இலங்கை: “F” சொல்பற்றிய அதிகாரப் பகிர்வு, பிரிவினை மற்றும் தற்போதைய விவாதங்கள்

இலங்கை: “F” சொல்பற்றிய அதிகாரப் பகிர்வு, பிரிவினை மற்றும் தற்போதைய விவாதங்கள்

கலாநிதி ஜெயம்பதி  விக்ரமரத்ன 

Jayampathy

ஜெயம்பதி  விக்ரமரத்ன  எம்.பி. ஏ. ((J-Pura), கலாநிதி (Ph.D (Pera) அவர்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் சட்டப் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். அவர் ஒரு சுயாதீன ஆராய்ச்சி அமைப்பான அரசியலமைப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார். கலாநிதி விக்ரமரத்ன அரசியலமைப்பு விவகார அமைச்சகத்தில் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். 2000 ஆம் ஆண்டு அரசியலமைப்பு மசோதாவை உருவாக்கிய அரசின் அரசியலமைப்பு வரைவுக் குழுவின் உறுப்பினராக இருந்தார். 2015 ஆம் ஆண்டில், அரசியலமைப்பு விவகாரங்களில் இலங்கை சனாதிபதியின் மூத்த ஆலோசகராக இருந்தார். அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார்.  டாக்டர் விக்ரமரத்ன ஓகஸ்ட் 2015 முதல் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். புதிய அரசியலமைப்பின் வரைவைத் தயாரிப்பதில் பொறுப்பான அரசியலமைப்புச் சபையின் இயக்குநராகவும் உறுப்பினராகவும் உள்ளார். லாவோஸின் (Laos) சட்டத் துறையில் அவருக்கு விரிவான பட்டறிவு உள்ளது, கடந்த 16 ஆண்டுகளாக ஐ. நா. மேம்பாட்டுத் திட்டம் (UNDP), ஐ. நா. தடுப்புப் படை, (UNODC), ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சுவீடிஷ் ஆகியவற்றிற்காக அங்கு பணியாற்றியுள்ளார்.

சுருக்கம்

அரசியலமைப்புக் கோட்பாட்டில்,  ஒற்றையாட்சி என்பது அரசு  அதிகாரத்தின் ஒரே ஒரு இறுதி ஆதாரமாக இருக்கும் அதே வேளை பல இலங்கையர்களுக்கு ஒற்றையாட்சி என்பது ஒற்றுமை அல்லது ஒரு நாடு என்று பொருள் படும். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரப் பகிர்வை அறிமுகப்படுத்தியது, ஆனால் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்தி  மாகாணத்துக்குரிய அதிகாரங்களை மத்திய அரசுக்கு திரும்பப் பெற்று வருகின்றன. எந்தவொரு அதிகாரப் பகிர்வையும் எதிர்க்கும் சிங்கள தேசியவாதிகள் அதிகாரப் பகிர்வையும் கூட்டாட்சி வாதத்துடன் சமன்படுத்துகின்றனர். மேலும் அதிகாரப் பகிர்வானது பிரிவினைக்கு வழிவகுக்கும் என்ற பயத்தை எழுப்புகின்றனர். மறுபுறம், ஒரு ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பசிர்வு  பெரும்பான்மையினரின் ஆட்சிக்கும் அதிகாரத்தை மையப்படுத்தற்கும் வழிவகுக்கும் என்று தமிழ் மக்கள் அஞ்சுகின்றனர். இந்தச் சுருக்கமான கட்டுரையில், இலங்கையின் சூழலில் பரவலாக்கத்தின் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதில் அரசியலமைப்புப் பேரவையின் வழிநடத்தல் குழுவின் சமீபத்திய  இடைக்கால அறிக்கை உட்பட இலங்கையின் சூழலில் (அரசியல்) பரவலாக்கத்தின் வளர்ச்சியை ஆராய்கிறது.

அறிமுகம்

இலங்கை நான்கு முக்கிய சமூகங்களைக் கொண்ட ஒரு பன்முக கலாச்சார சமூகமாகும் – சிங்களவர்கள் (74.9%), தமிழர்கள் (11.2%), முஸ்லிம்கள் (9.2%) மற்றும் மலைநாட்டுத் தமிழர்கள் (4.2%).  செறிவூட்டப்பட்ட மற்றும் சிதறடிக்கப்பட்ட சமூகங்களைக் கொண்ட இலங்கையின் மக்கள்தொகை சிக்கலானது. இத்தகைய சூழ்நிலையில் அனைத்து சமூகங்களுக்கும் அரசு அதிகாரத்தில் உரிய பங்கை வழங்கும் அரசியலமைப்பை ஏற்றுக்கொள்வது சவாலாக உள்ளது.

கூட்டாட்சி மற்றும் அதிகாரப் பகிர்வு பல நாடுகளில் பிரிவினைவாத சவால்களை எதிர்கொள்வதில் வெற்றிகரமான கருவிகளாக இருந்தபோதிலும், இலங்கையில் அதிகாரப் பகிர்வை எதிர்க்கும் பலர் அது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பிரிவினைக்கு வழிவகுக்கும் என்ற அச்சத்தை மக்களிடையே பரப்பியுள்ளனர்.

1972 இன் முதலாவது குடியரசு அரசியலமைப்பில் இலங்கை அரசை ‘ஒற்றையாட்சி’ என வர்ணிப்பதும், 1978 அரசியலமைப்பின் மூலம் அது நிலைநிறுத்தப்பட்டதும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுக்கான முயற்சிகளுக்குத் தடையாக உள்ளன. அரசியலமைப்புக் கோட்பாட்டில்,  ஒற்றையாட்சி  என்பது மத்திய அரசு உச்சமானது. நிர்வாகப் பிரிவுகள் மத்திய அரசு நியமித்த அதிகாரங்களை மட்டுமே பயன் படுத்துகின்றன. சுருங்கச் சொன்னால், அரச அதிகாரத்திற்கு ஒரேயொரு மூலமே உள்ளது. ஆனால் பல இலங்கையர்களுக்கு, ‘ஒற்றையாட்சி’ (‘unitary’) என்பது ‘ஒருமை’ (oneness) அல்லது ‘ஒரு நாடு (one country)  என்பதாகும்.  சிங்கள மொழியில் ‘ஒற்றையாட்சி’ என்ற சிங்களச் சொல் ‘ஏகயா’ (aekiya’) என்றும் ஏக்க (‘eka’)  என்பது ‘ஒன்று’ (‘one’)  என்றும் பொருள்படும். இவ்வாறு, மாநிலத்தின் ஒற்றையாட்சித்  தன்மையை மாற்றுவது, நாட்டைப் ‘பிளவுபடுத்துவது’  என்று சிலரால் பார்க்கப்படுகிறது.

பெடரல் கட்சியின் தமிழ்ப் பெயரான ‘Illankai Thamil Arasu Kachchi’ என்பதை ‘இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி’ என்று மொழிபெயர்ப்பதால் சிக்கல் மேலும் சிக்கலாகியுள்ளது. இது பிரிவினைவாதம் என்று எதிர்ப்பாளர்கள் கூறினாலும், கட்சித் தலைவர்கள் அதை மறுத்து, இந்தியாவில் துணை தேசிய அலகு ‘மாநிலம்’ என்று அழைக்கப்படுவதை சுட்டிக் காட்டுகின்றனர். கட்சி உருவாக்கப்பட்டபோது, அது இந்தியாவில் இருந்து உத்வேகம் பெற்றது என்றும், கூட்டாட்சி இந்தியாவைப் போல ‘தமிழ்ப் பெரும்பான்மை மாநிலம்’ அடைய விரும்பியது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

மோதலின் சுருக்கமான வரலாறு

1926 இல் இலங்கைக்கான கூட்டாட்சி அரசியலமைப்பை முதலில் முன்மொழிந்தவர் தமிழர்கள் அல்லர், பின்னர் சிங்கள சார்பு சிறிலங்கா சுதந்திரக் கட்சியை (SLFP) உருவாக்கியவரும் பிரதமராக இருந்தவரும் ஆன பண்டாரநாயக்கா ஆவர். 1927 ஆம் ஆண்டு டொனமோர் ஆணைக்குழு இந்த நாட்டிற்கு வருகை  தந்தபோது, தாம் தனியான ‘தேசம்’ எனக் கூறிச் சிங்கள ஆதிக்கப் பகுதிகளுடன் தொடர்புடைய மூன்று அலகுகளின் கூட்டமைப்பை கண்டிய சிங்களவர்கள்  முன்மொழிந்தார்கள்.  (1) 1505 இல் போர்த்துகீசியர்களால் கைப்பற்றப்பட்டு பின்னர் ஒல்வாந்தர்  மற்றும் பிரித்தானிய ஆட்சியின் கீழ் வந்த சிங்கள ஆதிக்கம் கொண்ட கரையோரப் பகுதிகள்.  (2) 1815 ஆம் ஆண்டில் இறுதியாக பிரிட்டிஷாரால் கைப்பற்றப்பட்ட காண்டி இராச்சியம். (3)     முஸ்லிம்களும் தமிழர்களும் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள்.  அவர்களின் (கண்டிச் சிங்களவர்) கவலைகளுக்கு அனுதாபம் தெரிவித்த போதும்  கூட்டாட்சி ஏற்பாட்டை  (டொனமோர்) ஆணையம் நிராகரித்தது.

1944 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான சோல்பரி ஆணைக்குழு இலங்கைக்கு வருகை  செய்த போது, நாட்டில்  ஒரு சமஷ்டிக்  கட்டமைப்பைப் தன்னும்  கேட்காவிட்டாலும் அதிகாரப்பகிர்வை ஆவது எந்தவொரு அமைப்பும் தீவிரமாக முன்மொழியவில்லை.  எந்தவொரு சுயாட்சி அல்லது சமநிலையான பிரதிநிதித்துவத்திற்கும் ஆணையம் பரிந்துரைகள் எதுவும் செய்யவில்லை.

1949 இல்,  சிங்களவர்களுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் கட்சியான தமிழ்க் காங்கிரசில் இருந்து பிரிந்து பெடரல் கட்சியை (FP) உருவாக்கினார்.   மேலும் காங்கிரஸ் கட்சி  ஐக்கிய தேசியக் கட்சியோடு (UNP) –  கூட்டணி வைத்திருந்ததைத்  தடுக்கத் தவறிய பின்னர் – புதிதாக சுதந்திரம் பெற்ற நாட்டின் பெரும்பான்மையான மலையகத் தமிழர்களது  குடியுரிமை பறிக்கப்பட்டது. இவர்கள்  சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் பிரித்தானிய குடிமக்களாக இருந்தபோது 1947 இல் நடந்த தேர்தலில் வாக்களித் திருந்தார்கள்.   அதன் பின் 1952 இல் நடந்த தேர்தலில்  தமிழ் அரசுக் கட்சி (FP)  இரண்டு தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்தது. செல்வநாயகம் அவர்கள் தனது சொந்தத் தொகுதியில் தோல்வியுற்றார்.  வடக்கு மற்றும் கிழக்கு வாழ் தமிழர்கள் கூட்டாட்சியை உறுதியாக நிராகரித்ததோடு மீண்டும் கொழும்புக்குச் சென்று சிங்களத் தலைமைகளுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளுமாறு தமிழ்க் காங்கிரஸ் கட்சிக்கு கட்டளையிட்டனர்.

1955 இல் எல்லாம் மாறியது.  தொடக்கத்தில் தெற்கில் உள்ள இரண்டு முக்கிய கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி  ஆங்கிலத்திற்குப் பதிலாக  சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டும் உத்தியோகபூர்வ மொழிகளாக மாற்றுவதற்கு ஆதரவு தெரிவித்தன. மற்றொரு பொதுத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், இரண்டு கட்சிகளும் தங்கள் நிலைப்பாட்டை  ‘சிங்களம் மட்டும்’ என்று மாற்றிக் கொண்டன. இது தமிழ் அரசுக் கட்சிக்கு உள்ள ஆதரவை அதிகரிக்க வழிகோலியது. 1956  இல் நடந்த தேர்தலில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான கூட்டணி தெற்கில் அமோக வெற்றி பெற்றது, அதே நேரத்தில் தமிழ் அரசுக் கட்சி வடக்கு மற்றும் கிழக்கில் வெற்றி பெற்றது. தமிழ்க் காங்கிரஸ் கட்சி வெறுமனே இரண்டு இடங்களுடன் அவமானகரமான தோல்வியைத் தழுவியது. அதன் பின்னர்  அந்தத்  தோல்வியில் இருந்து அது (தமிழ்க் காங்கிரஸ்)  மீளவே இல்லை.

1956 இல் சிங்களம் மட்டுமே ஒரே அரச கருமமொழியாக ஆக்கப்பட்டது. தமிழர்களும் இடதுசாரிகளும் இந்த நடவடிக்கையை எதிர்த்தனர், இடதுசாரியான  கலாநிதி கொல்வின் ஆர். டி சில்வா தீர்க்கதரிசனமாக கர்ஜித்தார் – ‘இரண்டு மொழிகள் – ஒரே நாடு; ஒரு மொழி – இரண்டு நாடுகள்.’ இந்த எச்சரிக்கை கவனிக்கப்படவில்லை. மோதல் வலுத்தது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி (1957) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி (1965) பிரதமர்களுடான செல்வநாயகம் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரப் பகிர்வுக்கான உடன்படிக்கைகள்  கடுமையான சிங்கள எதிர்ப்பின் மத்தியில் இரத்து செய்யப்பட்டன. குடியரசுக் கட்சி அரசியலமைப்புச் சட்டங்கள் இரண்டும் இந்தச் சிக்கலைத் தீர்க்கத் தவறின. தமிழ்க் கட்சிகள் பிரிவினையைத் தழுவிக் கொண்டன, அதைத் தொடர்ந்து முழு அளவிலான பிரிவினைவாதப் போர் தொடங்கியது.

1987 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தம் மாகாண சபைகளை நிறுவியது. அது மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரப் பகிர்வை வழங்கியது. எவ்வாறாயினும், பதின்மூன்றாவது திருத்தம் உண்மையான அதிகாரப் பகிர்வுக்கு எதிரானது. பல விடயங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான சட்டவாக்க அதிகாரம் மாகாண சபைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட போதிலும், மூன்றில் இரண்டு பெரும் பான்மையைப் பயன்படுத்தி சபைகளை மீறும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உள்ளது. தேசியக் கொள்கையை வகுத்துக்கொள்வது என்ற போர்வையில், மாகாண சபைப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் கூட நாடாளுமன்றம் சட்டமியற்றலாம். மாகாணங்களின் அதிகாரங்களைக்  கட்டுப்படுத்த மத்திய அரசால் ஒருங்கிணைந்த பட்டியல் பயன்படுத்தப்படுகிறது. போகூழ்வசமாக, அடுத்தடுத்த அரசாங்கங்கள் அதிகாரப்பகிர்வை முறியடிக்க கற்பனை செய்யக்கூடிய ஒவ்வொரு ஏற்பாடுகளையும், அதாவது, ஒவ்வொரு காற்புள்ளி அல்லது முழு நிறுத்தத்தையும் பயன்படுத்தின. அதிகாரப் பகிர்வுக்கு உகந்த நிர்வாகம் இல்லாததால் நிலைமை மோசமடைந்துள்ளது.  (தொடரும்)

கடந்த வாரத் தொடர்ச்சி…………….

கூட்டாட்சி: இலங்கையில் “F” வார்த்தை

1983 ஆம் ஆண்டில், ஆயுதமேந்திய தமிழ்-பிரிவினைவாத இயக்கத்தின் முதல் ஆண்டுகளில், பிரிவினைவாத எதிர்ப்பு ஏற்பாடு அரசியலமைப்பில் அறிமுகப் படுத்தப்பட்டது. பிரிவு 157A (4) ன் படி இலங்கையின் எல்லைக்குள் ஒரு தனிநாடு அமைப்பதை மற்றச் சங்கங்கள் அல்லது அமைப்பின் எந்தவொரு அரசியல் கட்சியும் அதன் நோக்கங்களில் ஒன்றாகவோ அல்லது நோக்கமாகவோ இருந்தால், எந்தவொரு நபரும் அத்தகைய அரசியல் கட்சியை அறிவிப்பதற்காக உச்ச நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்யலாம்.  இத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டவுடன், அரசியல் கட்சி அல்லது அமைப்பு தடைசெய்யப்பட்டு, அத்தகைய கட்சி அல்லது அமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் நாடாளுமன்றத்தில் தனது இருக்கையை காலி செய்ய வேண்டும். .

சேனாதிராசாவுக்கு எதிராக மனுதாரர் சந்திரசோமா தொடுத்த வழக்கில்  இலங்கையின் எல்லைக்குள் தனிநாடு அமைப்பதை பெடரல் கட்சி தனது நோக்கங்களாகவும் ஆட்சேபனையாகவும் கொண்டுள்ளது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரினார். உச்ச நீதிமன்றம், கட்சியின் அரசியலமைப்பு மற்றும் கட்சி அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்பட்ட பிரமாணப் பத்திரங்கள் மூலம், கூட்டாட்சி கட்சி ஐக்கிய இலங்கைக்குள் ஒரு கூட்டாட்சி அரசை நிறுவப்படுவதை ஆதரிக்கிறது அல்லது வாதிடுகிறது, ஆனால் தனிநாடு அல்ல என்று கூறியது. தற்போதுள்ள நாட்டிற்குள் ஒரு கூட்டாட்சி அரசாங்கத்தை ஆதரிப்பது பிரிவினைவாதத்தை ஆதரிப்பதாகக்  கருத முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது.

இலங்கை அரசியலில் கூட்டாட்சி என்பது ஒரு ‘அழுக்கான வார்த்தை’ யாக மாறியுள்ளது.  மக்கள் கூட்டணி அரசாங்கத்தின் 1997 முன்மொழிவுகள் அரசை ‘பிராந்தியங்களின் ஒன்றியம்’ என்று வர்ணிக்க முற்பட்டபோது பலத்த எதிர்ப்பு உருவானது. இதற்குப் பதிலளிக்கும் வகையில், பொதுசன முன்னணியின் அரசியலமைப்பு சட்டமூலம் 2000 முன்மொழியப்பட்ட உறுப்புரை 1 இல் குறிப்பிடப் பட்டுள்ளது: ‘இலங்கைக் குடியரசு ஒரு தன்னுரிமை,  இறையாண்மை மற்றும் சுதந்திரமான அரசாகும், இது மத்திய மற்றும் பிராந்தியங்களின் நிறுவனங்களை உள்ளடக்கிய அரசியலமைப்பு.’ இந்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மையை சேகரிக்க முடியவில்லை. வல்லுநர் குழுவின் பெரும்பான்மை அறிக்கை பின்னர் உடன்பாட்டில் கூறியது போல், அரசின் இயல்பை விவரிப்பதில் ஒற்றையாட்சி, கூட்டாட்சி, பிராந்தியங்கள்/மாகாணங்களின் ஒன்றியம் போன்ற தனித்துவமான வெளிப்பாடுகளைப் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்.

எந்தவொரு அதிகாரப் பகிர்வையும் எதிர்க்கும் சிங்கள தேசியவாதிகள் அதிகாரப் பகிர்வைக்  கூட்டாட்சி வாதத்துடன் சமப்படுத்துகின்றார்கள். மேலும் அதிகாரப் பகிர்வானது பிரிவினைக்கு வழிவகுக்கும் என்ற காரணமில்லாத வீண் பயத்தை எழுப்பியுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் கூட்டு அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட தற்போதைய அரசியலமைப்பு சீர்திருத்த செயல்பாட்டில் இது ஒரு பெரும் சிக்கலாக மாறியுள்ளது. அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளடக்கிய அரசியலமைப்பு பேரவையானது, தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறக்கூடிய புதிய அரசியலமைப்பு சட்டமூலத்தை முன்மொழிவதற்கு பணிக்கப்பட்டுள்ளது.

“ஒற்றையாட்சி அரசு”  மற்றும் பிரிவினை

ஒரு அரசை  “ஒற்றையாட்சி அரசாக” அங்கீகரிப்பது அதன் ஆட்புல உறுதிப்பாட்டை மற்றும் பிரிக்கமுடியாத தன்மையை உறுதி செய்கிறதா? இது தற்போதைய விவாதத்தில் எழுப்பப்பட்ட முக்கிய சிக்கலாகும். அரசியலமைப்பு சபையின் வழிகாட்டுக் குழு  தனது அண்மைக்கால  இடைக்கால அறிக்கையில் கூறியதாவது:

ஒரு மாநிலத்தை ஒரு “ஒற்றுமை கொண்ட மாநிலமாக” அங்கீகரிப்பது அதன் நிலப்பரப்பு முழுமை மற்றும் பிரிக்கமுடியாத தன்மையை உறுதி செய்கிறதா? இது தற்போதைய விவாதத்தில் எழுப்பப்பட்ட முக்கிய பிரச்சினையாகும். அரசியலமைப்பு சபையின் இயக்குநரகம் தனது சமீபத்திய இடைக்கால அறிக்கையில் கூறியதாவது:

அரசியலமைப்பு பேரவையை அமைக்கும் தீர்மானத்தின் மீது உரையாற்றிய சனாதிபதி, தெற்கில் உள்ள மக்கள் ‘கூட்டாட்சி’ (‘Federal’) என்ற சொல்லுக்கு அஞ்சும் அதே வேளையில் வடக்கில் உள்ள மக்கள் ஒற்றையாட்சி (‘Unitary’)  என்ற சொல்லுக்கு அஞ்சுவதாகக் குறிப்பிட்டார். அரசியலமைப்பு என்பது  மக்கள் பயப்பட வேண்டிய ஆவணம் அல்ல.   ‘ஒற்றையாட்சி அரசு’  என்ற ஆங்கிலச் சொல்லுக்கான மரபுசார்ந்த (classical) வரையறை மாறிவிட்டது. ஐக்கிய இராச்சியத்தில்,  இப்போது வடக்கு அயர்லாந்து மற்றும் ஸ்கொட்லாந்து யூனியனில் இருந்து விலகுவது சாத்தியமாகும். எனவே, ‘Unitary State’ என்ற ஆங்கிலச் சொல் இலங்கைக்கு ஏற்புடையதாக இருக்காது. ‘ஏக்கிய ராஜ்ய’ என்ற சிங்களச் சொல் பிரிக்கப்படாத மற்றும் பிரிக்க முடியாத நாட்டைச் சிறப்பாக விவரிக்கிறது. இதற்கு இணையான தமிழ் “ஒருமித்த நாடு”.

ஐக்கிய இராச்சியம் நீண்ட காலமாக ஒரு முன்மாதிரியான ஒற்றையாட்சி நாடாகக் கருதப்படுகிறது. நாடாளுமன்ற இறையாண்மை பற்றிய பிரிட்டிஷ் கோட்பாட்டின்படி, நாடாளுமன்றம் ஐக்கிய இராச்சியத்தில் எந்தவொரு சட்டத்தையும் உருவாக்க அல்லது இரத்து செய்யக்கூடிய உயரிய சட்ட அதிகாரமாகும். எந்தவொரு சட்டத்தையும் எதிர்கால நாடாளுமன்றத்தால் மாற்ற முடியும் மற்றும் நீதிமன்றங்கள் நாடாளுமன்ற சட்டத்தை மீற முடியாது. ஐக்கிய இராச்சியத்திற்கு எழுதப்பட்ட அரசியலமைப்பு இல்லை, ஆனால் எழுதப்படாத அரசியலமைப்புக் கோட்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. அரசியலமைப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல சட்டங்களையும் கொண்டுள்ளது.

ஒரு ‘ஒற்றையாட்சி அரசு’ என்றால், அதன் ஆட்புல ஒருமைப்பாடு உறுதிப்படுத்தப்பட்ட ஒரு அரசு என்றால், பின்னர் ஐக்கிய இராச்சியம்  ஒரு ஒற்றையாட்சி நாடாக இல்லை. பெரிய பிரிட்டன் (Great Britain)  மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் 1922 இல் ஐரிஷ் சுதந்திர மாநில அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்றியது, அயர்லாந்தை (வடக்கு அயர்லாந்து நீங்கலாக) ஒரு மேலாதிக்கமாக மாற அனுமதித்தது, மேலும் அயர்லாந்தின் வெளியேற்றத்துடன் எஞ்சிய பகுதி பெரிய பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியமாக மாறியது.

ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றமே அயர்லாந்தின் பிரிவினைக்கு வழிவகுத்தது. வடக்கு அயர்லாந்தின் பெரும்பான்மை மக்கள் ஐக்கிய இராச்சியத்திலிருந்து பிரிந்து, அயர்லாந்துடன் ஒன்றிணைவது குறித்து முடிவு செய்ய முடியும் என்பதை அது அங்கீகரித்துள்ளது. ஸ்கொட்லாந்து ஐக்கிய இராச்சியத்திலிருந்து வெளியேறலாம் என்று பெரும்பான்மையான ஸ்கொட்லாந்து மக்கள் முடிவு செய்யலாம் என்பதையும் அது ஒப்புக்கொண்டுள்ளது. மேற்கூறியவை ஒரு அரசை “ஒற்றையாட்சி” மிக்கதாக விவரிப்பது, தனக்குத்தானே, பிரிவினைக்கு எதிரான தடையாக இல்லை என்பதை மேற்கூறியவை  காட்டுகிறது.

இங்கிலாந்து நாடாளுமன்றமே அயர்லாந்தின் பிரிவினைக்கு வழிவகுத்தது. வடக்கு அயர்லாந்தின் பெரும்பான்மையான மக்கள் இங்கிலாந்தில் இருந்து பிரிந்து அயர்லாந்துடன் ஒன்றிணைவது குறித்த பிரச்சினையை தீர்மானிக்க முடியும் என்பதை அது அங்கீகரித்துள்ளது. ஸ்காட்லாந்து ஐக்கிய இராச்சியத்தை விட்டு வெளியேறலாம் என்று பெரும்பான்மையான ஸ்காட்லாந்து மக்கள் முடிவு செய்யலாம் என்பதையும் அது ஒப்புக்கொண்டுள்ளது. ஒரு மாநிலத்தை ‘ஒற்றையாட்சி”’ என்று வர்ணிப்பது, பிரிவினைக்கு எதிரான ஒரு தடையல்ல என்பதை மேற்கூறியவை காட்டுகிறது.

வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை

இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் ஆங்கிலப் பதிப்பில் இலங்கை அரசை “ஒற்றையாட்சி” என வர்ணிப்பது விரும்பத்தகாதது என்று அதிகாரப் பகிர்வின்  ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர். இதன்படி மத்திய அரசுக்கும் மாகாண சபைக்கும் இடையில் எழும் கருத்து வேற்றுமைகள் மத்திய அரசுக்கு சாதகமாக முடிவு செய்யப்படுகிறது.

“ஒற்றையாட்சி” என்பது பாரம்பரியமான அர்த்தத்தில், அதிகாரங்களை மாற்றியமைப்பதன் மூலம் அரசியலமைப்பு மாற்றத்தால் மத்திய அரசு திரும்பப் பெறலாம் என்று அர்த்தம் என்றாலும், சட்டமன்றம், நிர்வாகம் மற்றும் நீதித்துறை கூட ஒவ்வொரு சாத்தியமான திருப்பத்திலும் அதிகாரங்களை மாற்றியமைப்பதை குறைமதிப்பிற்கு உட்படுத்திய பல நிகழ்வுகள் உள்ளன என்று அவர்கள் வாதிடுகின்றனர். அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவான நிர்வாகம் இல்லாததால் நிலைமை மோசமடைந்துள்ளது. இதுபோன்ற ஒரு “ஒற்றையாட்சி”யான மனநிலையின் எடுத்துக்காட்டுகள் ஏராளமாக உள்ளன.

புதிய அரசியலமைப்பில் சேர்ப்பதற்கான முன்மொழிவுகளை முன்வைக்கும் போது, அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவான சக்திகள் மற்றும் அதிகாரப்பகிர்வு பிரிவினைக்கு வழிவகுக்கும் என்று அஞ்சுபவர்களின் அச்சத்தை வழிநடத்தல் குழு கவனத்தில் எடுத்தது. (மிகுதி அடுத்த வாரம்)


கடந்த வாரத் தொடர்ச்சி…………….

இலங்கையில், இறையாண்மை மக்களிடம் அளிக்கப்பட்டுள்ளது.  அது மாற்றிக்கொடுக்க முடியாததாகவும் பிரிக்க முடியாததாகவும் இருக்கும். இவ்வாறு இறையாண்மை ஒட்டுமொத்த இலங்கை மக்களிடமே  முழுமையாக இருக்கும் என அறிவிக்கப்படுகிறது. இலங்கை மக்களின் இறையாண்மை பிரிக்க முடியாதது. எனவே மத்திய மற்றும் அலகுகளுக்கு இடையில் ஒரு கூட்டாட்சி பண்புடைய இறையாண்மைப் பிரிவு வெளிப்படையாக நிராகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஒரு பிரிக்கப்படாத மற்றும் பிரிக்கப்பட  முடியாத நாடாக இருக்க வேண்டும்: அரசியலமைப்பின் கீழ் பிரிவினை அனுமதிக்கப் படமாட்டாது. பிரிவினையைத் தடுக்க அரசியலமைப்பில் குறிப்பிட்ட ஏற்பாடுகள் இருக்க  வேண்டும்: இலங்கை அரசு “பிரிக்கப்படாதது மற்றும் பிரிக்க முடியாதது” என அரசியலமைப்பில் குறிப்பாகக் குறிப்பிட வேண்டும் என்று அறிக்கை கூறுகிறது.  மேலும் அதில் பின்வருமாறு குறிப்பிட வேண்டும்: “இலங்கை ஆட்புலத்தில் எந்தப் பகுதியையும் தனி அரசாகவோ அறிவிக்கவோ அல்லது எந்தவொரு மாகாணத்தையும் அல்லது அதன் ஒரு பகுதியையும் இலங்கையிலிருந்து பிரிந்து செல்லுமாறு வாதாடவோ அல்லது நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ எந்தவொரு மாகாண சபைக்கோ  அல்லது பிற அதிகார சபைக்கோ அதிகாரம் கிடையாது.”

அதிகபட்ச அதிகாரப்பகிர்வு வழங்கப்பட வேண்டும்: வழிகாட்டுதல் குழு, துணைக் குழுக்கள் மற்றும் பிறவற்றின் முன் சமர்ப்பிக்கப்பட்ட சமர்ப்பிப்புகளில் துணைக் கொள்கை (“அதாவது, மிகக் குறைந்த அடுக்குகளால் கையாளப்படக்கூடியது எதுவாக இருந்தாலும், அதற்கு  வழங்கப்பட வேண்டும்”) பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. மக்கள் பிரதிநிதித்துவக் குழுவும், மைய-சுற்றயல் (Centre-Periphery Relation) உறவுகளுக்கான துணைக் குழுவும் உள்ளூர் அதிகாரிகளுக்கு அதிக அதிகாரமும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளன. அரசாங்கத்தின் மூன்று அடுக்குகளுக்கு இடையே உள்ள துறைகள்  மற்றும் செயல்பாடுகளை ஒதுக்கீடு செய்வதில் இந்த  கொள்கை வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று வழிநடத்தல் குழு பரிந்துரைத்தது. பதின்மூன்றாவது திருத்தத்தின் கீழ் கிட்டத்தட்ட முப்பது ஆண்டு பட்டறிவுகளை  கருத்தில் கொண்டு, மத்திய மற்றும் மாகாணங்களின் அதிகாரங்கள் தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும் என்று அதிகாரப் பரவலாக்கத்தின் ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிங்களப் பெரும்பான்மை கொண்ட ஏழு “தெற்கு” மாகாணங்களின் முதலமைச்சர் களிடமிருந்து அதிகாரப் பகிர்வு தொடர்பான சிறந்த திட்டங்கள் வந்துள்ளன. முதலமைச்சர்கள் அனைவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள். உண்மையில், முதலமைச்சர்கள் மாநாடு பல சந்தர்ப்பங்களில் இது போன்ற முன்மொழிவுகளை முன்வைத்துள்ளது. மாகாண சபை முதலமைச்சர்கள் முன்வைத்த பல பரிந்துரைகளை வழிநடத்தல் குழு ஏற்றுக் கொண்டுள்ளது. அதிகாரங்கள் மத்திய அரசுக்கும் மாகாணங்களுக்கும்  இடையில் தெளிவாகவும் பொருள்மயக்கமற்றதாகவும் பிரிக்கப்பட வேண்டும்.

அரசியலமைப்புச் சட்டம் இலங்கையின் உச்ச சட்டமாக இருக்கும்: தற்போதைய அரசியலமைப்புச் சட்டத்திற்குப் பிந்தைய நீதித்துறை மறுஆய்வை அனுமதிக்க வில்லை. ஒரு மசோதா, ஆனால் நாடாளுமன்றத்தின் சட்டம் அல்ல, அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. அதிகார வரம்புக்குட்பட்ட விவகாரங்கள் தொடர்பான பல சட்டங்கள் அறைகூவலின்றி நிறைவேற்றப்பட்டமைக்குப் பல எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. அரசியலமைப்புச் சட்டம் உச்ச சட்டமாக இருக்க வேண்டும் என்பதன் பொருள், சட்டம் இயற்றப்பட்ட பின்னர் மறுஆய்வு செய்வதற்கான ஏற்பாடு செய்யப்படும், இது நீதித்துறை துணைக் குழுவின் பரிந்துரையும் ஆகும்.

அரசியலமைப்பைத் திருத்துவதற்கான அதிகாரம், அல்லது அரசியலமைப்பை இரத்துசெய்துவதற்கும் மாற்றுவதற்கும்  அதிகாரம், அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முறையில் நாடாளுமன்றத்திற்கும் இலங்கை மக்களுக்கும் (பொருந்தக் கூடிய இடங்களில்) இருக்கும். அரசியலமைப்புச் சீர்திருத்தத்தம் தொடர்பான வாக்கெடுப்பில் வாக்களிப்பது ஒட்டுமொத்த இலங்கை மக்களே அன்றி, அதிகாரப் பகிர்வு பிரிவுகளின் மக்கள் அல்ல.

மாநிலத்தின் தன்மை குறித்து, பின்வரும் கருத்து ஆராயப்பட்டது:

சிறிலங்கா (இலங்கை) ஒரு சுதந்திரமான, இறையாண்மை மற்றும் சுயாதீனமான குடியரசு ஆகும், இது ஒரு ஏக்கிய ராஜ்ய / ஒருமித்த நாடு ஆகும். இது அரசியலமைப்பில் வகுக்கப்பட்ட அதிகாரத்தைச் செயல்படுத்தும் மத்திய மற்றும் மாகாணங்களின் நிறுவனங்களை உள்ளடக்கியது. இந்த உறுப்புரையில் (Article )  ஏக்கிய ராஜ்ய/ஒருமித்த நாடு (an aekiya rajyaya /orumiththa nadu) என்பது பிரிக்கப்படாத மற்றும் பிரிக்கப்பட முடியாத ஒரு நாடு என்று பொருள்படும்., மேலும் இதில் வழங்கப்பட்டுள்ளபடி, அரசியலமைப்பைத் திருத்துவதற்கும், அல்லது அரசியலமைப்பை இரத்து செய்வ தற்கும், மாற்றுவதற்குமான அதிகாரம் இந்த அரசியலமைப்பில் வழங்கப் பட்டுள்ளபடிஇலங்கையின் நாடாளுமன்றத்திற்கும் மற்றும் மக்களுக்கும் உள்ளது.

ஒரு மாகாண சபை தனது அதிகாரங்களை பிரிந்து செல்வதற்குப் பயன்படுத்தலாம் என்ற அச்சங்களைத் தணிப்பதற்காக, குடியரசின் ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு ஒரு “தெளிவான மற்றும் தற்போதைய ஆபத்து” இருந்தால் அதில் தலையிடுவதற்கு அரசியலமைப்பு ரீதியாக மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று முன்மொழிந்தது.  இத்தகைய தலையீடு நாடாளுமன்ற ஒப்புதல் மற்றும் நீதித்துறை மறுஆய்வுக்கு உட்பட்டது.

 அறிக்கையில் உள்ள கொள்கைகள் மற்றும் வடிவமைப்புகள் குறித்து வழிநடத்தல் குழுவின் உறுப்பினர்களின் அவதானிப்புகள் மற்றும் கருத்துக்கள் இடைக்கால அறிக்கையில் உள்ளன. பிரதமர் விக்ரமசிங்க, தனது கட்சி (ஐதேக) முழு அறிக்கையையும் ஆதரிக்கும் என்று குழுவுக்குத் தெரிவித்தார்.  சனாதிபதி சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொதுவாக அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவாக உள்ளது.   ஆனால் அதன் முன்மொழிவுகள் அதன் சொந்த முதலமைச்சர்களின் முன்மொழிவுகளைப் போலக் காணப்படவே இல்லை.

எதிர்பார்த்தது போல், முன்னாள் சனாதிபதி இராசபக்சாவின் தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியானது, மாகாண சபைகளின் தற்போதைய அதிகாரங்களில் சிலவற்றைக் குறைக்க விரும்புவதுடன், அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவளிக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (Tamil Nationalist Alliance (TNA) இதில் சமஷ்டிக் கட்சி (FP) ஆதிக்கம் செலுத்தும் பங்காளியாக உள்ளது, அதே சமயம், இலங்கை ஒரு ஐக்கிய/பிரிக்கப்படாத மற்றும் பிரிக்கப்பட முடியாத ஒரு நாட்டிற்குள் ஒரு கூட்டாட்சி நாடாக இருக்க வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்திய போதிலும் . அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கொள்கைகளை இரண்டு பிரதான கட்சிகளும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தால், அதனுடன் உடன்படுவதைப்பற்றி எண்ணிப்பார்க்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் நிலைப்பாடு தென்னிலங்கையில் பரவலாக வரவேற்கப்பட்டாலும், தமிழ்த்  தீவிரவாதிகளால் அந்த நிலைப்பாடு கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

முடிவுரை

மோதல்கள் நிறைந்திருக்கும் ஒரு பல் கலாச்சார சமூகத்தில், ஒரு சனநாயக கட்டமைப்பிற்குள் அனைத்துச்  சமூகங்களுக்கும் தேவையான அதிகாரத்தை வழங்கும் ஒரு தீர்வு மோதலை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்பது பல பார்வையாளர் களுக்கு உண்மையாக இருக்கலாம். பெரும்பான்மையினரின் எதிர்ப்பை எதிர்பார்க்கலாம் என்றாலும், அதிகாரப்பகிர்வு பிரிவினைக்கு வழிவகுக்கும் என்று உண்மையிலேயே அஞ்சுபவர்கள் பலர் இருக்கலாம். வன்முறை மோதல்களைக் அனுபவித்த  நாடுகளில் இது நடக்கிறது, இதற்கு சிறிலங்கா ஒரு எடுத்துக்காட்டு. அத்தகைய அச்சங்களைத் துடைப்பதற்குப் பதிலாக, அத்தகைய அச்சங்களை மிதமாக வைத்திருப்பது சிறந்தது. அரசியலமைப்பை உருவாக்குபவர்கள் நடைமுறைக் குரியவர்களாக இருக்க வேண்டும்.  மற்றும் சூழ்நிலையின் தனித்துவங்களைக் கருத்தில் கொண்டு குழப்பத்துக்கு வழிவகுக்கும் மொழியைத் தவிர்க்க வேண்டும். (முற்றும்)

Further Reading

 Ranjith Amarasinghe et al, Twenty Two Years of Devolution: An Evaluation of the Working of Provincial Councils in Sri Lanka (Institute for Constitutional Studies 2010).
 Rohan Edrisinha et al (eds), Power-sharing in Sri Lanka: Constitutional and Political Documents, 1926-2008 (Centre for Policy Alternatives 2008).
 Asanga Welikala (ed), A New Devolution Settlement for Sri Lanka(Centre for Policy Alternatives 2016).
 [1] Ceylon: Report of the Commission on Constitutional Reform (Cmd 6677, 1945).
 [2] Article 157A (5).
 [3] SC Spl. 03/2014, SCM 04.08.2017.
 [4] Panel of Experts appointed to service the All Party Representative Committee, Report of Group ‘A’ (2006) in Rohan Edrisinha et al (eds), Power-sharing in Sri Lanka: Constitutional and Political Documents, 1926-2008 (Centre for Policy Alternatives 2008) 784, 785.
 [5] Report on Public Representations on Constitutional Reform (Colombo: Public Representations Committee on Constitutional Reform, 2016) 20.
 [6] <http://english.constitutionalassembly.lk/images/pdf/interim-report/ReportE%20CRR.pdf> accessed 02 December 2017.
 [7] For the constitutional framework of devolution and important legal issues that arose, see Jayampathy Wickramaratne, ‘Legal Aspects of Devolution in Sri Lanka’ in Jayampathy Wickramaratne, Towards Democratic Governance in Sri Lanka: A Constitutional Miscellany (Institute for Constitutional Studies, 2014) 137-233.

(இந்தக் கட்டுரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டாலும் 13 ஏ திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப் படுத்துவதுபற்றி இன்று ஆதரவாகவும் எதிராகவும்  நடைபெறும் வாதத்துக்கு இன்னமும் பொருத்தமானது ஆகும். ஆங்கில மூலத்தை http://50shadesoffederalism.com/case-studies/sri-lanka-devolution-secession-and-current-debates-on-the-f-word/  என்ற இணையதள முகவரியில் படிக்கலாம். அவரது மின்னஞ்சல் jwickramaratne@yahoo.com. தமிழாக்கம் நக்கீரன்)

low res pgs Feb 24 2023 (003).pdf

——————————————————————————————————————-

About editor 3087 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply