தமிழர் வரலாறு

தமிழர் வரலாறு -Tamils History-2

இலங்கையின் வரலாற்றில் ஒரு முக்கியமான காலகட்டம் இது.
பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் ஈழம்'' கோரிக்கை, இலங்கைத் தமிழர்களால் எழுப்ப பட்டது.இலங்கைத் தமிழர்களின் தந்தை” என்றும் இலங்கையின் காந்தி'' என்றும் போற்றப்பட்ட செல்வநாயகம், தமிழர்களின் உரிமைக்காக அமைதியான முறையில் போராடிப் பார்த்தார். இலங்கை அரசுகளுடன் பல ஒப்பந்தங்கள் செய்து கொண்டார். பயன் இல்லை. கையெழுத்திட்ட மை உலருவதற்கு முன் ஒப்பந்தங்களை கிழித்துப் போட்டனர், சிங்கள ஆட்சியாளர்கள். எனவே,இலங்கை தமிழர்கள் மானத்தோடு வாழ `சுதந்திர தமிழ் ஈழம்’தான் ஒரே வழி” என்று மாநாடு கூட்டி அறிவித்தார்.

அவர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் போடப்பட்ட தீர்மானம் இது.

“தமிழர்கள் வயிற்றுப்பிழைப்புக்காக இலங்கைக்குப் போனவர்கள்தானே! அவர்கள் தனிநாடு கேட்பதில் என்ன நியாயம் இருக்கிறது?” என்று இன்றும் பலர் கேட்கிறார்கள். அவர்கள் இலங்கையின் வரலாற்றை அறியாதவர்கள்.

இலங்கையின் பூர்வ குடிகள் தமிழர்கள். இலங்கையின் “மண்ணின் மைந்தர்கள்.” தமிழ் மன்னர்கள் பலர் இலங்கையை ஆட்டிருக்கிறார்கள். இது வரலாற்றில் நிரூபிக்கப்பட்ட உண்மை.

குமரி முனைக்கு தெற்கே உள்ள இந்து மகா சமுத்திரம் ஒரு காலத்தில் நிலப்பரப்பாக இருந்தது என்றும், அது லெமூரியா (குமரிக்கண்டம்) என்று அழைக்கப்பட்டது என்றும் மேல்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

“லெமூரியா கடலில் மூழ்கி விட்டது. அப்போது தமிழ்நாட்டுடன் இலங்கையும் ஒட்டிக் கொண்டிருந்தது. நாளடைவில் தனி தீவாகப் பிரிந்து விட்டது” என்பதும் ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு. இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே உள்ள கடல் ஆழமின்றி இருப்பதற்கு இதுதான் காரணம்.

ஆதாரங்கள்

திருநெல்வேலிக்கு தென்கிழக்கே 15 மைல் தூரத்தில் உள்ள ஆதிச்சநல்லூரில், 1876-ல் பூமியைத் தோண்டி நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில், பலவகையான மண் பாண்டங்கள் கிடைத்தன. அவை சூளையில் நன்றாக வேக வைக்கப்பட்டு, நல்ல மெருகுடன் காணப்படுகின்றன. இறந்தவர்களின் உடல்களை வைத்து புதைப்பதற்கான “தாழி”கள் இவை.

இதேபோன்ற “தாழி”கள், இலங்கையின் வடபகுதியிலும் பூமிக்கடியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமல்ல, புராதன தமிழர்கள் உபயோகித்த பல நாணயங்கள், அரச இலட்சினைகள், முதலானவை இலங்கையின் பல்வேறு இடங்களில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள் என்பதற்கு இதுவே ஆதாரம் என்று ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

சுருக்கமாகச் சொன்னால், பழைய கற்காலத்திலும், புதிய கற்காலத்திலும் தமிழ்நாட்டில் தமிழர்கள் எத்தகைய நடை- உடை- பாவனையுடன் வாழ்ந்தார்களோ, அதே மாதிரிதான் இலங்கைத் தமிழர்களும் வாழ்ந்திருக்கிறார்கள். இருவருக்கும் `தொப்புள் கொடி’ உறவு இருந்திருக்கிறது.

வரலாறு கூறுவது என்ன?

இலங்கையில், புத்தமதம் பரவுவதற்கு முன் சிவ வழிபாடுதான் நடந்து வந்திருக்கிறது. பூமியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட சிவன் சிலைகளும், நந்தி சிலைகளும் இதை உறுதிப்படுத்துகின்றன. சிவனை வழிபட்டவர்கள் தமிழர்கள்தான்; சிங்களர்கள் அல்ல.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டுகளில், வட இந்தியாவில் ஆட்சி புரிந்த மவுரிய பேரரசன் அசோகன், கலிங்கப் போரின் முடிவில் பவுத்த மதத்தைத் தழுவினார். அவர் புத்த மதத்தை பரப்புவதற்காக, மகிந்த தேரே என்ற புத்த மத குரு தலைமையில் ஒரு குழுவை இலங்கைக்கு அனுப்பினார். அக்குழு இலங்கைக்கு வந்தபோது, அனுராதபுரத்தை தலைநகரமாகக் கொண்டு ஆண்ட தமிழ் மன்னன் பெயர் திசையன் என்றும், அசோகன் விருப்ப்ப்படி அவன் புத்தமதத்தை தழுவினான் என்றும், அவனுக்கு “தேவ நம்பி” என்ற பட்டத்தை அசோகர் வழங்கினார் என்றும், பாலி மொழியில் எழுதப்பட்ட வரலாற்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. திசையன் இறந்த பிறகு, சேனன், குத்தன் என்ற இரு தமிழ் மன்னர்கள் 22 வருடங்கள், அனுராதபுரத்தில் நல்லாட்சி நடத்தினார்கள் என்று அதே நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்று ராஜ்ஜியங்கள்

ஆதிகாலத்தில், இலங்கை ஒரே நாடாக இருந்தது இல்லை. பல அரசர்களும், சிற்றரசர்களும் குறிப்பிட்ட பகுதிகளை ஆண்டு வந்தனர்.
ஐரோப்பியர்கள் இலங்கைக்கு வந்தபோது, இலங்கையில் மூன்று ராஜ்ஜியங்கள் இருந்தன:

( 1 ) தென் கோடியில், கொழும்பு பகுதியை உள்ளடக்கிய கோட்டை ராஜ்ஜியம். இந்த கோட்டையை ஏற்படுத்தியவனே அழகுக்கோன் என்ற தமிழன்.
( 2 ) கண்டி ராஜ்ஜியம்.
( 3 ) யாழ்ப்பாண ராஜ்ஜியம்.

இவற்றில் யாழ்ப்பாண ராஜ்ஜியத்தை எக்காலத்திலும் சிங்களர்கள் ஆண்டது இல்லை. கோட்டையையும் கண்டிதமிழர்களும், சிங்களர்களும் மாறி மாறி ஆண்டு வந்திருக்கிறார்கள்.

பல ராஜ்ஜியங்களாக இருந்த இந்தியாவை ஒரு குடையின் கீழ் கொண்படு வந்த ஆங்கிலேயர்கள், இலங்கையையும் ஒரே நாடாக மாற்றினார்கள். சிலோன் (இலங்கை) என்ற பெயரையும் சூட்டினார்கள்.

வட இந்தியாவில் இருந்து இலங்கைக்குச் சென்ற விஜயன் என்ற இளவரசன்தான், முதல் சிங்கள அரசை நிறுவியவன் என்று, சிங்களரின் வரலாற்று நூலான மகாவம்சம் கூறுகிறது.

இந்தியாவின் இதிகாசங்களான “ராமாயணம்”, “மகாபாரதம்” போன்றது பாலி மொழியில் எழுதப்பட்ட “மகாவம்சம்” என்ற நூல். இதை தங்களின் வேத புத்தகம் போல சிங்களர்கள் மதிக்கிறார்கள்.

இதை தங்கள் “வரலாறு” என்று சிங்களர்கள் கூறினாலும், நம்ப முடியாத கட்டுக் கதைகளும் இதில் உண்டு.

விஜயன்

இலங்கையில் சிங்கள வம்சத்தை தோற்றுவித்தவன் – இலங்கையின் முதல் சிங்கள மன்னன் விஜயன் என்று மகாவம்சம் கூறுகிறது.

விஜயன் பற்றி மகாவம்சத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:-

“வட இந்தியாவில் உள்ள வங்காளம், ஒரிசா ஆகிய பகுதிகள் ஒரு காலத்தில் லாலாதேசம் என்று அழைக்கப்பட்டது. இந்த ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னன் பெயர் சிங்கபாகு. இவர் சிங்கத்துக்கும் ஒரு ராஜகுமாரிக்கும் பிறந்தவர்!

பிற்காலத்தில் இவருக்கு உண்மை தெரிகிறது. ஒரு குகையில் இருந்த சிங்கத்தை (தன் தந்தையை) கண்டுபிடித்து தலையை வெட்டி துண்டிக்கிறார்.

சிங்கபாகு, சிகாசிவாலி என்ற பெண்ணை மணந்து அவளை பட்டத்து ராணி ஆக்குகிறார். இவர்களுக்கு 16 முறை இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன! (அதாவது 32 குழந்தைகள்)

இந்தக் குழந்தைகளில் மூத்தவன் விஜயன். அவனை பட்டத்து இளவரசனாக சிங்கபாகு நியமிக்கிறார்.

மக்கள் புகார்

விஜயன் மிகவும் கொடூரமானவன். அவன் செய்த அட்டூழியங்கள் பற்றி, மன்னனிடம் மக்கள் முறையிடுகிறார்கள். மகனைத் திருத்த முயற்சிக்கிறார், சிங்கபாகு. ஆனால் விஜயன் திருந்தவில்லை. நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு, மக்களைத் துன்புறுத்துகிறான்.

அவன் அட்டூழியங்கள் எல்லை மீறிப்போனதால், மன்னனிடம் மக்கள் மீண்டும் முறையிடுகிறார்கள். “விஜயனுக்கு மரண தண்டனை விதியுங்கள்” என்று வற்புறுத்துகிறார்கள்.

இதன் காரணமாக, விஜயனையும், அவன் நண்பர்கள் 700 பேர்களையும் நாடு கடத்துகிறார், மன்னர். இவர்களை மூன்று கப்பல்களில் ஏற்றி, “எங்காவது போய் பிழைத்துக் கொள்ளுங்கள். இனியாவது திருந்தி வாழுங்கள்” என்று புத்திமதி கூறி அனுப்பி வைக்கிறார். மூன்று கப்பல்களும் இலங்கையை அடைகின்றன.

அடைக்கலம் கொடுத்த அழகி விஜயன் கப்பலை விட்டு இறங்கி, இலங்கைத் தீவில் காலடி வைக்கிறான். இது கி.மு. 543-ல் நடந்தது.

விஜயன் இறங்கிய இடம் அழகிய இயற்கைக் காட்சிகள் கொண்டது. அங்கு ஒரு மரத்தடியில் குவேனி என்ற பெண் அமர்ந்திருக்கிறாள். இவள் ராட்சச குலத்தைச் சேர்ந்தவள்.

(குவேனி என்ற சொல், கவினி என்ற தமிழ்ச் சொல்லின் திரிபு ஆகும். கவினி என்றால் “பேரழகு படைத்தவள்” என்று பொருள்.

இலங்கையை ஆண்ட ராவணன் ராட்சதன் என்று கூறப்பட்டதுபோல, குவேனியையும் ராட்சத குலம் என்று வர்ணிக்கிறது, “மகாவம்சம்”) குவேனியை விஜயன் சந்தித்து அடைக்கலம் கோருகிறான். அவள் அடைக்கலம் அளிக்கிறாள்.

இருவருக்கும் காதல் ஏற்பட்டு, திருமணம் செய்து கொள்கிறார்கள். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் பிறக்கிறார்கள்.

பாண்டிய இளவரசி

விஜயனுடன் இலங்கை சென்ற அவனுடைய 700 நண்பர்களும் பல நகரங்களையும், கிராமங்களையும் உருவாக்குகிறார்கள். அந்தப் பகுதிகளை உள்ளடக்கிய ராஜ்ஜியத்துக்கு மன்னனாகும்படி, விஜயனை கேட்டுக் கொள்கிறார்கள்.

ஆனால், விஜயன் மறுத்து விடுகிறான். “ராஜ குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளவரசியை நான் மணந்தால்தான், சிம்மாசனம் ஏறமுடியும்” என்று கூறுகிறான்.

இதன் காரணமாக, விஜயனின் நண்பர்கள் மதுரைக்கு செல்கிறார்கள். மதுரை மன்னனுக்கு முத்துக்கள், தங்க ஆபரணங்கள் முதலியவற்றை பரிசாக வழங்கி, தங்கள் மன்னனான விஜயனுக்கு இளவரசியை மணமுடித்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.

இதற்கு பாண்டிய மன்னன் சம்மதிக்கிறார். பாண்டிய இளவரசியுடன், விஜயனின் 700 நண்பர்களுக்கும் 700 பெண்களை தேர்வு செய்து, இலங்கைக்கு அனுப்பி வைக்கிறார்.

குவேனியின் கதி

பாண்டிய இளவரசி தன்னை மணப்பதற்கு இசைந்து இலங்கைக்கு வந்து விட்டதை அறிந்து விஜயன் மிகவும் மகிழ்ச்சி அடைகிறான்.

குவேனியை அழைத்து, “நான் பாண்டிய ராஜகுமாரியை மணக்கப்போகிறேன். என்னுடைய இரண்டு குழந்தைகளையும் என்னிடம் ஒப்படைத்துவிட்டு, இங்கிருந்து போய்விடு” என்று கூறுகிறான்.

இதனால் வேதனை அடைந்த குவேனி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு “லங்காபுரா” என்ற இடத்துக்கு போய்விடுகிறாள். இவர்களுடைய வம்சாவளியினர், இலங்கையின் பழங்குடியினராக உள்ள வேட்டுவர்கள்.

திருமணம்

பாண்டிய ராஜகுமாரியை மணந்து கொண்ட விஜயன், அவளுடன் வந்த 700 பெண்களுக்கும் அமைச்சர்களாக உள்ள தன் நண்பர்களை அவரவர் தகுதிக்கு ஏற்ப மணம் முடித்து வைக்கிறான்.

முன்பு கொடியவனாகவும், முரடனாகவும் இருந்த விஜயன் நல்லவனாக திருந்தி, 38 ஆண்டு காலம் தர்மம் தவறாமல் இலங்கையை ஆண்டான். அவனது சந்ததிகளே சிங்களர்கள்.”

இவ்வாறு மகாவம்சம் கூறுகிறது.

தபால் தலை

1956-ல் “விஜயனின் வருகை” என்ற தலைப்புடன் சிறப்பு தபால் தலை ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டது. குவேனி ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பது போலவும், கப்பலில் வந்த விஜயன் அவளிடம் அடைக்கலம் கோருவது போலவும் இந்த தபால் தலை அமைந்திருந்தது.

தபால் தலையை பார்த்த சிங்கள தலைவர்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். “விஜயன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தவன் என்ற கருத்து ஏற்கத் தக்கது அல்ல. தவிரவும், விஜயன் வந்தபோதே இங்கு குவேனி என்ற தமிழ்ப்பெண் இருந்திருக்கிறாள் என்று கூறினால், இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள் என்பதை நாமே ஒப்புக்கொண்டது போலாகிவிடும். எனவே, இந்த தபால் தலையை வாபஸ் பெறவேண்டும்” என்று கூறினார்கள்.

இதன் காரணமாக, இந்த தபால் தலையை இலங்கை அரசு வாபஸ் பெற்றுக்கொண்டது. ஆனால், அதற்குள் இந்த தபால் தலை உலகம் முழுவதும் பரவி விட்டது

பகுதி 3
எல்லாளன் என்ற தமிழ் மன்னன் இலங்கையை 44 ஆண்டுகள் ஆண்டதாக ஆதாரபூர்வமான வரலாறு கூறுகிறது.
சிங்களர்கள்தான் இலங்கையின் பூர்வக்குடிகள் என்று நிரூபிப்பதற்காக எழுதப்பட்ட நூல் “மகாவம்சம்.”
சிங்கள வம்சத்தை தோற்றுவித்தவன் விஜயன்தான் என்று அந்நூல் கூறுகிறது. ஆனால், அவன் இலங்கையில் காலடி வைக்கும்போதே, அங்கே குவேனி என்ற தமிழ் அரசி இருந்திருக்கிறாள் என்று அதே மகாவம்சம் குறிப்பிடுகிறது. அப்படியானால், விஜயனுக்கு முன்பே தமிழர்கள் அங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை மகாவம்சமே ஒப்புக்கொள்கிறது.

அனுராதபுரம்

இலங்கையின் மற்ற பகுதிகள் காடுகளாக இருந்தபோது, அனுராதபுரத்தை பெரிய நகரமாக தமிழர்கள் உருவாக்கி, அங்கிருந்து ஆட்சி நடத்தியிருக்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

விஜயன் தனக்கென்று ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்குவதற்கு முன்பே, அனுராதபுரத்தில் தமிழ் மன்னர்களின் ஆட்சி நடந்திருக்கிறது. விஜயனின் வருகைக்கு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பே அனுராதபுரம் பெரிய நகரமாக இருந்திருக்கிறது என்பது, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு. அந்தக் காலத்தில் இந்தியாவில் உஜ்ஜயினி பெரிய நகரமாக இருந்தது. அதற்கு சமமாக அனுராதபுரம் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

புகழ் பெற்ற தமிழ் மன்னன்

இலங்கைக்கு இந்தியப் பேரரசர் அசோகர் அனுப்பிய புத்த மதக் குழுவினர், அனுராதபுரத்தில் திசையன் என்ற தமிழ் மன்னனை சந்தித்தது பற்றி, பாலி மொழி வரலாற்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திசையன் இறந்த பிறகு, சேனன், குத்தன் என்ற இரு தமிழ் மன்னர்கள் 22 ஆண்டுகள் அனுராதபுரத்தில் நல்லாட்சி நடத்தினர்.
இவர்களுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர் எல்லாளன்.

சிங்களர்களைப் புகழ்வதற்காகவே எழுதப்பட்ட “மகாவம்சம்” நூலில், எல்லாளனின் வீரம் பற்றி உயர்வாகவே கூறப்பட்டுள்ளது. அவனுடைய குணநலன்கள், மனுநீதிச் சோழனின் இயல்பை ஒட்டி சித்தரிக்கப்பட்டுள்ளன.

மகாவம்சம் கூறுவதாவது:-

“எல்லாளன், இயேசு கிறிஸ்துவுக்கு 235 ஆண்டுகளுக்கு முன்னதாகப் பிறந் தவன். அவன் அனுராதபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு, 44 ஆண்டுகள் ஆட்சி நடத்தினான். அவன் சோழ வம்சத்தை சேர்ந்தவன். நீதி தவறாதவன்.

அவன் தன் படுக்கை அறையில் ஒரு மணியை தொங்கவிட்டிருந்தான். அது, அரண்மனைக்கு வெளியே தொங்கவிடப்பட்டிருந்த ஒரு கயிற்றுடன் இணைக்கப்பட்டு இருந்தது. தங்களுடைய குறைகளை மன்னருக்குத் தெரிவிக்க, யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் மணியை அடிக்கலாம்.

ஒருமுறை, ஒரு பெண் அந்த மணியை அடித்தாள். எல்லாளன் அந்தப் பெண்ணை அழைத்து, “உன் குறை என்ன?” என்று கேட்டான்.
“உன் மகன் ரதத்தில் செல்லும்போது, என் கன்றுக்குட்டி மீது ரதத்தை ஏற்றிக் கொன்றுவிட்டான்” என்று கூறினாள்.

அதைக்கேட்ட எல்லாளன், தன் மகனையும் ரதத்தை ஏற்றி கொன்றுவிடுமாறு கட்டளையிட்டான். அக்கட்டளைப்படி இளவரசன் கொல்லப்பட்டான். (மனுநீதி சோழன் வரலாற்றிலும் இதே போன்ற சம்பவம் வருகிறது)

புத்தர் கோவில்

ஒருமுறை எல்லாளன் ரதத்தில் செல்லும்போது, ரதம் மோதி புத்தர் கோவில் சேதம் அடைந்தது. ரதத்தில் இருந்து கீழே இறங்கிய எல்லாளன், கோவில் இடிந்ததற்காக மிகவும் வருந்தினான்.

உடனே மந்திரிகளை அழைத்து, “புத்தர் கோவிலை சேதப்படுத்திய நான் படுபாவி; பெரிய குற்றவாளி. என்னைக் கொன்றுவிடுங்கள்” என்றான்.

அதற்கு மந்திரிகள் மறுத்துவிட்டனர். “நீங்கள் உங்களுக்கே மரண தண்டனை விதித்துக் கொள்வதை, புத்த பகவானே ஏற்கமாட்டார்” என்று கூறினர். “நீங்கள் உங்கள் உயிரைப் போக்கிக் கொள்வதற்கு பதிலாக, கோவிலை புதிதாகக் கட்டிக் கொடுத்து விடலாம்” என்று தெரிவித்தார்கள்.

மந்திரிகளின் இந்த யோசனையை ஏற்றுக்கொண்ட எல்லாளன், புத்தர் கோவிலை முன்பைவிட அழகாகக் கட்டிக் கொடுத்தான்.

துட்ட காமினி

இந்தக் காலக்கட்டத்தில் தென் இலங்கையை கவந்திசா என்ற சிங்கள மன்னன் ஆண்டு வந்தான். அவனுடைய மகன் பெயர் துட்டகாமினி. (இவனுடைய இயற்பெயர் கெமுனு என்றும், துஷ்டத்தனம் செய்து வந்ததால், துட்ட காமினி என்று அழைக்கப்பட்டான் என்றும் மகாவம்சம் கூறுகிறது.)

ராஜ்ஜியத்தை விரிவுபடுத்த விரும்பிய துட்டகாமினி, பல சிற்றரசர்களை தோற்கடித்து விட்டு, வடக்கு நோக்கி முன்னேறினான். தமிழ் மன்னன் எல்லாளனை முறியடித்து, அனுராதபுரத்தை கைப்பற்ற வேண்டும் என்பது அவன் எண்ணம்.

தன் விருப்பத்தை தன் தந்தைக்குத் தெரிவித்தான். அதை மன்னர் ஏற்கவில்லை. “எல்லாளனிடம் ஒரு லட்சம் போர் வீரர்கள் இருக்கிறார்கள். மேலும் அவர் நல்லவர். மக்களின் ஆதரவைப் பெற்றவர். அவர் மீது படையெடுக்க வேண்டாம்” என்று தகவல் அனுப்பினார்.

தந்தைக்கு அனுப்பிய “பரிசு”

இதனால் சீற்றம் அடைந்த துட்ட கா மினி, பெண்கள் அணியும் வளையல்களையும், சேலைகளையும் தந்தைக்கு அனுப்பி வைத்து, தந்தையை அவமானப்படுத்தினான்.

இதனால் கோபம் அடைந்த மன்னர், துட்ட காமினியை கைது செய்து, தன் முன் கொண்டு வந்து நிறுத்துமாறு வீரர்களுக்குக் கட்டளையிட்டார்.

இதை அறிந்து கொண்ட துட்ட காமினி, காட்டில் போய் ஒளிந்து கொண்டான்.

சில நாட்களில் மன்னர் மரணம் அடைந்தார். துட்ட காமினி, நாட்டுக்குத் திரும்பி ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். பின்னர், அனுராதபுரத்தின் மீது படையெடுத்தான்.

பயங்கர போர்

பெரும் படையுடன் துட்ட காமினி வருவது பற்றி அறிந்த எல்லாளன், மந்திரிகளை அழைத்து அவசர ஆலோசனை நடத்தினார்.
துட்டகாமினியை கோட் டைக்குள் வரவிடக்கூடாது என்றும், கோட்டைக்கு வெளியே அவனை எதிர்கொண்டு போரிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, அனுராதபுரம் கோட்டைக்கு வெளியே இருதரப்பு படைகளும் மோதின. போர் பயங்கரமாக நடந்தது. ரத்த ஆறு ஓடியது.

பட்டத்து யானை

இந்நிலையில், எல்லாளனுக்கு துட்டகாமினி சவால் விட்டான்.

“நாம் இருவரும் நேருக்கு நேர் நின்று போர் புரிவோம். யாருக்கு வெற்றி என்பதை நமது நேரடிப் போர் தீர்மானிக்கட்டும்” என்றான்.
போர் நடந்தபோது எல்லாளனுக்கு வயது 74. துட்ட காமினி இளைஞன். என்றாலும் அவன் விட்ட சவாலை, எல்லாளன் ஏற்றுக்கொண்டார்.

இருவரும் பட்டத்து யானைகள் மீது அமர்ந்து போரிட்டனர். எல்லாளன் வயோதிகராக இருந்தாலும் தீரத்துடன் போரிட்டார். என்றாலும், துட்டகாமினியின் யானை, தன்னுடைய தந்தத்தால் எல்லாளன் அமர்ந்திருந்த யானையின் முகத்தில் குத்தி கிழித்தது. யானை கீழே சாய்ந்தது. அதே நேரத்தில் துட்ட காமினி எறிந்த ஈட்டி, எல்லாளன் உயிரைக் குடித்தது.

கோவில்

எல்லாளன் இறந்த இடத்திலேயே அவர் உடலை தக்க மரியாதையுடன் துட்ட காமினி தகனம் செய்தான். அதே இடத்தில் கோவில் ஒன்றை கட்டவும் ஏற்பாடு செய்தான்.

“இந்த வழியே செல்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் அரசர்களே ஆனாலும் கோவிலை கும்பிட்டு விட்டு செல்லவேண்டும்” என்று உத்தரவிட்டான். எல்லாளனின் வீரத்துக்கு, துட்ட காமினி அளித்த மரியாதை இது.

அனுராதபுரத்தைக் கைப்பற்றிக்கொண்ட துட்டகாமினி, அதை மேலும் விரிவுபடுத்த எண்ணமிட்டான்.

ஆனால், அவன் திட்டங்கள் நிறைவேறுவதற்கு முன், பாம்பு கடித்து இறந்து போனான்.”

இவ்வாறு மகாவம்சம் கூறுகிறது.
நன்றி:‍ தினத்தந்தி

——————————————————————————————————————–

பகுதி 1 – மலேசியத் தமிழர் வரலாறு

7, 8ஆம் நூற்றாண்டுகள் முதற்கொண்டே பழந்தமிழருக்கு மலாயாவுடன் தொடர்பு இருந்துள்ளதாக தெரியவருகிறது. தமிழ் மன்னன் இராசேந்திர சோழன் கடல்வழிப் பயணம் மேற்கொண்டு மலாயாவில் கடாரம் எனும் பெயரில் நிலப்பரப்பை உருவாக்கி ஆட்சி செய்துள்ள வரலாறு உண்டு.

தொடக்க காலத்தில் வணிகத் தொடர்புகளின் பொருட்டுதான் தமிழர்கள் தென்னிந்தியாவிலிருந்து இங்கு வந்துள்ளனர். கடாரத்தில்(Kedah) பூசாங் நதிக்கரையில் (Sungai Bujang) குடியிருப்புகளை அமைத்தனர். வந்தவர்கள் சைவர்கள் என்பதால் பூசாங்கில் சிவாலயங்களையும் கட்டினர். அவ்வாலயங்களின் எச்சங்கள் இன்றும் இருக்கின்றன. அவை தமிழன் வரலாற்றைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

படத்தில் காணும் ஆலயங்களின் எச்சங்கள் இன்று படிப்படியாக அழிந்துவருகின்றன. இவை முற்றாக அழிவதற்கு அல்லது அழிக்கப்படுவதற்கு முன்பாக இந்திய அல்லது தமிழக அரசின் தொல்லியல் ஆய்வுத்துறை இங்கு வருகை மேற்கொண்டு அகழ்வாய்வு செய்தால் பற்பல உண்மைகள் வெளிவரக்கூடும். நமது வரலாற்றுச் சான்றுகளைக் கண்டுபிடித்து ஆவணப்படுத்த இயலும்.

இதில் சிக்கல் என்னவென்றால், தமிழக, இந்திய எல்லைக்குள் கிடைக்கும் தொல்லியல் சான்றுகளை எல்லாம் அழித்தொழிக்கும் நடுவண் அரசையும் அதற்குத் துணைபோகும் தமிழக அரசையும் நம்புவதும் எதிர்பார்ப்பதும் ஏமாற்றத்திலேயே போய் முடியலாம்.

வரலாற்று நூல்கள், கல்வெட்டுகள், புதைபொருள்கள் ஆகியவை தவிர மலாயா நாட்டின் மக்களுடைய மொழியோடும், பண்பாட்டோடும், பழக்க வழக்கத்தோடும் தமிழரின் அடையாளங்கள் இரண்டறக் கலந்துள்ளன.

குறிப்பாக மலாய்மொழியில் தமிழ்ச்சொற்களும் தமிழ் மூலத்தைக் கொண்ட வடமொழிச் சொற்களும் நிறைய கலந்திருக்கின்றன. காட்டாக, அம்மா(Emak), ஐயா(Ayah), நகரம்(Negara), கடை(Kedai), கப்பல்(Kapal), கட்டில்(Katil), பெட்டி(Peti), கெண்டி(Kendi), அரசன்(இராஜா – Raja), மாணிக்கம்(Manikam), ஆகமம்(Agama), பத்தி(பக்தி – Bakti), மந்திரம் (Mantera) இப்படியான பல்லாயிரம் சொற்கள் இருக்கின்றன.

தமிழர்களுடன் ஏற்பட்ட தொடர்பின் காரணமாக மலாயா நாட்டு மக்கள் பெற்றுள்ள பயன்கள் பலவுண்டு. உழவு, பயிர்த்தொழில், ஏர் உழுதல், நீர் பாசனம் செய்தல் ஆகிய தொழில்களைக் கற்றுக்கொண்டனர். வணிக முறைகள், நாணயத்தைப் பயன்படுத்துதல், இரும்பு ஆயுதங்கள் செய்தல், பொன், வெள்ளி ஆகியவற்றைக் கொண்டு அணிகலன்கள் உருவாக்குதல், மருத்துவம் ஆகிய கலைகளை அறிந்துகொண்டனர். தமிழரைப் போல பருத்தி, பட்டு ஆகிய ஆடைகளை நெசவு செய்து அணிந்தனர். சமையல் செய்வதில் தமிழரைப் போலவே தானிய வகை, மணப் பொருள்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். தமிழ்க் இசை, நடனம், பாவைக்கூத்து போன்ற கலைகளை தங்கள் கலைகளோடு பிணைத்துக்கொண்டனர். வெற்றிலைப் பாக்கு மாற்றி திருமணம் செய்வது போன்ற திருமண சடங்கில் வெற்றிலைப் பாக்கை ஏற்றுக்கொண்டனர். கையில் மருதாணி வைத்து அழகு பார்த்தனர். பள்ளாங்குழி போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை தங்கள் வயப்படுத்திக்கொண்டனர்.

இரண்டாம் கட்டமாக, 1400களில் மலாக்கா எனும் நகரம் மன்னன் பரமேசுவரனால் மலாயாவில் உருவாக்கப்பட்டது. இவருடைய அரச தலைமுறை 110 ஆண்டுகள் மலாக்காவை ஆட்சி செய்தது. தென்கிழக்கு ஆசியாவில் மலாக்கா தலைசிறந்த வணிக நகரமாக இருந்தபோது மீண்டும் வணிக நோக்கத்திற்காகத் தமிழர்கள் மலாயாவுக்கு வந்திருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் உள்நாட்டு பெண்களை மணந்துகொண்டு இங்கேயே தங்கிவிட்டனர்.

இவர்களின் தலைமுறை இன்று தங்களின் மொழி, இன, சமய, பண்பாட்டு அடையாளங்களைத் தொலைத்துவிட்டு இருக்கின்றனர். உள்நாட்டு மலாய் மொழியின பண்பாட்டோடு ஏற்பட்ட கலப்பின் காரணமாக இப்போது புதிய இனம்போல மாறி இருக்கின்றனர். இவர்கள் ‘மலாக்கா செட்டிகள்’ என்று இன்றைய மலேசியாவில் அடையாளப்படுத்தப் பட்டுள்ளனர். இவர்கள் தமிழர் பரம்பரையில் வந்தவர்களாக இருந்தாலும் மலேசியத் தமிழர்களிடமிருந்து தனித்தே இருக்கின்றனர். தமிழரே அல்லாதவர் போலாகிவிட்டனர்.

வரலாற்றுக் காலத்தைக் கடந்து மலாயாவை ஆங்கிலேயர் கைப்பற்றிய பிறகு பெருவாரியான எண்ணிக்கையில் தென்னிந்தியத் தமிழர்கள் மலாயாவுக்குக் கொண்டுவரப்பட்டனர். இரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்கும், கரும்புக் காடுகளில் பணியாற்றவும், காடுகளை அழித்து நாடாக்கவும் சஞ்சிக்கூலிகளாக வந்த தமிழர்களை ஆங்கிலேயர் பயன்படுத்தினர். (சஞ்சி – மலாய்மொழியில் Janji அதாவது ஒப்பந்தம்)

இரப்பர் தோட்டங்களில் தமிழர்கள் பட்ட இன்னல்களும் கொடுமைகளும் அவலங்களும் சொற்களால் விவரிக்க முடியாதவை. காடுகளை அழிக்கும் போது கொடிய விலங்குகளால் தக்கப்பட்டு இறந்தவர்கள், இரப்பர் காடுகளில் நஞ்சுயிரிகளால் தாக்கப்பட்டவர்கள், மலேரியா காய்ச்சல், கொடிய நோய்கள், மருத்துவ வசதியின்மை முதலிய காரணங்களால் மரணத்தை தழுவியவர்கள் என்று கணக்கெடுத்துப் பார்த்தால் 12 இலக்கம்(இலட்சம்) தமிழர்கள் மலாயாவில் மாண்டுபோயிருக்கின்றனர்.

இரண்டாம் உலகப் போரில் ஆங்கிலேயரைத் தோற்கடித்து மலாயாவை சப்பானியர் கைப்பற்றியபோது தமிழர்கள் பட்ட துன்பங்களும் கொஞ்ச நஞ்சமல்ல. சயாம் தொடர்வண்டி திட்டத்திற்கு (சயாம் ரயில்வே) வேலை செய்ய ஆயிரக்கணக்கில் நம்மவர்கள் இரவோடு இரவாகக் கொண்டுசெல்லப் பட்டுள்ளனர். தங்கள் குடும்ப உறுப்பினர்கள் இருக்கிறார்களா இல்லையா? என்றுகூட தெரியாமல் தவித்திருந்தனர் நம் மக்கள். இப்படி தண்டவாளம் அமைக்க சென்றவர்கள் கொத்துக் கொத்தாக மடிந்துபோய் கும்பல் கும்பலாகப் புதைக்கபட்டுள்ளனர்.

இத்தனைக்கும் இடையில் மலாயாவையும், 1957க்குப் பிறகு மலேசியாவையும் ஒரு வளமிக்க நாடாக உருவாக்குவதில் தமிழர்களி பங்கு மிகப்பெரியது என்றால் மிகையல்ல. மலேசியா விவசாய நாடாக இருந்த காலத்தில் அதனுடைய பொருளாதார வளர்ச்சிக்கு உறுதிணையாக இருந்த இரப்பர், செம்பனை உற்பத்தி, கரும்பு, கொக்கோ முதலான தோட்டத்துறைகளில் இரத்தம் சிந்தி தமிழ் மக்கள் உழைத்தார்கள்.

இன்றைய நிலையில் மலேசியத் தமிழர்கள்(இந்தியர்கள்) பல்வேறு நிலைகளில் முன்னேற்றம் கண்டுள்ளனர். உயரிய கல்விக் கற்றோராக, தொழிலதிபர்களாக, நிபுணர்களாக, செல்வந்தர்களாக, பெரும் கோடிசுவரர்களாக உருவாகி இருக்கின்றனர். ஏழைகளாக இந்த நாட்டில் குடியேறியவர்கள் இன்று வளமான வாழ்க்கை வாழ்கின்றனர். இவர்களுக்கு இடையில் இன்னும் நூறாண்டுகளுக்கு முன்பு மலாயா வந்து தோட்டங்களில் வாழ்ந்த அதே இக்கட்டான சூழலில் வாழ்பவர்களும் இருக்கவே செய்கின்றனர். பல்வேறு சமுதாயத்தில் சிக்கல்களிலும் சீர்கேடுகளிலும் மாட்டிக்கொண்டு தவிப்பவர்களும் ஏராளமாக உள்ளனர்.

எது எப்படி இருப்பினும் தமிழர்கள் இன்று நாட்டின் குடியுரிமை பெற்ற இனமாக இந்தியர்கள் என்ற முத்திரையோடு வாழ்த்து வருகின்றனர். நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கின்ற உரிமைகளுக்காக இன்றளவும் போராடி போராடி தங்கள் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர்.

இருக்கின்ற உலக நடப்பையும் மலேசிய சூழலையும் கூர்ந்து கவனித்துப் பார்க்கையில், அடுத்து வருகின்ற ஐம்பது ஆண்டுகளில் மலேசியத் தமிழர்கள் தங்களின் மரபியல் அடையாளங்களான மொழி, இனம், சமயம், கலை, பண்பாடு, இலக்கியம், வரலாறு, வாழ்வியல் ஆகிய அனைத்தையும் படிப்படியாக இழந்துவிட்டு புதிய மலேசிய சமுதாயமாக உருமாறி போகக்கூடிய நிலைமை வந்தாலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

காரணம், மேலே சொன்னதுபோல மலாக்காவில் இதே தமிழ் இனம்தான் கண்முன்னாலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறது வேறொரு தோற்றத்தில்.. வேறொரு அடையாளத்தில்..!
எழுத்தாக்கம்:- சுப.நற்குணன்

ஆதித் தமிழன் வாழ்ந்த இடம் லெமுரியாக் கண்டம்.கடற்கோள் காரணமாக லெமுரியாக் கண்டத்தின் பல பகுதிகள் கடலில் மூழ்கின.அதில் எஞ்சிய பன்னிராயிரம் தீவுகளில் ஒன்றே கச்சை தீவு.இத் தீவு கச்சை வடிவம் கொண்டதனால் கச்சை தீவு என்ற பெயர் வரலாயிற்று.

இத் தீவின் பரப்பளவு 285 ஏக்கர்.இத் தீவானது யாழ்பாணத்திலிருந்து 70 கி.மீ லிலும்,நெடுந் தீவிலிருந்து 28 கி.மீ லிலும்,இராமேஸ்வரத்திலிருந்து 18 கி.மீ லிலும்,தலைமன்னாரிலிருந்து 25 கி.மீ லிலும் அமைந்துள்ளது.இராமேஸ்வரத்திலிருந்து கச்சை தீவுக்கு விசைப்படகு பயணம் 2 மணி நேரமே!

இத் தீவானது, 79° 41’ நெடுங்கோட்டிலும், 9° 14’ அகலக்கோட்டிலும் அமைந்துள்ளது.இத் தீவின் மேற்கே உயர்ந்த பாறைகள் தெரியும்.உட்பகுதியில் வெண்மணல் திட்டுக்களும்,ஆங்காங்கே குழிகளும் காணப்படும்.பசும் புல் தரைகளும் உண்டு.நடுப்பகுதி கல்லுமலை என அழைக்கப்படும்.இது கடல்மட்டத்திலிருந்து 20 அடி உயரத்தில் அமைந்துள்ளது.இதன் அருகே ஆழ்கிணறு ஒன்று உள்ளது.அதன் நீர் குடிப்பதற்க்கு நன்று.

ஆரம்பத்தில் இங்கு “டார்குயின்” என்னும் பச்சை ஆமைகள் இருந்த காரணத்தினால் பச்சை தீவு என அழைக்கப்பட்டது.இது பின்னர் மருவி கச்சை தீவு என அழைக்கப்படலாயிற்று.சித்த மருத்துவத்துக்கு தேவையான அனேக மூலிகைச் செடிகளை இங்கு பெற்றுக்கொள்ளலாம்.இதில் “உமிரி”என்னும் மூலிகை நோய்களுக்கு சிறந்த நிவாரணி.

கச்சை தீவை சுற்றியுள்ள கடலில் சங்கு குளிப்பர்.இதனால் இத் தீவுக்கு சங்கு புட்டித் தீவு,சங்கு புட்டித் தீடை என்ற புனைப் பெயர்களும் உண்டு.இதற்கு கண்ணகி அம்மன் பள்ளுப் பாட்டுகள் சான்றாக உள்ளது.மேலும் கச்சைத் தீவுக் கடலில் விலையுயர்ந்த இறால் வகைகள் கிடைக்கும்.சுருங்கக் கூறின் கச்சை தீவு சூழ் கடல் ஒரு மீன் அரங்கம்.

சோழர் ஆட்சியில் கச்சை தீவு
சோழர் ஆட்சிக் காலத்தில் கீழ் கடலும்,குமரிக் கடலும் சோழர்களுக்கே சொந்தம்.அக் கடற்பரப்பிலிருந்த அனைத்து தீவுகளும் சோழரின் ஆட்சியின் கீழே இருந்தது.சோழ மன்னர்களே முதன் முதல் உலகில் கடற்படை அமைத்தவர்கள்.சோழ குல வேந்தனான இராசராச சோழன் உலகம் வியக்கும் அளவுக்கு கடற்பேரரசை நிறுவி கடற்போரை நிகழ்த்தினான்.பத்தாம் நூற்றாண்டில் உலகக் கடலின் காற்பகுதியில் சோழர்களின் மரக்கலங்கலே மிதந்தது.இவற்றில் பொருத்தப்பட்ட ஒளிப்பெருக்காடி (லென்ஸ்) மூலம் கடலின் நெடுந்தொலைவை கண்டறிந்தனர்.இவ்வாறாக சோழ அரசு தென் கடல் தீவுகளை எல்லாம் கைப்பற்றி ஆட்சி செய்தது.

1480 ஆம் ஆண்டு சோழ மன்னர்கள் யாழ்ப்பாணம் சென்றனர்.இடையில் கச்சை தீவை அடைந்தனர்.அங்கு பாண்டிய மன்னர்கள் தங்கள் நாட்டு விளைபொருட்களான மிளகு,திப்பிலி,இலவங்கம்,சந்தனம்,யானையின் தந்தம்,விலையுயர்ந்த முத்துக்கள்,முதலிய பொருட்களை கச்சை தீவுக்கு ஏற்றுமதி செய்தனர்.

இருநாட்டு மன்னர்களும் கச்ச தீவு கடலில் முத்துக்குளித்தல்,சங்கு குளித்தல்,மீன் பிடித்தல் ஆகிய தொழில்களை நடத்தினர்.இது குறித்து அகநானூறு ,புறநானூறு,கலித்தொகை,சிலப்பதிகாரம் முதலிய சங்க இலக்கியங்களில் பேசப்படுகின்றது.

மேலும் எகிப்திய சுற்றுலாப்பயணியான தாஸ்மோஸ் இண்டிக்கோ யூலுயெஸ்டஸ்,ஆறாம் நூற்றாண்டில் தான் எழுதிய வரலாற்றுக் குறிப்பில் கூறியுள்ளார்.

11 ஆம் நூற்றாண்டில் இராசராச சோழன் பாண்டிய இராச்சியத்தை வென்றதோடு,இலங்கைத் தீவினையும் வென்றான்.அன்று இராமேஸ்வரம் கடற்பாதையை கண்காணிப்பதற்கு சோழ மறவர்களை அமர்த்தினான்.16 ஆம் நூற்றாண்டில் சோழர் ஆட்சி நலிவுற்றது.பாண்டியரது ஆட்சி மறைந்தது.இராசராச சோழனால் அமர்த்தப்பட்ட தளபதிகள் தனி ஆட்சி நிறுவினர்.

img Courtesy:google

ஆதாரம் :
வரலாற்றில் கச்சை தீவு
உணர்ச்சிக் கவிஞர் சிங்காரவேலன்

பகுதி 4
இலங்கை மீது கரிகால்சோழன் நடத்திய படையெடுப்பு முக்கியமானது.
சங்க காலத்தில் புகழ் பெற்று விளங்கிய சோழ மன்னர்களில் தலைசிறந்தவன் கரிகால்சோழன்.
படையெடுப்பு
அவன், இலங்கை மீது படையெடுத்தான். அங்கு ஆண்ட சிங்கள மன்னனை முறியடித்தான். தன் வெற்றிக் கொடியை பறக்கவிட்டான்.
பின்னர் 12,000 சிங்களர்களை சிறைப்படுத்தி தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்தான். அவர்களைப் பயன்படுத்தி, திருச்சிராப்பள்ளி அருகே, காவிரியின் குறுக்கே “கல்லணை”யைக் கட்டினான். உலகத்திலேயே மிகப் பழமையான அணைக்கட்டாக “கல்லணை” விளங்குகிறது.

கஜபாகு

கரிகாலன் படையெடுப்பின்போது, சிங்கள இளவரசன் கஜபாகு சிறுவனாக இருந்தான். (கஜபாகு என்றால், யானையைப் போன்ற கைகளை உடையவன் என்று பொருள்)

அவன் கி.பி. 112-ம் ஆண்டில் இலங்கை அரசனாக முடிசூட்டிக் கொண்டான்.

அவன் ஒருநாள் நகர சோதனைக்குச் சென்றபோது, ஒரு வீட்டில் விதவைப் பெண் ஒருத்தி உரத்த குரலில் அழும் சத்தம் கேட்டது. அந்தப் பெண்ணை கஜபாகு சந்தித்து, “ஏன் அழுகிறாய்?” என்று கேட்டான்.

“பல ஆண்டுகளுக்கு முன், சோழ மன்னன் ஒருவன் இலங்கை மீது படையெடுத்தான். அந்த சோழ மன்னன், சிங்களர் பலரை சிறைப்பிடித்து, தமிழ்நாட்டில் அணை கட்டுவதற்காக அழைத்துச் சென்றான். அப்படி அழைத்துச் செல்லப்பட்டவர்கள் திரும்பி வரவேயில்லை. சோழனுடன் போன என் பிள்ளைகளும் திரும்பவில்லை. அவர்கள் என்ன ஆனார்களோ என்று நினைத்து அழுதேன்” என்றாள், அந்தப் பெண்மணி.

இதைக்கேட்டு கஜபாகு ஆத்திரம் அடைந்தான். கரிகால்சோழனைப் பழிவாங்குவதாக சபதம் செய்தான்.

பெரும் படை திரட்டினான். சோழ நாட்டின் மீது படையெடுத்துச் சென்றான். இதற்கிடையே கரிகால்சோழன் இறந்து விட்டான்.

சோழப் படைகளுடன் கஜபாகு கடும் போர் புரிந்து, சிறைபிடிக்கப்பட்டிருந்த 12 ஆயிரம் சிங்களவர்களை மீட்டான். பழிக்குப்பழி வாங்கும் நோக்கத்தில், ஆயிரக்கணக்கான தமிழர்களை சிறை பிடித்து வந்து, இலங்கையில் குடியேற்றினான்.

இலங்கை மீது கரிகால்சோழன் படையெடுத்துச் சென்றது, வரலாற்றில் இடம் பெற்ற நிகழ்ச்சி. மற்றவை, “பூஜாவலி” என்ற இலங்கை நூலில் காணப்படும் தகவல்கள்.

கண்ணகி

இந்த கஜபாகு, தமிழ்நாட்டுக்கு வந்து, “கண்ணகி விழா”வில் கலந்து கொண்டதாக, சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி, இலங்கையில் கண்ணகிக்கு சிலை எடுத்து வழிபாடு செய்தான் என்றும் வரலாற்று நூல்கள் கூறுகின்றன.

அனுராதபுரத்தை ஆண்ட தமிழ் மன்னன் எல்லாளனை, சிங்கள மன்னன் துட்டகாமினி தோற்கடித்தான் அல்லவா? அதன்பின், அப்பகுதியை தமிழ் மன்னர்களும், சிங்கள மன்னர்களும் மாறி மாறி அரசாண்டதாக வரலாறு கூறுகிறது. ஏழு தமிழ் மன்னர்கள் இவ்வாறு அங்கே ஆட்சி நடத்தியுள்ளனர்.

மணிமேகலை

சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியின் மகள் மணிமேகலை. இவளுடைய வரலாற்றை விவரிக்கும் “மணிமேகலை” காப்பியத்தில், பழங்கால இலங்கை பற்றி குறிப்புகள் வருகின்றன.

மணிமேகலை, காவிரிப்பூம்பட்டினத்தில் உள்ள ஒரு பூங்காவில் மயக்கம் அடைந்து விழுந்தாள். மணிமேகலா தெய்வம், அவளை மணிபல்லவம் தீவுக்கு தூக்கிச்சென்றது.

(இலங்கையின் வடபகுதி அருகே, காரைத்தீவு என்ற தீவு உள்ளது. இந்தத் தீவுதான், பழங்காலத்தில் `மணிபல்லவம்’ என்று அழைக்கப்பட்டதாக கருதப்படுகிறது.)

அந்தத் தீவில் இருந்த பெரிய புத்தர் சிலையை மணிமேகலை வணங்கினாள். அருகில் ஒரு பெரிய பொய்கை இருந்தது. பவுர்ணமி நாளில் இதில் இருந்து `அமுதசுரபி’ என்ற அட்சய பாத்திரம் வெளிப்பட்டது. உணவை எடுக்க எடுக்க, தொடர்ந்து உணவு வந்து கொண்டே இருக்கக்கூடிய அதிசய பாத்திரம் அது.

அமுதசுரபியைக் கொண்டு, ஏராளமானவர்களுக்கு உணவளித்தாள், மணிமேகலை.”

இவ்வாறு மணிமேகலை காப்பியம் கூறுகிறது.

பல்லவர் படையெடுப்பு

இலங்கை மீது, நரசிம்மவர்மர் காலத்தில் நடந்த பல்லவர் படையெடுப்பு பற்றிய விவரங்கள், தமிழக கல்வெட்டுகளில் உள்ளன.
தமிழகத்தில் கி.பி. 630-660-ல் ஆட்சி புரிந்த நரசிம்மவர்மர் காலத்தில், இலங்கையில் இருந்து மானவன்மன் என்ற அரசன் அவரிடம் அடைக்கலம் கோரி வந்தான்.

இலங்கையில், மணிமகுடம் யாருக்கு என்று மானவன்மனுக்கும், அவன் சகோதரன் அட்டதத்தனுக்கும் போட்டி ஏற்பட்டது. இதில் தோல்வி அடைந்த மானவன்மன் இலங்கையில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டான்.

மானவன்மன், நரசிம்மவர்மரிடம் தஞ்சம் அடைந்து, தனக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டான். அந்த சமயத்தில், சாளுக்கிய அரசன் புலிகேசி ஆண்ட வாதாபி மீது நரசிம்மவர்மர் படையெடுத்துச் சென்றார். அவருக்கு மானவன்மன் உதவியாக இருந்தான்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில், மானவன்மனுக்கு உதவியாக ஒரு படையை இலங்கைக்கு நரசிம்மவர்மர் அனுப்பினார். ஆனால் அந்தப் படை முறியடிக்கப்பட்டது. தோல்வியுடன் மீண்டும் தமிழ்நாட்டுக்கு திரும்பி வந்தான், மானவன்மன்.

நடந்ததை அறிந்த நரசிம்மவர்மர், ஒரு பெரும் படையை கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பினார். அந்தப் படையிடம் அட்டதத்தன் படை தோற்றது. மானவன்மன் இலங்கை அரசன் ஆனான்.
நன்றி தினத்தந்தி

மலேசியத் தமிழர் வரலாறு
இன்றைய மலேசியத் தமிழர்களின் முன்னோர்களும் இரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்காக தென்னிந்தியாவிலிருந்து ஒப்பந்தக் கூலிகளாக இங்கு வந்தவர்கள். இரப்பர் தோட்டங்கள் மலேசியத் தமிழரின் தொட்டில்கள் என்று சொல்லலாம்.

1786 தொடங்கி 1938 வரையில் மலாயாவுக்குக் கொண்டுவரப்பட்ட இந்தியர்கள் மிகப்பெரும் தொகையினர் ஆவர். இவர்களுள் 85% பகுதி தமிழர்கள். காடுகளும் மலைகளும் நிறைந்து கிடந்த இந்த நாட்டை வளமாக்குவதற்கு வந்த எந்தமிழர் பெருமக்கள், துன்பங்கள் – துயரங்கள் நிறைந்த இரப்பர் தோட்டத்து வாழ்க்கையை நாட்டுப்புற பாடல்களில் பதிவு செய்துள்ளனர். இந்தப் பாடல்களிலிருந்து எமது முன்னோர்களின் வலிகளையும் வேதனைகளையும் இன்றைய தலைமுறையைச் சேர்ந்தவர்களால் புரிந்துகொள்ள முடியும் என்பதால் இந்தப் பதிவில் அதனைப் பற்றி விரிவாக எழுதுகிறேன்.

மலாயாவில் அப்போது இரப்பர் தோட்டங்களை உருவாக்குவதற்கும் அங்கு மாடாய் உழைப்பதற்கும் தொழிலாளர்கள் தேவைப்பட்டார்கள். அதற்குப் பொருத்தமானவர்கள் தென்னிந்தியத் தமிழர்கள்தான் என்று வெள்ளையர்களுக்குத் தெரிந்தது. உடனே, தென்னிந்தியாவில் ஆட்களைச் சேர்ந்து மலாயாவுக்குக் கொண்டுவந்தனர். எப்படி தெரியுமா?

பகடியான வார்த்தையிலே
பால்மரத்தில் பணம் காய்க்கும்
ஆவடியில் முந்திக்கிட்டா
அதிர்ஷ்டமும் தானேவரும்
இப்படியும் ஜாலாக்கு
எப்படியும் போட்டாங்க
பொய்சொல்லிக் கப்பலேத்திப்
பொழப்பெல்லாம் போச்சுங்க
கருங்கடல் தாண்டிவந்து
கைகட்டி நின்னோமுங்க
கல்பமும் உண்டின்னு
கையேந்தி ஊமையானோம்.

தென்னிந்தியாவிலிருந்து கப்பல் கப்பலாக தமிழ் மக்களை ஏற்றிவந்து, மலாயாவில் தரை இறக்குகிறார்கள் வெள்ளையர்கள். கடலில் வரும்போது நோயாலும் இன்னபிற காரணங்களாலும் பலர் மாண்டு போயுள்ளனர். அதில் பிழைத்து இங்கு வந்து சேர்ந்த எமது முப்பாட்டன் ஒருவன் தாம் பட்ட துயரத்தை இப்படி பதிவு செய்து வைத்துள்ளான்.

காடுமலை மேடுபள்ளம்
கண்டகண்ட இடங்களிலெல்லாம்
மாடுபோல உழைக்கணும்
மலையேறிப் பாடுபட்டு
ஊடுருவிப் போவுதய்யா இதநினைக்க
ஓடிவர்றார் பூட்சுகாலால் உதைக்க
ஊடுருவிப் போவுதய்யா இதநினைக்க
அப்பப்பா பசிக்கொடுமை…

அன்று இரப்பர் தோட்டங்கள் எப்படி இருந்தன என்று எங்கள் நாட்டுக் கவிஞர் வீரமான் இப்படி பாடிவைத்துள்ளார்.

வாய்பிளந்த மலைப்பாம்பு
வளைபெயர்ந்த கருநாகம்
பேய் உலவும் வெளிக்காடு
பீதியன்று முடிந்ததுண்டோ?
புதர் அடர்ந்த மேடுபள்ளம்
புலி உலவக் கூடுபயம்
உதற வைக்கு பனியிருட்டு…

இரப்பர் தோட்டத்தில் தமிழர்கள் பட்ட பாடுகளையும் செய்த வேலைகளையும் கீழே வரும் பாடல் வழியாகத் தெரிந்துகொள்ளலாம். தாயகத்தில் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித்தவித்து போதாதென்று, வாழ்வுதேடி வந்த இடத்தில் எமது மக்கள் பட்ட பாடுகளைப் பாருங்கள்.

*காண்டா வாளி தூக்கணும்
கடுமையான (நா)நூறு மரத்தை
நாங்க வெட்டனும்
உழைபாளியா நாங்க இருந்து
ஓடாத் தேயணும்
உழைக்கும் மக்கள் நாங்க
வறுமையால வாடணும்
இட்ட வேலையை நாங்களே
எடுத்துக் கூறிச் செய்யணும்
செய்யாவிட்டால் பின்முதுகில்
பிடரி பிடித்துத் தள்ளுவார்
ஏனென்று கேட்க நாதியில்லே
எடுத்துரைக்கக் கதியும் இல்லே..

*காண்டா வாளி:- மேலே படத்தில் பெண் தொழிலாளி தோளில் தூக்கிச் செல்லும் கருவி. இரப்பர் பாலை வாளியில் நிரப்பி ‘காண்டாவில்’ மாட்டி தோளில் சுமந்து செல்வர்.

அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் தோட்டத்து மக்களை *‘சாமக்காரன்’ விடுவீடாகச் சென்று மணியடித்து, கூவி எழுப்பி விடுவான். வீட்டில் குழந்தைகளுக்குத் தேவையானதைச் செய்துகொடுத்து, குழந்தைகளைப் பாதுகாக்க *‘ஆயக்கொட்டகை’யில் விட்டுவிட்டு ஆறு மணிக்கெல்லாம் *‘பெரட்டுக்குப்’ போக வேண்டும். அங்கு *‘கங்காணி’யிடம் தங்கள் வருகையை உறுதிப்படுத்திவிட்டு, இன்று எந்தக் *காட்டில் வேலை என தெரிந்துகொண்டு கல்லிலும் முள்ளிலும் காலால் நடந்து வேலைக்காட்டுச் சென்று மாலைவரை மாடாய் உழைத்துவிட்டு வீடு திரும்பும் அந்தப் பால்மரகாட்டுக் கொடுமை சொல்லி மாளாது.

தோட்டத்து நிருவாகிகளாக இருந்த துரைமார்கள் (வெள்ளையர்கள்) எமது மக்களை அடிமாடுகள் போல மதித்து வேலை வாங்கினர். துரைமார்கள் பண்ணிய கொடுமைகள் தாங்காமல் ஊருக்குத் திரும்பும் வழியும் அறியாமல் தவியாய் தவித்த மக்களின் இன்னல்கள் ஏராளம் உள்ளன. துரைமார்கள் ஒருப்பக்கம் என்றால், தோட்டத்தில் வெள்ளிக்காரர்களின் ஏவலாளிகளாய் இருந்து தொழிலாளர்களைக் கவனிக்கும் *‘கங்காணி’கள் பண்ணிய எகத்தாளங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

*சாமக்காரன் – அதிகாலையில் தொழிலாளர்களின் வீடு வீடாகச் அவர்களை எழுப்பும் வேலையாள்.
*ஆயக்கொட்டகை – தொழிலாளர்களின் குழந்தைகளைப் பராமரிக்கும் இடம். அங்கு வேலை செய்யும் பெண்கள் ‘ஆயா’ என்று அழைக்கப்பட்டனர்.
*பெரட்டு – தொழிலாளர்கள் வருகையைப் பதிவுசெய்த்து அவர்களுக்கான வேலைகள் பகிர்ந்தளிக்கப்படும் நிகழ்வு
*கங்காணி – தொழிலாளர்களைக் கவனித்துக்கொள்ளவும் வேலை வாங்கவும் வெள்ளைக்கார துரைகளால் நியமிக்கப்பட்ட பணியளர்கள்
*காடு – இரப்பர் மரங்கள் பயிரப்பட்டுள்ள காடுகள். அவை 1, 2, 35, 48 என்று எண்களால் பெயரிடப்பட்டிருக்கும்.
எழுத்தாக்கம்:- சுப.நற்குணன்

தமிழ்நாடு ஏறத்தாழ 6000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது. இங்கே வாழுகின்ற திராவிட இன மக்களின் தோற்றம் (origin) தொடர்பாகப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர், ஒரு காலத்தில் இந்தியா முழுதும் பரவி வாழ்ந்திருத்த திராவிடர், சிந்து வெளி நாகரீகத்துக்கு உரியவர்களுள் ஒரு பிரிவினராக இருந்தனர் என்று கருதுகிறார்கள். இவ்வினத்தவருடைய தெற்கு நோக்கிய பெயர்வு, ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கையுடன் தொடர்பு படுத்தப் படுகின்றது. இக் கொள்கைப்படி, வடக்கிலிருந்து வந்த ஆரிய ஆக்கிரமிப்பு திராவிடர்களை இன்றைய இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளா ஆகியவை அடங்கிய தென்னிந்தியாவுக்குள் ஒடுக்கியதாகக் கருதப்படுகின்றது. வரலாற்று உண்மைகள் எவ்வாறு இருப்பினும், தற்காலத் தமிழ் மக்களுடைய அடையாளம் மேற்கண்ட கொள்கைகளின் அடிப்படையிலேயே வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது எனலாம்.

இன்றைய தமிழ்நாட்டையும் உள்ளடக்கிப் பரந்திருந்த பண்டைய திராவிட நாடு, பல்வேறு நாடுகளாகப் பிரிந்திருந்தது. இவற்றைக் காலத்துக்குக் காலம் பல அரச வம்சங்கள் ஆண்டுவந்தன. இவற்றுள் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவர்கள், பாண்டியர், சேரர், சோழர், பல்லவர், சாளுக்கியர், விஜய நகரத்தார், நாயக்கர் என்போராவர்.

பாண்டியர்களுடைய காலம் கி.மு ஆறாம் நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்குவதாகச் சொல்லப்படுகின்றது. மதுரை முதற் பாண்டிய மன்னனான குலசேகர பாண்டியனால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. மேலே குறிப்பிடப்பட்ட மதுரை தற்கால மதுரைக்குத் தெற்கே அமைந்திருந்து பிற்காலத்தில் ஏற்பட்ட கடல்கோளினால் முற்றாக அழிந்து போனதாகப் பழந் தமிழ் இலக்கியங்கள் வாயிலாக அறியக்கிடக்கின்றது. பாண்டிய நாடு கல்வியிலும், வணிகத்திலும் சிறந்து விளங்கியது. இவர்கள் அக்காலத்தின் பேரரசுகளாகிய கிரேக்க, ரோமப் பேரரசுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். அவ்வப்போது பல்லவர்களாலும், சோழர்களாலும் அடக்கப் பட்டிருந்தாலும், தமிழ்நாட்டின் பலம் மிக்க அரச வம்சங்களில் ஒன்றாகப் பாண்டியர் விளங்கினர்.

கி.பி 1 முதல் 4 ஆம் நூற்றாண்டு வரை

முற்காலச் சோழர் கி.பி முதலாம் நூற்றாண்டு தொடக்கம் நான்காம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் ஆட்சி செலுத்தினர். இவர்களுள் மிகப் புகழ் பெற்றவனாக கரிகால் சோழன் விளங்கினான். தற்காலத் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் செல்வாக்குச் செலுத்திய இவர்கள், யுத்த நடவடிக்கைகளில் சிறந்து விளங்கினர்..

கி.பி 4 முதல் 9 ஆம் நூற்றாண்டு வரை

கி.பி நான்காம் நூற்றாண்டின் பிற்பாதியில், சிறந்த கோவில்களை அமைத்த பல்லவர்கள் முன்னணிக்கு வந்தனர். இவர்கள் தென்னிந்தியாவில் 400 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தினர். காஞ்சிபுரத்தைத் தலை நகரமாகக் கொண்டு தமிழ் நாட்டின் பெரும்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். ஆறாம் நூற்றாண்டில் பல்லவர்கள் சோழரைத் தோற்கடித்தனர். இவர்கள் செல்வாக்கு இலங்கை வரை பரவியிருந்ததாகக் கருதப்படுகின்றது. முதலாம் மகேந்திரவர்மனும், அவனுடைய மகனான நரசிம்மவர்மனும் பல்லவர்களுள் சிறந்து விளங்கிய அரசர்களாவர். திராவிடக் கட்டிடக்கலை பல்லவர் காலத்திலேயே உருப்பெற்றது. இறுதிப் பல்லவ மன்னன் அபராஜிதன் ஆவான். இவன் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஆதித்த சோழனால் தோற்கடிக்கப்பட்டதுடன் பல்லவராட்சி தமிழ் நாட்டில் முடிவுக்கு வந்தது. இக்காலகட்ட பகுதியில் (கி.பி. 300- கி.பி. 600) பெளத்தம் தமிழகத்தில் மிகவும் செல்வாக்கோடு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கி.பி 9 முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை

கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் சோழர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர். இராஜராஜ சோழன் மற்றும் அவனது மகனான இராஜேந்திர சோழன் ஆகியோரது காலத்தில் சோழர், தென்னிந்தியாவில் ஒரு பலம் மிக்க சக்தியாக உருவெடுத்தனர். இவர்களுடைய பேரரசு, மத்திய இந்தியா, ஒரிஸ்ஸா, மற்றும் வங்காளத்தின் சில பகுதிகள்வரைகூடப் பரவியிருந்தது. இராசராச சோழன் கிழக்கிலிருந்த சாளுக்கிய அரசர்கள் மற்றும் சேர மன்னர்களை வீழ்த்தினான். அத்துடன் பாண்டிய அரசிடமிருந்து இலங்கையின் சில பகுதிகளையும் கைப்பற்றினான். இராசேந்திர சோழன் மேலும் முன்னேறி அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், இலட்சத்தீவுகள், சுமத்ரா, ஜாவா, மலேயா மற்றும் பெகு தீவுகளையும் தன் கப்பற்படையைக் கொண்டு கைப்பற்றினான். அத்துடன் தற்போதைய பீகார் மற்றும் வங்காளப் பகுதிகளை ஆண்டு வந்த மகிபாலனையும் வீழ்த்தினான். தன் வெற்றியைக் கொண்டாடும் வகையில் கங்கை கொண்ட சோழபுரம் எனும் தலைநகரை உருவாக்கினான். பதிமூன்றாம் நூற்றாண்டு வாக்கில் சோழர்களின் ஆதிக்கம் குறைந்தது.

14 ஆம் நூற்றாண்டு

14ஆம் நூற்றாண்டில் சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு பாண்டியர்கள் மீண்டும் எழுச்சி பெற்றனர். ஆயினும் அந்த எழுச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. 1316ல் வடக்கிலிருந்து படையெடுத்து வந்த கில்ஜி ஆட்சியாளர்கள், மதுரையை முற்றுகையிட்டு சூறையாடினர். இஸ்லாமியர்களின் படையெடுப்பு சோழர்களையும் பாண்டியர்களையும் பலவீனப்படுத்தி இஸ்லாமிய “பாமினி” ஆட்சிக்கு வித்திட்டது. இஸ்லாமியப் படையெடுப்புக்கு பதிலடி தரும் வண்ணம் பல்வேறு சிற்றரசுகள் சேர்ந்து விஜயநகர பேரரசைத் தோற்றுவித்தன. இப்பேரரசின் பல்வேறு பகுதிகள் பிரிக்கப்பட்டு அவற்றை மேற்பார்வையிட நாயக்கர்கள் என்னும் ஆட்சியாளர்கள் நியமிக்கப் பட்டனர். ஹம்பியை தலை நகராகக் கொண்டிருந்த விஜய நகரப் பேரரசு செல்வச் செழிப்போடும் அமைதியுடனும் திகழ்ந்தது.

ஆனால், 1564 ஆம் ஆண்டு வாக்கில் நடந்த தலிகோட்டா போரில் தக்காணப் பீடபூமியைச் சேர்ந்த சுல்தான்களால் விஜயநகர ஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டு, அவர்கள் ஆட்சிக்கடங்கிய பகுதிகள் யாவும் நாயக்கர்களிடையே பிரித்தளிக்கப்பட்டது. நாயக்கர் ஆட்சிக் காலத்திலும் தமிழ்நாடு அமைதியுடனும் செழிப்புடனும் விளங்கியது.தஞ்சை மற்றும் மதுரையைச் சேர்ந்த நாயக்கர்கள் புகழ் பெற்று விளங்கியதோடு பழங்கால கோயில்களை புதுப்பிக்கவும் செய்தனர்.

இன்றைய கேரளாவும் மலபாரை ஒட்டிய பகுதிகளும் சேர நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.கடலை ஒட்டியிருந்த சேரர்களின் ஆட்சிப்பகுதி ரோமானியர்களுடனான வாணிபத்திற்கு ஏதுவாக இருந்தது. ஆங்கிலேய படையெடுப்பு நிகழும் வரை சேரர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த சிறிய நிலப்பகுதி பெரும்பாலும் வேறெவருடைய படையெடுப்பிற்கும் ஆளாகாமல் இருந்தது.

17 ஆம் நூற்றாண்டு

1639 இல் ஆங்கிலேயர்கள் மதராஸில் (தற்பொழுது சென்னை என்று அழைக்கப்படுகிறது) கிழக்கிந்தியக் கம்பெனியை நிறுவிய பிறகு தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய பகுதி தொடங்கியது. தமிழ் நாட்டு சிற்றரசர்களிடையே நிலவி வந்த சச்சரவுகளைப் பயன்படுத்தி அவர்களைப் பிரித்தாண்டு , அவர்களின் மேல் தங்கள் அதிகாரத்தை செலுத்தத் தொடங்கினர். தமிழ்நாடும் அதைத் தொடர்ந்து தென்னிந்தியாவும் மெல்ல மெல்ல ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. ஆங்கிலேயர் அதிகாரத்தை தம் வசப்படுத்திய இந்த காலக்கட்டத்தில் அவர்களை எதிர்த்துப் போராடிய தமிழ் ஆட்சியாளர்களும் கணிசமானோர் இருந்தனர். வீர பாண்டிய கட்டபொம்மன், மருது பாண்டியர், பூலித்தேவன் ஆகியோர் அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

20 ஆம் நூற்றாண்டு

1947இல் இந்தியா விடுதலை அடைந்தபோது, மதராஸ் மாகாணம் மதராஸ் மாநிலம் ஆனது. தமிழ்நாடு, கடலோர ஆந்திரப் பகுதிகள், மேற்கு கேரளம், தென் மேற்கு கர்நாடக கடற்கரைப் பகுதிகள் ஆகியவை மதராஸ் மாநிலத்தின் கீழ் வந்தது. 1953இல் மதராஸ் மாநிலத்தின் தெலுங்கு பேசும் மக்கள் உள்ள வட பகுதிகள் ஆந்திர மாநிலமாகவும் தமிழ் பேசும் தென் பகுதிகள் மதராஸ் மாநிலமாகவும் மேலும் பிரிக்கப்பட்டது. 1956இல் மாநில எல்லைகளை மறு வரையறை செய்யும் சட்ட திருத்தத்தின் மூலம் மதராஸ் மாநிலத்தின் மேற்கு கடற்கரை பகுதிகள் கேரளாவிற்கும் கர்னாடகத்திற்கும் இடையே பிரித்தளிக்கப்பட்டது. 1968இல், மதராஸ் மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

நன்றி: தமிழ் விக்கிபீடியா

பகுதி 5
தமிழ்நாட்டின் வரலாற்றில் பொற்காலத்தைப் படைத்தவர்கள் ராஜராஜசோழனும் அவன் மகன் ராஜேந்திரசோழனும் ஆவார்கள். இவர்கள் ஏறத்தாழ இலங்கையை முற்றிலுமாக வென்று, சோழ ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக ஆக்கினார்கள். கி.பி. 982-ம் ஆண்டில், ஐந்தாம் மகிந்தன் என்ற சிங்கள அரசன் இலங்கையை ஆண்டு வந்தான். அவன், சோழர்களுக்கு எதிரிகளான பாண்டியனுக்கும், சேரனுக்கும் உதவி செய்து வந்தான்.

படையெடுப்பு

எனவே, இலங்கை மீது படையெடுக்க சோழமன் னன் ராஜராஜசோழன் முடிவு செய்தார். தன் மகன் ராஜேந்திர சோழன் தலைமையில் ஒருபெரிய கப்பல் படையை அனுப்பி வைத்தார்.

தமிழ்ப் போர் வீரர்களுடன் கப்பல்கள் இலங்கையை சென்றடைந்தன. போர்க் கப்பல்களைப் பார்த்து சிங்களர்கள் மிரண்டனர். சோழர் படையை எதிர்க்க துணிவின்றி, மன்னன் மகிந்தன் இலங்கையின் இன்னொரு பகுதியான ரோகண நாட்டிற்கு தப்பி ஓடி விட்டான். சோழர் படை, இலங்கையின் வடபகுதியை கைப்பற்றிக் கொண்டது. அந்தப் பகுதிக்கு மும்முடிச் சோழ மண்டலம்' என்ற பெயர் சூட்டப்பட்டது. தலைநகரமான அனுராதபுரம் அழிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக பொலனறுவா நகரம் புதிய தலைநகரம் ஆக்கப்பட்டது. அதற்குசனநாதமங்கலம்’ என்ற புதிய பெயர் சூட்டப்பட்டது.

சிங்கள மன்னனின் கருவூலத்தில் இருந்த நகைகள், வைர மாலைகள், அரசஅணிகலன்கள் முதலியவை கைப்பற்றப்பட்டன. உடைக்க முடியாத வாள் ஒன்று சோழர் வசமாகியது. இரண்டாவது படையெடுப்பு ரோகண நாட்டிற்கு தப்பி ஓடிய மகிந்தன், சும்மா இருக்கவில்லை. சோழருக்கு எதிராக பெரும்படை ஒன்றை திரட்டினான். இலங்கையில் சோழர்கள் கைப்பற்றிய பகுதியை மீட்க போர் தொடுத்தான்.

இதுபற்றி சோழ மன்னன் ராஜேந்திரனுக்குத் தெரிந்தது. அவன் கி.பி. 1017-ம் ஆண்டில் மீண்டும் இலங்கை மீது படையெடுத்தான். இரு தரப்புக்கும் இடையே பெரும் போர் நடந்தது. சோழ படைகளின் தாக்குதலை, மகிந்தன் படைகளால் சமாளிக்க முடியவில்லை. போரில் சோழர் படை வென்றது. சிங்களர் படை தோற்றது. மகிந்தனின் மணிமுடியும், அரசியின் மகுடமும் ராஜேந்திர னின் வசம் ஆகியது. அதுமட்டுமின்றி, 100 ஆண்டுகளுக்கு முன்னதாக, சிங்கள அரசனிடம் பாண்டிய மன்னன் பாதுகாப்பாக கொடுத்து வைத்திருந்த மணிமகுடத்தையும் ராஜேந்திர சோழன் கைப்பற்றினான்.

சிறையில் மகிந்தன்

போரில் தோற்றுப்போன மகிந்தன், சோழ வீரர்களால் சிறைப்பிடிக்கப்பட்டு ராஜேந்திர சோழன் முன்பாக நிறுத்தப்பட்டான். ராஜேந்திரசோழன் தமிழ்நாட்டுக்கு திரும்பும்போது, மகிந்தனும் கொண்டு செல்லப்பட்டான். அங்கு சோழநாட்டு சிறையில் அடைக்கப்பட்டான். 12 ஆண்டு காலம் சிறையில் இருந்த மகிந்தன், சிறையிலேயே இறந்து போனான். மேற்கண்ட தகவல்கள், திருவாலங்காட்டு செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ராஜேந்திர சோழன் வெற்றியை குறிக்கும் கல்வெட்டு ஒன்று, கொழும்பு நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் இன்னும் உள்ளது. மகிந்தனை ராஜேந்திரசோழன் முறியடித்தது பற்றி, சிங்களர்களின் வரலாற்று நூலான “சூளவம்ச”த்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகிந்தனின் மகன்

ராஜேந்திர சோழனால் சிறை பிடிக்கப்பட்ட மகிந்தனுக்கு, காசிபன் என்ற மகன் இருந்தான். போர் நடந்தபோது அவனுக்கு வயது 12. அவனை சிங்களர்கள் ரகசியமாக வளர்த்து வந்தனர். சோழ நாட்டு சிறையில் மகிந்தன் இறந்த பிறகு, காசிபனை தங்கள் மன்னனாக சிங்களர்கள் அறிவித்தனர். சோழர்களை எதிர்க்க அவன் பெரும் படை திரட்டினான்.

இதை அறிந்த ராஜேந்திர சோழன், தன் மகன் இராசாதிராஜன் தலைமையில் ஒரு படையை அனுப்பினான். கி.பி.1041-ல் நடைபெற்ற இந்தப் போரில் காசிபன் மாண்டான். சிங்களப்படை தோற்றுப்போய், சிதறி ஓடிற்று. அதன்பின், கீர்த்தி என்ற சிங்கள மன்னன் சோழர்களுடன் போர் புரிந்து தோற்றுப் போனான். அதனால் ஏற்பட்ட அவமானத்தைத் தாங்க முடியாமல் அவன் தற்கொலை செய்து கொண்டான்.

பராக்கிரமபாண்டியன்

பிற்காலத்தில், சோழர்கள் புகழ் மங்கி பாண்டியர்களின் கை ஓங்கியது. அந்தக் காலக்கட்டத்தில், பாண்டியர்களும் இலங்கை மீது படையெடுத்தனர்.

கி.பி. 1255-ம் ஆண்டு பட்டத்திற்கு வந்த ஜடாவர்மன் வீரபாண்டியன், இலங்கை மீது படையெடுத்து வெற்றி கண்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன.

தென்காசியைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி நடத்திய அரிகேசரி பராக்கிரமபாண்டியன் (கி.பி.1422-61) இலங்கை மீது படையெடுத்து சிங்களரை பல முறை வென்றதாக கல் வெட்டு ஆதாரங்கள் உள்ளன.

பிற்காலத்தில், விஜயநகர அரசர்களும் இலங்கையில் போரிட்டு சிங்களரை வெற்றி கொண்டுள்ளனர்.
நன்றி:‍ தினத்தந்தி —

பகுதி 6
இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த வெள்ளையர்கள் எப்படி சூழ்ச்சிகள் செய்து நாட்டைப் பிடித்தார்களோ, அதேபோல் இலங்கைக்கு வியாபாரம் செய்யப்போன ஐரோப்பியர்கள் தந்திரமாக நாட்டைக் கைப்பற்றிக் கொண்டார்கள். இலங்கைக்கு முதன் முதலாக வந்த ஐரோப்பியர்கள் போர்ச்சுக்கீசியர்கள். ஏறக்குறைய இந்தியாவுக்குள் போர்ச்சுக்கீசியர்கள் அடியெடுத்து வைத்த காலக்கட்டத்தில்தான் அவர்கள் இலங்கையையும் கைப்பற்றினர். கி.பி. 1505-ம் ஆண்டின் இறுதியில் போர்ச்சுக்கீசியர்கள் வந்த கப்பல் ஒன்று, புயலில் சிக்கியது. புயலில் திசை மாறி அந்த கப்பல் இலங்கையின் கடலோரப் பகுதியில் ஒதுங்கியது. அந்த கப்பலின் கேப்டன் பெயர் டாம் லூரங்கோ.

உள்நாட்டு குழப்பம்

அப்போது இலங்கையில் கோட்டை, சித்தவாகா, கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய 4 ராஜ்ஜியங்கள் இருந்தன. இந்த 4 ராஜ்ஜியங்களின் ஆட்சியாளர்களிடம் ஒற்றுமை இல்லை. உள்நாட்டுக் குழப்பங்கள் நிலவின.முதலில் வியாபாரம் செய்வதே போர்ச்சுக்கீசியர்களின் நோக்கமாக இருந்தது. பின்னர், இலங்கையின் சூழ்நிலையைப் பார்த்த அவர்கள், “ஆட்சியைப் பிடிக்க இதுவே தக்க தருணம்” என்று தீர்மானித்தனர்.அவர்களிடம் நவீன போர்க் கருவிகள் இருந்தன. அவற்றைப் பயன்படுத்தி, இலங்கையின் மேற்கு கரையோரப் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டனர். பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக மற்ற பகுதிகளிலும் ஊடுருவினர்.

தமிழ் மன்னன்

போர்ச்சுக்கீசியர்கள் இலங்கையில் கோட்டை ராஜ்ஜியத்தைக் கைப்பற்றிக் கொண்டபோது, யாழ்ப்பாண ராஜ்ஜியத்தை ஜெகராஜசேகரன் என்கிற முதலாவது சங்கிலி (1519-1561) என்ற தமிழ் மன்னன் ஆண்டு வந்தான். யாழ்ப்பாண அரசை கைப்பற்ற போர்ச்சுக்கீசியர்கள் பலமுறை முயன்றும் தோற்றுப்போனார்கள்.
முடிவில், “மன்னாரில் வியாபாரம் மட்டும் செய்து கொள்கிறோம்” என்று சங்கிலி மன்னனிடம் அனுமதி பெற்றனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு வியாபாரம் செய்து வந்த போர்ச்சுக்கீசியர்கள், தமிழரிடையே இருந்த சாதிப்பாகுபாட்டை பயன்படுத்திக் கொண்டு, ஒரு பகுதியினரை தங்களோடு சேர்த் துக்கொண்டு, சங்கிலிக்கு எதிராகக் கலகம் செய்தனர்.

சங்கிலி அங்கு தன் படையோடு சென்று கலகத்தை அடக்கினான். கலகத்துக்கு காரணமாக இருந்தவர்களின் தலையைத் துண்டித்தான்.
இதனால் ஆத்திரம் அடைந்த போர்ச்சுக்கீசியர்கள், யாழ்ப்பாண அரசை கைப்பற்ற தக்க தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
முதலாம் சங்கிலிக்குப் பிறகு இரண்டாம் சங்கிலி (1615-1619) ஆட்சிக்கு வந்தான். அப்போது, போர்ச்சுக்கீசியர்கள் உள்நாட்டு கலவரத்தை தூண்டிவிட்டனர். இதற்கு, பிதுறு பொட்டன்கோன் என்ற போர்ச்சுக்கீசிய பாதிரியார் தலைமை தாங்கினார்.

கடும் போர்

உள்நாட்டுக் கலவரத்தை ஒடுக்க இரண்டாவது சங்கிலி மன்னன் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டான். தனக்கு உதவி செய்யுமாறு, தமிழ்நாட்டில் இருந்த ரகுநாத நாயக்க மன்னனுக்கு செய்தி அனுப்பினான். நாயக்க மன்னனும் வர்ணகுலத்தான் என்ற தளபதி தலைமையில் 5,000 வீரர்களை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்தான்.

அதே சமயம், மன்னன் சங்கிலியை முறியடிக்க போர்ச்சுக்கீசியர்கள் படை திரட்டினர். கோட்டையில் இருந்து மன்னாரை நோக்கி நூறு போர்ச்சுக்கீசிய வீரர்களும், சில நூறு சிங்களக் கூலிப்படையினரும் அனுப்பப்பட்டனர்.

அதே நேரத்தில் தரை வழியாகவும் 130 போர்ச்சுக்கீசிய ராணுவ வீரர்களும், 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிங்களக் கூலிப்படையினரும் யாழ்ப்பாணத்தை நோக்கி விரைந்தனர்.இரு தரப்பினருக்கும் இடையே கடும் போர் நடந்தது. சிங்கள கூலிப்படையின் உதவியுடன் யாழ்ப்பாண மன்னன் சங்கிலியை போர்ச்சுக்கீசியர் தோற்கடித்து கைது செய்தனர்.

தூக்கு தண்டனை

இந்தக் காலக்கட்டத்தில், இந்தியாவில் உள்ள கோவா நகரம் போர்ச்சுக்கீசியர் வசம் இருந்தது. அங்கு சங்கிலியை கொண்டு சென்றனர்.
சங்கிலிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவன் தூக்கில் போடப்பட்டான்.ஈழமன்னன் முதன் முறையாக அந்நியர்களான போர்ச்சுக்கீசியர்களிடம் தோற்றதுடன், மரணத்தையும் தழுவ நேர்ந்தது. அதற்கு போர்ச்சுக்கீசியர்களுக்கு உதவியாக இருந்தவர்கள் சிங்களர்கள்.

இலங்கையின் மத்தியப் பகுதி, கிழக்கு கடற்கரைப் பகுதி ஆகியவை தவிர இலங்கையின் மற்ற பகுதிகள் போர்ச்சுக்கீசியர்கள் ஆதிக்கத்தின் கீழ் வந்தன.
ஆட்சிக்கு வந்த பிறகு, அரசு அலுவலகங்களில் உயர் பதவிகளுக்கு போர்ச்சுக்கீசியர்களும், தாழ்ந்த பதவிகளுக்கு தமிழரும், சிங்களர்களும் அமர்த்தப்பட்டனர்.

சிங்களர்களையும், தமிழர்களையும் கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்தவர்களும், `கீழ்ச்சாதி’ என்று கருதப்பட்டவர்களும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறினர்.போர்ச்சுக்கீசியர்கள், இலங்கையின் முன்னேற்றத்துக்காக எதுவும் செய்யவில்லை. மிளகு, லவங்கப்பட்டை, பாக்கு போன்றவற்றையும், யானைகளையும் தங்கள் நாட்டுக்கு கொண்டு போயினர்.”போர்ச்சுக்கீசியர்கள் ஆட்சி காலத்தை இலங்கையின் இருண்ட காலம்” என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

தமிழரசி உயிர்களைக் கொலை செய்யாத கொல்லா அறக்கொள்கை பண்டைத் தமிழர் பண்பாடே!
‘சமணரும் பௌத்தரும் தமிழரிடத்திலேதானே பிறந்திருக்க வேண்டும் என எழுதியிருந்தீர்கள். பாளி மொழியிலுள்ள பௌத்த நூல்கள் இந்தியா முழுவதையும் தமலிகா (தமிழகம்) என்ற சொல்லால் குறிப்பிட்டாலும் மகாவீரரும் புத்தரும் வடஇந்தியர்கள் ஆதலால், எப்படி அவர்களைத் தமிழர்களாகச் சொல்ல முடியும்’ எனக் கேட்டிருந்தார்கள்.

இந்தியா முழுவதும் தமலிகாவாக – அதாவது தமிழர் வாழ்விடமாக இருந்த பொழுது சமணரும் பௌத்தரும் தமிழரின் கலாசாரப் பண்பாட்டின் சூழலில் இருந்தே தோன்றி இருக்க வேண்டும் என்பதே எனது வாதம்.

சமண மதம் பௌத்த மதத்தைவிட காலத்தால் முந்தியது என்பது அறிஞர்கள் கருத்தாகும். ஆதலால், தமிழர் கொள்கையையே சமண மதம் எடுத்துக் கூறியது என்று காட்டினால் சமணரும் பௌத்தரும் தமிழர் இடையே இருந்து தோன்றியவர்கள் என்பதை நீங்கள் நம்பு-வீர்களா?

சமணர்களுக்கும் தமிழர்களுக்கும் பொதுவான சில கதைகளையும் கொள்கைகளையும் பார்ப்போம்:

  1. சாதிப்பிரிவு

இருக்கு வேதம் கி.மு. 1000ல் எழுதப்பட்டது என்கிறார்கள். அதில் பிராமணர் விராட புருஷனுக்கு வாய் ஆவார். அவருடைய இரு தோள்களிலிருந்து அரசரும், தொடைகளில் இருந்து வைசியரும், காலின் அடிப்பாகத்தில் இருந்து சூத்திரரும் தோற்றுவிக்கப் பட்டார்கள் என்று எழுதப்பட்டுள்ளது. அதாவது வேதகாலத்தில் நால்வகைச் சாதிப்பிரிவு வடஇந்தியாவில் இருந்ததை இது காட்டுகிறது.

பண்டைய தமிழரிடையே சாதிப்பிரிவுகள் இருக்கவில்லை. ஆனால், தொழிற்பிரிவுகள் இருந்தன. அதனைச் சாதிப்பிரிவு எனக்கொள்வது நன்றல்ல. இதனை,

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்’
-திருக்குறள் 98:2

எனும் திருவள்ளுவர் வாக்காலும் அறியலாம். தமிழைப் படித்து அறிவதற்கு ஏற்ற வாய் இருந்தும், தமிழ் படிக்க முடியாதபடி தன்னை சமணர் அழித்தார்கள் என்பதை,

‘வாயிருந்தும் தமிழே படித்து ஆளுறாது
ஆயிரம் சமணும் அழிவாக்கினான்’ -பன்னிரு திருமறை 5:58:9

எனப்பாடிய திருநாவுக்கரசர் புலையரிடத்திலும் கடவுளைக் கண்டார். இதே கொள்கையை சமணரின் ‘அருங்கலச்செப்பு’ எனும் சமண நூல்,

‘பறையன் மகனெனினும் காட்சி உடையன்
இறைவன் எனஉணரற் பாற்று’

என்று கூறுகிறது. இந்தக்கூற்று சமண மதம் சாதிப் பிரிவு இல்லாத தமிழரின் பண்பாட்டில் தோன்றியதைத்தானே காட்டுகிறது.

ஆனால், சமண நூலாக பலராலும் சொல்லப்படும் சீவகசிந்தாமணியில் திருத்தக்கதேவர், ‘விலங்குகளை கொன்று உண்பதால், பற்களிடையே கொழுப் பையும் இறைச்சியையும் உடைய வேடரும், கடலோரத்தில் வாழும் பரதவரும் இழிதொழில் செய்யும் இழிகுலத்தவர்’ என்கிறார்.

தமிழரின் சாதிப்பாகுபாடு இல்லாத தன்மையில் இருந்து விலகி, பிற்காலச் சமணர் இவ்வாறு சாதி பேதம் பேசத் தொடங்கி-யதாலும் சமண மதம் தமிழரை விட்டு ஒழிந்து போயிற்று.

  1. உயிர்களை கொலை செய்யாமை

முனிவர் செய்த யாகங்களை அரக்கர் அழித்தார்கள். எனவே, அரக்கர் கொடியவர் என்று நீங்கள் படித்திருப்பீர்கள். முக்கியமாக விசுவாமித்திர முனிவர் செய்த யாகத்தை அழித்த தாடகை என்னும் அரக்கியை பெண் என்றும் பாராது ராமர் கொன்றார் என்று ராமாயணம் மூலம் நீங்கள் அறிந்திருப்பீர்கள். தேவர்களின் மனங்களைக் குளிரவைக்கவே முனிவர்கள் யாகங்களை செய்தார்ளாம்.

தேவர்களின் மனங்கள் குளிர்ந்தனவோ என்னவோ, உண் மையில் ‘யாகம்’ என்ற பெயரில் முனிவர்கள் உயிர்களைக் கொன்றார்கள். யாகத்தில் அதாவது வேள்வித்தீயில் உயிருள்ள குதிரைகளைப் போட்டு எரிப்பதை ‘அசுவமேத யாகம்’ என்றும், யானைகளை உயிருடன் போட்டு எரிப் பதை ‘கஜமேத யாகம்’ என்றும், மனிதரையே போட்டு எரிப் பதை ‘நரமேத யாகம்’ என்றும் அழைத்தனர்.

காட்டுமிராண்டித் தன்மையான அந்த யாகங்களை, அரக்கர்கள் தடுத்தது பிழையா? உயிரோடு துடிக்கத் துடிக்க சுடர்விட்டு எரியும் வேள்வித்தீயில் உயிர்களைப் போட்டு எரித்துக் கொன்றது கொடிய செயலா? அல்லது அத்தகைய யாகங்களைச் செய்யாது தடுத்தது கொடிய செயலா? நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.

உயிரோடு உயிர்களை வேள்வித்தீயில் போட்டு எரித்த வட நாட்டு முனிவர்களின் யாகங்களை அழித்த இந்த அரக்கர் யார்? இதற்குச் சரியான விடை தெரிந்தால் தமிழரின் உண்மையான பண்டைய வரலாற்றை அறிய வழிபிறக்கும். அரக்கர் யார் என்பதை அறிய பழந்தமிழைக் கொஞ்சம் ஆழ்ந்து பார்ப்போமா?

பண்டைத்தமிழர் இயற்கையோடு இணைந்து வாழ்ந்ததால் இயற்கையை நன்றாக ஆராய்ந்து அறிந்திருந்தனர். பூமியைச் சூழ நிலமும் நீரும் இருப்பதைக் கண்டு இவ்வுலகத்தை இருநிலம் என அழைத்தனர். பூமியிலுள்ள நிலத்தின் தன்மையைக்கொண்டு பூமியை அறுவகை நிலங்களாகப் பிரித்துப் பெயர் இட்டனர்.

மலையும் மலை சார்ந்த நிலம் – குறிஞ்சி
காடும் காடு சார்ந்த நிலம் – முல்லை
வயலும் வயல் சார்ந்த நிலம் – மருதம்
கடலும் கடல் சார்ந்த நிலம் – நெய்தல்

இந்த நான்கு வகைப் பாகுபாட்டால் நிலம் நானிலம் என அழைக்கப்பட்டது. அத்துடன் பாலை நிலத்தையும் சேர்த்து நிலத்தை ஐந்திணையாகக் (ஐவகை நிலமாகக்) கொண்டனர்.

‘குறிஞ்சி பாலை முல்லை மருத நெய்தல்
ஐந்திணைக் கெய்திய பெயரே’

  • அகப்பொருள் விளக்கம் – அகத்திணை

தீவு அதாவது கடலால் சூழப்பட்ட நிலம் அளக்கர் திணை என அழைக்கப்பட்டது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐவகை நிலத்தோடு ஆறாவதாகிய அளக்கர் திணையையும் சேர்த்து அறுதிணையாகக் கொண்டனர்.

தமிழரின் இருவகை நிலப்பாகுபாடு: இருநிலம் (நிலம், கடல்)
நால்வகை நிலப்பாகுபாடு: குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்
ஐவகை நிலப்பாகுபாடு:குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
அறுவகை நிலப்பாகுபாடு: குறிஞ்சித்திணை, முல்லைத்திணை, மருதத்திணை, நெய்தற்றிணை, பாலைத்திணை, அளக்கர் திணை (கடலால் சூழப்பட்ட நிலம் – தீவு)

இவ்வாறு உலகை அறுவகையாகப் பிரித்ததால் தமிழர் கடவுளாகிய முருகனை ‘அறுதிணைச் செல்வன்’ என அழைத்திருக்கின்றனர்.

‘அறுதிணைச் செல்வநின் அறுமுகமல்லால் வேறு
உறுதுணை உண்டோ’

  • பாட்டும் தொகையும்

அறுதிணைச் செல்வன் என்பதற்கு உரையாசிரியர் தமிழ்கூறும் நல்உலகத்து இறைவன் என்று எழுதியுள்ளார். அதனால் நான் முருகன் எனக் குறிப்பிட்டுள்ளேன். அறுமுகத்தவன் முருகனே.

தமிழில் அளகம் என்றால் நீர். ‘அளக்கர்’ என்னும் சொல் கடல், தீவு, தீவார், உப்பளம் போன்றவற்றை குறிக்கும். நெய்தல் நிலப்பெண் ‘அளத்தி’ எனவும், நெய்தல் நிலப் பெண்கள் ‘அளத்தியர்’ எனவும் சங்க காலத்தில் அழைக்கப்பட்டனர். சங்கப்புலவர்களில் ஒருவர் ‘மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளானார்’ என அழைக்கப்பட்டமை இங்கு நோக்கத்தக்கதாகும்.

‘அளக்கர்’ என்ற சொல்லில் இருக்கும் தமிழுக்கு உரித்தான ‘ள’கரம் பிறமொழி பேசியவர் வாய்ச்சொல்லில் ‘ர’கர-மாக மாறி ‘அரக்கர்’ ஆயிற்று. அளக்கர், அளக்கர் என்று சொல்லிப் பாருங்கள். அளக்கர் – அரக்கர் ஆக மாறு-வதை அறிவீர்கள்.

‘ள’கரம் – ‘ர’கரமாக மாறிய சொற்கள் ஒரே கருத்தைத் தருவதைப் பாருங்கள்.

இச்சொற்கள் போலவே அளக்கர் என்னும் சொல்லே அரக்கர் ஆக மாறியுள்ளது. எனவே, அளக்கர் என்னும் சொல்லின் கருத்தாகிய தீவு என்னும் கருத்-தையே அரக்கர் என்ற சொல்லும் கொண்டிருந்தது என்பது தெளிவாகிறது.

இது மட்டுமல்ல… அரக்கர் என அழைக்கப்பட்டவர்கள் தீவுகளில் வாழ்ந்தார்கள் என்பதை இதிகாசங்களும் புராணங்களும் எமக்குத் தெளிவாகக் கூறுகின்றன. இதிகாசமான இராமாயணம் இராவணனை அரக்கன் என்பதும், கந்தபுராணம் சூரபத்மனை அசுரன் என்பதும் நீங்கள் அறிந்ததே.

பலராலும் பேசப்பட்ட ‘அளக்கர்’ என்ற சொல் அரக்கர் ஆக மாற்றமடைந்தது. எனினும் இலங்கையின் பெயர்களில் ஒன்றான ‘அளகை’ எனும் சொல் பலராலும் பேசப்படாததால் தன் வடிவம் மாறாது இன்றும் இருக்கிறது.

இராவணன் கைலாய மலையை தூக்கிய போது,

மதில் அளகைக்கு இறை முரல மலரடி ஒன்று
ஊன்றி மறைபாட ஆங்கே
முதிரொளிய சுடர்நெடுவாள் முன்னீந்தான்’

  • பன்னிருதிருமுறை 1:131:8

அதாவது மதிலால் சூழப்பட்ட அளகையின் (இலங்கையின்) அரசன் கதறும்படி காலால் ஊன்றி அவன் சாமகானம் பாட, ஒளிபொருந்திய நீண்ட வாளை சிவன் கொடுத்து அவனுக்கு அருளியதாக திருஞானசம்பந்தர் குறிப்பிட்டு உள்ளார். இத்தேவாரத்தில் இலங்கையின் பெயர் அளகை என இருப்பது இங்கு கவனிக்கவேண்டிய விடயம்.

கந்தபுராணமும் அளகை என்றே குறிப்பதைப் பாருங்கள்.

‘அதுபொழுது அவுணர்கள்
அளகை ஊடுபோய்’
– கந்தபுராணம் , திக்குவி 45

இலங்கையின் தமிழ்ப்பெயர்களின் ஒன்றான ‘அளகை’ என்ற பெயரையும் வரலாற்றுப் பதிவேடுகளில் பதிவுசெய்து வைக்க வேண்டிய கடமை எமக்கு இருக்கிறது. தமிழர் அல்லாத மார்க்கோபோலேவோ, யுவான் சுவாங்கோ குறிப்பிட்டிருந்தால் அதை வரலாறாகப் பார்க்கும் நாம், நம் மூதாதையர் சொல்லிச் சென்றதை ஏன் வரலாறாக ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறோம்? இங்கு நான் இராமாயணத்தை தமிழர் வரலாறு எனச் சொல்லவில்லை. நம் முன்னோர் எமக்காக விட்டுச்சென்ற பழந்தமிழர் சொற்களையே குறிப் பிட்டேன். அளக்கர் எனும் பழந்தமிழ்ச் சொல்லே அரக்கர் என மாறியதால் அரக்கர்கள் & தமிழர்களே! அதிலும் முக்கியமாக நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட தீவுகளில் வாழ்ந்த தமிழர்களே அரக்கர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.

‘நாங்கள் அரக்கர்களா?’ எனக் கேட்க வேண்டாம். நானும் ஒரு தீவின் (அளக்க) தமிழிச்சியே! இதில் கோபப்படவோ வெட்கப்படவோ எதுவுமே இல்லை. அரக்கர்கள் அதாவது அளக்கர்கள் அறிவிலும், அறிவியலிலும் பண்பாட்டிலும் உலகிற்கு முன்னோடிகளாக சிறந்தே விளங்கி இருக்கிறார்கள். வடக்கே இருந்து வந்த முனிவர்கள் செய்த கொலை வேள்விகளை அளக்கர்கள் – அதாவது தமிழர்கள் தடுத்தார்கள். எனவே, உயிர்களைக் கொலை செய்யாத கொல்லா அறக்கொள்கை பண்டைத் தமிழர் பண்பாடே. வட இந்தியர்களிடம் இல்லாத ஆனால், பண்டைத்தமிழரிடம் இருந்து முகிழ்ந்த கொல்லா அறக்கொள்கையையே சமண முனிவர்கள் கைகொண்டனர் எனக் கொள்வதே ஏற்புடையதாகும்.
நன்றி -ஆம்பல் இணையம்

காலஞ்சென்ற பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் எழுதிய தமிழீழம் நூலில் “இலங்கையின் வரலாற்றுப் பின்னணி’ என்ற முதல் அத்தியாயத்தின் ஒரு பகுதியை இங்கே நன்றியுடன் அறியத் தருகிறோம்.
பழந்தமிழ் நாடு, செந்தமிழ்நாடும் கொடுந்தமிழ் நாடும் என இரு பிரிவாகப் பிரித்து பேசப் பெற்றது. அவற்றை மருவிச் சூழ்ந்துள்ள நாடுகள் பதினேழு என்று குறிக்கப் பெற்றுள்ளன. அவற்றைக்
கீழ்வரும் பழம் பாடலால் அறியலாம்.

சிங்களம் சோனகம் சாவகம்
சீனம் துளுக்கடகம்
கொங்கணம் கன்னடம் கொல்லம்
தெலுங்கு கலிங்கவங்கம்
கங்கம் மகதம் கவுடம்
கடாரம் கடுங்குசலம்
தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி
னேழ்புவி தாமிவையே!

ஈழம் என்பது சிங்களத்தின் மாற்று பெயராகும். சிங்களம் என்னும் பெயர், சிங்கவாகுவின் மகன் விசயன், தன் தந்தையின் பெயரடிப்படையாகக் கொண்டு அøத்ததென்பது பொருந்தாது. சிங்கவாகுவின் மகன் இலங்கைக்கு வந்தது இன்றைக்கு ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முன்.

ஆனால் இன்றைக்கு ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு முன் உள்ள பாரதத்தில் சிங்களம் என்னும் பெயர் வந்துள்ளது. இப்பெயர் அங்குப் பேரளவில் விளையும் கறுவாப்பட்டையால் வந்தது என்பதே பொருந்துவதாகும்.

இலக்குமன் இராமச்சந்திர வைத்திய பண்டிதர் என்பார் எழுதிய சமற்கிருத ஆங்கில அகர முதலியில் சிங்களத் துவீபம் என்பதற்குப் பட்டைத் தீவு என்றே பொருள் தரப் பெற்றுள்ளது.
இனி, சிங்களம் என்னுஞ் சொல்லால் இந்நாடு குறிக்கப் பெறுவதை விட, இலங்கை, ஈழம் என்னுஞ் சொற்களால் தமிழ் இலக்கியங்களில் குறிக்கப் பெறுவதே பெருவழக்காக உள்ளது.

“தொல்லிலங்கை கட்டழித்த சிலப். 2,35:3. “பெருமா விலங்கை புறம்: 1786. “இலங்கைக் கிழவோன்’ புறம்: 3766. “தொல்மா விலங்கை’ சிறுபாண் 119. “இலங்கையில் எழுந்த சமரம்’ சிலப். 2538. “ஈழத்துணவு’ பட்டினப்191. “ஈழம்’ முத்தொள். 263.
முதலிய குறிப்புகளால் இதனை உணரலாம். சேர மண்டிலம், சோழ மண்டிலம், பாண்டிய மண்டிலம், தொண்டை மண்டிலம் என்று மண்டிலப் பெயர் கொண்டு வழங்கும் நாடுகளுள் ஈழ மண்டிலம் என்பதும் ஒன்றாகப் பண்டைத் தமிழ் நூல்களில் குறிக்கப் பெறுகிறது.

விசயன் இலங்கைக்கு வந்த கி.மு. 543க்குப் பன்னெடுங் காலத்துக்கு முன்பிருந்தே, அந்நாடு தமிழ் மக்கள் குடி கொண்டிருந்த நாடாக இருந்தது என்பர் பெர்டோலாக்கி (Bertolucci) பென்னட் (Bennet) ஆகிய ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள், அந்நாட்டில் வழங்கும் பல ஊர்களின் பெயர்கள் இன்னும் தூய தமிழ்ப் பெயர்களாகவே விளங்குகின்றன.

எடுத்துக் காட்டாக பாலாவி, மாதோட்டம், மாந்தை, சிலாபம், குசலை, உடைப்பு, ஆணை மடு பள்ளம், கற்பிட்டி, குதிரை மலை, வில்பற்று, முசலி, மன்னார் மூதூர், கந்தளாய், பன்குளம், திறப்பனை, குச்சவெளி, நிலாவெளி, பச்சிலைப் பள்ளி, கரைச்சிக் குடியிருப்பு, முள்ளிய வலை, குமணை, உகந்தை, அம்பாறை, நல்லூர், அரிப்பு, வெருகல் (ஆறு), பருத்தித்துறை, புத்தளம், வதுளை, கண்டி, கதிர்காமம், கொழும்பூ (இதுவே பின்னர் கொழும்பு என்றானது), சிலாத்துறை, சுண்ணாகம், செம்பியன் பற்று, ஆனையிறவு, கிளி நொச்சி, முல்லைத் தீவு, மண்டைத் தீவு, வேலணை, காரைத் தீவு, எழுவைத் தீவு, அனலைத் தீவு, புங்குடு தீவு, (இது பொன் கொடு தீவு என்பதன் மருவாதல் வேண்டும்) நெடுந்தீவு, பாலைத் தீவு,மாங்குளம், அருவியாறு, ஆனைமேடு, களுத்துறை, அலம்பில் வப்புவெளி, செங்கலம், கோட்டை முனை, பொலனறுவை, மட்டகளப்பு, தும்பளஞ்சோலை, அக்கறைபற்று, வெளிமடை, அப்புத்துளை, வெல்லவாய், புத்தளை, கருக்குப்பனை, முந்நூல், அறுகும்குடா, அம்பாந்தோட்டை, தேவுத் துறை, பாணன்துறை, கமம் முதலிய பரவலான எண்ணிறந்த ஊர்கள் தூய தமிழ்ப் பெயர்களே! —
தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும், சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. பி.டு. சீனிவாசய்யர், திரு சேசையர் திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும், நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம், கையாண்ட மொழி தமிழ் திராவிட மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழன், புகழின் உச்சக்கட்டம் எட்டினர். பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக் காட்டினர்

முதலாம் இராசேந்திர சோழன் (கி.பி.1012-1044)
இராசராசன் காலத்தில் இளவரசனாகப் பட்டம் சூட்டப்பெற்றவன் இராசேந்திர சோழன். இராசராசனின் மறைவுக்குப்பின், 1012-இல் அவனது மகனான இராசேந்திரன் சோழநாட்டின் மன்னனானான். ஏற்கனவே தந்தையோடு, போர் நடவடிக்கைகளிலும், நிர்வாகத்திலும் ஈடுபட்டு அனுபவமும் திறனும் பெற்றிருந்த இராசேந்திரன், ஆளுமை கொண்டவனாக விளங்கினான். இவனது ஆட்சியில் தற்போதைய தமிழ்நாடு, ஆந்திர, கேரள மாநிலங்களையும் மைசூர் நாட்டின் ஒரு பகுதியையும் ஈழ நாட்டையும் உள்ளடக்கியதாக இருந்த சோழநாடு மேலும் விரிவடைந்தது.
சேர நாட்டின் மீது படையெடுத்து அதன் அரசனான பாசுகர ரவிவர்மனை அகற்றிவிட்டு, அந்நாட்டை சோழரின் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டுவந்தான். ஈழநாட்டின் மீதும் படையெடுத்து முழு நாட்டையும் கைப்பற்றியதுடன், தப்பி ஓடிய பாண்டியன் இலங்கையில் மறைத்து வைத்திருந்த பாண்டி நாட்டு மணிமுடியையும், செங்கோலையும் மீட்டு வந்தான்.

இராசேந்திர சோழன் காலத்தில் சோழநாடு. கி.பி 1030

வடக்கு எல்லையில், சாளுக்கியர்கள், கலிங்கர்களுடனும், ஒட்ட விசயர்களுடனும் சேர்ந்துகொண்டு சோழரை எதித்தனர். இதனால் சோழர் படைகள் வடநாடு நோக்கிச் சென்றன. சாளுக்கியர், கலிங்கர், ஒட்ட விசயர் ஆகியவர்களையும், பல சிற்றரசர் களையும் வென்று, வங்காள நாட்டையும் சோழர்படை தோற்கடித்தது. சோழர் கைப்பற்றியிருந்த இடங்களில் அடிக்கடி கிளர்ச்சிகள் ஏற்பட்டதாலும், வடக்கு எல்லையில் சாளுக்கியரின் தொல்லைகள் தொடர்ந்து வந்ததாலும், இராசேந்திரனின் ஆட்சிக்காலம் முழுவதும் அமைதியற்ற காலப்பகுதியாகவே கழிந்தது. வடநாட்டை வென்று பெற்ற கஙகை நீரைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்ததன் நினைவாக கங்கை கொண்ட சோழீச்சுரம் என்னும் நகரை ஏற்படுத்தினான். இங்கு பெருவுடையார்க் கோவிலைப் போலவே கட்டப்பட்ட கோவில் சிற்பக்கலையின் பெருமிதத்தை விளக்குகிறது. தனது வெற்றியின் நினைவாக இங்கு ‘சோழ கங்கை’ என்ற பெரிய ஏரியினை வெட்டச் செய்தான் என்று செப்பேடுகள் கூறுகின்றன. இவன் காலத்தில் பாதுகாப்பு நோக்கங்களுக்காக நாட்டின் தலை நகரம், தஞ்சையிலிருந்து கங்கைகொண்ட சோழபுரத்துக்கு மாற்றப்பட்டது. தான் போரில் வென்ற நாடுகளுக்கு அரச குமாரர்களைத் தலைவர்களாக்கி ஆட்சியைத் திறம்படப் புரியும் முறையை முதலில் பின்பற்றியவன் இரசேந்திரனே ஆவான்

ஆ. சிவசுப்பிரமணியன்:>தமிழ்ச் சமூக வரலாறு
சங்க காலம்:தமிழக வரலாற்றின் தொடக்க காலமான சங்ககாலம் இனக்குழு வாழ்க்கையிலிருந்து நிலமானிய முறையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இதனால் இக்காலத்தை மாறுதல் நிகழும் காலம் (TRANSITION PERIOD) என்பர். உணவு தேடி வாழும் இனக்குழு வாழ்க்கை, கால்நடை வளர்ப்பினை மையமாகக் கொண்ட மேய்ச்சல் நில வாழ்க்கை, உணவு உற்பத்தி செய்யும் ஒரு விதமான நிலவுடைமைச் சமுதாய வாழ்க்கை என மூன்று வகையான சமூக அமைப்புகள் வெவ்வேறு நிலப்பகுதிகளில் ஒரே நேரத்தில் நிலவின. இதனடிப்படையில் வெவ்வேறு வகையான பொருளாதார நடவடிக்கைகளும் சமூக அமைப்புகளும் கொண்ட ஓர் அசமத்துவ வளர்ச்சி (UNEVEN DEVELOPMENT)சங்ககாலத்தில் நிலவியது.

நிலப் பாகுபாடு

மலையும் மலை சார்ந்த பகுதியும் குறிஞ்சி, காடும் காடு சார்ந்த பகுதியும் முல்லை, ஆறும் ஆறு பாயும் சமவெளிப் பகுதிகளும் மருதம், கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் என அழைக்கப்பட்டன. குறிஞ்சியும் முல்லையும் கோடையின் வெம்மையால் தம் நிலையிலிருந்து மாறுபட்டு நிற்கும். இது தற்காலிகமான ஒன்று. இந்நிலப்பகுதி பாலை எனப்பட்டது.

மக்களும் பண்பாடும்

குறிஞ்சி நில மக்கள் சிலம்பன், குறவன், வெற்பன், வேட்டுவர், கானவர், குன்றவர் என அழைக்கப்பட்டனர். தொடக்கத்தில் வில், அம்பு, வேல் ஆகியவற்றின் துணையுடன் வேட்டையாடி வாழ்ந்தனர். மூங்கிலரிசி, திணை, மலை நெல், தேன், கிழங்குகள் ஆகியனவும் உணவாகப் பயன்பட்டன. உணவு தேடி வாழும் வாழ்க்கை இங்கு நிலவியது. பின், புன்புல வேளாண்மை உருவாகியது. சேயோனாகிய முருகன் இவர்களுடைய கடவுளாக இருந்தான். பறை, தொண்டகப்பறை, குறிஞ்சியாழ் ஆகியன இங்கு வழங்கிய இசைக் கருவிகள். வள்ளிக்கூத்து குறிஞ்சி நிலத்துக்குரிய ஆட்டக் கலையாகும்.

ஆடுமாடுகளை மேய்க்கும் மேய்ச்ச்சல் நில வாழ்க்கையை மையமாகக் கொண்டது முல்லை நிலம். வரகு, சாமை, கேழ்வரகு, கடலை, அவரை, துவரை ஆகியன மழையை நம்பி மேற்கொண்ட வேளாண்மையில் கிட்டின. மாயோனாகிய திருமால் முல்லை நிலத்தின் கடவுள். ஏறுகோட்பறை, குழல், முல்லையாழ் ஆகியன இந்நிலத்துக்குரிய இசைக் கருவிகள். உணவு தேடும் வாழ்க்கையைக் கடந்து உணவு உற்பத்தி செய்யும் நிலையும் நிரைகளை சொத்துக்களாக கொள்ளும் நிலையும் இங்கு உருவாகின.

மலையிலும் காட்டிலும் அலைந்து திரிந்த நிலையிலிருந்து வளர்ச்சி பெற்று ஆற்றங்கரையில் நிலையாக வாழத் தொடங்கிய இடம் மருத நிலமாகும். இங்கு உழு தொழிலின் மூலம் உணவு உற்பத்தி நிகழ்ந்தது. ஆற்று நீரை நேரடியாகவும் நீர்நிலைகளில் தேக்கி வைத்தும் பயன்படுத்தினர். செந்நெல், வெண்நெல், கரும்பு, மஞ்சள் (பிற்காலத்தில் வாழை) ஆகியன முக்கிய உற்பத்திப் பொருளாயின. கரும்பிலிருந்து வெல்லம் தயாரிக்கும் கரும்பாலைகளும், உபரி நெல்லை மூலதனமாகக் கொண்டு பண்டமாற்று வாணிபத்தை மேற்கொண்ட வாணிப குழுக்களும் உருவாயின. சிற்×ர்கள் பேரூர்களாக வளர்ச்சி பெறத் தொடங்கின. நெல்லரிப் பறையும், மருதயாழும் இந்நிலத்தின் இசைக் கருவிகளாகயிருந்தன. தச்சர், கொல்லர், குயவர் ஆகிய கைவினைர்களின் தோற்றமும் இங்குதான் உருவாகியது.

நெய்தல் நிலப்பகுதியில் மீன்பிடித்தலும், உப்பு உற்பத்தி, உலர்மீன் உற்பத்தி செய்தலும், இவற்றை பிற நிலப்பகுதிகளுக்குக் கொண்டு சென்று பண்டமாற்று செய்தலும் முக்கிய தொழில்கள். இதன் வளர்ச்சி நிலையாகக் கடல் வாணிபம் உருவாகியது. நெய்தல் குடியிருப்புகள் பட்டினம், பாக்கம் என்றழைக்கப்பட்டன. வருணன் (வண்ணன்) இந்நிலத்தின் தெய்வம். நாவாய்பறையும், நெய்தல் யாழும் இசைக் கருவிகள்.

வளமற்ற நிலப்பகுதியான பாலையில் வழிப்பறியும் கொள்ளையும் மக்களின் துணைத் தொழில்களாயின. இங்கு வாழ்ந்த மறவர்களின் குடியிருப்பு, கொல் குறும்பு எனப்பட்டது. கொற்றவை, இந்நிலத்தின் தெய்வம். நிறைகோட்பறை, சூறைகோட்பறை, வாகையாழ் ஆகியன இந்நிலத்தின் இசைக் கருவிகள்.

சங்ககால அரசியல்

சங்ககாலத் தமிழகம் மன்னராட்சியின் கீழ் செயல்பட்டது. ஆட்சி புரிவோர் குறுநில மன்னர்கள். வேந்தர் என இரண்டு வகையாக அழைக்கப்பட்டனர். குறிஞ்சி முல்லை நெய்தல் பாலை ஆகிய நான்கு நிலப் பகுதிகளிலும் வாழ்ந்த குறவர், ஆயர், பரவர், மறவர் ஆகிய மக்கட் பிரிவினர் தத்தமக்கென சுயேச்சையான ஆளுவோரைக் கொண்டிருந்தனர். இவர்களையே குறுநில மன்னர்கள் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடும். குறுநில மன்னர்களுக்கும் அவர்களால் ஆளப்படும் மக்களுக்குமிடையே ஆழமான வேறுபாடுகள் நிலவவில்லை. மருதநில அல்லது நெய்தல் நில நகர் ஒன்றினை மையமாகக் கொண்டு பரந்த நிலப்பகுதியை ஆட்சிபுரிந்தவர்கள் வேந்தர் எனப்பட்டனர். சேரர், சோழர், பாண்டியர் என மூன்று வேந்தர்கள் மட்டுமே பெருநிலப் பகுதியை ஆண்டனர். வாய்ப்பு நேரிடும் போது குறுநில மன்னர்களின் நிலப் பகுதியையும் தங்களுடன் இணைத்துக் கொண்டனர்.

மூவேந்தர்களுக்கு துணை புரிய 1. அமைச்சர், 2. புரோகிதர், 3. சேனாதிபதி, 4. தூதர், 5. ஒற்றர் என்போரைக் கொண்ட ஐம்பெருங் குழுவும், 1. கரணத் தலைவர், 2. கருமகாரர், 3. கனகச்சுற்றம், 4. கடைகாப்பாளர், 5. நகரமாந்தர், 6. படைத் தலைவர், 7. யானை வீரர், 8. இவுளிமறவர் என்போரைக் கொண்ட எண்பேராயம் என்ற அமைப்பும் இருந்தன. ஆயினும் இவ்விரு அமைப்புகளும் மன்னனைக் கட்டுப்படுத்தும் தன்மையன அல்ல. குறுநில மன்னர்கள் ஆண்ட பகுதிகளில் பொதியில் மன்றம் என்ற அமைப்புகள் செயல்பட்டன.

சமயம்

ஆவிகளின் மீது நம்பிக்கை கொண்ட ஆவி உலகக் கோட்பாடும் (Animism)‘குலக்குறி’ (Totem) வழிபாடும் மூத்தோர் வீரர் வழிபாடும் சங்ககாலச் சமயத்தில் செல்வாக்கு செலுத்தின. போரில் இறந்துபட்ட வீரர்களுக்கு நடுகல் நட்டி வழிபடும் நடுகல் வழிபாடு பரவலாக இருந்தது. கடிமரம், காவல்மரம் என்ற பெயரில் குறிப்பிட்ட மரங்கள் புனித மரங்களாகக் கருதப்பட்டன. பாம்பு வழிபாடும் வழக்கிலிருந்தது. திருமால், முருகன், கொற்றவை ஆகியன சங்ககாலத்தில் முக்கிய தெய்வங்களாக விளங்கின. இன்று பரவலாக உள்ள பிள்ளையார் வழிபாடு சங்ககாலத்தில் இல்லை. சிவனைப் பற்றிய குறிப்புகள் சங்க நூல்களில் இடம் பெற்றாலும் மேற்கூறிய தெய்வங்களைப் போல் செல்வாக்கு பெற்றிருக்கவில்லை. வாலியோன் என்ற பெயரில் பலராமர் வழிபாடு இருந்துள்ளது. சமணம், பௌத்தம் ஆகிய வடபுல சமயங்கள் இங்கு பரவின. வடமொழித் தாக்கத்தின் விளைவாக வேள்விகள் நிகழ்ந்தன. சங்ககால கவிஞர்கள் சிலர் இவ்விரு சமயங்களையும் தழுவியிருந்தனர். இவ்வுலக வாழ்க்கையை வெறுத்தொதுக்கும் நிலையாமைக் கோட்பாடு செல்வாக்குப் பெறவில்லை. வாழ்க்கை உவப்புக் கொள்கையே மேலோங்கியிருந்தது.

பொருளியல்

நாட்டில் அடிப்படைத் தொழிலாக வேளாண்மை அமைந்தது. மருதநிலப் பகுதியில் நெல்லும், கரும்பும் பயிர் செய்யப்பட்டன. எள், கொள், துவரை ஆகியன குறிஞ்சி, முல்லை நிலப்பகுதிகளில் பயிர் ஆயின. சாமை, வரகு, திணை ஆகியன முக்கிய புன்செய் நிலப் பயிர்களாகும். தேனெடுத்தல், கிழங்குகளை அகழ்ந்தெடுத்தல், மீன்பிடித்தல், உப்பு விளைவித்தல் ஆகியன ஏனைய பொருளாதார நடவடிக்கைகளாகும். நெசவு, கொல்வேலை, தச்சு வேலை, கருப்பஞ் சாற்றிலிருந்து வெல்லம் எடுத்தல், சங்கறுத்தல், கூடை முடைதல் ஆகியன முக்கிய கைத்தொழில்களாக அமைந்தன. பண்டமாற்று முறையில் வாணிகம் நிகழ்ந்தது. பெரிய நகரங்களில் அங்காடி என்ற பெயரில் சந்தைகள் இருந்தன. பகற்பொழுதில் செயல்படுபவை நாளங்காடி என்றும், இரவு நேரத்தில் செயல்படுபவை அல்லங்காடி என்றும் அழைக்கப்பட்டன. கடைத்தெரு நியமம் என்று அழைக்கப்பட்டது. பொருட்களைக் கொண்டு செல்ல எருதுகள் பூட்டப்பட்ட வண்டிகள் பயன்படடன. வணிகர்கள் சாத்து என்ற பெயரில் குழுக்களாகச் செயல்பட்டனர். மிளகு, அரிசி, இஞ்சி, ஏலம், மஞ்சள், இலவங்கம் ஆகிய உணவுப் பொருட்களும் சந்தனம், அகில் ஆகிய மணப் பொருட்களும் தமிழகத்திலிருந்து அரேபியா, எகிப்து, உரோம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. குரங்கு, மயில், யானைத்தந்தம், முத்து ஆகியனவும் ஏற்றுமதியாயின. கடல் வாணிகத்திற்குப் பாய்கள் கட்டப்பட்ட மரக்கலங்கள் பயன்பட்டன.

இலக்கணம்

தமிழ் மொழி தொன்மையான நூலாக இன்று நம் பார்வைக்குக் கிட்டுவது தொல்காப்பியமாகும். தனக்கு முன்னால் வாழ்ந்த நூலாசிரியர்களின் நூல்களை கற்றுத் தேர்ந்து தொல்காப்பியர் இந்நூலை உருவாக்கியுள்ளார். எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று பிரிவுகளாக இந்நூல் அமைந்துள்ளது. பொதுவாக மொழிகளின் இலக்கணம் என்பது எழுத்து, சொல் யாப்பு சார்ந்ததாக மட்டுமே இருக்கும். ஆனால் தொல்காப்பியம் இவை மூன்றுடன் மட்டுமின்றி மனித வாழ்க்கையின் இலக்கணத்தை உணர்த்தும் வகையில் பொருளதிகாரம் என்ற அதிகாரத்தைப் படைத்துள்ளது.

இலக்கியம்

தமிழ் இலக்கியத்தின் பொற்காலமாக சங்ககாலம் அமைந்தது. இக்காலத்தில் தோன்றிய பெரும்பான்மைப் பாடல்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற பெயரில் பிற்காலத்தில் தொகுப்பு நூல்களாகத் தொகுக்கப்பட்டன. 1. நற்றிணை, 2. குறுந்தொகை, 3. ஐங்குறுநூறு, 4. பதிற்றுப்பத்து, 5. பரிபாடல், 6. கலித்தொகை, 7. அகநானூறு, 8. புறநானூறு என்ற எட்டு நூல்களும் எட்டுத்தொகை என்ற தொகுப்பில் அடங்குகின்றன. இந்நூல்களில் இடம்பெற்றுள்ள பாடல்கள் பல்வேறு கவிஞர்களால் பல்வேறு கால கட்டங்களில் பாடப்பட்டவை.

1. திருமுருகாற்றுப்படை,

2. பொருநராற்றுப்படை,

3. சிறுபாணாற்றுப்படை,

4. பெரும்பாணாற்றுப்படை,

5. முல்லைப்பாட்டு,

6. மதுரைக் காஞ்சி,

7. நெடுநல் வாடை,

8. குறிஞ்சிப் பாட்டு,

9. பட்டினப்பாலை,

10. மலைபடுகடாம்

என்ற பத்து நூல்களும் பத்துப்பாட்டு எனப் பெயர் பெற்றன. இவற்றுள் திருமுருகாற்றுப்படையும், நெடுநல்வாடையும் நக்கீரராலும், எஞ்சிய எட்டு நூல்களும் எட்டு கவிஞர்களாலும் இயற்றப்பட்டன. இவ்விலக்கியங்களின் தனிச்சிறப்பு இவை அகம் புறம் என்ற பொருள் பாகுபாடுகளைக் கொண்டிருப்பதாகும். மனிதர்களின் அகம் (மனம்) சார்ந்த காதல் தொடர்பான செய்திகளைக் கூறுவது அகத்திணை ஆகும். இதற்குப் புறத்தேயுள்ள கல்வி, வீரம், கொடை, நீதி அறமல்லன போன்றவற்றைக் குறிப்பது புறத்திணையாகும். அகநூல்களில் இடம்பெறும் காதலர்களை, இயற்பெயர் சுட்டிக் குறிப்பிடக் கூடாது, என்ற தொல்காப்பியர் விதியை சங்ககாலக் கவிஞர்கள் உறுதியாகக் கடைபிடித்தனர்.

சங்ககாலத்தை அடுத்து வரும் காலம் சங்கம் மருவிய காலம் எனப்படும். இக்காலத்தில் உருவான பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு எனப்படுகின்றன. இவற்றுள் திணைமாலை நூற்றைம்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை ஐம்பது, கார் நாற்பது, கைந்நிலை என்ற ஆறு நூல்களும் சங்ககால அகத்திணைமரபு சார்ந்தவை. எஞ்சிய நூல்களில் திருக்குறள் தவிர்ந்த, நாலடியார், பழமொழி, ஏலாதி, திரிகடுகம், நான்மணிக்கடிகை, ஆசாரக் கோவை, களவழி நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்ச மூலம், முதுமொழிக் காஞ்சி என்ற பதினொறு நூல்களும் புறத்திணை சார்ந்தவை. குறள் அகமும், புறமும் சார்ந்த நூலாகும்.

பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் தலையான இடத்தைப் பெறுவது திருக்குறள். 1330 குறள் வெண்பாக்களைக் கொண்ட இந்நூல் அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது. எச்சமயத்தையும் சாராது வாழ்வியல் நெறிகளைக் கூறுவது இதன் தனிச் சிறப்பாகும். சங்க காலத்தில் வாழ்வியலின் பகுதியாகக் கருதப்பட்ட கள்ளுண்டல், பரத்தையற் பிரிவு, புலால் உண்ணுதல், சூதாடல் ஆகியன வள்ளுவரால் கடிந்தொதுக்கப்படுகின்றன. திருக்குறளுக்கு அடுத்த இடத்தைப் பெறும் நாலடியார் சமண முனிவர்கள் பலர் இயற்றிய பாடல்களின் தொகுப்பாகும். இந்நூல் குறளுக்கு மாறாக உலகியல் வாழ்க்கை மீது வெறுப்பை வெளிப்படுத்தி துறவறத்தை வற்புறுத்துகிறது. இன்னா நாற்பது, இனியவை நாற்பது என்ற இரு நூல்களும் வைதீக சமயச் சார்பானவை. ஒழுக்கங்களின் தொகுதி என்ற பொருளைத் தரும் ஆசாரக் கோவை என்ற நூல் வடமொழி நீதிநூல்கள் சிலவற்றின் சாரமாக அமைகின்றது. பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், ஏலாதி ஆகியன சமணம் சார்ந்து நீதி கூறுகின்றன.

பல்லவர் காலம் (கி.பி. 3 முதல் 9 வரை)

சங்ககாலத்துக்குப் பின் களப்பிரர் என்ற அரச மரபினரின் ஆட்சி நடைபெற்றது. இவர்கள் சமண சமயத்தைச் சார்ந்தவர்கள். இவர்களது காலத்தை இருண்ட காலம் என்று சொல்வது பொதுவான மரபு. ஆனால் திரமிள சங்கம் என்ற பெயரில் சங்கம் ஒன்றை அமைத்து தமிழ் வளர்த்தமையை சதாசிவபண்டாரத்தார் சுட்டிக்காட்டி, தமிழ் மொழிக்கு இது இருண்ட காலமல்ல என்பதைச் சான்றுகளுடன் நிறுவியுள்ளார். களப்பிரர் ஆட்சிக்குப் பின் பல்லவர் ஆட்சி தமிழகத்தில் நிலவியது. கி. பி. 260 தொடங்கி 450 ஆண்டுகள் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு பல்லவர் ஆட்சி நிலை பெற்றிருந்தது.

சமயம்

சைவமும், வைணவமும் எழுச்சி பெற்ற காலம் பல்லவர் காலம் ஆகும். சைவநாயன்மார்களும், வைணவ ஆழ்வார்களும் தோற்றுவித்த சமய இயக்கம் பக்தி இயக்கம். இவ்விரு சமயத்தினரும் சமணத்துடனும், பௌத்தத்துடனும் மாறுபட்டு அவற்றின் செல்வாக்கை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தேவார ஆசிரியர்களான திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் தமிழ் நாடெங்கும் பயணம் செய்து சைவ சமயத்திற்குப் புத்துயிர் ஊட்டினர். இவர்களால் பாடப்பெற்ற சைவக் கோயில்கள் பாடல் பெற்ற தலங்கள் எனப் பெயர் பெற்றன. இவர்களைப் போன்றே ஆழ்வார்களும் வைணவக் கோயில்களுக்குச் சென்று பக்திப் பாசுரங்கள் பாடினர். இவர்களால் பாடப்பெற்ற வைணவக் கோயில்கள் மங்களா சாசனம் செய்த திருப்பதிகள் எனப்பட்டன.

பௌத்த சமணத் துறவிகள் வாழும் சமய மடங்களில் சமய நூல்கள் கற்றுக் கொடுக்கப்பட்டன. காஞ்சிபுரம் பௌத்த மடத்தில் பயின்ற போதிதருமர், போதிருசி என்ற இரு துறவிகளும் சீனா, ஜப்பான் நாடுகளுக்குச் சென்று சென் புத்தமதப் பிரிவை பரப்பினர். பீகாரில் இருந்த உலகப் புகழ் பெற்ற நாலந்தா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகவும், துணை வேந்தராகவும் இருந்த தருமபாலர் காஞ்சியில் பிறந்து பயின்றவர்தாம். வெளிநாட்டுப் புத்ததுறவிகள் இங்கு வந்து சமய நூல்களைக் கற்றுச் சென்றனர்.

பல்லவர் அரசு

சங்ககாலத்தைப் போன்றே பல்லவர் காலத்திலும் ஆட்சிமுறை பிறப்பு வழி உரிமையாய் இருந்து வந்தது. மன்னருக்குத் துணைபுரிய அமைச்சர்கள் இருந்தனர். ஆட்சிப் பகுதியானது கோட்டம், நாடு, ஊர் என்று மூன்று பிரிவுகளாக பகுக்கப்பட்டது. நாட்டின் நிர்வாகத்தைக் கவனித்து வந்தவர் நாட்டார் என்றும், ஊரின் ஆட்சிக்குப் பொறுப்பான வேளாளர்கள் ஊரார் என்றும் அழைக்கப்பட்டனர். இவை தவிர பிரம்மதேயம் என்ற பெயரில் பிராமணருக்கு தானமாக வழங்கப்பட்ட ஊர்களைப் பிராமணர்களே நிர்வகித்து வந்தனர். இம்மூன்று வகையான நிர்வாகிகளும் கோவில் மான்யங்கள், நீர்ப்பாசனம், நீதி விசாரணை, நிலவுரிமை போன்றவற்றை கவனித்து வந்தனர். இதன் பொருட்டு வாரியங்கள் பல உருவாக்கப்பட்டன. இவ்வாரியங்கள் அதற்கென்று விதிக்கப்பட்ட பணியினைச் செய்து வந்தன. சான்றாக வேளாண்மைக்கு ஆதரவான ஏரிகளைப் பராமரிக்கும் வாரியம் ஏரி வாரியம் என்றும் தோட்டங்களைப் பராமரிக்கும் வாரியம் தோட்ட வாரியம் என்று அழைக்கப்பட்டதைக் குறிப்பிடலாம்.

கலை

பல்லவர் காலத்தில் கட்டிடக் கலையும் சிற்பக் கலையும் வளர்ச்சியடைந்தது. கருங்கற்களினால் கட்டிடங்களை கட்டும் பணி பல்லவர் காலத்தில்தான் உருவாகியது. குகைகளை உருவாக்கி அமைக்கப்பட்ட குடைவரைக் கோவில்கள் பல்லவர் காலத்தில் செல்வாக்கு பெற்றன (பல்லவர்களுக்கு முன்னர் பாண்டியர்கள் குடைவரைக் கோவில்களை உருவாக்கி உள்ளனர் என்பது தொல்லியல் வல்லுநர் நாகசாமியின் கருத்து). கல்லிலே கலை வண்ணம் கண்ட பல்லவர் கால சிற்பக்கலைக்கு காஞ்சியிலும், மாமல்லபுரத்திலும் உள்ள கோவில் சிற்பங்கள் சான்று பகர்கின்றன. இவை தவிர இசையும், நடனமும் பல்லவர் காலத்தில் தழைத்தமைக்கு, குடுமியான்மலை, திருமெய்யம் ஊர்களில் காணப்படும் கல்வெட்டுக்களும் சித்தன்ன வாசலில் தீட்டப் பெற்றுள்ள நடன மங்கையரின் ஓவியங்களும் சான்று.

பல்லவர் காலத்தில் வடமொழி செழித்து வளர்ந்தது. பல்லவர்கள் வடமொழி ஆர்வலர்களாக இருந்தமையே இதற்குக் காரணமாகும். பல்லவ மன்னர்கள் அவையில் நடிப்பதற்காக பாஷகவி என்பவர் வடமொழி நாடகங்கள் சிலவற்றை எழுதியுள்ளார். பௌத்த துறவிகளைப் பகடி செய்யும் வகையில் மத்த விலாச பிரகசனம் என்ற எள்ளல் நாடகத்தை மகேந்திர வர்மன் வடமொழியில் எழுதியுள்ளான். அணி இலக்கண அறிஞரான தண்டி என்னும் கவிஞர் எழுதிய காவிய தரிஸனம் என்ற வடமொழி அணி இலக்கண நூல் தண்டியலங்காரம் என்ற பெயரில் தமிழில் வெளியாயிற்று. பாரதக் கதையைக் கூறும் பாரத வெண்பாவும் நந்திக் கலம்பகம் என்ற சிற்றிலக்கியமும், பெருங்கதை என்ற காப்பியமும் பல்லவர் காலத்தில் உருவான குறிப்பிடத்தக்க தமிழ் இலக்கியங்கள் ஆகும்.

சோழர் காலம் (கி.பி. 10 – கி.பி. 13)

பல்லவர் காலத்துக்குப் பின் தமிழ்நாட்டில் உருவான ஒரு வலிமையான அரசு சோழப் பேரரசு கும். சோழர் ஆட்சியிலும் மன்னனே ஆட்சி மையமாக அமைந்தான். சோழநாடு மண்டலங்கள் என்ற பெரும் பிரிவுகளைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு மண்டலத்துள்ளும் வளநாடுகள் பல இருந்தன. பல கிராமங்களின் தொகுப்பாக கூற்றம் என்ற அமைப்பு இருந்தது. இதை கோட்டம் அல்லது நாடு என்றும் குறிப்பிட்டனர். பல கூற்றங்களை உள்ளடக்கியதாக வளநாடு அமைந்தது. சுப்பாராயலுவின் கருத்துப்படி 10 முதல் 300 சதுரம் வரை பரப்பைக் கொண்ட நிருவாகப் பிரிவாக நாடு இருந்தது. நாடுகளின் பொருப்பாளர்களாக நாட்டார், நாடுகண்காணி என்போர் இருந்தனர். வேளாண்மை காவல் வரிவசூல் ஆகிய பணிகளை இவர்கள் மேற்கொண்டனர். மன்னனுக்கு உதவி புரிய இருக்கும் அரசு அலுவலர்கள் உடன் கூட்டம் என்று அழைக்கப்பட்டனர். வாய்மொழியாக மன்னன் பிறப்பிக்கும் ஆணைகளைக் கேட்டு அவற்றை எழுத்தில் பதிவு செய்து உரியவர்களிடத்தில் அனுப்பி வைக்கும் பணியைச் செய்பவன் திருவாய்க்கேள்வி திருமந்திர ஓலை எனப்பட்டான்.

கலை இலக்கியம்

சோழர் காலத்தில் கட்டிடக் கலையும் சிற்பக்கலையும் செழித்து வளர்ந்தன. தன் நிழலைத் தனக்குள்ளே தருக்குடனே தாங்கி நிற்கும் தஞ்சைப் பெருங்கோயில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம், தராசுரம் ஆகிய ஊர்களிலுள்ள கோவில்களும் அங்குள்ள சிற்பங்களும் சோழர்காலக் கட்டிடக் கலைக்குச் சான்றுகளாய் உள்ளன.

சோழர் கால இலக்கியங்களில் சைவ சமயச் சார்புடைய இலக்கியங்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உருவாயின. உமாபதி சிவாச்சாரியார் என்பவர் எட்டு சைவ சித்தாந்த நூல்களை இயற்றியுள்ளார். சைவ சமயத்தின் 63 நாயன்மார்களின் வரலாற்றைக் கூறும் திருத்தொண்டர் புராணம் சேக்கிழாரால் இயற்றப்பட்டது. சிவபெருமான் மதுரையில் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களைக் கூறும் திருவிளையாடற் புராணம் என்ற நூலைப் பெரும்பற்றப் புலியூர் நம்பி என்பவர் எழுதியுள்ளார்.

ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு தமிழும் வடமொழியும் கலந்த மணிப்பிரவால நடையில் ஈடு எனப்படும் விரிவுரை இக்காலத்தில் உருவாகியது.

சமண சமயத்தைச் சார்ந்த திருத்தக்கத்தேவர் எழுதிய சீவகசிந்தாமணி, கொங்குவேளிர் எழுதிய பெருங்கதை ஆகிய காவியங்களும் வளையாபதி, நீலகேசி என்ற சமணக் காப்பியங்களும் குண்டலகேசி என்ற பௌத்த காப்பியமும் தோன்றின. திவாகரம், பிங்கலந்தை என்ற நிகண்டுகளும், நன்னூல், யாப்பருங்கலக்காரிகை, புறப்பொருள் வெண்பா மாலை, வீரசோழியம், வெண்பாப் பாட்டியல் ஆகிய இலக்கண நூல்களும் உருவாயின.

செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணி ஒட்டக்கூத்தரின் மூவருலா, கம்பரின் இராமாயணம், புகழேந்தியின் நளவெண்பா ஆகியன சோழர் காலத்தில் தோன்றிய பிற இலக்கியங்கள் ஆகும். இளம்பூரணர், சேணாவரையர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், தெய்வச் சிலையார் ஆகியோர் தொல்காப்பியத்திற்கு உரை எழுதினர். சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லாரும், பரிபாடலுக்கும், திருக்குறளுக்கும் உரை எழுதிய பரிமேலழகரும் சோழர் காலத்தவரேயாவர்.

சோழர் காலத்தில் வடமொழிப் பயிற்சியளிக்கும் கல்வி நிறுவனங்கள் (கடிகா) பல நிறுவப்பட்டன. நூல்களைச் சேகரித்து வைக்கும் நூலகம் போன்ற அமைப்பு சோழர் காலத்தில் இருந்தது. இதை சரஸ்வதி பண்டாரம் என்றழைத்தனர்.

கிராமசபை

சோழர் ஆட்சியின் சிறப்பியல்பாக கிராம சுய ஆட்சி முறை நிலவியது. பிராமணர்களுக்கு உரிய நிலங்களுக்கு வரி வாங்கப்படவில்லை. இவை இறையிலி எனப்பட்டன. இறையிலி நிலங்களைக் கொண்ட பிராமணர் குடியிருப்புக்கள் கிராமங்கள் எனப்பட்டன. குடும்பு என்ற சிறு பிரிவுகளாக கிராமம் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு குடும்புக்கும் ஓர் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டார். குடும்புக்குரிய வேட்பாளர்களின் பெயர்களைப் பனை ஓலைத் துண்டில் தனித்தனியாக எழுதி அவ்வக் குடும்புக்குரிய குடத்தில் இடுவர். பின்னர் குடத்தை நன்றாக குலுக்கி அறியாச் சிறுவன் ஒருவனைக் கொண்டு ஓலைத்துண்டு ஒன்றை எடுக்கும்படி செய்வர். அவனால் எடுக்கப்படும் ஓலையில் காணப்படும் பெயருக்குரியவர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். குடும்பில் உறுப்பினராவதற்கு தகுதிகள் வரையறுக்கப்பட்டிருந்தன. சொந்த மனையில் வீடு கட்டியிருத்தல், குறைந்தது கால்வேலி நிலமுடையவராய் இருத்தல், 35 வயதிற்குக் குறையாதிருத்தல், 70 வயதிற்கு மேற்படாதிருத்தல், நான்கு வேதத்தில் ஒரு வேதத்தையோ, ஒரு பாஷியத்தையோ ஓதும் ஆற்றல் பெற்றிருத்தல் என உத்திரமேரூர் சாசனம் குறிப்பிடுகிறது. அடித்தள மக்கள் கிராம சபைகளில் நுழைய விடாமல் தடுப்பதில் இத்தகுதிகள் முக்கியப் பங்காற்றின. மேலும் ஒரு குழுவிலோ, வாரியத்திலோ உறுப்பினராக இருந்து பணியாற்றிய போது ஒழுங்காகக் கணக்கு காட்டத் தவறியவர்கள், அவருடைய உறவினர்கள், ஒழுக்கமற்றவர்கள், வேட்பாளராகத் தகுதியற்றவர்கள் என்றும் இச்சாசனம் தெரிவிக்கின்றது.

இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்டு வாரியங்கள் அமைக்கப்படும். ஏரி வாரியம், தோட்ட வாரியம், பஞ்சவார வாரியம், பொன் வாரியம், கலிங்கு வாரியம் கழனி வாரியம் ஆகியன முக்கிய வாரியங்களாகும். இவ்வாரியங்களின் உறுப்பினர்கள் வாரியப் பெருமக்கள் என்றழைக்கப்பட்டனர். ஒவ்வொரு வாரியங்களும் தமக்குரிய பணிகளைச் செய்து வந்தன.

பிராமணர் அல்லாதோர் வாழ்ந்த குடியிருப்புக்கள் ஊர்கள் எனப்பட்டன. இவற்றை ஊரவை நிறுவகித்தது. அவையின் நிர்வாகக்குழு, ஆளும் கணம் என்றழைக்கப்பட்டது. வணிகர்கள் மிகுதியாக வாழ்ந்த நகரங்களின் சபை நகரத்தோம் எனப்பட்டன.

சமூகம்

சோழர் காலச் சமுதாயத்தில் சாதி வேறுபாடுகள் ஆழமாக இருந்தன. பிராமணர்கள் ஏற்றம் பெற்றிருந்த சாதியினராக விளங்கினர். அகரங்கள், அக்கிரகாரங்கள், சதிர்வேதி மங்கலங்கள் என்ற பெயர்களில் பிராமணர்களுக்குத் தனிக்கிராமங்கள் உருவாக்கப்பட்டன. கோவில்கள், மடங்கள் ஆகியன இவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தன. இலவச உணவும் உறையுளும் நல்கி வேதக்கல்வி புகட்டும் வேதபாட சாலைகளும் இவர்களுக்கென்றே மன்னர்களால் நிறுவப்பட்டன.

பிராமணர்களுக்கு அடுத்த நிலையில் நிலக்கிழார்களாக விளங்கிய வேளாளர்கள் இருந்தனர். கோவில் நிலங்களின் மீது பிராமணர்களுடன் இணைந்து இவர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இவ்விரு சமூகத்தினரையும் தவிர பல்வேறு கைவினைத் தொழில் செய்து வந்தவர்களும், உழுகுடிகளான, பள்ளர், பறையர் ஆகியோரும் தனித்தனி சாதிகளாக அழைத்திருந்தனர். சோழர் காலச் சாதிகள் வலங்கையர், இடங்கையர் என்ற இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. இவ்விரு பிரிவுகளின் உருவாக்கம் குறித்து வினோதமான புராணக் கதைகள் உருவாகியுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 98 குலங்கள் இடம் பெற்றிருந்தன. வலங்கையர் இடங்கையரிடையே சில நேரங்களில் பூசல்களும் மோதல்களும் நிகழ்ந்தன. பெரும்பாலும் இடங்கையினர் துன்புறுத்தலுக்கு ஆளாகி வந்தனர். சில நேரங்களில் வலங்கையினர் இடங்கையினர் ஆகிய இரு வகுப்பினரும் வேறுபாடுகளைத் துறந்துவிட்டு பிராமணர்களையும், வேளாளர்களையும் எதிர்த்துப் போராடியுள்ளனர். பெரும்பாலும் இப்போராட்டம் வரி எதிர்ப்பை மையமாகக் கொண்டேயிருந்தது.

தீண்டாமை சோழர் காலத்தில் வேர்விட்டு வளர்ந்திருந்தது. பறையர்களுக்கென்று தனிக்குடியிருப்புகள் இருந்தன. தீண்டாச்சேரி என்று இக்குடியிருப்புகள் அழைக்கப்பட்டன. ஆயினும் இவர்களில் சிலர் சொத்துரிமை உடையவர்களாகவும் இருந்தனர்.

ஆடலிலும், பாடலிலும் வல்ல பெண்டிரை விலைக்கு வாங்கியும், வன்முறையில் கைப்பற்றிக் கொண்டும் கோவில் பணிகளில் ஈடுபடுத்தினர். கோவிலைப் பெருக்கி மெழுகுதல், மாலை தொடுத்தல் தேவாரம் ஓதுதல், நடனமாடுதல், நாடகங்களில் நடித்தல் ஆகியன இவர்களின் முக்கியப் பணிகளாக அமைந்தன. தலைக்கோலிகள், தளிச்சேரிப் பெண்டுகள், பதியிலார், தேவரடியார் என்று இவர்களுக்குப் பெயர்கள் வழங்கின.

அடிமைமுறை சோழர் காலத்தில் நிலை பெற்றிருந்தது. மன்னர்களும், வளம் படைத்தவர்களும் ஆண்களையும், பெண்களையும் விலைக்கு வாங்கிக் கோவில்களுக்கும், மடங்களுக்கும் தானமாக வழங்கினர். அடிமை விற்பனை, ஓலையில் பத்திரம் போல் பதிவு செய்யப்பட்டது. இது ஆளோலை, ஆள்விலைப் பிரமாண இசைவுத் தீட்டு, அடிமை விற்பனைப் பத்திரம் எனப் பெயர் பெற்றது. வறுமையின் காரணமாகத் தம் குடும்ப உறுப்பினர்களை விற்பதும் தம்மைத்தாமே விற்றுக் கொள்வதும் நிகழ்ந்துள்ளன. ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த அடிமை தீண்டா அடிமை என்றழைக்கப்பட்டார். இவ்வாறு அடிமைகளானவர் மீது மாடுகளுக்கு இடுவது போல் இலச்சினை பொறிக்கப்பட்டது. அரண்மனை அடிமைகளுக்குப் புலிச்சின்னமும், சிவன் கோவில் அடிமைகளுக்குத் திரிசூலச் சின்னமும், வைணவ கோவில் அடிமைகளுக்குச் சங்குச் சின்னமும், இலட்சினையாக இடப்பட்டன. நெற்குற்றுதல், வேளாண் பணிகள், கோவிற் பணிகள் ஆகியன அடிமைகளின் முக்கிய பணிகளாகும். தங்களை மட்டுமின்றி தங்கள் பரம்பரையினரையும் அடிமைகளாக விற்றுக் கொண்டதை இவர்களையும் இவர்கள் வர்க்கத்தாரையும் பரம்பரை பரம்பரையாக, வழியடிமை, யானும் எம் வம்சத்தாரும் என்று கல்வெட்டுக்களில் காணப்படும் தொடர்கள் உணர்த்துகின்றன.

சமயம்

சோழர் காலத்தில் அரசு சமயமாக சைவம் விளங்கியது. சிவனுக்கு முக்கியத்துவம் இருந்தது. பல்லவர் காலத்தில் வளரத் தொடங்கிய சைவம் சோழர் காலத்தில் வளர்ச்சியின் உச்சத்தை எட்டியது. சைவ சமயத்தின் தத்துவமாக சைவ சித்தாந்தம் உருப்பெற்று செல்வாக்குற்றது. பதி (இறைவன்), பசு (உயிர்), பாசம் (இருள் + தளை) என்ற மூன்றும் சைவசித்தாந்தத்தின் அடிப்படைத் தத்துவமாகும். இதன்படி உலக உயிர்கள் ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்றையும் உள்ளடக்கிய பாசத்தை நீக்கி பதியாகிய இறைவனை அடைய வேண்டும். சைவசமய இலக்கியங்களாகப் பன்னிரு திருமுறைகள் அமைகின்றன. மறைந்து கிடந்த தேவாரப் பாடல்கள் ஏழு திருமுறைகளாக வகுக்கப்பட்டு கோவில்களில் ஓதப்பட்டன. இதைக் கண்காணிக்க தேவார நாயகம் என்ற அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தார். கோவில்களில் நாள்தோறும் விளக்கேற்றவும், தேவாரம் பாடவும், திருவிழாக்கள் நிகழ்த்தவும் மன்னர்களும் பொதுமக்களும் மானியம் வழங்கினர். சைவ வைணவ கோவில்களுக்கு வழங்கப்பட்ட நிலமானியங்கள் தேவதானம் எனப் பெயர் பெற்றன.

தமிழ் வைணவர்களின் புனித நூலான நாலாயிர திவ்ய பிரபந்தம் என்ற தொகுப்பு சோழர் காலத்தில்தான் உருப்பெற்றது.

பாண்டியர் காலம் (கி. பி. 13ம் நூற்றாண்டு)

சோழப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் உருவான பாண்டியப் பேரரசு சோழப் பேரரசைப் போன்றே மண்டலம், நாடு, கூற்றம் ஆகிய ஆட்சிப் பிரிவுகளைக் கொண்டிருந்தது. பல்லவர் காலத்தைப் போன்றே சோழர் காலமும் வேளாண்மையை மையமாகக் கொண்ட பெருமளவிலான கிராமங்களை அடிப்படை அலகாகக் கொண்டிருந்தது. வேளாண்மை முக்கியத் தொழிலாக இருந்தது. நெசவு, எண்ணெய் எடுத்தல், வெல்லம் தயாரித்தல், உப்பு விளைவித்தல் கிய தொழில்கள் நிகழ்ந்தன. பாண்டியர் ஆட்சியில் சிறப்புமிக்க தொழிலாக முத்து குளித்தல் விளங்கியது. உரோம் நாட்டிற்கு இம்முத்துக்கள் ஏற்றுமதியாகி தங்கத்தைக் கொண்டு வந்தன. மார்கோபோலோ என்ற இத்தாலி நாட்டு சுற்றுப் பயணி மாரவர்மன் குலசேகரன் என்ற பாண்டிய மன்னன் 1200 கோடி பொன்னைச் சேமித்து வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கொலைத் தண்டனை பெற்ற கைதிகள் முத்து குளித்தலில் ஈடுபடுத்தப்பட்டனர். வாணிபத்தின் பொருட்டு இங்கு வந்த அரேபியர்கள் இங்கே தங்கள் சமயத்தை பரப்பினர். பாண்டிய மன்னனின் அரசவையில் இஸ்லாமியர் சமயத்தைச் சார்ந்த அமைச்சர் ஒருவர் இடம் பெற்றிருந்தார். பாண்டியர்களின் கொற்கை துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி பெருமளவில் நிகழ்ந்தது. மணிக்கிராமம், அஞ்சு வண்ணத்தார் என்ற வணிகச் சங்கங்களும் நானாதேசிகன் என்ற பெயரில் அயல்நாட்டு வாணிபம் மேற்கொண்ட குழுவும் இருந்தன. அரேபிய நாட்டிலிருந்து குதிரைகள் இறக்குமதி பெருமளவில் நிகழ்ந்தது. இது குறித்து வசப் என்ற அரேபியர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

“அந்தக் குதிரைகள் வந்து இறங்கியதும், அவற்றிற்குப் பச்சை வாற்கோதுமையைத் தருவதற்கு மாறாக, வறுத்த வாற்கோதுமையையும் வெண்ணெய் சேர்த்துச் சமைத்த தானியத்தையும் தீனியாகப் போட்டுக் காய்ச்சிய ஆவின் பாலைக் குடிப்பதற்குக் கொடுக்கிறார்கள். இது மிகவும் விசித்திரமான செயல். லாயத்தில் முளைகளை அடித்து, குதிரைகளை அவற்றோடு கயிற்றால் பிணைத்து, அங்கேயே அவற்றை 40 நாள் விட்டு விடுகிறார்கள். அதனால் குதிரைகள் கொழுத்துப் பருத்துப் போகின்றன. பின்னர், அவற்றிற்குப் பயிற்சியளிக்காமலும் அங்கவடி முதலிய குதிரைச் சாமான்களைப் பூட்டாமலும், அவற்றின் மீது ஏறியுட்கார்ந்து இந்திய வீரர்கள் அவற்றைப் பிசாசைப் போல் ஓட்டுகிறார்கள். அவற்றின் வேகம் புரக்கின் வேகத்திற்குச் சமமாயிருக்கிறது. மிகுந்த வலிமையும் வேகமும் சுறுசுறுப்பும் உடைய புதிய குதிரைகளும் வெகு விரைவில் வலிமையற்ற, வேகமற்ற, பயனற்ற, மதியற்ற குதிரைகளாய் மாறிவிடுகின்றன. அதாவது, அவை எதற்கும் உதவாத இழி நிலையை எய்தி விடுகின்றன. சாட்டையடி வாங்காமலே மிக வேகமாக ஓடக்கூடிய வலிமைமிக்க அந்தக் குதிரைகள் இந்நாட்டுத் தட்பவெப்ப நிலையைத் தாங்க மாட்டாமல் வலியிழந்து வாடிப் போகின்றன.

KOVILMANI.com: தமிழர் வரலாறு -Tamils History-2 இலங்கையின் வரலாறு (kovilmani-manisat.blogspot.com)

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply