ஈழம் அல்லது எல்லாம்: வன்முறையற்ற குழப்பத்தை ஊக்குவிப்பதற்கான ஒரு திட்டம்

ஈழம் அல்லது எல்லாம்: வன்முறையற்ற குழப்பத்தை ஊக்குவிப்பதற்கான ஒரு திட்டம்  

இரத்னஜீவன் எச். ஹூல்

ஈழம்: அனைத்தும், இப்போது சிறிது, பின்னர் மேலும்

1970 களின் முற்பகுதியில் ஒரு இளங்கலை மாணவனாக இருந்தபோது, தரப்படுத்தலுக்கு எதிரான மாணவர் இயக்கத்திலிருந்து ஈழத்துக்கான அழைப்பு வந்தது.  அந்தச்  சமயத்தில் ஒரு பொறியியல் பேராசிரியர்   எங்களுக்கு  இழைக்கப்பட்ட உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற  கூக்குரலை  ஈழத்துக்கான கூக்குரல்  என்று கேலி செய்தார். அதாவது அனைத்தும்,  இப்போது சிறிது, பின்னர் மேலும்  எனக் கேட்பது.

சிங்கள அரசின் சொந்தத் திட்டங்களின் பிரதிபலிப்பாக ஈழம் உள்ளது.

மாணவர்களின் ஈழப்போராட்டம் தொடங்கிய பின்னர் கடந்த 50 ஆண்டுகளில், உண்மையிலேயே அடர்த்தியான மனநிலையுள்ளவர்களைத் தவிர, மற்ற அனைவருக்கும் இந்த ஈழக் கேலிச்சித்திரத்தை உளவியலாளர்கள் முன்னிறுத்தல் (projection) என்று அழைக்கிறார்கள்.   மற்றவர்கள் என்ன செய்ய உத்தேசிக்கிறார்கள் அல்லது செய்கிறார்கள் என்பதைத் துல்லியமாக முன்னிறுத்துதல் ஆகும்.

சிங்கள அரசு ஈழத்தை அடைவதற்கான  வாசலில் உள்ளது. சிங்கள மொழியும் பவுத்தமும் எங்களின் தொண்டைக்குள் திணிக்கப்பட்டு விட்டது. தெற்கு மட்டக்களப்பு தற்போது அம்பாறை என்று அழைக்கப்படுகிறது.  அது  தமிழர்களின் கைகளில் இருந்து பறிபோய்விட்டது.  நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் அம்பாறை 4,500 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது.  எஞ்சிய மட்டக்களப்பில் 2500 ஏக்கர் மட்டுமே உள்ளது எனத் தெரிவிக்கிறார். நீர்கொழும்பு மற்றம் புத்தளம் பறிபோய்விட்டது. திருகோணமலை கிட்டத்தட்டப் போய்விட்டது. 1827 மற்றும் 1921 க்கு இடையில் சிங்களவர்கள் (திருகோணமலையில்)  குடித்தொகையில் 5% க்கும் குறைவாகவே இருந்தனர். ஆனால் இப்போது –  1921 முதல் 2012 வரையிலான காலப்பகுதியில் – சிங்களவர்கள் 5% இல் இருந்து 26.9% ஆக உயர்ந்துள்ளனர்.  அதே சமயம் தமிழர்கள் 54.47% இல் இருந்து 32.29% வரை குறைந்துள்ளனர்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் நீதிமன்ற மொழி என்று அரசியலமைப்புச் சட்டம் பறைசாற்றினாலும், தமிழ் நீதிபதி ஒருவர் இனவாத அரசிடம் இருந்து அனுகூலங்களைப் பெறுவதற்கு   இப்போது சிங்கள மொழியில் மனுக்களைப் பெற்று, சிங்களத்தில் தமிழர்களுக்கு இடைக்கால உத்தரவுகளைப் பிறப்பிக்கிறார் என திருகோணமலையில் பணியாற்றும் மூத்த வழக்கறிஞர் ஒருவர் கூறுகிறார். சிங்கள மொழியில் வழங்கப்படும் ஆவணங்களைப் பெற மறுத்தால் அந்த நீதிபதி அவர்களை நீதிமன்ற அவமதிப்புக்காக குற்றவாளிக் கூண்டில் நிறுத்தக் கூடும். திருகோணமலைப் பண்பாடு  இப்போது பெரும்பான்மை சிங்களவர்கவர்களது பண்பாடாக மாறியுள்ளது. தமிழ் அதிகாரிகள் தமிழ் ஊழியர்களிடம் சிங்களத்தில் பேசுகிறார்கள். எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலும்,  உணவு கூடங்களிலும் (Food City)  கூட எச்சரிக்கையுடன் தமிழர்கள் முதலில் எங்களோடு  சிங்களமொழியில்தான் பேசுகிறார்கள்.

வவுனியாவின் பெரும் பகுதி பறிபோய்விட்டது. வவுனியா பாதுகாப்புப் படைத் தளபதி தேர்தல் ஆணையத்திடம் சொல்லி தமிழ் அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளார். இதனால்  தேர்தலில் முறைகேடுகள் நடக்கலாம். இன்று நான் அதிகாலை யாழ்ப்பாணத்தில் உள்ள தேவாலயத்தில் தொழுகையை முடித்துக் கொண்டு வெளியே வந்தபோது ஒரு பெரிய சுற்றுலாப் பேருந்து நிறுத்தப்பட்டிருப்பதைக் கண்டேன்.  அது அனுமதிக்கப்படாத இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அதில் சிங்களவர்கள் இருந்தார்கள். அவர்கள்  சத்தமாகவும் முரட்டுத்தனமாகவும் தங்கள் பணபலத்தைப் பறைசாற்றுவதைக் கண்டேன். யாழ்ப்பாணமும் விரைவில் சிங்களத்தின்  ஒரு பகுதியாக இருக்கும்.

அபகரிக்கப்பட்ட நிலங்களுக்கு எதிராகப்  போராட்டம் நடத்துபவர்கள் மீது காவல்துறை தாக்குதல்

மகாவலி திட்டத்தின் மூலம் அரச அதிகாரத்தின்  மிக மோசமான அதிகாரத்தை (அரசு)  பகட்டாக வெளிப்படுத்துகிறது. 1980 இல் முல்லைத்தீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள தமிழ்க் கிராமங்களை இராணுவம் சுற்றி வளைத்து வரிசைப் படுத்தியது,  எஞ்சியவர்கள் ஓடிய போது பலரைச்  சுட்டுக் கொன்றது. மகாவலி (கங்கை) நீரால் நிரப்பப்பட்ட அவர்களது நிலங்கள் சிங்கள சமூகத்தின் கசடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.   வடக்கு மாகாணம் முழுவதிலும் 34,200 ஏக்கர் கையகப்படுத்தப் பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில்  இரண்டு பொதுமக்களுக்கு ஒரு இராணுவீரர் நிறுத்தப்பட்டுள்ளாதாக முன்னாள் (வட மாகாண) முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கூறுகிறார்.  இலங்கை இராணுவத்தின் 7 பிராந்திய தலைமையகங்களில் 5 வடக்கு மாகாணத்தில் உள்ளன என்று கலிபோர்னியாவின் Oakland Institute இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் அனுத்த  மிட்டல் கூறுகிறார். யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டும் 23,000  தமிழர்கள், யுத்தம் முடிந்து கிட்டத்தட்ட 14  ஆண்டுகள் கடந்த பின்னரும் மீள்குடியேற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

மணல் ஆறிலிருந்து 14,000 குடும்பங்கள் இராணுவத்தால் வெளியேற்றப்பட்டன.  சிங்களவர்களைக் குடியேற்ற 25,000 ஆயிரம் ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டு சிங்களப் பிரிவு செயலகம் உருவாக்கப்பட்டது. அது தற்போது வெலி ஓயா என அழைக்கப்படுகிறது.  மணல் ஆறுதான்  வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழர்களை இணைக்கும் மூலோபாய  இணைப்பாக  இருந்தது. அந்த இணைப்பு  இப்போது முறிந்து விட்டது.

மனித உரிமைகள் மற்றும் மேம்பாட்டு மையத்தின் இயக்குநரும் மூத்த வழக்கறி ஞருமான கே.எஸ். இரத்னவேல் கூறுகையில், தலைமுறை, தலைமுறையாகத் தங்கள் நிலங்களில் விவசாயம் செய்துவரும் தமிழ் ஊர்மக்களின் நிலங்களை வனவிலங்கு மற்றும் வனத்துறை திணைக்களங்கள் சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தி அவை ஒதுக்கீட்டு நிலங்கள் எனக் கூறி அபகரிக்கப்பட்டு வருவதாகக் (இரத்னவேல்)  கூறுகிறார். அரச  அதிகாரிகள் அவர்களை வெளியேற்றுகிறார்கள்.  ஏழைகளான ஊர் மக்கள் வெறுமனே இணங்குகிறார்கள்.  ஏனெனில் எதிர்ப்புக் காட்டுவது பிணையில்லாமல் சிறையில் அடைக்க வழிவகுக்கும்!  ஊர்மக்கள்  திகிலில்  உள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் வனத்துறை  திணைக்களம் 32,110 ஏக்கர் நிலத்தை  அபகரித்துள்ளது. வனவிலங்கு திணைக்களம் 23,515 ஏக்கர் நிலத்தை அபகரித்துள்ளது.

தொல்பொருள் திணைக்களம் 202 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியுள்ளது. முல்லைத்தீவில் உள்ள மொத்த நிலப்பரப்பு 621,917 ஏக்கர் ஆகும். இதில் 100,000 ஏக்கரை அரச திணைக்களங்களும் இராணுவமும் இணைந்து கைப்பறியுள்ளன. 

அரசாங்க மற்றும் தனியார் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன என்பதை ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைப் பேரவையின் (UNHCR). தலைவரான முன்னாள்  நீதிபதி நவநீதம்பிள்ளை உறுதிப்படுத்துகிறார். தொல்பொருள் பாரம்பரியத்திற்கான ஜனாதிபதி செயலணி, அதன் மன்னிப்பு கேட்க மறுக்கும் சிங்கள பவுத்த சார்பு மற்றும் இராணுவமயமாக்கப்பட்ட தொனி மற்றும் பாதுகாப்பு செயலாளரின் தலைமையில் இருப்பது  குறித்து அவர் மிகுந்த கவலையை வெளிப்படுத்துகிறார். தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பாதுகாப்பை அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்குப் பயன்படுத்துவதற்கு முன்னரே  இருக்கும் ஒரு மூலோபாயத்தின் புதிய வெளிப்பாடாக அவர் செயலணியை சித்தரிக்கிறார். தொல்பொருள் திணைக்களம், நிலங்களை அபகரிக்கும் பணியை அண்மைக்காலமாகத் தீவிரப்படுத்தியுள்ளதுடன் வடக்கு மற்றும் கிழக்கில் புத்த கோயில்களை அமைப்பதற்கான முயற்சிகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. ஆராய்ச்சி மற்றும் பண்டைய இடங்களைப் பாதுகாப்பது என்ற  போர்வையில் காணி அபகரிப்பு இடம்பெறுகிறது.  இவை பெரும்பாலும் சைவ கோயில்களுக்கு அருகிலோ அல்லது அதற்கு அடுத்தோ  அமைந்துள்ளதாக அனுரத்த மிட்டல் கூறுகிறார். குருந்தூர் கோவிலை அவர் எடுத்துக்காட்டாகக் கூறுகிறார். அங்கு அரசியல்வாதிகள் மற்றும் இராணுவம் பெரும் ஆரவாரத்துடன் புதிதாக ஒரு புத்த கோவிலைக் கட்டியுள்ளனர்.

புத்தகோயில் திறப்பு விழாவில் பங்கேற்றவர்கள் முகக்கவசம்  அணிந்திருந்தனர்,

ஒருவேளை புதிதாக முன்மொழியப்பட்ட வெறுப்பு – பேச்சு சட்டங்கள் மற்றும் அவர்களின் செயல்களால் பவுத்த மதத்தை இழிவுபடுத்துவது தங்களைச் சிக்கலில் மாட்டக்  கூடும் என்று பயந்திருக்கலாம். கன்னியா போன்ற இந்து மத வழிபாட்டுத் தலங்களை உள்ளடக்கிய ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை கையகப்படுத்திய பவுத்த பிக்குகள், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் அனைத்து  நெறிகளையும் மீறி வெட்கமின்றி  சட்டத்திற்கு முரணாகச் செயற்படுவதாக சட்டத்தரணி இரத்னவேல்  வெளிப்படையாகக் கூறியுள்ளார். நான் திருகோணமலைக்கு அருகில் உள்ள இடத்திற்குச் (கன்னியா)  சென்றபோது, வெள்ளைநிற உட்பாவாடை மற்றும் இரவிக்கை அணிந்த ஒரு இளம் சிங்களப்பெண் பொது இடத்தில் தனது இரவிக்கையிலிருந்து வெளியேறும் மார்பகங்களுடன் வெந்நீர் நீருற்றுகளில் பொது இடங்களில் குளித்துக்கொண்டிருப்பதைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். வழிபாடு செய்பவர்களில் யாராவது ஈர்க்கப்படுவார்களா என்று பார்க்க விரும்பினேன், ஆனால் என் மனைவி என் கையைப் பிடித்து என்னை அழைத்துச் சென்றார். இவர்கள் பவுத்த மதத்திற்கு அவமானம்!

வறிய தமிழர்களுடன் போட்டியிடும் இராணுவம்

இலங்கையில் மிகவும் இராணுவ மயமாக்கப்பட்ட மாவட்டமான முல்லைத்தீவில் உள்ள அனைத்துப் பொதுமக்களையும் விட இராணுவத்தின் கட்டுப்பாட்டில் அதிகமான காணிகள் உள்ளன. முல்லைத்தீவை சூழவுள்ள பகுதிகளில் இராணுவத்தினர் 33 முகாம்களை வைத்துள்ளனர்.

வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் திரு.துரைராஜா இரவிகரனின் கருத்துப்படி, இராணுவத்தினர் விடுமுறை விடுதிகள், உணவகங்கள் நடத்துவது முதல் தனியார் காணிகளில் தோட்டம் செய்வது, கட்டிடக் கற்களை விற்பனை செய்தல், வணிக வளாகங்களை நடத்துதல், முடிதிருத்தும் தொழிலில் முடி வெட்டுதல், தயிர் மற்றும் வெண்தயிர் தயாரித்தல் மற்றும் விற்பனை செய்வது வரை  அனைத்து வகையான வியாபாரங்களிலும் ஈடுபட்டுள்ளனர். .

திரு. வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராஜா ரவிஹரன், விடுமுறை விடுதிகள் மற்றும் உணவகங்களை நடத்துவது முதல் தனியார் நிலங்களில் தோட்டங்கள்  செய்வது வரை கட்டிடக் கற்களை விற்பனை செய்வது, வணிக வளாகங்களை நடத்துவது, சிகையலங்கார விடுதிகளில் சிகை அலங்காரங்களை வழங்குவது, குங்குமப்பூ மற்றும் தேன் விற்பனை செய்வது வரை இராணுவத்தில் அனைத்து வகையான வணிகங்களும் உள்ளன.

இராணுவத்தினரின் ஊதியம் பொதுப் பணத்திலிருந்து வரும்போது, இராணுவம்  பயன்படுத்தப்படும் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலங்களாக இருக்கும் போது,  வறிய பொதுமக்கள் (இராணுவத்தோடு)  போட்டியிட முடியாது. இந்த நியாயமற்ற போட்டி சூழலில், நிலம் வாங்கவும், தொழிலாளர்களை அமர்த்தவும் வேண்டிய நிலையில், தமிழ் மக்களுக்கு தங்களது வாழ்வாதாரத்தை விரிவுபடுத்த வழி இல்லை. அவர்களுக்கு இலவச உழைப்பு இல்லை. அவர்கள் மற்றவர்களின் நிலத்தை எடுத்துக் கொள்ள முடியாது. தமிழ் மக்கள் வறுமையில் மூழ்கியுள்ளனர்.

இந்துக் கோவில்கள் போன்ற பல தமிழர்களது பாரம்பரிய இடங்கள் கையகப்படுத்தப்பட்டு, பவுத்த  கோவில்கள் இராணுவத்தின் பாதுகாப்பின் கீழ்  கட்டப்பட்டுள்ளன என்று இரவிகரன் மேலும் கூறுகிறார். குறிப்பாக நீதிமன்ற உத்தரவுகளைக்கூட மீறிய ஞானசார தேரரை  அவர் குறிப்பிடுகிறார். சட்டத்தரணி இரத்னவேல் மற்றும் மற்றுமொரு சட்டத்தரணி காண்டீபன் தங்கராஜா ஆகியோர் இதனை உறுதிப்படுத்துகின்றனர்.

(மிகுதி அடுத்த கிழமை. ஆங்கில மூலம் https://www.colombotelegraph.com/index.php/elam-or-elaam-a-case-for-promoting-nonviolent-chaos/. தமிழாக்கம் நக்கீரன்)

About editor 2991 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply