தமிழ்ப் புத்தாண்டு, தைப் பொங்கல், வள்ளுவர் பிறந்த நாள் விழாவில் நலிந்த வன்னி மக்களுக்கு நிதி சேகரிப்பு!

தமிழ்ப் புத்தாண்டு, தைப் பொங்கல், வள்ளுவர் பிறந்த நாள் விழாவில் நலிந்த வன்னி மக்களுக்கு நிதி சேகரிப்பு!

இங்கே நாம் மண் சார்ந்த, மொழி சார்ந்த, இனம் சார்ந்த பொங்கல் பொங்கி தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் வன்னியில் எல்லா வாழ்வாதாரங்களையும் இழந்து இடைத்தங்கல் கொட்டில்களில் அல்லல்படும் துன்பப்படும் எமது மக்களது அவலத்தையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இவர்களை சிங்கள அரசு கைவிட்டு விட்டது. மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்களின் வாழ்வை நிமிர்த்த உலக வங்கியால் மட்டுமே முடியும். அதற்காக புலம்பெயர் தமிழர்கள் கைகட்டிக் கொண்டு இருக்க முடியாது. அண்மையில் மறுவாழ்வு அமைப்பு கிளிநொச்சி மாவட்டக் கமக்காரர்களுக்கு 104 மண்வெட்டிகளை அன்பளிப்புச் செய்தது. ஆனைவிழுந்தான் ஊர் மக்களுக்கு 6 தையல் பொறிகள் அன்பளிப்புச் செய்தது. ஒரு மண்வெட்டி மற்றும் கத்திக்குச் செலவாகும் தொகை 15 டொலர்கள் மட்டுமே. எனவே இந்த உதவியை செய்ய எல்லோரும் முன்வர வேண்டும்” என நக்கீரன், தலைவர், தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் கேட்டுக் கொண்டார். இந்த விழாவை தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் முதல் முறையாக அனைத்துலக தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தோடு இணைந்து நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த விழா மங்கள விளக்கேற்றல், தமிழ்மறை ஓதல், தழிழ்த்தாய் வாழ்த்து, கனடாப் பண், அமைதி வணக்கம் ஆகியவற்றோடு தொடங்கியது. மங்கள விளக்கை திருவாளர்கள் வின் மகாலிங்கம் (கனடா தமிழர் இணையம்) வி. சொர்னலிங்கம் (இயக்குநர், தமிழ்த் தொலைக்காட்சி) திரு இராசேந்திரம், திரு இரா. சிவலிங்கம் (துணைப் பிரதமர், நாகதஅ) திரு இரா. குணநாதன் (தலைவர், தமிழர் புனர்வாழ்வுக் கழகம்) ஏற்றி வைத்தனர்.

தமிழ்மறை ஓதல், தழிழ்த்தாய் வாழ்த்து, கனடாப் பண் ஆகியவற்றை செல்வன் கிசோன் சிறிகணேசன் பாடினார். மாணவனான இவர் கனடாவில் பிறந்தவர்.

நடன ஆசிரியை நிரோதினி பரராசசிங்கத்தின் மாணவியர் வரவேற்பு நடனம் ஆடினார்கள்.

தமிழ்ப் படைப்பாளிகள் கழகத்தின் இணைச் செயலாளர் மு. தியாகலிங்கம் வரவேற்புரை நிகழ்த்தினார்.

விழாவுக்கு திரு லோகன் கணபதி (மார்க்கம் நகரமன்ற உறுப்பினர்) அவரது துணைவியார் மருத்துவர் இராஜேஸ்வரி கணபதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர். அவர்களுக்கு முறையே வி.எஸ். துரைராசா (தலைவர் மறுவாழ்வுக் கழகம்) பவானி தர்மகுலசிங்கம், இணைச்செயலாளர் தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் மாலை அணிவித்து மதிப்பளித்தனர்.

திரு லோகன் கணபதி அவர்களது பெரு முயற்சி காரணமாகவே மார்க்கம் நகரமன்றம் தைத் திங்களை மரபுத் திங்களாக அறிவித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

திரு வீர சுப்பிரமணியம், ; சிவா வேலுப்பிள்ளை (தலைவர் அனைத்துலக தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்) திரு வி.எஸ். துரைராசா (தலைவர் மறுவாழ்வுக் கழகம்) சிறப்புரை ஆற்றினர்.

தமிழ்ப் பண்பாட்டுக் கையேடு என்ற நூல் வெளியிடப்பட்டது. அந்த நூலின் வெளியீடு மூலம் கிடைக்கப் பெற்ற 370 டொலர்கள் மறுவாழ்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. விழாவில் மொத்தம் 1,500 டொலர்கள் சேர்க்கப்பட்டது. இந்தப் பணம் வன்னி கமக்காரர்களுக்கு மண்வெட்டி, கத்தி போன்ற பொருட்கள் வாங்கப் பயன்படுத்தப்படும்.

திரு கோபால் குடும்பம் பொங்கல் பானை வைத்துப் பொங்கியது. பொங்கலோடு வடை, மோதகம், கடலை, வாழைப்பழம் கோப்பி வழங்கப்பட்டன.

மதங்கசூளாமணி நடனப்பள்ளி மாணவியரின் கோலாட்டம், சக்தி நடனப்பள்ளி மாணவியரின் உழவர் நடனம், இந்தோ – கனடா நடனப்பள்ளி மாணவியரின் தில்லான நடனம் இடம்பெற்றது. இவர்களது ஆடலும் பாடலும் கண்ணுக்கு விருந்தாக இருந்தன.

குடவோலை மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 11 தூய தமிழ்ப் பெயர்களுக்கு 1,500 வெள்ளிகள் பங்கிட்டு வழங்கப்பட்டன. சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. கனிமொழி, எல்லாளன், தமிழ், அகரன், தமிழினி, கரிகாலன், திருமகள், முகிலன், இனியவன், சேயோன் ஆகிய பெயர்களே பரிசு பெற்ற பெயர்களாகும். பெயர்களின் தேர்வில் பொருள், இனிமை, முழுமை போன்றவை கருத்தில் எடுக்கப்பட்டன. மொத்தம் 68 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றன.

நன்றியுரையை தமிழ்ப் படைப்பாளிகள் கழக இணைச் செயலாளர் பவானி தர்மகுலசிங்கம் வழங்கினார்.

விழா சிறப்பாக அமைய உதவிய நடன ஆசிரியர்கள், முருகன் கோயில் அறங்காவல் அவை, நல்லமாதிரி விளம்பரம் செய்த ஈழநாடு, உலகத்தமிழர், யாழ் உதயன், கனடா உதயன், தமிழ் மிறர், செய்தி இணையதளம், பொங்குதமிழ் இணையதளம், சிரிஆர் வானொலி, அனைத்துலக வானொலி, தமிழ்த் தொலைக் காட்சி, தமிழ் வண் தொலைக்காட்சி, சிற்றுண்டி அன்பளிப்புச் செய்த பாபு உணவகம், அழைப்பை ஏற்று வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. சரியாக 9.00 மணிக்கு விழா இனிது நிறைவெய்தியது.

திரு சண்முகம் குகதாசன் நிகழ்ச்சியை தொகுத்து வளங்கினார்.
 pongalinvitationtamil2012

இடை வேளை – 10 மணித்துளி
மறுவாழ்வு – மண்வெட்டி, கத்தி, தண்ணீர் இறைக்கும் யந்திரம் நிதி சேகரிப்பு 5 மணித்துளி
உழவர் நடனம் – சக்தி நடனப்பள்ளி மாணவியர் – 10 மணித்துளி
தலைமை விருந்தினர் உரை – 10 மணித்துளி
தில்லானா – இந்தோ-கனடா நடனப்பள்ளி மாணவியர் – 10 மணித்துளி
தலைமை உரை – திரு. நக்கீரன், தலைவர், தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் – 5 மணித்துளி
தூய தமிழ்ப் பெயருக்கான பரிசு வழங்கல் – 30 மணித்துளி
நன்றியுரை செயலாளர் – தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் – 5 மணித்துளி
தமிழ்ப் புத்hண்டு பொங்கல் திருவள்ளுவர் விழா நிகழ்ச்சி நிரல்
சனவரி 15, 2012
மங்கல விளக்கேற்றல் – 5 மணித்துளி
தமிழ்மறை ஓதல், தழிழ்த்தாய் வாழ்த்து, கனடாப்பண்- 10 மணித்துளி
அமைதி வணக்கம் – 2 மணித்துளி
வரவேற்பு நடனம் – நிரோதினி பரராசசிங்கத்தின் மாணவியர் – 10 மணித்துளி
வரவேற்புரை – திரு. மு.தியாகலிங்கம், செயலாளர்; தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் – 5 மணித்துளி
கோலாட்டம் – மதங்கசூளாமணி நடனப்பள்ளி மாணவியர் – 10 மணித்துளி
சிறப்புரை – திரு வீரசுப்பிரமணியம் -5 மணித்துளி
கரகாட்டம் – இந்தோ- கனடா நடனப்பள்ளி மாணவியர் – 10 மணித்துளி
சிறப்புரை – திரு என் .லோகேந்திரலிங்கம் – 5 மணித்துளி
கோலாட்டம் – இந்தோ-கனடா நடனப்பள்ளி மாணவியர் – 10 மணித்துளி
தமிழ்ப் பண்பாடு – கையேடு வெளியீடு
இடை வேளை – 10 மணித்துளி
மறுவாழ்வு – மண்வெட்டி, கத்தி, தண்ணீர் இறைக்கும் யந்திரம் நிதி சேகரிப்பு 5 மணித்துளி
உழவர் நடனம் – சக்தி நடனப்பள்ளி மாணவியர் – 10 மணித்துளி
தலைமை விருந்தினர் உரை – 10 மணித்துளி
தில்லானா – இந்தோ-கனடா நடனப்பள்ளி மாணவியர் – 10 மணித்துளி
தலைமை உரை – திரு. நக்கீரன், தலைவர், தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் – 5 மணித்துளி
தூய தமிழ்ப் பெயருக்கான பரிசு வழங்கல் – 30 மணித்துளி
நன்றியுரை செயலாளர் – தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் – 5 மணித்துளி
 


Thamil Creative Writers Association (TCWA) cordially invites you to the

THAMIL NEW YEAR 2043, PONGAL AND  ST. THIRUVALLUVAR BIRTH DAY FESTIVAL

On Sunday January 15th at 5.30 pm

At Murugan(Kandasamy) Temple Hall, 733 Birchmount Road (Birchmount/Eglinton)

Thai (January 15) marks the birth of Thamil New Year 2043 counted from the birth of St.Thiruvalluvar author o Thirukkural.

Thirukkural is the world’s foremost treatise on ethics, poetics and love encompassing every aspect of human life.

By celebrating this festival Thamils in Diaspora wish to perpetuate their rich culture, tradition, literary opulence and socio-economic aspirations.

Please RSVP to  tcwacan@yahoo.ca by Friday 13th January, 2012.

Contact Tel.Nos. (416)  281 1165  (416 321 3343) (416 335 9462) 


சனவரி 05, 2012

பொதுக் குழுக் கூட்டம்;

மேற்படி கூட்டம் எதிர்வரும் சனவரி 7, 2012  (சனிக்கிழமை) தமிழ்க் கலை தொழில்நுட்பக் கல்லூரியில் (3150 எக்லிங்டன் அவெனியூ கிழக்கு, ரொறன்ரோ) மாலை 5.00 மணிக்கு இடம் பெறும்.

ஆண்டு தோறும் தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் கொண்டாடும் தமிழ்ப் புத்தாண்டு,  பொங்கல், திருவள்ளுவர் பிறந்த நாள் (முப்பெரும் விழா)  பற்றிய ஒழுங்கள் குறித்து  இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.  உறுப்பினர்கள் அனைவரும் தவறாது வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பவானி தர்மகுலசிங்கம்
முருகேசு தியாகலிங்கம்

இணைச் செயலாளர்கள்

 தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் விடுக்கும் அறிவித்தல்

தனித் தமிழ் பெயர்களுக்கு 1,500 வெள்ளிகள் பரிசு 2006 – 2011

தனித்தமிழ் பெயர்களுக்கு ஆயிரம் வெள்ளிப் பரிசுத் திட்டத்தில் பங்குபற்ற விரும்பும் பெற்றோர்களிடம் இருந்து அதற்கான விண்ணப்பங்கள் கேட்கப்படுகின்றன.

2006 – 2011 ஆம் ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளின் பெற்றோர்கள் மட்டும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம். அதற்கான விண்ணப்பங்கள் யாவும் 2011 தைத் திங்கள் (சனவரி) 10 ஆம் நாளுக்கு முன் கீழ்க் கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும். அதன் பின்னர் கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா. ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்கள் தகுதிபெறும் போது குடவோலை மூலம் பரிசு பெறுபவர் தேர்ந்தெடுக்கப் படுவர். விழா நாளன்று நேரில் கலந்து கொள்பவர் மட்டும் பரிசுக்கு உரித்துடையவர் ஆவர். கழகத்தின் முடிவே இறுதியானது. கனடா முருகன் (கந்தசாமி) கோயில் அரங்கில் நடைபெற இருக்கும் தமிழ்ப் புத்தாண்டு 2043, தைப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் பிறந்த நாள் விழாவில் (சனவரி 15, 2012 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணி) பரிசு வழங்கப்படும்.

விண்ணப்பப் படிவம்

(1) குழந்தையின் பெயர்—————————————
(2) பிறந்த நாள்——————————-
(3) பிறந்த இடம்————————–
(4) தாயாரின் பெயர்———————————————–
(5) தந்தையாரின் பெயர்———————————-
(6) முகவரி—————————————————————
(7) தொ.பே. இல.——————————————–

குழந்தையின் பெயரை உறுதிப் படுத்தும் பிறப்புச் சான்றிதழ் (படி) இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் தரப்பட்டுள்ள தரவுகள் முற்றிலும் உண்மையானவை என இத்தால் உறுதிப் படுத்துகிறோம்.

தாயார் கையெழுத்து———————————————


தந்தையார் கையெழுத்து.————————————–


அனுப்ப வேண்டிய முகவரி

Secretary,
TCWA,
56 Littles Road
Scarborough
Ontario. M1B 5C5

About editor 3016 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply