திருக்குறள்

1                      அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

பொருள்:-  எழுத்துகள் (தரும் ஒலியெல்லாம்) அ எழுத்தை (அ என்ற ஒலியை) முதலாகக் கொண்டுள்ளது  போல் உலகம் (கடவுளாகிய) ஆதிபகவானையே முதலாகக் கொண்டுள்ளது

விளக்கம்:- வாயைத் திறந்ததும் நாக்கின் அசைவில்லாமல் வருவது அ என்ற ஒலிதான். அந்த அ என்ற ஒலியைத்தான் நாக்கின் உதவியால் நாம் மற்றய அனைத்து ஒலிகளாகவும்  மாற்றுகின்றோம். அனைத்து எழுத்துக்களின் ஒலிகளும் அ என்ற ஒலியின் உருமாற்றமே. அனைத்து ஒலிகளின் ஆதாரமாக இருப்பது அ என்ற ஒலிதான். அதுபோலவே இந்த உலகமும் அந்த ஆதி சக்தியாகிய பகவானின் உருமாற்றமே – பரிணாமமே. அந்த ஆதி  பகவானே உலகின் ஆதாரமாக உள்ளார்.   

Meaning:- The letter A (sound AH) is the origin of all the letters (all the sounds). (In the same way) This world has that Primordial energy (called GOD) as its origin. 

Explanation:- The sound that comes as we open our mouths is AH. Using that sound, we produce all other sounds with the help of our tongue. All sounds are variations of that original sound AH. AH is the source of all sounds. The same way, this world is the variations of that primordial GOD. God is the core or base for everything.

4                      வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

பொருள்:- (எந்தவொரு பொருளிலோ செயற்பாட்டிலோ) விருப்பமோ (அல்லது) வெறுப்போ இல்லாதவராகிய இறைவனின் திருப்பாதங்களை அடைந்தவர்களுக்கு எப்போதும் துன்பம் இருக்காது.

விளக்கம்:- ஒரு பொருளில் விருப்பு இருந்தால் அது எம்முடன் இருக்கும்போது இன்பமும் இல்லாதபோது துன்பமும் ஏற்படும். அதுபோல் ஒரு பொருளில் வெறுப்பு இருந்தால் அது எம்முடன் இருக்கும்போது துன்பமும் இல்லாவிட்டால்  இன்பமும் அடைவோம். அப்படியே ஒரு செயற்பாடு நாம் விருப்பியபடி நடந்தால் இன்பமும் அப்படி நடக்காவிட்டால் துன்பமும் அடைவோம். நாம் விரும்பாத ஒரு செயற்பாடு நடந்தால் துன்பமும் அது நடக்காவிட்டால் இன்பமும் அடைவோம். ஆகவே மனிதனின் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் காரணம் உலகப் பொருட்களோ அல்லது உலகச் செயற்பாடுகளோ அல்ல. அவற்றில் மனிதனுக்குள்ள விருப்பமோ அல்லது வெறுப்போதான் காரணம். இறைவனுக்கு அந்த விப்போ வெறுப்போ இல்லாததால் அவர் என்றும் இன்பமாகவே இருக்கிறார். நாமும் என்றும் இன்பமாக இருக்கவேண்டுமானால் விருப்பு வெறுப்பற்ற அந்த இறைநிலையை அடையவேண்டும்.

Meaning:– Those who have attained the Lotus feet of God who has no desire or hatred shall never suffer. 

Explanation:-  If we desire an object, we shall be happy if we have that and unhappy if we do not. If we hate something, we shall be unhappy if we have that and happy if we did not have it. If we like an action, we shall be happy if that happens and sad if that does not happen, and vice versa if we do not like an action. So, the reason for all our suffering is our desire and hatred and not any objects or actions outside. If we attain the status of God who has neither desire nor hatred, then we also can be free from all suffering.

11                    வானின் றுலகம் வழங்கி வருதலால்
தானமிழ்த மென்றுணரற் பாற்று.

பொருள்:-  வானிலிருந்து பொழியும் மழையினால்தான் உலகம் இயங்கி வருவதால் அம்மழையானது  (உலகத்துக்கு) அமிர்தம் என்றே உணர்ந்துகொள்ள வேண்டும். 

விளக்கம்:- உயிர்கள் வாழ்வதற்கு உணவு தாவரங்களில் இருந்தோ அல்லது தாவரங்களை உண்டு வாழும் பிராணிகளிலிருந்தோ கிடைக்கின்றது. அத்தாவரங்கள் உயிர்வாழ மழைதான் அவசியம். எனவே இந்த உலகஇயக்கமே அந்த மழையால்தான் அமைவதால் மழையை உலகுக்கான அமிர்தமாகவே உணர்ந்துகொள்ள வேண்டும். 

Meaning:- Realize that the rain is the nectar (in its effect) because the (entire) world is functioning because of rain. 

Explanation:- All lives need food to live and they eat either vegetation or some other lives which live on vegetation. Rain is the primordial factor of vegetation. So, it should be realized that the rain is the real nectar. 

12                           துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை 

பொருள்உண்பவர்களுக்கு சிறப்பான உணவுப்பொருட்களை உற்பத்தியாக்கிக் கொடுப்பதோடு உண்பவர்களுக்கு (தானும்) உணவாக இருப்பதும் மழையாகும்.

விளக்கம்:- உலகில் அனைத்து உயிர்களதும் உணவாக இருப்பது தாவரங்களே; அல்லது அந்தத் தாவரங்களை உண்டு வாழும் பிராணிகளே. தாவரங்கள் எல்லாம் மழையால்த்தான் உயிர் வாழுகின்றன. அப்படி உணவின் உற்பத்திக்கு ஆதாரமாக இருக்கும் மழைநீர் தானும் உணவாகப் பயன்படுகின்றது. நீர் குடிக்காமல் உயிர்கள் வாழ முடியாது. அவ்வாறு  இவ்வுலகம் உயிர்ப்போடு இயங்குவதற்கு மழையே ஆதாரமாகும்.

Meaning:- Rain is not only the food itself but also produces the best food for all those who consume food.

Explanation:- All living beings have plants as their food or some other living beings that live eating plants. All plants live using rainwater. The rain not only gives food to all living beings but also is being used as food. No living beings can survive without drinking water. So, rain is the primordial cause for the survival of the world.   

26                           செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார் 

பொருள்:-  (சாதாரண மக்களால்) செய்யமுடியாத அரிய விடயங்களை செய்வோர் (சாதிப்போர்) தான் பெரியோர்கள் (ஆவர்). (அப்படியான) அரிய விடயங்களைச் செய்ய முடியாதவர்கள்  சிறியோரே. 

விளக்கம்:- உலக மக்கள் பொதுவாக மற்றவர்கள் சிந்திப்பதைப் போலவே தாமும் சிந்தித்து அவர்கள் செய்வதையே தாமும் செய்து இந்தச் சிறிய சாதாரண உலக வாழ்க்கைக்குள் முடங்கி விடுவார்கள். அவர்கள் பெரியோர் அல்லாத சிறியோரே. ஆனால் சற்று உயர்வாக விசாலமாக ஆழமாக தொலைநோக்கோடு சிந்தித்து  அரிய விடயங்களைச் சாதிப்பவர் களைத்தான் பெரியோர்கள்   என்று சொல்லலாம். நாமும் பெரியோர்களாக இருப்பதற்கே முயற்சிக்க வேண்டும்.

Meaning:- Those who accomplish the most rare tasks are the great and those who cannot do so are insignificant.

Explanation:- Generally, people think and work as any others do and shrink their thoughts and activities within a narrow circle in their life. They are all insignificant people. Those who think broader, higher, and deeper uniquely, accomplish great rare tasks and they are the great ones. We also must try to become such great ones.

29                           குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்த லரிது.

பொருள்:- (மெய்யுணர்வு பற்றின்மை துறவு போன்ற) நற்குணங்களாகிய மலையில் நிற்கும் மெய்ஞ்ஞானிகளது கோபம் ஒருகணமேயானாலும் தாங்கிக்கொள்ள முடியாது.

விளக்கம்:- மெய்யுணர்வு உள்ளவர்கள் கோபம் கொள்ளமாட்டார்கள். அப்படிக் கோபம் வந்தாலும் அவர்களின் மெய்யுணர்வு அக்கணமே அதைத் தடுத்துவிடும். அப்படி ஒருகணம்தான்  வந்து போகும் கோபமாயினும் அது அதர்மத்தை எதிர்த்து வலிமையாய் வருவதால் அதைத் தாங்கிக்கொள்ள முடியாது.  

Meaning:- It is impossible to endure the wrath which may be for a moment;  of those who stand on the top of the mountain of good virtues.

Explanation:- Those who have good virtuous qualities will not get angry. Even if they get angry that will be nullified within a moment by their virtuous qualities. But because that momentary anger comes strongly to counter some unrighteousness; it is not possible to bear that.   

30                    அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக  லான்

பொருள்:- அருளாளர்கள் (அந்தணர்) என்போர்; எல்லா உயிர்களுக்கும் செம்மையான கருணை கொண்டவர்களாக வாழுகின்ற அறவாளர் (அறநெறியில் வாழ்பவர்) ஆவர்.  

விளக்கம்:- அன்புதான் மனித உயர்வின் அளவுகோல். அந்த அன்பானது எதிர்பார்ப்பு இல்லாததானால்  சிறப்பானது. அனைத்து உயிர்களிலும் அப்படியான அன்புள்ளவராக இருக்க முடிந்தால் அதுவே உச்சமானது. அப்படியான உயர்ந்த நிலையில், அறநெறியில் வாழ்பவர்களைத்தான் அருளாளர்கள் அல்லது அந்தணர் என்று அழைக்க முடியும்.

Meaning:- Those pious people with extreme compassion for all living beings are the virtuous priests. 

Explanation:- Love is the measuring rod of human excellence. If that is selfless; it is higher. If such love, and compassion are there in all living beings, that is the highest. Only those who have that kind of mental status can be called virtuous priests.

32                    அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.

பொருள்:-  அறத்தைவிடச் சிறந்த செல்வப்பேறு எதுவுமில்லை. அதனைக் கைவிடுவதைக் காட்டிலும் தீமையும் வேறில்லை. 

விளக்கம்:- வாழ்வில் நன்மைகளையே நாம் எதிர்பார்க்கின்றோம். அவற்றைப் பெறுவதற்கு ஒரேவழி எம்மால் முடிந்தவரை பிறருக்கு நன்மைகளை, அதாவது அறத்தைச் செய்வதுதான். அறச்செயல்கள் மட்டுமே நமக்கு நன்மைகளையோ செல்வத்தையோ தரவல்லது. அதனைச் செய்யாதுவிடுவது நமக்கு அழிவையே தருகிறது. ஆகவே அறச்செயல்களைச் செய்துகொண்டே இருக்க வேண்டும்.

Meaning:- Nothing is more rewarding than virtue (righteousness) and nothing is more ruinous than neglecting it. 

Explanation:- We expect only rewards in life. The only way to get them is to follow virtues. It is only virtue that can give us benefits or wealth. If we forget and ignore that we shall be ruined. It is that much essential to follow virtues in our life.  

34                    மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.

பொருள்:-  அறம் என்பதெல்லாமே (முடிவில்) மனத்திலே அழுக்குகள் இல்லாதவனாக ஆவதுதான். அவ்வாறில்லாத செயற்பாடுகள் (வெறும்) ஆரவார (ஆடம்பர) செயற்பாடு போன்றனவே.

விளக்கம்:- அறம் என்றால் பலனை எதிர்பாராமல் பிறரின் துன்பங்களைப் போக்கி ஆறுதல் கொடுப்பதாகும்.  ஆடம்பரம், புகழ் போன்றவற்றுக்கு ஆசைப்படல் அல்லது வேறு நன்மைகளை எதிர்பார்த்தல்  என்பன எமது மன அழுக்குகள் ஆகும். அப்படியான எதிர்பார்ப்புகளோடு செய்தால் அது எமது மனஅழுக்கைப் போக்காது. நாம் அறத்தைச் செய்வதே மனஅழுக்கைப் போக்குவதற்கே. பயன் எதையும் எதிர்பாராமல் செய்வதே அறமாகும்.

Meaning:- Becoming free from mental impurities is all about virtue. All others are just like empty pomp shows. 

Explanation:- Virtue is helping others and comforting them without any expectations in return. Expecting name, fame or any other benefits are our mental impurities. Any actions with those expectations will not be considered a virtue. We must do virtuous activities in order to become pure in our hearts.

35                    அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

பொருள்:- பொறாமை, பேராசை, கோபம், சுடுசொல் ஆகிய இந்த நான்கையும் தவிர்த்துக் கொண்டு செய்யும் செயல்களே அறமாகும்.

விளக்கம்:-   அறமென்பது மன அமைதியோடு அன்போடு பெருந்தன்மையோடு தொண்டு உள்ளத்தோடு செய்வது. செயல் வெளித்தோற்றத்தில் நல்லதாயினும் அதைச் செய்யும்போது மனதில் பொறாமை பேராசை கோபம் சுடுசொல் ஆகிய தீயவை இருக்குமாயின் அது அறச்செயல் ஆகாது.

Meaning:- Virtuous deeds are the ones done without envy, greed, wrath, and harsh words. 

Explanation:- Virtuous deeds are the ones done with mental peace, love, generosity, and charity feeling. Even if it appears outside to be good deeds it will not be so if it is done with ill feelings like envy greed wrath and harsh words.

36                           அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.

பொருள்:-  அந்த நேரம் (முதுமையில் அதுபற்றிச்) சிந்திக்கலாம் என்று இருந்துவிடாமல் (இப்போதிருந்தே) அறத்தைச் செய்க. அது நமது உடல் இறக்கும்போது இறவாத துணையாக (எம்மோடு) வரும்.

விளக்கம்:- கிடைக்கும் உலக இன்பங்களை அனுபவிக்காமல் இப்போது அறம் செய்ய வேண்டுமா?. முதுமைக்காலத்தில் வேண்டுமானால் அறத்தைச் செய்து இறப்பின் பின் அதன் பயனை அனுபவிப்போம் என்று இருந்தால் காலம் கடந்துவிடும். அத்தோடு இறப்பு எந்நேரத்திலும் நடந்து விடலாம். அந்நேரம் எம்மோடு கூட வந்து உதவ எதுவும் இருக்காது. அறம் ஒன்றுதான் நமது உடல் இறக்கும்போது, தானும் இறந்துவிடாமல் எம்மோடு கூடவந்து எமக்கு துணையாக இருக்கும். அதை இப்போதிருந்தே செய்வோம்.

Meaning:- Do the virtues (now) without postponing to later life. (Virtue is the only thing that comes along with us) when we die, that is our help which will not die.

Explanation:- Generally, we keep busy enjoying the pleasures of this world and postpone doing the virtues for a later time because we think that virtues have to be done to get some merits for our next life. But we may not have enough time to do that later as we do not know the time of our death. It is only the virtues we do, that will come along with us and be helpful after death. So virtues have to be done right from now.  

39                    அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழும் இல

பொருள்:-  (நமக்கு) அறவழியில் வருவதே (உண்மையான) இன்பமாகும். (அறமற்ற வழியில் வருகின்ற) மற்றவை எல்லாமே (உண்மையில்) துன்பமே. (அவற்றால் எமக்குப்) புகழும் இல்லை.

விளக்கம்:- இன்பம் என்பது எமது இதயத்தின் உணர்வு. அது நமக்கு அறவழியில் கிடைக்கும்போது எமது இதயம் அதை உண்மையான இன்பமாக அனுபவிக்கும். ஆனால் அவற்றை நாம் அறமற்ற வழியில் தேடிக்கொண்டால் வெளிக் காட்சியில் அவை இன்பம் போன்று தோன்றினாலும் அதை எம் உள்மனது இன்பமாக அனுபவிக்க முடியாது. மனச்சாட்சி எம்மைக் குடையும். அத்தோடு அது அறமற்றதாகையால் அதனால் எமக்கு எந்தவித புகழும் கூடக் கிடையாது.   

Meaning:- The pleasure that comes from virtuous deeds is the real pleasure. All others are devoid of pleasure and no praise from them.   

Explanation:- Pleasure is a feeling in our hearts. If we get that from virtuous deeds, then we can enjoy that. But any pleasure that comes out of non-virtuous deeds may look like pleasure, but our conscience knows the fact and we can’t enjoy that with our heart. That will not give us any fame either.   

44                    பழிஅஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழிஎஞ்சல் எஞ்ஞான்றும்  இல் 

பொருள்:- பழி வரக்கூடிய செயல்களைத் தவிர்த்துச் சேர்த்த பொருளைப் பகிர்ந்துண்ணும் வழக்கம் உண்டானால் வாழ்க்கையில் எந்தவிதக் குறையும் ஒருபோதும் இருக்காது.

விளக்கம்:- வாழ்க்கையில் வறுமை, நோய், குழந்தை இன்மை, கள்வர் பயம் போன்ற பலவித துன்பங்கள் வரக் காரணம்  அறமற்ற வழிகளில் பொருளைத் தேடலும், தேடிய பொருளை பகிரவேண்டிய வர்களோடு பகிர்ந்து கொள்ளாமையும் தான். எந்தவித பழிக்கும் ஆளாகாமல் அறவழியில் பொருளை சேர்த்து யார்யாரோடெல்லாம் பகிர்ந்து கொள்ள வேண்டுமோ அவ்வாறு பகிர்ந்து கொண்டு வாழ்ந்தால் எந்தத் துன்பமும் நெருங்காது.

Meaning:- The one who earns the wealth without any misdeeds (sinlessly) and shares that with others (with whom it has to be shared) shall never have any shortfalls in his life.

Explanation:- The reason for poverty, disease, and having no children is earning wealth through sinful means and not sharing that with anyone. There will not be any difficulties or shortfall in life; if the wealth is earned righteously without any misdeeds and shared with all those who are to be shared.     

50                    வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்

பொருள்:-  இப்பூமியில் எவ்வாறு வாழவேண்டுமென்று அறநூல்களில் சொல்லியவாறு வாழ்பவன் மேலான உலகத்தில் இருக்கும் தெய்வத்திற்கு இணையாக வைத்து மதிக்கப் படுவான்.  

விளக்கம்:- மேலான உலகத்தில் அறநூல்களில் சொல்லியவாறு வாழ்பவர்களையே நாம் தெய்வம் என்று வணங்குகின்றோம். அப்படியான அறநெறி வாழ்க்கையை இவ்வுலகத்திலேயே ஒருவர் வாழ்வாராயின் அவரும் தெய்வத்திற்கு சமமாவார். அதனால் இவ்வுலகிலேயே நாம் அறநெறியில் வாழ்ந்தால் நாமும் தெய்வமாகி விடலாம்.   

Meaning:- He who pursues life on this earth according to the Holy Scriptures will be reckoned equal to the heavenly God. 

Explanation:- The ones who live a life according to the holy scriptures are heavenly Gods. Therefore, the one who lives on earth according to the holy scriptures shall also be considered as heavenly God. So let us live such a life on this earth so that we also can become Heavenly God.

69                           ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

பொருள்:-  தன்னுடைய மகன் அறிவாற்றலுள்ள பெருமகன் sதிருந்த மகிழ்ச்சியை விட பெருமகிழ்ச்சி அடைவாள்.

விளக்கம்:- எவ்வளவோ துன்பங்களைத் தாங்கி ஒரு குழந்தையை பெறுகின்ற தாய் பெற்றவுடன் தான் பட்ட துன்பங்களையெல்லாம் மறந்து பெருமகிழ்ச்சி அடைகிறாள். ஆனால் தன்பிள்ளை ஒரு அறிவாற்றலுள்ள பெருமகன் என்று கேள்விப்படும்போது அதைவிடப் பெரிய மகிழ்ச்சி அடைகிறாள். தாயை மகிழ்விக்க வேண்டுமானால் பிள்ளைகள் அறிவாற்றலுள்ள வர்களாக  மலரவேண்டும். 

Meaning:- The joy of a mother who hears that her son is a scholar is much greater than the joy she enjoyed when she gave birth to that son.   

Explanation:- Undergoing many difficulties and pain, a mother gives birth to a child but she gets immense joy when she gets that baby. But the joy she gets when she hears that her son is a scholar is much more than that. So, if the son or daughter wants to make his or her mother happy they must become scholars. 

70                    மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனுஞ் சொல்.

பொருள்:- மகன் (தன்னுடைய) தந்தைக்குச் செய்யக்கூடிய உதவி (என்னவென்றால் இந்தப் பிள்ளையைப் பெறுவதற்கு) இவனுடைய தந்தை என்ன (உயர்ந்த) தவத்தை செய்தானோ என்ற (மற்றவர்களின்) வார்த்தையாகும்.  

விளக்கம்:- பெற்றோர் தம் பிள்ளைகளை உயர்வான முழுமையான மனிதர்கள் ஆக்குகின்றார்கள். அப்படியாக தம்மை உருவாக்கிய பெற்றோருக்கு நன்றியாக, பெற்றோரை மகிழ்விக்கப் பிள்ளைகள் பலவற்றைச் செய்யலாம். ஆனால் அவை எல்லாவற்றையும் விட;  இன்னொருவர் அந்தப் பெற்ரோரைப் பார்த்து “இவ்வளவு நல்ல  பிள்ளையைப் பெறுவதற்கு நீங்கள் என்ன உயர்வான தவத்தை செய்தீர்களோ” என்று வியந்தால் பெற்றோர்களுக்கு  அதைவிடப் பெருமகிழ்ச்சி வேறு எதுவும் இருக்க முடியாது. ஆகவே இந்தப் பிள்ளை எவ்வளவு உயர்குண முள்ள நல்ல பிள்ளை என்று பிறர் மெச்சத்தக்கதாக வாழ்வதே பிள்ளைகள் பெற்றோருக்கு செய்யக்கூடிய பெருநன்றியாகும். தந்தை,மகன் என்று ஆண்பாலில் குறள் அமைந்தாலும் அதை இருபாலாருக்குமாக  எடுத்துக்கொள்ள வேண்டும். 

Meaning:- The help a son can do to his father is the statement (from others) ” what meritorious deed that his father must have done” (to get him as his son).      

Explanation:- It is the parents who make their son or daughter a fully blossomed person in every aspect and the son or daughter may like to please their parents in different ways. But the best way to please the parents is to make others exclaim ” what penance (meritorious deeds) his/her parents must have done to get this person as their son or daughter”.  So, if the son or daughter wants to please their parents they should live a meritorious life so that others appreciate them for their good moral quality.

71           அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கண்ணீர் பூசல் தரும்.

பொருள்:- (உண்மையான) அன்பை அடைத்து வைத்திருக்கக்கூடிய பூட்டு உண்டோ? (இல்லை, எவ்வளவு அடைத்து மறைக்க முயன்றாலும் கண்ணிலிருந்து வெளிவரும்) அன்புள்ளவரின் கண்ணீர்த்துளி வெளிப்படுத்தி தரும்.

விளக்கம்:-  அன்புக்குரியவர் துன்பப்படும்போது அவர் மீது இருக்கும் உண்மையான அன்பை வெளிக்காட்ட முடியாத சூழ்நிலை காரணமாக நாம் அதை  மறைக்க முயலலாம். ஆனால் அந்த அன்பு கண்களில் கண்ணீராக வெளிவருவதை தடுக்கவே முடியாது. உண்மையான அன்பு என்பது அந்த அன்புக்குரியவரின் இன்ப துன்பங்களை தன் இன்பதுன்பங்களாக  உணரும் மனோநிலைதான். அதனால் ஒருவரின் அன்புக்குரியவர் துன்பப்படும்போது அவரது மனமும் துன்பப்பட்டே ஆகும். அது கண்ணீராக வெளிவந்து அவரது உள்ளன்பைக் காட்டிக்கொடுத்து விடும். 

Meaning:- Is there any door lock to imprison (true) love? (no). The drop of tears from the eyes of the lover will bring out the truth.

Explanation:- We may have to hide our true love towards someone due to the circumstances but it is not possible to stop the drop of tears from the eyes. True love is to feel the loved one’s pain as their own. So, if the loved one is in pain, that will be felt inside and trigger the eyes to shed tears. That cannot be prevented.

72                           அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

பொருள்:- அன்பு இல்லாதவர்கள் (தம்மிடமுள்ள) அனைத்தும் தமக்கு (மட்டுமே) உரியதாகக் கொள்வர். (இதயத்தில் பூரணமான) அன்பு உள்ளவர்கள் தமது உடலைக்கூட பிறருக்கான செயற்பாட்டிற்கே உரியதாகக் கொள்வர். 

விளக்கம்:- ஒவ்வொரு மனிதர் பொறுப்பிலும் அவர்களின் உடல் உட்பட பல பொருட்கள் அவர்களுக்கு உரிமையாக இருக்கும். உள்ளத்தில் அன்பே இல்லாதவர்கள் அவை அனைத்தையும் எவருடனும் பகிர விரும்பாமல் தமக்கு மட்டுமே உரிமையென்று தாமே பயன் படுத்துவார்கள்.    உள்ளத்தில் பூரணமான அன்பு உள்ளவர்கள் தமது 

உடல் உட்பட தமது அனைத்து உடமைகளும்  அனைவருக்கும் உரியனவாக நினைத்து அவற்றின் பயன்பாட்டை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வார்கள்.  

Meaning:- Those who do not have love (at all) consider all their belongings (including their body) to belong (exclusively) to them. Those who have (immense) love (in their heart) consider (all their belongings) even their body belongs to others (and share them with all).

Explanation:– Every human being possesses some belongings including their body. Those who do not have love at all use all of them exclusively for them without sharing with anyone else. But those who have complete love in their heart consider all their possessions including their body belong to others and share their use with all.

74                           அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு

பொருள்:-  அன்பு பற்றுதலைத் தரும். அது (பற்றுதல்) நட்பாகிய அளவற்ற சிறப்பைத் தரும்.

விளக்கம்:- இருவர் மனமொருமித்துச் சேர்ந்திருப்பதே நட்பு. அதுவே வாழ்வின் அனைத்துச் சிறப்புகளின் அத்திவாரமாகும். அந்த நட்பு அன்பினால் ஏற்படும் பற்றுதலால்த்தான் உருவாகிறது. எனவே நாம் எமது வாழ்வின் அனைத்துச் சிறப்புகளையும் அடைவதற்கு அன்பே மூலப்பொருளாகும்.   

Meaning:-Love generates affection which in turn creates friendship of all excellence.

Explanation:- Friendship is being together with mutual understanding. Such friendship is the basis of all the excellence in life. Such friendship comes from the affection of love. So, love is the root cause for all excellence in life.  

75                    அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.

பொருள்:- உலகத்தில் இன்பங்களை அனுபவிப்போர் அடைகின்ற சிறப்பானது; அன்பை ஆதாரமாகக் கொண்ட வாழ்வினால் (கிடைக்கின்றது) என்று (அறிஞர்) கூறுவர்.

விளக்கம்:- இன்பத்தை அடைவதற்கே எல்லோரும் விரும்புகின்றனர். அதற்கு ஒரேவழி அன்பின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இவ்வுலக இல்லற வாழ்க்கைதான். எமது இவ்வுலக வாழ்வில் அன்பையே ஆதாரமாகக் கொண்டு எமது அனைத்துச் செயற்பாடுகளும் அமைந்தால் இவ்வுலக வாழ்விலும் மறுஉலக வாழ்விலும் இன்பமாக இருக்கும் சிறப்பை அடையலாம். 

Meaning:- The excellence of enjoying the pleasures in the world is the result of a life based on love. 

Explanation:- Everyone wants to be happy. The only way for that is to live a life based on and filled with love. If our life is structured based on love, a happy life now in this world and a blissful one after this life is ensured.  

76                    அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

பொருள்:- அறம் செய்வதற்கே அன்பு துணையாகும் என்பார்கள். (அறத்தை) அறியாதார் (செய்கின்ற)  தீமையை அகற்றுவதற்கும் அதுவே துணையாகும்.

விளக்கம்:– உள்ளத்தில் அன்பு இல்லாத ஒருவரால் அறம் செய்ய முடியாது.அறம் செய்வதற்கு ஆதாரமே அன்புதான். அதுமட்டுமல்ல அறியாமையின் காரணமாக ஒருவர் நமக்குத் தீமைசெய்கின்றார்  என்றாலும் அவர்மீது நாம் கோபம் கொள்ளாமல் அன்பு காட்டி உதவி செய்தால் அவர் திருந்தி விடுவார். அறியாமையால் தீமை செய்வோரைத் திருத்துவதற்கும் அன்பே துணையாகும். 

Meaning:- Love is essential to do virtuous deeds. It is also helpful to transform those who harm us in ignorance.

Explanation:- If we do not have love we can’t do any virtuous deeds. Love is the essential factor to do any virtuous deeds. We can also transform those who harm us due to their ignorance; by loving and helping them. So, love is also helpful in transforming bad people.

78                    அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரம்தளிர்த் தற்று.

பொருள்:-  வறண்ட பாலை நிலத்தில் வற்றல் (காய்ந்துபோன) மரம் தளிர்ப்பது போலத்தான் உள்ளத்தில் அன்பு இல்லாதவர்களின் உயிர்வாழ்வு (செழிக்க முடியாது). 

விளக்கம்:- மனிதவாழ்வின் உயிரே அன்புதான். அது இல்லாவிட்டால் வாழ்வே வறண்டுவிடும். எப்படி வறண்ட பாலைநிலத்தில் நிற்கும் காய்ந்த மரம் தளிர்க்க முடியாதோ அப்படித்தான் இதயத்தில் அன்பில்லாதவர்களின் வாழ்க்கை வறண்டு போய்விடும். 

Meaning:- The life of a man with no love (in his Heart) is like a dried-up tree in a desert sprouting.  

Explanation:-  The life force of human life is love. Life gets dried up if he has no love in his heart. Just like a dried tree in a desert won’t sprout up, the life of a person who has no love in his heart can’t flourish.

79                    புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப் பன்பி லவர்க்கு

பொருள்:- உள்ளுறுப்பாகிய இதயத்தில் அன்பில்லாதவருக்கு உடலின் வெளியுறுப்புகளெல்லாம் என்னதான் செய்ய முடியும். 

விளக்கம்:- மனித செயற்பாட்டிற்காக மனித உடலில் எத்தனையோ உறுப்புகள் கொடுக்கப் பட்டிருக்கின்றன. அவற்றை செயற்படுத்துவது மனமே. அந்த மனமாகிய இதயத்தில் அன்பு இருந்தால் அது செம்மையாகச் செயற்பட்டு வெளி உறுப்புகளை சரியாகச்  செயற்படுத்தும். இதயத்தில் அந்த அன்பு இல்லையென்றால் வெளியுறுப்புகள் எவ்வளவு நேர்த்தியாக இருந்தாலும் பயனில்லை.

Meaning:- What use of the outer organs of the body if there is no love in the inner heart?

Explanation:- Many organs are given in the outer body for all types of functions. But it is the mind that drives them to act. So if there is love in that mind or heart, all the activities will be correct. But if there is no love in the heart then nothing will be in order and no use of any outer organs, however perfect they are.

80           அன்பின் வழிய துயிர்நிலை அஹ்திலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

பொருள்:-  (உடல் வாழ்வானது) அன்பின் வழியிலமைவதே உயிர்ப்புள்ள நிலையாகும். அப்படியில்லாதவர்களுக்கு (வெறும்) தோலால் போர்த்திய எலும்பு (தசை) உடல்தான். (உயிரற்ற வாழ்வுதான்)

விளக்கம்:- வாழ்வில் அடையக்கூடிய எந்தப் பயனையும் அடையவேண்டுமாயின் அதற்கு இதயத்தில் அன்பு இருக்க வேண்டும். அந்த அன்பு இல்லையென்றால் வாழ்வில் எவ்வித பயனும் இல்லாததால்  வாழாமல் இருப்பதற்குச் சமம். அதாவது உயிரிருந்தும், உயிரில்லாத வெறும் தோலால் போர்த்திய எலும்பு தசையாலான உடல் மட்டும் இருப்பதைப்  போன்றதே. 

Meaning:- (Only) The life based on love is (really) alive. For others, it is (only) a body of bones (and flesh) covered with skin. 

Explanation:- We need love in our hearts to achieve any meaningful benefit in life. Life without love is useless. That is the same as carrying a dead body of bones and flesh covered with skin.    

82                           விருந்து புறத்ததாத் தான்உண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

பொருள்:-  விருந்தினர் வெளியே காத்திருக்க; இறவாமல் இருப்பதற்கான மருந்தானாலும் (அதைத்) தானே உண்ணுதல் விரும்பத்தக்கது (ஏற்கத்தக்கது) அல்ல. 

விளக்கம்:- விருந்தினர் என்று ஒருவர் வந்துவிட்டால் எம்மிடமுள்ள சிறந்த உணவை அவருக்குத்தான் கொடுக்க வேண்டும். நாம் இறவாமல் இருப்பதற்கான உணவாக இருந்தாலும் அதை விருந்தினருக்கும் கொடுக்கத்தான் வேண்டும். அதுவே இல்லறத்தானின் கடமை/அறம். விருந்தோம்பலுக்கு நாம் அவ்வளவு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

Meaning:- When a guest is waiting in the house, it is not acceptable (improper) for one to eat (something) even that is the nectar of immortality.   

Explanation:- We have to serve the best we have to the guests. That is the virtue of a householder. Even if he has the nectar of immortality he should not eat that himself. Such priority should be given to the guest.

92                    அகன் அமர்ந்து  ஈதலின்  நன்றே  முகன் அமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்

பொருள்:- மனம் உவந்து (ஒரு பொருளைக்) கொடுப்பதை விடவும், முகம் இனிமையாகவும் இனிய சொற்களும் சேரப்பேறின் (அதுவே) நன்றாகும்.

விளக்கம்:- மனம் விரும்பி ஒரு பொருளை ஒருவருக்கு கொடுப்பது என்பது எவ்வளவு நல்ல செயல். ஆனால் அதையும் விட சிறந்தது முகமலர்ச்சியோடு இனிமையாகப் பேசுவதாகும். முகம் மலர வேண்டுமானால் முதலில் மனம் மலரவேண்டும். மனம் மலர்ந்து ஒரு பொருளைக் கொடுப்பது சிறந்ததுதான். ஆனால் அத்தோடு இனிய சொற்களையும் பேசுவது அதையும் விடச் சிறந்தது என்று சொல்வதன் மூலம் இனிய சொற்களின் உயர்வு, அவசியம் மிகவும் வலியுறுத்தப் பட்டுள்ளது.   

Meaning:- A sweet speech with a sweet (smiling) face is better than a gift given with a sweetheart. 

Explanation:- Giving a gift with a sweet heart is something great but giving sweet words with a sweet heart and smiling face is much better than that. By saying this the importance of the sweet words with a smiling face is emphasized. 

93                           முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே  அறம்

பொருள்:- (கண்டவுடன் மகிழ்ச்சியால்) முகம் மலர்ந்து (வந்தவரை) இனிமையாகப் பார்த்து கனிவான  உள்ளத்தால் இனிமையான வார்த்தைகளைப் பேசுவதே அறநெறியாகும்.

விளக்கம்:- நாம் காணும் ஒருவரோடு எப்படி உறவாட வேண்டும் என்பதற்கே அறநெறி முறைகள் உள்ளன.  ஒருவரைக் கண்டவுடன் மனதில் மகிழ்ச்சி ஏற்படவேண்டும். அதன்காரணமாக  முகம் மலர வேண்டும். மலர்ந்த முகத்தால் கனிவோடு பார்க்க வேண்டும். அவற்றைவிட  இனிமையான வார்த்தைகளால் பேசுவதே மிக அவசியமாகும்.

Meaning:– Speaking sweet words from a kind heart with a kind look and a blossomed face is the virtuous way.

Explanation:- There are virtuous methods specified about how to welcome and converse with someone. When we meet someone, we must be joyful; thereby have a blossomed face and a kind look, and then especially speak with sweet words. 

94                           துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மட்டும்
இன்புறூஉம் இன்சொல் அவர்க்கு

பொருள்:-  எல்லோரிடத்திலும் இன்பம் தரக்கூடிய இனிய சொற்களையே பயன்படுத்துவோருக்கு துன்பம் தருவதாகிய வறுமை இல்லையாம்.  

விளக்கம்:-  நமக்கு செல்வம் சேரக் காரணம் மற்றவர்களின் ஆசீர்வாதம். நாம் எல்லோருக்கும் இன்பம் தரக்கூடியதாக இனிய சொற்களையே பேசுவோமாயின் அனைவரும் மனம் உருகி எம்மை ஆசீர்வதிப்பார்கள். அவர்களால் கிடைக்கும் ஆசீர்வாதத்தால் நமக்கு வறுமையே இருக்காது.  

Meaning:-  Those who use only sweet words that give joy to others shall never have the poverty that gives sorrow. 

Explanation:-  Wealth comes from the blessings of others. If we use sweet words always that give joy to others, the blessings from their heart will be there always and we shall be wealthy. Poverty will not bother us.

95                           பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.

பொருள்:- (தன்னடக்கமான) பணிவான பண்பும் இனிமையான சொற்களும் உள்ளவராக இருப்பதே  ஒருவருக்கு (சிறப்பான) ஆபரணமாகும். மற்றெதுவும் அப்படி ஆக முடியாது.

விளக்கம்:- ஒருவரிடத்தில் பணிவும் எளிமையும் இனிமையான வார்த்தைகளும் இல்லாவிட்டால் அவர் எவ்வளவுதான் உயர்ந்த ஆடை அணிகலன்களை அணிந்திருந்தாலும் பிறர் அவரை  உயர்ந்தவராகக் கணிக்க மாட்டார்கள். பணிவும் இனிமையான வார்த்தைகளும்தான்  அதிசிறந்த ஆபரணங்கள் ஆகும்.

Meaning:- Being humble and using sweet pleasant words are the ornaments that adorn a man. Any others are not real ornaments.

Explanation:- Whatever best clothes and jewels one may wear, if he does not have humility and use sweet kind words, he will not be respected by anyone. Humbleness and sweet kind words are the real ornaments that adorn a man.

96                    அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்

பொருள்:-  (மற்றவர்களுக்கு) நன்மைகளை விரும்பி இனிமையான சொற்களால் கூறுவோமானால் எமது பாவங்கள் குறையும், புண்ணியங்கள் அதிகரித்துக் கொண்டு போகும்.

விளக்கம்:- நாம் பிறருக்கு நன்மை செய்ய விரும்பினாலும் அதை கடும் சொற்களால் சொன்னால் அவர்கள் வேதனைப் படுவதோடு ஏற்காமலும் போகலாம். ஆனால் நன்மைக்குத்தான் சொல்வதானாலும் அதை இனிமையாக சொன்னால்த்தான் அவர்கள் மனம் உருகி அதை ஏற்று எம்மை மனதால் வாழ்த்துவார்கள். அதனால் எமது பாவங்கள் குறைந்து புண்ணியங்கள் பெருகும்.  

Meaning:-  Our sin is reduced and the merits keep increasing if we use sweet words giving benefit to others.  

Explanation:- If we use hard words, even to do good for others, they feel bad and may disagree with us. If we use sweet words when we want to do good for others then they melt in their heart, accept the same, and bless us with their heart. That will help to reduce our sins and our merits keep increasing. 

99                           இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு  வது.

பொருள்:- (பிறர் தரும்) இனிமையான வார்த்தைகள் (தனக்கு) இன்பத்தைத் தருவதை (அனுபவமாக) காண்கின்றவன் என்னதான் காரணமாக (பிறருக்குத் துன்பமான) கடினமான சொற்களைச்  சொல்கின்றான்.

விளக்கம்:- ஒருவர் எம்முடன் இனிமையாகப் பேசும்போது எமது மனத்தில் எவ்வளவு இன்பமாக இருக்கிறது. அதை அனுபவித்த பின்பாவது அதன் அருமையை உணர்ந்து நாமும் மற்றவர்களுடன் இனிமையாகப் பேசாது கடினமான சொற்களைப் பயன்படுத்து கின்றோம் என்றால் அது எவ்வளவு இழிவானது. இனிய சொற்களின் அவசியம் இதனால் இடித்துரைக்கப் படுகின்றது. 

Meaning:- Why should (someone) use harsh words even after realizing the pleasure of the sweet words (from others)  

Explanation:-  How much happy we are when someone speaks to us sweetly. Even after enjoying that, if we use harsh words toward others that is a great ignorance. So here, the importance of sweet words is emphasized and we are alerted highly against using harsh words.

100                             இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

பொருள்:-   இனிய சொற்கள் இருக்கும்போது இனிமையற்ற (சுடு) சொற்களைச் சொல்வது (இனிய) பழங்கள் இருக்கும்போது (இனிமையற்ற) காய்களை உண்பதைப் போன்றது.

விளக்கம்:-  நாம் பேசும்போது இனிய சொற்களையே பேசவேண்டும். காரமான சுடு சொற்களால் பேசக் கூடாது. ஒருவர் நமக்கு கடும் சொற்களால் பேசும்போது நாமும் திருப்பி சுடு சொற்களையே பதிலாகக் கொடுத்தால் நமது மனமும் காயப்பட்டு அவரையும் மேலும் காயப்படுத்துவோம். பதிலாக நாம் நிதானித்துக்கொண்டு அன்பான இனிய சொற்களால் பதில் சொன்னால் அது நமக்கும் அந்தச் சுடுசொல்லைச் சொன்னவருக்கும் இனிமையத்  தரும். அதாவது புளிப்பான காயை உண்பதற்குப் பதிலாக இனிய பழத்தை உண்பதுபோல  இருக்கும். அதனால் மற்றவர்கள் எப்படிப் பேசினாலும் நாம் பேசும்போது இனிமையாகவே பேச வேண்டும்.

Meaning:- Using harsh words when there are sweet words available is like eating unripe (sour) ones when there are (sweet) fruits.

Explanation:-  We have to use sweet words always. We should never use harsh words. Even if someone uses harsh words, we must pose ourselves and reply with sweet words so that both can experience sweetness. That will be just like eating sweet fruits instead of sour unripe ones. But if we also react with harsh words both will be hurt. So let us use sweet words always.  

101                 செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

பொருள்:- (தன் பெயரை வெளிப்படுத்திச்) செய்யாமல் (ஒருவருக்குச்) செய்த உதவிக்கு, மண்ணுலகும் விண்ணுலகும் சேர்ந்தாலும் சமமாகாது.

விளக்கம்:- பொதுவாக பிரதி உபகாரம் கருதி அல்லது தனது நற்பெயருக்காகத்தான் உதவியைச் செய்வார்கள். தன் பெயரை வெளிப்படுத்தாமலே ஒருவர் ஒரு உதவியைச் செய்தால் அதன் பெறுமதிக்கு ஈடாக  எதையுமே  கொடுக்க முடியாது. மண்ணுலகும் விண்ணுலகும் சேர்த்துக் கொடுத்தாலும் ஈடாகாது.

Meaning:-  Even earth and heaven can’t be compared to the help done without identity.

Explanation:-  Generally, help is done expecting something in return or for a good name and fame. But if help is done without identifying who has done it, that can’t be compensated by anything, even earth and heaven will not be equal.  

102                  செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

பொருள்:- (தக்க) சமயத்தில் செய்கின்ற உபகாரமானது சிறிதானாலும் (பெறுமதியில்) உலகைவிடவும் பெரிதாகும்.

விளக்கம்:- ஒருவருக்குக் குறித்தசமயம் தேவையான உதவி மிகச் சிறிதாக இருக்கலாம். ஆனால் அந்த  நேரத்தில் அது அவரது உயிரைக்கூட காப்பாற்றக் கூடியதாக இருக்கலாம். அதனால்  அவருக்கு அது உலகைவிட பெரியதாய் இருக்கும். பின்னர் காலம்கடந்து எவ்வளவு பரிய உதவி செய்தாலும் அது பயனற்றதாக இருக்கலாம். ஆகவே தருணம் அறிந்து எமது உதவியைச் செய்ய வேண்டும். அதுவே மிக முக்கியம். தக்க சமயத்தில் எமது உதவியைச் செய்ய வேண்டும்.

Meaning:- The help done at the time of need is (really) more significant than the earth (in its value).

Explanation:- The help someone needs at a certain time may be a minor one but it may help him even to save his life. That small help will be bigger than the earth for him.  Any great help done after the time of need is of no use. So, we have to do our help at the time of need without any delay at all.  

103                 பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.

பொருள்:- (எவ்விதமாகவும்) பயனை எதிர்பாராமல் செய்த உதவியின் தன்மையை ஆராய்ந்து பார்த்தால் (அதனால் கிடைக்கும்) நன்மையானது கடலையும்விட பெரிதாகும். 

விளக்கம்:- நான் இவருக்கு உதவி செய்தால்தானே எனக்கும் இவர் உதவி செய்வார், அல்லது இந்த உதவியைச் செய்தால் என்னைப் பலர் புகழ்வார்கள் என்று இவ்வாறான பல எதிர்பார்ப்பு களோடுதான் உதவியைச் செய்வார்கள். அப்படியான உதவிகள் ஒரு வியாபாரம் போலத்தான். உண்மையில் பிறருக்கு உதவுவது எமது சுபாவமாக இருக்க வேண்டும்.  எதையுமே எதிர்பாராமல் அவ்வாறான உதவியைச் செய்தால் அதன் நன்மை அளவிடமுடியாதது, கடலைவிடவும் பெரிதாகும்.  

Meaning:-  If we analyze the nature of the help done without expecting anything in return (for that help) the benefit is greater than the ocean.

Explanation:-  We help someone thinking “If I help him only he will help me back, or if I do this type of help, everyone will praise me” and so on.  That is a kind of business transaction. We should help others due to our own nature to help. If the help is done without any expectation at all; that benefit is immeasurable, greater than the ocean.

105                  உதவி வரைத்தன் றுதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.

பொருள்:- உதவியானது செய்யப்படுகின்ற உதவியின் அளவைப் பொறுத்திருப்பதில்லை. அந்த உதவியைப் பெறுபவரின் தகமையின் அளவைப் பொறுத்தது.

விளக்கம்:-ஒருவர் உதவியைச் செய்கின்றார். ஒருவர் உதவியைப் பெறுகின்றார். உதவியைச் செய்பவர் ஏதேதோ அளவில் உதவி கிடைக்கட்டும் என்று நினைத்து செய்வார். ஆனால் உதவியைப் பெறுபவர் தான் செய்த தருமத்தின் அடிப்படையில் எந்த அளவில் உதவி கிடைப்பதற்கு தகுதியாகின்றாரோ அந்த அளவிற்தான் அந்த உதவி அவருக்குப் பயன்படும். உதவி செய்பவர் விரும்பும் அளவிற்கு உதவியைச் செய்துவிட முடியாது.  

Meaning:- The measure of the help received does not depend on the measure of the help done. (But) It depends on how much the receiver deserves. 

Explanation:-One person helps and another person receives that. The one who helps may wish and expect a certain amount of benefit for the receiver, but it does not work that way. The actual amount of benefit depends on how much the receiver deserves on his merits. No one can help anyone to the extent he wants unless the recipient deserves it by virtual merits.

106                 மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.

பொருள்:-  (உள்ளத்தில்) குற்றமற்ற பெரியோரின் உறவை மறந்துவிடாதீர். (அதுபோல நீங்கள்) துன்பத்தில் இருந்தபோது துணையாக நின்றவர்களது நட்பையும் விட்டுவிடாதீர்கள்.

விளக்கம்:- மனதில் குற்றங்களில்லாத பெரியோர்களின் உறவு நாம் என்றும் நல்வழியில் பயணிக்க உதவும் என்பதால் அவர்களது உறவைப் பேணவேண்டும். அதேபோல நாம் துன்பத்தில் இருக்கும் போதுதான் உண்மையான நண்பர்களை அறிய முடியும். அப்படி நாம் துன்பப்பட்ட நேரத்தில் உதவிய அந்த உண்மையான நண்பர்களின்  நட்பையும்  விட்டுவிடக் கூடாது. 

Meaning:-  Never forget the fellowship of pure-hearted wise men nor forsake the friendship of those who aided you when you were in adversity.   

Explanation:- The fellowship of pure-hearted wise men will help us to follow the proper path in life. So, we must maintain the fellowship with them. The friends who aided us in adversity are true friends and will always be with us to help. So, we should never forsake their friendship.

108                 நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

பொருள்:- (ஒருவர் செய்த) நன்மையை மறப்பது கூடாது. (ஒருவர் செய்த) தீமையை அன்றைக்கே(அப்போதே) மறப்பது நல்லது. 

விளக்கம்:-  ஒருவர் நமக்கு ஒரு நன்மை செய்தால் அதை நாம் மறவாது நினைவில் வைத்துக் கொண்டால் அது நம் மனதில் இனிமையாக இருக்கும். அதனால் நாம் அவருக்குத் திருப்பி நன்மை செய்யும் போதும் நமக்கு இனிய அனுபவமாகவே இருக்கும். ஆனால் ஒருவர் நமக்கு செய்யும் தீமையை நாம் நினைத்துக் கொண்டிருந்தால் அது நம்மைக் குடைந்து கொண்டே இருக்கும். அதனால் அவருக்கு தீமை செய்யவும் தூண்டப்படுவோம். அதனால் நாம் இன்னுமின்னும் வேதனைப்பட நேரிடும். ஆகவே ஒருவர் நமக்குத் தீமை செய்தால் அதை உடனே மறந்து விடுவதுதான் நாம் மகிழ்ச்சியாக இருக்க ஒரே வழி. 

Meaning:- It is not good to forget the help (done by someone) but it is better to forget any harm done (by someone) on the same day (same time).

Explanation:-  If we remember the help done by someone that will give us sweetness in our hearts and encourage us to help them back and by helping them back we shall be happy again. But if we keep in mind any harm done by someone, we can’t be peaceful and at the same time we shall be tempted to harm them back, and in that way, we will be miserable. So, if we want to be happy, we must forget any harm done by someone immediately but keep remembering any help done to us always.

109                  கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.

பொருள்:-கொலையைப் போன்ற துன்பத்தை (ஒருவர்) செய்தாலும் அவர் (முன்பு) செய்த ஒரு நல்லுதவியை (நன்றியுடன்) எண்ணிப் பார்ப்போமானால் (அத்துன்பமானது மனதிலிருந்து) மறைந்துவிடும். 

விளக்கம்:-நன்றி உணர்வு நம் மனதிற்கு ஒரு மகோன்னதமான மருந்து. ஒருவர் செய்த உதவியின் நன்றி உணர்வு நம் மனதில் ஊற்றேடுக்கும்போது அவர் பின்னர் மிக மோசமான துன்பத்தைத் தந்தாலும் அது ஒரு பொருட்டாகத் தெரியாது. 

Meaning:- Even the deadliest injury is made; that will be nullified when he thinks gratefully of one help that person did before. 

Explanation:- The thought of gratefulness is a good medicine. When that feeling of gratefulness for someone flows in our heart because of the help he did before, even if he makes a deadliest injury later that won’t be a big deal.  

110                 எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு

பொருள்:-  எந்தப் பெரிய தருமத்தை மீறிச் செயற்பட்டவர்களுக்கும் (அப்பாவத்திலிருந்து) விமோசனம் பெறலாம். (ஆனால் ஒருவர் நமக்குச்) செய்த உபகாரத்தை (உதவியை) மறந்து செயற்பட்டவனுக்கு (அப்பாவத்திலிருந்து) விமோசனம் இல்லை. 

விளக்கம்:-  தருமத்தை மீறிச் செயற்பட்டாலும் பிராயச்சித்தம் செய்து அவற்றிலிருந்து விடுபடலாம். ஆனால் ஒருவர் செய்த உதவியை, உபகாரத்தை மறந்தால்; மறந்து அவருக்கு நாம் தீமை செய்தால் அப்பாவத்திற்கு பிராயச்சித்தம் இல்லை. அதை அனுபவித்துத்தான் தீரவேண்டும். 

Meaning:-  There are remedial measures to get rid of all kinds of (sins) moral violations but no remedies for the sin of forgetting the help someone has done. 

Explanation:-  Even if we violate any moral values and commit sin we may be able to escape from the effects of them by adopting some remedial measures. But if we forget the help someone has given us, to get us out of our misery, there is no salvation from that. We have to go through that pain. 

111                 தகுதி எனஒன்று நன்றே பகுதியான்

பாற்பட்டு ஒழுகப் பெறின்

பொருள்:- (நண்பர் பகைவர் அறியப்படாதவர் என்று) பலதரப்பாரோடும் சேர்ந்து ஒழுக்கமாகச் செயற்பட வேண்டியிருப்பின் (நடுநிலைமையாகிய) தகுதி என்ற ஒன்றுதான் நல்ல அறமாகும்.  

விளக்கம்:- நாம் எமது நண்பர் பகைவர் அறிமுகமில்லாதவர் என்று பலதரப்புகளுக்கிடையில்  செயற்படும்போது பாரபட்ஷமாக அதாவது பக்கச்சார்பாக நடந்துகொள்வோம். ஆனால் அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் வேண்டியவர் வேண்டாதவர் என்று பாராமல்  பக்கச்ச்சார்பின்றி நடுநிலை தவறாத தகுதியோடு ஒழுக்கமாகச்  செயற்படுவதே சிறந்த அறநெறியாகும்.

Meaning:- If we have to deal with people of different relationships (friends, enemies, or unknown) maintaining the status of impartiality is the best virtuous path.

Explanation:- When dealing with people we shall be in favor of our friend or against our enemy without looking into the facts. But the best virtuous path is to be impartial towards everyone ignoring our relationships and making decisions based only on facts;   

113                 நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல் 

பொருள்:- (பெரும்) நன்மையைத் தருவதாயினும்; நடுநிலைமை தவறுவதன் மூலம் வருகின்ற செல்வத்தை அன்றைக்கே தவிர்த்துவிட வேண்டும்.

விளக்கம்:- வாழ்வதற்குச் செல்வம் தேவைதான். ஆனால் செல்வத்தைச் சேர்ப்பது வாழ்க்கையின் நோக்கமல்ல. பக்கச்சார்பற்ற நடுநிலை பேணும் அறநெறி வாழ்க்கையே வாழ்வின் நோக்கம். அறநெறியை விற்றுச் செல்வத்தைச் சேர்க்கக் கூடாது. அப்படி நடுநிலை தவறிக்  கிடைக்கின்ற செல்வத்தை ஒரு நாளேனும் எடுத்துக் கொள்ளாமல் தவிர்த்து விடவேண்டும்.

Meaning:- However prosperous it may be; give it up the same day, that wealth gained at the cost of losing impartiality. 

Explanation:- We need wealth to live. But earning wealth is not our aim in life. A righteous impartial life is the target in our life. We should not sell that to earn wealth. We must eliminate such wealth gained by losing impartiality, on that spot itself. 

118                 சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க்  கணி

பொருள்:- சமப்படுத்தி சரியாகக் காட்டும் தராசுகோல் போல நின்றுகொண்டு ஒருபக்கமாகச் சாராதிருப்பது பெரியோர்களுக்கான சிறப்பாகும். 

விளக்கம்:- தமக்கான நடுநிலையைப் பேணாது வேண்டியவருக்கு சார்பாகவும் வேண்டாதவருக்கு  எதிராகவும் இருப்பது சிறுமைத்தனம் ஆகும். எப்படி தராசு தனது நடுநிலையில் நின்றுகொண்டு பொருளின் நிறையைச் சரியாகக் காட்டுமோ அதுபோல அறிவார்ந்த பெரியோர்கள் பக்கச்சார்பின்றி நீதி வழங்குவார்கள். அதுவே அவர்களது சிறப்பாகும். 

 Meaning:- Just like the balance rod which weighs and shows the correct weight; being impartial not taking sides, is the ornament to the wise. 

Explanation:- It is pettiness to show partiality in giving justice between friends and enemies. The great wise men being impartial; give justice without partiality, just like the balance rod being in a neutral position and weighing correctly. That is the excellence of wise men.

125                  எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.

பொருள்:- பணிவாக (தன்னடக்கமாக) இருப்பது (பொதுவாக) எல்லோருக்குமே நன்மையானதுதான். (ஆனால்) அவர்களில் செல்வந்தர்களுக்கு (அது இன்னுமொரு) செல்வத்திற்கு ஒப்பாக இருக்கும்.

விளக்கம்:- பணிவாகத் தன்னடக்கமாக இருப்பது அனைவருக்கும் ஒரு செல்வம் போன்றதே. பொருட் செல்வம் உள்ளவர்களுக்கு அது இன்னுமொரு செல்வமாக அமையும். ஆதலால் பொருட் செல்வம் உள்ளவர்கள் இன்னும் வேறு செல்வம் வேண்டுமென்றால் அடக்கமாக பணிவாக வாழ வேண்டும்.

Meaning:-Humility is beneficial for everyone. But for the rich people that is additional wealth.

Explanation:- Being humble is really a good wealth for everyone. But for rich people that is an additional asset. So, humility is essential especially for rich people because that is their main asset. 

127                 யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

பொருள்:-  எதைக் காப்பாற்ற(கட்டுப்படுத்த) முடியாவிடினும் நாவையாவது (சொற்களையாவது) காப்பாற்ற (கட்டுப்படுத்த) வேண்டும். காப்பாற்றா விட்டால் சொற்கள் விகாரப்பட்டு  மனவேதனைப்படுவர்.

விளக்கம்:- ஒருவருடனான தொடர்பாடல்களில் எந்தவிதமான தவறுகள் வந்தாலும் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. சரிசெய்து விடலாம். ஆனால் வன்சொற்களால், அவதூறு சொற்களால் வரும் மனத்தாக்கத்தை பின்னர் சரிசெய்யவே முடியாமல் மனவேதனைப்பட நேரிடும்.

Meaning:- Even if you can’t guard other things, guard your tongue; otherwise, you will get great distress due to harsh words. 

Explanation:- Even if you make any other mistakes when dealing with someone, that can be adjusted without much damage but if you use harsh words that will damage your relationship causing great distress.    

128                        ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.

பொருள்:- (சொல்பவற்றில்) தீங்கு விளைவிக்கும் கருத்துடைய சொல் ஒன்றுதானும் இருக்குமாயின் (சொல்லிய ஏனைய அனைத்துமே) நன்மை தராதவை ஆகிவிடும்.    

விளக்கம்:-  ஒரு குடம் பாலில் ஒருதுளி நஞ்சு சேர்ந்து விட்டாலும் முழுவதுமே நஞ்சாகி விடுவதுபோல நாம் எல்லாவற்றையும் நன்றாகவே பேசினாலும் அதில் ஒரு தீமை தரும் சொல் சேர்ந்து விட்டால் நன்மை தரும்படியாக நாம் பேசிய அனைத்துமே நன்மை தரமுடியாதவை ஆகிவிடும். அதனால் தீமை தரும் ஒரு சொல்லைக்கூட நாம் சொல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.  

Meaning:- Even if there is one word (in our conversation) that gives a harmful meaning (our whole conversation) becomes harmful. 

Explanation:-  We may have a pot full of milk but just a small drop of poison mixed in it makes the whole milk poisonous. In the same way, even if we use one word with a harmful meaning in our conversation, that makes our whole conversation harmful. We must make sure not to say even one word that has a harmful meaning. 

129                        தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

பொருள்:- நெருப்பினால் சுட்ட புண் தன்னுள்ளே மாறிவிடும். ஆனால் நாவினால் வேதனைப்படுத்திய காயம் ஆறவே மாட்டாது.  

விளக்கம்:-  நாங்கள் ஒருவரை நெருப்பினால் சுட்டுவிட்டால்க்கூட  அது உடலில் ஏற்பட்ட காயம் என்பதால் சிலநாளில் மாறிவிடும். ஆனால் இன்னொருவரை வேதனைப் படுத்தும் சொற்களால் நாம் தாக்கினால் அது அவர் மனதில் இருந்து எப்போதுமே  மாறாது. பிறர் மனதில் உள்ள புண்ணை எமது கண்களால் பார்க்க முடியாவிட்டாலும் அது என்றுமே மாறாத ஒரு காயம் எனபதை நாம் உணரவேண்டும்.

Meaning:- The wound caused by fire will heal within. But not the wound (Psychological Scar) caused by the tongue (harsh words).

Explanation:-The wound we cause to someone by fire is visible and we take that as very serious but that will heal after some time. But though the wound we create in someone’s heart by harsh words is not visible, that will never heal in their mind. So that is more serious.   

131                        ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்

பொருள்:- ஒழுக்கமானது உன்னதங்களைத் தருவதால் ஒழுக்கம் உயிரை விடவும் 

மேலானதாகப் போற்றப்படும்.

விளக்கம்;-உயிர் வாழ்வதன் நோக்கம் அனைத்து மனித உன்னதங்களையும் மனித மகிமைகளையும் பெறுவதே. அது நல்லொழுக்க வாழ்வினால் மட்டுமே

சாத்தியமாகும். எனவே உயிரை விடவும் ஒழுக்கமே உயர்வாகப் போற்றப்படும்.

Meaning:-   Discipline is adored more than life because discipline (in life) gives the excellence of life. 

Explanation:-  The very purpose of life is to attain the excellence of human life. That can be achieved only by 

discipline in life. So, discipline is adored better than life.   

135                 அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு 

பொருள்:- பொறாமை உள்ளவனுக்கு செல்வம் இல்லாதது போன்று நல்லொழுக்கம் இல்லாதவனுக்கு (வாழ்க்கையில்) உயர்வே இல்லை.

விளக்கம்:- இன்னொருவரின் செல்வச் செழிப்பை, உயர்வைக் கண்டு அவரது திறமையை மெச்சிப்  பாராட்டுபவனுக்கு செல்வம் வந்து சேரும். பொறாமைப்படுபவனுக்கு  வறுமை தான் பரிசாகும். அதுபோல நல்லொழுக்கம் இல்லாதவனுக்கு வாழ்வில் உயர்வே கிடையாது. நல்லொழுக்கம்தான் ஒருவரை வாழ்வின் உயர்நிலைக்குக் கொண்டுசெல்லும். இதுவே இயற்கை தர்மத்தின் நியதி.  

Meaning:- Just like the man with envy will be without wealth, the man devoid of right conduct will have no meritorious progress in life.

Explanation:- If someone appreciates the talent and good luck of a wealthy person, he also becomes wealthy. Instead, if he becomes jealous of a wealthy man, he becomes poor. In the same way, there is no meritorious progress for the one who is devoid of good conduct. It is good conduct that takes one to a higher level of merit in life. That is the law of this universe.

138                 நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.

பொருள்:- (அனைத்து அறவழியிலான) நன்மைகளுக்கு நல்லொழுக்கம் அடிப்படையாகும். தீய ஒழுக்கம் எக்காலத்தும் துன்பத்தையே தரும்.

விளக்கம்:- நாம் அறவழியில் செயற்பட  நல்லொழுக்கமானது அவசியம். அதனால் இவ்வுலக வாழ்விலும் மறுவுலக வாழ்விலும் நன்மை, மகிழ்ச்சி அடையலாம். ஆனால் நமது தீய ஒழுக்கமானது இவ்வுலக வாழ்வில் மட்டுமன்றி வரப்போகும் வாழ்விலும் துன்பத்தையே தரும். இன்பமோ நன்மையோ வேண்டுமாயின் ஒழுக்கத்தைப் பேணுவதே ஒரே வழி.   

Meaning:– Good conduct is the seed for virtuous benefits. Misconduct always causes suffering.

Explanation:-Good conduct is essential for us to live based on virtues.  That will yield all the benefits in this life and life after. But misconduct is the seed for all our suffering in this life and life after. Living with good conduct is the only way for happiness and all benefits.

151                  அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வாரைப் பொறுத்தல் தலை

பொருள்:-  (தன்னைத்) தோண்டுபவரையும் (விழுத்தி விடாது) தாங்கும் நிலத்தைப் போல தம்மை  அவமதிப்பாரையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும்.

விளக்கம்:-  தாங்கிக்கொள்வது நிலத்தின் பண்பு. தன்னை ஒருவர் தோண்டுகின்றார் என்பதற்காக நிலம் தன்  பண்பிலிருந்து தவறுவதில்லை. அதுபோல பொறுமை காப்பது எமது பண்பாக இருக்க வேண்டும். ஒருவர் எம்மை அவமதிக்கிறார் என்பதற்காக எமது பண்பிலிருந்து நாம் தவறிவிடாமல் நாம்  பொறுமை காக்க வேண்டும்.  இன்னொருவர் தவறு செய்கிறார் என்பதற்காக நாமும் தவறு செய்யத் தேவையில்லை.  

Meaning:-  Just like the earth supports the person who digs it, it is the prime virtue to tolerate revilers.    

Explanation:- It is the virtue of the earth to bear (support) anyone who stands on it. It will not fail in its virtue even if someone digs it. Our prime virtue is tolerance. We must keep up our virtue of tolerance even on any revilers. We need not give up our virtue of tolerance for the mistake committed by the revilers. 

152                  பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.

பொருள்:- (தமக்கு ஒருவர் செய்த தீங்கினை) பொறுத்துக் கொள்வது எப்போதுமே நன்மையாகும். (ஆனால்) அதனை மறந்தே விடுவது அதையும் விடச் சிறப்பாகும். 

விளக்கம்:- ஒருவர் செய்த தீமைக்குத் திருப்பி நாமும் தீமை செய்தால், அப்படி மாறி மாறி செய்யும்போது இருவருக்கும் பெருநட்டம் ஏற்படும். அதைப் பொறுத்துக் கொண்டால் இருவருக்கும் நன்மை என்பதோடு தீமை செய்தவர் மனம் திருந்தவும் வாய்ப்பு உண்டு. பொறுத்துக் கொள்வதால் வெளிப்புறமாக வரக்கூடிய தீமைகளைத் தவிர்த்தாலும் அது நமது மனதிற்குள் இருந்து குடைந்து கொண்டே இருக்கும். அதை மறந்தே விடமுடிந்தால்  அது நடக்கவே இல்லை என்பதுபோன்ற மிகச் சிறப்பான நன்மை உண்டு. மனஅமைதி கிடைக்கும்.

Meaning:- Enduring the hurt (by someone) is always good. But forgetting that is the best.

Explanation:- If we punish someone for their offense, they may react again, and in that process, both have to suffer a lot. If we can endure that, the damage will be avoided. But even if the external damages are avoided, that act will bother our minds inside. If we can forget that matter then that is the best, as good as nothing has happened.  

153                 இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை

பொருள்:-  விருந்தினரை (எதுவும் கொடாது) ஒதுக்கி விடுவதே வறுமையுள் (கடும்) வறுமையாகும். அறிவற்றவரை (அவர் செய்யும் தீமையைப்) பொறுப்பது வல்லமையில் சிறப்பான வல்லமையாகும்.

விளக்கம்:- பசியோடு ஒருவர் வந்தால் அவருக்கு உணவு கொடுப்பதே இல்லற வாழ்வின் அடிப்படைக்  கடமையாகும். அதையே செய்ய முடியாதளவு வறுமை என்றால் அதுவே மிக மோசமான வறுமை. அதேபோல நாம் எத்தனையோ விடயங்களை எமது வல்லமையால் சாதிக்கலாம். ஆனாலும் ஒருவர் காரணமின்றி எமக்குத் துன்பம் செய்கிறார் என்றால் அதற்கு அவரது அறிவின்மைதான் காரணம் என்று உணர்வது மிகக் கடினம். அப்படி உணர்ந்து அவரை  மன்னிப்பதற்கு மிகப் பெரிய மனவலிமை வேண்டும்.    

Meaning:- Poverty to discard a guest is the most severe one. The strength to bear (and forgive the hurting of) an ignorant one is of the highest order. 

Explanation:-  Giving something to eat to someone (guest) who comes hungry to their house is the basic duty of a householder. If he cannot do that because he is so poor, his poverty is of the highest order. Similarly, we need strength to overcome various situations. Someone hurts us for no reason purely because of their ignorance. The strength needed to bear and forgive the harm or hurt caused by an ignorant person is of the highest order. 

155     ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து.

பொருள்:-   (தமக்குத் தீங்கு செய்ததற்காக ஒருவரைத்) தண்டித்தவரை (பெரியோர்) ஒரு பொருட்டாக மதிக்க மாட்டார்கள். (ஆனால் தமக்குச் செய்த தீமையைப்) பொறுத்துக் கொண்டவர்களை பொன்போல மதித்துப் போற்றுவார்கள். 

விளக்கம்:- செய்த தவறுக்குத் தண்டனை கொடுக்க வாய்ப்பிருந்து அதைக் கொடுத்தால் பெரியோர்கள் அவரை மதிக்கவே மாட்டார்கள்.  ஆனால் தண்டிக்க வாய்ப்பிருந்தும் ஒருவர் செய்த குற்றத்தை மன்னித்து பொறுத்துக்  கொண்டால் அவரைப் பொன்போலப் போற்றி மதிப்பளிப்பார்கள். தண்டிப்பதை விட மன்னிப்பதற்கே அதிக மனோபலம் வேண்டும்.

Meaning:- The Wise Men will not regard the ones who punish vengefully, as any worthy; but they esteem like gold (respect a lot) those who endure (forgive) them. 

Explanation:- Someone can punish those who have hurt them if they can. But that is not at all a worthy action. The wise men do not consider them any worthy at all. But instead of punishing; if they endure and forgive them, they shall be esteemed by the wisemen and given a preserved position just like for gold. More moral power is needed to forgive than to punish.

156                  ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்

பொருள்:- (தீமை செய்தவரைத்) தண்டித்தவருக்கு (அந்த) ஒருநாள் திருப்தியாய் இருக்கும். (ஆனால் அதைப்) பொறுத்துக் கொண்டவருக்கு இறக்கும்வரை (பெருந்தன்மையானவர் என்ற) புகழ் இருக்கும்.

விளக்கம்:- தீமை செய்தவரைத் தண்டிக்கும் வல்லமை இருந்தால் தண்டித்து விடலாம். அதனால் அன்றய நாள் மட்டும் தண்டித்து விட்டோம் என்ற ஒரு திருப்தி இருக்கும். தண்டிப்பதை விட அவர் செய்த தீமையைப் பொறுத்துக் கொள்வதற்கே அதிக வல்லமை வேண்டும். அப்படிப் பொறுத்துக் கொண்டால் அவர் எவ்வளவு பெருந்தன்மையானவர் என்ற புகழ் ஒருநாள் அல்ல அவர் இறக்கும் வரைக்கும் இருக்கும்.  

Meaning:- If you punish (someone who has harmed you) you will have satisfaction on that day (only). But if you endure (forgive) that person your glory (as a generous gentleman) lasts until your death.   

Explanation:- If we have the capacity to punish someone who has hurt us; we can do that and be satisfied on that day. But we need more capacity to forbear that person. Despite having such capacity to punish, if we forbear that person our glory as a generous gentleman will last until our death.

160                  உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.

பொருள்:- உண்ணாமல் (விரதம்) இருந்து நோன்பிருப்பவர்கள் பெரியவர்களே. (ஆயினும் அவர்கள்) பிறர் சொல்லும் வசைமொழிகளைப் பொறுத்து பொறுமை காப்பவர்களைவிடக் குறைந்தவர்களே.

விளக்கம்:- நாம் உண்ணாமல் விரதம் / நோன்பு இருக்கலாம். அது சிறப்பான விடயம்தான். இருப்பினும் இன்னொருவர் வசைமொழிகளைக் வீசும்போது அவற்றை மனத்தால் உண்ணாமல் பொறுமையாக நோன்பிருப்பவர்கள் அவர்களைவிடச் சிறந்தவர்களாகும். வசைமொழிகளைப்  பொறுத்துக் கொள்ளும் மனப்பண்பு பெரிதாக மதிக்கப்படுகின்றது.    

Meaning:-  Great are those who fast in observance of vows but inferior to those who endure the harsh evil words uttered by others. 

Explanation:-  It is truly great to fast in observance of some vows but it is not so great as enduring the hard, harsh words uttered by others. Enduring harsh words from others needs very high mental maturity. Here, the importance of enduring the evil utterances of others is greatly emphasized. 

163                 அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறன்ஆக்கம்
பேணா தழுக்கறுப்   பான் 

பொருள்:- அறமும் செல்வமும் தேவையில்லை என்று இருப்பவனே பிறரின் செல்வத்தில் மகிழ்ச்சி அடையாமல் பொறாமைப்படுவான்.

விளக்கம்:- மனிதனுடைய ஏற்றமும் இறக்கமும் அவனுடைய எண்ணங்களிலேயே தங்கியுள்ளது. எண்ணங்கள் தூய்மையானவையாக இருந்தால் செல்வமும் அறமும் சேரும். இன்னொருவர் செல்வந்தராக இருப்பதைப் பார்க்கும்போது மனம் தூய்மையாக இருந்தால் மகிழ்ச்சி அடைவான். அசுத்தமாய் இருந்தால் பொறாமை கொள்வான். பொறாமை என்பது மனிதனை அறுக்கும் நோயாகும்.

Meaning:-  The one who does not need wealth and virtue; feels jealousy about the wealth of another person instead of feeling happy.

Explanation:- The ups and downs in the life of a man depend on his thoughts. If his thoughts are pure, wealth and virtue accumulate. If he has pure thoughts, he will feel happy when sees the wealthy person. If he does not have pure thoughts, he feels jealousy of that wealthy man. Jealousy is a horrible disease.

165                 அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடீன் பது.

பொருள்:-   பகைவர் (நமக்கு அழிவைத் தர) தவறினாலும் (தவறாமல்) அழிவைத் தருவது (பொறாமை). பொறாமை உடையவர்களுக்கு அது ஒன்றே (அழிவைக்கொடுக்கப்) போதுமானது.

விளக்கம்:-  பகைவர் தீங்கு செய்வதிலிருந்து தவறலாம். ஆனால் பொறாமை என்ற உணர்வு தன்னைத் தானே அழித்துவிடும். தன்னை அழிப்பதற்கு வேறு பகைவர் தேவையில்லை. பொறாமைதான் மிகப்பெரிய எதிரி. வெளிப்பகையைவிட பொறாமை ஆகிய உட்பகைதான்  வெல்லமுடியாத பகை.

Meaning:- Even if the enemies fail, envy brings destruction (without fail). Envy itself is enough (to bring destruction) to those who harbor it.

Explanation:- Enemies may fail to destroy us. But the feeling of jealousy destroys the person who harbors it without fail. There is no need for another enemy to do that. Jealousy or envy is the strongest enemy. An inner enemy is worse than an outer enemy.   

166                  கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம்  இன்றிக்  கெடும்

பொருள்:-   (ஒருவன் மற்றவர்களுக்குக்) கொடுப்பதைக்கண்டு பொறாமைப்படுபவனுடைய உறவினர் உடைகளும் உணவும் இன்றி அழிந்துபோவர். 

விளக்கம்:-  ஒருவர் இன்னொருவருக்கு கொடுக்கிறார் என்றால் நாம் சந்தோசப்பட வேண்டும். இன்னொருவர் இலவசமாகப் பெறுகிறார் என்று நாம் பொறாமை கொள்வது மிகப் பெரிய அழிவைத் தரும். ஒருவருடைய பொறாமை என்னும் உணர்வினால் வரும் எதிர்மறைச் சக்தி அவரை  மட்டுமல்லாமல் அவருடை சுற்றத்தவர்களைக்கூட மோசமாக அழித்துவிடும். உண்ண உணவு, உடுக்க உடைகூட இல்லாமல் அழிந்து போவார்கள். 

Meaning:-  The relations of a person who feels jealous about a gift given to someone will be ruined without food and clothing. 

Explanation:-  When a person gives something to someone we must be happy. Instead, if we get jealous thinking that someone is getting something free; that will ruin us. The negative energy that arises because of the jealousy of a person destroys not only him but also his relations. They will be ruined even without food and clothing.  

171                        நடுவின்றி நன்பொருள் வெஹ்கின் குடிபொன்றிக்
குற்றமும் அங்கே தரும்.

பொருள்:-   நீதி இல்லாமல் (இன்னொருவரின்) சிறந்த பொருளை (அபகரிக்க) விரும்பினால் (அவரது) குடும்பமும் அழிந்து அங்கே பாவத்தையும் தரும்.

விளக்கம்:-  ஒருவன் சேர்க்கும் பொருளுக்கு அவன் மட்டுமல்ல அதைப் பயன்படுத்துவோரும்  பொறுப்பாகும். இன்னொருவரின் சிறந்த செல்வத்தை நீதியில்லாமல் ஒருவர் அபகரித்தால் அவருக்கான பாவம் சேர்வது  மட்டுமல்லாமல் அதைப் பயன்படுத்தும் அவரது குடும்பமும் அழிந்து போகும். 

Meaning:-  If (someone) covets to grab others’ precious wealth without justice, his family will be ruined and he acquires sin.   

Explanation:-  Not only the person who acquires the wealth but also those who use that wealth are responsible for the act of acquiring that wealth. If someone unjustly takes someone’s precious wealth, he acquires sin and also his family who uses that wealth, will be ruined. 

184                  கண்நின்று கண்அறச் சொல்லினும் சொல்லற்க
முன்இன்று பின்நோக்காச் சொல் 

பொருள்:- (பாதகமான) பின்விளைவுகளைக் கருதாத சொற்களை (ஒருவர்) கண்ணெதிரே நிற்கும்போது கண்மூடித்தனமாகச் சொன்னாலும் (அவர்) நேரில் இல்லாதபோது சொல்லாதீர்.   

விளக்கம்:- ஆத்திரப்பட்டு கண்மூடித்தனமாக, வரக்கூடிய பாதகமான விளைவுகளை சிந்திக்காமல் நாம் ஒருவரை நேருக்குநேர் திட்டினால் அது நமக்குத் பாதகமான விளைவைத் தரும். ஆயினும் மறைபொருளாக எதுவும் இல்லாததால் காலப்போக்கில் அது மறக்கப்படும். ஆனால் ஒருவர் இல்லாதபோது நாம் அப்படிச்  செய்தால் அதை அறியும்போது அது அவரது மனத்தில் மறக்க அல்லது மன்னிக்க முடியாத ஒன்றாகி விடும். நேருக்கு நேர் திட்டுவதால் ஏற்படும் தீமையைவிட ஒருவர் இல்லாதபோது புறங்கூறினால் அது இன்னும் மிகமோசமான தீமையைத் தரும்.

Meaning:- Even if you utter harsh words ruthlessly face to face without considering the consequences; do not do that in someone’s absence.

Explanation:- If we utter harsh words face-to-face ruthlessly without considering the adverse consequences, we will have to suffer. But that will be forgotten after some time because there is nothing hidden. If we do that in someone’s absence, when he comes to know that; it will be in his mind forever being unsolved. So it will be much more severe if you do that in someone’s absence than face to face. So never engage in backbiting.

187                 பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்புஆடல் தேற்றா தவர். 

பொருள்:-   சிரிக்கத்தக்கதாகப் பேசி நட்புக் கொள்ளத் தெரியாதவர் (வெறுக்கத்தக்கதாகப்) புறங்கூறி உறவுகளைப் பிரித்து விடுவார்கள்.    

விளக்கம்:-  சிரிக்கக் கூடியதாகப் பேசி நட்பாக இருப்பதே உத்தமமாகும். நண்பர், உறவினர் நேருக்குநேர் பழிச்சொல் கூறினாலும் பின்னர் அதை மறந்து விடுவார்கள். ஆனால் ஒருவர் இல்லாதபோது அவரைப்பற்றி இழிவாகப் பேசியதை அறிந்தால் அதை அவர்களால்  மறக்கவே முடியாது. பிரிந்து சென்று விடுவார்கள். ஆகவே புறம்கூறவே கூடாது. 

Meaning:-  Those who do not know the art of talking to make others laugh (happy) estrange their relatives by back-biting.

Explanation:-  Being humorous is a very good art to keep others friendly. They may forget and forgive if someone says any hurting words face to face but if they come to know about someone who was back-biting; then their relationship will come to an end. It is best to be humorous and friendly. 

190                  ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு

பொருள்:-  மற்றவர்களில் குற்றம் (கண்டுபிடிப்பது) போல தம்முடைய குற்றங்களைக் கண்டுகொள்வாராயின் பின்னர் நித்தியமான (அந்த) உயிருக்கு துன்பமேதும் இருக்கமுடியுமா?. (இல்லை)

விளக்கம்:-  மனிதனின் தேடல் தனக்கு முன்னால் வெளிப்புறமாகவே இருக்கின்றது. அதனால் பிறரில் இருக்கும் குற்றத்தை இலகுவாகவே கண்டுகொள்வான். ஆனால் தனக்குள் இருக்கும் குற்றத்தை மனிதன் கண்டுகொள்வதே இல்லை. அப்படி தனக்குள்ளே இருக்கும் குற்றத்தைத் தேடிக்  கண்டுகொள்ள முடிந்தால் அந்த மனிதன் துன்பமற்ற நித்ய உயிராக உருமாற்றம் அடைவான். 

Meaning:- Just like we find fault with others, if we can find our own fault, could there be any suffering to that eternal soul? (no)

Explanation:-  It is easy to find the fault of others because man’s inquiry or search is always outward. He never finds the faults within him. If he can turn his attention inward and find his own fault; he shall transform into an ever-happy soul.  

200                  சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்

பொருள்:- பயனுடைய சொற்களையே சொல்லுங்கள். பயனில்லாத சொற்களை 

சொல்லாதீர்கள். 

விளக்கம்:-  மௌனமே நிறைவை, அமைதியைத் தரக்கூடியது. அவசியமான நல்ல பயனைத் தரும் சொற்களை மட்டுமே நாங்கள் பேசவேண்டும். அனாவசியமான சொற்களை நாம் பேசிக்கொண்டிருப்பதால் எமது மனதின் வலிமையான நேர்பேராற்றலை இழந்து மனநிறைவை,அமைதியை,ஆனந்தத்தை இழக்கின்றோம். அதனால் பயனற்ற சொற்களைத் தவிர்ப்போம். 

Meaning:-   Speak only useful words and never speak unnecessary words.

Explanation:- Silence gives us inner peace and happiness. The more we speak the more we lose our vital energy and become unhappy. We have to speak only for a useful purpose. In order to be peaceful and happy avoid speaking unwanted words.

202                              தீயவை தீய பயத்தலான் தீயவை

தீயினும் அஞ்சப் படும்.

பொருள்:-  (நாம் செய்யும்) தீய செயல்கள் தீமையைத்தான் தருவதால் தீய செயல்கள் தீயை விடக்  கொடுமையானதென அஞ்சவேண்டும்.  

விளக்கம்:-  நாம் ஏதாவது நன்மைபெற ஆசைப்பட்டுத்தான் பிறருக்கு தீமை செய்யவேண்டி வருகிறது. ஆனால் நாம் தீமை செய்தால் அது நன்மை தரும் என்று தவறாகத் தென்பட்டாலும் உண்மையில் அது தீமையைத்தான் தரும் என்ற பிரபஞ்ச உண்மையை  நாம் உணர்வதில்லை. தீமை நமக்குத் தீமையைத்தான் தரும் என்பதே இயற்கை விதி என்பதால் தீயசெயல்கள் தீயை விடவும் கொடுமையானது என்று அஞ்சி நாம் அவற்றைச் செய்யக்கூடாது.  

Meaning:-  Evil causes evil. So, fear of evil worse than fire.

Explanation:-  We do evil actions expecting to get some benefit for us. But we forget the law of nature that evil will bring evil only. It is impossible to get any benefit through an evil action and it is so certain to get the evil effect from our evil action in due time. So, we must fear more for doing evil actions than fire.   

215                              ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி  வாளன் திரு.

பொருள்:- உலக நன்மையையே விரும்புகின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர்மக்களின் பொதுக்குளத்தில் நீர் நிறைந்திருப்பதைப் போன்றது.

விளக்கம்:- ஊருக்குப் பொதுவான குளத்தால் அனைவரும் பயன்பெறுவர். தான் மட்டும் வாழாது எல்லோரும் வாழவேண்டும் என்று நினைப்பவர்தான் உண்மையான அறிவுள்ள பெரியார். அப்படியான பேரறிவுள்ள பெரியோரிடத்தில் செல்வம் இருந்தால் அதனால் சூழவிருக்கும் மக்கள் அனைவருமே பயனடைவர். அவ்வாறு அனைத்து  மக்களும்  நன்றாய் வாழவேண்டுமென்ற பரந்த அறிவுள்ளவர்களாக நாமும் வாழவேண்டும்.

Meaning:- The wealth of a wise man who wishes for the welfare of the world is like the water filled in the lake used by the entire village. 

Explanation:- The entire village people will benefit from the common water tank. A selfless person who wishes for the benefit of all is a real wise man. If such a wise man gets wealth, everyone will be benefitted. We also must transform into such wise men. 

212                 தாள்ஆற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு

பொருள்:- முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம், உதவி பெறும் தகுதி உடையவர்களுக்கு கொடுத்து உதவும் பொருட்டே  ஆகும்.

விளக்கம்:- பிறருக்கு உதவி செய்வதே எமது வாழ்வின் நோக்கமாக இருக்க வேண்டும். அதற்காகவே கஷ்டப்பட்டுப் பொருள் சேர்க்க வேண்டும். சேர்த்த பொருளை தான் மட்டும் அனுபவிக்காமல் உதவிபெறத் தகுதி உடையவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும். அப்போதுதான் செல்வமும் அறமும் பெருகும்.

Meaning:- The wealth acquired by hard work is to give and help deserving people.

Explanation:- Our aim in life should be to help others. We should work hard and acquire wealth to help those who deserve it. We must utilize our wealth for our living and to help those deserving people. If we do so, our wealth and virtue will multiply.

221                        வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.

பொருள்:-  (உண்மையான) வறியவர்களுக்கு (தேவையான) ஒன்றைக் கொடுப்பதே கொடை. மற்றவகையான  கொடைகள் எல்லாம் பயனை எதிர்பார்க்கும் தன்மை உடையதாகும்.

விளக்கம்:-  எமக்கு ஏதாவது ஒரு நன்மையை அல்லது புகழை எதிர்பார்த்து, யார் யாருக்கெல்லாம் எதையெதையோ கொடுத்துவிட்டு அவற்றையெல்லாம் கொடை என்று குறிப்பிடுகின்றோம். உண்மையில் எந்தவொரு பிரதிபலனையும் கருதாது ஒரு ஏழையின் துன்பத்தை நீக்க அவனுக்குத் தேவையான ஒன்றை கொடுத்துவிட்டு அதை அவ்விடத்திலேயே மறந்து விடுவதுதான் உண்மையான கொடை. 

Meaning:- Giving something to the destitute is real charity. All other gifts have some kind of expectation in return. 

Explanation:- We give various things to various people with some expectation in return and claim them as our charity. But if we give something to a destitute to alleviate his misery without expecting any name or fame in return and from whom there is no chance of getting anything back, that is real charity.    

224                  இன்னா திரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு.

பொருள்:- (யாசிப்பவரைப் பார்த்து) இரக்கப்பட்டுக் கொண்டிருக்கும் துன்பமானது  யாசிப்பவரின் மகிழ்ச்சியான முகத்தைக் காணும் வரைக்குமே.

விளக்கம்:- இன்னொருவர் துன்பப்படுவதைப் பார்க்கும்போது நாமும் இரக்கப்பட்டு துன்பமடைவோம். அவருக்கு செய்யக்கூடிய உதவியை செய்தவுடன் அவரது முகம் மலர இருவருமே  சந்தோசப்படுவோம். அதனால் செய்யும் அந்த உதவியைத் தாமதியாமல் உடனே செய்துவிட்டால் அத்துன்பமும் உடனே மறைந்துவிடும்.

Meaning:-The pain of watching the pleading (of a beggar) lasts until seeing the happy face of that beggar.

Explanation:- We will be in pain due to the feeling of sadness for the beggar who pleads for something. As soon as we do the possible help we can; his face will be bright and we also will be happy. So we have to do that help right away without any delay so that both can be happy right away.   

225                  ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.

பொருள்:–  பசியைப் பொறுத்துக்கொண்டு நோன்பு நோற்பாரின் வலிமை (சிறப்பானதே, ஆனால் பசியால் வாடுபவரின்) பசியைத் தீர்ப்பவரின் வலிமையைவிட குறைவானதே. 

விளக்கம்:- பசியைப் பொறுத்துக் கொண்டு நோன்பிருப்பவர் அத்தவத்தால் ஆற்றல் உள்ளவர்களாக இருப்பர். ஆனால் இல்லறத்தானாக இருந்துகொண்டு பசியால் வாடுபவரின் பசியைப் போக்குபவரது ஆற்றல் அதைவிடச் சிறப்பானது.   

Meaning:- The power of penance in enduring hunger is great but the power of those who remove the hunger (of those who do not have enough to eat) is greater. 

Explanation:- The saints who do penance enduring their hunger have great power but the power of the householder who removes the hunger of those who have nothing to eat is greater than that.  

226                  அற்றார் அழிபசி  தீர்த்தல்  அஹ்தொருவன்
பெற்றான் பொருள்வைப்  புழி

பொருள்:- வறியோரின் கொடும்பசியைப் போக்கும் ஒருவன் தன் பொருளைச் 

சேமித்து வைக்கும் இடத்தைப் பெற்றுவிட்டான்.

விளக்கம்:- தேவைக்குப் பயன்படுத்தி மீதியை பின்னர் தேவைப்படும்போது பயன்படுத்த அதைச் சேமித்து வைக்கவேண்டும். உலகப் பொருளாகச் சேமிப்பதைவிட பசியானவர்களின் பசியைப் போக்கி வரும் தர்மமாக சேமிப்பதே அதிஉச்சப் பாதுகாப்பான சேமிப்பிடமாகும். 

Meaning:- He who removes the worst hunger of the poor got the right saving place for his wealth.

Explanation:- We save the balance after using whatever is needed so that we can use it whenever we need it again. The safest way to save is not by worldly means but as our good virtue by removing the hunger of the poor.  

227                  பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.

பொருள்:-   (தன்னிடமிருக்கும் உணவை பசியுள்ள மற்றவர்களுடன்) பகிர்ந்து உண்ணும் வழக்கம் உள்ளவனைப் பசி என்னும் கொடிய நோய் நெருங்குவதில்லை. 

விளக்கம்:- பின்னர் எமக்குத் தேவை என்று இப்போது எம்மிடம் உள்ள உணவை பசியுள்ள மற்றவர்களுடன் நாம் பகிர்ந்துகொள்வதில்லை. நாம் அப்படிச் செய்தால் நமக்குப்  உணவில்லாமல் பசிவரும்போது நமக்குத்தர  எவருமிருக்க மாட்டார்கள். இப்போதுள்ளதை பகிர்ந்து உண்போமானால்  எப்போதுமே எமக்கு பசி இல்லாதவாறு அந்த அறம் செயற்படும்.   

Meaning:-  The dreadful disease of hunger never touches those who have the habit of sharing the food they have (with those who are hungry)  

Explanation:-  We do not share our food with those who are hungry so that we can save that for our next meal. But if we do so, there will be no one to give us when we become hungry and have no food. Instead, if we have the habit of sharing our food with those who are hungry, the virtue shall work in such a way that the dreadful hunger never touches us. 

228                  ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடமை
வைத்திழக்கும் வன்கணவர்

பொருள்:-   (எவருக்கும் கொடாமல்) தமது உடமையாக வைத்திருந்து (பின்னர் அதை) இழந்துவிடுகின்ற  (கருணை இல்லாத) கல்நெஞ்சத்தவர் மற்றவர்களுக்கு கொடுத்து அதனால் அடையும் இன்பத்தை அறியாதவரா?   

விளக்கம்:-  நம்மிடமிருப்பதை அவசிய தேவையுள்ள மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வது சிறப்பான அறமாகும். அப்படியானவர்கள் எப்போதும் துன்பமின்றி இன்பமாகவே வாழ்வார்கள். ஆனால் எவருக்கும் கொடாமல் தமக்காகவே பதுக்கி வைத்துக்கொள்பவர் பின்னர் அவற்றை இழந்து வருந்துவார்கள்.

Meaning:- Don’t those wicked people who lose their hoarded wealth, unaware of the joy that comes from giving (to the poor)? 

Explanation:- Sharing whatever we have with those who need is the virtue of high merit. They who do that will live happily always in life. But those who hoard their wealth without sharing it with those who are in distress will lose that wealth one day and will be miserable. 

247                  அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

பொருள்:- பொருள் இல்லாதவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இன்பம் இல்லை. அதுபோல (கருணையாகிய)  அருள் இல்லாதவர்களுக்கு மறு உலக இன்பங்கள் இல்லை.

விளக்கம்:- இவ்வுலக வாழ்வில் நாம் மகிழ்ச்சியாக, இன்பமாக இருக்கவேண்டுமாயின் பொருள் அவசியமே. அப்படி இப்போது பொருள் கிடைத்து நாம் இன்பமாக வாழ்ந்தாலும் கூட அன்பு கருணையோடு நாம் வாழவில்லையானால் நிட்சயமாக வரவிருக்கும் மறு உலக வாழ்வில் இன்பமாகவோ மகிழ்ச்சியாகவோ வாழவே முடியாது. அதனால் அன்பு, கருணையோடு பொருளைத் தேடி வாழ்வாங்கு வாழ வேண்டும்.

Meaning:-There is no  world for those who do not have kindness.

Explanation:- If we have to be happy and prosperous we need wealth. But even if we have wealth and live happily now, if we do not live with kindness and mercifully then our next life will be miserable. Therefore, we must earn our wealth and live with love and kindness to live happily now and hereafter.  

273                     வலியில் நிலைமையான் வல்உருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்து மேய்ந் தற்று

பொருள்:- (மனத்தைக் கட்டுப்படுத்தும்)  வலிமை இல்லாத நிலையில் உள்ளவனின் பொய்த் தோற்றம் பசுவானது புலியின் தோலைப் பார்த்துக்கொண்டு (பயிரை) மேய்வதைப்  போன்றது.

விளக்கம்:- போலிவேடம் போடுபவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். தமது மனத்தைக் கட்டுப்படுத்தி அதனால் வரும் அருளுரைகளை மக்களுக்குக் கொடுப்பதற்குப் பதிலாக அந்த வலிமை இல்லாத போலிவேடதாரிகள் புலியின் தோலைப்  போர்த்திக் கொண்டு பசு பயிரை மேய்வதை போல  மக்களை ஏமாற்றி நிதி சேர்ப்பார்கள்.

Meaning:- The (deceitful) appearance of the one who does not have the ability to control his mind is like the cow covered with tiger skin eating the crops.

Explanation:- Those who are with deceitful coverings are dangerous. Just like the cow covered with tiger skin eats the crops, those who do not have self-control cheat the people and earn money; instead of giving the virtuous preachings that come from the power of self-control.

280                 மழித்தலும்  நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின் 

பொருள்:- உலக உத்தமர்கள் (இழிசெயல்கள் என்று) இகழக்கூடிய விடயங்களை விட்டுவிட்டால் (வெளித் தோற்றங்களான) தலை மொட்டையடிப்பதோ  சடாமுடி வளர்ப்பதோ தேவையில்லை.

விளக்கம்:- தம்மை நல்லொழுக்க சாதனையாளர் என்று காண்பிக்க சிலர் மொட்டை அடித்தோ அல்லது சிலர் சடாமுடி வளர்த்தோ வேடங்களைப்  போட்டுக் கொள்கின்றார்கள். உண்மையில் வேடங்கள் அவசியமில்லை. உண்மையான நல்லொழுக்கத்தைப் பின்பற்றுவதே தேவையாகும். உண்மையான ஒழுக்கசீலர்கள் எந்தவித வேடங்களும் போடத்  தேவையில்லை.    

Meaning:- Neither a shaven head nor long matted locks are necessary if one abstains from those acts condemned by (the wise men of) the world. 

Explanation:- Some resort to taking the outer appearance of shaven heads or long matted locks to prove that they are followers of good conduct. In fact, the outer appearances are unnecessary. what is needed is to follow good conduct. Real followers of good conduct do not need any special outer look. 

282                  உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.

பொருள்:-   பிறருடைய பொருளை வஞ்சகமாக கவர்ந்துகொள்வோம் என்று மனத்தால் நினைப்பதுகூட குற்றமாகும்.(பாவமாகும்)

விளக்கம்:-  ஒரு தவறான செயலைச் செய்தால்த்தான் பாவமென்பதில்லை. மனத்தால் நினைத்தாலும் பாவம் சேரும். எனவே பிறர் பொருளை களவாடுவோம் என்று நினைக்கவும் கூடாது. 

Meaning:- Even thinking in the mind of stealing deceitfully someone’s belongings is a sin.

Explanation:- Sin does not come only by the execution of a wrong act physically. Even if we think in our mind to do that action is a sin. So not only we should not steal from others but also should not even think of stealing.  

291                  வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.

பொருள்:- உண்மை (பேசுதல்) என்பது என்னவென்றால் (பிறருக்கு) எந்தவொரு தீமையும இல்லாதவாறு சொல்வதாகும்.  

விளக்கம்:-உண்மை என்பது பேசும் சொற்கள் வெளிப்படுத்தும் கருத்தைக் கொண்டு தீர்மானிக்க முடியாது. அதனால் விளைகின்ற பயனைப் பொறுத்தே அது தீர்மானிக்கப்படும். உண்மையைச் சொல்வதால் தீமைதான் விளையும் என்றால் அதை உண்மை என்று கொள்ளமுடியாது. நன்மை தருமாறு பேசுவதே வாய்மையாகும்.

Meaning:-   Truthfulness means saying words that cause no harm to others. 

Explanation:-Truthfulness is not merely telling the facts. It depends on its effect on others. If telling the facts causes harm to others that cannot be considered as truth. Truthfulness is speaking words so that it does not cause any harm to anyone.       

292                  பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.

பொருள்:- குற்றம் இல்லாத நன்மையைத் தருமாயின் பொய்யும் கூட வாய்மையாகவே கருதப்படும்.

விளக்கம்:- ஒரு குற்றமற்றவரை அல்லது ஏதாவதொரு உயிரைக் காப்பாற்றுவதற்காக அல்லது ஒருவருக்கு ஒரு நன்மையைச் செய்வதற்காக நாம் பொய் சொல்ல வேண்டி வரலாம். அப்படியாகச் சொன்ன அந்தப் பொய், பொய் என்று கருத்தப்படாமல் வாய்மை என்றே கொள்ளப்படும். எனவே உள்ளதை உள்ளபடி பேசுவதுதான் வாய்மை என்று கருதாமல் உள்ளதை உள்ளபடி பேச முடியவில்லையே என்று கவலைப் படாமல்; பிறருக்கு நன்மை ஏற்படுமாறு பேசுவதுதான் வாய்மை என்று உணர வேண்டும்.

Meaning:- Even a lie shall be considered as truth if it yields benefit (for others ) without blemish

Explanation:- We may have to tell a lie in order to save some genuine person, do some good to someone, or help others. But in that case, that lie shall not be considered as a lie but considered as truth. We need not bother about being unable to speak the facts as they are, provided we do that in order to help others. So, we just have to speak beneficially to genuine people. 

293                  தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

பொருள்:- தன் மனம் அறியக்கூடியதாக பொய் சொல்லாதீர். (அப்படி) பொய் சொன்னால் பின்னர் தன் மனச்சாட்சியே தன்னை வாட்டும்.

விளக்கம்:- பொய் சொல்லாமல் தூய்மையாக இருக்கும் போதே மனம் நிறைவாக இருக்கும்.அது எமது இயல்பு.  அந்த இயல்பான தன்மையில் இருந்து தவறும்போது எமது மனம் சஞ்சலப்படும். அதனால் எமது மனமே  எம்மைத் துன்புறுத்தும். நாம் பொய் சொன்னால் பாதிக்கப்பட்டவர் எம்மை வருத்தாவிட்டாலும் எமது மனமே எம்மை வாட்டி வதைக்கும். அதனால் நாம் எப்போதும் உண்மை பேசுபவர்களாக இருக்க வேண்டும். 

Meaning:-  Knowingly, do not tell lies. If we do so, later our conscience (itself) will scorch us.   

Explanation:-  It is human nature, to be honest. If we are honest, we shall be peaceful. If we tell lies against our own nature, even if the person affected does not react, our own conscience itself will scorch us. So we should avoid telling lies at any cost.

294                  உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்

பொருள்:- (தன்) உள்ளுணர்வுக்கு உண்மையானவனாக வாழ்ந்தால் (ஒழுகுபவனானால்) உலகத்தவர் எல்லோரின் உள்ளத்திலும் இருப்பான்.

விளக்கம்:- மற்றவர்களுக்குத் தெரியாதுதானே என்று நம்பித்தான் நாம் தவறு செய்கின்றோம். எமது உள்ளுணர்வுக்கு  சரி பிழை நிட்சயம் தெரியும். எமது உள்ளுணர்வின்படி அதாவது மனச்சாட்சிப்படி சரியாக நாம் நடந்தால் தவறே செய்ய வாய்ப்பில்லை. அப்படி நாம் தவறே  செய்யாதவர்களாக இருந்தால் உலகத்தில் அனைவரும் எம்மைத் உயர்வாக மதித்து தம் மனதில் வைத்திருப்பர்.  

Meaning:- One will be in the heart of all in the world if he lives truthfully to his conscience. 

Explanation: We misbehave believing that others will not come to know about it. But our conscience knows whether our behavior is right or wrong. If we behave according to our conscience, we can never misbehave. So, if we live according to our conscience, everyone will keep us in their heart with respect. 

295                  மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானம்செய் வாரின் தலை.

பொருள்:- மனத்தின் (முழு) ஈடுபாட்டோடு உண்மையைப் பேசுபவன் தவத்தோடு தானதருமங்களைச் செய்பவரை விடச் சிறந்தவனாவான் 

விளக்கம்:- பிறர் நன்மையை வேண்டிச் செய்வதே தான தருமங்கள் ஆகும். பிறர் நன்மையை  மனத்தால் நினைத்தால் அதுவே தவமாகும். பேசுகின்ற அனைத்திலும் பிறர் நன்மையை வேண்டிப் பேசுவதே வாய்மை அதாவது உண்மை. எனவே மனத்தால் பிறர் நன்மையை வேண்டி வாய்மையைப் பேசுகின்றபோது அதில் மனம் சொல் செயல் மூன்றுமே சேருகின்றது. எனவே மனஈடுபாட்டோடு வாய்மையைப் பேசுகின்றவன் தனியே தானங்களையோ அல்லது தவத்தையோ செய்பவரை விடச் சிறந்தவனாகின்றான்.   

Meaning:- Those who speak the truth from their heart are superior to those who do penance and charity. 

Explanation:-  Truth in action is charity. Truth in mind is penance. Truth in mind, words, and action are there when speaking the truth from the heart. Therefore, speaking the truth from the heart is superior to charity and penance. 

296                  பொய்யாமை அன்ன புகழ்இல்லை எய்யாமை
எல்லா அறமும் தரும்.

பொருள்:- (சுய நன்மைக்காக) பொய் பேசாதிருத்தலைப் போன்ற சிறப்பு (வேறெதுவும்) இல்லை. (அது எக்காலத்திலும் நாம்) வருந்தாமல் வாழக்கூடியதாக அனைத்து அறங்களையும் தரும்.

விளக்கம்:- சுயநன்மைக்காகவேதான் ஒருவர் பொய் பேச வேண்டி வருகின்றது. அப்படி சுயநன்மை  கருதாமல் வாழ்பவர் பொய் பேசத் தேவையில்லை.  ஆகவே பொய் பேசாத, அதாவது முற்றாகச் சுயநலம் இல்லாத வாழ்வில் அனைத்து அறங்களும் அடங்கியுள்ளன. பொய் பேசாத வாழ்வினால் இம்மையிலும் மறுமையிலும் துன்பமின்றி வாழ்வதற்கான அனைத்து அறங்களும் சேர்ந்து கிடைக்கின்றன. 

Meaning:- There is nothing better than being truthful. (Being truthful) yields all the righteous merits to live without suffering.

Explanation:- We lie only for some selfish reason. There is no need to tell lies if we are not selfish. If we live without telling lies, that amounts to being a selfless person who has all kinds of righteous merits to live without any suffering. There is nothing parallel to being truthful in life.  

298                  புறம்தூய்மை நீரான் அமையும் அகம்தூய்மை
வாய்மையால் காணப்  படும்.

பொருள்:- புறஉடலின் தூய்மை நீரால் சாத்தியமாகும். (நமது) உள்ளத்தின் தூய்மை உண்மை பேசுவதால் சாத்தியமாகும்.  

விளக்கம்:- நமது உடலில் இருக்கும் அழுக்குகளே நமது நோய்களுக்குக் காரணமாகின்றன.நமது உள்ளத்தில் இருக்கும் அழுக்குகளே நமது துன்பங்களுக்குக் காரணமாகின்றன. உடல் அழுக்குகளை நீரால் போக்குவதைப் போல நாம் உண்மை பேசுவதால் மட்டுமே நமது உள்ளத்தில் உள்ள அழுக்குகளை போக்கலாம். 

Meaning:- External purity is possible with water. (In the same way) The purity of our inner personality (heart) is possible with truthfulness.

Explanation:- If we keep our body dirty we become sick. If we keep our minds dirty, we become unhappy. We can purify our body with water and in the same way we can purify our mind only by being truthful. 

300      யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்

வாய்மையின் நல்ல பிற.

பொருள்:-  நாம் மெய்நூல்களாக (அற நூல்களாக) கண்ட எவற்றிலுமே உண்மை பேசுதலைவிடச் சிறந்த அறம் வேறெதுவும் எவ்வகையிலும் இல்லை. 

விளக்கம்:- எது அறம் எது அறம் இல்லை என்று அறநூல்கள், மெய்நூல்கள் விளக்குகின்றன. அவை எல்லாமே உண்மை பேசுதலையே மிகச் சிறந்த அறமாகச் சொல்கின்றன. உண்மை பேசுதலே அனைத்து அறங்களினதும் அத்திவாரமாகும். 

Meaning:- In all the holy books we found, those talk about virtues;  by all means, there is nothing that excels than speaking the truth.      

Explanation:- The books that talk about virtues explain which are virtues and which are not. They all conclude that telling the truth is the prime virtue. Telling the truth is the base of all virtues. 

301     செல்லிடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால்  என் 

பொருள்:-  (தன் கோபத்தைச்) செலுத்தக்கூடிய இடத்தில் (கோபம் கொள்ளாமல்) காப்பவனே (உண்மையில்) கோபத்தை காத்துக் கொள்கின்றான். அப்படியில்லாமல் (கோபத்தைக் வெளிக்காட்ட இயலாத இடத்தில் அதை) பொறுத்தால் என்ன பொறுக்காமல் விட்டால் என்ன?  

விளக்கம்:- எம்மைவிட வலியார் மேல் எமக்குப் பெரும் கோபம் வந்தாலும் அதை வெளிக்காட்ட முடியாத காரணத்தால் கோபத்தை அடக்கிக் கொள்கின்றோம். ஆனால் அதை வைத்துக்கொண்டு கோபத்தை வென்றுவிட்டோம், அடக்கினோம் என்று சொல்ல முடியாது. எமது கோபத்தை வெளிக்காட்டக் கூடிய சாதிக்கக் கூடிய எம்மைவிட மெலியார் மேல் கோபம் வரும்போது அதை அடக்கிக் கொண்டோமானால்; எதிர்வினை ஆற்றாமல் இருப்போமானால் அதைத்தான் எமது சாதனையாக, நல்முயற்சியாக எடுத்துக் கொள்ளலாம். அதைத்தான் நாம் பயிற்சிக்க வேண்டும்.

Meaning:- The one who refrains from anger toward someone on whom he can retaliate does refrain from anger. If not (you refrain from anger on someone because you could not express it) no matter whether you refrain or not 

Explanation:- When we get very angry with someone more powerful than us we refrain from that anger. But that can’t be considered as we have refrained from anger. If you refrain from anger with someone weaker than you; on whom you can express it and retaliate, then you have refrained from anger. So it is a good moral exercise to refrain from anger on those who are weaker than us. 

303                  மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனால் வரும்.

பொருள்:-  (எம்மை விட வலியாரோ அல்லது மெலியாரோ) எவரிடத்திலும் கோபம் கொள்வதை (முற்றாகத்) தவிர்க்கவும். (ஏனென்றால்) தீமைகள் அந்தக் கோபத்தினாற்தான் வருகின்றன.

விளக்கம்:-  எம்மைவிட வலியவர் என்றோ எம்மைவிட மெலியவர் என்றோ பார்த்து நாம் எமது கோபத்தை வெளிக்காட்டலாம் அல்லது பொறுத்துக் கொள்ளலாம். வலியார் என்று அந்தக் கோபத்தை உடன் பொறுத்துக்  கொண்டாலும் பின்னொரு வேளையில் அது வேறு வகையான தீமையாகச்  செயற்படும். கோபம் வந்தது எமக்குள்ளேதான். எமது கோபம் முதலில் எமது மனத்தையும் பின்னர் உடலையுமே பாதிக்கின்றது. ஆதலால் தீமைகளுக்கு மூலகாரணமான கோபம் வருவதையே முற்றாகத் தவிர்க்க  வேண்டும்.   

Meaning:- Avoid anger with anyone (whether they are stronger or weaker than us). (Because) All evil springs from anger.

Explanation:- We can show off or not, our anger depends on whether they are stronger or weaker than us. Even if we tolerate anger because we can’t show off due to possible consequences, that will work in some other way at some other time, causing damage. Anger comes within us and affects our minds first and then our bodies. So we must avoid anger under all circumstances and by all means.

304                  நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.

பொருள்:- முகச் சிரிப்பையும் அக மகிழ்ச்சியையும் இல்லாதொழிக்கும் கோபத்தைவிட கொடிய பகைவர் வேறு உண்டோ?. (இல்லை)  

விளக்கம்:- எதிரிகள் துன்பம் தந்தாலும் கூட நாம் எமது புன்னகையையும் மகிழ்ச்சியையும் பேணலாம். ஆனால் கொடிய கோபம் வந்துவிட்டால் மனம் கொதிப்படைந்து மகிழ்ச்சியையும் சிரிப்பையும் இழப்பதோடு எமது சுயசுபாவமும் போய் முகமும் கோரமாக மாறிவிடும். எந்தப் பகைவர்களும் அந்தளவுக்கு எம்மை வருத்த முடியாது. நமது கோபமே எமது மிகப்பெரிய எதிரி.

Meaning:- Is there any worse enemy than Wrath that destroys our smile and joy? (NO)  

Explanation:-  Our enemies can cause damage to us but still, we can choose to keep up our smiles and happiness but when we get very angry, we lose ourselves, our total personality, our stability, peace, and happiness. So the wrath is our worst enemy.

305                 தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.

பொருள்:-  தன்னை (துன்பங்கள் வராமல்) தானே காப்பாற்ற வேண்டுமானால் (தனக்கு) கோபம் வராதவாறு பாதுகாப்பானாக. அப்படிப் பாதுகாக்கவில்லை யென்றால் அக்கோபமானது தன்னையே (வருத்தி) அழித்து விடும்.  

விளக்கம்:- எமது பெரும்பாலான துன்பங்களுக்கு எமது கோபமே காரணமாகிறது. நாம் கோபம் கொள்ளும்போது உணர்ச்சி வசப்பட்டு பகுத்தறிவு செயலிழப்பதால் விளைவுகளை சிந்திக்காமல் செயற்பட்டு மிகப்பெரிய தவறுகளைச் செய்து எமது துன்பத்திற்கோ  அழிவிற்கோ  காரணமாகி விடுகிறோம். அதனால் நாம் உரிய முன்யோசனையால் கோபம் கொள்ளாதிருக்கப்  பழகிக் கொள்ள வேண்டும்.    

Meaning:- If you want to protect yourself from miseries, you must protect yourself from your anger. If you do not do that; your anger will destroy you.  

Explanation:- Most of our problems come because of our anger. When we get angry we become very emotional, lose our discriminative power, and commit mistakes that cause great damage to us. So if we want to guard ourselves from such damage we have to guard ourselves against our anger through proper discipline and discrimination.  

306                  சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும்.

பொருள்:-  தன்னைக் கொண்டிருப்பவரை அழிக்கின்ற கோபமானது  (கோபம் கொண்டவரை  மட்டுமன்றி) தெப்பமாக அவரைத் தாங்கி நிற்கும் அவரைச் சேர்ந்தவர்களையும்  (துரத்தி) அழித்துவிடும்.

விளக்கம்:- கோபமானது கோபம் கொண்டவரை வதைப்பது மட்டுமல்லாது அவருக்குப் பாதுகாப்பாக இருக்கும் அவரைச் சேர்ந்தவர்களையும் தன்னில் இருந்து விரட்டி அழித்து விடும். எனவே மிகப்பெரிய நாசகாரியான எமது கோபத்தை குறைத்து அது வராமல் இருப்பதற்கு எம்மால் ஆன அனைத்து வழிமுறைகளையும் கையாள வேண்டும்.

Meaning:- The anger that destroys the person who gets it; also (chases away and) destroys his safeguarding members.     

Explanation:-  Anger is the greatest enemy because it will not only destroy the person who gets it but also chase away and destroy his safeguarding members. So it is most important that we must subdue and annihilate our anger by all means.

307                  சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று

பொருள்:-  நிலத்திற்கு அடிப்பவனின் கைக்கு(தான்) வலிக்கும் என்பது உறுதிபோல கோபத்தை (தன்) ஆற்றல் என்று எடுத்துக் கொள்பவனின் அழிவு (உறுதியாகும்)

விளக்கம்:- நமக்குப் பலம் இருப்பதாக நினைத்து நிலத்திற்கு ஓங்கி அடிப்பதால் உண்மையில் நிலத்திற்கு பாதிப்பு ஏற்படாது. எமது கைக்குத்தான் வலிக்கும். அதுபோல எமக்கு கோபம் வந்தால் நாம் இன்னும் பலமாகத் தாக்குகின்றோம் என்று நினைத்துச் செயற்பட்டாலும்  உண்மையில் அது எம்மைத்தான் அதிகமாக வதைக்கும். எனவே கோபம் எமது பலவீனமே தவிர பலம் அல்ல என்பதை உணர வேண்டும்.

Meaning:- The destruction of the person who takes his anger as his power is so sure as the one who hits the ground gets his hand hurt. 

Explanation:- If we think we can hit the ground hard with our hand, our hand gets hurt and not the ground. Similarly, If a person takes his anger as a sign of his power, he will surely destroy himself. So let us understand that anger is our weakness and not our strength.

308                  இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.

பொருள்:-  பெருந்தீயில் போடுவதைப் போல கொடுமை செய்தாலும் (பின்னர் தவறை உணர்ந்து மனம் திருந்தி) சேர்வாராயின் கோபம் பாராட்டாமல் இருப்பது நன்று.   

விளக்கம்:- ஒருவர் தன் அறியாமையால்த்தான் இன்னொருவரை வதைக்கிறார். ஆனால் அறிவு தெளியுமானால், தெளியும்போது தன் தவறை உணர்ந்து திருத்துவார். அப்படி ஒருவர் தன் தவறை உணர்ந்து மனம் வருந்தி மீண்டும் சேர்வாரானால் அவரை  வெறுக்காமல் ஏற்றுக்கொள்வதுதான்  நமக்கு நன்மையாகும். தொடர்ந்தும் நாம் கோபத்தையே கொண்டிருந்தால் எமது மனச்சாட்சியே எம்மை வருத்தும்.   

Meaning:-  Even if someone hurts you like putting you into a raging fire, if he joins you again (repenting for his fault) it is better not to hate him.    

Explanation:-  Someone hurts another one so painfully because of his ignorance. But if he gets the wisdom he will repent for his mistake. If he joins again repenting and realizing his fault it is better to accept him without repudiating him. If we continue to hate him our conscience will torch us. 

310                  இறந்தார் இறந்தார் அனையர்  சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.

பொருள்:-  பெரும் கோபம் கொண்டவர் (தன் சுயத்தன்மையை இழப்பதால்) இறந்தவர்களுக்கு சமமாவர். கோபத்தை (முற்றிலும்) விட்டு விலகியவர், உலகக் கட்டுகளிலிருந்து விடுபட்ட ஞானியருக்குச் சமமாவர்.  

விளக்கம்:- அளவுகடந்த கோபம் கொண்டவர் அவரது சுயத்தன்மையில் இருந்து இறந்துவிடுகிறார். வேறொரு மிருகம்போல செயற்படுவார். ஆனால் கோபமே வராதநிலையில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டால் ஞானியருக்கு சமமாகிவிடுவர்.  

Meaning:- Those who are caught up in extreme anger are like dead(as they lose their personality). Those who have conquered anger are like saints who have renounced the world. 

Explanation:- Those who are in extreme anger lose their personality and behave like an animal. But those who have conquered anger, remain in their mental equilibrium and behave like a saint who has renounced the world.   

311                  சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
செய்யாமை மாசற்றார் கோள்

பொருள்:-  மேன்மைகளைத் தரக்கூடிய செல்வங்களை அடைவதாய் இருந்தாலும் (அதற்காகக் கூட ) மற்றவர்களுக்கு தீமை செய்யாதிருத்தலே (தூய்மையான) குற்றமற்ற மனதுடையோரது  கொள்கையாகும். 

விளக்கம்:- அழுக்காறு இல்லாத தூய்மையான மனம் உடையவர்களுக்கு ஒரு கொள்கை இருக்கும். எவ்வளவு மேன்மையான செல்வங்களாயினும் பிறருக்கு தீமைகளைச் செய்வதன் மூலம் அந்தப் பெரிய  நன்மையை அடைய விரும்பமாட்டார்கள். காரணம் அது உடனடியாக நன்மையாகத்  தென்பட்டாலும் பின்னர் பேரழிவாகவே முடியும் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். 

Meaning:- It is the policy (conviction) of pure-hearted people, not to harm others even to gain treasures that can give all high comforts.  

Explanation:- The pure-hearted people maintain a policy in their life. They know that the treasure acquired by inflicting pain on others will not give them lasting benefits. They know for sure that they will get ruined at the end by such wealth. So they never do that.

314                  இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்துவிடல்.

பொருள்:- தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்கான வழி அவர் மனம் வெட்கிக் குறுகும்படி பேருபகாரம் செய்து விடுவதாகும். 

விளக்கம்:- ஒருவர் செய்த தீமைக்கு தண்டனையாக அவருக்குத்  திருப்பி நாம் பெரும் உபகாரம் செய்துவிட்டு அவரிடம் எதையும் எதிர்பாராமல் மறந்து விடவேண்டும். அதனால் அவர் மனம் கனிந்து, உதவியின் மேன்மையை  உணர்ந்து அதை அனுபவித்து மனம் திருந்தி அதன்பின் தானும் அதுபோல நன்மைகளையே செய்வார்.

Meaning:- The way to punish someone who has hurt us is to give a beneficial reward (to him) so that he becomes ashamed of himself.

Explanation:- If we forgive and give a beneficial reward to the person who has hurt us and forget what he has done without expecting anything in return, he becomes ashamed of himself due to his mental reformation and he will never harm anyone in the future and also starts helping others.     

315                  அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தம்நோய்போல் போற்றாக் கடை  

பொருள்:- பிற உயிர்களின் துன்பத்தை தமது துன்பமாகக் கருதிச் செயற்படா விட்டால் (தாம் பெற்ற) அறிவினால் (ஏதாவது) பயன் உண்டோ?.  

விளக்கம்:- தனது கண்முன்னே மற்ற உயிர் ஒன்று துன்பப்படுகின்றது என்றால் அதை தன் துன்பமாகக் கருதி அதைப் போக்கச் செயற்படுவதே அறிவார்ந்த செயலாகும். மெய்யறிவின் பயனே அதுதான். நாம் உண்மையில் உயர்வான அறிவுள்ளவர்களாயின் அப்படித்தான் செய்வோம். இல்லாவிட்டால் எமது அறிவு பயனற்றதே.   

Meaning:- What use of the (true) knowledge unless it prompts one to prevent the pain of another one, taking that as his own pain? 

Explanation:- If we find someone suffering in front of us, the wise action is to act promptly to cure his pain; taking that as our own pain. That is how the truly knowledgeable person (wise man) should act. That is the purpose of true knowledge. Otherwise, his knowledge (wisdom) becomes useless. 

316                  இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்.

பொருள்:-  வேதனை (துன்பம்) என்று தான் உணர்ந்தவற்றை பிறருக்குச் செய்வதை தவிர்க்க வேண்டும்.

விளக்கம்:- பிறருக்கு எதைச் செய்யலாம் எதைச் செய்யக்கூடாது என்று தெரிந்துகொள்வது மிக மிக  இலகுவானது. எமக்கு எது எது துன்பத்தைத் தருகின்றனவோ அவற்றை நாம் பிறருக்குச் செய்யக்கூடாது.  

Meaning:- Avoid doing to others whatever you experience as pain.

Explanation:- It is so easy to know what you should do to others and what you should not. We should not do to others whatever we experience as pain to us.

318                  தன்னுயிர்க்கு இன்னாமை தான்அறிவான் என்கொலோ

மன்னுயிர்க்கு இன்னா செயல்.

பொருள்:-  தனக்கு (இன்னொருவரால்) வரும் துன்பத்தை அனுபவித்தவன் இன்னொரு உயிருக்குத் துன்பம் செய்வது எவ்வாறோ?. 

விளக்கம்:- நாம் ஒருவருக்குத் துன்பம் செய்தால் அது மீண்டும் இன்னொருருவரால் எமக்கு கிடைக்கும் எனபது இந்த இயற்கையின் நியதி. இன்னொருவரால் துன்பம் தரப்படும்போது அந்த வேதனையை அனுபவமாக உணர்ந்தபின்பும் நாம் பிறருக்கு துன்பம் செய்கிறோம் என்றால் நமது அறியாமை பேதைமை எவ்வளவாக இருக்கிறது?. நாம் விழிப்படைய வேண்டும். பிறருக்கு தீமை செய்யவே கூடாது.

Meaning:- How come, the one who experiences the pain inflicted on him (by another; goes and) inflicts pain on others?

Explanation:- The pain you cause to others will come back to you from someone else. That is the law of nature. How far we are ignorant to cause pain to others even after experiencing that pain given by others?  We must become enlightened and cause no pain to anyone. 

319                  பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்

பொருள்:-  முற்பொழுதில் பிறருக்குத் துன்பம் செய்தால் பிற்பொழுதில் தாமாகவே அத்துன்பங்கள்  தமக்கே வரும் 

விளக்கம்:- நாம் நமக்குத் துன்பம் செய்ய மாட்டோம். ஆனால் பிறருக்குத் துன்பம் செய்வோம். பிறருக்குச் செய்யும் துன்பம் உண்மையில் நமக்குத்தான் திரும்பி வரும் என்பதை உணர்ந்தால் நாம்  பிறருக்குத் துன்பம் செய்வோமா?. நாம் பிறருக்குச் செய்யும் துன்பமே நமக்குத் திரும்பி வருகின்றன. அதனால் நாம் பிறருக்கு துன்பம் செய்யவே கூடாது.

Meaning:- If we cause sorrow to someone in an earlier time that will come back to us of its own in a later time.  

Explanation:- We don’t hurt ourselves. But we hurt others. If we realize that, only the pain we give to others comes back to us; will we do that?  It is the fact that whatever pain or hurt we give to others comes back to us. So, if we do not want to be hurt, we should hurt others.     

320     நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோய்இன்மை வேண்டு பவர்.

பொருள்:-  துன்பங்கள் எல்லாம் துன்பம் கொடுத்தவருக்குத்தான் (திரும்பக்) கிடைக்கிறது. தனக்குத் துன்பம் வேண்டாம் என்று நினைப்பவர் (பிறருக்குத்) துன்பம் செய்யமாட்டார்.

விளக்கம்:-  நாம் ஒருவருக்குத் துன்பத்தைக் கொடுத்தால் அது நிட்சயமாக நமக்குத் திரும்பக் கிடைக்கிறது. இந்த இயற்கையின் விதி அதுதான். ஆகவே துன்பம் வேண்டாம் என்று நாம் நினைத்தால் அதற்கு வழி மிக இலகுவானது. அதாவது பிறருக்கு நாம் துன்பம் செய்யாமல் இருந்தால் நமக்குத் துன்பம் வரவே மாட்டாது.   

Meaning:- All suffering goes to those who gave that to others. Those who do not want to suffer will not do that to others. 

Explanation:- It is a firm law of nature that any pain you give to others will come back to you. Do you want to be without any pain /suffering? That is very simple. You won’t get any suffering provided you do not do any harm/suffering to others.

350                  பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

பொருள்:- ஆசைகள் அற்றவராகிய  இறைவன் மீதான அன்பினைப் பற்றிப் பிடித்துக் கொள்க. (உலகப் பொருட்களின் மேலுள்ள) ஆசைகளை விடுவதற்கு (இறைவன் மீதான) அப்பற்றைப் பிடித்துக் கொள்க.  

விளக்கம்:- ஏதாவது ஒன்றைப் பற்றிப் பிடித்துக் கொள்வது மனித மனத்தின் இயல்பாகும். இந்த உலகப் பொருட்களில் பற்றியுள்ள ஆசையால் நாம் துன்பப்படுகின்றோம். மனம் இப்போது பிடித்துக் கொண்டுள்ள இந்த உலகப் பொருட்களின் ஆசைகளை விட்டு விடுவதற்கு ஒரே வழி உலகப் பொருட்களில் பற்றில்லாதவராகிய அந்த இறைவனை அன்பினால் பற்றிப் பிடித்துக்  கொள்வதே. மனம் இறைவனைப் பற்றிவிட்டால் உலகப்பற்றை விட்டுவிடும். 

Meaning:- Hold on to the love of God who has no hold (on these worldly things). Hold on to Him (God) in order to get rid of our (worldly holds) desires.

Explanation:- It is the nature of our mind to hold on to something. Now we are suffering because of the hold; because of our desire for these worldly things. We can get rid of these worldly desires and be happy only by holding on to the love of God who has no desires. When we hold on to the love of God, our hold on worldly things will be severed.

355                  எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

பொருள்:- எந்தெந்தப் பொருள் (தோற்றத்தில்) எப்படி எப்படி எல்லாம் இருந்தாலும் அதனுடைய உண்மைத் தன்மையைக் காண்பதே மெய்யறிவாகும்.

விளக்கம்:- ஒருபொருள் வெளித்தோற்றத்தில் எப்படி எப்படி எல்லாமோ இருக்கும். அந்த வெளித் தோற்றங்களை நீக்கி அதன் உள்ளிருப்பை, உண்மைத் தன்மையை அறிவதுதான்  அறிவுடைமையாகும். அதுபோல ஒருவர் அவரது தோற்றத்தால் கல்வியால் செல்வ  நிலையால்  பதவி நிலையால்  சமூக அந்தஸ்த்தால் இனத்தால் sஅப்படியான வெளித்த தோற்றங்களை யெல்லாம் விலக்கி அவரது உள்ளத்தின் தன்மையை; உயர்வு தாழ்வைக் கண்டு கொள்வதே உண்மையான மெய்யறிவாகும்.  

Meaning:- True knowledge is to perceive the reality of an object despite whatever kind or form it may be.

Explanation:- An object may have different color shape material etc. But the true knowledge is to know the essence of it. Similarly, a person may have a life in society with his level of appearance, education, status, finance, ethnicity, religion, etc. But the true wisdom is to find the status of his heart and mindset.    

391                  கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

பொருள்:-கற்பவற்றை ஐயம் திரிபறக் கற்கவேண்டும். கற்றபின் அதற்குத் தகுந்தவாறு வாழ வேண்டும்.

விளக்கம்:- நாம் கற்கும் விடயம் நமக்குத் தெளிவில்லை என்றால் அவை நம் மனதில் பதியாது. அதனால் கற்கும்போது ஐயத்திற்கு இடமில்லாமல் மேலும் கேள்விக்கு இடமில்லாமல் முழுமையாக விளங்கி தெளிந்து கொள்ளவேண்டும். அதன்பின் அப்படிக் கற்றவற்றிற் கேற்ப எமது  வாழ்க்கையை வாழவேண்டும். அப்போதுதான் கற்றதன் பயனைப்  பெறுவோம்.

Meaning:- Learn beyond any doubt, and after learning whatever you learn, live according to them.

Explanation:- Whatever we learn, we have to learn beyond any doubt, otherwise it won’t stay in our minds. But after learning that way it is more important to live accordingly in order to get the benefit of that.   

392                  எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

பொருள்:- எண்கள் மற்றும் எழுத்துக்கள் ஆகிய இவையிரண்டும் உயிர் வாழ்பவர்களுக்கு (அவர்களின் இரண்டு) கண்கள் போலாகும்.

விளக்கம்:-  எப்படி கண்கள் இரண்டும் இல்லாவிட்டால் நாம் உலகில் எதையுமே பார்க்கவோ  தெரிந்து ள்ளவோ முடியாமல் இருக்குமோ அதைப்போல, (எண்)கணித அறிவும் (எழுத்து) மொழி அறிவும் இல்லாவிட்டால் எமக்கு இவ்வுலகில் எதையுமே அறியவோ தெரிந்து கொள்ளவோ முடியாது. அதனால் உலகில் வாழுகின்ற எமக்கு அவை எமது இரண்டு கண்கள் போன்றவையாகும்.

Meaning:- For all those who live in this world, Numbers (Maths) and Letters(Language) are just like their two eyes.

Explanation:- If we do not have our two eyes we cannot see or visualize this world. In the same way, if we do not have the knowledge of Mathematics (Numbers) and Language (Letters) we cannot visualize or understand anything in this world. So they both are like their two eyes for everyone living in this world.

394                  உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

அனைத்தே புலவர் தொழில்.

பொருள்:-  (தம்மைச் சந்திப்பவர்கள்) ஆனந்தம் கொள்ளுமாறு கூடிக் கலந்துரையாடி (இனி இவரை எங்கு எப்போ சந்திப்பது என்று) ஆவல்கொள்ளவைத்துவிட்டுப் பிரிந்து செல்வதைப்  போல்  கற்றவர்களின் செயல்கள் (அமையும்) 

விளக்கம்:- ஆழமான அறிவும் பண்பும் உள்ளவரோடு அளவளாவி கலந்துரையாடும் போது  அவரிடமிருந்து கிடைக்கும் அறிவுமழையால் நாம் ஆனந்தம் அடைவோம். எம்மை ஆனந்தப்பட வைத்த அன்பு, அறிவு, பண்பு உள்ள கற்றவர்களை மீண்டும் எப்போது சந்திப்போம் என்று ஏங்குவோம். கற்றவர்களின் செயல்கள் அவ்வாறு  தான் இருக்கும். நாம் விரும்பாதவர்கள் என்றால் எப்போது இவரிடம் இருந்து அகன்றுவிடலாம் என்றுதான் நினைப்போம். எனவே நாமும் கற்றறிவோடு அன்பும் பண்பும் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.  

Meaning:- The prowess (action) of the learned is giving delight and pleasant thoughts while engaging and then departing giving anxiety (for the next chance to meet them).   

Explanation:- We will get drenched in love and be delighted when engaging with learned men because of their treasure of knowledge.  We shall be yearning to meet them again. But if we are not interested in someone, we shall try to avoid meeting them again. So it is so important for us to be loving and educated. 

395                  உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா  தவர்.

பொருள்:- (செல்வம்) உடையவர்கள்முன் இல்லாதவர்கள் (பணிவு காட்டுவது ) போல பணிவாக இருந்து கல்வி கற்போர் (மேன்மையானவரே). (அப்படியாக) கற்காதவர்கள் (மிக) இழிவானவர்களே. 

விளக்கம்:- வறுமையானவர்கள் செல்வம் வேண்டுமென்றால் செல்வந்தர்முன் பணிவாகத்தான் கேட்கவேண்டும். அப்போதுதான் கிடைக்கும். அதில் தவறில்லை. அப்படி  இல்லை யென்றால் கிடைக்காது. அதைப்போல எமக்கு கல்வி வேண்டுமென்றால் ஆசிரியர்முன் நாம் பணிவாக இருந்தால் தான் அது எமக்கு மனதில் பதியும், முழுமையாகக் கிடைக்கும். கற்று மேன்மை அடையலாம். அப்படி  பணிவின்றி கற்காமல் விடுவோர் மிக இழிவானவர் களாகவே இருப்பர். 

Meaning:- Just like the poor (who behave obediently) in front of the rich, those who learn obediently (from their teachers shall become the best) and those who do not learn so shall be the lowest.

Explanation:-  The poor shall be obedient in order to receive from the rich, otherwise, they won’t get anything. In the same way, the student must be obedient to their teachers and learn so that the matter goes deep into their brains, and they shall become the best. Those who did not learn so shall be the lowest. 

396                  தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.

பொருள்:- மண்ணில் தோண்டும் (ஆழத்தின்) அளவுக்குத்தான் கிணற்றில் நீர் ஊறும். (அதுபோல) மனிதருக்கு கற்கும் அளவுக்கே அறிவு பெருகும்.

விளக்கம்:- நாம் எவ்வளவுக்கு ஆழமாக கிணற்றைத் தோண்டுகின்றோமோ அவ்வளவுக்கு நீர் அதிகமாக கிடைக்கும். அதேபோன்று நாம் எவ்வளவுக்கு அதிகமாக கற்கின்றோமோ  அவ்வளவுக்கு அறிவு அதிகமாக பெருகும். எனவே எம்மால் முடிந்த அளவுக்கு  அதிகமாகக் கற்று அதிக அறிவுள்ளவர்களாக வர வேண்டும்.

Meaning:- The amount of water in a well depends on the depth we dig. The amount of knowledge of people depends on the amount they learn.

Explanation:- Everyone wishes to get the maximum amount of water from their well. They have to dig more and more to get more water. In the same way, people have to learn more and more in order to get more and more knowledge. So we have to learn the maximum possible and be knowledgeable.

397                  யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.  

பொருள்:-  (கற்றுத் தெளிவடைந்தவனுக்கு) எந்த நாடானாலும் எந்த ஊரானாலும் அவை தனதாகவே  அமையும் (என்பதை அறிந்தும்கூட) ஒருவன் இறக்கும்வரை கற்காமலே இருப்பது ஏனோ?.

விளக்கம்:- கற்றுத் தெளிவடைந்தவர்களை எல்லா ஊராரும் வரவேற்பர்,எல்லா நாட்டாரும் வரவேற்பர். அப்படி எல்லா ஊராராலும் எல்லா நாட்டாராலும் வரவேற்கப் படுகின்ற சிறப்பு கற்றுத் தெளிவடைந்த வர்களுக்குத்தான் இருக்கிறது என்பதை அறிந்தும், இறக்கும்வரை கற்காமலே காலம் கழிப்பது ஏன் தானோ?. எனவே வாழும்வரை கற்றுத் தெளிவடைவோம்.

Meaning:- Knowing that knowledge helps to have all villages and all nations as his own, how does someone live without education until death? 

Explanation:- All villages and nations welcome the knowledgeable person. He feels all places as his own. An ignorant person will not be accepted anywhere. This emphasizes the importance of education. It is pathetic that someone does not become educated until death. 

398                  ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.

பொருள்:- ஒருவருக்கு தான் ஒரு பிறவியில் கற்ற கல்வியானது (அடுத்து வரக்கூடிய) ஏழு பிறவியிலும் சென்று உதவக்கூடியது. 

விளக்கம்:- பொருட்செல்வம் அழியக்கூடியது. இறக்கும்போது எதையும் கொண்டுசெல்ல முடியாது. ஆனால் கல்விச் செல்வமானது இறந்தாலும் உயிரோடு கூடவே செல்லக்கூடியது. ஒரு பிறவிக்கு மட்டுமல்லாது அடுத்த ஏழு பிறவிக்கு கூட, கூடவே சென்று உதவும். ஆகையால் அதன் அருமை உணர்ந்து நாம் நமது கல்விக்கு (அறிவிற்கு) முன்னுரிமை கொடுக்க வேண்டும். 

Meaning:- The education that one person gets in this birth can help him (not only in this birth but) up to seven births to come.

Explanation:- Any worldly wealth that someone acquires shall not be with them permanently. When that person dies it won’t go with him. But the education that someone gets will not only help him in this birth but also will go with him even to seven births to come. So realize the worth of education (knowledge) and give top priority to that. 

400     கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை

பொருள்:- ஒருவருக்கு கல்வியே அழிவில்லாத உன்னதமான செல்வமாகும். மற்றவையெல்லாம் செல்வங்களே அல்ல. 

விளக்கம்:- ஒருவருடைய கல்விச் செல்வத்தை எவராலும் அபகரிக்கவோ அழித்துவிடவோ முடியாது. ஒருவனுக்கு அவனுடைய கல்விதான் என்றைக்குமே அழிவில்லாத செல்வமாகும். கல்விச் செல்வம் இருந்தால் ஏனைய செல்வங்களையும் பெற்றுக்கொள்ளலாம். செல்வம் என்று  சொல்லுகின்ற ஏனைய எவற்றையும் நாம் செல்வம் என்றே மதிக்க முடியாது. அவை உன்னதமற்ற அழிந்துவிடக்கூடியவை ஆகும்.  

Meaning:- Education is the noblest and undestroyable wealth for anyone. Any other wealth cannot be considered as wealth. 

Explanation:– No one can grab or destroy someone’s education. If someone has an education, that will be enough for them to lead a happy life. They can earn and have any other wealth if they have an education. So education is the foremost and noble wealth; any other wealth cannot be considered as real wealth.

404                 கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை  யார்

பொருள்:- (நூல்களைக்) கற்காதவனுடைய அறிவு ஒருவேளை நன்றாக இருந்தாலும் (கூட அதைக் கற்றறிந்த) அறிவுடையார் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 

விளக்கம்:- கல்விச் சாலைகளில் படித்து பட்டம் பெறாமலும் சிலர் அறிவுள்ளவர்களாக இருக்கலாம். ஆனாலும்  அவர்களின் அறிவை, படித்துப் பட்டம் பெற்றோர் ஏற்றுக்கொள்வதில்லை. ஆகவே இயற்கையாகவே அறிவுள்ளவர்களும் கூட படித்துப் பட்டம் பெற்றால்த்தான்  அதைக் கற்றவர்களும் மற்றவர்களும் ஏற்றுக்கொள்வார்கள். ஆகவே எமது அறிவை மற்றவர்களுக்கும் கொடுத்து அவர்களும் அதை ஏற்றுக்கொண்டு பயன்பெற வேண்டுமானால் கல்விக்கூடங்களில் படித்துப் பட்டங்கள் பெறவேண்டியது மிக அவசியமே.  

Meaning:- Even if the knowledge of someone who has not learned any books is better; that will not be accepted by the learned (pandits).

Explanation:- Generally learned people will be knowledgeable. Exceptionally someone may be knowledgeable even without learning the books at the educational institutions. However, their knowledge will not be accepted by the learned people with certificates from educational institutions. So if we want our knowledge to be recognized and accepted by all, it is necessary to learn books from the respective educational institutions and get certificates.  

406                 உளர்என்னும் மாத்திரையர் அல்லால், பயவாக்
களர்அனையர் கல்லா தவர்

பொருள்:-  (ஏதோ) இருக்கிறார் என்கின்ற எண்ணிக்கையைத் தவிர கற்றறிவில்லாதவர் பயனற்ற பாலைவன நிலம் போன்றவரே. 

விளக்கம்:- ஒருவன் தன் வாழ்வைப் பயனுள்ளதாக வாழவேண்டுமானால் கற்றறிவு உள்ளவராக இருக்கவே  வேண்டும். இல்லையென்றால் ஏதோ எண்ணிக்கையில் இருப்பாரே அல்லாமல் உலகில் பாலைவன நிலம்போல பயனற்றவராகவே இருப்பார். நாம் கற்றறிவு உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே  பயனுள்ளதாக வாழலாம்.

Meaning:- An uneducated person exists there just for numbers, just like a useless barren land.  

Explanation:- If anyone wants to be a useful human, he must be an educated person. Otherwise, he just lives for numbers only, just like the useless barren land. We must be educated to live usefully.

410                  விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோ  டேனை  யவர்

பொருள்:-  விலங்குகளும் மனிதரும் (ஒப்பிடும்போது) எப்படியோ, அப்படியே அறிவார்ந்த நூல்களைக் கற்றவர்களும் கற்காதவர்களும் உள்ளனர்.

விளக்கம்:- அறிவார்ந்த நூல்களைக் கற்றுத் தெளிவதுதான் விலங்குகளைவிட மனிதனுக்கு இருக்கும் விசேட தன்மையாகும். விலங்குகளுக்கு அந்த தகுதி இல்லை. ஆகவே அவ்வாறு கற்காத மனிதனை  விலங்குகளுக்குச் சமமாகவே கணிப்பிடமுடியும். கற்றுத் தெளிவதே மனிதன் மனிதனாக வாழ்வதற்கு வழியாகும்.    

Meaning:-Those who are educated with books of true knowledge and others (who have not learned them) are like humans and animals (respectively). 

Explanation:- The difference between humans and animals is that humans can learn books of true knowledge. The animals do not have that privilege. So if a human did not use that privilege to learn and have that education; he is the same as an animal. Education is the only way to reform ourselves as humans.  

411                  செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.

பொருள்:- செல்வங்களுள் (நிறைவான) செல்வம் செவிமூலமான செல்வமே. அச்செல்வமானது மற்றச் செல்வங்கள் எல்லாவற்றையும்விடச் சிறப்பானதாகும்.

விளக்கம்:- மனிதனுக்கு மகிழ்ச்சியைத் தருவது எதுவோ அதுவே செல்வம். மகிழ்ச்சி என்பது மனதில் ஏற்படும் நிறைவான நேர்மறையான எண்ணங்களே. செவியூடாக கிடைக்கும் அறிஞர்களின் போதனையால்த்தான் அப்படியான நல்லெண்ணங்களை உருவாக்க முடியும். ஆகவே மகிழ்ச்சியைத் தரக்கூடிய செல்வங்களில்  செவிச் செல்வமே  தலையாய செல்வமாகும்.

Meaning:- The wealth that comes through listening is real wealth. That wealth is the best of all other wealth.  

Explanation:- Wealth is something that makes us happy. Happiness is the accumulation of good pure thoughts. The wisdom that comes through listening to wisemen cultivates good pure thoughts. So, the wealth that comes through listening to such wisemen is the best of all others.  

423                  எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

பொருள்:- எந்தவிடயத்தை எவரெவர் வாயிலாகக் கேட்டாலும் அதனுடைய உண்மைத் தன்மையை  கண்டுகொள்வது (எமது) அறிவு.

விளக்கம்:-ஏதேதோ விடயங்களையெல்லாம் யார்யார் மூலமாகவோ நாங்கள் கேட்கலாம். அப்படிக் கேட்பதால் மட்டும் அதன் உண்மையான விளக்கம் நமக்கு கிடைத்து விடாது. கேட்டவறை  பகுத்தறிவின் மூலம் நாமாகவே தெளிந்து புரிந்துகொள்ளும்போது அது எமது அறிவாகும். 

Meaning:-Whatever and from whoever we may listen to, realizing the true meaning of that becomes (our) knowledge. 

Explanation:- We may listen to so many facts from so many people but that cannot become our knowledge. If we discriminate and find the true meaning ourselves, that will become our knowledge. 

430                       அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய  ரேனும் இலர்.

பொருள்:-  அறிவுள்ளவர்கள் அனைத்தும் உள்ளவர்களாவர். அறிவில்லாதவர்கள் எதுவெல்லாம்  உள்ளவராயினும் எதுவுமே இல்லாதவர்களே.

விளக்கம்:- ஒருவரிடம் எது இருக்கிறது எது இல்லை என்பது அவருடைய மனத்திருப்தியைப்  பொறுத்தது. உண்மையான அறிவுள்ளவர்கள் இருப்பவை போதும் என்று மனநிறைவோடு இருப்பதினால்  அவர்கள் தம்மிடம் எல்லாம் இருப்பதாக உணர்வார்கள். தமது அறிவினால் அவசியமானவற்றைப்  பெற்றுக்கொள்வதற்கும்  அவர்களுக்கு முடியும். ஆனால் இந்த உலகத்தைப் பற்றிய சரியான அறிவு இல்லாதவர்கள் தம்மிடம் என்னென்னவெல்லாம் இருந்தாலும் போதாது போதாது என்று அலைவதால் தம்மிடம் எதுவுமில்லை என்பதாகவே உணர்வார்கள். அத்தோடு இல்லாதவற்றைப்  பெற்றுக்கொள்வதற்கோ, இருப்பவற்றைப்  பாதுகாப்பதற்கோ அவர்களிடம் முறையான அறிவு இல்லாததால் அவர்கள் எதுவுமே இல்லாதவர்களாகவே வருந்துவர்.  

Meaning:- Those who have (the real) knowledge have everything. Those who do not have (the real) knowledge have nothing despite whatever they have.  

Explanation:- What a person has or does not have depends on his or her contentment. Those who have wise knowledge will be contented with whatever they have and also will be able to acquire what is necessary for them through their knowledge. Those who are not wise and have no true knowledge about this world will not be satisfied with whatever they have and pursue to acquire more and more. But due to a lack of knowledge, they can’t acquire more or protect whatever they have. Mentally they will feel as have nothing despite all that they have.

431                  செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.

பொருள்:- இறுமாப்பும் கோபமும் இழிவான குணங்களும் இல்லாதவர்களுடைய செல்வமானது பெருமைப்படக் கூடியதாகும். 

விளக்கம்:- செல்வத்தைச் சேர்த்து வைத்திருப்பவர் இறுமாப்பு கோபம் மற்றும் வேண்டாத தீயகுணங்கள் இல்லாதவராக இருந்தால் பெருமைப் படலாம். அதனால் மற்றவர்களும் பயன் பெறுவர். அவரை  அனைவரும் மதித்துப் போற்றுவர். எனவே பொருளை மட்டும் சேர்க்காமல் வாழ்வில் தீய குணங்களை விட்டு நல்ல குணங்களைச் சேர்த்துக் கொள்ளவும்  வேண்டும். இல்லாவிட்டால் பயனின்றி அவமானமே வந்துசேரும்.

Meaning:- Great is the wealth of those free from pride anger and other mean qualities.

Explanation:- Everyone will respect and glorify that wealthy man free from pride, anger, and other mean qualities. Others also can get the benefit. If he does have those bad qualities, he will be hated and neglected by all. So we should, not only acquire wealth but also be free from bad qualities and possess good qualities. 

436                  தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்றம் ஆகும் இறைக்கு.

பொருள்:- தனது குற்றங்களை நீக்கியபின் பிறரது குற்றத்தை (ஆராய்ந்து) பார்ப்பதாயின் பின்னர் அப்பெரியாரில் என்ன குற்றம் இருக்கமுடியும்?

விளக்கம்:- தவறான அளவு கோலால் அளந்தால் அளக்கப்படுவது தவறாகவே இருக்கும். அளவுகோலை சரிசெய்துவிட்டு அளந்தால் அளக்கப்படுவதில் தவறு இருக்காது. அதுபோலவே நம்மில் பிழை இருக்கும்போது பிறரில் நாம் காணும் தவறு சரியாக இருக்காது. எனவே பிறரில்  தவறை பார்ப்பதற்குமுன் எமது தவறைத் திருத்திக் கொள்ள வேண்டும். அப்படித் தமது பிழையைத் திருத்திக்கொண்ட பெரியோர் காண்பது சரியாக இருக்கும். தவறு இருக்க முடியாது.

Meaning:- After all, what fault could be there in a wise man who removes his own faults before finding the fault in others?

Explanation:- If there is any error in the measuring tool the measurement taken will be incorrect. If the measurement is taken after calibrating the tool, there will be no room for any error. Similarly, the mistake we find in someone when there is a mistake in us will not be correct or true. We must correct our own mistakes before finding the fault in others. The great men who have corrected or purified themselves can not go wrong in their findings.

437                  செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.

பொருள்:-பயன்படுத்த வேண்டியவாறு பயன்படுத்தாத பேராசை கொண்டவனின் செல்வம் பெருகாதிருப்பதோடு அழிந்தும் விடும்.

விளக்கம்:- நாம் பொருளை சேர்க்க வேண்டும். சேர்த்த பொருளை நமக்கும் பிறருக்கும் உரிய முறையில் பயன்படுத்த வேண்டும். அப்படியின்றி அதில் பேராசைகொண்டு  செலவழியாது வைத்துக் கொண்டிருந்தால் அது பெருகப்போவது இல்லை; அது அழிந்தும் விடும். சேர்க்கும் பொருளை அறவழியில் பயன்படுத்திக் கொண்டிருக்கும் போதுதான் அது இன்னுமின்னும்  பெருகும்.

Meaning:- The wealth of an avaricious man who does not use that for his virtuous life does not grow and will vanish.

Explanation:- We must earn wealth and spend righteously for ourselves and others. If we are avaricious and save it without spending; it is not going to grow. Also, it will perish away. Our wealth will grow only when we spend what we have now, virtuously. 

439                  வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.

பொருள்:- எத்தருணத்திலும் தன்னை (தானே) புகழாததோடு (யாருக்கும்) நன்மையில்லாத செயல்களைச் செய்ய விரும்பாதே.

விளக்கம்:- உண்மையான பெரியோர் என்றால் பணிவாக தன்னடக்கமாக  இருப்பர். அத்துடன் பயனற்ற செயல்களில் ஈடுபட்டுத் தம் நேரத்தையும் சக்தியையும் வீணடிக்க மாட்டார்கள். ஒருவர்  தன்னைத் தானே பெருமையாக புகழ்ந்து பேசிக்கொண்டாலும் பயனற்ற செயல்களில் தன்  நேரத்தையும் சக்தியையும் வீணடித்தாலும் அவர் அற்பமானவரே. யாருமே அவரை மதிக்க மாட்டார்கள். 

Meaning:-Never indulge in admiring yourself and do not have a desire for useless activities.

Explanation:- The true great gentleman will be humble, self-restrained, and never indulge in doing useless activities wasting his time and energy. No one will respect those who esteem and admire themselves or indulge in useless activities.  

443                       அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.

பொருள்:- (போற்றுதற்குரிய) பெரியோர்களை மதித்துப் போற்றி (அவர்களைத்) தமது முன்னோடிகளாகக் கொள்ளுதல் அரிய பேறுகள் எல்லாவற்றிலும் சிறந்த பேறாகும்.

விளக்கம்:- அறிவான பெரியோர்கள் அனுபவசாலிகளாக வழிகாட்டக் கூடியவர்களாக இருக்கிறார்கள். நாம்  நாமாகவே சரியான வழிகளைக் கண்டுபிடித்து முன்னேறுவது கடினமானது. தவறான வழியிலும் சென்று பின்னர் வருந்த நேரிடும். ஆகவே நம்மைச் சரியானபடி வழிநடத்தக் கூடிய பெரியவர்கள் கிடைப்பது எமது மிகப்பெரிய பேறாகும். அவ்வாறான பெரியவர்களை மதித்துப் போற்றி அவர்களை எமது முன்னோடிகளாகக்  கொள்வது அவசியம்.     

Meaning:- Respecting wise men and having them as our guide (role model) is the best treasure out of all others.  

Explanation:- Wise men will have experience and knowledge and they can lead others. Unless we follow such great men we may fall into trouble and suffer in our lives. Getting such great men for our guidance is really the best treasure we can get in our lives. We must respect and adore them.

455                  மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்.

பொருள்:- மனத்தின் (எண்ணங்களின்) தூய்மை, செய்யும் செயற்பாடுகளின் தூய்மை (ஆகிய) இரண்டும் (சூழ்ந்திருக்கும்) இனத்தவர்களின் தூய்மையின் ஊடாகவே வரும்.  

விளக்கம்:- எமது எண்ணங்களும் செயல்களும் கள்ளங் கபடமில்லாமல் தூய்மையாக இருந்தால்த்தான் நாம் உயர்ந்தவர்களாக இருப்போம். எம்மைச் சூழ்ந்திருப்பவர்களின் தூய்மையான எண்ணங்கள் செயல்கள் ஊடாகத்தான் எங்களுக்கும் அப்படியான தூய்மையான எண்ணங்களும் செயல்களும் வருகின்றன. அதனால் தூய்மையான எண்ணங்கள் செயல்கள் உள்ளவர்கள் நடுவிலேயே நாம் வாழவேண்டும். 

Meaning:- Both our pure thoughts and pure deeds come through the purity of our company. 

Explanation:- We shall be noble people only when our thoughts and deeds are pure. We get molded by the company around us. If their thoughts and deeds are pure, our thoughts and deeds also will be pure. In order to be noble people we must live among such noble people. 

460                 நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை தீயினத்தின்
அல்லல் படுப்பதூஉம் இல்

பொருள்:-  நல்ல இனத்தைவிட (நட்புறவுவை விடச்) சிறந்த துணைவர் இல்லை. (அதேபோல்) தீய இனத்தைவிட (தீய நட்புறவை விட) துன்பப் படுத்தக்கூடியதும் வேறு இல்லை.

விளக்கம்:- எம்மைச்சூழ ஒரு நட்புவட்டத்தை (இனத்தை) நாமே உருவாக்கி வைத்திருக்கின்றோம். அவர்கள் உயர்ந்த எண்ணங்கள் பண்புகள் உள்ளவராயின் நமது உயர்வுக்கு அவர்களைவிட சிறந்த துணை வேறுயாரும்  இல்லை. அவர்கள் தாழ்ந்த தீய எண்ணங்கள் பண்புகள் உள்ளவராயின் அவர்களைவிடத் துன்பம் தரக்கூடியவர்களும் வேறு யாரும் இல்லை. ஆகவே நாம் சிறந்த உயர்ந்த எண்ணங்கள் பண்புகள்  உடைவர்களுடனேயே  எமது நட்பு வட்டத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

Meaning:-  There is no better supporter than good company(for our progress) and there are no others than bad company who can inflict pain on us 

Explanation:- We make a circle of friends. It is they who will be helpful to us always, provided they have noble thoughts and characters. But there will be no one else worse than them to inflict pain on us if they are with worse characters. So it is absolutely essential to make friends only with those who possess noble thoughts and characters.  

467                  எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு

பொருள்:- ஒரு செயற்பாட்டை (செயற்பாட்டின் முழுமையான விடயங்களையும் நன்றாகச்) சிந்தித்து  (பின்னரே)  செயலில்  இறங்கவேண்டும். செயலில் இறங்கியபின்னர் சிந்திப்போம் என்பது தவறாகும்.  

விளக்கம்:- நாம் ஒரு திட்டத்தை நிறைவேற்றச் செயலில் இறங்கமுன் அதனால் வரும் நன்மை தீமைகள், இலாப நட்டம், நம்மிடம் உள்ள வழங்கள் அனைத்தையும் நன்றாகச் சீர்தூக்கிப் பார்த்த பின்னரே தொடங்க வேண்டும். திட்டமிடுவதற்கு அதிக நேரம் எடுத்தாலும் பாதிப்பு எதுவுமின்றி திட்டத்தை வெற்றிகரமாகவும் விரைவாகவும் நிறைவேற்றலாம். பின்னர் அவைபற்றிச் சிந்தித்துப் பார்க்கலாம் என்று தொடங்கினால் அதனால் பல தடைகள் கஷ்டங்கள் நஷ்டங்களைச் சந்திப்பதோடு நீண்ட காலமும் செலவாகும். அதனால் அனைத்து விடயங்கள் பற்றியும்  சரியாக முழுமையாகச் சிந்திக்காமல்  செயற்படத்  தொடங்கக் கூடாது.  

Meaning:- Plan (properly) before starting the project. It is folly to start and then think about how to proceed.

Explanation:- Generally, we are in a hurry to finish the project. So we start in a rush without proper planning; thinking that we can plan as we keep doing. But we may come against unseen obstacles and losses and also it will take much more time to complete. So it would be folly to start the project without proper planning. 

504                  குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்

பொருள்:-  (ஒருவருடைய) நல்ல குணங்களை ஆராய்ந்து பார்த்து தீய குணங்களையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் எது கூடஉள்ளதென்று பார்த்து எது கூடுதலாக உள்ளதோ அவர் அப்படியானவர் என்று கொள்ளலாம்.

விளக்கம்:- உலகில் முழுமையாக நல்ல மனிதரும் கிடையாது,முழுமையாக தீய மனிதரும் கிடையாது. ஒவ்வொருவரிலும் நல்ல குணங்களும் தீய குணங்களும் கலந்தே இருக்கும். ஒவ்வொருவரிலும் அவை வேறுவேறு அளவுகளில் இருக்கும். ஒருவரில் எந்தக் குணங்கள் கூடுதலாக இருக்கின்றதோ அவரை அப்படியானவர் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருவரில் இருக்கும் சொற்ப தீய குணங்களுக்காக அவரை தீயவர் என்றோ சொற்ப நல்ல குணங்கள் இருப்பதற்காக நல்லவர் என்றோ எடுக்க கூடாது.

Meaning:- Weigh the good qualities and the bad qualities (of a person) and see which is more. Then consider that person (as good or bad) according to which quality he has more. 

Explanation:- There is no one in this world fully good or fully bad. Everyone will have both qualities in different proportions. Just because someone has few bad qualities, we cannot take him as a bad person and just because someone has few good qualities, we cannot take him as a good person. We must consider someone as good or bad according to which quality he has more.  

505                  பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்

பொருள்:- உயர்ந்தவராக இருப்பதற்கும் மற்றும் தாழ்ந்தவராய் இருப்பதற்கும் அவரவர் செயல்களே அளவுகோலாகும்.

விளக்கம்:-  ஒருவர் உயர்ந்தவரா அல்லது தாழ்ந்தவரா என்று எப்படி அறிவது?. அவரவர் செய்யும் செயல்களைக் கொண்டுதான் அறிய முடியும். உயர்வான உத்தமமான செயல்களை செய்தால் அவர் உயர்வானவர். தாழ்வான செயல்களை செய்தால் அவர் தாழ்வானவர். எனவே நாம் உயர்வானவராக  இருக்க வேண்டுமென்றால் நாம் செய்யும் செயல்கள் உத்தமமானதாக  உயர்வானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

Meaning:- Someone’s conduct is the measuring tool for him to be a great person or a worse person.

Explanation:- How do we know whether someone is a great person or a worse person?  We can measure only by his actions, his conduct. If his actions are good, if he behaves well then, he is a great person, or vice versa.  So if we want to be great people we must behave well and do good deeds only. 

510                  தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்

பொருள்:- (ஒருவரை நன்கு) ஆராய்ந்து பார்க்காமல் நம்புவதும் (ஆராய்ந்து தெளிந்து) நம்பியவரிடம் (பின்) சந்தேகப்படுவதும் தீர்க்கமுடியாத துன்பத்தைத் தரும்.

விளக்கம்:- ஒருவரை எம்மோடு சேர்த்துக் கொள்வதற்கு முன் அவர் எப்படியானவர் நம்பிக்கையானவரா என்று நன்கு ஆராய்ந்து பார்த்து நம்பிக்கையானவராகக் கண்டால் சேர்த்துக் கொள்ளலாம். அப்படிச் சேர்த்துக் கொண்டபின் அவரில் சந்தேகப்படக்கூடாது. ஆராயாமல் சேர்ப்பதும் சேர்த்தபின் சந்தேகம் கொள்வதும் எமக்கு மிகப்பெரிய துன்பத்தையே கொடுக்கும்.

Meaning:-Trusting (someone) without testing (them thoroughly) and suspecting (a friend) after being proven trustworthy gives endless problems.

Explanation:- Before we accept someone as our friend we must investigate whether he is trustworthy and if fully satisfied, be friendly with him. We should not suspect such a friend after choosing. We shall have endless problems if we do vice versa.

527                       காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ  ரார்க்கே   உள

பொருள்:- காகம் (தான் கண்ட உணவை) மறைக்காமல் சப்தமிட்டு (மற்றக் காகங்களையும் அழைத்து பகிர்ந்து) உண்ணும். செல்வங்களும் அப்படியான தன்மை உள்ளவர்களுக்கே வந்துசேரும்.

விளக்கம்:- காகம் ஒரு உணவுப்பொருளைக் கண்டால் உடனே சந்தோசமாகச் சத்தமிட்டு தன் உறவுகளுக்கும் அறிவித்துப் பகிர்ந்து உண்ணும். ஆனால் மனிதனோ தமக்குக் கிடைக்கும் செல்வங்களை தாம் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று மறைத்து வைத்திருப்பர். அப்படிச் செய்தால் மேலும் செல்வங்கள் எதுவும் கிடைக்க வாய்ப்பில்லை. காக்கை போல நமக்குக் கிடைப்பவற்றை  மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வோமானால்  எமக்கு மேலும் மேலும் செல்வங்கள் சேர்ந்துகொண்டே இருக்கும்.

Meaning:- The crows shout (announcing the food they found) and eat (sharing it) without hoarding. The wealth will come (in multiples) only to such people. 

Explanation:- It is the nature of the bird-crow to shout and announce to other crows when they find some food and share it with others while eating. It is the same type of people who will find their wealth growing if they share that with others. But people mostly hide their wealth so that they can enjoy that by themselves. But by doing that they are actually ruining their wealth.

595                       வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு.

பொருள்:- நீர்ப்பூக்களின் (தாமரையின்) உயரம் (அவை இருக்கும்) தண்ணீரின் உயரமாகவே இருக்கும். (அதைப்போல) மனிதர்களின் உயர்வு அவர்களின் உள்ளத்தின் உயர்வைப் பொறுத்தே  அமையும்.

விளக்கம்:- தண்ணீரின் உயரம் உயர உயர அதில் வாழும் தாமரை போன்ற நீர்ப்பூக்களும் உயர்ந்து உயர்ந்து வளரும். அதேபோல மனிதரை உயர்நிலைக்குக் கொண்டு செல்வது அவர்களின் எண்ணங்களின் உயர்வாகும். குறுகிய மனப்பான்மையின்றி, எவ்வளவுக்கெவ்வளவு உயர்வான உறுதியான பெருந்தன்மையான எண்ணங்களை ஒரு மனிதன் கொண்டுள்ளானோ அவ்வளவுக்கு அவன் உயர்வடைவான்.  

Meaning:- The height of the water plants (like Lotus) depends on the height of the water (in which they live). (Similarly) The height of a person depends on the height of his thoughts. (noble, generous)  

Explanation:-  The water plants like lotus keep on growing when the water level is rising. In the same way, our personality grows more and more, as high as our thoughts. Our thoughts should be purer, nobler, and stronger. We should not be narrow-minded. We must be wise and broad-minded. 

616                  முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை  புகுத்தி  விடும்

பொருள்:-  (விடா) முயற்சி (அனைத்து) செல்வங்களை உருவாக்கும். முயற்சிக்காதிருப்பது (சோம்பல்) (எதுவுமே) இல்லாத நிலையை கொடுத்து விடும்.

விளக்கம்:-  நமக்கு இன்பத்தைத் தருபவை செல்வம். அவை பலவகைப் படும். ஆனால் அவற்றில் எந்தச் செல்வத்தைப் பெற வேண்டுமானாலும் விடாமுயற்சிதான் தேவை. சுய முயற்சி இல்லாமல் நாம் எந்தச் செல்வத்தையும் பெறவே முடியாது. முயற்சியின் அளவுக்கு ஏற்பவே அவை கிடைக்கும். சோம்பல்தனமாக முயற்சியின்றி இருந்தால் நிச்சயமாக எதுவுமே கிடைக்காமல் வறுமையில் தவிக்கவேண்டி வரும். எனவே வாழ்க்கையில் நாம் எதையாவது பெறவேண்டு மானால் விடாமுயற்சி அவசியம்.

Meaning:- Perseverance generates prosperity. Procrastination engenders poverty. 

Explanation:- Wealth gives us happiness. If we want wealth and prosperity we have to work for it. The more and more we work; the more and more we get. If we are idling without working, we will undoubtedly end up in severe poverty. So; hard work in any field is essential in life to achieve benefits.  

621                  இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வ  தஹ்தொப்ப  தில்

பொருள்:- துன்பம் (சோதனைகள்) வரும்போது (மகிழ்வாக) சிரியுங்கள். துன்பத்தை (சோதனைகளை) வெல்வதற்கு அதைவிடச் சிறந்த வழி இல்லை.

விளக்கம்:- வாழ்க்கையில் கஷ்டங்கள் துன்பங்கள் சோதனைகள் வரும்போது அதில் இருந்து மீள்வதற்கு ஒரேவழி அந்தச் சவால் எமக்குக் தேவையான அனுபவ அறிவைத் தரப்போவதை உணர்ந்து சிரிப்பதாகும். இந்தச் சிக்கலில் இருந்து நான் மீண்டு வரும்போது இன்னும் கூடிய அனுபவ அறிவோடு மனஉறுதியோடு வருவேன் என்று தெளிவடைந்து அது எனது நன்மைக்குத்தான் என்று உணர்ந்து அதனால் வரும் மகிழ்ச்சியால் சிரித்துக் கொண்டால் உடனே எமக்குக் கிடைக்கும் உறுதியான தெளிவான சிந்தனைகளால்  அதில் இருந்து இலகுவாக மீண்டு விடலாம். அதைவிடச் சிறந்தவழி  உலகில் வேறுஇல்லை.  

Meaning:- Laugh when you encounter problems. There is no better solution to overcome the problems.

Explanation:-  We can not avoid or stop problems in life. Only by facing and overcoming problems, we can become a more confident, experiential, and knowledgeable person. That is the purpose of our life. So actually we must laugh at such a situation realizing the benefit from that.  Welcoming the problem and laughing is the only solution to overcome the problems in life.

645                  சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து

பொருள்:-  எமது பேச்சை (மறுதலித்து) வெல்லக்கூடிய வேறொரு பேச்சு இல்லை என்பதைத் தெளிந்து பேசுவதை (நிதானமாகப்) பேசவேண்டும்.

விளக்கம்:-  நாம் வெறுமனே வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது. அளவோடுதான் பேசவேண்டும்.  பேசுவதை அறிவுபூர்வமாக சிந்தித்து  நிதானமாகப் பேசவேண்டும். எமது பேச்சை இன்னொருவர் மறுதலிக்க இடமில்லாதவாறு நாம் நிதானமாகச் சிந்தித்து பேசப் பழகிக் கொள்ளவேண்டும்.

Meaning:- Deliver your speech after convincing yourself that no other counter-speech can debut it. 

Explanation:- We should never speak loosely. We should speak with limits. Our speech should go according to our discrimination with full attention so that no other argument can counter our speech. It must be brought into practice. 

647                 சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது

பொருள்:-  (சபையோர் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக) பேசும் ஆற்றல் உள்ளவன் சோர்வில்லாதவன், (சபைக்கு) அஞ்சாதவன் (என்றால்) அவனை சொற்போரில் வெல்வது எவராலும் முடியாது. 

விளக்கம்:- சபைக்கு அஞ்சாதவன் ஆகவும் தொய்வு இல்லாமல் தொடர்ந்து உற்சாகமாகப் பேசக்கூடியவனாகவும் சபையினரின் மனத்தன்மைக்கேற்ப பேசும்திறன் உடையவனாகவும் இருக்கும் ஒருவனை பேச்சுப் போட்டியில் எவராலும் வெல்ல முடியாது. ஆகவே நாமும் இந்த பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

Meaning:- It is not possible to conquer a person in a debate if he is fearless(to the audience) ever enthusiastic and has the ability to speak (appraising the audience)  

Explanation:- If a person is enthusiastic, fearless, and has the ability to speak appraising the audience, none can conquer him in any debate. So let us also cultivate these qualities.

656                 ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை

பொருள்:- பெற்றதாய் பசியிருப்பதைக் காணவேண்டி வந்தாலும் (அதற்காகச்) சான்றோர்கள் இகழக்கூடிய (இழிவான) செயல்களைச் செய்யாதீர்.

விளக்கம்:- பெற்றதாய் பசியிருப்பதைக் காண்பது பொறுக்க முடியாததுதான். அப்படி இருந்தாலும்கூட  தகாதவழியில், அறத்திற்கு மாறுபட்ட வழியில் செயற்பட்டு தாயின் பசியைத் தீர்ப்பது பாவமே. எப்படியும் அறத்தின் வழியிற்தான் அதைச் செய்யவேண்டும். தாய் பசியிருப்பதால்  அப்படிச்  செய்தேன் என்று சொல்லித் தப்ப முடியாது. 

Meaning:- Even if you find your mother being hungry, do not engage in (unrighteous) activities that are denied by the wise men.

Explanation:- Seeing their mother hungry is really the worst thing for anyone to bear in their life but even in that circumstance do not resort to getting something in an unrighteous way which the wisemen deny.  Even if you have done that to quench the hunger of your mother that will not be excused.

659                       அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை

பொருள்:- (பிறரை) அழவைத்து எடுத்துக் கொண்ட (பொருட்கள்) எல்லாம் (நாம்) அழுகின்றவகையில் போய்விடும். (அறநெறியில் தேடிய பொருட்களை) இழக்க நேரிட்டாலும்  பின்னர் அவை (எப்படியாவது நமக்கு கிடைத்து) நல்ல  பயனைத் தரும்.

விளக்கம்:- பொருள் கிடைத்துவிட்டால் நாம் சந்தோசமாக இருக்கலாம் என்று நம்பி தவறான வழியில் இன்னொருவர் பொருளை நாம் அபகரித்தால் பொருளை இழந்தவர்கள் வருந்தி அழுவார்கள். ஆனால் உண்மையில் அப்பொருளால் நாம் சந்தோசமாக இருக்க முடியாது. நாம் வருந்தி அழுகின்ற வகையில் அப்படியான பொருளை நாம் நிட்சயம் இழந்து விடுவோம். அறவழியில் தேடிய பொருட்கள்தான் எமக்கு சந்தோஷத்தைத் தரும். அப்படி நாம் அறவழியில் தேடிய பொருளை இழக்கவும் நேரிடலாம். ஆனால் அப்படி இழந்தாலும் நமக்குத் தேவையான சமயத்தில் அது நமக்கு  திரும்பக் கிடைத்து பயன்படுவது நிட்சயம்.

Meaning:- Anything grabbed (Unrighteously) making others cry, will be lost as we cry. Even if we happen to lose something that we earned righteously that will come back to our benefit later.    

Explanation:- We may grab something from others unrighteously to get pleasure, and those who lost that will be crying. But in reality, we are not going to enjoy that. Instead, that will definitely be lost later, and we will be crying. That is the law of nature. If we have to enjoy anything; we have to earn that righteously. Even if we lose anything we earned righteously, that will come back to us at the right time for our use.   

664                 சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்

பொருள்:-  (இதனை இவ்வாறு செய்யலாம் என்று நிரல்படச்) சொல்லுதல் எல்லோருக்கும் இலகுவானதாகும். (ஆனால் அப்படிச்) சொல்லியவாறு செய்துமுடிப்பது அரிதாகும்.

விளக்கம்:- நடைமுறைச் சாத்தியங்களை சிக்கல்களை முழுமையாகச் சிந்திக்காமல் நாம் மேலோட்டமாக இப்படி இப்படி இவ்வாறு செய்துவிடலாம் என்று வாயினால் இலகுவாகச் சொல்லிவிடுவோம். அது நடைமுறை அனுபவ அறிவாகாது. அந்தச் செயற்பாட்டைச் செய்யும்போதுதான் அதில் வரக்கூடிய சிக்கல்களை நாம் கண்டுகொள்வோம். இலகுவாகச் சொல்லுதல் போலல்லாது  செய்துமுடித்தல்  மிகக் கடினமானது  என்பது  தெளிவுபடுத்தப்பட்டது. பட்டறிவு இல்லாமல் எப்படிச் செய்வதென்று சொல்லக் கூடாது.

Meaning:- Saying ( in sequence how and how we can do the job) is easy for anyone. (But) Completing the job as (we) said is very difficult.  

Explanation:- Without analyzing the cons and pros and the practical difficulties, we can say by mouth very easily how and how we can do the job. That is not practical knowledge. But when we start doing the job we may encounter many challenges. So the difference between theoretical knowledge and practical knowledge is explained here clearly. We should not just talk without practical knowledge.  

666                  எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்

பொருள்:-  (ஒன்றை அடைவதற்கு) நினைப்பவர்கள் (நினைப்பதில்) உறுதியுள்ளவர்களாக இருப்பாராயின் நினைப்பதை நினைத்தவாறு அடைவார்கள்.

விளக்கம்:- அடைய வேண்டிய ஒரு விடயத்தைப்பற்றி நாம் சிந்தித்து செயற்படும்போது  அந்தச்  சிந்தனையில் நமக்குச் சந்தேகமோ குழப்பமோ உறுதியின்மையோ இருக்குமானால் அந்த விடயத்தைச் சாதிக்க முடியாது. முதலில் சிந்திக்க வேண்டிய அனைத்தைப் பற்றியும் சிந்தித்து தெளிவான உறுதியான ஒரு முடிவிற்கு வரவேண்டும். வந்தபின் அதை அடைவதில் மிக உறுதியாக இருந்துகொண்டு செயற்பட்டால்  அதை நினைத்தவாறு அடைந்து விடலாம். உறுதியான எண்ணத்திற்கு அவ்வளவு வலிமை உண்டு.

Meaning:- Those who desire to achieve something will achieve that as they want; provided they are firm in their will. 

Explanation:-  If someone has doubt or confusion in their decision they cannot achieve that. Before starting the execution, they must be very clear about what they want to achieve and how they are going to execute and come to a firm decision. After coming to a decision, they must be firm to achieve that. If they are firm in their will to achieve, they shall definitely achieve that. Strong unshaken thoughts or will have so much power. 

675                  பொருள்கருவி காலம் வினைஇடனோ டைந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்

பொருள்:-  பொருள்,கருவி,காலம்,செயல்,இடம் ஆகிய ஐந்து விடயங்களையும் எவ்விதமான சந்தேகத்திற்கும் இடமின்றி ஆராய்ந்து (பார்த்துத்தான்) செயற்பட வேண்டும்.

விளக்கம்:- ஒரு வேலைத்திட்டத்தை தொடங்கமுன்; ஏற்படக்கூடிய செலவு, அப்பொருளை (பணத்தை) சேகரிக்கும் வகை, செயற்படுத்துவதற்குத்  தேவையான கருவிகள்,இயந்திரங்கள்,அந்தச் செயற்பாட்டிற்குச் சாதகமான காலம், செயற்பாடுகளைச் செய்யக்கூடிய திறன் உள்ளவர்கள், அச்செயற்பாட்டின் வெற்றிக்கான  அமைவிடம் ஆகிய ஐந்து விடயங்களையும் சந்தேகத்திற்கு இடமின்றி அனைத்துக் கோணங்களிலும் விரிவாக ஆராய்ந்துதான் தொடங்கவேண்டும். 

Meaning:- Engage in a project only after a thorough analysis beyond any doubt about finance, tools, time, task, and place.   

Explanation:- Before starting a project we must have a thorough analysis of the expenditure and how to get that money, tools, and equipment needed, the labor force, a suitable time to start and finish, and a suitable place to be successful. 

706                  அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்

பொருள்:- எதிரே இருப்பவற்றை (பிரதிபலித்துக்) காட்டும் கண்ணாடிபோல மனதில் உறைந்திருப்பதை (எண்ணங்களை அவரது) முகம் (பிரதிபலித்துக்) காட்டும்.

விளக்கம்:– எமது எண்ணங்களை நாம் வெளிப்படையாகச் சொல்லாமல் மறைக்கலாம். ஆனால் எமது முகத்தில் அதை மறைக்க முடியாது. மனிதரின் முகம் அம்மனிதரின் மனஎண்ணங்களை  மிகத் துல்லியமாக காட்டும். அதை அவரால் மறைக்கவே முடியாது.

Meaning:-Just like the mirror reflects what is in front of it, the face reflects (reveals) the predominant thought in the mind.

Explanation:- We can hide our thoughts externally but it is impossible to hide it on our face. By nature, the face just reflects the predominant thought in the mind. No one can prevent their face from reflecting their mind.  

754                  அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து
தீதின்றி வந்த பொருள்

பொருள்:- (அறவழியில் பொருளீட்டும்) திறமையை அறிந்து (யாருக்கும்) தீமையில்லாமல் சேர்க்கின்ற செல்வம், அறத்தையும் (உலக) இன்பத்தையும் தரும். 

விளக்கம்:- எப்படியாவது பொருளைத் தேடுவதற்கு எல்லாராலும் முடியும். ஆனால் அறவழியில் பொருளை  ஈட்டுவதற்கு அதற்கான திறமை வேண்டும். இன்னொருவருக்கு தீமை ஏற்படாமல் அந்தப் பொருளைச்  சேர்க்க வேண்டும். அப்படிப் பொருளை சேர்த்தால், அதனால் இவ்வுலக இன்பங்களுடன் புண்ணியங்களும் கிடைக்கும்.  

Meaning:-The wealth acquired without harming anyone and through the skill of earning righteously; shall yield happiness and virtue.  

Explanation:– Earning wealth through any means is possible to anyone. But a special skill is needed to earn that righteously without harming anyone. The wealth earned in that way not only yields happiness but also virtue. 

782                  நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்நீர பேதையார் நட்பு

பொருள்:-  அறிவுடையார் நட்பு பிறைச் சந்திரன் வளர்வதைப் போல (வளர்ந்துகொண்டே போகும்.) அறிவிலார் நட்பு முழுமை பெற்றபின் சந்திரன்போல (தேய்ந்துகொண்டே போகும்.)

விளக்கம்:- அறிவுள்ளவர்களாயின் கூடக்கூடப் பழக  ஒருவரை ஒருவர் பற்றிய நல்ல அபிப்பிராயம் இன்னுமின்னும் வளர்ந்துகொண்டே போகும். இருவருக்கிடையே உள்ள நட்பும் பிறைச்சந்திரன் வளர்வது போல வளர்ந்துகொண்டே போகும்.  அவர்கள் அறிவற்றவர்களாயின் கூடக்கூடப் பழக அவர்களின் அறியாமை பற்றி கூடக்கூட அறியும்போது அவர்களுடைய நட்பும் நிறைவான சந்திரன் பின்னர் தேய்ந்துகொண்டு போவதுபோல குறைந்து குறைந்து கொண்டே போகும். ஆகவே அறிவுடையாரோடு நட்பாய் இருப்பதே சிறந்தது. 

Meaning:- The friendship of the wise grows like the crescent moon but the friendship of the fools wanes like the full moon.  

Explanation:- If the friends are wise, their understanding of each other grows as they move closer and closer because they will know the worthiness of their friend. But if they are unwise they will come to know more and more about the foolishness of their friend, and it is useless to have that friendship. So, it is better to be friends only with wise people. 

786                 முகம்நக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகம்நக நட்பது நட்பு

பொருள்:-   முகத்தால் (மட்டும்) சிரித்து நட்புக் கொள்வது (உண்மையான) நட்பாகாது. இதயத்தின் உள்ளிருந்து சிரித்து நட்புக் கொள்வதே (உண்மையான) நட்பாகும்.  

விளக்கம்:- நாங்கள் நட்பாயிருக்கிறோம் என்று காண்பிக்கப் போலியாக முகத்தில் சிரிப்போம். அது உண்மையான நட்பு அல்ல. உண்மையான நண்பர் என்றால்  கண்டபோதே எம்முள்ளத்தில்  உவகை பொங்கி அது சிரிப்பாக முகத்தில் மலரும். அதுதான் உண்மையான நட்பு.   

Meaning:- Being friendly by (merely) Smiling in the face is not (true) friendship. The friendship that comes from the smile of the inner heart is the true friendship.

Explanation:- Just to show that we are friends, we merely smile on our face but that is not the true friendship. If our inner heart melts in joy when we see a friend, a smile blooms on our faces. That is true friendship.  

788                  உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு

பொருள்:-  (அணிந்திருக்கும்) உடை தவறி விழும்போது (அக்கணமே சரிசெய்யும்) கைபோல (நட்பானவருக்கு வரும்) துன்பத்தை (அக்கணமே) நீக்குவதே (உண்மையான) நட்பு (ஆகும்)  

விளக்கம்:- ஒருவருடைய உடை நழுவி விழும்போது எந்தவித சிந்தனைக்கும் இடமின்றி அக்கணமே கையானது அதைச் சரிசெய்யும். அது போலவே உண்மையான நண்பர் என்றால் தன்னுடைய  நண்பருக்கு துன்பம் வரும்போது ஏன், எதற்கு, எப்படி என்று மாற்றுச் சிந்தனை எதுவுமின்றி அக்கணமே உதவி செய்வார். இல்லை என்றால் அது உண்மையான நட்பு அல்ல.  

Meaning:- Just like the hand (that moves swiftly to stop) when the dress falls, the (true faithful) friendship (swiftly acts to) remove the distress (of his/her friend)  

Explanation:- When our garment slips down; our hands swiftly move to put that back in position without any thinking process. A true friend also acts swiftly without asking why and how; to remove the distress of his (or Her) friend. If not, that is not a true friendship. 

796                  கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்

பொருள்:- (வாழ்க்கையில்) கெடுதல் விழைவதிலும் ஒரு நன்மை உண்டு. (அதுவே) உறவுகளை (எவ்வளவு விசுவாசமாக உள்ளனர் என்பதை) சரியாக அழக்கின்ற அளவுகோலாகும்.

விளக்கம்:- நாம் நல்ல நிலையில் இருக்கும் போது உறவினர் நண்பர்கள் பலரும் மிக நம்பிக்கையான வர்களாக பழகுவார்கள். ஆனால் நமக்கு ஒரு கெடுதல் வரும்போது உண்மையான நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும்தான் உதவி புரிவார்கள். அவர்களின் உதவியின் அளவு, தன்மையைப் பொறுத்து அவர்கள் எவ்வளவு உண்மையான உறவுகள் என்பதை அறிந்துகொள்ளலாம். அந்த வாய்ப்பு நமக்குக் கெடுதல் வந்தபோது கிடைக்கும் நன்மையாகும்.

Meaning:- There is a benefit even in misfortune, for it is the measuring rod with which the loyalty of friends and relatives can be measured. 

Explanation:- When we are in a better position, many friends and relatives will move as they are very loyal to us but when we face some misfortune;  only the real loyal friends or relatives will be with us to help. Depending on their amount and way of help, we can measure their loyalty. So that is the benefit of our misfortune.

834                  ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தான்அடங்காப்
பேதையின் பேதையார் இல்

பொருள்:- (மனம் மொழி மெய் அடங்குவதற்கான மெய்நூல்களைக்) கற்றாலும் (பொருளை) உணர்ந்தாலும்  (அவற்றைப்) பிறருக்குப் போதித்தாலும், தான் (மனம் மொழி மெய் களால்) அடங்காதிருக்கும்  அறிவற்றவர்களைவிட (கீழான) அறிவற்றவர்கள் இல்லை. 

விளக்கம்:– நாம் ஒன்றைக் கற்பது அதன் பொருளை உணர்வதற்கு. பொருளை உணர்வது அதன்படி மனம் மெய் மொழிகளால் அடங்கி வாழ்வதற்கு. கற்று பொருளை உணர்ந்து அதை மற்றவர்களுக்குப்  போதித்தாலும் அதன்படி நாம் மனம் மெய் மொழிகளால் அடங்கி வாழவில்லையென்றால்  கற்றும் அதனால் பயனடையாத அறிவற்றவர்களே. கற்றும் அறிவற்றவர்களாக  இருப்போர் கற்காமலே அறிவற்றிருப்பவர்களைவிட  கீழான அறிவற்றவர்களே. 

Meaning:- There are no greater fools than the fools who have studied (in order to discipline their mind, word, and body), understood the meaning, and taught them to others but do not obey or discipline themselves accordingly.

Explanation:- We study scriptures to understand their meaning. Understanding the meaning will help us to discipline our mind words and body and live accordingly. Those who have not studied anything are fools. But even after studying, understanding, and teaching that to others; if they do not discipline their minds, bodies, and words and live accordingly, then they are greater fools.

882                  வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு

பொருள்:-  வாளோடு வருவதைப்போன்ற (வெளிப்படையான) பகைவருக்கு அஞ்சவேண்டாம். (ஆனால்) உறவினர் போன்று நடிக்கும் பகைவர்களின் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும்.

விளக்கம்:- வெளிப்படையான பகைவர்களிடமிருந்து நாம் எப்படியோ தப்பிக்கொள்ளலாம். ஆனால் உறவினர் போன்று நடித்துக்கொண்டு இருக்கும் பகைவர்கள் எம்மை அறியாமலே எம்மை அழித்து விடுவார்கள். ஆகையால் எமது உறவுபோல் இருப்பவர்கள் உண்மையான நண்பர்கள்தானா என்பதில் நாம் மிக அவதானமாக இருக்க வேண்டும். 

Meaning:- Do not get scared of the (obvious) enemy who looks like coming with the sward but must be attentive to the relationship of the enemy who pretends like a friend.  

Explanation:- We can escape easily from obvious, open enemies but if that enemy pretends like a friend then he may destroy us easily without our knowledge. So we must be aware of our friends and make sure whether they are our real friends.

972                  பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்

பொருள்:-   எல்லா மனித உயிர்களும் பிறப்பினால் ஒரே தரத்தையே உடையவை. (அவர்கள்) செய்யும் தொழில் (செயற்பாடு) வேறுபாடு காரணமாக (அவர்களின்) சிறப்பு ஒத்திருப்பதில்லை.

விளக்கம்:- மனிதர் பிறக்கும்போது உயர்வு தாழ்வாகப் பிறப்பதில்லை. ஆனால் அவர்கள் தமது வாழ்வில் எவ்வாறான தொழில் செய்கிறார்கள் எப்படியான செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள் என்பதைப்   பொறுத்து உயர்வு தாழ்வு ஏற்படுகின்றன. உயர்வானவர் களாக இருக்க உயர்வான செயற்பாடுகள் அவசியம். 

Meaning:- All human souls are equal in status by birth. But because of their job and activities in life, their status differs (later). 

Explanation:- No human is born with differences in status. They are the same in status by birth. The differences come from their job, type of activities, and way of life. Anyone can be high in status with their good action of high quality.  

978                  பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து

பொருள்:-  பெரியோர்கள் (உயர் பண்பு தகுதி உள்ளவர்கள்) எப்போதும் பணிவாக (அடக்கமாக) இருப்பார்கள். சிறியோர்கள் (தகுதி தராதரம் இல்லாதவர்கள்) தங்களை (தாங்களே) புகழ்ந்து பெருமையாகப் பேசுவார்கள்.

விளக்கம்:- ஒருவர் தன்னைப்பற்றி தானே பெருமையாகப் புகழ்ந்து பேசுகிறார் என்றால் அவர் உண்மையில் பெருமைக்குரியவர் அல்ல என்பதை அறியலாம். உண்மையான பெரியோர்கள் பணிவாக அடக்கமாக அமைதியாக இருப்பார்கள்.   

Meaning:-  The great wise people always be humble but petty people praise and adorn themselves. 

Explanation:- If somebody praises and adorns himself, it means he is not really a great person. The real great men of high qualities will always be humble, peaceful, and mostly silent.  

1000                பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று

பொருள்:- நல்ல பாலானது (அது இருக்கும்) பாத்திரத்தின் அசுத்தத்தால் திரிந்து (கெட்டுப்) போவது போன்று பண்பில்லாதவன் பெற்றுக்கொண்ட பெருஞ்செல்வமும் (வீணே அழிந்து போகும்)

விளக்கம்:- சுத்தமான பாத்திரத்தில் பாலை வைத்திருந்தால் அது உரிய முறையில் அனைவருக்கும்  பயன்படும். ஆனால் அசுத்தமான பாத்திரத்தில் இருந்தால் யாருக்குமே பயன்படாது வீணாகிவிடும். அதுபோலவே செல்வத்தை முறைப்படி பயன்படுத்தக் கூடிய நற்பண்புகள் இல்லாதவரிடம் இருக்கும் செல்வம் யாருக்குமே முறையாகப் பயன்படாமல் வீணாக  அழிந்து போகும்.

Meaning:- The great wealth of a person who has no proper moral values will be ruined without any use; just like the milk gets spoilt due to the impurity of the vessel. 

Explanation:- If the milk is kept in a dirty vessel it will become totally useless for anyone. Similarly, if the wealth is with someone who has no good moral, righteous conduct to utilize same for the proper use; that will perish without any use. 

1001                வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்த தில்

பொருள்:- வீடு நிறைந்த பெரும்செல்வம் வைத்திருந்து (தன் உலோப குணத்தால்) அதை பயன்படுத்தாதவன் (அச்செல்வத்தால்) செய்யப்படுவது ஏதுமில்லாததால் (உயிரோடிருந்தும்) இறந்தவனாவான். 

விளக்கம்:- பொருளை சேர்ப்பது பிறருக்கும் கொடுத்துதவித் தானும் சந்தோசமாக அனுபவிப்பதற்கே. சேர்த்த பொருளைச் செலவழித்தால் குறைந்துவிடுமே என்று பிறருக்கும் கொடாமல் தானும் அனுபவியாமல் மிக உலோபியாக இருப்பவன் உயிரோடு இருந்தாலும் செயலற்றவனாக; இறந்தவனுக்குச் சமமாவான். 

Meaning:- He who has a houseful of wealth and does not enjoy it (because of his miserliness) is reckoned as dead because there is no action. 

Explanation:- We acquire wealth in order to enjoy ourselves and help others. If we do not do that, do not spend at all because of our miserliness we are reckoned as dead while being alive because there is no action takes place.

1005                கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய

கோடிஉண் டாயினும் இல்

பொருள்:- (பிறருக்கு) கொடுப்பதும் (தானும்) அனுபவிப்பதும் இல்லாதவர்களுக்கு பலகோடி (செல்வம்) இருந்தாலும் இல்லாததுபோலவே. 

விளக்கம்:- முடிந்தவரை பொருளை சேர்த்துக் கொண்டிருக்கும் அதேவேளை சேர்க்கும் பொருளை அனுபவித்துக் கொண்டும் முடிந்தவரை பிறருக்கு கொடுத்து உதவிக்கொண்டும் இருக்க வேண்டும். அதுதான் வாழ்க்கை. செல்வத்தால் கிடைக்கும் பயனும் அதுவே. கஞ்சத்தனமாக தானும் அனுபவியாமல் எவருக்கும் கொடுத்து உதவாமல் இருந்தால் பல கோடி செல்வம் இருந்தாலும் எதுவுமே இல்லாத வறுமைக்குச் சமமாகும்.

Meaning:- Those who do not give anything to others and enjoy themselves are destitute despite having millions.  

Explanation:- While accumulating wealth as much as possible we must keep utilizing that for ourselves and to help others. That is life. That is the use of wealth. If we are so miser and do not spend at all we are just destitute despite we have millions.

Be the first to comment

Leave a Reply