தமிழ்ப்பேரரசுகள் #TamilEmpires
நேற்றைய வகுப்பில் மாணவர்களிடம், நீங்கள் அறிந்த பேரரசுகள் Empire Dynasty பெயர்களைக் கூறுங்கள் என்ற கேள்விக்கு, அவர்கள் பிரிட்டிஷ் எம்பயர், பிரஞ்சு எம்பயர், ரோமன் எம்பயர் என்று உலக பேரரசு பெயர்களைக் கூறினார்களே தவிர, தமிழ் பேரரசின் பெயர்கள் அவர்களுக்குத் தெரியவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு அவ்வாறு பயிற்றுவிக்கப்பட வில்லை. ஏன் நாங்கள் படித்த காலத்தில் கூட அப்படியொரு கல்வி இருந்ததாக நினைவிலில்லை. சேர சோழ பாண்டியர் எனும் சொல்லாடல் மூன்று மன்னர்கள் என்று குறுகிய புரிதலை அந்தக் காலத்தில் ஏற்படுத்தியிருந்தது.
இலக்கியங்களில் மன்னர்கள் பெயர்கள் வரும்போது, அதனை ஒரு பேரரசின் அங்கமாக நாம் பார்த்ததில்லை. இவற்றை உடைக்க முதலில் நம்மிடம் இருந்த பேரரசின் மன்னர்களின் பெயர்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பொன்னியின் செல்வன் கதையில் இருக்கும் 5 சோழப் பெயர்களைப் பொதுவாக எல்லோரும் கூறுகிறார்கள்.
ஆனால் சேரப்பேரரசு, பாண்டியப்பேரரசு பெயர்களைக் கேட்டால், ஒன்று இரண்டு என்று திக்கித்திணறி நிற்கிறார்கள். இது மிகவும் வேதனைக்குரியது. இதனைக் கட்டுடைப்போம் அதற்காக நான் தொகுத்த பட்டியல் கீழ்வருமாறு. நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள். அடுத்த தலைமுறைகளுக்கும் எடுத்துரையுங்கள், முடிந்தவரை பரப்புங்கள், நன்றி.உலகிலே நீண்ட காலம் ஆட்சி செய்த பேரரசுகளின் பட்டியலில் முதல் நான்கில், மூன்று தமிழ் பேரரசு என்பதனை மாணவர்கள் கேட்டு அதிர்ந்தார்கள். அவர்களுக்குரிய பிரிட்டிஷ் பேரரசு நாற்பத்தி எட்டாவது இடத்தில் இருந்தது.
சேரர் ஆட்சிகாலம் – 430 கி.பி. – 1102 = 1532 ஆண்டுகள்சோழ ஆட்சிகாலம் – 301 கி.பி. – 1279 = 1580 ஆண்டுகள்.
பாண்டியர் ஆட்சிகாலம் – 580 கி.பி. -1345 = 1925 ஆண்டுகள்#பாண்டியர்கள்#முற்காலப்பாண்டியர்கள்வடிம்பலம்ப நின்ற பாண்டியன்நிலந்தரு திருவிற் பாண்டியன்முதுகுடுமிப்பெருவழுதிபெரும்பெயர் வழுதி #கடைச்சங்கப்பாண்டியர்கள்முடத்திருமாறன்மதிவாணன்பசும்பூண் பாண்டியன்பொற்கைப்பாண்டியன்இளம் பெருவழுதிஅறிவுடை நம்பிபூதப்பாண்டியன்வெற்றிவேற் செழியன்கூடக் காரத்துத் துஞ்சிய மாறன் வழுதிஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்உக்கிரப்பெருவழுதிமாறன் வழுதிநல்வழுதிகுறுவழுதிஇலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன்தலையாலங்கானத்துச்செருவென்ற நெடுஞ்செழியன்வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதிநம்பி நெடுஞ்செழியன்
#இடைக்காலப்பாண்டியர்கள்கடுங்கோன் → கி.பி. 575-600அவனி சூளாமணி → கி.பி. 600-625செழியன் சேந்தன் → கி.பி. 625-640அரிகேசரி → கி.பி. 640-670ரணதீரன் → கி.பி. 670-710பராங்குசன் → கி.பி. 710-765பராந்தகன் → கி.பி. 765-790இரண்டாம் இராசசிம்மன் → கி.பி. 790-792வரகுணன் → கி.பி. 792-835சீவல்லபன் → கி.பி. 835-862வரகுண வர்மன் → கி.பி. 862-880பராந்தகப்பாண்டியன் → கி.பி. 880-900
#பிற்காலப்பாண்டியர்கள்மூன்றாம் இராசசிம்மன் → கி.பி. 900-945அமரப்புயங்கன் → கி.பி. 930-945சீவல்லப பாண்டியன் → கி.பி. 945-955வீரபாண்டியன் → கி.பி. 946-966வீரகேசரி → கி.பி. 1065-1070மாறவர்மன் சீவல்லபன் → கி.பி. 1132-1162சடையவர்மன் சீவல்லபன் → கி.பி. 1145-1150பராக்கிரம பாண்டியன் → கி.பி.1150-1160சடையவர்மன் பராந்தக பாண்டியன் → கி.பி.1150-1162சடையவர்மன் குலசேகர பாண்டியன் → கி.பி. 1162-1175சடையவர்மன் வீரபாண்டியன் → கி.பி. 1175-1180விக்கிரம பாண்டியன் → கி.பி. 1180-1190முதலாம் சடையவர்மன் குலசேகரன் → கி.பி. 1190-1218முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் → கி.பி. 1216-1238இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் → கி.பி. 1238-1239இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் → கி.பி. 1239-1251சடையவர்மன் விக்கிரமன் → கி.பி. 1241-1254முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் → கி.பி. 1251-1271இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் → கி.பி. 1251-1281முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் → கி.பி. 1268-1311மாறவர்மன் விக்கிரம பாண்டியன் → கி.பி. 1268-1281இரண்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் → கி.பி. 1276-1293
#தென்காசிப்பாண்டியர்கள்சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் → கி.பி. 1422-1463மூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் → கி.பி. 1429-1473அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் → கி.பி. 1473-1506குலசேகர பாண்டியன் → கி.பி. 1479-1499சடையவர்மன் சீவல்லப பாண்டியன் → கி.பி. 1534-1543பராக்கிரம குலசேகரன் → கி.பி. 1543-1552நெல்வேலி மாறன் → கி.பி. 1552-1564சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் → கி.பி. 1564-1604வரதுங்கப்பாண்டியன் → கி.பி. 1588-1612வரகுணராம பாண்டியன் → கி.பி. 1613-1618கொல்லங்கொண்டான் → (தகவல் இல்லை)
#சோழர்கள்#முற்காலச்சோழர்கள்செம்பியன்எல்லாளன்இளஞ்சேட்சென்னிகரிகால் சோழன்மாற்றார் இடையாட்சிநெடுங்கிள்ளிநலங்கிள்ளிகிள்ளிவளவன்கோப்பெருஞ்சோழன்கோச்செங்கணான்பெருநற்கிள்ளி
#இடைக்காலச்சோழர்கள்விசயாலய சோழன் → கி.பி. 848–881ஆதித்த சோழன் → கி.பி. 871–907பராந்தக சோழன் I → கி.பி. 907–955கண்டராதித்தர் → கி.பி. 955–962அரிஞ்சய சோழன் → கி.பி. 962–963சுந்தர சோழன் → கி.பி. 963–980ஆதித்த கரிகாலன் → கி.பி. 966–971உத்தம சோழன் → கி.பி. 971–987இராசராச சோழன் I → கி.பி. 985–1014இராசேந்திர சோழன் → கி.பி. 1012–1044இராசாதிராச சோழன் → கி.பி. 1018–1054இராசேந்திர சோழன் II → கி.பி. 1051–1063வீரராஜேந்திர சோழன் → கி.பி. 1063–1070அதிராஜேந்திர சோழன் → கி.பி. 1067–1070
#சாளுக்கியசோழர்கள்குலோத்துங்க சோழன் I → கி.பி. 1070–1120விக்கிரம சோழன் → கி.பி. 1118–1135குலோத்துங்க சோழன் II → கி.பி. 1133–1150இராசராச சோழன் II → கி.பி. 1146–1173இராசாதிராச சோழன் II → கி.பி. 1166–1178குலோத்துங்க சோழன் III → கி.பி. 1178–1218இராசராச சோழன் III → கி.பி. 1216–1256இராசேந்திர சோழன் III → கி.பி. 1246–1279
#சேரர்கள்பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் → கி.பி. 45-70இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் → கி.பி. 71-129பல்யானைச்செல்கெழுகுட்டுவன் → கி.பி. 80-105களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் → கி.பி. 106-130சேரன் செங்குட்டுவன் → கி.பி. 129-184ஆடுகோட்பாட்டுச்சேரலாதன் → கி.பி. 130-167அந்துவஞ்சேரல் இரும்பொறை → (காலம் தெரியல)மாந்தரஞ்சேரல் இரும்பொறை → (காலம் தெரியல)வாழியாதன் இரும்பொறை → கி.பி. 123-148குட்டுவன் இரும்பொறை → (காலம் தெரியல)பெருஞ்சேரல் இரும்பொறை → கி.பி. 148-165இளஞ்சேரல் இரும்பொறை → கி.பி. 165-180பெருஞ்சேரலாதன் → கி.பி. 180கோப்பெருஞ்சேரல் இரும்பொறை → (காலம் தெரியல)குட்டுவன் கோதை → கி.பி. 184-194மாரிவெண்கோ → காலம் தெரியலவஞ்சன் → காலம் தெரியலமருதம் பாடிய இளங்கடுங்கோ → காலம் தெரியலகணைக்கால் இரும்பொறை → காலம் தெரியலகோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை → காலம் தெரியலபெருமாள் பாஸ்கர ரவிவர்மா → கி.பி. 8ஆம் நூற்றாண்டு
#பல்லவப்பேரரசுகள்#முற்காலப்பல்லவர்கள்பப்பதேவன்சிவகந்தவர்மன்விசய கந்தவர்மன்புத்தவர்மன்விட்ணுகோபன்
I#இடைக்காலப்பல்லவர்கள்குமாரவிட்ணு Iகந்தவர்மன் Iவீரவர்மன்கந்தவர்மன் II II கி.பி. 400 – 436சிம்மவர்மன் I II கி.பி. 436 – 477கந்தவர்மன் IIIநந்திவர்மன் I
#பிற்காலப்பல்லவர்கள்சிம்மவர்மன் IIIசிம்மவிஷ்ணு கி.பி. 556 – 590மகேந்திரவர்மன் I கி.பி. 590 – 630நரசிம்மவர்மன் I (மாமல்லன்) கி.பி. 630 – 668மகேந்திரவர்மன் II கி.பி. 668 – 669பரமேஸ்வரவர்மன் கி.பி. 669 – 690நரசிம்மவர்மன் II (ராஜசிம்மன்) கி.பி. 690 – 725பரமேஸ்வரவர்மன் II கி.பி. 725 – 731நந்திவர்மன் II (பல்லவமல்லன்) கி.பி. 731 – 796தந்திவர்மன் கி.பி. 775 – 825நந்திவர்மன் III கி.பி. 825 – 850நிருபதுங்கவர்மன் (தென் பகுதி) கி.பி. 850 – 882கம்பவர்மன் (வட பகுதி) கி.பி. 850 – 882அபராஜிதவர்மன் கி.பி. 882 – 901
இவண்சோழன்.திரு.இங்கர்சால், நார்வேவள்ளுவர் வள்ளலார் வட்டம்
Leave a Reply
You must be logged in to post a comment.