பௌத்தம் என்றால் என்ன?

பௌத்தம் என்றால் என்ன?

பௌத்தம்: சிறந்த வினா – சிறந்த விடை

1. பௌத்தம் என்றால் என்ன?

What is Buddhism?

விடை: பௌத்தம், புத்தம், புத்தர் என்ற சொற்கள், ‘அறிவு’ என்னும் பொருள்படும்; ‘புத்தி’ என்ற வடமொழிச் சொல்லிலிருந்து வந்தவை. அதன் பொருள் எழுச்சியே! ஆகவே, பௌத்தம் என்றால், எழுச்சியின் தத்துவமே! இந்தத் தத்துவம் சித்தார்த்தக் கௌதமர் என்று அழைக்கப்பட்ட ஒரு தனி மனிதன், தனது சொந்த முயற்சியாலும், அனுபவத்தாலும் கண்டுபிடிக்கப் பட்ட வழியாகும். அந்தச் சித்தார்த்தக் கௌதமர் என்னும் புத்த பெருமானே, தனது 35வது வயதில் தான் இந்தப் பேரறிவாகிய, ‘புத்த நிலை’ என்னும் எழுச்சி பெற்றார். பௌத்தம் 2,500 வயதை உடையது. இச்சமயத்தைப் பின்பற்றும் மக்கள் உலகம் முழுவதும் இன்று சுமார் முப்பத்தெட்டு கோடிப்பேர் இருக்கின்றனர். நூறாண்டுகளுக்கு முன்பு வரை, ஆசிய மக்களால் மட்டுமே பின்பற்றப்பட்டு வந்த இத்தத் தத்துவம், இன்று ஐரோப்பாவிலும், ஆஸ்திரேலியாவிலும், அமெரிக்காவிலும் மக்களிடையே ஆதரவு பெற்று வருகிறது.

QUESTION: What is Buddhism?

ANSWER: The name Buddhism comes from the word buddhi which means ‘to wake up and thus Buddhism can be said to be the philosophy of awakening. This philosophy has its origins in the experience of the man Siddhattha Gotama, known as the Buddha, who was himself awakened at the age of 35. Buddhism is now more than 2,500 years old and has about 380 million followers worldwide. Until a hundred years ago Buddhism was mainly an Asian philosophy but increasingly it is gaining adherents in Europe, Australia and the Americas.

வினா: ஆக, பௌத்தம் ஒரு சாதாரணத் தத்துவம்தானா?

விடை: தத்துவம் என்று பொருள்படும் PHILOSOPHY என்ற சொல்லில் ‘PHILO’ என்பது ‘அன்பு’ என்ற பொருளையும், ‘SOPHIA’ என்னும் சொல் ‘அறிவு’ என்னும் பொருளையும் தரும். ஆக PHILOSOPHY என்பது, ‘அறிவின் அன்பு’ என்றோ, அல்லது அன்பு, அறிவு என்ற இரண்டு பொருள்களிலோ பௌத்தத்தைச் சரியாக விவரிக்கிறது. பௌத்தம் நம் அறிவைப் பெருக்கிக் கொள்ளவும், முழுமையாகவும் தெளிவாகவும் ஒவ்வொன்றையும் புரிந்து கொள்ளவும் கூறுகிறது. அத்துடன் பௌத்தம் உயிருடைய எல்லாவற்றின் மீதும் அன்பும் இரக்கமும் காட்டி, உண்மையான நண்பர்களாக விளங்கப் போதிக்கிறது. ஆகையால், பௌத்தம் ஒரு சாதாரணத் தத்துவம் அன்று; மிக உயர்ந்த தத்துவம்!

QUESTION: So Buddhism is just a philosophy?

ANSWER: The word philosophy comes from two words Philo, which means ‘love’, and Sophia which means ‘wisdom’. So philosophy is the love of wisdom, or love and wisdom. Both meanings describe Buddhism perfectly. Buddhism teaches that we should try to develop our intellectual ability to the fullest so that we can understand clearly. It also teaches us to develop love and kindness so that we can be like true friends to all beings. So Buddhism is a philosophy but not just a philosophy. It is the supreme philosophy.

* * * * * * * *

வினா: புத்தர் என்பவர் யார்?

விடை: கி.மு. 563ல் வட இந்தியாவில் ஓர் அரச குடும்பத்தில் ஒரு குழந்தை பிறந்தது. அவன் செல்வச் செழிப்புடனும், ஆடம்பரமாகவும் வளர்ந்தான்; ஆனால், முடிவாக உலக வசதிகளும் வாழ்வும் தூய்மையான மகிழ்ச்சிக்குப் பாதுகாப்புத் தாரா என்பதை உணர்ந்து கொண்டார். உலகைச் சுற்றியுள்ள துன்பங்களைக் கண்டு அவர் நெகிழ்ந்தார். அதனால், உலக மாந்தர்கள் உண்மையான மகிழ்ச்சியடைய வைக்கும் திறவுகோல் எது என்பதைக் கண்டுபிடிக்க நினைத்தார்; அதனால் தனது 29வது வயதில், தன் மனைவியையும் குழந்தையையும் துறந்து, பல சமய அறிஞர்களின் காலடியில் அமர்ந்து, உலக மாந்தர்களின் துன்பத்தைக் களைய வழி என்னவென்று வினவினார். அவர்கள் அவருக்குப் பலவற்றையும் போதித்தார்கள். ஆனால், எவருக்குமே, உலக மாந்தர்களின் உண்மையான துன்பத்துக்கான காரணம் தெரியவில்லை! முடிவாக ஆறாண்டுகளுக்குப் பின்பு ஆழ்ந்த ஆராய்ச்சிக்கும் தியானத்துக்கும் பிறகு அவரைச் சூழ்ந்திருந்த அறியாமை திடீரெனவிலகவே, அவர் அந்தப் பேருண்மையை அறிந்தார். அன்றிலிருந்தே அவர் ‘புத்தர்’ என அழைக்கப்பட்டார். இப்பேரறிவு பெற்ற பெம்மான், மேலும் நாற்பந்தைந்து ஆண்டுகள் வாழ்ந்து, வட இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, அவர் கண்டறிந்த பேருண்மைகளைப் போதித்து வந்தார். அவருடைய அன்பும், கனிவும், இரக்கமும், புதுமை உணர்வூட்டுகிற போதனைகளும், ஆயிரக் கணக்கானோரைப் பின்பற்றச் செய்தன. அவரது என்பதாவது வயதில் முதிர்ந்தும் தளர்ந்த நிலையிலும் மிக மகிழ்ச்சியுடனிருந்த புத்தபெருமான் இறுதியில் இயற்கை எய்தினார்.

QUESTION: Who was the Buddha?

ANSWER: In the year 563 BC a baby was born into a royal family in northern India. He grew up in wealth and luxury but eventually found that worldly comforts and security do not guarantee happiness. He was deeply moved by the suffering he saw all around and resolved to find the key to human happiness. When he was 29 he left his wife and child and set off to sit at the feet of the great religious teachers of the day and to learn from them. They taught him much but none really knew the cause of human suffering and how it could be overcome. Eventually, after six years of study, struggle and meditation he had an experience in which all ignorance fell away and he suddenly understood. From that day onwards he was called the Buddha, the Awakened One. He lived for another 45 years during which time he travelled all over northern India teaching others what he had discovered. His compassion and patience were legendary and he had thousands of followers. In his 80th year, old and sick, but still dignified and serene, he finally died.

* * * * * * * *

வினா: அவருக்கு புத்தர் என்ற பெயர் இந்த ஆழ்ந்த அறிவின் பின் தான் வந்ததென்றால், அதற்கு முன் அவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

விடை: புத்தரின் பரம்பரைக் குடும்பப் பெயர் கௌதமன். அதன் பொருள் ‘சிறந்த பசு’. அக்காலத்தில் ஆடுமாடுகள் வைத்திருந்தால் அது செல்வத்தையும் கௌரவத்தையும் குறிக்கும். அவருக்கு இடப்பட்ட பெயர் சித்தார்த்தன். அதன் பொருள் ‘நோக்கத்தை அடைபவன்’. இவ்வாறான பெயரை ஒரு அரசன் தன் மகனுக்கு இடுவானென எதிர்பார்க்கலாம் அல்லவா?

QUESTION: If he was only called ‘Buddha’ after he had this profound realization, what was his name before that?

ANSWER: The Buddha’s family or clan name was Gotama, which means ‘best cow’, cattle being objects of wealth and prestige at that time. His given name was Siddhattha which means ‘attaining his goal’, the kind of name one would expect a ruler to give his son.

* * * * * * * *

வினா: தன் மனைவியையும் மகனையும் விட்டுவிட்டுச் சென்றது, புத்த பெருமானின் பொறுப்பற்ற தன்மையைக் காட்டவில்லையா?

விடை: புத்த பெருமான் தன் குடும்பத்தை விட்டுவிட்டுச் சென்றது அவ்வளவு எளிதான செயலன்று; அவர் பல நாட்கள் கவலைப்பட்டிருக்க வேண்டும், அவர் கடைசியாக வீட்டை விட்டுப் புறப்படுவதை நன்றாக யோசித்தே இம்முடிவுக்கு வந்திருக்க வேண்டும்; அவர் தன் குடும்பத்துக்காகத் தன்னை அர்ப்பணிப்பதா? அல்லது உலக மாந்தருக்காகத் தன்னை அர்ப்பணிப்பதா? என்று யோசித்து, முடிவாக அவரது பேரன்பு, உலக மாந்தர்களின் மேன்மைக்காகவே, அவரை அர்ப்பணிக்க வைத்தது. அவரது தியாகத்தில் இன்றும், இவ்வுலகமே பயனடைகிறது. இஃது அவரது பொறுப்பற்ற தன்மையன்று; இதுவே, இதுவரை உலகத்துக்கு யாருமே செய்யாத மாபெரும் தியாகமாகும்.

QUESTION: Wasn’t it irresponsible for the Buddha to walk out on his wife and child?

ANSWER: It couldn’t have been an easy thing for the Buddha to leave his family. He must have worried and hesitated for a long time before he finally left. But he had a choice between dedicating himself to his family or dedicating himself to the world. In the end, his great compassion made him give himself to the whole world, and the whole world still benefits from his sacrifice. This was not irresponsible. It was perhaps the most significant sacrifice ever made.

* * * * * * * *

வினா: புத்தர் தான் இப்போது இறந்து விட்டாரே, அவர் நமக்கு எப்படி உதவ முடியும்?

விடை: மின் சக்தியைக் கண்டுபிடித்த ஃபேரடே இறந்து போய்விட்டாலும், அவர் கண்டு பிடிப்பு நமக்கு இன்றும் உதவுகிறது. பல நோய்களுக்கு நிவாரண முறைகளைக் கண்டுபிடித்த லூயிஸ் பாஸ்சர் இறந்துவிட்டாலும் அவர் கண்டு பிடித்த மருந்துகள் இன்றும் எத்தனையோ நோயாளிகளைக் குணப்படுத்துகிறது. பல அழியா ஓவியங்களைத் தீட்டிய லியோநார்டோ டா வின்சி இறந்து விட்டாலும் அவர் வரைந்த ஓவியங்கள் இன்றும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தருகின்றன! அறிஞர்களும் வீரர்களும் இறந்து நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகியிருந்தாலும், அவர்களுடைய செயல்களையும் வெற்றிகளையும் நாம் படிக்கும் போது, அவர்களைப் போலவே நாமும் செயலாற்ற ஓர் ஊக்கம் பிறக்கிறது. அதைப் போலவே, புத்தபெருமான் இறந்து 2500 ஆண்டுகள் ஆனாலும் இன்றும் அவருடைய போதனைகள், மனிதர்களுக்கு உதவுகின்றன! அவருடைய சான்றுகள் மக்களைக் கவர்கின்றன; அவருடைய சொற்கள் இன்றும் மனித வாழ்க்கையை மாற்றுகின்றன; பல நூற்றாண்டுகள் ஆனாலும், ஒரு புத்தரின் சொல்லுக்கே, அவர் இறந்த பிறகும், இவ்வளவு சக்தியிருக்கும்!

QUESTION: If the Buddha is dead how can he help us?

ANSWER: Faraday who discovered electricity is dead, but what he discovered still helps us. Louis Pasteur who found the cures for so many diseases is also dead, but his medical discoveries still save lives. Leonardo da Vinci who created masterpieces of art is dead, but what he created can still uplift the heart and give joy. Great heroes and heroines may have been dead for centuries but when we read of their deeds and achievements we can still be inspired to act as they did. Yes, the Buddha passed away but 2500 years later his teachings still help people, his example still inspires people, his words still change lives. Only a Buddha could have such power centuries after his passing.

* * * * * * * *

வினா: புத்தர் ஒரு கடவுளா?

விடை: இல்லை! அவர் கடவுள் இல்லை. அவர் தன்னைக் கடவுளாகவோ, கடவுளின் மகனாகவோ, கடவுளின் தூதுவராகவோகூடப் பிரகடனம் செய்து கொண்டதில்லை. அவர் ஒரு மனிதர்! தன்னைப் பூரணத்துவப்படுத்திக் கொண்ட ஒரு மனிதர். அவரைச் சான்றாக வைத்து, அவர் வழியைப் பின்பற்றினோமேயானால், நாமும் நம்மைப் பூரணத்துவப்படுத்திக் கொள்ளலாம்.

QUESTION: Was the Buddha a god?

ANSWER: No, he was not. He did not claim that he was a god, the child of a god or even the messenger from a god. He was a human being who perfected himself and taught us that if we follow his example we could perfect ourselves also.

* * * * * * * *

வினா: புத்தர் ஒரு கடவுள் இல்லையென்றால், மக்கள் ஏன் அவரை வழிபடுகின்றனர்?

விடை: வழிபாடு பலவகைப்படும். யாராவது ஒருவர் ஒரு கடவுளை வணங்கும் போது, அது ஆண் கடவுளோ, பெண் கடவுளோ, அக்கடவுளைப் புகழ்ந்து பாடி, அக்கடவுளுக்குப் பல பொருள்களைப் படைத்துத் தமக்குச் சில சலுகைகளை வேண்டுவர். தமது பிரார்த்தனையைக் கடவுள் கேட்டுத் தாங்கள் படைத்த பொருட்களைக் கடவுளர் ஏற்றுக் கொண்டு, தங்கள் பிரார்த்தனைக்குப் பதில் தருவதாக அவர்கள் நினைக்கின்றனர். ஆனால், பௌத்தர்கள் இப்படிப்பட்ட பிரார்த்தனைகளில் ஈடுபடுவதில்லை.

மற்ற முறை வழிபாடு யாதெனில், நாம் போற்றுபவருக்கோ, விரும்புபவருக்கோ நாம் அளிக்கும் மரியாதை. ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழையும்போது எழுந்து நின்று மரியாதையளிக்கிறோம்; மதிப்புக்குரியவர்களைச் சந்திக்கும்போது கை குலுக்குகின்றோம்; ஒரு நாட்டின் தேசிய கீதம் இசைக்கும் போது எழுந்துநின்று வணங்குகின்றோம். இவையெல்லாம், நாம் மனிதர்களுக்கோ, பொருட்களுக்கோ காட்டும் மரியாதைக் குறிகளாகும். இவ்வகை வணக்க முறைகளையே பௌத்தர்கள் கடைப் பிடிக்கின்றனர்.

இரு கைகளையும் தன் மடியிலே வைத்துக் கொண்டு, புன்னகை தவழும் முகத்துடன் காட்சியளிக்கும் புத்தபெருமானின் சிலைகள், நம்மை அனைத்து உயிர் வாழ் இனங்களிடமும் அன்பையும், நம்மிடையே அமைதியையும், பாசத்தையும் வளர்த்துக் கொள்ளச் செய்கின்றன. ஊதுபத்திகளிலிருந்து பரவும் வாசனை, ஒழுக்கம் உலகம் எங்கும் பரவ வேண்டும் என்பதைக் குறிக்கிறது. ஒளிதரும் விளக்கு நமதறிவையும், மலர்ந்து மணம்வீசி அழியும் பூக்கள் மனித வாழ்க்கையின் நிலையற்ற தன்மையையும் குறிக்கின்றன. நாம் புத்தரை வணங்கும்போது அவருடைய போதனைகள் நமக்களித்த நன்மைகளுக்காக அவருக்கு நன்றி செலுத்துகிறோம்! அவையே பௌத்தர்களின் வழிபாட்டு முறைகளாகும்.

QUESTION: If the Buddha is not a god why do people worship him?

ANSWER: There are different types of worship. When someone worships a god, they praise him or her, make offerings and ask for favours, believing that the god will hear their praise, receive their offerings and answer their prayers. Buddhists do not practice this kind of worship. The other kind of worship is when we show respect to someone or something we admire. When a teacher walks into a room we stand up; when we meet a dignitary we shake hands; when the national anthem is played we salute. These are all gestures of respect and worship and indicate our admiration for a specific person or thing. This is the type of worship Buddhists practice.

A statue of the Buddha with its hands resting gently in its lap and its compassionate smile reminds us to strive to develop peace and love within ourselves. The perfume of incense reminds us of the pervading influence of virtue, the lamp reminds us of the light of knowledge, and the flowers, which soon fade and die, remind us of impermanence. When we bow we express our gratitude to the Buddha for what his teachings have given us. This is the meaning of Buddhist worship.

* * * * * * * *

வினா: பௌத்தர்கள் சிலைகளை வணங்குவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேனே!

விடை: இப்படிப்பட்ட கேள்விகள், கேள்வி கேட்பவர்களின் அறியாமையைக் காட்டுகிறது. ‘IDOL’ என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு ஆங்கில அகராதியில் ‘கடவுளாக வழிபடப்படும் ஓர் உருவம் அல்லது சிலை!’ எனக்கூறப்படுகிறது. மேலே குறிப்பிட்டது போல், பௌத்தர்கள் புத்த பெருமானைக் கடவுளாக வழிபடுவதில்லை. அப்படியிருக்கும்போது அவர்கள் ஓர் மரத்துண்டையோ அல்லது ஓர் உலோகப் பொருளையோ எப்படிக் கடவுளென நம்புவர்? எல்லாச் சமயங்களும் பலவிதக் கருத்துப் படிவங்களைத் தங்கள் சமயக் குறிகளாக ஏற்று, மற்றச் சமயங்களுடன் தங்கள் சமயக் குறிகளையும் நிலை நாட்டுகின்றனர்.

டாவிஸம் என்னும் சைன சமயத்தில், யிங்-யாங் என்னும் குறி, எதிர்மறையான பொருளிடம் உள்ள இணக்கத்தைக் (உதாரணத்திற்கு வெளிச்சம்/நிழல்,ஆண்மை/பெண்மை) குறிக்கிறது. சீக்கிய சமயத்தில் வாள் அவர்களுடைய சமயப் போராட்டத்தைக் குறிக்கிறது. கிறுத்துவ சமயத்தில் கிறித்து வாழ்வதை மீன் சின்னம் மூலமாகவும், அவர் செய்த தியாகத்தைச் சிலுவைக் குறி மூலமாகவும் வழிபடுகின்றனர்.

பௌத்தத்தில் புத்த பெருமானின் சிலை மனித பூரணத்துவத்தைக் குறிக்கிறது. புத்த பெருமானின் சிலை, பௌத்தம் மனிதனை மையப்படுத்தி ஆராய்வதே தவிரக் கடவுளை மையப்படுத்துவதன்று என்பதையும், நாம் நம்மைப்பற்றி அறிந்து, முழுமையான அறிவு பெறப் பாடுபடவேண்டும் என்பதையும் நினைவூட்டுகிறது. சிலையை மட்டுமே பௌத்தர்கள் வணங்கி, அச்சிலையையே தெய்வமாகக் கருதுகிறார்கள் என்பது தவறு.

QUESTION: But I have heard people say that Buddhists worship idols.

ANSWER: Such statements only reflect the misunderstanding of the persons who make them. The dictionary defines an idol as ‘an image or statue worshipped as a god.’ As we have seen, Buddhists do not believe that the Buddha was a god, so how could they possibly believe that a piece of wood or metal is a god? All religions use symbols to represent their various beliefs.

In Taoism, the ying-yang diagram is used to symbolize the harmony between opposites. In Sikhism, the sword is used to symbolize spiritual struggle. In Christianity, the fish is used to symbolize Christ’s presence and a cross to represent his sacrifice. In Buddhism, the statue of the Buddha reminds us of the human dimension in Buddhist teaching, the fact that Buddhism is human-centred rather than god-centred, that we must look within, not without to find perfection and understanding. Therefore, to say that Buddhists worship idols is as silly as saying that Christians worship fish or geometrical shapes.

* * * * * * * *

வினா: பௌத்தக் கோவில்களில் மக்கள் ஏன் பல புதுமையான வழிமுறைகளைச் செய்கின்றனர்?

விடை: சில செயல்கள் நமக்கு விளங்காத போது நாம் அவற்றைத் தவறாகப் புரிந்து கொள்கிறோம்; அவை புதுமையாக இருப்பதால், நாம் அவற்றை நிராகரித்து விடுகிறோம். நாம் அச்செயல்களின் பொருள்களை முயன்று தெரிந்து கொள்ள வேண்டும்.

புத்த பெருமானின் போதனைகளுக்குப் புறம்பான சில குருட்டு நம்பிக்கைகளும் பௌத்தத்தில் உள. இப்படிப்பட்ட குருட்டு நம்பிக்கைகள் பௌத்தத்தில் மட்டுமன்று மற்றச் சமயங்களிலும் உள. புத்த பெருமான் தெளிவுடனும் விவரமாகவும் போதித்திருக்கிறார்; இருந்தும் சிலர் அதனைப் புரிந்துகொள்ளவில்லையென்றால், புத்த பெருமானை எப்படிக் குறை கூறமுடியும்? இதற்குச் சான்றாகக் கீழ்கண்ட சான்றோர் மொழியினைக் காணலாம்.

‘நோயால் வாடும் ஒரு மனிதன், மருத்துவர் ஒருவர் அவனருகில் இருந்தும், அவரிடம் சென்று சிகிச்சை பெறவில்லையென்றால் அது மருத்துவரின் குற்றமன்று! இதைப்போலவே ஒருவன் (மனதில்) அழுத்தப்பட்டு, மாசுள்ள நோயால் சித்திரவதைப் படுத்தப் பட்டும் அவன் புத்தபெருமானிடம் செல்ல வில்லை யென்றால், அது புத்தபெருமானின் தவறன்று.’ Jn. 28-9

பௌத்தத்தையோ வேறு எந்தச் சமயத்தையோ அதனைச் சரியாகக் கடைப் பிடிக்காதவர்களைக் கொண்டு எடை போடக் கூடாது. புத்த பெருமானின் உண்மையான போதனைகளைத் தெரிந்துகொள்ள வேண்டுமேயானால், புத்த பெருமானின் போதனைகளைப் படியுங்கள் அல்லது பௌத்தத்தை நன்குணர்ந்த அறிஞர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்!

QUESTION: Why do people do all kinds of strange things in Buddhist temples?

ANSWER: Many things seem strange to us when we don’t understand them. Rather than dismiss such things as strange, we should try to find their meaning. However, it is true that some of the things Buddhists do have their origin in popular superstition and misunderstanding rather than the teaching of the Buddha. And such misunderstandings are not found in Buddhism alone but creep into in all religions from time to time. The Buddha taught with clarity and in detail and if some people fail to understand fully, he cannot be blamed for that. There is a saying from the Buddhist scriptures:

‘If a person suffering from a disease does not seek treatment even when there is a physician at hand, it is not the fault of the physician. In the same way, if a person is oppressed and tormented by the disease of the defilements but does not seek the help of the Buddha, that is not the Buddha’s fault.’ Jn. 28-9

Nor should Buddhism or any religion be judged by those who don’t practice it properly. If you wish to know the real teachings of Buddhism, read the Buddha’s words or speak to those who understand them properly.

* * * * * * * *

வினா: தம்மா என்ற வார்த்தையை அடிக்கடி கேள்விப்படுகிறோம். அதன் பொருள் என்ன?

விடை: தம்மா (சமஸ்கிருதத்தில் தர்மா) என்ற வார்த்தைக்குப் பல பொருள்கள் இருக்கின்றன. பௌத்தத்தில் பயன்படுத்தம்படும் போது அதன் பொருள் ‘வாய்மை’, ‘ஒன்றின் உண்மையான நிலை’, ‘உண்மையாக’ என்பதாகும். புத்தரின் போதனைகளை நாம் உண்மையென நம்புவதால் அதனையும் தம்மா என்று குறிப்பிடுகிறோம்.

QUESTION: I see the word Dhamma often. What does it mean?

ANSWER: The word dhamma (Sanskrit dharma) has multiple meanings but as it is used in Buddhism its main meaning is truth, reality, actuality, the way things are. Because we consider the Buddha’s teachings to be true we often refer to them as Dhamma too.

* * * * * * * *

வினா: கிருஸ்துமஸ் பண்டிகையைப் போலப் பௌத்தத்திலும் ஒரு பண்டிகை உண்டா?

விடை: பௌத்த சம்பிரதாயப் படி, இளவரசர் சித்தார்த்தர் பிறந்ததும், புத்த நிலை அடைந்ததும், அவர் மறைந்ததும் ‘வேஸாக’ மாதத்தின் பௌர்ணமி நாள் அன்று தான். அதாவது இந்திய வருடத்தின் இரண்டாம் மாதம். இன்று நடைமுறையில் உள்ள மேற்கத்திய ஆண்டுக் கணக்கின்படி அது ஏப்ரல்- மே மாததில் வரும். அந்நாளில் எல்லா நாடுகளிலுமுள்ள பௌத்தர்களும் கோவிலுக்குச் சென்று, பல சமயச் சடங்குகளிலும் விழாக்களிலும் கலந்து கொண்டு, அல்லது நாள் முழுதும் தியானத்தில் ஈடுபட்டு இந்த முக்கியச் சம்பவங்களைக் கொண்டாடுவர்.

QUESTION: Is there a Buddhist equivalent of Christmas?

ANSWER: According to tradition, Prince Siddhattha was born, became the Buddha and passed away on the full moon day of Vesakha, the second month of the Indian year, which corresponds to April-May of the Western calendar. On that day Buddhists in all lands celebrate these events by visiting temples, participating in various ceremonies, or perhaps spending the day meditating.

* * * * * * * *

வினா: பௌத்தம் அவ்வளவு சிறந்த சமயமாக இருந்தால் சில பௌத்த நாடுகள் ஏழ்மையாக இருக்கின்றனவே, ஏன்?

விடை: ஏழ்மை என்று நீங்கள் கூறுவது பொருளாதாரத்தில் ஏழ்மை என்னும் பொருள் படக் கூறினால், சில பௌத்த நாடுகள் ஏழ்மையாக இருப்பது உண்மைதான். ஆனால், வாழ்க்கைத் தரத்தில் ஏழ்மை என்றால், சில பௌத்த நாடுகள் சிறந்த செல்வத்துடன் இருக்கின்றன. அமெரிக்காவை எடுத்துக் கொள்ளுங்கள். அது பொருளாதாரத்தில் வளமான நாடு; மற்றும் சக்தி வாய்ந்த நாடு; ஆனால், உலகத்திலேயே அதிகமாகக் கொலை, கொள்ளைகள் நடக்கும் நாடும் அதுதான்! இலட்சக்கணக்கான முதியவர்கள், தங்கள் குழந்தைகளால் கைவிடப்பட்டுத் தனியாக, ஏழைகளுக்கான முதியோர் இல்லங்களில் தங்கி இருக்கின்றனர்; உள்குழப்பங்கள், வன்முறைகள், கெட்டுப் போகும் குழந்தைகள் முதலியன தலையாய பிரச்சினைகளாக இருக்கின்றன. மூன்று திருமணங்களில் ஒன்று விவாகரத்தில் முடிகிறது. ஆபாசத்தைத் தூண்டிவிடும் எழுத்து முறை மிகச் சுலபமாகக் கிடைக்கிறது. பொருளாதாரத் துறையில் செல்வச் செருக்கோடு வாழ்ந்தாலும் வாழ்க்கைத் தரத்தில் மிக ஏழ்மையாகவே வாழ்கின்றனர்.

மாறாகப் பரம்பரையான பௌத்த நாடுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கு பெற்றோர்கள் தங்கள், குழந்தைகளால் கௌரவப்படுத்தப் படுகிறார்கள்; மரியாதையளிக்கப் படுகிறார்கள். கொலைக் குற்றங்கள் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவே. விவாகரத்தோ, தற்கொலையோ மிகக் குறைவு. மிருதுவான தன்மை, தாராளமனப்பாங்கு, அறிமுகமில்லாதவர்களுக்குக்கூட விருந்தோம்பல், விரிந்த எண்ணங்கள், மரியாதை போன்ற குணங்களைக் கொண்டுள்ளனர். பொருளாதாரத்தில் பின்னடைந்திருந்தாலும், அமெரிக்காவை ஒப்பிடும்போது மிகச் சிறந்த வாழ்க்கையே வாழ்கின்றனர்.

மேலும், பொருளாதாரத்தின் அடிப்படையில் மட்டுமே நாம் பௌத்த சமய நாடுகளை அளவிட்டால் கூட, இன்று மிகச் செல்வங் கொழிக்கும் நாடும், சக்தி வாய்ந்த நாடும், ஒரு பௌத்த சமய நாடுமான நாடு ஜப்பான் ஆகும். அங்கு பெரும்பான்மையான மக்கள் பௌத்த சமயத்தினரே.

QUESTION: If Buddhism is so good why are some Buddhist countries poor?

ANSWER: If by poor you mean economically poor, then it is true that some Buddhist countries are poor. But if by poor you mean a poor quality of life, then perhaps some Buddhist countries are quite rich. America, for example, is an economically rich and powerful country but the crime rate is one of the highest in the world; millions of elderly people are neglected by their children and die of loneliness in old people’s homes; domestic violence, child abuse, drug addiction are major problems; and one in three marriages end in divorce. Rich in terms of money but perhaps poor in terms of the quality of life. Now if you look at some traditional Buddhist countries you find a very different situation.

Parents are honoured and respected by their children, the crime rates are relatively low, divorce and suicide are rare, and traditional values like gentleness, generosity, hospitality to strangers, tolerance and respect for others are still strong. Economically backwards but perhaps a higher quality of life than a country like America. However, even if we judge Buddhist countries in terms of economics alone, one of the wealthiest and most economically dynamic countries in the world today is Japan where a good percentage of the population call themselves Buddhist.

* * * * * * * *

வினா: பௌத்தர்கள் ஏழை எளிய மக்களுக்கு எந்த விதமான சேவைகளும் செய்ததாகக் கேள்விப் படவில்லையே, ஏன்?

விடை: பௌத்தர்கள் தாங்கள் செய்யும் சேவைகள், மக்களுக்கு ஆற்றும் தொண்டுகளைப் பறைசாற்றிக் கொள்வதில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு, பல்வேறு சமயத்தினரிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தியதற்காக, நிக்கோ நிர்வானோ என்னும் ஜப்பானியப் பௌத்தப் பெரியாருக்கு டெம்பில்டன் பரிசு என்னும் விருது கிடைத்தது. அதைப் போலவே பெருமைக்குரிய மேக்ஸேஸே பரிசினை ஒரு தாய்லாந்து பௌத்தத் துறவி கஞ்சா போன்ற போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களுக்குச் செய்த சேவைகளுக்காகப் பெற்றார். 1987ல் மற்றொரு தாய்லாந்து அறவண அடிகள் வணக்கத்துக்குரிய கண்டயாபிவாட் அவர்களுக்குக் கிராமப் புறங்களில் வாழும் ஆதரவற்ற குழந்தைகளுக்குத் தொண்டு செய்ததற்காக, நார்வே நாட்டின் குழந்தைகள் சமாதானப் பரிசு கிடைத்தது. மேற்கத்தியப் பௌத்தர்களால் இந்தியாவில் பெருமளவில் செய்யும் சேவைகளை எப்படிக் கணக்கிட முடியும்? அவர்கள் பள்ளிகள் கட்டியிருக்கின்றனர்; குழந்தைகளைத் கவனிக்கும் மையங்கள், மருந்தகங்கள் தன்னிறைவுக்கான சிறிய அளவிலான தொழிற்சாலைகள் அமைத்துள்ளனர். பௌத்தர்கள் மற்றவர்களுக்குச் செய்யும் சேவையைத் தங்கள் சமயக் கடமைகளில் ஒன்றாகக்கருதிச் செய்கிறார்கள்; மேலும் அதனை அமைதியாகவும் சுயவிளம்பரமின்றியும் செய்கின்றனர். அதனால்தான், பௌத்தர்களின் சமுதாயச் சேவைகளை, அவ்வளவாகக் கேள்விப்படுவதில்லை.

QUESTION: Why is it that you don’t often hear of charitable work being done by Buddhists?

ANSWER: Perhaps it is because Buddhists don’t feel the need to boast about the good they do. Several years ago the Japanese Buddhist leader Nikkyo Nirwano received the Templeton Prize for his work in promoting inter-religious harmony. Likewise, a Thai Buddhist monk was recently awarded the prestigious Magsaysay Prize for his excellent work among drug addicts. In 1987 another Thai monk, Ven. Kantayapiwat was awarded the Norwegian Children’s Peace Prize for his many years of work helping homeless children in rural areas. And what about the large scale social work being done among the poor in India by the Western Buddhist Order? They have built schools, child-minding centres, dispensaries and small-scale industries for self-sufficiency. Buddhists see help given to others as an expression of their religious practice just as other religions do but they believe that it should be done quietly and without self-promotion.

* * * * * * * *

வினா: பௌத்தத்தில் ஏன் இத்தனை பிரிவுகள் உள?

விடை: சர்க்கரையில் பலவித சர்க்கரைகள் உள. பழுப்பு நிறச் சர்க்கரை, வெள்ளைச் சர்க்கரை, சிறுமணிச் சர்க்கரை, பாறைச் சர்க்கரை, சர்க்கரை பானங்கள், மற்றும் பாலாடை கலந்த சர்க்கரை, இப்படிப் பல. ஆனால், இப்படி எத்தனை பெயரிட்டழைத்தாலும், அவை தரும் சுவை இனிப்புத்தானே? அவற்றைப் பல விதமாக உற்பத்தி செய்து, பல விதமாகப் பயன்படுத்துகின்றனர். அதேபோல் பௌத்தம் ஒன்றுதான். ஆனால், அதில், தேரவாதா பௌத்தம், ஜென் பௌத்தம், தூய நில பௌத்தம், யோகாசாரா பௌத்தம் மற்றும் வஜ்ஜிராயன பௌத்தம், எனப் பல பிரிவுகள் உண்டு. இவையனைத்துமே பௌத்தம் தான். எல்லாமே ஒரே சுவையைத் தரக்கூடியவையே – அது தான் சுதந்திரச் சுவை.

பௌத்தம் எந்தெந்த நாட்டில் பரவியதோ, அந்ததந்த நாட்டின் கலாசாரத்துக்கேற்பத் தன் தனித்தன்மையை விட்டுக் கொடுக்காமல் மாறிக் கொண்டது. இப்படிக் கடந்த நூற்றாண்டுகளில், பௌத்தம் அந்தந்தத் தலை முறைகளுக்கு ஏற்றவாறு தன்னை நிலை நிறுத்திக்கொண்டது. வெளிப்பார்வையில் வேறு வேறு பௌத்தம் என்றுக் கூறிக் கொண்டாலும், அவை அடிப்படையாகக் கொண்டவை நான்கு உயர்ந்த மேன்மையான பேருண்மைகள் மற்றும், அஷ்டாங்க மார்க்கம் ஆகியவற்றையே. பௌத்தம் உள்ளிட்ட பல சமயங்கள் அவற்றினூடே தனித்தனிப் பள்ளிகளாகவும் தனித்தனிப் பிரிவுகளாகவும் பிரிந்து கொண்டன.

QUESTION: Why are there so many different types of Buddhism?

பொதுவாக, பௌத்தத்தில் ஒரு பிரிவினர் மற்ற பிரிவினரைப் பொறுமையோடும், நட்புணர்வோடும் ஏற்றுக்கொண்டனர். இப்படிப்பட்ட சகிப்புத் தன்மை மிக அரிதே!

ANSWER: There are many different types of sugar – brown sugar, white sugar, rock sugar, syrup and icing sugar – but it is all sugar and it all tastes sweet. It is produced in different forms so that it can be used in different ways. Buddhism is the same: there is Theravada Buddhism, Zen Buddhism, Pure Land Buddhism, Yogacara Buddhism and Vajrayana Buddhism but it is all the teachings of the Buddha and it all has the same taste – the taste of freedom.

Buddhism has evolved into different forms so that it can be relevant to the different cultures in which it exists. It has been reinterpreted over the centuries so that it can remain relevant to each new generation. Outwardly, the types of Buddhism may seem very different but at the centre of all of them are the Four Noble Truths and the Eightfold Path. All major religions, Buddhism included, have split into schools and sects. Perhaps the difference between Buddhism and some other religions is that the various schools have generally been very tolerant and friendly towards each other.

* * * * * * * *

வினா: நீங்கள் உங்கள் சமயமான பௌத்தத்தை உயர்வாக எண்ணுகிறீர்கள். நீங்கள் உங்கள் சமயம் மட்டுமே சரியானதென்றும் மற்றச் சமயங்களெல்லாம் தவறென்றும் எண்ணுகிறீர்கள், அப்படித்தானே?

விடை: புத்த பெருமானின் போதனைகளைச் சரியாகப் புரிந்து கொண்டவர்கள், மற்ற சமயங்களைத் தவறு எனக் கூறுவதில்லை, மற்ற சமயங்களை உண்மையிலேயே சிரமப்பட்டுத் திறந்த உள்ளத்துடன் ஆய்ந்து பார்ப்பவர்கள், பிற சமயங்களையும் தங்கள் சமயத்துக்கு இணையாகவே கருதுவர். முதலில் நாம் ஒரு சமயத்தை ஆராயும் போது இரண்டு சமயங்களுக்கும் பொதுவான கருத்துகள் எவை என்பதையே காண்போம். எல்லாச் சமயத்தினரும் இன்றைய மனிதனின் வாழ்க்கை நிலை திருப்தியற்றது என்பதை ஒத்துக்கொள்வர். மனித வாழ்க்கை உயர்வடைய வேண்டுமேயானால், நடத்தையிலும், எண்ணத்திலும் ஒரு மாற்றம் வேண்டுமென்பதை ஒத்துக் கொள்வர். எல்லாச் சமயங்களும் அன்பு, இரக்கம், பெருந்தன்மை, சமுதாயப் பொறுப்புகள் போன்ற நீதியையே போதிக்கின்றன. நிபந்தனையற்றதொன்று இருக்கிறதென்பதை அனைவருமே ஏற்றுக் கொள்கின்றனர். அவர்கள் விதவிதமான சொற்களுடன், விதவிதமான பெயர்களைக் கொண்டு, விதவிதமான குறிகளைப் பயன்படுத்தித் தங்கள் சமயங்களை விளக்குகின்றனர். மக்கள் குறுகிய மனப்பான்மையோடு தங்கள் வழியுடன் மட்டும் ஒட்டிக்கொள்ளும் போதுதான், மற்ற சமயங்களை ஒதுக்கிச் சகித்துக்கொள்ள முடியாமல், தான் தான் சரி என்ற பெருமையும், தான் சொல்வது தான் சரியென்ற எண்ணமும் நிலையூன்றுகிறது.

ஓர் ஆங்கிலேயர், ஒரு பிரஞ்சுக்காரர், ஒரு சீனர், ஓர் இந்தோனேசியர் ஆகிய நால்வர் ஒரு கோப்பையைப் பார்க்கின்றனர். ஆங்கிலேயர் கூறுகிறார் ‘இது ஒரு கப்’ என்று. பிரஞ்சுக்காரர் கூறுகிறார். ‘இல்லை, இல்லை, இது ஒரு டேஸ்ஸே! ‘ என்று. உடனே சீனர், ‘நீங்கள் இருவர் சொல்வதுமே தவறு, இது ஒரு பெய்’ என்கிறார். இவர்கள் அனைவரையும் பார்த்துக் கொண்டிருந்த இந்தோனேசியர், ‘நீங்கள் அனைவருமே முட்டாள்கள்; இது ஒரு கேவான்’ என்கிறார். ஆங்கிலேயர் ஓர் ஆங்கில அகராதியைக் கொண்டு வந்து, ‘எங்கள் அகராதியில் கப் என்று தான் போட்டிருக்கிறது’ என்கிறார். பிரஞ்சுக்காரரரோ ‘உங்கள் அகராதி கூறுவது தவறு, ஏனென்றால் எங்கள் அகராதியில் துல்லியமாக அதை டேஸ்ஸே, என்றுதான் போட்டிருக்கிறார்கள்’ என்கிறார்; சீனர் அவர்களை விறைக்கிறார்!

‘எங்கள் அகராதி ஆயிரக்கணக்கான வருடமுடைய பழம் அகராதி. அதனால் எங்கள் அகராதி கூறுவது தான் சரியாக இருக்க முடியும்! அதுவுமின்றி உலகத்திலேயே அதிகமாகப் பேசப்படும் மொழி சீனமே! அதனால், எங்கள் அகராதி கூறுவதுதான் சரியாக இருக்க முடியும், அதனால், இதன் பெயர் பெய்’ தான்’ என்கிறார், அப்பொழுது ஒருவர் அவர்கள் சண்டைபோட்டுக் கொண்டிருக்கும் இடத்துக்கு வருகிறார். அந்தக் கோப்பையிலிருக்கும் நீரைப் பருகுகிறார். பருகியவுடன் அவர் மற்றவர்களிடம் கூறுகிறார், நீங்கள் இதைக் ‘கப்’ என்றோ ‘டேஸ்ஸே’ என்றோ, ‘பெய்’ என்றோ ‘கேவான்’ என்றோ அழைத்தாலும், அக்கோப்பைப் பானம் அருந்துவதற்குப் பயன்படுகிறது, உங்கள் வாதங்களை விட்டுவிட்டு உங்கள் தாகத்தைத் தணித்துக்கொள்ளுங்கள்!’ என்கிறார்.

இதுவே மற்றச் சமயங்களைப் பற்றிய பௌத்தத்தின் எண்ணமாகும்.

QUESTION: You certainly think highly of Buddhism. I suppose you believe it is the only true religion and that all the others are false.

ANSWER: No Buddhist who understands the Buddha’s teaching thinks that other religions are wrong. No one who has made a genuine effort to examine other religions with an open mind could think like that either. The first thing you notice when you study the different religions is just how much they have in common. All religions acknowledge that humankind’s present state is unsatisfactory. All believe that a change of attitude and behaviour is needed if the human situation is to improve. All teach an ethics that includes love, kindness, patience, generosity and social responsibility, and all accept the existence of some form of Absolute. They use different languages, different names and different symbols to describe and explain these things. It is only when people cling narrow-mindedly to their particular way of seeing things that intolerance, pride and self-righteousness arise.

Imagine an Englishman, a Frenchman, a Chinese and an Indonesian all looking at a cup. The Englishman says, ‘That is a cup’. The Frenchman answers, ‘No it’s not. It’s a tasse’. Then the Chinese comments, ‘You are both wrong. It’s a pei’. Finally, the Indonesian man laughs at the others and says, ‘What fools you are. It’s a cawan’. Then the Englishman get a dictionary and shows it to the others saying, ‘I can prove that it is a cup. My dictionary says so’. ‘Then your dictionary is wrong,’ says the Frenchman, ‘because my dictionary clearly says it is a tasse’. The Chinese scoff, ‘My dictionary says it’s a pei and my dictionary is thousands of years older than yours so it must be right. And besides, more people speak Chinese than any other language, so it must be a pei’. While they are squabbling and arguing with each other, another man comes up, drinks from the cup and then says to the others, ‘Whether you call it a cup, a tasse, a pei or a cawan, the purpose of the cup is to hold water so that it can be drunk. Stop arguing and drink, stop squabbling and quench your thirst. This is the Buddhist attitude to other religions.

* * * * * * * *

வினா: சிலர் எல்லா மதங்களும் ஒன்றே என்கின்றனர். இந்தக் கூற்றை ஒத்துக்கொள்வீர்களா?

விடை: மதங்கள் மிகவும் சிக்கலானவை, மேலும் ஒன்றோடொன்று மாறுபட்டவை. எனவே இக்கேள்விக்கு விடை எளிதாகச் சொல்லிவிடமுடியாது. பௌத்தர் இந்தக் கூற்றில் சில உண்மைகள் இருப்பதாகவும் சில பிழைகள் இருப்பதாகவும் சொல்லக்கூடும். பௌத்தம் கடவுளைப்பற்றிப் பேசுவதில்லை. சில மதங்கள் கடவுளைப்பற்றிப் பேசுகின்றன. பௌத்தம் மனத்தைத் தூய்மையாக்கும் எவரும் நிர்வாண நிலையை அடையமுடியும் எனச் சொல்கிறது. மாறாக கிறுத்துவ ச

சமயம் யேசுவை நம்புவோர் மட்டுமே மோட்சம் அடையமுடியும் எனக் கூறுகிறது. இவையெல்லாம் குறிப்பிடத் தக்க வித்தியாசங்கள்.

அதே சமயம் பைபிலில் அழகான ஒரு பந்தி இவ்வாறு சொல்கிறது:

‘நான் மக்களும் தேவதைகளும் பேசும் மொழிகளைப் பேசியும், அன்பு இல்லையென்றால், வெறும் சத்தம் போடுபவன் தான் – கைத்தாளத்தின் சத்தத்தைப் போல. எனக்கு ஆருடம் கூறும் திறமை இருந்தும், எனக்கு எல்லா மர்மங்களும் அறிவும் தெரிந்திருந்தும், மலைகளை நகர்த்தும் அளவிற்கு மேலோங்கிய பக்தி இருந்தும், எனக்கு அன்பில்லையென்றால் நான் ஒன்றுக்கும் உதவாதவனாகிறேன். என்னிடமிருப்பதையெல்லாம் ஏழைகளுக்கு கொடுத்துவிட்டு, என் உடம்பையும் நெருப்புக்குத் தானம் செய்தும் எனக்கு அன்பில்லையென்றால் எனக்கு எந்தப் பயனும் இல்லை.

அன்பிற்குப் பொறுமை உள்ளது. அன்பிற்குக் கருணை உள்ளது. அது பொறாமைப் படுவதில்லை. அது தற்பெருமையடித்துக் கொள்வதில்லை. பெருமை கொள்வதில்லை. நாகரிகமில்லாதது இல்லை, அது ஆணவத்தை அதிகரிப்பதில்லை, சுலபமாகக் கோபப்படுவதில்லை, மற்றவர் தனக்குச் செய்த தவறை நினைவில் கொள்வதில்லை. அன்பு தீமையில் மகிழ்வதில்லை, வாய்மையில் மகிழ்வடைகிறது. அன்பு எப்போதும் பாதுகாக்கும், எப்போதும் நம்பிக்கை வைக்கும், எந்த வகைத் தடைவந்தாலும் தொடரும்.’

இதைத்தான் பௌத்தமும் போதிக்கிறது. நம்மிடம் இருக்கும் வலிமையோ, ஆற்றலோ, எதிர்காலத்தில் நடக்கக்கூடியதை சொல்லும் திறனோ, நம் பக்தியோ அல்லது வேறு ஏதாவது அபிநயமோ முக்கியமில்லை. உள்ளத்தின் தூய்மைதான் முக்கியம்.

கிறுத்துவ பௌத்த சாஸ்திரங்களின் சமயக் கருத்துக்களிலும் சித்தாந்தங்களிலும் வேறுபாடுகள் உள. ஆனால் உள்ளத்தின் பண்புகள், நன்னெறி, நடத்தை போன்றவற்றைப் பார்க்கும் போது இரண்டு சமயங்களுக்கும் ஒற்றுமைகள் இருக்கின்றன. இதைப் போலவே பௌத்தத்தையும் மற்ற சமயங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போதும் இதே முடிவிற்கு வரலாம்.

QUESTION: Some people say all religions are really the same. Would you agree with them?

ANSWER: Religions are far too complex and diverse to be encapsulated by a neat little statement like that. A Buddhist might say that this statement contains elements of both truth and falsehood. Buddhism teaches that there is no god while some other religions teach there is. Buddhism says that enlightenment is available to everyone who purifies their mind while Christianity for example insists that salvation is possible only for those who believe in Jesus. I think these are significant differences. However, one of the most beautiful passages in the Bible says;

‘If I speak the languages of men and angels but have no love, I am only a noisy gong or a clanging cymbal. If I have the gift of prophecy and can understand all mysteries and all knowledge, and if I have faith so strong that it can move a mountain, but I have no love, I am nothing. If I give all I possess to the poor and even surrender my body to the flames but I have no love, I gain nothing. Love is patient, love is kind. It does not envy, it does not boast, it is not proud. Love is not rude, it is not self-seeking, it is not easily angered, it keeps no record of wrongs done. Love does not delight in evil but rejoices in the truth. It always protects, always trusts, always persevere.’ I Cor.13-7

This is exactly what Buddhism teaches – that the quality of our heart is more important than any super-normal powers we might have, our ability to foretell the future, the strength of our faith or any extravagant gestures we might make. So when it comes to theological concepts and theories Buddhism and Christianity certainly differ. But when it comes to heart qualities, ethics and behaviour they are very similar. The same could be said for Buddhism and other religions.

* * * * * * * *

வினா: பௌத்த சமயம் அறிவியல் பூர்வமானதா?

விடை: இவ்வினாவுக்கு விடை அளிக்குமுன் அறிவியல் என்னும் பொருள்படும் ‘science’ என்னும் ஆங்கிலச் சொல்லை விவரிப்போம். மேற்படி சொல் ஆங்கில அகராதியின்படி ‘ஒரு முறைப்படுத்தப்படும் அறிவு; அவ்வறிவு பார்த்து, ஆய்ந்து அதன் உண்மைகளை இயற்கை நியதிகளுக்கு ஏற்ப விவரித்தல். அந்த அறிவின் கிளை. எப்பொருளையும் சரியான முறையில் படித்தறிந்து கொள்ளல்’.

ஒரு சில பௌத்தக் கோட்பாடுகள் இவற்றில் அடங்கா. ஆனால், பௌத்தப் போதனையின் மையமான நான்கு பேருண்மைகள் இவற்றில் நிச்சயமாக அடங்கும். முதல் பேருண்மையான துக்க அனுபவத்தை ஆய்ந்து, அளந்து அனுபவித்து விவரிக்கலாம். இரண்டாவது பேருண்மையான துக்க உற்பவம், அந்த உற்பவத்துக்குக் காரணமான பேராசை, அதுவந்த விதம் முதலியவற்றையும் அளந்து அனுபவித்து விவரிக்கலாம். அதனைச் சித்தாந்தக் கோட்பாடுகளாகவோ, புராணிகமுறையிலோ விவரிக்க முயலவில்லை. மூன்றாவது பேருண்மை துக்க நிவாரணம். துக்கத்தை ஒரு பராசக்தியாலோ அல்லது நம்பிக்கையாலோ நீக்கி விட முடியாது. துக்கம் தோன்றுவதற்கான காரணத்தை நீக்கினாலே போதும். இது வெளிப்படை யான உண்மை.

நான்காவது பேருண்மையான துக்க நிவாரண மார்க்கம். இதிலும் சித்தாந்தக் கோட்பாடுகள் ஒன்றுமில்லை. குறிப்பிட்ட வழிகளிலே நடந்தால் துக்கத்தை ஒழிக்கலாம். இந்த நடத்தையை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்யலாம். பௌத்தம் மேன்மையான நிலைகளை அறிவியல் முறையில் விவரிக்கிறது. இயற்கை விதிகளுக்கேற்ப, துக்கம் எப்படி ஏற்படுகிறது, அதனை எப்படி ஒழிப்பது, போன்றவற்றை விவரிக்கின்றது. இவையனைத்தும் அறிவியல் பூர்வமானவையே! மேலும், புத்த பெருமான் நம்மை எதையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாமென்கிறார். கேள்வி கேட்டு, ஆராய்ந்து, விசாரித்து, நமது சொந்த அனுபவத்தைக் கொண்டே ஒரு முடிவெடுக்கச் சொல்கிறார். புத்தபெருமான் கூறுவதாவது:

“ஒரு பழக்கத்தைப் பார்ப்பதாலோ, வழக்கமாக நடந்து வருகிறது என்பதாலோ, வதந்திகளாலோ, புனிதநூல்களில் குறிப்பிட்டிருக்கிறது என்பதாலோ, செவிவழிக் கதைகளாலோ, தர்க்க வாதங்களாலோ, ஓரஞ்சேர்ந்த வாதத்தாலோ, அல்லது மற்றவர் பார்த்துச் சொன்னார் என்பதற்காகவோ, அதைக் கூறியவர் நமது ஆசிரியர் என்பதாலோ பின்பற்றாமல், உனக்கு அது நன்மை பயக்கும் என்று தெரிந்து, மற்றவர்களால் குறைகூற முடியாதென்பதையறிந்து, அறிஞர்களால், அது போற்றக்கூடியது, அதை அனுபவிக்கும் போது அது மகிழ்ச்சியைத் தரக்கூடியது என்பது தெரிந்தால், அதனைப் பின்பற்று!” என்கிறார்.

இதிலிருந்து பௌத்தம் அறிவியலையே அடிப்படையாகக் கொண்டது இல்லையென்றாலும், பௌத்தச் சமயத்துக்குப் பலமான அறிவியல் தாக்கம் இருக்கிறது என்று சொல்லலாம். மற்றச் சமயங்களை விடப் பௌத்தத்தில் அறிவியல் தாக்கம் அதிகமிருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அறிவியல் அறிஞரான ஆல்பர்ட் ஐன்ஸ்டின் பௌத்தம் பற்றிக் கூறியதாவது:

“எதிர்காலச் சமயம் அண்டங்களுக்கெல்லாம் பொதுவான ஒரு சமயமாக இருக்கும். எது மனித அறிவுக்கு அப்பாற்பட்டதை ஒழித்து, மறுக்க முடியாத சித்தாத்தங்களை ஏற்று, கடவுள், மதம் பற்றிய ஆராய்ச்சியைச் சரிவரச் செய்து, இயற்கை நியதிகளையும் ஆன்மீகத்தையும் உள்ளடக்கி, எல்லாவற்றையும் ஆய்ந்து அனுபவித்து, இயற்கை, சமயம் இரண்டையும் ஒருங்கிணைத்து, அர்த்தமுள்ள ஒற்றுமையை உண்டாக்குகிறதோ அதுவே, அப்படிப்பட்ட சமயமே, எதிர்காலத்துக்கேற்ற சமயமாகும். இப்படிப்பட்ட விளக்கத்துக்குப் பௌத்த சமயமே பதிலளிக்கிறது. நவீன கால அறிவியல் தேவைக்கு அப்படி ஒத்துவரும் சமயம் பௌத்த சமயமேயாம்.”

QUESTION: Is Buddhism scientific?

ANSWER: Before we answer that question it would be best to define the word ‘science.’ Science is, according to the dictionary, ‘knowledge that can be made into a system, which depends upon seeing and testing facts and stating general natural laws, a branch of such knowledge, anything that can be studied exactly.’ There are aspects of Buddhism that would not fit into this definition but the central teachings of Buddhism, the Four Noble Truths, most certainly would. Suffering, the First Noble Truth, is an experience that can be defined, experienced and measured. The Second Noble Truth states that suffering has a natural cause, craving, which likewise can be defined, experienced and measured. No attempt is made to explain suffering in terms of a metaphysical concept or myth. According to the Third Noble Truth, suffering is ended, not by relying upon a supreme being, by faith or by prayers but simply by removing its cause. This is axiomatic. The Fourth Noble Truth, the way to end suffering, once again, has nothing to do with metaphysics but depends on behaving in specific ways. And once again behaviour is open to testing. Buddhism dispenses with the concept of a supreme being, as does science, and explains the origins and workings of the universe in terms of natural laws. All of this certainly exhibits a scientific spirit. Once again, the Buddha’s constant advice that we should not blindly believe but rather question, examine, inquire and rely on our own experience, has a definite scientific ring to it. In his famous Kalama Sutta the Buddha says;

‘Do not go by revelation or tradition, do not go by rumour or the sacred scriptures, do not go by hearsay or mere logic, do not go by a bias towards a notion or by another person’s seeming ability and do not go by the idea “He is our teacher.” But when you yourself know that a thing is good, that it is laudable, that it is praised by the wise and when practised and observed that it leads to happiness, then follow that thing.’ A.I,188

So we could say that although Buddhism is not entirely scientific, it certainly has a strong scientific overtone and is certainly more scientific than any other religion. It is significant that Albert Einstein, the greatest scientist of the 20th century, said of Buddhism:

‘The religion of the future will be a cosmic religion. It should transcend a personal God and avoid dogmas and theology. Covering both natural and spiritual, it should be based on a religious sense arising from the experience of all things, natural and spiritual and a meaningful unity. Buddhism answers this description. If there is any religion that would cope with modern scientific needs, it would be Buddhism.’

* * * * * * * *

வினா: சில சமயம் புத்தரின் போதனைகள் ‘நடு வழி’ என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்படியென்றால் என்ன?

விடை: புத்தர் அவரது அஷ்டாங்க மார்க்கத்திற்கு, ‘மஜ்ஹிம பதி பாடா’ என்று வேறு ஒரு பெயரும் தந்தார். இதற்குப் பொருள் ‘நடு வழி’ என்பது தான். இது ஒரு முக்கியமான பெயர். இதிலிருந்து தெரியவருவது பௌத்தப் பாதையைத் தொடர்ந்தால் மட்டும் போதாது அதை ஒரு குறிப்பிட்ட விதத்திலும் தொடர வேண்டும் என்பதே. மக்கள் சமய விதிகளையும் வழிகளையும் அளவு கடந்த பற்றோடு தொடர்ந்து, சமய வெறியர்களாக மாறக்கூடும். பௌத்தத்தில் விதிகளையும் பயிற்சியினையும் சமமாயிருந்து விவேகத்துடன் தொடர வேண்டும். மேலும் அடாவடித் தனத்தையும் அதி தீவிரத்தையும் தவிர்க்க வேண்டும். (ஒருபுறம் புலன் ஆசைகளை வேண்டும்போதெல்லாம் திருப்தி செய்து கொள்வது. மறுபுறம் உடலையும் உள்ளத்தையும் பெரும் இம்சைப் படுத்துவது. சான்றாக நாட்கணக்கில் உண்ணாவிரதம் இருப்பது. இவ்விரண்டுமே ஆன்மீக வளர்ச்சிக்கு உதவாது). அக்கால யவனர்கள் ‘எல்லாவற்றிலும் நடுத்தரமாக நடந்து கொள்’ என்று கூறுவார்களாம். பௌத்தர்கள் இக்கூற்றினை முழுமையாக ஏற்றுக் கொள்வார்கள்.

QUESTION: I have sometimes heard the Buddha’s teachings called the Middle Way. What does this term mean?

ANSWER: The Buddha gave his Noble Eightfold Path an alternative name, majjhima patipada, which means ‘the Middle Way. This is a very important name because it suggests to us that it is not enough to just follow the Path, but that we have to follow it in a particular way. People can become very rigid about religious rules and practices and end up becoming real fanatics. In Buddhism, the rules have to be followed and the practice done in a balanced and reasonable way that avoids extremism and excess. The ancient Romans used to say ‘Moderation in all things’ and Buddhists would agree with this completely.

* * * * * * * *

வினா: பௌத்தம் இந்து மதத்தின் ஒரு பிரதிமை என்று படித்திருக்கின்றேன். இது உண்மையா?

விடை: இல்லை. அப்படி இல்லை. பௌத்தமும் இந்து மதமும் பல நன்னெறிக் கருத்துகளைப் பகிர்ந்து கொள்கின்றன. மேலும் ‘கம்மா’, ‘சமாதி’, ‘நிர்வாணா’ போன்ற சில சமயச் சொற்களையும் பகிர்ந்து கொள்கின்றன. இரண்டு மதங்களுமே இந்தியாவில் உருவாகின. இதனால் சிலர் இரண்டும் ஒன்றே என்றும், ஒரே மாதிரி உள்ளதாகவும் நினைக்கின்றனர். மேலோட்டமாக உள்ள ஒற்றுமைகளுக்கு அப்பாற் சென்றால் இவ்விரண்டு மதங்களும் முற்றாக வேறுபட்டவை என்பது தெளிவாகத் தெரியும். உதாரணத்திற்கு, இந்துக்கள் ஒப்புயர்விலாத கடவுள் இருப்பதாக நம்புகிறார்கள். பௌத்தர்கள் அப்படி நம்புவதில்லை. இந்து மத சமுதாயத் தத்துவத்தில் ஜாதி என்ற கருத்து முக்கிய இடம் பெருகிறது. பௌத்தம் இதனை உறுதியுடன் நிராகரிக்கிறது. சடங்கு செய்து தூய்மை பெறலாம் என்ற வழக்கம் இந்து மதத்தில் வேரூன்றியுள்ளது. பௌத்தத்தில் இதற்கு இடமே இல்லை. பௌத்த நூல்களில் அடிக்கடி புத்தர் பிராமணர்கள், அதாவது இந்து அர்ச்சகர்கள், சொல்லித் தருவதைக் குறை காண்கிறார். அவர்களும் புத்தரின் சில கருத்துக்களைக் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்கள். பௌத்தமும் இந்துமதமும் ஒன்றானால் இவ்வாறு இருந்திருக்காது.

QUESTION: I read that Buddhism is just a type of Hinduism. Is this true?

ANSWER: No, it is not. Buddhism and Hinduism share many ethical ideas, they use some common terminology like the words kamma, samadhi and nirvana, and they both originated in India. This has led some people to think that they are the same or very similar. But when we look beyond the superficial similarities we see that the two religions are distinctly different. For example, Hindus believe in a supreme god while Buddhists do not. One of the central teachings of Hindu social philosophy is the idea of caste, which Buddhism firmly rejects. Ritual purification is an important practice in Hinduism but it has no place in Buddhism. In the Buddhist scriptures, the Buddha is often portrayed as criticizing what the brahmins, the Hindu priests, taught and they were very critical of some of his ideas. This would not have happened if Buddhism and Hinduism were the same.

* * * * * * * *

வினா: ஆனால் புத்தர் கம்மா என்ற கருத்தினை இந்து மதத்திடமிருந்துதானே எடுத்துக்கொண்டார்?

விடை: இந்து மதமும் கம்மா (சமஸ்கிருதத்தில் கர்மா) என்ற கருத்தினையும் மறுபிறப்பு என்ற கருத்தினையும் சொல்லித்தருவது உண்மை தான். ஆனால் இந்தக் கோட்பாடுகளின் இந்து மத விளக்கமும் பௌத்தமத விளக்கமும் வேறுபடுகின்றன. உதாரணத்திற்கு, கம்மாவினால் நாம் தீர்மானிக்கப்பட்டுவிட்டதாக இந்து மதம் கூறுகிறது. கம்மா நம்மைப் பாதித்திருப்பதாக மட்டுமே பௌத்தம் கூறுகிறது (அதாவது இப்போது செய்யும் கம்மாவினால் (செய்கை) நம் நிலைமையை மாற்றிக் கொள்ள முடியும் என்று பௌத்தம் கூறுகிறது). நித்திய பிராணி அல்லது ஆத்மா என்ற ஒன்று ஒரு பிறவியிலிருந்து அடுத்த பிறவிக்குச் செல்வதாக இந்து மதம் கூறுகிறது. அப்படியான ஆத்மாவை பௌத்தம் நிராகரிக்கிறது. மாறாக எந்நேரமும் மாறிக் கொண்டிருக்கும் மனச் சக்தியின் ஓட்டம் தான் மறுபிறவி எடுப்பதாகப் பௌத்தம் கூறுகிறது. ‘கம்மா’, மறுபிறவி’ என்னும் கோட்பாடுகளில் இவை சில வித்தியாசங்கள் தான். இது போலப் பல வித்தியாசங்கள் உள்ளன. மேலும் அப்படியே இந்தக் கோட்பாடுகளில் வித்தியாசமே இல்லையென்றாலும், புத்தர் தானாக யோசனை செய்யாமல் இந்து மதத்திலிருந்துதான் இவற்றை எடுத்தார் என்று கூற முடியாது.

சில சமயம் இரு மனிதர்கள் தனியாகச் செயற்பட்டு ஒரே கண்டுபிடிப்பைக் காண முடியும். உயிரினங்கள் எவ்வாறு வளர்ந்து விரிவடைந்தன என்ற பரிணாமக் கருத்தினை எவ்வாறு உருவானது என்பதை ஒரு உதாரணமாகக் கூறலாம். 1858 ஆம் ஆண்டு சார்லஸ் டார்வின் அவரது புகழ் பெற்ற ‘தி ஓரிஜின் ஒஃப் ஸ்பீஷீஸ்’ என்ற புத்தகத்தை வெளியிடும் முன்னர், அல்ஃபர்டு ரஸ்ஸல் என்பவர் அதே கருத்தைத் தானாகவே கண்டு பிடித்ததாகத் தெரிந்து கொண்டார். அவர்கள் இருவரும் அந்தக் கருத்தினை ஒருவரிடமிருந்து மற்றவர் எடுத்துக்கொள்ளவில்லை. மாறாக ஒரே மாதிரியான பொருட்களையும், நிகழ்ச்சிகளையும் கவனித்து ஆராய்ந்ததில் இருவரும் அவைகளைப் பற்றி ஒரே முடிவிற்கு வந்தனர். அது போலக் ‘கம்மா’, மறுபிறவி’ என்னும் கோட்பாடுகளில் பௌத்த மதத்திற்கும் இந்து மதத்திற்கும் வேறுபாடுகளே இல்லையென்றாலும் (வேறுபாடுகள் இருக்கின்றன) ஒருவர் மற்றதிலிருந்து எடுத்துக் கொண்டதாகக் கூற முடியாது. உண்மை என்ன வெனில் தியானம் செய்து ஏற்பட்ட ஆழமான அறிவினால் இந்து முனிவர்களுக்குத் தோன்றிய ‘கம்மா’, ‘மறுபிறவி’ போன்ற முழுதும் தெளிவு பெறாத கருத்துக்களைப் புத்தர் பின் தெளிவாகவும் மிகச் சரியாகவும் விளக்கினார்.

QUESTION: But the Buddha did copy the idea of kamma from Hinduism didn’t he?

ANSWER: Hinduism does teach a doctrine of kamma and also reincarnation. However, its versions of both these teachings are very different from the Buddhist version. For example, Hinduism says we are determined by our kamma while Buddhism says our kamma only conditions us. According to Hinduism, an eternal soul or atman passes from one life to the next while Buddhism denies that there is such a soul, saying rather that it is a constantly changing stream of mental energy that is reborn. These are just some of the many differences between the two religions on kamma and rebirth. However, even if the Buddhist and Hindu teachings were identical this would not necessarily mean that the Buddha unthinkingly copied the ideas of others.

It sometimes happens that two people, quite independently of each other, make exactly the same discovery. A good example of this was the discovery of evolution. In 1858, just before he published his famous book The Origin of Species, Charles Darwin found that another man, Alfred Russell Wallace, had conceived the idea of evolution just as he had done. Darwin and Wallace had not copied each other’s ideas; rather, by studying the same phenomena they had come to the same conclusion about them. So even if Hindu and Buddhist ideas about kamma and rebirth were identical, which they are not, this would not necessarily be proof of copying. The truth is that through the insights they developed in meditation Hindu sages got vague ideas about kamma and rebirth which the Buddha later expounded more fully and more accurately

Sn 2.4 PTS: Sn 258-269Maha-Mangala Sutta: Blessingstranslated from the Pali by Narada Thera© 1994Alternate translations: Piyadassi | Soni | ThanissaroThis sutta also appears at Khp 5.

Thus have I heard.[1] On one occasion the Exalted One was dwelling at Anathapindika’s monastery, in Jeta’s Grove,[2] near Savatthi.[3] Now when the night was far spent, a certain deity whose surpassing splendour illuminated the entire Jeta Grove, came to the presence of the Exalted One and, drawing near, respectfully saluted him and stood at one side. Standing thus, he addressed the Exalted One in verse:”Many deities and men, yearning after good, have pondered on blessings.[4] Pray, tell me the greatest blessing!”

[The Buddha:]

“Not to associate with the foolish,[5] but to associate with the wise; and to honour those who are worthy of honour — this is the greatest blessing.

To reside in a suitable locality,[6] to have done meritorious actions in the past and to set oneself in the right course[7] — this is the greatest blessing.

To have much learning, to be skilful in handicraft,[8] well-trained in discipline,[9] and to be of good speech[10] — this is the greatest blessing.

To support mother and father, to cherish wife and children, and to be engaged in peaceful occupation — this is the greatest blessing.

To be generous in giving, to be righteous in conduct,[11] to help one’s relatives, and to be blameless in action — this is the greatest blessing.

To loathe more evil and abstain from it, to refrain from intoxicants,[12] and to be steadfast in virtue — this is the greatest blessing.

To be respectful,[13] humble, contented and grateful; and to listen to the Dhamma on due occasions[14] — this is the greatest blessing.

To be patient and obedient, to associate with monks and to have religious discussions on due occasions — this is the greatest blessing.

Self-restraint,[15] a holy and chaste life, the perception of the Noble Truths and the realisation of Nibbana — this is the greatest blessing.

A mind unruffled by the vagaries of fortune,[16] from sorrow freed, from defilements cleansed, from fear liberated[17] — this is the greatest blessing.

Those who thus abide, ever remain invincible, in happiness established. These are the greatest blessings.”[18]

Notes

(Derived mainly from the Commentaries.)

1.This Sutta appears in the Sutta-Nipata (v.258ff) and in the Khuddakapatha. See Maha-mangala Jataka (No. 453). For a detailed explanation see Life’s Highest Blessing by Dr. R.L. Soni, WHEEL No. 254/256.

2. Anathapindika, lit., ‘He who gives alms to the helpless’; his former name was Sudatta. After his conversion to Buddhism, he bought the grove belonging to the Prince Jeta and established a monastery which was subsequently named Jetavana. It was in this monastery that the Buddha observed most of his vassana periods (rainy seasons — the three months’ retreat beginning with the full moon of July).

Many are the discourses delivered and many are the incidents connected with the Buddha’s life that happened at Jetavana. It was here that the Buddha ministered to the sick monk neglected by his companions, advising them: “Whoever, monks, would wait upon me, let him wait upon the sick.”

It was here that the Buddha so poignantly taught the law of impermanence, by asking the bereaved young woman Kisagotami who brought her dead child, to fetch a grain of mustard seed from a home where there has been no bereavement.

3. Identified with modern Sahet-Mahet, near Balrampur.

4. According to the Commentary, Mangala means that which is conducive to happiness and prosperity.

5. This refers not only to the stupid and uncultured but also includes the wicked in thought, word and deed.

6. Any place where monks, nuns and lay devotees continually reside; where pious folk are bent on the performance of the ten meritorious deeds, and where the Dhamma exists as a living principle.

7. Making the right resolve for abandoning immorality for morality, faithlessness for faith and selfishness for generosity.

8. The harmless crafts of the householder by which no living being is injured and nothing unrighteous done; and the crafts of the homeless monk, such as stitching the robes, etc.

9. Vinaya means discipline in thought, word and deed. The commentary speaks of two kinds of discipline — that of the householder, which is abstinence from the ten immoral actions (akusala-kammapatha), and that of the monk which is the non-transgression of the offences enumerated in the Patimokkha (the code of the monk’s rules) or the ‘fourfold moral purity’ (catu-parisuddhi-sila).

10. Good speech that is opportune, truthful, friendly, profitable and spoken with thoughts of loving-kindness.

11. Righteous conduct is the observance of the ten good actions (Kuala-kammapatha) in thought, word and deed: freeing the mind of greed, ill-will and wrong views; avoiding speech that is untruthful, slanderous, abusive and frivolous; and the non- committal acts of killing, stealing and sexual misconduct.

12. Total abstinence from alcohol and intoxicating drugs.

13. Towards monks (and of course also to the clergy of other religions), teachers, parents, elders, superiors, etc.

14. For instance, when one is harassed by evil thoughts.

15. Self-restraint (tapo): the suppression of lusts and hates by the control of the senses; and the suppression of indolence by the rousing of energy.

16. Loka-dhamma, i.e., conditions which are necessarily connected with life in this world; there are primarily eight of them: gain and loss, honour and dishonour, praise and blame, pain and joy.

17. Each of these three expressions refers to the mind of the arahant: Asoka: sorrowless; viraja: stainless, i.e., free from lust, hatred and ignorance; khema: security from the bonds of sense desires (kama), repeated existence (bhava), false views (ditthi) and ignorance (avijja).18.

The above-mentioned thirty-eight blessings.©1985 Buddhist Publication Society. You may copy, reformat, reprint, republish and redistribute this work in any medium whatsoever, provided that:

(1) you only make such copies, etc. available free of charge and, in the case of reprinting, only in quantities of no more than 50 copies;

(2) you clearly indicate that any derivatives of this work (including translations) are derived from this source document; and

(3) you include the full text of this license in any copies or derivatives of this work. Otherwise, all rights reserved. Documents linked from this page may be subject to other restrictions. From Everyman’s Ethics: Four Discourses by the Buddha (WH 14), translated by Narada Thera (Kandy: Buddhist Publication Society, 1985). Copyright © 1985 Buddhist Publication Society. Used with permission. Last revised for Access to Insight on 30 November 2013. How to cite this document (a suggested style): “Maha-Mangala Sutta: Blessings” (Sn 2.4), translated from the Pali by Narada Thera. Access to Insight (BCBS Edition), 30 November 2013.  http://www.accesstoinsight.org/tipitaka/kn/snp/snp.2.04.nara.html .Help | Site map | About | Contact | Terms of useAccess to Insight is owned and managed by the Barre Center for Buddhist Studies

https://www.accesstoinsight.org/tipitaka/kn/snp/snp.2.04.nara.html

பௌத்தமும் தமிழும்

மயிலை, சீனி. வேங்கடசாமி

ஒரு காலத்தில் பௌத்தமதம் தமிழ் நாட்டில் சிறப்புற்றிருந்தது. ஏறக்குறைய கி. மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் கி. பி. பத்தாம் நூற்றாண்டு வரையில் இந்த மதம் தமிழ் நாட்டில் உயர் நிலை பெற்றிருந்தது. பிற்காலத்தில், பதின்மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர், இந்த மதம் மறையத் தொடங்கி, இப்போது முழுவதும் தமிழ் நாட்டில் மறைந்துவிட்டது. இப்போதைய தமிழர், ஒரு காலத்தில் பௌத்த மதம் தமிழகத்தில் செல்வாக்குப் பெற்றிருந்ததென்பதை முற்றும் மறந்துவிட்டனர்; அது இவர்களுக்குப் பழங்கதையாய், கனவாய் மறைந்துவிட்டது.

எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னர், பல நூற்றாண்டாகத் தமிழகத்தில் பரவியிருந்த பௌத்த மதம், தமிழ் மொழியிலும் தன் செல்வாக்கைச் செலுத்தியிருக்க வேண்டுமன்றோ? பௌத்தர் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டுகள், அல்லது உதவிகள் யாவை? பௌத்தர் தமிழ் மொழியில் இயற்றிய நூல்கள் எவை? அவற்றின் வரலாறு என்ன? இவற்றை அறியக் கருதி யாம் செய்த ஆராய்ச்சியின் பயனே இந்நூலாகும். பௌத்தர் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டினை மட்டும் ஆராய்வதே எமது முதல் நோக்கமாயிருந்தது. பின்னர், இந்த ஆராய்ச்சி, பௌத்தம் தமிழ் நாட்டில் வந்ததும், வளர்ந்ததும், மறைந்ததுமான வரலாறுகளையும் சுருக்கமாக எழுதும்படி செய்துவிட்டது. பௌத்தரால் தமிழருக்குண்டான நன்மையை ஆராய்வதே இந்நூலின் முதல் நோக்கமாகையாலும், இது தமிழ் மொழி வரலாற்றின் ஒரு பகுதியாகையாலும், இந்நூலுக்குப் பௌத்தமும் தமிழும் என்னும் பெயர் சூட்டப்பட்டது.

வேறு வேலைகளுக்கிடையே, ஓய்வு நேரத்தில்மட்டும் இதனை ஆராய்ச்சி செய்ய வேண்டியிருந்தபடியினாலும், பல இன்னல்களுக்கிடையே இதனை எழுதவேண்டியிருந்த படியினாலும் யாம் கருதிய அளவு இந்நூல் ஆக்கப்படவில்லை. ஆயினும், எமது ஆற்றலுக்கு இயன்ற வரையில் முயன்று, கிடைக்கக்கூடிய ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு இந்நூல் இயற்றப்பெற்றுள்ளது. தமிழ் நாட்டுப் பௌத்த மத வரலாற்றினைக் கூறுவதும் பௌத்தர் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டுகளை ஒருங்காராய்ந்து விளக்குவதுமான நூல், தமிழ் மொழியில், யாம் அறிந்தவரையில், இதுவே முதலாவதாகும். இதுவரையில் மறைந்து கிடந்தனவும் மாய்ந்து போகுந்தருவாயிலிருந்தனவுமான வரலாறுகளும் செய்திகளும் இவ்வாராய்ச்சியால் உயிர்ப்பிக்கப்பட்டு வெளிப் படுத்தப்படுகின்றன.

இந்த ஆராய்ச்சியைத் தொடங்கிய பின்னர், பாளி என்னும் மாகதி மொழியில் உள்ள பௌத்த நூல்களை நேரே படித்தறிந்தாலன்றித் தமிழ் நாட்டுப் பௌத்த மத வரலாற்றின் ஆராய்ச்சி முற்றுப்பெறாதென்பதை உணர்ந்தோம். ஏனென்றால், பௌத்தரால் போற்றப்படுகின்ற பாளிமொழி நூல்களில் சிலவற்றை இயற்றியவர்களும், பாளிமொழியில் உள்ள நூல்களுக்குச் சிறந்த உரைகளைப் பாளி மொழியில் இயற்றியவர்களும் தமிழ் நாட்டில் வாழ்ந்திருந்த தமிழப் பௌத்தர்களாவர். அன்றியும், தமிழ் நாட்டில் பௌத்தமதம் நிலைபெற்றிருந்த காலங்களில், பாளிமொழி தமிழ் நாட்டுப் பௌத்தர்களின் தெய்வ பாஷை யாக இருந்தது. இக்காரணங்களினால், தமிழ்நாட்டுப் பௌத்தமத ஆராய்ச்சிக்குப் பாளி மொழியறிவு பெரிதும் வேண்டற்பாலது. பாளிமொழியறியாத குறை எமக்குண்டு. ஆயினும், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள பாளிமொழி நூல்களினால் இக்குறை ஒருவாறு நீக்கப்பட்டது. சென்னைப் பிரம்பூரில் உள்ள மகாபோதி ஆஸ்ரமத்தைச் சேர்ந்த ஸ்ரீ சத்தர்மாசாரிய சோமாநந்த ஸ்தவிரர் அவர்கள், பாளிமொழி நூல்களில் சில பகுதிகளை மொழி பெயர்த்துச் சொன்னார்கள். இந்த உதவிக்காக எமது நன்றி அவருக்குரியதாகும். ஆயினும், நேர்முகமாகப் பாளி மொழியை அறிந்திருக்கவேண்டுவது தமிழ் நாட்டுப் பௌத்தமத ஆராய்ச்சிக்கு இன்றியமையாததாகும்.

ஆராய்ச்சி செய்வோர் உவத்தல் வெறுத்தல் இன்றி, சான்றுகள் காட்டும் ஆராய்ச்சி முடிவுகளை உள்ளது உள்ளவாறு கூறுதல்வேண்டும்; தமது கொள்கைக்கு முரண்பட்டதாக இருப்பினும், உண்மையையே நடு நின்று கூறுதல் வேண்டும், தமது கொள்கைக்கு முரண்பட்டதாகத் தோன்றுவதாலோ, அல்லது உண்மையைக் கூறினால் உலகம் சீறுமென்னும் அச்சத்தாலோ, உண்மை கூறாமல் விடுவோர் தமக்கும் நாட்டுக்கும் தீங்கு செய்தோராவர். இந்தக் கொள்கையை மனத்திற் கொண்டுதான் யாம் எமது ஆராய்ச்சியிற் கண்ட முடிபுகளை இந்நூலுள் கூறியுள்ளோம். வாசகர் இந்நூலுள் தம் கொள்கைக்கு மாறுபட்ட கருத்தைக் கண்டால், அதன்பொருட்டு எம்மீது சீற்றங்கொள்ளாமல், அது எம் ஆராய்ச்சி காட்டிய முடிபு எனக்கொள்வாராக, எந்த மதத்தையாவது குறைகூறவேண்டுமென்பதோ, அல்லது போற்றவேண்டுமென்பதோ எமது கருத்தன்று. உண்மை யுணரவேண்டும் என்பதொன்றே எம் கருத்து. இந்நூல் எழுதப்பட்டதும் அக்கருத்துடையார்க்கே.

இந்நூலுள் ஒரோவிடங்களில் சில செய்திகள் மீண்டும் கூறப்படும். அவற்றைக் கூறியது கூறல் என்னும் குற்றமாகக் கொள்ளாமல், இது ஆராய்ச்சி நூலாதலின், தௌ¤வு பற்றி அநுவாதமாக அவ்வாறு கூறப்பட்டதெனக் கொள்க. இந்நூலினைத் தமிழுலகம் ஏற்றுக்கொண்டு, இதுபோன்ற தமிழ்த்தொண்டினை மேன்மேலும் இயற்றப் பெரிதும் ஊக்குவிக்கும் எனப் பெரிதும் நம்புகின்றோம்.

https://zenodo.org/record/4450414

About editor 3043 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply