சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! இந்தச் சித்தர்கள் யார்?
அன்புத்தம்பி
தமிழ்ச் சித்தர்களைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் இருக்க மாட்டார்கள். சித்தர்கள் பற்றிக் கேள்விப்படாதவர்கள் கூட சித்தர் பாடல்கள் இரண்டொன்றைச் செவி மடுத் திருப்பார்கள்.
நாதர்முடி மேல் இருக்கும் நாகப் பாம்பே!
நச்சுப்பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே!
பாதலத்தில் குடிபுகும் நல்ல பாம்பே!
பாடிப்பாடி நின்று ஆடு பாம்பே!
திரைப்படத்திலும் வந்து சக்கை போட்ட பாடல் இது. இதை இயற்றியவர் பாம்பாட்டிச் சித்தர்.
பதினெண் சித்தர்கள் என்பது மரபு. ஆனால் அவர்கள் யார் யார் என்பதில் கருத்து ஒற்றுமை இல்லை. அதனால் பதினெட்டுக்கும் மேற்பட்ட சித்தர்கள் பெயர்கள் காணப்படுகின்றன.
ஒரு பழம்பாடல் பதிணென் சித்தர்களது பெயர்களை வரிசைப்படுத்துகிறது.
நந்தி, அகத்தியர், திருமூலர், புண்ணாக்கீரர்
நற்றவத்துப் புலத்தியர் பூனைக் கண்ணனார்
இடைக்காடர், போகர், புலிக்கையீசர்,
கருவூரார், கொங்கணர், காலாஞ்சி
எழுகண்ணர். அகப்பேய், பாம்பாட்டி
தேரையர், குதம்பையர், சட்டைநாதர்
இந்தச் சித்தர்கள் யார்? அவர்களது வரலாறு என்ன? இவை பெரிதும் மூடு மந்திரமாகவே இருக்கின்றன.
இவர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்கள் அதிகம் இல்லை. மாறாக அவர்களைப் பற்றிய செவிவழி கதைகளே மிஞ்சி நிற்கின்றன. இவர்களது காலம் 10 ஆம் நூற்றாண்டுக்கும் 18 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலமாகக் கருதப்படுகிறது. திருமூலர் காலம் 10 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்.
சித்தர்களால் பாடப்பெற்ற பெரிய ஞானக் கோவை என வழங்கும் சித்தர் பாடல்களின் தொகுப்பு நூல் ஒன்றும் சில மருத்தவ நூல்களும் மட்டுமே இன்று கிடைக்கின்றன. பல பாடல்களும் நூல்களும் மறைந்து விட்டன. இருந்தும் இன்னும் அச்சில் வராத ஏட்டுச் சுவடிகள் ஆயிரக் கணக்கில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
சித்து அல்லது சித்தி என்றால் ஆற்றல், வெற்றி, கைகூடல் என்று ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் உண்டு. ஒருவர் அசாதாரண செயலைச் செய்தால் அவர் சித்து விளையாட்டு செய்கிறார் என்பது பொருள். ஒருவர் தேர்வில் சித்தி எய்திவிட்டார் என்றால் அவர் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டார் என்று பொருள். போன காரியம் சித்தி என்றால் போன வேலை கைகூடிவிட்டது என்று பொருள்.
எனவே சித்தர்கள் என்றால் பேராற்றல் படைத்தவர்கள் என்று பொருள். பொதுவாக அட்டமா சித்திகள் (எண்வகை ஆற்றல்) கைவந்தவர்களே சித்தர்கள் எனப்படுகிறார்கள்.
மகாகவி பாரதியார் கூட தன்னை ஒரு சித்தர் என்று சொன்னார்.
எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா!
யானும் வந்தேன் ஒருசித்தன் இந்த நாட்டில்
என்கிறார். மேலும் தாம் இயற்றிய புதிய ஆத்தி சூடியில் சித்தர் பாணியில்-
அச்சம் தவிர்
ஏறுபோல் நட
தெய்வம் நீ என்றுணர்
நினைப்பது முடியும்
என அடித்துச் சொல்கிறார்.
தமிழ்ச் சித்தர்கள் மருத்துவம், புவியியல், மந்திரம், தந்திரம், ஞானம், யோகம், இரசவாதம் பற்றி பாடல்கள் பாடியுள்ளார்கள். ஆனால் சமுதாயத்தைப் பற்றி யாரும் தனி நூல் இயற்றவில்லை. ஆயினும் அனைத்துச் சித்தர் பாடல்களில் சமுதாய சீர்திருத்த மறுமலர்ச்சிக் கருத்துக்கள் மிகுந்திருப்பதைக் காணலாம்.
தமிழ்ச் சித்தர்களது சித்த மருத்துவம் புகழ்பெற்றது. சித்த மருத்துவத்தில் செடி, கொடி, கனி, கிழங்கு, வேர், பட்டை போன்றவற்றில் இருந்து மட்டும் அல்லாது தங்கம், உப்பு, பாதரசம் (mercury) போன்ற உலோகங்களில் இருந்தும் நவ பாஷாணங்களில் இருந்தும் மருந்து தயாரிகப்படுகிறது.
தமிழ்ச் சித்தர்கள் பக்தி மார்க்கத்தைப் பின்பற்றாது குண்டலினி யோக மார்க்கத்தைப் பின்பற்றினார்கள். உயிர் மட்டுமல்ல. உடலும் நித்தியமானது என்பது இவர்கள் கோட்பாடு. .
சாதி மத பேதத்தை கடுமையாகக் கண்டித்தார்கள். மனித குலம் ஒன்று. தேவனும் ஒன்றே என்றார்கள்.
சைவ சித்தாந்தத்தில் உள்ள சரியை கிரியை இரண்டையும் கண்டித்தார்கள். உருவ வழிபாட்டைச் சாடினார்கள். சுரண்டலையே குறியாகக் கொண்ட பிராமணீய சடங்குகளைக் கடுமையாக எதிர்த்தார்கள்.
சித்தர்களில் திருமூலர் முதன்மை இடம் வகிக்கிறார். அவர் பாடிய திருமந்திரம் 3,027 பாடல்களைக் கொண்டது. இதுவே சைவ சித்தாந்தத்தின் அடிப்படையை விளக்குகிறது. ‘ஒன்றே குலம் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நாணாமே’ என்ற இவரது கூற்று பேரறிஞர் அண்ணாவுக்கும் அவர் தம்பிமார்க்கும் சம்மதமே.
அண்ணா வேலைக்காரி திரைப்படத்தில் சாதியைச் சாடுவதற்கு திருமூலரின் “ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற முழக்கத்தைக் கையில் எடுத்தார்.
தேரையர் என்ற சித்தர் எழுதிய “நோய்யணுகா விதி” சிறந்த மருத்துவ நூல் என்பர்.
இன்னொரு புகழ்பெற்ற சித்தர் அகத்தியர். அகத்தியம் என்ற இலக்கண நூல் செய்த அகத்தியர் வேறு இவர் வேறு. அகத்தியர் என்ற பெயரில் பலர் இருந்திருக்கிறார்கள்.
“தேடுகின்ற புராணமெல்லாம் பொய்யே என்றேன்
ஆடுகின்ற தீர்த்தமெல்லாம் அசுத்த மென்றேன்”
என்பார் அகத்தியர்.
‘மூர்க்கருடன் பழகாதே பொய் சொல்லாதே
பின்னே நீ திரியாதே பிணங்கிடாதே’
என்பது நக்கீரர் கூற்று.
தமிழ்ச் சமுதாயத்தில் இன்றும் பெரு நோயாக உள்ள சாதியை சித்தர்கள் கடுமையாக சாடியிருக்கிறார்கள். மேல் சாதி கீழ் சாதி, சாதிக்குள் சாதி இவற்றை அன்றே பொய் எனத் துணிந்து சாடிய நெறி சித்தர்களது என்பது குறிப்பிடத்தக்கது.
‘சாதி குலமில்லை, சற்குருவறிந்தால்’
‘சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்’
‘சாதிபேதம் என்பதொன்று சற்றுமில்லை இல்லையே’
எனப் பலர் சித்தர்கள் சாதிக் கொடுமையை எதிர்த்து குரல் கொடுத்துள்ளார்கள். சாதிப் பிரிவை மிகுதிப்படுத்தி வளர்க்கும் சடங்கு, ஆசார, சாத்திரக் குப்பைகளால் தீமையேயன்றி அணுவளவும் நன்னை இல்லை என்றார்கள்.
‘கலையுரைத்த கற்பனையை நிலையெனக் கொண்டாடும்
கண்மூடிப் பழக்கமெல்லாம் மண் மூடிப் போக’
என அருட்பெருஞ் சோதி தனிப் பெருங் கருணை என்ற சமரச சன்மார்க்கத்தைக் காட்டிய இராமலிங்க அடிகள் கூறுகிறார்.
இன்னொரு புகழ்பெற்ற சித்தர் சிவவாக்கியர். ஆனால் இவரது பெயர் பதிணென் சித்தர்களின் பட்டியலில் இடம்பெறவில்லை.. இருந்தும் சித்தர்களில் இவர் ஒரு அதிதீவிரப் போக்குடைய சித்தர் ஆவார். ஒரு சில சித்தர் பாடல்கள் பதிப்புக்களில் இவரது பெயர் முதல் இடம் பெற்றுள்ளது.
மொத்த சித்தர்களின் எண்ணிக்கை 50 க்கு மேல் இருக்கிறது!
சிவவாக்கியர் சாதி, சமயம், கோயில், குளம், மந்திரம் தந்திரம், ஆசாரம் சடங்கு போன்ற குருட்டு நம்பிக்கைகளை மிகவும் கடுமையாகத் தாக்கிய புரட்சியாளர். ஒவ்வொரு பாடல்களிலும் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான அவரது சீற்றம், வெறுப்பு துலாம்பரமாகத் தெரிகிறது.
இதனால் அரண்டு போன சைவ ஆதீனங்கள் நாட்டிலுள்ள சிவவாக்கியர் பாடல்கள் அடங்கிய ஏட்டுச் சுவடிகளை தேடி எடுத்துக் கொளுத்தினார்கள்.
சித்தர்களின் பாடல்கள் ஓசை நயம் மிக்கவை. பழகு தமிழில் பாடப்பட்டவை. இருந்தும் மறைபொருள் பொருள் கொண்டவை. பாடல்களைப் படிக்கும் போது நேரடியாக ஒரு பொருளும் மறைமுகமாக இன்னொரு பொருளும் இருக்கக் காணலாம்.
‘நட்ட கல்லை சுற்றி வந்து நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொணெமொணென்று சொல்லும் மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமோ?’
சிவவாக்கியர் பாடிய இந்தப் பாடல் நாடறிந்த பாடல்.
சுட்ட சட்டியும் அதில் வேகுகின்ற கறியைக் கிளறுகின்ற கரண்டியும் அந்தக் கறிச்சுவையை அறியாதது போல, பரம்பொருள் நம் உள்ளத்தே இருக்க அதை அறியாமல் கற்சிலைக்கு நான்கு வகை மலர்கள் சாற்றுவதும் அதைச் சுற்றி வந்து முணு முணுக்கும் மந்திரம் எங்குள்ளது?
நட்ட கல் பேசுமோ? பேசாது!
இவ்வாறு உருவ வழிபாட்டை மறுத்து சிவவாக்கியர் நாத்திகவாதம் பேசுகிறார். இவ்வாறு 534 பாடல்களில் சிவவாக்கியர் உருவ வழிபாட்டையும் சடங்குகளையும் அஞ்சாது சாடி சமூக சீர்திருத்தக் கருத்துக்களை விதைத்துள்ளார்.
சிவவாக்கியர் பற்றிய வாழ்க்கைக் குறிப்பு ஒன்றும் கிடைத்திலது. அவரது இயற்பெயர், ஊர், பெற்றோர் பெயர் தெரியவில்லை. சிவவாக்கியம் என்ற இவரது நூலின் காப்புச் செய்யுளில் குறிப்பிடப்பட்டுள்ள பெயரிலேயே இவர் சிவவாக்கியர் எனக் குறிப்பிடப்படுகிறார்.
சிவவாக்கியர் தாயுமானவரால் குறிப்பிடப்படும் பெருமை பெற்றவர்.
சாதியும் தீண்டாமையும் இந்து மதத்தை பீடித்துள்ள நோய்கள்!
இன்று உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் மதம் இஸ்லாம். இது கேட்பதற்கு கசப்பாக இருக்கும். ஆனால் அதுதான் உண்மை. இதற்கு அந்த மதத்தின் எளிமை. எல்லாம் வல்ல, எல்லாம் தெரிந்த, எங்கும் நிறைந்த, உருவம் அற்ற ஒரு கடவுளை வணங்குவது காரணமாக இருக்கலாம்.
இஸ்லாம் மதத்தின் வேத நூல் குரான் மட்டுமே. அரபு மொழியில் எழுதப்பட்ட குரானில் 114 அத்தியாயங்கள், 6,666 வசனங்கள், 1,709 பக்கங்கள், 336,233 சொற்கள் காணப்படுகின்றன. குரானை கபிரியல் என்ற தேவ தூதன் 23 ஆண்டு (கி.பி. 610-கி.பி.632) காலப் பகுதியில் முகமது நபிக்கு அருளியதாகச் சொல்லப்படுகிறது.
கிறித்தவ மதத்தின் வேத நூல்களின் எண்ணிக்கை 66. அத்தியாயங்கள் 1,709. வசனங்கள் 31,173. பக்கங்கள் 1,709, சொற்கள் 774,746 காணப்படுகின்றன. 66 புத்தகங்களும் (27 பழைய ஏற்பாடு) 3 மொழிகளில் கிட்டத்தட்ட 1,500 ஆண்டு காலம் எழுதப்பட்டது. பழைய ஏற்பாட்டை ஹீப்புரூ மொழியில் எழுதிய முதல் மனிதர் மோசஸ். அதை எழுதி முடிக்க 1,000 ஆண்டுகள் எடுத்தது. அதில் சில அத்தியாயங்கள் அறாமிக் (யுசயஅiஉ) மொழியில் எழுதப்பட்டது. பழைய ஏற்பாடு கி.மு. 300 ஆண்டளவில் கிரேக்க மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. புதிய ஏற்பாடு கி.பி. 50-கி.பி. 100 இடைப்பட்ட காலப் பகுதியில் கிரேக்க மொழியில் எழுதப்பட்டது.
சைவசமயத்தின் அடிப்படை நூல்கள் வேதங்களும் சிவாகமங்களும் ஆகும். ‘வேத நன்கினும் பெய்ப் பொருளாவது” என்ற சம்பந்தர் தேவராரத்தில் குறிப்பிட்ட இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்ற நால் வேதங்களையும் வியாசர் தொகுத்ததாகக் கூறப்படுகிறது.
ஒவ்வொரு வேதமும் நான்கு பகுதிகளைக் கொண்டவை. அவை மந்திரங்கள், பிரமாணங்கள், ஆரண்யங்கள், உபநிடதங்கள் எனப்படும்.
இருக்கு வேதத்தில் 1,028 பாசுரங்கள் உள்ளன. இதில் இந்திரனுக்கு 250, அக்னிக்கு 200, சோமனுக்கு 120, வருணனுக்கு 12 பாசுரங்கள் பாடப் பெற்றுள்ளன.
இந்தப் பாசுரங்கள் வெள்ளை நிறத்தவரான ஆரியர்கள் தங்கள் கருப்பு நிற எதிரிகளான தஸ்யூக்களை அழிக்குமாறும் அப்படி அழித்த கடவுளர்க்கு சோமபானம் படைத்து நன்றி பாராட்டுவன ஆகும்.
ஓ! உலகம் போற்றும் இந்திரனே!சுஷ்ரூவனை எதிர்த்த இருபது கறுப்பு அரசர்களையும் அவர்களது அறுபதினாயிரத்துத் தொண்ணூற்றியொன்பது படைகளையும் நீ உன் தேர் சக்கரத்துக்கு இரையாக்கி நசுககிக் கொன்று ஆரியர்களுக்கு உதவிபுரிந்தாய்.
(இருக்கு வேதம் மண்டலம் மந்திரம் 53, ஸ்லோகம் 9 அதர்வணவேதம் காண்டம் ஓஓ மந்திரம் 21, சுலோகம் 9)
சோமன் என்பது உருவகம். சோமச் செடியில் இருந்து பிழிந்து எடுக்கப்படும் கள்ளைக் குறிப்பது. அதை ஆரியர்கள் தாங்களும் குடித்து கடவுளர்க்கும் படைத்தார்கள்.
மேலே குறிப்பிட்ட நான்கு வேதக் கடவுளர்க்கும் வழிபாடு இப்போது இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
வேதாங்கங்கள் ஆறு
1) சிக்கை – வேதங்களை உச்சரிக்கும் முறை.
2) கற்பம் – வேதக் கருமங்களை அனுட்டிப்பதைக் கூறும்.
3) வியாகரணம் – வேதங்களின் எழுத்துச் சொற்களின் இலக்கணங்களைக் கூறுவது.
4) நிருத்தம் – வேதங்களில் உள்ள சொற்களின் பொருளை அறிவிப்பது.
5) சந்தோவிசிதி – வேதங்களின் காயத்திரி, அதன் சந்தங்கள், எழுத்தின் அளவு என்பவற்றைக் கூறுவது.
6) சோதிடம் – வேத மந்திரங்களைச் சொல்வதற்கு காலங்களைக் குறிப்பது.
வேதத்தின் உபாகமங்கள் நான்கு
1) பதினெண் புராணம் – சிவன், விட்ணு, பிரமன், சூரியன், அக்கினி இவர்களின் ஆற்றல் பற்றி படிப்பறிவு குறைந்தவர்களுக்கு விளங்க வைப்பது
2) நியாயம் – வேதப் பொருளை நிட்சயிப்பதற்கு உதவுவது.
3) மீமாஞ்சை வேதப் பொருளின் தார்ப்பரியத்தை அறிய உதவுவது.
4) ஸ்மிருதி – நால் வருணம், ஆச்சிரமங்களுக்குரிய தர்மங்களைக் கூறுவது.
உப வேதங்கள் நான்கு
1) ஆயுர் வேதம் – வைத்திய நூல்
2) தனுர் வேதம் – படைக்கலப் பயிற்சி பற்றிய நூல். தனுர் என்றால் வில் என்று பொருள்.
3) காந்தருவ வேதம் – கடவுளுக்கும் மனிதருக்கும் உரிய இசையை அறிவிப்பது.
4) அருத்த வேதம் – – இம்மை மறுமைக்கு உரிய பொருள் சம்பாதித்தல் தொடர்பான சாத்திரங்களைக் கூறுவது.
மறை பொருட் கோட்பாடுகளை அறிவுறுத்தும் உப நிடதங்களின் எண்ணிக்கை 108. அதில் 12 சிறப்பானவை. இந்த உப நிடதங்களே வேதாந்தம் என அழைக்கப்படுகின்றன.
சிவாகமங்கள் 28. இவை சிவபெருமானின் ஐந்து திருமுகங்களில் இருந்து தோன்றியவை என்று நம்பப்படுகிறது. அவை நான்கு பாதங்களைக் கொண்டவை.
1) ஞானபாதம் – முப்பொருள் உண்மை
2) யோகபாதம் – அட்டாங்க சிவயோகம்
3) கிரியாபாதம் – மந்திரங்களின் உத்தாரம், சந்தியாவந்தனம், பூசை, செபம், அர்ச்சனை, ஆசாரிய, அபிசேகம்
4) சரியாபாதம் – சமயாசாரங்களை உபதேசிக்கிறது
சிவனை வேதத்தோடு இணைத்தும் வழிபாட்டினை ஆகமத்துடன் சேர்த்தும் சொல்வது சைவத்தின் பொதுப் போக்காகும். இதன் காரணமாகவே சைவத்துக்கு வேதம் பொது, ஆகமம் சிறப்பு என்று சொல்லப்படுகிறது.
சிவாகமங்களின் வழி நூல்கள் 207. சிவாகமங்களின் சார்பு நூல்கள் 8. பன்னிரு திருமுறைகள் வேதத்தின் வழி அல்லது சார்பு நூல்களாகும். 11 ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ள ‘திருமுகப்பாசுரம்’ சிவனால் அருளப்பட்டது என்பர். எஞ்சியவை சிவஞானம் கைவரப்பெற்ற ஞானிகளால் பாடப்பட்டவை. வேதாகமே தமிழ் வேதமாகக் கருதப்படுகிறது.
இவற்றைவிட வேதங்கள், சிவாகமங்கள், புராணங்கள், திருமுறைகள் வழிவந்த 14 சித்தாந்த சாத்திரங்களும் உண்டு.
இவற்றை திருவியலூர் உய்யவந்த தேவர் (திருவுந்தியார்) திருக்கடவூர் உய்யவந்த தேவர் (திருக்களிற்றுப் பாடியார்) மெய்கண்ட தேவர் (சிவஞானபோதம்)
அருணந்தி சிவாச்சாரியார் (சிவஞான சித்தியார், இருபாலிருபது)திருவதிகை மனவாசகம் கடந்தார் (உண்மை விளக்கம்)
மறைஞான சம்பந்தர் (சதமணித்திரட்டு)
உமாபதி சிவாச்சாரியார் (சிவப்பிரகாசம் முதல் சங்கற்ப நிராகரணம் ஈறாக 8 சாத்திரங்கள்).
இவர்கள் 13-14 வது நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்கள்.
பதினான்கு சித்தாந்த சாத்திரங்களின் மூலமும் உரையும் கொண்ட நூல் மட்டும் 1206 பக்கங்கள் கொண்டவை.
குரானை முயன்றால் நெட்டுருச் செய்து கொள்ளலாம். பைபிளை படிக்க மாதங்கள் எடுக்கலாம். ஆனால் இந்து வேதாகமங்களைப் படிக்க வாழ்நாள் போதாது!
கோயில் அர்ச்சகர்கள் உட்பட வேதாகமங்களைப் படித்த சைவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
பதி (இறைவன்) பசு (உயிர்) பாசம் (ஆணவம், மாயை, கன்மம்)
ஆதி சங்கரரின் (கி.பி. 788-820) அத்துவைதம் (உயிர்களும் உலகமும் பிரமத்தின் தோற்றமே என்ற மாயாவாதம். இரண்டன்மை)
சங்கரரின் அத்துவைதத்தை மறுக்கும் இராமனுசரின் (கி.பி. 1017-1137) விசிட்டாத்துவைதம் (சித்து அசித்து இரண்டும் ஈசுவரனும் ஒன்றே)
மத்துவரின் (கி.பி. 1199-1278) துவைதம் (சீவான்மாவும் பரமான்மாவும் வேறு வேறு) இந்தக் கோட்பாடுகளை படித்து பொருள் உணர்ந்து கொண்டவர்கள் அரிது.
இதனால் சைவ சமயத்தவர்கள் அர்ச்சனை அபிசேகம் போன்ற சரியை கிரிகையோடு நின்று விடுகிறார்கள்.
இஸ்லாம், கிறித்தவம், இந்து சமயங்களுக்கு இடையில் ஒரு ஒற்றுமை உள்ளது. அது அவர்களது மத நூல்கள் அந்தந்த மதக் கடவுள் வாக்கு என்பது. வேதங்களும் ஆகமங்களும் தாமே தோன்றியவை. மனிதர்களால் இயற்றப்படாமல் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டவை என்று சைவ சித்தாந்தம் கூறுகிறது.
தேய்ந்து வருகிற சமயங்களில் இந்து சமயம் முன்னணியில் நிற்கிறது. இதற்குக் காரணம் அந்த மதத்தில் காணப்படும் வர்ண பேதமும் சாதி அமைப்பும் வடமொழி -பிராமணிய மேலாண்மையும் ஆகும்.
கடந்த ஐப்பசி 16ஆம் நாள் பெரம்பலூர் துறைமங்கலம் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையின் கிழக்கு பகுதியில் நடந்த புத்த மாநாட்டில் நூற்றுக் கணக்கான தலித் இந்துக்கள் மொட்டை அடித்து புத்த மதத்தில் இணைந்தனர்.
பெரம்பலூர் மாவட்ட அம்பேத்கர் இளைஞர் முன்னணி தமிழ்நாடு அமைப்பினரும், பன்னாட்டு பவுத்த இளைஞர் இயக்கம் ஆகியன இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தியது.
இதற்கான விழாவுக்கு அண்ணல் அம்பேத்கர் இளைஞர் முன்னணி மாநில தலைவர் கே.கந்தசாமி தலைமை தாங்கினார். டாக்டர் வேணு அண்ணாமலை முன்னிலை வகித்தார். கே.பி.தம்மசென் வரவேற்றார்.
‘இந்த மத மாற்ற நிகழ்ச்சி ஒரு ஆரம்பம் தான். தாழ்த்தப்பட்ட இனத்தவருக்கு இன்னும் சமூக நீதி கிடைக்கவில்லை. தீண்டாமை இன்னும் ஒழியவில்லை. கிராமங்களில் இன்னும் இரட்டை தம்ளர் முறை உள்ளது. இந்த ஏற்றத்தாழ்வுகளை போக்கத்தான் தாழ்த்தப்பட்டோர் புத்த மதத்தில் சேருகின்றனர். இந்தியாவில் தோன்றிய புத்த மதத்தை புதுப்பிக்கிறோம். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் புத்த மடங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று’ தலைவர் கந்தசாமி கூறினார்.
பவுத்த தேரர் பாதிதம்மா மற்றும் பவுத்த தேரர்கள் புத்தர் சிலைக்கு அபிசேகம் செய்தனர். அடுத்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பாலிமொழியில் மந்திரம் ஓதினர். பின்னர் புத்த மதத்தில் சேர விரும்பிய அனைவரும் பவுத்த தேரர் போதிதம்மா தலைமையில் 22 உறுதிமொழிகளைச் செய்து தீட்சை பெற்றுக் கொண்டனர்.
டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் நாக்பூரில் 1956 ஐப்பசி 15 இல் தனது 800,000 ஆதரவாளர்களோடு இந்து மதத்தை கைவிட்டு புத்தமதத்தில் சேர்ந்து கொண்டார். இந்து மதத்தில் புரையோடிப் போய்விட்ட சாதி, தீண்டாமை, மூடநம்பிக்கைகள் மற்றும் சடங்குகள் இவற்றில் இருந்து விடுபடவே இந்த மதமாற்றம் இடம் பெற்றதாக அப்போது அம்பேத்கார் கூறினார்.
இந்த மதமாற்றம் பற்றி சைவ ஆதீனங்கள் கவலைப்படுவதில்லை. காஞ்சி காமகோடி பீடம் துக்கப்படுவதில்லை. சைவ-இந்து அமைப்புக்கள் வருத்தப்படுவதில்லை. இந்து பரிசத் அலட்டிக் கொள்வதில்லை.
இந்து மதத்தில் நால் வர்ணம் அதன் ஆணி வேர்! சாதிகள் சல்லி வேர்கள்!
டாக்டர் அம்பேத்கார் 1981 ஆம் ஆண்டு ஐப்பசி 15 இல் தனது 800,000 ஆதரவாளர்களோடு இந்து மதத்தை உதறிவிட்டு புத்த மதத்தை தழுவினார்.
‘நான் இந்துவாக சாக மாட்டேன்!;’ என்று கூறி அப்பேத்கார் மதம் மாறிய நாள் ஒவ்வொரு ஆண்டும் அதே நாக்பூரில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவில் வெளிநாடு மற்றும் நாட்டின் பல பகுதிகளில் இருந்து இலட்சக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர். இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் 65,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து தலித் மக்கள் புத்த மதத்தை தழுவினார்கள்.
இந்த சிறப்பு நிகழ்ச்சியில் யப்பானில் பிறந்து இந்தியாவில் வதியும் புத்த சன்னியாசி பாந்தி நாகார்சுன் சுராய்சசாய் புத்த மதத்தை தழுவியவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.
புத்தமதத்தை தழுவுகிறவர்கள் 22 உறுதி மொழிகளை எடுத்துக் கொள்கிறார்கள்.
பிரமன், விஷ்ணு, சிவன் போன்றோரை கடவுள் என்று கருதவோ வழிபடவோ மாட்டேன்.
கவுரி, கணபதி போன்றோரை கடவுள் என்று கருதவோ வழிபடவோ மாட்டேன்.
இராமன், கிருஷ்ணன் இருவரையும் கடவுள் அவதாரம் எடுக்கிறார் என்பதை நான் நம்ப மாட்டேன்.
பகவான் புத்தர் மகாவிஷ்ணுவின் அவதாரம் என்பதை நம்பமாட்டேன். அப்படி பரப்புரை செய்வது குறும்புத்தனமும் பொய்யானதும் ஆகும்.
நான் ஒரு போதும் சிரார்த்தம் செய்ய மாட்டேன்.
பவுத்த கோட்பாடுகளுக்கு எதிராக ஒரு போதும் நடக்க மாட்டேன்.
பிராமணர்களால் நடத்தப்படும் கிரிகைகள் எதனையும் ஏற்க மாட்டேன்.
அனைவரும் சமம் என்ற கொள்கையை நான் நம்புகிறேன்.
சமத்துவத்தை ஏற்படுத்தப் பாடுபடுவேன்.
புத்த பகவானின் அட்டாங்க மார்க்கத்தைப் பின்பற்றுவேன்.
தருமத்தின் தசசீலங்களை பின்பற்றுவேன்.
எல்லா உயிர்கள் மீதும் கருணை காட்டுவேன். அவற்றை முடிந்த மட்டும் காப்பாற்றுவேன்.
பொய் சொல்லமாட்டேன்.
திருட மாட்டேன்.
காமத்தில் உழல மாட்டேன்;. பால் உணர்வில் அத்துமீற மாட்டேன்.
போதை தரும் குடியையோ மதுவையோ நான் அருந்தமாட்டேன்.
முடிந்த மட்டும் எனது வாழ்க்கையை பவுத்த கொள்கை. கருணை இவற்றை அடிப்படையாகக் கொண்ட உபதேசங்களுக்கு இணங்க அமைத்துக் கொள்வேன்.
பார்ப்பனர் தவிர்த்த பிற மனிதர்களை கீழான பிறவிகள் என்று கருதுவதும் சமத்துவமற்ற நிலையில் நம்பிக்கை உடையதும் மனிதர்களின் விடுதலைக்குக் கேடாக இருப்பதுமான இந்து மதத்தை நான் கைவிட்டுவிட்டு புத்த மார்க்கத்தைக் கைக்கொள்கிறேன்.
பவுத்த தருமமே சிறந்த மதம் என்பதை நான் முற்றாக நம்புகிறேன்.
நான் இன்று மறுபிறவி எடுத்துள்ளேன் என்பதை நம்புகிறேன்.
நான் இன்று முதல் பவுத்த தருமம் உபதேசிப்பதுபோல் ஒழுகுவேன்.
பவுத்தம் ஒரு மார்க்கமே தவிர மதமல்ல. அது பிற்காலத்தில் மதமாக்கப்பட்டது.
பகுத்தறிவுவாதியான புத்தர் தெய்வம் ஆக்கப்பட்டார். அவரது முன்னைய பிறப்புக்களைப் பற்றி நம்பமுடியாத கற்பனைக் கதைகளை அவரது சீடர்கள் எழுதி வைத்தார்கள்.
பவுத்தம் சமுதாய சமத்துவக் கருத்துக்களைப் பரப்புகிறது. நிற அடிப்படையில் சொல்லப்பட்ட வேற்றுமையைத் தகர்க்கிறது. அதன் உட்பிரிவான சாதி வரம்புகளை மறுக்கிறது. பிறப்பால் ஒருவன் பிராமணன் ஆகமுடியாது. ஒழுக்கத்தால் மட்டுமே ஒருவன் பிராமணனாக முடியும் என பவுத்தம் சொல்கிறது.
டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் நாக்பூரில் 1956 ஐப்பசி 15 இல் தனது 800,000 ஆதரவாளர்களோடு இந்து மதத்தை கைவிட்டு புத்தமதத்தில் சேர்ந்து கொண்டார். இந்து மதத்தில் புரையோடிப் போய்விட்ட சாதி, தீண்டாமை, மூடநம்பிக்கைகள் மற்றும் சடங்குகள் இவற்றில் இருந்து விடுபடவே இந்த மதமாற்றம் இடம் பெற்றதாக அப்போது அம்பேத்கார் கூறினார்.
இந்த மதமாற்றம் பற்றி சைவ ஆதீனங்கள் கவலைப்படுவதில்லை. காஞ்சி காமகோடி பீடம் துக்கப்படுவதில்லை. சைவ-இந்து அமைப்புக்கள் வருத்தப்படுவதில்லை. இந்து பரிசத் அலட்டிக் கொள்வதில்லை.
இந்து மதத்தில் நால் வர்ணம் அதன் ஆணி வேர்! சாதிகள் சல்லி வேர்கள்!
டாக்டர் அம்பேத்கார் 1981 ஆம் ஆண்டு ஐப்பசி 15 இல் தனது 800,000 ஆதரவாளர்களோடு இந்து மதத்தை உதறிவிட்டு புத்த மதத்தை தழுவினார்.
‘நான் இந்துவாக சாக மாட்டேன்!;’ என்று கூறி அப்பேத்கார் மதம் மாறிய நாள் ஒவ்வொரு ஆண்டும் அதே நாக்பூரில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவில் வெளிநாடு மற்றும் நாட்டின் பல பகுதிகளில் இருந்து இலட்சக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர். இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் 65,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து தலித் மக்கள் புத்த மதத்தை தழுவினார்கள்.
இந்த சிறப்பு நிகழ்ச்சியில் யப்பானில் பிறந்து இந்தியாவில் வதியும் புத்த சன்னியாசி பாந்தி நாகார்சுன் சுராய்சசாய் புத்த மதத்தை தழுவியவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.
புத்தமதத்தை தழுவுகிறவர்கள் 22 உறுதி மொழிகளை எடுத்துக் கொள்கிறார்கள்.
பிரமன், விஷ்ணு, சிவன் போன்றோரை கடவுள் என்று கருதவோ வழிபடவோ மாட்டேன்.
கவுரி, கணபதி போன்றோரை கடவுள் என்று கருதவோ வழிபடவோ மாட்டேன்.
இராமன், கிருஷ்ணன் இருவரையும் கடவுள் அவதாரம் எடுக்கிறார் என்பதை நான் நம்ப மாட்டேன்.
பகவான் புத்தர் மகாவிஷ்ணுவின் அவதாரம் என்பதை நம்பமாட்டேன். அப்படி பரப்புரை செய்வது குறும்புத்தனமும் பொய்யானதும் ஆகும்.
நான் ஒரு போதும் சிரார்த்தம் செய்ய மாட்டேன்.
பவுத்த கோட்பாடுகளுக்கு எதிராக ஒரு போதும் நடக்க மாட்டேன்.
பிராமணர்களால் நடத்தப்படும் கிரிகைகள் எதனையும் ஏற்க மாட்டேன்.
அனைவரும் சமம் என்ற கொள்கையை நான் நம்புகிறேன்.
சமத்துவத்தை ஏற்படுத்தப் பாடுபடுவேன்.
புத்த பகவானின் அட்டாங்க மார்க்கத்தைப் பின்பற்றுவேன்.
தருமத்தின் தசசீலங்களை பின்பற்றுவேன்.
எல்லா உயிர்கள் மீதும் கருணை காட்டுவேன். அவற்றை முடிந்த மட்டும் காப்பாற்றுவேன்.
பொய் சொல்லமாட்டேன்.
திருட மாட்டேன்.
காமத்தில் உழல மாட்டேன்;. பால் உணர்வில் அத்துமீற மாட்டேன்.
போதை தரும் குடியையோ மதுவையோ நான் அருந்தமாட்டேன்.
முடிந்த மட்டும் எனது வாழ்க்கையை பவுத்த கொள்கை. கருணை இவற்றை அடிப்படையாகக் கொண்ட உபதேசங்களுக்கு இணங்க அமைத்துக் கொள்வேன்.
பார்ப்பனர் தவிர்த்த பிற மனிதர்களை கீழான பிறவிகள் என்று கருதுவதும் சமத்துவமற்ற நிலையில் நம்பிக்கை உடையதும் மனிதர்களின் விடுதலைக்குக் கேடாக இருப்பதுமான இந்து மதத்தை நான் கைவிட்டுவிட்டு புத்த மார்க்கத்தைக் கைக்கொள்கிறேன்.
பவுத்த தருமமே சிறந்த மதம் என்பதை நான் முற்றாக நம்புகிறேன்.
நான் இன்று மறுபிறவி எடுத்துள்ளேன் என்பதை நம்புகிறேன்.
நான் இன்று முதல் பவுத்த தருமம் உபதேசிப்பதுபோல் ஒழுகுவேன்.
பவுத்தம் ஒரு மார்க்கமே தவிர மதமல்ல. அது பிற்காலத்தில் மதமாக்கப்பட்டது.
பகுத்தறிவுவாதியான புத்தர் தெய்வம் ஆக்கப்பட்டார். அவரது முன்னைய பிறப்புக்களைப் பற்றி நம்பமுடியாத கற்பனைக் கதைகளை அவரது சீடர்கள் எழுதி வைத்தார்கள்.
பவுத்தம் சமுதாய சமத்துவக் கருத்துக்களைப் பரப்புகிறது. நிற அடிப்படையில் சொல்லப்பட்ட வேற்றுமையைத் தகர்க்கிறது. அதன் உட்பிரிவான சாதி வரம்புகளை மறுக்கிறது. பிறப்பால் ஒருவன் பிராமணன் ஆகமுடியாது. ஒழுக்கத்தால் மட்டுமே ஒருவன் பிராமணனாக முடியும் என பவுத்தம் சொல்கிறது.
பவுத்தம் ஆண் பெண் இடையே பால் அடிப்படையிலான வேறுபாட்டை அகற்றியது.
ஆண்களைப் போலவே பெண்கள் பவுத்த சங்கத்தில் துறவிகளாகச் சேர்க்கப் பட்டார்கள்.
பவுத்தம் மனிதனது வினைக்கு அவனே காரணம் என்று சொல்கிறது. நல்லது செய்தால் நல்வினைப் பயன் கிடைக்கும் என்றும் தீயது செய்தால் தீவினைப் பயன் சேரும் என்று சொல்கிறது. புத்தர் ஞானம் பெற்றபி;ன்னர் நான்கு வாய்மைகளை போதித்தார்.
முலாவது வாய்மை – பிறத்தல் துன்பம். பிணி துன்பம். தளர்ச்சி துன்பம். மரணம் துன்பம். வேண்டாவற்றோடு பிணிக்கப்பட்டிருப்பதும், வேண்டுவனவற்றிலிருநது பிரிக்கப்பட்டிருப்பதும் துன்பம். விழைவு கூடாமை துன்பம். சுருங்கக் கூறின் உருவம், நுகர்ச்சி, குறிப்பு, பாவனை உள்ளவறிவாகிய விஞ்ஞானம் என்ற ஐந்தும் துன்பம் தருவன. ஆதலால் பிக்குகளே துன்பம் உளது.
இரண்டாவது வாய்மை – இந்தத் துன்பங்களுக்குக் காரணம் பிறப்பீனும் வித்தாகிய அவா அல்லது வேட்கை. சிற்றின்பம் விரும்பும் வேட்கை. உயிர்வாழ விரும்பும் வேட்கை. திருஷ்டி என்ற அழிவுத்தன்மையை வேண்டும் வேட்கை. இந்த மூன்றுவித வேட்கையும் துக்கத்துக்கு காரணம். எனவே துக்க காரணம் உளது.
மூன்றாவது வாய்மை – தன்னிடத்தில் உண்டான ஆசையை அகற்றினால் துக்க நிவாரணம் உளது.
நான்காவது வாய்மை – இந்த துக்க நிவாரணத்துக்கு வழியுண்டு. அதுவே அட்டாங்க துக்க நிவாரண மார்க்கம். அவையாவன நற்காட்சி, நல்லூற்றம், நல்வாய்மை, நற்செய்கை, நல்வாழ்க்கை, நன்முயற்சி, நற்கடைப்பிடி, நல்லுளதோர் தலைப்பாடு. (இது பற்றி மேலும் அறிய விரும்புபவர்கள் சாத்தனார் எழுதிய மணிமேகலை காப்பியத்தைப் படிக்கவும்)
எல்லாம் வல்ல படைப்புக் கடவுள் ஒருவர் உண்டு என்று பவுத்தம் நம்புவதில்லை. உலகைக் கடவுள் படைத்தார் எனக் கூறுவது கடவுளை யார் படைத்தார் என ஒருவரைக் கேட்க வைக்கும்.
அண்டத்தைப் படைத்தவர் கடவுள் என்பதை புத்தர் ஒப்புக் கொண்டாரா என்பது கேள்வி. ‘இல்லை’ என்பதே பதில். அவர் ஒப்புக் கொள்ளவில்லை. படைப்பு கடவுளின்றியே உலகம் இருக்கிறது என்பது புத்தரின் வாக்கு. பவுத்தம் சிந்தித்தலை, கேள்வி கேட்பதை மற்றும் பகுத்தறிவை ஊக்குவிக்கிறது.
‘என்னால் நிருவாணத்துக்குரிய வழியைத்தான் காட்ட முடியும். அந்தப் பாதையில் நடப்பது உங்கள் பொறுப்பு’ என்றார் புத்தர்.
அரண்மனையில் பிறந்து பட்டாடை உடுத்தி, பொன்னாபரணம் அணிந்து, பால், பழம் பருகி, அறுசுவை விருந்துண்டு, பன்னீரில் கொப்பளித்து, மஞ்சத்தில் படுத்துறங்கி, ஆசை மனையாளோடும், அன்புக் குழந்தையோடும் ஆடிப்பாடி அரச வாழ்க்கை வாழ்ந்த சித்தார்த்தன் அவற்றைத் துறந்து, மஞ்சள் அங்கி அணிந்து, பிச்சா பாத்திரம் ஏந்தி, வீதிதோறும் நடந்து, வீடுதோறும் பிச்சை எடுத்து வாழ்ந்தார்.
பவுத்தம் போல் அல்லாது இந்து மதத்தில் சாதி புரையோடிப் போய்க் கிடக்கிறது. அது அந்த மதத்தை அரித்துக் கொண்டிருக்கிற புற்று நோய்.
தொட்டால் தீட்டு, நிழல் பட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு இப்படி எல்லாமே தீட்டுத்தான்.
இந்தியாவில் 101 கோடி மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில் 85 விழுக்காடு இந்துக்கள். அதில் சுமார் 20 விழுக்காடு தலித் மக்கள்.
எனவே இப்போது நடைபெறும் மதமாற்றம் மழைத் தூவானம் போல் தெரியலாம். ஆனால் அது பெரு மழையாகப் பெய்யலாம்..
ஏற்கனவே மும் மூர்த்திகள், முப்பத்து முக்கோடி தேவர்கள், இந்திரன், சந்திரன், வருணன், அக்னி, பிரகஸ்பதி, கின்னரர், கிம்புருடர் என வாழ்ந்த பரந்த கண்டம் சுமார் 700 ஆண்டுகள் இஸ்லாமிய ஆட்சிக்கு உட்பட்டுக் கிடந்ததால் அது மூன்று துண்டாக வெட்டப்பட்டு விட்டது.
இதில் இரண்டு துண்டுகளில் இஸ்லாமிய குடியரசுகள். எஞ்சிய இந்தியாவில் 85 விழுக்காடு மட்டும் இந்துக்கள்.
இந்த மதமாற்றம் பாதி கட்டயாத்தின் பேரில் நடந்திருக்கலாம். மீதி பணம், சலுகை, பதவிபோன்றவற்றுக்கு ஆசைப்பட்டு மாறி இருக்கலாம். சாதி அடக்குமுறையில் இருந்து தப்பவும் மத மாற்றம் நடந்திருக்கலாம்.
சாதி இந்து மதத்தின் உள்கட்டுமானத்தில் இடம்பெற்றுள்ளது. வேதங்களும், ஸ்மிருதிகளும் வர்ண பேதம் கற்பிக்க பின்னர் அது சாதிகளாகப் பெருகின.
இந்து மதத்தில் நால் வர்ணம் அதன் ஆணி வேர். சாதிகள் சல்லி வேர்கள்.
இந்தியாவில் 6,400 சாதிகள் இருக்கின்றன என உச்ச நீதிமன்றம் கூறியது. மண்டல் அறிக்கை 3000 கும் அதிகமான சாதிப்பட்டியலை வெளியிட்ட போது ‘இந்து’ நாளேடு வியப்போடு அதே சமயம் அவநம்பிக்கையோடு எழுதியது.
உலகில் ‘இந்து அரசு’ என அரசியலமைப்பில் எழுதி வைத்திருக்கும் ஒரே நாடு நேபாளம். அரசனாகத் தம்மை ஆக்கிக்கொள்ள ஆசைப்பட்ட பிரித்வி நாராயண் ஷா என்பவன் நான்கு வருணங்களுடன் 36 சாதிகளையும் கொண்ட இந்து மத அமைப்பை நேபாளத்தில் உண்டாக்கி அரச பரம்பரையை விஷ்ணுவின் ஆட்சி என்று ஆக்கிக் கொண்டான்.
ஆனால், இந்து மதத்தில் சிவன் முழுமுதல் கடவுள். அவரது வாகனம் எருது. இதனால் நேப்பாளத்தில் காளை மாட்டை கம்பால் அடிக்கக் கூடாது. அப்படி அடுத்தால் குற்றம். ஏரில் ப+ட்டி உழக் கூடாது. அப்படி உழுதால் குற்றம். வண்டியில் ப+ட்டி ஓட்டக் கூடாது. அப்படி பூட்டி ஓட்டினால் குற்றம். காளை மாட்டை கொல்லக் கூடாது. அப்படிக் கொன்றால் அது மரண தண்டனைக்குரிய குற்றம்.
இப்படி ஏன் சட்டம் இயற்றப்பட்டுள்ளது? வேறொன்றும் இல்லை. நேப்பாள மன்னர் மனு ஸ்மிருதி விதிகளின் படி அரசாள்கிறார்.
சரி நேப்பாள மன்னர்தான் இப்படி? நாங்கள் மேடை தோறும் போற்றி பெருமைப்படும் சேர, சோழ, பாண்டியர் ஆட்சியில் என்ன நடந்தது?
மூவேந்தர்கள் எண்ணாயிரம், திருபுவனம், ஆயகுடி, முக்சூடல் போன்ற ஊர்களில் காசி, வங்காளம் (முதலாம் இராசேந்திரன்) போன்ற தேசங்களில் இருந்து பிராமணர்களை கூட்டம் கூட்டமாகக் கொண்டு வந்து அவர்களுக்கு இறையிலி மான்யங்கள், அக்கிரகாரங்கள், சதுர்வேதி மங்கலங்கள் என்ற புதிய குடியிருப்புகளில் குடியேற்றினார்கள்.
பிராமணர்கள் வேதம் படிக்க வேத பாடசாலைகளை நிறுவி அவற்றுக்கு நிவந்தம் எழுதி வைத்தார்கள்.
இதனை திருமூலர் கண்டிக்கிறார். அந்தணர் குடியிருப்புக்கள் ஆயிரம் அமைத்து அவற்றை அந்தணர்க்குக் கொடுப்பதாலும் கோபுரத்துடன் கூடிய கோயில்களை ஆயிரக் கணக்கில் கட்டி முடிப்பதாலும் பயன் இல்லை. அவை ஒரு ஞானிக்கு ஒரு பகலுணவு அளிப்பதற்கு நிச்சயம் நிகராகா என்கிறார்.
அகரம் ஆயிரம் அந்தணர்க் கீயிலென்
சிகரம் ஆயிரஞ் செய்து முடிக்கிலென்
பகரு ஞானி பகலூண் பலதத்துக்கு
நிகரிலை என்பது நிச்சயந் தானே!;
திருநாள் பெருநாள்களிலும் வெற்றி விழாக்களிலும் வெளியூர் செல்லும் போதும் மூவேந்தரும் பிராமணர்க்குத் துலைநிறை (துலாபாரம்) பொன் (இரணிய கருப்பம்) ஆவாயிரம் (கோசகஸ்ரம்) முதலிய தானங்களைச் செய்து வந்தனர். (தேவநேயப்பாவாணர் எழுதிய தமிழர் மதம் – பக்கம் 93)
முதலாம் இராச இராசனின் இராசகுரு ஈசானக் குருதேவர், விக்கிரம சோழனுக்கு சுவாமி தேவர், மூன்றாம் குலோத்துங்கனுக்கு சிவாச்சாரியார். முதலாம் இராசேந்திரனின் இராசகுரு சர்வசிவ பண்டிதர். இராசாதி இராசனுக்;துங்கனுக்கு சோமேசுவரர் இராசகுருவாக இருந்தனர்.
மொத்தத்தில் மூவேந்தர்கள் அந்தணர் தாள் பணிந்து ஆண்டனர்.
மனு, மிடாக்சாரி, ஹேமாத்ரி, ஜுமுக வாதனர் எழுதிய தயாபாக (தர்மரத்னா என்ற நீதி நூலின் ஒரு பகுதி) ஆகிய நான்கு சாத்திரங்களின்மேல் சோழர்களுடைய நீதி நிருவாகத்தின் அடித்தளம் அமைக்கப்பட்டது.
அர்த்தசாத்திரம் அரசியல் நூல் என்ற அளவில் ஸ்மிருதிகளின் நீதியினின்று ஒரு சிறிது மாறுபட்டுக் காணப்பட்டது.
இவ்வாறாக அரசியல் தத்துவத்திற்கு அர்த்தசாத்திரமும், நீதித்தத்துவத்திற்கு மேற்சொன்ன நான்கு சாத்திரங்களும் சோழர் காலத்து அந்தணர்களால் ஊர் நீதிமன்றங்களிலும் அரச நீதி வழங்கு மன்றங்களிலும் எடுத்து ஓதப்பட்டு விளக்கவுரை சொல்லப்பட்டன. (திரு.மா பாலசுப்பிரமணியன் எழுதிய ‘சோழர்களின் அரசியல், கலாச்சார வரலாறு’ பாகம் 2. பக்கம் 95)
பிற்கால சேர, சோழ, பாண்டிய அரசர்களால் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டது.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று பொய்யாமொழிப் புலவர் வள்ளுவர் செய் திருக்குறள் இரட்டடிப்புச் செய்யப்பட்டது! திருக்குறள் பற்றிய குறிப்பு எதனையும் எந்தக் கல்வெட்டிலும், செப்பேட்டிலும் காணோம்!
அன்புத்தம்பி
- தொடங்கியவர்
- கருத்துக்கள உறவுகள்
சோழ பாண்டிய பேரரசுகள் மறைந்த மர்மம் என்ன?
தேவாரம் பாடிய ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் குறிப்பிட்ட தலங்களை பிற்காலச் சோழர்கள் (விஜயாலயன் (கி.பி. 846-881) முதல் மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி.1180-1218) வரை) கற்றளிகளாக மாற்றிக் கட்டினர்.
மேலும் புதிதாகவும் காவிரிக் கரையின் வளமிக்க பகுதிகளில் சிவாலயங்கள் பலவற்றைக் கட்டினர்.
உருவ வழிபாடும் இவர்கள் காலத்திலேயே அதிகரித்தன. சிவனுக்கு மட்டும் முப்பதற்கும் அதிகமான வடிவங்கள் வடிக்கப்பட்டன.
சோழர் கட்டிய கோயில்களில் முதலாம் இராச இராசன் (கி.பி.985-1012) கட்டிய தஞ்சைப் பெருவுடையார் கோயில் மிகவும் புகழ் படைத்தது.
அவனது மகன் முதலாம் இராசேந்திரன் எண்ணிறந்த கோயில்களைக் கட்டியும் புதுப்பித்தும் திருப்பணி செய்தான். அதில் கங்கை கொண்ட கோழீச்சுரர் கோயில் ஒன்றாகும். அதற்கு 2,150 கூலம் நெல்லும், 65 கழஞ்சி பொன்னும் நிவந்தமாக கொடுத்தான்.
முதலாம் இராசேந்திரனின் இராசகுருவாக இருந்த சர்வசிவ பண்டிதருக்கும் அவர் மாணாக்கர்களுக்கும் ஆண்டுக்கு ஒருமுறை ஏராளமான நெல் அளித்தான்.
இந்த சர்வசிவ பண்டிதரே தஞ்சைப் பெரிய கோயிலில் பூசை செய்தவர். அவருடைய சீடர்கள், சீடர்களின் சீடர்கள், ஆரியதேசம், மத்தியதேசம், கௌடதேசம் ஆகிய இடங்களில் வாழ்ந்தவர்களுக்கும் முதலாம் இராசேந்திரன் கொடை அளித்தான். (டாக்டர் மங்களமுருகேசன் எழுதிய “சோழர் வரலாறு” பக்கம் 234)
தமிழகத்தில் சோழநாட்டில் உள்ளது போல் சேர சோழ பாண்டிய நாடுகளில் கோயில்கள் இருக்கவில்லை. சோழநாட்டில் மட்டும் சுமார் 3,000 சிவாலயங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பான்மை பிற்காலச் சோழர் காலத்தில் கட்டப்பட்டவையாகும்.
பேரோடும் புகழோடும் ஆட்சி செய்த சோழர் பரம்பரை மூன்றாம் இராசேந்திர சோழன் ( கி.பி.1246-1279) காலத்தில் வீழ்ச்சியுற்றது.
நூற்றுக் கணக்கான கோயில்களைப் புதிப்பித்தும், புதிதாகக் கட்டியும், ஆயிரக்கணக்கான பிராமணர்களை வட நாட்டில் இருந்து இறக்குமதி செய்து அவர்களுக்கு நிவந்தமாக ஆயிரக்கணக்கான அக்கிரகாரங்கள், சதுர்வேதிமங்கலங்கள் போன்ற குடியிருப்புக்களை இறையிலி நிலங்களாகக் கொடுத்தும், மூவர் பாடிய தேவாரங்களைத் திருமுறை ஆகவும் ஆழ்வார்களின் பாடல்களை நாலாயிரதிவ்வியப் பிரபந்தம் ஆகவும் தொகுத்தும், ஆறுகால பூசைகள், வேள்விகள், திருவிழாக்கள் போன்ற புண்ணிய பணிகள் செய்தும் பிற்கால சோழ வம்சம் 434 ஆண்டுகளே நீடித்தது.
கங்கை கொண்ட, கடாரம் வென்ற, திக்கெட்டும் வெற்றி கொண்டு கடல்கடந்தும் பேராட்சி செய்த சோழப் பேரரசு பொலிவிழந்து, புகழிழந்து, அரசியல் சூழ்ச்சிக்கு பலியாகி வீழ்ச்சியுற்றது. அதன் வீழ்ச்சிக்கு வரலாற்று ஆசிரியர்கள் சுட்டிக் காட்டும் காரணிகள் பின்வருமாது.
1) செல்வாக்குப் படைத்த குறுநில மன்னர்கள் தன்னிச்சையாக நடந்து கொண்டது.
2) சமயப் பூசல்கள். விசிட்டாத்துவைதம் பரப்பியவரும் தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்று சமயத்துறையில் மாபெரும் புரட்சி செய்த வைணவப் பெரியார் இராமனுசர் நாடுகடத்தப்பட்டார். தில்லை கோவிந்தராசர் சிலை கடலில் தூக்கி எறியப்பட்டது.
3) இராசத்துரோகம் மற்றும் சிவத்துரோகம். கோயில் சிலைகளையும் பொருளையும் அர்ச்சகர்களே களவாடினார்கள்.
4) வர்ணதரும அடிப்படையிலான சாதிப்பாகுபாடு மேலும் ஆழ வேரூன்றியது. பார்ப்பனர்கள் செல்வாக்கு சமூகத்தில் கொடி கட்டிப் பறந்தது. அரசர் வணிகர் இருசாராரும் பார்ப்பனர்களைப் போற்றிக் கொண்டாடினர். வுpரதம், வேள்வி, மறுபிறப்பு, சொர்க்கம், புண்ணியம் போன்ற சமய சிந்தனைகள் வேரூன்றிவிட்ட பிறகு அந்தக் கருத்துக்கு சொந்தக்காரர்கள் செல்வாக்குப் பெற்றது வியப்பல்ல. மறுபுறம் பார்ப்பனர் அல்லாத சாதியாரிடம் வலங்கை இடங்கைப் பிரிவுகள் இருந்தன. வலங்கை இடங்கை பிரிவுகள் ஒவ்வொன்றிலும் 98 குலங்கள் இருந்தன. வர்ண தர்மத்துக்கு இறைச தந்தையின் தொழிலை பிள்ளை செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டது.
5) கோயில்கள் கட்டி அவற்றைப் பராமரித்ததில் அரச கருவூலம் வெறுமையானது.
6) பாண்டியர் படையெடுப்பு
மூன்றாம் இராசேந்திர சோழனை போரில் தோற்கடித்த இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ( கி.பி.1238-1251) இரண்டாம் பாண்டியப் பேரரசை வலிமைப் படுத்தினான்.
அவனைத்தொடர்ந்து சடையவர்மன் வீரபாண்டியன் (கி.பி.1253-1274), மாறவர்மன் குலசேகர பாண்டியன் (கி.பி.1268-1310) அரியணை ஏறினர்.
அன்புத்தம்பி
- தொடங்கியவர்
- கருத்துக்கள உறவுகள்
குலசேகரனுக்கு சுந்தரபாண்டியன் வீரபாண்டியன் என இரண்டு மகன்கள் இருந்தார்கள். சுந்தரபாண்டியன் பட்டத்தரசியின் மகன். வீரபாண்டியன் மற்றொரு அரசியின் மகன்.
குலசேகரன் சுந்தரபாண்டியனின் திறமையை மெச்சி குலசேகரன் அவனுக்கு இளவரசர் பட்டம் கட்டினான். அதனால் ஆத்திரம் அடைந்த வீரபாண்டியன் மன்னனை கொலை செய்துவிட்டு ஆட்சியைக் கைப்பற்றினான்.
சுந்தரபாண்டியன் மதுரையை விட்டு ஓடினான். இது நடந்தது கி.பி. 1310 ஆம் ஆண்டாகும்.
அஞ்சி ஓடிய சுந்தரபாண்டியன் தில்லிக்குச் சென்று அலாவுதீன் கில்ஜியின் படை உதவியை நாடினான். கில்ஜி தனது படைத்தளபதி மாலிக்கபூர் தலைமையில் படை அனுப்பினான்.
மாலிக்கபூர் வழியில் காணப்பட்ட இந்துக் கோயில்களை எல்லாம் கொள்ளையடித்தான். அவனது படையை எதிர்கொள்ள அஞ்சிய வீரபாண்டியன் மதுரையை விட்டு ஓடி காட்டுக்குள் மறைந்து கொண்டான். கண்ணனூரில் தங்கி இருந்த மாலிக்கபூர்படையில் அங்கு வாழ்ந்த 20,000 முஸ்லிம்கள் படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
சிதம்பரம் (பிரம்மஸ்த்பூரி) இந்துக் கோயிலில் பெரும் செல்வம் இருப்பதைக் கேள்விப்பட்ட மாலிக்கபூர் அதைத் தாக்கி பொருட்களைக் கொள்ளையடித்தான். கோயிலைப் பாதுகாத்த வீரர்கள் மற்றும் கோயிலில் பணிபுரிந்த பிராமணர்கள் கொல்லப்பட்டார்கள். பொன்னாலான பல இலிங்கங்களும் வேத நாராணயன் சிலையும் கைப்பற்றப்பட்டன. கோயில் இடிக்கப்பட்டு தரைமட்டம் ஆக்கப்பட்டது.
அடுத்து திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) கோயில் மீது படையெடுத்து அங்கு இருந்த பெருமாளின் படிமத்தையும் மற்றும் விலையுயர்ந்த படிமங்களையும் கைப்பற்றி அவற்றை தில்லிக்கு அனுப்பி வைத்தான். கோயில் இடித்து தரைமட்டமாகக்கப்பட்டது.
மாலிக்கபூரின் படையெடுப்பின் போது 512 யானைகள், 20,000 குதிரைகள், 800 மணங்கு பொன், முத்துக்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டன.
மாலிக்கபூர் வீரபாண்டியனைத் தோற்கடித்து சுந்தரபாண்டியனை ஆட்சியில் அமர்த்தினான். ஆனால் அவன் மாலிக்கபூருக்கு அஞ்சி தனது சித்தப்பாவான விக்கிரமபாண்டியன் உதவியோடு மாலிக்கபூரைத் தாக்கி புறமுதுகு காணச் செய்தான்.
மீண்டும் சுந்தரபாண்டியன் வீரபாண்டியன் இருவருக்கும் இடையில் அரியணைப் போட்டி ஏற்பட்டது. 1323 இல் உலூக்கான் படையெடுப்பில் பாண்டிய நாடு சுல்தானியர் வசமானது.
சோழப் பேரரசின் வீழ்ச்சிக்குரிய அதே காரணிகளே பாண்டிய அரசின் வீழ்ச்சிக்கும் காரணிகளாக அமைந்தன. சோழர் காலத்தில் காணப்பட்ட வலங்கை இடங்கைப் பிரிவுகளும், 98 கிளைப் பிரிவுகளும் காணப்பட்டன.
தமிழினம் வர்ணதர்மம் விதைத்த சாதி நோயினால் தாறுமாறாக பிளவுண்டு ஒற்றுமையின்றி கிடந்த காரணத்தால் அதனை எதிரிகள் எளிதில் அடிமைப்படித்தினர்.
பின்னர் தமிழகத்தை ஆண்ட விசயநகர கிருஷ்ணதேவராயன் தன் ‘அமுக்த மாலதிய” என்ற நூலில் அரசாங்கத்திலுள்ள சிவில், இராணுவப் பதவிகளைப் பார்ப்பனர்களுக்கே வழங்கவேண்டு என்று எழுதியுள்ளான். (சோழர்களின் அரசியல் கலாச்சார வரலாறு-பாகம் 2 பக்கம் 60) இவன் 15 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்தவன்.
பின்னர் 1799 இல் சுதேசி மக்களுக்கான சட்டங்களைத் தொகுத்த கவர்னர் ஜெனரல் சர் வில்லிய ஜோன்ஸ் என்பான் மனு சாத்திர முதலியவற்றின் அடிப்படையில் தொகுத்ததுதான் ர்iனெர டுயற. அவன்தான் சட்டத்திற்கும் மதத்திற்கும் முதல்முறையாக இந்து என்ற பெயரை வைத்தவன்.
இரண்டு கிழமைகளுக்கு முன்னர் தசரதா விழா கொண்டாடப்பட்டது. பாளையங்கோட்டையில் நடந்த தசரதா திருவிழாவில் எல்லா அம்மன்களும் சப்பரத்தில் திருவீதி உலா வந்தனர். இதில் என்ன புதுமை? வழக்கமாக நடப்பதுதானே? என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. கொஞ்சம் பொறுங்கள்!
இவை சாதாரணன அம்மன்கள் அல்ல. சாதி அம்மன்கள்! யாதவர் உச்சினி மாகாளி, யாதவர் தூத்துவாரி, விஸ்வகர்மா அம்மன், தேவர் உலகம்மன், பிள்ளைமார் முத்தாரம்மன், உலகம்மன் என்று எழுதி வைக்கப்பட்டிருந்தது!
இதன் பொருள் என்ன? அந்தந்த சாதி அம்மன்கள் அந்தந்த சாதி மக்களுக்குத்தான் அருள்பாலிப்பார் என்பதுதானே?
இந்த 21 ஆம் நூற்றாண்டில் இப்படியான காட்டு மிராண்டிகள் இருக்கிறார்கள் என்றால் முதலாம் இராச இராசன், முதலாம் இராசேந்திரன் காலத்தில் எந்தவிதமான காட்டு மிராண்டிகள் இருந்திருப்பார்கள்? ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று பாடிய பாரதியார் காலத்தில் எத்தனை காட்டுமிராண்டிகள் இருந்திருப்பர்? தமிழ்ச் சித்தர்கள் காலத்தில் எத்தனை மூடர்கள் இருந்திருப்பார்கள்?
காந்தியாரும் சாதியை ஒழிப்பதற்குப் பதில் தாழ்ந்த சாதியினருக்கு ஒரு புதுப் பெயர் சூட்டினார். அரிசனர் என்பதுதான் அந்தப் பெயர். அரி என்றால் படைப்புக் கடவுளான திருமால்.
அரிசனர்கள் ஆலயங்களில் நுளைய எடுத்த முயற்சி ஓரளவு வெற்றி கண்டது.
ஆனால் சாதி இந்துக்களின் மனக்கதவுகளைத் திறக்கும் முயற்சி தோல்வி கண்டது.
சிருங்கேரி சங்கராச்சியாரை தரிசிக்க விஜய நகர மன்னன் வந்தான். அப்பொழுது குளிர் காய்ச்சலில் நடுங்கிக் கொண்டு இருந்தார் சங்கரர்.
மரப்பலகையில் மன்னன் அமர்ந்தான். தனக்காகப் போடப்பட்டு இருந்த மனைப் பலகையை எடுத்துப் பக்கத்தில் வைத்துக் கொண்டார். சங்கரர் சிறிது நேரத்தில் அந்தப் பலகை நடுங்க ஆரம்பித்ததாம்.
மன்னன் விழிப்புடன் அதனை நோக்கினான். விளக்கமும் கேட்டான். அதற்கு சங்கரர் என்ன சொன்னார்?
‘எனக்கு வந்த குளிர் காய்ச்சலை உம்மைச் சந்திப்பதற்காக அந்தப் பலகைக்குச் சிறிது நேரம் மாற்றினேன். அதனால்தான் அந்தப் பலகை நடுங்குகிறது’ என்றாராம்..
‘பலகைக்கு அதனை மாற்றாமல் நிரந்தரமாக உங்களுக்கு ஏற்பட்ட அந்த உபாதையை முற்றிலுமாக விலக்கி வைக்க முடியாதா?’ என்று அரசன் கேட்டான்.
‘கூடாது. கர்மப் பலனை யாராக இருந்தாலும் அனுபவித்தே ஆக வேண்டும்’ என்று பதில் சொன்னாராம் சங்கரர். (ஆதாரம்”விஜயபாரதம்” 8.10.2004)
கர்ம பலனை மாற்றக் கூடாது என்றால் சிறிது நேரமோ, அதிக நேரமோ அந்தப் பலனை பலகைக்கு மாற்றியது எப்படிச் சரியாகும்”?
இவர் செய்த கர்மத்திற்கு அந்தப் பலகை என்ன ‘பாவம்” செய்தது? அது ஏன் காய்ச்சலை அனுபவிக்க வேண்டும்”?
கர்ம பலனை நிலைநிறுத்த வேண்டும் அந்த நம்பிக்கையை மக்களிட திணிக்க வேண்டும் என்கிற உள் நோக்கம்தான் இதற்குள் திணிக்கப்பட்டுள்ளது.
கீழ்சாதி – கர்ம பலனின் விளைவு!
தீண்டாமை – கர்மபலனின் தீண்டல்!
இவற்றை நிலைநாட்ட வேண்டும் என்பதுதான் இதற்குள் பதுங்கி இருக்கும் சூழ்ச்சி. அதிலும் சங்கர மடங்களை நிறுவிய ஆதி சங்கரர் பிராமணிய மேலாண்மையின் அடிநாதமான நால் வர்ணதர்மத்தை பூலோகத்தில் நிலை நாட்டவே கலியுகத்தில் அவதாரம் எடுத்தவராம்.
‘சில நேரங்களில் மட்டும் கிருஷ்ண பகவான் ஞானோபதேசம் செய்தால் போதுமானதாக இருக்கிறது. மற்ற சமயங்களில் அவர் ஆயர்பாடியில் லீலை செய்தார், துவாரகையில் ராச்சியபாரம் செய்தார், பஞ்ச பாண்டவர்களுக்காகத் தூது போனார். கலிகாலத்தில் இப்படிச் செய்தால் போதாது. அதிக இருட்டு இருப்பதால் நிறைய விளக்கு வேண்டும். ஒரு வாழ்நாள் முழுவதும் ஞானோபதேசம் ஒன்றுக்காகவே அவதாரம் செய்ய வேண்டும்’ என்று பரமேசுவரன் எண்ணினார்.
சகல வித்தைகளுக்கும் நாயகனான அந்த சதாசிவனே ஆதிசங்கரர் ஆக அவதரித்தாராம். (காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி சங்கராச்சியார் எழுதிய ‘தெய்வத்தின் குரல்’). வருணதர்மத்துக்கு மெருகூட்டிய கலியுக அவதாரத்தை, கண்கண்ட தெய்வத்தை அடுத்த வாரம் அண்மைக் காட்சியில் பார்ப்போம்.
வர்ண தர்மத்தை மீள் நிலைநாட்டிய ஆதி சங்கரர்
சாட் சாத் அந்த சதாசிவனே ஆதிசங்கரராக அவதரித்தார் என்றும் சங்கரர் சிவ அவதாரமே என்பதற்கு யசுர் வேதத்திலேயே ஆதாரம் இருக்கிறது என்றும் அவர் 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தார் என்றும் காஞ்சி சங்கராச்சியார் சொல்கிறார்.
சிவன் அவதாரம் எடுத்தாரா? இது புதுக் கதையாக இருக்கிறதே? காத்தல் கடவுளான திருமால்தானே அவதாரம் எடுப்பதில் பெயர் போனவர்? அவதாரம் அவரது துறையாயிற்றே என்று நீங்கள் கேட்கக் கூடும்.
சிவன் அவதாரம் எடுத்ததற்கான காரணத்தை காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி சங்கராச்சியார் சொல்லியிருக்கிறார். அதை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன்.
‘சில நேரங்களில் மட்டும் கிருஷ்ண பகவான் ஞானோபதேசம் செய்தால் போதுமானதாக இருக்கிறது.. கலிகாலத்தில் இப்படிச் செய்தால் போதாது. பழைய யுகங்களில் அசுரர்கள் என்ற தனியான இனத்தவர்கள் இருந்து தேவர்களை வருத்துவார்கள். அவர்களைக் கொல்ல விட்ணு ஆயுதபாணிகாக வருவார்.
ஆனால் கலியுகத்தில் அசுரர்கள் தனியாக இல்லை. எல்லா மனிதர்களது மனதிலும் அசுரன் புகுந்து விட்டான். இதனால் யாரை அழிப்பது யாரை விட்டுவிடுவது? எனவே விட்ணு அவதாரம் இப்போது வேண்டாம் எனறு பரமேசுவரன் கருதி ஒரு பிராமணக் குடும்பத்தில் அவதரித்தார்.
அதாவது அதிக இருட்டு இருப்பதால் நிறைய விளக்கு வேண்டும். ஒரு வாழ்நாள் முழுவதும் ஞானோபதேசம் ஒன்றுக்காகவே அவதாரம் செய்ய வேண்டும் என்று பரமேசுவரன் எண்ணினார். உடனே ஆதி சங்கரராக அவதரித்தார்’ என்று சங்கராச்சியார் சொல்கிறார்.
இப்வாறு சிவன் அவதாரம் எடுத்தார் என்பதை சைவ சித்தாந்திகள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். போயும் போயும் பிரமனாலும் விட்டுணுவாலும் அடியும் முடியும் காண முடியாத சிவபெருமான் இந்த மனிதர்கள் (நரகர்கள்) வாழும் உலகத்தில் பிறந்தார் என்பது அவருக்கு இழுக்கு என்று அவர்கள் நினைக்கிறார்கள். ( தெய்வத்தின் குரல்)
இப்போது புராணப் புளுகை விட்டுவிட்டு உண்மைக்கு வருவோம். அந்த உண்மை என்னவென்றால் சங்கரர் கேரளாவில் (அன்றைய சேர நாடு) காலடி என்னும் சிற்றூரில் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் (கி.பி. 788-820) ஒரு நம்பூதிரி பிராமண குடும்பத்தில் பிறந்தவர்.
சிறு வயதிலேயே வேதங்களையும் உபநிடதங்களையும் படித்துத் தேறிய சங்கரர் வியாசர் அருளிய பிரம்மசூத்திரம், வேத ரிஷிகள் அருளிய பத்து உபநிடதங்கள், கண்ணன் அர்ச்சுனனுக்கு உபதேசித்த கீதை ஆகிய மூன்று நூல்களுக்கும் உரை இயற்றினார். இவைகள் ‘பாஷ்யம்’ எனப்படும். இந்நூலின் மூலக் கருத்துக்களையே மையமாகக் கொண்டு அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் சங்கரர் அநேக வேதாந்த நூல்களை இயற்றியுள்ளார். அவைகள் ‘பிரகரண கிரந்தங்கள்’ எனப்படும்.
இவை தவிர குழந்தைகளுக்கு இதே கருத்தும், பக்தியும் கொண்ட ‘கணேச பஞ்ச ரத்னம்’போன்ற தோத்திரங்களையும் இயற்றியுள்ளார்.
சங்கரருக்கு வேத உபநிடதங்களுக்கு உரை எழுத வேண்டிய அவசியம் இருந்தது. வேத உபநிடதங்கள் அனைத்தையும் ஒருவர் படித்து பொருள் அறிந்து கொள்வது மிக அரிதான செயல். அதைவிட அரிது அவற்றை மற்றவர்களுக்கு எடுத்து விளக்குவது.
பாதராயணர் என்பவர் வேத உபநிட கருத்துக்களை நீக்கி அதனை வேதாந்த சூத்திரம் (பிரம்ம சூத்திரம்) ஆக வெளியிட்டார். ஆனால் அது சுருக்கமாக சூத்திர வடிவில் இருந்ததால் தெளிவுக்குப் பதில் குழப்பத்தையும் வேற்றுமையையும் விளைவித்தது.
வேத உபநிடங்களில் காணப்படும் தெளிவின்மையையும் முரண்பாட்டையும் நீக்கப் பலர் முயன்றனர். அவர்களில் முதன்மையானவர் சங்கரர். பிரம்ம சூத்திரத்துக்கு சங்கரர் எழுதிய பாடியமே வேதாந்த மதத்திற்கு பிரமாண நூலாகும்.
பிரமமும் உயிரும் (ஆன்மா அல்லது ஜீவன்) உலகமும் ஒன்றா அல்லது வேறு வேறா என்று நடந்த விவாதத்தில் பிரமமே மூலப் பொருள் என்றும் உயிர்களும் உலகமும் அந்த பிரமத்தின் தோற்றமே என்றும் நம் கண் முன்னே காணப்படும் உலகம் ஒரு மாயத் தோற்றம் (மாயாவாதம்) என்பதும் சங்கரரின் வாதமாகும். இதுவே அத்துவைதம் என்ற தத்துவமாகும்.
சங்கரர் தாம் எழுதிய நூல்கள் அனைத்திலுமே பிராமணர்கள் மிகவும் மேம்பட்டவர்கள் எனற முடிவான கருத்தை முன் வைக்கிறார்.
சங்கரர் கருத்துப்படியும் வேதம் மற்றும் ஸ்ம்ருதிகள் சமுதாயத்தை பிராமணன், சத்திரியன், வைசிகன், சூத்திரன் என நான்கு வர்ணங்களாக பிரிக்கிறது.
இவர்கள் முறையே பிரமனது தலை, தோள், தொடை, கால் இவற்றில் இருந்து படைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதில் சூத்திரன் (தமிழர்கள் எல்லோருமே சூத்திரர்கள்) மற்ற மூவருக்கும் தொண்டு செய்வதே அவனது சுய தர்மமாகும்.
சூத்திரன் தத்துவஞானம் பெறுவதற்கு உரியவன் அல்லன்.
சூத்திரனுக்கு உபநயனம் கிடையாது.
சூத்திரன் சுடுகாட்டுக்குச் சமம். அவன் இருக்கும் இடத்தில் வேதம் ஓதக் கூடாது.
வேதத்தை சூத்திரன் ஒளிந்திருந்து கேட்டால் அவன் காதில் இரும்பைக் காய்ச்சி ஊத்த வேண்டும்.
சூத்திரனுக்கு ஞானத்தை உப தேசிக்கக் கூடாது. வேதம் படிப்பது, வேள்வி செய்வது, தானம் வாங்குவது பிராமணர்களுக்கு மட்டுமே உண்டு. (பிரம்மசூத்திரம் 13 -34).
மனு சொன்னது போல் உழைப்பைத் தவிர சூத்திரன் எதைச் செய்தாலும் அவனுக்குப் பயனில்லை.
மேற்கண்ட பிரம்ம சூத்திர விளக்கம் உழைக்கும் மக்களைப்பற்றி சங்கரர் எவ்வளவு இழிவான, மனித நேயமற்ற, பிற்போக்கான கருத்துக்களை கொண்டிருந்தார் என்பதை அறிய உதவுகிறது.
உழைக்காத மேல் வர்ணத்தவரான பிராமணர்கள் உழைக்கும் வர்ணத்தவரான சூத்திரர்களது உழைப்பை சுரண்டுவதற்காகவே இந்த வேத ஸ்மிருதிகள் எழுதப்பட்டுள்ளன.
‘அடிமைகள், மேற்தட்டு மக்களுக்கு அளித்த இன்பத்தையும் பெருமகிழ்ச்சியையும் ஒளிவு மறைவு இல்லாமல் ரிக்வேதம் கூறுகிறது. கடவுள் அருளியதென்றும் மிகப் புனிதமானதென்றும் இந்துக்காளால் கருதம் வேத இலக்கியங்களில் இந்தப் பாடல்கள் உள்ளன. (எஸ்.ஏ. டாங்கே எழுதிய ‘பண்டைக்கால இந்தியா’ பக்கம் 170-171)
இந்த இலட்சணத்தில் ‘வேதநெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை விளங்க’ என்றும் ‘நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க’ என்றும் ஏன் சேக்கிழார் நால்வேதத்தை புகழ்ந்த பாடினார் என்பது விளங்கவில்லை. அவர் சூத்திரர் என்பதால் வேதத்தைப் படிக்க அவருக்கு வாய்ப்பே இருந்திருக்காதே!
டாக்டர் அப்பேத்கார் சாதி வேற்றுமைகளையும் தீண்டாமையையும் மனு நீதியாகக் கொண்டார் என்பதற்காக மனுஸ்மிருதியை நாடெங்கும் தீயிட்டுக் கொளுத்தினார்.
‘ஆதி சங்கரர் வேதம் முழுமயையும் ஒப்புக் கொண்டார். வேதம் கூறும் சகல தெய்வங்களையும், வேதம் விதிக்கும் சகல கர்மாக்களையும் ஒப்புக்கொண்டார். அவற்றின் லஷி;யமாக வேத சிராஸன உபநிஷத்தின் முக்கிய தாத்பரியமான ஜீவனும் பிரமமும் ஒன்றே என்ற அத்துவைதத்தை ஸ்தாபித்தார். ஸ்ரீகிருஷ்ணனுக்குப் பிறகு வைதிக தர்மத்தை நிலைநாட்டிய ஸ்ரீ ஆதி சங்கரரும் ஜெகத்குரு என்ற விருதைப் பெற்றார். ‘ என்கிறார் காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி சங்கராச்சாரியார். (ஒரு தெய்வத்தின் குரல்)
ஆதி சங்கரர் அத்வைதம் பேசினாலும் நடைமுறை வாழ்க்கையில் சாதியையும் தீண்டாமையையும் கடைப்பிடித்தார் என்பதற்கு அவரின் வாழ்க்கையில் நடந்ததாகக் கூறப்படும் ஒரு நிகழ்ச்சி சான்றாக இருக்கிறது.
****************************************************************************************************
சாதி மத பேய்களை விரட்டி தமிழ்ச் சித்தர்கள்
நக்கீரன்
தமிழ்ச் சித்தர்களைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் இருக்க மாட்டார்கள். சித்தர்கள் பற்றிக் கேள்விப்படாதவர்கள் கூட சித்தர் பாடல்கள் இரண்டொன்றைச் செவி மடுத்திருப்பார்கள்.
நாதர்முடி மேல் இருக்கும் நாகப் பாம்பே!
நச்சுப்பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே!
பாதலத்தில் குடிபுகும் நல்ல பாம்பே!
பாடிப்பாடி நின்று ஆடு பாம்பே!
திரைப்படத்திலும் வந்து சக்கை போட்ட பாடல் இது. இதை இயற்றியவர் பாம்பாட்டிச் சித்தர்.
பதினெண் சித்தர்கள் என்பது மரபு. ஆனால் அவர்கள் யார் யார் என்பதில் கருத்து ஒற்றுமை இல்லை. அதனால் பதினெட்டுக்கும் மேற்பட்ட சித்தர்கள் பெயர்கள் காணப்படுகின்றன.
ஒரு பழம்பாடல் பதிணென் சித்தர்களது பெயர்களை வரிசைப்படுத்துகிறது.
நந்தி, அகத்தியர், திருமூலர், புண்ணாக்கீரர்
நற்றவத்துப் புலத்தியர் பூனைக் கண்ணனார்
இடைக்காடர், போகர், புலிக்கையீசர்,
கருவூரார், கொங்கணர், காலாஞ்சி
எழுகண்ணர். அகப்பேய், பாம்பாட்டி
தேரையர், குதம்பையர், சட்டைநாதர்
இந்தச் சித்தர்கள் யார்? அவர்களது வரலாறு என்ன? இவை பெரிதும் மூடு மந்திரமாகவே இருக்கின்றன.
இவர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்கள் அதிகம் இல்லை. மாறாக அவர்களைப் பற்றிய செவிவழி கதைகளே மிஞ்சி நிற்கின்றன. இவர்களது காலம் 10 ஆம் நூற்றாண்டுக்கும் 18 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலமாகக் கருதப்படுகிறது. திருமூலர் காலம் 10 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்.
சித்தர்களால் பாடப்பெற்ற பெரிய ஞானக் கோவை என வழங்கும் சித்தர் பாடல்களின் தொகுப்பு நூல் ஒன்றும் சில மருத்தவ நூல்களும் மட்டுமே இன்று கிடைக்கின்றன. பல பாடல்களும் நூல்களும் மறைந்து விட்டன. இருந்தும் இன்னும் அச்சில் வராத ஏட்டுச் சுவடிகள் ஆயிரக் கணக்கில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
சித்து அல்லது சித்தி என்றால் ஆற்றல், வெற்றி, கைகூடல் என்று ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் உண்டு. ஒருவர் அசாதாரண செயலைச் செய்தால் அவர் சித்து விளையாட்டு செய்கிறார் என்பது பொருள். ஒருவர் தேர்வில் சித்தி எய்திவிட்டார் என்றால் அவர் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டார் என்று பொருள். போன காரியம் சித்தி என்றால் போன வேலை கைகூடிவிட்டது என்று பொருள்.
எனவே சித்தர்கள் என்றால் பேராற்றல் படைத்தவர்கள் என்று பொருள். பொதுவாக அட்டமா சித்திகள் (எண்வகை ஆற்றல்) கைவந்தவர்களே சித்தர்கள் எனப்படுகிறார்கள்.
மகாகவி பாரதியார் கூட தன்னை ஒரு சித்தர் என்று சொன்னார்.
எனக்கு முன்னே
சித்தர் பலர் இருந்தாரப்பா!
யானும் வந்தேன் ஒருசித்தன்
இந்த நாட்டில்
என்கிறார். மேலும் தாம் இயற்றிய புதிய ஆத்தி சூடியில் சித்தர் பாணியில்-
அச்சம் தவிர்
ஏறுபோல் நட
தெய்வம் நீ என்றுணர்
நினைப்பது முடியும்
என அடித்துச் சொல்கிறார்.
தமிழ்ச் சித்தர்கள் மருத்துவம், புவியியல், மந்திரம், தந்திரம், ஞானம், யோகம், இரசவாதம் பற்றி பாடல்கள் பாடியுள்ளார்கள். ஆனால் சமுதாயத்தைப் பற்றி யாரும் தனி நூல் இயற்றவில்லை. ஆயினும் அனைத்துச் சித்தர் பாடல்களில் சமுதாய சீர்திருத்த மறுமலர்ச்சிக் கருத்துக்கள் மிகுந்திருப்பதைக் காணலாம்.
தமிழ்ச் சித்தர்களது சித்த மருத்துவம் புகழ்பெற்றது. சித்த மருத்துவத்தில் செடி, கொடி, கனி, கிழங்கு, வேர், பட்டை போன்றவற்றில் இருந்து மட்டும் அல்லாது தங்கம், உப்பு, பாதரசம் (mercury) போன்ற உலோகங்களில் இருந்தும் நவ பாஷாணங்களில் இருந்தும் மருந்து தயாரிகப்படுகிறது.
தமிழ்ச் சித்தர்கள் பக்தி மார்க்கத்தைப் பின்பற்றாது குண்டலினி யோக மார்க்கத்தைப் பின்பற்றினார்கள். உயிர் மட்டுமல்ல. உடலும் நித்தியமானது என்பது இவர்கள் கோட்பாடு. .
சாதி மத பேதத்தை கடுமையாகக் கண்டித்தார்கள். மனித குலம் ஒன்று. தேவனும் ஒன்றே என்றார்கள்.
சைவ சித்தாந்தத்தில் உள்ள சரியை கிரியை இரண்டையும் கண்டித்தார்கள். உருவ வழிபாட்டைச் சாடினார்கள். சுரண்டலையே குறியாகக் கொண்ட பிராமணீய சடங்குகளைக் கடுமையாக எதிர்த்தார்கள்.
அன்புத்தம்பி
- தொடங்கியவர்
- கருத்துக்கள உறவுகள்
ஒரு நாள் சங்கரர் கங்கையில் நீராடிவிட்டு சீடர்கள் புடைசூழ விசுவநாதர் ஆலயத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
ஆதி சங்கரர் நம்பூதிரி பிராமணர். பிராமணரைக் கண்டால் மற்றக் கீழ்ச் சாதியார் பத்து முழம் விலகி அவர்களுக்கு வழிவிட வேண்டும். சூத்திரர் நிழல் பட்டாலே தீட்டு என்பது மனு தர்மம்!
அப்போது ஒரு புலையனும் புலைச்சியும் சங்கரர் சென்று கொண்டிருக்கும் திசைக்கு எதிர்த் திசையில் வந்து கொண்டிருந்தார்கள். புலையனும் புலைச்சியும் விலகி அவருக்கு வழிவிடவில்லை. வழிவிடுவபவர்கள் போலவும் தெரியவில்லை. சங்கரர் அவர்களை விலகிப் போகுமாறு கைகளால் சைகை செய்தார்.
‘நம்முடய ஆச்சாரியார் போகிற வழியில் குறுக்கே வந்து விட்டார்கள். போதாக் குறைக்கு கையில் நான்கு நாய்களை புலையன் பிடித்திருக்கிறான்! போ! போ! விலகிப் போ! எட்டிப் போ” என்று சங்கரரின் சீடர்கள் கூவினார்கள்.
புலையன் சிரித்தான்! “அத்வைதம் அத்வைதம் என்று சொல்லிவிட்டு என்னை விலகிப் போக சொல்கிறீர்கள்? இது பெரிய முரண்பாடு அல்லவா? எல்லாம் ஒரே சத்தியமான கடவுளின் தோற்றம்தான் என்கிறது உங்கள் அத்வைதம். அவ்வாறெனில் உங்களைப் போலவே நாங்களும் அந்த சத்தியத்தின் தோற்றம்தான.; உடல் நமக்கு வேறு வேறானாலும், உடலுக்குள் இருக்கிற பரமாத்மா ஒன்று தான். இந்த உடம்பைப் பற்றிய எண்ணத்தை விலக்கி விட்டுப் பரமாத்மாவாக இருக்க வேண்டும் என்று தான் இந்த ஆசிரியர் உபதேசிக்கிறார்.
அப்படியிருக்க, உங்கள் உடம்பின் அருகிலிருந்து எங்கள் உடம்பு விலகிப் போக வேண்டும் என்று சொல்வதில் பொருள் இல்லை. உங்கள் உடம்புக்குள் உள்ள ஞான ஒளியிலிருந்து எங்கள் உடம்பிலுள்ள ஞான ஒளி விலக வேண்டும் என்று நீங்கள் கருதினால் அதுவும் அர்த்த மற்றதாகும். ஏனெனில் இந்த ஞான ஒளிகள் அனைத்தும் ஒன்றுதான். ஒருவன் நம்மை அடித்தால் வேறொருவன் நம்மை அடிப்பதாக நினைப்பது தவறு. நாமே நம்மை அடித்துக் கொள்கிறோம் என்பதுதான் சத்தியம். தன்னை விட்டு தான் எப்படி விலக முடியும்?’ இப்படி ஆணித்தரமாகக் கேட்டான் அந்தப் புலையன்.
உடனே சங்கரர் இப்பேர்ப்பட்ட ஞான நிலயை அடைந்தவன் புலையனாக இருக்கமுடியாது! காசிவிஸ்வநாதரும் விசாலாட்சி அம்மையாரும் தம்மைப் சோதிக்க வந்துள்ளனர் என்பதை ஞான திருஷ்டியில் உணர்ந்து ‘மனீஷா பஞ்சகம்’ என்ற ஐந்து சுலோகங்களைப் பாடினார். உடனே புலையன் நின்ற இடத்தில் விஸ்வநாதப் பெருமான் நின்றார். புலைச்சி விசாலாட்சியானாள். நான்கு நாய்களும் நால் வேதமாயின!
‘என் மறு உருவம் ஆன சங்கரா! வாய்ப் பேச்சில் மட்டும் வேதாந்தம் கூறாமல் வாழ்வியலிலும் நீ நடத்திக் காட்டுபவன் என்று உலகறியவைக்க இந்த நாடகம் ஆடினேன்’ என்று ஆசி வழங்கி காசி விசுவநாதரும் விசாலாட்சியும் மறைந்தனர் என்று கதை முடிகிறது. (தெய்வத்தின் குரல்)
இந்தக் கதையில் கூட சிவனாரின் மறு அவதாரமான சங்கரர் ஞான நிலை அடைந்தவன் புலையனாக இருக்க முடியாது என்ற முடிவோடு இருந்தார் என்ற உண்மையே சொல்லப்பட்டுள்ளது.
வேதம் இன்றி வர்ண தர்மம் இல்லை. வர்ண தர்மம் இன்றி வேதம் இல்லை. வேதத்திற்கும் வர்ண தர்மத்திற்கும் உட்பட்டதே சங்கரரின் அத்வைதம்.
‘ஸ்ரீகிருஷ்ணனுக்குப் பிறகு வைதிக தர்மத்தை நிலைநாட்டிய ஸ்ரீ ஆதி சங்கரரும் ஜெகத்குரு என்ற விருதைப் பெற்றார்’ என்று காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி சங்கராச்சாரியார் சொல்வது முக்காலும் உண்மை.
அந்த கிருஷ்ண பரமாத்மா வர்ண தர்மம் பற்றி என்ன சொன்னார்?
“சதுர்வர்ணயம் மாயா ஸ்ருஷ்டம் குண-கர்ம விபாகச:
தஸ்ய கர்த்தாரமபி மாம் வித்த்யகர்த்தார-மவ்யயம்”
( கீதை அத். 4- சுலோகம் 13)
‘நான்கு வருணங்கள் என்னால் உண்டாக்கப்பட்டவை, அவரவர்களுக்குரிய கருமங்களை அவரவர் மீறாமல் செய்யவேண்டும். அதனை மாற்றிச் செயல்பட வைக்க அந்த வர்ண தர்ம உற்பத்தியாளனாகிய (கர்த்தா) என்னால் கூட முடியாது’ (Though I am the creator of the four fold caste, know Me to be incapable of action or change).
கீதை சாமானிய நூல் அல்ல. அது நால் வேதங்களையும் பிழிந்து வடிகட்டிய சாறு. தொட்டதற்கு எல்லாம் இந்து மதவாதிகள் கையில் எடுக்கும் போர்வாள்.
இந்து மதத்தையும் அதன் அடிநாதமான சாதி அமைப்பையும் வரலாற்றுப் பின்னணியில் சரிவரப் புரிந்து கொண்டாலே அதற்கெதிரான தமிழ்ச் சித்தர்களது போராட்டத்தின் வலிமை தெரியும்.
அன்புத்தம்பி
- தொடங்கியவர்
- கருத்துக்கள உறவுகள்
சங்கர மடங்கள் வர்ண தர்மத்தையும் பிராமணியத்தையும் கட்டிக் காக்கின்றன!
சென்ற கிழமை ‘நான்கு வருணங்கள் என்னால் உண்டாக்கப்பட்டவை, அவரவர்களுக்குரிய கருமங்களை அவரவர் மீறாமல் செய்யவேண்டும். அதனை மாற்றிச் செயல்பட வைக்க அந்த வர்ணதர்ம உற்பத்தியாளனாகிய என்னால் கூட முடியாது’ என்று கிருஷ்ண பரமாத்மா ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்திருந்ததைப் பார்த்தோம்.
நான்கு வருணங்களையும் தானே உண்டாக்கியதாக கிருஷ்ண பரமாத்மா கூறுவது அருட் செயல் அல்ல. ஆண்டவன் அவதாரத்துக்கு அழகும் அல்ல.
இந்த உலகத்தில் என்றென்றும் வேற்றுமையை நிலை நிறுத்தவும், ஏற்றத் தாழ்வு என்னும் கொடுமையைத் தொடர்ந்து நடத்த பேருதவி செய்யவுமே கிருஷ்ண பரமாத்மாவின் உபதேசம் உதவும்.
ஒரு சமூகத்தில் உள்ள பெரும்பான்மையினர் அடிமைகளாக நெற்றி வெயர்வை சிந்தி உழைக்கவும் அந்த உழைப்பை ஏனைய வருணத்தார் உண்டு களிக்கவும் வழிவகுக்கும் ஒரு ஏற்பாட்டுக்கு தானே கர்த்தா என்று சொல்லும் ஒருவன் கடவுளாகவோ, கடவுள் அவதாரமாகவோ இருக்க முடியாது. அவன் ஒரு ஓரவஞ்சகனாக, நீதி நியாயம் அற்றவனாகவே இருக்க முடியும்.
சூத்திரர்கள், கடைப்பட்டோர், பாவிகள், மூடர் என்று ஒதுக்கி மனித இனத்திலே வேற்றுமை வளர்க்கும் ஒருவன் எப்படி கடவுளாய், கடவுள் அவதாரமாய் இருக்க முடியும்?
இப்படி உழைப்பதற்கு ஒரு பெருங் கூட்டத்தையும் அந்த உழைப்பை உறுஞ்சுவதற்கென்றே ஒரு சிறு கூட்டத்தையும் கடவுள் படைக்கிறார் என்ற வருணதர்ம ஏற்பாடு உலகத்திலேயே மதத்தின் பெயரால் ஏற்பாடு செய்யப்பட்ட மிகக் கொடுமையான ஏற்பாடாகும்.
‘கடவுளின் சதுர்வர்ணக் கட்டளையை அனுசரிப்பதைக் காட்டிலும், நிறைவேற்றுவதைக் காட்டிலும் உயர்ந்தது எதுவுமில்லை. அவைகளை மீறுவதை விடத் தாழ்ந்தது எதுவுமில்லை’ என கீதையில் கிருஷ்ண பரமாத்மா உபதேசிக்கிறார்.
‘நன்றாகச் செய்யப்படும் பர தர்மத்தைக் காட்டிலும், குணமற்றதெனினும் சுய தர்மமே சிறந்தது. சுய தர்மத்தில் இறந்து விடினும் நன்றேயாம். பரதர்மம் பயத்துக்கு இடமானது.’ ( கீதை 3-35 பாரதியார் உரை)
‘சுயதர்மம் பரதர்மம் இவற்றை அறியாதவர்களிடத்தில் அவர்களுடைய கடமைகளைப்பற்றி அறிவுடையோன் எந்தவிதமான குழப்பத்தையும், சந்தேகத்தையும் உண்டாக்கிவிடக் கூடாது. எனவே, நீ சூத்திரர்களைத் தூண்டிவிட்டால் நீ அழிவாய்.’
‘ந புத்தி பேதம் ஜனமே-தஜ்ஞானம் கர்மஸங்கினாம்
ஜோஷயேத் ஸர்வகர்மாணி வித்வான் யுக்த: ஸமாசரன்’ ( கீதை 3-26)
கீதையில் கர்மம் என்ற சொல் செயல், கடமை என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
கடமை என்ற பொருளில் பயன்படுத்தப்படும்போது அது சதுர் வர்ண (நான்கு சாதி) அமைப்பு முறையைக் குறிக்கிறது.
அது போல தர்மம் என்ற சொல்லும் சதுர்வர்ணத்தால் வகுக்கப்பட்ட விதிமுறைகளின்படி ஒழுகும் ‘கடமை’யை குறிக்கிறது.
திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் உரைப் பாயிரத்தில் ‘அவற்றுள் அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழி;த்தலும் ஆம்’ என எழுதி வைத்திருக்கிறார்.
இப்படி எழுதி வைத்திருப்பது ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்’ என்று சொன்ன வள்ளுவருக்குச் செய்யப்பட்ட இரண்டகமாகும்.
ஏணி வைத்தாலும் கீதை திருக்குறளை எட்ட முடியாது. இரண்டும் இரு துருவங்கள்.
கீதை ஒரு குலத்துக்கு ஒரு தர்மம் கற்பிக்கும் மத நூல்.
குறள் மானிட விழுமியங்களையும் ஒழுக்கங்களையும் கற்பிக்கும் பொது நூல்.
‘யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிப்-பவதி பாரத
அப்ப்யுத்தான – மதர் மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம் – யஹம்’ ( கீதை 4-7)
‘எப்பொழுதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் மேலோங்குகிறதோ அப்போது ஒவ்வொரு யுகத்திலும் நான் அவதரிக்கிறேன்.’
அடுத்த சுலோகம் (4-8) எதற்காக கிருஷ்ண பகவான் அவதாரம் எடுக்கிறார் என்பதை சொல்கிறது.
நல்லோரைக் காக்கவும், தீயன செய்வோரை அழிக்கவும், அறத்தை (தர்மத்தை) நிலை நிறுத்தவும் நான் யுகந்தோறும் பிறக்கிறேன். (பாரதியார் உரை)
அன்புத்தம்பி
- தொடங்கியவர்
- கருத்துக்கள உறவுகள்
இதில் தர்மம் என்ற சொல் வர்ண தர்மத்தைக் குறிக்கிறது. அந்த தர்மத்தைக் காப்பாற்றவே கடவுள் அவதாரம் எடுக்கிறாராம். சாதி தர்மத்தைக் காப்பாற்ற எவ்வளவு பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்பதை மேற்படி சுலோகம் எடுத்துக் காட்டுகிறது.
‘சுயதர்மம் என்பது ஒரு வர்ணத்துக்கு அல்லது சாதிக்கு விதிக்கப்பட்ட கடமைகளை ஒருவன் அரைகுறையாகச் செய்வது மற்றவர்களுக்குரிய சுயதர்மத்தை முழுமையாகச் செய்வதிலும் பார்க்க நல்லது’ என்கிறது கீதை.
‘ஒருவன் பிறரது சுயதர்மத்தை செய்து பெருவாழ்வு வாழ்வதைக் காட்டிலும் தனது சாதி தர்மக் கடமைகளைச் செய்து மரணத்தை அடைவது மேலானதாகும்’ என்று அதே கீதை நவில்கிறது.
நான்கு வர்ணங்களையும் அவற்றுக்கு உரிய தொழில்களையும் கிருஷ்ண பரமாத்மா தெளிவாகக் கூறியிருக்கிறார்.
‘பரந்தபா! பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் இவர்களுடைய தொழில்கள் அவரவரின் இயல்பில் விளையும் குணங்களின்படி வகுக்கப்பற்றனவாம். (கீதை 18-41 பாரதியார் உரை)
அகக் காரணத்தை அடக்குதல், புறக் காரணத்தை அடக்குதல், தவம், தூய்மை, பொறுமை, நேர்மை, ஞானம், கல்வி, ஆத்திகம் …. இவை இயல்பிலே தோன்றும் பிராமண கர்மங்களாம். (மேற்படி 18-42)
சூரத் தன்மை, ஒளி, உறுதி, திறமை, போரில் புறங்காட்டாமை, ஈகை, இறைமை … இவை இயற்கையிலே தோன்றும் சத்திரிய கர்மங்களாகும். ( மேற்படி 18-43)
உழவு, பசுக் காத்தல், வாணிகம் இவை இயற்கையிலேயே பிறக்கும் வைசிய கர்மங்களாம்.
தொண்டு புரிதல் சூத்திரனுக்கு அவனியற்கையால் ஏற்பட்ட தொழில். (மேற்படி 18-44)
இவ்வாறு உபதேசம் செய்து அருச்சுனன் தனது சுயதர்மமான போரைச் செய்யத் தூண்டுகிறான் கண்ணன். தனது பேச்சைக் கேளாமல், அகங்காரத்தால் அருச்சுனன் மறுப்பானாகில் அவன் பெரிய நாசத்தை அடைவான் எனக் கண்ணன் பயமுறுத்துகிறான்.
குருசேத்திர களத்தில் அருச்சுனன் தனக்கு முன்னால் அவனது சகோதரர்களையும். சுற்றத்தாரையும், மாமன், மைத்துனர்களையும், சித்தப்பன், பெரியப்பன்மார்களையும் அவர்களது பிள்ளைகளையும் பாட்டன்மார்களையும் பார்க்கிறான்.
‘அவர்களோடு போரிட்டு அவர்களை அழிப்பதென்றால் எமது பண்டைய குலதர்மம் அழிந்துவிடும். அந்த தவறைச் செய்பவன் நரகத்திற்குத்தான் போவார்கள்’ என கிருஷ்ண பரமாத்மாவைப் பார்த்து தனது கருத்தைச் சொல்கிறான்.
ஆனால் கிருஷ்ண பரமாத்மாவோ ‘அவர்களை நீ கொல்வதனால்தான் நரகத்துக்குப் போகமாட்டாய். பண்டைய குலதர்மத்தை (போர்த் தொழிலை) அழித்த பாவத்திற்காக, குலநாசம் என்கிற மாபெரும் குற்றத்திற்காக நரகத்துக்குப் போவாய்’ என்கிறான்.
அன்புத்தம்பி
- தொடங்கியவர்
- கருத்துக்கள உறவுகள்
முடிவாக ஒரு கருத்தை கண்ணன் சொல்கிறான். அவனது கடைசி ஆயுதம் அது!
‘எல்லா அறங்களையும் விட்டு விட்டு என்னையே சரண் புகு, எல்லாப் பாவங்களின்றும் நான் உன்னை விடுவிக்கிறேன். துயரப்படாதே.’
(மேற்படி 18-66)
இதன் பொருள் ஒருவனுக்கு பக்தி இருந்தால் போதும். அவன் அறச் செயல் எதையும் செய்ய வேண்டியதில்லை. நல்லொழுக்கத்தைக் கடைப்பிடித்து ஒழுக வேண்டியதில்லை. பக்தி செலுத்தினால் எல்லாப் பாவங்களும் போய்விடும்.
இப்படிப்பட்ட கருத்துக்கள் சமூகத்தில் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை எல்லோரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
எந்தப் பாவத்தையும் செய்யலாம். கடவுள் மீது பக்தி செலுத்தினால் போதும். அவர்களது பாவங்கள் மன்னிக்கப்படும். அவர்களுக்கு முக்தி கிடைக்கும். சிவராத்திரி கதையொன்றே இதற்குத் தக்க சான்றாகும்.
கீதைகள், புராணங்கள், இதிகாசங்கள், உபன்யாசங்கள் மனிதர்களை தவறான பாதைக்கு இழுத்துச் செல்கின்றன.
ஆதி சங்கரர் போலவே அவரால் தோற்றுவிக்கப்பட்ட சங்கர மடங்களும் வர்ண தர்மத்தையும் பிராமணியத்தையும் கட்டிக் காப்பதில் இற்றைவரை கண்ணும் கருத்துமாக இருந்து வருகின்றன.
வர்ண தர்மம் சேமகரமானது என்றும் இந்து மதம் ஒன்றில் மட்டுமே இந்த வர்ண தருமம் இருக்கிறது என்றும் ஏனைய மதங்களில் இல்லை என்றும் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார்! (தெய்வத்தின் குரல்)
‘யோசித்துப் பார்த்தால் நம் தேசத்திலும்கூட பழைய வர்ண தர்மங்களில் பிடிப்புக் குறைந்துபோய் எல்லாம் ஒன்றாகிவிட வேண்டும் என்ற அபிப்பிராயம் வந்தபிற்பாடுதான் மத உணர்ச்சி குன்றி நாஸ்திகம் அதிகமாகி இருக்கிறது என்று தெரிகிறது. சந்தேகத்துக்கு இடம் இன்றித் தெரிகிறது.
இதில் வேடிக்கையான விஷயமாக இருக்கிறது. அதாவது ஒரு மதம் சனங்களைப் பலவிதமாகப் பிரித்து வைக்கிறது என்றால் அதில்தான் பரஸ்பரக் கட்டுக்கோப்பும் ஐக்கியமும் இல்லாமல் இருக்கும் என நினைக்கிறோம். இப்படிப்பட்ட மதம்தான் சண்டையால் தனக்குள்ளே உளுத்துப்போயவிழுந்து விடும் என்று தோன்றுகிறது.
ஆனால் பலவகுப்பாக சமுதாயத்தை வர்ண தர்மத்தில் பிரிந்து வைத்திருக்கிற நம் மதமோ இன்றளவும் என்னை யார் என்ன செய்துவிட முடியும் என்று மூச்சைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு உயிர் வாழ்கிறது.
ஆயிரம் பதினாராயிரம் வருஷமாக வர்ண தர்மத்தைப் பின்பற்றியும் நம் மதம் இத்தனை ஜீவ களையுடன் இருந்து வந்ததன் மர்மம் என்ன? எமது சாஸ்திரங்களை ரஷித்துக் கொண்டிருக்கும் ஸவதர்மம்…..’ என்கிறார். (தெய்வத்தின் குரல்)
சித்ர்களும், விவேகானந்தரும், காந்தியும், பாரதியும், வள்ளலாரும் எந்த வர்ண தர்மத்தை இந்து மதத்தின் சாபக்கேடு, கறை, கருப்புப் புள்ளி என்றெல்லாம் சொல்கிறார்களோ அதுவே இந்து மதத்திற்கு ஜீவ களையாக இருக்கிறது என்கிறார்!
நாம் சுண்ணாம்பு என்பதை சங்கராச்சாரியார் வெண்ணெய் என்கிறார்!
நாம் நஞ்சு என்பதை அவர் அமிர்தம் என்கிறார்!
அன்புத்தம்பி
- தொடங்கியவர்
- கருத்துக்கள உறவுகள்
ஒழுக்கத்துக்கும் இந்து மதத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை!
‘பகவான் வர்ணாச்சிரம தர்மம் பற்றிக் கூறுகிறார் என்றே வைத்துக் கொள்வோம். அதிலொன்றும் தவறில்லையே! விருப்பு வெறுப்பின்றிப் பார்த்தால் ‘வருண ஆச்சிரம தர்மம்’ என்பது நால்வகை அறநெறியைக் குறிக்கும் வர்ணாச்சிரமப் பிரிவு சாதிகளில் மேல்தட்டு, கீழ்த்தட்டுக்களை உண்டாக்குவதற்கு ஏற்பட்டதல்ல. ஒரு சமுதாயத்தின் மொத்தத் தேவையே நான்கு வகையான தொழில் வர்க்கங்கள்தாம்’ என்கிறார் கவிஞர் கண்ணதாசன். கண்ணன் அருளிய பகவத் கீதை என்ற நூலுக்கு எழுதிய முன்னுரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் வர்ண தர்மம் என்பது பிறப்பின் அடிப்படையிலான உயர்வு தாழ்வு என்பதை கண்ணன் கீதையில் திரும்பத் திரும்பச் சொல்கிறான்.
பாவிகள் என்னைப் பணிவார் ஆயினும்,
மாதரேனும், வைசியரேனும்
சூத்திரரும் பரகதி பெறுவார்.
அப்படியிருக்க தூய்மை யார்த்த
அந்தணரும் ராஜரிஷிகளும்
எனக்கு அன்பராயின், என்னே? ஆதலால்
நிலையற்றதும் இன்ப மற்றதுமாகிய
இவ்வுலகப் பிறவி யெய்திய நீ
என்னை வழிபடக் கடவாய்! (பாரதியார் உரை அத் 9-32)
இனிக் கவிஞர் கண்ணதாசனின் உரையைப் பார்ப்போம்.
‘அர்ச்சுனா! தாழ்ந்தவர்கள் என்று கூறப்படுவோரும், மாதர்களும், வணிகர்களும், நாலாம் வருணத்தவரும் (சூத்திரர்) கூட என்னை வணங்கினால் நல்ல கதியை அடைவார்கள். அப்படியிருக்க நற்குடிப்பிறந்த பிராமணர்களும் பக்தி மிக்க ராஜரிஷிகளும் அதே உயர்ந்த கதியை அடைவார்கள் என்பதற்கு வேறு சாட்சியா வேண்டும்? ஆகவே அழியக் கூடிய துன்பம் நிறைந்த இந்த உலகில் நீ இருப்பதால் என்னையே வழிபடுவாயாக. (அத் 9-32)
வேத சாத்திரங்கள் பெண் பாபயோனியில் பிறந்ததாகச் சொல்கிறது. அதனால் அவர்களுக்கு பரகதி இல்லை. அவர்கள் பரகதி அடைய வேண்டும் என்றால் பூமியில் ஆணாகப் பிறந்து வந்தால்த்தான் உண்டு.
இதன் காரணமாகவே இந்த சுலோகத்தில் பெண்கள், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஒரு பக்கமும் அந்தணர் எதிர்ப் பக்கத்திலும் வைத்துப் பேசப்படுகிறார்கள்.
கண்ணதாசன் நாடோடி திரைப்படத்துக்கு எழுதிய பாடலில் படைத்தவன் பேரில் சாதி வைத்ததை சாடுகிறார். உண்மையில் அவ்வையார் சாதியைச் சாடிப் பாடிய ‘சாதியிரண்டொழிய வேறில்லை ………….இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்’ என்ற பாடல் கருத்தைத் தழுவியே இந்தப் பாடலை எழுதியுள்ளார்.
‘கொடுப்பவனே மேல் சாதி
கொடுக்காதவனே கீழ் சாதி
படைத்தவன் பேரால் சாதி வைத்தான்
பாழாய்ப் போன இந்தப் பூமியியே’
எனவே கண்ணதாசன் பகவத் கீதைக்கு எழுதிய முன்னுரைiயில் கூறியிருப்பது வர்ண தர்மத்துக்கு அவர் உரை என்ற பெயரில் மேற்கொண்ட பூச்சு ஆகும். அப்படிப் பூசி மெழுகாது விட்டால் இந்து மதவாதிகள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் ஒரு பக்தி நூலில் கடவுளின் அவதாரமான பரந்தாமனே வர்ண தர்மத்தை தானே உண்டாக்கியதாகவும் ஆனால் தான் நினைத்தால் கூட அதனை மாற்ற முடியாது என்று வெளிப்படையாக உபதேசம் செய்யும் வெட்கக் கேட்டை கண்ணதாசன் ஒத்துக் கொண்டதாக முடிந்துவிடும்.
இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் கண்ணதாசனின் பகவத் கீதைக்கு அருளுரை வழங்கி இருப்பவர் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியா சுவாமிகள்.
பொருத்தமான ஆள்தான் பொருத்தமான நூலுக்கு அருளுரை வழங்கியுள்ளார். பகவத் கீதை பகவானே தனது பக்தனை கொலை செய்யுமாறு உபதேசம் செய்யும் நூல்!
கொலைசெய்தல் சத்திரியனான அர்ச்சுனனது சுயதர்மம் என்று எடுத்துரைக்கும் நூல்!
முடிவாக ஒரு கருத்தை கண்ணன் சொல்கிறான். அவனது கடைசி ஆயுதம் அது!
‘எல்லா அறங்களையும் விட்டு விட்டு என்னையே சரண் புகு, எல்லாப் பாவங்களின்றும் நான் உன்னை விடுவிக்கிறேன். துயரப்படாதே.’
(மேற்படி 18-66)
இதன் பொருள் ஒருவனுக்கு பக்தி இருந்தால் போதும். அவன் அறச் செயல் எதையும் செய்ய வேண்டியதில்லை. நல்லொழுக்கத்தைக் கடைப்பிடித்து ஒழுக வேண்டியதில்லை. பக்தி செலுத்தினால் எல்லாப் பாவங்களும் போய்விடும்.
இப்படிப்பட்ட கருத்துக்கள் சமூகத்தில் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை எல்லோரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
எந்தப் பாவத்தையும் செய்யலாம். கடவுள் மீது பக்தி செலுத்தினால் போதும். அவர்களது பாவங்கள் மன்னிக்கப்படும். அவர்களுக்கு முக்தி கிடைக்கும். சிவராத்திரி கதையொன்றே இதற்குத் தக்க சான்றாகும்.
கீதைகள், புராணங்கள், இதிகாசங்கள், உபன்யாசங்கள் மனிதர்களை தவறான பாதைக்கு இழுத்துச் செல்கின்றன.
வணக்கம், அன்புத்தம்பி..!
உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து வாசித்து வருபவர்களில்,நானும் ஒருவன் என்னும் வகையில் சில கருத்துக்களை முன் வைக்க விளைகின்றேன்! கீதை என்பது வேதமன்று! அது ஒரு வேதாந்த நூல் மட்டுமே! அதாவது வேதத்தின் சில சாராம்சங்களை எடுத்துச் சொல்கின்றது! அதற்குப் பல உரைகள் எழுதப்பட்டுள்ளன! சில வேளைகளில், உரைகள் மூலத்தைத் திரிபு படுத்துகின்றன!
காலப் போக்கில் அதுவே…கீதையாகி விடுகின்றது!
உதாரணத்துக்குப் பிராமணரைக் கீதை மிக உயரத்தில் வைக்கின்றது! சில உரைகளில், பிராமணன் என்னும் ஸ்தானம், பிறப்பால் மட்டும் வருவதாகக் குறிப்பிடப் படுகின்றது! சில உரைகளில், கல்வி அறிவால், ஒருவர் செய்யும் உயரிய செயல்களால் பிராமணன் என்னும் ஸ்தானம் அடையப் படுவதாகக் குறிப்பிடப் படுகின்றது!
மேற்குறிப்பிடப்பட்ட பகுதி எனக்கு நன்றாக நினைவிருக்கின்றது! எல்லா அறங்களையும் விட்டு ..விட்டுத் தன்னை வணங்கும் படி அவன் கூறுவதாக நினைவில்லை! நீ நல்லவனாக வாழ்ந்தாயோ இல்லையோ…மரணத் தறுவாயில் உன்னிடம் இருக்கும் மனநிலையே உனது அடுத்த பிறப்பைத் தீர்மானிக்கின்றது என்று தான் கூறுகின்றான்!நீயும்,நானும் வேறு, வேறு அல்ல! உனது ஆன்மாவின் அருகிலேயே நான் இருக்கின்றேன் என்று தான் அவன் கூறுகின்றான்! அதாவது உனது ஆன்மாவானது எனது விம்பம் என்று தான் கூறுகின்றான்! தொடர்ந்தும் எழுதுங்கள்…!
நீ போரில் கொல்லப்பட்டால் சொர்க்கம்! வெற்றி பெற்றால் இராஜயோகம்! ஆகவே போர் செய்யத் துணிந்துவிடு. எழுந்து நில்! (பாரதியார் உரை – அத்.1 – 37) எனப் போர் செய்ய மறுக்கும் அருச்சுனனை போர் செய்ய வைத்த பகவானின் உபதேச நூல்!
பகவத்; கீதைக்கு அருளுரை வழங்கிய அதே சங்கராச்சாரியார்தான் இப்போது காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் என்பவரை பட்டப்பகலில் கூலிப்படை வைத்து வெட்டிக் கொலை செய்தது, கொலைக்கு சதி, சாட்சியங்களை அழித்தது மற்றும் சென்னை இராதாகிருஷ்ணன். மற்றும் அவரது மனைவி ஆகியோரை அதே கூலிப்படையை வைத்து இரண்டாண்டுகளுக்கு முன்னர் (செப்தெம்பர் 2002) கொலை முயற்சி செய்தது ஆகிய வழக்குகளில் முதல் எதிரியாக குற்றம் சாட்டப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
மண், பெண், பொன் என்ற மூவாசையையும் ஆணவம் கன்மம் மாயை என்ற மும்மலங்களையும் துறந்து சந்நியாசம் மேற்கொண்ட அவர் மீது பாலியல் அத்துமீறல் குற்றச் சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.
‘மக்களனைவரும் தங்களுக்குண்டான கடமைகளைச் செய்து அதன் பலனை பகவானுக்குச் சமர்ப்பித்துவிட்டால் அவர்களுக்கு நல்லருளும், இன்பமான வாழ்க்கையும் அமையும்’ எனச் சொல்லி சங்கராச்சாரியார் தனது அருளுரையை முடிக்கிறார்.
இப்போது ‘கண்ணன் காட்டிய வழியில் கடமையைச் செய்துவிட்டு’ அதன் பலனை பகவானுக்கு சமர்ப்பிக்க முடியாமல் அவரே வேலூர் சிறையில் அதை அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்!
போரினால் குல நாசம் ஏற்படும் என்றும், குல நாசத்தால் குல தர்மம் அழியும் என்றும், குல தர்மம் அழிவதனால் குலப் பெண்கள் கெட்டுப் போகிறார்கள் என்றும், குல மாதர் கெடுவதனால் வர்ணக் குழப்பம் உண்டாகிறது என்றும் அருச்சுனன் கேள்வி எழுப்புகிறான். (அத். 1 -39,40,41)
அருச்சுனன் குறிப்பிடும் வர்ணக் குழப்பம் என்ன? போரின் போது படை வீரர்கள் பகை நாட்டுக்குள் புகுவார்கள். பெண்கள் கற்பழிக்கப் படுவார்கள். பெண்களைக் கற்பழிக்கும் போது சாதி வேற்றுமை பார்த்து கற்பழிக்கப்படுவதில்லை. அதனால் கற்பழிப்பால் கற்பம் அடையும் பெண்களுக்குப் பிறந்த பிள்ளைகளை இன்ன வர்ணம்தான் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது.
இதனைத்தான் அருச்சுனன் வர்ணக் குழப்பம் என்று தெளிவாகக் குறிப்பிடுகிறான்.
எனவே கீதையில் கையாளப்படும் வர்ண தர்மம் என்பது பிறப்பால் ஏற்படும் சாதியேதான் என்பது துலாம்பரமாகத் தெரிகிறது. எத்தனை கண்ணதாசர்கள் வந்தாலும் அந்த பச்சை உண்மையை மறைக்க முடியாது.
கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. அவர் அர்த்தத்தோடுதான் கண்ணதாசன் என்ற புனைபெயரை தேர்ந்தெடுத்திருக்கிறார். ஆயர்பாடி கண்ணனைப் போலவே வாழ்ந்தார்.
கண்ணதாசன் அருமையான கவிஞர். வண்ணத் தமிழும், நல்ல கற்பனையும், வர்ணனையும் கைவரப்பெற்றவர். ஆனால் அவர் ஒரு பக்திவியாபாரி. பக்தியைக் பாடலாகவும் நூல்களாகவும் எழுதி பணம் சம்பாதித்தவர். ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ என்ற தலைப்பில் பத்துப் பாகங்கள் எழுதியுள்ளார். பகவத் கீதைக்கும் உரை எழுதியுள்ளார்.
‘ஒரு கோப்பையில் என் குடியிருப்பு கோலமயில் என் துணையிருப்பு’ என்பது அவர் எழுதிய திரைப்பாடல் மட்டுமல்ல. அவரது சொந்த வாழ்க்கை அனுபவமும் அதுதான். மூன்று மனைவியர்களை மணந்து கொண்டவர். குடி, கூத்தி என்று தலைதெறிக்க ஆடி ஓடி அலைந்து தனது 55 அகவையில் அடங்கியவர்.
அருணகிரிநாதராவது சிவப்பு விளக்கே கதியெனக் கிடந்து பின் திருந்தியவர். கவிஞர் கண்ணதாசன் கடைசிவரை திருந்தவே இல்லை.
கவிஞர் கண்ணதாசனுக்கு அர்த்தமுள்ள இந்துமதம் எழுதுவதற்கு என்ன தகுதி உண்டு எனச் சிலர் கேட்கலாம்.
அவருக்கு எல்லாத் தகுதியும் உண்டு. ஒழுக்கத்துக்கும் இந்து மதத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை.
‘எல்லா அறங்களையும் விட்டுவிட்டு என்னையே சரண் புகு! எல்லப் பாவங்களின்றும் நான் உன்னை விடுவிக்கிறேன்! துயரப்படாதே!’ ( அத் 18 -66)
ஒருவன் கொலைகாரனாக இருக்கலாம், குடிகாரனாக இருக்கலாம், கூத்திக்காரனாக இருக்கலாம். அடுத்த வீட்டுக்காரன் மனைவியை கடத்திக் கொண்டு போனவனாக இருக்கலாம், அறம் எதுவும் செய்யாதவனாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் கடவுளை சரண் புகுந்தால் போதும்! பக்தி செய்தால் போதும்! அவன் எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுவிக்கப்படுகிறான்!
இதையே கோயில்களிலும் தேவாலயங்களிலும் மசூதிகளிலும் நாளும்பொழுதும் நாம் பார்க்கிறோம்!
ஒழுங்கம் கெட்டவர்கள்தான் இந்து மதத்தில் இந்திரன் சந்திரன் எனப் போற்றப் படுகிறார்கள். இந்துமதக் கடவுளர் அதற்கு வழிகாட்டியாக இருந்திருக்கிறார்கள்.
இத்தகைய கீதா உபதேசங்கள், வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், இதிகாசங்கள் கடவுள் பக்தி என்ற பெயரால் மனித குலத்தை வேறுபடுத்தி கூறுபடுத்தி தவறான பாதையில் இழுத்துச் செல்கின்றன.
பாவங்கள் மன்னிக்கப்படும் என்ற நம்பிக்கையில் பாவம் செய்தவன் மீண்டும் பாவம் செய்கிறான். இதையிட்டு படித்த தமிழர்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லை. படியாத பாமரத் தமிழர்களுக்கு சிந்திக்கத் தெரிவதில்லை!
திரைப்படங்களிலும் சின்னத்திரையிலும் வில்லனாக ஒருவனைச் சித்தரிக்க வேண்டும் என்றால் அவனை பக்திமானாகக் காட்டி. நெற்றியில் விபூதிப்பட்டையும் கழுத்தில் உருத்திராட்சக் கொட்டையும் கட்டிவிடுகிறார்கள்!
சந்நியாசம் வாங்கிய ஜெயேந்திரர், காவி கட்டிய சதுர்வேதி, பிரேமாநந்தா போன்ற போலிச் சாமியார்கள் பகலில் இழித்தவாயர்களுக்கு இதோபதேசம் செய்து விட்டு இரவில் காமவல்லிகளுடன் சரச சல்லாபம் செய்திருக்கிறார்கள்!
‘நான் கண்ணன்! நீ ஆண்டாள்! உன்னை ஆட்கொள்ளப் போகிறேன்’ என்று சொல்லி பருவ மங்கையர்களை மட்டுமல்ல குடும்பப் பெண்களையும் சதுர்வேதி சாhமியார் கற்பழித்திருக்கிறார்!
இந்த ஒழுக்கக் கேடு இன்று நேற்றல்ல அடிநாள் தொட்டு வந்து கொண்டிருக்கிறது.
பாரதம் ஐந்தாம் வேதம். கோயில்களில் படிக்கப்படும் புனித நூல். பகவத் கீதை அதில்தான் இருக்கிறது.
பரதன் என்ற அரசன் ஆண்டதால் அந்த நாட்டுக்கு பரதம் என்ற பெயர் வந்தது.
பரதன் பரம்பரையில் வந்த ஒரு அரசனது பெயர் குரு. எனவே அவன் சந்ததி குருகுலம் என அழைக்கப்பட்டது.
இந்தக் குரு குலத்தில் பிறந்த சந்தனு என்ற அரசனது மகனின் பெயர். பீஷ்மன்.
சுந்தனு ஒரு நாள் கங்கை ஆற்றில் குளிக்கப் போனான். போகும் வழியில் மீனவர்களது குடியிருப்பில் இருந்து மீன் நாற்றம் வந்தது. அதே நேரம் அங்கே அழகே வடிவான ஒரு பெண் நிற்பதைப் பார்த்தான். பார்த்தவுடன் மோகம் கொண்டான். பெண்ணின் தந்தையிடம் தன் விருப்பத்தைச் சொன்னான்.
மீனவன் படியாதவன் என்றாலும் புத்திசாலி. ‘என் பெண்ணைக் கொடுக்க எனக்குச் சம்மதம். ஆனால் ஒரு நிபந்தனை. எனது மகள் வயிற்றில் பிறக்கும் பிள்ளை அதாவது எனது பேரன் உனக்குப் பின் நாடாளும் அரசன் ஆக முடி சூட்டப் படவேண்டும். இதற்குச் சம்மதம் என்றால் மட்டுமே பெண்ணைத் தருவேன்..’
அரசன் வாட்டத்தோடு அரண்மனை திரும்பினான். அரசனது வாட்டத்துக்கான காரணத்தை அவனது மகன் கேட்டு அறிகிறான். உடனே அவன் மீனவனிடம் போய் ‘எனக்கு அரசு வேண்டாம். அவனது நிபந்தனையின்படி மச்சகந்தியின் (அவளது பெயர்) வயிற்றுப் பிள்ளையே பட்டத்துக்கு வருவான்’ என்றான்.
‘அது சரி. ஆனால் உனக்குப் பிறக்கும் பிள்ளைகள் அரசுரிமை கேட்டு நாளைக்கு சண்டைக்கு வருவார்களே? அதற்கு என்ன சொல்கிறாய்?’
‘அந்தப் பயம் உனக்கு வேண்டாம்! நான் திருமணம் செய்ய மாட்டேன்.’
தந்தைக்காக தனது அரசுரிமையை ஈகை செய்த பீஷ்மனை தேவர்கள் பாராட்டி வானில் இருந்து பூமாரி பொழிந்து வாழ்த்தினார்கள்.
சுந்தனு மச்சகந்தி இருவருக்கும் இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். ஆதில் ஒருவன் போரில் இறந்தான். மற்றவன் சந்ததி இல்லாமல் இறந்தான். மீனவன் கனவு அவன் பேரர்களோடு முடிந்து விட்டது.
போரில் இறந்த போன சந்தனு மச்சகந்தி இருவருக்கும் பிறந்த சித்திராங்கதன் விசித்திர வீரியன் ஆகிய இரண்டு மகன்களுக்கும் பிள்ளைகள் இல்லை. இதனால் குருகுல அரச வம்சம் சந்ததி இல்லாமல் அழியும் அபாயம் தோன்றியது. மீனவப் பெண்ணான மச்சகந்தி சந்ததி தழைக்க ஒரு உயாயம் செய்தாள்.
பீஷ்மரை அழைத்து சித்திராங்கதன் விசித்திர வீரியன் ஆகிய தம்பிமாரின் மனைவிகளான அம்பிகை அம்பாலிகை (மச்சகந்தியின் மருமக்கள்) இருவருக்கும் பிள்ளை வரம் கொடுக்குப்படி கேட்டுக் கொண்டாள். அதாவது அவர்களைப் புணருமாறு கேட்டாள்.
பீஷ்மன் தான் தந்தைக்குக் கொடுத்த வாக்கை மீறமாட்டேன் என்று உறிதியாகக் கூறிவிட்டான்.
மச்சகந்தி முயற்சியைக் கைவிடவில்லை. சந்தனுவை மணப்பதற்கு முன்னர் பராசரமகரிஷியோடு கூடிப் பிறந்து காட்டில் திரிந்து கொண்டிருந்த தனது மகனை அழைத்து தனது மருமக்களுக்கு பிள்ளைவரம் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டாள். இவன்தான் இந்து மதம் கொண்டாடும் வியாசன். நால் வேதங்களைத் தொகுத்தவன். ஐந்தாவது வேதம் எனப் போற்றப்படும் பாரதத்தை எழுதியவன். அதில் காணப்படும் பகவத் கீதையை எழுதியவன்.
விபசாரத்தில் பிறந்த வியாசன் பாரதத்தையும் பகவத் கீதையையும் எழுத முடியும் என்றால் கவியர் கண்ணதாசன் ஏன் அர்த்தமுள்ள இந்து மதம் எழுதக் கூடாது? ஆன காரணத்தால்தான் அர்த்தமுள்ள இந்து மதம் எழுதுவதற்கு குடியும் கூத்தியுமாக வாழந்த கண்ணதாசனுக்கு எல்லாத் தகுதியும் உண்டென்று கூறினேன்.
சரி கதையைத் தொடருகிறேன். வியாசன் மச்சகந்தியின் வேண்டுகோளை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு அம்பிகை அம்பாலிகை என்ற இரண்டு பெண்களோடு சேருகிறான்.
இதில் மூத்தவள் அம்பிகை வியாசன் தன்னைப் புணரும்போது பயத்தால் கண்ணை மூடிக் கொண்டாள். அதனால் அவளுக்குப் பிறந்த பிள்ளை குருடாகப் பிறந்தது.
இளையவளான அம்பாலிகையுடன் வியாசன் சேரும் போது அவனது தாடி சடாமுடி இவற்றைக் கண்டு அச்சத்தோடு இருந்தாள். அதனால் அவளுக்குப் பிறந்த பிள்ளை நோயாளியாகப் பிறந்தது.
இன்றைய திரைப்படங்களில் வரும் வில்லன் கதாநாயகியின் கற்பைப் பறிக்கும் போது இயக்குநர் கதாநாயகியின் வேதனையை, வெட்கத்தை, அருவருப்பை, இயலாமையை கை கால், முக மாறுதல்களை அண்மைக் காட்சியில் காட்டுவார்.
இந்தக் கதாநாயகி போலவே அம்பிகை, அம்பாலிகை அந்த இரண்டு பெண்களும் வியாசன் கற்பழித்தபோது அதே வேதனை, வெட்கம், இயலாமை இவற்றால் துடித்திருப்பார்கள். துவண்டு போய் இருப்பார்கள்!
முதல் இரண்டு பிள்ளைகளும் சொட்டையாகப் பிறந்து விட்டன. அரசாள ஒரு ஒழுங்கான பிள்ளை வேண்டும். மச்சகந்தி ஆழ்ந்த யோசனையில் மூழ்கினாள்.
மச்சகந்தி ‘முயற்சி திருவினையாக்கும்’ என்பதில் நம்பிக்கை கொண்டவள். அவள் காட்டில் வாழ்ந்த வியாசனை மீண்டும் அழைத்து தனது இளைய மருமகள் அம்பாலிகையோடு புணர்ந்து ஒரு ஒழுங்கான பிள்ளையைப் கொடுக்குமாறு கேட்கிறாள்.
வியாசனோடு இன்னொரு முறை கூட வேண்டும் என்பதைக் கேட்ட அம்பாலிகை அருவருப்புக் காரணமாக அச்சம் கொள்கிறாள். தந்திரமாக தனது வேலைக்காரியை வியாசனோடு புணருமாறு அனுப்பி வைக்கிறாள்!
வேலைக்காரி அரசகுமாரி அல்லவே. அவள் மகிழ்ச்சியோடு வியாசனோடு கூடினாள். அவளுக்குப் பிறந்த குழந்தை எந்தக் குறையும் இல்லாது பிறந்தது.
இப்போது உங்களுக்கு மிகுதிக் கதை விளங்கி இருக்கும்.
வியாசனோடு மூத்த மருமகள் கூடிப்பிறந்த குருட்டுப் பிள்ளைதான் திருதராட்டிரன். வியாசனோடு இரண்டாவது மருமகள் கூடிப் பிறந்த நோயாளிக் குழந்தைதான் பாண்டு.
வியாசனுக்கும் வேலைக்காரிக்கும் பிறந்த பிள்ளைதான் விதுரன்.
குருட்டுப் பிள்ளை அரசாளக் கூடாது என்பதால் திருதராட்டிரன் ஒதுக்கப்படுகிறான்.
விதுரன் குறைவற்றுப் பிறந்தாலும் வேலைக்காரிக்குப் பிறந்ததால் ஆட்சி செய்யும் தகுதியை இழக்கிறான்.
எஞ்சிய பாண்டு நோயாளியாக இருந்தாலும் அரச கட்டில் ஏறுகிறான். வேத சாத்திரங்கள் அதனை அனுமதிக்கிறது.
வேத சாத்திரங்கள் விசித்திரமானவை. அவை நாகரிகம் அடையாத அன்றைய மனிதனது வாழ்க்கை முறையை ஒளித்தெறிக்கின்றன.
மச்சகந்தி சூத்திர குலம். அவளுக்கும் காட்டில் தவம்செய்து கொண்டிருந்த பராசரமகரிஷிக்கும் பிறந்த வியாசன் சூத்திர குலம். ஆனால் வியாசனுக்கும், சந்தனு-மச்சகந்தி இருவரது மகன்களின் (சித்திராங்கதன், விசித்திரவீரியன்) மனைவியருக்கும் பிறந்த திருதராட்டிரன் சத்திரிய குலம் எனக் கருதப்படுகிறான். குருடன் என்பதால் மட்டும் அவனுக்கு அரசுரிமை மறுக்கப்படுகிறது.
அதே போல் விதுரன் அரண்மனை வேலைக்காரிக்குப் பிறந்த பிள்ளை என்பதால் சூத்திர குலம். அதனால் அவனுக்கு அரசுரிமை மறுக்கப்படுகிறது. ஆனால் திரிதராட்டிரன் போலவே நோயாளியாகப் பிறந்த பாண்டுவுக்கு அரசுரிமை அளிக்கப்படுகிறது.
நோயாளி பாண்டு குந்தியை மணக்கிறான். ஆனால் அவன் குந்தியைக் கூடினால் இறந்து விடுவான் என்பதற்காக அவளும் இன்னொரு மனைவி மாத்திரியும் இந்திரன், வாயு, அக்னி போன்ற தேவர்களோடு கூடி அய்ந்து பிள்ளைகளைப் பெறுகிறார்கள். அவர்கள்தான் பஞ்ச பாண்டவர்கள். பாரதக் கதையின் கதாநாயகர்கள். குந்தி ஆறாவதாக சூரியனைக் காதலித்துப் பெற்ற பிள்ளைதான் கர்ணன்.
பெண்ணுடன் கூடினால் இறக்க நேரிடும் என்று தெரிந்தும் பாண்டு அரண்மனைத தாதி ஒருத்தியுடன் கூடி இறந்து போகிறான்.
பாண்டு இறந்து போனபின் அவனது (?) மக்களில் மூத்தவனான தருமன் பட்டம் ஏற்கிறான்.
தருமன் பட்டம் சூடுவதை திரிதராட்டிரனின் மூத்த மகன் துரியோதனன் எதிர்க்கிறான். ஆட்சி உரிமை தனக்கே என்று வாதிடுகிறான்.
திரிதராட்டிரன் குருடாக இல்லாதிருந்தால் அவன்தான் ஆட்சிக் கட்டில் ஏறியிருப்பான், எனவே அவனுக்குப் பின் முறைப்படி ஆட்சியுரிமை தனக்கே உரித்து என்று துரியோதனன் வாதிட்டான்.
கவுரவர் – பாண்டவர் அரசுரிமைச் சண்டையில் பீஷ்மர் தலையிட்டு துரியோதனர்கள் அஸ்தினாபுரத்திலும் பாண்டவர்கள் இந்திரப்பிரஸ்தத்திலும் தனித்தனி அரசு ஆள அமர்த்தப் படுகிறார்கள்.
பாண்டவர் ஆட்சியை போர் செய்தேனும் கைப்பற்ற துரியோதனன் துடிக்கிறான். அவனது மாமன் சகுனி ஆட்சியைப் பிடிக்க குறுக்கு வழி சொல்லிக் கொடுக்கிறான்.
வாளின்றி வேலின்றி அரசைப் பிடிக்க வழி இருக்கும் போது வீணாக ஏன் இரத்தம் சிந்துவான்? ஏன் உயிர்கள் போர்க்களத்தில் பலியாக வேண்டும்?
தருமன் சூதில் மோகம் கொண்டவன். சகுனியோ சூதாட்டக் கலையில் வல்லவன்.
தருமன் சூதாடித் தோற்கிறான். அரசை மட்டுமல்ல, தன்னை, தனது மனைவியை, உடன் பிறந்த சகோதரர்களை வைத்து ஆடி இழக்கிறான்.
தோற்றவர்கள் ஆட்சியை துரியோதனிடம் ஒப்படைத்துவிட்டு வெளியேறுகிறார்கள்.
பதின்மூன்று ஆண்டுகள் காட்டிலே தலைமறைவாகத் திரிந்தபின் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்குமாறு பாண்டவர்கள் கேட்கிறார்கள். துரியோதனன் மறுக்கிறான்.
நாடு பிளவுபடுகிறது. கவுரவர் ஒருபுறம். பாண்டவர் மறுபுறம். குருசேத்திர பூமியில் சகோதர யுத்தம் தொடங்குகிறது.
அப்போதுதான் அருச்சுனன் தனது அண்ணன், தம்பி, மாமன், மச்சான், பெரியப்பா சித்தப்பா ஆகியோருக்கு எதிராக சண்டை செய்ய மறுக்கிறான்.
அருச்சுனனது எண்ணத்தை மாற்றி அவனை சண்டைக்கு ஆயத்தம் செய்ய கண்ணன் அவனுக்கு குளையடிக்கிறான். அப்படி கொலை செய்யத் தூண்டும் கருத்துரைகள்தான் பகவத் கீதை. அதனை வியாசன் எழுதியதாகச் சொல்லப்பட்டாலும் உண்மையில் பிற்காலத்தில் யாரோ எழுதி பாரதக் கதையோடு சேர்த்திருக்க வேண்டும்.மச்சகந்தி சூத்திர குலம். அவளுக்கும் காட்டில் தவம்செய்து கொண்டிருந்த பராசரமகரிஷிக்கும் பிறந்த வியாசன் சூத்திர குலம். ஆனால் வியாசனுக்கும், சந்தனு-மச்சகந்தி இருவரது மகன்களின் (சித்திராங்கதன், விசித்திரவீரியன்) மனைவியருக்கும் பிறந்த திருதராட்டிரன் சத்திரிய குலம் எனக் கருதப்படுகிறான். குருடன் என்பதால் மட்டும் அவனுக்கு அரசுரிமை மறுக்கப்படுகிறது.
அதே போல் விதுரன் அரண்மனை வேலைக்காரிக்குப் பிறந்த பிள்ளை என்பதால் சூத்திர குலம். அதனால் அவனுக்கு அரசுரிமை மறுக்கப்படுகிறது. ஆனால் திரிதராட்டிரன் போலவே நோயாளியாகப் பிறந்த பாண்டுவுக்கு அரசுரிமை அளிக்கப்படுகிறது.
நோயாளி பாண்டு குந்தியை மணக்கிறான். ஆனால் அவன் குந்தியைக் கூடினால் இறந்து விடுவான் என்பதற்காக அவளும் இன்னொரு மனைவி மாத்திரியும் இந்திரன், வாயு, அக்னி போன்ற தேவர்களோடு கூடி அய்ந்து பிள்ளைகளைப் பெறுகிறார்கள். அவர்கள்தான் பஞ்ச பாண்டவர்கள். பாரதக் கதையின் கதாநாயகர்கள். குந்தி ஆறாவதாக சூரியனைக் காதலித்துப் பெற்ற பிள்ளைதான் கர்ணன்.
பெண்ணுடன் கூடினால் இறக்க நேரிடும் என்று தெரிந்தும் பாண்டு அரண்மனைத தாதி ஒருத்தியுடன் கூடி இறந்து போகிறான்.
பாண்டு இறந்து போனபின் அவனது (?) மக்களில் மூத்தவனான தருமன் பட்டம் ஏற்கிறான்.
தருமன் பட்டம் சூடுவதை திரிதராட்டிரனின் மூத்த மகன் துரியோதனன் எதிர்க்கிறான். ஆட்சி உரிமை தனக்கே என்று வாதிடுகிறான்.
திரிதராட்டிரன் குருடாக இல்லாதிருந்தால் அவன்தான் ஆட்சிக் கட்டில் ஏறியிருப்பான், எனவே அவனுக்குப் பின் முறைப்படி ஆட்சியுரிமை தனக்கே உரித்து என்று துரியோதனன் வாதிட்டான்.
கவுரவர் – பாண்டவர் அரசுரிமைச் சண்டையில் பீஷ்மர் தலையிட்டு துரியோதனர்கள் அஸ்தினாபுரத்திலும் பாண்டவர்கள் இந்திரப்பிரஸ்தத்திலும் தனித்தனி அரசு ஆள அமர்த்தப் படுகிறார்கள்.
பாண்டவர் ஆட்சியை போர் செய்தேனும் கைப்பற்ற துரியோதனன் துடிக்கிறான். அவனது மாமன் சகுனி ஆட்சியைப் பிடிக்க குறுக்கு வழி சொல்லிக் கொடுக்கிறான்.
வாளின்றி வேலின்றி அரசைப் பிடிக்க வழி இருக்கும் போது வீணாக ஏன் இரத்தம் சிந்துவான்? ஏன் உயிர்கள் போர்க்களத்தில் பலியாக வேண்டும்?
தருமன் சூதில் மோகம் கொண்டவன். சகுனியோ சூதாட்டக் கலையில் வல்லவன்.
தருமன் சூதாடித் தோற்கிறான். அரசை மட்டுமல்ல, தன்னை, தனது மனைவியை, உடன் பிறந்த சகோதரர்களை வைத்து ஆடி இழக்கிறான்.
தோற்றவர்கள் ஆட்சியை துரியோதனிடம் ஒப்படைத்துவிட்டு வெளியேறுகிறார்கள்.
பதின்மூன்று ஆண்டுகள் காட்டிலே தலைமறைவாகத் திரிந்தபின் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்குமாறு பாண்டவர்கள் கேட்கிறார்கள். துரியோதனன் மறுக்கிறான்.
நாடு பிளவுபடுகிறது. கவுரவர் ஒருபுறம். பாண்டவர் மறுபுறம். குருசேத்திர பூமியில் சகோதர யுத்தம் தொடங்குகிறது. அப்போதுதான் அருச்சுனன் தனது அண்ணன், தம்பி, மாமன், மச்சான், பெரியப்பா சித்தப்பா ஆகியோருக்கு எதிராக சண்டை செய்ய மறுக்கிறான்.
அருச்சுனனது எண்ணத்தை மாற்றி அவனை சண்டைக்கு ஆயத்தம் செய்ய கண்ணன் அவனுக்கு குளையடிக்கிறான். அப்படி கொலை செய்யத் தூண்டும் கருத்துரைகள்தான் பகவத் கீதை. அதனை வியாசன் எழுதியதாகச் சொல்லப்பட்டாலும் உண்மையில் பிற்காலத்தில் யாரோ எழுதி பாரதக் கதையோடு சேர்த்திருக்க வேண்டும்.
ஒழுக்கக் கேட்டுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இந்த மகாபாரதம் விளங்குகிறது. ஆரியர்களுடைய பண்பாட்டுக்கு அது ‘அற்புத நூலாக’ இருக்கலாம். “புண்ணிய நூலாக” இருக்கலாம் ‘எண்ணற்ற முத்துக்களும், ரத்தினங்களும் கிடைக்கும் மகாசமுத்திரத்தைப் போன்றதாக’ இருக்கலாம் (இராசாசி எழுதிய மகாபாரதம் – பக்கம் 4). ஆனால் அது தமிழ்ப் பண்பாட்டுக்கு முற்றிலும் முரணான ஆபாசக் கதை. அதனைத்தான் கோயிலில் தமிழ்ச் சைவர்கள் படிக்கிறார்கள். படித்து முடித்த பின்னர் கஞ்சி காய்ச்சி ஊற்றுகிறார்கள்.
தமிழர்களுடைய மூளை பிற பண்பாட்டர்களால் விலங்கிடப்பட்டதற்கு இந்தப் பாரதப் படிப்பு நல்ல எடுத்துக் காட்டு.
பாரதக் கதையை படித்தாலும், அருகிருந்து படிக்கக் கேட்டாலும் மோட்சம் கிடைக்கும் என்கிறார்கள். மோட்சம் கிடைக்கிறதோ இல்லையோ நிச்சயமாக ஒழுக்கம் கெடுகிறது.
பாரதத்தை படித்து விட்டு ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் தன்னை வியாசன் என்று நினைத்திருந்தால் அதில் வியப்பில்லை.
இளைய மடாதிபதி விஜேய்ந்திரருக்கு காஞ்சி சங்கர மடத்துக்கு அருகில் இருந்த வீடியோ கடையில் இருந்து நீலப் படங்கள் பூக்கூடைக்குள் மறைத்து அனுப்பப் பட்டதாம். அவர் என்ன செய்வார். கம்பரசத்திலும், கந்தரசத்திலும் வடித்துக் கொடுத்திருந்ததை ஒளி ஒலியில் பார்க்கவும் கேட்கவும் ஆசைப்பட்டிருப்பார்!
கீதா உபதேசங்கள், வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், இதிகாசங்கள் கடவுள் பக்தி என்ற பெயரால் மனித குலத்தை குருடாக்கி தவறான பாதைக்கு இழுத்துச் செல்கின்றன.
பணம் கொடுத்தால், விரதம் இருந்தால், அர்ச்சனை ஆராதனை செய்தால், தேர்த் திருவிழா செய்தால் அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு சொர்க்கத்துக்கான வாசல் திறக்கப்படும் என்று கூறப்படுவதால் பாவம் செய்தவர்கள் மீண்டும் பாவம் செய்கிறார்கள். ஏனைய மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இது பொருந்தும்.
இதையிட்டு படித்த தமிழர்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லை. படியாத பாமரத் தமிழர்களுக்கு சிந்திக்கத் தெரிவதில்லை!
சந்நியாசம் வாங்கிய ஜெயேந்திரர், காவி கட்டிய சதுர்வேதி, தாடி வளர்த்த பிரேமாநந்தா போன்ற போலிச் சாமியார்கள் பகலில் இழித்தவாயர்களுக்கு உபதேசம் செய்து விட்டு இரவில் தங்கள் மடங்களை காமக் களியாட்டக் கூடங்களாக மாற்றுகிறார்கள்! இந்து மதத்தின் பெயரால் இந்த காமலீலைகள் அரங்கேறுகின்;றன!
‘நான் கண்ணன்! நீ ராதை! உன்னை ஆட்கொள்ளப் போகிறேன்’ என்று சொல்லி பருவ மங்கையர்களை மட்டுமல்ல குடும்பப் பெண்களையும் சதுர்வேதி சாமியார் கெடுத்திருக்கிறார்!
இதனால்தான் திரைப்படங்களிலும் சின்னத்திரையிலும் வில்லனாக ஒருவனைச் சித்தரிக்க வேண்டும் என்றால் நெற்றியில் விபூதிப் பட்டையும் கழுத்தில் உருத்திராட்சக் கொட்டையும் கட்டி பக்திமானாகக் காட்டுகிறார்கள்!
Leave a Reply
You must be logged in to post a comment.