கியூபா பயணக் கட்டுரை (51+60)

கியூபா பயணக் கட்டுரை (51)
ஒரு பருந்தின் நிழலில்
அரிஸ்தோட்டலின் சில கோட்பாடுகளை மறுக்க 2000 ஆண்டுகள் எடுத்தது!

அறிவியல்பற்றி அரிஸ்தோட்டலின் அணுகுமுறை பிளாட்டோவின் அணுகுமுறைக்கு மாறுபட்டிருந்தது. மனித செயல்பாட்டின் அடிப்படை அறிவு அதன் தொழில் சிந்தனை என்ற பிளாட்டோவின் கருத்தோடு அவர் ஒத்துப்போனார். ஆனால் பிளாட்டோ கற்பித்த நுண்பொருள் கோட்பாடு மற்றும் கணக்கியலை உள்ளடக்கிய  “முதல் தத்துவத்தை” படிப்பதோடு நில்லாமல் உலகத்தில் காணப்படும் இயற்பியல்,வேத்தியல், உயிர்ப்பியல் இவற்றை உள்ளடக்கிய  “இரண்டாவது தத்துவத்தை கற்பதும் முக்கியம் என்று அரிஸ்தோட்டல்  எண்ணினார். அவரது தந்தையார் ஒரு வைத்தியராக இருந்த காரணத்தால் அரிஸ்தோட்டல் உயிரினங்கள் பற்றி அக்கறை காட்டினார் போலும்.

அரிஸ்தோட்டலின் சாதனை என்னவென்றால் அன்றைய ஏதன்ஸ் நகரில் அறிவியல்பற்றி ஆய்வுசெய்ய முன்னர் எப்போதும் இல்லாத ஒரு கலைக் கழகத்தை (யுஉயனநஅல) ஆரம்பித்ததே. முதலில் அறிவியல் என்றால் என்ன அதனை ஏன் கற்க வேண்டும் என்ற வரைவிலக்கணத்தை வரைந்தார். வேறு விதமாகச் சொன்னால் இன்று நாம் அமைப்பு முறையாகக் காணும் அறிவியலை அவர் தன்னந்தனியராக இருந்து கண்டு பிடித்தார். பிளாட்டோ தொடக்கிய கலைக் கழகத்தில்  இன்றைய கணக்கியல் துறை இருந்தது. ஆனால் அரிஸ்தோட்டல் ஆரம்பித்த கலைக் கழகத்தில்  முதன்முதலாக அறிவியல்துறையும் இருந்தது. அதில் அடங்கிய உயிரியல்துறை மிகச் சிறப்பாக இருந்தது. இயற்பியல் மட்டும் அவ்வளவு சோபிக்கவில்லை.  

அரிஸ்தோட்டலுக்குப் பின்னர் 2000 ஆண்டுகளாக அவரால் கற்பிக்கப்பட்ட அறிவியலை மிஞ்சும் வண்ணம் வேறு அறிவியல் தலை எடுக்கவில்லை. அரிஸ்தோட்டல் கற்பித்த அறிவியல் தரமாக இருந்ததால் அதனை எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள். கிறித்தவ தேவாலயம்கூட அதனை அப்படியே ஏற்றுக் கொண்டது. அதனால்தான் அரிஸ்தோட்டலின் சாதாரண இயற்பியல் கோட்பாடுகளையிட்டு கலிலியோ கேள்வி எழுப்பியபோது அவர் கிறித்தவ தேவாலயத்தோடு மோத வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார்.  

அரிஸ்தோட்டலின் ஆய்வு  ஒவ்வொரு இயலுக்கு இயல் எழுந்த சிக்கல்களின் தன்மையைப் பொறுத்து மாறுபட்டதாக இருந்தது. பொதுவாகக் கூறும்போது அவரது ஆய்வு பின்வரும் வரைவிலக்கணத்துக்கு அமைய இருந்தது.  

(1) எடுத்துக் கொண்ட பொருளுக்கு வரைவிலக்கணம் வகுத்தல். 
(2) பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட கருத்துக்களை மீளாய்தல். முன்னைய ஆசிரியர்களது ஆலோசனைகளைக் கவனத்தில் கொள்வது. 
(3) தனது வாதத்தையும் தீர்வுகளையும் முன்வைத்தல்.  
இன்றுகூட இந்த ஆய்வுமுறையே அறிவியல் ஆராய்ச்சிக்கு எல்லோராலும் பின்பற்றப்படுகிறது என்பது பலருக்கு வியப்பாக இருக்கலாம். அவர் பயன்படுத்திய வாதம் இரண்டு வகையானது. ஒன்று வாதமுறைப்படி உண்மையை ஆய்தல் (னுயைடநஉவiஉயட). இரண்டு பட்டறவின் (நஅpசைiஉயட) அடிப்படையில் ஆய்வு செய்தல். அரிஸ்தோட்டல்  
அரிஸ்தோட்டல் எதிர்தரப்பு வாதத்தை முறியடிக்க அவர்களின்  முடிவு பொருளற்றதென (சநனரஉவழை யன யடிளரசனரஅ ) வாதிப்பார். இவரின் இதே வாதமுறையை 2000 ஆண்டுகள் கழித்து அவரது ஆதரவாளர்களுக்கு எதிராகக் கலிலியோ பயன்படுத்தியபோது ஆதரவாளர்கள் சங்கடப்பட்டார்கள்.  
பிளாட்டோ கண்ணுக்குப் புலானாகாத – கருத்தியலான (யுடிளவசயஉவ) அறிவியலைப்பற்றியே கவனம் செலுத்தினார். அதற்கு மாறாக அரிஸ்தோட்டல் புலனுக்குப் புலப்படும் தாவரங்கள் விலங்குகள்பற்றி ஆராய்ந்து அவற்றை விரிவாக வகைப்படுத்தினார். இயற்கை பற்றிய அவரது ஆய்வு காரணங்கள் பற்றியதாக இருந்தன. இந்தக் காரணங்கள் எவை? இதற்கு அவரே எடுத்துக்காட்டுக்களை முன்வைத்தார். ஒரு பொருளுக்கு (ழடிதநஉவ) நான்கு பண்புகள் (யுவவசiடிரவநள) உண்டு. அவையாவன- 
(1) பருப்பொருள் (ஆயவவநச)
(2) உருவம் ( குழசஅ)
(3) அசைவுக்குக் காரணம் (ஆழஎiபெ உயரளந)
(4) இறுதிக் காரணம் (குiயெட உயரளந) 

எடுத்துக் காட்டாக  ஒரு மேசைக்கு அதன் பருப்பொருள் மரம். உருவம் அதன் வடிவம். அசைவுக்குக் காரணம் தச்சுத் தொழிலாளி அதன் இறுதிக் காரணம் அந்த மேசை எதற்காக முதலில் செய்யப்பட்டது என்பது. எடுத்துக்காட்டு ஒரு குடும்பம் அமர்ந்து சாப்பிட அந்த மேசை தேவைப்பட்டது. மனிதனுக்கு இந்தப்  பண்புகள் எவ்வாறு பொருந்தி வரும்? 

மனிதன் அவனது தாயினால் உற்பத்தி செய்யப்பட்டவன் என அரிஸ்தோட்டல் நினைத்தார். எனவே பருப்பொருள் தாய். உருவம் இரண்டு காலும் பகுத்தறிவும் படைத்த விலங்கு. அசைவுக்குக் காரணம் தந்தை. இறுதிக் காரணம் ஒரு வளர்ந்த மனிதனாவது.  கடைசிப்  பண்பு சில சமயம் நிகழாது போகலாம். ஆனால் அது விதி விலக்கு. இயற்கை எப்போதும் ஒழுங்காகவும் ஒரேமாதிரியாகவும் இயங்குகிறது.

இப்படித் தர்க்க ரீதியாக எங்கள் தமிழ் மூதாதையர்கள் சிந்தித்ததாகத்  தெரியவில்லை. அதுகூடப் பருவாயில்லை. அவர்களை மன்னிக்கலாம். இன்று கூட  மேற்குலக அறிவியலைக் கல்லூரிகளிலும், பல்கலைக் கழகத்திலும் படித்த பின்னரும் ஒரு சிலரது ஆராய்ச்சி விநாயக சதுர்த்திக்கு அவிக்கும் மோதகத்தைப் பற்றியே சுற்றிவருகிறது.
மோதகத்தை மூடியுள்ள மா  மாயையைக் குறிக்கிறது. உள்ளுக்குள் இருக்கும் சர்க்கரை ஆனந்தத்தைக் குறிக்கிறது. தேங்காய்த் துருவல் பாசத்தைக் குறிக்கிறது. அடே அப்பா என்ன அற்புதமான கண்டு பிடிப்பு! என்ன அறிவியல் வியாக்கியானம்! இப்படித் தமிழர்கள் அரிஸ்தோட்டல் காலத்துக்கு முந்திய 2,000 ஆண்டுகளில் வாழ்ந்தால் அவர்கள் எப்படி உருப்படப் போகிறார்கள்? எதைக் கண்டு பிடிக்கப் போகிறார்கள்?

இதில் வேதனை என்னவென்றால் அறிவியலின் மிக அற்புதமான சாதனைகளில் ஒன்றான வானொலியில் இந்த அபத்தங்களை ஒலி பரப்புகிறார்கள் என்பதுதான்!    
இயற்கை அறிவியலுக்கு (Natural Science) அரிஸ்தோட்டலின் உயிர்ப்பியல் பற்றிய ஆய்வு உயிரற்ற பொருட்களைவிட உயிரினங்களின் உருவத்துக்கும் இறுதிக் காரணத்துக்கும் நல்ல எடுத்துக்காட்டாக உள்ளன. அரிஸ்தோட்டல் சுமார் 500 விலங்குகள், 120 வகையான மீன்கள், 60 வகையான பூச்சிகள் இவைபற்றி விரிவாக ஆராய்ந்துள்ளார். அவர்தான் அறுவை முறையை (dissection)  தாராளமாகக் கையாண்டவர். எடுத்துக்காட்டாக அவர் ஒரு நாய்மீன் பற்றி விரிவான தரவுகள் தந்துள்ளார். ஆனால், அந்த மீனை 19 ஆம் நூற்றாண்டில்தான் கண்டு பிடித்தார்கள். அது மட்டும் பெரும்பாலோர் அவர் எழுதியதை கற்பனை என நினைத்து நம்ப மறுத்தார்கள்.

அரிஸ்தோட்டலின் ?இயற்கை? பற்றிய ஆய்வு உயிருள்ள விலங்குள், செடி கொடிகள் பற்றி சரியாக இருந்தாலும் உயிரற்ற பொருட்களது பண்புகள் பிழையான முடிவுகளைத் தருவதாய் இருந்தன. அரிஸ்தோட்டலின் அணுகுமுறை பொருள்கள் அய்ம்புலனுக்கும் எப்படிப் புலப்படுகிறதோ அப்படி அமைந்திருந்தது. வெட்பம், குளிர் என்றவுடன் அவை எப்படி இருக்கும் அதன் பண்புகள் எத்தகையது என்பது உடனடியாகத் தெரிந்து விடுகிறது. அதற்கு மாறாக  அய்ம்புலனுக்குப் புலப்படாது அறிவுக்கு மட்டும் புலப்படும் பொருள்கள்பற்றி ஆராய்வது சரியாக  இருக்காது என அவர் நம்பினார். ஆனால், பல நூற்றாண்டுகள் கழித்து அணு மற்றும் கணக்கியல் அணுகுமுறைதான் சரியான பாதை என்பது நிரூபணம் ஆகியுள்ளது.

அரிஸ்தோட்டல் தனது அன்றாட வாழ்க்கையில் கண்ட உலகுக்கும் நாங்கள் இன்று பார்க்கும் உலகுக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. இன்று பிறக்கும்  குழந்தைகள் சிறுவயதிலேயே சாலையில் ஓடும் பேரூந்து மற்றும் விமானங்களைப் பார்க்கிறது. அவை அசைந்தாலும் அவை விலங்குகள் போலவோ பறவைகள் போலவோ உயிருள்ளவை அல்ல என்பது  குழந்தைகளுக்கு விரைவில் தெரிந்து விடுகிறது. ஆனால், கிமு நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்கர்கள் பார்த்த உயிருள்ள மனிதர்கள், விலங்குகள், பறவைகள் மட்டுமே அசைந்தன.

அரிஸ்தோட்டல் எல்லாப் பொருட்களும் நான்கு மூலப் பொருட்களால் ஆனவை எனச் சொன்னார். அவையாவன புவி, நீர், நெருப்பு, காற்று என்பனவாகும். அவர் அசைவுபற்றி (Motion) இரண்டு விதிகளை வகுத்தார்.  

(1) பருமையான பொருள்கள் வேகமாகக் கீழே விழுகின்றன. அதன் வேகம் அந்தப் பொருளின் நிறைகை;கு சரிசமமாக இருக்கும்.  

(2) ஒரு பொருளின் வீழும் வேகம் அது வீழும் ஊடகத்தின் திண்மையைப் (னநளெவைல) பொறுத்து தலைகீழாக (inஎநசளந) இருக்கும்.  

எடுத்துக்காட்டாக ஒரு பொருள் அரைவாசி திண்மையுடைய ஊடகத்தின் வழியாக விழும்போது இருமடங்கு வேகத்தில் அது விழும். மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் போது அரிஸ்தோட்டலின் அசைவுபற்றிய விதிகள் மிகவும் சரியென நினைக்கத் தோன்றும். எடுத்துக்காட்டாக ஒரு கடதாசித் துண்டும், ஒரு கல்லும் விழும்போது கடதாசித் துண்டைவிடக் கல் வேகமாக விழுகிறது. அதே கல் தண்ணீருக்கு ஊடாக விழும்போது அதன் வேகம்  தண்ணீரின் திண்மை காரணமாகத் தடைப்படுகிறது. அரிஸ்தோட்டலின் விதியின்படி சூனியத்தின் ஊடாக விழும் பொருள் வாயுவேகம் மனோவேகத்தில் விழவேண்டும்.  

துரதிட்டவசமாக அரிஸ்தோட்டல் தனது விதிகளை பெருமளவில் பரிசோதனை செய்து பார்க்கவில்லை. எடுத்துக்காட்டாக அரைச் செங்கட்டி ஒன்று முழுச் செங்கட்டியின் அரைவாசி வேகத்தோடு கீழே விழும் என்ற அவரது விதியை அவர் பரிசோதனை செய்து பார்த்திருக்கலாம். ஆனால், பார்க்கவில்லை.  

அரிஸ்தோட்டல் நெருப்பு மேலே ஏன் போகிறது? கல்லை எறிந்தால் அது ஏன் கீழே வந்து விழுகிறது என்பதை விளக்க எண்ணினார். எல்லாப் பொருள்களுக்கும் தங்கும் இடம் உண்டு. நெருப்பின் தங்குமிடம்  தேவலோகம், எனவே நெருப்பு மேல் நோக்கிச் செல்கிறது. கல்லின் தங்குமிடம் புவி, எனவே கல்லை எறி;ந்தால் அது புவியை நோக்கி விழுகிறது. ஒரு பொருள் கீழே விழுவதை அதன் பருமன் நிருணயிக்கிறது, அந்தப் பொருள் பெரிதென்றால் அது சின்னப் பொருளைவிட வேகமாக தங்குமிடத்தை அடைகிறது.  

இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்து கலிலியோ அரிஸ்தோட்டலின் விதி சரியா என்பதை பரிசோதித்துப் பார்க்க விரும்பினார். அதற்காகச் சாய்ந்த பைசா கோபுரத்தில் ஏறி இரண்டு சின்னதும் பெரியதுமான கற்களைக் கீழே போட்டார்.  அவை இரண்டும் ஒரே சீரான வேகத்தில் சென்று ஒரே நேரத்தில் நிலத்தில் விழுந்ததை அவதானித்தார். அதை வைத்து அரிஸ்தோட்டலின் விதி தவறு என்பதை நிரூபித்துக் காட்டினார்.
      ——————————————————————————————————


கியூபா பயணக் கட்டுரை (52)
ஒரு பருந்தின் நிழலில்
ஆதிமனிதனை அச்சத்தில் ஆழ்த்திய சூரிய-சந்திர கிரகணங்கள்!


அரிஸ்தோட்டல் இயற்கையை முறைப்படி பகுத்தாராய்ந்து அதன் செயல்பாடுகளுக்கு உரிய முடிவான காரண காரியங்களைக் கண்டறிவதில் முனைப்பாக செயல்பட்டார். அளவை முறையான அவரது வாதங்கள் அறிவை ஒருங்கிணைத்து அதிலிருந்து முடிவுகளைப் பெற வழிசமைத்தது.  

அறிவியலாளர்கள்  உண்மைகளைக் கண்டறிய  இரண்டு வழிகளைக் கையாள் கிறார்கள். ஒன்று உலக அனுபவத்தில் இருந்து சில இயற்காட்சிகளை விளக்குதல். மற்றது உற்று நோக்கிப் பெறப்படும் தரவுகளில் இருந்தும், கணிப்பில்  இருந்தும், விளக்கத்தில் இருந்தும் பொதுமுறைகளை வகைப்படுத்தி நிலைநிறுத்தலும் முன் கூறுதலுமாகும்.

முதலாவது செயலறிவு சார்ந்த தரவுகளை (data) அடிப்படையாகக் கொண்டு தொகுத்து ரைப்பது. உரிய மெய்மைகளைச் சேகரித்த பிறகு அறிவியலாளர் அவற்றைப் பகுத்தாராய்ந்து மெய்மைகளின் அடிப்படையில் தற்காலிக முடிவுக்கு (hypothesis) வருகிறார்கள். அந்த முடிவு தொடக்கத்தில் கொண்ட தற்காலிக முடிவுக்கு (எடுகோள்) ஏற்றதாகவும் இருக்கலாம், வேறுபட்டதாகவும் இருக்கலாம். அதன் பின்பு, புதிய சோதனையின் மூலம்  அது ஏற்கத்தக்கதுதானா? என்று சோதி;த்து அறிதல் வேண்டும். அதன் பின்பே எடுகோளில் இருந்து கண்டுபிடிப்பு முடிவுக்கு வருகிறார்கள். இதற்கு இரண்டு வழிகள் உண்டு.  

ஒன்று செயலறிவு சார்ந்த தரவு அடிப்படையிலான முடிவு. இரண்டு அளவை (தருக்க) முடிவு. செயலறிவு சார்ந்த தரவு அடிப்படையிலான முடிவில் இருந்து ஒரு பருந்தின் நிழலில் ஏரண (logical)  முறைக்கு உட்பட்ட கொள்கையை வகுக்கலாம். ஒரு முழுமையான கொள்கை என்பது பருப்பொருளுக்கு (matter)  சரி நேர் பகுதியாக வைத்திருக்க வேண்டும். அதாவது, அதில் ஒன்று இதில் ஒன்று என அண்டத்துக்கும் (ருniஎநசளந) அதன் தத்துவத்திற்கும் இணைப்பு இருத்தல் வேண்டும்.  

திரட்டப்பட்ட மெய்மைகளில் இருந்து பொதுக் கொள்கையைக் கண்டறிவதே தொகுப்பாய்வு முறையாகும். பொதுக் கோட்பாடுகளை ஒரு குறிப்பிட்ட நிகழ்வின் மேல் பொருத்தி அதிலிருந்து முடிவுகளை வருவிப்பது விதிதரும் (deduction) முறையாகும். அதற்கு மாறாக குறிப்பிட்ட நிகழ்வுகளில் இருந்து பொதுக் கோட்பாடுகளை வருவித்து பொதுமை நிலை கண்டறிவது (deduction) ஆகும். எனவே அறிவியல் என்பது எடுகோள்  விதிமுறை கொண்ட ஒன்றாகும்.

அரிஸ்தோட்டல் இன்றைய ஒரு நவீன பல்கலைக் கழகத்தின் முழு அளவிலான அறிவியல் துறை எப்படி இயங்குகிறதோ அதற்கு ஈடான ஒரு தொழில்சார் (Professional)  அறிவியல் துறையை அவர் காலத்தில் நிறுவினார். அவரது சில ஆய்வுகள், குறிப்பாக இயற்பியல்பற்றிய ஆய்வுகள், துரதிட்ட வசமாக அவரது ஏனைய ஆய்வுகளின் தரம்போல் அமையவில்லை என்பது உண்மைதான். வீழுகிற கற்களைவிட வாழுகிற உயிரினங்கள் அவரது கவனத்தை மேலாக ஈர்த்தது. இருந்தும் அவரது புலைமையின் பரப்பும், ஆழமும், வீச்சும், அதிகாரமும் பல நாற்றாண்டுகளாக வேறு யாராலும் வெல்ல முடியாதவாறு இருந்தது.

 
அரிஸ்தோட்டலுக்கும் பிளாட்டோவிற்கும் இடையில் உள்ள வேற்றுமைபற்றி மீண்டும் குறிப்பிட வேண்டும். இருவருமே இந்த உலகம் ஒரு சீரான ஒழுங்கில் அமைக்கப்பட்டது, தத்துவவாதியின் பணி என்னவென்றால் அதன் உருவத்தையும் முழுமையையும் (Universal) கண்டறிவது ஆகும். உண்மை அறிவென்பது யாராலும் மறுக்க  முடியாத அறிவாகும். இருவருக்கும் இடையில் இருந்த வேற்றுமை என்னவென்றால் பிளாட்டோ கணக்கியல் அடிப்படையில் செய்யப்படும் ஆய்வின் மூலம் உண்மைகளை அறியலாhம் என்று வாதித்தார். மாறாக அரிஸ்தோட்டல் இயற்கைபற்றி ஆராய்ந்து அந்த அனுபவத்தின் அடிப்படையில்  இயற்கையின் உண்மைகளை அறியலாம் என வாதித்தார். 

உயிரற்ற சடப்பொருள்கள்  அசைவின் மூலம் தங்களது இயற்கை இடத்தைப் பிடித்துக் கொள்கின்றன (மேலே எறியும் கல் தனது இயற்கை இடமான புவியில் திரும்பி வந்து விழுகிறது) என்ற கோட்பாடு அண்ட வெளியில் வட்டமாகச் சுற்றிவரும் கோள்களுக்குப் பொருந்தாது. எனவே அரிஸ்தோட்டல் இந்தக் கோள்கள் மண், நீர், காற்று, தீ என்ற மூலப் பொருட்களுக்குப் பதில் அவை எதர் (ether) என்ற மூலப் பொருளால் ஆனது என நம்பினார். காரணம் அதன் இயற்கை அசைவு சுற்றி வருவதாகும். ஆனால், இந்த விளக்கம் பல காரணங்களுக்காக ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. ஞாயிறு சூடாக இல்லாவிட்டால் ஞாயிற்றின் கதிரில் வெப்பம் எப்படி உருவாகிறது? அரிஸ்தோட்டல் ஞாயிற்றின் அசைவில் இருந்து வெப்பம் பிறப்பதாக நினைத்தார். ஆனால், அது சரியான விளக்கமாக இருக்கவில்லை.  

வானியல் தொடர்பாக கிரேக்க தத்துவவாதிகள் ஆதி தொட்டே ஆராய்ந்து வந்திருக்கிறார்கள். ஏனைய துறைகளைப் போல் இதிலும் அவர்களே உலகத்தின் முன்னோடிகள் ஆவர்.  அண்ட வெளியும், அங்கு காட்சி தரும் ஞாயிறு உட்பட் விண்மீன்களும், கோள்களும், அவ்வப்போது இடம்பெறும் சூரிய-சந்திர கிரகணங்களும் ஆதி மனிதனுக்குப் புரியாத புதிராக இருந்தது. சூரிய-சந்திர கிரகணங்கள் பெரிய அச்சத்தையும் விளைவித்தன. இவற்றின் புதிரை அவிழ்க்கும் முயற்சி கிரேக்க வானியலாளர்களால் கிமு 600 ஆம் ஆண்டளவில் தொடங்கியது. இவர்கள் வானியல் தொடர்பான பல கருத்துக்களை உருவாக்கினார்கள். அண்டவெளியில் வலம் வரும் எண்ணிறந்த விண்மீன்கள் மற்றும் கோள்களுக்கு இடையே கணக்கியல் அடிப்படையில் தொடர்பு இருப்பதைக் கண்டார்கள். 

கி.மு .500 ஆம் ஆண்டளவில் வாழ்ந்த பைத்தாக்கிறஸ் உலகம் உருண்டை என வாதிட்டார். இயலுலகின்  (ருniஎநசளந)   கட்டுமானம், தன்மை பற்றி அவர் விளக்கம் அளித்தார். கிமு.370 இல் எக்ஸ்டோடஸ் (Euxodus)  என்பவர் கோள்களின் அசைவை விளக்குவதற்கு ஒரு பொறியைக் கண்டு பிடித்தார். இவர் உலகத்தைச் சுற்றியே ஞாயிறு, திங்கள், கோள்கள், விண்மீன்கள் சுற்றி வருகின்றன எனக் கற்பித்தார். இவரிடம் இருந்தே அரிஸ்தோட்டல் புவிதான் இயலுலகின் மையம் என்ற கோட்பாட்டை உள்வாங்கி தனது தத்துவத்துடன் சேர்த்துக் கொண்டார்.

கெறகிலைட்ஸ் (Heraclides) என்பவர் வானொளிக் கோளங்கள் (Heavenly bodies) மேற்குப் பக்கமாக நகருவது போன்று தோன்றுவதற்கு புவி தனது அச்சில் கிழக்குப் பக்கமாகச் சுழல்வதுதான் காரணம் என்ற தீர்மானத்தை முன்வைத்தார். அதுமட்டும் அல்லாது வெள்ளி (Venus மற்றும் புதன் (Mercury) கோள்கள் புவியை அல்ல ஞாயிறைச் சுற்றி வருகிறது எனப் படிப்பித்தார். கிமு 200 ஆம் ஆண்டளவில் அறிஸ்தாசுஸ் (Aristarchus) என்பவர் புவி உட்பட எல்லாக் கோள்களும் ஞாயிறைச் சுற்றி வருகிறதெனச் சொன்னார்.  

எனவே கெறகிலைட்சும் அறிஸ்தாசும் அவர்கள் காலத்தைவிட பல காலம் முன்னுக்கு இருந்தார்கள். ஆனால், அவர்களது கோட்பாடுகளை யாரும் ஒப்புக்கொள்ளவில்லை.கிமு 276 ஆம் ஆண்டு பிறந்த இறாதொஸ்தெனஸ் (நுசயவழளவாநநௌ)  புவியின் சுற்றளவை கணக்கிட்டுச் சொன்னார். கிமு 140 ஆண்டளவில் வாழ்ந்த கிப்பார்சுஸ் (ர்ippயசஉhரள) என்பவர் சிறந்த வானியலாளராக விளங்கினார். அவர் தான் வான்மண்டலத்தில் கண்ட விண்மீன்களை அதன் ஒளிவீச்சை (டீசiபாவநௌள)  வைத்து வகைப்படுத்தினார். அத்தோடு சந்திரனின் தூரம் அதன் அளவை அனுமானித்தார். சந்திர-சூரிய கிரகணங்கணங்கள் ஏற்படும் காலத்தை முன்கூட்டியே கணித்துச் சொன்னார். ஒரு ஆண்டின் நீளத்தை ஆறரை வினாடி வித்தியாசத்தில் கணக்கிட்டுச் சொன்னார்!  

கிபி 100 ஆம் ஆண்டளவில் அரிஸ்தோட்டல் மற்றும் முதலாம் கிப்பார்சுஸ் இருவரது கோட்பாடுகளையும் தொலமி (Pவழடநஅல) என்பவர் விரிவாக்கினார். இவர் எகிப்தில் வாழ்ந்த கிரேக்க வானியலாளர். இவர் அல்மாஜெஸ்ட் (யுடஅயபநளவ)  என்ற நூலை எழுதி வெளியிட்டார். இதில் தனது கருத்துக்களையும் தனக்கு முன்னிருந்த கிரேக்க தத்துவாதிகளது கருத்துக்களின் சுருக்கத்தையும் வெளியிட்டார். கிரேக்க வானியல்பற்றி நாம் அறிந்து கொள்ள இந்த நூலே பயன்படுகிறது.  

கிரேக்க வானியலாளர்களே இன்றைய வானியலுக்கு அத்திவாரம் இட்டார்கள். கிப்பார்சுஸ் விண்மீன்களின் ஒளிவீச்சை  வைத்து வகைப்படுத்திய முறையே இன்றும், சிறு மாற்றத்துடன், பின்பற்றப்பட்டு வருகிறது. இவரது வானியல்பற்றிய கருத்துக்கள், கோள்களின் அசைவுகள் 1,500 ஆண்டுகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. கிரேக்க வானியலாளர்கள் சிலரின் கோட்பாடு (theory)  செல்வாக்கோடு இருந்து வந்திருப்பது மட்டுமல்ல இன்றும் அவை சரியென்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக சூரிய-சந்திர கிரகணங்கள் கெட்ட சகுனங்களாகக் கருதப்பட்டன. அதேபோல் வால்வெள்ளிகள் அரசர்களுக்குச் சாவையும் நாடுகளுக்கு  அழிவையும் ஏற்படுத்தும் என முன்னைய காலத்து மக்கள் நம்பினார்கள்.  

கிரேக்க வரலாற்றாசிரியர் கெறதோட்டசின் கூற்றுப்படி அன்றைய சின்ன ஆசியாவின் (ஆiழெச யுளயை) குட்டி வல்லரசுகளான மீடிஸ் (Medes) மற்றும் லிடியன்ஸ் (டுலனயைளெ) இரண்டுக்கும் இடையில் நடந்த அய்ந்தாண்டுகாலப் போர் சந்திரன் சூரியனை மறைத்து கிரகணம் ஏற்பட்டபோது இருதரப்பு போர்வீரர்களும் சண்டையை நிறுத்திக் கொண்டார்கள். இராணுவ தளபதிகள் சூரிய கிரகணத்தை தெய்வ எச்சரிக்கையாகக் கருதி தங்களுக்குள் சமாதானம் செய்து கொண்டார்கள். இது நடந்த காலம் கிமு 585 ஆம் ஆண்டு மே மாதம் 28; நாளாகும்.  

அமெரிக்க மாயன் (ஆயலயn) வானியலாளர்கள் கி.பி. 1100 ஆம் ஆண்டளவில்  வான மண்டலத்தை ஆராய்ந்து சூரிய-சந்திர கிரகணங்கள் ஏற்படும் நாள்களைக் கணிக்கத் தெரிந்து கொண்டார்கள். ஆனால், இன்னொரு இனத்தவரான அஸ்டெக்ஸ் (யுணவநஉள) மக்களோடு தாங்கள் அறிந்து வைத்திருந்த தரவுகளை பகிர்ந்து கொள்ள மறுத்து விட்டார்கள். இதனால் கிரகணங்கள் ஏற்படும்போது சூரியனுக்கு உதவி தேவைப் படுவதாக நினைத்து ஒரு கூனனை அல்லது குள்ளனை வெட்டிப் பலியிட்டார்கள்.  

சீன புராண மரபுப்படி, சக்கரவர்த்தி ஒருவர் கிரகணங்களைக் கணக்கிட்டுச் சொல்வதற்கு இரண்டு உடன்பிறப்புக்களைத் தனது அரண்மனையில் வேலைக்கு அமர்த்தியிருந்தார். ஒரு முறை அவர்கள் குடியும் குடித்தனமுமாக இருந்து விட்டதால் சூரிய கிரகணம் ஏற்படுவதை முன்கூட்டியே சொல்லத் தவறிவிட்டார்கள். கோபம்கொண்ட சக்கரவர்த்தி அவர்களைச் சிறையில் அடைத்தார்.  

கிரகணங்களை கொஞ்சம் காதல் கண்ணோடு பார்த்தவர்களும் இருந்திருக்கிறார்கள். சந்திரனும் சூரியனும் காதலர்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் அணைத்துத் தழுவும் போது கிரகணம் ஏற்படுவதாக தாகிசியன்ஸ் (வுயாவையைளெ)   என்ற இனத்தவர் நம்பினார்கள்.  

—————————————————————————————————————

கியூபா பயணக் கட்டுரை (53)
ஒரு பருந்தின் நிழலில்
சூரிய கிரகணம் முழுநிலாவன்று ஏற்படுமா?

ஆயிரத்து எண்ணூற்று அய்ம்பத்தொராம் ஆண்டு (1851) மஞ்சு பேரரசரின் ஆட்சி தீவிரவாதிகளது தாக்குதலுக்கு உள்ளாகி வீழும் தறுவாயில் இருந்தது. பேரரசருக்கு ஆதரவாகச் செயல்பட்ட  பிரித்தானியா அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் அவருக்கு நவீன ஆயுதங்களைக் கொடுத்து உதவின. அவரது இராணுவ தளபதியின் பெயர் சார்ல்ஸ் கோர்டன் (ஊhயசடநள புழசனழn) என்பதாகும். இவர் சிறந்த போர்த் தந்திரியாவார். இருந்தும் அவர் முதன் முறையாக 1851 இல் நடந்த போரில் தோல்வியைச் சந்தித்தார். ஒரு முழுநிலாவன்று (ஒளி பொருந்திய முழுப் பக்கமும் தெரியும் மதியை உவவுமதி எனப் புறநானூற்றுப் பாடல் (3) இயற்றிய இரும்பிடத்தலையார் குறிப்பிடுகிறார். பாண்டியன் கருங்கையொள்வாட் பெரும்பெயர் வழுதியின் உயர்ந்த வெண்கொற்றக் குடை உவாநாளில்  மதியினது வடிவு போலும் வடிவினை உடையது என்கிறார். “உவவுமதி யுருவின் ஒங்கல் வெண்குடை” என்பது பாடல் வரி. விரிவைப் புறநானூற்றுப் பாடலைப் படித்து அறிந்து கொள்க) நிலாவை எதிரிகளின் பிரதான முகாமைத் தாக்கத் திட்டமிடப்பட்டது.  

ஆனால், எதிர்பாராத விதத்தில் தாக்குதல் ஆரம்பிப்பதற்குச் சற்று முன்னர் சந்திர கிரகணம் ஏற்பட்டது. இதனைக் கண்ணுற்ற சீனப் படைவீரர்கள் இது பெரிய அபசகுனம் என்று நினைத்தார்கள். அந்த மூடநம்பிக்கை அவர்களது போரிடும் தன்மையையும்; மன உறுதியையும் பாதித்தது. இதனால் தாக்குதல் தோல்வியில் முடிந்தது. ஏராளமான படையினர் போர்க்களத்தில் இறந்து பட்டார்கள்.   

பல ஆண்டுகள் கழித்து இதே இராணுவ தளபதி (சார்ல்ஸ் கோர்டன்) சூரிய கிரகணம் ஏற்பட்ட நாளன்று போர்க்களத்தில் விழுப்புண்பட்டு இறந்தார். அப்போது (1855 – 56) சுடான் நாட்டின் தலைநகரான காட்தோம்மை (முhயசவழரஅ) எதிரிபடை தாக்கியது. அப்போது சூரிய கிரகணம் ஏற்பட்டது. அதனைப் பார்த்த சுடானிய போர்வீரர்கள் அலமலந்து போனார்கள். உதவிக்காக மேலதிக பிரிட்டிஷ் படை வந்து சேருமுன் எதிரிபடை அவர்களைத் தோற்கடித்தது.  

இதுபோன்ற இன்னொரு வரலாற்றுச் சம்பவம் 1504 ஆம் ஆண்டு கிறிஸ்தோபர் கொலம்பசின் மேற்கொண்ட நான்காவது அமெரிக்கக் கடல் பயணத்தின் போது இடம் பெற்றது. அவரது கப்பல்கள் கடற்புழுக்களால் அரிக்கப்பட்டுப் பயணம் செல்லமுடியாத நிலையில் இருந்தன. திருத்த வேலைக்காக ஜமேய்க்கா கடற்கரையை அடைந்தன. போதாதற்குக் கப்பலில் இருந்த உணவுப் பொருள்கள் களவு போய்விட்டது. மாலுமிகளில் சரி பாதிப்பேர் கொலம்பசுக்கு எதிராகக் கலகம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். கடற்கரையில் கிடந்த கப்பல்கள் பூர்வீக குடிகளது தாக்குதலுக்கு இலக்காகும் அபாயமும் இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக அந்த மக்கள் கொலம்பசுக்கும் ஏனைய மாலுமிகளுக்கும் உணவு கொடுக்க மறுத்துவிட்டார்கள். இந்த இக்கட்டான சூழ்நிலையில் கொலம்பசுக்கு ஒரு நல்ல யோசனை தோன்றியது.  

மேற்குலக அய்ரோப்பிய வானியலாளர்கள் 1504 ஆம் ஆண்டு செப்தெம்பர் மாதம் 14-15 ஆம் நாள் நள்ளிரவில் சந்திர கிரகணம் இடம்பெறும் என்று கணித்துச் சொல்லியிருந்தார்கள். இதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த நினைத்த கொலம்பஸ் அந்தப் பூர்வீக மக்களுக்கு ஒரு அறிவித்தலை விடுத்தார். தனக்கும் தனது சகாக்களுக்கும்  உணவுதர மறுத்ததால் அவர்கள் மீது கடவுள் மிகுந்த கோபத்தோடு இருப்பதாகவும் அதனால் அன்றிரவு சந்திரனை மறையச் செய்ய உள்ளளார் என்றும் கொலம்பஸ் தெரிவித்தார். சொல்லிவைத்தது போல சந்திர கிரகணம் நள்ளிரவு ஏற்பட்டது. பயந்துபோன பூர்வீக குடிமக்கள் கொலம்பசுக்கு உணவு கொடுக்கச் சம்மதித்தார்கள்!  

விவிலிய வேதத்தில் மத்தியூவும் (வி.வே. 27,45) மற்றும் லூக்காஸ் (23,44) யேசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட போது வானம் இருண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். ஆய்வாளர்கள் அது சூரிய கிரகணம் அல்லது மண்மாரி அல்லது தெய்வீக நிகழ்சி காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என விளக்கம் கொடுத்துள்ளார்கள். ஆனால், உண்மையில் வானம் இருண்டதற்கு சூரிய கிரகணம் காரணமாக இருந்திருக்குமா?  
இந்தக் கேள்விக்கு அறிவியல் அடிப்படையிலான விடை “இல்லை”  என்பதாகும். விவிலிய வேதத்தின்படி யேசுநாதர் சிலுவையில் அறைபட்டது பெரியவெள்ளி அன்று ஆகும்.

தற்கால ஆய்வின்படி எகிப்தியரிடம் இருந்து யூதர்கள்  தப்பிச்சென்றதை கொண்டாடும் நினைவுநாள் திருவிழா (Pயளளழஎநசஃநுயளவநச) வசந்தகாலத்தில் சூரியன் நிலநடுக் கோட்டைக் (நுஙரயவழச)  கடந்து செல்லும் நாளை (March 21) அடுத்து வரும் முழு நிலாவின் (பவுர்ணமி)  போது வருகிறது. மார்ச்சி 21 ஆம் நாளன்று இரவும் பகலும் ஒரே அளவில் (12 மணித்தியாலம் ) இருக்கும். இதனை ஆங்கிலத்தில் Equinox என வானியலாளர்கள் அழைப்பார்கள். ஆனால், சூரிய கிரகணம் ஒருபோதும் முழுநிலா அன்று ஏற்படுவதில்லை. அதற்கான சாத்தியம் இல்லை.   

சந்திர கிரகணம் என்றால் என்ன? சந்திர கிரகணம்  எதனால் ஏற்படுகிறது? சந்திர கிரகணம் எவ்வெப்போது இடம் பெறுகிறது?   

சந்திரனின் மேற்பரப்பு கற்பாறைகளினால் ஆனது. அதன்  விட்டம் 2,160 மைல்கள் (3,476 கிமீ) ஆகும்.  அதற்குச் சுயவொளி கிடையாது. ஞாயிறின் ஒளிக்கதிர்கள் அதன் மேல்பரப்பில் பட்டுத் தெறிப்பதாலேயே ஒளி உண்டாகிறது. சந்திரன் புவியை 27.5 நாள்களுக்கு ஒருமுறை சுற்றி வருகிறது. அப்படிச் சுற்றி வரும்போது சந்திரனுக்கும் ஞாயிறுக்கும்; இடையிலான இருப்பின்; நிலை மாறுதல் அடைகிறது. இதன் காரணமாகவே சந்திரன் வளர்வது போலவும் தேய்வது போலவும் தோற்றம் அளிக்கிறது. மேலும் சந்திரன் தனது அச்சில் புவி தன்னைத்தானே சுற்றும் வேகத்தில் சுற்றுவதால் நாங்கள் எப்போதும் சந்திரனின் ஒரு பக்கத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.  
புவியில் இருந்து பார்க்கும் நிலாவின் தோற்றம் உண்மையில் அமாவாசையின் போது  சந்திரனைப் பார்க்க முடியாது. காரணம் அப்போது ஞாயிற்றின் ஒளி சந்திரனின் மறுபக்கத்தில் படுகிறது. மூன்றாம் நாள்தான் பிறை வடிவில் சந்திரன் வானத்தில் தெரிவதைப் பார்க்கலாம்.   

பவுர்ணமி இரவைக் காதலோடு தொடர்பு படுத்திப் பேசுவது எல்லா நாகரிகங்களுக்கும் பொதுவான ஒரு அம்சம். பவுர்ணமி இரவன்று ஞாயிறு மேற்குத் திசையில் மறைந்தவுடன் சந்திரன் உதயமாகிறது. இரவு முழுதும் முழு நிலாவைப் பார்க்கலாம். காலையில் ஞாயிறு உதயமாகும் போது சந்திரன் மறைந்துவிடுகிறது. இது முழு நிலாவுக்கு மட்டும் உள்ள சிறப்பு. நிலாவின்  ஏனைய கலைகளின் போது (phயளநள) இதனைப் பார்க்க முடியாது. காரணம் ஆகாயத்தில் முழுநிலா அன்றுதான் சந்திரன் ஞாயிற்றுக்கு நேர் எதிரே நிற்கிறது.  

சந்திர கிரகணம் ஒரு நேர்க்கோட்டில் புவி சந்திரனுக்கும் ஞாயிற்றுக்கும் இடையில் வரும்போது ஏற்படுகிறது. அது முழுநிலா அன்றுதான் இடம்பெற முடியும். அதுவும் புவியின் நிழலை அல்லது அதன் பகுதியைக் கடந்து போகும் போதுதான் சந்திர கிரகணம் ஏற்பட முடியும். புவியின் நிழல் முற்றாகச் சந்திரனை மறைக்கும் பொழுது முழுக் கிரகணமும், அப்படியில்லாதபோது குறைக் கிரகணமும் ஏற்படுகிறது. 
சந்திரன் புவியைச் சுற்றி 29.5 நாள்களுக்கு ஒருமுறை வலம் வருகிறது என்றால் ஒவ்வொரு மாதமும் சந்திர கிரகணம் ஏற்பட வேண்டும் அல்லவா? அப்படி ஏற்படுவதில்லை. காரணம் புவி ஞாயிற்றைச் சுற்றிவரும் பாதைக்கு 5 பாகை மேல் அல்லது கீழாகச் சந்திரனின் சுற்றுப் பாதை இருக்கிறது. இதனால் சந்திரன் புவியின் நிழலுக்கு மேல் அல்லது கீழாகச் சென்று விடுவதால் சந்திர கிரகணம் ஏற்படுவதில்லை. ஆனால், ஆண்டில் இரண்டு தொடக்கம் நான்குமுறை சந்திரன் புவியின் நிழலைக் கடந்து போகிறது. அப்போது முழு அல்லது குறைக் கிரகணம் ஏற்படுகிறது. முழுக் கிரகணம் 35 விழுக்காடு இடம்பெறுகிறது. பாதிக் கிரகணம் 30 விழுக்காடு இடம்பெறுகிறது. மிகுதி 35 விழுக்காடுக் கிரகணம் கண்ணுக்குப் புலப்படுவதில்லை. சந்திர கிரகணம் ஏற்படும்போது புவியின் இரவுப் பகுதியில் இருப்பவர்கள் அதனைப் பார்க்க முடியும்.  

முழுக் கிரகணத்தின்போது ஞாயிறின் ஒளியைப் புவி தடுக்கிறது. அப்போது விண்வெளி வீரர் ஒருவர் சந்திரனில் இருந்தால் அவர் புவி சூரியனை மறைப்பதால் சூரிய கிரகணம் இடம்பெறுவதைப் பார்க்கலாம்! அதாவது புவியில் இருப்பவர்களுக்கு சந்திர கிரகணமும், சந்திரனில் இருப்பவர்களுக்கு சூரிய கிரகணமும் இடம்பெறும்.

சூரிய கிரகணம் புதுநிலாவின் போது சந்திரன் புவிக்கும் சூரியனுக்கும் இடையில் ஒரு நேர்க்கோட்டில் வரும்போது ஏற்படுகிறது. ஆண்டில் குறைந்தது இருமுறை சூரிய கிரகணம் ஏற்படுகிறது.  சராசரி 18 மாதங்களுக்கு ஒருமுறை புவியின் ஏதாவது ஒரு பகுதியில் இருந்து  முழுச் சூரிய கிரகணத்தைப் பார்க்கலாம். ஆனால், புவியின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து முழுச் சூரிய கிரகணத்தைப் பல நூற்றாண்டுகளுக்கு ஒருமுறைதான் பார்க்க முடியும்.  

கிரேக்க வானியலாளர் தொலமிக்கு புவி உருண்டை வடிவமானது என்பது தெரிந்திருந்தது. ஆனால், சூரியன் தன்னைத்தானே சுற்றுகிறது என்பது தெரிந்திருக்கவில்லை. சூரியன் உதிப்பதை கிழக்குப் பக்கம் இருப்பவர்கள் மேற்கில் இருப்பவர்களுக்கு முன்னதாகக் காண்கிறார்கள் என்பதும் அது எவ்வளவு முன்னர் என்பது கிழக்குக்கும் மேற்குக்கும் இடையில் உள்ள தூரத்தைப் பொறுத்திருக்கிறது என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது.
எல்லோரும் சந்திர கிரகணத்தை ஒரே நேரத்தில் காணலாம் என்றாலும் கிழக்கில் இருப்பவர்கள் மேற்கில் இருப்பவர்களைவிடப் பிந்தியே காண்பார்கள். எடுத்துக் காட்டாக உள்ளுர் நேரம் நள்ளிரவு பன்னிரண்டு மணி என்றால் கிழக்கில் இருப்பவர்கள் காலை 1 மணிக்குத்தான் சந்திர கிரகணத்தைப் பார்ப்பார்கள். மேலும் வடக்கு நோக்கிச் சென்றால் துருவ நட்சத்திரம் வானத்தில் உதிப்பதைப் பார்க்கலாம். இது புவி வடக்குப் பக்கமும் வளைந்து காணப்படுகிறது என்பதற்குச் சான்று என்பதைத் தொலமி கண்டு பிடித்தார். இறுதியாக அமைதியான கடலில் ஒரு மலைத் தீவை நோக்கிப் பயணம் செய்தால், அந்தத் தீவு கடலில் இருந்து கிளம்புவது போலக் கண்ணுக்குத் தெரியும் என்பதை அவர் கவனித்தார்.  புவி வட்டமாக இருப்பதாலேயே தீவு கடலில் இருந்து கிளம்புவது போன்ற தோற்றத்தைத் தருகிறது எனச் சொன்னார்.  

கடலில் தோணிகள் கரையை நோக்கி வரும்போது முதலில் அதனது பாய்தான் (மரம்) தெரியும். மிக அண்மையில் தோணி வரும்போதுதான் தோணியின் அணியமும் மற்றப் பாகங்களும் தெரியும். இதே போல் கடலில் தோணி கரையை விட்டுப் பயணம் செய்யும்போது முதலில் தோணியின் அடிப்பாகம் மறையும். அப்புறம் பாய் கொஞ்சம் கொஞ்சமாக அடிவானத்தில் மறையும். இதுவும் புவி உருண்டை வடிவானது என்பதற்குரிய சான்றாகும். ஆனால், மனிதனுக்கு இந்த அடிப்படை உண்மையைக் கண்டறிய ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பிடித்தன. 

மெத்தச் சரி. பண்டைய தமிழர்களது வானியல் அறிவு எவ்வாறு இருந்தது? எத்தன்மையது? கிரேக்க வானியலாளர்கள் போல் அவர்களும் வானியல் ஆராய்ச்சியில் நெடுங்காலம் ஈடுபட்டிருந்தார்களா? அதற்கான அகச்சான்று புறச்சான்று ஏதாவது உண்டா?

இந்தக் கேள்விகளுக்கு விடை சொல்வது கொஞ்சம் கடினம். எமது மூதாதையரது பண்பாடு, நாகரிகம், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், விழுமியங்கள், அறிவியல் போன்றவற்றைப் பற்றி நாம் இன்று தெரிந்து கொள்வதெல்லாம் இலக்கண நூலான தொல்காப்பியம், சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப் பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் சங்கம் மருவிய நூல்களான அய்ம்பெருங் காப்பி யங்களும், ஐஞ்சிறு காப்பியங்களுமேயாம்.  வானியல் பற்றித் தனி நூல் அல்லது நூல்களை யாரும் இயற்றியதாகத் தெரியவில்லை. ஒருவேளை இயற்றியிருந்தால் அது பிற்காலத்தில் ஏனைய பல நூல்கள் காலவெள்ளத்தில் சிக்குண்டு அழிந்ததுபோல அதுவும் அழிந்திருக்க வேண்டும்.

கிடைக்கும் அகச் சான்றுகளை வைத்துப் பார்க்கும்போது வானியல் அறிவியலாளர்கள் சங்க காலத்தில் இருந்திருக்கிறார்கள். புறநானூற்றுப் பாடலொன்று (30) அந்தச் செய்தியைத் தெரிவிக்கிறது. 

“செஞ்ஞாயிற்றின் வீதியும் அஞ்ஞாயிற்றின் இயக்கமும், அவ்வியகத்தாற் சூழப்பட்ட பார் வட்டமும், காற்றியங்கும் திக்கும், எந்த ஆதாரமும் இன்றித் தானே நிற்கின்ற ஆகாயமும் என்று சொல்லப்படுகிற இவற்றை நேரில் சென்று அளந்தறிந்தவர்கள் போல் நாளும் இத்துணையளவை உடையதென்று சொல்லும் கல்வியையுடையோருமுளர்” என உறையூர் முதுகண்ணன் சாத்தனார் இப்பாடலில் தெரிவிக்கிறார்.   


கியூபா பயணக் கட்டுரை (54)
ஒரு பருந்தின் நிழலில்
பண்டைய தமிழரின் வானியல் அறிவு

நான் முன்னர் குறிப்பிட்ட புறநானூற்றுப் பாடல் பின் வருமாறு. 
செஞ்ஞா யிற்றுச் செலவுமஞ் ஞாயிற்றுப்
பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண் டிலமும்
வளிதிரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும் என்றிவை
சென்றளநது அறிந்தோர் போல் என்றும்
இனைத்து என் போரும் உளரே! அனைத்தும்
அறிவுஅறி வாகாச் செறிவினை யாகிக்
களிறுகவுள் அடுத்த எறிகல் போல
ஒளித்த துப்பினை ஆதலின் வெளிப்பட
யாங்கனம் பாடுவர் புலவர் கூம்பொடு
மீப்பாய் களையாது …………….  (புறநானூறு 30)

சோழன் நலங்கிள்ளி என்ற மன்னன்பாற் காணப்படும்  அடக்கமாகிய பண்பு கண்டு வியந்த முதுகண்ணன் சாத்தனார் “வேந்தே! செஞ்ஞாயிற்றின் செலவும், அதன் பரிப்பும். மண்டிலமும், திக்கும்,  ஆகாயமும் என இவற்றின் அளவை நேரிற் சென்று கண்டவரைப் போலத் தம் அறிவால் ஆராய்ந்து உரைப்போரும் உளர்! அவர்களாலும் ஆராய்ந்தறியக் கூடாத அத்துணை அடக்கமுடையவனாய்க் கல்லைக்கவுளில் அடக்கியுள்ள யானை போல வலி முழுதும் தோன்றாதவாறு அடக்கிக் கொண்டு விளங்குகிறாய். உனது வலிமையை யாங்கனம் பாடுவர் புலவர்”  என்று பாராட்டியதையே மேற்படி பாடல் தெரிவிக்கிறது. பண்டைய நாளில் வான்நூலோர் இருந்ததற்கு இந்தப் பாடல் சான்று பகருகின்றது.  

பண்டைய தமிழர்கள் 27 நாள் மீன்களையும் (நட்சத்திரங்கள்), ஒன்பது கோள் மீன்களையும் (கிரகங்கள்) குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்கள். வானத்தில் ஏற்படும் கோள் மாறுபாடுகளை அறிந்திருந்தனர். ஆனால், புவியும் ஒரு கோள் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. 

கார்த்திகை விழாக் கொண்டாடும் வழக்கம் இருந்திருக்கிறது. சந்திரனும் கார்த்திகை நட்சத்திரமும் நெருங்கி இருக்கும் நாளைக் கார்த்திகை நாள் என்று கொண்டாடினர்.

அம்ம வாழி தோழி ! கைம்மிகக்
 ……………………………………………………………
குறுமுயல் மறுநிறம் கிளர மதிநிறைந்து
அறுமீன் சேரும் அகல் இருள் நடுநாள்
மறுகு விளக்கு உறுத்து, மாலை தூக்கிப்
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவு ……………………………………………………….   (அகநானூறு 141)

“தோழி வாழ்வாயாக! நான் கூறவதைக் கேட்பாயாக! ஆகாயத்தின் கண்ணே சிறு முயலாகிய மறு மார்பிலே விளங்க, முழு மதியாகிய கார்த்திகை மீன் சந்திரனுடன் சேர்ந்திருக்கும் நாள் கார்த்திகை நாளாகும். இந்நாளின் நள்ளிரவில் வீதியிலே விளக்கேற்றி வைத்து, மனை வாயில் தோறும் மலர்மாலைகள் தொங்க விட்டு அலங்கரித்து மிகப் பழைமையாகிய முதிர்ந்த ஊரிலுள்ள பலரும் ஒருசேரக் கூடி விழாக் கொண்டாடுவர்கள்….” 

வெள்ளி என்னும் கோளைக் கொண்டு மழை பெய்யும், பெய்யாது என்ற நிலையைப் பண்டைத் தமிழர் அறிந்திருந்தனர். வெள்ளி வடக்குத் திசையில் நின்றால் மழை பெய்யும் என்றும், தெற்குத் திசை நோக்கிப் போகின் மழை பெய்யாது என்பதும் நல்ல கோள்களுடன் சேரும் போது மழை பெய்யும் என்பது  அவர்களது நம்பிக்கை.  
நெமுவயி னெளிறு மின் னுப்பரந் தாங்கப்
……………………………………………………………………
வறிது வடக்கு இறைஞ்சிய சீர்சால் வெள்ளி
பயம்கெழு பொழுதோடு ஆநியம் நிற்ப
கலிழுங் கருவியொடு கையுறை வணங்கி
 ………………………………………………………………  (பதிற்றுப்பத்து 24)
பதிற்றுப்பத்து 69 ஆம் பாடலும் இதே தரவு தரப்பட்டுள்ளது. 
நிலம்பயம் பொழியச் சுடர்சினந் தணியப்
பயங்கெழு வெள்ளி யாநிய நிற்ப
விசும்புமெய் யகலப் பெயல்புரவு எதிர
 ……………………………………………………………….    (பதிற்றுப்பத்து 69) 

நிலம் பயனைப் பொழிந்தாற்போல மிக விளைய, காலத்தே தவறாமல் மழை பெய்தலால் சூரியன் வெப்பந் தணிந்தாற்போன்று, உலகத்திற்குப் பயன்பொருந்திய வெள்ளி என்னும் கோள் மழைக்குக் காரணமாக மற்ற நாள் கோள்களுக்குச் செல்கின்ற நல்ல நாள்களில் நிற்க…….. 

புறநானூற்றுப் பாடல் 229 இல் மேலதிக வானியல் குறிப்புக்கள் காணப்படுகின்றன. இந்தப் பாடலைப் பாடியவன் யானைகட் சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை என்ற மன்னன் ஆவான்.   

ஆடும் இயல் அழல்குட்டத்து
ஆர் இருள் அரை இரவின்
முடப் பனையத்து வேர் முதலாக்
கடைக் குளத்துக் கயம்காயக்
பங்குனி உயர் அழுவத்துத்
தலை நாண் மீன் நிலைதிரிய
நிலை நாண்மீன் அதன் எதிர் ஏர்தரத்
தொல் நாண் மீன் துறை படியப்
பாசிச் செல்லாது ஊசித் துன்னாது
அளர்க்கத் திணை விளக்காகக்
கனைஎரி பரப்ப கால் எதிர்ப்பு பொங்கி
ஒரு மீன் விழுந்தன்றால் விசும்பினானே
அதுகண்டு யாமும் பிறரும்……………………………..    (புறநானூறு 229)  மிருகசீரிடம் உடுமண்டலம்
மேட இராசி பொருந்திய கார்த்திகை நாளில் முதற்காலின்கண்,
நிறைந்த இருளினையுடைய பாதியிரவின்கண்,
முடப்பனை போலும் வடிவையுடைய அனுட நாளில் அடியின் வெள்ளி முதலாக,
கயமாகிய குள வடிவு போலும் வடிவுடைய புனர்பூசத்துக் கடையில் வெள்ளி எல்லையாக விளங்க,
பங்குனி மாதத்தினது முதற்பதினைந்தின் கண்,
உச்சமாகிய உத்தரம் அவ்வுச்சியினின்றும் சாய,
அதற்கு எட்டாம் மீனாகிய மூலம் அதற்கு எதிரே எழாநிற்க,
அந்த உத்தரத்துக்கு முன் செல்லப்பட்ட எட்டாம் மீனாகிய மிருகசீரிடமாகிய
நாண் மீன் துறையிடத்தே தாழ,
கீழ்த்திசையில் செல்லாது வடதிசையிற் போகாது,
கடலாற் சூழப்பட்ட புவிக்கு விளக்காக,
களை எரிபரப்ப காற்றாற் பிதிர்ந்து கிளர்ந்து,
ஒரு நட்சத்திரம் விழுந்தது வானத்தில் இருந்து,
அதனைப் பார்த்து யாமும் பிறரும்…………………………. 

அழல் சேர் குட்டம் என்பது கார்த்திகை நாள். ஆட்டினை வடநூலோர் மேடராசி என்பர். ஆடு முதல் மீன் ஈறாகவுள்ள இராசி பன்னிரண்டிற்கும் அசுவினி முதல் இரேவதி ஈறாகவுள்ள மீன் இருபத்தேழினையும் வகுத்தளிக்கின், முதல் இரண்டேகால் நாள் ஆடாகிய மேடத்துக்குரியவாதலின், கார்த்திகையின் முதற்காலை “ஆடியல் அழற் குட்டம்” என்றார்.  

பரணி என்பது மூன்று நட்சத்திரங்களைக் கொண்டது. இம் மூன்றும் அடுப்புப் போன்றிருப்பதால் பரணி (அடுப்பு) எனப் பெயர் பெற்றது.  

அசுவினி என்பது குதிரையின் தலைபோல உள்ள ஆறு நட்சத்திரங்கள். அசுவம் – குதிரை.  

மகம் என்னும் உடுக்கள் கூட்டத்தின் வடிவமைப்பு குளத்தின் கரை போன்று இருந்ததெனப் பொருந்த உரைத்துள்ளனர். 

அனுடம் என்பது ஆறு மீன்களின் தொகுதி. அது வளைந்த பனைமரம்போல் அமைதலின் “முடப் பனையம்” எனப்பட்டது.  

வேர்முதலா – அடியின் வெள்ளி அஃதாவது முதல் நாண்மீன். உயரழுவம் – முதற் பதினைந்து நாள். தலை நாண்மீன் – உத்தரநாள். நிலை நாண்மீன் –  எட்டாம் மீன். 
“உச்சி மீனுக்கு முன் எட்டாவது மீன் அத்தமித்தலும் பின் எட்டாவது மீன் உதித்தலும் இயல்பு. “உச்சி மீனுக்கு எட்டாம் மீன் உதய மீன்” என்ப. தொன்னாண் மீன் – எட்டாம் மீனாகிய மிருகசீரிடம்.

பாசி – கிழக்குத் திசை. ஊசி – வடக்குத் திசை.

பங்குனித் திங்களில் நட்சத்திரம் வீழின் இராச பீடை என்பர்.

கயக்குளம் புனர்பூசம். இது குளம் போலும் வடிவுடையது. இதனால் புனர்பூசத்தை கயம், குளம், ஏரி எனவும்  பெயரிட்டு அழைக்கப்பட்டது.  

நல்லநாள் கெட்டநாள் பார்க்கும் வழக்கம் பண்டைத் தமிழர்களிடம் இருந்தது. வானத்து நட்சத்திரங்களையும், கோள்களையும் கொண்டே நல்ல நாள் கெட்ட நாள்களைக் கண்டறிந்தனர். நல்ல நாளில் திருமணம் செய்யும் வழக்கமும் இருந்தது.    


கியூபா பயணக் கட்டுரை (55)
ஒரு பருந்தின் நிழலில்
பருவங்கள் எதனால் ஏற்படுகின்றது?

மைப்புறப் புழுக்கி னெய்க்கனி வெண்சோறு
வரையா வண்மையொடு புரையோர்ப் பேணிப்
புள்ளுப் புணர்ந் தினிய வாகத் தௌளொளி
அங்கண் இருவிசும்பு விளங்கத் திங்கள்
சகடம் மண்டிய துகடீர் கூட்டத்துக்;
கடிநகர் புனைந்து கடவுள் பேணிப்
படுமண முழவொடு பரூஉப்பணை யிமிழ
வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்றுப்
…………………………………………………………….    (அகநானூறு 86)
“செம்மறியாட்டின் பின் சந்தினை ஆக்கிய கறியொடு நெய்யாளாய வெளிய சோற்றினை இவ்வளவினதென்று கூறப்படாத வண்மையுடனே ஆன்றோரை விரும்பியளித்து வண்டுகள் வந்து கூடி இனிய இசையெழுப்ப அழகிய இடமகன்ற ஆகாயம் விளக்கமடையத் திங்கள் உரோகிணியிற் சேர்தலால் தெளிந்த ஒளியுடைய குற்றந்தீருங் கூடுதலுடைய நாளிலே காவலையுடைய மாளிகையை அலங்கரித்து வழிபடு கடவுளை வணங்கி மார்ச்சனையமைந்த குடமுழவும், மத்தளமும் பருத்த பலவாச்சியமும் ஒலிப்ப வதுவை நிமித்தமாக அலங்கரிக்கப் பெற்ற தாதர்கள் விருப்புற்றுப் ……………………………………………..” 

மாதம் என்பது வடமொழிச் சொல். திங்கள் என்பதே தனித் தமிழ்ச் சொல்.  இஃது சந்திரனை வைத்தே மாதத்தைத் தமிழர்கள் கணக்கிட்டதை எடுத்துக் காட்டுகிறது. சங்க இலக்கியங்களில் எல்லாத் திங்களின் பெயர்களும் இடம்பெறவில்லை.  புறநானூற்றுப் பாடல் 229 இல் பங்குனித் திங்கள் குறிப்பிட்டுள்ளதை முன்னர் பார்த்தோம். தைத் திங்கள், மாசித் திங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. கார்த்திகைத் திங்கள் களவழி நாற்பது(17) கார் நாற்பது (26) பாடல்களில் குறிப்பிடப் பட்டுள்ளது.  

தொல்காப்பியர் இகரவீற்றுப் புணர்ச்சி, ஐகாரவீற்றுப் புணர்ச்சி ஆகியவற்றில் மட்டுமே “திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன” எனக் குறிப்பிடுகிறார். இப்போதுள்ள திங்கள்களின் பெயர்களும் இகரம், அல்லது அய்காரம் என்ற எழுத்தில் முடிவதால் அவர் காலந்தொட்டே இப்போதுள்ள திங்கள் பெயர்கள் வழக்கில் இருந்து வந்திருக்கின்றன எனத் தெரிகிறது. ஆனால், இவை வடமொழி மாதங்களது பெயர்களோடு ஒத்ததாக இருப்பதும் கவனிக்கத்தக்கது. தொல்காப்பியர் பொருளதிகாரம் அகத்திணை இயலில் பெரும்பொழுதை வகுத்துக் கூறியவர் நாள்களின் பெயர்களையோ திங்களின் பெயர்களையோ குறிப்பிடவில்லை.  

ஞாயிற்றைக் கொண்டு ஆண்டைக் கணக்கிடும் முறை கிபி 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வராகமிகிரரால் கொண்டு வரப்பட்டது.  

தொல்காப்பியப் பொருளதிகாரம் பொழுதை பெரும்பொழுது சிறுபொழுது எனப் பகுத்துப் பேசுகிறது. பெரும்பொழுது ஆறு பருவங்களைக் கொண்டது. கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்பவையே அந்த ஆறு பருவங்களாகும். சிறுபொழுது வைகறை, விடியல், நண்பகல், ஏற்பாடு, மாலை, நள்ளிரவு என்பன. ஒரு நாள் அறுபது நாழிகையைக் கொண்டது. ஒரு நாழிகை 24 மணித்துளிகள் கொண்டதாகும்.  

முழுநிலா நாளில் புவியின் ஒருபுறம் ஞாயிறும், 180 பாகையில் மறுபுறம் திங்களும் எதிரெதிரே நிற்கும் என்பது பண்டைய தமிழர்களுக்குத் தெரிந்திருந்தது. திங்கள் தோன்றும்போது ஞாயிறு மறையும் என்பதனை,  
உவவுத்தலை வந்த பெருநாள் அமையத்து
இருசுடர் தம்முள் நோக்கி யொருசுடர்
புன்கண் மாலை மலைமறைந் தாங்கு?     (புறம் 65) 

“முழுமதி வந்து கூடிய பெரிய நாளாhகிய பொழுதின் கண் ஞாயிறும் திங்களுமாகிய இரு சுடரும் தம்முள் எதிர்நின்று பார்த்து, அவற்றுள் ஒரு சுடர் புல்லிய மாலைப் பொழுதின்கண் மலைக்குள் மறைந்தாற்போல” என்பது இதன் பொருளாகும். எட்டாம் நாள் பிறைநிலவை “எண்ணாள் திங்கள்” என்றும், முழுமதியை “உவவுமதி” என்றும் அழைக்கப்பட்டன.   

தாமே ஒளிவிடும் மீன்கள் நாண்மீன்கள் என்றும், ஞாயிற்றிடமிருந்து பிறக்கும் ஒளியினால் ஒளிரும் கோள்கள் கோள் மீன்கள் எனவும் அழைக்கப்பட்டது.  கோள்; மீன்களின் நிறம் தமிழர்க்கு தெரிந்து இருந்தன. செந்நிறமுடைய கோளை செவ்வாய் என்றும், வெண்ணிறமுடைய கோளை வெள்ளி என்றும், கரிய நிறமுடைய கோளை சனி என்றும் (சனி கரியநிறம் என்பது பிழையான கணிப்பு) பெயரிட்டனர்.  
உரையாசிரியர் நச்சினார்க்கினியர் அன்றைய ஆண்டு ஆவணியில் தொடங்கி ஆடியில் முடிந்ததாகக் குறிப்பிடுகிறார். இப்படிக் கணக்கிடும் முறை கிமு 500 ஆண்டுக்கு முன் இருந்ததாகக் கூறப்படுகிறது. சித்திரையை முதல் திங்களாகக் கொண்டு கணக்கிடும் முறை இரண்டாயிரம் ஆண்டுகாலமாக இருந்து வருவதாகச் சொல்கிறார்கள்.

இப்போதுள்ள 60 ஆண்டுகள் வியாழன் இராசி வட்டத்தை ஆய்ந்து முறை சுற்றி வருதலாகிய காலத்தைக் குறிப்பிடுவதாகச் சொல்லப்படுகிறது. அது தமிழர்க்கே உரித்தானது என்றும், ஆரியருக்கும் அதற்கும் தொடர்பில்லை என்றும் கூறப்படுகிறது. இது உண்மையானால் பிரபவ தொடங்கி அட்சய வரை உள்ள ஆண்டுகளின் பெயர்கள் யாவும் வடமொழியில் இருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது. மறைமலை (ரை) க்காடு வேதாரணியம் என்றும், மயிலாடுதுறை மாயூரம் என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டதுபோல தமிழ் ஆண்டுகளின் பெயர்களும் மொழிமாற்றம் செய்யப்பட்டனவா?

கிழமையின் பெயர்கள் திருநாவுக்கரசர் (கிமு 7 ஆம் நூற்றாண்டு) பாடிய கோளறு பதிகத்தில்தான் முதல்முறையாக சொல்லப்படுகிறது.

“ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பு இரண்டுமுடனே” என்பது தேவாரத்தில் வருகிற அடிகள். இவை ஆங்கில நாள்களோடு பொருளில் ஒத்திருப்பது கவனிக்கத்தக்கது.  

தமிழ்நாட்டில் வானியல் அறிவு படைத்தவர்கள் இருந்திருக்கிறார்கள். வானியலிலும் அது தொடர்பான சோதிடத்திலும் வல்ல அறிஞர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் கணி, கணியன் என்று அழைக்கப்பட்டார்கள். கணியன் பூங்குன்றன், பல்குடுக்கை நன்கிணியார், கணி மேதாவியார் என்போர் புலவர்களாக இருந்திருக்கிறார்கள்.  
அரசனுடைய அவையில் பெருங்கணிகன் இருந்ததைச் சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோ அடிகள் குறிப்பிடுகிறார். காலத்தைக் கணிக்க நாழிகை வட்டில் பயன்படுத்தப் பட்டதை சிலப்பதிகாரம் எடுத்துச் சொல்கிறது. காலத்தைக் கணிப்பவர் நாழிகைக்கணக்கர் என அழைக்கப்பட்டார். இந்த நாழிகை வட்டில் யவனரிடம் (கிரேக்கர்) இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகும். வானியல்பற்றி சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் செய்திகள் போதுமானதாக இல்லை. இதுபற்றி அறிஞர்கள் மேலும் ஆராய வேண்டும்.  

பருவங்கள் எப்படி ஏற்படுகின்றன? என்ற கேள்விக்கு நீண்ட காலமாக விடை தெரியாமல் இருந்தது. பருவங்கள் ஏற்படுவதற்கு மூன்று காரணங்கள் உண்டு. 

(அ) புவி உருண்டை வடிவமாக இருப்பது,

(ஆ) புவி வலமிருந்து  இடது பக்கமாகத் தனது அச்சில் 23 1ஃ2 பாகை சரிந்திருப்பது,

(இ)  புவி தன்னைத்தானே சுற்றிக் கொண்டிருக்கும் அதேசமயம் ஞாயிற்றையும் சுற்றிவருவது. 

புவி உருண்டையாக இருப்பதால் அதன் மீது விழும் ஞாயிறுக் கதிரின் சக்தி இடத்துக்கு இடம் மாறுபடுகிறது.  கதிருக்கும் புவிக்கும் உள்ள கோணத்தைப் பொறுத்துத்தான் அந்த மாறுபாடு ஏற்படுகிறது.  புவி சாயாமல் இருந்திருந்தால் கதிரின் தாக்கம் நிலநடுக் (பூமத்திய) கோட்டில்தான் (90 பாகை) உச்சமாக இருந்திருக்கும்.  வடக்கு அல்லது தெற்குப் பக்கம் நகரும்போது அந்தக் கோணம் குறைந்து கொண்டு போகிறது. புவியின் தரைக்கும் அதில் விழும் கதிருக்கும் இடையிலான கோணம் இரண்டு காரணங்களுக்காக முக்கியமானது. 

கோணம் 90 பாகையாக இருக்கும் பொழுது கதிரின் சக்தி  குறைந்த இடத்தில் பரப்பப்படுகிறது. கோணம் குறையும் பொழுது (30 பாகை) அது கூடுதலான இடத்தில் பரப்பப்படுகிறது. கோணம் பெரிதாக இருந்தால் பகல் நேரம் நீண்டதாகவும் இரவு நேரம் குறைந்ததாகவும் இருக்கும். பகல் நேரத்தின் அளவு கதிரின் சக்தியை நிருணயிக்கிறது.

புவி 23 1/2 பாகை அதன் அச்சில் சரிந்திருப்பதால் அதன் வடபாகமும்  தென்பாகமும் வௌ;வேறு அளவில் வெப்பம் அடைகிறது. இந்தச் சரிவு 90 பாகை ஞாயிற்றுக் கோணத்தை வடப் பக்கமாக 23 1ஃ2 பாகை  தள்ளுகிறது. இதனால்  வடபாகம் தென் பகுதியைவிட வெப்பமாக இருக்கும். ஒரு கதைக்குப் புவியின் சரிவு வலது பக்கத்தை நோக்கி அல்லாமல் இடது நோக்கி இருக்கிறது என்று வைத்துக் கொண்டால் தென்பாகம் வெப்பமாகவும் வடபாகம் வெப்பம் குறைந்ததாகவும் காணப்படும்.

புவி ஞாயிற்றைச் சுற்றிவரும் போது டிசெம்பர் மாதம் 22 ஆம் நாள் புவியின் தென்பாகம் ஞாயிற்றை நோக்கிச் சாய்ந்திருக்கிறது.  தொண்ணூறு பாகை கோண ஞாயிற்றுக் கதிர் இப்போது மகரக் கோட்டில் (Tropical Cancer)  குவிந்துள்ளது. இதற்கு நேர் எதிர்மாறாக வட பாகத்தில் கடகக் கோட்டில் (Tropical of Capricorn)  ஞாயிற்றுக்கதிர் குறுகிய கோணத்திலேயே படுகிறது.  

ஆற திங்கள் கழித்து யூன் 21 ஆம் நாள்,  90 பாகை  கதிர் கடகக் கோட்டில் படுகிறது. இறுதியாக செப்தெம்பர் 23 ஆம் நாள் 90பாகைக் கதிர் புவியின் மேல்பாகத்திலோ அல்லது கீழ்ப்பாகத்திலோ இல்லாமல் நடுக்கோட்டில் படுகிறது. அந்த நாள் பகல் இரவு காலம் சரி சமமாக (Equinox) இருக்கும்.

புவி இப்படி 23 1/2 பாகை தனது அச்சில் வலப்புறமாகச் சாய்ந்திருப்பதால் இன்னொரு விளைவு ஏற்படுகிறது. புவியின்  வடபாகம் ஞாயிற்றுப் பக்கமாக சாய்ந்திருக்கும்போது வடதுருவத்துக்கும் வடதுருவ வட்டத்திற்கும் (Arctic Circle) இடையில் உள்ள பிரதேசம் 24 மணித்தியாலமும் ஞாயிற்றின் வெளிச்சத்தைப் பெறுகிறது. அதே சமயம் தென் துருவத்துக்கும் தென்துருவ வட்டத்திற்கும் (Antarctic Circle) இடையில் உள்ள பிரதேசம் 24 மணித்தியாலமும் இருட்டில் மூழ்கி இருக்கும்.  

அடுத்த கிழமை இயலுலகத்தின் (பிரபஞ்சம்) மையம் புவி அல்ல, அது ஞாயிறு என்ற உண்மையையும், புவியைக்  கோள்கள்  சுற்றுவதற்குப் பதில் ஞாயிற்றைப் புவி உட்பட ஏனைய கோள்கள் நீள்வட்டத்தில் சுற்றி வருகின்றன என்ற உண்மையை முதல் முறையாகச் சான்றுகளோடு அறிவியல் அடிப்படையில் தீர்த்துவைத்த மும்மூர்த்திகளைச் சந்திப்போம்.

——————————————————————————————————————– 
 
கியூபா பயணக் கட்டுரை (56)
ஒரு பருந்தின் நிழலில்
சிந்தனைப் புரட்சிக்கு வித்திட்ட கோபெர்னிக்கஸ்

புவிதான் இயலுலகத்தின் மையம் அதனைச் சுற்றியே ஞாயிறும் ஏனைய கோள்களும் சுற்றி வருகின்றன என்ற அரிஸ்தோட்டல், தொலமி இருவரது கோட்பாடும் 2,000 ஆண்டு காலம் மேற்குலகநாட்டுச் சிந்தனையாளர்களது வேதமாக இருந்து வந்தது. நான் முன்னர் குறிப்பிட்டது போல அரிஸ்தோட்டல் இந்தப் புவி உருண்டை வடிவானது என்று நம்பினார். ஆனால், புவி வெங்காயத்தை மூடியிருக்கும் தோல்போல் புவி பல உருண்டைகளை உள்ளடக்கியது என்று நம்பினார். மேலும் புவி நாற்பெரும் பூதங்களினால் ஆனது,  ஆனால், முகில் மண்டலத்திற்கு அப்பால் உள்ள தூய வானவெளி எதர் (நவாநச) என்னும் பூதத்தினால் நிரப்பட்டுள்ளது எனவும் நம்பினார். அரிஸ்தோட்டலைப் பின்பற்றி கிபி 2 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தொலமி (Ptolemy) என்பவரும் இயலுலகத்தின் மையம் புவி என்றும், ஞாயிறு, சனி, வியாழ கிரகங்கள் புவியைச் சுற்றி வருகின்றன என்றும் சொன்னார். 

இந்த ஊகங்களுக்கு எல்லாம் முற்றுப் புள்ளி வைத்து, இயலுலகத்தின் மையத்தில் ஞாயிறு இருக்கிறதென்றும், அதனைச் சுற்றிப் புதன், வெள்ளி, புவி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய ஆறு கோள்களும் சுற்றி வருகின்றன என்பதைச் சான்றுகளோடு விளக்கி வானொளிக் கோளங்களின் சுழற்சிகள் (On the Sizes and Distances of the Sun and Moon) என்ற நூலை நிக்கலோஸ் கோபெர்னிக்கஸ் (Nicholas Copernicus)  என்ற வானியலாளர் முதன் முறையாக எழுதினார். இவர் போலந்தில் 1473 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19 ஆம் நாள் பிறந்தவர்.  

முன்னர் கூறியது போல இயலுலகின் மையம் ஞாயிறு என்றும்  அதனைச் சுற்றியே ஏனைய கோள்கள் வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன என்ற கோட்பாட்டைக் கிரேக்க தத்துவவாதி அறிஸ்தாசுஸ் (Aristarchus of Samos) கிமு 200 ஆம் ஆண்டளவில் முன்வைத்தார். இவர் எழுதிய ஞாயிறு மற்றும் திங்களின் பரப்பளவுகளும் தூரங்களும் (On the Sizes and Distances of the Sun and Moon)  என்ற ஆய்வுக் கட்டுரை வானியல் பற்றிய ஆராய்ச்சியில் ஒரு வரலாற்றுத் திருப்பு முனையாகும். இவரது செய்முறைகளை அவருக்குப் பின் வாழ்ந்த கிப்பறாச்சுஸ் (Hipparchus) மற்றும் தொலமி (Ptolemy) போன்ற வானியலாளர்கள், கணக்கியலாளர்கள் பின்பற்றினார்கள். 

அறிஸ்தாசுஸ் கீழ்க்கண்ட ஆறு எடு (புனைவு) கோள்களை (Hypothesis) முன்வைத்தார். 

(1) திங்கள் ஞாயிறிடம் இருந்து ஒளியைப் பெறுகிறது. கோபெர்னிக்கன் ஞாயிறுமைய அண்டம்.

(2) திங்களின் சுழல் பாதையின் மையத்தில் புவி  நிலையுற்றுள்ளது. 

(3) திங்கள் பாதியாகத் தெரியும்போது, திங்களை ஒளி-இருள் பகுதியாகப் பிரிக்கும் பாகங்கள் எங்கள் கண் பார்க்கும் திசையில் உள்ளது.  

(4) திங்கள் பாதியாகத் தெரியும் பொழுது, ஞாயிறில் இருந்து அதன் கோணத் தூரம் (angular distance)  90 பாகையில் முப்பதில் ஒரு பங்காகும். அதாவது 3 பாகையாகும். 

(5) புவியின் நிழலின் அகலம் இரண்டு திங்களுக்குச் சமமானவை. 

(6) திங்கள் இராசி வட்டத்தின் பதினைந்தில் ஒரு பாகமாகும்.  இராசி வட்டம் 360 பாகை கொண்டது.  எனவே ஒரு இராசி 30 பாகை கொண்டது. அதில் பதினைந்தில் ஒரு பாகம் 2 பாகையாகும்.   

இப்படி அவர் பல முன்மொழிவுகளை (சரியான எண்ணிக்கை 18)  எண்பித்தாலும் கீழ்க்கண்ட மூன்றும் முக்கியமானவை. 

(1) ஞாயிறில் இருந்து புவியின் தொலைவு, திங்களில் இருந்து புவியின் தொலைவை விட 18 மடங்கு கூட ஆனால் 20 மடங்குக்குக் குறைவு.  

(2) திங்களின் விட்டமும் (வட்டத்தின் குறுக்களவு) ஞாயிற்றின் விட்டமும் ஒரே விழுக்காட்டுத் தொடர்பு (ratio)  (18 மடங்குக் கூட ஆனால் 20 மடங்குக்குக் குறைவு) உடையது.

(3) ஞாயிறின் விட்டமும் புவியின் விட்டமும் 19ஃ3 யை விடக் கூடுதலானது. ஆனால், 43ஃ6 யை விடக் குறைவானது.  

இந்த முன்மொழிவுகளின் அடிப்படையில்தான் 17 ஆம் நூற்றாண்டுவரை விண்ணுலக (celestial)  தொலைவுகள் கணிக்கப்பட்டன. 

திங்களின் ஒளியும் இருளும் சரிபாதியாகத் தோன்றும்;போது புவி, திங்கள், ஞாயிறு இவற்றின் கோணம் சரியாக 90 பாகையாக இருக்கும். அதே சமயம் திங்கள், புவி, ஞாயிறு இவற்றின் கோணம் 87 பாகையாக இருக்கும் எனவும் கண்டு பிடித்துச் சொன்னார்.

அறிஸ்தாசுஸ் இன்னும் இரண்டு முன்மொழிவுகளை எடுத்துச் சொன்னார். ஞாயிறு கிரகணத்தின் போது சந்திரனின் தட்டு ஞாயிறை மறைப்பதற்கு சரி அளவாக  இருக்கிறது.  சந்திர கிரகணத்தின் போது புவியின் நிழல் சந்திரனது நிழலைவிட இருமடங்கு பெரிதாக இருக்கிற. இந்தத் தரவை வைத்துக் கொண்டு புவி சந்திரினைவிட 3 மடங்கு பெரிது என்றும், ஞாயிற்றின் விட்டம் புவியின் விட்டத்தைவிட 6 மடங்கு பெரிது என்றும் அறிஸ்தாசுஸ் சொன்னார்.

கிரேக்கர்களுக்குப் பதின்முறை (decimals) பற்றி ஒன்றும் தெரியாததால் மடங்குகளை பின்னத்திலேயே குறிப்பிட்டார்கள்.

அறிஸ்தாசுஸ் சொன்னவை முழுதும் சரியாக  இருக்கவில்லை. திங்கள், புவி, ஞாயிறு இவற்றின் கோணம் 87 பாகைக்குப் பதில் 89 பாகை 50 விநாடிகள் என்று பின்னர் கண்டு பிடிக்கப்பட்டது. அதேபோல் புவியின் நிழலின்  அகலம்  இரண்டல்ல மூன்று மடங்கு என்றும் பின்னர் கணக்கிடப் பட்டது.

அதே போல் புவியில் இருந்து ஞாயிறின் தொலைவு புவியில் இருந்து நிலாவின் தொலைவை விட 400 மடங்கு அதிகமானது. அதே போல் ஞாயிறின் விட்டம் புவியின் விட்டத்தைவிட 400 மடங்கு நீளமானது.

மொத்தத்தில் அறிஸ்தாசுஸ் இயல்வுலகையும் மற்றும் வான்கோள்களையும் கணிதயியல் முறைப்படி அணுகியதன் பயனாகக் கணிதயியலுக்கும், வானியலுக்கும் அளப்பரிய கொடை செய்தார். இதனால் அவர் “பண்டைய கோபெர்னிக்கஸ்” என்று அழைக்கப் பட்டார். 

கோபெர்னிக்கஸ் அவர்களே தான் எழுதிய  வானொளிக் கோளங்களின் சுழற்சிகள் என்ற நூலில் அறிஸ்தாசுவைப் பாராட்டி எழுதியிருக்கிறார். “பிலோலோஸ் புவியின் அசைவதாக நம்பினார், சிலர் சொல்கிறார்கள் சாமோசைச் சேர்ந்த அறிஸ்தாசும் அதே கருத்தைக் கொண்டிருந்தார்? எனக் குறிப்பிட்டார். ஆனால், அவரது நூல் வெளிவருமுன் இந்தப் பகுதி குறுக்குக் கோடு இட்டு வெட்டப்பட்டு விட்டது. கோபெர்னிக்கஸ் தனது ஆய்வு மற்றவர்களது தயவின்றி நின்று பிடிக்கும் என நினைத்திருக்க வேண்டும்.   
கோபெர்னிக்கஸ் மத்தியதர வகுப்புக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

முதலில்  போலந்தின் அன்றைய தலைநகர் கிறகோவில் (Krakow)  இருந்த பல்கலைக் கழகத்தில் கல்வி கற்றார்.  பின்னர் இத்தாலி நாட்டுக்குச் சென்று பொலங்கா (Bolanga) மற்றும் படுவா (Padua) பல்கலைக் கழகங்களில் கல்வி கற்றார். இந்த மூன்று பல்கலைக் கழகங்களிலும் அவர் கணிதவியல் பாடங்களைப் படித்தார். பெரேரா (Ferrara) பல்கலைக் கழகத்தில் கிறித்தவ சமயசட்டம் (Canon Law)  படித்து அதில் பட்டம் பெற்றார். மருத்தவப் பட்டப் படிப்புக்குக் கணிதவியல் மற்றும் அறிவியல் பாடங்கள் கட்டாயமாக (வைத்தியம் பார்ப்பதற்கு மருத்துவர்கள் சோதிடத்தைப் பயன்படுத்திய காரணத்தால்) இருந்தன.

படுவா பல்கலைக் கழக மருத்துவக் கல்லூரி அன்று பெரும் பெயர் பெற்றிருந்தது.  அங்கு படித்தபோது மருத்துவம் மற்றும் கிரேக்கமொழி இரண்டையும் கற்றார். தனது சொந்த  நாட்டிற்குத் திரும்பியபோது மருத்துவத் தொழிலில் ஈடுபட்டார். அதே சமயம் தேவாலயத்தில் மதகுருவாகவும் ஊழியம் செய்தார்.  

மறுபடியும் இத்தாலிக்குப் போய் உரோமாபுரியில் உள்ள நண்பர்களைச் சந்தித்தார். அதன்பின் 1513-ஆம் ஆண்டு கோபெர்னிக்கன் கோட்பாடு என்ற குறுகிய ஆய்வை கட்டுரை வடிவில் எழுதினார். இந்த ஆய்வில்தான் இயலுலகின் மையம் ஞாயிறு,  புவி அல்ல என்ற கோட்பாட்டை அவர் முதலில் நிறுவினார். இந்தக் கருத்தியல் வானொளிக் கோளங்களின் சுழற்சிகள் என்ற நூலாக  முழுமை பெற நீண்ட காலம் எடுத்தது. அவரது மரணப் படுக்கையில்தான் (1543) இந்த நூலின் முதல் படி அவரிடம் கொடுக்கப் பட்டது.  
கோபெர்னிக்கன் கோட்பாட்டை ஆதரித்து அதனை  முன்னிறுத்தியவர்களில் யோகான்ஸ் கெப்லர் (Johannes Kepler – 1571-1630) மற்றும் கலிலியோ கலிலி (Galileo Galilei- 1564-1642)  இருவரும் முக்கியமானவர்கள்.   

கோபெர்னிக்கன் ஞாயிறுமைய முறையில் (Heliocentric system) புவியும் ஒரு கோளாகும். சந்திரன் ஞாயிறைச் சுற்றிவருவதற்குப் பதில் புவியைச் சுற்றி வந்தது.  விண்மீன்கள் ஒளி கூடியும் குறைந்தும் காணப்படுவதற்கு அவற்றின் தூரந்தான் காரணம் என்பதை கோபெர்னிக்கன் ஞாயிறுமைய முறை எளிதாகத் தீர்த்துவைத்தது. ஆனால், கோள்கள் வட்டவடிவமான வட்டத்தில் சுற்றிவருகிறது என்ற பழைய கோட்பாட்டை கோபெர்னிக்சும் ஏற்றுக் கொண்டார். அது தவறென்று பின்னர் எண்பிக்கப்பட்டது. வட்டத்திற்குப் பதில் அவை நீள்வட்டத்தில் (நடடipவiஉ) சுற்றி வருகிறது என்பதே சரியானதாகும். 

இன்றைய நவீன வானியல் மேம்பாட்டிற்கு மூன்று பிழையான எண்ணங்கள் தடையாக இருந்ததை முன்னர் பார்த்தோம். அதாவது, 

(1) புவிதான் இயலுலகின் மையம். 

(2) கோள்கள் வட்டவடிவில் சுற்றி வருகின்றன. 

(3) வாவெளியில் காணப்படும் கோள்கள் புவியில் காணப்படாத இன்னொரு மாற்றமுடியாத பொருளால் ஆனது. 

முதல் அனுமானத்தைக் கோபெர்னிக்கஸ் தவறு என்று எண்பித்தார். இரண்டாவது அனுமானத்தை அவர் ஏற்றுக் கொண்டார். புவியும் ஒரு கோள் என்பதால் ஏனைய கோள்களும் நீர், நிலம், நெருப்பு, காற்றினால் ஆனது என அனுமானித்தார். 
கோபெர்னிக்கஸ் ஒரு புரட்சிவாதியல்ல. தனது கோட்பாடு தனது ஆசான்கள் மற்றும் திருச்சபையால் எள்ளி நகையாடப்படும் என்ற பயம் காரணமாகவே தனது நூலைப் பிரசுரம் செய்வதைக் கடைசிக் காலம்வரை தள்ளிப்போட்டார் எனப் பலர் நினைக்கிறார்கள். காரணம் அவர் காலத்தில் இயலுலகுபற்றி அரிஸ்தோட்டல் எழுதி வைத்தவை  உறுதியான சமயக் கொள்கை (religious dogma) என்ற நிலைக்குத் திருச்சபையால் உயர்த்தி வைக்கப் பட்டிருந்தது.  

ஆனால், புரட்சியை விரும்பாத இந்தப் புரட்சிவாதி  சங்கிலித் தொடர்பான நிகழ்வுகளைத் தொடக்கி வைத்து மேற்குலக நாகரிகம் முன் எப்பொழுதும் கண்டிராத பெரிய சிந்தனைப் புரட்சிக்கு வித்திட்டார். அவர் மறைந்த பின்னர் ஒரு நூற்றாண்டு காலம் அவரது எண்ணங்கள் மறைக்கப்பட்டு இருந்தன. ஆனால், 17 ஆம் நூற்றாண்டில் கெப்லர், கலிலியோ, நியூட்ரன் கோபெர்னிக்கன் ஞாயிறுமையக் கோட்பாடுகளை மேலும் விரிவாக்கிப் புரட்சி செய்ததன் விளைவாக அரிஸ்தோட்டலின் எண்ணங்களையும் கோட்பாடுகளையும் முற்றாக ஒதுக்கித் தள்ளினார்கள்.

————————————————————————————————————


 
கியூபா பயணக் கட்டுரை (57)
ஒரு பருந்தின் நிழலில்
கலிலியோவின் தொலைநோக்கி; நவீன வானியலைப் பிறப்பித்தது!

கோபெர்னிக்கஸ் தான் எழுதிய வானொளிக் கோளங்களின் சுழற்சிகள் என்ற நூலை மூன்றாவது போப்பாண்டவர் போல் (Pழிந Pயரட 111) அவர்களுக்குத் திருப்படையல்   செய்தார். அப்போது அந்த நூல் பெரியளவில் எவ்வித வாதப்பிரதி வாதங்களையும் கிளப்பவில்லை. பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் (உண்மையில் அதை எழுதியவர் நூரம்பன்பெர்க் புரட்டஸ்தானமத சீர்திருத்தவாதியான அந்திரியாஸ் ஒசியான்டர் (யுனெசநய ழுளயைனெநச) அந்த நூலுக்கு முகவுரை எழுதினார். அதில் அந்த நூலில் எழுதப்பட்டிருக்கும் கோட்பாடு வெறுமனே கணிதவியல் புனைவுகோள் (ஆயவாநஅயவiஉயட hலிழவாநளளை) என்று சொல்லப்பட்டது.  கணிதவியல் கட்டுமானங்கள் (ஆயவாநஅயவiஉயட உழளெவசரஉவழைளெ)  வெறுமனே புனைவுகோள்கள் என்று  சொல்லும் மரபு வானியலாளர் மத்தியில் நீண்டகாலமாக இருந்து வந்தது.  
ஆனால், இயலுலகத்தின் மையம் ஞாயிறு என்றும், புவி அதைச் சுற்றிவருகிறதென்றும், புவிக்கு மூன்றுவிதமான இயக்கங்கள் (அழவழைளெ) உண்டென்றும், ஏனைய கோள்களும் புவியைப் போலவே ஒரு ஒழுங்கு முறையில்  ஞாயிற்றைச் சுற்றி வருகின்றன என்றும் கோபெர்னிக்கஸ் வரைபடங்களோடு எழுதியிருந்தது பலரது புருவத்தை உயர்த்தச் செய்தது. எனவே கோப்பெனிக்சின் நூலுக்கு ஒரு கலப்பான வரவேற்புக் கிடைத்தது. 

ஞாயிறுதான் இயலுலகின் மையம் என்ற கோட்பாடு கிட்டத்தட்ட எல்லோராலும் உடனடியாக நிராகரிக்கப் பட்டது. இருந்தும் தொலமி எழுதிய அல்மஜெஸ்ட் (Almagest) நூலைவிட கோபெர்னிக்சின் நூல் புவி மற்றும் கோள்களின் இயக்கத்தை மிகத் தெளிவாகவும் நுட்பமாகவும் விளக்கியிருந்தது. கோபெர்னிக்சின் கோட்பாட்டை ஏனைய வானியலாளர்கள் உள் வாங்கிக்கொள்ள ஒரு தலைமுறை சென்றது. இதில் தொமாஸ் டிக்ஜிஸ் (Thomas Digges) என்ற வானியலாளர் குறிப்பிடத்தக்கவர். இவர் வானொளிக் கோளங்களின் சுழற்சிகள் என்ற நூலை பழைய ஆங்கிலத்தில் A PERFIT DESCRIPTION OF THE CELESTIALL ORBS (1576) என முதன் முறையாக மொழிபெயர்த்து வெளியிட்டார்.  

கோபெர்னிக்சின் நூல் ஒப்புதல் பெறுவதற்குக்  காலதாமதம் ஆனதற்குக் காரணம் ஞாயிறுமைய இயலுலகக் கோட்பாடு பகுத்தறிவுக்கும் கண் காட்சிக்கும் பொருளற்றதாக அல்லது நகைப்புக்கிடமாகத் தெரிந்ததே.  அரிஸ்தோட்டலின் இயலுக கருத்தியலை செரித்துக் கொண்டவர்களுக்குக் கோபெர்னிக்சின் கோட்பாட்டைச் செரித்துக் கொள்வது வில்லங்கமாக இருந்தது. கோபெர்னிக்சை ஏற்றுக் கொண்டால் அரிஸ்;தோட்டலைக் கைகழுவ வேண்டும் என்ற இக்கட்டான நிலைமை இருந்தது.   
கோபெர்னிக்சின் கோட்பாடு ஏற்றுக் கொண்டால் பறவைகள் எவ்வாறு தாங்கள் தங்கியிருந்த கூட்டை மறுபடியும் கண்டுபிடிக்க முடியும்? புவி கிழக்குப் பக்கமாக வேகமாகச் சுற்றுகிறது என்றால் மேலே எறிகிற கல்லு எப்படி நேரே வந்து கீழே விழுகிறது? பொருள்களுக்கு ஒரு இயக்கம் இருக்கும்போது புவிக்க மட்டும் எப்படி மூன்று இயக்கங்கள் இருக்க முடியும்? புவி ஒரு கோள் என்றால் அதற்கு மட்டும்  ஒரு நிலா இருப்பது ஏன்? இந்தக் கேள்விகளுக்கான விடைகள் தேவைப்பட்டன.  

இன்னும் ஒரு சிக்கல் எழுந்தது. அசைவற்ற ஞாயிறும் அசையும் புவியும் கிறித்தவ வேதாகமங்களில் (கத்தோலிக்கர்கள்-புரட்டஸ்தீனர்கள்) சொல்லப்பட்ட கதைகளுக்கு எதிரானதாக இருந்தது. கோபெர்னிக்சின் கோட்பாட்டைக் கத்தோலிக்கர் எதிர்த்ததில் வியப்பில்லை. ஆனால், சீர்திருத்தவாதிகள் என்று தங்களைச் சொல்லிக்கொண்ட புரட்டஸ்தீனர்களும் கோபெர்னிக்கன் கோட்பாட்டை எதிர்த்தது வியப்பை அளித்தது.
இது தொடர்பாக மாட்டின் லூதர் (ஆயசவin டுரவாநச) என்பவர் பின்வருமாறு எழுதினார்.  

“மக்கள்  ஞாயிறு, சந்திரன், புவி ஆகியன சுழல்கிறது என்று சொல்லுகின்ற ஒரு புதுச் சோதிடரின் பேச்சுக்குக் காது கொடுக்கிறார்கள். யார் தங்களைப் புத்திசாலிகள்  என்று காட்ட  விரும்புகிறார்களோ அவர்கள் ஏதாவது ஒரு புதிய கோட்பாட்டைக் கண்டுபிடிக்க வேண்டும்,  அது முன்னைய கோட்பாட்டைவிடத் திறமாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள்.   

இந்த மடையன் வானியலின் முழுக் கற்கைகளையும் தலைகீழாக மாற்றப் பார்க்கிறான். ஆனால், புனித வேதகாமங்கள் யோசுவா  (Joshua) இஸ்ரேலின் முகதாவில் ஆண்டவரைப் பார்த்து ஓ ஞாயிறே, கிபியோன் மேலே அப்படியே நில்,  ஓ புவியே அய்ஜலோன் பள்ளத்தாக்கிற்கு மேலே அப்படியே நில்”  என்று கட்டளை இட்டவுடன் அப்படியே ஞாயிறும் திங்களும் நின்றன” (On the day the LORD gave the Amorites over to Israel, Joshua said to the LORD in the presence of Israel: “Sun, stand still over Gibeon, and you, moon, over the Valley of Aijalon).  மாட்டின் லூதர் ஒருவர்தான் அப்படி எழுதினார் என்பதல்ல. இன்னும் பலர் கோப்பெர்னிக்சை நையாண்டி செய்து எழுதினார்கள். மெலன்சொதொன் (Melanchthon) என்பவர் “வான்வெளியில் ஒளிக்கோள்கள் 24 மணித்தியாலங்கள் சுழல்கின்றன…..ஆனால், சில மனிதர்கள் புதுமை மோகத்தில் அல்லது தங்கள் புலமையைக் காட்ட புவி அசைகிறது என்கிறார்கள். அது மட்டுமல்ல ஞாயிறு சுழல்வதில்லை என்கிறார்கள் ………..இப்படி வெளிவெளியாகச் சொல்வதற்கு இவர்களிடம் உண்மை மற்றும் ஒப்புரவு இல்லாததே காரணமாகும். அவர்கள் சொல்லும் எடுத்துக்காட்டுப்  பெருங்கேடு பயக்கவல்லது. நல்லவர்களுக்கு அழகு கடவுள் வெளிப்படுத்திய உண்மையை ஏற்றுக் கொண்டு அதற்கு இசைவாக நடக்க வேண்டும்.”  
இதன்பின் மெலன்சொதொன் தனது கருத்துக்கு வலுசேர்க்க  வேதாகமங்களில் இருந்து புவி அசைவற்று நிற்கிறது ஞாயிறு அதனைச் சுற்றி வருகிறது என்ற மேற்கோள்களை எடுத்துக் காட்டுகிறார். அவரது முடிவு: இயலுலகின் மையத்தைவிட வேறு எந்த இடத்திலும் புவி இருக்க முடியாது!  

மலன்சொதொனைப் போலவே கல்வின் (Calvin) பழைய ஏற்பாட்டிலுள்ள 93 வது தோத்திரப்பாடலின் முதல் பாடலை மேற்கோள் காட்டி “பரிசுத்த ஆவிக்கு மேலாக கோபெர்னிக்சின் முடிவை யார் ஏற்றுக் கொள்வார்கள்?” எனக் கடாவினார்.  
கெப்லர், நியூட்டன் போன்ற வானியலாளர்கள் கோப்பெனிக்சின் கருத்தியலை ஐயந்திரிபற எண்பித்த பின்னரும் மதவாதிகள் கோபெர்னிக்சின் மீது தொடுத்த கண்டனைக் கணைகள் ஓயவில்லை. பதினெட்டாம் நூற்றாண்டுவரை பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் கோபெர்னிக்சின் அண்டத்தைப் பற்றிய கோட்பாட்டைப் போதிப்பதில்லை எனச் சத்தியம் செய்யக் கட்டாயப் படுத்தப்பட்டார்கள்!  

தொலைநோக்கி மூலம் கண்ட உண்மைகளை  மாணவர்களுக்குப்  படிப்பிக்கக் கூடாது எனவும், கடவுள் மறுப்புக் கொள்கைகளை மாணவர்களிடம் இருந்து மறைத்து வைக்குமாறும் திருச்சபைகள் சிறப்புக் கட்டளை பிறப்பித்தன. பல பேராசிரியர்கள் கோபெர்னிக்சின் கருத்தியலை ஏற்றுக் கொண்டாலும் பழைய அரிஸ்தோட்டல – தொலமி இருவரதும் கோட்பாட்டைப் படிப்பிக்குமாறு அவர்கள் விருப்பத்திற்கு மாறாகக் கட்டாயப் படுத்தப் பட்டார்கள்.  

திருச்சபையின் ஆணைக்குக் கட்டுப்பட மறுத்து  கோபெர்னிக்கன் கோட்பாட்டை ஆதரித்த ஜிஒர்டானோ புரூனோ (Giordano Bruno (1548–1600) என்பவர் ஆபத்தில் மாட்டிக் கொண்டார். தண்ட உயர்மன்றத்துக்குப் (Inquisition) பயந்து 1576 ஆம் ஆண்டு உரோமாபுரிக்கு ஓடினார். ஆனால், அங்கும் அதே கதைதான்.  எனவே பிராஞ்சுக்கு ஓடித் தப்பினார். 1583-1585 காலத்தில் இலண்டனில் பிரஞ்சுத் தூதுவரது இல்லத்தில் வசித்து வந்தார். 1584 ஆம் ஆண்டு இரண்டு நூல்களை எழுதி வெளியிட்டார். நீற்றுப் புதன்கிழமை இரவுணவு (The Ash Wednesday Super) மற்றும் எல்லையற்ற அண்டமும் உலகங்களும் (On the Infinite Universe and Worlds)  என்பதே அந்த நூல்களாகும்.  

1591 ஆம் ஆண்டு வெனிஸ் நகரில் வந்து வாழுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று அங்கு சென்றார். அங்கு கைது செய்யப்பட்டு தண்ட உயர்மன்றத்தில் நிறுத்தப்பட்டார். அவர் தனது கருத்தை மறுத்துரைத்தாலும் 1592 இல் உரோமாபுரிக்கு மறு விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு எட்டு ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டு அவ்வப்போது கடுமையாக விசாரணை செய்யப்பட்டார். அவர் தனது கருத்தை மறுத்துரைக்க மறுத்தபோது அவர் ஒரு நம்பிக்கைஈனர் எனக் குற்றம் சாட்டி கம்பத்தில் கட்டி உயிரோடு கொளுத்தப் பட்டார். அவரது சாம்பல் காற்றில் தூவப்பட்டது!
புரூனோவை உயிரோடு கொளுத்திச் சாகடித்தாலும் அவரது கருத்துக்களை மதவாதிகளால் எரிக்க முடியவில்;லை. உண்மை வாழ்ந்து கொண்டிருந்தது.

புரூனோவின் உயிர்த் தியாகத்தின் பின் பத்து ஆண்டுகள் கழித்து கோபெர்னிக்கன் சித்தாந்தம் முற்றிலும் சரியென்பதை கலிலியோ தாம் கண்டுபிடித்த தொலைநோக்கி மூலம் எண்பித்துக் காட்டினார்!  

கோபெர்னிக்சின் எதிர்ப்பாளர்கள் அவருக்குச் சவால் விடுவதுண்டு. “உன்னுடைய சித்தாந்தம் சரியென்றால் வெள்ளிக் கிரகமும் சந்திரனைப் போன்றே வளர்வதும் பின்னர் தேய்வது போலும் தோன்ற வேண்டுமே?” இதற்குக் கோபெர்னிக்கன் இறுத்த பதில் “நீங்கள் சொல்வது சரி, எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஆனால், கடவுள் நல்லவர், அவர் உங்களது எதிர்க் கேள்விக்கு சமயம் வரும்போது பதில் சொல்வார்.” 

கடவுளால் கொடுக்கப்பட்ட விடை 1611 ஆம் ஆண்டு கிடைத்தது. கலிலியோவின் அரைகுறைத் தொலைநோக்கி வெள்ளிக் கோளின் தோற்ற மாற்றத்தை தெளிவாகக் காட்டியது! 

கலிலியோ பிசா நகரத்தில் 1564 ஆம் ஆண்டு ஒரு பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தையார் வின்சென்சோ கலிலி ஒரு புரட்சிகர இசைக் கலைஞர். தேவாலயங்களில் இசைக்கப்படும் இசை கவர்ச்சியற்றது என எண்ணினார். கிரேக்க பாடல்கள் மற்றும் புராணங்களை அடிப்படையாக வைத்து நவீன இசை வடிவங்களை அமைத்தார். இவரது முயற்சியே பின்னர் இத்தாலிநாட்டின் புகழ்பெற்;ற ஓபேரா (Opera) என்ற இசை நாடகமாக உருப்பெற்றது. கலிலியோ கலிலி

தனது 17 ஆவது வயதில் கலிலியோ பிசா பல்கலைக் கழகத்துக்குப் போனார். அவரது தந்தையின் ஆலோசனைப்படி அங்கு மருத்துவம் படிக்க ஆரம்பித்தார். பின்னர் அதனைக் கைவிட்டு கணக்கியல் படிக்க ஆரம்பித்தார். அப்போது மிகவும் புகழுடன் விளங்கிய திக்சி (Ricci) என்பவரிடம் கலிலியோ கணிதத்தில் பாடம் கேட்க அவரது தந்தையார் ஒழுங்கு செய்தார்.  

கணித பாடத்தில் கலிலியோ மிகவும் கெட்டிக்காரராக விளங்கினார். இருபதின் முற்பகுதியில் ஆர்க்கிமிடீஸ் கண்டுபிடித்த முடிவுகளுக்கு மேலாக சிலவற்றை கண்டு பிடித்தார். அவரது 25 ஆவது அகவையில் அதே பல்கலைக் கழகத்தில் கணக்கியல் பீடத்துக்குத் தலைவராக நியமனம் செய்யப் பட்டார். 

அங்கிருந்து வெனிஸ் குடியரசுக்குச் சென்றார்.  தலைநகரமான வெனிசின் அன்றைய மக்கள் தொகை 150,000 ஆக இருந்தது. ஆனால், அந்த நகர மக்கள் ஆண்டில் 44 மில்லியன் (4.4 கோடி) போத்தல் வைனைக் காலி பண்ணினார்கள்.  

1599 ஆம் ஆண்டு கலிலியோ மரினா கம்பா (Maria Gamba) என்ற 21 வயது நிரம்பிய பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன.  

வெனிசில் பல பெருங்குடி மக்களின் (Nobles) நட்பு கலிலியோவிற்குக் கிடைத்தது. அதில் ஒருவர்

வெனிஸ் குடியரசின் உத்தியோகபூர்வ சமயவாதியான பிரா பாஓலோ சர்ப்பி (Fra Paola Sarpi).                  

1604 ஆம் ஆண்டு அய்ரோப்பா கண்டத்து அறிவாளிகள்; மத்தியில்; வானத்தில் தோன்றிய வால்வெள்ளி ஒன்று பெரிய திகைப்பையும் ஆர்வத்தையும் உண்டாக்கியது. கோள்கள் நீங்கலாக வான்வெளி மாற்றத்துக்கு ஆளாகாத நிரந்தரக் காட்சி என்று நம்பப்பட்டது. இப்போது வானத்தில் ஒரு வால்வெள்ளி காணப்பட்டது வான்வெளிபற்றிய ஆர்வத்தை ஊக்கிவித்தது. 1609 ஆம் ஆண்டு கலிலியோவிற்கு ஒரு செய்தி எட்டியது. அது அவரின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றுவதாக இருந்தது.

ஒல்லாந்து நாட்டில் லெயிடன் (டுநலனநn) என்பவர் முதன் முதலாகக் கண் பார்வை குறைந்தோரது பாவனைக்கு மூக்குக் கண்ணாடி ஒன்றினைக் கண்டு பிடித்ததாகக் கலிலியோ கேள்விப்பட்டார். அதுபற்றிய விபரங்களை அறிந்து கொள்வதற்கு ஒல்லாந்து நாட்டுக்குப் பயணப் பட்டார். அங்கு சென்ற அவர் அதன் செய்முறையைக் கற்றுக் கொண்டார். ஆரம்பப் பின்னடைவுக்குப் பின்னர் படிப்படியாக 60 ஒ சக்தி வாய்ந்த தொலைநோக்கியை உருவாக்கினார். அதன்  உதவியோடு வான்வெளியைப் அவர் அண்ணாந்து பார்த்தபோது  (1610) இன்றைய நவீன வானியல் பிறந்தது!   

——————————————————————————————————

கியூபா பயணக் கட்டுரை (58)
ஒரு பருந்தின் கீழ்
நவீன அறிவியலின் தந்தை கெப்லர்

கலிலியோ தொலைநோக்கி மூலம் நிலாவைப்  பார்த்தபோது  அதன் மேல்பாகத்தில் குன்றுகளும்  குழிகளும்  இருப்பதைக் கண்டார். அதன்பின்னர் வியாழ கோளின் சந்திரன்களையும், வெள்ளிக் கோளின் வளர்பிறை-தேய்பிறையையும் கண்டு பிடித்தார். இந்த கண்டு பிடிப்புக்களின் பயனாக அவரது சொந்த ஊரான தஸ்கேனியில் (Tuscany) கணக்கியல் மற்றும் தத்துவவியல் (இயற்பியல்) ஆசிரியராக நியமனம் பெற்றார். 

ஆனால், இந்தக் கண்டு பிடிப்புக்கள் கோபெர்னிக்சின் அண்டவெளி பற்றிய கோட்பாடுகளை உறுதிப் படுத்த உதவினாலும், அதே கண்டு பிடிப்புக்கள் அவரைக் கத்தோலிக்கத் திருச்சபையோடு மோதலை உருவாக்கும் கட்டாயத்தையும் ஏற்படுத்தியது. அவரது வெனிசிய நகர நண்பர்கள் வெனிசிய அரசின் பாதுகாப்பை உதறித் தள்ளிவிட்டு உரோம் நகரத்துக்குப் போக  வேண்டாம் என எச்சரித்தார்கள். கலிலியோ அதைக் காதில் வாங்கிக் கொள்ளாது 1611 ஆம் ஆண்டு உரோமாபுரி போய்ச் சேர்ந்தார். அங்கு யேசுசபை  (Jesuit) பாதிரிமார்களது அறிமுகம் கிடைத்தது. தனக்குத் திருச்சபையோடு ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் அவர்கள் தன்னைக் காப்பாற்றுவார்கள் என்று எண்ணினார்.

அப்போது கிளேவியஸ் அடிகளார் (குயவாநச ஊடயஎரைள)  என்பவர் உரோமில் மிகவும் செல்வாக்கோடு இருந்தார். அவருக்கு வானியல்பற்றிய அறிவு நிறைய இருந்தது. அவர்தான் கிறகோரியன் நாள்காட்டியை (Gregorian Calendar) உருவாக்கியவர். அப்படி இருந்தும்  சந்திரனில் குன்றுகளும் குழிகளும் இருக்கிறது என்றும், வியாழனைச் சுற்றிப் பல சந்திரன்கள் வலம் வருகிறதென்றும் கலிலியோ சொல்லியதை கிளேவியஸ் அடிகளார் நம்ப மறுத்தார்.

கலிலியோ அடிகளாராது அவநம்பிக்கையைத் தீர்த்து வைப்பதற்குத் தன்னிடம் இருந்த தொலை நோக்கியை அவரிடம் கொடுத்து வான மண்டலத்தை அண்ணாந்து பார்க்குமாறு கேட்டார். வானவெளியைக் கலிலியோவின் தொலைநோக்கி மூலம் அடிகளார் பார்த்தபோது அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது! சந்திரனில் குன்றுகளும் குழிகள் இருப்பதையும், வியாழ கோளத்தைச் சுற்றி பல சந்திரன்கள் வலம் வருவதையும் அடிகளார் கண்ணாரக் கண்டார். அந்தக் காட்சிக்குப் பின்னர் கோபெர்னிக்சின் ஞாயிறுமைய சித்தாந்தை ஏற்றுக் கொள்வதைவிட அவருக்கு வேறு வழியே இருக்கவில்லை.  

அப்போது யேசு திருச்சபையின் முக்கிய சமயபோதகராக பெலார்மின் (Bekarmine) என்பவர் இருந்தார்.  அவர் கலிலியோ பற்றி யேசு சபையினரது கருத்தை அறிந்து கொள்ள  பொஸ்கரினி (யு.குழளஉயசயni) என்பவருக்கு 1615 ஆம் ஆண்டு ஏப்பிரில் மாதம் 12ம் நாள் ஒரு கடிதம் எழுதினார். அதன் ஒரு பகுதி பின்வருமாறு.  
“மூன்றாவதாக, ஞாயிறு இயலுலகத்தின் மையத்தில் இருக்கிறதென்றும், புவி வானுலகத்தில் மூன்றாவது இடத்தில் இருக்கிறதென்றும், ஞாயிறு புவியைச் சுற்றுவதற்குப் பதில் புவி ஞாயிற்றைச் சுற்றுகிறதென்றும் வைத்துக் கொண்டால், அது வேதாகமங்களுக்கு மாறாக இருப்பதால் ஞாயிறுமையக் கோட்பாட்டை மற்றவர்களுக்கு விளங்கப்படுத்தும்போது அந்தக் கோட்பாடு தவறு என்று சொல்வதைவிட, அது எங்களுக்கு விளங்கவில்லை என்று சொல்வதே உசிதமாக இருக்கும். ஆனால், என்னைப் பொறுத்தவரையில் அதனை என் கண்ணால் பார்க்குமட்டும் அது உண்மை என்பதை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன்.”

கலிலியோ 1613 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் கஸ்ரெலி (Castelli) என்ற தனது பழைய மாணாக்கன் ஒருவருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் வேதாகமங்கள் நாங்கள் இயற்கையில் காண்பவற்றை மறுக்க முடியாது. எனவே மனிதர்களது ஆன்ம ஈடேற்றத்துக்கு எழுதப்பட்ட வேதாகமங்களில் இயற்கைபற்றி ஒருவேளை நேர் சொற்பொருள் அல்லாது உருவகமாக (metaphorically)  எழுதியிருக்கலாம் எனக் குறிப்பிட்டிருந்தார்.  

பெலார்மினும் கலிலியோவும் இயற்கைபற்றி  ஒரு பொது உடன்பாட்டுக்கு வரலாம் என எண்ணியதை மேற்படி கடிதம் எடுத்துக் காட்டுவதாக உள்ளது. கலிலியோவிற்கும் யேசு சபையினருக்கும் இன்னொரு விடயத்தில் மோதல் எழுந்தது. ஞாயிறில் கறுத்த பொட்டுக்கள் இருப்பதைக் கலிலியோ தொலைநோக்கி மூலம் கண்டறிந்தார். அந்தக் கண்டு பிடிப்பு ஞாயிறு மாசுமறுவற்ற விண்கோள் என்ற மதநம்பிக்கையைத் தகர்த்தது.  
இந்தக் காலகட்டத்தில் கிறித்தவ தேவாலயத்தின் இன்னொரு பிரிவினரான டொமினிக்கன்ஸ் (Dominicans)  கோபெர்னிக்கன் அண்டகோளக் கோட்பாடுபற்றித் தெரிந்து கொண்டு  அதற்கு எதிராகப் பரப்புரை செய்யத் தொடங்கினார்கள். 5 ஆவது போப்பாண்டவர் போல் கோபெர்னிக்கன் கோட்பாட்டைத் தான் நிராகரித்த செய்தியை கலிலியோவிற்குத் தெரிவிக்கமாறு பெலாமினைக் கேட்டுக் கொண்டார். மேற்கொண்டு கலிலியோ புவி ஞாயிற்றைச் சுற்றுகிறது என்ற கோட்பாட்டை வைத்துக் கொள்ளவோ அதனை ஆதரித்துப் பேசவோ அல்லது மற்றவர்களுக்குப் படிப்பிக்கவோ கூடாது எனவும் கட்டளை பிறப்பித்தார். கலிலியோ புவி வலம்வருகிறது என்று  எழுதிய நூல் தடைசெய்யப்பட்ட நூல்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.  

1618 ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில் வானத்தில் 3 வால்வெள்ளிகள் தோன்றின. அந்த வால்வெள்ளிகள் கோள்களின் பாதைகளுக்கு அண்மையாக வலம் வருவதாக யேசு சபையைச் சேர்ந்த ஒரு முக்கிய மதபோதகர் எழுதினார். ஆனால், கலிலியோ அந்த வால்வெள்ளிகள் பெருமளவு நேர்க் கோட்டில் சுற்றிவருவதாகச் சொன்னார். இதனால் அவருக்கும் யேசுசபையினருக்கும் இடையில் உள்ள பகமை மேலும் வலுத்தது.

1623 ஆம் ஆண்டு 8 ஆவது போப் அர்பன் (Pope Urban V111) பதவிக்கு வந்தார். புதிய போப்பாண்டவர் தன்னை ஒரு பெரிய கல்விமானாகக் கருதினார். கலிலியோவின் கோட்பாட்டைப் போற்றினார். புதிய போப்பாண்டவரின்  வருகைக்குப் பின்னர் கோப்பெனிக்சின் கோட்பாடு எங்கும் பரவியது. 1632 ஆம் ஆண்டு கடல் வெள்ளம் பற்றிய உரையாடல்  (Dialogue on Tides)  என்ற நூலைக் கலிலியோ வெளியிட நினைத்தார். ஆனால், அதன் தலைப்பு புவி ஞாயிறைச் சுற்றிவருகிறது என்ற கருத்தைத் தோற்றுவிப்பதாக இருந்ததால் அதனை மாற்றுமாறு அவர் எச்சரிக்கப்பட்டார். எனவே அவர் அதன் பெயரை “தொலமி – கோபெர்னிக்ஸ் இருவரது உலகுபற்றிய இரு முக்கிய முறைகள்பற்றிய உரையாடல்” (Dialogue Concerning the Two Chief World Systems Dialogue Concerning the Two Chief systems of the World – Ptolemaic and Copernican என மாற்றினார்.  

கலிலியோவின் நூல் பிரசுரமானதும் அதனை உடனே நிறுத்துமாறு உரோம் நகர தண்ட உயர்மன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதோடு நின்றுவிடாமல் கலிலியோவைக் கைது செய்து  நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள்.  நீதிமன்றத்தில் கோபெர்னிக்கன் கோட்பாட்டை வெளியில் சொல்லக்கூடாது என்று யாரும் பணித்ததாகத் தனக்கு ஞாபகம் இல்லை என்று அவர் வாதாடினார். நீதிமன்ற விசாரணை நூலில் சொல்லப்பட்ட அறிவியல்பற்றி இருக்கவில்லை. கலிலியோ உத்தியோகக் கட்டளையை மீறினாரா இல்லையா என்பது பற்றியே விசாரணை இருந்தது. 

நூலில் கூறப்பட்ட கருத்துக்கள் பிழை என்று கலிலியோ ஒத்துக் கொண்டால் குறைந்த தண்டனை கொடுக்கப்படும் என்று அவருக்கு எடுத்துச் சொல்லப்பட்டது. அதனை ஒத்துக் கொண்ட கலிலியோ தானே தனது வாதத்தினால் அள்ளுப்பட்டுபோனதாகக் கூறினார். அவருக்கு முதலில் காலவரையற்ற சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. பேச்சு வார்த்தைக்குப் பின்னர் அவரது சிறைத் தண்டனை வீட்டுக் காவலாக மாற்றப்பட்டது. 1642 ஆம் ஆண்டு கலிலியோ இயற்கை எய்தினார். தனது மூப்புக் காலத்தில் கலிலியோ தான் எழுதிய நூலில் தனது கைப்படப் பின்வருமாறு எழுதினார். 
“மதவாதிகளே! நீங்கள் ஞாயிறு-புவி பற்றிக் கொண்டுள்ள நம்பிக்கை ஒரு காலத்தில் புவி நிலையாக இருக்கிறது ஞாயிறு அதைச் சுற்றி வருகிறது என்பவர்களை நம்பிக்கை ஈனர்கள் எனப் பெயர் சூட்ட வைத்துவிடும். அப்போது புவி ஞாயிறைச் சுற்றுகிறது என்ற உண்மைச் சடப்பொருள் மற்றும் தர்க்க அடிப்படையில் எண்பிக்கப்படும் என நான் நினைக்கிறேன்.”

கோபெர்னிக்கன் ஞாயிறு மையக் கோட்பாட்டுக்கு உயிர் கொடுத்த மூன்றாவது மூர்த்தி யோகனாஸ் கெப்லர் (Johannes Kepler)  ஆவார். இன்றைய ஜெர்மன் நாட்டின் (அன்றைய புனித உரோம சாம்ராச்சியம்) வுட்தெம்பேர்க் (Wurttemburg) நகரில் 1571 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 27 ஆம் நாள் பிறந்தார். மிகவும் நோஞ்சலான இவர் பிறந்த குடும்பம் வறுமையானது. ஆனால், படிப்பில் சுட்டியாக இருந்ததால் துபின்ஜென் (Tubingen) பல்கலைக் கழகத்தில் படிக்கப் புலமைப் பரிசு பெற்றார். அங்கு அவர் கோபெர்னிக்கன் கோட்பாட்டைப் படிக்க வாய்ப்பு ஏற்பட்டது. அதன் பலனாக அந்தக் கோட்பாட்டை ஆதரித்துப் பேசவும் எழுதவும் தொடங்கினார்.

பிராக் நகரத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற அரச கணித விற்பனரான ரிசோ பிராகே (Tycho Brahe)  இடம் சென்று அவரோடு பணிசெய்தார். பிராகெ 1601ஆம் ஆண்டு இறந்தபோது அவரது பதவிக்கு நியமனம் செய்யப்பட்டார். பிராகே சேகரித்து வைத்திருந்த தரவுகளின் அடிப்படையில் செவ்வாய்க் கோளின் சுற்று வட்டம் நீள் வட்ட வடிவமானது என்பதைக் கண்டு பிடித்தார். 1609ஆம் ஆண்டு  Astronomia Nova என்ற நூலை எழுதிப் பிரசுரித்தார். இந்த நூல் இவருக்கு “நவீன அறிவியலின் தந்தை” என்ற பட்டத்தைப் பெற்றுக் கொடுத்தது. முதல் முறையாக இந்த அறிவியலாளர் பேரெண்ணிக்கையில்  குறைபாடான தரவுகளை ஒழுங்கு படுத்தி இயற்கையின் மூல விதியைக் (the first time a scientist dealt with a multitude of imperfect data to arrive at a fundamental law of nature) கண்டு பிடித்தார்.

இப்படி அவர் மூன்று விதிகளைக் கண்டு பிடித்தார். 1621 ஆம் ஆண்டு ஏழு தொகுதிகளைக் கொண்ட வானியலின் சுருக்கம் (Epitome Astronomiae) என்ற நூலை வெளியிட்டார். இவர்தான் முதன் முதலில் கணிப்புகளுக்கு மடக்கையைப் (Logarithm) பயன்படுத்தி கோள்களின் சென்ற கால அல்லது வருங்கால நிலைகளைத் திருத்தமாகக் கண்டுகொள்ள வழிவகுத்தார். புதன் மற்றும் வெள்ளிக் கோள்கள் ஒரே நேர்க் கோட்டில் வருவதை இவர் முன்கூட்டியே கணக்கிட்டுச் சொன்னார். ஆனால், அந்த நிகழ்வு இடம்பெறும் முன் 1630 ஆம் ஆண்டு கெப்லர் இயற்கை எய்தினார்.

கெப்லர் எத்தனையோ முதல்களின் மூலவர். அவற்;றில் சில,

(1) தொலைநோக்கி எப்படிச் செயல்படுகின்றது என்பதை விளக்கியது.

(2) இவர் எழுதிய Stereometrica Doliorum நூல் ஒருமுனைப்படுத்தப் பட்ட கல்கியூலசுக்கு அடிப்படையாக அமைந்தது.

(3) கடல் பொங்குவதற்கு சந்திரனே காரணம் என விளக்கியது.

(4) விண்மீன்களின் தூரத்தைக் கணக்கிட புவியின் சுழற்சியால் ஏற்படுகிற  tellar parallax யைப் பயன் படுத்தியது.

(5) ஞாயிறு தனது அச்சில் சுழல்வதாகச் சொன்னது.

(6) யேசுநாதர் பிறந்த ஆண்டைச் சரியாகக் கணக்கிட்டுச் சொன்னது.   அடுத்த கிழமை நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் ஹவானாவில்  மீண்டும் சந்திப்போம்.  

——————————————————————————————————————–
 

கியூபா பயணக் கட்டுரை (59)
ஒரு பருந்தின் கீழ்
“தரை” “தரை” எனக் கூவினார்!

தெற்கு நோக்கிக் கிளிகளின் சாயலில் பறந்த ஒரு கூட்டம் பறவையைக் கண்ட தண்டயல் அலன்சோ பின்சொன் (Captain Alonso Pinzon) அதுவரை மேற்குத்திசை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த கப்பலின் திசையை தென்மேற்காகத் திருப்புமாறு கொலம்பசிடம் கெஞ்சி மன்றாடியதை அடுத்து கொலம்பஸ் தனது விருப்பத்துக்கு மாறாக அப்படியே கப்பலைத் திருப்ப, கப்பல் கியூபா நோக்கி விரைந்ததைப் பார்த்தோம் அல்லவா?  

அப்போதுகூட கொலம்பஸ் யப்பானிய தீவுகளில் ஒன்றான காதே நோக்கித்தான் கப்பல் செல்வதாக நம்பினார். அதுமட்டுமல்ல காதே (ஊயவாயல) மற்றும் யப்பானிய தீவுகள் ஒரு சில லீக்ஸ் (ஒரு  லீக் ஏறத்தாள மூன்று மைல் தூரம்) தூரத்தில் இருப்பதாகவும் கொலம்பஸ் நம்பினார். ஆனால், உண்மையில் இந்தத் தீவுகள் மேற்குத் திசையில் அமெரிக்கக் கண்டத்துக்கு அப்பால் ஆயிரக்கணக்கான மைல்  தொலைவில் உள்ள பசிபிக் சமுத்திரத்தில் இருப்பது தெரிந்ததே. இன்னும் இரண்டொரு நாளில் இந்தத் தீவுகளில் உள்ள நகரங்களையும், கோட்டை கோபுரங்களையும், அரண்மனைகளையும் கண்ணாரக் காணப் போவதாகக் கொலம்பஸ் கனவு கண்டார். 

கனரீஸ் நகரில் இருந்து புறப்படு முன்னர் யார் முதலில் நிலப்பரப்பைக் காண்கிறார்களோ அவருக்கு ஒரு பட்டுச் சட்டையும், 500 டொலர் பணம் பரிசாகக் கொடுக்கப்படும் என்று கொலம்பஸ் அறிவித்திருந்தார். எனவே எல்லா மாலுமிகளது கண்களும் தரை எங்கேயாவது தெரிகிறதா எனத் துளாவிக் கொண்டிருந்தன.  
பாலோஸ் நகரத்தைவிட்டுப் புறப்பட்டுப் 10 கிழமை கழிந்து விட்டன. 1942 ஆம் ஆண்டு ஒக்தோபர் மாதம் 11ஆம் நாள் மாலை 10 மணிக்கு சாந்தா மேரியா என்ற கப்பலின் கடையாலில் (stern)  நின்று கொண்டிருந்தபோது கரையோரமாக அசைந்தோடும் வெளிச்சம் ஒன்று கொலம்பசின் கண்களுக்குத் தெரிந்தது. அது யாரோ ஒருவர் கையில் தீப்பந்தத்தைப்  பிடித்துக் கொண்டு ஓடுவதுபோன்று இருந்தது.

அடுத்த நாள் 12 ஆம் நாள் காலை  2.30 மணிக்கு கப்பல் மாலுமி றொட்ரிக்கோ தரைனாவின் (சுழனசபைழ வுசயையெ)  கூரிய கண்களுக்கு மிகக் கிட்டிய தொலைவில் பரந்து விரிந்து கிடந்த  கடற்கரை தென்பட்டது.  உடனே அவர் “தரை” “தரை” எனக் கூவினார்!  கப்பல்கள் கிட்டிய தூரம்வரை  கரையை அண்டி ஒரு புதிய உலகில் நங்கூரம் பாய்ச்சின. 

இது எந்த இடம்? காதேயா? நிச்சயமாகக் காதே என்றுதான் கொலம்பஸ்  நம்பினார். காலையில் கிழக்கே சூரியன் உதயமாகும்போது காதே நாட்டு மன்னர்களது அதிசயம் நிறைந்த பொன்வேய்ந்த அரண்மனைகள்,  பளிங்கினால் ஆன கோபுரங்களை காணலாம் என்ற கனவில் கொலம்பஸ் மிதந்தார்!  

பண்டைக் காலத்தில் காலத்தைக் கணிப்பது பெரிய சிக்கலாக இருந்து வந்திருக்கிறது. நாள்காட்டித் தொகுதியின் வரலாறுபற்றி மேலெழுந்தவாரியாக முன்னரே சொல்லியிருக்கிறேன். ஆண்டுகளை ஞாயிறு, திங்கள் இரண்டினதும் சுழற்சியை வைத்துக் கணக்கிட்டபோது இரண்டுக்கும் இடையில் வித்தியாசம் ஏற்பட்டது. அதுகூடப் பருவாயில்லை. ஞாயிற்றின் சுழற்சியை  வைத்துக் கணக்கிட்டபோதே ஆண்டுகளின் கணிப்புப் பிழைத்தது. காரணம் புவி ஞாயிற்றைச்  சுற்றிவர  எடுக்கும் சரியான காலம் 365.2422  நாள்கள் ஆகும். அதாவது 6 மணி 11 மணித்துளி 14 வினாடி (.2422) அதிகம்.

Mனால், கிமு 45 இல் யூலியஸ் சீசர் (Julius Caesar) அவர்களால் அறிமுகப் படுத்தப்பட்ட யூலியன்  நாள்காட்டி ஒரு ஆண்டில் 365 1/4 நாள்கள் இருப்பதாகக் கணித்து நான்கு கால் நாளை ஒரு நாளாக எடுத்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை (leap year) ஒரு நாளை மேலதிகமாகச் சேர்த்தது.  

அப்படியிருந்தும் 1582 ஆம் ஆண்டு  அளவில்  இந்தத் தவறு (11 மணித்துளி 14 விநாடி) 12 நாளாகத் திரண்டுவிட்டது. இதனால் ஞாயிறு நடுக்கோட்டினைக் கடந்து செல்லும் இளவேனிற் காலத்தை (Equinox) வைத்துக் கணிக்கப்படும் தேவாலய விடுமுறை நாள்கள் சரியான பருவ காலத்தில் இடம் பெறவில்லை. மார்ச்சு மாதம் 20 – 21 இல் வரவேண்டிய இளவேனிற்காலம் மார்ச்சு மாத ஆரம்பத்திலேயே வரத் தொடங்கியது. இந்தத் தவறினை 13 ஆவது போப் கிறகெறி  (1502 – 1585)  திருத்தி அமைக்க உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி கி.பி. 1582 ஆம் ஆண்டு ஒக்தோபர் 4 ஆம் நாளுக்கு அடுத்த நாள்  ஒக்தோபர் 15 என மாற்றி 12 நாள்கள் குறைக்கப்பட்டது. மேலும் நாலால் வகுக்கக் கூடிய நூற்றாண்டு  (எடுத்துக் காட்டு 1600, 1700, 1800,1900, 2000) தாவு ஆண்டாக (டநயி லநயச)  அறிவிக்கப்பட்டது.  

இந்த மாற்றத்தை எல்லா நாடுகளும் உடனடியாக ஏற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாக புரட்டஸ்தானிய மதத்தைக் கடைப்பிடித்த நாடுகள் கத்தோலிக்க போப்பாண்டவர் கொண்டுவந்த திருத்தத்தை ஏற்க மறுத்தன. ஆனால், நாளடைவில் அய்ரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகள் புதிய கிறகேரியன் நாள்காட்டியை ஏற்றுக் கொண்டன. கி.பி. 1752 ஆம் ஆண்டு அதனை ஏற்றுக் கொண்ட பிரித்தானியா செப்தெம்பர் 2 ஆம் நாளை அடுத்து செம்தெம்பர் 14 என அறிவித்தது.  

கிறகேரியன் நாள்காட்டித் தொகுதிக்கு இன்னொரு பெயர் கிறிஸ்தியன்  நாள்காட்டித்  தொகுதி என்பதாகும்.  காரணம் யேசுநாதரின் பிறந்த ஆண்டை சுழியமாகக் கணக்கிட்டது ஆகும்.     

உண்மையில் பழைய நாள்காட்டித் தொகுதியின்படி கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டு பிடித்த நாள் ஒக்தோபர் 12 ஆக இருக்க வேண்டும். ஆனால், அதன்பின்  ஒரு  நூறாண்டு கழித்து நடைமுறைக்கு வந்த புதிய முறையின்படி அது ஒக்தோபர் 21 ஆகும். ஆன காரணத்தினாலேயே கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டு பிடித்த 500வது ஆண்டு  விழாவை 1992 ஆம் ஆண்டு ஒக்தோபர் 21 இல் கொண்டாடினார்கள். 
கொலம்பசைப் பொறுத்தளவில் தாம்; ஒரு யப்பானிய தீவைக் கண்டு பிடித்து விட்டதாக  மனதார நம்பினார். எனவே அந்தத் தீவை இசுப்பானிய அரசியின் பெயரால் கையெடுக்க ஆயத்தமானார்.

ஒரு நாட்டைச் சேர்ந்த ஒருவர் கப்பலில் பயணம் செய்து வேறொரு நாட்டுக்கு உரித்தான நிலப்பரப்பை சென்றடைந்து அங்கு தனது அரசி அல்லது அரசரின் பெயரால் “இந்த நிலப்பரப்பு என்னுடைய அரசி(ச)ரது என எவ்வாறு கூறமுடியும்” என்ற கேள்விக்கு விடை சொல்வது கடினம். ஆனால், ஒரு பழைய  பொன்மொழி ஒன்றுண்டு. “வல்லவன் வகுத்ததே வாய்க்கால்” (ஆiபாவ ளை சiபாவ)  என்பதுதான் அந்தப் பொன்மொழி. எங்கள் கண்முன்னே மிகவும் வறுமைப்பட்ட, நீண்ட காலம் உள்நாட்டுப் போரினால் சின்னா பின்னமாகிவிட்ட ஏழை ஆப்கனிஸ்தான் நாட்டைப் பெரிய வல்லரசான அமெரிக்கா அதன் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை ஏவி, பத்தாயிரத்துக்கும் அதிகமான குண்டுகளை வீசி அந்த நாட்டைத் தகர்த்து கல் மேடாக்குவது  இந்த வல்லவன் வகுத்ததே வாய்க்கால் என்ற கோட்பாட்டின் அடிப்படையிலேதான்.  

இப்படி நாடு பிடிக்கும் வெறியோடு புறப்பட்ட கடலோடிகள் (explorers)  முன் தாம் பார்த்திராத ஒரு புதிய நாட்டைக் கண்டதும் “இது என்னுடையதும் எனது அரசரதும் நாடு!” என்று சொல்லிப் பிடித்த நாடுகள்தான் கனடா, அமெரிக்கா, பிரேசில், சிலி, மெக்சிக்கோ போன்ற நாடுகள். அவர்கள் கண்ணோட்டத்தில் இந்தப் புறசமய நாடுகள் (Pயபயn டயனௌ) அமெரிக்கக் கண்டத்தில் முதல் காலடி எடுத்து வைத்த அய்ரோப்பியரது அரசருக்குச் சொந்தமானது என்பது அவர்களது நம்பிக்கை ஆகும்.  ஆனால்,  இப்படி அவர்கள் அயிரோப்பியாவில் நடந்து கொள்ளவில்லை.  

கொலம்பஸ் சாந்தா மேரியா கப்பலில் இருந்து ஒரு  தோணியைக்  கீழ் இறக்கி அதில் தன்னோடு இரண்டு முக்கிய பணியாளர்கள் மற்றும் சில மாலுமிகளையும் ஏற்றிக்கொண்டு அந்தத் தீவை நோக்கி வலித்துக் கொண்டு போனார்கள். சில நாள்களுக்கு முன்னர் யாரைக் கொல்ல முனைந்தார்களோ அவருக்கு எல்லா மாலுமிகளும் சேர்ந்து  நல்வாழ்த்துக்  கூறி வழி அனுப்பி வைத்தார்கள். தாங்கள் “விசரன்” என எண்ணிய ஆள் இவ்வளவு அழகான தீவுக்குத் தங்களை வாக்குக் கொடுத்த வண்ணம் கொண்டுவந்து சேர்த்ததை நினைக்க அவர்களுக்கு மகிழ்ச்சியாகவும் வியப்பாகவும் இருந்தது.  

சரி வந்தால் போற்றுவதும் பிழைத்தால் தூற்றுவதும் உலக வழக்கம். தேர்தலில் ஒரு கட்சி வென்றால் அந்தக் கட்சியின் கொள்கை விளக்கம், பரப்புரை, வேட்பாளர்கள், தலைவரின் மதிநுட்பம் எல்லாம் கச்சிதமாக இருந்தது எனப் போற்றப்படும். மாறாகத் தோற்றுப் போனால் அதற்கு நேர்மாறாக எல்லாமே பிழைத்து விட்டது எனக் கண்டனக் கணைகள் சீறி எழும்.   

தோணியில் கொலம்பசோடு இருந்த  இருவரும் உங்களுக்கு  ஏற்கனவே அறிமுகமான வர்கள்.  ஒருவர் தங்கப் பாளங்களைப் பரிசோதனை செய்ய அழைத்துவரப்பட்ட அவரது பிரதான  பரிசோதகர். மற்றவர் ஒப்பந்தங்கள் எழுதக் கூட்டி வரப்பட்ட அவரது சட்டவாதி.  

கொலம்பஸ் தனது கவசத்துக்கு மேலாக  செவ்வண்ணத்தில்  ஒரு மேலங்கி அணிந்திருந்தார். இவர்களுக்குப் பின்னால் தண்டையல் அலொன்சோ பின்சன் பிந்தா என்னும் கப்பலில் இருந்து இறக்கப்பட்ட தோணியில் வந்து கொண்டிருந்தார். நீனா என்ற மூன்றாவது கப்பலில் இருந்து கீழிறக்கிய மற்றுமொரு தோணியில் அவரது உடன்பிறப்பான தண்டயல் வின்சென்ட் பின்சொன் விரைந்து வந்தார். மூன்று பேருமே ஆளுக்கொரு “பச்சைச் சிலுவை” என்று எழுதப்பட்ட பதாதைகளைக் கொண்டு வந்தார்கள். அந்தப் பதாதைகளில் இசுப்பானிய  நாட்டின் அரசர் அரசி இருவரதும் தலை எழுத்துக்கள் (inவையைடள) எழுதப்பட்டிருந்தன.  

அவர்கள் தீவை நெருங்கியபோது கரையில் ஒரு சில மனிதர்கள் நிற்பதைப் பார்த்தார்கள். காதேயில் இருக்கும் மக்கள்  உடுத்தும் ஆடம்பரமான உடையில் இருப்பார்கள் என்ற இசுப்பானியர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அந்த மனிதர்களது உடை இருக்கவில்லை. உண்மையைச் சொன்னால் அவர்கள் அதிகம் உடுத்திருக்கவே இல்லை. மேனி முழுதும் கொழுப்பும் வர்ணமும் மட்டுமே பூசி இருந்தார்கள்.   

அந்தப் பச்சைத் தீவு பாதி மரங்களால் மூடப்பட்டு அளவில் சிறிதாகவும்,  தாழ்ந்தாகவும், தட்டையாகவும் காட்சி அளித்தது. உண்மையில் அந்தத் தீவு புளோரிடா முனையில் இருந்து ஹெயிட்டிவரை (ர்யவைi) விரிந்து பரந்து கிடந்த மூவாயிரத்துக்கும் அதிகமான பகாமாஸ் கடற்பாறைத் தீவுகளில் (Coral Islands) ஒன்றாகும். கொலம்பஸ் தரையிறங்கிய அந்தத் தீவை பூர்வீகக் குடிமக்கள் குவானாகானி  (Guanahani)  என்ற பெயர் கொண்டு அழைத்தார்கள். அது இன்று ஒன்றில் உலகப்படத்தில்  பூனைத் தீவு (Cat Island) அல்லது வட்லிங் தீவு (Watlings Island)  என்று அழைக்கப்படும் தீவுகளில் ஒன்றாக இருக்க வேண்டும். எது சரியாக இருக்கலாம் எனப் பல புலமையாளர்கள் விவாதித்த பின்னர் அது வட்லிங் தீவு என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள்.

சூரிய ஒளியில் குளித்துக் கொண்டு பளபளக்கும் மாடங்களையும், கோபுரங்களையும், அரண்மனைகளையும், பட்டிலும் பருத்தியிலும் நெய்த வண்ண வண்ண  ஆடைகளை அணிந்த மனிதர்களையும் காணும் அறிகுறி ஒன்றும் அந்தப் பச்சைத் தீவில் தென் படாதது கொலம்பசுக்கு மிகப் பெரிய ஏமாற்றமாக இருந்தது என்பதைச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை!   

———————————————————————————————————-

கியூபா பணயக் கட்டுரை (60)
ஒரு பருந்தின் நிழலில்
அடிமை வாணிகத்தை தொடக்கி வைத்த முதல் மனிதன் கொலம்பஸ்!


ஒருக்கால் இந்தத் தீவு காதேயில் இருந்து நெடுந்தூரத்தில் இருக்கிற தீவாக இருக்கலாம். இங்கு வாழ்பவர்களும் உண்மையான காதேயின் மக்கள் இல்லை போலும் என்று கொலம்பஸ் தன்னைத்தானே தேற்றிக் கொண்டார்.  

தன்னைச் சுற்றி மாலுமிகளும், தண்டயல்களும், முக்கிய அதிகாரிகளும் புடைசூழத் தோணியில் இருந்து இறங்கி தரையில் காலடி எடுத்து வைத்தார். ஒரு  கையில் பதாதையும் மறு கையில் வாளையும் வைத்துக்கொண்டு “இந்தத் தீவை எனது புரவலரும் கஸ்தைல் (Castile) இராச்சியத்தின் அரசியான இசபெல்லாவின்; பெயரில் கையகப் படுத்துகிறேன். இந்தத் தீவிற்கு சன் சல்வாடோர் (San Salvador) எனப் பெயரிடுகிறேன்” என உரத்த குரலில் கொலம்பஸ் பிரகடனம் செய்தார். அவர் சொன்ன சரியான வார்த்தைகள் எவை என்பது தெரியவில்லை. இப்படித்தான்  அவர் சொல்லியிருப்பார் என்று ஊகிப்பதில் தவறில்லை. 

சன் சல்வடோர் என்றால் பரிசுத்த இரட்சகர் (யேசுநாதர்)  அல்லது மீட்பவர் என்பது பொருளாகும். கொலம்பஸ் மட்டுமல்ல அவரைப்  பின்தொடர்ந்து நாடுகளைக் கைப்பற்றிய கடலோடிகள் விவிலிய வேதத்தில் உள்ள பெயர்களை அல்லது கிறித்தவ சமயப் பெயர்களை அந்த நாடுகளுக்குச் சூட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  
கொலம்பஸ் செய்த பிரகடனத்தைக் கேட்ட மாலுமிகளும் தண்டயல்களும் கொலம்பசுக்கு எதிராகத் தாங்கள் கூறிய சுடுமொழிகளைப் பொறுத்தருளி மன்னிக்குமாறு அவரது காலில் பயபக்தியோடு விழுந்து மன்றாடினார்கள்.  
“காதேயைக் கண்டு பிடித்து விட்டீர்கள். இனி நீங்கள்தான் எங்களது தலைவர். எங்களை நீங்கள் செல்வந்தர்களாகவும் செல்வாக்குள்ளவர்களாகவும் ஆக்கப் போகிறீர்கள். தளபதிக்கு ஜே!” என்று எல்லோரும் கத்தினார்கள்.  

பிறந்தமேனியரான அந்தத் தீவு மக்கள் இந்தக் காட்சியைப் பார்த்து வியந்து போனார்கள். இறக்கைகள் உடைய ஓடங்கள் (கப்பல்களை அப்படித்தான் அழைத்தார்கள்), ஆடம்பர உடை அணிந்து தாடி வைத்திருந்த வெள்ளை முகங்கள், கொடிகள், வாள்கள், செவ்வண்ண அங்கி அணிந்து கம்பீரமாகக் காட்சியளித்த கிழவனை முளந்தாள் இட்டு வணங்கிய பயபக்தி……. இவ்வாறு தங்களுக்குள் கதைத்துக் கொண்டார்கள். உடனே அவர்களும் கொலம்பசும் அவரது கூட்டாளிகளும் தேவலோகத்தில் இருந்து வந்தவர்கள் என்று எண்ணி தரையில் விழுந்து வணங்கி எழுந்தார்கள். தேவலோகத்தில் இருந்து வந்தவர்கள் தங்களைத் தாக்க முன்வராததைக் கண்ட அவர்கள் தைரியமாக நெருங்கினார்கள்.

இந்தச் சம்பவத்தை கொலம்பஸ் கொலம்பஸ் பின்வருமாறு தனது குறிப்புப் புத்தகத்தில் எழுதினார். 

“அவர்கள் எல்லோரும் வந்து ஒரு இடத்தில் கூடினார்கள்………இரு சாராரும் நட்பை வளர்த்துக் கொள்ளலாம் என்றார்கள். நான்  அவர்கள் கழுத்தில் அணியுமாறு கண்ணாடி உருத்திராட்ச மணிகள் (glass beads) பருந்து மணிகள் (hawks bells) சிவப்புத் தொப்பிகள் மற்றும் சிறுபெறுமதி வாய்ந்த பொருள்களைக் கொடுத்தேன். அவை அவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுத்தது. நாங்கள் அவர்களுக்குச் சிறந்த நண்பர்களானோம்.” 

“இந்தக் காட்சி கண்கொளாக் காட்சியாக இருந்தது. அவர்கள்  தங்களிடம் இருந்த எல்லாப் பொருட்களையுமே மகிழ்ச்சியோடு  எங்களுக்கு விற்பனை செய்தார்கள். கிளிகள், பருத்தி நூல்கட்டைகள், ஈட்டிகள,; கண்ணாடி உருத்திராட்ச மணிகள், மணிகள் மற்றும் அநேக பொருள்கள் ஆகியனவை பண்டமாற்றம் செய்யப்பட்டன. அவர்கள் ஆயுதங்கள் வைத்திருக்கவில்லை. இரும்பால் செய்த எந்த ஆயுதங்களும் அவர்களிடம் இருக்கவில்லை. அவர்களுக்கு  இரும்புபற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. தங்கள் ஈட்டியை மரத்தினால் செய்து அதன் நுனியில் எலும்பைப் பொருத்தி இருந்தார்கள்.
நான் அவர்களிடம் ஒரு வாளைக்  கொடுத்தபோது  அறியாமையால் அதனை உட்பக்கமாகப் பிடித்து கையை வெட்டிக் கொண்டார்கள்.

இவர்கள் வேலைக்காரர்களாக ஊழியம் செய்யத் மிகவும் தோதானவர்கள். ஒரு அய்ம்பது பேர் போதும் இவர்கள் எல்லோரையும் மடக்கிப் பிடித்து எமக்கு எது தேவையோ அவற்றை அவர்களைக் கொண்டு செய்விப்பதற்கு.” 

கொலம்பஸ் தனது நாள்குறிப்புப் புத்தகத்தில் ( ஒக்தோபர் 12, 1492) தெய்னோ (Taino) மக்களின் தோற்றம் அவர்கள் மேனியில் பூசியிருந்த மை பற்றிப் பின்வருமாறு எழுதினார்.

தெய்னோ ஆணின் தோற்றம் “தாய்மார் பெற்றபோது எப்படிப் பிறந்தமேனியராய்க்; காணப்பட்டார்களோ அப்படிக் காணப்பட்டார்கள். பெண்களும் அப்படியே. ஒரேயொரு குமரிப் பெண்ணை மட்டும் கண்டேன். நான் கண்டவர்களில் அநேகர் இளைஞர்கள். முப்பது அகவையைத் தாண்டாதவர்கள். அவர்கள் நல்ல திடகாத்திரமாகவும் பார்க்க மிக வடிவாகவும் இருந்தார்கள்.  எல்லோருக்கும் நல்ல முகவெட்டு, தலைமுடி கட்டையாகவும் முரடாகவும் இருந்தது, முன்பக்கப் புருவங்கள் மட்டும் நீண்டு இருந்தன, தலைக்குப் பின்னால் மயிர் நீண்டதாக இருந்தது, தலைமுடியை வெட்டும் வழக்கம் இருக்கவில்லை.

சிலர் தங்கள் உடலில் வெள்ளை மை பூசி இருந்தார்கள், சிலர் சிவப்பு மை பூசி இருந்தார்கள், மற்றவர்கள் எந்த நிறம் கிடைக்கிறதோ அவற்றைப் பூசினார்கள். சிலர் தங்கள் முகங்களுக்கு மட்டும் பூசினார்கள். சிலர் உடல் முழுதும் பூசினார்கள், சிலர் தங்கள் கண்களைச் சுற்றி மட்டும் பூசினார்கள், இன்னும் சிலர் மூக்குக்கு மட்டும் பூசினார்கள்.” 

“நான் “இந்தியாவில்” உள்ள முதல் தீவைக் கண்டு பிடித்ததும்,  இந்தப் பகுதியைப் பற்றிய செய்திகளை அறிய உள்ளுர்வாசிகள் பலரைப் பலவந்தமாகப் பிடித்து வைத்துக் கொண்டேன்.”

இசுப்பானிய நாட்டுக் கருவூலத்துக்குக் கொண்டுவந்து குவிக்கும் தங்கம் வாசனைப் பொருட்களின் பெறுமதியில் கொலம்பசுக்கு 10 விழுக்காடு, கண்டு பிடித்த நாடுகளுக்கு கொலம்பஸ் ஆளுநராக நியமனம் மற்றும் கடற்படைத் தளபதி என்ற பட்டம் ஆகியன வழங்;கப்படும் என்று கொலம்பஸ் இசுப்பானிய அரசோடு ஒப்பந்தம் எழுதிக் கொண்டது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.   

கொலம்பசின் கடல் பயணத்தின் முக்கிய குறிக்கோள் காதேயைக் கண்டுபிடித்து அங்குள்ள தங்கம், மாணிக்கம் மற்றும் வாசனைப் பொருட்களை அள்ளிச் செல்வதுதான். எனவே கொலம்பஸ் அந்தத் தீவு மக்களிடம்- இந்தியாவின் கரையை அடைந்துவிட்டதாக நினைத்து அவர்களை கொலம்பஸ் இந்தியர் என்றே அழைத்தார்- காதே எங்கிருக்கக் கூடும் என மெல்லக் கேட்டார். அவரது கேள்வி இந்தியர்களுக்கு விளங்கவில்லை என்பதை நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை.  

கிட்டத்தட்ட ஒரு டசின் மொழிகளைத் தெரிந்த லூயிஸ் என்ற மொழிபெயர்ப்பாளர் அந்த மொழிகள் எல்லாவற்றிலும் கேட்டுப் பார்த்தும் பலன் ஒன்றும் கிடைக்கவில்லை. ஆனால், இந்தியர்கள் காட்டிய கை அசைவுகள், அவர்கள் பேசிய ஒலிக்குறிப்புக்கள் இவற்றை வைத்து காதே எங்கோ தென்மேற்கே இருக்க வேண்டும் என்று கொலம்பஸ் தன்பாட்டில் விளங்கிக் கொண்டார். தான் தேடி வந்த தங்கமும் அங்குதான் இருக்க வேண்டும் என்று நம்பினார். 

இந்த நம்பிக்கைக்கு ஒரு சின்னக் காரணம் இருந்தது. இந்தியர்களது காதுகளிலும் மூக்கிலும் சிறு சிறு பவுண் நகைகள் தொங்கிக் கொண்டிருந்தன. ஆனபடியால் அவர்களைவிட நாகரிகமான மக்களிடம் மஞ்சள் நிறத் தங்கக் கட்டிகள் பெருவாரியாக இருக்க வேண்டும் என்று நம்பினார்.

அவர்களது கைப் பாசையை வைத்து தெற்கே ஒரு மன்னன் ஆட்சி செய்வதாகவும்; அவனிடம் ஏராளமான தங்கம் இருக்க வேண்டும் என கொலம்பஸ் நினைத்தார். கொலம்பஸ் சில சங்கதிகளைக் கேட்டறிந்து கொண்டார். குவானாகானியில் (Guanahani) வாழும் தெய்னா மக்களுக்கு கனிபா (Caniba) என்ற தீவுகளில் வாழ்பவர்கள் எதிரிகளாக இருந்தார்கள் என்பது அவற்றில் ஒன்றாகும்.     
“பலரது உடம்பில் காயங்கள் இருப்பதைக் கண்டேன். கை அசைவு மூலம் அவை என்னவென்று கேட்டேன். பக்கத்திலுள்ள  தீவுகளில் இருந்து எங்களைப் பிடிக்கும் நோக்கோடு வருவார்கள். நாங்கள் எங்களைப் பாதுகாத்துக் கொள்ள சண்டை செய்வோம். அப்போது பெற்ற காயங்கள்தான் இவை எனச் சொன்னார்கள்.  பெரிய தீவுகளில் இருந்து இவர்களைச் சிறைப் பிடித்துப் போக வருகிறார்கள் என்று நான் நினைத்துக் கொண்டேன்.” 
கொலம்பசுக்கு  மகிழ்ச்சி பிடிபடவில்லை. வெற்றி கைக்கு எட்டிய தூரத்தில் இருப்பதாக எண்ணினார். யப்பான், சீனா, இந்தியா எல்லாம் கிட்ட இருப்பதாகக் கற்பனை செய்தார். ஆனால், ஒன்றை மட்டும் அவர் நினைத்துப் பார்க்கவில்லை. அதுதான் அமெரிக்கா என்ற ஒரு புதிய உலகத்தைக் தான் கண்டு பிடித்த உண்மை. அவர் இறக்குமட்டும் அந்த உண்மை அவருக்குத் தெரியவில்லை.  
ஆசியாவின் கிழக்குக் கரையில் தரை இறங்கியாச்சு. இனி இந்தியாவை அடைய கிட்டடிப் பாதையைக் கண்டு பிடிக்க வேண்டும். அதுதான் கொலம்பசின் சிக்கலாக ஆக இருந்தது. 
தங்க வயல்களைக் காணோம் அடுத்து என்ன செய்வது? கொலம்பசுக்கு ஒரு யோசனை தோன்றியது. இந்த இந்தியர்களை வைத்து அடிமை வாணிகம் செய்து பணம் சம்பாதிக்கலாம் என நினைத்தார்.  உடனே கொலம்பஸ் செயலில் இறங்கினார். ஆண், பெண், குழந்தைகள் என 1,500 அறவாக் (யுசயறயம)  மக்களைச் சுற்றி வளைத்துப் பிடித்து மிருகங்களைக் கூண்டில் அடைத்து வைப்பது போல கூண்டில் அடைத்தார். அவர்கள் தப்பி ஓடிவிடாமல் இருக்க இசுப்பானியர்களையும் நாய்களையும் காவலுக்கு நிறுத்தினார்.  
அடுத்த நாள் அங்கிருந்து புறப்படுமுன் அவர்களில் திடகாத்திரமான 500 பேரைத் தெரிவு செய்து கப்பல்களில் ஏற்றினார்கள். இசுப்பானியாவிற்குக் கப்பல் திரும்பியபோது 300 பேர் மட்டும் பிழைத்தார்கள். மற்றவர்கள் வழிப் பயணத்தில் இறந்து  பட்டார்கள். இசுப்பானியாவை அடைந்ததும் எஞ்சியவர்கள் விற்பனைக்கு விடப் பட்டார்கள். 

அடுத்த நாள் கொலம்பஸ் வேறு தீவுகளைக் கண்டு பிடிக்கும் நோக்கோடு கப்பலில் புறப்பட்டார். முதலில் தரையிறங்கிய தீவைப் போன்ற பல அழகான தீவுகளையும் அவற்றில் வாழ்ந்த மக்களையும் கண்டு பிடித்தார். அதுபற்றிய விபரத்தை இசுப்பானிய அரசருக்கும் அரசியாருக்கும் தெரிவிப்பதற்கு ஒரு மடல் வரைந்தார். 

“இந்த நாடு எப்படிப் பகல் இரவைவிட வனப்பாக இருக்கிறதோ அப்படி ஏனைய நாடுகளைவிட அழகாக இருக்கிறது. இங்கு வாழும் பூர்வீக குடிமக்கள் தங்களை நேசிக்கிறது போலவே தங்கள் அயலவர்களையும் நேசிக்கிறார்கள். அவர்களது உரையாடல் மிக இனிமையாக இருக்கிறது. முகங்களில் எப்போதும் புன்னகை. எங்களுடன் கனிவாகவும் அன்பாகவும் பழகுகிறார்கள். நான் மகாராணியாரின் பெயரால் சத்தியம் செய்கிறேன் இவர்களைவிட உயர்வானவர்கள் இந்த உலகத்திலேயே காணமுடியாது.”   

இப்படி எழுதின கொலம்பஸ் தன்மீது நம்பிக்கை வைத்து அன்புகாட்டிய அந்த அப்பாவிமக்களை ஏன் சின்னத்தனமாக நடத்தினார்? கொலம்பஸ்தான் அவர்களை அந்தத் தீவுகளில் இருந்து பிடித்துச் சென்று  வெள்ளையர்களுக்கு அடிமைகளாக விற்றுப் பணம் சம்பாதிக்கலாம் என்று திட்டம் போட்ட முதல் மனிதன்!  

About editor 3047 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply