதிலளித்தார். நடந்து முடிந்த பொதுக்குழுக் கூட்டத்திற்கு யாப்புக்கு மாறாக முன்னாள் தலைவர் சேனாதிராசா தனது மகன், சம்பந்தி, அகிலன் என 12 பேரை அழைத்து வந்தார்.

அவர்களை ஏற்றுக் கொள்ளாவிட்டால் கூட்டத்தை நடத்தப் போவதில்லை என்றும் உறுதிபடக் கூறினார் சம்பந்தன் ஐயா தனது பங்குக்கு 6 பேரை பொதுக் குழுவுக்குள் திணித்தார். மூலக் கிளையில் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட திருமலை நவத்தின் பேரை ஒருவர் முன்மொழிந்தார் ஆனால் வழிமொழிய ஆளில்லை. ஆனால் சம்பந்தன் ஐயாவின் திருப்பார்வையால் அவர் பொதுக் குழுவுக்குள் நுழைந்தார். இவர்கள்தான் அன்றைய கூட்டத்தை குழப்பினார்கள். யாப்பை அப்பட்டமாக சேனாதிராசாவும் சம்பந்தன் ஐயாவும் மீறினார்கள். அதன் விளைவுதான் நீதிமன்ற வழக்குகள்.

Veluppillai Thangavelu

3 நா  · 

பொது உடன் பகிர்ந்தது

பொது

காசாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் இஸ்ரேலின் தாக்குதலில் 127 பேர் பலி!

காசாவில் உள்ள அனைத்து பணயக்கைதிகளையும் எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதிக்குள் ஹமாஸ் அமைப்பினர் விடுவிக்காவிட்டால் ரஃபாவில் தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் எச்சரித்துள்ளது.

காசாவின் தெற்கு பகுதிக்குள் தங்களது படைகள் எந்த சந்தர்ப்பத்திலும் நுழையக் கூடுமென தெரிவித்துள்ளது.

அத்துடன் காசா மீது இஸ்ரேல் கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொண்ட தாக்குதலில் 127 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதலினால் காசாவின் முக்கிய மருத்துவமனையான நாசர் மருத்து வமனையின் செயற்பாடுகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

————————————————————————————————————————–

About editor 3000 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply