வெல்லும் தமிழ்

வெற்றிகரமாக நடந்தேறிய  “வெல்லும் தமிழ்’


உலகத் தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் கனடா முருகன் கோவில் திருமண அரங்கில் கடந்த  யூலை 14 (ஞாயிற்றுக்கிழமை) நடத்திய  ‘வெல்லும் தமிழ்’ விழா தித்திக்கும் முத்தமிழின் இனிமையோடு மிகச் சிறப்பாக நடந்தேறியது.

சிறப்பு விருந்தினராக வருகை தந்த தமிழறிஞர் திரு. சண்முகம் குகதாசன் தமிழின் பயன்பாடு அருகி வருவதையிட்டுக் கவலை தெரிவித்தார்.  

வரவேற்புரை வழங்கிய நக்கீரன் தமிழ்மொழியை தமிழர்கள் அனைத்துத் தளங்களிலும் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். குறிப்பாக குழந்தைகளுக்கு அழகு  தமிழில் பெயர் திருமணத்தில் வடமொழிக்குப் பதில் தமிழ் திருக்கோவில் வழிபாட்டில் வடமொழிக்குப் பதில் தமிழில் போற்றி பயன்படுத்தப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்தார்.   இயல் தமிழை புயல் பேச்சாளர் அருள்மதி வாரி வழங்கினார்

 இசைத் தமிழை  கலைமாமணி டி.கே.எஸ். கலைவாணன் அள்ளி வழங்கினார்
நாடகத் தமிழை டி.கே.எஸ். கலைவாணன் குழுவினர் தங்களது ”இராசராசசோழன்” வரலாற்று நாடகம் மூலம் வழங்கினார்கள். இராச இராச சோழன் அவன் மகன் இராசேந்திர சோழன் மகள் இளைய குந்தவை உடன்பிறப்பு குந்தவைப்பிராட்டியார் இராசேந்திரனை மணக்கும் கொடும்பா@ர் இளவரசி வானதி  வேங்கி வேந்தன் சக்திவர்மன் அவன் தம்பி விமலாதித்தன் பாலபட்டர் எல்லோரும் உயிர் பெற்று மேடையில் தோன்றினார்கள்!
 
கவியரங்கில் தமிழ்ப் படைப்பாளிகள் கழகக் கவிஞர்கள் சித்தி விநாயகம் ரூபன் இரட்டினம் கலைவாணி இராசகுமாரன் இராசநாதன் இராஜ்மீரா இராசையா கலந்து கொண்டார்கள். கவிஞர் பவானி தர்மகுலசிங்கம் கவியரங்குக்குத் தலைமை தாங்கினார்.  

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் நூல் வெளியீட்டு விழாவில்    தென்றல் தமிழில் வார்த்தைச் சித்தர் வலம்புரி யோன்   தெள்ளு தமிழில் கவிஞர் அறிவுமதி ஆற்றிய உரைகள் அடங்கிய  ஒளியிழை நாடாவை திரு. இராசரத்தினம்     வெளியீடு செய்து வைக்க அதன் முதல்படியை ஆர் அன்ட் எஸ் ஓட்டோ சேல்ஸ் நிறுவன உரிமையாளரும் நிகழ்ச்சி புரவலருமான திரு. ராதா பெற்றுக் கொண்டார்.
 
நிகழ்ச்சிகளை அன்பரசி தொகுத்து வழங்கினார்.
 
மேடையில் இசைத் தமிழும் நாடகத் தமிழும் வழங்கிய கலைவாணன் குழுவினருக்கு  தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் பொற்கிழி வழங்கி மேன்மைப்படுத்தியது.
 ரொறன்ரோ
யூலை 10 2002

வெல்லும் தமிழ் விழா அழைப்பிதழ்
அன்புடையீர்!

வணக்கம். கடந்த ஆண்டு தமிழீழ  மணித்  திருநாட்டின் தேசியக்  கவிஞர் காசி ஆனந்தனின் கவிதைகள் கதைகள் “தமிழனா தமிங்கிலமா” நூல் வெளியீட்டு விழா  கனடா முருகன் கோவில்அரங்கில் (733A Birchmount Road, Scarborough (Birchmount/ Eglinton) மிகச் சிறப்பாக   நடந்தேறியது தாங்கள் அறிந்ததே.

இந்த விழாவில் உங்கள் பேராதரவோடு கிடைத்த 11000 டொலர் முழுவதையும் கவிஞருக்கு அனுப்பி வைத்தோம்.      

இந்த  ஆண்டு ”வெல்லும் தமிழ் விழா”வினை  அதே அரங்கில் எதிர்வரும் யூலை 14 (ஞாயிற்றுக் கிழமை) மாலை 5.30 மணிக்கு நடத்த இருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன்  அறியத் தருகிறோம். இந்த விழாவில் இயல் தமிழை தமிழ் நாட்டில் இருந்து வருகை தந்திருக்கும் வழக்கறிஞர் புயல் பேச்சாளர் அருள்மொழியும் இசைத் தமிழையும் நாடகத் தமிழையும் (‘இராசராச சோழன்’நாடகம்) கலைமாமணி டி.கே. கலைவாணன் குழுவினரும் வழங்க இருக்கிறார்கள்.

விழாவில் காசி ஆனந்தன் கவிதைத் தொகுதி நூல் வெளியீட்டு ஒளியிழை நாடாவும் வெளியி;ட்டு வைக்கப்படும். தித்திக்கும் இந்த முத்தமிழ் விழாவில்  தாங்கள் தவறாது  கலந்து சிறப்பிப்பதோடு ஒளியிழை நாடாவினையும் பெற்று ஏகுமாறு தங்களை அன்புடன் அழைக்கிறோம். நன்றி.
 
 
மிக்க அன்புடன்
 
வே. தங்கவேலு (நக்கீரன்)
தலைவர்   
 
தொடர்பு – தொ.பேசி  (416) 281 1165 (416) 447 6314 (416) 261 9099
    தொ.நகல்  (416) 261 6745

  ‘வெல்லும் தமிழ்’ விழா

இடம் -கனடா முருகன் கோவில் திருமண அரங்கு
733A Birchmount Road, Scarborough
(Birchmount Eglinton)

காலம் – யூலை 14 (ஞாயிற்றுக்கிழமை) 2002

நேரம் – மாலை 5.30 மணி

சிறப்பு விருந்தினர்- திருமதி பத்மா குகதாசன்
தமிழறிஞர் திரு. சண்முகம் குகதாசன்
   
இயல் தமிழ்   – புயல் பேச்சாளர் அருள்மதி (தமிழ்நாடு)   

இசைத் தமிழ்  – கலைமாமணி டி.கே.எஸ். கலைவாணன்

நாடகத் தமிழ்  – டி.கே.எஸ். கலைவாணன் குழுவினர்
                (”இராசராசசோழன்” வரலாற்று நாடகம்)

கவியரங்கு    – கனேடிய தமிழ்க் கவிஞர்கள்

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் நூல் வெளியீட்டு விழாவில்     தென்றல் தமிழில் வார்த்தைச் சித்தர் வலம்புரி யோன் தௌளு தமிழில் கவிஞர் அறிவுமதி     ஆற்றிய உரைகள் அடங்கிய  ஒளியிழை நாடா வெளியீடு செய்து வைக்கப்படும்.   (இது ஒரு வரலாற்றுப் பதிவு)

அனைவரையும் அன்போடு அழைக்கிறோம் (அன்பளிப்பு 10 டொலர்)

நிகழ்ச்சி ஆதரவு-ஆர் அன்ட் எஸ் ஓட்டோ சேல்ஸ் நிறுவனம் ஸ்காபரோ

தொடர்பு – தொ.பேசி (416) 261 9099 (416) 447 6314 (416) 281 1165
 
 
‘வெல்லும் தமிழ்’ விழா

இடம் -கனடா முருகன் கோவில் திருமண அரங்கு
733A Birchmount Road, Scarborough
(Birchmount Eglinton)
காலம் – யூலை 14 (ஞாயிற்றுக்கிழமை) 2002
 
நேரம் – மாலை 5.30 மணி
  சிறப்பு விருந்தினர்- திருமதி பத்மா குகதாசன்
                                தமிழறிஞர் திரு. சண்முகம் குகதாசன்

 கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்கும் கவியரங்கு  தமிழிசை நடனம் நாட்டுப் பாடல்கள் மற்றும்    சுவையான கலை நிகழ்ச்சிகள்!
 
தமிழக அறிஞர்கள் கலந்து கொள்கிறார்கள்.

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் நூல் வெளியீட்டு விழாவில்   தென்றல் தமிழில் வார்த்தைச் சித்தர் வலம்புரி யோன்
 தெள்ளு தமிழில் கவிஞர் அறிவுமதி ஆற்றிய உரைகள் அடங்கிய  ஒளிப்படம்  வெளியீடு செய்து வைக்கப்படும்.  (இது ஒரு வரலாற்றுப் பதிவு)

 அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்

நிகழ்ச்சி ஆதரவு-ஆர் அன்ட் எஸ் ஓட்டோ சேல்ஸ் நிறுவனம  ஸ்காபரோ
  உலகத் தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்
தொடர்பு – தொ.பேசி இல. (416) 261 9099 (416) 447 6314 (416) 281 1165

————————————————————————————————————————————
 
 


 

About editor 3016 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply