சிறை செல்லும் சீமாட்டி

சிறை செல்லும் சீமாட்டி

BY SAVUKKU 

 23/11/2014

மனிதனின் தேவைகளுக்கு இந்த உலகில் போதுமானவைகள் உள்ளன. ஆனால், அவன் பேராசைக்கு போதுமானவைகள் இல்லை என்றார் காந்தி.

“There is a sufficiency in the world for man’s need but not for man’s greed.” -Mahatma Gandhi

காதற்ற ஊசியும் வாராதுகண் கடைவழிக்கே என்றார் பட்டினத்தார். ஆனால், இந்த மனிதசமூகத்தின் காதுகளில் இவையெல்லாம் ஏறுகிறதா என்ன ?

Jayalalithaa withdraws orders against Sasikala

ஊழல் இச்சமூகத்துக்கு எத்தகைய தீங்கு பயப்பிக்கக் கூடியது என்பதை, பாலகிருஷ்ண தத்தாரேயா என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

“Corruption is not only a punishable offence but also undermines human rights, indirectly violating them, and systematic corruption, is a human rights violation in itself, as it leads to systematic economic crimes.”

ஊழல் என்பது தண்டனைக்குரிய குற்றம் மட்டுமல்ல. அது மனித உரிமைகளை மலினப்படுத்தி அவற்றை மீறுகிறது. கவனமாக செய்யப்படும் ஊழல் எனபது, மனித உரிமைகள் மீறல் மட்டுமல்ல, அது, தொடர்ந்த பொருளாதாரக் குற்றங்களுக்கு வழிவகுக்கிறது.

ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்பிய நீதி நாயகன் மைக்கேல் டி குன்ஹா தனது தீர்ப்பில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

A-1 is occupying a high position in the Government of the State of Tamil Nadu. It is often observed, “just as those at high places behave, so others below”. If persons holding higher positions indulge in corruption, not only those below get encouraged to indulge in corruption, but also the person holding higher position will not be in a position to exact honesty from them or to take action against delinquent officials.

குற்றவாளி 1 (ஜெயலலிதா) தமிழக அரசில் மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கிறார். ‘மேலே இருப்பவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்களோ, கீழே இருப்பவர்களும் அப்படியே நடந்து கொள்வார்கள் என்று அடிக்கடி சொல்லப்படுவதுண்டு’. தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் ஊழலில் ஈடுபட்டால், அவருக்கு கீழே உள்ளவர்கள் ஊழலில் ஈடுபட துணிவு கொள்வார்கள் என்பதோடு, தலைமைப் பொறுப்பில் இருக்கும் அந்த ஊழல் நபரால் தனக்குக் கீழ் உள்ளவர்களிடம் நேர்மையை எதிர்ப்பார்க்க இயலாது என்பதோடு, தவறிழைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் இயலாது.

ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டபோது, உரக்க உரக்க கூவிய அதிமுக அடிமைகள்…. ஏன் கருணாநிதி ஊழல் செய்யவில்லையா ? திமுக நேர்மையான கட்சியா என்று பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். கருணாநிதி ஊழல் அரசியல்வாதிதான். திமுக ஊழல் கட்சிதான். அப்படிப்பட்ட கருணாநிதி மீதும், திமுக மீதும், 2001 முதல் ஆட்சியில் இருந்த ஜெயலலிதா ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ? 2011 முதல் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ? ஜெயலலிதாவை யாராவது கையைப் பிடித்துத் தடுத்தார்களா ?

திமுகவும் அதிமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்றாலும், இரண்டுக்கும் மெல்லிய வேறுபாடு இருக்கிறது.

திமுக ஆட்சியில் தொழிற்சாலைகள் தொடங்கப்படும். சாலைகள் போடப்படும். குளங்கள் தூர் வாரப்படும். புதிய திட்டங்கள் உருவாக்கப்படும். அதிலிருந்து பெரிய குடும்பம், சின்ன குடும்பம், துணைக் குடும்பம், இணைக் குடும்பம் என்று அத்தனை குடும்பங்களும் கமிஷன் பெறும். அரசு நூறு ரூபாய் செலவு செய்தால், ஒரு எழுபது ரூபாய் மக்களைச் சென்றடையும்.

ஆனால், ஜெயலலிதாவின் ஆட்சியில்….. ? கடந்த மூன்று வருடங்களாக, ஒரே ஒரு தொழிற்சாலை தொடங்கப்பட்டிருக்கிறதா ? ஒரு புதிய தொழிற்திட்டங்கள் வந்திருக்கின்றனவா ? டாஸ்மாக் விற்பனையைத் தவிர்த்து, தமிழ்நாட்டில் ஆட்சி நிர்வாகம் நடக்கின்றதா ? முதல்வர் பன்னீர்செல்வம், கருணாநிதியைப் பார்த்து சொன்ன அதே பழமொழியை சொல்ல விரும்புகிறேன். “அறுக்கமாட்டாதவன் இடுப்புல அம்பத்தெட்டு அருவா” என்ற பழமொழிக்கு ஏற்ப, சாதா முதல்வர், மக்கள் முதல்வர், சாதா தலைமைச் செயலர், மக்கள் தலைமைச் செயலர், சாதா டிஜிபி, மக்கள் டிஜிபி என்று ஆயிரத்தெட்டு அமைச்சர்கள், அதிகாரிகள்.

தமிழ்நாட்டில் நடப்பது போல கேடுகெட்ட ஆட்சி எங்குமே நடக்காது தோழர்களே…. ஒரு தண்டிக்கப்பட்ட குற்றவாளி, அரசுக் கோப்புகளைப் பார்க்கிறார். அந்த தண்டிக்கப்பட்ட குற்றவாளியிடம், படித்த அரசு அதிகாரிகள் மண்டியிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

jjsasikalanakeeran

தமிழக அரசில் என்ன நடந்து கொண்டிருக்கிறது தெரியுமா ? 2011ல் ஜெயலலிதா பதவியேற்ற நாள் முதலாகவே …. ? வசூல், வசூல், மற்றும் வசூல். மாத வசூல் கிடையாது. வார வசூல். ஒவ்வொரு அமைச்சருக்கும், அவரது துறைக்கு ஏற்றார்ப்போல, டார்கெட் கொடுக்கப்பட்டிருக்கும். அவர்கள் வாரந்தோறும் பணத்தை வசூல் செய்து, கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒவ்வொரு வாரமும் அறிவிக்கப்படும் ஒரு பங்களாவில் தங்கள் வசூல் தொகையை கொண்டு செலுத்த வேண்டும். அப்படி செலுத்துகையில் அத்தனையும் புதிய கரன்சித் தாள்களாக இருக்க வேண்டும். அந்த கரன்சிக் கட்டின் மேல்புறத்தில், முதல் நோட்டின் எண்ணையும், கடைசி நோட்டின் எண்ணையும் ஒரு தாளில் குறிப்பிட்டு சொருகியிருக்க வேண்டும். தொகையைக் கொடுத்ததும், ஒவ்வொரு அமைச்சருக்கம் அவர்கள் கொடுத்த தொகையில் 30 சதவிகிதம் திரும்ப அளிக்கப்படும். யாராவது ஒரு அமைச்சர் தனக்குச் சேர வேண்டிய 30 சதவிகிதத்தை எடுத்துக் கொண்டு தொகையைக் கொடுத்தால் அவ்வளவுதான்.. ங்கொய்யால என்ன நடக்கும்னே தெரியாது. அப்படி வசூல் செய்யப்பட்ட தொகை, பல்வேறு ஆடிட்டர்களின் வழியாக ஹவாலா மூலமாகவும், பல்வேறு இடங்களுக்கு பரிமாற்றம் செய்யப்படுகிறது.

ஒரே ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். தமிழ்நாடு ஒரு நாளைக்கு 3000 மெகாவாட் மின்சாரத்தை தனியாரிடமிருந்து வாங்குகிறது. தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தது முதலாக ஒரே ஒரு மின் உற்பத்தித் திட்டம் கூட செயல்படுத்தப்பட வில்லை. ஏறக்குறைய ஒரு யூனிட் மின்சாரம் 12 ரூபாய்க்கும் அதிகமாக மின்வாரியத்தால் தனியாரிடமிருந்து வாங்கப்படுகிறது. இதில் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு ஒரு யூனிட்டுக்கு கமிஷன் 20 பைசா. மின்வாரிய சேர்மன் கப்பர் சிங் என்கிற ஞானதேசிகன் ஐஏஎஸ்க்கு ஒரு யூனிட்டுக்கு இரண்டு பைசா. இந்த கணக்குப்படி பார்த்தால், கப்பர்சிங்குக்கு ஒரு நாளைய வருமானம் 14.40 லட்சம் மற்றும் நத்தம் விஸ்வநாதனுக்கு ஒரு நாளைய வருமானம் 1.44 கோடி. இவர்கள் இருவரும் தனித்தனியாக ஜெயலலிதாவுக்கு கப்பம் கட்டிக் கொண்டிருக்கின்றனர்.

Natham Viswanathan

டாஸ்மாக் கடைகளை பார்வையிட்டிருக்கக் கூடியவர்களுக்கு டாஸ்மாக்கில் ஒரு நாளும் விற்பனை குறைவதேயில்லை என்பது நன்கு புலப்படும். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும், இரண்டு முறை சரக்கு விலை உயர்த்தப்பட்டது. இருந்தபோதும், டாஸ்மாக் வருவாய் கடந்த தீபாவளியன்று குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இணைப்பு  இது எப்படி ?

டாஸ்மாக்கோடு இணைக்கப்பட்டுள்ள பார்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும். பெரும்பாலானவர்கள் பார்களில் அமர்ந்தே குடிக்கின்றனர். இவ்வாறு குடிப்பவர்கள், பார்களில் அமர்ந்து சப்ளை செய்பவர்களிடமே ஆர்டர் செய்கின்றனர். அவர்களுக்கு, சப்ளையர், டாஸ்மாக் கடையில் சரக்கை வாங்குகிறாரா அல்லது, அவர் பாரில் உள்ள சரக்கை எடுத்துத் தருகிறாரா என்பது தெரியாது… அதை தெரிந்து கொள்ளவும் யாரும் ஆர்வம் காட்டப்போவதில்லை. நத்தம் விஸ்வநாதன் தன்னுடைய நூதனமான தந்திரத்தின் மூலமாக, சரக்கு விற்பனையாளர்களிடமிருந்து, நேரடியாக பார்களுக்கு தமிழகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட கடைகளில் சரக்கை வழங்க ஏற்பாடு செய்துள்ளார். இந்த ஏற்பாடுகளையெல்லாம் செய்பவர், நத்தம் விஸ்வநாதனின் மைத்துனர் கோபி.

உதாரணத்துக்கு எஸ்என்ஜே டிஸ்டில்லரீஸ் நிறுவனம் அரசுக்கு ஒரு பாட்டில் பியரை 100 ரூபாய்க்கு வழங்குகிறதென்றால் அதன் அடக்க விலை 30 ரூபாய் இருக்கும். மீதம் உள்ள 70 ரூபாயும், அரசு விதிக்கும் வரி. அரசுக் கணக்குக்கே வராமல், நேரடியாக பார்களுக்கு எஸ்என்ஜே டிஸ்டில்லரிஸ் சரக்கு வழங்கினால், அதாவது டாஸ்மாக் கணக்குக்கே வராமல். அரசுக்கு வர வேண்டிய 70 ரூபாய் வருவாய் யாருக்குப் போகும் ? இது ஒரு பியர் பாட்டிலினுடைய கணக்கு. இது போல, லட்சக்கணக்கான பாட்டில் பியர்கள் மற்றும் இதர மதுபானங்கள் பார்களுக்கு சப்ளை செய்யப்பட்டால் கிடைக்கும் வருவாயை யோசித்துப் பாருங்கள். டிஸ்டில்லரீஸ் மற்றும் ப்ரூவரி நிறுவனங்களுக்கு எதைப்பற்றியும் கவலையில்லை. எங்கே கொடுத்தாலும் அவர்களின் அடக்கவில்லை கிடைத்தால் போதுமல்லவா ? இது போல கிடைக்கும் வருமானத்திலும் பெரும்பங்கு, கொடநாடு கோமலவள்ளிக்கே செல்கிறது.

சரி. இப்படியெல்லாம் வசூல் செய்யும் பணத்தை என்ன செய்கிறார்கள் ஜெயலலிதா மற்றும் சசிகலா என்ற கேள்வி இயல்பாக எழும் அல்லவா ? அவர்கள் அந்தப் பணத்தை என்ன செய்திருக்கிறார்கள் என்பதைப் பற்றித்தான் இந்த கட்டுரை.

ஜெயலலிதா 1991ம் ஆண்டு முதல்வரான பிறகு, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெயரில் ஏராளமான பினாமி நிறுவனங்களை தொடங்குகிறார் என்று கூறியுள்ளார் மைக்கேல் குன்ஹா. இவை அனைத்தும் பினாமி நிறுவனங்கள் என்பது, அந்த வழக்கில் தெள்ளத்தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

Cho_ramasamy

இது போல ஜெயலலிதாவின் பினாமி நிறுவனமாக தொடங்கப்பட்ட ஒரு நிறுவனம்தான் ஹாட் வீல்ஸ் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட். 05 செப்டம்பர் 2005ல் இந்த நிறுவனம் தொடங்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் தொடக்க கால இயக்குநர்களாக யார் இருந்தார்கள் என்ற விபரம் இல்லை.

ஆனால், சசிகலா டிசம்பர் 2011ல் வெளியேற்றப்பட்ட உடனே இந்த ஹாட் வீல்ஸ் இன்ஜினியரிங் நிறுவனத்தில் இயக்குநர்களாக நியமிக்கப்படுபவர்கள் இரண்டு பேர். ஒருவர் தன்னை தமிழகத்தின் மிகப்பெரிய நியாயவானாக சித்தரித்துக்கொள்ளும், தலைச்சிறந்த ப்ரோக்கர் சோ ராமசாமி. இவர் பேசும் ஊர் நியாயத்தைக் கேட்டால் காது கிழியும். அப்படி ஒரு நேர்மையாளர் போல பேசுவார். நேரம் இருந்தால் கேளுங்கள்.     யு ட்யூப் இணைப்பு

மிடாஸ் நிறுவனத்தில் பங்குதாரராக இருந்த இந்த மிடாஸ் மாமா சோ ராமசாமிதான் இந்த ஹாட்வீல்ஸ் நிறுவனத்தில் மன்னார்குடி மாபியாவின் வெளியேற்றத்துக்குப் பிறகு இயக்குநராக இருந்தார். இவராடு இருந்த மற்றொரு இயக்குநர் பூங்குன்றன். இந்த பூங்குன்றன் யார் தெரியுமா ? இவரது தந்தையின் பெயர் புலவர் கலியபெருமாள். சொந்த ஊர் சூரக்கோட்டை. இவருக்கு வேலை, நமது எம்ஜிஆரில் கட்டுரை எழுதுவது, ஜெயலலிதாவுக்கு அறிக்கைகள் எழுதித்தருவது ஆகியன. இந்த கலியபெருமாளை சசி ஜெயா சகோதரிகள் ஒரு நாள் திடீரென்று விரட்டி விட்டனர். அவரை விரட்டி விட்டு விட்டு, அவர் மகன் பூங்குன்றனை அவர் தந்தை இடத்தில் வேலைக்கு வைத்துக் கொண்டனர்.

அந்தா வலது ஓரத்துல கோழி திருடுன மாதிரி நிக்கிறாரே…. அவருதான் தொழில் அதிபர் பூங்குன்றன்.

Form 32 Cho_Page_1


பூங்குன்றனின் தற்போதைய பணி, ஜெயலலிதாவுக்கு வரும் கடிதங்களை பிரித்து அவர் மேசையில் வைப்பது, செய்தித்தாள்களை அவர் பார்வைக்கு வைப்பது உள்ளிட்டன. இந்த பூங்குன்றனும், ஹாட் வீல்ஸ் இன்ஜினியரிங் நிறுவனத்தின் இயக்குநராம். ஜெயலலிதா தன்னை இயக்குநராக இருக்கும்படி கேட்டதும், உடனடியாக ஒப்புக்கொண்டு சாராய ஆலையான மிடாஸுக்கும், ஹாட் வீல்ஸ் இன்ஜினியரிங் நிறுவனத்துக்கும் இயக்குநராக இருக்க ஒப்புக்கொண்ட சோ ராமசாமி, நவம்பர் 2012ல், இந்த நிறுவனங்களையெல்லாம் விட்டு விரட்டி அடிக்கப்பட்டார்.

இந்த நிறுவனங்களில் மீண்டும் இயக்குநரானவர்கள் இரண்டு பேர். ஒருவர் டாக்டர் கே.எஸ்.சிவக்குமார். மற்றொருவர் கார்த்திகேயன் கலியபெருமாள்.

சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்துக்கு மொத்தம் இரண்டு மகள்கள். ஒருவர் பிரபாவதி. மற்றொருவர் அனுராதா. இந்த அனுராதாவின் கணவர்தான் டிடிவி.தினகரன். மற்றொரு மகளான பிரபாவதியின் கணவர்தான் டாக்டர் கே.எஸ்.சிவக்குமார். இந்த சிவக்குமார்தான் ஹாட் வீல்ஸ் இன்ஜினியரிங் நிறுவனத்தில் இயக்குநராக இருப்பவர்.

சிவக்குமார் மற்றும் பிரபாவதி தம்பதியினர்

மற்றொரு இயக்குநரின் பெயர் கார்த்திக்கேயன் கலியபெருமாள். சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள இளவரசிக்கு இரண்டு மகள்கள். ஒருவர் பெயர் ஷகீலா ஜெயராமன். மற்றொருவர் பெயர் கிருஷ்ணபிரியா ஜெயராமன். ஒருவரின் கணவர் பெயர் ராஜராஜன். மற்றொருவரின் கணவர்தான் கார்த்திகேயன். இது தவிர இளவரசிக்கு விவேக் ஜெயராமன் என்றொரு மகன் உண்டு. அவர்தான் இப்போது போயஸ் தோட்டத்து கணக்கு வழக்குகளை கவனித்து வருகிறார்.

சசிகலா மற்றும் இளவரசி

இளவரசியின் மகன் மற்றும் இரு மகள்கள்

இந்த ஹாட் வீல்ஸ் இன்ஜினியரிங் நிறுவனத்தின் பெயரை ஜாஸ் சினிமாஸ் என்று திடீரென்று ஜுலை 2014ல் மாற்றுகிறார்கள். ஏன் திடீரென்று ஒரு நிறுவனத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று வியப்பாக இருக்கிறதா ? சோழியன் குடுமி சும்மா ஆடாதது போலவே, மன்னார்குடி மாபியாவின் மயிர் கூட சும்மா அசையாது.

இந்த ஜாஸ் சினிமாஸ் நிறுவனமும் இவர்கள் தொடங்கிய நிறுவனம் அல்ல.  சினிமா தயாரிப்பாளர் பதம் சந்த் போத்ரா மற்றும் சண்முகம் என்ற இருவர் தொடங்கியதே ஜாஸ் சினிமாஸ்.

சென்னை வேளச்சேரியில் ஃபீனிக்ஸ் மால் என்று ஒரு வணிகவளாகம் தொடங்கப்பட்டு அமோகமாக நடைபெற்று வருவதை அறிவீர்கள் அல்லவா ? இணைப்பு

இந்த வணிகவளாகம் ஜனவரி 2013ல் தொடங்கப்பட்டது. இந்த வணிகவளாகம் மும்பையைச் சேர்ந்த பீனிக்ஸ் மில்ஸ் மற்றும் மற்றொரு தனியார் நிறுவனத்தோடு சேர்ந்து தொடங்கப்பட்டது. இந்த வணிகவளாகத்தில் மொத்தம் 11 தியேட்டர்கள் கட்டப்பட்டன. வணிகவளாகம் ஜனவரி 2013ல் தொடங்கப்பட்டாலும், இதில் உள்ள தியேட்டர் மட்டும் மார்ச் 2014ல்தான் தொடங்கப்பட்டது. சென்னை நகரத்திலேயே மிகப்பெரிய வணிகவளாகத்தைக் கட்டியவர்களுக்கு தியேட்டரை மட்டும் உடனடியாக கட்டத் தெரியாதா ? ஒரு ஆண்டு தாமதம் ஏன் ? ஏன் தாமதம் என்றால் சென்னை மாநகரக் காவல்துறையும் இதர அமைப்புகளும், இந்த தியேட்டர்களைத் திறக்க அனுமதி தரவில்லை.

நம்மைப் போன்ற சாதாரண நபர்கள் ஒரு வீடோ அல்லது கடையோ கட்டினால், அதற்கு மாநகராட்சியோ, சிஎம்டிஏவோ, காவல்துறையோ அனுமதி தராமல் மாதக்கணக்கில் இழுத்தடிப்பது இயல்பான விஷயமே. ஆனால், பல கோடி ரூபாய் முதலீட்டில் வணிக வளாகம் தொடங்குபவர்கள் எதற்காக இப்படி அல்லாட வேண்டும் ? அதுவும் ஒரு வருடமாக ? ஒரு வருடம் பதினோரு தியேட்டர்களை பூட்டி வைத்திருந்தால் ஏற்படும் நஷ்டம் என்ன சிறு தொகையா ? அதுவும், சத்யம் சினிமாஸ் போன்ற மிகப்பெரிய குழுமத்துக்கு சொந்தமான ஒரு தியேட்டரை திறக்க ஒரு வருடமா ? பிறகு ஏன் இவ்வளவு தாமதம் ?

இந்த நேரத்தில்தான் சென்னை 17, தியாகராய நகர், வெங்கட்ராமன் தெரு, பழைய எண் 19 மற்றும் 20/12 புதிய எண் 38/12 என்ற முகவரியில் காலை 10.30 மணிக்கு நடந்த ஒரு கூட்டத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த கூட்டம் ஹாட் வீல்ஸ் இன்ஜினியரிங் நிறுவனத்தின் அசாதராணமான பொதுக்கூட்டம். அந்தக் கூட்டத்துக்கு தலைமை தாங்கியது யார் தெரியுமா ? சொத்துக் குவிப்பு வழக்கில் இரண்டாவது குற்றவாளியான விவேகானந்தனின் மகள் வி.கே.சசிகலா. அதில் பங்கெடுத்த மற்றொருவர் சொத்துக் குவிப்பு வழக்கில் மூன்றாவது குற்றவாளியும், சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகளுமான இளவரசி.

VK Sasikala, Ilavarasi, minutes_Page_1
VK Sasikala, Ilavarasi, minutes_Page_2
VK Sasikala, Ilavarasi, minutes_Page_9

கூட்டத்தில் என்ன முடிவெடுக்கப்பட்டது என்பதுதான் சிறப்பான செய்தி. ஹாட் வீல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களாகவும், லீஸ் உரிமையாளர்களாகவும் தியேட்டர்கள், மல்டிப்ளெக்ஸுகள், விளையாட்டு அரங்கங்கள், வீடியோ கேம் நிலையங்கள் ரெக்கார்டிங் நிலையங்கள் உள்ளிட்டவற்றை நடத்துவது என்று முடிவெடுத்தனர் இரண்டு குற்றவாளிகளும். சத்யம் சினிமாஸ் நிறுவனம், வேளச்சேரி மாலில் உள்ள 11 தியேட்டர்களை வாங்குவதென்று, இந்த மால் கட்டத் தொடங்கப்பட்ட காலத்திலேயே ஒப்பந்தம் போட்டது. அதன்படி, இந்த மால் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்த சமயத்திலேயே, மன்னார்குடி மாபியா கூட்டம் சத்யம் நிறுவனத்தாரிடம் இந்த 11 தியேட்டர்களையும் தங்கள் வசம் ஒப்படைக்குமாறு மிரட்டுகிறது. ஆனால் அவர்களோ, முடியவே முடியாது என்று உறுதியாக மறுக்கின்றனர். சின்னம்மாவுக்காக கேட்கிறோம் என்று சொன்ன பிறகும் முடியாது என்று சொல்ல எவ்வளவு இறுமாப்பு இருக்கும். வந்ததே கோபம் சின்னம்மாவுக்கு. விஷயத்தை தன் வேலையாள் ஜார்ஜிடம் சொல்லுகிறார். சின்னம்மா காலால் இட்ட பணியை தலையால் முடிப்பதல்லவா ஜார்ஜின் கடமை ???

இதற்கு முன்னதாகவே, சின்னம்மா இந்த தியேட்டரை விலைக்கு வாங்க விருப்பமாக இருக்கிறார் என்பதை அறிந்த ஜார்ஜ், இந்த தியேட்டரை திறக்க தடையில்லா சான்று தராமல் மாதக்கணக்கில் இழுத்தடிக்கிறார். ஆனால் சத்யம் குழுமம் எதற்கும் சளைக்கவில்லை.  சின்னம்மா வேண்டும் என்று சொல்லியும், விற்க மறுப்பதற்கு உனக்கு என்ன துணிச்சல் என்று வெகுண்டெழுந்தார் ஜார்ஜ். உடனடியாக நில அபகரிப்புப் புகார் பாய்கிறது சத்யம் நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீது. சத்யம் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான ஸ்வரூப் ரெட்டி மற்றும் அவர் உறவினர் சுஜய் ஆனந்த் ரெட்டி ஆகியோர் மீது நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்யப்படுகிறது. சுஜய் ஆனந்த் ரெட்டி கைது செய்யப்படுகிறார். ஸ்வரூப் ரெட்டி தலைமைறைவாகிறார். ஆர்ச்சிட் ஃபவுன்டேஷன் என்ற நிறுவனத்தின் இயக்குநரான சவுந்தரபாண்டியன் என்பவரும் கைது செய்யப்படுகிறார். தலைமறைவாக இருந்த ஸ்வரூப் ரெட்டியிடம் விஷயம் தெள்ளத்தெளிவாக விளக்கப்படுகிறது. தியேட்டரை விற்றால் தப்பிப்பாய். இல்லையென்றால் புழல்தான் என்ற விஷயம் விளக்கிச் சொல்லப்படுகிறது. பணிகிறார் ரெட்டி. தியேட்டர் கைமாறுகிறது. இணைப்பு 1   இணைப்பு 2  இணைப்பு 3

ஒரு தொழில் என்று தொடங்கினால் அதை சரியாகச் செய்யவேண்டுமல்லவா ? அதற்காகத்தான் ஹாட் வீல்ஸ் இன்ஜினியரிங் என்ற நிறுவனத்தின் பெயரை ஜாஸ் சினிமாஸ் என்று சின்னம்மா மாற்றுகிறார்.

இன்னும் ஒரே மாதத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வர இருந்த நிலையில், இப்படி ஒரு கூட்டத்தை நடத்தி, அடாவடியாக 11 தியேட்டர்களை அடித்துப்பிடுங்க இந்த பேராசைக்காரிகள் இருவருக்கும் எத்தனை துணிச்சல் இருக்க வேண்டும் ? இது யார் தந்த துணிச்சல் ? ஜெயலலிதா இல்லாவிட்டால், இவர்களால் சினிமாத் தொழிலில் பழம் தின்று கொட்டை போட்ட சத்யம் குழுவினரை மிரட்டி 11 தியேட்டர்களை விலைக்கு வாங்க முடியுமா ?

தியேட்டர்கள் கைக்கு வந்த பிறகு, சென்னை சத்யம் தியேட்டர்கள் குழுமத்துக்கு இந்த 11 தியேட்டர்களும் லீசுக்கு விடப்பட்டுள்ளன.

1991ல் 66.5 கோடி ரூபாய்க்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து, அதற்கான வழக்கை 18 ஆண்டுகள் இழுத்தடித்து, 30 நாட்களில் அந்த வழக்கில் தீர்ப்பு என்று இருக்கும் நிலையில், ஒரு தொழிலதிபரை மிரட்டி 11 தியேட்டர்களை விலைக்கு வாங்குகிறார்கள் என்றால், இந்த முட்டாள் மக்கள் நம்மை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுப்பார்கள் என்ற திமிரும் அகம்பாவமும்தானே… ?

sasi3

இந்த விவகாரங்களையெல்லாம் கையில் எடுத்து போராட்டத்தில் இறங்க வேண்டிய திமுக, இதை விட பகாசுர ஊழலில் ஈடுபட்டு, மகளும் மனைவியும் எப்போது சிறை செல்வார்களோ என்று அதன் தலைவரை வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது. திமுகவில் அமைச்சர்களாக இருந்த பெரும்பாலான அமைச்சர்கள் சொத்துக் குவிப்பு வழக்கை எதிர்நோக்கி இருக்கிறார்கள்.

இதுதான் தமிழகத்தின் இன்றைய வேதனையான நிலைமை. இந்தக் கட்டுரை இத்தோடு முற்றுப்பெறவில்லை. ஜெயலலிதா 2001க்குப்பிறகு மன்னார்குடி மாபியா பெயரில் புதிதாக தொடங்கியுள்ள பல்வேறு புதிய நிறுவனங்களின் விபரங்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்படும்.

மைசூர் சீமாட்டி நிரந்தரமாக இருக்க வேண்டிய இடம் சிறை அல்லவா ?

தொடரும்

சிறுதாவூரில் 25.40 ஏக்கரில் பண்ணை வீடு, பையனூரில் 3 ஏக்கரில் பண்ணை வீடு, கன்னியாக்குமரியில் 1190 ஏக்கர் நிலம், திருவைகுண்டத்தில் 1167 ஏக்கர் நிலம், காஞ்சிபுரத்தில் 300 ஏக்கர் நிலம், ஐதரபாத்தில் திராட்சைத் தோட்டம், மைலாப்பூரில் 1407 சதுர அடி கட்டிடத்தோடு கூடிய நிலம், கிண்டி எஸ்டேட்டில் டான்சி நிலம், மற்றும் சசிகலா பெயரில் ஆயிரக்கணக்கான நிலங்கள், ஆகியவற்றை வாங்கிக் குவித்துள்ளார்.   தனக்கென்று யாருமே இல்லை என்று கூறும் ஜெயலலிதா எதற்காக சசிகலா உள்ளிட்ட மன்னார்குடி மாஃபியா ஆட்களை உடன் வைத்துள்ளார் என்பது தெரியவில்லை.   லஞ்ச ஒழிப்புச் சோதனையின்போது, ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டிலிருந்து 600க்கும் மேற்பட்ட ஜோடி செருப்புகள், நூற்றுக்கணக்கான வாட்சுகள், பல நூற்றுக்கணக்கான பவுன் தங்க நகைகள் ஆகியவற்றை கண்டுபிடித்தது.  தான் உயிர்வாழ்வதே இந்த இயக்கத்துக்காகத்தான் என்று கூறும் ஜெயலலிதா, யார் அனுப்பியது என்றே தெரியாத 3 லட்சம் டாலர்கள் மதிப்பிலான வரைவோலையை எதற்காக தனது மைலாப்பூர் கனரா வங்கியில் போட்டுக் கொண்டு, அதற்கு வருமான வரி செலுத்தினார் ?   சசிகலாவும், இளவரசியும் எதற்காக இன்னும் ஜெயலலிதாவோடு   வசிக்கிறார்கள் ?

சிறை செல்லும் சீமாட்டி முதல் பாகம்

இதர ஐந்து பாகங்கள் இணைப்பு 

உங்களுக்காகவே உயிர் வாழ்கிறேன் என்பதை நான் ஆத்மார்த்தமாக உணர்கிறேன். இறைவன் எனக்கு விடுத்த அழைப்பாகவே இந்த வாழ்வை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறும் ஜெயலலிதா,  பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை எப்படி அடாவடி செய்து கைப்பற்றினார் என்பதை நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில் விலாவரியாகவே விவாதித்துள்ளார்.

ஜெயலலிதாவின் பேச்சு முழுக்க, பொய்யும் புரட்டும் நிறைந்தவையே என்பதற்கு அவரின் இந்த கடிதம் ஒரு சிறந்த உதாரணம்.    தமிழ் மக்களுக்காக உயிர் வாழ்பவர்தான் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சாராயக்கடைகளை திறந்து வைத்துள்ளார்.   தமிழ் மக்களை குடிகாரர்களாக்கி அழகு பார்க்கிறார்    குடியின் பிடியிலிருந்து தமிழக மக்கள் மீளாதவண்ணம் கவனமாக இருக்கிறார்.

தமிழக மக்களின் மகிழ்ச்சியை தனது லட்சியமாக வைத்திருக்கும் நபர்தான், தொடர்ந்து மூன்று முறை மின்கட்டணங்களை ஏற்றியதோடு, பால் விலை மற்றும் பஸ் கட்டணங்களை உயர்த்தினார்.   ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் நாள் முதல், தொடர்ந்து மக்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.    தலைமைச் செயலகத்துக்காக கட்டப்பட்ட கட்டிடத்தை, வம்படியாக மருத்துவமனையாக மாற்றினார்.    அண்ணா நூலகத்தை மாற்ற முயன்று அதில் தோல்வியுற்றதால், அதை தற்போது பராமரிக்காமல் கிடப்பில் போட்டு உள்ளார்.   தமிழக மக்களின் வளர்ச்சியை நோக்கமாக வைத்திருக்கும் ஜெயலலிதாதான், தமிழகத்தில் ஒரே ஒரு புதிய தொழிற்சாலை கூட கடந்த நான்கரை ஆண்டுகளாக தொடங்கப்படாமல் பார்த்துக் கொண்டுள்ளார்.   இவர்தான், தமிழகத்தில் வேலைவாய்ப்பு என்பதே அறவே இல்லாத நிலையை உருவாக்கியவர்.

மின்வெட்டு காரணத்தால் தமிழகத்தை இருட்டில் அமர்த்தினார் ஜெயலலிதா.    மின்வெட்டில் வாடிக்கொண்டிருக்கும் தமிழகத்தின் தேவைகள் அறிந்து, போர்க்கால அடிப்படையில் தொடங்கப்பட்டிருக்க வேண்டிய மின் திட்டங்கள் அனைத்தும் தாமதம் செய்யப்பட்டுள்ளன.  சமீபத்தில் கூட உப்பூர் அனல் மின் நிலையத்துக்கான டெண்டருக்கான கடைசி தேதியை மூன்றாவது முறையாக தள்ளி வைத்திருக்கிறது மின் வாரியம்.     ஒரு நிறுவனம் கூட டெண்டரில் பங்கேற்க வரவில்லை என்பதுதான் இதற்கான காரணம்.    மின் வெட்டுத் திட்டங்கள் ஒன்று கூட நிறைவேற்றப்படாமல், நீதிமன்ற வழக்குகளிலும், கோப்புகளிலும் முடங்கிப் போய் கிடக்கிறது.  3 ரூபாய்க்கு மின்சாரம் கிடைக்க வேண்டிய இடத்தில் ரூபாய் 8 முதல் 12 வரை தனியாரிடமிருந்து வாங்கும் அவலச் சூழலுக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தின் உட்கட்டமைப்புக்காக உருவாக்கப்பட்ட மதுரவாயல் பறக்கும் சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை குழிதோண்டி புதைத்தவர்.   இப்படி தமிழகத்தை பின்னோக்கி திருப்பி அழைத்துச் சென்றவர்தான் இன்று தமிழகத்தின் வளர்ச்சி பற்றி பேசுகிறார்.

நாடே வியந்து பாராட்டும் வண்ணம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி, அதன் மூலம் 2,42,160 கோடி ரூபாய்க்கான முதலீட்டிற்கு வழிவகை செய்து, எண்ணற்ற புதிய தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொடங்கப் படுவதற்கும், லட்சக்கணக்கான இளைஞர்கள், இளம் பெண்கள் புதிய வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தருகின்ற மன நிறைவோடு இந்த ஆண்டு விழாவை நாம் கொண்டாடுகிறோம்.

உலக முதலீட்டாளர் மாநாடு எவ்வளவு பெரிய மோசடி என்பது சவுக்கு தளத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.   2 லட்சத்து 42 ஆயிரம் கோடி என்று படோடாபமாக அறிவிப்புகளை வெளியிட்டாலும், இதில் ஆயிரம் கோடி கூட உருப்படியான முதலீடாக வந்து சேரவில்லை.  மேலும், இந்த எண்ணிக்கையே மோசடி  என்று விபரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.   எண்ணூர் மற்றும் உடன்குடி அனல் மின் நிலைய டெண்டர்களை குறைந்த விலைப்புள்ளிகள் அளித்திருந்ததால் சீனவாச் சேர்ந்த நிறுவனங்களுக்கே வழங்கியிருக்க வேண்டும்.  மாறாக, விதிகளை மீறி சட்ட விரோதமாக பிஎச்இஎல்  நிறுவனத்துக்கு வழங்கியதன் மூலம் 1526 கோடி ரூபாய் இழப்பை சந்தித்ததோடு அல்லாமல், நீதிமன்ற வழக்கில் சிக்கி இரண்டு திட்டங்களும் கரையேறாமல் காத்திருக்கின்றன.   தமிழகத்துக்கு தொடர்ந்து வரும் முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்கும், குஜராத், நொய்டா போன்ற இடங்களுக்கும் தடம் மாறிச் செல்வது குறித்து எவ்வித கவலையும் இல்லாமல் இருக்கிறார் ஜெயலலிதா.   நோக்கியா தொழிற்சாலை மூடப்பட்டதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒரே நாளில் வேலை இழந்தனர்.   நோக்கியாவைத் தொடர்ந்து ஃபாக்ஸ்கான் நிறுவனமும் தனது விரிவாக்கத்தை குஜராத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது. இதுபோல பல்வேறு தொழிலதிபர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்கவே தயங்கிய வண்ணம் இருப்பதன் முக்கிய காரணமே, கட்சி நிதி என்ற பெயரில், ஜெயலலிதா வசூலிக்கும் பெருந்தொகைதான்.  இந்த பெருந்தொகைதான், தொழிலதிபர்களை அலறி ஓட வைத்துள்ளது.  இந்த விபரங்களெல்லாம் ஜெயலலிதாவுக்கு நன்கு தெரிந்தே நடக்கிறது.    ஆனால், இலவச ஆடு மாடு, மிக்சி கிரைண்டர் மற்றும் விலை குறைந்த இட்லி சப்பாத்தி வழங்குவதன் மூலம், மீண்டும் வெற்றி பெற்று விடலாம் என்ற திமிரிலேயே இருக்கிறார் ஜெயலலிதா.

ஜெயலலிதா என்றதும் நினைவுக்கு வருவது என்ன ?  சொத்துக் குவிப்பு வழக்கு,  மகாமகம், சந்திரலேகா மீது ஆசிட் வீச்சு, சுப்ரமணிய சுவாமிக்கு எதிரான ஆபாச போராட்டம், உயர்நீதிமன்ற நீதிபதி சீனிவாசன் வீட்டுக்கு மின் இணைப்பையும் குடிநீர் இணைப்பையும் நிறுத்தியது, வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம் மற்றும் விஜயன் மீதான தாக்குதல், தேர்தல் ஆணையர் டிஎன் சேஷன் மீதான தாக்குதல், அமைச்சர் ப.சிதம்பரம் மீது தாக்குதல், நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் மருமகன் மீது கஞ்சா வழக்கு, வளர்ப்பு மகன் திருமணம், அதே வளர்ப்பு மகன் மீது ஹெராயின் வழக்கு, செரினா மீது கஞ்சா வழக்கு, ஆடிட்டருக்கு செருப்படி, கருணாநிதி கைது, அதையொட்டி நடந்த பேரணியில் ரவுடிகளை விட்டுத் தாக்குதல், எண்ணிலடங்கா ஊழல் வழக்குகள் …. இவைதானே நம் நினைவுக்கு வருவன ?

அடுத்ததாக ஜெயலலிதா, “எனது தலைமையிலான அரசுதுறை தோறும் ஆற்றி வரும் மகத்தான மக்கள் நலப்பணிகளை மக்களுக்கு எடுத்துச்சொல்லுங்கள். அனைவரும் மகிழும் வண்ணம் மக்களுக்குத் தொண்டாற்றுங்கள். பல்வேறு பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி செய்து வரும் மக்கள் பிரதிநிதிகளாகிய நிர்வாகிகளும்நிர்வாகப் பொறுப்புகளில் பணியாற்றி வருபவர்களும்தொண்டர்களும் ஒவ்வொருவரும் தங்கள் பணிகளை நேர்மையாகவும்திறமையாகவும் செய்யுங்கள். அ.தி.மு.க.விற்கு பெருமை சேர்க்கும் வண்ணம் உங்கள் ஒவ்வொருவருடைய பணியும் அமையட்டும்.

ஜெயலலிதா மற்றும் நரேந்திர மோடியின் பேச்சுக்களை தொடர்ந்து கவனித்து வருபவர்கள் ஒரு விஷயத்தை கவனித்திருக்க முடியும்.    நான், எனது, என்னுடைய என்ற வார்த்தை பிரயோகங்கள் அவர்களின் பேச்சுக்களில் அதிகமாக இருக்கும்.     ஜெயலலிதா அரசு மட்டுமல்ல.  அனைத்து அரசுகளும், தேர்ந்தெடுக்கப்படுவது, அனைவரது உழைப்பால்தான்.  தேர்ந்தெடுக்கப்படும் அரசுக்கு கொடுக்கப்படும் பொறுப்பு மக்களின் வரிப்பணத்தை சரியான முறையில் செலவு செய்து, மக்களுக்கு நன்மை ஏற்படும் வகையில் திட்டங்களை தீட்டி அதை நடைமுறைப் படுத்துவதே.    மக்கள் வரிப்பணத்தை நிர்வகிக்க வழங்கப்படும் ஒரு அதிகாரம்.  அவ்வளவே.   அதை விடுத்து விட்டு, ஜெயலலிதாவின் தகப்பனால் ஜெயராமோ, அவர்  தாயார் சந்தியாதேவியோ, அல்லது ஜெயலலிதாவோ சம்பாதித்த தொகையில் செலவு செய்வதுபோல, ஜெயலலிதா எப்போது பார்த்தாலும், என் அரசு, நான் என்று பேசுவது அவரது உச்சகட்ட அகந்தையை மட்டுமே காட்டுகிறது.

என்னைத்தவிர, வேறு யாரும் கிடையாது என்ற ஆணவத்தின் உச்சகட்டமே இத்தகைய பேச்சுக்கள்.   நலப்பணிகளை ஆற்றுவதாக கூறும் ஜெயலலிதாதான் ஆண்டுக்கு இரண்டு முறை அரசு செலவில், கொடநாட்டில் அமர்ந்து கொண்டு கோலோச்சுகிறார்.   இவரது வெட்டிச் செலவு இல்லாமல், அடிமைகளும் அதிகாரிகளும், அரசு செலவில் கொடநாடு சென்று மக்களின் வரிப்பணத்தை வீணாக்குகிறார்கள்.

இப்படி மக்கள் விரோத நடவடிக்கைகளின் ஒட்டுமொத்த உருவமாக இருக்கிறார் ஜெயலலிதா.    முட்டாள் தமிழக மக்கள், பணத்தை வாங்கிக் கொண்டு தன்னை மீண்டும் தேர்ந்தெடுப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறார் ஜெயலலிதா.  ஆனால் இதே ஜெயலலிதாவையே பர்கூரில் தோற்கடித்தவர்கள் தமிழக மக்கள் என்பதை வசதியாக மறந்து விடுகிறார் ஜெயலலிதா.

தற்போது ஜெயலலிதாவுக்கு மீண்டும் ஒரு சவுக்கடியைத் தருவதற்கு மக்கள் தயாராகியே வருகிறார்கள்.

மக்களே போல்வர் கயவர் அவரன்ன

ஒப்பாரி யாங்கண்ட தில்

குணத்தில் கயவராக இருப்பர். ஆனால், நல்லவரைப் போலக் காட்டிக் கொள்வார். மனிதர்களிடம் மட்டும்தான் இப்படி இருவகையான நிலைகளை ஒரே உருவத்தில் காண முடியும்

ஜெயலலிதா: சொந்த வரலாறும் சொத்து வரலாறும்!

ஆ.பழனியப்பன்வருண்.நாHASSIFKHAN K P MHARIF MOHAMED S

ஜெயலலிதா

ஜெயலலிதா

ஜெயலலிதா முதல்வர் ஆன பிறகு வாங்கப்பட்ட சொத்துகள் அனைத்துமே சர்ச்சைக்குரியவை.பிரீமியம் ஸ்டோரி

ஜெயலலிதாவின் மரணம் உட்பட அவர் சம்பந்தப்பட்ட பல மர்மங்கள் விலகாத நிலையில், மிக முக்கியமான ஒரு பிரச்னையைத் தீர்த்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

அவர் மறைந்து மூன்றாண்டுகள் கடந்த நிலையில், அவரின் அண்ணன் பிள்ளைகளான ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோரை ஜெயலலிதா வின் நேரடி வாரிசு என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இனி ஜெயலலிதாவின் சொத்துகள் அனைத்தும் தீபா, தீபக் ஆகிய இருவருக்கும் வந்துசேரும். ‘ஜெயலலிதாவுக்குச் சொந்தமானது, ரூ.913 கோடி மதிப்புள்ள சொத்துகள்’ என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. சொத்துகள் விவரம் குறித்து ஜெ.தீபாவிடம் நாம் கேட்டபோது, “தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் சொத்துகள் பற்றிய எந்த விவரமும் என் கைக்கு வந்துசேரவில்லை. அந்த விவரங்கள் கிடைத்தால்தான் அதுபற்றி என்னால் சொல்ல முடியும்” என்றார்.

2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையத்திடம் ஜெயலலிதா அளித்த பிரமாணப்பத்திரத்தில் தன் சொத்துவிவரங்களை அவர் குறிப்பிட்டுள்ளார். சிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட் உட்பட ஜெயலலிதாவுக்குச் சொந்தமானவை என்று எத்தனையோ சொத்துகளின் பெயர்கள் நீண்டகாலமாக அடிபட்டுவந்தாலும், போயஸ் கார்டன் இல்லம், ஹைதராபாத் திராட்சைத் தோட்டம் உள்ளிட்ட சிலவற்றை மட்டுமே அவர் குறிப்பிட்டுள்ளார். தன் சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.113 கோடி என்றும் ஜெயலலிதா கூறியிருக்கிறார். அந்தச் சொத்துகள் அனைத்தும் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தீபாவுக்கும், தீபக்குக்கும் வந்து சேர வேண்டும். ஆனால், அவ்வளவு எளிதில் அது நடந்துவிடுமா என்பது தெரியவில்லை.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் என்பது தமிழக அரசியலில் மிகப்பெரும் அதிகாரக் குறியீடு. முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அங்கே இருந்துதான் தன் சாம்ராஜ்ஜியத்தை ஜெயலலிதா நடத்தினார். சிறையிலிருந்து வெளிவரக் காத்திருக்கும் சசிகலாவுக்கு போயஸ் கார்டன் இல்லத்தைக் கைப்பற்றுவது மிகப்பெரிய கனவுத்திட்டமாக இருக்கலாம். இன்னொருபுறம், எக்காரணம் கொண்டும் போயஸ் கார்டன் இல்லத்தை சசிகலா கைப்பற்றிவிடக் கூடாது என்பதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார். எனவேதான், அதை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு ஓர் அவசரச் சட்டத்தையே கொண்டுவந்திருக்கிறார். அதற்கு எதிராக உயர் நீதிமன்றத் தீர்ப்பு அமைந்துள்ளது என்றாலும், எடப்பாடி பழனிசாமி அரசு அவ்வளவு எளிதில் அதை விட்டுக்கொடுத்துவிடுமா என்பது தெரியவில்லை.

சென்னை போயஸ் கார்டன்
சென்னை போயஸ் கார்டன்

போயஸ் கார்டன் இல்லம்!

ஜெயலலிதா முதல்வர் ஆன பிறகு வாங்கப்பட்ட சொத்துகள் அனைத்துமே சர்ச்சைக்குரியவை. ஆனால், நடிப்புலகில் இருந்தபோது அவர் வாங்கிய சொத்துகள் குறித்து எவரும் கேள்வியெழுப்ப முடியாது. காரணம், ஜெயலலிதாவும் அவரின் தாயார் சந்தியாவும் தங்கள் உழைப்பால் அவற்றை வாங்கியிருக்கிறார்கள். ஜெயலலிதாவும் சந்தியாவும் 1967-ம் ஆண்டு போயஸ் கார்டனில் ரூ.1.32 லட்சத்துக்குப் பத்து கிரவுண்டு நிலம் வாங்கி வீடு கட்டி யிருக்கிறார்கள். ‘ஜெயா விலாஸ்’ என்று பெயர் சூட்ட வேண்டுமென்பது தாயாரின் விருப்பம். ஆனால், ‘வேதா நிலையம்’ என்று பெயர் வைத்தார் ஜெயலலிதா. சந்தியாவின் நிஜப்பெயர் வேதவல்லி. இந்த இல்லத்தை யொட்டிய ஒரு கட்டடத்தை 1997-ல் ரூ.10.2 லட்சத்துக்கு ஜெயலலிதா வாங்கினார். அங்கு, ஜெயா தொலைக்காட்சி அலுவலகம் சில ஆண்டுகள் செயல்பட்டது. இன்றைய பிரதமர் நரேந்திர மோடி உட்பட தேசியத் தலைவர்களெல்லாம் வந்துசென்ற பெருமை வேதா இல்லத்துக்கு உண்டு. தமிழ்நாட்டின் தலைவிதியையே தீர்மானித்த அந்த இல்லம் தற்போது பூட்டப்பட்டுக் கிடக்கிறது. அதன் தற்போதைய மதிப்பு ரூ.90 கோடி என்று சொல்லப்படுகிறது.

ஜெயலலிதா
ஜெயலலிதா

ஹைதராபாத் திராட்சைத் தோட்டம்!

ஜெயலலிதா, சினிமாவில் படுபிஸியாக நடித்துக் கொண்டிருந்தபோது சென்னைக்கும் ஹைதராபாத்துக்குமாகப் பறந்து கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில், 1967-ம் ஆண்டு, தாயாருடன் சேர்ந்து செகந்திராபாத் ஸ்ரீநகர் காலனியில் 651 சதுர மீட்டர் நிலம் ஒன்றை ரூ.50,000 கொடுத்து வாங்கினார். இன்றைக்கு அதன் மதிப்பு ரூ.15 கோடி என்று சொல்லப்படுகிறது. ஆனால், ரூ.5.03 கோடி என்று பிரமாணப்பத்திரத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். ரெங்காரெட்டி மாவட்டம் ஜீடிமெட்லா கிராமத்தில் ரூ.14.5 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கி, அதில் பண்ணை அமைத்தார் ஜெயலலிதா. இவை போக சென்னை நுங்கம் பாக்கத்தில் உள்ள பார்சன்ஸ் காம்ப்ளக்ஸில் ஒரு கட்டடம், செயின்ட்மேரீஸ் சாலையில் ஒரு கட்டடம் ஆகியவை ஜெயலலிதா பெயரில் உள்ளன.

கொடநாடு எஸ்டேட்!

ஜெயலலிதாவின் மனதுக்கு நெருக்கமான இடம் கொடநாடு எஸ்டேட். முதன்முறையாக முதல்வரான பிறகு, தேயிலைத் தோட்ட அதிபர்களைச் சந்திக்க ஊட்டிக்குச் சென்ற ஜெயலலிதாவின் கவனத்தைக் கவர்ந்தது கொடநாடு தேயிலை எஸ்டேட். உடனே அதை வாங்க முடிவுசெய்தார். 924 ஏக்கர் பரப்பளவிலான அந்த எஸ்டேட்டுக்குள் சொகுசுப்படகுகளுடன் கூடிய 10 ஏக்கரிலான ஏரி, வெள்ளை நிற ஆடம்பர மாளிகை, தொழிலாளர்களுக்கான குடியிருப்புகள், தேயிலைத் தொழிற்சாலை ஆகியவை உள்ளன. ‘ஜெயலலிதாவுடைய எஸ்டேட்’ என்று மக்கள் பேசிக்கொண்டாலும், ரூ.1,115 கோடி மதிப்புள்ள அந்த எஸ்டேட்டில் ஜெயலலிதாவின் பங்கு என்பது வெறும் ரூ.63.03 கோடி மட்டுமே. மீதிப் பங்குகள் அனைத்தும் சசிகலா, இளவரசி மற்றும் அவரின் குடும்பத்தினருக்கே சொந்தம்.

ஜெயலலிதா: சொந்த வரலாறும் சொத்து வரலாறும்!

வெளிநாட்டவரான பீட்டர் என்பவரிடமிருந்து கொடநாடு எஸ்டேட்டை வாங்கியுள்ளனர். ரூ.7.6 கோடிக்கு டி.டி கொடுத்துவிட்டு,. மீதி ரூ.4 கோடியை ரொக்கமாகத் தருவதாகக் கூறியுள்ளனர். அந்த ரூ.4 கோடி இன்னும் அவருக்குப் போய்ச்சேரவில்லை. குண்டர்களை வைத்தும், வருமான வரித்துறையை ஏவியும் தம்மை மிரட்டி எஸ்டேட்டை அபகரித்து விட்டார்கள் என இன்றைக்கும் கதறுகிறார் பீட்டர். பிற்காலத்தில், அருகிலுள்ள எஸ்டேட்களையெல்லாம் வாங்கி விரிவுபடுத்தியிருக்கிறார்கள். 200 ஏக்கர் கர்ஸன் எஸ்டேட், 1,100 ஏக்கர் தாய் சோலை எஸ்டேட், எடக்காடு அருகே 750 ஏக்கரில் ஒரு எஸ்டேட் என வாங்கிக் குவித்தனர். கர்ஸன் எஸ்டேட்டை வாங்கும் தறுவாயில்தான், கார்டனிலிருந்து சசிகலா வெளியேற்றப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது.

தொகுப்பு: நா.வருண், இன்ஃபோகிராபிக்ஸ்: எஸ்.ஆரிஃப் முகம்மது
தொகுப்பு: நா.வருண், இன்ஃபோகிராபிக்ஸ்: எஸ்.ஆரிஃப் முகம்மது

சிறுதாவூர் பங்களா!

சென்னையை அடுத்த சிறுதாவூரில் 115 ஏக்கரில் சவுக்கு மரங்கள் சூழ பிரமாண்டமான பங்களா உள்ளது. அது, ஜெயலலிதா ஓய்வெடுக்கச் செல்லும் இடம். 45 அறைகள், நான்கு சமையல் கூடங்கள் என ஆடம்பரமான அந்த பங்களா, ஜெயலலிதாவுடையது என்ற பேச்சு இருந்தாலும், அது அவருக்குச் சொந்தமானதல்ல என்று சொல்லப்படுகிறது. சசிகலா தரப்பினர் பங்குதாரர்களாக இருக்கும் நிறுவனத்தின் பெயரில் இது வாங்கப்பட்டிருக்கிறது. பட்டியலின மக்களுக்குச் சொந்தமான நிலங்களை அபகரித்து அந்த பங்களாவைக் கட்டியதாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகியோர்மீது குற்றச்சாட்டு எழுந்து, நீதிபதி சிவசுப்பிரமணியம் தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையமே அமைக்கப்பட்டது. விசாரணைக்குப் பிறகு, அந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை என்று கூறிவிட்டது ஆணையம்.

தீபா, தீபக்
தீபா, தீபக்

பையனூர் பங்களா!

சிறுதாவூருக்கு அருகிலுள்ள பையனூரில் பிரமாண்டமான பண்ணை வீடு 1992-93-ல் வாங்கப்பட்டது. தனக்குச் சொந்தமான அந்தச் சொத்தை சசிகலா தரப்பினர் மிரட்டி வாங்கினர் என்று குற்றம்சாட்டுகிறார் இசையமைப்பாளர் கங்கை அமரன். அன்றைக்கு ரூ.1.5 கோடி மதிப்புடைய அந்த பங்களாவின் இன்றைய மதிப்பு ரூ.75 கோடி என்கிறார்கள். மிரட்டி வாங்கிய தன் சொத்தை எப்படியும் மீட்டுவிடுவேன் என்று சொல்லிவருகிறார் கங்கை அமரன்.

இளவரசி

சசிகலா மற்றும் அவரின் உறவினர்கள் இயக்குநர்களாக இருக்கும் பல நிறுவனங்களின் பெயர்களில் வாங்கப்பட்ட சொத்துகளில் ஜெயலலிதா பங்குதாரராக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஜெயா பப்ளிகேஷனஸ், சசி என்டர்பிரைசஸ் ஆகியவற்றில் ஜெயலலிதாவுக்கு 50 சதவிகிதம் பங்கு இருப்பதாக குன்ஹா தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் மர்மங்களைப்போலவே, அவருடைய சொத்துகள் பற்றிய மர்மங்களும் விலகாதவைதான்.

1991-1996 ஆட்சிக்காலத்தில் ஊழல்செய்ததாக ஜெயலலிதா கைது செய்யப்பட்டபோது அவர் வீட்டில் குவியல் குவியலாகச் செருப்புகள் முதல் நகைகள் வரை காட்சிப்படுத்தப்பட்டன. சொத்துகளை வாங்கிக் குவிப்பதற்காகப் பலர் மிரட்டப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. வளர்ப்பு மகன் திருமணம், மக்கள் பணத்தில் ஜெயலலிதாவும் சசிகலாவும் இணைந்து நடத்திய மெகா ஈவன்ட்.

ஜெயலலிதா: சொந்த வரலாறும் சொத்து வரலாறும்!

எத்தனையோ வழக்குகள், புகார்கள், விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்ப்பட்டபோதும் சொத்துகளை வாங்கிக் குவித்த ஜெயலலிதா, இவை அனைத்தும் தீபாவுக்கும் தீபக்குக்கும் போய்ச்சேரும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார். ஜெயலலிதாவுக்குப் பிறகு ஆட்சியும் கட்சியும் சொத்துகளும் தனக்குத்தான் என்று நிழலாக நீங்காமல் இருந்தார் சசிகலா. அவர் கையில் கட்சியும் இல்லை; ஆட்சியும் இல்லை.

ஜெயலலிதா,  சசிகலா
ஜெயலலிதா, சசிகலா

விந்தைகளும் மர்மங்களும் நிறைந்ததுதான் ஜெயலலிதாவின் வாழ்க்கையும் மரணமும். ஆனால் அவர் மரணத்துக்குப் பின்பும் அவை தொடர்வது விந்தையிலும் விந்தை; மர்மத்திலும் மர்மம்!

எம்.ஜி.ஆர் வாழ்க்கை வரலாறு: ஜெயலலிதாவின் அரசியல் வளர்ச்சியை கண்டு எம்.ஜி.ஆர் பொறாமைப்பட்டாரா?

5 யூலை 2017

எம்.ஜி.ஆர் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் புதிய புத்தகம்

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த எம்.ஜி. ராமச்சந்திரனின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் MGR: A Life என்ற புத்தகம் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்திருந்தது.

திராவிட இயக்கம் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வரும் ஆர். கண்ணன் இந்த புத்தகத்தை எழுதி இருந்தார். இவர் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.என். அண்ணாதுரையின் வாழ்வைச் சொல்லும் Anna: The Life and Times of C.N. Annadurai என்ற நூலையும் எழுதியவர்.

பென்குயின் இந்தியா வெளியிட்ட இந்தப் புத்தகத்தின் சில பகுதிகளை பிரத்யேகமாக அளிக்கிறது பிபிசி தமிழ்.

மீண்டும் சினிமாவை நோக்கி

முதல்வர் பதவி எம்.ஜி.ஆருக்கு அவ்வளவு சௌகர்யமாக இல்லை; ஆகவே திரும்பவும் சினிமாவில் நடிக்க விரும்பினார் அவர் என்று தன் புத்தகத்தில் குறிப்பிடுகிறார் மோகன்தாஸ் (எம்.ஜி.ஆர். ஆட்சியில் காவல்துறை தலைவராக இருந்தவர்).

1978 பிப்ரவரி 12ஆம் தேதி மதுரையில் பேசிய எம்.ஜி.ஆர். தன்னுடைய சம்பளத்திலிருந்து வருமான வரிபாக்கியை செலுத்த முடியாததால், இன்னும் இரண்டு மாதங்களில் தான் மீண்டும் நடிக்கச் செல்லப்போவதாக கூறினார்.

இந்த விவகாரத்தில் எம்.ஜி.ஆர். ஒரு நிலையில் இல்லாமல், மாற்றி மாற்றிப் பேசியது, பதவி, அரசியல், அரசு, நிர்வாகம் ஆகியவை தரும் அழுத்தத்தால் அவருக்கு இருந்த அசௌகர்யத்தையும் விரக்தியையும் காட்டியது.

ஆனால், எம்.ஜி.ஆர் ஒரு தயக்கம் மிகுந்த அரசியல்வாதி இல்லை என்கிறார் பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன்.

ஏழைகளுக்குப் பெரிதாக ஏதும் செய்ய முடியாததில் ஏற்பட்ட விரக்தியின் காரணமாகவும் அவர் சந்திக்க வேண்டியிருந்த கடும் எதிர்ப்புகளின் காரணமாகவுமே எம்.ஜி.ஆர். இப்படி அறிவித்துவந்ததாகக் கூறுகிறார் அவர்.

… எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்ததும் அவருக்கு நடந்த ஒரு பாராட்டு விழாவில் பேசிய திரைப்படத் தயாரிப்பாளர் முக்தா ஸ்ரீநிவாசன், ‘காகிதங்களை கையெழுத்திட்டு தள்ளிவிடும்’ ஒரு எளிமையான பணியில் எம்.ஜி.ஆர். அமர்ந்துவிட்டதாகக் கூறினார்.

இதற்குப் பிறகு ஏற்புரை வழங்கிய எம்.ஜி.ஆர்., முக்தா ஸ்ரீநிவாசன் கூறியதை ஏற்றுக்கொண்டார்.

எம்.ஜி.ஆர்
படக்குறிப்பு,முதல்வரானாலும், சினிமாவில் நடிக்க ஆசை

பதினைந்து நாட்களுக்கு முதல்வராகவும் பதினைந்து நாட்களுக்கு நடிக்கப்போவதாகவும் அப்போது அறிவித்தார்.

இதைப் பற்றிக் கேள்விப்பட்ட பிரதமர் மொரார்ஜி தேசாய், அப்படிச் செய்தால் அது முதல்வர் பதவிக்கு கண்ணியம் சேர்க்காது என அறிவுறுத்தினார்.

இருந்தபோதும் ராணி வார இதழுக்கு அதே ஆண்டில் கொடுத்த பேட்டியில், தான் நடிப்பைவிட்டு விலகப்போவதில்லை என்று கூறினார் எம்.ஜி.ஆர். இரு பொறுப்புகளையும் தன்னால் சமாளிக்க முடியும் என்றார் அவர்.

….. ஏப்ரல் மாதத்திலிருந்து தன்னுடைய சொந்தப் படமான `இமயத்தின் உச்சியில்` படத்தில் நடிக்கப்போவதாக 1979 ஜனவரி 31ஆம் தேதி அறிவித்தார் எம்.ஜி.ஆர்.

அந்த ஆண்டு தீபாவளிக்கு படம் வெளியாகுமென்றும் கூறப்பட்டது.

சட்டம் அதனை அனுமதிக்காவிட்டால், தன் பொறுப்புகளை ‘நண்பர்களிடம்’ விட்டுவிட்டு நடிப்பைத் தொடரப்போவதாகவும் எம்.ஜி.ஆர் கூறினார்.

ஆனால் அதற்குப் பிறகு, அண்ணாவின் நினைவு நாளில் பேசிய எம்.ஜி.ஆர்., நடிப்பது தொடர்பான கருத்தை திரும்பப் பெற்றதோடு, ‘நான் உயிரோடு இருக்கும்வரை, எந்த விதத்திலும் என் பொறுப்புகளை புறந்தள்ள மாட்டேன்’ என்று கூறினார்.

… ஏப்ரல் 14ஆம் தேதி வெளியான தினத்தந்தி நாளிதழில் `உன்னை விடமாட்டேன்` என்ற படத்தில் எம்.ஜி.ஆர். நடிக்கப்போவதாக முதல் பக்கத்தில் செய்தி வெளியானது.

இதற்கு சில நாட்களுக்கு முன்பாக வாலிக்கு போன் செய்த எம்.ஜி.ஆர். அன்றைய நாளிதழ்களைப் பார்க்கச் சொன்னார்.

எம்.ஜி.ஆரின் அலுவலகப் பணிகள் பாதிக்கப்படாது என்றால், அவர் படங்களில் நடிப்பதில் தனக்கு ஆட்சேபணை இல்லையென பிரதமர் கூறியிருந்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.

வாலி மிக வேகமாக ஒரு திரைக்கதையை தயார் செய்தார்.

கே. ஷங்கர் படத்தை இயக்குவதென்று முடிவானது. குறிப்பிட்ட நாளில் மனோகரன், பிரசாத் ஸ்டுடியோவில் படப்பிடிப்பை துவக்கிவைத்தார்.

அதே நேரத்தில் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த விவசாயிகள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது.

திரைப்படத் துவக்க விழாவுக்கு ஆளுனர் வருவதாக இருந்த நிலையில், நிலைமையை மேலும் மோசமாக்க வேண்டாமென்பதால், அவரை வரவேண்டாமெனக் கூறிவிட்டார் எம்.ஜி.ஆர். நாட்டிற்கு நலம்பயக்கும் திரைப்படங்களில் நடிக்கப்போவதாகக் கூறினார் எம்.ஜி.ஆர்.

இதற்கு சில காலத்திற்குப் பிறகு, இந்தியா டுடேவில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது.

தமிழக தொழிற்துறை வளர்ச்சி தொடர்பான மிகப் பெரிய நிகழ்வில் எம்.ஜி.ஆரைத் தலைமை ஏற்கும்படி கேட்பதற்காக சில மூத்த தொழிலதிபர்கள் அவரது அலுவலகத்திற்குச் சென்றனர்.

ஆனால், முதல்வர் மிகுந்த பணிநெருக்கடியில் இருப்பதால் அவரைப் பார்க்க முடியாது என்று கூறப்பட்டது.

வந்திருந்தவர்கள் மீண்டும் வலியுறுத்தவே, அவர் ஐஐடி வளாகத்தில் இருப்பதாகச் சொல்லப்பட்டது.

ஆனால், எம்.ஜி.ஆர். அங்கு இல்லை.

முடிவில் உன்னைவிட மாட்டேன் படத்தின் படப்பிடிப்பில் அவர் இருந்தது தெரியவந்தது.

அலுவலக நேரத்திற்குப் பிறகுதான், நடிக்கப்போவதாக எம்.ஜி.ஆர். கூறிவந்த நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பில் காலை முதல் மாலைவரை அவர் நடித்துவந்தார்.

‘எம்.ஜி.ஆரின் தலைமையின் கீழ் அரசு நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன என்பதை இந்தச் சம்பவம் சுட்டிக்காட்டுகிறது’ என்று எழுதியது இந்தியா டுடே.

திமுக – அதிமுக இணைப்புப் பேச்சு வார்த்தைகள்
எம்ஜிஆர், கருணாநிதி
படக்குறிப்பு,இரு துருவங்களான கழகங்கள்

1979ஆம் வருடத்தின் இலையுதிர் காலம். ஒரிசாவைச் சேர்ந்த மத்திய அமைச்சரான பிஜு பட்நாயக், ஒரு வலிமையான எதிர்க்கட்சி முன்னணியை உருவாக்க விரும்பினார்.

ஆகவே, தனிப்பட்ட முறையில் இரு கழகங்களையும் இணைக்கும் முயற்சியில் இறங்கினார் அவர். வீரமணி மூலம் அவ்வப்போது இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்துவந்தது அவருக்குத் தெரியாது.

கலைஞரை எம்.ஜி.ஆர். சந்திக்க வேண்டுமென பத்திரிகையாளர் சோலை அறிவுறுத்திவந்தார். கலைஞரிடம் வீரமணி இதனை வலியுறுத்திவந்தார்.

செப்டம்பர் மாதத்தில் ஒரு நாள் மாலை கலைஞரை தொலைபேசியில் அழைத்த, பட்நாயக் சென்னை வந்து அவரை சந்திக்கலாமா என்று கேட்டார்.

…. செப்டம்பர் 12ஆம் தேதி சென்னை வந்த பட்நாயக், கலைஞரைச் சந்தித்தார். கலைஞர் ஆறு நிபந்தனைகளை முன்வைத்தார்.

1. இணைப்பிற்குப் பிறகு ஒருங்கிணந்த கட்சி தி.மு.க. என்றே அழைக்கப்படும்.

2. கட்சியின் கொடி அ.தி.மு.கவின் கொடியாக இருக்கலாம்.

3. எம்.ஜி.ஆர். முதல்வராகத் தொடர்வார்.

4. தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை அமைச்சரவையில் சேர்க்க அவசியமில்லை.

5. ஒருங்கிணைந்த கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் யார் என்பது இணைப்பிற்குப் பிறகு தகுந்த நேரத்தில் முடிவுசெய்யப்படும்.

6.முக்கியமாக, பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்ற ஆணையை எம்.ஜி.ஆர். திரும்பப் பெற வேண்டும்.

இந்த நிபந்தனைகளைக் கேட்ட பட்நாயக், எம்.ஜி.ஆர். இதற்கு நிச்சயம் ஒப்புக்கொள்வார் என்று நம்பினார்.

மோதல் அரசியலால் களைப்படைந்த எம்.ஜி.ஆர்
எம்ஜிஆர், கருணாநிதி
படக்குறிப்பு,மோதிய தலைவர்கள்

எம்.ஜி.ஆரும் இணைப்பை விரும்பினார் அல்லது அப்படி ஒரு தோற்றம் இருந்தது.

மோதல் அரசியல் தமிழ்நாட்டை முன்னெடுத்துச்செல்லவில்லை என்பதோடு, எம்.ஜி.ஆருக்கு மிகவும் களைப்பூட்டியது.

செப்டம்பர் 12ஆம் தேதி காலையில் மோகன்தாஸுடன் (காவல்துறை தலைவர்) இணைப்பு குறித்து பேசினார் எம்.ஜி.ஆர்.

அடுத்த நாள் காலையில் மாநில விருந்தினர் மாளிகைக்குள் நுழைந்த எம்.ஜி.ஆர். பட்நாயக் அருகில் இருந்த கலைஞரை ‘ஆண்டவரே’ என்று பிரியத்துடன் அழைத்தார்.

கலைஞருடன் அன்பழகன் இருந்தார். எம்.ஜி.ஆர். நெடுஞ்செழியனையும் பண்ருட்டி எஸ். ராமச்சந்திரனையும் அழைத்துச் சென்றிருந்தார்.

பிறகு இரு தலைவர்களும் 40 நிமிடங்கள் தனிமையில் பேசினர். பட்நாயக் சொன்ன நிபந்தனைகள் எல்லாம் உண்மைதானா என்று ஆச்சரியத்துடன் கேட்டார் எம்.ஜி.ஆர்.

இந்த ஆறு நிபந்தனைகளுக்கும் பின்னாலிருந்த காரணங்களை விளக்கினார் கலைஞர். எம்.ஜி.ஆர். எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டார்.

மேலும் ஒருபடி முன்னே சென்று, இரு கட்சிகளின் செயற்குழுவும் பொதுக்குழுவும் ஒரு குறிப்பிட்ட நாளில்கூடி இணைப்பு குறித்த தீர்மானங்களை நிறைவேற்றும் என வாக்குறுதியளித்தார் எம்.ஜி.ஆர்.

கழகங்களின் இணைப்பைக் `கெடுத்தது` யார் ?

பேசி முடித்துவிட்டு வெளியில் வந்த இரு தலைவர்களும் பட்நாயக்கையும் ஊடகத்தினரையும் சந்தித்து, எடுக்கப்பட்ட முடிவுகளை விளக்கினர்.

அதே நாளில் கருப்பையா மூப்பனாரை எம்.ஜி.ஆர். சந்தித்திருப்பது குறித்து ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்ததாக கலைஞர் குறிப்பிடுகிறார்.

கலைஞரை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்த நிலையில், தன்னுடைய ராமாவரம் இல்லத்தில் வைத்து கருப்பையா மூப்பனாரைச் சந்தித்துப் பேசியிருந்தார் எம்.ஜி.ஆர்.

அன்று மாலையில் மொரார்ஜி தேசாயின் அமைச்சரவையில் எரிசக்தித் துறை அமைச்சராக இருந்த பி. ராமச்சந்திரனுக்கு விருந்தளித்தார் எம்.ஜி.ஆர்.

அடுத்த நாள் செப்டம்பர் 14ஆம் தேதி. அண்ணாவின் பிறந்த நாளுக்கு முந்தைய தினம்.

வேலூரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய எம்.ஜி.ஆர். அ.தி.மு.கவின் கொடி இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு உயரத்தில் பறக்கும் என்று குறிப்பிட்டார்.

தான் உயிரோடு இருக்கும்வரை இணைப்பு என்பது இருக்காது என்றும் கூறினார். எம்.ஜி.ஆர். பார்த்துக்கொண்டிருக்கும்போதே, அவரது அமைச்சர்கள் தி.மு.க. குறித்தும் கலைஞரைப் பற்றியும் கடுமையாக விமர்சனம் செய்தார்கள்.

இப்படியாக, கழகங்களின் இணைப்பு என்ற சிந்தனையை தீர்த்துக்கட்டினார் எம்.ஜி.ஆர்.

2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு பொது நிகழ்வில் பேசிய கலைஞர், இணைப்பு நடக்காமல் போனதற்கு வேறு ஒரு ராமச்சந்திரன் மீது குற்றம்சாட்டினார்.

“இதனைக் கெடுத்தது யார் என்பது எனக்குத் தெரியும். நான் அவரது பெயரைச் சொல்ல விரும்பவில்லை. ஆனால், அவரது பெயரைச் சொல்லாவிட்டால் வரலாறு முழுமையடையாது. மாநில விருந்தினர் மாளிகையில் இணைப்புப் பேச்சுவார்த்தைகள் முடிந்து, எம்.ஜி.ஆர். வேலூருக்குப் போனபோது உடன் பயணம் செய்த பண்ருட்டி ராமச்சந்திரன்தான் அவர்” என்றார் கலைஞர்.

துணை முதல்வராக விரும்பிய ஜெயலலிதா
ராஜிவ் காந்தி ஜெயலலிதா
படக்குறிப்பு,துணை முதல்வராக விரும்பி ராஜிவுக்கு அழுத்தம் தந்த ஜெயலலிதா

தன்னை அமைச்சராக்க வேண்டுமென ஜெயலலிதா எதிர்பார்த்ததாக மோகன்தாஸ் குறிப்பிடுகிறார்.

ஆனால், எம்.ஜி.ஆர். அதனைக் கண்டுகொள்ளவில்லை.

ஜெயலலிதாவின் விசுவாசத்தையும் பிரியத்தையும் சோதிக்க எம்.ஜி.ஆர். விரும்பியதாக கருதுகிறார் மோகன்தாஸ்.

ஜெயலலிதா உண்மையில் துணை முதலமைச்சராக விரும்பினார்.

ஆனால், தன்னை இப்படி எம்.ஜி.ஆர். சோதிப்பதில் கோபமடைந்தார் அவர்.

“அவர் திரும்ப முதல்வரானதற்கு நான்தான் காரணம். கலைஞருக்கு எதிராகத் தீவிர பிரச்சாரம் செய்தேன். அவர் எல்லோரையும் பார்க்கிறார். என்னை ஞாபகமில்லையா அவருக்கு? என் பணிகளைப் பற்றி நீங்கள் சொல்ல முடியாதா?” என்று எஸ். திருநாவுக்கரசரிடம் கேட்டார் ஜெயலலிதா.

….. பத்து நாட்களுக்குப் பிறகு, துணை முதல்வராக வேண்டும் என்ற எண்ணம் ஜெயலலிதாவிடம் தீவிரமடைந்தது.

பிப்ரவரி 28ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு பிரதமர் ராஜீவ் காந்தி சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கியபோது, அவரை வரவேற்றார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.

தன்னை வரவேற்க ஆளுனர் வந்திருக்கும்போது உடல்நலம் சரியில்லாத நிலையில் எம்.ஜி.ஆர். வந்தது ஏன் என ராஜீவ்காந்தி திரும்பத் திரும்பக் கேட்டார்.

தான் வருவதுதான் சரியானதாக இருக்கும் என்று மட்டும் கூறிய எம்.ஜி.ஆர்., ராஜ்பவனுக்கு பிரதமருடனேயே சென்று, அவருடன் பேசினார்.

அங்கிருந்து திரும்பும்போது, ராஜ்பவனில் ஜெயலலிதா பிரதமரை சந்தித்துப் பேசுவார் என்பது தனக்குத் தெரியும் என காரில் தன் உடன் வந்த ராஜாராமிடம் கூறினார் எம்.ஜி.ஆர்.

பிரதமரை சந்தித்த ஜெயலலிதா தன்னை துணை முதல்வராக நியமிக்க வேண்டுமென எம்.ஜி.ஆரிடம் சொல்லும்படி கோரினார்.

எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவுக்கு முட்டுக்கட்டைபோட்டுவிட்ட நிலையில், தன் பிரபல்யத்தைப் பார்த்து எம்.ஜி.ஆர். பொறாமையடைந்திருப்பதாகவும் ‘பொது வாழ்விலிருந்தும் அரசியல் களத்திலிருந்தும் என்னை அகற்ற’ என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அத்தனையும் செய்வதாகவும் ராஜீவ் காந்திக்குக் கடிதம் எழுதினார் ஜெயலலிதா.

‘அவரைத் தவிர்த்துவிட்டால் எல்லோரும் பூஜ்யங்கள் என்பதால், யாரும் அவரை எதிர்க்க மாட்டார்கள்’ என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டார் ஜெயலலிதா.

இதற்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 1989 ஜனவரி 21ல் பொதுத் தேர்தல் நடக்கவிருந்த நிலையில், அதற்குப் பத்து நாட்களுக்கு முன்பாக மக்கள் குரல் நாளிதழும் மாலை முரசு நாளிதழும் இந்தக் கடிதத்தை தங்கள் முகப்புப் பக்கத்தில் வெளியிட்டன.

கலைஞர்தான் போலியாக அந்தக் கடிதங்களை உருவாக்கியதாக ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.

(தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்பு: சென்னை செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதன்)

https://www.bbc.com/tamil/india-40505228

—————————————————————————————————————-

மதுரையில் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு கோயில்: தேர்தல் நாடகமா?
  • பிரமிளா கிருஷ்ணன்
  • பிபிசி தமிழ்

31 ஜனவரி 2021

மதுரையில் எம்ஜிஆர் ஜெயலலிதா கோயில்: தேர்தல் நாடகமா?

மதுரையில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு, அமைச்சர் உதயகுமார் கோயில் கட்டியிருப்பது தேர்தல் நேரத்தில் நடத்தப்பட்ட நாடகமாக காட்சியளிப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். தென்மாவட்ட மக்களை ஈர்ப்பதற்காக நடத்தப்பட்ட நிகழ்வுதான் கோயில் திறப்பு என்கிறார்கள்.

திருமங்கலம் தொகுதி எம்எல்ஏவும், தமிழக வருவாய் துறை அமைச்சரான ஆர்.பி. உதயகுமார், மதுரை டி குன்னத்தூர் பகுதியில் 12 ஏக்கர் பரப்பளவில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு கோயில் ஒன்றை கட்டியுள்ளார். அங்கு இருவரின் ஏழு அடி வெண்கல சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

கோயில் திறப்புவிழாவுக்கு முன்னதாக கோ பூசை மற்றும் யாகசாலை பூசைகள் நடத்தப்பட்டன. விழாவிற்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு மதுரை விமான நிலைத்தில் இருந்து கோயில் இருக்கும் இடத்திற்கு வரும் சுமார் 20 கிலோமீட்டர் தூரத்திற்கு ஆடம்பர வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் சிலைகளை திறந்துவைத்தனர். நிகழ்ச்சியின் முடிவில் தேர்தெடுக்கப்பட்ட மக்களுக்கு பசு தானமாக வழங்கப்பட்டது.

மதுரையில் எம்ஜிஆர் ஜெயலலிதா கோயில்: தேர்தல் நாடகமா?

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டியுள்ளது பற்றியும் தேர்தல் நேரத்தில் இத்தகைய விழாவை நடத்துவதன் நோக்கம் என்ன என்றும் மூத்த பத்திரிகையாளர்களிடம் பிபிசி தமிழ் பேசியது. மதுரை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களை பற்றி விரிவாக எழுதிவருபவர் மூத்த பத்திரிகையாளர் இளங்கோ.

”மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் சமுதாயத்தினரை ஈர்ப்பதற்காக இந்த கோயிலை கட்டியிருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தினால், அங்குள்ள மக்களிடம் இந்த விவரம் சென்று சேரும் என்பதற்கான விழாதான் இது. ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியிருக்கிறது. அதோடு, பழனிசாமியுடன் மூத்த அமைச்சர்கள் பட்டியலில் இருப்பவர்கள் – தங்கமணி, வேலுமணி, கருப்பண்ணன் உள்ளிட்ட அனைவரும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள். அதோடு கவுண்டர் இனத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அதிமுக கவுண்டர் கட்சியாக மாறிவிட்டதோ என எண்ணம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. அதனை சரிக்கட்ட இதுபோன்ற விழாவை கையில் எடுத்துள்ளார்கள்,” என்கிறார் இளங்கோ.

ஜெயலலிதா இருந்த காலத்தில் சசிகலா மூலமாக முக்குலத்தோர் வாக்குகளை பெறமுடிந்தது என்று கூறிய இளங்கோ, சசிகலா வாயிலாக, 2014ல் பசும்பொன்னில் உள்ள தேவர் சிலைக்கு தங்க கவசம் சாத்தி, முக்குலத்தோர் மக்களை ஜெயலலிதா ஈர்த்ததாக கூறுகிறார். “ஜெயலலிதா – சசிகலா நட்பு காரணமாக, முக்குலத்தோர் வாக்குகள் கிடைப்பதில் அதிமுகவுக்கு சிக்கல் இருந்ததில்லை. ஆனால், 2019ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், அதிமுகவுடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக அமமுகவிடம் முக்குலத்தோர் வாக்குகள் சென்றுசேர்ந்தன. இதனை தடுக்க கோயில் விழாவை ஒரு அஸ்திரமாக பயன்படுத்துகிறார்கள்,” என்கிறார் இளங்கோ.

அதோடு, ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அதிமுகவில் ஏற்பட்ட பிளவு, கட்சியின் உள்கட்சி பூசல்கள் உள்ளிட்டவை பலவிதங்களில் அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் கட்சி மீதான நம்பிக்கையை குறைத்துள்ளது. தென் மாவட்டத்தில் உள்ளவர்கள் அதிமுகவில் தங்களுக்கு உரிய இடங்கள் இல்லை என எண்ணுவதால், இந்த கோயில் விழா அவர்களை ஈர்ப்பதற்காக நடத்தப்பட்டதாக தெரிகிறது என்கிறார்.

மதுரையில் எம்ஜிஆர் ஜெயலலிதா கோயில்: தேர்தல் நாடகமா?

பத்திரிகையாளர் குபேந்திரன் வேறொரு கோணத்தை முன்வைத்தார். கொரோனா காலத்தில் இதுபோன்ற ஒரு விழாவை அமைச்சர் ஒருவர் முன்நின்று நடத்துகிறார், முதல்வர், துணை முதல்வர் பங்கேற்கிறார்கள் என்பது வேதனை தருவதாக உள்ளது என்கிறார் அவர்.

”12 ஏக்கர் பரப்பளவில் அமைச்சர் உதயகுமார் கோயிலை கட்டியுள்ளார். வருவாய் துறை அமைச்சராக இருப்பவர் என்பதால் கொரோனா காலத்தில் பொருளாதாரம் எவ்வாறு வீழ்ச்சி அடைந்தது என்பது அவருக்கு தெளிவாக தெரியும். அவரது தொகுதியான திருமங்கலத்தில் உள்ள மக்கள் பலரும் இதில் பாதிக்கப்பட்டிருப்பார்கள். இந்த கோயில் கட்டுவதற்கும், விழா நடத்துவதற்கும் கோடிக்கணக்கில் பணம் செலவாகியிருக்கும். அந்த பணத்தை திருமங்கலத்தில் உள்ள மக்களின் பொருளாதாரத்தை உயர்த்த தொழிற்பேட்டை அமைத்து, பல தொழில் முனைவோருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம்,” என்கிறார்.

”குறைந்தபட்சம் வீடு இல்லாத மக்களுக்கு அந்த 12 ஏக்கர் நிலத்தில் வீடு கட்டிகொடுத்து, எம்ஜிஆர், ஜெயலலிதா நகர் போன்ற பெயரில் அளித்திருந்தால், உதயகுமாரின் உதவியை வாக்காளர்கள் பல காலத்திற்கும் நினைவில் வைத்திருந்திருப்பார்கள். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா கோயிலை விரும்பியிருப்பார்களா என்பது ஒருபுறம். அவர்கள் நினைவை கோயில்கட்டிதான் காண்பிக்கவேண்டும் என்ற தேவை எங்கிருந்து பிறக்கிறது என்றும் பார்க்கவேண்டும்,” என்கிறார் குபேந்திரன்.

ஆயிரக்கணக்கான மக்கள் பொருளாதார சீர்குலைவால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் வேளையில், கோயில் கட்டியுள்ளது வேதனை தருவதாக உள்ளது என்கிறார் குபேந்திரன். ”அதிமுகவில் உள்ள அடிமட்ட தொண்டர்களுக்கு பயனளிக்கும் விதமாக கூட அந்த 12 ஏக்கர் நிலத்தை பயன்படுத்தியிருக்கலாம். இந்த கோயில் கட்டியுள்ளதால், மதுரையில் உள்ள மக்கள், அதிமுகவுக்கு வாக்களிப்பார்கள் என்பது அவர்களின் மனக்கணக்கு. அது தேர்தலில் எதிரொலிக்குமா என்பது சந்தேகம்தான். அதற்கான வாய்ப்புகள் குறைவு. சில நாட்களில் இந்த கோயிலை பலரும் மறந்துவிடுவார்கள்,” என்கிறார் அவர்.

ttp://thamizhoviya.blogspot.com/search/label/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D


மக்களே போல்வர் கயவர்

சவுக்கு


தமிழக மக்களின் மகிழ்ச்சி தான் எனது லட்சியம். தமிழக மக்களின் வளர்ச்சியும்வளமான வாழ்வும் தான் நான் காண விரும்பும் இலக்குகள். உங்களுக்காகவே உயிர் வாழ்கிறேன் என்பதை நான் ஆத்மார்த்தமாக உணர்கிறேன். இறைவன் எனக்கு விடுத்த அழைப்பாகவே இந்த வாழ்வை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். 

ஜெயலலிதா அதிமுகவின் 44வது தொடக்க நாளையொட்டி, ஜெயலலிதா தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறார்.    ஜெயலலிதா என்றாலே ஆணவத்தின் மறுபிறப்பு என்பது அனைவரும் அறிந்ததே.  அப்படிப்பட்ட ஜெயலலிதா “உங்களுக்காகவே உயிர் வாழ்கிறேன்” என்று உருக்கமாக பேசுவது, தேர்தலையொட்டிய அவரது நடிப்பின் தொடர்ச்சியேயன்றி வேறல்ல.

DSC_4486

எம்ஜிஆரின் பெயரை, தமிழக மக்களிடமிருந்து மறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடர்ந்து செயல்பட்டு வரும் வரும் ஜெயலலிதாதான், தற்போது எம்ஜிஆரை நினைவு கூர்ந்து, தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறார்.     எப்போதெல்லாம் தேர்தல் வருகிறதோ, அப்போதெல்லாம் ஜெயலலிதாவுக்கு எம்ஜிஆர் நினைவு வந்து விடுகிறது.

ஜெயலலிதாவைப் போல எம்ஜிஆரால் வஞ்சிக்கப்பட்டவர்கள் ஒருவருமே இருக்க முடியாது.     எம்ஜிஆரை மனமார வெறுத்துக் கொண்டிருப்பவர்தான் ஜெயலலிதா.     எம்ஜிஆர் உயிரோடு இருக்கையிலேயே,   எம்ஜிஆருக்கு பதிலாக தன்னை முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என்று அன்றைய பிரதமர் ராஜீவ் காந்திக்கு கடிதம் எழுதியவர்தான் ஜெயலலிதா.    அந்த கடிதத்தில்,  “The root cause of everything that is happening here is that the C.M. is terribly jealous of my popularity. He cannot stomach the fact that I have become so popular. So he is doing everything possible to eliminate me from the political scene and from public life.”

“மிகுந்த செல்வாக்குடன் நான் (ஜெயலலிதா) பிரபலம் அடைந்திருப்பதை பார்த்து முதலமைச்சர் (எம்.ஜி.ஆர்) மிகவும் பொறாமைப்படுகிறார். இதுதான் இங்கு நடைபெறும் ஒவ்வொரு செயலுக்கும் மூல காரணம். நான் மிகவும் பிரபலம் அடைந்துள்ளதை அவரால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. எனவே, அரசியலில் இருந்தும், பொதுவாழ்வில் இருந்தும் என்னை ஒழித்துக் கட்ட தன்னால் முடிந்ததையெல்லாம் அவர் (எம்.ஜி.ஆர்) செய்து வருகிறார்”

மேலும், “MGR himself, who does not want to give me due importance, does not want to induct me into the Cabinet. No one here can really dare to oppose him for without him they are Zeros.”

“எனக்கு உரிய முக்கியத்துவம் தர விரும்பாத எம்.ஜி.ஆர்., என்னை அமைச்சரவையில் சேர்க்கவும் விரும்பவில்லை. அவரை எதிர்க்க இங்கு யாருக்கும் தைரியமில்லை. ஏனென்றால் அவரில்லாவிட்டால் மற்றவர்கள் எல்லாம் பூஜ்யங்கள்”

1.1.1987 நாளிட்ட ‘மக்கள் குரல்’ இதழில், ஜெயலலிதாவைப் பற்றி, எம்.ஜி.ஆர். கூறும்போது, “அம்முவின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. எதையோ நினைத்து அம்முவை அரசியலில் ஈடுபடுத்தினேன். பிள்ளையார் பிடிக்கப் போய் அது குரங்காய் முடிந்துவிட்டது. சூதும், வாதும், வஞ்சகமும், சூழ்ச்சியும் கற்ற இந்த அம்மு எனக்கே உலை வைக்கிறாள். சும்மா ஓடுகிற ஓணானை முகத்திலே நுழைய விட்ட கதையாக என் விஷயம் ஆகிவிட்டது இப்போது. இந்த அம்மு அபாயகரமானவள். யாரையும் அவள் தனக்காகப் பயன்படுத்துவாள். எதையும் செய்யத் தயங்கமாட்டாள். மிகவும் கெட்டவள்” என்று சொன்ன கருத்தை “மக்கள் குரல்” ஆசிரியர் டி.ஆர்.ராமசாமி  வெளியிட்டிருந்தார்.    எம்ஜிஆர் உயிரோடு இருக்கையிலேயே, அவரை ஓரங்கட்ட  வேண்டும் என்று பகீரதப் பிரயத்தனம் செய்தவர்தான் ஜெயலலிதா.

எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர், உடனடியாக அவர் பெயரை ஓரங்கட்டும் பணிகளைத் தொடங்கினார் ஜெயலலிதா.   எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அவரின் மனைவி ஜானகி ராமச்சந்திரன் கட்சியை கைப்பற்ற திட்டமிட்டபோது, பண்ருட்டி ராமச்சந்திரன், ராஜாராம் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோரை சேர்த்துக் கொண்டு, தனி அணி கட்டினார் ஜெயலலிதா.   அவர்களுக்கான தேவை முடிந்ததும், அவர்களை வசதியாக கழற்றி விட்டார்.

1982ம் ஆண்டு ஜெயலலிதாவை அதிமுகவில் சேர்த்து, கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக்கினார்  எம்.ஜி.ஆர்.     மாநில சத்துணவுத் திட்ட உயர்மட்டக் குழுவில் உறுப்பினராக்கியதோடு, மாநிலங்களவை உறுப்பினராகவும் ஆக்கினார்.    கூடுதலாக ஜெயலலிதாவுக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது.     ஒரு கட்டத்தில் தன்னை ஓரங்கட்டப் பார்க்கிறார்  என்பதை உணர்ந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை பிரதானப்படுத்துவதை நிறுத்தினார்.     ஒரு பத்திரிக்கைக்கு ஜெயலலிதா பேட்டியளிக்கையில்,   எம்ஜிஆரின் புகழுக்கு காரணமே தான்தான் என்று கூறினார் ஜெயலலிதா.  இதன் காரணமாகவே, எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில், ஜெயலலிதாவுக்கு பதிலாக மஞ்சுளா கதாநாயகி ஆனார்.

இப்படி தன் புகழ் மீது அளவுகடந்த நம்பிக்கை கொண்ட ஜெயலலிதா, எம்ஜிஆர் அமெரிக்காவுக்கு சிசிக்சைக்காக சென்றிருந்தபொழுது, மாநிலமெங்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட நேர்ந்தது.  அப்போது திரண்ட அந்த கூட்டத்தைப் பார்த்த ஜெயலலிதா, இந்தக் கூட்டம் தனக்காக சேர்ந்த கூட்டம் என்றே நம்பத் தொடங்கினார்.     இதன் காரணமாகவே அவருக்கு முதலமைச்சர் கனவு வளரத் தொடங்கியது.  அந்த முதலமைச்சர் கனவு, தன்னை வளர்த்தெடுத்த எம்ஜிஆரையே ஓரங்கட்டும் அளவுக்கு முற்றியது.

மூத்த பத்திரிக்கையாளர் சோலை, ஒரு சம்பவத்தை நினைவு கூர்கிறார்.     எம்ஜிஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே பனிப்போர் நடந்து கொண்டிருந்த நிலையில், சமாதானப்படுத்தும் வகையில் தலைமைச் செயலகத்தில் இருவருக்கும் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.  அந்த சந்திப்பின்போது, கட்சியில் தனக்கு இருக்கும் பொறுப்புக்கு ஏற்ப, தன்னை துணை முதல்வராக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.  எம்ஜிஆர் மறுக்கவும், கோபமாக வெளியேறினார் ஜெயலலிதா.   அவர் சென்ற பிறகு, சோலையிடம் எம்ஜிஆர், “எப்படிப் பேசுகிறாள் பார்த்தீர்களா ?” என்று வருத்தப்பட்டுள்ளார்.

எம்ஜிஆர் மறைவுக்குப் பின், நாவலர் நெடுஞ்செழியன் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் ஜெயலலிதாவை பொதுச் செயலாளராக அறிவித்தனர்.   ஜானகி அணி தனியே செயல்பட்டு வந்தது.   இருவரும் நாங்கள்தான் உண்மையான அதிமுக என்று கூறினர்.   30 ஜனவரி 1988 அன்று அதிமுக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது.     அதற்கு இரண்டு நாட்கள் கழித்துதான் சசிகலா போயஸ் தோட்டத்துக்குள் நிரந்தரமாக குடியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.  இரு அணிகளும் தொடர்ந்து சண்டையிட்டதால், தேர்தல் ஆணையம் 21 ஜனவரி 1989 அன்று நடந்த தேர்தலில், இரட்டை இலை  சின்னத்தை முடக்கியது.    ஜானகிக்கு இரட்டைப் புறா சின்னமும், ஜெயலலிதாவுக்கு சேவல் சின்னமும் ஒதுக்கப்பட்டது.  ஜானகி அணி முழுக்க தோல்வியைத் தழுவ, ஜெயலலிதா அணி 27 இடங்களில் வெற்றி பெற்றது.    இரட்டை இலை சின்னம் மற்றும் எம்ஜியார் பெயருக்கு உள்ள புகழ் ஆகியவற்றை முதல் முறையாக உணர்ந்தார் ஜெயலலிதா.

எம்ஜிஆர் மீது அளவு கடந்த வெறுப்பு இருந்தாலும், அவற்றையெல்லாம் மறைத்துக் கொண்டு, ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும், எம்ஜிஆர் பெயரைப் பயன்படுத்துவதில் ஜெயலலிதா தவறியதில்லை.    தற்போதும் 2016 தேர்தலை மனதில் வைத்தே, எம்ஜிஆரின் பெயரை பயன்படுத்தியுள்ளார்.

2001 தேர்தல் பிரச்சாரத்தின்போது ஜெயலலிதாவோடு உடன் சென்ற பத்திரிக்கையாளர் ஒருவர், ஒரு சம்பவத்தை குறிப்பிடுகிறார்.   பிரச்சார சமயத்தில் திடீரென்று வேனை விட்டு கீழே இறங்கிய ஜெயலலிதா அங்கே கூடியிருந்த வயதான பெண்களிடம் பேசினார்.  அப்போது இரட்டை இலை சின்னத்தை மறவாதீர்கள் என்று கூறினார் ஜெயலலிதா.    அப்போது ஒரு வயதான பெண்மணி, “இது எம்ஜிஆர் சின்னம்தானேம்மா…. எங்களுக்கு தெரியும்.  எங்கள் ஓட்டு எம்ஜிஆர் சின்னத்துக்குத்தான்” என்று கூறியுள்ளார்.   டக்கென்று முகம் சிவந்த ஜெயலலிதா வேனில் ஏறியதும் சசிகலாவிடம், “ஜனங்களை எப்படி கெடுத்து வச்சிருக்கான் பாரு” என்று கூறியதை நேரில் பார்த்தவர் அந்த பத்திரிக்கையாளர்.       இந்த அளவுக்கு எம்ஜிஆர் மீது கோபம் எள்ளவர் ஜெயலலிதா.

இன்று எம்ஜிஆரின் புகழ்பாடும் ஜெயலலிதா, தனது ஆட்சியில் தொடங்கப்பட்ட எந்த புதிய திட்டத்துக்கும் எம்ஜிஆர் பெயரை வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எல்லாம் அம்மா திட்டங்கள்தான்.

அடுத்ததாக ஜெயலலிதா கூறுவது என்னவென்றால், ”

எனக்கென்று தனிப்பட்ட வாழ்வு இல்லை. எனக்கென்று தனிப்பட்ட எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லை. நான் வாழ்வதே இந்த இயக்கத்திற்காக தான்தமிழக மக்களுக்காகத் தான். ஒவ்வொரு நொடிப்பொழுதும் நம்முடைய இயக்கத்தைப் பற்றியும்தமிழ் நாட்டு மக்களுக்கு இந்த இயக்கம் ஆற்ற வேண்டிய பணிகள் பற்றியும் தான் நான் சிந்தித்த வண்ணம் இருக்கிறேன்.

தமிழக மக்களின் மகிழ்ச்சி தான் எனது லட்சியம். தமிழக மக்களின் வளர்ச்சியும்வளமான வாழ்வும் தான் நான் காண விரும்பும் இலக்குகள். உங்களுக்காகவே உயிர் வாழ்கிறேன் என்பதை நான் ஆத்மார்த்தமாக உணர்கிறேன். இறைவன் எனக்கு விடுத்த அழைப்பாகவே இந்த வாழ்வை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். எனது தலைமையிலான அரசு மகத்தான சாதனைகளை மக்களுக்கு அளித்துசமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும் உயர்வடையச் செய்து வரும் மன நிறைவோடு அ.தி.மு.க. ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறோம்.”

எனக்கென்று தனிப்பட்ட வாழ்வு இல்லை என்று பேசும் ஜெயலலிதாதான் கொடநாட்டில் 900 ஏக்கரில் மாளிகை, சிறுதாவூரில் 25.40 ஏக்கரில் பண்ணை வீடு, பையனூரில் 3 ஏக்கரில் பண்ணை வீடு, கன்னியாக்குமரியில் 1190 ஏக்கர் நிலம், திருவைகுண்டத்தில் 1167 ஏக்கர் நிலம், காஞ்சிபுரத்தில் 300 ஏக்கர் நிலம், ஐதரபாத்தில் திராட்சைத் தோட்டம், மைலாப்பூரில் 1407 சதுர அடி கட்டிடத்தோடு கூடிய நிலம், கிண்டி எஸ்டேட்டில் டான்சி நிலம், மற்றும் சசிகலா பெயரில் ஆயிரக்கணக்கான நிலங்கள், ஆகியவற்றை வாங்கிக் குவித்துள்ளார்.   தனக்கென்று யாருமே இல்லை என்று கூறும் ஜெயலலிதா எதற்காக சசிகலா உள்ளிட்ட மன்னார்குடி மாஃபியா ஆட்களை உடன் வைத்துள்ளார் என்பது தெரியவில்லை.   லஞ்ச ஒழிப்புச் சோதனையின்போது, ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டிலிருந்து 600க்கும் மேற்பட்ட ஜோடி செருப்புகள், நூற்றுக்கணக்கான வாட்சுகள், பல நூற்றுக்கணக்கான பவுன் தங்க நகைகள் ஆகியவற்றை கண்டுபிடித்தது.  தான் உயிர்வாழ்வதே இந்த இயக்கத்துக்காகத்தான் என்று கூறும் ஜெயலலிதா, யார் அனுப்பியது என்றே தெரியாத 3 லட்சம் டாலர்கள் மதிப்பிலான வரைவோலையை எதற்காக தனது மைலாப்பூர் கனரா வங்கியில் போட்டுக் கொண்டு, அதற்கு வருமான வரி செலுத்தினார் ?   சசிகலாவும், இளவரசியும் எதற்காக இன்னும் ஜெயலலிதாவோடு   வசிக்கிறார்கள் ?

சிறை செல்லும் சீமாட்டி முதல் பாகம்

இதர ஐந்து பாகங்கள் இணைப்பு 

உங்களுக்காகவே உயிர் வாழ்கிறேன் என்பதை நான் ஆத்மார்த்தமாக உணர்கிறேன். இறைவன் எனக்கு விடுத்த அழைப்பாகவே இந்த வாழ்வை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறும் ஜெயலலிதா,  பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை எப்படி அடாவடி செய்து கைப்பற்றினார் என்பதை நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில் விலாவரியாகவே விவாதித்துள்ளார்.

ஜெயலலிதாவின் பேச்சு முழுக்க, பொய்யும் புரட்டும் நிறைந்தவையே என்பதற்கு அவரின் இந்த கடிதம் ஒரு சிறந்த உதாரணம்.    தமிழ் மக்களுக்காக உயிர் வாழ்பவர்தான் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சாராயக்கடைகளை திறந்து வைத்துள்ளார்.   தமிழ் மக்களை குடிகாரர்களாக்கி அழகு பார்க்கிறார்    குடியின் பிடியிலிருந்து தமிழக மக்கள் மீளாதவண்ணம் கவனமாக இருக்கிறார்.

தமிழக மக்களின் மகிழ்ச்சியை தனது லட்சியமாக வைத்திருக்கும் நபர்தான், தொடர்ந்து மூன்று முறை மின்கட்டணங்களை ஏற்றியதோடு, பால் விலை மற்றும் பஸ் கட்டணங்களை உயர்த்தினார்.   ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் நாள் முதல், தொடர்ந்து மக்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.    தலைமைச் செயலகத்துக்காக கட்டப்பட்ட கட்டிடத்தை, வம்படியாக மருத்துவமனையாக மாற்றினார்.    அண்ணா நூலகத்தை மாற்ற முயன்று அதில் தோல்வியுற்றதால், அதை தற்போது பராமரிக்காமல் கிடப்பில் போட்டு உள்ளார்.   தமிழக மக்களின் வளர்ச்சியை நோக்கமாக வைத்திருக்கும் ஜெயலலிதாதான், தமிழகத்தில் ஒரே ஒரு புதிய தொழிற்சாலை கூட கடந்த நான்கரை ஆண்டுகளாக தொடங்கப்படாமல் பார்த்துக் கொண்டுள்ளார்.   இவர்தான், தமிழகத்தில் வேலைவாய்ப்பு என்பதே அறவே இல்லாத நிலையை உருவாக்கியவர்.

மின்வெட்டு காரணத்தால் தமிழகத்தை இருட்டில் அமர்த்தினார் ஜெயலலிதா.    மின்வெட்டில் வாடிக்கொண்டிருக்கும் தமிழகத்தின் தேவைகள் அறிந்து, போர்க்கால அடிப்படையில் தொடங்கப்பட்டிருக்க வேண்டிய மின் திட்டங்கள் அனைத்தும் தாமதம் செய்யப்பட்டுள்ளன.  சமீபத்தில் கூட உப்பூர் அனல் மின் நிலையத்துக்கான டெண்டருக்கான கடைசி தேதியை மூன்றாவது முறையாக தள்ளி வைத்திருக்கிறது மின் வாரியம்.     ஒரு நிறுவனம் கூட டெண்டரில் பங்கேற்க வரவில்லை என்பதுதான் இதற்கான காரணம்.    மின் வெட்டுத் திட்டங்கள் ஒன்று கூட நிறைவேற்றப்படாமல், நீதிமன்ற வழக்குகளிலும், கோப்புகளிலும் முடங்கிப் போய் கிடக்கிறது.  3 ரூபாய்க்கு மின்சாரம் கிடைக்க வேண்டிய இடத்தில் ரூபாய் 8 முதல் 12 வரை தனியாரிடமிருந்து வாங்கும் அவலச் சூழலுக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தின் உட்கட்டமைப்புக்காக உருவாக்கப்பட்ட மதுரவாயல் பறக்கும் சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை குழிதோண்டி புதைத்தவர்.   இப்படி தமிழகத்தை பின்னோக்கி திருப்பி அழைத்துச் சென்றவர்தான் இன்று தமிழகத்தின் வளர்ச்சி பற்றி பேசுகிறார்.

நாடே வியந்து பாராட்டும் வண்ணம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி, அதன் மூலம் 2,42,160 கோடி ரூபாய்க்கான முதலீட்டிற்கு வழிவகை செய்து, எண்ணற்ற புதிய தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொடங்கப் படுவதற்கும், லட்சக்கணக்கான இளைஞர்கள், இளம் பெண்கள் புதிய வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தருகின்ற மன நிறைவோடு இந்த ஆண்டு விழாவை நாம் கொண்டாடுகிறோம்.

உலக முதலீட்டாளர் மாநாடு எவ்வளவு பெரிய மோசடி என்பது சவுக்கு தளத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.   2 லட்சத்து 42 ஆயிரம் கோடி என்று படோடாபமாக அறிவிப்புகளை வெளியிட்டாலும், இதில் ஆயிரம் கோடி கூட உருப்படியான முதலீடாக வந்து சேரவில்லை.  மேலும், இந்த எண்ணிக்கையே மோசடி  என்று விபரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.   எண்ணூர் மற்றும் உடன்குடி அனல் மின் நிலைய டெண்டர்களை குறைந்த விலைப்புள்ளிகள் அளித்திருந்ததால் சீனவாச் சேர்ந்த நிறுவனங்களுக்கே வழங்கியிருக்க வேண்டும்.  மாறாக, விதிகளை மீறி சட்ட விரோதமாக பிஎச்இஎல்  நிறுவனத்துக்கு வழங்கியதன் மூலம் 1526 கோடி ரூபாய் இழப்பை சந்தித்ததோடு அல்லாமல், நீதிமன்ற வழக்கில் சிக்கி இரண்டு திட்டங்களும் கரையேறாமல் காத்திருக்கின்றன.  

தமிழகத்துக்கு தொடர்ந்து வரும் முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்கும், குஜராத், நொய்டா போன்ற இடங்களுக்கும் தடம் மாறிச் செல்வது குறித்து எவ்வித கவலையும் இல்லாமல் இருக்கிறார் ஜெயலலிதா.   நோக்கியா தொழிற்சாலை மூடப்பட்டதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒரே நாளில் வேலை இழந்தனர்.   நோக்கியாவைத் தொடர்ந்து ஃபாக்ஸ்கான் நிறுவனமும் தனது விரிவாக்கத்தை குஜராத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது. இதுபோல பல்வேறு தொழிலதிபர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்கவே தயங்கிய வண்ணம் இருப்பதன் முக்கிய காரணமே, கட்சி நிதி என்ற பெயரில், ஜெயலலிதா வசூலிக்கும் பெருந்தொகைதான்.  இந்த பெருந்தொகைதான், தொழிலதிபர்களை அலறி ஓட வைத்துள்ளது.  இந்த விபரங்களெல்லாம் ஜெயலலிதாவுக்கு நன்கு தெரிந்தே நடக்கிறது.    ஆனால், இலவச ஆடு மாடு, மிக்சி கிரைண்டர் மற்றும் விலை குறைந்த இட்லி சப்பாத்தி வழங்குவதன் மூலம், மீண்டும் வெற்றி பெற்று விடலாம் என்ற திமிரிலேயே இருக்கிறார் ஜெயலலிதா.

ஜெயலலிதா என்றதும் நினைவுக்கு வருவது என்ன ?  சொத்துக் குவிப்பு வழக்கு,  மகாமகம், சந்திரலேகா மீது ஆசிட் வீச்சு, சுப்ரமணிய சுவாமிக்கு எதிரான ஆபாச போராட்டம், உயர்நீதிமன்ற நீதிபதி சீனிவாசன் வீட்டுக்கு மின் இணைப்பையும் குடிநீர் இணைப்பையும் நிறுத்தியது, வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம் மற்றும் விஜயன் மீதான தாக்குதல், தேர்தல் ஆணையர் டிஎன் சேஷன் மீதான தாக்குதல், அமைச்சர் ப.சிதம்பரம் மீது தாக்குதல், நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் மருமகன் மீது கஞ்சா வழக்கு, வளர்ப்பு மகன் திருமணம், அதே வளர்ப்பு மகன் மீது ஹெராயின் வழக்கு, செரினா மீது கஞ்சா வழக்கு, ஆடிட்டருக்கு செருப்படி, கருணாநிதி கைது, அதையொட்டி நடந்த பேரணியில் ரவுடிகளை விட்டுத் தாக்குதல், எண்ணிலடங்கா ஊழல் வழக்குகள் …. இவைதானே நம் நினைவுக்கு வருவன ?

அடுத்ததாக ஜெயலலிதா, “எனது தலைமையிலான அரசுதுறை தோறும் ஆற்றி வரும் மகத்தான மக்கள் நலப்பணிகளை மக்களுக்கு எடுத்துச்சொல்லுங்கள். அனைவரும் மகிழும் வண்ணம் மக்களுக்குத் தொண்டாற்றுங்கள். பல்வேறு பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி செய்து வரும் மக்கள் பிரதிநிதிகளாகிய நிர்வாகிகளும்நிர்வாகப் பொறுப்புகளில் பணியாற்றி வருபவர்களும்தொண்டர்களும் ஒவ்வொருவரும் தங்கள் பணிகளை நேர்மையாகவும்திறமையாகவும் செய்யுங்கள். அ.தி.மு.க.விற்கு பெருமை சேர்க்கும் வண்ணம் உங்கள் ஒவ்வொருவருடைய பணியும் அமையட்டும்.

ஜெயலலிதா மற்றும் நரேந்திர மோடியின் பேச்சுக்களை தொடர்ந்து கவனித்து வருபவர்கள் ஒரு விஷயத்தை கவனித்திருக்க முடியும்.    நான், எனது, என்னுடைய என்ற வார்த்தை பிரயோகங்கள் அவர்களின் பேச்சுக்களில் அதிகமாக இருக்கும்.     ஜெயலலிதா அரசு மட்டுமல்ல.  அனைத்து அரசுகளும், தேர்ந்தெடுக்கப்படுவது, அனைவரது உழைப்பால்தான்.  தேர்ந்தெடுக்கப்படும் அரசுக்கு கொடுக்கப்படும் பொறுப்பு மக்களின் வரிப்பணத்தை சரியான முறையில் செலவு செய்து, மக்களுக்கு நன்மை ஏற்படும் வகையில் திட்டங்களை தீட்டி அதை நடைமுறைப் படுத்துவதே.    மக்கள் வரிப்பணத்தை நிர்வகிக்க வழங்கப்படும் ஒரு அதிகாரம்.  அவ்வளவே.   அதை விடுத்து விட்டு, ஜெயலலிதாவின் தகப்பனால் ஜெயராமோ, அவர்  தாயார் சந்தியாதேவியோ, அல்லது ஜெயலலிதாவோ சம்பாதித்த தொகையில் செலவு செய்வதுபோல, ஜெயலலிதா எப்போது பார்த்தாலும், என் அரசு, நான் என்று பேசுவது அவரது உச்சகட்ட அகந்தையை மட்டுமே காட்டுகிறது.

என்னைத்தவிர, வேறு யாரும் கிடையாது என்ற ஆணவத்தின் உச்சகட்டமே இத்தகைய பேச்சுக்கள்.   நலப்பணிகளை ஆற்றுவதாக கூறும் ஜெயலலிதாதான் ஆண்டுக்கு இரண்டு முறை அரசு செலவில், கொடநாட்டில் அமர்ந்து கொண்டு கோலோச்சுகிறார்.   இவரது வெட்டிச் செலவு இல்லாமல், அடிமைகளும் அதிகாரிகளும், அரசு செலவில் கொடநாடு சென்று மக்களின் வரிப்பணத்தை வீணாக்குகிறார்கள்.

இப்படி மக்கள் விரோத நடவடிக்கைகளின் ஒட்டுமொத்த உருவமாக இருக்கிறார் ஜெயலலிதா.    முட்டாள் தமிழக மக்கள், பணத்தை வாங்கிக் கொண்டு தன்னை மீண்டும் தேர்ந்தெடுப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறார் ஜெயலலிதா.  ஆனால் இதே ஜெயலலிதாவையே பர்கூரில் தோற்கடித்தவர்கள் தமிழக மக்கள் என்பதை வசதியாக மறந்து விடுகிறார் ஜெயலலிதா.

தற்போது ஜெயலலிதாவுக்கு மீண்டும் ஒரு சவுக்கடியைத் தருவதற்கு மக்கள் தயாராகியே வருகிறார்கள்.

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்.

குணத்தில் கயவராக இருப்பர். ஆனால்நல்லவரைப் போலக் காட்டிக் கொள்வார். மனிதர்களிடம் மட்டும்தான் இப்படி இருவகையான நிலைகளை ஒரே உருவத்தில் காண முடியும்.

https://www.savukkuonline.com/11897/

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply