விண்வெளியில் மாறிச் சுற்றும் வெள்ளிக் கிரகம்

விண்வெளியில் மாறிச் சுற்றும் வெள்ளிக் கிரகம்

குரு அரவிந்தன்

வீனஸ் என்று அழைக்கப்படுகின்ற வெள்ளிக்கிரகத்தைப் பற்றி இம்முறை அவசரமாகக் குறிப்பிட வேண்டிய காரணம், அந்தக் கிரகத்தை நோக்கி அமெரிக்-காவின் நாசா நிறுவனம் தனது ஆய்வுகளை விரைவாக மேற்கொள்ள இருக்கின்றது என்பதேயாகும். விண்வெளி ஆய்வாளர்கள் எமது சூரிய குடும்பத்தில் இருக்கும் கிரகங்களில் உயிரினங்கள் இருக்கின்றனவா என்பதை முக்கியமாகத் தேடி வருகி-றார்கள். எங்கள்பூமியை போலவே இருக்கும் ஏனைய கிரகங்களில் உயிரினங்கள் உள்ளனவா? முன்பு வாழ்ந்ததற்கான ஏதாவதுஅடையாளங்கள் அங்கு இருக்கின்றனவா? (A biosignature is anysubstancethat providesscientific evidence of past or present life)என்பதை எல்லாம் ஆராய்ந்து வருகிறார்கள். மனிதர் அங்கு செல்வதற்கு முன், ரோபோக்களை அனுப்பி முக்கியமாக எமக்குஅருகே உள்ள செவ்வாய்க்கிரகம், வெள்ளிகிரகம் போன்றவற்றில் இந்த ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறார்கள். எமக்குஅருகே உள்ள செவ்வாய்க்கிரகத்தில் ஹெலிக்கொப்டரைப்பறக்கவிட்டுச் சாதனை படைத்த நாசா நிறுவனத்தின் பார்வைமீண்டும் வெள்ளிக்கிரகத்தின் பக்கம்திரும்பி இருப்பதற்குக்காரணம், விண்வெளியில் சாதனைகள் படைக்கத் தொடங்கியிருக்கும்சீனா ஏனைய கிரகங்களில் சொந்தம் கொண்டாடுவதற்கு முன்பாகத் தாங்கள் அங்கே ஆதிக்கம் செலுத்த வேண்டும்என்பதேயாகும். சூரிய மண்டலத்தில் உள்ள ஏனைய கிரகங்களைவிட இந்த வெள்ளி என்று சொல்லப்படுகின்ற வெள்ளிக்கிரகம்மாறுபட்டுச் சுற்றிக் கொண்டு இருப்பதும் (சநவசழபசயனந னசைநஉவழைn)பூமியில் இருக்கும் எமக்கு ஒரு அதிசயமே!இரவு வானத்தில் சந்திரனுக்கு அடுத்ததாகப் பெரிதாகத் தெரிவதுவெள்ளிக்கிரகம்தான். இன்னுமொரு அதிசயம் என்னவென்றால்வெள்ளிக்கிரகத்தின் ஒரு வருடத்தை விட அதன் ஒருநாள் அதிகமானது என்று சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள். ஆனால்உண்மை அதுதான். தமிழில் வெள்ளி, விடிவெள்ளி, சுக்கிரன் என்றும் வடமொழியில் சுக்கிரா என்றும் இதை அழைப்பர். ஒழுங்குமுறைப்படி பார்த்தால், சூரியனில் இருந்து முதலாவதாகப் புதன்கிரகமும், இரண்டாவதாக இந்த வெள்ளிக்கிரகமும், மூன்றாவதாக எங்கள்பூமியும், நான்காவதாகச் செவ்வாய்க்கிரகமும் இருக்கின்றன. அதாவது எங்கள்பூமியின் ஒரு பக்கத்தில் வெள்ளியும்,மறுபக்கத்தில் செவ்வாயும் இருக்கின்றன. இந்தக் கிரகங்களின் பெயர்களைத்தான் நாங்கள் வாரநாட்களுக்கும் சூட்டியிருக்கின்றோம். ரோமானிய பெண் கடவுளின் பெயர்தான்வீனஸ் என்பதாகும்.புகழ் பெற்ற ஒற்றைக்கை உடைந்த வீனஸ்சிலை உங்களுக்குஞாபகம் இருக்கும். மாணவப்பருவத்தில் பாடசாலையில் வீனஸ்படம் போட்ட பென்சில் பாவித்தபோது அந்தப் படத்தைப் பார்த்திருக்கிறோம். பாரிஸ் நகருக்குச் சென்ற போது புகழ் பெற்றஇந்த வீனஸ்சிலையை காட்சியகத்தில் நேரில் பார்க்க எனக்குச்சந்தர்ப்பம்கிடைத்தது. இளம் பெண்கள் தாங்களும்வீனஸ்போன்ற பாவனையோடு பக்கத்தில்நின்று புகைப்படம் எடுப்பதையும் காணமுடிந்தது. கிரகங்களில் பெண்ணின் பெயரைக் கொண்டது இந்த வீனஸ்கிரகம் ஒன்றுதான். ஆதவன் மறையும் நேரத்தில் வெள்ளி எமது கண் பார்வைக்குப்பிரகாசமாய் தெரிவதால்‘ஈவினிங்ஸ்டார்’ என்ற பெயரும், அதிகாலையிலும் தெரிவதால்‘விடிவெள்ளி’ என்ற பெயரும் அதற்கு உண்டு. தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காலத்தில், அதாவது சங்ககாலத்திலிருந்து கடலோடிகளுக்கு வழிகாட்டியாகவும், விவசாயிகளுக்கு நேரம்காட்டியாகவும் இந்த வெள்ளிக்கிரகம் இருந்திருக்கின்றது.பூமியோடு ஒப்பிடும் போது வெள்ளிக்கிரகம் கொஞ்சம்சிறிய-தாகவே இருக்கின்றது. பூமியின்விட்டம் 12,756 கிலோ மீட்டர்.வீனஸின்விட்டம் 12,104 கிலோ மீட்டர். சூரியனுக்கு அருகேஇருக்கும் புதன்கிரகத்தைவிட இரண்டாவதாக இருக்கும் வெள்ளிக்கிரகத்தின் வெப்பநிலை அதிகமானது. இதற்குக் காரணம்கரியமிலவாயு அதிகமாக இங்கே இருப்பதுதான் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். சுமார் 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன் உருவான வெள்ளிக்கிரகத்தின் தனித்துவம் என்னவென்றால், எல்லாக்கிரகங்களும் மேற்கில் இருந்து கிழக்காகச்சுற்றி வரும்போது, வெள்ளி மட்டும்கிழக்கில் இருந்து மேற்குநோக்கிச் சுற்றுகின்றது. இதைப்போலவே யூரேனஸ்கிரகமும் மாறுபட்டுச் சுற்றுகின்றது. இதனால் இந்த இரண்டு கிரகங்களிலும்எல்லாமே மாறுபட்டதாக இருக்கின்றன. அதாவது இந்தக்கிரகங்களில்நின்றால் மேற்கே சூரிய உதயத்தையும், கிழக்கே சூரியஅஸ்தமனத்தையும் பார்க்க முடியும். எதிர்பாராமல் ஏதாவது நடப்பதாக இருந்தால் ‘சூரியன் மேற்கேதான் உதிக்க வேண்டும்’ என்றுஇங்கே வீறாப்புடன்சிலர் சவால்விடுவது போல, அங்கேவெள்ளிகிரகத்தில் வைத்து நாம் சவால்விடமுடியாது.சூரியக்குடும்பத்தில் உள்ள எல்லாக்கிரகங்களும்சூரியன் சுற்றும்திசையிலேயே சுற்றி வருகின்றன. வெள்ளிக்கிரகம் ஏனையகிரகங்களைப் போல, சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றிவராமல், வட்டச்சுற்றுப் பாதையில் 35.02 கிலோ மீட்டர் வேகத்தில்சுற்றுகின்றது. ஒருமுறை சூரியனைச் சுற்றிவர இது 224.7 பூமிநாட்கள் எடுக்கின்றது. சூரியனுக்கு அருகே வரும் போது,107,477,000 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்றது. சுமார் 3,200கிலோ மீட்டர் சுற்றளவைக் கொண்ட வெள்ளிக்கிரகம், பூமியைப்போல் அல்லாது இது தன்னைத் தானே ஒரு முறை சுற்றிவருவதற்கு 243 பூமிநாட்கள் எடுக்கின்றது. அதாவது பூமியின்இரவு பகல் போல இங்கே 121 நாட்கள் தொடர்ந்து பகலாகவும்,122 நாட்கள் தொடர்ந்து இரவாகவும் இருக்கும். பூமிக்குச் சந்திரன்போல, இந்த வெள்ளிக்கிரகத்திற்குத் துணைக் கோள்கள் எதுவும்கிடையாது.சூரியக்குடும்பத்தில் வெள்ளி 6வது பெரிய கிரகமாக இருக்கின்றது. இதன்நிலப்பரப்பு தூசி படிந்ததாகக் காணப்பட்டாலும்,இதன் மேற்பரப்பு பல மலைகள், எரிமலைகள், பள்ளத்தாக்குகளைக் கொண்டது. அடர்த்தியான மேகங்கள் தடை செய்தாலும்,இங்கே உயரமான மலைத் தொடர்கள் (யுமயெ ஆழவெநளஇ னுயரெஆழவெநளஇ குசநலதய ஆழவெநளஇ யனெ ஆயஒறநடடஆழவெநள.) இருப்பதை 1967ம்ஆண்டு கண்டறிந்தனர். 1978ம் ஆண்டு அனுப்ப்பட்ட பயனியர்வீனஸ் -1 என்ற விண்கலம் இதை உறுதி செய்தது. இந்த மலைகளில் மக்ஸ்வெல் மலை (ஆயஒறநடட ஆழவெநள) 36,000 அடி உயரமானது.சூரிய குடும்பத்தில் இரண்டாவதாக இருக்கும் இந்த வெள்ளிக்கிரகம்பூமியில் இருந்து 237.49 மில்லியன்கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. விண்கலங்கள்பூமியில் இருந்து செல்வதற்குச்சுமார் நான்கு மாதங்கள் எடுக்கின்றன. சூரியனில் இருந்து சூரியவெளிச்சம் இதற்குக்கிடைக்க 6 நிமிடங்கள் எடுக்கின்றன. பூமிக்விண்வெளியில்மாறிச் சுற்றும்வெள்ளிக்கிரகம்- குரு அரவிந்தன்வீ
குச்சூரிய வெளிச்சம்கிடைக்க 8 நிமிடங்களும், 20 விநாடிகளும்எடுக்கின்றன. இதுவரை நடந்த ஆய்வுகளின்படி இந்தக்கிரகத்தின் வளிமண்டல அழுத்தம்பூமியைவிட 92 மடங்கு அதிகமான-தாகும். அதாவது வெள்ளியின் தரையில்நின்றால் ஆழ்கடலில்நீந்தும்போது உள்ள அழுத்தம் போல உணரமுடியும். பெருங்கடல்கள் இந்தக்கிரகத்தில் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.நீராவி இல்லாத கனமான வளிமண்டலத்தால் இது சூழப்பட்டிருக்கின்றது. மேகங்கள் கந்தக அமிலம் கலந்தவையாகக் காணப்படுகின்றன. இங்குள்ள மேகங்களில் காணப்படும் சல்பூரிக் அமிலம் மூடுபனிகளை உருவாக்கும்திறன் கொண்டது. அதே சமயம்இங்கு பெய்யும் அமிலமழை காடுகள் போன்ற இயற்கை சூழல்களுக்குப் பாதகமாக இருக்கின்றது. சூரிய மண்டல கிரகங்களில்அதிக வெப்பமான கிரகம் இதுதான். இதன்நிலப்பரப்பில் உலோகப் பொருட்களே உருக்ககூடிய 482 டிகிரி வெப்பநிலை காணப்படுவதாலும், அழுத்தம் அதிகமாக இருப்பதாலும் தற்போது மனிதவாழ்க்கைக்கு இது ஏற்றதாக இருக்காது என்றே எண்ணத் தோன்றுகிறது. ஆனாலும்இ இனி வருங்காலங்களில் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி மூலம் இதற்கும் ஒரு வழி கண்டு பிடிக்கப்படலாம்.செவ்வாய்க்கிரகத்தைவிட வெள்ளிதான் எமக்கு அருகே இருக்கின்றது. பூமியில் இருந்து நேரடியாக ஆய்வுகள் செய்வதற்குஇங்குள்ள அடர்த்தியான மேகக்கூட்டங்கள் தடையாக இருப்பதால், வெள்ளிப் பற்றி அறிந்து கொள்வதற்கு பூமியில் இருந்துஅனுப்பப்பட்ட விண்கலங்களையும், ரோபோக்களையும் நம்பியிருக்க வேண்டியுள்ளது. 1961ம் ஆண்டு தொடக்கம் 1984ம் ஆண்டுவரை பல விண்கலன்களும், ரோபோக்களும் வெள்ளி நோக்கிசோவியட்யூனியனால் (ரஷ்யா) அனுப்பப்பட்டன. அங்குள்ள காலநிலை காரணமாக அவற்றால் அதிக நேரம் தகவல் சேகரிக்கமுடியவில்லை. 1961ம் ஆண்டு வெள்ளி நோக்கி முதலாவதாகஅனுப்பப்பட்ட வெனேரா-1 மற்றும் வெனேரா-2 ஆகியனவற்றின்தொடர்பு பாதி வழியிலேயே துண்டிக்கப்பட்டுவிட்டன. மார்ச்மாதம் 1966ம் ஆண்டு வெனேரா-3இவீனஸின் சுற்றுப்பாதைக்குள்சென்று தகவல் அனுப்பினாலும், அதன்பின் தரை இறங்கும்போதுவீனஸ் தரையில் மோதிக்கொண்டது. 1970ம் ஆண்டு டிசம்பர்மாதம் வெனேரா-7 வீனஸில் பாதுகாப்பாகத் தரை இறங்கியது.1975ம் ஆண்டு யூன் மாதம் வெனேரா-9 வெள்ளியில் இருந்துதகவல் அனுப்பியது. 1981ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் வெனேரா-13 வெள்ளியில் இருந்து காற்றின் சத்தத்தைப்பூமிக்கு ஒலிபரப்பியது. 1983ம் ஆண்டு யூன் மாதம் வெனேரா-15 வீனஸின்ராடர் வரைபடத்தை அனுப்பி இருந்தது. 1984ம் ஆண்டு வேகாஎன்ற விண்கலம் ரஷ்யாவால் வெள்ளி நோக்கி அனுப்பப்பட்டது.இதன்பின் ரஷ்யா பொருளாதார நெருக்கடி காரணமாகத் தற்காலிகமாக விண்வெளித்திட்டத்தை நிறுத்திக் கொண்டது.அமெரிக்காவின் நாசா 1962 ஆண்டு மரினர்-2 என்ற விண்கலத்தைவெள்ளியின் சுற்றுப் பாதைக்கு அருகே அனுப்பிசில தகவல்களைப் பெற்றுக் கொண்டது. 1967ம் ஆண்டு மரினர்-5 இதேபாதையில் வெள்ளி நோக்கி அனுப்பப்பட்டது. 1974ஆம் ஆண்டுமரினர்-10 புதன்கிரகம் நோக்கிச் செல்லும் போது, வெள்ளிக்கிரகத்தையும் படங்கள் எடுத்து அனுப்பி இருந்தது. வெள்ளியின்காற்றின் வேகம், மேகக்கூட்டங்கள் பற்றியும் மரினர்-10 தகவல்சேகரித்து அனுப்பியிருந்தது. 1978ம் ஆண்டு நாசா நிறுவனம்பயனியர் என்ற விண்கலத்தையும், 1990ம் ஆண்டு மக்லான் என்றவிண்கலத்தையும் வெள்ளி நோக்கி அனுப்பி இருந்தது. வெள்ளியின் சுற்றுப் பாதையில் இருந்து தேவையான தகவல்களைநான்கு வருடங்கள் சேகரித்து அனுப்பிய இந்த விண்கலம், ஏற்கனவே திட்டமிட்டபடி வெள்ளியின் தரையில் மோதிக் கொண்டது.2006ம் ஆண்டு வீனஸ் எக்பிரஸ் என்ற விண்கலம் ஐரோப்பியவிண்வெளிநிறுவனத்தினால் வெள்ளிக்கிரகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து யப்பானால் 2010ம் ஆண்டுஅக்காசுகி (யுமயவளரமi) என்ற விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது.இவற்றைவிட பல விண்கலங்கள் வெள்ளிக்கிரகத்தைக் கடந்துவேறு கிரகங்களை நோக்கிச் செல்லும் போதும், தகவல் சேகரித்து அனுப்பி இருந்தன. 2004ம் ஆண்டு புதன்கிரகத்தைநோக்கி அனுப்பப்பட்ட மசென்ஸர் விண்கலம் இரண்டு தட-வைகள் வெள்ளிக்கிரகத்திற்கு அருகாகப் பறந்தது. முதற்தடவைஒக்ரோபர் மாதம் 2006ம் ஆண்டு 1860 மைல்கள்தூரத்தில்பறந்தபோது அதனால் தகவல் அனுப்ப முடியவில்லை. இரண்டாவது தடவை யூலை மாதம் 2007ம் ஆண்டு 209 மைல்கள் அருகேசென்று தகவல் சேகரித்து அனுப்பி இருந்தது.சுமார் 46 விண்கலன்கள் இதுவரை வெள்ளிக்கிரகத்தின் பாதைநோக்கி அனுப்பப்பட்டிருக்கின்றன. 2024ம் ஆண்டு இந்தியா ‘சுக்கிராயன்’ என்ற விண்கலத்தை வெள்ளிக்கிரகத்திற்கு அனுப்பஇருக்கின்றது. இதில் வெள்ளி மேகக்கூட்டங்களை ஆய்வு செய்வதற்கு ஏற்ற மாதிரி பலூனும் இணைக்கப்பட்டிருக்கும். 2028ம்ஆண்டு ‘வெரிட்டாஸ்’ என்ற விண்கலத்தையும், அதைத்தொடர்ந்து 2030ம் ஆண்டு ‘டாவின்ஸி’ என்ற விண்கலத்தையும்நாசா அனுப்ப இருக்கின்றது. வெள்ளிக்கிரகத்தில் கடல் இருந்ததா, நில அதிர்வு ஏற்படுகின்றதா, எரிமலைகள்விழிப்புடன்இருக்கின்றனவா என்பது போன்ற தகவல்களை இவை சேகரிக்கும். இதற்காகத் தனித்தனியே 500 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. வெனேரா-டி என்ற விண்கலம் 2029ம் ஆண்டுரஷ்யாவில் இருந்து வெள்ளி நோக்கிச் செல்ல இருக்கின்றது.இதில் அமெரிக்க நாசா நிறுவனத்தின் பங்களிப்பும் இருக்கும்என எதிர்பார்க்கப்படுகின்றது. வெள்ளிவிடயத்தில்சீனா ஏனோஇதுவரை வாய்திறக்கவில்லை, ஒருவேளை மௌனமாக உறுமீனுக்காகக் காத்திருக்கலாம்.உசாத்துணை:

•https://www.space.com/44-venus-second-planet-from-the-sun-brightest-planet-in-solar-system.html•https://www.bbc.com/news/science-environ-ment-57339355

kuruaravindan@thaiveedu.com

About editor 3120 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply