விஜயநகர பேரரசு ஆட்சிகாலத்தில் 15 நூற்றாண்டுக்கு பின்னர் தான் தமிழ்நாட்டில் தீபாவளி கொண்டாடபடுகிறது என்கிறார் ஆய்வாளர் தொ.பரமசிவம் அவர்கள்
அறியப்படதா தமிழகம் என்ற புத்தகத்தில் சமண மத கருத்துக்கள் கொண்டாட்டங்களை சைவம் வைணவம் மெல்ல மெல்ல உள் வாங்கி கொண்டது என்று கூறுகிறார்
அது போல சமணமத மகாவீரர் இறந்த நாளை சமணர்கள் தீபங்களை ஏந்தி கொண்டாடுகிறார்கள்
சமணர்களின் தீபம் ஏற்றும் நாளும் தீபாவளியும் ஒரே நேரத்தில் வருவது குறிப்படதக்கது
நரகாசுரன் அழிந்த நாள் என்பது ஆரிய பிராமணர்களால் இட்டு கட்டப்பட்ட கதை என கூறப்படுகிறது
மேலும் சமணமத்ததில் இருந்து சைவம் வைணவம் எடுத்து கொண்டது பற்றி பொ பரமசிவம் மேலும் கூறுவதை கீழே பார்க்க
( தொ.பரமசிவம் என்பவரின் அறியப்படாத தமிழகம் என்னும் புத்தகத்தை போன வருச பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமலஹாசன் அறிமுகப்படுத்தியிருந்தார்)
அந்த அறியப்படதா தமிழகம் என்று புத்தகத்திலிருந்து சில செய்தி துண்டங்கள் கீழே
சமண மதத்தைச் சாய்த்தெழுந்த சைவ மதமும் ‘பிச்சை’ என்ற கோட்பாட்டைப் பின்னர் ஓரளவு ஏற்றுக்கொண்டது.
சிவபெருமான் ஆடையின்றி, தாருகாவனத்தில் பிச்சையெடுக்கச் சென்றதாகக் கதைகள் புனையப்பட்டன.
தமிழ் நாட்டு வைணவமும் பிற்காலத்தில் துறவிகள் பிச்சையெடுத்து உண்பதை அனுமதித்தது
. (ஆயினும் நிர்வாணத்தை அங்கீகரிக்கவில்லை.) ராமாநுசர் போன்ற வைணவப் பெருந்துறவிகள் பிச்சை யேற்று நின்றிருக்கின்றனர்.
சமண, பௌத்த மதத்துறவிகள் வெந்த உணவை மட்டும் பிச்சையேற்றிருக்கின்றனர்.
பிச்சை யேற்பது ஆணாக இருந்தாலும் பிச்சையிடும் பணி பெண் களுக்கு உரியதாகவே அமைந்திருந்தது.
மணிமேகலை காட்டும் ‘அமுதசுரபி’ எனும் பாத்திரத்தில் ஆதிரை என்னும் பெண்ணே முதலில் சோற்றுப் பிச்சை இடுகிறாள். பெண்ணின் கையினால் பிச்சை பெறுவதால் பிச்சைக்கு ‘மாதுகரம்’ என்ற வடமொழிப் பெயரையும் இட்டு அழைத்தனர்.
முதன்முதலாகப் பிச்சையெடுப்பதை நிறுவனரீதியாகச் சமண மதமே அங்கீகரித்தது.
அம்மதமே நால்வகைத் தானங் களில் ஒன்றாக அன்னதானத்தையும் ஆக்கியது.
ஆடையில்லாத சமணத் துறவிகள் பிச்சைகேட்டு வரும்போது பெண்கள் கதவை அடைத்துக்கொண்டு வீட்டுக்குள் ஓடியுள்ளனர்.
‘காவிசேர்கண் மடவார் கண்டோடிக் கதவடைக்கும் கள்வ னானேன்’ என்று திருநாவுக்கரசர் தாம் திகம்பர சமணராகப் பிச்சையெடுத்த வரலாற்றைப் பாடுகிறார்.
——————————————————————————————————————–
Kumaravelu Ganesan
1 நா ·
மக்களை மகிழ்வாக வைத்திருக்க, மனவழுத்தத்தை குறைக்க பண்டிகைகள் முன்னைய காலங்களில் பயன்பட்டன. பெரிதாக முன்னேற்றமடையாத கிராமங்களில் இப்பொழுதும் பண்டிகைகளும், கோவில் திருவிழாக்களும் மக்களை உற்சாகமாக இருக்கவும் மனவழுத்தங்களில் இருந்து விடுபடவும் துணைபுரிகின்றன. அண்மைக்காலமாக, ஆரிய திராவிட சண்டைகளினால் எந்தவொரு பண்டிகைகளையும் மகிழ்வாக கொண்டாட விடுகின்றார்கள் இல்லை. இயேசு கிறிஸ்துவின் பிறப்பு டிசம்பர் மாதத்தில் நிகழ்ந்திருக்காது என்று விஞ்ஞானபூர்வமாக பல நிறுவல்கள் இருந்தாலும் ஒருசாரார் அதை டிசம்பரிலும், இன்னுமொரு சாரார் ஜனவரியில் ஒரு பிரச்னையும் இல்லாமல் கொண்டாடுகின்றனர் தானே! நாமும் பண்டிகைகளை அரசியல் மயப்படுத்தாமல் உண்டு களித்து இன்புற்றிருப்போம்.
கீழே வழக்கம்போல தீபாவளி தமிழர்களின் பண்டிகை இல்லை என்ற BBC கட்டுரை.
——–
“தமிழ் வரலாற்றில் 19ஆம் நூற்றாண்டுவரை தீபாவளி குறித்த குறிப்புகள் ஏதும் கிடையாது. வீரமாமுனிவரின் சதுரகராதி 1732ல் வெளியிடப்பட்டது அதில் தீபாவளி என்ற சொல் கிடையாது. தமிழ் இலக்கியங்களிலும் 19ஆம் நூற்றாண்டுவரை தீபாவளி என்ற சொல் ஏதும் கிடையாது. 1842ல் இலங்கையில் வெளியிடப்பட்ட மானிப்பாய் தமிழ் – தமிழ் அகராதியில் இந்தச் சொல் இருக்கிறது. அதற்கு புராண விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே அந்தத் தருணத்தில் இந்த விழா அறிமுகமாகியிருக்கலாம்” என்கிறார் ஆய்வாளர் பொ. வேல்சாமி.”
————————————————————————————————————-
தமிழர்கள் ஏமாளிகள். தன்மானம் அற்றவர்கள். ஆணும் (கிருஷ்னர்) ஆணும் (நாரதர்) புணர்ந்ததால் பிறந்தவன் நரகாசுரன். அவனை கிருஷ்ண பரமாத்மா சூழ்ச்சி செய்து கொல்கிறார். அதனை வெட்கம் கெட்ட தமிழர்கள் காரண காரியம் புரியாமல் கொண்டாடுகிறார்கள். கோயிலுக்கப் போனபோவது மன அழுத்தத்தை போக்க என்றால், பின் ஏன் கோயிலுக்குகத் திரும்பவு திரும்பவும் கோகிறார்கள்? மேலும் கோயிலுக்குப் போகிறவர்கள் மருத்துவரிடம் போவதில்லையா? மருத்துவ மனைகளை மூட அணியமா?
————————————————————————————————————–
.
Leave a Reply
You must be logged in to post a comment.