காலமாகாத புனிதர் தந்தை செல்வா

காலமாகாத புனிதர் தந்தை செல்வா

அருட்தந்தை எம். எக்ஸ். கருணாரட்ணம் அடிகள்

திருப்பாடல் 15ஐ செபிப்பதன் மூலம் செல்வாவின் வாழ்விற்காக இறைவனுக்கு நன்றி கூறுவோம். இது ஓர் இறை ஏவுதல், தூய ஆவியின் தூண்டுதல்.

தந்தை செல்வா ஒரு புனிதர் என்ற எனது கருத்துக்கு சான்றாக திருப்பாடல் 15ஐயே முதலில் நான் எடுத்தியம்ப விரும்பினேன். ஆனால் இந்த நன்றி வழிபாட்டு புத்தகம் என் கையில் கிடைத்த பொழுது அங்கே அந்தத் திருப்பாடல் இருப்பதைக் கண்டு என் மனம் உறுதியடைந்தது.  செல்வா ஒரு புனிதர் என்று பறைசாற்ற துணிந்தது. எனவே இவ்வகையில் சான்று பகர்கின்றேன். செல்வா ஒரு புனிதர். 

திருவிவிலிய மதிப்பீடுகளை இறைவாக்குகளைத் தன்மனதில் இருத்தி வாழ்ந்தவர். பணம் சம்பாதிக்கும் தொழிலாக சட்டத்தரணிப் படிப்பை மேற்கொள்ளாமல், மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்ற இலட்சியத்தோடு வாழ்ந்தவர். ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் நீதி கிடைக்க சாதாரண பயணிகள் பயணிக்கும் பேருந்து வண்டியிலே மல்லாகம் நீதி மன்றிலே வழக்காட வந்த எளிமையான காட்சிக்கு இன்னும் உயிரோடிருப்பவர்கள் சாட்சி.

குற்றவியல் வழக்கறிஞராக மாறிக் குற்றவாளிகளைத் தப்பிவிக்கும் முயற்சியிலே ஈடுபடாமல் குடியியல் வழக்குகளிலே தன்னை ஈடுபடுத்தி, நேர்மையான வழக்கறிஞராக செயற்பட்டு, நீதியை நிலைநாட்டியவர்.

“”நடுவர் ஆவதற்கு விரும்பாதே. அநீதியை நீக்க உன்னால் இயலாமல் போகலாம். வலியவருக்கு அஞ்சி உன் நேர்மைக்கு இழுக்கு வருவிக்கலாம்” என்ற சீராக் நூலின் 7 ஆம் அதிகாரம் 6 ஆவது திருவசனத்தை என்றுமே தியானித்தவராய், நீதியாளர் பதவியை ஏற்காமல் இறுதிவரை
ஒடுக்கப்பட்ட மக்களுக்காய் வாழ்ந்தவர். “”தம் சிலுவையைச்
சுமக்காமல் எனபின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்க முடியாது” என்ற எக்கா 14:27 திரு வசனத்தை மனதிலிருத்தி உயிர் துறக்கும் வரை எவ்வித முணுமுணுப்பும் இல்லாமல், தனது அரசியல் வேதனைகளையும், உடல் வேதனைகளையும் தாங்கினார்.

“உங்களுள் தம் உடைமையையயல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது” என்ற தேவ வாக்கை மனதில் இருத்த தனது மலேசிய சொத்துக்கள், தனது உழைப்பின் ஊதியங்களையயல்லாம் துன்புறும் தம்
சகோதரருக்காய் இழந்தவர் தந்தை செல்வா. எப்பொழுதும்
அமைதிக்கான வழிகளைத் தேடினார். பலவிட்டுக் கொடுப்
புகளைச் செய்தார். கனிவோடு பேசினார். பணிவோடு செயற்பட்டார்.

மற்றவருக்குச் செவிசாய்க்கு முன்பே மறுமொழி செய்யாதே, அடுத்தவர் பேசும்போது குறுக்கே பேசாதே என்ற சீராக் நூலின் அதிகாரம் 11:8 ஆம் திருவசனத்தை வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும், தனிப்பட்டவர்களுடனும் பேசும் போதும், நீதி மன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் முறையாகக் கடைப்பிடித்தார். அதிகாரவெறி, சினம், கையூட்டல், காமக்கேளிக்கை, கலகம், பேராசை, எதுவுமில்லாத எளிமையான புனிதராக வாழ்ந்த அவரை – அவரது வாழ்வை- கிறிஸ்தவ திருச்சபைகள் எதிர்காலத்தில் பொதுவாழ்வில்
ஈடுபடுபவர்களுக்கு முன்மாதிரிகையாக, ஒரு வழிகாட்டியாக முன் வைக்காத காரணத்தால், தந்தை செல்வாவிற்குப் பிறகு பொதுவாழ்வில் கிறிஸ்தவர்கள் எவரும் தலைமைத்துவத்தைப் பெறமுடியாமற் போனது. இது கிறிஸ்தவ சபைகளுக்கு ஒரு சாபக் கேடாகவும், சவாலாகவும் இன்றைக்கு இருக்கின்றது என்பதை நான் வலியுறுத்துகின்றேன்.

ஒரு தலைசிறந்த சமூகவியலாளர் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலே, பெளத்த, இந்து சமயச் சீர்திருத்தங்கள், தீவிரப் போக்கையடைந்த போது
முன்னாள் பிரதமர்கள் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்கா, ஜே.ஆர்.ஜெய்வர்த்தனா, டி.எஸ்.சேனநாயக்கா,ரணில் விக்கிரமசிங்க போன்ற தலைவர்களின் குடும்பங்கள் அங்கிலிக்கன் திருச்சபையை விட்டு விலகின. அல்லது இரட்டை வேடங்களைத் தாங்கின. இன்றைய சந்திரிகாவின் தந்தை எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்கா Why I become a Buddhist ¨என்ற உப்புச்சப்பற்ற நூலை வெளியிட்டு பெளத்தத்தை வெறிபிடித்த பெளத்தமாக்கி, தன்ஒழுக்க நெறிப்பிறழ்வை வெளிப்படுத்தி, பதவியைக் காப்பாற்றிக் கொண்டபோது அங்கிலிக்கன் திருச்சபையின் நெறிதவறா விசுவாசியாக தந்தை செல்வா விளங்கி, சகல இன, மத மக்களையும் கவர்ந்திருந்தார். இந்து, இஸ்லாமிய,கத்தோலிக்க மத மக்கள் அனைவரையும் கவர்ந்ததோடு வடக்கு கிழக்கு, வன்னி, மலையகம், கரையோரம் என்ற பிரதேச வேறுபாடுகளை அகற்றியவராய் சாதி, சமூக வேறுபாடுகளை ஒழிக்கும் புரட்சி வீரராய்த் திகழ்ந்தார்.

சேர் பொன். இராமநாதன், சேர் பொன். அருணாசலம் போன்றவர்கள் காலத்தில் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்ட வேளையில், இஸ்லாமிய, கரையோரத் தமிழர் காட்டிக் கொடுக்கப்பட்ட வேளையில், தோன்றிய தமிழ் காங்கிரஸில்
இணைந்து தமிழ் சமூகத்தின் நல்வாழ்விற்காய் வாழ்வை அர்ப்பணித்தார். 1949இல் தமிழினத்தின் பிரிக்கமுடியா அங்கமான மலையகத் தமிழர்களின் குடியுரிமை மறுக்கப்பட்டபோது அச்சமூகத்தின் நல்வாழ்விற்காய் குரல்
கொடுத்தார். சமூக அநீதிக்குத் துணைபோக மாட்டேன் என்ற திடசங்கற்பம் பூண்டு தான் சார்ந்த அரசியல் கட்சி யைத் தூக்கியயறிந்தார். அன்றைய அரசியல் பார்வையில் அது தந்தை செல்வாவின் அரசியல் தற்கொலை என்று வர்ணிக்கப்பட்டது. 1952 தேர்தலில் அவரது தோல்வியினால் அது உறுதி செய்யப்பட்டது. ஆனால் தந்தை செல்வாவின் கூர்மையான சமூகபார்வை, சமூக மேம்பாட்டிற்கான அர்ப்பணிப்பு 1958இல் அவரையும் அவரது தமிழரசுக்
கட்சியையும் தமிழினத்தின் ஏகப்பிரதிநிதிகளாக அன்றைய நாடாளுமன்றத்திற்கு அனுப்பிவைத்தது. பண்டாவைச் செல்வாவோடு ஒப்பந்தம் செய்ய வைத்தது.

சாதி வெறிபிடித்த தமிழ் சமூகப்பார்வையைச் சிதறடிக்க எவரது மனதையும் புண்படுத்தாது விடுதலை என்ற போர்வையில் தீமை செய்யாதீர்கள் என்ற 1 பேதுரு 2:18 வாக்கியத்தை கடைப்பிடித்து, சமபந்தி போசனப் போராட்டங்களையும் ஆலய பிரவேசப் போராட்டங்களையும் எவ்வித
பலாத்காரங்களுக்கும் இடங்கொடாது நடாத்தி வெற்றி கொண்டார்.
தந்தை செல்வா சமய உரையாடலாளர் தமிழர் தாயகத்திலே மிகச் சிறுபான்மையினரான அங்கிலிக்கன் திருச்சபையின் விசுவாசியாக இருந்தாலும், கத்தோலிக்கரான நல்லூர் இ.மு.வி.நாகநாதன், மன்னார்,
வி.அழகக்கோன், யாழ் ஸி.எக்ஸ்.மாட்டீன், நீர்கொழும்பு பிரான்சிஸ் பெரேரா, மிக வைதீக இந்துக்களான, ஊர்காவற்றுறை வீ.ஏ.கந்தையா, திருமலை இராஜவரோதயம், கோப்பாய் கோமகன் வன்னியசிங்கம், மூதூர் ஏகாம்பரம், கல்குடா மாணிக்கவாசகம், உடுவில் தருமலிங்கம், பட்டிருப்பு இராஜமாணிக்கம், வட்டுக்கோட்டை அமிர்தலிங்கம், பருத்தித்துறை துரைரத்தினம், உடுப்பிட்டி ஜெயக்கொடி, சாய்ந்தமருது மசூர் மெளலான, பொத்துவில் காரியப்பார், நிந்தவூர் முஸ்தாபா, மட்டக்களப்பு சின்னலெப்பை, கல்முனை எம்.ஸி.அகமட், மூதூர் முகமது அலி போன்ற இஸ்லாமியர் களையும் ஒரே இலட்சியத்தில் ஒன்றிணைத்து சமய முரண்பாடுக ளுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்.

இலங்கையின் சுதந் திரத்தின் பின் முடுக்கி விடப்பட்ட இனவிரிசல்கள், பிரதேச வேறுபாடுகள், சமயக் காழ்ப்புணர்வுகள் பற்றியயரிந்த வேளையில் தந்தை செல்வாவினால் எப்படி இந்தப் பெருந் நரகத் தீயிலிருந்து மக்களைக் காப்பாற்ற முடிந்தது என்று ஆச்சரியப்பட ஒன்று மில்லை. ஏனென்றால் அவர் எப்போதும் தன்னை ஒரு கிறிஸ்தவர் என்பதை வெளிப்ப டையாகக் காட்டினார், வாழ்ந்தார், தன் நேர்மையான, உண்மையான, நீதியான
வாழ்வால் சகல மதத்தலைவர்களோடும் மக்களோடும் அவர் சிறந்த உரையாடலைச் செய்திருந்தார். காலஞ்சென்ற யாழ் ஆயர் கலாநிதி பேரருட்திரு வ. தியோகுப்பிள்ளை ஆண்டகை அவர்களே தந்தை செல்வாவின் பாதையை வெளியரங்கமாக மதித்தார். தான் வழி நடத்திய கத்தோலிக்க
திருச்சபையை செல்வாவின் வழியில் செல்லத் தூண்டினார்.

1990களில் தமிழினம் இக்கட்டான ஒரு காலக்கட்டத்தை சந்தித்தபோது தந்தை செல்வாவின் தமி ழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை எனக்கு வாசித் துக்காட்டி தந்தை செல்வாவின் சமஷ்டி தான் தமிழினத்திற்கான ஒரு தீர்வு
என்பதை அன்றைய ஜனாதிபதி பிரேமதாஸவிற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எழுதிய கடிதங்களைச் சேர்ப்பிக்குமாறு என்னிடம் தந்தார்.

1972இல் புதிய இலங்கை குடியரசு அரசியல் யாப்பினை நிராகரித்து நாடாளுமன்றப் பதவியை துறந்தார் தந்தை செல்வா. பின்னர் ஏற்பட்ட காங்கேசன்துறைத் தொகுதி இடைத்தேர்தலில் புதிய யாப்பினை தமிழ் மக்கள் நிராகரிக்கும் ஒரு கருத்துக்கணிப்பாக வைத்து தேர்தலில் போட்
டியிட்டார். அவ்வேளையில் அவரது தேர்தல் பிரசாரம் ஒரு பிரசித்தமான இந்துக் கோவிலில்தான் ஆரம்பமானது.

அவ்வேளையில் இந்து சமயச்சடங்குளுடன் கொடுக்கப்பட்ட பிரசாதத்தை நான் ஒரு கிறிஸ்தவன், இதை பெறுவது உங்கள் சமய நம்பிக்கைகளை அவமதிக்கும் ஒரு செயலாகும் என அதைப் பெறமறுத்து, தன்னை ஒரு வேத சாட்சி என்பதை நிரூபித்த அதே வேளையில் எல்லோருக்கும் சமய
சுதந்திரம் வேண்டும் என்ற கிறிஸ்தவக் கோட்பாட்டை வெளிப்படுத்தினார். பெரும்பான்மையான இந்துக்களை அவமதித்துவிட்டார், இது இவரது தேர்தல் வெற்றிக்குத் தடையாகும் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் தந்தை
அத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரைப் பெருவெற்றி கொண்டார்.

ஓர் உண்மையான அரசியலாளர்

1949 இல் சமஷ்டிக் கோட்பாட்டு அரசியல் கட்சியை அவர் தோற்றுவித்தது, அவரது அரசியல் ஞானத்தையும் தீர்க்க தரிசனப் பார்வையையும் வெளிப்படுத்தி நிற்கின்றது. தந்தை செல்வாவை காற்சட்டைக் காந்தி, செவிடர், சம்மட்டியால் அடிவாங்கித் தந்த சமஷ்டிவாதி என்றெல்லாம்
அவரது அரசியல் போட்டியாளர்கள் இகழ்ந்த போதெல்லாம், அமைதியாக பலவீனமான குரலில், தளர்ந்த அசைவில், தன் இலட்சியத்தை முன்னெடுத்தார். தமிழ் சமூகத்தின் உயர்ந்த சாதியத்தின் திமிரில் அதிகார
வெறிகொண்டவர்களின் முன் சாந்தமான செம்மறியாக நின்றார்.

1956 இல் சாவகச்சேரி இந்து மகளிர் கல்லூரி முன்றிலில் .என்.நவரத்தினத்தின் தேர்தல் பிரசாரத்திற்காக வந்து மேடையில் அமர்ந்த போது, மேடை வெறியர்
களால் கவிழ்க்கப்பட்ட போதும் எழுந்து சாந்தமாகவே பேசினார். அவருடைய பொறுமையினால் அன்றைய அமைச்சர் குமாரசாமியை எதிர்த்துப் போட்டியிட்ட சட்டக்கல்லூரி மாணவன் இளைஞன் வி.என்.நவரத்தினத்தை
தேர்தலில் அமோக வெற்றி ஈட்டச் செய்தார்.

1970 தேர்தலில் உடுப்பிட்டிச் சிங்கமென வர்ணிக்கப்பட்ட அன்றைய உபசபாநாயகர் திரு.மு.சிவசிதம்பரத்தை மண்கவ்வ வைத்ததும் தந்தை செல்வாவின் அரசியல் சாணக்கியமே. கதிரைகளை வீசி அடித்து, ஒலிவாங்கிகளை பிடுங்கி எறிந்தும் சபாநாயகரின் செங்கோலைப் பறித்
துக்கொண்டும், நெருப்புக் கொழுத்தியும், சமய குருமாரைத் தகாத இடங்களில் தாக்கியும் வரும் இந்தச் சிறிலங்கா நாடாளுமன்றப் பாரம்பரியத்தில், சபை அடங்கி, அமைதி யோடு குறுக்கீடில்லாமல் பேச்சைக் கவனமாக கேட்ட தென்றால் அது எப்பொழுதும் தந்தை செல்வா எழுந்து
பேசிய போதுதான். எப்பொழுதும் உண்மைக்குப் புறம்பாகப் பேசாதவர், தகாத சொற்களைப் பாவியாதவர், எவரது மனதையும் புண்படுத்தாமல் பேசியவர் என்றால் தந்தை செல்வாவேதான்.

எந்த வேளையிலும் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருந்தார். விட்டுக் கொடுப்புக்களைச் செய்தாலும் தமிழர் தாயகக் கோட்பாட்டை இன்றைய தலைமுறைக்கு சொத்தாக விட்டுச்சென்றவர். சிங்கள, பெளத்த பேரினவாதம் தமிழர் களுக்கு எதையும் கொடுக்கத் தயாரில்லை என்பதைத் தந்தை செல்வாவின் அரசியல் ஞானம்தான் உலகத்திற்கு எடுத்துக்காட்டியது. அது மட்டுமல்ல எமக்கு இந்த உண்மையை வரலாற்றுச் சான்றாகளை விட்டுச்சென்றுள்ளார்.

ஒரு பலவீனமான பலசாலி

1949இல் தமிழரசுக்கட்சி தமிழ், சிங்களச் சமூகத்திற்கு ஒரு கேலியாக இருந்தது. பலவீன மெல்லிய மனிதர் ஒருவர் தமிழர் விடுதலையை முன்வைத்த போது சிரிப்பிற்கிடமாக இருந்தது. 1956இல் அடங்காத் தமிழர் சுந்தரலிங்கம் கியூஸியும் தனிப்பெருந்தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் கியூ
ஸியும் தனித்து நாடாளுமன்றம் நுழைந்த போது பலவீனமான இறைவாக்கினர் செல்வாவோ இ.மு.வி.நாகநாதன், அமிர்தலிங்கம், வன்னியசிங்கம், வி.ஏ.கந்தையா, அழகக்கோன், இராஜவரோதயம், ஏகாம்பரம், இராசமாணிக்கம், மாணிக்கவாசகர், இராஜதுரை, சிவசுந்தரம்
போன்றவர்களோடு அமைதியாக ஆனால் படையணியாக
நாடாளுமன்றம் நுழைந்தார். சிங்களம் மட்டும் சட்டம் 24 மணித்தி யாலங்களுள் பிரகடனப்படுத்தப்பட, கேடு கெட்ட காடைத்தனத்தை நாடாளுமன்றத்திலும் வெளியிலும் அமைதியாகச் சாந்தமாக எதிர்த்து நின்றார். காலிமுகத்திடல் சத்தியாக்கிரக போராட்டத்தில் அவரை எப்போதும் எதிர்த்த ஜீ.ஜீ. அவர்களே கலந்து கொள்ள வேண்டியிருந்தது. இதைத் தொடர்ந்த சிங்கள சிறி இலக்கத்தகடுகளை வாகனங்களில் பொருத்துவதை எதிர்த்தார்.

பண்டாவால் பெளத்த காடைத்தனத்திற்கு அடிபணிந்து ஒருதலைப்பட்சமாக பின்னர் கிழித்தெறியப்பட்ட தமிழர் தாயகக் கோட்பாட்டை சிறிலங்காவின் பிரதமரால் ஒப்பந்தமாக ஏற்கவைத்தார். இதுவே இன்று விடுதலைப்போராக
மாறிய தமிழர் வரலாற்று வெற்றிக்கு அடிகோலியது.

தந்தை செல்வா ஞாயிற்றுக்கி1958இன் இனக்கலவரம் தமிழர்களை அவர்களது தாயகத்திற்கு அனுப்பும் ஒரு சிங்கள நாட்டின் முயற்சி, இத்தீவில் இரண்டு தேசம் என்ற உண்மையை உலகம் ஒப்புக்கொள்ள வைத்தது.
அன்று அவர் தார்பூசி அழித்த சிங்கள சிறி இலக்கத்தகட்டை
சர்வாதிகாரி பிரேமதாஸாவே தவறென அவற்றை அழித்துவிட்டார்.

அன்று நாட்டில் உயர் பதவியிலிருந்த அவரது அரசியல் போட்டியாளர்
ஒருவரின் குடும்பபிரிவினைத் தனது அன்பினால் தடுத்து நிறுத்திய
பெருமையும் அவரையே சாரும். 1960களில் ஐ.தே.கட்சி பெரும்பான்மை பலமில்லாமல் தவித்த போது, தமிழர் அபிலாஷகளை நிறைவேற்ற மறுத்த காரணத்தால், அக்கட்சியை சிம்மாசன உரை யன்றே கவிழ்த்து விட்டார். பின்னர் சிறிமாவோ பதவியில் அமர்ந்து, அடாவடித்தன அரசியல் செய்ய முயன்ற போது முழு வடக்கு, கிழக்கு மட்டுமல்ல, நீர்கொழும்பு வரையான தமிழர் தாயகப் இயந்திரத்தை முடங்கவைத்தார். அவ்வேளையில் தமிழர்காங்கிரஸ் கட்சியின் ஒரே ஒரு பிரதிநிதி மு. சிவசிதம்பரம் அவர்கள் தந்தை செல்வாவின் சாத்வீகப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டியதாயிருந்து. தமிழ் தேசத்தின் முதலாவது தபால் சேவையை ஆரம்பித்து முத்திரையையும் வெளியிட்டு வைத்தார். 1964இல் ஸி.பி.டி.சில்வா போன்றோர் அரசைவிட்டு வெளியேறிய போது அரசிற்கு முட்டுக்கொடுக்காமல் சிறிமாவோ அரசைக் கவிழ்த்தார். 1965இல் ஐ.தே.க. மீண்டும் பலவீன அரசாக அமைந்தபோது தமிழர் அபிலாçrகளை முன்வைத்த அந்த அரசோடு ஒப்பந்தம் செய்து கொண்டார். அதுவும் 1969இல் முறிந்தது.
வடகிழக்கில் நீதிமன்றங்களில் தமிழ் நிர்வாக மொழி போன்ற விட
யங்கள் அடங்கிய தமிழ் மொழி விசேட பிரேரணை நாடாளுமன்றத்தில்
நிறை வேற்றப்பட்ட போது சிங்கள, பெளத்த வெறி வெளிப்பட்டது.
மீண்டும் பெளத்த மதகுருக்கள் தமிழர்களுக்கு எதுவும் அற்ப சொற்ப
உரிமைகள் கூட கொடுக்க விடமாட்டார்கள் என்ற சான்றை ஆவணப்
படுத்த வைத்தது தந்தை செல்வா என்ற பலவீனமான பலசாலியின்
சாணக்கியத்தால்தான்.

1970இல் மூன்றில் இரண்டு பெருபான்மையுடன் நாடாளுமன்றம்
நுழைந்த சிறிமாவோ தமிழர்களுக்கு என்றிருந்த 29 ஆவது பாதுகாப்பு
சரத்தை விலக்கி, சிங்கள பெளத்த குடியரசை ஏற்படுத்த கொண்டுவந்த
1972 புதிய அரசியல் யாப்பினை நிராகரித்து தீயிட்டுக்கொழுத்தி தமிழர்
தேசம் சிறிலங்கா தேசத்தின் இறைமைக்கு உட்பட்டதல்ல என உல
கறியச் செய்ய தனது நாடாளுமன்றப் பதவியைத் தூக்கியயறிந்தார்.
காங்கேசன்துறை இடைத்தேர்தல் நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்டு,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், பதவிகள், அபிவிருத்திகள் என்றெல்
லாம் நப்பாசை காட்டப்பட்டு, தமிழினத்தின் துரோகிகளாக துரையப்பா,
தியாகராசா, அருளம்பலம் உருவாக்கப்பட்டும் இடைத்தேர்தலில்
தந்தை பெரும்பான்மை பலத்தில் வெற்றி கண்டார். இறுதியாக பல
வீனமான இந்த மனிதர், அமரர்கள் ஜீ.ஜீ. பொன்னம்பலம், தொண்
டமான் போன்றோரின் இணக்கப்பாட்டுடன், தமிழினத்தின்
எல்லோரினதும் உடன்பாட்டுடன் தமிழர் விடுதலைக் கூட்டணியை
உருவாக்கி வட்டுக்கோட்டை மாகாநாட்டிலே தமிழ் ஈழப் பிரகடனத்தை
செய்து தமிழர்கள் தங்கள் தாயகத்தை பெறுவதைத் தவிர வேறு
வழியில்லை என்பதை எல்லாரையும் உணரவைத்தார்.

முடிவுரை

தமிழினத்தின் இன்றைய விடுதலைப் பயணத்தை தொடக்கி வைத்தவர் தந்தை செல்வாவே. தமிழர்களுக்கு தாயகப் போராட்டத்தைத் தவிர வேறுவழியில்லை என்பதை நீதிப்படுத்தியவர் தந்தை செல்வாவே. குறைந்த பட்சச் சலுகைகளையும் சிறிலங்கா அரசு தமிழினத்திற்கு ஒரு போதும் கொடுக்காது என்பதை வரலாற்று பதிவுகளாக, ஆவணங்களாக ஆக்கியவர் தந்தை செல்வாவே. ஒரு பலவீனமான ஓர் மனிதர் பலமான ஒரு தேசத்தின் விடுதலைக்கு அடிகோலியமை மட்டுமல்லாமல் இன்று விடுதலையை நடத்திச் செல்பவர்கள் ஏமாற முடியாதவாறு, சிங்களவர்களின் ஏமாற்று வித்தைகளை நிகழ்வுகளா கப் படம்பிடித்து தந்துள்ளார். எனவே தந்தை காலமாகாத புனிதராக காலமாகாத புனிதர்….. தமிழர் வரலாற்றில் இடம்பிடித்து நிற்கின்றார். விடுதலை வீரரான மோசெயும், இறைவாக்கினர்
எலியாவும் தாபோர் மலையில் இயேசுவோடு உரையாடிய காட்சி ஒன்று உண்டு என்றால், அவர்கள் ஜெருசலோசில் நிகழப் போவதைப் பற்றி உரை
யாடினார்கள் எனின், தந்தை செல்வா இலங்கைத் தீவின் தமிழ்பேசும் மக்களுக்காய் இறைவனிடம் பரிந்து பேசினார் என நான் நம்புகிறேன்.

அருட்தந்தை எம். எக்ஸ். கருணாரட்ணம் அடிகள் தந்தை எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களின் 44 ஆவது வருடநினைவுநாள் நாளையாகும். அதையயாட்டி அமரர் அருட்தந்தை எம்.எஸ். கருணாரட் ணம் சில தசாப்தங்களுக்கு முன்னர் எழுதிய கட்டுரை உரை இங்கு பிரசுரமாகின்றது.


அரசியலில் நேர்மையைப் போதித்த
உத்தம தலைவர் தந்தை செல்வா

சமய அனுஷ்டானங்களின் போது கலாசார திணைக்களத்
தால் வழங்கப்பட்ட நடைமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடித்தல்
வேண்டும்.

மே 31 அல்லது மறு அறிவித்தல் வரை தனியார் வகுப்புகள்
மற்றும் பிரத்தியேக வகுப்புக்கள் நடத்துவதை முற்று முழுதாகத்
தவிர்த்தல் வேண்டும்.

இப்தார் நிகழ்வுகள், பொது நிகழ்வுகள் , களியாட்டங்கள்,
பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல்களை முற்று
முழுதாகத் தவிர்த்தல் வேண்டும்.

வீதியோரக் கடைகள் மற்றும் பண்டிகைக் கால விசேட
கடைகளை சனநெரிசலற்ற இடத்தில் அமைத்தல் அல்லது அவற்றி
லிருந்து விலகிக் கொள்ளல் வேண்டும்.

தேவையற்றதும் அநாவசியமானதுமான வெளிப் பயணங்
களை முற்று முழுதாகத் தவிர்த்துக் கொள்ளல் வேண்டும்.

வர்த்தக நிலையங்கள் விசேடமாக பண்டிகைக்காகக்
கடைகள் மற்றும் வீடுகளில் வர்த்தகம் செய்வோர் மற்றும் நுகர்
வோர் சுகாதார நடைமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்
டும். இல்லாவிடில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வர்த்தக
நிலையங்கள் நீதிமன்ற அனுமதியுடன் பூட்டப்படும்.

வாராந்த சந்தைகள் மற்றும் அனைத்து வர்த்தக நிலையங்
களிலும் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் நுகர்வோர் என
அனைவரும் சுகாதார நடைமுறைகளைத் தொடர்ச்சியாகப்
பேண வேண்டும்.

ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ப பொது போக்குவரத்து
பஸ்களில் பயணிகளை ஏற்றுதல் வேண்டும் எனவும் அந்த
அறிவித்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேராயர் எஸ். ஜெபநேசன் தலைவர் தந்தை செல்வா அறங்காவல் குழு எரிகாயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 8 மாதம் நிரம்பிய கர்ப்பிணிப் பெண் சிகிச்சை
பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தன்னைத் தானே
எரியூட்டினார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்ட போதும்
அவரது உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதால் கணவனைக்
கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு திடீர் இறப்பு விசா
ரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார், பொலிஸாருக்குப்
பணித்தார்.

உடுப்பிட்டியைச் சேர்ந்த சிந்துயன் ரிசிக்கா (வயது – 19)
என்ற பெண்ணே உயிரிழந்தார். திருமணமாகிய ஒருவருடம்.
அவர் 8 மாதம் நிரம்பிய கர்ப்பிணிப்பெண். கடந்த 17ஆம் திகதி
அவரது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி எரியூட்டப்பட்ட
எரிகாயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை
யில் சேர்க்கப்பட்டார்.


எதிர்க்
கட்சித்
தலைவராக
இருந்த
ஜே.ஆர்.
ஜெயவர்த்தனா
தமது குருதி
யை எடுத்துத்
தந்தைக்குப்
பாய்ச்சுங்கள்
என்றார்.

ந்தை செல்வ 1977 ஆம் ஆண்டு ஏப்
ரல் மதம் 26 ஆம் திகதி இரவு இவ்வுலக
வாழ்வை நீத்தார். தலையில் மேற்
கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையைத்
தொடர்ந்து ஒரு மாதம் மயக்க நிலையி
லிருந்த தந்தை செல்வாவிற்கு உதவி செய்யப்
பலர் முன்வந்தனர். கலைஞர் மு.கருணாநிதி
தமிழ் நாட்டிலிருந்து ஒரு விசேட நரம்பியல் நிபு
ணரை அனுப்பிவைத்தார்.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜே.ஆர்.
ஜெயவர்த்தனா தமது குருதியை எடுத்துத் தந்தைக்
குப் பாய்ச்சுங்கள் என்றார். யாழ் அரசினர் வைத்தி
யசாலை வைத்தியரும் தாதியரும் தந்தை செல்வா
மீதிருந்த பேரன்பினால் இரவு பகல் பாரது அவரக்
கவனித்துக் கொண்டிருந்தனர். ஆனால் நீண்ட
காலமாகப் பார்க்கின்சன் நோயினால் பீடிக்
கப்பட்டிருந்த உடலினால் 79 வயதிற்கு மேல்
தாக்குப் பிடிக்க முடியவில்லை. எனவே மயக்க
நிலையிலிருந்து மீளாமலேயே தந்தை செல்வா
நம்மை விட்டுப் பிரிந்து சென்றார்.
யாழ் வைத்தியசாலையின் சேவை அளப்
பரியது. தந்தையின் உடலைப் பொறுப்பேற்ற
அவரது மகன் சந்திரகாசன் அவர்கள் “உலகில்
எவருக்குமே கிடைக்காத பராமரிப்பு என் தந்தைக்
குக் கிடைத்தது ‘ எனக் கண்ணீர் மல்கக் கூறினர்.
அவரின் பூதவுடல் தெல்லிப்பளை அமெரிக்க
மிrன் தேவலயத்தில் இறுதி ஆரதனை நடைபெற்ற
பின் ஊர்வலம், பதினொரு மைல் தொலைவிலி
ருந்த யாழ் முற்றவெளி நோக்கி நகரலாயிற்று.
நேர்மையை மதிக்கின்ற தமிழ் மக்கள்,
செய்நன்றி மறவா தமிழ் மக்கள், நாட்டின் மூலை
முடுக்குகளிலிருந்தெல்லாம் அமைதி அமைதி
யாக வந்து இந்த அமெரிக்க மிrன் கிறிஸ்தவருக்கு
அஞ்சலி செலுத்தினர். ஊர்வலம் எங்கும் “ஐயோ!
ஐயோ!!’ என்ற அவலக்குரல்.
ஊர்வலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியை
திரு.சபாரத்தினம் தமது நூலில் பதிவு செய்துள்ளார்.
ஊர்வலத்தைப் பார்க்க சில வாலிபர்கள் ஒரு பூவ
ரசக்கிளை மீது ஏறி நின்றனர். அக்கிளை முறிந்து
போகும் நிலையிலிருந்தது.அவர்களைப் பார்த்த
வயோதிபர் ஒருவர் “முறிஞ்சு விழுந்து கை கால்
முறிக்க போறியள்’ என்று எச்சரிக்கை செய்தார்.
அப்பொழுது அந்த வாலிபர்கள், “பெரியவரே
போய்ட்டர் நாங்கள் விழுந்து முறிஞ்சாலென்ன?’
என்று உணர்ச்சி ததும்பக் கூறினராம்.
முற்றவெளியில் நடைபெற்ற அஞ்சலிக் கூட்
டத்தில் இலங்கையின் மூத்த அரசியல்வாதிகள்
பலர் பேசினர். டாக்டர் என்.எம். பெரெரா தமது
உரையில் பின்வருமாறு கூறினார்:-
“”அமரர் செல்வநாயகம் தனிமனிதனாக
மட்டும் காட்சியளிக்கவில்லை . இச்சகாப்பதத்
தின் புதுயுகம் ஒன்றை உருவாக்க உழைத்த
பெரியார். அவர் தமிழ் இனத்துக்கு மட்டுமன்றி
தலைவரல்லர். இலங்கை அரசியல் வானில்
சுடர்விட்டுப் பிரகாசிக்கும் விளக்காக அவரை
நான் மதிக்கின்றேன்” என்றார்.
பீட்டர் கெனமன் தமது அனுதாபச் செய்தியில்,
“”அவர் நாடாளுமன்றத்திற் பேசும் போது சத்தமே
இருக்காது. அவர் சொல்பவற்றை மிகவும் மரி
யாதையுடன் கேட்போம். தேசிய சிறுபான்மை
யினரின் குரலாக அவர் மதிக்கப்பட்டார்.” – என்று
குறிப்பிட்டார்.
பத்திரிகைகள் அவர் நேர்மைத்திறனை
வியந்து போற்றின. தமிழ் மக்களை அதிகம்
நேசிக்காத “சன்’ பத்திரிகை கூட அவரைப் போற்
றத்தயங்கவில்லை.
சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகம் ஒரு
தனித்தன்மை வாய்ந்த மனிதர். அவர் அரசியலுக்
காய் பெருஞ்சொத்தை இழந்தவர். தலைசிறந்த
வழக்கறிஞராக நாற்பதுகளில் மாதம் 10,000
ரூபா சம்பாதித்தவர். அவர் மற்ற அரசியல்வாதி
களைப் போலல்லாது சொத்துச் சேர்க்காது இறந்
தார். தங்களின் நன்மைக்காகப் போராடிய தலை
வனை இழந்துவிட்டமைக்காக தமிழ் மக்கள்
துக்கம் அனுஷ்டிக்கின்றனர். எவருக்கும் விட்டுக்
கொடுக்காத ஒரு தலைமகனை இழந்துவிட்டதற்
காக இலங்கை ஆழ்ந்த துக்கத்தை அனுஷ்டிக்
கின்றது
தந்தை செல்வா எதைத்தான் சாதித்தார் என்று
விமர்சனங்கள் இப்பொழுது எழுகின்றன. அவர்
நமக்கு இரண்டு கொடைகளை வழங்கிப் போயி
ருக்கின்றார். அவிழ்த்து விடப்பட்ட நெல்லிக்காய்
மூடை போல சிதறிக்கிடந்த தமிழ் இனத்தை
ஒன்று சேர்த்தார். அவர் அரசியலில் பிரவேசித்த
காலம் பிரதேசவாதம், சமயக்காழ்ப்பு சாதியுணர்
வுகள் என்பனவற்றின் குரல்கள் ஓங்கி ஒலித்தன.
ஆனால் அவர் இறக்கின்ற பொழுது இந்தக்
குரல்களெல்லாம் அடக்கிப் போயின. தமிழினம்
ஒரே குரலில் பேசியது.
இரண்டாவதாக, அரசியலில் நேர்மை என்பது
அவர் நமக்கு அளித்த அருங்கொடை. மற்ற
வர்கள் வாக்கு தவறலாம். நாம் சொன்னதைச்
செய்வோம், ஏமாற்ற மாட்டோம் என்று தமது
சீரிய வாழ்வினால் எடுத்துக்காட்டியவர் தந்தை
செல்வா. இந்த மகான் மறைந்து 44வருடங்கள்
கடந்துவிட்டது. இப்படி ஒரு தலைவர் நமது
சமுதாயத்தில் இனித் தோன்றுவாரா என்பது
சந்தேகமே.
“”நேர்மையாய் ந ட ந் த வ ர் க ள் சமாதானத்தி ற் கு ள் பி ரவேசித்து தமது
ப டு க்கைகளிளல் இளைப்பாறுகின்றனர்.” கிறிஸ்தவ வேதாகமம்
ஏசா 57:2.

About editor 3188 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply