சேரர்கள் காலகட்டத்தில் சபரிமலை இருந்ததா? தெளிவாக விளக்க முடியுமா?

சேரர்கள் காலகட்டத்தில் சபரிமலை இருந்ததா? தெளிவாக விளக்க முடியுமா?

Gurusamy Arumugam 

முதலில் பதிலளிக்கப்பட்டது: சேரர்கள் காலகட்டத்தில் சபரிமலை இருந்ததா? தெளிவாக விளக்கவும்?

சேரர்கள் காலங்களில் மலை, இருந்தது. ஐயப்பன் இல்லை.அய்யனார் என்ற கருப்பசாமி என்ற காவல் தெய்வங்கள் வழிபாடுகள் இருந்தன.

சேர நாடு கிபி 500வரை தமிழர்கள், தமிழ் மொழி பேசிய இடங்கள். புத்த மதம் இந்து ஆரியம் சிறிதளவில் கலந்த இந்து தமிழர்கள் இருந்த இடம். சேரன் செங்குட்டுவன், சிலப்பதிகாரம் இளங்கோ கிபி 300–350 ஆண்டுகளைச் சேர்ந்த புத்த மத அரசர்கள். அரேபியர் கேரளாவுடன் கிமு விலிருந்தே கொல்லம் துறைமுகத்துடன் வியாபாரத்தொடர்பும் , குடியிறுப்புகளும் இருந்தன.

கிபி 629ல், சேரமான் ஜும்மா மசூதி கொடுங்கல்லூர் , திருச்சூர். இஸ்லாம் ஸ்தாபகர் உயிருடன் இருந்த போதே , கேரளாவில் ஆசியாவின் முதல் மசூதி வந்துவிட்டது. இந்த இடம் ஒரு புத்த கோயில். இன்னும் அடையாளங்கள் இருக்கின்றன.

அதனால் , கிபி 600லிருந்து புத்த சமண மதங்கள் அழிந்து இந்து, இஸ்லாம் ஓங்க தொடங்கியது.

மேல் உள்ள முதல் படத்தில் இருக்கும் எழுத்துக்கள் தெலுங்கு/கன்னடம். “ஸரணம் அய்யப்ப”

இந்த கிபி 400–600 காலங்களில்தான் வடக்கே பலவாறாக இந்து புராணங்கள், கற்பனை கதைகள், தேவர்×அசுரர்கள் சண்டைகள் போன்ற புராணங்கள் சமஸ்கிரிதத்தில் எழுதினர். சம்ஹார, அசுரர்களை அழித்தல், கொல்லுதல் போன்ற கற்பனைப்புராணங்கள்.

சமஸ்கிரித (தமிழ், மலையாளம் இல்லை) புராணங்களின்படி ஐயப்பா அல்ல சாஸ்தா, ஹரிஹரா . சிவ-விஷ்ணுவின் மகன். இவன் பாற்கடலை கடையும் போது வந்தவன் என்றும், விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து சிவனுடன் புணர்ந்து பெற்ற மகன் என சமஸ்கிரித புராணங்கள் சொல்கின்றன.

கேரள நம்பூதிரிகள் சோழ, பாண்டிய நாடுகளிலிருந்து குடி பெயர்ந்தது கிபி 600க்கு பின்பு வந்தவர்கள். ஆதி சங்கரரின் காலம் கிபி 800. இவர் சமஸ்கிரித தமிழர். முருகனை சுப்ரமண்யா வாக மாற்றி, கர்நாடகா குக்கே (கூடை குகை) மலையில் இந்திரன் மகள் தேவானியை மணம் முடித்து வைத்தவர். இந்த குகை முதலில் ஆதிவாசிகள் வழிபட்ட சிவன் கோயில்.

சென்னை, திருவல்லிக்கேணி , அழகிய சிங்கர் பெருமாள் (நரசிம்மர்) சிலை பாளையக்கார்- நவாப்புகள்- ஆங்கிலேயர் கால குழப்ப தொடக்கங்களில்; மீசை பார்த்தசாரதி சிலை கோயில் ஆனது. தொல் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் , முனைவர் நாகசாமி ஐயரே கல்வெட்டு விளக்கங்களை தமது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இதே போல் பல நிகழ்வுகள் நாயக்கர்-ஆங்கிலேயர் குழப்ப காலங்களில் நிறைவேறியிருக்கின்றன.

கிபி 800- 1000வாக்கில் சமஸ்கிரிதத்துடன் தமிழை தாராளமாக கலந்து மலையாளத்தை உருவாக்கினர். புத்தர் கோயில்கள், தமிழர்களின் தொன்று தொட்ட வழிபாடு முறைகளை, சிலைகளை மாற்றினர். சமஸ்கிரித இந்து கடவுளர்கள் வந்தனர். அய்யனார் ஐயப்பன் ஆனான்.

இந்த கோயில் ஆங்கிலேயர் கிபி 1800 காலங்களில் பந்தளமகாராஜா வை இணைத்து குடும்ப கோயிலாக கேரளாவில் நம்பூதிரிகள் மாற்றினர். சாஸ்தா ஹரிஹரனின் 2வது மனைவி ராஜாவின் மகள் என்றனர். பூர்ணி, புஷ்கர்ணி மனைவிகள் புராண சமஸ்கிரிதத்தில் வரும்.

இக்கோயில் கிபி 1850 (மரப்பலகை கோயில்)–1900 களில் இரண்டு முறை தீப்பிடித்தது. தற்போது இருக்கும் கோயில் 1900க்கு பின்பு கட்டப்பட்டது. மலைக்கும் கீழ் ஒரு மேட்டில் மகரதீபம்/நட்சத்திரம் வருவது போன்ற கதைகள், இதற்கும் பின்பு வந்த சம்பிரதாயம். மனிதர்கள்தான் தீபத்தை எரிக்கிறார்கள் , நட்சத்திரம் அல்ல, என கேரள கோர்ட்டில் தேவஸ்தம்போர்டு விளக்கியது. சேரர்கள் காலங்களில் பழங்குடி தமிழர்கள் வழிபட்ட அய்யனார், கருப்பசாமி அடையாளம். காடுகளில் கோயில்கள் இருக்க முடியாது. சிறிய கல் அல்லது மண்சிலைகள் மேட்டில் மரங்களுக்கு கீழ் வழிபாடுகள் நடந்தன.

About editor 3192 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply