ஆப்கானிஸ்தான் தாலிபன்களின் ஷரியா சட்டம் எப்படியிருக்கும்? அது பெண்களை எவ்வாறு பாதிக்கும்?

ஆப்கானிஸ்தான் தாலிபன்களின் ஷரியா சட்டம் எப்படியிருக்கும்? அது பெண்களை எவ்வாறு பாதிக்கும்?

19 ஆகஸ்ட் 2021

பெண் குழந்தை

ஆப்கானிஸ்தானை இஸ்லாமின் சட்ட நடைமுறையான ஷரியா சட்டத்தின்படி ஆட்சி செய்வோம் என தாலிபன் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கிறது?

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை ஆக்கிரமித்தவுடன் வழங்கிய முதல் செய்தியாளர் சந்திப்பில், தாலிபனின் செய்தி தொடர்பாளர், ஊடகம் மற்றும் பெண்களின் உரிமைகள் “இஸ்லாமிய சட்டத்திற்கு உட்பட்டு” மதிக்கப்படும் என தெரிவித்தார். இருப்பினும் தாலிபன் அமைப்பு இதுவரை எந்தவிதமான நடைமுறைகள் பின்படுத்தப்படும் என தெளிவாக கூறவில்லை.

நோபல் பரிசு பெற்ற மலாலா யூசஃப்சாய், பாகிஸ்தானில் பெண்கள் கல்வி குறித்து பேசியதற்காக 15 வயதில் தாலிபன்களால் சுடப்பட்டார். தாலிபன்களின் ஷரியா சட்டம் ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பிற்கு பேராபத்து என்று மலாலா தெரிவித்துள்ளார்.

“ஆப்கானிஸ்தானில் உள்ள பெண் செயற்பாட்டாளர் உட்பட சில செயற்பாட்டாளர்களிடம் நான் பேச வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்து அவர்கள் மிகுந்த கவலையடைந்துள்ளதாக தெரிவித்தனர்” என பிபிசியிடம் பேசிய மலாலா தெரிவித்தார்.

“பலரும் 1996-2001 காலக்கட்டங்களில் நடந்தவற்றை நினைவில் வைத்து தங்களின் பாதுகாப்பு, உரிமை, பள்ளிக்கு செல்வது ஆகியவை குறித்து கவலை கொள்கின்றனர்.” என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த முறை தாலிபன்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது பெண்கள் பணிபுரிய அனுமதிக்கப்படவில்லை. பள்ளிக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. எட்டு வயதிலிருந்து பெண்கள் புர்கா அணிய வேண்டும். மேலும் ஏதேனும் ஆண் குடும்ப உறுப்பினரின் துணையுடனேயே பெண்கள் வெளியே வரவேண்டும். இதை மீறும் பெண்களுக்கு பொதுவெளியில் கசையடி வழங்கப்படும்.

ஷரியா என்றால் என்ன?

ஷரியா சட்டம் என்பது இல்லாமின் சட்ட அமைப்பு. ஷரியா என்பது குரான் மற்றும் இஸ்லாமிய அறிஞர்களால் வகுக்கப்பட்ட விதிகளான ஃபத்வா ஆகிய இரண்டிலிருந்தும் எடுக்கப்பட்டது.

ஷரியாவின் அர்த்தம் “தெளிவான, தண்ணீருக்கான நன்கு பயன்படுத்தப்பட்ட பாதை”.

பெண்கள்

ஷரியா சட்டம் என்பது அனைத்து முஸ்லிம்களும் நோன்பு மற்றும் தானம் ஆகியவை உட்பட எப்படி வாழ வேண்டும் என்பதை குறிக்கும் விதி.

கடவுளின் விருப்பத்தின்படி தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் எவ்வாறு வழிநடத்த வேண்டும் என்பதை முஸ்லிம்கள் புரிந்துகொள்ள இது உதவும்.

நடைமுறையில் இதன் அர்த்தம் என்ன?

ஓர் இஸ்லாமியருக்கான தினசரி வாழ்வின் ஒவ்வொரு அம்சம் குறித்தும் இதில் சொல்லப்பட்டிருக்கும்.

எடுத்துக்காட்டாக ஓர் இஸ்லாமியரை பணி முடிந்த பின் சக பணியாளர் ஒருவர் பப்பிற்கு அழைத்தால் அவர் ஷரிய அறிஞரை தொடர்பு கொண்டு அது மதத்தின் சட்ட வரம்பிற்குள் வருகிறதா என்று தெரிந்துகொள்ளலாம்.

மேலும் இஸ்லாமியரின் அன்றாட வாழ்க்கையில் குடும்பச் சட்டம், பணம், வர்த்தகம் ஆகியவை தொடர்பாகவும் ஷரியாவின் வழிகாட்டுதலை காணலாம்.

இதில் உள்ள கடுமையான தண்டனைகள் என்ன?

ஷரியா சட்டம் குற்றங்களை இரு வகையாக பிரிக்கிறது: `ஹட்` குற்றங்கள். அதாவது தீவிரமான குற்றங்கள். இதற்கு தண்டனைகள் ஏற்கனவே வகுக்கப்பட்டிருக்கும். இரண்டாவது `தசிர்` குற்றங்கள். அதாவது நீதிபதிக்கு தண்டனை வழங்க உரிமை உண்டு.

`ஹட்` குற்றங்களில் திருட்டு, திருமண உறவுக்கு வெளியே தொடர்பு வைத்திருப்பது ஆகியவை அடங்கும். திருடும் குற்றத்திற்கு திருடியவரின் கையை வெட்டும் தண்டனை வழங்கப்படலாம். திருமணத்திற்கு வெளியே உறவு வைத்திருக்கும் குற்றத்தில் கல்லால் அடித்து கொலை செய்யப்படும் தண்டனை வழங்கப்படலாம்.

இருப்பினும் இம்மாதிரியான ஹட் தண்டனைகளை வழங்குவதில் பல பாதுகாப்புகள் உள்ளன என்றும், ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற சுமை உள்ளது என்றும் பல இஸ்லாமிய அமைப்புகள் தெரிவிக்கின்றன.

கல்லால் அடித்து கொலை செய்வதற்கு எதிராக ஐநா, “இது கொடூரம், மனித தன்மையற்ற தண்டனை எனவே இது தெளிவாக தடை செய்யப்பட வேண்டும்,”என்று தெரிவித்துள்ளது.

இந்தோனீசியாவில் தன் ஆண் நண்பருடன் இருந்த குற்றத்தில் சவுக்கு அடி வாங்கும் பெண்
படக்குறிப்பு,இந்தோனீசியாவில் தன் ஆண் நண்பருடன் இருந்த குற்றத்தில் சவுக்கு அடி வாங்கும் பெண்

ஹட் குற்றங்களுக்கு எல்லா முஸ்லிம் நாடுகளும் இம்மாதிரியான தண்டனைகளை வழங்குவதில்லை. இம்மாதிரியான குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்குவதில் முஸ்லிம்களின் நிலைப்பாடுகள் பெரிதும் மாறுப்படுகின்றன என கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன.

இஸ்லாத்திலிருந்து மதம் மாறினால் முஸ்லிமகள் தண்டிக்கப்படுவார்களா?

சமயத் துறப்பு என்பது இஸ்லாமிய உலகத்தில் பெரிதும் சர்ச்சையான ஒன்று. பல அறிஞர்கள் அது மரண தண்டனை வழங்கப்பட வேண்டிய குற்றம் என நம்புவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் குறைந்த எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் குறிப்பாக மேற்கத்திய உலகத்துடன் தொடர்பில் இருப்பவர்கள், தண்டனை என்பது கடவுளின் கையில் விட்டுவிட வேண்டும் என்பதே நவீன உலகத்தின் யதார்த்தம். சமய துறப்பால் இஸ்லாமிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று தெரிவிக்கின்றனர்.

மதத்தில் எந்த நிர்பந்தமும் இல்லை என்று குரானிலும் கூறப்பட்டுள்ளது.

விதிகள் எவ்வாறு வகுக்கப்படுகின்றன?
Afghanistan war

எந்த ஒரு சட்ட அமைப்பை போலவே ஷரியா சட்டமும் புரிந்து கொள்ள கடினமானதுதான், இதை பின்பற்றுவது அந்த நிபுணர்களின் தரம் மற்றும் பயிற்சியை சார்ந்தது.

இஸ்லாமிய நீதிபதிகள் வழிகாட்டுதல்களையும் விதிமுறைகளையும் வழங்குவர். அதிகாரப்பூர்வ சட்ட விதி என்று கருதப்படும் வழிமுறை ஃபத்வா என்று அழைக்கப்படும்.

ஷரியா சட்டத்துக்கு ஐந்து வகையான போதனைகள் உள்ளன.

ஹன்பலி, மாலிகி, ஷஃபி மற்றும் ஹனாஃபி என நான்கு வகையான சன்னி போதனைகளும், ஷியா ஜஃபாரி என ஒரு ஷியா போதனையும் உள்ளன.

எந்த ஷரியா சட்டத்திலிருந்து இந்த போதனைகளை விளக்குகிறார்கள் என்பதில் ஐந்தும் வேறுபடுகின்றன.

பிற செய்திகள்:

About editor 3045 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply