திருவள்ளுவர் ஆண்டே தமிழர் ஆண்டு

திருவள்ளுவர் ஆண்டே தமிழர் ஆண்டு

** திருவள்ளுவர் ஆண்டே தமிழர் ஆண்டு !

** சுறவம்-1 தமிழ்ப் புத்தாண்டு

** தமிழ்ப் புத்தாண்டு பிறப்பை தமிழ்த் தேசிய திருநாளாக்குவோம் !

** சனவரி-1 ஏகதிபத்திய சீரழிவு ஆங்கிலப் புத்தாண்டை புறக்கணிப்போம் !

** சித்திரை -1 சமசுகிருத  ஆதிக்க புத்தாண்டை தூக்கியெறிவோம் !

** சுறவம்-1 தமிழ்ப் புத்தாண்டை உயர்த்திப்பிடிப்போம-் !
———————————————————————————————–

வணக்கம் தோழர்களே ,

தமிழ்ப்புத்தாண்டை தமிழர்கள் ஏன் சுறவம் (தை) கொண்டாடுகிறார்கள், ஏன் சித்திரையில் கொண்டாடுவதில்லை .

மூன்று கூறுகள்

1 . தொடர் ஆண்டு முறை

2. வானியல்

3. வரலாறு / இலக்கியங்கள். . .

1 . தொடர் ஆண்டு முறை

சித்திரைப் புத்தாண்டு சாலிவாகனன் என்பவனால் அல்லது கனிஷ்கனால் கி.பி.78இல் எற்பட்டவை. இவை வடநாட்டு அரசனால் ஏற்பட்டவையாதலின் வட மொழிப் பெயர்களாய் உள்ளன.

(ஆதாரம்:-பக்கம் 7 தி ஹிந்து 10.03.1940)

அப்படி உருவாக்கிய விக்கிரம சகம் எனும் ஆண்டு முறையில் சித்திரை முதல் நாளே ஆண்டின் முதல் நாளாக்கப்பட்டது. விக்கிரம சகம் 60 ஆண்டுகளை வரையறுத்தது.”பிரபவ”ஆ-ண்டில் தொடங்கி “அட்சய”ஆண்டில் முடியும்.

இந்த சித்திரைப் புத்தாண்டுக்கு சொல்லும் அறிவியலுக்குப் புறம்பான கட்டுக் கதை :

( அபிதான சிந்தாமணி என்ற நூலில் 1392ம் பக்கத்தில் )

ஒருமுறை நாரதமுனிவர், கடவுள் கிருஷ்ணனை “நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு பெண்ணையாவது தரக்கூடாதா?” என்று கேட்டாராம். அதற்குக் கிருஷ்ணன், “நான் இல்லாமல் வீட்டில் தனியாய் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள்’ என்றாராம். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும் கிருஷ்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மோகம் கொண்டு அவரை நோக்கி “நான் உங்களிடமே பெண்ணாக இருந்து உறவு கொள்ள விரும்புகிறேன்” என்றார்.

கிருஷ்ணன் நாரதரை “யமுனையில் குளித்தால் பெண்ணாய் மாறுவாய்” எனச் சொல்ல, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினார். பின் கடவுள் கிருஷ்ணனுடன் அறுபது வருடம் கூடி, அறுபது மகன்களைப் பெற்றார். அவர்கள் ‘பிரபவ தொடங்கி அட்சய முடிய’ எனப் பெயர் பெற்றார்கள். இப்படிதான் சித்திரை 1 இல் தொடங்கம் ஆரம்பிக்கும் புத்தாண்டு வரலாறு சொல்கிறது.

அறிவியலுக்குப் புறம்பான கட்டுக் கதை . சிறு குழந்தை கூட ஏற்காது . . .

பின் குறிப்பு : நாரதனும், கிருஷ்னனும் மொத்தம் 60 குழந்தைகளை பெற்றெடுத்ததாக கதை கூறுகிறது, 50 வயதுக்கு மேல் பிள்ளைகளை பெற்றெடுக்க முடியாது என்பது அறிவியல்.).

தமிழ் ஆண்டுகள் என்று தினிக்கப்படும் பார்ப்பனிய 60 ஆண்டுகள்

எண்.    பெயர்                   எண்.       பெயர்           

01.       பிரபவ                   31.      ஹேவிளம்பி    

02.       விபவ                     32.       விளம்பி          

03.       சுக்ல                       33.       விகாரி

04.       பிரமோதூத           34.       சார்வரி

05.       பிரசோற்பத்தி       35.       பிலவ  

06.       ஆங்கீரச               36.       சுபகிருது        

07.       ஸ்ரீமுக                  37       சோபகிருது    

08.       பவ                       38.       குரோதி          

09.       யுவ                       39.       விசுவாசுவ     

10.       தாது                     40.       பரபாவ           

11.       ஈஸ்வர                41.       பிலவங்க       

12.       வெகுதானிய      42.       கீலக   

13.       பிரமாதி              43.       சௌமிய        

14.       விக்கிரம             44.       சாதாரண       

16.       சித்திரபானு        46.       பரிதாபி          

17.       சுபானு                47.       பிரமாதீச        

18.       தாரண                48.       ஆனந்த          

19.       பார்த்திப            49.       ராட்சச

20.       விய                   50.       நள     

21.       சர்வசித்து          51.       பிங்கள           

22.       சர்வதாரி           52.       காளயுக்தி       

23.       விரோதி            53.       சித்தார்த்தி     

24.       விக்ருதி             54.       ரௌத்திரி       

25.       கர                      55.       துன்மதி          

26.       நந்தன               56.       துந்துபி           

27.       விஜய              57.       ருத்ரோத்காரி 

28.       ஜய                   58.       ரக்தாட்சி        

29.       மன்மத              59.       குரோதன       

30.       துன்முகி             60.       அட்சய

இந்த அறுபது ஆண்டுகளுக்கும் ‘பிரபவ’ முதல் ‘அட்சய’ என்று அறுபது பெயர்கள் இருக்கின்றன. இந்த அறுபது ஆண்டுகளின் பெயரில் ஒரு பெயர் கூடத் தமிழ்ப் பெயர் இல்லை என்பதை நீங்களே அறிந்துகொள்ளலாம் .

இந்த 60 ஆண்டு தொடர் ஆண்டுமுறை நம் வரலாற்றை அழிக்கும் வகையில் உள்ளது,

எவ்வாறு என பார்ப்போம் :

>>உதாரனம் 1 : நெடுஞ்செழியன் என்பவர் ‘பிரபவ’ ஆண்டில் பிறக்கிறார், தமிழ்த்தேசிய மக்கள் சனநாயகக் குடியரசு அமைக்கப் போராடுகிறார். ஒரு 1000 வருடங்கள் கழித்து போராட்ட தியாகி நெடுஞ்செழியன் எப்போது பிறந்தார் என்று கேட்டால் உடனே நாம் கணக்கு போட துவங்கி விட வேண்டும் . 1000 / 60 = 16 சுழற்சி   மீதம் 40 . 40வது ஆண்டு”பராபவ ஆண்டு”. நெடுஞ்செழியன்”பராபவ ஆண்டில் பிறந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த சுழற்சி ஆண்டுமுறை நம் வரலாற்றை அழிக்கும் வகையில் உள்ளது .

>>உதாரனம் 2 : நெடுஞ்செழியன் என்பவர் ‘பிரபவ’ ஆண்டில் பிறக்கிறார், தமிழ்த்தேசிய மக்கள் சனநாயகக் குடியரசு அமைக்கப் போராடுகிறார்.

அடுத்து 600 வருடங்கள் கழித்து இன்னுமொரு நெடுஞ்செழியன் என்பவர் பிறக்கிறார் . அவரும் ‘பிரபவ’ ஆண்டில் தான் பிறப்பார், ( 600 / 60 = 10 சுழற்சி ). இரண்டாவதாக பிறக்கும் நெடுஞ்செழியன் இந்திய ஒருமைப்பாடு, இலங்கைக்கு உதவி செய்தல், தமிழ் மக்களை அடிமைபடுத்துதல் போன்ற துரோக செயல்களில் ஈடுபடுபவறாக இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம் ,

இதில் எந்த நெடுஞ்செழியன் தமிழ்மக்களுக்காக் போராடினார், எந்த நெடுஞ்செழியன் தமிழ் மக்களை அடிமைபடுத்தினார் என்ற குழப்பம் உன்டாகும். இறுதியில் தமிழ்மக்களுக்காக் போராடின நெடுஞ்செழியன் வரலாறு அழிக்கப்பட்டுவிடும் .

இந்த சுழற்சி ஆண்டுமுறை நம் வரலாற்றை அழிக்கும் வகையில் உள்ளது, எனவே, தமிழ்க்கடல் மறைமலை அடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி. கலியாணசுந்தரனார், தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணிய பிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் நா.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், பேராசிரியர் சா. நமச்சிவாயனார் ஆகியோர் ஐந்நூறுக்கு மேற்பட்ட தமிழ் அறிஞர்கள், புலவர்கள், சான்றோர்கள் 1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடிய மாநாட்டில் ஆராய்ந்தார்கள். பேராசிரியர் கா. நமச் சிவாயர் மாநாட்டைத் தொடக்கி வைத்தார். திருவள்ளுவர் இயேசு கிறித்து பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்பு பிறந்தவர்; அவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது, அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது; தை மாதம் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என முடிவு செய்தார்கள்.

எனவே தான் நாம் கூறுகிறோம் திருவள்ளுவர் ஆண்டே தமிழர் ஆண்டு !

தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற முதுமொழியை ‘புத்தாண்டு வந்தால் புதுவாழ்வு மலரும்’ -என்ற கருத்தோடு ஒப்பு நோக்கிப் பார்க்க வேண்டும்.

இன்றைய நவீன காலக் கணிப்பீட்டு முறையுடன் அச்சொட்டாகப் பொருந்தும் வகையில், பண்டையத் தமிழரின் காலக் கணிப்பீட்டு முறைமை மிகவும் நுட்பமாகக் கணிக்கப்பட்டுள்ளது.

தமிழன் காலத்தை ஆறு பருவங்களாகப் பகுத்தான்.

1. இளவேனில் – ( தை-மாசி மாதங்களுக் குரியது)

2. முதுவேனில் – (பங்குனி – சித்திரை மாதங்களுக் குரியது)

3. கார் – (வைகாசி – ஆனி மாதங்களுக் குரியது)

4. கூதிர் – (ஆடி – ஆவணி மாதங்களுக் குரியது.)

5. முன்பனி – (புரட்டாசி – ஐப்பசி மாதங்களுக் குரியது)

6. பின்பனி – (கார்த்திகை – மார்கழி மாதங்களுக் குரியது)

காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் (seasons) பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான விசயத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்!

பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள்.-தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் – தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.

ஒரை http://-ta.wiktionary.org/-wiki/ஒரை

ஒரு ஆண்டு காலத்தை 12 மாதங்களாக இரைந்த தொகுதிகள் ஒவ்வொன்றும் ஒரு இரைதிகளாகும். இது இராசி என்று வடமொழியில் திரிந்தது.

சுறவம், கும்பம், மீனம், மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை, எனப் பன்னிரண்டு இரைதிகளுக்கு பழைய தமிழன் பெயரிட்டான்

ஒரை – HORO – HOROSCOPE – இராசி என மாறியது.

திருப்பூரில் தயாராகும் T. SHIRT வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து, அதில் ADIDAS, POLO, REEBOK னு STICKER ஒட்டி அதயே மறுபடியும் இங்கு இறக்குமதி செய்தா அது வெளிநாட்டு கம்பெனி T. SHIRT ஆகிவிடுவது அது போல நாம் பயன்படுத்திய நட்சத்திரதை அடிப்படயாக கொண்ட மாதங்கள் (ஓரை) வெளிநாட்டுக்கு( HORO ) ஏற்றுமதி செய்து அதயே மறுபடியும் இங்கு (HOROSCOPE) இறக்குமதி செய்தா தமிழர்களுக்கு தெரியாதா ? தமிழர்களென்ன அவ்லோ முட்டாள்களா ? ?

பொதுவாக நம் கொண்டாடும் மாதங்கள் என்பது சம்ஸ்கிருத மாதங்கள் ஆகும். சம்ஸ்கிருத மாதத்தின் முதல் மாதம்”சைத்ரா”என்று தொடங்கும். அதன் கடைசி மாதம்”பல்குணா”என்று முடிவடையும்.

நாம் இன்று தமிழ் மாதங்கள் என்று குறிப்பிடுவது தமிழ்மாதங்கள் அல்ல. அவை சமஸ்கிருத மாதப் பெயர்களின் மருவிய வடிவம்.

நமது முன்னோர்கள் இயற்கையை அடிப்படயாகக் கொன்டு நட்ச்த்திரங்களின் கூட்டத்தை வைத்து ஒரு வருடத்தை 12 மாதங்களாக ஆக பிரித்தான் . இவையே தமிழ் மாதங்கள் ஆகும்.

எடுத்துக்காட்டாக தமிழ் மாதத்தின் முதல் மாதம் என்பது சுறவம் ஆகும். அப்பெயர்வருவதற்கான காரணம் சுறா மீன் வடிவத்தில் வானத்தில் ஓரைகள் (நட்சத்திரம்) தோன்றும்.

அதே போல் ஒவ்வொரு மாதமும் நட்சத்திர கூட்ட்ங்களின் வடிவங்கள் மாறி மாறி அமையும் .

.கீழே கொடுக்கப்பட்ட மாதங்கள்தான் உண்மையான தமிழ் மாதங்கள் ஆகும்.

1. சுறவம் 2. கும்பம் 3. மீனம் 4. மேழம் 5. விடை 6. ஆடவை

7. கடகம் 8. மடங்கல் 9. கன்னி 10. துலை 11. நளி 12. சிலை .

சமஸ்கிருத மாதம் – சமஸ்கிருத திரிபு – தமிழ்மாதங்கள்

புணர்தை – தை – சுறவம்

மகசி – மாசி – கும்பம்

பல்குணா – பங்குனி – மீனம்

சைத்திரா – சித்திரை – மேழம்

வைசாகி – வைகாசி – விடை

மூலன் – ஆனி – ஆடவை

உத்திராட -ஆடி – கடகம்

அவிட்ட -ஆவணி – மடங்கல்

பூரட்டாதி – புரட்டாசி – கன்னி

அசுவதி – ஐப்பசி – துலை

கிருத்திகா – கார்த்திகை – நளி

மிருகசீரிசா – மார்கழி – சிலை .

எனவே தான் இளவேனில் காலத்தில் வரும்”சுறவம்”மாததில்-தமிழர்கள் புத்தாண்டை கொண்டாடினார்கள் .

* சுறவம்-1 தமிழ்ப்புத்தாண்டு
——————————————————————————————————————————-

வரலாறு / இலக்கியங்கள். . .

சுறவம்-1 யே தமிழர்கள் புத்தாண்டுத் தொடக்கமாகக் கொண்டாடி வந்துள்ளனர் என்பதற்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கழக இலக்கியங்களில் சான்றுகள் உள்ளன.

நற்றிணை

** தைஇத் திங்கள் தண்கயம் படியும்

குறுந்தொகை ** தைஇத் திங்கள் தண்ணிய தரினும்

புறநானூறு ** தைஇத் திங்கள் தண்கயம் போல்

ஐங்குறுநூறு ** தைஇத் திங்கள் தண்கயம் போல்

கலித்தொகை ** தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ

புறநானூறு . கலித்தொகையிலும், நற்றிணையிலும் குறுந்தொகையிலும் ஐங்குறுநூற்றிலும் தை மாதத்தை மட்டுமே சிறப்பித்திருக்கிறார்கள், “சித்திரையில் இல்லை”

நமது முன்னோர்கள் நிலங்களை 5 ஆக பிரித்தனர்.

// குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை //

1. குறிஞ்சி – மலையும் மலை சார்ந்த நிலமும்

2. முல்லை – காடும் காடு சார்ந்த நிலமும்

3. மருதம் – வயலும் வயல் சார்ந்த நிலமும்

4. நெய்தல் – கடலும் கடல் சார்ந்த நிலமும்

5. பாலை – தமிழ்நாட்டில் பாலைநிலம் என்ற ஒன்றே இல்லை. பாலைநிலம் என்பது குறிஞ்சி-நிலத்திலும்-, முல்லை-நிலத்திலும் தோன்றும் பருவநிலை மாற்றம்.

http://-ta.wikipedia.org/-wiki/ஐந்திணை_வளம்

** “ முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்” – சிலப்பதிகாரம்

பாலை என்பது பண்டைத் தமிழகத்தில் பண்பின் அடிப்படையில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். குறிஞ்சி, முல்லை ஆகிய நிலத்திணைகளுக்கு இடையிலமைந்த பாழ் நிலப் பகுதி பாலை ஆகும். அதாவது காடாகவுமில்லாமல் மலையாகவும் இல்லாமல் இரண்டும் கலந்து மயங்கி வெப்ப மிகுதியால் திரிந்த சுரமும் சுரம் சார்ந்த இடமும் பாலை நிலமாகும்

http://-ta.wikipedia.org/-wiki/பாலை_நிலம்

பாலைத்திணை

பாலைக்கு என்று தனி நிலம் இல்லை. ஆனால் முல்லயும் குறிஞ்சியும் முறை முறை திரிந்து கதிரவன் வெம்மையாலே எங்கும் வளமை தீய்ந்து போயுள்ள இடங்களே பாலை என்பது ஆகும். இதனால், காதலர் இடையே’பிரிவும், பிரிதல் நிமித்தமும்’ஆக ஏற்படும் பெரும் துயரத்தையும் பாலைக்கு உரிமை படுத்தினர். ஆறலை கள்வரும், கொலையும் துன்பமும் வெம்மையும் இந்நிலத்துக்கு உரிய தன்மைகள், பாலைத்திணைக்கு வேனில் காலம், மற்றும் பின்பனி காலம் பெரும்பொழுதுகளாகவும்-, நண்பகல் சிறுபொழுதாகவும் அமையும்.

http://-ta.wikipedia.org/-wiki/திணை_விளக்கம்

பாலை -குறிஞ்சி-நிலத்திலும்-, முல்லை-நிலத்திலும் தோன்றும் பருவநிலை மாற்றத்தால் வெப்பம் மிகுந்து குறிஞ்சியும் முல்லையும் பாலையாக திரியும் / மாறும். புல் பூண்டு செடி கொடிகள் அழியும், அனைத்து உயிர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் உருவாகும் .

அது எந்த மாதத்தில் நிகழும் என்றால் “ தமிழ்ப் புத்தாண்டு – தமிழ்ப் புத்தாண்டு “ என்று அறிவுப்பிழைப்பாளர்கள் சொல்லும் சித்திரையில் தான் குறிஞ்சியும் முல்லையும் பாலையாக திரியும்.

நமது முன்னோர்கள் சொல்லும் விடயத்தை, ஏன் நமக்கே தெரிந்த ஒரு அறிவியல் சார்ந்த விசயத்தை நினைவு கூறுகிறேன்.

திருமணம் ஆன ஆணும் பெண்ணும்”ஆடி”மாத்தில-் இணைய/-சேர கூடாது – என்று நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் அவர்களை பிரித்து வைப்பர், ஏன் என்றால் ஆடியில் ஆணும் பெண்ணும் இணைந்தால் 10 வது மாதமான “சித்திரையில்”குழந்ததை பிறக்கும் .

ஒரு சிறு உயிர் பிறப்பதற்கே /-வாழ்வதற்கே தகவமைப்பற்ற”சித்திரை”யில் தான் தமிழர்கள் புத்தாண்டு கொண்டாட வேண்டுமாம் .

இது தான் அறிவியல் சார்ந்த சித்திரயில் புத்தாண்டா ????

தமிழர்கள் தமிழ்ப்புத்தாண்டை ஏன் சுறவம் (தை) யில் கொண்டாடுகிறார்கள், ஏன் சித்திரையில் கொண்டாடுவதில்லை என்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்க

1 . தொடர் ஆண்டு முறை

2. வானியல்

3. வரலாறு / இலக்கியங்கள். . .

இந்த அறிவியல் அடிப்படையிலான மூன்று கூறுகளே போதும். . . .

தமிழ் அறிஞர்கள், புலவர்கள், சான்றோர்க ளின் பாடல்கள் / முன்மொழிதல்

தையே முதற்றிங்கள்; தைம் முதலே ஆண்டு முதல் பத்தன்று; நூறன்று; பன்னூ றன்று பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில் தையே முதற்றிங்கள்; தைம் முதலே ஆண்டு முதல் பத்தன்று; நூறன்று; பன்னூ றன்று பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்

புத்தாண்டு தைம் முதல்நாள், பொங்கள் நன்னாள் நித்திரையில் இருக்கும் தமிழா ! சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப்புத்தாண்டு அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் காட்டியதே அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள் தரணி ஆண்ட தமிழர்க்கு தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு

பாரதிதாசன்

என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடலும் தமிழருக்குத் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் தை மாதம் முதல் நாள் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.

‘வானநூல் பொருத்தமும் வயல் விளைச்சல் பொருத்தமும் ஒருங்கே அமையப்பெற்ற தை மாதம் முதல் நாளைத் தமிழர்தம் ஆண்டுத் தொடக்கமாகப் பெற்றிருந்தனர் எனின் அவர்தம் அறிவினை என்னெனக் கூறி வியப்போம்’என்பது நாவலர் சோமசுந்தர பாரதியாரின் நற்சான்றாகும். முன்னாளில் தமிழ் ஆண்டு தை முதல் மாதத்தில்தான் இருந்தது என்பது கம்பன் அடிப்பொடி சா. கணேசன் கருத்தாகும்.’சிந்துவ-ெளி மக்கள் தம் ஆண்டுத் தொடக்கம் தை மாதம் முதல்நாள் என்று வழங்கினர். பிற்காலத்தில் இதுவே திருவள்ளுவர் ஆண்டுப் பிறப்பும் ஆயிற்று’என்கிறார் விஞ்ஞானி நெல்லை சு. முத்து அவர்கள்.’முன்காலத்தி-ல் வருடப் பிறப்பு, சித்திரை முதல் நாளாக இருந்த தில்லை ; தை முதல் நாள் தான் வருடப்பிறப்பாகப் பெரியோர்கள் கொண்டாடினார்கள்’-

மூதறிஞர் மு. வரதராசனார்’தைப் பொங்கல் திருநாள் தமிழர்களாகிய நமக்குப் புத்தாண்டுத் தொடக்க நாளாகும்’- அறிஞர் நாரண துரைக்கண்ணன்’தை முதல்நாள் தைப்புத்தாண்டின் தொடக்க நாள் என்பது தெள்ளிதின் புலனாகும். அறிவியல் அடிப்படையில் இது ஏற்கத்தக்கதுமாகும்’–டாக்டர் மெ. சுந்தரம் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்பதை 1935ஆம் ஆண்டில் திருச்சியில் மறைமலை அடிகள் தலைமையில் நடந்த தமிழர் மாநாட்டில் தந்தை பெரியார் ஏற்றுக்கொண்டார்.’தை முதல் தமிழினத்தின் ஆண்டு முதல் நாள்’- பேராசிரியர் செல்வி பாகீரதி

இணைய முகவரிகள் :

http://-www.envazhi.com/-தையா-சித்திரையா-எது-த-மிழ/

http://-www.tamilwin.com/-view.php?2aIWnJe0dHj0-60ecGG773b4F9EO4d2g2-h2cc2DpY3d426QV3b02Z-Lu3e

http://-www.periyarthalam.com-/2012/01/13/-தமிழர்-புத்தாண்டு-தை–முத.html#more-1545

http://-www.varalaaru.com/-design/-article.aspx?ArticleI-D=1094

http://-www.unmaionline.com/-new/64-unmaionline/-unmai2013/january/-1274-இலக்கியங்கள்-போற-்றும்-தை-யில்-தமிழ்ப-்-புத்தாண்டு-கி-தளபத-ிராஜ்.html

http://-www.keetru.com/-index.php?option=com_-content&view=article-&id=18003%3A2012-01–13-11-19-44&catid=14-11%3A12012&Itemid=66-1

http://-ta.wiktionary.org/-wiki/ஒரை

http://-ta.wikipedia.org/-wiki/ஐந்திணை_வளம்

http://-ta.wikipedia.org/-wiki/பாலை_நிலம்

http://-ta.wikipedia.org/-wiki/திணை_விளக்கம்

சனவரி-1 ஆங்கிலப் புத்தாண்டும் இப்போது உள்ளது போல் 12 மாதங்களை கொண்டு இருந்ததா என்றால்? இல்லை என்பதே விடை.

ஆங்கிலப் புத்தாண்டு என்பது இயேசு பிறப்பை அடிப்படையாக கொண்டது,

மேரி மாதா கருவுற்று 10 மாதங்கள் கழித்து இயேசு பிறந்த சனவரி 1 யை அடிப்படயாக்கக் கொண்டு ஆங்கில புத்தாண்டு உருவாக்கப்பட்டது. அப்போது ஆண்டுக்கு 10 மாதங்கள் மட்டுமே இருந்தன.

செப்டம்பர் – செப்டம் – 7 – ஆனல் செப்டம்பர் 9 வது மாதமாக உள்ளது

அக்டோபர் – ஆக்டோ – 8 – அனால் அக்டோபர் 10 வது மாதமாக உள்ளது

நவம்பர் – நவம் (ஒன்பது) – 9 – ஆனால் நவம்பர் 11 வது மாதமாக உள்ளது

டிசம்பர் – தசம் (தசாவதாரம்,தஸ்) – 10 – அனால் டிசம்பர் 12 வது மாதமாக உள்ளது

மேரி மாதா டிசம்பரில் கருவுற்று சனவரியில் இயேசு பிறந்தார் .

அனால் தற்போது 12 மாதங்கள் வழக்கில் உள்ளது…. எவ்வாறு ?

ஆங்கில புத்தாண்டு இயேசு பிறப்பை அடிப்படையாகக் கொண்டதால் ஒரு வருடத்திற்கு 10 மாதங்கள் மட்டுமே இருந்தது, இப்போது வந்த பருவ காலம் அடுத்த வருடம் வரவில்லையே என குழம்பினர். பின்னாளில் வந்த மன்னர்களான யூலியஸ் சீசர் தன் பெயரில் யூலை என்ற ஒரு மாதத்தை இடையில் செருகினான். ஓகஸ்தின் தன் பெயரில் ஆகஸ்ட் என்ற ஒரு மாதத்தை இடையில் செருகினான். இப்படியாக செப்டம்பர், ஒக்டோபர், நவம்பர் , டிசம்பர் ஆகிய மாதங்கள் இரண்டு மாதங்கள் தள்ளிப் போனது.
ஆங்கில புத்தாண்டு வரலாறு இப்படியிருக்க, இந்த ஆங்கில புத்தாண்டு வரவால் நம் தமிழ்ப் பண்பாடு கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு கொண்டிருக்கிறது என்பதே உண்மை .

நம் கலை, இலக்கியம், பண்பாடு, நாகரீகம், அழிக்கப்படுவதோடு உணவு பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் வந்து நம் பாரம்பரியம் அழிக்கப்படுகிறது.
பழைய சோறு சாப்பிட்டால் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைக்கும் என்று அமெரிக்காவில் கன்டுபிடித்து சொல்கிறான் . தன் நாட்டுமக்களுக்கு பழைய சோறு சாப்பிட பரிந்த்துரை செய்கிறான். அனால் நாம் ஆங்கில மோகத்தால் அமெரிக்காவில் கன்டுபிடித்த (சத்துகள் அற்ற) kellogg’s corn flakes, tropicana juice, yippee noodles, Maggi noodles, KFC, PIZZA, DOMINO’S என கண்டதை சாப்பிடும் பழக்கம் நம்மிடயே மேலோங்கி உள்ளது .

ஆங்கில மொழியின் மீது கொண்ட மோகத்தால் நாம் நம் தாய்மொழி தமிழை இழிவாக நினைத்து உலகபொதுமறை கொண்ட நம் தாய்மொழியில் பேச அவமானப்பட்டுகொண்டு ஆங்கில மொழியில் பேசுவதை உயர்வாக எண்ணுகின்றோம்.

ஆங்கில கலாசாரத்தினால் நம் வீர மங்கைகள் அரைகுறை உடையிலும், ஆண்கள் இடுப்பில் நிற்காத காற்சட்டைகளையும் அணிந்து திரிகின்றனர்.
** சனவரி-1 ஏகதிபத்திய சீரழிவு ஆங்கிலப் புத்தாண்டை புறக்கணிப்போம்!
** சித்திரை -1 பார்ப்பனிய ஆதிக்க புத்தாண்டை தூக்கியெறிவோம்!
** சுறவம்-1 தமிழ்ப் புத்தாண்டை உயர்த்திப்பிடிப்போம் !
** திருவள்ளுவர் ஆண்டே தமிழர் ஆண்டு !
** தமிழ்ப் புத்தாண்டு பிறப்பை தமிழ்த்தேசிய திருநாளாக்குவோம் !

https://tamilidugai.blogspot.com/2016/04/blog-post.html

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply