Roots of Ethnic Contestation in the Eastern Province

Roots of Ethnic Contestation in the Eastern Province

As in the past, the contestation is over title to the land

by PK Balachandran, 

Daily Mirror, Colombo,

October 10, 2023

 Sri Lanka’s Eastern Province is again becoming a contested region between ethnic groups. This time round it is more between the Tamils and Sinhalese, with the Muslims in the periphery.. This is because of the change in the balance of power between the three communities after the end of the war in May 2009..When the war was raging, the LTTE had dominance and the contestation was between the Tamils and the Muslims over land. After the defeat of the LTTE, the balance of power shifted in favour of the Sinhalese and the Sinhalese-dominated State apparatus. The contestation is again over land, more typically, the historical title to land. The Tamils consider the Eastern Province as their ‘Homeland’ with a hoary past marked by continuous settlement. They demand devolution of power in matters of land and law and order. The Sinhalese challenge these claims, also on historical grounds and a desire to expand territorially to reclaim their ‘lost’ rights. In the early years of independence, the Sinhalese had claimed land in the Eastern Province through Government-sponsored settlement schemes. But now, lands are being appropriated by the various Government Departments for development, archaeology and forest preservation.. The Buddhist monks have jumped into the fray by claiming lands for temples on the ground that these lands once housed Buddhist temples. The Archaeology Department, strengthened by a Presidential Task Force and under the direction of the Buddha Sasana Ministry, is conducting excavations to discover ancient Buddhist temples. Buddhist monks are building temples to lay claim to lands. The State, the Buddhist clergy and the Sinhalese majority see this as a legitimate endeavour also because no community can mark off any area of the island as an exclusive communal preserve.

They point out that there is no bar on Tamils buying land in Sinhalese-majority areas on the island. On the Tamils’ objection to the building of Buddhist temples in Tamil-majority areas, the Sinhalese point out that Hindu temples abound in Sinhalese-majority areas.

The Tamils on the other hand, see a sinister design in acquiring lands in the Tamil-majority areas. It is a move to change the ethnic distribution with the ultimate aim of making the Tamils a minority in the Eastern province, thereby knocking the bottom out of the Tamil case that the Eastern Province is their ‘Homeland’.

Tamils never tire of pointing out how, over the years, their proportion in the Eastern districts have been waning and the Sinhalese proportions are waxing

Tamils also fear a comprehensive loss of power on the island as a whole. They ask for provincial autonomy because they cannot share power at the Centre meaningfully given their permanent minority status. It is pointed out that they will always be a small minority in Parliament given Sri Lanka’s population distribution.

On the issue of the building of Buddhist temples in the Tamil-majority areas, the Tamils’ case is that the building activity is not motivated by piety but by an agenda to claim and seize the land around the new shrines with the help of government departments and the police.

The Tamils argue that there is no rationale for building Buddhist temples where there are hardly any Buddhists and point out that, in contrast, no Hindu temple is built where there are no Hindus.

Recently, The Hindu newspaper reported an issue in which Sinhalese Buddhists had built a stupa near the Aadi Aiyanar temple in Kurunthurmalai in the Mullaithivu District with the help of the Department of Archaeology; and the Sri Lanka Army and Civil Security Force for the “excavation and conservation.”

It is pointed out that Sri Lankan archaeology is not communally neutral as the Department of Archaeology functions under the Ministry of Buddha Sasana.

The Presidential Task Force on Preserving Archaeological Evidence in the Eastern Province set up by President Gotabaya Rajapaksa had no non-Buddhists and was put under the Defence Ministry to boot.

The report in The Hindu said that in the three years since the Task Force panel was set up, at least 23 new Buddhist shrines had come up in Kuchchaveli in Trincomalee District, in villages where Sinhalese constituted roughly 1% of the population, as per official sources.

President Ranil Wickremesinghe forbade Buddhist monks from ordering or carrying out archaeological excavations and to leave that to the Archaeology Department. But as pointed out earlier, the Archaeology Department is under the Ministry of the Buddha Sasana.

According to Fr. Rajan Rohaan of the Church Commission for Peace and Justice, there have been increasing instances where Buddhist monks have entered either state land or lands given to religious institutions and intimidated the occupants, expelling them from their properties and erecting new boundaries.

According to Fr. Rohaan, historically, land in the Eastern Province has been allocated on ethnicity basis. Lands are identified as either Tamil, Muslim or Sinhalese and allotted accordingly.

Historical evidence is used both by the Sinhalese and the Tamils to make contradictory claims to spaces.

It is not known when the Tamils first settled in Sri Lanka, but reputed historians agree that South Indian invasions from the First century BC to the 13th century AD resulted in Tamil migration.

By the 11th and 12th centuries, the upper half of the eastern province had a large Tamil community even as per the Kokila Sandesa as the Mukkara Hatana.

The Tamils consider the Saivite temples in the Eastern Province to be very ancient. For example, the Koneswaram Temple in Trincomalee is dated variously between 1580 BC and 205 BC.

On the other hand, the Sinhalese claim that Trincomalee is actually the ancient Sinhalese port of Gokarna.

According to one source, the conversion of Gokarna to Tirukonamalai (Trincomalee) first appears in a Tamil inscription ascribed to the 10th or the 11th century A.D. The Buddhist Vihara at Gokarna called Sri Gokarna Vihara was built in the reign of King Mahasen (276-303 A.D).

However, many renowned scholars say that it would be inaccurate to claim that only Sinhalese could be Buddhists and that all Buddhist archaeological remains necessarily indicate a Sinhalese connection.

Dr. Nirmala Chandrahasan recalls that during Pallava rule in South India (400-650 A.D) Buddhism flourished there. The Chinese monk scholar Huan Tsang, who visited Kanchipuram in the 7th century AD, states that most of its population was Buddhist, with about 100 monasteries and thousands of monks, including monks from Sri Lanka.

Kanchipuram was also the native city of Dharmapala, the Rector of the famed Nalanda Buddhist University. During the Chola period from the mid-9th century to the early 13th century in Tamil Nadu Buddhism was prevalent there.

The Mahavamsa mentions that in the 13th Century, King Parakramabahu of Dambedeniya got down monks and scriptures from the Chola (Tamil) country to revive Buddhism in Sri Lanka. Chief among these monks was Dhammakitti, who wrote the continuation of the Mahavamsa from the time of King Srimevan up to his time.

Among the learned Tamil Buddhist monks who came to Sri Lanka were Ven. Bhuddhadatta, Ven. Buddhagosha and Ven. Dharmapala. They lived and wrote their works such as the Visudhimagga at the Mahavihara in Anuradhapura.

However, this syncretic past has been forgotten or has been deliberately ignored by the Sinhalese Buddhists as well as the Tamil Hindus. In the present political context, zealots from both communities want to stress their ethnic and religious separateness rather than the common elements which bind them.

The objective is to make claims either to establish exclusivist ghettos or to establish ethnic cum religious hegemony.

Among the Sinhalese, the fear of Tamil consolidation in one area evokes fears of secession because the only place in the world that the Sinhalese are native to is the island of Sri Lanka.

But for the Tamils, the loss of their traditional lands and the dilution of their proportion there amount to denying them a place they can legitimately call their Homeland.

This conflict appears to be insolvable in the absence of an overarching political and moral leadership that can bridge the two.


கிழக்கு மாகாணத்தில் இனப் போட்டியின் வேர்கள்

கடந்த காலங்களைப் போலவே, நிலத்தின் உரிமைக்காக உள்ளது

பி.கே.பாலச்சந்திரன்,

டெய்லி மிரர், கொழும்பு,

ஒக்தோபர் 10, 2023

இலங்கையின் கிழக்கு மாகாணம் மீண்டும் இனங்களுக்கிடையிலான போட்டிப் பிரதேசமாக மாறி வருகிறது. இந்த முறை தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையேயும், சுற்றுவட்டாரத்தில் முஸ்லிம்களுக்கும் இடையேயும் அதிகம்.
.
2009 ஆம் ஆண்டு மே மாதம்   போர் முடிவடைந்ததன் பின்னர் மூன்று சமூகங்களுக்கிடையிலான அதிகார சமநிலையில் ஏற்பட்ட மாற்றமே இதற்குக் காரணமாகும்.
.
போர் உக்கிரமடைந்திருந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் இருந்ததுடன், தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் காணி தொடர்பாகப் போட்டி நிலவியது. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அதிகாரச் சமநிலை சிங்களவர்களுக்கும் சிங்கள மேலாதிக்க அரச இயந்திரத்திற்கும் சாதகமாக மாறியது. போட்டி மீண்டும் நிலத்தின் மீது தொடர்புள்ளது, பொதுவாக, நிலத்திற்கான வரலாற்று உரிமை. தொடர்ச்சியான குடியேற்றங்களைக் கொண்ட கிழக்கு மாகாணத்தைத் தமிழர்கள் தமது ‘தாயகமாக’ கருதுகின்றனர். காணி மற்றும் சட்டம் ஒழுங்கு விடயங்களில் அதிகாரப் பகிர்வை அவர்கள் கோருகின்றனர். சிங்களவர்கள் இந்த கூற்றுக்களை, வரலாற்று அடிப்படையிலும், தங்கள் “இழந்த” உரிமைகளை மீட்டெடுப்பதற்காக பிராந்திய ரீதியாக விரிவுபடுத்துவதற்கான விருப்பத்தின் அடிப்படையிலும் சவால் விடுகின்றனர். சுதந்திரத்தின் தொடக்க  ஆண்டுகளில் சிங்களவர்கள் கிழக்கு மாகாணத்தில் அரசாங்கத்தின் அனுசரணையுடன் கூடிய குடியேற்றத் திட்டங்கள் ஊடாக காணிகளை உரிமை கோரியிருந்தனர். ஆனால், தற்போது பல்வேறு அரசுத் துறைகள் மூலம் வளர்ச்சி, தொல்லியல், வனப்பாதுகாப்பு ஆகியவற்றுக்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தக் காணிகளில் ஒரு காலத்தில் பௌத்த விகாரைகள் இருந்தன என்ற அடிப்படையில் பௌத்த பிக்குகள் ஆலயங்களுக்கான காணிகளை உரிமை கொண்டாடி களத்தில் குதித்துள்ளனர். சனாதிபதி செயலணியினால் பலப்படுத்தப்பட்டு புத்தசாசன அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தொல்பொருள் திணைக்களம் புராதன பௌத்த விகாரைகளை கண்டுபிடிப்பதற்காக அகழ்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றது. பௌத்த பிக்குகள் காணிகளுக்கு உரிமை கோருவதற்காக விகாரக்களை நிர்மாணித்து வருகின்றனர். அரசும், பௌத்த பிக்குகளும், சிங்களப் பெரும்பான்மையினரும் இதனை ஒரு நியாயமான முயற்சியாகவே பார்க்கின்றனர், ஏனெனில் தீவின் எந்தவொரு பிரதேசத்தையும் எந்தவொரு சமூகமும் பிரத்தியேகமான இனவாதப் பாதுகாப்பாக அடையாளப்படுத்த முடியாது.

தீவில் சிங்களர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் தமிழர்கள் நிலம் வாங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் பௌத்த விகாரைகள் கட்டுவதற்கு தமிழர்களின் மறுப்புக் குறித்து சிங்களவர்கள் குறிப்பிடுகையில், சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் இந்துக்  கோயில்கள் ஏராளமாக உள்ளன.

மறுபுறம், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் நிலங்களை கையகப்படுத்துவதில் ஒரு மோசமான திட்டத்தைத் தமிழர்கள் காண்கிறார்கள். கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை சிறுபான்மையினராக்கும் இறுதி நோக்கத்துடன் இனப் பகிர்வை மாற்றும் நடவடிக்கையே இது. இதன் மூலம் கிழக்கு மாகாணம் தமது “தாயகம்” என்ற தமிழரின் வேட்கையின் அடிமட்டத்தை தகர்த்தெறியும் நடவடிக்கையாகும்.

பல ஆண்டுகளாக கிழக்கு மாவட்டங்களில் தமது விகிதாச்சாரம் எவ்வாறு தேய்பிறைபோல்  குறைந்து வருகிறது, சிங்களவர்களின் விகிதாச்சாரம் எவ்வாறு வளர்பிறைபோல் குறைந்து வருகிறது என்பதைச் சுட்டிக்காட்டுவதில் தமிழர்கள் ஒருபோதும் சோர்வடைவதில்லை.

ஒட்டுமொத்தத் தீவிலும் அதிகாரத்தை இழக்க நேரிடும் என்று தமிழர்கள் அஞ்சுகின்றனர். நிரந்தர சிறுபான்மை தகைமை இருப்பதால் மத்தியில் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள முடியாது என்பதால் மாகாண சுயாட்சியைக் கேட்கிறார்கள். இலங்கையின் மக்கள் தொகைப் பரவலைக் கருத்தில் கொண்டு அவர்கள் எப்போதும் நாடாளுமன்றத்தில் ஒரு சிறிய சிறுபான்மையினராகவே இருப்பார்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் பௌத்த விகாரைகள் அமைப்பது தொடர்பான விடயத்தில், கட்டிட நடவடிக்கைகள் இறைபக்தியால் தூண்டப்படவில்லை, மாறாக அரசாங்க திணைக்களங்கள் மற்றும்   காவல்துறையின் உதவியுடன் புதிய விகாரைகளைச் சுற்றியுள்ள காணிகளை உரிமை கொண்டாடி கையகப்படுத்தும் நிகழ்ச்சி நிரலால் மேற்கொள்ளப்படுகின்றன என்பதே தமிழர்களின் குற்றச்சாட்டாகும்.

பௌத்தர்கள் இல்லாத இடத்தில் பௌத்த விகாரைகள் கட்டுவதில் நியாயமில்லை என்று வாதிடும் தமிழர்கள், அதற்கு நேர்மாறாக இந்துக்கள் இல்லாத இடத்தில் இந்துக் கோயில்கள் கட்டப்படுவதில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர்மலை ஆதி அய்யனார் ஆலயத்திற்கு அருகில் தொல்பொருள் திணைக்களத்தின் உதவியுடன் சிங்கள பௌத்தர்கள் விகாரை ஒன்றை நிர்மாணித்ததாக அண்மையில்  இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. மற்றும் “அகழ்வாராய்ச்சி மற்றும் பாதுகாப்பிற்காக” இலங்கை இராணுவம் மற்றும் சிவில் பாதுகாப்புப் படை.

புத்தசாசன அமைச்சின் கீழ் தொல்பொருளியல் திணைக்களம் செயற்படுவதால் இலங்கையின் தொல்பொருளியல் இனரீதியாக நடுநிலை வகிக்கவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சனாதிபதி கோட்டாபய இராசபக்சவினால் அமைக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் சான்றுகளைப் பாதுகாப்பதற்கான சனாதிபதி செயலணியில் பௌத்தர்கள் அல்லாதவர்கள் எவரும் இல்லை என்பதுடன் பாதுகாப்பு அமைச்சின் கீழ் அது கொண்டுவரப்பட்டது.

செயலணி அமைக்கப்பட்ட மூன்று ஆண்டுகளில் திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளியில் சிங்களவர்கள் சனத்தொகையில் சுமார் ஒரு விழுக்காட்டினர்களாக இருந்த கிராமங்களில் குறைந்தது 23 புதிய பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளதாக  இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பௌத்த பிக்குகள் தொல்பொருளியல் அகழ்வுகளை மேற்கொள்ள உத்தரவிடவோ அல்லது மேற்கொள்ளவோ கூடாது என்றும், அதனைத் தொல்பொருளியல் திணைக்களத்திடம் விட்டுவிடுமாறும் சனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தடை விதித்துள்ளார். ஆனால் முன்னர் சுட்டிக்காட்டியவாறு தொல்பொருளியல் திணைக்களம் புத்தசாசன அமைச்சின் கீழ் உள்ளது.

அமைதி மற்றும் நீதிக்கான தேவாலய ஆணையத்தின் அருட்தந்தை இராசன் உரோஹனின் கூற்றுப்படி, பௌத்த பிக்குகள் அரச காணிகள் அல்லது மத நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட காணிகளுக்குள் நுழைந்து ஆக்கிரமிப்பாளர்களை அச்சுறுத்தி, அவர்களின் சொத்துக்களில் இருந்து வெளியேற்றி புதிய எல்லைகளை அமைக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

வரலாற்று ரீதியாக கிழக்கு மாகாணத்தில் காணிகள் இன அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அருட்தந்தை உரோஹான் தெரிவித்துள்ளார். காணிகள் தமிழ், முஸ்லிம் அல்லது சிங்களவர் என இனங்காணப்பட்டு அதற்கேற்ப ஒதுக்கப்படுகின்றன.

வரலாற்றுச் சான்றுகளை சிங்களவர்களும் தமிழர்களும் இடங்களின் மீது முரண்பாடான கூற்றுக்களை முன்வைக்கப் பயன்படுத்துகின்றனர்.

தமிழர்கள் முதன்முதலில் இலங்கையில் எப்போது குடியேறினர் என்பது தெரியவில்லை, ஆனால் கிமு முதலாம் நூற்றாண்டு முதல் கிபி 13 ஆம் நூற்றாண்டு வரை தென்னிந்திய படையெடுப்புகள் தமிழ் புலப்பெயர்வுக்கு வழிவகுத்தன என்று புகழ்பெற்ற வரலாற்றாசிரியர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

11 மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகளில், கிழக்கு மாகாணத்தின் மேல் பாதியில் கோகிலா சந்தேசத்தின் படி முக்கார ஹதானா என்று ஒரு பெரிய தமிழ் சமூகம் இருந்தது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள சைவ ஆலயங்கள் மிகவும் தொன்மையானவை என தமிழர்கள் கருதுகின்றனர். எடுத்துக்காட்டாக, திருகோணமலை கோணேஸ்வரம் கோயில் கிமு 1580 முதல் கிமு 205 வரையான காலத்தைச் சேர்ந்தது.

மறுபுறம், திருகோணமலை உண்மையில் பண்டைய சிங்கள துறைமுகமான கோகர்ணா என்று சிங்களவர்கள் கூறுகின்றனர்.
 

ஒரு ஆதாரத்தின்படி, கோகர்ண திருக்கோணமலைக்கு (திருகோணமலை) மாற்றப்பட்டது முதன்முதலில் கி.பி 10 அல்லது 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு தமிழ் கல்வெட்டில் காணப்படுகிறது. ஸ்ரீ கோகர்ண விகாரை என்றழைக்கப்படும் கோகர்ணாவில் உள்ள பௌத்த விகாரை மன்னர் மகாசேனன் (கி.பி. 276-303) காலத்தில் கட்டப்பட்டது.

எவ்வாறெனினும், சிங்களவர்கள் மாத்திரமே பௌத்தர்களாக இருக்க முடியும்,  அனைத்து பௌத்த தொல்பொருள் எச்சங்களும் சிங்களத் தொடர்பைக் குறிக்கின்றன என்று கூறுவது தவறானது என்று பல புகழ்பெற்ற அறிஞர்கள் கூறுகின்றனர்.

தென்னிந்தியாவில் பல்லவர் ஆட்சிக் காலத்தில் (கி.பி. 400-650) பௌத்தம் செழித்திருந்தது என்று முனைவர் நிர்மலா சந்திரகாசன் நினைவு கூர்கிறார். கி.பி 7 ஆம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்திற்கு வருகை செய்த சீனத் துறவி அறிஞர் ஹுவான் சாங், அதன் மக்கள்தொகையில் பெரும்பாலோர் பௌத்தர்கள் என்றும், சுமார் 100 மடாலயங்கள் மற்றும் இலங்கையைச் சேர்ந்த துறவிகள் உட்பட ஆயிரக்கணக்கான துறவிகள் இருப்பதாகவும் கூறுகிறார்.

புகழ்பெற்ற நாலந்தா பௌத்த பல்கலைக்கழகத்தின் முகவரான தர்மபாலரின் சொந்த நகரமும் காஞ்சிபுரம் ஆகும். பிற்காலச் சோழர் ஆட்சி செய்த காலம்  9 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை. இந்தக் காலப் பகுதியில் தமிழ்நாட்டில் பவுத்தம்  வழக்கத்தில் இருந்தது.


13 ஆம் நூற்றாண்டில், இலங்கையில் பௌத்த மதத்தை புதுப்பிக்க சோழ (தமிழ்) நாட்டிலிருந்து துறவிகள் மற்றும் சாத்திரங்களை தம்பதேனியாவின் மன்னர் பராக்கிரமபாகு வரைவழைத்தார் என்று மகாவம்சம் குறிப்பிடுகிறது.  இந்தத் துறவிகளில் முக்கியமானவர் ஸ்ரீமேவன் காலத்திலிருந்து அவரது காலம் வரை மகாவம்சத்தின் தொடர்ச்சியை எழுதிய தர்மகீர்த்தி ஆவார்.

அவ்வாறு இலங்கைக்கு வந்த கற்றறிந்த தமிழ் பௌத்த பிக்குகளில் வணக்கத்திற்குரிய புத்தகோச, வணக்கத்திற்குரிய தர்மபாலர் ஆகியோரும் அடங்குவர். அனுராதபுரம் மகாவிஹாரத்தில் வாழ்ந்த அவர்கள் விசுதிமக்க  போன்ற படைப்புகளை எழுதினர்.


எவ்வாறெனினும், இந்த ஒத்திசைவான கடந்த காலம் சிங்கள பௌத்தர்களாலும் தமிழ் இந்துக்களாலும் மறக்கப்பட்டுள்ளது அல்லது வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசியல் சூழலில், இரு சமூகங்களையும் சேர்ந்த மதவெறியர்கள் தங்களைப் பிணைக்கும் பொதுவான கூறுகளை விடத்  தங்கள் இன மற்றும் மத தனித்துவத்தை வலியுறுத்த விரும்புகிறார்கள்.

இதன் நோக்கம் வெளிப்புற சேரிகளை நிறுவுவது அல்லது இன மற்றும் மத மேலாதிக்கத்தை நிறுவுவது ஆகும்.

உலகில் சிங்களவர்களவர்களைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரே  இடம் இலங்கைத் தீவு என்பதால், சிங்களவர்களிடையே ஒரு பகுதியில் தமிழர் ஒருங்கிணைவது குறித்த அச்சம் பிரிவினை அச்சத்தைத் தூண்டுகிறது.

ஆனால் தமிழர்களைப் பொறுத்தவரை தமது பாரம்பரிய நிலங்களை இழப்பதும், அங்கு அவர்களின் விகிதாச்சாரம் நீர்த்துப்போகச் செய்வதும் அவர்கள் தமது தாயகம் என்று சட்டரீதியாக அழைக்கக்கூடிய ஒரு இடத்தை மறுப்பதற்குச் சமமாகும்.

இரண்டையும் இணைக்கக்கூடிய ஒரு பரந்த அரசியல் மற்றும் தார்மீக தலைமை இல்லாத நிலையில் இந்த மோதல் தீர்க்க முடியாததாகத் தெரிகிறது. (தமிழாக்கம் நக்கீரன்)

 


About editor 3118 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply