இங்கிலாந்து + பெரிய பிரித்தானியா = ஐக்கிய இராச்சியம்!
இங்கிலாந்து(England), பெரிய பிரித்தானியா (Great Britain) , ஒன்றிணைந்த அரசகம் (United Kingdom) {UK} ஆகிய மூன்றும் ஒரே பொருளுடையவை என்பதே வெளியிலிருந்து பார்க்கும் பலரின் கருத்தாகவிருக்கக்கூடும்.
ஆனால் அவை மூன்றும் வெவ்வேறு பொருளையும் வெவ்வேறு எல்லைகளையும் கொண்ட இடங்களாகும். இந்த நாடானது பொதுவாக நான்கு பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து(England), வேல்சு (Wales), இசுக்கொட்லாந்து (Scotland), வட அயர்லாந்து (Northern Ireland) என்பனவே அப் பிரிவுகள்.
படத்தில் தெளிவாகச் சிவப்பு கோடுகளால் எல்லையிடப்பட்டு இங்கிலாந்து காட்டப்படுவதனைக் காணலாம்; அதுதான் இங்கிலாந்து. இந்த இங்கிலாந்துடன், வேல்சு , இசுக்கொட்லாந்து என்பவற்றினையும் சேர்த்தால், அதுதான் பெரிய பிரித்தானியா எனப்படும். பெரிய பிரித்தானியாவுடன் வட அயர்லாந்தினையும் சேர்த்தால் , அதுதான் ஒன்றிணைந்த அரசகம் {`ஐக்கிய ராச்சியம்` தமிழல்ல}.England + Wales+ Scotland = Great BritainGreat Britain + Northern Ireland = UK (United Kingdom) வேல்சு, இசுக்கொட்லாந்து, வட அயர்லாந்து என்பனவற்றுக்குத் தனித்தனியே நாடாளுமன்றங்கள் கூட உண்டு. இங்கிலாந்துக்கு மட்டும் தனியாக நாடாளுமன்றமில்லை, ஏனெனில் ஒன்றிணைந்த அரசக ( UK ) நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையினை இங்கிலாந்தே கொண்டுள்ளது {84%}. சிறுபான்மையினருக்கே சிறப்புரிமைகள். தனியாகப் பணம் அடிப்பதற்குக் கூட உரிமையுண்டு
(படம் 2). பிரிந்து போவதற்கான வாக்கெடுப்புக் கூட, இசுக்கொட்லாந்தில் நடத்தப்பட்டு, சேர்ந்தே இருப்போம் என முடிவு வந்தது. இங்கிலாந்துக்கு இல்லாமல் ஏனைய வேல்சு போன்ற பகுதிகளுக்குக் கொடுக்கப்படும் `தனி நாடாளுமன்றம்` போன்ற சிறப்புரிமைகளை இலங்கையில் வடக்கு + கிழக்குக்கு மட்டும் கொடுத்தால் சிங்களவர் என்ன செய்வர்? இந்தியாவில் காசுமீருக்கோ தமிழ்நாட்டுக்கோ கொடுத்தால், இந்தி பேசும் பெரும்பான்மை மாநிலங்கள் என்ன செய்யும்?இத்தகைய முதிர்ச்சியில்லாமல், இலங்கை- இந்தியா போன்ற நாடுகள் வளர முடியாது.
Leave a Reply
You must be logged in to post a comment.