ஜனாதிபதியின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொள்கிறது!

ஜனாதிபதியின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை   தமிழ்த்  தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொள்கிறது!
கூட்டாட்சி பற்றிப் பேசக் கட்சி  தயாராக  இருப்பாதாக  நா.உறுப்பினர்  அறிவிப்பு!

ECONOMYNEXT  – இனச்சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கான நேர்மையான முயற்சிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆக்கப்பூர்வமாக ஈடுபடும் என ஜனாதிபதி இரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சிகளுக்கு விடுத்த வேண்டுகளுக்கு ததேகூ பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயாராக  இருக்கும் என சட்டமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பதிலளித்துள்ளார். கூட்டாட்சித் தீர்வுக்குத் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆயத்தமாக இருப்பதாக  அவர் தெரிவித்தார்.

நொவெம்பர் 24 வியாழன் பிற்பகல்  “நாங்கள் எப்போதும் நடந்து கொண்டது போல ஒவ்வொரு நேர்மையான முயற்சியிலும் ஆக்கப்பூர்வமாக ஈடுபடுவோம், ஆனால் எந்தவொரு கேலிக்கூத்து நடவடிக்கையையும் அனுமதிக்க மாட்டோம்,” என்று சுமந்திரன் ட்வீட் செய்தார். முந்தைய நாள் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில்,  உண்மையை  மற்றவர்களிடமிருந்து மறைக்க அல்லது அதனைச் சமாளிக்கும்  நோக்கத்துடன் அணுகினால் நல்லிணக்கம் சாத்தியப்படாது என யாழ் மாவட்ட நா.உ. கூறினார்.”உண்மையை உறுதிப்படுத்துவதன் மூலம் மட்டுமே உண்மையான நல்லிணக்கம் இருக்க முடியும்” என்று அவர் கூறினார்.

“உங்கள் செயல்கள் சொற்களை விட ஓங்கி ஒலிக்க வேண்டும்.  இப்போது நாம் பார்ப்பது சொற்கள், சொற்கள் மற்றும் சொற்கள் மட்டுமே.  நான் பேசிக் கொண்டிருக்கும் போது தமிழ்மக்களுக்குச் சொந்தமானபெருமளவு நிலங்கள் (முப்படையினரால்) கையகப்படுத்தப் படுகின்றன”என்று அவர் மேலும் கூறினார். அப்போது  இடைமறித்துப் பேசிய  ஜனாதிபதி விக்கிரமசிங்க  தான்  அது பற்றிக் கவனிப்பதாகச் சொன்னார்.

இலங்கையின் பல தசாப்தங்களாக நீடித்து வரும் இனச்சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான உரையாடலுக்கு எதிர்க்கட்சிகளுக்கு ஒரு வெளிப்படையான அழைப்பை விக்கிரமசிங்க கடந்த புதன்கிழமை அன்று மீண்டும் விடுத்தார்.  இலங்கைத் தீவு பிரித்தானியரிடம்  இருந்து சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் போது, 2023 பெப்ரவரி 04 க்குள்  தீர்வுக்கு உடன்பாடு காணும் நோக்கில், டிசம்பர் 11 க்குப் பிறகு பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்று அவர் கூறினார்.

“ஜனாதிபதியின் முன்முயற்சியை நாங்கள் வரவேற்கிறோம். தீர்வை எட்ட அனைவரும் உடன்பட  வேண்டும் என்றார். இந்த நாட்டிலுள்ள அனைத்து மக்களும்  இது தமது நாடு என்பதில் மனநிறைவு மற்றும் திருப்தியடைவதுடன், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம்” என்று  நா.உ  கூறினார். இந்த விடயத்தில் ஏற்கனவே பரந்த ஒருமித்த கருத்து இருப்பதாகவும், சில விடயங்களுக்கு   மட்டுமே தீர்வுகாண  வேண்டியிருக்கும் என்றும் நா. உ. எடுத்துரைத்தார்.

“அதனை ஒரு நாள் அமர்வில் செய்யலாம்.    உங்களுக்கு மூன்று மாதங்கள் தேவையில்லை” என்று (சுமந்திரன்) கூறினார்.

ஜனாதிபதி விக்ரமசிங்க தனது உரையில் புதிதாகப் பேசுவதற்கு எதுவுமில்லை என்பதை   ஒப்புக்கொண்டுள்ளார். தென்னாபிரிக்காவின் முன்மாதிரியை  ஜனாதிபதி நோக்கினால், அந்த நாடு “பொறுப்புக்கூறல் சிக்கல்களை பார்ப்பதற்கு முன்னரே” அரசியல் மாற்றத்திற்கு உள்ளாகியிருந்ததை கவனத்தில் கொள்ள வேண்டும்” என சுமந்திரன் தெரிவித்தார்.

“அந்த அடிப்படை மாற்றம் நிகழ வேண்டும்  மற்றும் பிற நடவடிக்கைகளுக்கு முன்னதாக இருக்க வேண்டும்” என்று அவர் (சுமந்திரன்) கூறினார்.

சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கம் தொடர்பாக இலங்கை எதிர்கொள்ளும் சிக்கல்களில்  மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகக் கூறப்படும், குறிப்பாக 26 ஆண்டுகால  ஆயுத மோதலின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்தாகக் கூறப்படும்,   மனித உரிமை மீறல்கள்  விடயமாகும். வலிந்து காணாமல் போனவர்கள், இராணுவமயமாக்கல் மற்றும்  நில அபகரிப்பு ஆகியவை தொடர்பாக  இலங்கையின்மனித உரிமைகள் பற்றிய  விவாதங்கள்  பல்வேறு  பன்னாட்டு அரங்குகளில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன.

“நிச்சயமாக நீங்கள் பல நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் பயிற்சிகளைச் செய்ய வேண்டும், ஏனென்றால் நீண்ட வரலாறு மற்றும் என்ன நடந்தது என்பதன் காரணமாக நம்பிக்கையில் பற்றாக்குறை உள்ளது” என்று சுமந்திரான் கூறினார்.

நீதி மற்றும் பொறுப்புக்கூறல் சிக்கல்களைக் கருத்தில் கொள்வதற்கு  முன்  அடிப்படைச் சிக்கல்களை முதலில் தீர்த்து வைப்பது மிகவும் அவசியமானது  என்று நா. உ கூறினார். இது மக்களுக்கு ஒரு வேறுபட்ட  கண்ணோட்டத்தை வழங்கும் என்றும் அவர் கூறினார்.

ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு அண்மைக் காலத்தில்    தமிழ் தேசியக் கூட்டமைப்பு வழங்கிய அரிய பாராட்டு இதுவாகும்.

“இன்று இந்த அவையில் உள்ள ஒரே நபர் நீங்கள் மட்டுமே என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் – நீங்கள் இந்த அவையின் உறுப்பினராக இல்லாவிட்டாலும் – இந்த விடயத்தில் மிக நீண்ட பட்டறிவு  பெற்றவர் நீங்கள் மட்டுமே.  இந்திய – இலங்கை உடன்படிக்கையுடன்  முடிவடைந்த 1986 ஆம் ஆண்டின் இடையில்  இருந்து இறுதி வரை தமிழர் விடுதலைக் கூட்டணி  உடன் பேச்சுவார்த்தை நடத்திய அரசாங்க பேச்சுவார்த்தைக் குழுவில் ஒரு உறுப்பினராக நீங்கள் இருந்தீர்கள். இருந்தும்  13 வது சட்ட திருத்தம்  அதிகாரப் பகிர்வுக்கான ஒரு அர்த்தமுள்ள அதிகாரத்  திட்டமாக நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை,”என்று அவர் கூறினார்.

இலங்கையின் அரசியலமைப்பின் 13 வது திருத்தமானது 1987 ஆம் ஆண்டின் சர்ச்சைக்குரிய இந்திய – இலங்கை உடன்பாட்டில்  இருந்து மோசமடைந்து வரும் இன மோதலுக்கு ஒரு உத்தேசிக்கப்பட்ட தீர்வாக வெளிப்பட்டது. இந்தத் திருத்தத்தை அடுத்து மாகாண சபைகள் வந்தன. ஆனால் முதலில் நினைத்தபடி மாகாணங்களுக்குக் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் இன்னும் பகிர்ந்தளிக்கப் படவில்லை. சிங்கள மற்றும் தமிழ்த் தேசியவாதிகள் இருவரும் 13வது திருத்தத்தை எதிர்த்துள்ளனர். சிங்களவர் அதிகாரப் பகிர்வு அதிகம் என எதிர்த்தார்கள். தமிழர்கள் அதிகாரப் பகிர்வு  போதுமானதாக இல்லை எனக் கூறி எதிர்த்தார்கள்.

“இந்தத் தீர்மானனத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்  விக்கிரமசிங்கவுக்குத் தெரியும் என சுமந்திரன் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ச நியமித்த அனைத்து கட்சிப் பிரதிநிதி குழுவையும் (APRC) அவர் (விக்கிரமசிங்க)  ஒப்புக் கொண்டார்.

“நாங்கள் APRC இல் பங்கேற்கவில்லை என்றாலும், அது ஒரு நல்ல அறிக்கை. 2000 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள் அரசியலமைப்புச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த போது அரசாங்கத்தில் இன்று முன்வரிசையில் உள்ள பல உறுப்பினர்கள் அமைச்சரவையில் உறுப்பினர்களாக இருந்தனர். ஜனாதிபதி விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியானது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தொடர்பான இடைக்கால ஏற்பாட்டினால் மாத்திரமே அதனை எதிர்த்தது, அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகள் காரணமாக அல்ல” என்றார்.

“நாங்கள் அனைத்துக் கட்சிக் குழுவில் பங்கேற்கவில்லை என்றாலும், இது ஒரு நல்ல அறிக்கை. ஓகஸ்ட் 2000 இல் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரத்துங்கா ஒரு அரசியலமைப்பு மசோதாவை நாடாளுமன்றத்திற்குக்  கொண்டு வந்தபோது, ​​அரசாங்கத்தில் இன்று முன் வரிசையில் இருக்கும்  பல உறுப்பினர்கள் அமைச்சரவையின் உறுப்பினர்களாக இருந்தனர். ஜனாதிபதி விக்ரமசிங்க அவர்களின்  தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி நிறைவேற்று அதிகாரம் படைத்த ஜனாதிபதி பதவியைப் பொறுத்தவரை ஒரு இடைக்கால ஏற்பாட்டின் காரணமாக (நாடாளுமன்றத்தின் ஆயுளை இரண்டு ஆண்டுகள் நீடிக்கும்)  மட்டுமே அதை எதிர்த்தது.  அதில் காணப்பட்ட அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகள் காரணமாக அல்ல ”என்று சுமந்திரன்கூறினார்.

குமாரதுங்கா அரசாங்கம் அரசியலமைப்புச் சட்டமூலத்தை  நாடாளுமன்றத்தில் முன்வைத்தபோது ஐக்கிய தேசியக் கட்சி அதனை (சட்ட மூலத்தை)  அறிபழியான  முறையில் எரித்தது. மற்றவர்கள் உடன்படவில்லை என்றாலும், இலங்கையின் நீடித்த அமைதிக்கான பாதையில் அந்த நிகழ்வை ஒரு தவறான எண்ணமாக ஆய்வாளர்கள் மறுபரிசீலனை செய்துள்ளனர்.   ஒருமித்த கருத்து ஏற்கனவே உள்ளது என்றும் அதையிட்டு  முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் சுமந்திரன்  கூறினார். “அதுதான்  இப்போது ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது ”என்று சுமந்திரன்  கூறினார்.

75 வது சுதந்திர நாள் கொண்டாட்டத்திற்று முன்னதாக ஒரு  நிலையான  தீர்மானத்திற்கான ஜனாதிபதியின் அழைப்பு,  ஒரு சிறந்த  இலட்சியமாகும், ஆனால் அதற்கு  அதிக நேரம் இல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் எச்சரித்தார்.

“எனவே நீங்கள் அறிவித்திருக்கும்  குறிக்கோளை அடைய நாங்கள் உங்களுடன் ஆக்கபூர்வமாகப் பணியாற்ற அணியமாக இருக்கிறோம். இந்த நாட்டில் வாழும் எமது மக்களினது (தமிழர்கள்) நியாயமான மற்றும் சட்டபூர்வமான வேட்கைகளை, ஏன் இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களினதும் நியாயமான மற்றும் சட்டபூர்வமான அபிலாசைகளை,  அடைவதற்கு  நாங்கள் தயாராக  உள்ளோம்” என்று அவர் கூறினார். சுமந்திரன் தனது உரையில்,  தனது கட்சி  பெரும்பான்மை மக்களுக்குத்  தெரியாமல்  எதையும் செய்ய விரும்பவில்லை என வலியுறுத்தினார்.

“எல்லோரும் பாதுகாப்பாக இருப்பதாக உணர வேண்டும். எங்களின் ஆசையும் அதுதான்.  இந்த நாட்டின் பெரும்பான்மையினர் (சிங்களவர்) அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். ”

உலக மக்கள்தொகையில் 40  விழுக்காட்டிலும்  அதிகமானோர் கூட்டாட்சி நாடுகளில் வாழ்கிறார்கள் என்று கூறினார். (கூட்டாட்சி வடிவிலான 25 நாடுகள் உள்ளன). “அவைதான்  உலகின் வலிமையான நாடுகள்” என்று சுமந்திரன்  கூறினார்.

“அரைக்  கூட்டாட்சி முறைமை கொண்ட நாடுகளும் உண்டு. அவை  சில சமயங்களில் ஒற்றையாட்சி நாடுகள் என்று தம்மை அழைக்கின்றன.  எடுத்துக்காட்டு பிரித்தானியா. ஆனால்  பிரித்தானியாவைப் போன்ற நாட்டில், அதிகாரப் பகிர்வின் அளவு ஒரு கூட்டாட்சி அரசாங்கத்துக்கான வரைவிலக்கணத்தை விட  மிக அதிகம்.

“உலகில் எங்கும் காணப்படாத ஒன்றை நாங்கள் கேட்கவில்லை. நியாயமான மற்றும் உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ள ஒன்றை நாங்கள்கேட்கிறோம். அதன் மூலம் எமது மக்கள் அனைவரும் இந்நாட்டில் கண்ணியத்துடனும் தன்மானத்துடனும் வாழ்வார்கள் என்பதை இது உறுதி செய்யும். பெரும்பான்மையான மக்கள் அதைப் புரிந்துகொண்டு அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும்  என்று நாங்கள் விரும்புகிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் எண்ணிக்கையில்  பெரும்பான்மை இனம். அதை யாரும் மாற்ற முடியாது. பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர் டி பண்டாரநாயக்கா தான் 1926 இல் இந்த நாட்டிற்கு கூட்டாட்சி என்ற யோசனையை அறிமுகப்படுத்தினார், தமிழ்த் தலைவர்கள் அல்ல,” என அவர் கூறினார். 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இரண்டு தனித்தனி சந்தர்ப்பங்களில் கண்டிய  தலைவர்கள் ஒரு கூட்டாட்சி அரசமுறைமையை கேட்டதாக  சுமந்திரான் நினைவு கூர்ந்தார்.

“எனவே இது சிங்கள மக்களுக்குக் கெட்டதாக இருக்க முடியாது, சிங்கள மக்கள்தான் அதைக் கேட்டனர்” என்று அவர் குறிப்பிட்டார், காலப்போக்கில் தவறான செய்திகள் நாட்டுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன.

பல ஆண்டுகளாக இலங்கையில் கூட்டாட்சி முறைமை  மிகவும் சர்ச்சைக்குரிய மற்றும் அரசியல் ரீதியாக அழற்சியான யோசனையாக இருந்து வருகிறது.  பல தேசியவாத அல்லது தெற்கில் சில மிதவாதக்  கட்சிகள் கூட  கூட்டாட்சி  ஆலோசனையைக் கடுமையாக எதிர்க்கின்றன. யுத்தம் முடிவடைந்த 13 ஆண்டுகளில் இந்த நிலைப்பாடு மென்மை அடைந்துள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் இன்றுவரை எந்த சிங்கள மேலாதிக்கக் கட்சியும் அதற்கு ஆதரவு தெரிவிக்க  முன்வரவில்லை.

“ஐயங்கள் உள்ளன, அவை நிவர்த்தி செய்யப்படவேண்டும். இதை நாம் நியாயமான முறையில் தீர்க்க வேண்டும், அதன் மூலம் 2023 பெப்ரவரி 04 க்குள் ஜனாதிபதியின் எண்ணப்படி நாம் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகளாக எழுந்து நிற்க முடியும்” என்று சுமந்திரன் கூறினார்.

எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க புதன்கிழமை விக்கிரமசிங்க விடுத்த வேண்டுகோளுக்குப்  பதிலளித்துப் பேசுகையில் “இலங்கையின்  ஒற்றையாட்சித் தன்மையை மதிக்கும் ஒரு தீர்மானத்துக்கு மட்டுமே ஆதரவளிக்க முடியும்” என்றார்.

 “நீங்கள் ஒரு ஒற்றையாட்சி  இலங்கைக்குள் ஒருமித்த கருத்தை கேட்கிறீர்கள் என்றால் அதனை நாங்கள் ஒப்புக்கொள்வோம். அதற்கு வெளியே, பெரும்பான்மையான மக்கள் ஒப்புக் கொள்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. இங்கே ஒரு அடிப்படை உண்மை உள்ளது. ஒற்றையாட்சி அரசைப் பாதுகாப்பதற்காக எமது படையினர் தமது இன்னுயிர்களை தியாகம் செய்தனர்” என்று குமாரதுங்க கூறினார்.

(ஆங்கில மூலம் https://economynext.com/sri-lanka-ethnic-issue-tna-accepts-presidents-overture-mp-suggests-party-ready-to-talk-federal-104106/. தமிழாக்கம் நக்கீரன்)

—————————————————————————————————

Sri Lanka ethnic issue: TNA accepts president’s overture, MP suggests party ready to talk federal

Thursday November 24, 2022 

ECONOMYNEXT — Sri Lanka’s opposition Tamil National Alliance (TNA) will engage constructively in sincere attempts at resolving the ethnic issue, legislator M A Sumanthiran said responding to President Ranil Wickremesinghe’s overtures to the opposition, while also suggesting that the TNA was open to a federal solution.

“We will engage constructively in every sincere attempt as we have always done but will not allow any farcical process,” Sumanthiran tweeted Thursday November 24 afternoon.In a speech made in parliament the previous day, the Jaffna district MP said there can be no reconciliation by sweeping the truth under the carpet.

“It is only by the ascertainment of the truth that there can be true reconciliation,” he said.

“Your actions must be louder than words. All we have are words, words and words. As I speak, more lands are being acquired,” he added, highlighting an example that prompted a response from President Wickremesinghe that he would look into the matter.

Wickremesinghe on Wednesday re-extended an open invitation to opposition parties to a discussion on a permanent solution to Sri Lanka’s decades-long ethnic problem. Talks would begin after December 11, he said, with a view to agreeing on a solution by February 04 2023 when the island nation celebrates 75 years of independence from the British.

“We welcome the president’s initiative. He said everyone must agree on the solution. We want all the people of this country to be content and be satisfied and feel secure that this is their country,” said Sumanthiran.

The MP said there is broad consensus already on the issue and that only a few things need to be ironed out. That can be done in a day’s sitting. You don’t require three months,” he said.

President Wickremesinghe agreed in his speech that there is nothing new left to talk about.

If the president is looking at the South African example, said Sumanthiran, it must be noted that that country underwent a political transformation “before they could look at accountability issues”.

“That fundamental change must happen and must precede other measures,” he said.

Among the issues that Sri Lanka is confronted with with regard to reconciliation between communities is the matter of alleged human rights abuses, particularly during the final phase of the 26-year armed conflict. Missing persons, militarisation and alleged land grabs have also figured prominently in various international fora where Sri Lanka’s human rights record has come up for discussion.

“Of course you need to do many confidence-building exercises because there is a serious lack of trust because of the long history and what happened,” said Sumanthiran.

The MP said it is crucial that the core, root issues are settled first before considering issues of justice and accountability, which he said would provide the people a different outlook on resolving those issues.

He also paid what has lately been a rare compliment to President Wickremesinghe from the TNA.

“We recognise that perhaps you are the only person in this House today — although you’re not a member of this house — who’s had the longest experience in this matter. You were part of the government negotiation team that negotiated with the TULF from the middle to the end of 1986, which ended with the Indo-Lanka accord, and the 13th amendment which we did not accept as a meaningful scheme of devolution,” he said.

The 13th amendment to Sri Lanka’s constitution emerged out of the controversial Indo-Lanka Accord of 1987 as a purported solution to the worsening ethnic conflict. Provincial councils came in the wake of this amendment, but land and police powers have yet to be devolved to the provinces as originally envisioned. Both Sinhalese and Tamil nationalists have opposed the 13th amendment, the former claiming it devolved too much, the latter complaining it didn’t devolve enough.

Wickremesinghe knows “everything that is to know about the resolution of this”, said Sumanthiran. He also acknowledged the All Party Representative Committee (APRC) appointed by former President Mahinda Rajapaksa.

“Though we did not participate in the APRC, that’s a good report. Many members in the front row today in the government were members of the cabinet in August 2000 when President Chandrika Bandaranaike Kumaratunga brought a constitution bill to parliament. The UNP at that time led by President Wickremesinghe opposed it only because of a transitional provision with regard to executive presidency, not because of the devolution arrangements in that,” he said.

The UNP opposition notoriously burnt the draft bill in parliament when the Kumaratunga government presented it. Analysts have revisited that event as a possible misstep in Sri Lanka’s path to a lasting peace, though others disagree.

Sumanthiran said consensus is already there and all that is required is for decisions to be made.

“That is what has been entrusted to the president now,” he said.

The president’s call for a permanent resolution by the 75th Independence Day celebrations is a good ideal to work towards, but there isn’t much time, the MP warned.

“So we are willing to work with you constructively to achieve the objective you have enunciated. We’re willing to achieve the reasonable and legitimate aspirations of our people and indeed all the people that live in this country,” he said.

In his speech, Sumanthiran was emphatic that his party does not wish to do anything behind the back of the majority.

“Everyone must feel secure. That is our desire as well. That the majority of this country must accept it.”

The MP then said that more than 40 percent of the world’s population live in federal countries. (There are 25 countries with a federal form of government).

“Those are the strongest countries in the world,” the MP claimed.

“You have others who are quasi federal, who sometimes call themselves unitary, like Great Britain, where the extent of devolution is far more than even in a federal form of government.

“We’re not asking for something that isn’t found anywhere in the world. We’re asking for something that is reasonable and is practiced all around the globe. That will ensure that all our people will live with dignity and self respect in this country. We want the majority people to accept and understand that. You are, after all, a preponderant majority. No one can shift that. It was Prime Minister S W R D Bandaranaike who in 1926  introduced the idea of federalism to this country, not the Tamil leaders,” he said.

Sumanthiran recalled that it was in fact the Kandyan chiefs who had asked for a federal form of government on two separate occasions in the early 20th century.

“So it can’t be bad for the Sinhala people, it was the Sinhala people who asked for it,” he said, noting that over time wrong messages have been communicated to the country.

“There are suspicions those must be allayed. We must resolve this in a just way, so that we can all can then stand up as the president envisages by Feb 04 2023 as the children of one mother,” Sumanthiran said.

Federalism has been a highly controversial and politically inflammable idea in Sri Lanka over the years, with many nationalist or even some moderate parties in the south vehemently opposing the very suggestion of it. It is unclear whether this stance has softened over the 13 years since the end of the war, but to date no Sinhalese-dominated party has come out in support for it.

Sri Lanka Podujana Peramuna (SLPP) MP Gevindu Kumaratunga who now sits in the opposition responding to Wickremesinghe’s invitation on Wednesday cautioned that they can only support a proposal that will honour Sri Lanka’s unitary character.

“If you’re asking for a consensus within a unitary Sri Lanka, we’ll agree. Outside of that, I don’t think a majority of people will agree. There is a ground reality here. Our soldiers laid down their lives to protect the unitary state,” said Kumaratunga. 

About editor 3016 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply