கியூபா பயணக் கட்டுரை (61 -70)

கியூபா பயணக் கட்டுரை
ஒரு பருந்தின் நிழலில்
கியூபா மீது அமெரிக்க கடல் முற்றுகை
(81)

பிடல் கஸ்றோ நீண்ட நேரம் பேசக் கூடிய வல்லமை படைத்தவர். அவருடைய மே நாள் பேச்சுக்கள் நான்கு அய்ந்து மணித்தியாலம் நீடிக்கும். அதில் பெரும்பகுதி அமெரிக்காவைச் சாடுவதாக இருக்கும். அவருடைய பேச்சை மே 01, 1961 அன்று மாலை ஹவானா வானொலி நேரடி ஒலிபரப்புச் செய்தது.

‘ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளுக்கு எதிரான போராட்டத்தில் தாழ்மையான, நேர்மையான குடி மக்களின் குருதி கொட்டப்பட்டது. ஆனால், எங்கள் நாட்டின் மீது படையெடுக்க, எங்கள் புரட்சியை ஒடுக்க, எங்களது சாதனைகளை அழிக்க, எங்கள் கரும்புத் தோட்டங்களை எரிக்க ஏகாதிபத்தியம் எப்படிப்பட்டவர்களை அனுப்பி வைத்தது? (தாக்குதல்பற்றி கஸ்றோவினால் கொடுக்கப்பட்ட தரவுகளின்படி எதிர்ப் புரட்சிப் படையில் இடம் பெற்றவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் கியூபாவில் பத்து இலட்சம் ஏக்கர் காணி, பத்தாயிரம் வீடுகள், எழுபது தொழிற்சாலைகள், பத்து சர்க்கரை ஆலைகள், அய்ந்து சுரங்கங்கள், இரண்டு காப்பகங்கள் சொந்தமாக இருந்தன).

“எங்களது மூன்று விமானதளங்கள் தாக்கப்பட்டபோது, அமெரிக்காவின் கைக்கூலிகள் விமான தளத்தைத் தாக்கியவர்கள் கியூபா நாட்டு விமானிகள் என வெளியுலகுக்குக் கூறிக் கொண்டிருந்தார்கள். எங்கள் நாட்டின் மீது திட்டமிட்டு குண்டுகளைப் போட்டுவிட்டு அவை கியூபா நாட்டின் மீது கியூபா விமானிகள் போட்டவை என வெளியுலகுக்குச் சொன்னார்கள். தாக்குதல் விமானங்களில் எங்களது அடையாள சின்னங்களை வரைந்து வைத்தார்கள்.

வேறொன்றும் வேண்டாம். இந்தத் தாக்குதல் ஒன்றே ஏகாதிபத்தியத்தின் செயல்கள் எவ்வளவு தாழ்வானவை, கீழ்த்தரமானவை என்பதைக் காட்டப் போதுமானவை.
பன்றி வளைகுடா தாக்குதலில் அமெரிக்காவின் நேரடித் தலையீடு அய்நா அவையின் சட்ட திட்டத்திற்கு முரணானவை. அமெரிக்க அரசுகளின் அமைப்பின் (ழுசபயnணையவழைn ழக வாந யுஅநசiஉயn ளுவயவநள) விதிமுறைகளுக்கும் (விதி 18 மற்றும் 25) மாறானவை.

முன்னர் குறிப்பிட்டது போலத் தாக்குதலைத் திட்டமிட்டு, அதற்கான ஆட்களைத் திரட்டி, பயிற்சி அளித்து, கூலி கொடுத்துத் தரையிறக்கியது அமெரிக்காதான். எதிர்ப் புரட்சிப் படைக்கு வேண்டிய விமானங்கள், கப்பல்கள், தாங்கிகள், இராணுவ தளபாடங்கள் போன்றவற்றைக் கொடுத்து உதவிய நாடும் அமெரிக்காதான். இடைக்கால அரசை அமைத்து அதற்கு வேண்டிய நிதியை உதவியதும் அமெரிக்காதான். பன்றிக் குடா கடல்கரையில் முதலில் இறங்கிய தவளை வீரர்களும் அமெரிக்க நாட்டவர்கள்தான்.
ஏப்ரில் 20 ஆம் நாள் அமெரிக்க ஏடுகளின் ஆசிரியர்கள் மத்தியில் பேசிய சனாதிபதி கென்னடி,

“இந்தப் போராட்டம் கியூபாவின் தேசபக்தர்களால் சர்வாதிகாரி கஸ்றோவுக்கு எதிராக மேற்கொண்ட போராட்டமாகும். எங்களது அனுதாபம் யார் பக்கம் உள்ளதென்பதை நாங்கள் மூடி மறைக்க விரும்பவில்லை. யாரும் அதனை எதிர்பார்க்கவும் கூடாது. நாங்கள் திரும்பவும் திரும்பவும் ஒன்றை வலியுறுத்துகிறோம். அமெரிக்க நாட்டின் படைகள் எந்தச் சந்தர்ப்பத்திலும் நேரடியாகத் தலையிடாது. ஆனால், எங்களது பொறுமை எல்லை கடந்தது அன்று இந்தக் கண்டத்தின் நாடுகள் வெளியில் இருந்து ஊடுருவல் செய்யும் கம்யூனிசத்துக்கு எதிராகச் செயல்படத் தவறினால், அந்தப் பொறுப்பைத் தட்டிக் கழித்தால், நான் ஒன்றை மட்டும் தெளிவாக்க விரும்புகிறேன், இந்த அரசு தனது அடிப்படைக் கடமையைச் செய்ய ஒருபோதும் பின்நிற்காது. எங்களது அடிப்படைக் கடமை இந்த நாட்டின் பாதுகாப்புப்பற்றியதாகும்.”

றிச்சார்ட் ஜே வோல்ரன் (Richard J Walton)  என்பவர் தான் எழுதிய பனிப் போரும் எதிர்ப் புரட்;சியும்: யோன் எவ் கென்னடியின் வெளியுறவுக் கொள்கை ( Cold War and Counter -Revolution: The Foreign Policy of John F. Kennedy) என்ற நூலில் கென்னடியின் பேச்சையிட்டுக் கருத்துத் தெரிவிக்கையில் ‘கென்னடி மன்னிப்புக் கேட்கவில்லை, மாறாக எச்சரிக்கைகளை விடுத்தார். மொன்றோ கோட்பாட்டிற்கு ஒரு திருத்தம் கொண்டுவந்தார். இலத்தின் அமெரிக்க நாடுகள் தங்கள் அரசுகளைத் தேர்ந்தெடுப்பதற்குச் சுதந்திரம் உடையவர்கள். ஆனால் அது கம்யூனிச நாடாக இல்லாது இருக்கும் மட்டுந்தான்.’

இதற்கிடையில் பன்றிக் குடாத் தாக்குதலில் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட தலைக் குனிவை நிவர்த்தி செய்யும் முகமாக கஸ்றோவை எப்படியும் தீர்த்துக் கட்ட வேண்டும் என்ற வெறி அமெரிக்க ஆட்சியாளரிடம் அதிகரித்தது. அதனைச் செயல்ப் படுத்த ‘கீரி நடவடிக்கை’ (‘Operation Mongoose’)  என்ற திட்டம் சட்டமா அதிபர் றொபேர்ட் எவ். கென்னடியால் (Attorney General Robert F. Kennedy) தீட்டப்பட்டது. இவர் சனாதிபதி யோன் கென்னடியின் உடன்பிறப்பாவார்.

கென்னடியின் ஆட்சி கியூபா மீது கொண்டிருந்த கோபத்தைப் புரிந்து கொள்வதற்குக் கென்னடி சகோதரர்களை, முக்கியமாக றொபேர்ட் கென்னடியைப் புரிந்து கொள்ள வேண்டும். பன்றி வளைகுடாவில் நடந்த முதல் சுற்றுப் போட்டியில் கஸ்றோ மிக எளிதாக வெற்றி பெற்றுவிட்டார், கென்னடி அணியை அவர் தோற்கடித்துவிட்டார், அதையிட்டு கென்னடி சகோதரர்கள் மிகவும் கடுப்பாக இருந்தார்கள். கஸ்றோ வெற்றிவாகை சூடியதை அவர்களால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. எனவே சனாதிபதியும் அவரது சகோதரரும் தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தைப் போக்கிக் கொள்ள என்ன விலை கொடுத்தும் கஸ்றோவின் ஆட்சியைக் கவிழ்க்க ஆயத்தமானார்கள்.

1962 மார்ச்சு முதல் நாள் அமெரிக்க இராணுவம் ஒரு அறிக்கையை சனாதிபதி கென்னடிக்கு அனுப்பி வைத்தது. அந்த அறிக்கைக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு ‘கியூபாவை சீண்டி விடுவதற்கு, அலைக்கழிப்பதற்கு அல்லது ஊடறப்புதற்குச் சில சாத்தியமான செயல்பாடுகள்’  (Possible Actions to Provoke, Harass or Disrupt Cuba) என்பதாகும். அதில் பல யோசனைகள் சொல்லப்பட்டிருந்தன. அதில் ஒன்று  Operation Bingo என்ற திட்டமாகும். கியூபாவில் அமெரிக்காவிற்குக் குத்தகை கொடுக்கப்பட்டுள்ள குவந்தனாமோ வளைகுடாத் (Guantánamo Bay ) தளம் மீது ஒரு போலியான படையெடுப்பை மேற்கொள்வது. அதனைச் சாட்டாக வைத்து ஹவானா மீது தீவிர தாக்குதலைத் தொடுப்பது. இன்னொரு திட்டத்தின் பெயர் ‘கீழ்த்தரமான சூழ்ச்சி நடவடிக்கை’ ( Operation Dirty Trick) என்பதாகும்.

இதன் கீழ் விண்வெளி வீரர் யோன் கிலன் (John Glenn)  1962 ஆம் ஆண்டு விண்வெளிக் கப்பலில் நிலாவுகுப் செலவு (பயணம்) செய்யும்போது அது நொருங்க நேரிட்டால் பழியைக் கஸ்றோவின் தலையில் போடுவது. மூன்றாவது திட்டத்தின் பெயர் சொகுசான கால நடவடிக்கை’ (Operation Good Times). இதில் கஸ்றோ இரண்டு கவர்ச்சிக் கன்னிகள் மத்தியில் ஒரு ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்ட அறையில் உல்லாசமாக இருந்து கொண்டு மேசையில் பரவியிருக்கும் விதம் விதமான சாப்பாட்டைக் கபளீகரம் செய்வது போன்ற ஒரு போலிப் படத்தைத் தயாரித்து அதனை ஏடுகளில் பிரசுரிப்பது. படத்துக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு ‘எனது (உணவு) பங்கீடு வித்தியாசமானது’ (‘My ration is different‘) என்பதாகும். (அமெரிக்காவில் இருந்து வெளிவரும் News & World World Report (10/26/1968)  ஏடு வெளியிட்ட தகவலின்படி முன்னர் மூடுமந்திரமாக வைக்கப்பட்டிருந்த ஆவணங்களில் அண்ணளவாக 10,000 பக்கங்கள் இப்போது மெல்லப் பகிரங்கப் படுத்தப்பட்டு விட்டன.)

சிஅய்ஏ யின் இன்னொரு திட்டத்தின்படி மேபியாக் கும்பலைக் கூலிக்கு அமர்த்தி கஸ்றோவைத் தீர்த்துக் கட்டுவது, நஞ்சு தடவிய நீச்சல் உடையை (Scuba swimming suit)  கஸ்றோவுக்கு அன்பளிப்பாகக் கொடுத்துக் கொல்லுவது, அல்லது ஏதாவது ஒரு போலித் தாக்குதலை கியூபா நடத்தியதாக சோடனை செய்துவிட்டு அதைச் சாக்காக வைத்து நேரடியாகக் கியூபா மீது இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொள்வது என்பதாகும்.
கீரி நடவடிக்கைக்குப் பொறுப்பாக இருந்த பிரிகேடியர் எட்வேட் ஜி. லான்ஸ்டேல் (Brigadier Edward F Lansdale) இந்தத் திட்டங்களைக் கூட்டுத் தளபதிகளுக்கு அனுப்பி அவர்களது கருத்தை அறிய முயற்சித்தார். கிடைக்கும் தகவல்களின்படி 1962 மார்ச்சு 13 இல் கூட்டுத் தளபதிகள் “திட்டத்திற்கு ஏதுவான யோசனைகள்” என அதனை அங்கீகரித்தார்கள். ஆனால், இவற்றில் ஒன்றையேனும் நடைமுறைப் படுத்தியதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை.

இப்போது நாற்பது ஆண்டுகள் கழிந்தும் அமெரிக்காவின் அரச பயங்கரவாதம் ஓய்ந்தபாடாயில்லை. தனக்குப் பிடிக்காத ஆட்சித் தலைவர்களைக் கவிழ்ப்பது அல்லது கொலை செய்வது அல்லது கூலிக் குழுக்களை வைத்துக் கொலை செய்விப்பது ஆகியவற்றில் அமெரிக்கா முன்னணியில் திகழ்கிறது. எடுத்துக்காட்டாக இராக் அதிபர் சதாம் குசேனைக் கொலை செய்ய அல்லும் பகலும் அனவரதமும் அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது. அதனை எந்தக் கூச்சமோ வெட்கமோ இன்றிப் பகிரங்கமாகச் சொல்கிறது! இராக் நாட்டின் ஆட்சியைக் கவிழ்க்க எத்தனிக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் அதிருப்பதியாளர்களுக்கும் அமெரிக்கா பகிரங்கமாகக் கோடிக் கணக்கில் நிதியுதவிகளை வாரி இறைக்குகிறது!

யார் யார் அமெரிக்காவிற்குக் கொடி பிடிக்கச் சம்மதிக்கிறார்களோ அவர்கள் எல்லாம் அமெரிக்காவின் “செல்லப்பிள்ளைகள்” எனக் கணிக்கப்பட்டார்கள். ஆப்கனிஸ்தானில் சோவியத் படையெடுப்புக்கு எதிராகப் போரிட்ட இஸ்லாமிய போராளிக் குழுக்களை அன்றைய அமெரிக்க சனாதிபதி “சுதந்திரப் போராட்ட வீரர்கள்” என்று வர்ணித்தார். வெள்ளை மாளிகையில் அவர்களுக்கு செங்கம்பள வரவேற்புக் கொடுக்கப்பட்டது. அதில் இன்று அமெரிக்காவால் இரத்தக் காடேறி என்று வசைபாடப்படும் பின் லேடனும் ஒருவர்!

‘பன்றி வளைகுடா யுத்தம் முடிவுற்றாலும் அது கியூபாவில் சோவியத் அணு ஏவுகணை தொடர்பான இன்னுமொரு பனிப் போருக்கு மேடை அமைத்துக் கொடுத்தது’ என முன்னர் குறிப்பிட்டிருந்தேன் (அத்தியாயம் 80). அதற்கான பிள்ளையார் சுழியை சனாதிபதி கென்னடி 1962 ஒக்தோபர் 16 இல் போட்டார்.

அன்றைய நாள் நண்பகல் சனாதிபதி கென்னடி தனது நெருங்கிய ஆலோசகர்களை வெள்ளை மாளிகைக்கு அவசரமாக அழைத்தார். அதற்கு முதல் நாள் இரவு சிஐஏ கியூபாவில் சோவியத் நாடு அணு ஏவுகணைகளை நிர்மாணம் செய்யும் காட்சிப் படங்களை சமர்ப்பித்திருந்தது. கியூபா புளோரிடா கடலோரத்தில் இருந்து 90 மைல்கள் தூரத்தில் இருக்கிறது என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த சங்கதி.

இப்போது சனாதிபதி கென்னடி மற்றும் அவரது ஆலோசகர்கள் முன் இருந்த பெரிய சிக்கல் இந்தப் புதிய ஆபத்தை எப்படி எதிர் கொள்வது என்பதாகும். பாதுகாப்பு அமைச்சர் றொபேர்ட் மக்னமாறா (Robert McNamara) மூன்று வழிகள் இருப்பதாகச் சொல்லி அவற்றை சனாதிபதிக்கு ஒவ்வொன்றாக விளக்கினார்.

முதலாவது ‘அரசியல் மட்டத்தில்’ நடவடிக்கை எடுப்பது. கஸ்றோ, குருச்சோவ் மற்றும் அமெரிக்காவின் உறவு நாட்டுத் தலைவர்களை அணுகி சிக்கலை இராசதந்திர மூலம் அவிழ்ப்பது. இந்த வழி வெற்றி பெறும் என்பது நிச்சயமில்லை.

இரண்டாவது போர் விமானங்களைப் பயன்படுத்தி ஒரு ”இராணுவ” நடவடிக்கை மூலம் சோவியத் ஏவுகணைகளைத் தாக்கி நிர்மூலமாக்குவது.

மூன்றாவது போர்க்கப்பல்களைப் பயன்படுத்தி கியூபாவை ஒரு கடல்படை முற்றுகைக்கு உள்ளாக்குவது.

இதில் எவற்றையேனும் மேற்கொள்ளும்போது சோவியத் நாட்டின் எதிர் நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பதைக் கணிப்பது வில்லங்கமாக இருந்தது. சோவியத் நாடு அமெரிக்காவைத் தாக்கலாம். அதன்போது அணுக்குண்டுகளை வீசும் சாத்தியமும் இருந்தது. அப்படி வீசினால் அணு ஆயுத யுத்தம் இரு நாடுகளுக்கும் இடையில் மூழும் அபாயம் இருந்தது.

நீண்ட நேர விவாதத்தின் பின்னர் கிய10பா மீது கடல் முற்றுகை ஒன்றை இடுவது என்று தீர்மானிக்கப் பட்டது. இதன்படி ஏவுகணைகளை ஏற்றிக் கொண்டு கியூபா வரும் சோவியத் கப்பல்களை நடுக்கடலில் அமெரிக்கப் போர்க் கப்பல்கள் வழிமறிக்கும். மீறி அவை கியூபாவிற்குப் பயணத்தைத் தொடர எத்தனித்தால் அவை கடலில் மூழ்கடிக்கப்படும்.

கியூபா பயணக் கட்டுரை
ஒரு பருந்தின் நிழலில்
கியூபா ஏவுகணை நெருக்கடி
(82)

நல்ல காலமாக சோவியத் நாட்டின் ஆட்சித் தலைவர் நிக்கிற்ரா குருச்சேவ் (Nikita Khrushchev)  ஏவுகணைகளை ஏற்றிச் சென்ற கப்பல்களைத் திருப்பி அழைக்க முடிவு செய்தார்.

முப்பது ஆண்டுகள் கழித்து ( சனவரி, 1992) ஹவானாவில் நடந்த ஒரு மாநாட்டில் சோவியத் இராணுவத் தளபதி அனதொலி கிறிப்கொவ் (Anatoly Girbkov)  1962 ஆம் ஆண்டு சோவியத்துக்கும் -அமெரிக்காவிற்கும் இடையில் போர் மூழும் அபாயம் எப்படித் தவிர்க்கப்பட்டது என்பதை விளக்கினார்.

சோவியத் நாடு கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை மட்டும் அல்லாமல் அமெரிக்கா படையெடுக்கும் பட்சத்தில் அதனை முறியடிப்பதற்குக் கியூபாவில் 9 போர்த்திறம் சார்ந்த ஏவுகணைகளை (tactical missiles)  நிறுத்தி வைத்திருந்தது. அவற்றைச் சோவியத் இராணுவத் தலைமையகத்தின் மேலதிக அனுமதி எதுவுமின்றி ஏவும் அதிகாரம் கியூபாவில் இருந்த களக் கட்டளைத்தளபதிகளுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது.

அமெரிக்கா கியூபா மீது படையெடுக்க வேண்டும் என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் சிலர் சனாதிபதி கென்னடிக்கு ஆலோசனை சொல்லி இருந்தார்கள். அந்த யோசனையின்படி கென்னடி செயல்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்?

இந்தக் கேள்விக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மக்நமாறா (Secretary of Defence McNamara) ஒரு புத்தகத்துக்கு எழுதிய முகவுரையில் பதில் இறுத்திருக்கிறார்.

‘அமெரிக்கப் படைகள் போர்த்திறம் வாய்ந்த ஏவுகணைகளின் தாக்குதலுக்கு உள்ளாகி இருந்தால் அமெரிக்கா அணு ஏவுகணைகளைப் பயன்படுத்தி எதிர்த்தாக்குதலை நடத்தியிருக்காது என்று யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். அப்படி நடந்திருந்தால் அது எதில் போய் முடிந்திருக்கும்? முழு அளவிலான பேரிடர் ஏற்பட்டிருக்கும்.’

நான்கு சகாப்தங்கள் கழித்தும் அமெரிக்கா. சோவியத், கியூபா இந்த மூன்று நாடுகளும் உலகத்தை அழிவின் விளிம்பிற்கு இட்டுச் சென்ற ‘கியூபா ஏவுகணை நெருக்கடி’ (Cuba Missile Crisis பற்றிய புதிய முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. பனிப்போர்க் காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் பலவற்றில் இதுவே பலரது கவனத்தை ஈர்ந்துள்ளது. நூற்றுக் கணக்கான நூல்கள், கட்டுரைகள், கருத்துரைகள் (commentaries) எழுதப்பட்டுள்ளன. இருபதாம் நூற்றாண்டின் அனைத்துலக நெருக்கடிகளில் ‘கியூபா ஏவுகணை நெருக்கடி’ தான் பலரின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

கென்னடியின் பேச்சுக்களை எழுதும் (Speech writer) தியோடோ சொறென்சன் (Theodore Sorensen) “அணுக்குண்டு யுத்தத்தின் துப்பாக்கிக் குழாய்’ (‘‘the gun barrel of nuclear war) என அதனை வர்ணித்துள்ளார்.

பனிப்போர் ஒரு முடிவுக்கு வந்தாலும் ‘கியூபா ஏவுகணை நெருக்கடி’ எதற்காக எப்படி உருவானது? அத்தகைய நெருக்கடிகளையும் பலத்த அழிவுகளையும் எதிர் காலத்தில் எப்படித் தவிர்த்துக் கொள்ளலாம்? என்பதுபற்றிய ஆய்வு அவசியமாகும். அதற்குத் துணையாக 1987ல் ‘கியூபா ஏவுகணை நெருக்கடி’ தொடர்பான பாதுகாப்புச் சிக்கலற்ற சகல ஆவணங்களையும் தகவலுக்கான சுதந்திரச் சட்டத்தின் கீழ் (Freedom of Information) வெளிக் கொணரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அதன் மூலம் பெறப்பட்ட தகவல்கள் புலமையாளர்கள். மாணவர்கள், ஏட்டாளர்கள், அக்கறையுடைய குடிமக்கள் போன்றவர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், இன்னும் ஆயிரக்கணக்கான ஆவணங்கள் அமெரிக்காவின் பாதுகாப்பைக் காரணம் காட்டி பகிரங்கப்படுத்தப்படாது பதுக்கி வைக்கப்பட்டுள்ளன.

1962ம் ஆண்டு ஒக்தோபர் திங்கள் 28 ஆம் நாள், அதாவது குருச்சேவ் ஏவுகணைகளைத் திருப்பி எடுக்க ஒத்துக்கொண்டதற்கு 13 நாள்கள் முந்தி, கியூபாவில் சோவியத் ஏவுகணைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ‘கியூபா ஏவுகணை நெருக்கடி’ பேருரு எடுத்தது. அது தொடர்ந்து அதே ஆண்டு நொவம்பர் மாதம் வரை நீடித்தது.

கியூபாவில் இருந்து அமெரிக்கா மீது அணு ஏவுகணைகளை ஏவினால் அது அமெரிக்கா மீது சோவியத் தொடுத்த தாக்குதலாகக் கருதப்படும் எனப் பிரகடனம் செய்த கென்னடி அந்த ஏவுகணைகளைத் திருப்பிப் பெறுமாறு சோவியத் நாட்டுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

அமெரிக்கா- சோவியத் இரண்டு நாடுகளிலும் இறுக்கம் அதிகரிக்க ஆரம்பித்தது. கென்னடி ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் கீழ்மட்ட கண்காணிப்பு வேவுக்கு (low level surveillance) உத்தரவு பிறப்பித்தார். ஒக்தோபர் 25 ஆம் நாள் கென்னடி இராணுவ ஆயத்த நிலையை இரண்டாவது கட்டத்துக்கு ( DEFCON 2) உயர்த்தினார்.

அடுத்த நாள் ஒக்தோபர் 26 ஆம் நாள் சோவியத் தலைவர் குருசேவ்விடம் இருந்து ஒரு உணர்ச்சிபூர்வமான கடிதம் கென்னடிக்கு வந்து சேர்ந்தது.

‘உலகத்தின் நலம் பற்றி உங்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் என்னை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன். எல்லோருக்கும் அமைதி தேவைப்படுகிறது. அறிவை இழக்காவிட்டால் உடைமைவாதிகளுக்கு அமைதி தேவைப்படுகிறது. அதற்கு மேலாக பொதுவுடமைவாதிகளுக்கு அமைதி தேவைப்படுகிறது………………..சனாதிபதி அவர்களே! உங்களுக்கும் உலகின் தலைவிதிபற்றி, போரினால் ஏற்படக் கூடிய அழிவுகள் பற்றிக் கவலை இல்லாமல் இருக்க முடியாது. போரினால் நீங்கள் அடைகிற நன்மை என்ன? நீங்கள் எங்களுக்குப் போர்ப் பயமுறுத்தல் விடுக்கிறீர்கள். ஆனால், உங்களுக்குத் தெரியும். பதிலடியாக நாங்கள் தரும்போது எதை நாம் அனுபவித்தோமோ அதையே நீங்கள் அனுபவிக்க வேண்டி இருக்கும் ……………………………..நாங்கள் வாழ விரும்புகிறோம். உங்கள் நாட்டை அழிக்க நாம் விரும்பவில்லை. மாறாக அமைதியான முறையில் உங்கள் நாட்டோடு வேறு முனைகளில் போட்டி போட விரும்புகிறோம். நாங்கள் உங்களோடு சச்சரவு செய்கிறோம். காரணம் கருதியற்கோட்பாட்டு கேள்விகள் தொடர்பாக (னைநழடழபiஉயட ஙரநளவழைளெ)   எங்களுக்கு இடையே வேற்றுமை நிலவுகிறது. ஆனால், உலகம்பற்றிய எங்களது பார்வை என்னவென்றால் கருதியற்கோட்பாட்டுக் கேள்விகள் மற்றும் பொருளாதார சிக்கல்கள் இராணுவ அடிப்படையில் அல்லாது அமைதியான போட்டி மூலம் தீர்க்கப்பட வேண்டும்…’

இந்தக் கடிதத்தில் குருசேவ் அமெரிக்கா கியூபாவைத் தாக்காது என்று உறுதிமொழி தந்தால் சோவியத் நாடு தனது ஏவுகணைகளையும் இராணுவத்தையும் கியூபாவில் இருந்து திருப்பி அழைத்துக் கொள்ளும்.

ஒக்தோபர் 27 நெருக்கடியின் மிக மோசமான நாள். அமெரிக்க யூ-2 உளவு விமானம் கியூபாவின் வான்பரப்பில் வைத்துச் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதை அடுத்து குருச்சேவ் தனது இரண்டாவது கடிதத்தை கென்னடிக்கு அனுப்பி வைத்தார். அதில் அமெரிக்கா துருக்கியில் இருந்து ஏவுகணைகளை நீக்கிக் கொண்டால் சோவியத் நாடும் கிய10பாவில் இருந்து ஏவுகணைகளை நீக்கிக் கொள்ளும் என்று குருச்சேவ் எழுதியிருந்தார்.

சட்டமா அதிபர் றொபேர்ட் கென்னடி குருசேவ்வின் இரண்டாவது கடிதத்தைப் புறக்கணித்து விட்டு முதலாவது கடிதத்தில் சொல்லப்பட்ட யோசனைகளுக்கு இசைவு தெரிவிக்கலாம் எனச் சொன்னார். உடனே சோவியத் தூதுவர் அனரோலி டொப்றினின் (Anatoly Dobrynin) அவர்களோடு தொடர்பு கொண்டு சோவியத் தலைவர் குருச்சேவின் முதல் கடிதத்தில் குறித்துள்ள யோசனைகளுக்கு இசைவு தெரிவிப்பதாக அமெரிக்க சனாதிபதி கென்னடி அறிவித்தார்.

ஒக்தோபர் 28 ஆம் நாள் சோவியத் நாடு கியூபாவில் உள்ள ஏவுகணைகளை அகற்றும் என்றும் அமெரிக்கா கியூபா மீது தாக்குதல் தொடுக்காது என்று தான் நம்புவதாகவும் குருச்சேவ் அறிவித்தார். அன்றிலிருந்து இரு பக்கத்திலும் இறுக்கம் குறைய ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து இரண்டு நாடுகளுக்கும் இடையில் பேச்சு வார்த்தை தொடங்கியது. சோவியத் நாடு கியூபாவில் இருந்து குண்டு வீசும் இலகு விமானங்களை (Soviet light bombers) விலக்கிக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா புதிய நிபந்தனை ஒன்றை விதித்தது. அதே நேரம் கியூபா மீது எந்த வடிவில் எந்த நிபந்தனையின் கீழும் அமெரிக்க படையெடுப்பு நடைபெறாது என்ற வாக்குறுதிகள் தெளிவாக்கப்பட்டன. இறுதியில் இவற்றை அடக்கிய ஒப்பந்தம் ஒன்று இரு சாராருக்கும் இடையில் கைச்சாத்தாகியது.

கியூபாவில் இருந்த சோவியத் ஏவுகணைகள் அமெரிக்க கண்காணிப்பின் கீழ் அப்புறப்படுத்தப்பட்டன. அதன் விளைவாக ‘ஏவுகணை நெருக்கடி’ ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

அமெரிக்கா கியூபாவைத் தாக்க மாட்டாது என்ற உடன்பாட்டைப் பகிரங்கப் படுத்தவில்லை. ஆனால், பின்னர் அமெரிக்கா கடைப்பிடித்த கொள்கை அப்படியொரு புரிந்துணர்வு ஒப்பந்தம் அதாவது ‘கியூபாவில் கைவைப்பதில்லை’ (”Hands off) என்ற உடன்பாட்டை உறுதி செய்தது.

இந்த நெருக்கடி சம்பந்தப்பட்ட நாடுகள் மத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. சோவியத்-அமெரிக்க உறவில் ஒரு வெதுவெதுப்பு நிலையைத் தோற்றுவித்தது. அதே நேரம் சோவியத் – கியூபா உறவில் விரிசல் ஏற்பட்டது.

கென்னடி-குருச்சேவ் பேச்சு வார்த்தையின்போதும் சரி, அதன்பின் ஒருதலைப்பட்ச ஏவுகணை மற்றும் குண்டு வீச்சு விமானங்களை விலக்கிக் கொண்ட போதும் சரி கஸ்றோவிடம் ஆலோசனை கேட்கப்படவில்லை. அது கஸ்றோவின் தற்பெருமைக்கும் (pசனைந) தன்மானத்துக்கும்  (pசநளவபைந) ஊறு விளைவிப்பதாக அமைந்தது. மேலும் கஸ்றோவைப் பொறுத்தளவில் அது ஒரு பெரிய தலைக்குனிவைக் கொடுக்கும் அனுபவமாக இருந்தது. நெருக்கடி காலம் முழுதும் கஸ்றோ அனைத்துலக அரசியல் சதுரங்கப் பலகையில் வெறும் பகடக்காயாக ஓரம் கட்டப்பட்டார்.

கஸ்றோ சோவியத் – அமெரிக்காவிற்கு இடையில் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எதிர்ப்பதாகக் கூறி அதனை நிராகரித்தார். அது மட்டும் அல்லாது கியூபாவையும் அதன் புரட்சியையும் பாதுகாப்பதற்கு எவ்வளவு தூரம் சோவியத் நாடு தயாராக இருக்கிறது என கஸ்றோ பகிரங்கமாக வினாவினார்.

அந்த நேரத்தில் ‘கியூபா ஏவுகணை நெருக்கடி’ சுமுகமாகத் தீர்க்கப்பட்டது அமெரிக்காவிற்கு வெற்றி என்று மார்தட்டப்பட்டது. ஆனால், அந்த வெற்றி ஒரு நிலையில்லாத (நிhநஅநசயட) வெற்றியாகும். தாக்குதல் ஆயுதங்களை கியூபாவில் இருந்து அப்புறப்படுத்துவதற்கு அமெரிக்கா தனக்குப் பக்கத்தில் சில மைல்கள் தூரத்தில் ஒரு பொதுவுடமை நாடு இருப்பதை ஏற்கும்படி நேரிட்டது. அது மட்டும் அல்லாமல் ஆயுதங்கள் அப்புறப்படுத்தப்பட்டது தற்காலிக வெற்றியே. மிக விரைவில் சோவியத் நாடு கியூபாவை அண்டிய கடல் பிரதேசத்தில் அணுநீர்மூழ்கிக் கப்பல்களை கொண்டுவந்து நிறுத்தியது!

சோவியத் நாடு கஸ்றோவின் சினத்தைத் தணிக்கும் முகமாக கியூபாவிற்கு கூடுதல் உதவிகளை அளிக்கத் தொடங்கியது. 1963 ஆம் ஆண்டு ஏப்ரில்- மே மாதம் கஸ்றோ சோவியத் நாட்டுக்குச் சென்ற பொழுது அவருக்கு மகத்தான வரவேற்புக் கொடுக்கப்பட்டது.

எழுபதுகளில் சோவியத் நாட்டின் பொருளாதார, இராணுவ உதவிகள் அதிகரிக்க ஆரம்பித்தன. இதனால் கியூபா சோவியத் பக்கம் சாய ஆரம்பித்தது. சோவியத் பொருளாதார நிபுணர்கள், தொழில்நுட்பவியலாளர்கள், இராணுவ ஆலோசகர்கள் கியூபாவிற்கு பெரும் எண்ணிக்கையில் வந்து சேர்ந்தார்கள்.

—————————————————————————————————– 
 
கியூபா பயணக் கட்டுரை
ஒரு பருந்தின் நிழலில்
பயிற்சியெடுத்து சண்டை செய்! சண்டை செய்து பயிற்சி பெறு!
(83)

கியூபா தலைவர்கள் இலத்தின் அமெரிக்கா பற்றிய தங்கள் தந்திரங்களையும் சூழ்ச்சிகளையும் மீளாய்வு செய்தார்கள். தென் அமெரிக்காவில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற இருக்கும் வழி வாக்குச் சீட்டுக்கள் அல்ல,  துப்பாக்கி வேட்டுக்கள் என்ற முடிவுக்கு வந்தார்கள். எழுபதுகளில் இலத்தின் அமெரிக்க நாட்டு புரட்சிக் குழுக்களுக்கான ஆள், ஆயுத, தளபாட, நிதி உதவிகளை கியூபா அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் ஆயுதப் போராட்டத்தின் வேகம் அதிகரித்தது.
இந்தச் சமயத்தில்தான் அமெரிக்கா வியட்நாமில் பலத்த அடி வாங்கிக் கொண்டு  துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடி வந்த காலம். அதைவிட ‘வோட்டர் கேட்’ என்ற அவதூறு அம்பலமாகி சனாதிபதி நிக்சன் பதவி துறக்க வேண்டி நேரிட்டது. இதனால் தென் அமெரிக்க விவகாரங்களில் அமெரிக்க ஆட்சியாளர்களால் தலையிட முடியவில்லை.

இந்தச் சூழ்நிலை கஸ்றோவிற்கு ஒரு கொடையாக அமைந்தது. கியூபாவில் இருந்து 40,000 படையினர் ஆபிரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சோவியத்தின் ஆயுத உதவியோடு அங்கோலா மற்றும் எத்தியோப்பியாவில் கம்யூனிஸ்ட் அரசுகளை நிறுவுவதே கஸ்றோவின் உள் நோக்கமாக இருந்தது.

1975 ஆகஸ்ட் அளவில் தென் ஆபிரிக்கா அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில் அங்கோலா மீது தாக்குதல் தொடுத்தது. அதன் பின்னரே  அங்கோலாவுக்குக் கியூபா துருப்புகளை அனுப்ப கஸ்றோ 1975 ஆம் ஆண்டு நொவம்பர் 4 இல் முடிவெடுத்தார். முதல் கட்டமாக 30,000 துருப்புக்கள் அனுப்பப்பட்டனர். அப்படி முடிவெடுத்தபோது அவர் சோவியத் நாட்டுத் தலைவர்களுக்கு முன்கூட்டித் தெரியப் படுத்தப்படவில்லை.
உண்மையில் ஆபிரிப்பாவில் கியூபாவின் முதல் தலையீடு சயர் நாட்டில் (Zaire) 1964-65 இல் ஆரம்பமானது.

அங்கோலா, எத்தியோப்பியா நாடுகளில் கம்யூனிச சார்பு ஆட்சிகள் பதவிக்கு வந்ததை அடுத்து கஸ்றோ நிக்கருகுவா பக்கம் தனது கவனத்தைச் செலுத்தினார். பனாமா, வெனிசூலா நாடுகளோடு சேர்ந்து கியூபா சன்டினிஸ்தான் புரட்சிப் படைக்கு ஆதரவு வழங்கின.

1979 யூலை மாதத்தில் நிக்கருக்குவாவின் சர்வாதிகாரி சோமோசாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு சன்டினிஸ்தா ஆட்சி பதவிக்கு வந்தது. இரண்டு இலத்தின் அமெரிக்காவில் கெரில்லாப் போராட்டத்தின் மூலம், புரட்சி வன்முறை மூலம் மட்டுமே ஆட்சியைக் கைப்பற்றலாம் என்ற அரசியல் கோட்பாட்டுக்குக் கிடைத்த பெரு வெற்றி இதுவாகும். கியூபாவில் நிலவிய அரசியல், பொருளாதார, சமூக காரணிகள் ஒரு புரட்சியைத் தோற்றுவிக்க முடியும் என்றால் ஏனைய நாடுகளிலும் அதே புரட்சியை தோற்றுவிக்க முடியும் என்ற கஸ்றோவின் சித்தாந்தம் சரியென எண்பிக்கப்பட்டது.
சன்டினிஸ்தா தலைவர்களது ஒத்துழைப்போடு கொலம்பியா, எல் சல்வடோர், கவுத்தமாலா நாடுகளது புரட்சிக் குழுக்களுக்கு கஸ்றோ சகல உதவிகளையும் வழங்கிக் கொண்டிருந்தார்.

ஆனால், கியூபாவின் பொருளாதார வளர்ச்சி எழுபதுகளில் நெருக்கடிக்கு உள்ளாகியது. 1974 இல் உலகச் சந்தையில் ஒரு இறாத்தல் சீனியின் விலை 65 (அமெரிக்க) சதத்தில் இருந்தது. பின்னர் 1977 இல் அதன் விலை 8 சதமாகச் சரிந்தது. சோவியத் நாடு கியூபாவின் பாதி சீனி உற்பத்தியைச் சந்தை விலையைவிட அதிக விலை கொடுத்து வாங்கியதால் கியூபாவின் பொருளாதாரம் தலை மூழ்காமல் காப்பற்றப்பட்டது.
பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க கஸ்றோ கம்யூனிஸ்ட் கட்சியை மறுசீர் செய்தார். உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்கப் பட்டது. அவர்களுக்குக் கம்யூனிச தத்துவம், நெறிமுறைகள் பற்றிய பாடங்கள் படிப்பித்துக் கொடுக்கப்பட்டன. மத்திய குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 91 இல் இருந்து 112 ஆகவும், அரசியல் குழு 8 இல் இருந்து 13 ஆகவும் உயர்த்தப் பட்டது.

பொருளாதார உற்பத்தி முறைகள் சோவியத் பாணியில் மறு சீரமைக்கப்பட்டது. நாட்டுக்கு ஒரு புதிய யாப்பும் கொண்டு வரப்பட்டது.

கியூபாவின் ஆட்சி அதிகாரம் அரசியல் குழுவிடமே இருந்தது. இதில் கஸ்றோ முதல் செயலராகவும், அவரது உடன்பிறப்பு றாவுல் கஸ்றோ முதல் துணைச் செயலராகவும் பதவி வகிக்கிறார்கள்.

கம்யூனிச சித்தாந்தத்தின்படி அரசு ‘உலர்ந்து போய்விடல்” (றiவாநச யறயல) வேண்டும். ஆனால், கியூபாவில் சரி, சீனாவில் சரி வேறு எங்காகிலும் சரி அப்படி ஏதும் நடை பெறவில்லை. நடைபெற வாய்ப்பும் இல்லை. பொய்த்துப் போன கார்ல் மார்க்சின் எதிர்வு கூறல்களில் இதுவும் ஒன்று.

சோவியத் ஒன்றியம் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் சின்னா பின்னமாகச் சிதறுண்ட பின்னர் கியூபாவுக்கான நிதியுதவி யாவும் வரண்டு விட்டது. இதனாலும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடையாலும் கியூபாவின் பொருளாதாரம் தலையெடுக்க முடியாது தவித்தது.

கியூபாவில் உள்ள பல்வேறு அமைப்புக்களில் முப்படையே மிகவும் பலம் வாய்ந்ததாகக் காணப்படுகிறது. இதில் 225,000 படையினர் இருக்கிறார்கள். மேலும் 190,000 பயிற்றப்பட்ட சேமப்படையினர் (Trained Reservists) இருக்கிறார்கள். இராணுவத்தில் மட்டும் இருக்கும் படையினரின் எண்ணிக்கை 200,000 ஆகும்.

விமானப் படையில் 10,000 படையினரும், 200 கும் அதிகமான போர் விமானங்களும் இருக்கின்றன. இவற்றுள் சோவியத் மிக்-21எவ், மிக்-23 ரக விமானங்களே அதிக எண்ணிக்கையில் உள்ளன. விண்ணில் இருந்து விண்ணுக்கும், விண்ணில் இருந்து தரைக்கும், தரையில் இருந்து விண்ணுக்கும் பாயும் ஏவுகணைகளைக் கியூபா வைத்திருக்கிறது.

மேலே கொடுக்கப்பட்ட புள்ளி விபரங்கள் அமெரிக்கா தரப்பா அல்லது கியூபா தரப்பா என்பதைப் பொறுத்து வேறு படுகின்றன. அமெரிக்க வட்டாரங்கள் கியூபாவின் படைபலத்தை கூட்டி மதிப்பீடு செய்கிறது. அதே நேரம் கியூபா தனது உண்மையான படைபலத்தை குறைத்துக் கூறுவதுபோல் தெரிகிறது.

கஸ்றோவே முப்படையினதும் தளபதியாக (Commander – in Chief) விளங்குகிறார். பாதுகாப்பு அமைச்சராக அவரது உடன்பிறப்பு றாவுல் கஸ்றோ இருக்கிறார்.
அறுபதுகளில் கியூபா இராணுவம் அங்கோலா, எத்தியோப்பியா போன்ற நாடுகளில் இயங்கிய புரட்சிக் குழுக்களுக்கு ஆதரவாக சண்டை செய்யச் சென்றபோது பாதுகாப்பு அமைச்சராக இருந்த றாவுல் கஸ்றோ படையினருக்கு விடுத்த அறிவுறுத்தல்கள் (1963) கியூபா இராணுவத்தின் கட்டமைப்பை, ஒழுக்காற்றைப் படம்பிடித்துக் காட்டுவதாக இருக்கிறது.

(1) எந்தவித மதுபானமும் எத்தகைய காரணத்துக்கும் பயன்படுத்தப் படுவது தடைசெய்யப்படுகின்றது.

(2) எந்தவித பெண்களோடும் நெருங்கிய உறவு வைத்திருப்பது தடைசெய்யப்படுகிறது.
(3) எங்களது புரட்சி பற்றியோ அல்லது சித்தாந்தம் பற்றியோ தற்பெருமை அடித்துக் கொள்ளக் கூடாது. நாங்கள் எப்போதும் பணிவோடு நடந்து கொள்ள வேண்டும். தெரிந்ததை மற்றவர்களுக்குச் கற்றுக் கொடுக்க வேண்டும். நாங்கள் எல்லாம் தெரிந்த நிபுணர்கள் என்று பாசாங்கு செய்யக்கூடாது.

(4) நீங்கள் பணியாற்றும் பகுதிகளில் வாழும் மக்களது பழக்க வழக்கங்கள், சமயம் இவற்றை முற்றாக மதித்து நடக்க வேண்டும்.

(5) எங்கள் தோழர்கள் சுயகட்டுப்பாட்டை எந்நேரத்திலும் கீழிருந்து மேல் கடைப்பிடிக்க வேண்டும். அதேபோல் தேவையானபோது மேலிருந்து கீழ் கட்டுப்பாடு கடைப்பிடிக்க வேண்டும்.

(6) நீங்கள் படை முகாமைவிட்டு முன் அனுமதியின்றி வெளியேறக் கூடாது.

(7) நீங்கள் போகும் நாட்டின் இராணுவத்தோடு நட்பாகவும், உடன்பிறப்பு மனப் பான்மையோடும் நடந்து கொள்ள வேண்டும். உங்கள் பொறுப்பில் விடப்படும் உடைமைகளைக் கவனத்தோடு பாதுகாக்க வேண்டும். வாகன ஓட்டிகள் மெதுவாக வாகனங்களை ஓட்ட வேண்டும். ஒரு சின்ன விபத்துக்கூட ஏற்படாதவாறு அவர்கள் நடந்து கொள்ள வேண்டும்.
 
(8) உங்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய பங்கீட்டுப் பொருட்களில் பற்றாக்குறை ஏற்படின் அதனைப் பொறுமையோடும் விட்டுக் கொடுப்போடும் நடந்து கொள்ளவேண்டும்.

(9) எதிர்ப் புரட்சிக்காரர்கள் உங்களை எரிச்சலூட்டச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
(10) வேற்று நாட்டில் நீங்கள் இருப்பதன் ஒரே குறிக்கோள் நீங்கள் மேற்கொண்டுள்ள பணியைப் புரட்சியாலும் முப்படைத் தளபதியாலும் கட்டளையிட்டவாறு எந்தவொரு குறைபாட்டுக்கும் இடம் இல்லாது முழுமையாகவும் செம்மையாகவும் செய்து முடிப்பதே.

படைத் தளபதிகள் மேற்கண்ட அறிவுறுத்தல்கள் சரியாகக் கடைப் பிடிக்கப்படுகிறதா என்பதை அவ்வப்போது உறுதிப்படுத்தப் படவேண்டும். அதற்கு நீங்கள் முன்மாதிரி யாக நடந்து கொள்ள வேண்டும்.

(1) நீங்கள் எளிய வாழ்க்கை வாழவேண்டும். இந்த வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த பணித்திட்டத்திற்கு (ஆளைளழைn) நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை காரணம் என்பதை ஒரு போதும் மறந்துவிடக் கூடாது.
(2)எல்லோரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பை எந்நேரமும் நினைத்துப் பார்த்துச் செயல்பட வேண்டும்.

(3) உங்கள் படைத்தளபதியின் கட்டளைகள் இதுதான்: ‘பயிற்சியெடுத்து சண்டை செய்! சண்டைசெய்து பயிற்சி பெறு!”

கியூபாவின் வரலாற்றில் அதன் தேசிய வீரராகப் பிரகடனப்படுத்தப்பட்டவர் யோஸ் மார்டி (துழளé ஆயசவí)  ஆவார். அவர் ஒரு புரட்சிவாதி, சிந்தனைவாதி, இசுப்பானிய மொழியின் தலை சிறந்த எழுத்தாளர், கியூபன் புரட்சிக் கட்சியை 1892 இல் தொடங்கி வழிநடத்தியவர். இசுப்பானிய நாட்டிற்கு எதிராக 1895 இல் நடந்த ஆயுதம் தாங்கிய விடுதலைப் போரில் விழுப்புண் பட்டு இறந்து போhனர். சுதந்திரத்தையும், விடுதலை யையும் நேசிப்பவர்களும் யாசிப்பவர்களும் அவரது வாழ்க்கை வரலாற்றைக் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவரை அடுத்த கிழமை அறிமுகப்படுத்தலாம் என இருக்கிறேன்.

———————————————————————————————————-
 
கியூபா பயணக் கட்டுரை
ஒரு பருந்தின் நிழலில்
கியூபாவின் தேசிய வீரர் யோஸ் மார்டி
 (84)

யோஸ் மார்டி (José Marti ) 1853 தை 28 ஆம் நாள் ஹவானாவில் பிறந்தார். அவரது தந்தை ஒரு இசுப்பானியர். தயாயர் கனேரி தீவைச் (Canary Islands) சேர்ந்தவர். தனது 16 ஆவது வயதில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினார். அந்த வயதிலேயே கொலனித்துவத்துக்கு எதிராக The  Free Fatherland  என்ற ஒரு ஏட்டைத் தொடக்க உதவினார். சக மாணவர் ஒருவர் இசுப்பானியர் நடத்திய ஊர்வலத்தில் கலந்து கொண்டதைக் கண்டித்தார். மார்டி தேசத் துரோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு ஆறு ஆண்டு கடூழியச் சிறைத் தண்டனை பெற்றார். தண்டனையின் ஒரு பகுதியாக ஒரு கல்லுடைக்கும் சுரங்கத்தில் வேலை செய்தார். நோஞ்சல் உடம்போடு இந்தக் கடுமையான வேலையில் ஈடுபட்டதால் அவரது கண் பார்வை பழுதுபட்டது. முழங்காலில் நிரந்தரமான தளும்புகள் (பிற்காலத்தில் கைவிலங்கில் இருந்து செய்யப்பட்ட மோதிரத்தை எப்போதும் அணிந்து இருப்பார்) ஏற்பட்டன.

ஆறு மாதங்களின் பின்னர் அரசு அவரை மன்னித்து விடுதலை செய்தது. ஆனால், இசுப்பானியாவிற்கு 1871 ஆம் ஆண்டு நாடு கடத்தப்பட்டார். அங்கிருந்து கொண்டு கியூபாவில் இடம்பெறும் அரசியல் கைதுகள் பற்றியும் அங்கு காணப்படும் கொடுங் கோல் ஆட்சிபற்றியும் பட்டறிவு அடிப்படையில் ஒரு துண்டுப் பிரசுரம் அடித்து வெளியிட்டார்.

1874 ஆம் ஆண்டு சறகொஸ்;சா (Saragossa) பல்கலைக் கழகத்தில் இருந்து சட்டம் தத்துவம் இரண்டிலும் இளங்கலைப் பட்டம்பெற்று வெளியேறிய யோஸ் மார்டி பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்குச் சென்றார். பின்னர் மெக்சிக்கோ நாட்டுக்குக் குடிபெயர்ந்து தனது எழுத்துப் பணியைத் தொடங்கினார்.

மெக்சிக்கோவில் இராணுவம் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றியபோது அதனை யோஸ் மார்டி (துழளé ஆயசவí)  கடுமையாக எதிர்த்தார். அதன் காரணமாக அவர் அந்த நாட்டைவிட்டு கவுத்தமாலாவுக்குப் செல்ல வேண்டி நேரிட்டது. ஆனால், அங்கும் இடம்பெற்ற அரசின் கெடுபிடிகள் அவரை அந்த நாட்டில் இருந்தும் வெளியேறும்படி வைத்தது.

1877 ஆல் கார்மென் என்பவரை யோஸ் மார்டி திருமணம் செய்து கொண்டார். 1878 இல் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பெயர் யோஸ் பிரான்சிஸ்கோ (துழளந குசயnஉளைஉழ) என்பதாகும். 1880 இல் பெண் குழந்தை பிறந்தது. பெயர் மாரியா மந்திலா (Maria Mantilla) என்பதாகும்.

1878 ஆம் ஆண்டு யோஸ் மார்டி எதிர்ப்பாளர்களுக்குப் பொது மன்னிப்புக் கொடுக்கப்பட்டதை அடுத்து மீண்டும் கியூபா வந்து சேர்ந்தார். ஆனால், அவர் இசுப்பானிய அரசுக்கு எதிராகச் செயல்பட்டார். அதனால் இசுப்பானியாவிற்கு ஓடிப்போக நேரிட்டது. அங்கிருந்து 1879 இல் அமெரிக்கா வந்து சேர்ந்தார். ஒர் ஆண்டு நிய10 யோர்க் நகரில் வாழ்ந்தார். அங்கிருந்து வெனிசூலாவிற்குப் (ஏநநெணரநடய) போனார்.

வெனிசூலாவில் நிரந்தரமாகத் தங்கி அங்கு வாழ எண்ணினார். ஆனால், அங்கும் இராணுவ ஆட்சி ஏற்பட்டதால் அந்த எண்ணத்தைக் கைவிட்டு மீண்டும் நியூ யோர்க் சென்றார். நியூ யோர்க்கில் 1881-1895 வரை வாழ்ந்தார். ஆரம்பத்தில் அவருக்கு அமெரிக்கா மிகவும் பிடித்துக் கொண்டது. ‘இங்கே சுதந்திரக் காற்றைச் சுகமாகச் சுவாசிக்கலாம். காரணம் இங்கு சுதந்திரம் தேசத்தின் அத்திவாரம், கவசம், வாழ்க்கையின் பிழிவு’ (”One can breath freely, for here freedom is the foundation , the shield is the essence of life”) என எழுதினார்.

ஆனால், அவரது அமெரிக்க பக்தி மிக விரைவில் கரைந்து விட்டது. இலத்தீன் அமெரிக்காவின் சுதந்திரத்துக்கு அமெரிக்காதான் முதல் எதிரி என்ற முடிவுக்கு வந்தார். “நான் இந்தப் பூதத்தோடு வாழ்ந்து விட்டேன். அதன் தார்ப்பரியம் என்னவென்பது எனக்குத் தெரியும். எனது அம்பு டேவிட்டின் அம்பு போன்றது’ என எழுதினார்.
பதினைந்து ஆண்டுகள் தொடர்ந்து அரசியல் பற்றி எழுதுவதில், உரையாற்றுவதில், ஏடுகளுக்குக் கட்டுரை தீட்டுவதில், ஆயுதங்கள் வாங்குவதில், அனல் கக்கும் பேச்சுக்களை வடிப்பதில், கவிதை புனைவதில் ஓய்வொழிச்சல் இன்றி ஈடுபட்டார்.
1885 ஆம் ஆண்டு சுதந்திரப் பாடல்கள் (Free verses) என்ற கவிதை நூலையும் 1891 ஆம் ஆண்டு எளிய பாடல்கள் (Simple Verses) என்ற கவிதை நூலையும் எழுதினார். இந்த நூல்களே மேற்குலக இலக்கிய வழக்காற்றில் ‘புதுமை’ (Modernism)  இயக்கத்தை ஆரம்பித்து வைத்தவை ஆகும்.

யோஸ் மார்டி எழுதிய புரயதசைய புரயவெயயெஅநசய    என்ற கவிதை இன்று கியூபாவின் உத்தியோகபூர்வமற்ற நாட்டுப் பண்ணாகக் கொண்டாடப்படுகிறது.
யோஸ் மார்டி கொஞ்சமாகவே சாப்பிட்டார், சொற்ப நேரமே உறங்கினார். ஆனால், அவரிடம் அபரிமிதமான சக்தி கொளுந்து விட்டு எரிந்தது.

நியூ யோர்க்கில் வாழ்ந்த காலத்தில் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் மக்களாட்சி உருவாகுவதற்கு அமெரிக்கா தடைக் கல்லாக இருக்கும் என்பதை யோஸ் மார்டி புரிந்து கொண்டார். வெறுமனே வார்த்தை அளவில் நிற்காமல் 1892 ஆல் கியூபாவை இசுப்பானிய கொலனித்துவ ஆட்சியில் இருந்து மீட்டு எடுப்பதற்குக் கியூபன் புரட்சிக் கட்சியைத் தொடக்கினார்.

அந்தக் கட்சிக்கு உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கு புளோரிடா மாகாணத்தில் உள்ள சுருட்டுத் தொழிற்சாலைகளில் வேலை பார்த்த புலம்பெயர்ந்த கியூபானியரை யோஸ் மார்டி சந்திக்க அடிக்கடி பயணப்பட்டுப் போவார். எப்போதும் நல்ல கறுத்த கோட்சூட் அணிந்து, கழுத்தில் விற்பட்டி (bow-tie) கட்டி, மீசையை அழகாகக் கத்தரித்து சீவிக் கொண்டுதான் கிளம்பிப் போவார்.

பொருளாதார, இன, பால் சமத்துவம் இல்லாமல் கியூபா ஒரு நிறைவான சுதந்திர நாடாகத் திகழ முடியாது என்று யோஸ் மார்டி வாதாடினார். வேறு விதத்தில் சொன்னால் நாட்டு விடுதலையோடு பொருளாதார சமூக மாற்றத்தையும் அவர் வலியுறுத்தினார்.

மூன்று ஆண்டுகள் கழித்து கியூபாவின் விடுதலைப் போராட்டத்தை முடுக்கி விடுவதற்கு வேண்டிய திட்டத்தை யோஸ் மார்டி தீட்டி அதனை ஒரு கியூபன் சுருட்டில் மறைத்து வைத்து இராணுவத் தளபதியான அந்தோனியோ மாசியோவுக்கு (Antonio Maceo) அனுப்பி வைத்தார். அந்தோனியோ மாசியோ ஒரு கறுப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

1895 இல் தொடக்கப்பட்ட கியூபா சுதந்திரப் போரில் பங்கேற்க யோஸ் மார்டியும் மக்சிமோ கோமஸ் (Maximo Gomez)  என்பவரும் ஒரு சிறிய படகில் கியூபாவின் தென்கிழக்குக் கடல்கரையோரமாகப் போய் இறங்கினார்கள். அவர்கள் பயணம் செய்த அந்தச் சின்னப் படகு புயலில் சிக்கி துண்டு துண்டாக உடைய இருந்தது. நல்ல காலமாக அது தப்பியது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஓறியன்ட் மாகாணத்தைப் (ழுசநைவெந Pசழஎinஉந ) போய்ச் சேர்ந்தார்கள். நூற்றுக்கணக்கான கெரிலாப் படையினர் அவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள்.

கெரில்லாப் போராளி வாழ்க்கை யோஸ் மார்டிக்கு கடுமையாக இருந்தது. திடகாத்திரம் இல்லாத அவரது உடலை எப்போதும் அந்தப் பாரமான கறுப்பு கோட்சூட் மூடியிருந்தது. அதற்கும் மேலாக அவரது முதுகில் தொங்கிய பொதி, தோளில் தொங்கிய றைபிள் இவற்றின் பாரம் அவரது முதுகை முறித்தது. பல தடவை மலைப் பாதையில் விழுந்து எழுந்தார்.

1895 மே 19 ஆம் நாளன்று மார்டி முதன்முதலாக டொஸ் றையோஸ் (னுழள சுழைள) என்ற இடத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த சண்டைக் களத்தில் இறக்கி விடப்பட்டார். அப்போது அவரது கழுத்தில் நெஞ்சுக்கு நேரே அவரது பெண்குழந்தையின் படம் தொங்கிக் கொண்டிருந்தது. எதிரி படையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும்போதே சுட்டு வீழ்த்தப்பட்டார். தனது துப்பாக்கியைப் பயன்படுத்துவதற்கே அவருக்கு அவகாசம் கிடைக்கவில்லை! (தளபதி கோமஸ் மார்டியை படையின் பின் அணியில் நின்று போரிடுமாறு பணித்ததை அவர் கேட்கவில்லை என்று சொல்லப்படுகிறது) அவரது நினைவாக கியூபா புரட்சிவாதிகள் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து ஆயுதம் தாங்கிப் போராடினார்கள்.

வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீரன் யோஸ் மார்டி அன்று முதல் கியூபாவின் வரலாற்று நாயகனாகக் கியூபானியரால் வழிபடப்பட்டு வருகிறார். அவரது உருவச் சிலை இல்லாத ஊரே கியூபாவில் இல்லை என்று சொல்லுமளவிற்கு எங்கும் அவரது உருவச் சிலை, நினைவுச் சின்னம் காணப்படுகிறது. கியூபாவிற்கு வெளியில் இலத்தின் அமெரிக்க நாடுகளிலும் யோஸ் மார்டி உருவச் சிலைகள் நிறைய இருக்கின்றன. இன்று அவரது வார்த்தைகள் அரசியலில் இரு துருவங்களாகப் பிரிந்து எதிரும் புதிருமாக இருக்கும் கியூபானியர்கள் எல்லோருக்கும் (கஸ்றோ ஆதரவாளர், எதிர்ப்பாளர்) வேத வாக்காக இருக்கின்றன.

கஸ்றோவின் பார்வையில் யோஸ் மார்டி கியூபா மண்ணில் புரட்சிக்கு வித்திட்ட உள்நாட்டு வீரர் ஆவார். அதே நேரம் வலதுசாரி மியாமி கியூபானியர்கள் தங்களது வானொலி, தொலைக்காட்சி இரண்டுக்கும் முறையே மார்டி வானொலி, மார்டி தொலைக் காட்சி என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

சந்தியாகோ (Santiago) கியூபாவின் இரண்டாவது பெரிய நகரம். 1514 இல் இந்த நகரம் இசுப்பானியரால் உருவாக்கப்பட்டது. கியூபாவின் தலைநகராக 1524 தொடக்கம் 1549 வரை சந்தியாகோதான் விளங்கியது. அதன் ஆழமான இயற்கைத் துறைமுகம் காரணமாக 1700, 1800 களில் இடம்பெற்ற அடிமை வாணிகத்தின் மையமாக சந்தியாகோவே திகழ்ந்தது.

சந்தியாகோதான் கியூபா புரட்சியின் தொட்டிலாகவும் கியூபா தேசியத்தின் கோட்டையாகவும் கருதப்படுகிறது. அதனால் அந்த நகரை ‘மாவீரர் நகர்’ (”Heroes City”) ஆகப் பிரகடனப்படுத்தி இருக்கிறார்கள். இங்கேதான் 1953 ஆம் ஆண்டு யூலை 26 ஆம் நாள் மொன்காடா கோட்டை மீது கஸ்றோவின் தலைமையில் தோல்வியில் முடிந்த முதல் கெரிலாத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. பற்றிஸ்தா இராணுவத்தின் சரணாகதியை கஸ்றோ ஏற்றுக்கொண்டதும் இதே சந்தியாகோவில்தான்.
யோஸ் மார்டியின் வானுயர்ந்த நினைவுக் கட்டிடம் சந்தியோகாவில் உள்ள சாந்தா இவிஜினியா மயானத்தில் ( Santa Ifigenia cemetery) நிறுவப்பட்டுள்ளது.

இசுப்பானிய படைபலம் கியூபாவோடு ஒப்பிடும்போது அய்ந்துக்கு ஒன்றாக இருந்தது. இசுப்பானிய கடல்படை பலம் வாய்ந்ததாக இருந்தது. ஜெனரல் மார்டினஸ் கம்போஸ் ((General Martinez Campos) தலைமை தாங்கிய இராணுவம் கியூபா புரட்சிப் படையணிகளைவிட நவீன ஆயுதங்களைக் கொண்டதாக விளங்கியது. இசுப்பானிய அரசு “கடைசி ஆள் மட்டும் கடைசிக் காசு மட்டும்’ (”To the last man and to the  last peseta”)  சண்டை இடப்போவதாகச் சூளுரைத்தது.

கியூபா படைகள் கைவசம் இருந்த ரைபிள்களையும் வெட்டுக்கத்திகளையும் (rifles and machetes) பயன்படுத்தியது. இசுப்பானிய காலாட்படைகளை அவர்கள் எதிர்பாராத நேரத்தில் கியூபானியப் படை தாக்கி அழித்தது.

கியூபா படையணிகள் இன்னொரு தந்திரத்தையும் வெற்றிகரமாகக் கையாண்டார்கள். கியூபாவின் பொருளாதாரத்தை முற்றாக அழிப்பதுதான் அந்தத் தந்திரம். சீனித் தொழிற்சாலைகள், கட்டிடங்களைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள். அதன் மூலம் கியூபா இசுப்பானியாவிற்குப் பொருளாதாரத்தில் உதவாத நாடாக மாற்றினார்கள்.

——————————————————————————————————————– 
 
கியூபா பயணக் கட்டுரை
ஒரு பருந்தின் நிழலில்
நான் ஒரு வெள்ளை ரோசாவை வளர்க்கிறேன்
 (85)

தீவின் மேற்குப் பகுதியை கியூபா படைகள் தாக்கின. அந்த வெற்றிகரமான தாக்குதலால் ஆடுண்டுபோன இசுப்பானியா தனது முன்னணி இராணுவ தளபதிகளில் ஒருவரான ஜெனரல் வெயிலரை ( General Weyler) களம் இறக்கியது. மூர்க்கத்தனத்திற்குப் பெயர்போன வெயிலர் பொதுமக்களைக் கைது செய்து தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்தார். புரட்சிப் படையணிகளுக்கு உணவு மற்றும் ஆட்சேர்ப்பு போன்றவற்றைத் தடுப்பதே அவரது நோக்கமாக இருந்தது.

1896 ஆம் ஆண்டு அந்தோனியோ மாசியோ (Antonio Maceo) போரில் கொல்லப்பட்டார். யோஸ் மார்டியின் வீரச்சாவைப் போலவே இவரது சாவையும் இசுப்பானியர் நம்பிக்கையோடு எதிர்பார்த்தார்கள். ஆனால், இசுப்பானியர் கியூபா கெரில்லாப் படைகளை ஒன்றும் செய்ய முடியவில்லை.

கியூபா பக்கம் 60,000 படையினர் இருந்தார்கள். இசுப்பானியா பக்கம் இதைவிடக் கூடுதலான படையினர் இருந்தார்கள். இருந்தும் போர் ஒரு முடிவுக்கு வருகிற அறிகுறி தென்படவில்லை. தளபதி வெயிலர் திருப்பி அழைக்கப்பட்டார்.

போர் மேலும் சிலகாலம் நீடித்தது. கியூபா படைத்தளபதி கலிக்ஸ்ரோ கார்சியா ( Calixto Garcia ) கிழக்கில் இருந்த Victoria de la Tunas என்ற நகரத்தைக் கைப்பற்றினார்.
இசுப்பானியா மக்களிடம் போருக்கு எதிரான போக்கு சூடு பிடிக்கத் தொடங்கியது. இராணவத்தினர் பெருமளவு போரில் மடிவதையிட்டு அவர்கள் கோபம் அடைந்தார்கள்.
இந்தச் சூழ்நிலையில் அமெரிக்க வல்லாதிக்கவாதிகள் இசுப்பானியா அமெரிக்க சண்டைக் கப்பல் ஒன்றை நிர்மூலமாக்கிவிட்டதாகக் குற்றம்சாட்டி அதன் மீது போர் தொடுக்க வைத்தார்கள். அமெரிக்க இராணுவம் மற்றும் கடல்படைக்கு இசுப்பானியாவால் ஈடுகொடுக்க முடியவில்லை. சண்டையில் இசுப்பானியாவை மிக எளிதாக அமெரிக்கா தோற்கடித்தது. அதனால் கியூபா உட்பட பல கொலனித்துவ நாடுகளை இசுப்பானியா இழந்தது.

யோஸ் மார்டி இசுப்பானிய உலகின் மிகச் சிறந்த எழுத்தாளராக எண்ணப்படுகிறார். அமெரிக்க வாசகர்களுக்கு அவரது முக்கியத்துவம் அவரது சிந்தனை உலகப் பொதுமைபற்றியும் காலத்துக்கு ஏற்றவாறும் இருந்ததால் ஏற்பட்டது. யோஸ் மார்டி கியூபாவின் கொலனித்துவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தனது வாழ்நாள் முழுவதையும் செலவிட்டார். அது மட்டும் அல்லாது கியூபா தீவு அமெரிக்கா உட்பட வேறு நாடுகளின் பிடிக்குள் விழுந்துவிடக் கூடாது என்பது அவரது கோட்பாடு ஆகும்.
அமெரிக்காவின் அரசியல் கோட்பாடுகள் தனது முற்போக்குக் கொள்கைளுக்கு மாறாக இருப்பதாக யோஸ் மார்டி எண்ணியதில் வியப்பில்லை. குறிக்கோளுடனும், கியூபாவின் சுதந்திரம் இலத்தின் அமெரிக்காவின் பாதுகாப்புக்கும், உலக நாடுகளின் சமபலக் கோட்பாட்டுக்கும் கேந்திரமாகமாக இருக்கிறதென்ற உண்மையின் அடிப்படையில் யோஸ் மார்டி தனது செயற்றிறன் மனத்திறன் இரண்டையும் இணைத்து ஒரு தேசத்தைக் கட்டி எழுப்பும் பணிக்குச் செலவழித்தார்.
யோஸ் மார்டி ஒரே நேரத்தில் புரட்சியாளனாகவும் வழிகாட்டியாகவும் முக்கியமாக அறிவுரையாளராகவும் ( அநவெழச ) விளங்கினார். அவருக்கு இருந்த அனுபவம் மற்றும் கல்வித்தகைமை பல்வேறு மாறுபட்ட துறைகளில் தனது முத்திரையைப் பதிப்பதற்கும் படிப்பினைகள் வளத்தோடு விளங்குவதற்கும் துணையாக இருந்தன.
யோஸ் மார்டி ஒரு அரசின் மூலைக்கற்கள் சுதந்திரம் நீதி இந்த இரண்டின் மீதும் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்று நம்பினார். அவரது படைப்புக்களைப் படித்தால் அதற்காக அவர் மேற்கொண்ட சுயபோராட்டங்கள்பற்றி அறிந்து கொள்ளலாம். மனிதனது ஆன்ம எழுச்சிக்கு எல்லை போடுவதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. மனிதனது ஆன்ம ஈடேற்றம் அன்பு, கட்டுப்பாடற்ற சிந்தனை இந்த இரண்டின் அடிப்படையிலேயே கட்டி எழுப்ப முடியும் என அவர் நம்பினார். எனவே அவரது தத்துவங்கள் கோட்பாடுகள் கியூபாவில் நிலவிய சர்வாதிகார கோட்பாட்டுக்கு முரணாக இருந்ததில் வியப்பில்லை.

யோஸ் மார்டியின் அறிவுரைகள் தனிமனித சுதந்திரத்தையும் பொதுவுடமையையும் மையமாகக் கொள்ளாத அரசியல் கோட்பாட்டுக்கு முரணாக இருந்தன. அவரது படைப்புக்கள் ஏகபோக வல்லாட்சிகளையும் மனித உரிமைகளைக் கட்டுப்படுத்தும் எத்தனங்களையும் கண்டித்தன. கியூபாவின் சர்வாதிகார ஆட்சியையும் அதன் செருக்கையும் வன்மையாகக் கண்டித்தார்.

யோஸ் மார்டி தனது குறுகிய வாழ்நாளில் இசுப்பானிய மற்றும் அமெரிக்காவின் ஆதிக்கத்தில் இருந்து தனது சின்னஞ் சிறு தீவுக்கு விடுதலை பெற்றுக் கொடுக்கப் போராடினார். அதே நேரம் விடுதலை, சுதந்திரம், மனிதநேயம் இவற்றை கடைப்பிடிக்க வேண்டும் என்பதிலும் அசையாத நம்பிக்கை வைத்திருந்தார்.

‘விடுதலை என்பது ஒவ்வொருவனும் உண்மையாக இருக்க, சிந்திக்க, பாசாங்கு செய்யாமல் உண்மையைப் பேச இருக்கும் உரிமையாகும். ஒரு பொல்லாத அரசுக்கு அடிபணிபவன் உண்மையான மனிதன் அல்ல.’

‘மலையில் இருந்து கற்கள் கீழே உருண்டோடுவது போல, நல்ல சிந்தனைகள் எத்தனை தடைகள் அல்லது தடுப்புக்கள் இருந்தாலும் அவை தமது இலக்கை அடைந்தே தீரும். அவற்றின் வேகத்தைக் குறைக்கலாம் அல்லது கூட்டலாம். ஆனால், அவற்றை தடுத்து நிறுத்துவது என்பது முடியாத செயல்.’

‘விடுதலையே! உன்னைப்பற்றிப் பேசுவது கடினம். முக்கியமாக நீ இல்லாமல் வாழும் ஒருவனுக்கு. ஒரு காட்டு விலங்கு தன்னைப் பழக்குகிறவன் முன் முழங்கால் இட்டு மண்டியிடுவதற்கு முன்னர் தனது சீற்றத்தைக் காட்டத் தவறுவதில்லை. ஒருவன் நரகத்தின் ஆழத்தைக் கண்டு பிடித்தபின் அங்கிருந்து சுதந்திரமானவர்களைச் செருக்கோடு பார்க்கிறான். ஒருவன் ஓநாய் தனது கூண்டின் கம்பிகளைக் கடிப்பது போல காற்றைக் கடிக்கிறான். நஞ்சூட்டப்பட்ட மனிதன் போல் ஒருவனது ஆன்மா மனிதனது உடலுக்குள் வேதனை தாங்க முடியாது நெளிகிறது. சுதந்திரத்தின் அருமை தெரியாது வாழும் இழியன் தெருச் சகதியை எடுத்துப் பூசி மகிழும் பயித்தியக் காரனுக்கு ஒப்பானவன். விடுதலையே! உன்னை வைத்திருப்பவர்களுக்கு உன்னைத் தெரியாது. உன்னை வைத்திராதவர்கள் உன்னைப்பற்றிப் பேச அருகதை அற்றவர்கள். அவர்கள் உன்னை வென்றெடுக்க வேண்டும்.’

யோஸ் மார்டி ஒரு சிறந்த கவிஞர் எனச் சொன்னேன். பல கவிதைகளை இசுப்பானிய மொழியில் எழுதியுள்ளார். அவை ஆங்கிலம் உட்பட வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘நான் ஒரு வெள்ளை ரோசாவை வளர்க்கிறேன்’ ( I cultivate a white rose) என்ற தலைப்பில் அவர் பாடிய கவிதை இது.

நான் ஒரு வெள்ளை ரோசாவை வளர்க்கிறேன்
சனவரி போலவே யூலையிலும்
எனக்கு வெளிப்படையாகக் கை கொடுக்கும்
எனது உண்மையான நண்பனுக்காக!
நீங்கள் ஒரு நுரைத்த மலையைக் கண்டால்
எனது கவிதையைத்தான் நீங்கள் பார்க்கிறீர்கள்
எனது கவிதைகள் ஒரு மலைபோன்றது
அதே நேரம் அது ஒரு பறவையின் இறகு போன்றது!
எனது கவிதைகள் ஈட்டிகள் போன்றவை
அதன் பிடியில் இருந்து மலர்கள் மலர்கின்றன
எனது கவிதைகள் நீர் ஊற்றுப் போன்றது
அது பாறைத் தண்ணீரைத் தெளிக்கிறது!
எனது கவிதைகள் இளம்பச்சை நிறம் போன்றது
அதே நேரம் சிவப்பு நிறச் சுடர் போன்றது
எனது கவிதைகள் காட்டில் அடைக்கலம் தேடும்
காயப்பட்ட மான் போன்றது!
எனது கவிதைகள் வீரர்களை மகிழ்விக்கும்
எனது கவிதைகள் சுருக்கமானது, உண்மையானது
கூர் வாளுகளை வடிக்கும்
உருக்கின் வேகத்தைக் கொண்டது!
பகலும் இரவும் நான் கண்களை
விழித்த வண்ணம் கனவு காண்கிறேன்
அலைகளின் நுரைக்கு மேல்
கொந்தளிக்கும் கடல் போல!
பாலைவனத்தில் உருளும் மண்குவியல்போல்
ஒரு வலிய சிங்கத்தின் மெல்லிய கழுத்தில்
இருந்து சவாரி செய்வதுபோல்
நான் எனது உள்ளத்தில் குடியிருக்கும் அரசன்
எப்போதும் மிதக்கும் குழந்தையைக் காண்கிறேன்
அது என்னை அழைக்கிறது!
நான் வாழக்கூடிய எனது இதயத்தை
கிழித் தெறியும் கொடியவனுக்கு,
நான் முட்செடிகளை வளர்ப்பதில்லை
நான் ஒரு வெள்ளை ரோசாவை வளர்க்கிறேன்!

அடுத்த கிழமை இறந்து 30 ஆண்டுகளுக்குப் பின்னரும் கியூபா மக்களால் மட்டுமல்ல அனைத்து உலக மக்களாலும் பூசிக்கப்படும் சே குவாராவை உங்களுக்கு அறிமுகப் படுத்துவேன். இவர் ஆர்ஜென்தினியாவில் பிறந்து பொல்வியாவில் மரணித்த புரட்சியாளன்.
——————————————————————————————————————–


கியூபா பயணக் கட்டுரை
ஒரு பருந்தின் நிழலில்
புரட்சிக்கு இலக்கணம் வகுத்த சே குவாரா
(86)

அறுபதுகளில் இடதுசாரி புரட்சி இயக்கங்களின் கதாநாயகனாக விளங்கிய சே குவாராவின் முழுப் பெயர் ஏர்னஸ்ட் குவேரா (Earnest Guevara) (1928-67) என்பதாகும். ஆர்ஜென்டீனாவில் ஒரு மத்திய வகுப்புக் குடும்பத்தில் பிறந்தார். இரண்டு வயதுக் குழந்தையாக இருந்த போது சே குவாரா மூச்சு இழுப்பு நோயினால் துன்புற்றார். இதனால் அவரது குடும்பம் அல்டா கிரேசியா (Alda Gracia) என்ற கிராமப்புற ஊருக்கு இடம் மாறியது. அப்படி இருந்தும் அவரது நோய் குணமாகவில்லை. அவரது தொடக்கக் கல்வி அவரது தாயாரான செலியா டி லா செர்னா ( Celia de la Serna) அவர்களால் அளிக்கப்பட்டது. சே குவாரா நூல்களை விரும்பிப் படிப்பதில் கெட்டிக்காரராக விளங்கினார். தனது தந்தையின் வீட்டு நூலகத்தில் இருந்த மார்க்ஸ், என்ஜல்ஸ் (Angels) மற்றும் Kreud  போன்றோர் எழுதிய நூல்களைப் படித்து முடித்தார். பின்னர் கொர்டோபாவில் இருந்த டீன்ஸ் பூன்ஸ் தேசிய கல்லூரியில் (Colegio Nacional Deán Funes) சேர்ந்து தனது உயர் நிலைக் கல்வியைத் தொடர்ந்தார். படிக்கும்போது இலக்கியம், விளையாட்டு இரண்டிலும் சிறந்து விளங்கினார்.

இசுப்பானிய உள்நாட்டுச் சண்டை, ஆர்ஜென்டீனாவின் அலங்கோலமான அரசியல் அவரது உள்ளத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது. அதனைப் பயன்படுத்தி ஆட்சியைக் கைப்பற்றிய சர்வாதிகாரி யுவான் பெறோன் (Juan Peron) ‘இடதுசாரி பசிஸ்ட்’ ஆட்சியை அவர் வெறுத்தார். இந்தச் சம்பவங்கள் நாடாளுமன்ற மக்களாட்சித் தத்துவத்தில் அவரை நம்பிக்கை இழக்க வைத்தது. இராணுவ அரசியல்வாதிகள் மற்றும் இராணுவம், முதலாளித்துவ வல்லாண்மை இவற்றைச் சே குவாரா வெறுத்தார். எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்காவும் அமெரிக்க டொலரும் செலுத்திய மேலாதிக்கத்தை அடியோடு வெறுத்தார்.

1949 ஆம் ஆண்டு முதன் முறையாக நீண்ட பயணங்களை மேற்கொண்டார். ஆர்ஜென்டீனாவை துவிச்சக்கர வண்டியில் சுற்றிப் பார்த்தார். அப்போது ஏழைகள் மற்றும் சிவப்பு இந்திய மக்களின் சந்ததியினரது அவல வாழ்க்கையை நேரில் பார்த்துத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது.

1951 இல் மேலும் நீண்ட பயணங்களை மேற்கொண்டார். இம்முறை அவருடன் அவரது நண்பர் ஒருவரும் சேர்ந்து கொண்டார். ஆர்ஜென்டீனாவின் தென் பகுதி, சிலி (Chile) நாடுகளைச் சுற்றிப் பார்த்தார். கூலி வேலை செய்து அதில் வரும் வருமானத்தைக் கொண்டு வாழ்க்கையை ஓட்டினார். சிலி நாட்டில் சல்வடோர் அலன்டே (Salvador Allende) யைச் சந்தித்தார். பேரு நாடு சென்று அங்குள்ள குட்டரோகிகள் மருத்துவ மனையில் சிறிது காலம் பணியாற்றினார். தனது மருத்தவப் பட்டப் படிப்பிற்கான இறுதிப் பரீட்சையை எடுக்கச் சொந்த நாட்டுக்குத் திரும்பினார். ஆனால், ஒரு விடயத்தில் அவர் உறுதியாக இருந்தார். ஒரு மத்திய வகுப்பைச் சேர்ந்த மருத்துவராக தொழில் புரிவதில்லை என முடிவு செய்தார். 1953 ஆம் ஆண்டு மருத்தவ இறுதிச் சோதனையில் தேறினார். அவர் தோலைப்பற்றிய மருத்துவத்தில் (Dermatology) நிபுணராக விளங்கினார்.

1952ல் ஆர்ஜென்டீனா சர்வாதிகாரி யுவான் பேறோன் க்கு எதிராக நடந்த கிளர்ச்சியில் பங்கு பற்றினார். 1953 இல் கவுத்தமாலாவுக்குச் சென்று அப்போது அங்கு யேகப் ஆர்பென்ஸ் குஸ்மான் (Jacobo Arbenz Guzman) ஆட்சிசெய்து கொண்டிருந்த கம்யூனிஸ்ட் சார்பான அரசில் சேர்ந்து கொண்டார். பின்னர் 1954 ஆம் ஆண்டு அந்த ஆட்சி கவுண்டபோது அங்கிருந்து தப்பி மெக்சிக்கோவுக்குப் போனார். அங்கேதான் சேகுவாரா பிடல் கஸ்றோவையும் அவரது கியூபானிய தோழர்களையும் சந்தித்தார்.

1956 இல் கஸ்றோவின் கெரில்லாப் படை கியூபாவின் சர்வாதிகாரி பட்டிஸ்தாவுக்கு (குரடபநnஉழை டீயவளைவய) எதிராகத் தொடுத்த கெரில்லா யுத்தத்தில் சே குவாரா முக்கிய தளபதிகளில் ஒருவராக விளங்கினார் என்பதை முன்னரே பார்த்தோம். அவரது பன்முக பட்டறிவு மிக விரைவில் அவரைக் கஸ்றோவின் நம்பிக்கைக்குரிய மிக நெருங்கி நண்பனாக ஆக்கியது.

மீண்டும் சே குவாரா கவுத்தமாலாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். இப்போது தனது செலவைச் சரிக்கட்ட கூலி வேலை செய்வதற்குப் பதில் பயணம் மற்றும் அகழாய்வு பற்றிய கட்டுரைகளை ஏடுகளுக்கு எழுதினார். அகழாய்வு பற்றிய கட்டுரைகள் பழங்குடிகளான இங்கா (Inca) மற்றும் மாயா ( Maya) மக்கள் பற்றி இருந்தன.
கவுத்தமாலாவில் சோசலிஸ்ட் சனாதிபதியாக ஆர்பென்ஸ் விளங்கினார். சே குவாரா ஒரு மார்க்சீயவாதியாக இருந்தாலும் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர மறுத்து விட்டார். அதனால் அந்த நாட்டில் மருத்துவராகப் பணிபுரியக்கூடிய வாய்ப்பை இழந்தார். அதனால் அவர் கையில் சல்லிக் காசுகூட இல்லாமல் கந்தை உடுக்கும் நிலைமை உருவாகியது.

இந்தத் தருணத்தில்தான் ஹில்டா காடீயா (Hilda Gadea)  என்ற மார்க்சியவாதியின் அறிமுகம் கிடைத்தது. காடீயா இந்திய வம்சா வழியினர். அவர் சே குவாராவுக்கு உதவி செய்தார். அத்தோடு அவரைப் பிடல் கஸ்றோவின் நெருங்கிய தளபதிகளில் ஒருவரான நிகோ லோபெஸ் (Nico Lopez) என்பவருக்கு காடீயா அறிமுகம் செய்து வைத்தார்.

கவுத்தமாலாவில் அமெரிக்க உளவு நிறுவனமான சிஅய்ஏ எதிர்ப்புரட்சியாளர்களின் முகவர்களாகச் செயற்படுவதைப் பார்த்தார். அந்த அனுபவம் ஆயுதப் போராட்டத்தின் மூலமே புரட்சியை உருவாக்கலாம் என்ற உண்மையை அவருக்கு உணர வைத்தது.

ஆர்பென்ஸ் அரசு முடிவுக்கு வந்தபோது, சே குவாரா மெக்சிக்கோ நகருக்கு (செப்தெம்பர், 1954) சென்றார். அங்கு ஒரு பொது மருத்தவமனையில் பணியாற்றினார். அப்போதுதான் சே குவாரா அரசியல் அகதிகளாக அங்கு ஏற்கனவே குடியேறி வாழ்ந்த பிடல் கஸ்றோ மற்றும் றாவுல் கஸ்றோ இருவரையும் சந்தித்தார்.

கஸ்றோ உடன்பிறப்புக்களது வசீகர ஆளுமை சே குவாராவை வெகுவாகக் கவர்ந்தது. பிடல் கஸ்றோவில் தான் தேடிக் கொண்டிருந்த தலைவரைக் கண்டார். அவர்களோடு சேர்ந்து கொண்ட சே குவாரா ஏனைய புரட்சியாளர்களுக்கு அளிக்கப்பட்ட கடுமையான கெரில்லாச் சண்டைப் பயிற்சியை மேற்கொண்டார். அந்தப் பயிற்சியினை அளித்தவர் இசுப்பானிய குடியரசின் இராணுவ தளபது அல்பேர்ரோ பாயோ (Alberto Bayo) ஆவார். பாயோ தனது சொந்த அனுபவங்களை மட்டும் அல்லாது மா சே துங் கெரில்லா யுத்தத்தைப்பற்றிக் கற்பித்த பாடங்களையும் சேர்த்துச் சொல்லிக் கொடுத்தார்.

பயிற்சி முகாமில் சே குவாரா அவரது நட்சத்திர மாணவனாகத் திகழ்ந்தார். அதனால் அவர் பயிற்சியாளர்களது தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போதுதான் எல்லோரும் குவாராவை சே (Che) என்று அழைக்க ஆரம்பித்தார்கள். ‘சே’ என்றால் தோழன்(ர்) (buddy or chum) என்று பொருள். அதன் மூலம் இத்தாலி மொழியாகும்.

இவர்களது பயிற்சி முகாம் காவல்துறையினரது கவனத்தை ஈர்த்தது. சே குவாரா கைது செய்யப்பட்டார். நல்ல காலம் ஒரு மாதம் கழித்து (யூன் 1956) அவர் விடுதலை செய்யப்பட்டார். கியூபாவைத் தாக்க அவர்கள் சென்றபோது சே குவாரா முதலில் ஒரு மருத்துவராகவும் பின்னர் புரட்சிப்படையின் தளபதிகளில் ஒருவராகவும் பணியாற்றினார். ஏனைய கெரில்லாத் தளபதிகளோடு ஒப்பிடும்போது சே குவாராவே மிகவும் வெற்றிகரமான தளபதியாகத் திகழ்ந்தார். மற்றவர்களுக்கு லெனிசத்தைப் படிப்பிப்பதிலும் அவர் முன்னணி வகித்தார்.

கியூபாவில் புரட்சி வெற்றி பெற்று கஸ்றோ தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டபோது, அவருக்கு அடுத்த நிலையில் சே குவாரா இருந்தார். அது மட்டுமல்ல கஸ்றோவைக் கம்யூனிசப் பாதைப் பக்கம் இழுத்து வந்ததில் சே குவாராவுக்கு பெரிய பங்குண்டு. ஆனால், சே குவாராவின் கம்யூனிசம் பழயை, மொஸ்கவ் பாணி கம்யூனிசம் ஆக இருக்கவில்லை. கியூபாவின் நிலவுடமை மறுபங்கீட்டுத் திட்ட சட்டங்களை அமுல்படுத்த உருவாக்கப்பட்ட தேசிய நிறுவனத்தை நிர்வகிக்கும் பொறுப்பு சே குவாராவுக்குக் கொடுக்கப்பட்டது. பெரிய நிலவுடமையாளர்களது நிலத்தைப் பறித்து ஏழை விவசாயிகளுக்கு சிறு துண்டுகளாகப் பகிர்ந்தளிக்கப்பட்டது. கியூபாவின் தேசிய வங்கிக்கு சே குவாராவே தலைவராக நியமிக்கப்பட்டார்.

1959 இல் அலெடியா மார்ச் (Aledia March ) என்ற பெண்ணை சே குவாரா மணந்து கொண்டார். இருவரும் எகிப்து, இந்தியா, யப்பான், இந்தோனிசியா, பாகிஸ்தான் மற்றும் யூகோசிலேவியா போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்து கியூபா திரும்பினார்கள். 1960 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கைத்தொழில் அமைச்சர் என்ற முறையில் சோவியத் நாட்டோடு ஒரு வாணிக ஒப்பந்தத்தைச் சே குவாரா செய்து கொண்டார். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் கியூபாவின் சீனி ஏற்றுமதிக்கு அமெரிக்க சந்தையை நம்பியிருக்கும் நிலைமை மாற்றப்பட்டது.

சே குவாரா ஒரு கோட்பாட்டை முன்வைத்தார். ‘புரட்சிக்குத் தக்க சூழ்நிலைகளுக்காகக் காத்திருக்க வேண்டியதில்லை. அதற்கான சூழ்நிலையை முன்கூட்டியே உருவாக்கலாம்’ என்பது அவர் முன்வைத்த கோட்பாடு ஆகும். மா சே துங் போல ‘பெரும்பாலும் விவசாயிகளைக் கொண்ட நாட்டில் புரட்சி கிராமப்புறங்களில் இருந்து பட்டினங்களுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்’ என்று சே குவாரா நினைத்தார். மேலும் தனக்கு உரித்தான கம்யூனிச தத்துவத்தை விளக்கினார். அது பின்னர் (1965 ஆம் ஆண்டு மார்ச்சு 15) ‘மனிதனும் சோசலீசமும்” என்ற பெயரில் நூலாகப் பிரசுரிக்கப் பட்டது.

‘மனிதன் எப்போது மானிட நிலையை அடைகிறான்? அவன் தன்னை ஒரு பண்டைமாற்றுப் பொருளாக விற்பனை செய்யக் கட்டாயப் படுத்தப் படாத நிலையில்தான் அது சாத்தியம்’ என்று சே குவாரா நம்பினார். இதனால் அவர் ‘மொஸ்கவ்’ பக்கம் இருந்து மாவோ பக்கம் சாயத் தொடங்கினார். சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியோடான இறுதி முறிவு ஆபிரிக்க-ஆசிய நாடுகளது அய்க்கியம் (பெப்ரவரி 1965) தொடர்பாக நடந்த மாநாட்டில் சே குவாரா பேசும் போது ஏற்பட்டது.

சோவியத் நாடு கம்யூனிச நாடுகளோடு மட்டும் வாணிகம் செய்யாது அது மற்ற நாடுகளோடும் வாணிகம் மேற்கொள்வதை சே குவாரா கண்டித்தார். அது மட்டும் இல்லாது வளர்ச்சி குன்றிய சோசலீச நாடுகளுக்கு எந்தக் கைமாறும் கருதாது சோவியத் நாடு நிதியுதவி செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். சோவியத் நாட்டின் சகவாழ்வுக் கொள்கையையும் (policy of co-existence) மற்றும் வரலாற்றுத் திரிபுவாதத்தையும் சே குவாரா வன்மையாகக் கண்டித்தார்.

தனது புரட்சிக் கொள்கையை நடைமுறைப்படுத்த மூன்று கண்டங்களது (ஆசியா, ஆபிரிக்கா, தென் அமெரிக்கா) மாநாட்டைக் கூட்டினார். அதில் ஒரு புரட்சிகரமான, கிளர்ச்சிக்கான கெரில்லாத் திட்டத்தை நடைமுறைப் படுத்த முடிவு செய்யப்பட்டது. அதே நேரம் கியூபாவின் அய்க்கிய நாடுகள் சபையின் பிரதிநிதியாக இருந்த சே குவாரா அமெரிக்காவின் பேராசை மற்றும் தென் அமெரிக்காவில் அதன் இடைவிடாத தலையீடு மற்றும் சுரண்டல் ஆகியவற்றைக் கடுமையாகக் கண்டித்தார்.

வளர்முக நாடுகளில் விவசாயிகளைத் தளமாகக் கொண்ட புரட்சி இயக்கங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று சே குவாரா வற்புறுத்தினார். கம்யூனிச – முதலாளித்துவ நாடுகளுக்கு எதிராக அவரது விட்டுக் கொடுக்காத மனப் போக்கு கஸ்றோவை உத்தியோக பூர்வமாக இல்லாவிட்டாலும் நடைமுறையில் ஓரங்கட்ட வைத்தது. உள்ளத்தாலும் உணர்வாலும் புரட்சியாளனாக வாழ்ந்த சே குவாரா வெறுமனே ஒரு நிருவாகியாக இருக்க விரும்பாமல் கியூபாவை விட்டு 1965 ஆம் ஆண்டு சடுதியாக மாயமாக மறைந்தார். மாதக் கணக்கில் அவரது இருப்பிடம் எதுவென யாருக்கும் தெரியாமல் இருந்தது. அவர் இறந்து விட்டார் என்ற வதந்தி உலகெங்கும் பரவியது.

உண்மையில் சே குவாரா அப்போது ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கொங்கோவில் இருந்தார். அதன் தலைநகரம் கின்சாசாவில் (Kinshasa) நடந்து கொண்டிருந்த கிளர்ச்சியை கியூபா பாணியில் ஒரு கெரில்லாப் போராக மாற்றக் கூடிய சாத்தியங்களை அவர் ஆராய்ந்து கொண்டிருந்தார். கியூபா திரும்பிய சே குவாரா 120 பயிற்சி பெற்ற கெரில்லா வீரர்களை அழைத்துக் கொண்டு கொங்கோ போனார். அவரது வீரர்கள் நன்றாகச் சண்டை செய்தார்கள். ஆனால், கின்சாசா கிளர்ச்சி யாளர்களால் அவ்வாறு போராட முடியவில்லை. பெல்ஜியன் கூலிப்படைகளுக்கு எதிராக உதவாதவர்களாக இருந்தார்கள். 1965 ஆம் ஆண்டுக் கடைசியில் கொங்கோ கிளர்ச்சியாளர்களுக்குக் கொடுக்கப்பட்ட கியூபாவின் உதவியை விலக்கிக் கொள்ள கஸ்றோவுக்கு ஆலோசனை வழங்கினார்.

சே குவாராவின் இறுதி புரட்சிப் பயணம் பொல்வியாவை நோக்கி இருந்தது. பொல்வியாவின் புரட்சிக்கு வேண்டிய வாய்ப்பைக் கணிப்பதில் அவர் பெரிய பிழை விட்டார். அவரது முயற்சி தோல்வியைத் தழுவியது. பொல்வியா இராணுவத்தினால் கைது செய்யப்பட்ட சே குவாரா அடுத்த நாள் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் இறக்கும்போது அவருக்கு வயது 39.

சே குவாராவின் வசீகரத் தோற்றம், எந்தச் சமரசத்தையும் ஏற்றுக் கொள்ள மறுக்கும் போக்கு, சீர்திருத்தத்தை மட்டும் வலியுறுத்துவதைப் புறக்கணிக்கும் நோக்கு, வன்முறையில் இருந்த நாட்டம் அவரைப் புரட்சிச் சிந்தனை கொண்ட இலட்சக் கணக்கான இளைஞர்களது ஆராதனைக்குரிய போராளியாகப் பார்க்க வைத்தது. அறுபதுகளிலும், எழுபதுகளிலும் முதலாளித்துவ அரசியல்-பொருளாதாரத் தளங்களை தகர்த்தெறிந்து பொதுவுடமைச் சமுதாயத்தைக் கட்டி எழுப்ப நினைத்த இளைஞர் களுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக சே குவாரா விளங்கினார்.

1997 ஒக்தோபர் 11 ஆம் நாள் சே குவாரா இறந்த 30 ஆவது ஆண்டு நினைவு நாள் கியூபாவில் கொண்டாடப்பட்டது. இலட்சக்கணக்கான மக்கள் பொல்வியாவில் இருந்து கண்டெடுத்துக் கொண்டு வரப்பட்ட அவரது உடலின் மிச்சத்தைத் (எலும்புத் துண்டுகள்) தரிசிக்க நீண்ட வரிசையில் காத்திருந்தார்கள். கியூபாவின் தேசியக் கொடியால் போர்த்தப்பட்டிருந்த அவரது மிச்சம் ஹவானாவிலும் சாந்தா கிலேறாவிலும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. அதன் பின்னர் ஒரு மாவீரனுக்குரிய அரச மரியாதையோடு அவர் அடக்கம் செய்யப்பட்டார்.

கஸ்றோ சே குவாராவைப் பற்றிக் குறிப்பிடும் போது “அவர் இப்போதுதான் எப்போதையும் விட புகழோடு இருக்கிறார்’ என்று சொன்னார். சே குவாரா தனது குழந்தைகளுக்கு எழுதிய கடிதம் ஒன்று அவரது உயரிய கோட்பாட்டை, பரந்த சிந்தனையை வெளிப்படுத்துகிறது.   

“நல்ல புரட்சியாளர்களாக வளருங்கள். முயற்சி செய்து படியுங்கள். அப்போதுதான் இயற்கையை வசப்படுத்தும் திறமை உங்களுக்கு வரும். எல்லாவற்றிற்கும் மேலாக உலகின் எந்த மூலையிலும் எவருக்காவது என்ன அநீதி இழைக்கப்பட்டாலும் அதையிட்டு ஆழமாகச் சிந்தியுங்கள். இதுதான் ஒரு புரட்சியாளனுக்கு இருக்க வேண்டிய மிகச் சிறந்த குணம்.’

———————————————————————————————————-

கியூபா பயணக் கட்டுரை
ஒரு பருந்தின் நிழலில்
நாற்பத்து மூன்று ஆண்டுகள் பதவியில் நீடிக்கும் பிடல் கஸ்றோ
(87)

புரட்சி அருங்காட்சியகத்தில் தோல்வியில் முடிந்த மொன்காடா இராணுவ விடுதி (Moncada Barracks) மீது கஸ்றோவின் கெரில்லாப் படையணி மேற்கொண்ட தாக்குதலின்போது அவர் அணிந்திருந்த இரத்தம் தோய்ந்த சீருடையைக் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். அதேபோல் கஸ்றோவுக்கு எதிரான புகழ்பெற்ற வழக்கில் (”வரலாறு என்னை விடுவிக்கும்”) அவர் அணிந்திருந்த கறுப்புக் கோட்டையும் அங்கு பார்வைக்கு வைத்திருக்கிறார்கள். சிறையில் இருந்தபோது புரட்சிக் கைதிகள் பயன்படுத்திய கீதார் (புரவையச) ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது. புரட்சி அருங்காட்சி யகத்தில்தான் பிடல் கஸ்றோவின் சனாதிபதி அலுவலகம் இயங்குகிறது.

கியூபா புரட்சியின் கதாநாயகன் பிடல் கஸ்றோதான் என்பதை சொல்லத் தேவையில்லை. 1959 ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து இன்றுவரை கஸ்றோ கியூபாவின் ஆட்சித் தலைவராக இருந்து வருகிறார். இது ஒரு சாதனை என்பதில் ஐயமில்லை. இந்த 43 ஆண்டு காலமாக கியூபா மக்களிடையே அவரது செல்வாக்குக் குறைந்து போயிற்று என்றோ அல்லது குறைந்து வருகிறது என்பதற்கோ சான்றுகள் எதுவும் காணப்படவில்லை. அவருக்கு மேல்மட்ட மற்றும் நடுத்தர மக்களிடையே எதிர்ப்பு இருந்தாலும் கீழ்மட்ட கியூபானியர் மத்தியில், குறிப்பாக ஆபிரிக்க கியூபன் மக்களிடையே அவருக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது.
கஸ்றோ கியுபாவின் ஓறியன்ட் மாகாணத்தில் (Oriente Province) பிரான் என்ற இடத்துக்கு அருகில் அவரது குடும்பத்துக்குச் சொந்தமான கரும்புத் தோட்டத்தில் 1927 ஆம் ஆண்டு ( 1926 என்று வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன) பிறந்தார். அவரது தந்தைக்கு 23,000 ஏக்கர் கரும்புத் தோட்டம் சொந்தமாக இருந்தது.

கஸ்றோ சிறுவனாக இருந்தபோது இந்தக் கரும்புத் தோட்டத்தில் வேலை செய்திருக் கிறார். 1942 இல் ஹவானாவில் உள்ள Colegio Belen என்ற புகழ்பெற்ற கல்லூரியில் சேர்க்கப்பட்டார். இந்தக் கல்லூரியை கத்தோலிக்க மதபீடத்தைச் சேர்ந்த ஜெசுயிட்ஸ் (Jesuits) பாதிரிமார்கள் நடத்தினார்கள். 1943-44 ஆம் ஆண்டு கஸ்றோ Colegio Belen  கல்லூரியின் சிறந்த விளையாட்டு வீரர் என்ற விருதைத் தட்டிக் கொண்;டார்.

1945 ஆம் ஆண்டு கஸ்றோ பட்டம் பெற்று வெளியேறினார். பின்னர் ஹவானா பல்கலைக் கழகத்தில் சேர்ந்து சட்டப் படிப்பபைத் தொடர்ந்தார். அதில் முனைவர் பட்டம் பெற்று 1950 ஆம் ஆண்டு வெளியேறினார்.

அதே ஆண்டு கஸ்றோ வழக்கறிஞர் தொழிலை ஹவானாவில் தொடங்கினார். அப்போது கியூபாவில் இயங்கிய மிதவாத அரசியல் கட்சியான மக்கள் கட்சியில் சேர்ந்தார். அந்தக் கட்சி சார்பாக 1952 ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட கஸ்றோ திட்டமிட்டார். ஆனால், தளபதி பத்திஸ்தா (Fulgencio Battista) மார்ச்சு 10 ஆம் நாள் இரத்தம் சிந்தாத இராணுவப் புரட்சி மூலம் சனாதிபதி Carlos Prío Socarrás ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு அதிகாரத்தைக் கைப்பற்றினார். அதை யடுத்துத் தேர்தல் நடைபெறுவதை இல்லாது செய்தார். அதனால் கஸ்றோவின் அரசியல் ஆசை நிறைவேறாது போய்விட்டது.

மார்ச்சு 27 ஆம் நாள் வலதுசாரி பத்திஸ்தா அரசுக்கு அமெரிக்கா இராசதந்திர மட்டத்தில் அங்கீகாரம் வழங்கியது. அதற்குக் கைமாறாக பத்திஸ்தா கியூபாவின் வாணிகத்தை அமெரிக்க முதலாளிகளுக்குத் திறந்து விட்டார். பத்திஸ்தா அரசியல் யாப்பு விதிகளை மீறிவிட்டார் என்று கஸ்றோ நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார். ஆனால், நீதிமன்றம் அதனை நிராகரித்து விட்டது.

1953 ஆம் ஆண்டு யூலை 26 ஆம் நாள் சந்தியாகோ டி கியூபாவில் (Santiago de Cuba) இருந்த மொன்காடா இராணுவ விடுதி மீது கஸ்றோவின் கெரில்லாப் படையணி தாக்குதல் தொடுத்தது. இந்தப் படையணியில் 160 கெரில்லாப் போராளிகள் பங்கு பற்றினார்கள். அதே சமயம் சந்தியாகோ டி கியூபாவிற்குத் தெற்கே 90 கிமீ  தூரத்தில் இருந்த பாயமோ காவற் கோட்டையை (Bayamo garrison) பிறிதொரு அணி தாக்கியது.

இரண்டு தாக்குதலிலும் 80 கெரில்லாப் போராளிகள் இறந்து பட்டார்கள். பலரும் எதிர்பார்த்தது போல தாக்குதல் பெரிய தோல்வியில் முடிந்தது. பெரும்பான்மையினர் கைது செய்யப்பட்ட பின் சித்திரவதை செய்யப்பட்டு அல்லது துப்பாக்கியால் சுடப்பட்டுக்  கொல்லப்பட்டார்கள். கஸ்றோ மற்றும் அவரது உடன் பிறப்பு றாவுல் சிறை பிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்கள். நீதி விசாரணையின் பின்னர் அவர்களுக்கு 15 ஆண்டு கடூழியச் சிறைத் தண்டனை விதித்து நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது.

நீதிமன்றத்தில் தன் சார்பாக வாதாடிய கஸ்றோ நீண்ட நேரம் வாதாடினார். அவரது தொகுப்புரை பல மணித்தியாலங்கள் நீடித்தது. “பஸ்தியாவின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்து போராட பொதுமக்களுக்கு கியூபாவின் அரசியல் யாப்பு உரிமை வழங்குகிறது” என்று கஸ்றோ வாதாடினார்.

அந்த நீண்ட வாதத்தின் போதுதான் கஸ்றோவுக்குப் பின்னர் புகழ் தேடிக் கொடுத்த ஒரு சொல்லாட்சியைப் பயன்படுத்தினார். “என்னை எப்படி வேண்டும் என்றாலும் தண்டியுங்கள். அதையிட்டு எனக்குக்; கவலை இல்லை.  வரலாறு என்னை விடுவிக்கும்.’ (Condemn me. It does not matter. History will absolve me.” )

கஸ்றோ 1955 மே 15 ஆம் நாள் தண்டனைக் காலம் முடியு முன்னரே சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளியேறிய கஸ்றோ மெக்சிக்கோ சென்றார். அங்கு இருந்து கொண்டு யூலை 26 புரட்;சி இயக்கத்தை உருவாக்கினார். 1956 டிசெம்பர் 2 ஆம் நாள் கஸ்றோ, அவரது உடன்பிறப்பு றாவுல் கஸ்றோ மற்றும் புரட்சிப் போராளிகள் ஓறியன்ட் மாகாணத்தின் வடக்குக் கரையைத் தாக்கினார்கள். அதன்பின் கஸ்றோ ளுநைசசய ஆயநளவசய  என்ற மலைப் பகுதியில் பதுங்கி வாழ்ந்து புரட்சிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார். மக்கள் ஆதரவு பெருகியது. கெரில்லா படையணியின் பலம் இப்போது 3,000 ஆக உயர்ந்தது. பத்திஸ்தா அரசுக்கு எதிராகப் பல வெற்றிகரமான கெரில்லாத் தாக்குதல்களை கஸ்றோ மேற்கொண்டார்.
1958 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் 3,000 கெரில்லாப் போராளிகளைக் கொண்ட கஸ்றோவின் கெரில்லா படையணிகள் 30,000 எண்ணிக்கை கொண்ட பத்திஸ்தா அரசின் தொழில்சார் இராணுவத்தைப் புறமுதுகு கண்டது. கஸ்றோவின் ஆயுதப் புரட்சி வெற்றி பெற்றது.
பாதிஸ்தா புத்தாண்டு தினத்தில் நாட்டை விட்டு ஓடித் தப்பினார். கஸ்றோ தலைமையில் 1959 சனவரி 7 ஆம் நாள் இடைக்கால அரசு பதவி ஏற்றது. அந்த இடைக்கால அரசை அமெரிக்கா அங்கீகரித்தது. பெப்ரவரி மாதம் 18 ஆம் நாள் கஸ்றோ கியூபாவின் பிரதமராகப் பதவியேற்றார்.

கஸ்றோ 1959-1976 வரை நாட்டின் பிரதமராகச் செயல்பட்டார். 1976 ஆன் நடுப் பகுதியில் புதிய அரசியல் யாப்பு நடைமுறைப் படுத்தப்பட்டபோது சனாதிபதி பதவியைக் கஸ்றோ ஏற்றுக் கொண்டார்.

மிக விரைவில் கஸ்றோ தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என அறிவித்துவிட்டு ஒரு கட்சி ஆட்சியைப் பிரகடனப்படுத்தினார். கம்யூனிஸ்ட் கியூபா சோவியத் ஒன்றியத்தின் மிக நெருங்கிய நட்பு நாடாக விளங்கியது.

பெரிய நிலச்சுவாந்தர்களின் நிலத்தை கஸ்றோ நாட்டுடமை ஆக்கியதை முன்னர் பார்த்தோம். 1960 ஆம் ஆண்டு கஸ்றோ கரும்புத் தோட்டங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், மின்னுற்பத்தி நிலையங்கள் போன்றவற்றை நாட்டுடமை ஆக்கினார். கஸ்றோவின் கம்யூசிச அரசை விரும்பாத மேல்தட்டு மற்றும் இடைத்தட்டு வகுப்பு மக்கள் ஆயிரக்கணக்கில் நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்காவில் குடியேறினார்கள். இன்று மியாமி, புளரிடாப் பகுதிகளில் 40 இலட்சத்திற்கும் அதிகமான கியூபன் அமெரிக்கர்கள் வாழ்கிறார்கள்.

கியூபாவில் இருந்து சிறு படகுகளில் கடலைக் கடந்து அமெரிக்காவிற்குத் தப்பியோடிய நூற்றுக் கணக்கான மக்கள் இடையில் படகுகள் கவிழ்ந்து கடலில் மூழ்கி இறந்துபட்டிருக்கிறார்கள்.

2000 ஆம் ஆண்டு நடந்த சனாதிபதி தேர்தலில் யோர்ஜ் புஷ் பலத்த இழுபறிக்குப் பின்னர் மிகக் குறைந்த பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றார். அந்த வெற்றிக்குக் கியூபன் அமெரிக்கர்களது வாக்குகள் கேந்திர இடம் வகித்தது. அது போலவே சனாதிபதி புஷ் அவர்களது உடன்பிறப்பு ஜெப் புஷ் புளோரிடா மாநில ஆளுநர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கும் கியூபன் அமெரிக்கர்களது ஆதரவு முக்கிய பங்கு வகித்தது.

எனவே அமெரிக்க அரசியலில் கியூபன் அமெரிக்கர்கள் குடியரசுக் கட்சி சரி, சனநாயகக் கட்சி சரி இரண்டுக்கும் வேண்டப்படுபவர்களாக இருக்கிறார்கள்.
கியூபாவின் நூறாவது சுதந்திர நாளன்று (மே 20) உரையாற்றிய சனாதிபதி புஷ், ‘கியூபா மீதான பொருளாதாரத் தடை தளர்த்தப்பட வேண்டும் என்றால் கியூபா அரசு சுதந்திரமான தேர்தலை நடத்த வேண்டும் மக்களுக்குப் பேச்சுச் சுதந்திரம் வழங்க வேண்டும் அமைப்பு ரீதியாகச் செயல்படும் சுதந்திரம் வழங்க வேண்டும். அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் சுதந்திரமான தொழிற் சங்கங்கள் உருவாகுவதற்கு அனுமதி வழங்க வேண்டும்’ என்ற நிபந்தனைகளை விதித்தார்.

ஒரு கிழமை கழித்து புஷ் அவர்களது உரைக்கு கஸ்றோ காட்டமாகப் பதில் இறுத்தார். ‘சமூக நலன்கள் பேணுவதில் எந்தவொரு இலத்தீன் அமெரிக்க நாட்டையும் விட கியூபா முன்னணியில் இருக்கிறது. கியூபாவின் தெருக்களில் எந்தக் குழந்தையும் பிச்சை கேட்டு அலையவில்லை. கியூபா இளைஞர்கள் ஒருவராவது போதை மருந்துக்குப் பலியாக வில்லை. இது புஷ் சொல்வதுபோல் அடக்குமுறை அல்ல. புஷ் அவர்களுக்கு எல்லாச் சிக்கல்களையும் தீர்த்து வைக்கும் பணம் இருக்கிற இடத்தில் மட்டுமே சனநாயகம் இருக்கிறது என்று நினைக்கிறார்.

புஷ் விரும்பும் சனநாயகம் ஏழைகளை ஓரங்கட்டி ஊழலையும் நேர்மையின்மை யையும் போற்றும் நாடாகக் கியூபாவை மாற்றிவிடும். பின்னர் சமூகச் சிக்கல்களையும் உலகச் சிக்கல்களையும் தீர்த்து வைப்பதற்கு ஒரு தட்டுக்கு 25000 டொலர்கள் கொடுத்துச் சாப்பிடக் கூடியவர்களே தேவைப்படுவார்கள். அது ஏழ்மையிலும், பட்டினியிலும் வாடும் கோடிக்கணக்கான மக்களை அவமதிப்பதாகும்.”

கியூபாவில் குழந்தைகள் பிச்சை எடுக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், ஹவானா தலை நகரில் இரண்டொரு பிச்சைக்காரர்களைப் பார்த்தேன். சில வயதுபோன கிழவிகள் சுற்றுலாப் பயணிகளிடம் தயங்கித் தயங்கி தங்கள் கைகளை நீட்டுகிறார்கள். அப்படிப் பார்த்தால் நியூயோர்க் நகரிலும் நூற்றுக் கணக்கானவர், பெரும்பாலும் கறுப்பர்கள், போவோர் வருவோரிடம் பிச்சை கேட்கிறார்கள்.

அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் போதை மருந்துக் கடத்தல், அதன் பாவனை பெரிய சிக்கலாக உள்ளது. போதை மருந்து கடத்துவது கோடிக்கணக்கான பெறுமதி வாய்ந்த வணிகமாக இருக்கிறது. அவ்வப்போது காவல்துறை போதை மருந்து கடத்துகிறவர்களைத் தேடிப் பிடித்துக் கைது செய்கிறார்கள். ஆனால், போதை மருந்துக் கடத்தல் தொழில் முற்றுப்பெற்றதாக இல்லை.

இங்குள்ள தமிழ் இளைஞர் குழுக்கள் போதை மருந்தைச் சாப்பிட்டு விட்டுத்தான் ஒருவரை ஒருவர் சுட்டுக் கொள்கிறார்கள். அல்லது வெட்டிக் கொள்கிறார்கள். அவர்கள் வாயாலேயே இதனை நான் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

கியூபா ஒரு தீவாக இருப்பதால் போதைப் பொருளைச் சுலபமாகக் கடத்த முடியாது. விமான நிலையங்களில் வந்திறங்கும் பயணிகள் போதை மருந்தைக் கொண்டு வருகிறார்களா என்பதைக் கண்டறிய சல்லடை போட்டு ஆட்களையம் பொதிகளையும் சோதனை போடுகிறார்கள். போதைப் பொருளை மோந்து கண்டு பிடிக்க நாய்கள் வேறு வைத்திருக்கிறார்கள். நாட்டில் ஊழல் இல்லாததால் பணம் கொடுத்து போதைப் பொருட்களைக் கடத்த முடியாது.
ஆனால், கியூபாவில் வறுமை இல்லையே ஒழிய ஏழ்மை இருக்கிறது. அதனால்தான் அந்த நாட்டைவிட்டுப் பலர் அமெரிக்காவிற்கு ஓடித் தப்புகிறார்கள்.

—————————————————————————————————————–
 
கியூபா பயணக் கட்டுரை
ஒரு பருந்தின் நிழலில்
கஸ்றோ புரட்சி வீரனா? அல்லது கொலையாளியா?
(88)


இந்தக் கிழமை கனேடிய ஊடகங்களில் கியூபா பற்றிய செய்தி அடிபட்டன. கனடாவிற்கு வருகை தந்த போப்பாண்டவர் 2 ஆவது அருளப்பர் சின்னப்பரைத் தரிசிக்க வந்த கியூபானியர்களில் 23 பேர் அரசியல் அடைக்கலம் கோரியுள்ளார்கள். பொதுவாகக் கியூபானியர்கள் வெளிநாடுகளுக்கு விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளப் போகும்போது. அவர்களில் சிலர் அந்த நாடுகளில் அரசியல் அடைக்கலம் கேட்பது வழமை ஆகும். சோவியத் ஒன்றியம் இருந்த காலத்திலேயே இவ்வாறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளப் போகும் வீரர்கள் தலைமறைவாகி விடுவது வழக்கமாக இருந்தது.  எனவே இந்த 23 கியூபானியர்கள் கனடாவில் அரசியல் அடைக்கலம் கோரியதில் வியப்பில்லை என்றே சொல்ல வேண்டும். மற்றைய நாடுகளில் இருந்து கனடாவிற்கு வருகிறவர்களும் இவ்வாறு அரசியல் அடைக்கலம் கோருகிறார்கள்.

கியூபானியர்களைப் போல அங்கோலாவில் இருந்து போப்பாண்டவரைத் தரிசிக்க வந்த சிலரும் இங்கு அரசியல் அடைக்கலம் கேட்டுள்ளார்கள்.

கேள்வி என்னவென்றால் எந்த அடிப்படையில் கனடா இவர்களது கோரிக்கையை ஏற்கப் போகிறது? கியூபானியர்கள்  தாங்கள் மத அடிப்படையில் துன்புறத்தப் படுவதாகச் ( persecution) சொல்ல முடியாது. ஆனால், கியூபாவில் தனிக் கட்சி வல்லாண்மை ஆட்சி நடைபெறுவதாகக் கூறி அரசியல் அடைக்கலம் கேட்கலாம். அப்படியான கோரிக்கையை கனடா ஏற்கக் கூடும். அமெரிக்காவைப் பொறுத்தளவில் கியூபானியர்கள் அரசியல் அடைக்கலம் கோரினால் அது உடனடியாக ஏற்கப்பட்டு விடுகிறது. காரணம் கம்யூனிஸ்டு நாடுகளில் இருந்து தப்பி ஓடி வருகிறவர்களுக்கு அரசியல் அடைக்கலம் கொடுப்பதை அமெரிக்கா தனது குடிவரவுக் கொள்கையாகவே வைத்திருக்கிறது.

அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இரண்டாவது மூன்றாவது உலக நாடுகளில் இருந்து பெருந்தொகைப் பணத்தை முகவர்களுக்குக் கொடுத்துக் களவாக உள் நுழைய இலட்சக்கணக்கில் ஆட்கள் காத்திருக்கிறார்கள்!

எனவே இங்கு போப்பாண்டவரைத் தரிசிக்க வந்த கியூபானியர்கள், அங்கோலியர்கள் அடைக்கலம் கேட்டிருப்பதில் வியப்பேதும் இல்லை. அதற்கு அரசியலைவிடப் பொருளாதாரமே முக்கிய காரணியாகும்.

கியூபா நாட்டு அரசியல் யாப்பின் கீழ் 10,000 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் கையெழுத்திட்டு ஒரு மனுவைக் கொடுத்தால் அந்த மனுவில் கேட்டுக் கொண்ட கோரிக்கைகள்பற்றி கியுபா தேசிய சட்ட சபை கூடி விவாதிக்க வேண்டும். அண்மையில் அரசியல் யாப்பில் பல மாற்றங்கள் கோரி அப்படியான ஒரு மனு அரசுக்கு எதிரான அமைப்புகளால் கையளிக்கப்பட்டது. சென்ற மே மாதம் கியூபாவிற்கு செலவு மேற்கொண்ட முன்னாள் சனாதிபதி காட்டர் அதனை ஆதரித்துக் கருத்து வெளியிட்டார்.

இதற்குப் பதிலடியாக யூன் 10 ஆம் நாள் கியூபா அரசு அரசியல் யாப்பில் ஒரு திருத்தத்தை முன்மொழிந்தது. அதன்படி கியூபாவின் சோசலீச அரசமுறையை யாரும் ‘தொடக்கூடாது” ( “Untouchable”) என்பதே அந்தத் திருததமாகும்.   திருத்தத்தை ஆதரித்துக் கஸ்றோ தலைமையில் இலட்சக் கணக்கான மக்கள் ஊர்வலங்களில் கலந்து கொண்டார்கள். கியூபா முழுதும் சுமார் 800 ஊர்வலங்கள் நடத்தப்பட்டன.
யூன் 15 ஆம் நாள் அரசியல் யாப்பில் திருத்தம் கோரும் மனுவில் கஸ்றோ முதல் ஆளாகக் கையெழுத்திட்டார். கியூபாவின் பொருளாதாரஈ அரசியல், சமூக முறையில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. எண்பது இலட்சம் வாக்காளர்களில் 99 விழுக்காட்டினர் அந்த மனுவை ஆதரித்துக் கையெழுத்துப் போட்டதாhக அரசு தெரிவித்துள்ளது.
அதற்கு அடுத்த கிழமை அந்தத் திருத்தத்தை விவாதிக்க கஸ்றோ கியூபா தேசிய சட்டசபையின் சிறப்பு அமர்வைக் கூட்டினார். யூன் 24 இல் விவாதம் தொடங்கியது. மூன்று நாள்கள் சட்ட சபையில் இடம்பெற்ற விவாதம் நாடு முழுதும் நேரடியாக ஒலிபரப்பப்பட்டது. சட்டசபையின் 559 உறுப்பினர்கள் கியூபாவின் அரசியல் யாப்பு சோசலீச அரசியல் யாப்பாகவே எப்போதும் இருக்கும் என்று ஒருமனதாக முன்மொழிந்த அதசியல் சட்ட திருத்தத்தை ஆதரித்துப் பேசுவதை தொலைக்காட்சியில் பார்ப்பதற்கு வேலைத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
சட்டசபையில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய கஸ்றோ அமெரிக்கா கிய10பாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை பொறுத்துக் கொள்ளாது என்று கூறினார். கியூபாவின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் நடவடிக்கைகளில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபட்டால் கியூபாவில் இயங்கும் அமெரிக்க நலன்கள் பிரிவை மூடிவிட வேண்டி வரும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
கியூபாவில் உள்ள அமெரிக்க நலன்கள் பிரிவு ஆயிரக்கணக்கான சிற்றலை வரிசை வானொலிகளை கியூபானியர்களுக்கு வழங்கியுள்ளது. இவற்றின் மூலம் அமெரிக்க அரசின் ஆதரவுடன் புலம்பெயர்ந்த கியூபானியர்கள் நடத்தும் யோஸ் மார்டி வானொலி ஒலிபரப்பைக் கேட்க முடியும்.

இதே சமயம் கியூபா மீதான பொருளாதார மற்றும் பயணத் தடைகளைத் தளர்த்துவதற்கு அமெரிக்க காங்கிரஸ் சட்ட மூலம் ஒன்றினை நிறைவேற்றியுள்ளது. ஆனால், அதன் தலைவிதி மேல்சபையில் (Senate) எப்படி ஆகுமோ என்பது கேள்விக் குறியாக உள்ளது. மேல்சபை ஏற்றுக் கொண்டாலும் வெள்ளை மாளிகை அந்தச் சட்டத்தை ஏற்றுக் கொள்ளுமா என்பது அடுத்த கேள்வியாகும். ‘கியூபா மீதான பொருளாதார தடையை நீக்குவது அந்த நாட்டின் கடைகெட்ட அடக்குமுறை ஆட்சிக்கு கைகொடுத்ததாக முடியும். எனவே அந்தச் சட்டத்தை சனாதிபதி பெரும்பாலும் நிராகரித்து விடுவார்’ என வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஆனால், கஸ்றோ “கியூபா அமெரிக்காவோடு நல்லுறுவுகளை வைத்துக் கொள்ளவே விரும்புகிறது, அதற்காக கியூபாவில் சோசலீச தனிக் கட்சி ஆட்சி முறையை கைவிடுகிற எண்ணம் இல்லை’ எனச் சொல்லி விட்டார்.

கியூபா அரசியலில் மாற்றங்கள் நடக்கலாம் என்பதற்கு எந்த அறிகுறியையும் நான் அங்கு காணவில்லை. உருசியா, சீனா, யூகோசிலோவியா போன்ற நாடுகளில் ஒரு கட்சி ஆட்சி அதிகாரத்தைத் தங்கள் கைகளில் கெட்டியாக வைத்திருந்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் இறந்த பின்னர் அங்கு பெரிய அரசியல் மாற்றங்கள் இடம்பெற்றன. கியூபாவில் கஸ்றோ மறைந்த பின்னரே அரசியல் மாற்றம் நிச்சயம் ஏற்படும் சாத்தியம் இருக்கிறது என்று அரசியல் எதிர்வு கூறலாம்.    

கடந்த யூலை திங்களில் அய்ரோப்பிய ஒன்றியம் 127 கோடி அமெரிக்க டொலர்களை 63 ஆபிரிக்க கரிபீன் பசிபிக் நாடுகளுக்கு (யுகசiஉயn ஊயசiடிடிநயn Pயஉகைiஉ (யுஊP) உதவி நிதியாகக் கொடுத்துள்ளது. ஆனால், கியூபா இந்த நிதியுதவியைப் பெறுவதில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியைப் பெற வேண்டும் என்றால் கியூபா மனிதவுரிமை மற்றும் சனநாயக முறைமை போன்ற துறைகளில் முன்னேற்றம் காண வேண்டும் என அய்ரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. அனைத்துலக மன்னிப்புச் சபை தனது 2001 ஆம் ஆண்டு அறிக்கையில் கியூபாவைப்பற்றிப் பின்வருமாறு கூறியிருக்கிறது:

‘தனிமனிதர்களும், குழுக்களும் அமைதியான முறையில் பேச்சுச் சுதந்திரம், கூட்டம் கூடும் சுதந்திரம் போன்றவற்றைப் பயன்படுத்தும் போது அரசின் அடக்கு முறைக்குத் தொடர்ந்து ஆளாகி வருகிறார்கள். நிபந்தனைகளோடு சில மனச்சாட்சிக் கைதிகள் (Pசளைழநெசள ழக உழளெஉநைnஉந) விடுதலை செய்யப்பட்டார்கள். அது முரண்பாட்டாளர்களுக்கு எதிரான கியூபா அரசின் போக்கில் சிறிதளவு தணிவு ஏற்பட்டிருப்பதற்கு அறிகுறி என்று நாம் நினைத்தோம். ஆனால், அத்தகைய நினைப்புத் தவறு என்பதை 2000 ஆம் ஆண்டுக் கடைசியில் இடம்பெற்ற அதிகரித்த அடக்குமுறைகள் எடுத்துக் காட்டியுள்ளன. பத்திரிகையாளர்கள், அரசியல் எதிர்ப்பாளர்கள் மற்றும் மனிதவுரிமைப் பாதுகாப்பாளர்கள் மோசமான தொந்தரவுகளுக்கு உள்ளாகி வருகிறார்கள்.

பதின்மூன்று மனட்சாட்சிக் கைதிகள் உட்பட நூற்றுக் கணக்கானவர்கள் அரசியல் குற்றங்களுக்காகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள், அரசியல் எதிர்ப்புக்களை மழுங்கடிப்பதற்குக் குறைந்தகால தடுப்புக்காவல், வீட்டுக்காவல், அச்சுறுத்தல்கள் மற்றும் தொந்தரவு செய்தல் போன்றவற்றை ஆட்சியாளர்கள் மேற்கொள்கிறார்கள். நீதிமன்றங்கள் மரண தண்டனையைத் தொடர்ந்து நடைமுறைப் படுத்தி வருகின்றன.’

கஸ்றோவின் அரசியல் எதிரிகள் அவர் சோவியத் ஒன்றியத்தின் சர்வாதிகாரி யோசேப் ஸ்டாலின் கையாண்ட தனிமனித வணக்கம் போன்ற யுக்திகளையே கையாள்வதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், அவை கொஞ்சம் மென்மையாக, மனிதநேய முகத்துடன் இருப்பதாகச் சொல்கிறார்கள். இருந்தும் கியூபாவில் மக்களாட்சி இல்லை. 1959 ஆம் ஆண்டு ஏற்பட்ட புரட்சியின் ஆதரவாளர்களைக் கஸ்றோ ஏமாற்றி விட்டார், அவருக்கு எதிரான உள்நாட்டு எதிர்ப்பு அடக்கப்பட்டு விட்டது அல்லது அடக்கப்பட்டு வருகிறது என்ற குற்றச் சாட்டு பரவலாக உள்ளது.

இப்படிச் சொல்பவர்கள் கூட கஸ்றோவின் தலைமையில் முழுமையான படிப்பறிவு, முழுமையான உடல்நலம், விளையாட்டு மற்றும் கலைத் துறையில் கியூபா ஈட்டியுள்ள அபாரமான வெற்றியை மறுக்க முடியாது என்பது உண்மை.

நான் தொடக்கத்தில் கூறியதுபோல சிட்னியில் நடந்த 2000 ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டியில் 11 தங்கப் பதக்கங்களைக் கியூபா வென்றெடுத்து பிரித்தானியா, யப்பான் மற்றும் கனடா ஆகிய நாடுகளை விடப் பதக்க வரிசையில் 9 ஆவது இடத்தைப் பிடித்து முன்னணியில் நின்றதை மறந்து விட முடியாது.

கியூபா ஒரு ஏழை நாடு. ஆனால், அமெரிக்கா கடந்த 40 ஆண்டுகளாக அதற்கு எதிராக நடைமுறைப் படுத்தி வரும் பொருளாதாரத் தடை பெரிய காரணியாகும்.
இன்னொரு விடயத்தில் கஸ்றோ பாராட்டுக்கு உரியவர். அமெரிக்காவின் செல்வாக்குக்கு உட்பட்ட பக்கத்து நாடுகளான கெயிட்டி, நிக்கருகுவா அல்லது சிலி நாடுகளில் ஏற்பட்ட இரத்தக்களரி போல் கியூபாவில் எதுவும் ஏற்படவில்லை. எனவே கஸ்றோ புரட்சி வீரனா? அல்லது கொலையாளியா? வரலாறுதான் அதனைத் தீர்மானிக்க வேண்டும்!
 
  ——————————————————————————————————————-
 


கியூபா பயணக் கட்டுரை
ஒரு பருந்தின் நிழலில்
எலிசபெத் மகாராணிக்கு அடுத்த இடத்தில் கஸ்றோ?
(89)

கஸ்றோவின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி யாரும் கியூபாவில் வாயைத் திறப்பதில்லை. பத்திரிகைகளிலும் அவரைப்பற்றிய செய்திகள் அதிகமாகச் சொல்லப்படுவதில்லை. கஸ்றோவுக்குச் சின்ன வயது முதல் ஒரு பட்டப் பெயர் உண்டு. அவரை எல்லோரும் கபலோ (ஊயடியடடழ) என்று அழைப்பார்கள். கபலோ என்றால் இசுப்பானனிய மொழியில் குதிரை என்று பொருள். அவரது நெடிய கம்பீரமான உருவத்தை வைத்து அந்தப் பட்டப் பெயரை வைத்தார்கள் போலும்.

கஸ்றோ ஹவானா பல்கலைக் கழகத்தில் சட்டப் படிப்புப் படித்துக் கொண்டிருந்த போதே மெய்யியல் பீடத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவி ஒருவரை 1948 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவரின் பெயர் Mirtha [Mirta] Diaz Balart de Nunez என்பதாகும். திருமணம் ஓறியன்ட் மாகாணத்தில் உள்ள ஒரு கத்தோலிக்க தேவாலயத்தில்தான் நடைபெற்றது. இது கஸ்றோ பிறந்த ஊருக்கு அண்மையில் இருந்தது. தேனிலவை இருவரும் புளேரிடாவில்தான் கழித்தார்கள். அப்போது செலவைச் சமாளிக்கத் தனது கைக்கடிகாரம் மற்றும் பெறுமதியான பொருள்களை அடைவு வைக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. ஆனால், அவருக்கு அவரது குடும்பத்தாரிடம் இருந்து பணவுதவி விரைவில் கிடைத்தது. அதனைக் கொண்டு அடைவு வைத்த பொருள்களை மீட்டுக் கொண்டு தேனிலவைத் தொடர்ந்தார்.

மொன்காடா இராணுவ விடுதி மீது கஸ்றோவும் அவரது தோழர்களும் தாக்குதல் நடத்தி அதில் அவர் பிடிபட்டுச் சிறையில் அடைக்கப்பட்டதை முன்னர் பார்த்தோம். பின்னர் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அவர் சிறையில் இருந்து வெளிவந்தார். ஆனால், அவர் Isla de Pinos சிறையில் இருந்து வெளிவந்தபோது அவரது மனைவியை எங்கேயும் காணவில்லை. 1955 ஆம் ஆண்டு கஸ்றோ மெக்சிக்கோவில் வாழ்ந்து கொண்டிருந்தபோது மிர்த்தா அவரை மணமுறிவு செய்து கொண்டார்.

மிர்த்தாவிற்கு ஒரு குழந்தை 1949 ஆம் ஆண்டு செப்தெம்பர் மாதம் 1 ஆம் நாள் பிறந்தது. அதன் பெயர் Fidel Fidelito] Fidel (Fidelito] Casstro Jr.

மிர்த்தா மறுமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் வாழ்கிறார். அவர் சரியாக எங்கு இருக்கிறார், அவரது குழந்தை எங்கே, வேறு குழந்தைகள் அவருக்கு உண்டா என்ற செய்திகள் மூடுமந்திரமாகவே இருக்கின்றன.

மிர்த்தாவைவிடத் திருமணத்துக்குப் புறத்தே கஸ்றோவுக்குப் பிறந்த ஒரு பெண் இருக்கிறார். அவரது பெயர் Alina Fernández Revuelta என்பதாகும்.  கியூபாவை விட்டு 1993 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு ஒரு கள்ள இசுப்பானிய கடவைச் சீட்டோடு தப்பியோடிய இவர் கஸ்றோவின் எதிரிகளோடு சேர்ந்து கொண்டு தனது தந்தையின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்குச் சதிசெய்து கொண்டிருக்கிறார். நாள் தோறும் கியூபாவிற்கு எதிராக மியாமியில் இருந்து பரப்புரை செய்யும் யோஸ் மார்டி வானொலியில் Talk Show நடத்துகிறார்!

அவர் தயாரித்து அளிக்கும் நிகழ்ச்சியில் ஒன்று 1980 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 125,000 பேர் மாறியல் (Mariel) துறைமுகத்தில் இருந்து படகுகளில் கியூபாவை விட்டு அமெரிக்காவிற்கு ஓடி வந்ததைப் பற்றியதாகும். அதில் சம்பந்தப் பட்டவர்கள் வான் அலைக்கு வந்து தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.

1997 இல் பெர்டினென்டஸ் தனது நினைவுகளை ஒரு நூலாக வெளியிட்டுள்ளார். நூலின் பெயர் கஸ்றோவின் மகள் ( Castro’s Daughter) என்பதாகும். அதில் நாற்றம் வீசும் சுருட்டைப் பிடித்துக் கொண்டு தனது வீட்டுக்குக் கஸ்றோ வந்து போவதையும், தன் மீது கஸ்றோ செலுத்திய ஆதிக்கத்தையும் விபரிக்கிறார். ஒரு முறை கஸ்றோ விளையாட்டுப் பொம்மை என்று கூறி பரிசு கொடுத்ததாகவும் அதைப் பிரித்துப் பார்த்தால் தாடி, இராணுவ சீருடை, தொப்பி, சப்பாத்து அணிந்த ஒரு பொம்மை இருந்ததாகவும் கூறுகிறார்.

அலினாவின் தாயார் பெயர் நாத்தி றெவுல்த்தா. தாயார் ஓலன்டோ பெர்னான்டஸ் பேரர் ( Dr. Orlando Fernandez Ferrer ) என்ற டாக்டரை மணம் செய்திருந்தார். 1956 இல் பிறந்த எலினா தாய் தந்தை பாட்டன் பாட்டி இவர்களது அரவணைப்பில் செல்வச் செழிப்பில் வளர்ந்தவர். 1959 ஆம் ஆண்டு புரட்சிக்குப் பின்னர் பெர்னான்டஸ் பேரரது மருத்துவத் தொழிலை மூடிவிட அரசு உத்தரவு இட்டது. இதனால் மருத்துவத் தொழிலை அவரால் தொடர முடியவில்லை. அது மட்டும் அல்லாது தனது மனைவி கஸ்றோவோடு கொண்டிருந்த அரைகுறைத் தொடர்பு காரணமாக வீட்டை விட்டே போய்விட்டார்.

மொன்காடா இராணுவப் பாசறை மீது கஸ்றோ தாக்குதல் தொடுத்தபோது அந்தத் தாக்குதலுக்கு நாத்தி றெவுல்த்தா தனது நகைகளை விற்று அதில் கிடைத்த  பணத்தைக் கொடுத்து உதவியதாக அலினா தனது நினைவு நூலில் எழுதியிருக்கிறார்.

அங்கோலாவிற்குக் கஸ்றோ கியூபா இராணுவத்தை அனுப்பி வைத்தபோது, அதில் பெரும்பாலும் கறுப்பர்களே இடம்பெற்றிருந்தார்கள் என்றும், அது இன அடிப்படையில் வேண்டுமென்றே செய்யப்பட்ட தெரிவு என்றும் அலினா குற்றம் சாட்டுகிறார்.

பெர்டினென்டசின் மாமியும் கஸ்றோவின் உடன்பிறப்புமான யுயானிட்தா கஸ்றோவும் (Juanita Castro)  மியாமியில்தான் குடியிருக்கிறார். ஆனால், மாமியாரும் மருமகளும் அரசியலில் ஒத்துப் போவதில்லை. அடிக்கடி ஒருவரை ஒருவர் கடுமையாகச் சாடிக் கொள்கிறார்கள்.

‘ஹவானாவில் உள்ள குடும்ப உறுப்பினர்களோடு தொடர்பு வைத்துக் கொள்ள எனக்கு விருப்பம். ஆனால், முடியவில்லை. காரணம் கியூபா ஆட்சியாளர்களைப் பொறுத்தளவில் நான் ஒரு எதிரி. அப்படி என்னை நினைப்பது முட்டாள்தனமாக இருக்கலாம். ஆனால், அதுதான் உண்மை’ என்கிறார் அலினா.  

கஸ்றோ காலமானால் மகள் அல்ல அவரது தம்பியும் பாதுகாப்பு அமைச்சருமான றாவுல் கஸ்றோதான் பதவிக்கு வருவார்.

பெர்டினென்ஸ் இளைய தலைமுறையைச் சேர்ந்தவர். அவருக்கு இப்போது 46 அகவை ஆகிறது. தனது தந்தையும் உறவினரும் ஆட்சி அதிகாரத்தைக் கையில் எடுத்து வைத்திருப்பதுபற்றி அவருக்கு மகிழ்ச்சி இல்லை. ‘கியூவின் உண்மையான உருவத்தை வெளிக் கொண்டுவருவதில் என்னால் ஆனவற்றைச் செய்து கொண்டிருக்கிறேன்’ என்கிறார் பெர்டினென்ஸ்.

கியூபாவில் அரசியல் மாற்றம் வரும் என்று பெர்னின்டஸ் நம்புகிறார். ‘கியூபாவிற்குத் தேவைப்படுவது மக்களாட்சி. வசீகரத் தலைவர்கள் அல்ல. காரணம் சில வசீகரத் தலைவர்கள் சர்வாதிகாரிகளாக மாறியிருக்கிறார்கள். காந்தி சிறந்த தலைவர், நேரு நல்ல தலைவர், ஆனால், கஸ்றோ நாட்டைப் பாழாக்கிவிட்டார்! கியூபாவின் வரலாற்றுத் திரிபுக்கு எனது தலைமுறை பலிக் கடா ஆக்கப்பட்டுள்ளது’ எனக் கொதிக்கிறார்.

கியூபாவை விட்டுத் தப்பி ஓடுபவர்கள் பெரும்பாலும் மேல்தட்டு வகுப்பினரே. அண்மையில் (ஆகஸ்ட் 1 ஆம் நாள்) கம்யூனிட்டு கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

அவரது பெயர் றோபெர்ட்டோ றொபைனா (Roberto Robaina) என்பதாகும். இவர் கியூபா நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சர். சனாதிபதியின் அனுமதியின்றி சிலரோடு உறவுகளை உருவாக்கினார் என்றும் பொதுமேடைகளில் பேசினார் என்றும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஒரு கால கட்டத்தில் றொபைனா கஸ்றோவின் வாரிசாக வரக்கூடும் என்று பரவலாகப் பேசப்பட்டது. அய்ந்து ஆண்டு காலம் ( 1998 வரை) வெளியுறவு அமைச்சர் பதவியில் இருந்து அவர் விலக்கப்பட்டபோது கஸ்றோவிற்குப் பிடித்தமான குநடipந Pநசநண சுழஙரந  என்பவர் அவரது இடத்துக்கு நியமனம் செய்யப்பட்டார்.

1998 ஆம் ஆண்டு ஒக்தோபர் மாதம் அமெரிக்காவில் இருந்து வெளிவரும் Forbes என்ற சஞ்சிகை உலகத்தின் பணக்கார அரசர்கள், அரசிகள், சர்வாதிகாரிகள் பட்டியல் ஒன்றைப் பிரசுரித்தது. அந்தப் பட்டியலில் கஸ்றோ 100 மில்லியன் டொலர் சொத்துக்கு அதிபதி என்று வர்ணித்து அவரது பெயரை 11 ஆவது இடத்தில் அந்தச் சஞ்சிகை போட்டிருந்தது. அதாவது எலிசபெத் அரசியாரது இடத்துக்கு ஒரு இடம் கீழேயும் இராக் நாட்டு அதிபர் சதாம் குசேன் அவர்களுக்கு மூன்று இடம் கீழேயும் பிடல் கஸ்றோவின் பெயர் போடப்பட்டிருந்தது. இந்தச் செய்தியை றொயிட்டர் நிறுவனம் ஒக்டோபர் மாதம் 27 ஆம் நாள் உலகம் முழுதும் தண்டோரா போட்டுப் பரப்பியது.

அதனைப் படித்த கஸ்றோவுக்கு அமெரிக்க போர்ப்ஸ் சஞ்சிகை மீது பயங்கரக் கோபம் ஏற்பட்டது. அந்தச் செய்தியை முற்றாக மறுத்ததோடு அந்தச் சஞ்சிகையைச் கடுமையாகச் சாடியிருந்தார். அவரது சாடல் அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை கியூபாவில்  ஒலி ஒளி பரப்பப்பட்டது.

‘எனக்கு எதிராகப் பலவிதமான குற்றச்சாட்டுக்களை முன்னைய காலங்களில் வீசியிருக்கிறார்கள். ஆனால், இந்த மாதிரி யாரும் குற்றம் சாட்டவில்லை. நான் 100 மில்லியன் பெறுமதியான சொத்துக்களைச் சேர்த்து விட்டதாகப் பொய்களை எழுத அவர்களுக்கு இருக்கும் உரிமைதான் என்ன? புரட்சிக்குப் பின்னர் நாற்பது ஆண்டுகளில் அரச கருவூலத்தில் இருந்து இந்த நாட்டின் தலைவர், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் ஒரு டொலரைத் தன்னும் களவாடிவிட்டதாக உலகில் உள்ள அத்தனை நீதிபதிகள் ஒரு இடத்தில் கூடினாலும் சொல்ல மாட்டார்கள்.”

1959 ஆம் ஆண்டுப் புரட்சிக்குப் பின்னர் தான் மட்டுமல்ல, தனது குடும்ப உறுப்பினர்கள் அல்லது அரச உயர் அதிகாரிகள் யாரேனும் ஒரு டொலராவது கியூபாவிற்கு வெளியே வைத்திருப்பதாக யாரும் கூற முடியாது எனக் கஸ்றோ பதில் இறுத்தார்.
‘எங்களுக்கு வெளிநாட்டில் (காப்பகம்) கணக்கு எதுவும் தேவையில்லை. காரணம் நாங்கள் இந்த நாட்டிலேயே மானத்துடன் வாழ்ந்து மடிய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். நாங்கள் கியூபா மக்களின் செலவில் பணத்தைக் குவித்து வைத்திருக்கிறோம் என்று சொல்வது வெறும் கற்பனை. கட்டுக்கதை. எம்மீது வீசப் படும் இப்படியான தூற்றலை, அம்புகளை, ஈட்டிகளைத் தாங்கித் தாங்கி எங்களது தோல் தடித்து விட்டது.’

வெளிநாட்டார், குறிப்பாக மேற்குலக நாடுகள் கஸ்றோவின் ஒருகட்சி அரசியல் ஆட்சி முறையை, மறுப்பாளர்களை சிறையில் அடைப்பதைக் கண்டித்திருக்கிறார்கள். அவர் ஒரு ஊழல் பேர்வழி என்று அவரது எதிரிகள் எவரும் அவர் மீது குற்றம் சாட்டியது கிடையாது.

ஒக்தோபர் மாத இறுதியில் 32 அமெரிக்க செய்தியாளர்களோடு கஸ்றோ மொத்தம் ஆறு மணித்தியாலயம் உரையாடினார். அதன் முதல் பகுதி திங்கட்கிழமையும், இரண்டாவது மூன்றாவது பகுதிகள் முறையே அடுத்த நாள் செவ்வாய், புதன்கிழமை நாள்களிலும் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் ஒலி ஒளி பரப்பப் பட்டது.

இந்தச் செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்கச் செய்தித்தாள் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் மொட்டையாகக் கேட்ட முதல் கேள்வி ‘உங்களுக்குப் பின்னர் கியூபாவிற்கு என்ன நடக்கும்?’ ‘அதாவது நான் இறந்த பின் என்ன நடக்கும் என்று கேட்கிறீர்களா? எனக்குப் பின் துணை சனாதிபதி கார்லோஸ் லாகே ( Carlos Lage), தேசிய சட்ட சபையின் தலைவர் றிக்கார்டோ அலார்கொன் ( Ricardo Alarcon) மற்றும் வெளியுறவு அமைச்சர் றொபேர்ட்டோ றோபைனா எனது பணியை பெரும் மாறுதல் எதுவுமின்றித் தொடர்ந்து செய்வார்கள். நான் இல்லாத காலத்தில் எதுவும் பெரிதாக நடக்காது. ஒரு வேளை இப்போதைவிட எல்லாம் சிறப்பாக நடக்கக் கூடும்’ எனச் சிரித்துக்கொண்டே கஸ்றோ பதில் இறுத்தார்.

‘உங்கள் நாட்டில் சுதந்திரமான தேர்தல் வைப்பது இல்லையே?’

‘மக்களாட்சிபற்றி எங்களுக்கு வித்தியாசமான கருத்துப்படிவம் உண்டு!’

‘உங்களுக்கு எதிராகச் செயல்படும் புளேரிடாவில் வாழும் அமெரிக்க கியூபானியர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ இந்தக் கேள்வியைக் கேட்டவர் மியாமி கெறால்ட் (Miami Herald) ஏட்டின் தலைவர் டேவிட் லோறென்ஸ் (David Lawrence).

‘அவர்கள் நினைக்கிறார்கள் கடவுள் மிகவும் கெட்டவர் என்று. காரணம் என்னை அவர் இந்த உலகில் இருந்து அப்புறப்படுத்தாமல் இருக்கிறார் என்பதால்!’

.   
 ——————————————————————————————————————–

கியூபா பயணக் கட்டுரை
ஒரு பருந்தின் நிழலில்
கஸ்றோ ஒரு வசீகரமான தலைவர்
(90)

நாட்டின் செல்வத்தை ஈவு இரக்கமின்றி கொள்ளை அடிப்பதன் மூலம் சர்வாதிகாரிகள் சர்வாதிகார ஆட்சி முறைக்கு மேலதிகமான கெட்ட பெயர் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். தங்கள் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற தவிப்பில் பதவியில் இருக்கும்போதே முன்னேற்பாடாக தங்கள் எதிர்காலத்துக்குத் தேவையான பணத்தை வெளிநாட்டுக் காப்பகங்களில் போட்டு வைத்துவிடுகிறார்கள். சிவிலியன் அல்லது இராணுவ சர்வாதிகார ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு ஆட்சி நாற்காலியைக் கைப்பற்றும் இராணுவ சர்வாதிகாரிகள் பின்னர் தாங்களே இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கு உள்ளாகுவது இயல்பாக நடைபெறும் நிகழ்வாகும்.

நான் முன்னர் குறிப்பிட்ட பிலிப்பைன்ஸ் மார்க்கோஸ், இந்தோநேசியா சுகர்ட்டோ, நைஜீரியா சானி அபாச்சா  (Sani Abacha) போன்ற சர்வாதிகாரிகள் கோடிக் கணக்கில் அரச கருவூலத்தைக் கொள்ளை அடித்து ஏப்பம் விட்டிருக்கிறார்கள்.

பெர்டினன்ட் மார்க்கோஸ் 20 ஆண்டுகள்  சனாதிபதியாக இருந்தபோது வெளிநாட்டுக் காப்பகங்களில் 5 பில்லியன் (500 கோடி) அமெரிக்க டொலர்களைப் பதுக்கி வைத்திருந்தார். 1986 இல் அவருக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தபோது ஆட்சிக் கதிரையில் இருந்து அப்புறப்படுத்தப் பட்டார். ஹவாய் தீவில் அரசியல் தலைமறைவு வாழ்வு மேற்கொண்ட மார்க்கோஸ் மூன்று ஆண்டுகள் கழித்து இறந்து போனார்.

இந்த 500 கோடியில் 94 கோடி டொலர்களை பிலிப்பைன்ஸ் அரசு சுவிஸ் நாட்டுக் காப்பகத்தில் இருந்து மிகவும் பாடுபட்டு ஒருவாறு திரும்பப் பெற்றுவிட்டது. திருமதி மார்க்கோசுக்கு எதிராக 1993 ஆம் ஆண்டு தொடரப்பட்ட ஊழல் வழக்கில் அவருக்குப் பிலிப்பைன்ஸ் உச்ச நீதிமன்றம் 12 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

இந்தோநேசியா சர்வாதிகாரி சுகர்ட்டோ தனது 32 ஆண்டு கால ஆட்சியில் 500 கோடி அமெரிக்க டொலர்கள் பெறுமதியான வணிக சாம்ராச்சியத்தை உருவாக்கி இருந்தார். வெளிநாட்டில் உள்ள காப்பகங்களில் 150 கோடி டொலர்களை வைத்திருந்தார். இதில் அவுஸ்திறியன் காப்பகத்தில் மட்டும் 94 கோடி டொலர்களைப் போட்டிருந்தார்.

சுகர்ட்டோவின் கொள்ளைக்குத் துணையாக இருந்தவர் அவரது இளைய மகன் Tommy என்பவர். 1998 இல் மாணவர்கள் சுகர்ட்டோவுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தபோது சுகர்ட்டோ பதவியில் இருந்து துரத்தப்பட்டார்.

1993 ஆம் ஆண்டு தொடக்கம் 1998 ஆம் ஆண்டு வரை நைஜீரியா நாட்டு இராணுவ சர்வாதிகாரியாக இருந்த சானி அபாச்சா சுமார் 400 கோடி டொலர்களை அந்த நாட்டு மத்திய காப்பகத்தின் அனுசரணையோடு சுவிஸ், இலண்டன், பாரிஸ் நகரங்களில் உள்ள வங்கிகளில் போட்டிருந்தார். நைஜீரியாவில் உருசியா நாட்டு நிறுவனம் ஒன்று ஒரு எஃகுத் தொழிற்சாலையைக் கட்டுவதற்கு ஒப்பந்தம் எழுதியிருந்தது. அந்த நிறுவனத்துக்கு அது சமர்ப்பித்த விலைப்பட்டியலின் அடிப்படையில் கொடுத்த பணம் சானி அபாச்சாவின் காப்பகக் கணக்குக்குப் போய்ச் சேர்ந்தது! அந்த விலைப்பட்டியல்கள் போலியானவை. அப்படியொரு எஃகு ஆலை கடைசிவரை கட்டப்படவே இல்லை!

1960 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நைஜீரியாவை ஆண்ட இராணுவ சர்வாதிகாரிகள் எப்படி அரச பணத்தைக் கையாடினார்களோ அதனையே சானி பாச்சாவும் செய்தார். ஒரு வேறுபாடு குறுகிய காலத்தில் பெருந்தொகையான பணத்தை அவர் சுருட்டிப் போட்டார்! ஊழலில் நைஜீரியா உலகத்தில் பத்தாவது இடத்தில் இருக்கிறது.

1998 ஆம் ஆண்டு சானி பாச்சா மாரடைப்பால் இறந்தபோது புதிய ஆட்சி அவரது கணக்கு வழக்குகளைக் கிளற ஆரம்பித்தது. அப்போதுதான் இந்த மோசடி அம்பலத்துக்கு வந்தது. இப்போது பத்து கோடி ரூபாயை வைத்துக் கொண்டு மிகுதி 390 கோடி பணத்தை நைஜீரியாவிற்கு திருப்பிக் கொடுக்க சானி பாச்சா குடும்பமும் நைஜீரிய அரசும் ஒரு உடன்பாட்டுக்கு வந்துள்ளன! இந்தப் பத்துக் கோடி சானதிபதியாக வருமுன் சம்பாதித்த பணம் என்பது சானி அபாச்சா குடும்பத்தின் வாதம்.

ஒரு சாதாரண இராணுவ அதிகாரி எப்படி 10 கோடி டொலரை சம்பாதிக்க முடியும்? அதுவும் வெளிநாட்டு நாணயமான டொலர்களை எப்படிச் சம்பாதிக்க முடியும்? ஏற்கனவே நீதிமன்றப் படிகள் ஏறி இறங்கிய நைஜீரியா அரசு களைத்துப் போய், வேறு வழியின்றி இந்த உடன்பாட்டுக்கு வந்துள்ளது.

நான் நைஜீரியாவில் கடமையாற்றிய காலத்தில் (1980-87) சானி அபாச்சா பபுச்சி (Bauchi) மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டிருந்தார். முன்னைய ஆட்சியில் நிலவிய ஊழல்களை ஒழித்து, ஊழலற்ற ஆட்சியை நிறுவுவதே தனது குறிக்கோள் என்று அவர் பதவிக்கு வந்தபோது கூறிய வார்த்தைகள் இப்போதும் என் நினைவில் இருக்கிறது!

பன்னிரண்டு கோடி மக்கள் தொகை கொண்ட நைஜீரியா ஒரு ஏழை நாடு. ஒருவரது ஒரு நாளைய சராசரி வருமானம் ஒரு டொலர் மட்டுமே. அதன் பொருளாதாரம் முற்று முழுதாக எண்ணெய் ஏற்றுமதியில் தங்கி இருக்கிறது. ஆனால், ஊழல் காரணமாக எண்ணெய் ஏற்றுமதியால் கிடைக்கிற வருவாய்  சாதாரண மக்களுக்குப் போய்ச் சுவறுவதில்லை. பொதுவாக ஆபிரிக்க ஆசிய நாடுகளில் அங்கிங்கு என்னாதபடி எங்கும் நிறைந்திருக்கும் ஊழல் ஒரு பெரிய நோயாகவும் சாபக் கேடாகவும் இருக்கிறது!

இந்த சர்வாதிகள் போலல்லாது பிடல் கஸ்றோ நேர்மையானவர். சரியோ, பிழையோ பொதுவுடமைத் கோட்பாட்டிற்கு விசுவாசமாக இருக்கிறார்! அவரது அரசியல் எதிரிகள் சொல்வதுபோல் அவர் வெளிநாட்டுக் காப்பகங்களில் பணம் வைத்திருப்பது உண்மையானால் அமெரிக்க உளவு நிறுவனமான சிஅய்ஏ அதனை எப்போதோ மோப்பம் பிடித்து உலகம் அறிய அம்பலப்படுத்தி இருக்கும்!

பொதுப் பணத்தைத் திருடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் துரோகிகளே. அதனால்தான் கோவில் பணத்தைக் கையாடல் செய்பவர்கள் சிவத் துரோகிகள். அவர்கள் நரகத்துக்குப் போவார்கள் என்று சொல்லுகிறார்கள்!

கஸ்றோவின் கம்யூனிச ஒரு கட்சி ஆட்சியின் கீழ் சில அடிப்படை மனித சுதந்திரங்கள் பறிக்கப்பட்டாலும் சமூக, கலாசார பொருளாதர தளங்களில் கியூபா மெச்சத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது.

கியூபாவில் நிகழ்ந்த புரட்சி நிலத்தைப் பொதுவுடமையாக்கி மக்களது சராசரி வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளது. நாட்டின் செல்வம் அல்லது ஏழ்மை கிட்டத்தட்ட மக்களிடையே சரி சமமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வறுமையிலும் ஒரு செப்பம் என்பார்களே அந்த நிலமை அங்கு காணப்படுகிறது.

கியூபா கல்வியில் நூறு விழுக்காடு வெற்றி கண்டுள்ளது. எல்லோருக்கும் மருத்துவம் இலவசமாகக் கிடைக்கிறது.

நூறு பேர் ஒரு பேருந்துக்குக் காத்திருந்தாலும் பேருந்து வந்ததும் ஒழுங்காக வரிசை தவறாது, ஆளை ஆள் தள்ளாது, முதல் வந்தவர் முதல் என்ற வரிசைப்படி ஏறிக் கொள்கிறார்கள். இப்படியான ஒழுக்கத்தை ஏனைய இலத்தீன் அமெரிக்க நாடுகளில் காண முடியாது. ஏன் அமெரிக்காவின் பெரிய நகரங்களான நியூ யோர்க், வோஷிங்டன், ஓர்லன்தோ ஆகியவற்றில் கூடப் பார்க்க முடியாது!

கஸ்றோ ஒரு துணிச்சலான, கொள்கைப் பிடிப்பான அதே சமயம் மக்களால் விரும்பப் படும் ஒரு வசீகரமான தலைவர் என்பதை யாரும் எளிதில் மறுக்க முடியாது.

கஸ்றோ நிறைய வாசிக்கும் பழக்கம் உடையவர். கார்ல் மார்க்ஸ் எழுதிய The Eighteenth Brumaire of Louis Bonaparte   அவர் விரும்பிப் படித்த புத்தகங்களில் ஒன்று. இப்போது கூட நேரம் கிடைக்கும் போது அதனைப் புரட்டிப் பார்க்கிறார். சிறையில் இருந்த பொழுது விக்டர் கியூகோ (Victor Hugo) எழுதிய நூல்களைப் படித்தார்.

விக்டர் கியூகோ 19 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த பிரஞ்சுமொழி எழுத்தாளர். புகழ்பெற்ற நாடக ஆசிரியர் சேக்ஸ்பியர், தாந்தே, ஹோமர் போன்றவர்களோடு ஒப்பிட்டுப் பேசக் கூடியவர். அனேக நாவல்கள், கவிதைகள், கதைகள் எழுதியுள்ளார். சமூக சீர்திருத்தம், பொருளாதார மேம்பாடு இரண்டுந்தான் அவரது படைப்புகளது கருவாக இருக்கும். அவருக்கு அனைத்துலக அளவில் புகழ்தேடித் தந்தது Les Miserable என்ற நாவலாகும். ஒரு துப்பறியும் கதைபோலக் காணப்படும் இந்த நாவல் பாரிஷ் நகர வாழ்க்கையை பிரதிபலிக்கிறது. உண்மையான நீதியைத் தேடி அலையும் மனிதனைச் சுற்றிக் கதை நகருகிறது.

இந்த நாவல் சுத்தானந்த பாரதியாரால் தமிழில் ‘ஏழை படும்பாடு’ என மொழி பெயர்க்கப்பட்டது. அது பின்னர் திரைப்படமாகவும் வெளிவந்தது. பழம்பெரும் நடிகர் நாகையா முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். விக்டர் கியூகோவின் இன்னொரு நாவல் தூக்குத் தண்டனைபெற்ற கைதியின் கடைசி நாள் (வுhந டுயளவ னுயல ழக ய ஊழனெநஅநென ஆயn) ஆகும். தூக்குத் தண்டனைக்கு எதிரான படைப்பு இது.
தாக்கரே எழுதிய ஏயnவைல குயசைஇ வுரசபநநெஎ’ள எழுதிய (The Last Day of a Condemned Man) பிரேசில் நாட்டு கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரான Vanity Fair,Turgenev’s  எழுதிய தன்வரலாறு, Clausewitz’s எழுதிய On War, லெனின் எழுதிய அரசும் புரட்சியும் (State and Revolution) பிராங்க்லின் றூஸ்வெல்ட் (Franklin Roosevelt) மற்றும் அல்பேட் அய்யின்தைன் (Albert Einstein) எழுதிய நூல்களை கஸ்றோ படித்தார். இந்த நூல்களும் அதன் ஆசிரியர்களும் அவரது சிந்தனையைச் செப்பனிட உதவின.

சேக்ஸ்பியரின் யூலியஸ் சீசர் (Julius Caesar)  நாடகத்தைப் படித்துவிட்டு சீசர் புரட்சிவாதி, புறூட்டஸ் (Brutus)) எதிர்ப்புரட்சிவாதி என்ற முடிவுக்குக் கஸ்றோ வந்தார்!

சிறையில் இருந்தபோது கஸ்றோ தனது மகள் யேவயடயை சுநஎரநடவய எழுதிய கடிதம் கஸ்றோவின் பன்முக ஆளுமையைப் படம்பிடித்துக் காட்டுகிறது.
“மனிதனது சிந்தனை அவன் வாழும் காலத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு அரசியல் அறிஞனின் தோற்றம் முற்றாக அந்தக் காலத்தைப் பொறுத்துத்தான் இருக்கும்.

லெனின் கதறீன் (Catherine the Great) காலத்தில் வாழ்ந்திருந்தால் ஆகக் கூடியது அவர் உருசிய பூஷவா வர்க்கத்தை ஆதரிக்கும் ஒருவராக இருந்திருப்பார்! யோஸ் மார்டி பிரித்தானியாவின் கீழ் கியூபா இருந்த காலத்தில் வாழ்ந்திருந்தால் அவர் தனது தந்தையைப் போல் இசுப்பானிய கொடியின் கீழ் நின்று கொண்டு இசுப்பானியாவை ஆதரித்திருப்பார்!

நெப்போலியன், டான்டன் (Danton) அல்லது Robespierre போன்றவர்கள் Charlemagne காலத்தில் வாழ்ந்திருந்தால் அவர்கள் சாதாரண கமக்காரர்களாக அல்லது முகவரியில்லாத குடிமக்களாக வாழ்ந்து மறைந்திருப்பார்கள். யூலியஸ் சீசர் உரோம குடியரசின் தொடக்க காலத்தில், உரோம சமுதாயத்தின் அத்திவாரத்தை அசைத்த வர்க்கப் போராட்டம் கூர்மையடைவதற்கு முன்பு, பிலேபியன் கட்சி தோன்றி சீசரை ஆட்சிக் கட்டிலில் அமர்த்த வேண்டி கட்டாயம் மற்றும் சாத்தியம் இவை இல்லாவிட்டால் றூபிக்கனை (Rubicon) அவர் கடந்திருக்க முடியாது.”


கியூபா பயணக் கட்டுரை
ஒரு பருந்தின் நிழலில் 
எல்லா வளமும் உண்டு! பின்னர் பஞ்சம் ஏன்?
(91)

கஸ்றோ கல்லூரி மாணவனாக இருந்தபோது இட்லர் எழுதிய Mein Kampf என்ற நூலைப் படிப்பதில் கவனம் செலுத்தியிருக்கிறார்.  அத்தோடு இட்லர் முசோலினி இருவரும் பேசுவது போல் கண்ணாடிக்கு முன் நின்று பழித்துக் காட்டுவாராம்.  

கஸ்றோ என்ற தனிமனிதனைப் புரிந்து கொள்வது வில்லங்கமாகும். அவரை மிக அபூர்பமாகத்தான்  பொது இடங்களில் பார்க்கலாம். இரவில் தூங்குவது மிகக் குறைவு. அதற்குப்  பதில் அலுவலகத்திலேயே கோழித் தூக்கம் போடுவதை அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

எதிரிகள் எங்கே தான் தூங்கும்போது தனது ஆட்சியைக் கவிழ்த்து விடுவார்களோ என்ற பயத்தில்தான்  அவர் நீண்ட நேரம் தூங்குவதில்லை என அவரது அரசியல் எதிரிகள் சொல்கிறார்கள். கஸ்றோவுக்கு நன்றாக ஆங்கிலம் பேச வரும். ஆனால் பேசுவதில்லை. நெருப்பில் வாட்டிய ((grilled) மீன்m ஆமை சூப், spaghetti, மரக்கறி அவருக்கு மிகவும் பிடித்தமான உணவு. மீன் பிடித்தல்ää தோட்டம் செய்தல்ää நீந்துதல்ää சதுரங்கம் ஆடுதல்ää தனியே கிராமப் புறங்களில் ஜீப்பில் சவாரி செய்வது பிடித்தமான பொழுது போக்குக்கள்.

கஸ்றோவிற்குப் பிடித்த எண் 26.  அவர் பிறந்தது 1926, அவரது தந்தைக்குச் சொந்தமான நிலத்தின் பரப்பளவு 26,000 ஏக்கர் (10,500 கெக்டர்) மொன்காடா இராணுவ முகாம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நாள் யூலை 26. அப்போது அவரது வயது 26. முக்கிய உரை அல்லது  முக்கிய முடிவுகளை 26இல் தான் கஸ்றோ எடுப்பதாகச் சொல்லப்படுகிறது. பொதுவாக கியூபானியர்கள் இப்படியான மூட நம்பிக்கைகளில் நம்பிக்கை யுடையவர்கள். அவர்களில் கஸ்றோவும் ஒருவரா என்பது தெரியவில்லை.

முப்பதுகளில் கஸ்றோவையும் அவரது மூத்த உடன்பிறப்பு Ramon யையும் அவர்கள் வாழ்ந்த மலைக்குன்றில் இருந்து பல மைல்கள் தூரம் சந்தியாக்கோவில் இருந்த ஒரு பள்ளிக்கூடத்தில் படிப்பதற்கு பெற்றோர்கள் அனுப்பி வைத்தார்கள். முப்பதுகளில் கடினமான அந்தப் பயணம் மொத்தம் 7 நாள்கள் எடுத்தது. இரண்டு உடன்பிறப்புக் களையும்  கஸ்றோ குடும்ப  நண்பர் பள்ளிக்கு அனுமதிக்கக் கூட்டிச் சென்றபோது வயது காணாது என்று காரணம் காட்டி பிடலைச்  பள்ளியில் சேர்க்க அதிபர் மறுத்துவிட்டார்.

தனியே பிடலை வீட்டுக்கு அனுப்புவதில் உள்ள  அபாயத்தை எண்ணிப் பார்த்த அந்தக் குடும்ப நண்பர் அங்கேயே அவரது பிறப்புச் சான்றிதழில் 1927 என்று இருந்ததை 1926 என்று மாற்றி விட்டு ‘இப்போ வயது சரி. சேர்த்துக் கொள்ளுங்கள்”” என்று பள்ளிக்கூட அதிபரிடம் கூறினாராம்.  

யார் எதைச் சொன்னாலும் 20ஆம் நூற்றாண்டின்  வரலாற்றில்  தனக்கென ஒரு இடத்தை பிடல் கஸ்றோ (Fidel Castro) பிடித்து வைத்துள்ளார்!இதனை யாராலும் மறுக்க முடியாது.  
ஹவாhனாவில் பார்ப்பதற்கு எத்தனையோ வரலாற்று முக்கியம் வாய்ந்த இடங்கள் இருக்கின்றன.  அவற்றை எல்லாம் சுற்றிப் பார்ப்பது என்பது நடைமுறை சாத்தியம் அற்றது.  இலங்கையைப் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என 443 ஆண்டுகள் ஆண்டிருக்கிறார்கள். 1505 ஆம் ஆண்டு தொடக்கம் 1948 வரை நீடித்த கொலனித்துவ நாடுகளின் ஆட்சியை நினைவுபடுத்தும் கோட்டைகள், கட்டிடங்களை  விரல்விட்டு எண்ணிவிடலாம். யாழ்ப்பாணக் கோட்டை, திருகோணமலைக் கோட்டை, மட்டக்களப்புப் கோட்டை, கொழும்பில் உள்ள நாடாளுமன்றம், கொழும்பு மாநகரசபைக் கட்டிடம் இவற்றை மட்டுமே குறிப்பிடலாம்.

ஆனால் இசுப்பானிய நாடு அதே காலத்தில் எண்ணிறந்த கோட்டை,  கொத்தளங்கள், மாட மாளிகைகளை கியூபாவில் விட்டுச் சென்றுள்ளன. அவற்றைப் புரட்சியை அடுத்து வந்த கஸ்றோ அரசு மெத்தக் கவனமாகப் பராமரித்து வருகின்றது. புதிதாகவும் பிரமிக்கத்தக்க மாதிரி  புரட்சிச் சதுக்கம், யோஸ் மார்ட்டி நினைவுச் சின்னம் போன்றவற்றை நிறுவியுள்ளது.   

காலை தொடக்கம் படி ஏறி ஏறி கால் வலிக்கத் தொடங்கின. வரடேரோ திரும்பி குளித்துச் சாப்பிட்டு விட்டு கட்டிலில் விழுந்து  எப்போது தூங்கலாம் என்ற  கவலை மனதைக் குடைந்து கொண்டிருந்தது. ஹோட்டலுக்கு வந்து சேர இரவு 9 மணியாகி விட்டது.

எனது இரண்டாவது பயணத்தின் போது கியூபாவின் வடபகுதியில் உள்ள கயோ கொக்கோ ( Kayo Coco) என்ற சிறு தீவிற்குப் போனதுபற்றியும் அந்தத் தீவில் யாரும் குடியிருக்கவில்லை, தீவின் ஒரு புறம் சதுப்பு நிலம், எங்கே பார்த்தாலும் பற்றைக்காடு, கியூபாவை அழகுபடுத்தும் பனைமரங்கள் (palms) காணப்படுகின்றன எனவும், ழ்ப்பாணக் கடற்கரையோரமாகக் காணப்படும் அடம்பன்கொடி மற்றும்  எங்கள் ஊர் கரிக்குருவி, மரக்கொத்தி போன்ற பறவை இனங்கள் காணப்படுவதையும் குறிப்பாக எங்கள் கண்களைக் கொள்ளை கொண்ட முப்பதினாயிரத்துக்கும் அதிகமான இளஞ் சிவப்பு நிறப் (pink)  பிளமிங்கோ (flamingo)   பறவைகள் அந்தத்  தீவின் அழகுக்கு அழகு சேர்க்கின்றன என்றும் அவற்றைக் காணக் கண்கோடி வேண்டும் எனவும் எழுதியிருந்தேன்.  

அப்புறம் வடக்கில் வரடேரோவிற்கு கிழக்கே உள்ள மோறன் (Moron) என்ற நகரில் இருந்து 360 கிமீ தொலைவில் எதிர்ப்புறமாக இருக்கும்  கியூபாவின் மூன்றாவது பெரிய நகரமான திறினாட் (Trinidad) நகரைச் சுற்றிப் பார்த்தோம் எனவும், பயணம் செய்த சாலையின் இரு மரங்கிலும் மாறி மாறி கரும்புத் தோட்டம், மாமரத் தோட்டம், வாழைத் தோட்டம், தோடம்பழத் தோட்டம், அன்னாசிப் பழத் தோட்டம்  போன்றவை மைல்கணக்கில் நீண்டு கிடந்தன எனவும் அவற்றைப்பற்றி பின்னர் எழுதுவேன் எனவும் சொல்லியிருந்தேன்.  

முதல் பயணத்தின்போது கியூபாவின் நகர்ப்புறங்களை மட்டும் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது. இரண்டாவது பயணத்தில் அழகு கொழிக்கும் கியுபாவின் கிராமப் புறங்களைப் பார்க்கும் அரிய வாய்ப்புக் கிடைத்தது. அவற்றைப் பார்த்தபோது என் மனதில் எழுந்த ஒரு கேள்வி – இவ்வளவு மண் வளத்தையும் நீர் வளத்தையும் கடல்வளத்தையும் கொண்ட நாட்டில் ஏன் உணவுப் பஞ்சம் இருக்கிறது? உடைப் பஞ்சம் இருக்கிறது?   

வழக்கமாக கியூபாவிற்குப் பயணம் செய்கின்றபோது அங்குள்ள மக்களுக்குத் தேவைப்படும் பற்பசை, பென்சில், பேனாக்கள்,  துணிமணிகள் போன்றவற்றை எடுத்துக் கொண்டு போய்க் கொடுப்பது வழக்கம். இம்முறை கொஞ்சம் அதிகமாகவே வாங்கி அவற்றை பத்துக் குடும்பங்களுக்குக் பங்கிட்டு கொடுக்குமாறு   ஒரு பெரிய பெட்டியில் எடுத்துக் கொண்டு போயிருந்தோம்.  

பயணம் புறப்படுமுன் எங்களது பயண வழிகாட்டியிடம் எங்களிடம் கொஞ்ச அன்பளிப்புப் பொருள்கள் இருக்கிறது, அவற்றைப் போகும் வழியில் உள்ள ஏழைக் கிராம மக்கள் யாருக்காவது கொடுக்க விரும்புகிறோம் என்று முன்கூட்டியே எமது திட்டத்தைச் சொல்லி வைத்தோம். அந்த வழிகாட்டி ஆம் என்றும் சொல்லவில்லை இல்லை என்றும் சொல்லவில்லை. அக்கறை கொஞ்சமும் இல்லாதமாதிரி அவர் காணப்பட்டார். ஒருவேளை நாங்கள் அவர்களைப் பிச்சைக்காரர்கள் என்று நினைத்து நடந்து கொள்வது அவருக்குப் பிடிக்கவில்லையோ என்ற அய்யம் கூட எழுந்தது!  

திறினாட்  மினி பேரூந்துப் பயணம் பல மணித்தியாலங்கள் பிடித்தன. விமானத்தில் போயிருக்கலாம். ஆனால் அப்படிப் போனால் கிராமப்புறங்களையோ அங்கு வாழும் மக்களையோ பார்க்க முடியாது. தரை வழி என்றால் நாலு பக்கமும் பார்த்த வண்ணம் போகலாம்.  அது மட்டும் அல்லாது ஆங்காங்கே  நின்று காலாறி வரலாம்.  

ஓட்டுநர் வழியில் காணப்பட்ட ஒரு உணவகத்தில் வண்டியை நிறுத்தினார். பத்துப் பன்னிரண்டு பேர் இருந்து சாப்பிடக் கூடிய இடம். குடிப்பதற்குப் பழச்சாறும் கடிப்பதற்குத் தின்பண்டங்களும்  சாப்பிடுவதற்கு கறி சோறும் இருந்தன. நாங்கள் இருந்த மேசைக்குத் சற்றுத் தள்ளி 5 கியூபானியர்கள் பியர் போத்தல்களைக் காலி பண்ணிக்கொண்டு  தட்டுத் தட்டாகச் சாப்பாட்டை கபளீகரம் செய்து கொண்டி ருந்தார்கள். அவர்களை மகிழ்விக்க ஒலிபெருக்கி வழியாக காதைப் பிளக்கும் கியூபன் Jazz  இசை வந்து கொண்டிருந்தது.  

எனக்கு ஒரே வியப்பு. இப்படிச் சாப்பிடுவதற்கு இவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது? ஒரு மருத்துவரது சம்பளமே மாதம் 35 அமெரிக்க டொலர்கள்தான். அப்படி இருக்கும் போது இவர்கள் இப்படி வெட்டுவதற்கு நிறையப் பணம் வேண்டுமே?  நாங்கள் குடித்த ஆளுக்கொரு  கிளாஸ் பழரசத்துக்கு நாலு டொலர் பில் வந்தது.

கோழிக்கறியோடு சாப்பிடும் இவர்களது பில் எத்தனை பெசோவைக் காட்டும்? அவர்களைப் பார்த்தால் அரச ஊழியர்கள் போல் பட்டது. அரச கணக்கில் சாப்பிடுகிறார்கள் போலும்!  

உணவகத்துக்கு அருகே ஒரு சின்னக் கட்டிடம்  கட்ட இரண்டு பேர் அத்திவாரம் வெட்டிக் கொண்டிருந்தார்கள். அவசரப்படாமல் ஆறுதலையாக வெட்டினார்கள்! மேசன் ஒருவர் சிமெந்தைக் குழைத்துக் கொண்டிருந்தார். 

அங்கிருந்து புறப்பட்டுச் சரியாக ஒரு மணித்தியாலத்தில் திறினாட்  நகரத்தின் எல்லையைக் கடந்து ஒரு குடியிருப்புக்குள்  வண்டியைக் கொண்டுபோய்  ஓட்டுநர் நிற்பாட்டினார். வழிகாட்டி அருகில் கம்பீரமாக எழுந்து நின்ற கோபுரத்தைச் சுட்டிக் காட்டி அதன் பெயர் Palacio Centero என்றார். அந்த உயரமான போபுரம் முன்னைய காலத்தில் அருகிலுள்ள  கரும்புத் தோட்டங்களில் வேலை செய்த அடிமைகளைக் கண்காணிக்கக்  கட்டப்பட்டதாம்! அதனைப் படம் பிடிப்பது என்றால் 25 யார் தள்ளி நின்று எடுக்க வேண்டும். அப்போதுதான் கோபுரத்தின் அடியும் நுனியும் படத்தில் விழும்! 

அந்த இடத்தில் ஒரு பள்ளிக் கூடமும் இருந்தது. ஒரு ஆசிரியை 12-15 வயதுக்கு உட்பட்ட 20 மாணவர்களோடு வந்து கொண்டிருந்தார். அவர்களைப் படம் பிடிக்கலாம் என்றால் என்ன காரணத்தாலோ அந்த ஆசிரியை எமது வேண்டுகோளுக்கு செவி சாய்க்க மறுத்துவிட்டார். சீருடை அணிந்திருந்த அந்த மாணவர்கள்  கருப்பு, வெள்ளை, சிவப்பு என்று எல்லா நிறத்திலும் இருந்தார்கள்.  

சற்று நேரத்தில் ஓட்டுநர் எங்களை நோக்கி வந்தார்.  அருகிலுள்ள தொடர் குடியிருப்புக் களைக் காட்டி அங்கே இருக்கிற குடும்பங்களுக்கு நாங்கள் கொண்டு வந்த அன்பளிப்புப் பொருட்களைக் கொடுக்கலாம் என்றார். அந்தக் குடியிருப்புக்கள் மிகவும் பாழடைந்த நிலையில் இருந்தன. கூரையின் சில இடங்களில் ஓடுகளைக் காண முடியவில்லை.  

நாங்கள் ஓடிப்போய் வண்டியில் இருந்த பெட்டியை மிகுந்த சிரமத்தோடு தூக்கிக் கொண்டு அந்தக் குடியிருப்புப் பக்கம் நடந்து போனோம். வழியில் ஒரு 15 வயது மதிக்கக்கூடிய சின்னப் பெண் வந்து கொண்டிருந்தார். அவரை  மறித்து குசலம் விசாரித்தோம். அவருக்கு எங்களது ஆங்கிலம் விளங்கவில்லை. எங்களுக்கு அவரது இசுபானிஷ் விளங்கவில்லை. ஆனால் நாங்கள் சுற்றுலாவிகள் என்பது மட்டும் அவருக்கு விளங்கி விட்டது. நாங்கள்  பெட்டியைச் சுட்டிக் காட்டி அதற்குள் துணிமணிகள் இருக்கிறதென்றும் அவற்றை அன்பளிப்புச் செய்யக்   கொண்டு வந்திருக்கிறோம் என்றும் கைச் செய்கையால் காட்டினோம். உடனே அந்தப் சின்னப் பெண்ணுக்கு நாங்கள் வந்த காரியம் விளங்கி விட்டது!

அங்கிருந்தபடியே இசுப்பானிய மொழியில் அக்கம் பக்கத்தில் குடியிருந்தவர்களைக் கூவி அழைத்தார். அவ்வளவுதான் எங்களை  நோக்கி குமரிகள், கிழவிகள் அடங்கிய ஒரு பெண்கள் பட்டாளம் நான் முந்தி நீ முந்தி என்று முண்டி அடித்துக் கொண்டு  ஓடி வந்தது. அடுத்த கணம் அந்த இடம் ஒரு யுத்த களமாக மாறியது!
 
 
கியூபா பயணக் கட்டுரை
ஒரு பருந்தின் நிழலில் 
திறினாட் உலக கலாசார இடம்
(92)

முண்டி அடித்து ஓடிவந்தவர்கள் ஆளை ஆள் விலக்கிவிட்டு பெட்டியை நாலு மூலையிலும் பிடித்து இழுத்தார்கள். ஒருவர் கைப்பிடியை இழுத்தபோது அது கையோடு போய்விட்டது! ஒரு தடித்த  இளம் பெண் ஒரு மூதாட்டியைப் பிடித்துத் தள்ளினார். அவர் ஒரு புறம் குப்புறப்போய் விழுந்தார். இந்தப் பெண்களது தாக்குதலுக்குத் தாக்குப் பிடிக்க முடியாத பெட்டி தாறுமாறாகக் கிழிந்துவிட்டது. வல்லமை உள்ளவர்கள் அதற்குள் இருந்த பொதிகளை எடுத்துக் கொண்டு ஓடினார்கள். மேலும்  பலம் உள்ளவர்கள் கைக்கு ஒவ்வொன்றாக இரண்டு பொதிகளை எடுத்துக் கொண்டு ஓடினார்கள்!
நாங்கள் ஒரு பக்கம் ஒதுங்கி நின்றோம். அதனால் இந்த அடிபிடியில் சிக்காது தப்பினோம். கியூபாவில் ஏழ்மை இருக்கிறது என்பதற்கான சான்றுகள் இருக்கின்றன.  ஹைபர் அலி காலத்து மோட்டார் வண்டிகள்ää கரடு முரடான சாலைகள்ää அழுக்குப் படிந்த தொடர்மாடிகள்ää அவற்றில் தொங்கும் கந்தல் உடைகள்ää வெறிச்சோடிக் கிடக்கும் அங்காடிகள் இவையெல்லாம் கியூபாவின் ஏழ்மையை எடுத்துக் காட்டின. ஆனால் இந்தப் பெண்கள் நாங்கள் எடுத்துச் சென்ற அன்றாடும் தேவைப்படும் பொருட்களுக்குப் போட்ட சண்டை அவையெல்லாவற்றையும் தோற்கடித்து விட்டது!
நாங்கள் போன சாலையின் இருமருங்கும் பயன்தரும் பழத்தோட்டங்கள் காணப்பட்டன. ஆங்காங்கு நெல் வயல்கள் கண்ணுக்குப் பட்டன. குடியானவர்கள் திறந்த வெளிகளில் மந்தைகளை மேய்த்துக் கொண்டிருந்தார்கள். இடையிடையே மக்கள் குடியிருப்புக்கள் வந்து போயின. ஒரு வீடாவது பெரிய வீடாக இல்லை. எல்லாம் சின்னச் சின்னவீடுகள். பெரும்பாலானவற்றின் கூரைகள் தகரத்தால் வேயப்பட்டிருந்தன. வளவுகளில் தென்னை கமுக மரங்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன.
கரும்பு மற்றும் பழத் தோட்டங்கள் காணப்பட்டதால் சாலையோரங்களில் சின்னப் பழக்கடைகள் இருக்கும் என்று எதிர்பார்த்தோம். ஒரு கடைகூடக் கண்ணுக்குப் படவில்லை. காரணம் அந்தத் தோட்டங்கள் அரசுக்குச் சொந்தமானவை.  
கரும்புக் கட்டுகளை ஏற்றிக் கொண்டு குதிரை வண்டிகள் நெடுஞ்சாலையில் போவதைப் பார்த்தோம். பெரிய லொறிகளிலும் கரும்புக் கட்டுகளை அருகில் உள்ள ஆலைகளுக்கு எடுத்துப் போகிறார்கள்.
திறினாட் கியூபாவில் உள்ள நகரங்களில் மூன்றாவது பெரிய நகரமாகும். கியூபாவில் நமோ என ஆரம்பிக்கப்பட்ட ஏழு நகரங்களில் இதுவும் ஒன்று. சற்றுத் தொலைவில்தான் கஸ்றோ 1953ஆம் ஆண்டு யூலை 26ம் நாள் மேற்கொண்ட ஆனால் தோல்வியில் முடிந்த மொன்காடா இராணுவ விடுதி (ஆழnஉயனய டீயசசயஉமள) இருந்தது.  
திறினாட் நகரத்தை 1514 ஆம் ஆண்டு  தோற்றுவித்தவர் இசுப்பானிய கடலோடியான டீகோ வெலஸ்;குவஸ் (னுநைபழ ஏநடáணஙரநண ) என்பவர். கரிபீன் கடலுக்கு சற்று உட்புறமாக இந்தக் குடியிருப்பு தோற்றுவிக்கப்பட்டது.  அப்போது அதன் பெயர் ஏடைடய னந டய ளுயவெíளiஅய  என்பதாகும்.  சில மாதங்கள் கழித்து ளுயnஉவi ளுpíசவைரள  என்ற குடியிருப்பு உருவாகியது. அதன் மக்கள் தொகை 36. இந்தக் குடியிருப்புகளில் இருந்தவர்களைத்தான்  ர்நசnán ஊழசவéள  என்ற கடலோடி மெக்சிக்கோவைப் பிடிக்க கிபி 1514 ஆம் ஆண்டு புறப்பட்டபோது தனக்கு உதவியாகக் கூட்டிச் சென்றார்.
டீகோ வெலஸ்குவசும் அவரது ஆட்களும் வழக்கம் போல அங்கு வாழ்ந்த  பூர்வீக மக்களை அடிமைப்படுத்தினார்கள். இசுப்பானியர் தங்களோடு கொண்டுவந்த நோயினாலும் கடின உழைப்பாலும் அவர்கள் இறந்துபட்டபோது  ஆபிரிக்காவில் இருந்து கருப்பு அடிமைகளை இறக்குமதி செய்தார்கள். பதினேழாம் நூற்றாண்டு முழுதும் இடம்பெற்ற அடிமை வாணிகம்ää ஆட்கடத்தல் இரண்டும் திறினாட்டை செல்வம் கொழிக்கும் நகரமாக மாற்றியது. ஆனால் திறினாட் நகரின் செல்வச் செழிப்பு அங்கு கடற்கொள்ளையர்களையும் சூறையாடுபவர்களையும் (உழசளயசைள)  கூவி அழைத்தது. அவர்களது சூறையாடலால்   ளுயnஉவi ளுpíசவைரள  அழிக்கப்பட்டு விட்டது. ஆனால் திறினாட் தப்பிவிட்டது.
கியூபா 1880ம் ஆண்டு அடிமை வாணிகத்தை தடைசெய்தது.  ஆனால் மழைவிட்டும் தூவானம் விடாததுபோல திரைமறைவில் அடிமை வாணிகம் மேலும் பல ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்றது. 1895ஆம் ஆண்டு சுதந்திரப் போருக்குப் பின்னரும் இந்த நிலை நீடித்தது.
எப்போதும்போல இப்போதும் திறினாட்டின் பொருளாதார வளம் சீனி உற்பத்தியிலேயே தங்கி இருக்கிறது. ஆனால் 52ää000 மக்கள் வாழும் இந்த நகரம் தற்போது சுற்றுலாத்துறை மூலமும் கணிசமான வருவாயைப் பெறுகிறது.    
திறினாட் நகரத்தின் தொன்மை மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்கள் இவற்றைப் பாதுகாக்கும் நோக்கோடு அதனையும் அங்கிருந்து 4 கிமீ தூரத்தில் இருக்கும் புகழ்பெற்ற கரும்பு ஆலைப் பள்ளத்தாக்கையும் (  ஏயடடந னந டழள ஐபெநnழைள (ஏயடடநல ழக வாந ளரபயச அடைடள)  ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார சமூக கலாசார அமைப்பு ‘உலக கலாசார இடம்’ (றுழசடன ர்நசவையபந ளுவைந)  என 1988ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தியது.  திறினாட்டுக்கு இன்னொரு பெயர் கரிபீன் கடலின் அருங்காட்சிஎகம் (ஆரளநரஅ ஊவைல ழக வாந ஊயசiடிடிநயn ளுநய) என்பதாகும்.  

கரும்பு ஆலைப் பள்ளத்தாக்குத்தான் 17 ஆம் நூற்றாண்டில் கரும்புச் செய்கைக்குப்  பெயர்போன இடமாக விளங்கியது. உலகத்தின் எந்தப் பகுதியிலும் இல்லாதவாறு நூற்றுக் கணக்கான சீனி ஆலைகள் இங்கு இயங்கிக் கொண்டிருந்தன.  எண்பத்திரண்டு சீனி ஆலைகள் ஆண்டுக்கு 60,000 அறோபாஸ் (யசசழடியள) சீனிää 1ää000 பீப்பா கருப்பஞ்சாறுää 700 பெட்டி வெல்லம் உற்பத்தி செய்தன.
அதன் எச்ச சொச்சங்களைப்  பார்ப்பதற்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் இங்கு வருகிறார்கள். இந்தக் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்த அடிமைகளைக் கண்காணிக்க சீனி ஆலை முதலாளிகளில் ஒருவரான யுடநதழ ஆயசயை னநட ஊயசஅநn ஐணயெபய கட்டிய Pயடயஉந ழக ளுயnஉhநண ஐணயெபய (1835-45) என்ற கோபுரம் இருக்கிறது. அந்தக் கோபுரத்தில் இருந்து பார்த்தால் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை பச்சைப் பசேல் என்ற கரும்புத் தோட்டங்கள் கண்ணுக்குத் தெரியும்.  

மேலும் மந்தை வளர்ப்புக்கும் புகையிலைத் தோட்டங்களுக்கும் திறினாட் நகரம் முக்கியத்துவம் பெற்றிருந்தது.  
கல்லுப் பதித்த திறினாட் நகரின் வீதிகளில் நடப்பது ஒரு சுகமான அனுபவமாகும். எந்தப் பக்கம் திரும்பினாலும் தேவாலாயங்கள்ää பூந்தோட்டங்கள்ää பழைய அரண்மனை பாணியிலான வீடுகள் கண்ணில் படுகின்றன. பெரும்பாலான வீடுகள் சிவப்பு நிற ஓடுகளால் வேயப்பட்டுள்ளது. அவற்றின் டுய ஏடைடய னந டய ளுயவெíளiஅய தேவாலயம் வெளிப்புறம் ஒன்றில் நீலம் அல்லது மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றன. ஞாயிறின் வெட்பமான ஒளிக்கீற்றுக்கள்பட்டுத் தெறிக்க (சநகடநஉவ) வேண்டும் என்பதற்காகவே  இந்த நிறங்கள் பூசப்படுகின்றன. 
பழைய மாளிகைளும் வீடுகளும் திருத்தப்பட்டு இப்போது சுற்றுலாப் பயணிகளுக்கான அருங்காட்சியகங்கள்ää உணவகங்கள்ää நினைவுப் பொருள்கள் விற்கும் அங்காடிகள் (ளுழரஎநnசை ளாழிள) ஆக மாற்றப்பட்டுள்ளன.  

நகரத்தின் முக்கிய சதுக்கத்தில் கிறித்தவ தேவாலயம்   அருங்காட்சியகம் (  சுழஅயவெiஉ ஆரளநரஅ)  மற்றும்  டுய ஏடைடய னந டய ளுயவெíளiஅய தேவாலயம் (ளுயவெíளiஅய வுசinனையன ஊhரசஉh) இந்தத் தேவாலயத்தில்தான் பூர்வீக குடிமக்களின் நலன்களுக்குக் குரல் கொடுத்த குசயல டீயசவழடழஅé னந டயள ஊயளயள என்ற பாதிரியார் தனது முதல் பலி பூசையை நடத்தினார். அதன்போது பூர்வீக குடிமக்களைப் புகழ்ந்தும் அவர்கள் மனிதாபிமானத்தோடு நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பேசினார். இங்குள்ள டுய ஏடைடய னந டய ளுயவெíளiஅய தேவாலயம் சற்றே உயர்ந்த நிலப்பரப்பில் கம்பீரமாக எழுந்து நிற்கின்றது.

வழிகாட்டி எங்களை கரும்பு பிழியும் ஒரு சின்ன கைத்தொழில்  கூடத்திற்குக் கூட்டிப் போனார். கருப்பந்தடிகளை ஒரு செக்குப் போன்ற இயந்திரத்தில் வைத்து  மாடுகளுக்குப் பதில் இரண்டு பேர் ஒரு கம்பின் இருபுறமும் நின்று சுற்றி இழுத்து வர சாறு ஒரு சிறு வாய்க்கால் வழியாக ஓடிவந்து ஒரு பெரிய அண்டாவில் விழுகிறது.  அதனை அங்கு போகும் பயணிகளுக்கு ஒரு கிளாஸ் கருப்பஞ்சாறு ஒரு டொலருக்கு  விற்கிறார்கள்.
அடுத்து திறினாட் நகரில் மட்பாண்டங்கள் தயாரிக்கும் ஒரு குடிசைத்தொழில் மையத்தைப் பார்ப்பதற்கு  வழிகாட்டி அழைத்துப் போனார். எழுபது வயதைத் தாண்டிய நாலு ஐந்து கிழவர்கள் மட்பாண்டங்களைத் தயாரிப்பதில் மும்மரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். வெறும் கழிமண் சில மணித்துளிகளில் அவர்களது கைவண்ணத்தில் அழகான  பானைää சட்டிää கூசாää உருவச் சிலைகள் என விதம் விதமாக உருவாகி எங்கள் கண்ணெதிரே உயிர் பெற்று வந்தன. செய்து முடித்தவற்றை முற்றத்தில் வெய்யிலில் காய வைக்கிறார்கள். இவர்களுக்குப் பின்னர் இவர்களது இளைய தலைமுறையினர்  இந்தக் குயத் தொழிலில் ஈடுபடுவார்களா? என வழிகாட்டியிடம் கேட்டோம். ‘நான் நினைக்கவில்லை’ என்ற விடை அவரது வாயில் இருந்து வந்தது.
பார்ப்பதற்கு இன்னொரு வரலாற்றுப் புகழ்பெற்ற இடம் இருக்கிறது என்ற முன்னுரையோடு வழிகாட்டி கவுண்டன் பாணியில் ‘என் பின்னால் வாருங்கள்’ (கழடடழற அந) என்று கூறி எங்களை அழைத்துச் சென்றார். நாங்கள் கால்நடையில் மிகுந்த எதிர்பார்ப்போடு அவரைப் பின்பற்றினோம். வழிகாட்டி ஒரு ஓங்கி வளர்ந்த பெரியமரத்தின் கீழ் போய் நின்றார். ஏன் இந்த மனிதர் மரத்தின் கீழ் நிற்கிறார் என்று நாங்கள் யோசித்துக் கொண்டிருந்தபோது அந்த மரம்தான் அவர் சொன்ன வரலாற்றுப் புகழ்பெற்ற இடம் என்பதைப் புரிந்து கொண்டோம்.
அந்த மரத்தின் பெயர் தபைரந என்பதாகும்.  இந்த மரத்தின் கீழ்த்தான் நான் ஏற்கனவே குறிப்பிட்ட டீகோ வலஸ்குவஸ் ( னுநைபழ  ஏநடáணஙரநண) என்ற கடலோடி நத்தார் திருப்பலிப் பூசையை முதன்முதலாக நடத்தினார்.
இந்த சதுக்கத்தில்தான் புகழ்பெற்ற டுய ஊயnஉhánஉhயசய என்ற உண்டிச்சாலை இருக்கிறது. இசைக்குழு ஒன்று 24 மணிநேரமும் கியூபானிய தயணண இசையை வழங்கிக் கொண்டு இருக்கிறது. இசைää நடனம் இரண்டும் கியூபானியர்களோடு கூடப் பிறந்ததுபோல் காணப்படுகிறது. காதுக்கு விருந்தோடு நாவுக்கும் ஊயnஉhánஉhயசய  என்ற அந்த உண்டிச்சாலையின் பெயர்கொண்ட  ஒருவகை தேறல் கலவையை (உழஉமவயடை) பருகத் தருகிறார்கள். விசாரித்ததில் தேன்ää எலுமிச்சைச் சாறுää மதுää முத்துப்போன்ற தண்ணீர் கொண்டு இந்தத் தேறல் கலவை தயாரிக்கப்படுகிறது என்று சொன்னார்கள். ஒரு கிளாசின் விலை 1.50 அமெரிக்க டொலர். வழிகாட்டியே அந்தப் பணத்தைக் கட்டிவிடுகிறார். அதே உண்டிச்சாலையில் இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு காயோ கொக்கோவுக்குப் பயணப் பட்டோம். மினி பேரூந்து வண்டி அந்த இரவைக் கிழித்துக்கொண்டு பறந்தது.
  
கியூபா பயணக் கட்டுரை
ஒரு பருந்தின் நிழலில்
பருந்தும் கோழிக் குஞ்சும்  
(93)
பூலோக சுவர்க்கம் என்று சொல்வார்களே? அப்படியொன்று இருந்தால் அது காயோ கொக்கோவாகத்தான் (ஊயலழ ஊழஉழ) இருக்க வேண்டும். ஒரு பெண்ணின் மேனி அழகை வர்ணிக்க வந்த பாரதியார் ‘கவிதைக் கனி பிழிந்த சாற்றினிலேää பண்கூத்து எனுமிவற்றின் சாரமெல்லாம் ஏற்றி அதனோடே இன்னமுதைத் தான்கலந்துää காதல் வெய்யிலிலே காயவைத்த கட்டியினால் மாதவளின் மேனி வகுத்தான் பிரமன் என்பேன்’ என்று வியந்து பாடுவார். 
காயோ கொக்கோ தீவையும் இயற்கை அன்னை தனது அதீத கற்பனை வளத்தையும் கைவண்ணத்தையும் காட்டிப் படைத்திருக்க வேண்டும். உலகில் வேறு எங்கேனும் இப்படி மனதைக் கொள்ளை கொள்ளும் அழகான தீவு இருப்பது அய்யமே.  
காயோ கொக்கோ தீவின் பரப்பளவு 370 சதுர கிமீ எனவும் அதன் பால்போன்ற வெள்ளைக் கடற்கரை 22 கிமீ தூரம் எனவும் இந்தத் தீவையும் தலைநிலத்தையும் 28 கிமீ தூரமுள்ள சாலை இணைக்கிறது என்றும் முன்னர் கூறியுள்ளேன்.
அந்தத் தீவின் அழகைப் பருகுவதில் அடுத்த சில நாள்கள் கழிந்தன. காலையில் எழுந்து கடலில் குளிப்பதுää படகில் கொஞ்சத் தூரம் போய்வருவதுää தீவை சுற்றிப் பார்ப்பதுää பின்நேரங்களில் தென்னஞ் சோலைகளுக்கு இடையில் கட்டியிருக்கும் நூல் ஊஞ்சலில் சற்றுக் கண்ணயர்வது. இரவு கியூபா நடனக் குழுக்களின் நாட்டியத்தைப் பார்த்துக் களிப்பது ஆகியவற்றில் பொழுது போனது.  
கடலில் குளிப்பதற்கு காலை 7.30 மணிக்கே இடத்தைப் பிடித்துவிட வேண்டும். வெய்யிலின் தாக்கத்தைத் தணிக்க சிறு சிறு ஓலைக் குடிசைகளை கடற்கரையோரமாகக் கட்டி இருக்கிறார்கள். ஆனால் வெள்ளைக்காரர்கள் திறந்த மணல் வெளியில் அண்ணாந்து உடம்பில் கிறீம் பூசிக்கொண்டு வெய்யில் படும்படி படுத்து விடுகிறார்கள்! 
மாலை வேளைகளில் அடிக்கடி மழை பெய்கிறது. அதனால் வெட்பம் குறைந்து காற்று சில் என்று  வீசும்  நாங்கள் சென்ற மறுநாள் மாலையில் நல்ல மழை பெய்தது. மழை விட்டுக் கொஞ்சம் மம்மல் ஆனதும் நுளம்புகள் எங்கிருந்தோ படையெடுத்து வந்து கடிக்கத் தொடங்கின. இதை நாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஓடிப்போய் அறைக் கதவைச் சாத்திக்கொண்டு உள்ளே இருந்து விட்டோம். ஹோட்டல் நிர்வாகம் உடனே அந்தப் பிரதேசம் முழுதும் பெரிய பம்புகள் மூலம் புகை அடித்தார்கள்.  அதனால் அந்தப் பகுதி பெரிய புகை மண்டலமாகக் காட்சியளித்தது. அதன் பின்னர் மழை பெய்தாலும் நுளம்பு தலை காட்டுவதில்லை.    
இந்தத் தீவுக்கு காயோ கொக்கோ என்ற பெயர் வந்த காரணம் அங்கு காணப்படும் வெள்ளை நிற கொக்கோ என்ற பெயர் கொண்ட  பறவைதான். இது பிளமிங்கோ என்ற செந்நாரைகளைவிடச் சிறியன. எங்கள் ஊர் கொக்குப் போன்றவை. தமிழ்தான் உலகின் முதன் மொழி என்று சொல்பவர்கள் கொக்கு என்ற  தமிழ்ச் சொல்தான் திரிந்து கொக்கோ என்று வழங்குகிறது என்று சொற்போர் செய்யக் கூடும்!
இந்தத் தீவில் மொத்தம் 22ää000 அறைகள் கட்டுவதற்குத் திட்டம் இருக்கிறது. இப்போது அதில் கால்வாசிதான் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதி கட்டப்பட்டு வருகின்றன. நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் கயோ கொக்கோவில் மட்டும் 458 அறைகள் இருந்தன. எல்லா அறைகளிலும் குளிரூட்டிகள்ää செய்மதித் தொலைக்காட்சிகள்ää உப்பரிகைகள் இருக்கின்றன. பக்கத்தில் காயோ காறிபே ( ஊயலழ ஊயசiடிந)  என்ற இன்னொரு ஹோட்டல் இருக்கிறது. 1997ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த ஹோட்டலில்  514 அறைகள் இருக்கின்றன.  சற்றுத் தொலைவில் வுசுலுP என்ற ஹோட்டல் இருக்கிறது. முப்பத்தேழு கட்டிடங்களைக் கொண்ட இதில்  972 அறைகள் இருக்கின்றன. இவை பெரும்பாலும் 4 அல்லது 5 நட்சத்திர ஹோட்டல்களாகும்.
பொதுவாக சுற்றுலாத் தொழிலால் சுற்றுச் சூழல் மாசு அடைந்துää பாலியல் குற்றங்கள்ää களவுகள்ää கொள்ளைகள் அதிகரிப்பதுண்டு. ஆனால் இந்தத் தீவின் உயிரின வாழ்க்கைச் சூழலையும்ää இயற்கைச் சூழலையும் பேணுவதில் அரசு கண்ணும் கருத்துமாக  இருக்கிறது. இங்கு செந்நாரைகள் உட்பட 200க்கும் அதிகமான வௌ;வேறு விதமான  பறவைகள் இருக்கின்றன. முந்நூற்று நாற்பது  வகை மரங்கள் காணப்படுகின்றன. பல ஹோட்டல்கள் கட்டிய பின்னரும் தீவின் 90 விழுக்காடு பிரதேசம் பற்றைக்காடாகவே காட்சியளிக்கிறது.  
காயோ கொக்கோ தீவிற்கு 50 கிமீ தூரத்தில் இன்னொரு தீவு இருக்கிறது.  அதன் பெயர் காயோ கிலர்மோ ( ஊயலழ புரடைடநசஅழ) என்பதாகும். இதன் பரப்பளவு 13 சதுர கி. மீ. மட்டுமே! இந்தத் தீவில்தான் பிரபல எழுத்தாளர் ஏர்னெஸ்ட் ஹெமிங்வே ( நுசநௌவ ர்நஅiபெறயல) ‘வுhந ழுடன ஆயn யவ வாந ளுநய’ மற்றும்  ‘ஐளடயனௌ in வாந ளுவசநயஅ’இ  என்ற புகழ்பெற்ற  நாவல்களை எழுதினார். மீன் பிடிப்பது அவரது பொழுது போக்காக இருந்தது. நீரோட்டத்தில் தீவுகள் என்ற நூலில் ஹெமிங்வே இந்தக் கடலில் உலகில் வேறெங்கும் காணமுடியாத அளவிற்கு மீன்கள் இருப்பதாக எழுதியிருக்கிறார். இங்கு ஆழ்கடலில் மீன் பிடிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.  
வரடேரோவைவிட காயோ கொக்கோ அனைத்துலக சுற்றுப்பயணிகள் மத்தியில் அதிகப் புகழ் அடைந்து வருகிறது. ஒரு காலத்தில் இந்தத் தீவில் சில மீனவக் குடும்பங்கள் மட்டும் வசித்து  வந்தன. சுற்றுலாப்பயணிகளுக்கு இந்தத் தீவு 1993ஆம் ஆண்டு திறந்து விடப்பட்டது.  அன்றில் இருந்து இன்றுவரை 800ää000 சுற்றுலாப்பயணிகள் இங்கு வந்து போயிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் கனடாää ஜெர்மனி போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.  
1993-2001 ஆண்டுகளுக்கு இடையில் 47 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஹோட்டல்கள் இலாபமாக ஈட்டியுள்ளன. செப்தெம்பர் 11ம் நாள் அமெரிக்கா மீது நடத்தப்பட்ட  பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னரும் இங்குள்ள ஹோட்டல்களின் குடியிருப்பு விழுக்காடு ( ழஉஉரியnஉல சயவந)  40 விழுக்காடுக்குக்  குறையாமல் இருந்து வருகிறது.
அண்மையில் கட்டி முடிக்கப்பட்ட அனைத்துலக விமான நிலையத்தில்  ரொறன்ரோää மொன்றியல் போன்ற நகரங்களில் இருந்து விமானங்கள் நேரடியாகப் பறந்து வந்து இறங்குகின்றன.
காயோ கொக்கோ  தீவில் நிரந்தர குடியிருப்புக்கள் இல்லை. பொதுமக்கள் குடியிருப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இங்குள்ள  ஹோட்டல்களில் சுமார் 6ää000 ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். இதைவிட மறைமுகமாக உணவு வழங்கல்ää போக்கு வரத்து போன்றவற்றின் மூலம்  மூன்று மடங்கு பேருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கிறது. இது சுற்றுலாத் தொழிலால் ஏற்படும் நேரடி தொழில் வாய்ப்பு ஆகும்.
ஹோட்டல் ஊழியர்கள் எல்லோரும் நாள்தோறும் பேரூந்தில் காலையில் வந்து மாலையில் வீட்டுக்குப் போய்விடுகிறார்கள். அத்தியாவசியமாகத் தேவைப்படும் ஊழியர்கள்ää திறமையான பணியாளர்கள் எனத் தேர்ந்தெடுக்கப்படும் சுமார் 170 பேர்  மட்டும் இரவில் ஹோட்டல்களில் தங்க அனுமதிக்கப்படுகிறார்கள். உணவு இலவசமாகக் கொடுக்கப்படுகிறது. அறை வாடகை குறைந்த கட்டணத்தில் கொடுக்கப்படுகின்றன. அரசு மிகுதிப் பணத்தைக் கொடுத்து விடுகிறது.
ஹோட்டல்கள் கியூபன் அரசுக்குச் சொந்தமானவை என்றாலும்  அதனை நடத்துபவர்கள் பெரும்பாலும் இசுப்பானியர்கள்.  
இப்படியான 4 அல்லது 5 நட்சத்திர ஹோட்டல்களில் உள்@ர்வாசிகள் வந்து தங்கலாமா? குறைந்தபட்சம் பணத்தைக் கொடுத்து சாப்பிடலாமா? அது அவர்களுக்குக் கட்டுபடியாகுமா?
ஹோட்டல்களில் தங்கி நின்று சாப்பிட வசதி படைத்த கியூபானியர்கள்  இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அரசியல் காரணங்களுக்காக அனுமதிக்கப்படுவதில்லை. காரணம் அதனால் வர்க்க வேற்றுமை தோன்றிவிடும் அல்லது அதிகரித்துவிடும் என்ற பயந்தான்!  
சுற்றுலாப்பயணிகளை நன்றாகக் கவனித்து அனுப்புகிறார்கள் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. ஒவ்வொரு நாளும் விதம் விதமான சாப்பாடுää விளையாட்டுக்கள்ää கேளிக்கைகள் என்று பயண முகவர்கள் அசத்துகிறார்கள். திருமண வீட்டுக்குப் போனால் எப்படி திருமண வீட்டுக்காரர் விழுந்து விழுந்து விருந்தினரை வரவேற்று உபசரிக்கிறார்களோ அதேபோல் சுற்றுலாப் பயணிகளையும் வரவேற்று உபசரிக்கிறார்கள்.  
நாங்கள் புறப்படும் நாள் விடிந்தது. அறைகளைக் காலி செய்துää இயந்திரச் சாவிகளை வரவேற்பு மேசையில் ஒப்படைத்து விட்டு பேருந்து வண்டிக்காகக் காத்திருந்தோம். சொன்ன நேரத்துக்கு வண்டி வந்ததும் ஏறி உட்கார்ந்து  கொண்டோம். வண்டி புறப்படுவதற்கு ஒரு சில நிமிடங்கள் முன்பாக எங்களைக் கவனித்த செலவு முகவர் வந்தார். அவர் ஒரு பெண்மணி பாபடோஸ் தீவைச் சேர்ந்த கருப்பர். 
ஆண் பெண் வேறுபாடின்றி எல்லோரையும் கட்டி அணைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்து ‘மீண்டும் வருக’ என்று வாழ்த்தினார். உபசரிப்பில் ஏதாவது குறையிருந்தால் தங்களுக்கு கட்டாயம்  தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு தனது வணிக அட்டையைத் தந்தார்.  
உண்மையில் எங்களுடன்  வந்தவர்களில் பாதிப் பேருக்கு  மேல் கிய10பாவிற்கு ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் போய் வந்தவர்கள்.  
விமான நிலையத்தில் எந்தக் கெடு பிடியும் இல்லை. வழக்கம் போல கடவைச் சீட்டுகளை மிகக் கவனமாக உற்று உற்றுப் பார்த்துவிட்டு திருப்பித்தருகிறார்கள். குடிவரவு அதிகாரிகளது முகத்தில் எந்தச் சலனத்தையும் பார்க்க முடியாது. கியூபாவில் சிரிக்காதவர்கள் யாராவது இருந்தால் அது இந்த குடிவரவு மற்றும் சுங்க அதிகாரிகள்தான்! 
இந்த வாட்டி விமானம் புறப்பட 4 மணித்தியாலங்கள் தாமதமாகி விட்டது. அந்த 4 மணித்தியாலங்களையும் போக்குவது வில்லங்கமாக இருந்தது. இட  நெருக்கடி வேறு. ஒருவாறு  பொறுமையாக இருந்து விமானத்தைப் பிடித்து பத்திரமாக ஊர் வந்து சேர்ந்தோம். 
இந்தக் கட்டுரைத் தொடருக்கு நான் கொடுத்த தலைப்பு ‘ஒரு பருந்தின் நிழலில்’ என்பதாகும். அப்படியொரு தலைப்பைக் கொடுத்த காரணத்தை இவ்வளவில் நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள்.  
சோவியத் ஒன்றியம் குலைந்த பின்னர் உலகில் எஞ்சியுள்ள ஒரேயொரு வல்லரசு நாடு அமெரிக்கா.  அந்த அமெரிக்காவிற்குக்  கீழேதான் கியூபா இருக்கிறது. அமெரிக்காவின் தேசிய சின்னம் பருந்து. எனவேதான் பருந்தின் நிழலில் என்று தலைப்புக் கொடுத்தேன்.  
முதலாளித்துவ நாடான அமெரிக்கா என்ற பருந்தின் நிழலில் கம்யூனிச நாடான கியூபா என்ற கோழிக் குஞ்சு இருப்பது உலக அதிசயங்களில் ஒன்று. 1959ஆம் ஆண்டுப் புரட்சிக்குப் பின்னர் கடந்த காலங்களில் கியூபா நாட்டைப் பிடிக்கவும்ää பிடல் கஸ்றோவைக் கொல்லவும் அமெரிக்கா எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. எல்லாம் தோல்வியில் முடிந்தன. இதனால் தற்போதைக்கு கியூபாவின் சுதந்திரத்துக்கும் இறைமைக்கும் ஆபத்து இல்லை. ஆனால் பருந்து எத்தனை நாளைக்குக் கோழிக் குஞ்சைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கும். ஒரு தீவிர வலதுசாரி அமெரிக்க சனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் வந்தால் நிலமை மாறிவிடும். அப்போது பருந்து கோழிக்குஞ்சை விறாஞ்சிக் கொண்டு போகலாம்! 
எண்ணி 93 கிழமைகளாக என்னுடன் கியூபா பயணத்தில் கைகோர்த்து வந்த உங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்தத் தொடரைப் படித்துவிட்டுப் பலர் கனடாவில் இருந்து கியூபாவிற்குச் சுற்றுலா போய் வந்திருக்கிறார்கள். ஏனைய நாடுகளோடு ஒப்பிடும் போது கியூபா சுற்றுலாப் பயணச் செலவு கட்டுபடியாக இருப்பது அதற்கு ஒரு ஏதுவாகும். இந்தப் பயணம் தொடர்பாகவும் பயணத்தைச் சாட்டியும் வேறு பல பயனுள்ள அறிவியல் தரவுகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடிந்தது என நம்புகிறேன். இன்னொரு பயணத்தில் மீண்டும் சந்திக்கும்வரை முழக்கம் (ஆரணாயமமயஅ) வாசகர்களுக்கு வணக்கம் கூறி விடைபெறுகிறேன்!  அறிவியலை வளர்ப்போம். பகுத்தறிவோடு வாழ்வோம்.  


 

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply