தமிழ் இலக்கண நூல்கள்

தமிழ் இலக்கண நூல்கள்

நாங்கள் வழங்கும் சொற்களை நால்வகைப்படுத்துகிறார் தொல்காப்பியர்:
இயற்சொல்திரிசொல் (இலக்கியச் சொல்)திசைச்சொல் (பிறமொழிச் சொல்)

வடசொல்

அவற்றுள் 120 சொற்களை எடுத்துக்காட்டி விளக்கமளிக்கும் தொல்காப்பியர்,  “கடிசொல் இல்லை காலத்துப் படினே” (காலத்தால் நிலைத்த சொற்களை உதறித்தள்ளக் கூடாது) என்று அறிவுறுத்துகிறார். அதற்கமைய முற்காலத்தில் வெளிவந்த (1) நிகண்டுகளும், அவற்றை அடுத்து தற்காலத்தில் வெளிவந்த (2) அகராதிகளும், பின்னர் இக்காலத்தில் வெளிவந்த (3) சொற்றொகுதிகளும் தமிழின் சொற்பெருக்க வரலாற்றை உணர்த்தி நிற்கின்றன.
(1) நிகண்டுகள்: தமிழில் 36 நிகண்டுகள் இருப்பதாகக் கணக்கிடுகிறார் முனைவர் தொ. பரமசிவன். 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த திவாகரர் 2,108 பாக்கள் கொண்ட (திவாகர) நிகண்டில் 12 வகையான பெயர்களைப் பட்டியலிடுகிறார்: தெய்வப் பெயர், மக்கட் பெயர், விலங்கின் பெயர், மரப்பெயர், இடப்பெயர், பல்பொருட் பெயர், செயற்கை வடிவப் பெயர், பண்பு பற்றிய பெயர், செயல் பற்றிய பெயர், ஒலி பற்றிய பெயர், ஒருசொற் பல்பொருட் பெயர், பல்பொருட் கூட்டத்து ஒரு பெயர். மொத்தம்: 9,500 சொற்கள்.13ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிங்கல முனிவர் 4,121 பாக்களில் 10 வகையான சொற்களை நிரலிடுகிறார். பிங்கல நிகண்டின் முதல் 9 தொகுதிகளிலும் 15,800 சொற்களும், இறுதித் தொகுதியில் 1,091 சொற்களும் காணப்படுகின்றன. மொத்தம்: 16,891 சொற்கள்.1520 வாக்கில் வாழ்ந்த மண்டலபுருடர் 12 தொகுதிகள் கொண்ட தமது சூடாமணி நிகண்டில் 12,796 சொற்களை நிரைப்படுத்துகிறார். நிகண்டுகளில் இடம்பெறும் சொற்கள் பிவரும் துறைகளைச் சார்ந்தவை:ஆட்சி, இசை, உலோகவியல், கட்டிடக்கலை, கடற்செலவு, கடற்றொழில், கணிதம், கப்பல்கட்டல், சிற்பம், சோதிடம், தாவரவியல், நிருவாகம், புடைவை, புவியியல், மரவேலை, மருத்துவம், வானவியல், விலங்கு, மருத்துவம், வேளாண்மை.
(2) அகராதிகள்: என்றீக் என்றீக்கெஸ் (Henrique Henriques, 1520-1600) என்ற போர்த்துக்கேயரின் தமிழ்-போர்த்துக்கேய அகராதியே காலத்தால் முற்பட்டது எனப்படுகிறது. அது பற்றிய குறிப்பு மட்டுமே இன்று எஞ்சியுள்ளது. அதை அடுத்து வெளிவந்த அகராதிகள் பலவற்றின் காலகட்டங்கள் கவனிக்கத்தக்கவை:

1679தமிழ்-போர்த்துக்கேய அகராதிஅந்தாவோ டி பொரயங்கா (Antao de Proenca, 1625-1666)
1824சதுரகராதிவீரமாமுனிவர் (Costanzo Giuseppe Beschi, 1680-1747)
1842யாழ்ப்பாண அகராதிசந்திரசேகரப் பண்டிதர், சரவணமுத்துப் பிள்ளை
1862தமிழ்-ஆங்கில அகராதிவின்சுலோ பாதிரியார் (Miron Winslow, 1789-1864)
1867ஆங்கிலம்-தமிழ் அகராதிபேர்சிவல் பாதிரியார் (The Rev. P. Percival, 1803-1882)
1899தமிழ்ப் பேரகராதிநா. கதிரைவேற்பிள்ளை (1860-1907)
19041923தமிழ்ச் சொல்லகராதிகு. கதிரைவேற்பிள்ளை (1829-1904)
1907ஆங்கிலம்-தமிழ் அகராதிமுத்துத்தம்பிப்பிள்ளை (1858-1917)
190920ம் நூற்றாண்டுத் தமிழ்ப் பெயரகராதிபி. இராமநாதன்
19241936தமிழ்-ஆங்கிலப் பேரகராதி(Tamil Lexicon)சென்னைப் பல்கலைக்கழகம்:  எஸ். வையாபுரிப்பிள்ளை (தலைமைப் பதிப்பாளர்), வி. நாராயண ஐயர், பி. ஆர். மீனாட்சிசுந்தர முதலியார், பண்டிதர்கள் வி. எம். கோபால கிருஷ்ணமாச்சாரியார், எம். இராகவ ஐயங்கார், எஸ். சோமசுந்தர தேசிகர்
1941சொற்பிறப்பு-ஒப்பியல் தமிழ் அகராதிசுவாமி ஞானப்பிரகாசர் (1938-1946)
1963ஆங்கிலம்–தமிழ்ச் சொற்களஞ்சியம்சென்னைப் பல்கலைக்கழகம்: கலாநிதி ஏ.சிதம்பரநாதச் செட்டியார் (தலைமைப் பதிப்பாளர்), கா. அப்பாத்துரை, ரா.பி.சேதுப்பிள்ளை, மு.வரதராசனார், தெ.பொ.மீனாட்சி சுந்தரம்பிள்ளை, தனிநாயகம் அடிகள், பேராசிரியர் ஆலாலசுந்தரம், ஆறுமுக முதலியார்

இந்தியாவிலும் இலங்கையிலும் அமெரிக்க ஆதீனத்தின் ஆணையாளராக விளங்கிய சந்திலர் (J. S. Chandler) 1913ல் தமிழ்-ஆங்கிலப் பேரகராதிக்கு (Tamil Lexicon) வித்திட்டார். பண்டிதர் ராகவையங்கார் (1878-1960) அவருக்குத் துணைநின்றார். 1862ல் வெளிவந்த வின்சுலோ அகராதியையும், அதை மீட்டியமைக்கு முகமாக போப்பையர் (G. U. Pope, 1820-1908) திரட்டிய தரவுகளையும் அடிப்படையாகக் கொண்டு பேரகராதி தொகுக்கும் பணியை அவர்கள் முன்னெடுத்தார்கள். பேரகராதிக் குழுவில் பின்வருவோர் அங்கம் வகித்தார்கள்:
ஸ்ரீ பி. எஸ். சிவசாமி ஐயர் (தலைவர்)உ. வே. சாமிநாத ஐயர்எஸ். அனவரதவிநாயகம் பிள்ளைஎஸ். குப்புசாமி ஐயர்ரி. ராமகிருஷ்ண பிள்ளைமார்க் ஹன்டர்
1922ல் சந்திலர் ஓய்வுபெற, எஸ்.அனவரதவிநாயகம் பிள்ளை (1877-1940), சி. பி. வெங்கட்ராம ஐயர், பி. எஸ் சுப்பிரமணிய சாஸ்திரி, எஸ். வையாபுரிப்பிள்ளை (1891-1956) ஆகியோர் அடுத்தடுத்து தலைமைப் பதிப்பாளராக விளங்கினார்கள். 1924ல் பேரகராதியின் முதலாவது தொகுதியும், 1936ல் இறுதி 6ம் தொகுதியும் வெளிவந்தன. மொத்தம் 4,000 பக்கங்கள்; 104,000 தலைப்புச் சொற்கள். 1939ல் 423 பக்கங்களும், 13,000 தலைப்புச் சொற்களும் கொண்ட பின்னிணைப்பு வெளிவந்தது. 1951ல் Henry Fowler, Francis Fowler இருவரும் பதிப்பித்த The Concise Oxford Dictionary of Current English அகராதிக்கு 1958ல் வெளிவந்த பிரதியில் உள்ள 61,000 தலைப்புச் சொற்களுக்கான பொருளை “ஆங்கிலம்–தமிழ்ச் சொற்களஞ்சியம்” தூய தமிழில் பெயர்த்துக் கொடுத்துள்ளது. பற்பல புதிய பதங்களும் அதில் புனையப்பட்டுள்ளன. சாதாரண பயனாளர்களைக் காட்டிலும் தமிழும் ஆங்கிலமும் பயின்றவர்களை அதிகம் கருத்தில் கொண்டு தொகுக்கப்பட்ட அகராதி இது. இலங்கையில் அதிகாரபூர்வமான மொழிபெயர்ப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் சொற்றொகுதிகளுக்கு நிகரான இடம் இவ்வகராதிக்கு கொடுக்கப்பட்டு வந்துள்ளது.     2,000ம் ஆண்டில் கிரகரி ஜேம்ஸ் ஆங்கிலத்தில் தொகுத்த, 900 பக்கங்கள் கொண்ட A History of Tamil Dictionaries என்னும் ஆங்கில நூலுக்கு “சொல்பொருள்” (Colporul) என்று தமிழில் தலைப்பிட்டமை கவனிக்கத்தக்கது. சொல்லின் பொருள் அறுத்துரைக்கப்பட வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது. பழைய அகராதிகள் சொல்லின் பொருளை தமிழிலோ ஆங்கிலத்திலோ வரையறுக்கவில்லை அல்லது செவ்வனே வரையறுக்கவில்லை என்று தமிழ்-ஆங்கிலப் பேரகராதிக்கு (Tamil Lexicon) தாம் எழுதிய முன்னுரையில் எஸ். வையாபுரிப்பிள்ளை குறைப்பட்டுள்ளார்.தமிழ்-ஆங்கிலப் பேரகராதி, ஆங்கிலம்–தமிழ்ச் சொற்களஞ்சியம், க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, ஆக்ஸ்போர்ட் ஆங்கிலம்-ஆங்கிலம்-தமிழ் அகராதி போன்றவை அக்குறையைப் போக்குவதற்கு (சொல்லின் பொருளைச் செவ்வனே வரையறுப்பதற்கு) அரும்பாடுபட்டுள்ளன. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியின் தலைமைப் பதிப்பாளர் கலாநிதி பா. ரா. சுப்பிரமணியன் தமது அறிமுகத்தில் கலைச்சொற்களின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார்:

“தற்காலத் தமிழின் ஒரு முக்கியமான அம்சம், அரசுத் துறைகளிலும் வளர்ந்துவரும் புதிய அறிவியல் துறைகளிலும் தொழில் துறைகளிலும் பொழுதுபோக்குத் துறைகளிலும் உருவாக்கப்படும் கலைச்சொற்களாகும். இக்கலைச்சொற்களில் துறை வல்லுநர்கள் மட்டுமேயல்லாமல் பொதுமக்களும் பயன்படுத்துகிற, புரிந்துகொள்ளவேண்டிய சொற்கள் இருப்பதால் அவை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. அரசு நிர்வாகம், விளையாட்டு முதலிய துறைகள் பொதுமக்களுடைய வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புடைய துறைகள். ஆதலால் இத்துறைச் சொற்கள் கணிசமான அளவில் இடம்பெற்றிருக்கின்றன. மொழியோடு இலக்கணக் கலைச்சொற்களுக்குள்ள நெருக்கம் காரணமாக இவையும் இடம்பெற்றிருக்கின்றன… வேளாண்மை, நெசவு போன்ற பழந்துறைகளில் புதிய அறிவியல் வளர்ச்சியால் மரபுக் கலைச்சொற்களோடு புதிதாகப் படைக்கப்பட்ட கலைச்சொற்களும் வழக்கில் இருக்கின்றன…” (க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, சென்னை, 1992). 
(3) சொற்றொகுதிகள்: சொல்லின் பொருளைச் செவ்வனே வரையறுக்கும் பணி கலைச்சொற்கோவைகளுக்கு நூறு விழுக்காடு பொருந்தும். அந்த வகையில் கலைச்சொல்லாக்கத்தில் (அ) செம்மை (accuracy), (ஆ) திட்பம் (specificity), (இ) சீர்மை (uniformity) மூன்றுக்கும் சரிநிகரான முக்கியத்துவம் உண்டு. (அ) செம்மை: ஆங்கிலக் கலைச்சொல்லின் பொருளைச் செவ்வனே உணர்த்தும் தமிழ்க் கலைச்சொல் முன்வைக்கப்படல் அல்லது புனையப்படல்; (ஆ) திட்பம்: சம்பந்தப்பட்ட ஆங்கிலக் கலைச்சொல்லை எதிர்கொண்டவுடன் அதற்கு நிகரான தமிழ்க் கலைச்சொல்லும், சம்பந்தப்பட்ட தமிழ்க் கலைச்சொல்லை எதிர்கொண்டவுடன் அதற்கு நிகரான ஆங்கிலக் கலைச்சொல்லும் உள்ளத்துள் தைத்தல்; (இ) சீர்மை: அதே கலைச்சொற் சோடி தமிழ்கூறு நல்லுலகெங்கும் மேலோங்குதல்.

ஓர் எடுத்துக்காட்டு:யாழ்ப்பாணம்-மானிப்பாயில் பணியாற்றிய மருத்துவர் கிறீன் (Dr.Samuel Fisk Green, 1822-1884) அவர்களுக்கு afterpains என்ற சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல் தேவைப்பட்டது. அதை “Pains caused by contraction of the uterus after childbirth” (மகப்பேற்றை அடுத்து கருப்பை ஒடுங்குவதால் உண்டாகும் நோவு) என்று Oxford Dictionary வரையறுத்துள்ளது. அதனைக் கருத்தில் கொண்டு “பின்னோக்காடு” என்ற கலைச்சொல்லை அவர் புனைந்துகொண்டார். (அ) Afterpains என்பதன் பொருள் இப்புனைவில் செவ்வனே புலப்படுகிறது; (ஆ) Afterpains என்றால் “பின்னோக்காடு”  என்பதும், “பின்னோக்காடு” என்றால் afterpains என்பதும் இங்கு திட்பமான முறையில் பொருந்துகின்றன; (இ) தமிழ் வழங்கும் நாடுகளில் ஒரே சீராக “பின்னோக்காடு” என்னும் சொல்லாட்சி மேலோங்க வாய்ப்புள்ளது.1850ல் மருத்துவர் கிறீன் ஆங்கிலத்தில் எழுதிய மடல் ஒன்றில், “ஆங்கில, இலத்தீன் பதங்களைத் தமிழில் வரையறுத்து, ஒரு சொற்கோவையை நான் உருவாக்கப் போகிறேன். தமிழில் ஏற்கெனவே நல்ல மருத்துவப் பதங்கள் பலவும் வழக்கில் உள்ளன. தமிழறிஞர்கள் ஊடாக இன்னும் பல பதங்களை வடமொழியிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். ஏற்கெனவே தமிழில் வழங்கிவரும் சொல்லின் ஒலியை அடியொற்றி மேலும் பல சொற்கள் புனையப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.1877ல் தமது நிலைப்பாட்டை அவர் மேலும் தீவிரப்படுத்தினார்: “இச்சொற்கோவைகளில் ஒரு தீவிர மாற்றம் செய்யப்பட்டுள்ளது: கலைச்சொற்களின் தோற்றுவாய் என்ற வகையில் வடமொழிக்கு மேலாக ஆங்கிலத்துக்குக்கே இங்கு முதன்மை அளிக்கப்பட்டுள்ளது.” அச்சொற்கோவைகள் பின்வருமாறு:
தாயும் சேயும் (மானிப்பாய், 1872)காது (மானிப்பாய், 1877) கண் (மானிப்பாய், 1877)பாதம் (மானிப்பாய், 1877)கை (மானிப்பாய், 1877)வாய் (மானிப்பாய், 1877)தோல் (மானிப்பாய், 1877)உடல் (மானிப்பாய், 1880)
பதியத்தம்பி, வைத்திலிங்கம் போன்ற மாணவர்களுடனும் மற்றும் பிற தோழர்களுடனும் ஒருங்கிணைந்து தமது பணியை மேற்கொண்ட மருத்துவர் கிறீன் “மருத்துவ விஞ்ஞான அகராதி” (1855), “அருஞ்சொல் அகராதி” (1875) ஆகியவற்றை வெளியிட்டு, மருத்துவ, விஞ்ஞான மொழிபெயர்ப்புகளுக்கு அடிகோலினார். அவரது ஆங்கிலம்-தமிழ் அகராதிகள், சொற்கோவைகள் என்பவற்றின் துணையுடன் தமிழ்ப்படுத்தப்பட்ட நூல்கள் சில:
The science and art of surgery (பதியத்தம்பி, யாழ்ப்பாணம், 1867)Physician’s vade-mecum (வில்லியம் பால், நாகர்கோயில், 1872)Human anatomy (கிறீன், டேவிட் சாப்மன், யாழ்ப்பாணம், 1872)Chemistry – Practical and theoretical (கிறீன், எஸ். சுவாமிநாதன், நாகர்கோயில், 1875)Pharmacopoeia of India (கிறீன், டேவிட் சாப்மன், யாழ்ப்பாணம், 1888)

1888ல் பேராசிரியர் பெ. சுந்தரம்பிள்ளை (1855-1897) புனைந்த 80 கலைச்சொற்களுடன் கூடிய “நூற்றொகை விளக்கம்” வெளிவந்தது.
1937 முதல் 1940 வரை சென்னை முதல்வராக விளங்கிய சி. ராஜகோபாலாச்சாரியார் இடைநிலைப் பாடசாலைகளில் தமிழ்மொழியைப் பாடமொழி ஆக்கினார். அதை எதிர்த்த சென்னை கல்விப் பணிப்பாளருக்கு (Randulph Statham என்ற ஆங்கிலேயருக்கு) ராஜாஜி ஆங்கிலத்தில் கொடுத்த பதிலடியின் தமிழாக்கம்:            “தென்னிந்திய மொழிகளில் மெய்யியல், அறிவியல் பாடங்களைக் கற்பிப்பதற்கு வேண்டிய அகராதிகள் வெளியிடப்படும்வரை, தகுந்த பாடநூல்கள் வெளிக்கொணரப்படும்வரை, அப்பாடங்களைக் கற்பிப்பது கைகூடாது போகலாம் என்று நீங்கள் கூறுகிறீர்கள்… ஏதோ ஒரு கட்டத்தில் நாங்கள் அதற்கான ஒரு முயற்சியைத் தொடங்கும்வரை,  அது எத்துணை தொந்தரவாய் இருந்தாலும் கூட, அது எத்துணை கசந்தாலும் கூட, இந்த இடர்ப்பாடு மறையப் போவதில்லை… நாங்கள் தமிழ்மொழியில் கற்பிக்கத் தொடங்கினாலொழிய தமிழில் பாடநூல்கள் தேவைப்படுகின்றன என்பதை எவரும் புரிந்துகொள்ளப் போவதில்லை… இப்போதைக்கு வெவ்வேறு பிராந்திய மொழிகளின் வளத்துக்கேற்ப ஆங்கிலச் சொற்களைக் கலைச்சொற்களாகக் கொள்வதில் தவறேதும் இல்லை… அறிவியற் கல்வியில் ஒருசில அந்நியச் சொற்களை நாங்கள் கையாள வேண்டியுள்ளது என்பதற்காக, அந்நிய மொழியே பாடமொழி ஆகவேண்டும் என்று கூறுவது தவறு. பிராந்திய மொழியில் அல்லது தாய்மொழியில் அறிவு புகட்டப்பட்டால், அதனால் விளையும் உடனடி நன்மை மிகவும் பெரிது. வெறுமனே ஒருசில அந்நிய சொற்களைப் பயன்படுத்துவதால், அந்த நன்மையை நாம் இழந்துவிடப் போவதில்லை. அதாவது பாடமொழி வேறு, (துறைமொழி வேறு)… இந்த ஒழுங்கினை நாங்கள் பின்பற்றினால், பிராந்திய மொழிகளில் அறிவியற் சொற்கள் தாமாகவே மேலோங்கும். அன்றாடம் போதிக்கும் ஆசிரியர்கள் அத்தகைய அறிவியற் சொற்களைத் தேடிப்பிடித்து நடைமுறைப்படுத்துவார்கள். இங்கிலாந்திலும், பிரான்சிலும் அறிவியற் கல்வி தொடங்கிய காலத்தில் இலத்தின் மொழியிலும், கிரேக்க மொழியிலுமா வகுப்புகள் நடத்தப்பட்டன?”     1916ல் சி. ராஜகோபாலாச்சாரியார், வெங்கட சுப்பையர் இருவரும் சேர்ந்து “தமிழ் அறிவியற் சொற்சங்கத்தை” உருவாக்கினார்கள். 1923ல் சென்னை அரசாங்கம் “தாய்மொழி அறிவியற் சொற்குழு”வை அமைத்தது. 1930ல் “சட்டச் சொற்றொகுதி” ஒன்றை அது வெளியிட்டது. 1932ல் அது வெளியிட்ட சொற்றொகுதிகளின் துறைகள்: அரசியல், இயற்கை அறிவியல், இயற்பியல், உடற்றொழிலியல், கணிதம், குடியியல், சுகாதாரம், நிருவாகம், புவியியல், பொருளியல், வணிகவியல், வரலாறு, வேதியியல்.           1934ல் சென்னை மாநில தமிழ்ச் சங்கத்தால் அமைக்கப்பட்ட அறிவியற் சொற்குழு இயற்பியல், வேதியியல், கணிதவியல், இயற்கை அறிவியல், உடற்றொழிலியல்–சுகாதாரவியல், புவியியல், வரலாறு, பொருளியல், நிருவாகம், அரசியல், குடியியல் துறைகளைச் சார்ந்த 10,000 கலைச்சொற்களைத் திரட்டியது. பெரிதும் தூய தமிழ்ச் சொற்களைக் கொண்ட அத்திரட்டு 1936ம் ஆண்டு ரி.லஷ்மண பிள்ளை அவர்களால் பதிப்பிக்கப்பட்டது.        

1936ல் சென்னையில் நடைபெற்ற தமிழ்ச் சொல்லாக்க மாநாட்டில் விபுலாநந்த அடிகள், தேவநேயப் பாவாணர், எஸ். வையாபுரிப்பிள்ளை, ரா. பி. சேதுப்பிள்ளை, எஸ். வேலாயுதம்பிள்ளை உள்ளடங்கிய புலமையாளர்கள் பலரும் கலந்துகொண்டார்கள். அம்மாநாட்டில் மேற்படி 10,000 கலைச்சொற்கள் மீளவும் வரையறுக்கப்பட்டன. புதிய 10,000 “கலைச்சொற்கள்” 1938ம் ஆண்டு விபுலாநந்த அடிகளால் பதிப்பிக்கப்பட்டது.1947ல் சென்னை அரசாங்கம் 7,800 புதிய கலைச்சொற்களையும், 1960ல் 6,250 தமிழ் ஆட்சிச் சொற்களையும், 1968ல்  ஆட்சித் துறைத் தமிழ் (கே. இராமலிங்கம்) நூலையும் வெளியிட்டது. 1958ல் என். டி. சுந்தரவடிவேலு ஆசிரியர் கல்லூரிகளுக்கான 5,000 கலைச்சொற்களை வெளியிட்டார்.      கல்லூரித் தமிழ்க் குழுத் தலைவரும், “கலைக்கதிர்” ஆசிரியருமான ஜி. டி. தாமோதரன் துறைவாரியான கலைச்சொல்லாக்கத்தில் இடைவிடாது ஈடுபட்ட பேரறிஞர். 1960ல் அவர் வெளியிட்ட “கலைச்சொல்லகராதி” பின்வரும் துறைகளை உள்ளடக்கியது: ஐரோப்பிய தத்துவ சாத்திரம், உளவியல், வானநூல், பொருளாதாரம், அரசியல் பொதுத்துறை-ஆட்சி இயல், வாணிகவியல், வரலாறுகள், உயிர் நூல், வேதிப் பொது அறிவு, புள்ளியியல். 1968ல் 3,600 பதங்கள் கொண்ட பெளதிக கலைச்சொல் அகராதியையும், 3,960 பதங்கள் கொண்ட வேதியியல் கலைச்சொல் அகராதியையும் அவர் வெளியிட்டார்.         1969ல் கிண்டி எந்திரவியல் கல்லூரி மாணவர்கள் “எந்திரவியல் கலைச்சொற்களையும்”, 1971ல் அழகப்பா எந்திரவியல் கல்லூரி மாணவர்கள் 634 கலைச்சொற்களையும் வெளியிட்டார்கள்.1985ல் ராதா செல்லப்பன் தமிழ்க் கலைச்சொற்களின் எண்ணிக்கை குறித்து முன்வைத்த புள்ளிவிவரம்:

துறைபதங்கள்
இயற்பியல்20,000
உளவியல்  3,000
எந்திரவியல்35,000
கணிதவியல்14,000
கமத்தொழில்  4,500
சட்டவியல்  7,000
சமூகவியல்11,000
தாவரவியல்  9,000
புவியியல்  6,000
மருத்துவம்15,000
வணிகவியல்  2,000
வரலாறு – பொருளியல் – நிருவாகம் – அரசியல்
10,000
விலங்கியல்  4,000
வேதியியல்  6,000

1955ம் ஆண்டு முதல் இலங்கை அரசகரும மொழித் திணைக்களம், கல்வி வெளியீட்டுத் திணைக்களம், சட்ட வரைநர் திணைக்களம் மூன்றும் துறைவாரியாகப் பல்வேறு சொற்றொகுதிகளை வெளியிட்டு வந்துள்ளன. துறைஞர்களின் முறைசார் சொல்லாக்கங்களுடன் கூடிய மேற்படி சொற்றொகுதிகள் இலங்கை அரசாங்கத்தின் அதிகாரபூர்வமான வெளியீடுகள் ஆகும்.இலங்கை அரசாங்க  சொற்றொகுதிகள்                                              

ஆண்டுசொற்றொகுதிஉறுப்பினர்துறை
1955அரசாங்கஅலுவலகங்களும் பதவிகளும்எவ். எக்ஸ். சி. நடராசாஇரத்தினம், பண்டிதர் கா. பொ.இரத்தினம். இ.சதாசிவம். எஸ்.செல்வநாயகம். சோ.பொன்னையா, கலாநிதி வ.அரசகரும மொழித் திணைக்களம்பயிற்சிக் கல்லூரி, மாறகமம்கல்வி வெளியீட்டுத் திணைக்களம்கல்வி வெளியீட்டுத் திணைக்களம்இலங்கைப் பல்கலைக்கழகம்கொக்குவில், யாழ்ப்பாணம்
195619631991இரசாயனவியல்மயில்வாகனன். அ. வி. (தலைவர்)ஊவர், கலாநிதி எ. எ.தேவநாதன், கலாநிதி எம். ஏ. வி.திருநாமச்சந்திரன், கலாநிதி  வி. ரி.சிவராமலிங்கம், கலாநிதி ஆர்.சுலுத்தான் பாவா, கலாநிதிஇராமகிருஷ்ணா, கலாநிதிஆர். எஸ்.இரத்தினம், பண்டிதர் கா. பொ.எட்வேர்ட். ஜி. என்.பொன்னையா, கலாநிதி வ.நடராசர். எஸ்.வேதநாயகம். செ. உ. (செயலாளர்)சண்முகம். மு.அரசகரும மொழித் திணைக்களம்இலங்கைப் பல்கலைக்கழகம்இலங்கைப் பல்கலைக்கழகம்இலங்கைப் பல்கலைக்கழகம்இல. விஞ். கைத். ஆராய்ச்சி நிறுவகம்இலங்கைப் பல்கலைக்கழகம்இலங்கைப் பல்கலைக்கழகம்பயிற்சிக் கல்லூரி, மாறகமம்பயிற்சிக் கல்லூரி, மாறகமம்கொக்குவில், யாழ்ப்பாணம்இலங்கைப் பல்கலைக்கழகம்இலங்கைப் பல்கலைக்கழகம்அரசகரும மொழித் திணைக்களம்
1956புவியியல்குலரத்தினம், கலாநிதி கா.கந்தசாமி. ஆ. பொ .நடராசா. சிஇரத்தினம், பண்டிதர் கா. பொ.பொன்னையா, கலாநிதி வ.மயில்வாகனன். அ. வி.இலங்கைப் பல்கலைக்கழகம்வளிமண்டலவியல் திணைக்களம்இலங்கைப் பல்கலைக்கழகம்பயிற்சிக் கல்லூரி, மாறகமம்கொக்குவில், யாழ்ப்பாணம்அரசகரும மொழித் திணைக்களம்
1956கணிதவியல்(கிடைக்கவில்லை)
1956தொழினுட்பவியல்(கிடைக்கவில்லை)
1956நெய்தல்–வனைதல்(கிடைக்கவில்லை)
19561975பெளதிகவியல்மயில்வாகனம், பேராசிரியர் ஏ. டபிள்யூமகேஸ்வரன். ஆர்.அமிர்தலிங்கம், திருமதி இ.இரத்தினம். இ.இலங்கைப் பல்கலைக்கழகம்
ஆசிரியர்கல்வி வெளியீட்டுத் திணைக்களம்கல்வி வெளியீட்டுத் திணைக்களம்
1956மரவேலை–பித்தளைவேலை(கிடைக்கவில்லை)
1957கணக்குப் பதிவியல்மயில்வாகனன். அ. வி. (தலைவர்)பொன்னையா, கலாநிதி வ.கணேசலிங்கம். வ.சங்கரப்பிள்ளை. பொ.வன்னியசிங்கம். சோ.அரசகரும மொழித் திணைக்களம்அரசகரும மொழித் திணைக்களம்முதுமாணிமுதுமாணிமுதுமாணி
19571963தாவரவியல்மயில்வாகனன். அ. வி. (தலைவர்)தம்பையா, கலாநிதி மோ.பொன்னையா, கலாநிதி வ.அரியரத்தினம். வே.அரியநாயகம். தா. வே.வேதநாயகம். செ. உ.பாலசுப்பிரமணியம். எஸ்.நல்லையா. வி. கே.அரசகரும மொழித் திணைக்களம்இலங்கைப் பல்கலைக்கழகம்கொக்குவில், யாழ்ப்பாணம்அரு. யோசேப்பின் கல்லூரிஇலங்கைப் பல்கலைக்கழகம்அரசகரும மொழித் திணைக்களம்இலங்கைப் பல்கலைக்கழகம்அரசகரும மொழித் திணைக்களம்
1957பொருளியல்மயில்வாகனன். அ. வி. (தலைவர்)பொன்னையா, கலாநிதி வ.வன்னியசிங்கம். சோ.கணேசலிங்கம். வ.சங்கரப்பிள்ளை. பொ.அரசகரும மொழித் திணைக்களம்கொக்குவில், யாழ்ப்பாணம்இலங்கைப் பல்கலைக்கழகம்இலங்கைப் பல்கலைக்கழகம்இலங்கைப் பல்கலைக்கழகம்
1957உலோகவேலைமயில்வாகனன். அ. வி. (தலைவர்)பொன்னையா, கலாநிதி வ.நடராசா. சிகந்தசாமி. செபதுமநாதன். ச.அரசகரும மொழித் திணைக்களம்கொக்குவில், யாழ்ப்பாணம்தானிலி மத்திய கல்லூரிகூட்டுறவுக் கைத்தொழிற் களரிகுடிசைக் கைத்தொழிற்றுறை
1957உடற்கலைமயில்வாகனன். அ. வி. (தலைவர்)இராசேந்திரா. பொ. இ.சீவரத்தினம். இ. சா.நல்லையா. வ. க.அரசகரும மொழித் திணைக்களம்உடற்கலை, கல்வி அலுவல் பகுதிகுவீன்சிலந்து உடற்கலைத் தகுதிஅரசகரும மொழித் திணைக்களம்
1957உடற்றொழொலியல்–சுகாதாரவியல்(கிடைக்கவில்லை)           
1957விலங்கியல்மயில்வாகனன். அ. வி. (தலைவர்)பொன்னையா, கலாநிதி வ.மகாதேவன், கலாநிதி ப.அமிர்தலிங்கம், கலாநிதி செ.சிவலிங்கம். செ.வேதநாயகம். செ. உ.அரசகரும மொழித் திணைக்களம்இலங்கைப் பல்கலைக்கழகம்பண்ணைவிலங்கு ஆராய்ச்சி அக்குவைனசு கோட்டம், கொழும்புகடற்றொழில் அலுவல் அரச கரும மொழித் திணைக்களம்
1958கமத்தொழில்(கிடைக்கவில்லை)
1958புவியியல்மயில்வாகனன். அ. வி. (தலைவர்)குலரத்தினம், கலாநிதி கா.கந்தசாமி. ஆ. பொ.சிவகுரு. வே.செல்வநாயகம். சோ.பேரம்பலம். வே.அரசகரும மொழித் திணைக்களம்இலங்கைப் பல்கலைக்கழகம்வளிமண்டலவியல் திணைக்களம்அரசகரும மொழித் திணைக்களம்அரசகரும மொழித் திணைக்களம்அரசகரும மொழித் திணைக்களம்
1958குடிமையியல்–ஆட்சியியல்மயில்வாகனன். அ. வி. (தலைவர்)வில்சன், கலாநிதி செ.மகேந்திரராசா. அ .இரத்தினம். இ.பேரம்பலம். வே.அரச கரும மொழித் திணைக்களம்இலங்கைப் பல்கலைக்கழகம்முடிசார் சட்டவுரைஞர்அரசகரும மொழித் திணைக்களம்அரசகரும மொழித் திணைக்களம்
1958மோட்டார் பொறிமுறை(கிடைக்கவில்லை)
1958பயிர்ச்செய்கைமயில்வாகனன். அ. வி. (தலைவர்)இடைக்காடர். நா. மா.மகாதேவன், கலாநிதி ப.பொன்னையா. கலாநிதி இ. எ.பொன்னையா, கலாநிதி வ.அரியநாயகம், கலாநிதி தா. வே.அரசகரும மொழித் திணைக்களம்இலங்கைப் பல்கலைக்கழகம்பண்ணைவிலங்கு ஆராய்ச்சிஇலங்கைப் பல்கலைக்கழகம்கொக்குவில், யாழ்ப்பாணம்இலங்கைப் பல்கலைக்கழகம்
1959அலுவலக சொற்கள்– தொடர்கள்(கிடைக்கவில்லை)
1959மனையியல்மயில்வாகனன். அ. வி. (தலைவர்)சவுந்தரநாயகம், செல்வி இ.செல்லையா, செல்வி பு.சரவணமுத்து, செல்வி சு.துரைசிங்கம். திருமதி கி.தங்கவடிவேல். திருமதி வி.சிவகுரு. வே.பேரம்பலம். வே.அரசகரும மொழித் திணைக்களம்பயிற்சிக் கல்லூரி, மாறகமம்மனையியல் தலைமைப் பரிசோதகர்மகாசனக் கல்லூரி, தெல்லிப்பளைபாலர்களரிப் பரிசோதகர்மனையியல் பரிசோதகர்அரசகரும மொழித் திணைக்களம்
1961உயிரியல்(கிடைக்கவில்லை)
1961சமூகவியல்(கிடைக்கவில்லை)
1961சித்திரம்–கைப்பணி(கிடைக்கவில்லை)
1964உடற்றொழொலியல் -உயிரிரசாயனவியல்மயில்வாகனன். அ. வி. (தலைவர்)சின்னத்தம்பி, பேராசிரியர் ஆ.ஊவர், பேராசிரியர் எ. எ.வடிவேல். கு.அரசகரும மொழித் திணைக்களம்இலங்கைப் பல்கலைக்கழகம்இலங்கைப் பல்கலைக்கழகம்ஆயுள்வேத வைத்தியசாலை
1964பிறப்புரிமையியல்–குழியவியல்–கூர்ப்பு
அரியநாயகம், கலாநிதி தா. வே.தம்பையா, கலாநிதி எம். எஸ்.பொன்னையா, கலாநிதி வ.அரியரத்தினம். வே.இராசரத்தினம். டி. ரி.மயில்வாகனன். அ. வி.வேதநாயகம். செ. உ.நல்லையா. வ. க.நடராசா. எஸ்.இலங்கைப் பல்கலைக்கழகம்இலங்கைப் பல்கலைக்கழகம்கொக்குவில், யாழ்ப்பாணம்அக்குவைனசுக் கல்லூரிதெங்கு ஆராய்ச்சி நிலையம்அரசகரும மொழித் திணைக்களம்அரசகரும மொழித் திணைக்களம்அரசகரும மொழித் திணைக்களம்அரசகரும மொழித் திணைக்களம்
1965உடலமைப்பியல்–இழையவியல்மயில்வாகனன். அ. வி. (தலைவர்)நவரத்தினம், கலாநிதி வி.அரசகரும மொழித் திணைக்களம்இலங்கைப் பல்கலைக்கழகம்
1965விலங்கு வேளாண்மைமயில்வாகனன். அ. வி. (தலைவர்)பாபாப்பிள்ளை, கலாநிதி அ. பிறிற்றோசரவணமுத்து. சி.அரசகரும மொழித் திணைக்களம்இலங்கைப் பல்கலைக்கழகம்நகராண்மை கொல்களத் தலைவர்
1965மின்னெந்திரவியல்மயில்வாகனன். அ. வி. (தலைவர்)இரங்கநாதன். ஏ.சிவப்பிரகாசபிள்ளை. த.அரசகரும மொழித் திணைக்களம்தொழில்நுட்ப கலாசாலைஇலங்கைப் பல்கலைக்கழகம்
1965சட்ட மருத்துவம்மயில்வாகனன். அ. வி. (தலைவர்)தியாகலிங்கம், கலாநிதி க.அரசகரும மொழித் திணைக்களம்இலங்கைப் பல்கலைக்கழகம்
1965ஒட்டுண்ணியியல்(கிடைக்கவில்லை)
1965நோயியல்(கிடைக்கவில்லை)
1965மருத்துவ இயல்வேதநாயகம். செ. உ. (தலைவர்)சின்னத்தம்பி, பேராசிரியர் அ.அருட்பிரகாசம், கலாநிதி ஏ. வி. சற்குணநாயகம், கலாநிதிசின்னையா சிவநேசன் (செயலாளர்)அரசகரும மொழித் திணைக்களம்
இலங்கைப் பல்கலைக்கழகம்
இலங்கைப் பல்கலைக்கழகம்
பொது வைத்தியசாலை, கொழும்புகல்வி வெளியீட்டுத் திணைக்களம்
1965மருந்தியல் விஞ்ஞானம்மகாதேவா, கலாநிதி எஸ்.மயில்வாகனன். அ. வி.இலங்கைப் பல்கலைக்கழகம்அரசகரும மொழித் திணைக்களம்
1965அச்சியல்(கிடைக்கவில்லை)
1965பொது உடனலம்சின்னத்தம்பி, பேராசிரியர் அ.மயில்வாகனன். அ. வி.இலங்கைப் பல்கலைக்கழகம்அரசகரும மொழித் திணைக்களம்
1965புள்ளிவிபரவியல்சிவகுரு. வே. (தலைவர்)நடராசா. சி.சோமசுந்தரம். சா.இரத்தினம். இ.முருகையன். இ.சண்முகம். மு.அரசகரும மொழித் திணைக்களம்இலங்கைப் பல்கலைக்கழகம்புள்ளிவிவரவியல் திணைக்களம்அரசகரும மொழித் திணைக்களம்அரசகரும மொழித் திணைக்களம்அரசகரும மொழித் திணைக்களம்
1966சமூகவியல்மயில்வாகனன். அ. வி. (தலைவர்)மதியாபரணம், செல்வி க.அரசகரும மொழித் திணைக்களம்இலங்கைப் பல்கலைக்கழகம்
1966பற்றீரியவியல்நவரத்தினம், கலாநிதி வி.மயில்வாகனன். அ. வி.இலங்கைப் பல்கலைக்கழகம்அரசகரும மொழித் திணைக்களம்
1966விலங்கு உடற்கூற்றியல்(கிடைக்கவில்லை)
1967இரசாயன எந்திரவியல்(கிடைக்கவில்லை)
1968கட்டட அமைப்புக்கலைமயில்வாகனன். அ. வி. (தலைவர்)சின்னத்துரை. மூ.இரத்தினம். இ .அரசகரும மொழித் திணைக்களம்கட்டடவமைப்பு எந்திரவியல்கல்வி வெளியீட்டுத் திணைக்களம்
1968புவிச்சரிதவியல்குலரத்தினம், கலாநிதி கா.மயில்வாகனன். அ. வி.பாலேந்திரன். வி. எஸ்.இரத்தினம். இ.இலங்கைப் பல்கலைக்கழகம்அரசகரும மொழித் திணைக்களம்புவிச்சரிதவியல் திணைக்களம்கல்வி வெளியீட்டுத் திணைக்களம்
1970கொத்துச் சொற்கள்(கிடைக்கவில்லை)
1970வரலாறு-தொல்பொருளியல்இந்திரபாலா, கலாநிதி கா.இராசலிங்கம். ரி .லக்ஷ்மண ஐயர்நடராசா. சோ .இரத்தினம். இ.இலங்கைப் பல்கலைக்கழகம்ஆசிரியர், சென்யோசெவ் கல்லூரிகல்வி வெளியீட்டுத் திணைக்களம்கல்வி வெளியீட்டுத் திணைக்களம்கல்வி வெளியீட்டுத் திணைக்களம்
19751977197819992000தரப்படுத்தப்பெற்றசட்டச் சொற்றொகுதிசிவராசசிங்கம். வ. (தலைவர்)சதாசிவம், பேராசிரியர் ஆ.பூரணானந்தா. கே .இரத்தினசபாபதி. வ.சிவானந்தம். கே .கனகசபை. தி.குருசுவாமி. கே.அருணாசலம், திருமதி பு.சிவபாதசுந்தரம். வ.மாணிக்கநடராசா. கே.மகாதேவா. கே.இரங்கநாதன். சி.அரசகரும மொழித் திணைக்களம்இலங்கைப் பல்கலைக்கழகம்இலங்கை சட்டக் கல்லூரிஇலங்கைச் சட்டக் கல்லூரிஇலங்கை சட்டக் கல்லூரிஅரசகரும மொழித் திணைக்களம்அரச கரும மொழித் திணைக்களம்அரச கரும மொழித் திணைக்களம்அரசகரும மொழித் திணைக்களம்அரசகரும மொழித் திணைக்களம்அரசகரும மொழித் திணைக்களம்முடிசார் சட்டவுரைஞர்
1976குடித்தொகை–குடும்பத் திட்ட தொடர்பாடல்(கிடைக்கவில்லை)
1996முகாமைத்துவம்சிவராசசிங்கம். வ. (தலைவர்)சிவபாதசுந்தரம். வ.குருசுவாமி. கே.அரசகரும மொழித் திணைக்களம்அரசகரும மொழித் திணைக்களம்அரசகரும மொழித் திணைக்களம்,
2000தகவல் தொழில் நுட்பம்சிவத்தம்பி, கலாநிதி கா. (இணைப்பாளர்)உமா குமாரசுவாமி, பேராசிரியர்தில்லைநாதன். சி. பேராசிரியர்பத்மநாதன். சி. பேராசிரியர்பாலகிருஷ்ணன். நா. பேராசிரியர்சந்திரசேகரம். ச. பேராசிரியர்நு/மான், கலாநிதி எம். ஏ.சோமசுந்தரம். கு.வாகீசமூர்த்தி. ந.முத்துக்குமாரசுவாமி, கலாநிதிமோகனராஜ். கே.ஞானேஸ்வரன். எஸ். ஏ.கோதண்டராமன், முனைவர் பொன்.இராமசுந்தரம், முனைவர்சண்முகம், முனவைர் செ. வை.இராதா செல்லப்பன்சுந்தரமூர்த்தி, முனைவர் இ.இரா. இளவரசு, முனைவர்விஜய வேணுகோபால், முனைவர்ராஜேந்திரன், முனைவர்இராமர் இளங்கோ, முனைவர் எஸ்.சுப்பிரமணியம், முனைவர் ப. ரா.லொரன்ஸ், முனைவர் ஜீன்இளங்கோவன், முனைவர் ம.இலங்கைப் பல்கலைக்கழகம்இலங்கை திறந்த பல்கலைக்கழகம்இலங்கைப் பல்கலைக்கழகம்இலங்கைப் பல்கலைக்கழகம்பல்கலைக்கழக கல்லூரி, வவுனியாஇலங்கைப் பல்கலைக்கழகம்இலங்கைப் பல்கலைக்கழகம்கல்வி அமைச்சுகல்வி அமைச்சுஇலங்கைப் பல்கலைக்கழகம்கிழக்குப் பல்கலைக்கழகம்கணினி செய்நிரலர்சென்னைப் பல்கலைக்கழகம்தஞ்சாவூர் பல்கலைக்கழகம்அண்ணாமலை பல்கலைக்கழகம்தலைவர், பாரதிதாசன் பல்கலைக்கழகம்சென்னைப் பல்கலைக்கழகம்பாரதிதாசன் பல்கலைக்கழகம்காமராசர் பல்கலைக்கழகம்தமிழ் வளர்ச்சித்துறை, தமிழகம்உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்மொழி நிறுவனம், சென்னைதமிழ் ஆராய்ச்சி நிறுவனம்அண்ணா பல்கலைக்கழகம்

சொல்லேருழவர்களின் தனித்துவமான கலைச்சொற்கோவைகள் பலவும் எமது கவனத்தை ஈர்க்கின்றன: 
ஈழத்துப் பூராடனார் (1928-2010):நீரரர் நிகண்டுஉயர்திணைப் பெயர் மஞ்சரிஅஃறிணைப் பெயர் மஞ்சரிதொழிற் பெயர் மஞ்சரிஇடப்பெயர் மஞ்சரிகலாசாரச் சொல் மஞ்சரிமணவை முஸ்தாபா:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம் (1991)அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி (1995)மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம் (1996)கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி 1999)கணினிக் களஞ்சிய அகராதி (2001)கணினிக் களஞ்சியப் பேரகராதி (2002)
ஜெயமோகன் எழுதிய ‘நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்’ (கிழக்கு பதிப்பகம், 2011) என்னும் நூலில் 200 கலைச்சொற்கள் காணப்படுகின்றன: “இக்கலைச்சொற்கள் பொதுவாக தமிழ் இலக்கிய தளத்தில் பயன்படுத்தப்படுபவை. கலைச்சொல்லாக்கத்தில் மூன்று போக்குகள் காணப்படுகின்றன. சிற்றிதழ் சார்ந்த தமிழ் நவீன இலக்கியம், கல்வித்துறை, சோவியத் மொழியாக்கங்கள் ஆகியவை. மூன்றுமே கலைச்சொல்லாக்கத்திற்குப் பெரும் பங்காற்றியுள்ளன.

பலசமயம் ஒன்றைச்சுட்ட மூன்று கலைச்சொற்கள் உருவாகி மூன்றுமே புழக்கத்தில் இருக்கும். பொதுவாக ஓரளவு ஏற்கப்பட்ட ஒரு கலைச்சொல் இருக்கையில் அதையே பயன்படுத்துவது நல்லது. அது பொருத்தம் குறைவானதாக இருந்தாலும். ஏனென்றால் சொற்கள் என்பவை பெரும்பாலும் இடுகுறித்தன்மை கொண்டவை. அவை எதைக்குறிக்கின்றன என்று தெரிந்தாலே போதுமானது. பல கலைச்சொற்கள் அவ்வறிவுத்துறையின் வளர்ச்சிக்கு ஏற்ப பொருள் மாறுபாடு அடைந்தபடியே செல்லும். ஒவ்வொரு முறையும் கலைசொல்லை மாற்ற முடியாது” (ஜெயமோகன்).21ம் நூற்றாண்டில் உலகமயமாக்கமும் ஆங்கிலமயமாக்கமும் இரண்டறக் கலந்து மேலோங்கி வருகின்றன. ஆங்கிலச் சொற்களின் தொகை ஏற்கெனவே 2½ இலட்சத்தை விஞ்சிவிட்டது. அவற்றுள் அரைவாசி பொதுச்சொற்கள், அரைவாசி கலைச்சொற்கள். ஆண்டுதோறும் ஏறத்தாழ 500 சொற்கள் வேறு ஆங்கிலத்துள் புதுக்க நுழைகின்றன. அரசுகளும் பல்கலைகழகங்களும் அதிகாரபூர்வமாக முறைசார் சொல்லாக்கத்தில் துறைஞர்களை ஈடுபடுத்தும் அரிய வழமை மங்கி மறையும் இத்தறுவாயில், தனித்துவம் வாய்ந்த முறைசாரா சொல்லாக்கம் மேலோங்குவதை தவிர்க்கவியலாது. இன்று தமிழ் மக்களின் தாயகங்களிலும், சேயகங்களிலும் விழைஞர்களின் சொல்லாக்கங்கள் பல்கிப் பெருகியுள்ளன. பெரிதும் இணைய வாயிலாக அவை பவனி வருகின்றன. என்றென்றும் செல்லுபடியாகும் வண்ணம் விபுலாநந்த அடிகள் அறிவுறுத்திய சொல்லாக்க நெறிமுறைகளை இன்றைய, உலகளாவிய தமிழ்ச் சொல்லாக்க விழைஞர்கள் கருத்தில் கொள்ளல் சாலும்:“ஆங்கிலம் போன்ற வளர்ச்சியடைந்த மொழியோடு ஒப்பிடும்போது தமிழிலே சொல்வளம் குறைவாக இருப்பதை உணரலாம். இதனால், தமிழ் மொழி வளங்குன்றிய மொழியென்று ஆகிவிடாது. தமிழ்மொழியிலே புதுப்புதுச் சொற்களை ஆக்கிக் கொள்ளவேண்டியது கற்றவர் கடமை. முதற்கண் தமிழ் மொழியிலேயே ஆட்சியில் இருக்கும் சொற்களை எல்லாம் ஆராய்ந்து அவற்றிலே பயின்றுள்ள கலைச்சொற்களையும் ஏனைய சொற்களையும் வரையறுத்துக் கொள்ளல் வேண்டும். காலப்போக்கிலே தமிழில் வந்து கலந்துகொண்ட வட மொழிச் சொற்களைக் கடிந்து ஒதுக்காது அவற்றையும் ஆக்கத் தமிழாக தழுவிக்கொள்ள வேண்டும். வேண்டிய போது அயன்மொழிச் சொற்களை தழுவிக் கொள்வது தவறாகாது. ஆனால் அவ்வாறு தழுவிக்கொள்ளப்படும் அயன்மொழிச் சொற்கள்  தமிழ் உருவம் பெற்று தமிழோடு வேற்றுமையின்றிக் கலந்து இசைக்கத்தக்கனவாக இருத்தல் வேண்டும். தமிழிலுள்ள உரிச்சொற்களின் அடியாகப் புதுச்சொற்களை ஆக்கிக்கொள்ளலாம். அவ்வாறு ஆக்கப்படும் புதுச்சொற்களும் நேர், நிரை என்ற வாய்ப்பாட்டில் அடங்கத்தக்கவாறு சுருக்கமும், இனிமையும் பெற்றிருத்தல் வேண்டும். எவ்வகையிலும் தமிழ் மொழிக்கே உரிய சிறப்பியல்பு மாறுபடாதவாறு பாதுகாத்தல் எங்கள் கடமையாகும்” (மகேசுவரி பாலகிருஷ்ணன், தமிழறிஞர் விபுலாநந்தர் வாழ்வும் பணிகளும், இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம், இலங்கை, 1992, ப.184-5).இங்கு நாம் இனங்கண்ட தமிழ்ச் சொல்லாக்க முன்னோடிகள் அனைவரும் எமது இன்றைய, நாளைய தலைமுறைகளின் தமிழ்ச் சொல்லாட்சிக்குத் தோள்கொடுத்து நிற்கும் துறைஞர்களாக விளங்குகிறார்கள். ஆழ்ந்து, பரந்து, விரிந்த தமிழ்ச் சொற்சுரங்கத்தை அவர்கள் அகழ்ந்து, புனைந்து குவித்துச் சென்றுள்ளார்கள். அவர்கள் விட்டுச்சென்ற பணியை முன்னோக்கி இட்டுச்செல்வதே அவர்களுக்கு நாங்கள் புரியும் உரிய கைமாறாகும். 

உசாத்துணை:

Gregory James, Colporul: Ahistory of Tamil Dictionaries, Cre-A, Chennai, 2000நூலகம்: www.noolaham.org  இலங்கை அரசாங்க சொற்றொகுதிகள் பற்றிய குறிப்புகள் தந்துதவிய அன்பர்கள்:

இ. பத்மநாப ஐயர்,  இலண்டன்மு. நித்தியானந்தன், இலண்டன்சின்னையா சிவநேசன், கனடா

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply