மகாகவி பாரதியார்

மகாகவி பாரதியார்

இயற்பெயர் -சுப்பிரமணியன்ஊர் -எட்டையபுரம். (தூத்துக்குடி மாவட்டம்)

பெற்றோர் -சின்னசாமிஇ இலக்குமி அம்மையார்காலம் -11-12-1882 முதல் 11-09-1921 வரை (39 வயது)மனைவி -செல்லம்மாள்

இயற்றிய நூல்கள்-புதிய ஆத்திசூடி (அச்சம் தவிர்)
பாஞ்சாலி சபதம்
குயில்பாட்டு

பாப்பாபாட்டு
தமிழ்த்தாய்
சுதேச கீதங்கள்
பாரதநாடுஇசெந்தமிழ் நாடு
முருகன்பாட்டு
விநாயகர் நான் மணிமாலை
கண்ணன்பாட்டுஇஞானரதம்

சந்திரிகையின்கதைஇ தராசுஇ ஆறில் ஒரு பங்குää நவதந்திரக் கதைகள் திருக்குறளுக்கு உரைஉரைநடை நூல்கள்-திண்டிம சாஸ்திரி

சொர்ணகுமாரிசிறப்பு பெயர்கள்-தேசியகவிஇமகாகவி
விடுதலைக் கவி பாட்டுக்கொரு புலவன் பாரதி
நீடுதுயில் நீக்கப்பாடி வந்த நிலா
தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி

தனக்கு தானே வைத்து கொண்ட பெயர் ஷெல்லிதாசன் காளிதாசன், சக்திதாசன்இநித்தியதீரர் சாவித்திரி ஓர் உத்தம தேசாபிமானி.

முன்னறிப் புலவர் புதுக்கவிதையின் தந்தை சீட்டுக்கவி, அமரகவி பைந்தமிழ் தேர்ப்பாகன் செந்தமிழ்த் தேனீ சிந்துக்குத்தந்தை, கலைமகள் எனும் பொருள் தரும் பாரதி என்ற சிறப்புப் பெயரைப் பெற்றவர்; –

பாரதியார் 1893 ல் எட்டையப்புர சமஸ்தானபுலவர்களால் 11ஆம் வயதில் பாரதி என்ற பட்டம் பெற்றவர் -பாரதியார்.

தமிழ், ஆங்கிலம் இந்திää சமஸ்கிருதம், வங்காளம், பிரெஞ்சு, அரபு போன்ற மொழிகளில் புலமைபெற்றவர் –

பாரதியார் 1898 முதல் 1902 வரை காசியில் வாழ்ந்தார். ஞானரதம் தமிழில் தோன்றிய முதல் உரைநடைகாவியம் ஆகும். குயில் பாட்டு இசைப்பாடல் நூலாகும். பாரதியார் 7 வயது முதலாகவே கவிதைகள் எழுதத் தொடங்கினார்.
11 வயது நிரம்பிய சுப்பையா எட்டயபுரம் சமஸ்தானப் புலவர்களின் பற்பல சோதனைகளில் வெற்றி பெற்றதால் அப்புலவர்கள் வியந்து அளித்த பட்டம் பாரதி.பாரதி என்ற சொல்லுக்கு சரஸ்வதி (கலைமகள்) என்று பொருள். அறிவில் சிறந்த இல்லறத்தார்க்குக் கொடுக்கப்படும் பட்டம் பாரதி.1894-1897 வரை திருநெல்வேலி ஹிந்து கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் 5-ம் வகுப்பு வரை படித்தார். படிக்கும்போது 14 வயதிலேயேää அக்கால வழக்கப்படிää 7 வயது நிரம்பிய செல்லம்மாளை திருமணம செய்து கொண்டார்.வறுமை காரணமாக காசிக்குச் சென்று அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சமஸ்கிருதத்தையும்ää இந்தியையும் கற்றார்.

காசியில் தான் பாரதியாருக்கு தலைப்பாகை கட்டும்பழக்கமும்ää மீசை வைத்துக் கொள்ளும் வழக்கமும் ஏற்பட்டது. பின் எட்டயபுரம் மன்னரின் அழைப்பை ஏற்றுää சில காலம் அரண்மனைக் கவிஞராகப் பணியாற்றினார்.அப்போதுதான் மதுரையில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த விவேக பானு என்ற பத்திரிகையில் இவரது முதல் பாடல் தனிமை இரக்கம் அச்சாகி வெளியிடப்பட்டது. 1904-ல் மதுரையில் உள்ள சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் (2 மாதங்கள்) பணியாற்றினார்.நவம்பர் 1904-ல் சென்னiயில் இருந்து வெளிவரும் சுதேசமித்திரன் பத்திரிகைக்கு உதவி ஆசிரியரானார். பின்பு சக்கரவர்த்தி பத்திரிகையின் ஆசிரியராக ஆனார்.1905 முதல் பாரதியார் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார்.

1906-ல் சென்னiயில் இருந்து இந்தியா என்ற வாரப் பத்திரிகை துவங்கி தனது அரசியல் கருத்துக்களை மக்களிடையே பரப்பினார். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யுடன் பாரதிக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.சகோதரி நிவேதிதாவைச் சந்தித்த பாரதிää அவரையே தனது ஞான குருவாக ஏற்றுக் கொண்டார்.

1907-ல் ச10ரத் பிளவுக்குப் பின் காங்கிரசில் தீவிரவாதிகளுக்கும் மிதவாதிகளுக்கும் இடையே கருத்து வேறுபாட்டில்ää திலகர் தலைமையிலான தீவிரவாதிகள் பக்கம் நின்று பாரதி பணியாற்றினார்.திலகர்ää லாலா லஜபதி ராய் அரவிந்தர் முதலியோரை பாரதி சந்தித்தார்.1908-ல் கிருஷ்ணசாமி அய்யர் என்பவர் வெளியிட்ட சுதேச கீதங்கள் என்ற தலைப்பில் கவிதைத் தொகுப்பு ஒன்றை பாரதியார் வெளியிட்டார்.

இந்தியா பத்திரிகையில் வெளிவந்த ஆட்சேபகரமான கட்டுரைகள் காரணமாக இந்தியா பத்திரிகையின் சட்டரீதியான ஆசிரியர் கைது செய்யப்பட்டு பாரதியார் மீது வாரண்ட் போடப்பட்டது. பாரதி தலைமறைவானார். புதுச்சேரி தலைமறைவாக வாழ்ந்தார்.

1910-ல் இந்தியா பத்திரிகை தடை செய்யப்பட்டது. 1917-ல் பரலி சு.நெல்லையப்பா அவர்கள் கண்ணன் பாட்டு முதற்பதிப்பை சென்னiயில் வெளியிட்டார்.

தமிழ் இலக்கியம்Pயபந 3புதுச்சேரி வாழ்க்கையில் ஏற்பட்ட சலிப்பு உணர்வால்பாரதியார் 1918-ல் அங்கிருந்து வெளியேறினார். எனினும் கடலூருக்கு அருகே கைது செய்யப்பபட்டு 34 நாட்கள் சிறைவாசத்திற்குப் பின் விடுதலை செய்யப்பட்டார். 1918 முதல் 1920 வரை கடையத்தில் வாழ்ந்தார். பின் சென்னைவந்தார்.

சென்னiயில் இராஜாஜி அவர்கள் வீட்டில் மகாத்மா காந்தியைச் சந்தித்தார். 1920-ல் மீண்டும் சுதேமித்திரனுக்கு உதவி ஆசிரியரானார். திருவல்லிக்கேணியில் கோயில் யானை ஒன்றினால் தூக்கி எறியப்பட்டு அதிர்ச்சியுற்று நோய்வாய்ப்பட்ட பாரதியார் 1921 செப்டம்பர் 11-ல் தமது39-ம் வயதில் உலக வாழ்வில் இருந்து விடுதலை பெற்றார்.பத்திரிக்கைப் பணிகள்:-நவம்பர் 1904 முதல் ஆகஸ்ட் 1906 வரை சுதேசமித்திரன் என்ற நாளிதழில் உதவியாசிரியராக பணியாற்றியவர் பாரதியார்.

சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழை சீனிவாச்சாரியோடு இணைந்து நடத்தியவர் -பாரதியார்.இவர் சுதேசமித்திரன் பத்திரிக்கையில் உதவி ஆசிரியராகவும்இ சக்கரவர்த்தினி (1905) பத்திரிக்கையில் ஆசிரியராகவும்இ இந்தியா வராப் பத்திரிக்கையில் ஆசிரியராகவும் பணியாற்றினார். சூர்யோதயம்ää விஜயாää தர்மம் ஆகிய இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றியவர் பாரதியார். கர்மயோகி, பாலபாரத் (அ) யங் இந்தியா போன்ற ஆங்கில இதழ்களையும் நடத்தினார். இவர்இந்தியாஇவிஜயாஎன்றஇதழ்களை வெளியிட்டு;ள்ளார். பாரதி எழுதிய முதல் பாடல்ääவிவேக பானு என்ற இதழில் 1904 ஆம் ஆண்டு வெளியானது.கேலிச்சித்திரம் எனப்படும் கார்ட்டூன் வரையும் முறையை தமிழில் முதன் முதலில் புகுத்தியவர் -பாரதியார்.20 ஆம் நூற்றாண்டின் இலக்கிய வளர்ச்சிக்கு வித்திட்டவர் பாரதியார்.கவிதையில் சுயசரிதை எழுதிய முதல் கவிஞர் -பாரதியார்.தம் பாடலுக்கு தாமே மெட்டிசைத்த முதல் கவிஞர் -பாரதியார்.எட்டையபுரம் அரசவைக் கவிஞராக பணியாற்றியவர் -பாரதியார்.மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகவும்இ சென்னையில் இதழாசிரியராகவும் பணியாற்றியவர் -பாரதியார்.

சென்னை ஜன சங்கம் அமைப்பை தோற்றுவித்தார்.சகோதரி நிவேதா தேவியைசந்தித்தபின் பாரதி தீவிரவாதியானார். தம்பி என்று பாரதியாரால் அழைக்கப்பட்டவர்-பரலிநெல்லையப்பர்.பாரதியார் ஒர்; அவதாரப் புருஷர்ääஇவர் நூலை தமிழர் வேதமாகக் கொள்க எனக் கூறியவர் -பரலி நெல்லையப்பர். பாரதி பாடல்களை நாட்டுடைமை ஆக்கியவர் -ஓமந்தூர் பி. ராமசாமி ரெட்டியர்.பாரதிக்கு மகாகவி பட்டம் வழங்கியவர் ராமசாமி ஐயங்கார்.

தமிழ் இலக்கியம்

பாரதியின் படத்தை முதன் முதலில் வரைந்தவர் -பாஷ்யம். பாரதியாரின் பாடல்களை முதன் முதலில் வெளியிட்டவர் -கிருஷ்ண சாமி ஐயர். பாரதியை நினைத்து விட்டால் சுதந்திரத்தின் தாகம் சுருக்கென்று ஏறும் எனக் கூறியவர் -நாமக்கல் கவிஞர். தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை தமிழ்த் தொண்டன் பாரதிதான் செத்ததுண்டோ எனக் கூறியவர் பாரதிதாசன். தமிழுக்கு வளஞ்சேர்க்கும் இலக்கியங்களை படைத்தவர் பாரதியார்.பாரதியார்கீதையை மொழிபெயர்த்துள்ளார்.பாரதியாரின் முப்பெரும் காவியங்கள் கண்ணன் பாட்டுஇகுயில் பாட்டுஇபாஞ்சாலி சபதம்சிறப்புகள்:காடு கமழ வந்த கற்பூரச் சொற்கோ என்று பாரதியாரை புகழ்;ந்து பாடியவர் -பாரதிதாசன்.நீடுதுயில் நீக்க பாடி வந்த நிலா என்று பாரதியாரை பாரதிதாசன் பாராட்டியுள்ளார்.தமிழ்நாட்டில் தமிழ்;ப்புலவன் ஒருவன் இல்லையென வசை நீங்க தோன்றியவர் பாரதி என்று கூறியவர் -பாரதிதாசன்.கற்பனை ஊற்றாங் கவிதையின் புதையல்ää திறம்பட வந்த மறவன்ää அறம் பட வந்த அறிஞன்ääஎன்னவென்று சொல்வேன்ää என்னவென்று சொல்வேன் தமிழால் பாரதி தகுதி பெற்றதும்ää தமிழ் பாரதியால் தகுதி பெற்றதும் என பாரதியைக் கூறியவர் -பாரதிதாசன்.அமெரிக்க கவிஞர் வால்ட்விட்மன்இ கலீல் கிப்ரான் சாயலில் பாரதியார் வசன கவிதை எழுதினார்.பண்டிதர்களின் கரடுமுரடான நடையில் தேங்கிக்கிடந்த தமிழை பலரும் படித்தறியும் வகையில் இனிய பாக்களாக வடித்து உலவவிட்டவர் பாரதியார்.தமிழ்மொழி பரவிட விளைந்த தமிழ்ப்பாவலர் பாரதியார்.தெருவெல்லாம் தமிழ்முழக்கம் செழிக்கச் செய்தவர் தேமதுர தமிழோசை உலகமெல்லாம் பரவுதல் வகைசெய்ய வேண்டும் என்றவர் பாரதியார்.ஆன்மீக விடுதலை பெண் விடுதலை சமுதாய விடுதலை முதலியவற்றை உள்ளடக்கிய நாட்டு விடுதலையை விளைந்த கவிஞர் பாரதியார்.குயில் பாட்டு இசையின் பெருமையை சொல்லும் நூல்.பாஞ்சாலி சபதம் வியாசர் எழுதிய மகாபாரதத்தை அடிப்படையாக கொண்டது.கட்டுரை மற்றும் கருத்து படங்களால் ஆங்கில அரசை திணறச்செய்தவர் பாரதியார்.தமிழுக்குரிய வரலாற்றில் ஒரு புதிய பகுதி பாரதியோடு தொடங்குகிறது.உலகம் நிரம்பியிருப்பது இசையால் என்றவர் பாரதியார்.

இலக்கிய மறுமலர்ச்சியின் காலம் பாரதியார் காலம் ஆகும். மறுமலர்ச்சி பாடல்களின் முன்னோடி மானுடம் பாடும் நெறியே ஆகும். நாடு, மொழி, இறை, பெண்மை முதலிய தலைப்புகளில் பாடல்களை இயற்றியவர் பாரதியார்.நமக்கு தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைபொழுதும் சோராதிருத்தல் என்றவர் பாரதியார்.

பாரதியார் உரிமைக்காப்பியமாக வடித்தது பாஞ்சாலி சபதம்.சாதி வேரை முளையிலேயே கிள்ளி எய்திட விரும்பியவர் பாரதியார்.பாரதி சங்கத்தை தோற்றுவித்தவர் கல்கி.பாவேந்தர் பாரதிதாசன்இயற்பெயர் -கனக சுப்புரத்தினம்ஊர் -புதுச்சேரிபெற்றோர் -கனகசபை, இலக்குமிமனைவி -பழனி அம்மையார்காலம் -29. 04 . 1891 முதல் 21 . 04 . 1964 வரைஇயற்றிய நூல்கள்-சஞ்சீவி பர்வதத்தின் சாரல்இ இசையமுதுஇஅழகின் சிரிப்புஇபாண்டியன் பரிசுஇஇருண்ட வீடுஇகுடும்ப விளக்கு, சேர தாண்டவம், தமிழச்சியின் கத்தி, பிசிராந்தையார் குறிஞ்சிதிட்டு, தமிழியக்கம் பாரதிதாசன் கவிதைகள் மணிமேகலை வெண்பா, கண்ணகி புரட்சிக் காப்பியம் இபடித்த பெண்கள்,இளைஞர் இலக்கியம், திருக்குறள் உரை, புத்தகசாலை சிறப்புபெயர்கள் -பாவேந்தர் புரட்சிக் கவிஞர்.

தமிழ்நாட்டின் இரசூல்கம்சதோவ் இயற்கைக் கவிஞர் தமிழ் கவிää தமிழரின் கவிääதமிழின் மறுமலர்ச்சிக்காக தோன்றிய கவிää தமிழரின் புகழ் மேதினியோங்க பிறந்த கவி.இதழ் -குயில்பத்திரிக்கை -பகுத்தறிவு குடியரசுசிறப்புகள்:தனது 16 வது வயதில் நிரவி அரசு பள்ளியில் ஆசிரியராக பணியைத் துவங்கினார். பின்பு புதுவை அரசினர் கல்லூரியில்(கால்வே கல்லூரி) பேராசிரியராகப் பணியாற்றியவர் -பாரதிதாசன்.

1938 ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற கவிஞர் -பாரதிதாசன்.உருசிய நாட்டின் மாக்கவிஞர்-இரசூல் கம்சதேவ் தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதைவேரில்லாத மரம், கூடில்லாத பறவை -இரசூல் கம்சதோவ்நாளை என் தாய்மொழி சாகுமானால் -இன்றேநான் இறந்து விடுவேன்-இரசூல் கம்சதோவ் இரசூல் கம்சதோவ் போல் சிறந்து விளங்கியவர் -பாரதிதாசன் பாரதியின் மீது கொண்ட பற்றின் காரணமாக தனது பெயரை பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார்.

20 ஆம் நூற்றாண்டின் கவிதை வானில் ஒளிநிலவாய் பவனி வந்த பெருங்கவிஞன் -பாரதிதாசன். அறியாமை இருளில் முடங்கிக் கிடந்த கருத்துக் குருடர்களை ஒளிபெற்று விழிப்புறச் செய்த கவிஞன்- பாரதிதாசன் கொள்கையற்ற கூனர்களை கொள்கை உரம் பெற்று நிமிர்ந்து நிற்கச் செய்த புரட்சிக் கவிஞன் -பாரதிதாசன் தம் வாழ் நாள் முழுவதையும் தமிழின் மறுமலர்ச்சிக்காகவும் வீழ்ச்சியுற்ற தமிழகத்தின் புத்தெழுச்சிக்காவும் தமிழரின் முன்னேற்றத்திற்கு தடைக்கற்களாய் நின்ற அறியாமையையும்ää மூடப்பழக்கவழக்கங்களையும் உடைத்தெறிந்த கவிஞன் -பாரதிதாசன்.வீடெல்லாம்ää நாடெல்லாம் மக்களின் இதயக்கூடெல்லாம்ääஏடெல்லாம் இன்பத்தமிழ் மணக்க வேண்டும் என்று அல்லும் பகலும் அயராது தமிழ்ப்பணியாற்றிய கவிஞன் -பாரதிதாசன்.புதுவையில் வெளியான ஏடுகளில் தன்னை கிண்டல்காரன்ää கிருக்கன் என்ற புனைப் பெயர்களில் கவிதை எழுதியவர் -பாரதிதாசன்.சாகித்திய அகாடமி விருது பெற்ற பாரதிதாசனின் நூல் -பிசிராந்தையர் நாடகம்.தமிழ்இபிரெஞ்சுஇஆங்கிலம் மொழிகளில் புலமை பெற்றவர் -பாரதிதாசன்.பாரதிதாசனை “சுப்புரத்தினம் ஒரு கவி” என்றவர் -பாரதியார்.மறுமலர்ச்சி கருத்துக்களை தம் பாடல்களின் மூலம் பரப்பியவர் -பாரதிதாசன்.ஸ்ரீசுப்பிரமணிய பாரதியின் கவிதாமண்டலத்தைச் சார்ந்தவர் சுப்புரத்தினம் என்று பாரதி பாரதிதாசனை ஏற்றுக்கொண்டார்.

எங்கெங்கு காணினும் சக்தியடா-தம்பி என்றவர் பாரதிதாசன்.ஏழுகடல் அவள் வண்ணமடா என்ற பாடல் பாரதியின் கவிதாமண்டலத்தைச் சார்ந்த கனகசுப்புரத்தினம் எழுதியது என்று சுதேசியமித்திரனில் வெளியானது. பாரதிதாசன் பரம்பரை கவிஞர்கள் முடியரசன் வாணிதாசன் கம்பதாசன் சுப்புரத்தினதாசன். பிற்காலத்தில் சிறகடித்த வானம்பாடிகளுக்கு முதலெழுத்தும்இ தலையெழுத்தும் -பாரதிதாசன் தமிழக அரசு பாரதிதாசன் படைப்புகளை1990 ல் நாட்டுடைமையாக்கியுள்ளது.

தமிழக அரசால் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ள இடம் -திருச்சிராப்பள்ளி. குடும்பக்கட்டுப்பாடு பற்றி இந்தியாவிலேயே முதன் முதலில் பாட்டெழுதியவர் -பாரதிதாசன்.இரவா இன்ப களஞ்சியங்கள் என அழைக்கப்படுபவை -பாரதிதாசன் கவிதைகள்செந்தமிழை செழுந்தமிழாக காண விரும்பியவர் -பாரதிதாசன்.என்னரும் தமிழ் நாட்டின் கண் எல்லோரும் கல்வி கற்க வேண்டும் எனக் கூறியவர் -பாரதிதாசன் பண்டை நலம் புதுப்புலமைஇ பழம்பெருமை அத்தனையும் படைப்பாய் இந்நாள் தொண்டுசெய்வாய் தமிழுக்கு துறைதோறும் துடித்தெழுந்து துடித்தெழுந்து என்றவர் -பாரதிதாசன். ஷ

இன்பத்தமிழ் கல்வி யாவரும் கற்றால் துன்பங்கள் நீங்கும் சுகம் வரும் என்று கூறியவர் -பாரதிதாசன். இறவாப் புகழுடைய எண்ணற்ற காப்பியங்களை படைத்தவர் -பாரதிதாசன்.வறுமையினால் தமிழன் ஒருவனுக்கு கல்லாத நிலை ஏற்படுமானால் இங்குள்ளோர் நாணிட வேண்டும் என்றவர் -பாரதிதாசன். தமிழுக்குத் தொண்டுசெய்வோர் சாவதில்லை என்று பாரதியைப் பாடியவர் -பாரதிதாசன் வெள்ளம் போல் தமிழ்க் கூட்டம் -பாரதிதாசன். பாவேந்தர் பாடலின் விந்தை எனப்படுவது நிலையாமை பேசப்படுவது. பொதுவுடைமையை வலியுறுத்தும் நூல் -சஞ்சீவி பார்வதத்தின் சாரல். இயற்கையை வர்ணிக்கும் நூல் -அழகின் சிரிப்பு. கல்வி கற்ற பெண்களின் சிறப்பை கூறும் நூல் -குடும்ப விளக்கு.

கல்லா பெண்களின் இழிவைக் கூறும் நூல் -இருண்ட வீடு. பில்கணியத்தின் தழுவல் -புரட்சிக் காப்பியம்.பாண்டியன் பரிசு கதிர்நாட்டு மன்னன்-கதிரைவேலன் மனைவி -கண்ணுக்கினியாள் மகள்-அன்னம் கண்ணுக்கினியாளின் அண்ணண்-நரிக்கண்ணன் (படைத் தலைவன்) கண்ணுக்கினியாள்தோழி -ஆத்தா கிழவி அன்னத்தின் தோழி-நீலிவீரப்பனின் மனைவி -ஆத்தாக்கிழவி மகன் -வேலன் ஆத்தாக்கிழவியின் மகன் -வேலன்நரிக்கண்ணனின் சூழ்ச்சியால் படையெடுத்து வந்தவன் -வேழ மன்னன் நரிக்கண்ணன் தனது கையாள் எனக் கருதி மணிமுடி, நாட்டின் பட்டயம் இருந்த பேழையை வீரப்பனிடம் கொடுத்தான்.

வேழநாட்டு மறவரிடமிருந்து அன்னத்தை காத்தவன் -வேலன். மேற்கோள் “எனை ஈன்ற தந்தைக்கும்இ தாய்க்கும் மக்கள்இனமின்ற தமிழ்நாடு தனக்கும் என்னால்தினையளவுநலமேனும் கிடைக்குமென்றால்செத்தொழியும் நாளும் எனக்குத் திருநாளே”“மழையே மழையே வா வாஇ நல்ல வானப்புனலே வா வாதகரப்பந்தல் தணதண என்னஇ தாழும் கூரை சளசள என்ன இனிமை தமிழ்மொழி எமது -எமக்குஇன்பம் தரும்படி வாய்த்த நல் அமுது !

எளிய நடையில் தமிழ் நூல்கள் எழுதிடவும் வேண்டும் இலக்கண நூல்கள் புதிது புதிதாய் ஈற்றலும் வேண்டும் உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே தமிழென்று தோள்தட்டி ஆடு தமிழ் நல்லதமிழ் வெல்க என தினம் பாடுஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு செந்தமிழே நறுந்தேனே செயலினை மூச்சினை உனக்களித்தேனேதமிழே நீயோர் பூக்காடுநானோர் தும்பிஉள்ளே தொட்டால் உசிரில் இனிக்கும் தமிழ் “தமிழுக்கு அமுதென்று பேர் -அந்தத்தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”

“இருட்டறையில் உள்ளதடா உலகம்” “புதியதோர் உலகு செய்வோம் கெட்டபோரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்” “தூலம் போல்வளர் கிளைக்குவிழுதுகள் தூண்கள் ! தூண்கள்” -அழகின் சிரிப்பு “உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூல்கள்ஒருத்தர்தயை இல்லாமல் ஊரறியும் தமிழில் -தமிழ் வளர்ச்சி “சிற்றூரும் வரப்பெடுத்த வயலும் ஆறுதேக்கியநல் வாய்க்காலும் வகைப்படுத்தி” வாழ்வினில் செம்மையை செய்பவள் நீயே (புதுவையின் தமிழ்தாய் வாழ்த்து பாடலாகும்)

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதானஇடம் நோக்கி நடக்கின்ற இந்தவையம்கல்லாரைக் காணுங்கால் கல்வி நல்க.

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply