ஒரு கோவிலையாவது பார்ப்பனர்கள் கட்டியிருப்பார்களா?பெரியார்

ஒரு கோவிலையாவது பார்ப்பனர்கள் கட்டியிருப்பார்களா?பெரியார்

காலத்திற்கேற்ப வாழுங்கள்

நம் கழகமும், நமது முயற்சியும், பிரசாரமும் எந்த ஒரு தனிப்பட்ட வகுப்பு நலத்துக்கோ, தனிப்பட்ட மனிதனின் சுயநலத்துக்கோ அல்ல என்பதை மக்கள் உணரவேண்டும்.

பொதுவாகவே நம் நாட்டு மனித சமுதாய முன்னேற்றத்தின் அவசியத்திற்காகவே பாடுபடுகிறோம்.

இன்று நாம் நம்மையும், மற்ற வெளிநாட்டு உலக மக்களையும் நோக்கும்போது நமது மூளை எப்படி இருக்கிறது? மிக மிகத் தாழ்ந்த நிலையாக இல்லையா?

நாமும், நம் நாடும் உலகில் மிகவும் பழைமையானவர் களாவோம். மற்ற நாட்டவரைவிட நம் பெருமையும், வாழ்வும் மிக மிக உயர்ந்த தன்மையில் இருந்ததாகும்.

அப்படிப்பட்ட நிலையில் இருந்த நாம், நமது நாடு, இன்று பழிப்புக்கு இடமான தன்மையில் இருக்கிறோம். அதாவது நாம் சமுதாயத்தில் கீழான மக்களாக்கப்பட்டு, வாழ்வில் அடிமைகளாக இருக்கும்படி செய்யப்பட்டு விட்டோம்.

இன்றைய உலகம் மிகவும் முற்போக்கடைந் திருக்கிறது. மக்கள் அறிவு மிகவும் மேலோங்கி இருக்கிறது. மக்கள் வாழ்வும் எவ்வளவோ மேன்மை அடைந்திருக்கிறது. ஆனால் நாம் மாத்திரம் காட்டுமிராண்டிகளாகவே இருந்து வருகிறோம். இதற்குக் காரணம் எதுவானாலும் நாம் சமுதாயத்தில் கீழ்ஜாதி மக்களாக இருந்து வருவதல்லாமல், நம்முடைய பழக்கம், வழக்கம் முதலிய காரியங்களும், அதற்கேற்ற வண்ணம் உலகோர் பழிக்கும்படியிருக்கிறது. நம் பெண் மக்கள், தாய்மார்கள் இதை உணரவேண்டும். நாம் சூத்திரர்களாகவும், நம் பெண்கள் சூத்திரச்சிகளாகவும் இருக்கிறோம் நம்மில் 100க்கு 10 பேருக்குக்கூட கல்வி இல்லை. நாம் 100க்கு 90 பேர் உடலுழைப்புப் பாட்டாளி மக்களாகக் கீழ் வாழ்வு வாழுகிறோம்.

இந்த நிலைக்குக் காரணம் என்ன? நம் இழிவையும் கஷ்டத்தையும் பற்றி நமக்கு ஏன் கவலை இலலை? பாட்டாளி மக்களாகிய நாம் ஏன் தாழ்ந்த ஜாதிகளாகக் கருதப்பட வேண்டும்? அதுவும் இந்த விஞ்ஞான காலத்தில்? என்று உங்களை, நீங்களே கேட்டுப் பாருங்கள்.

நம்மிடத்தில் எந்தவிதமான இயற்கை இழிவோ, இயற்கைக் குறைபாடோ கிடையாது. நாம் சமுதாயத் துறையில் கலைப்படு வதில்லை. நம் சமுதாய வாழ்வுக்கு ஆன காரியங்களைப் பற்றிச் சிந்திப்பதில்லை. நாம் தனித்தனியாக, தத்தம் நலம் பேணி வெறும் சுயநலக்காரர் களாகி, பொதுவில் தலைதூக்க இடமில்லாமல் போய் விட்டது.

நமது சமுதாய வாழ்வுக்கென்று, இன்று நமக்கு எவ்விதத் திட்டமும் கிடையாது. நம் வாழ்வுக்கு, நமக்கு, பொருத்தமில்லாதவைகளை மதம், கடவுள், தர்மம் என்று சொல்லிக்கொண்டு அவைகளுக்கு அடிமையாகி வாழ்வது தான் நம்மைத் தலையெடுக்க வொட்டாமல் செய்து விட்டது.நமக்கு நல்வழிகாட்டவும், அறிவைப் பெருக்கவும், மனிதத் தன்மையடையவும் நல்ல சாதனம் கிடையாது. நம் மதம், கடவுள், தர்மம் என்பவை நமக்குக் கேடானதாக இருந்து வருவதை நாம் உணரவில்லை.நம் மதம் நம்மை என்றைக்குமே முன்னேற்றாததாக இருந்து வருகிறது. மதத்தின் பயனாகத்தான் நாம் சூத்திரர், சூத்திரச்சி, கடை ஜாதியாக இருக்கிறோம்.

நம் கடவுள்கள் நம்மை ஏய்ப்பவையாக, நம்மை மடையர்களாக ஆகும்படியாக ஆக்கி வருகிறது.

நமது தர்மங்கள் என்பவை நம்மை முயற்சி இல்லாதவர்களாக ஆக்கிவிட்டன.ஆகையால், நாம் இத்துறைகளில் எல்லாம் பெருத்த மாறுதல்களையடைய வேண்டும்.

நம் கடவுள் தன்மையில் இருந்து வரும் கேடு என்ன வென்றால், கடவுளை ஒரு உருவமாகக் கற்பித்துக் கொண்டு, அதற்கு ஆக வீடு வாசல், (கோவில்) பெண்டு பிள்ளை, சொத்து சுகம், போக போக்கியம் ஆகியவை செய்து கொடுத்து அனுபவிக்கச் செய்கிறோம். அது மாத்திரமல்லாமல் நாம் கற்பனை செய்து, நாம் உண்டாக்கி, நாமே மேல்கண்டபடி வசதியும் செய்து கொடுத்துவிட்டு, அப்படிப்பட்ட கடவுள் நம்மை இழி ஜாதியாய்ச் சிருஷ் டித்தது என்று கூறிய எவனோ அயோக்கியன் பேச்சைக் கேட்டுக் கொண்டு, நம்மையும் நாமே இழி ஜாதியாய்க் கருதிக் கொண்டு, அக்கடவுளைத் தொடவும், நெருங்கவும் செய்வது தோஷம் – கூடாது என்று நம்பி எட்ட நிற்கிறோம்.இதனால் நம்மை நாமே கீழ்மைப் படுத்திக் கொண்டோம் என்று ஆகிறதா? இல்லையா? இப்படிப்பட்ட மடத்தனமும், மானமற்றதனமும் உலகில் வேறெங்காவது காணமுடியுமா?

இன்றைய நம் கோவில்கள் எவ்வளவு பெரிய கட்டடங்கள்? எவ்வளவு அருமையான சிற்பங்கள்? அவை களுக்கு எவ்வளவு கோடி ரூபாய் சொத்துகள்? அவை களுக்கு எவ்வளவு பூசை உற்சவ போக போக்கியங்கள்? இவை யாரால் ஏற்பட்டன? யாரால் கொடுக்கப்பட்டன? ஆனால், அவை  மூலம் பயனடைந்து, உயர்ந்த மக்களாக ஆகிறவர்கள் யார்? அவைகளுக்கெல்லாம் அழுதுவிட்டு, கிட்ட நெருங்கக்கூடாத மக்களாய், எட்டி நின்று இழிவும், நட்டமும் அடைகின்றவர்கள் யார்?

நீங்கள் உண்மையாய்க் கருதிப் பாருங்கள்!

இந்த நாட்டில் உள்ள பல ஆயிரக்கணக்கான கோவில் களில், ஒரு கோவிலையாவது, மேல் ஜாதிக்காரர் என்று உரிமை கொண்டாடும் பார்ப்பனர்கள் கட்டியிருப்பார்களா? அவைகளுக்கு இன்று இருந்துவரும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் பெறுமான சொத்துகளில், ஒரு ரூபாய் பெறு மான சொத்தாவது பார்ப்பனர்களால் கொடுக்கப்பட்டி ருக்குமா?

நாம் கோவில்கட்டி, நாம் பணம் கொடுத்து, பூஜை உற்சவம் செய்வித்து, இதற்குப் பணம் கொடுத்த நாம் ஈன ஜாதி, இழி ஜாதி, நாலாஞ் ஜாதி, சூத்திர ஜாதி, அய்ந்தாம் ஜாதி, கடை ஜாதி என்பதாக ஆவானேன்? நம்மைப் பல வழியாலும் ஏய்த்துச் சுரண்டி அயோக்கியத் தனமாகக் கொள்ளை கொண்டு வாழும் பாடுபடாத சோம்பேறிப் பித்தலாட்டப் பார்ப்பனன் மேல் ஜாதியாக இருந்து வருவானேன்? இதைச் சிந்தித்தீர்களா? சிந்திக்க யாராவது இதுவரை நமக்குப் புத்தி கூறி இருக்கிறார்களா?

நாம் ஈனஜாதி, இழி மக்கள் என்று ஆக்கப்பட்டதற்குக் காரணம் இந்தக் கடவுள்கள் தான் என்பதையும், நாம் முட்டாள்கள், மடையர்கள் ஆனதற்குக் காரணம் இந்தக் கடவுள்களுக்குக் கட்டடம் சொத்து போக போக்கியச் செலவு கொடுத்ததுதான் என்பதையும் இப்போதாவது உணரு கின்றீர்களா? இல்லையா?

அதுபோலவேதான் நம் தலையில் சுமத்தப்பட்டிருக்கும் இந்து மதம் என்பது நம்மைச் சூத்திரனாகவும், நம்மை ஏய்த்துப் பிழைக்கும் பார்ப்பானைப் பிராமணனாகவும் ஆக்கியிருக் கிறதா? இல்லையா?
அதுபோலவேதான் நம் தர்மங்கள் என்று சொல்லப் படும் மனுதர்மம், புராணம், கீதை, இராமாயணம், பாரதம் முதலிய இதிகாசங்களில் அல்லாமல் வேறு எதனாலாவது, நம்மைச் சூத்திரன், சூத்திரச்சி, வேசி மகன், தாசி மகன், அடிமை, கீழ்ஜாதி என்று யாராவது சொல்ல இடமிருக் கிறதா? காரண காரியங்கள் இருக்கின்றனவா?

ஆகவே நமது இழிவுக்கும் ஈனத்துக்கும் மேற்கண்ட நம் கடவுள், மதம், தர்ம சாஸ்திரங்கள் எனப்பட்டவை அல் லாமல், வேறு ஒன்றும் காரணம் அல்ல என்பதை இப்போதாவது உணருகிறீர்களா?
நமது மேன்மைக்கு, நல்வாழ்வுக்கு, நமது இழிவு நீங்கி மனிதத் தன்மை வாழ்வு வாழ்வதற்கு, மனித சமுதாயமே பகுத்தறிவுடன் உயர்ந்த ஜீவப்பிராணி என்பதைக் காட்டிக் கொள்வதற்கு, நமது இன்றைய நிலையில் இருக்கும் கடவுள், மதம், தர்மம், நீதி முதலியவை பெரிய மாற்ற மடைந்தாக வேண்டும்.நமது கடவுள்கள் காட்டுமிராண்டிக் காலத்தில் கற்பிக்கப் பட்டவை, அல்லது கண்டு பிடிக்கப் பட்டவை, அல்லது நமக்குத் தெரிய வந்தவை. நமது மதமும், மனிதனுக்கு நாகரிகம், பகுத்தறிவுத் தெளிவு இல்லாமல் மிருகப் பிராயத்தில் இருந்தபோது, அப்போ துள்ள அநாகரிக மக்களால் உண்டாக்கப் பட்டதாகும். நமது ஒழுக்கம் நீதி என்பவைகளும் அக் காலத்துக்கு ஏற்ப, அக்காலத்தில் உள்ள அறிவுக் கேற்ப ஏற்பட்டவையாகும்.

இன்று காலம் மாறிவிட்டது, இயற்கை கூட மாறிவிட்டது. அறிவின் தன்மை, அனுபவத்தன்மை மாறிவிட்டது. மனிதனுடைய மனோதர்மம், ஆசாபாசம், ஆற்றல் மாறிவிட்டன. இப்படிப்பட்ட இக்காலத்துக்கு, 20ஆம் நூற்றாண்டுக்கு 4000ஆம் 5000ஆம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கடவுள், மதம், தர்மம், நீதி செல்லுபடியாக முடியுமா?

ஆகவே இன்றைக்கு ஏற்றபடியாக இவை மாற்றப்பட்டாக வேண்டும். இன்று எந்த ஒருஒழுக்கத்தை, நீதியை நாம் விரும்புகிறோமோ, மற்றவர்களிடம் எதிர்பார்க்கின்றோமோ அப்படிப்பட்ட நீதியும், ஒழுக்கமும் கொண்ட கடவுள் மதம் வேண்டும். எப்படிப்பட்ட அறிவை முன்னேற்றத்தை விரும்புகிறோமோ, அப்படிப்பட்ட கடவுள், மதம், நீதி, தர்மம் கொண்ட கடவுள், மதம் வேண் டும். இன்று அப்படிப்பட்ட கடவுள், மதம் நமக்குண்டா? நம் கடவுள்களிடம் இல்லாத அயோக்கியத்தனங்கள் இன்று உலகில் எந்த அயோக்கியனிடமாவது உண்டா? நம் மதத்தில் இல்லாத காட்டுமிராண்டித்தனங்கள், மூடநம்பிக் கைகள் எந்த மடையனிடமாவது – குடுக்கைத் தலையனிட மாவது உண்டா? நான் மதத்தின் மீது, கடவுள் மீது குற்றம் சொல்லவில்லை. ஆனால், அப்படிப்பட்ட காலத்தில் அப்படிப்பட்ட அறிவுள்ள வர்களால் அவை சிருஷ்டிக்கப் பட்டவையாகும். காட்டிக் கொடுக்கப்பட்டவையாகும்.

இந்த மதத்தை – கடவுள் தன்மைகளை ஏற்படுத்தின – உண்டாக்கிய – காட்டின பெரியோர்கள் தெய்வப் பிறவிகள் – தெய்வீகத் தன்மை உடையவர்கள் என்பதான அந்த மகான்களே இன்று இருப்பார்களேயானால், உடனே மாற்றி விட்டு வேறு வேலை பார்ப்பார்கள். அல்லது வெளியில் வர வெட்கப்படு கிறார்கள்.

உதாரணமாக இவைகளை நீங்கள் சரி என்கிறீர்களா? அதாவது மூன்று பெரிய கடவுள்கள், அவைகளுக்கு ஈட்டி, மழு முதலிய ஆயுதங்கள். மாடு, பருந்து முதலிய வாகனங்கள், பெண்டாட்டி பிள்ளை குட்டிகள், போதாதற்கு வைப்பாட்டிகள், மேலும் பல குடும்பப் பெண்களை விரும்பி, கட்டிய கணவனுக்குத் தெரியாமல் வேஷம் போட்டு, உருமாறி விபசாரம் செய்வதில் அம்மூவரும் ஒருவரை ஒருவர் போட்டி போடுவதில் சாமர்த்தியம் நிறைந்தவர்கள்.

இம்மூவரையும் தலைவராகக் கொண்ட மதத்தில் நாலைந்து ஜாதிகள். முதல் ஜாதி பார்ப்பன ஜாதி. இந்த ஜாதி பாடுபடாமல் மற்றவர்கள் உழைப்பைச் சுரண்டியே வாழ்ந்து வரவேண்டும். இவர்களுக்குத்தான் எங்கும் முதலிடம். மற்றவர்கள் எல்லாம் இவர்களுக்குக் குற்றேவல் செய்து, வாயையும் வயிற்றையும் கட்டி அடங்கி ஒடுங்கி வாழவேண்டும்.

இந்த மதத்தில் உள்ள மக்களுக்குச் சொல்லப்பட்டிருக் கும் நீதி – ஒழுக்கம், ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு மாதிரி. பார்ப்பான் திருடினால் அவன் தலையைச் சிரைத்து மொட்டையடிப்பதே போதுமான தண்டனை. அதே திருட்டை ஒரு அய்ந்தாவது ஜாதிக்காரன் செய்தால் அவனுடைய கையை வெட்டி விடுவது அதற்கேற்ற தண்டனை என்று சொல்லுகிறது மனு நீதி. அந்த மனுநீதியில் சொல்லப்பட்டிருக்கும் நீதிகள் எல்லாம் இந்த அடிப்படையில்தான் வகுக்கப்பட்டிருக்கின்றன.

ஆகவே அக்காலத்தில் கடவுள் மத தர்மங்களை, இக்காலத்துக்கு ஏற்றபடி அமைத்துக் கொள்ளுங்கள் என்பதற்கு ஆகவே இதைக் குறிப்பிடுகிறேன்.பெரிய அறிவாளிகள்கூட எண்ணெய் விளக்கை இன்று அறவே நீக்கிவிட்டு, எலெட்ரிக் விளக்குப் போட்டுக் கொள்ளவில்லையா?

கட்டை வண்டிப் பிராயணத்தை நீங்கள் தள்ளிவிட்டு ஏரோப்ளேன் – ஆகாயக்கப்பல் பிராயணத்தை நீங்கள் விரும்பவில்லையா?ஆகையால், ஆதிகாலம் என்கின்ற காலத்தில், ஆதி கால மனிதர்கள், மகான்கள் என்பவர்களால் ஏற்படுத்தப் பட்ட ஆதிகாலத் தன்மையிலிருந்து மாறுபட்டு, இக்கால நிலைக்கு ஏற்றதுபோல் நடந்து கொள்ளுங்கள்.காலத்தோடு கலந்து செல்லாதவன் ஞாலத்துள் பயன்படமாட்டான்.
——————————–தந்தை பெரியார் அவர்கள் சொற்பொழிவு, (குடிஅரசு 15.1.1949

http://thamizhoviya.blogspot.com/2014/09/blog-post_1.html

விவேகானந்தர் – ஓர் எக்ஸ்ரே பார்வை

நூல்: கடவுளின் கதை – பகுதி IVஆசிரியர்: அருணன்வெளியீடு: வசந்தம் வெளியீட்டகம்,
69/24ஏ, அனுமார் கோவில் படித்துறை,
சிம்மக்கல், மதுரை – 625 001.
தொலைப்பேசி: 0452-2621997
பக்கங்கள்: 288
விலை: ரூ.200/-

நாடறிந்த முற்போக்கு எழுத்தாளர் பேராசிரியர் அருணன் அவர்களது கடவுளின் கதை மிக்ஷி _ என்ற அரிய ஆராய்ச்சி நூல் _ நான்காம் தொகுதி மற்ற மூன்று தொகுதிகளைப் போலவே மிகச் சிறப்பாக எழுதப் பட்டுள்ளது.

முதலாளி யுகத்தின் முதல் நூற்றாண்டில் எப்படி மேற்கிலும் கிழக்கிலும் கடவுள் _ மதப் பரப்புகள் – புரட்டுகள் – திட்டமிட்டு நடைபெற்றன. எதிர் சிந்தனையாளர்களின் கருத்துப்போரும் அறிவாயுதங்களும் எப்படிப் பயன்படுத்தப்பட்டன என்பதை பல வாத ஆதாரங்களை முன்னிறுத்தி மிக சுவையான, ஆழமான, ஆய்வு நூலாக இந்நூல் – வழமைபோல் அமைந்துள்ளது!

விவேகானந்தர் இப்போது ஆர்.எஸ்.எஸுக்குக் கிடைத்த அருமையான மயக்க பிஸ்கட் ஆகும்.

படித்த நம்மில் பலரே இதில் மயங்கி வருகின்றனர்; அவர்களது மயக்கம் தெளிந்து சரியான புரிதல் பார்வையைப் பெற இந்த நூல் விவேகானந்தரை மிகவும் துல்லியமாக எக்ஸ்ரே எடுத்துப் புரியவைத்துள்ளது.அவசியம் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய நூல்இது.பேச்சாளர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் கையேடுபோல் பயன்படக் கூடும்.                                                       ————————– ஆசிரியர் கி.வீரமணிஅந்நூலின் ஒரு பகுதி:கல்கத்தாவில் 1863இல் ஒரு பாரம்பரியமான காயஸ்தா குடும்பத்தில் பிறந்தார் நரேந்திரநாத் தத்தா. தந்தையார் உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குரைஞர். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் நரேந்திராவுக்கு பிரம்மோ சமாஜ இயக்கத்தில் பற்றுதல் ஏற்பட்டது. அதன் வருணாசிரம மறுப்பு, பிரம்மோ இறையியல் அந்த பிராமணரல்லாத மாணவரை  ஈர்த்ததில் ஆச்சரியம் இல்லை. இதை ராமகிருஷ்ணரைப் பற்றிய பதிவுகளைத் தந்த மகேந்திரநாத் குப்தா இப்படியாகக் குறிப்பிட்டுள்ளார்: பத்தொன்பது வயது நிரம்பிய ஒரு வாலிபரைப் பார்த்து பல விஷயங்களை ஆனந்தமாகப் பேசினார் ஸ்ரீராமகிருஷ்ணர். அந்த வாலிபர் நரேந்திரா. அவர் கல்லூரி மாணவர்; சாதாரண பிரம்மோ சமாஜத்திற்கு அடிக்கடி செல்பவர்.
விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறை எழுதியுள்ள நிகிலானந்தாவும் இப்படிச் சித்தரித்துள்ளார்: நரேந்திரா நவீன உணர்வின் அடையாளமாக இருந்தார். பிரம்மோ சமாஜத்தின் விசுவாசமான உறுப்பினர் என்ற முறையில் இந்து மதத்தின் உருவ வழிபாடு மற்றும் இதர சடங்குகளை அவர் விமர்சித்து வந்தார். கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே குருமார்கள் தேவையில்லை என்று நினைத்தார். கடவுள்கள் மற்றும் தேவதைகள் பற்றிய ஸ்ரீராமகிருஷ்ணரின் தரிசனங்களை அவர் கேலி செய்தார், அவை பொய்த்தோற்றங்கள் என்றார்.

கேசவ சந்திரசென், விஜய் போன்ற பிரம்மோ சமாஜத் தலைவர்கள் ராமகிருஷ்ணரைச் சந்தித்து வந்தார்கள் என்பதைக் கண்டோம். அப்படிப்பட்ட சூழலில்தான் 1881 நவம்பரில் அவரை நரேந்திராவும் சந்தித்துப் பேசினார். அவரது ஆற்றலைச் சட்டென்று உணர்ந்து கொண்ட ராமகிருஷ்ணர் அவரைத் தனது ஆளுகைக்குள் கொண்டுவர முடிவு செய்தார்; குறிவைத்து வலை விரித்தார். தனது சீடர் (நரேந்திரா) சென்றிருந்த பிரம்மோ ஆலயத்திற்கு ஸ்ரீராமகிருஷ்ணர் ஒருநாள் சென்றார். அவர் சென்றபோது நரேந்திரா மற்ற பிரம்மோக்களுடன் சேர்ந்து பாடிக்-கொண்டிருந்தார். நரேந்திராவின் குரலைக் கேட்டதும் ஸ்ரீராமகிருஷ்ணர் அருள் வந்தவராக ஆடினார். கூடியிருந்தவர்கள் பார்வையெல்லாம் அவர் மீது திரும்ப, அங்கே பெரும் சலசலப்பு ஏற்பட்டது என்று விவரித்துள்ளார் நிகிலானந்தா.

பிரம்மோ சமாஜக் கூட்டத்திற்கே சென்று நரேந்திராவை இப்படியாக அங்கிருந்து இழுத்துவரும் வேலையில் இறங்கினார். அப்படியும் நரேந்திரா உடனடியாக ராமகிருஷ்ணரின் வலையில் விழவில்லை. உலகம் மாயை, பிரம்மம் எனப்பட்ட கடவுள் ஒன்றே மெய்ப்பொருள் எனும் அத்வைதம் அவருக்கு இயல்பானதாகப் படவில்லை. பூங்காவில் உலவிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த இரும்புக் கம்பத்தில் தனது தலையைப் பலமுறை மோதி இந்த உலகம் மெய்யா அல்லது மனதின் மாயையா என்று சோதனை செய்தார் என்கிறார் நிகிலானந்தா. நிச்சயம் உலகம் மாயை அல்ல என்பதை நெற்றிப்-பொட்டின் வலி காட்டிக் கொடுத்திருக்கும்!

அப்படியும் முடிவில் நரேந்திரா ராமகிருஷ்ணரின் அத்வைதத்தையும், காளி வழிபாட்டையும் ஏற்றுக்கொண்டார் என்றால் அதற்குச் சிந்தாந்தக் காரணமும், வாழ்வியல் காரணமும் இருந்தன. அந்த 19 வயது இளைஞர், சந்திக்கிற பெரிய மனிதர்களிடம் எல்லாம் நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டு வந்தார். பிரம்மோ சமாஜத்தின் தேவேந்திரநாத் தாகூரிடம் அப்படிக் கேட்டபோது அவர் பேச்சை மாற்றிவிட்டார்.
அதே கேள்வியை ராமகிருஷ்ணரிடம் கேட்டபோது அவர் தயங்காமல் சொன்னார்: ஆமாம், நான் கடவுளைப் பார்த்திருக்கிறேன். உன்னைப் பார்ப்பது போல, சொல்லப்-போனால் இதையும்விடத் தெளிவாக அவரைப் பார்க்கிறேன். கடவுளைப் பார்க்க முடியும், அவரோடு பேச முடியும். ஆனால் கடவுளைப் பார்க்க யார் பிரியப்படுகிறார்கள்? தங்களது மனைவி, குழந்தைகள், சொத்து ஆகியவற்றுக்குத்-தான் மனிதர்கள் குடம்குடமாகக் கண்ணீர் விடுகிறார்களே தவிர கடவுள் தரிசனத்திற்காக யார் அழுகிறார்கள்? கடவுளுக்காக ஒருவன் உண்மையில் கதறினால் நிச்சயம் அவரைக் காண்பான். இந்தப் பதிலைக் கேட்டு அசந்துபோனார் நரேந்திரா.

விண்டவர் கண்டதில்லை, கண்டவர் விண்டதில்லை என்று மரணத்தைப் பற்றியும், கடவுளைப் பற்றியும் பாமரர்களும் ஜாக்கிரதையாகவே பேசி வந்த இந்த நாட்டில் மகான்கள் எனப்பட்டோரே இப்படிச் சொல்லும் அசட்டுத் துணிச்சலைப் பெற்றிருந்தார்கள். கடவுள் எனும் கற்பிதத்தைக் கண்ணாரக் கண்டதாகச் சொன்னால் அதன் அர்த்தம் அந்தக் கற்பிதத்தின் மீது அவர்களுக்கிருந்த உறுதிதானே தவிர புலனறிவால் ஒரு பவுதீக வஸ்துவைப் பார்த்த அர்த்தம் அல்ல என்று பின்னர் விளக்கினால் யாரால் மறுக்க முடியும்?

அந்தத் தைரியம்தான் அவர்களை இப்படிப் பேச வைத்தது. அது மட்டுமல்ல, உண்மையில் கதறினால் என்று ஓர் இக்கு வைத்திருப்-பதையும் கவனிக்க வேண்டும். கடவுளின் தரிசனம் தனக்குக் கிடைக்கவில்லையென்று ஒரு பக்தன் புகார் கூறினால் இந்த நிபந்தனையை நினைவுபடுத்தியும் அவர்களால் சமாளிக்க முடியும். உண்மையில் என்பதற்கு யாரால் இலக்கணம் தர முடியும்? இப்போதும்கூட நரேந்திரா உடனடியாக ராமகிருஷ்ணர் பின்னால் சென்றுவிடவில்லை. அவருக்கும் பிரம்மோ சமாஜத்திற்கும் இடையே அல்லாடினார். அந்தச் சமயத்தில்தான் – 1884இல் – அவரது தந்தையார் அகால மரண-மடைய, அவரது குடும்பம் நடுத்தெருவில் நின்றது பணச்சிக்கலில்மாட்டி. அதில் திகைத்துப்போன நரேந்திரா தனது குடும்பத்திற்காகக் காளியைப் பிரார்த்திக்குமாறு வேண்டினார் ராமகிருஷ்ணரிடம். அவரோ மிகச் சாதுரியமாக அவரையே நேரடியாகப் பிரார்த்திக்கச் சொன்னார்.

நரேந்திரா துறவு வாழ்வை மேற்கொள்ள வேண்டும் என்று ஸ்ரீராமகிருஷ்ணர் விரும்பினார். அப்படியெனில், தனது குடும்பத்திற்கு ஏதாவது செய்யுமாறு அவரைக் கேட்டுக்கொண்டார் நரேந்திரா. காளியைப் பிரபஞ்சத்தின் தெய்வத் தாயாக ஏற்றுக் கொண்டவர், அவளின் பக்தராக மாறினார் என்று விளக்கியிருக்கிறார் நிகிலானந்தா. வாழ்வின் எதிர்பாராத துயரங்கள் மனிதர்களை கடவுள் நம்பிக்கை-யாளர்-களாக மாற்றுகின்றன என்றால், அத்தகைய துயரம் ஒன்று இங்கே ஒரு பிரம்மோவை உருவ வழிபாட்டாளராக மாற்றியது! இதற்குப் பிறகு பிரம்மோ சமாஜத்தின் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை நரேந்திரா. அந்த சமாஜத்திற்கு மூடுவிழா காணும் முயற்சியில் இப்படியும் வெற்றிபெற்றார் ராமகிருஷ்ணர்.

* * *1889 இறுதியிலிருந்து நரேந்திராவும் அப்படியொரு பாரத யாத்திரையை மேற்கொண்டார்.

இதிலே கவனிக்க வேண்டிய விஷயம் இந்து சமஸ்தானங்களாகப் பார்த்து அவர் விஜயம் செய்தது, அவற்றின் ராஜாக்களைச் சந்தித்து அளவளாவியது. அவர்களில் பெரும்பாலோர் இந்துப் பழமைவாதிகளாக இருந்தார்கள்; இவரை அன்போடு உபசரித்து மகிழ்ந்தார்கள். மேற்கத்திய நவீனக் கல்விக்கு ஆட்பட்டு இந்துப் பழமைவாதத்தை சில ராஜாக்கள் விமர்சித்தபோது அவர்களைக் கண்டிக்கத் தவறவில்லை நரேந்திரா. அல்வார் மகாராஜாவை 1891 பிப்ரவரியில் சந்தித்தபோது அவர் உருவ வழிபாட்டைக் கேலி செய்ததை இவர் கேட்கவும் சகிக்கவில்லை. அவருக்குப் புத்தி புகட்டி அங்கிருந்து புறப்பட்டார்.

கத்தியவார் ராஜாதான் இவரை மேற்குலகிற்குப் பயணம் செய்யுமாறு முதலில் ஆலோசனை சொன்னவர். அத்தகைய ஆலோசனையை ராமநாதபுரம் ராஜா பாஸ்கர சேதுபதி மூலமும் கேட்டார் நரேந்திரா. அமெரிக்காவில் நடக்கவிருந்த மதங்களின் நாடாளுமன்றம் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறும், அதற்கு நிதி உதவி செய்வதாகவும் அவர் கூறினார்.

கேத்ரி ராஜாவின் வேண்டுகோளின்படிதான் விவேகானந்தர் எனும் பெயரைச் சூட்டிக்-கொண்டார் நரேந்திரா. இதே ராஜா பட்டுக் காவி ஆடை, காவித் தலைப்பாகை, பெரிய பணமுடிப்பு, 1893 மே 31இல் கிளம்பவிருந்த எஸ்.எஸ்.பெனின்கலார் கப்பலில் ஒரு முதல் வகுப்பு டிக்கெட் என்று கொடுத்துதவினார் என்கிறார் நிகிலானந்தா. இந்த ராஜாக்களின் உதவி மட்டுமல்லாது இன்னும் மைசூர் மகாராஜா மற்றும் சமஸ்தானங்களது மந்திரிமார்களின் உதவியும் விவேகானந்தருக்கு இருந்தது என்கிறார் அவரே. ஆக, பாரதத்தின் பக்கா பழமைவாத நிலப்பிரபுத்துவ குறுநில மன்னர்களின் பிரதிநிதியாகத்தான் மனிதர் மேற்குலகிற்குப் பயணித்தார் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
அமெரிக்காவைக் கிறிஸ்டோபர் கொலம்பஸ் கண்டுபிடித்ததன் நானூறாவது ஆண்டு விழாவை ஒட்டி அங்கே பலவித நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. அப்படியொரு நிகழ்ச்சிதான் சிக்காகோ நகரில் நடந்த மதங்களின் நாடாளுமன்றம் எனும் கூட்டம். அந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற அதில் பலரும் சீமான்களே! சீமாட்டிகளே! என்று விளித்துப் பேசியபோது விவேகானந்தர் சகோதரர்களே! சகோதரிகளே! என்று அழைத்துப் பேசியது இன்றளவும் பெரிதாகப் போற்றப்படுகிறது. ஆனால், அங்கே அவர் பேசிய பேச்சுகளைப் படித்துப் பார்த்தால் அப்படியொன்றும் சகோதரத்துவம் பொங்கிப் பிரவாகம் எடுத்து ஓடியதாகத் தெரியவில்லை. அவருடைய கவலை எல்லாம் பாரதத்தில் நடந்து வந்த கிறிஸ்தவ மத மாற்றமே, அதைத் தடுக்க பிராமணிய இந்து மதத்தின் பெருமைகள் எனப்பட்டவற்றைப் பறைசாற்றுவதே. அந்தக் காரியத்தையே திறம்படச் செய்தார். அதனாலேயே அவரது அமெரிக்க விஜயத்தை அன்றும் இன்றும் இந்துப் பழமைவாதிகள் புகழ்ந்துரைக்கிறார்கள்.

செப்டம்பர் 20ஆம் தேதி அந்த நாடாளுமன்றத்தில் அவர் பேசிய பேச்சின் தலைப்பே இந்தியாவின் உடனடித் தேவை  மதம் அல்ல என்பதுதான். அதாவது கிறிஸ்தவ மதம் இந்தியாவுக்குத் தேவையில்லை என்றார். பேச்சைக் கேளுங்கள்: பரசமயத்தவரின் ஆன்மாவைக் காப்பாற்ற மிஷனரிகளை அனுப்புவதில் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் மிக ஆர்வத்தோடு இருக்கிறீர்கள். ஏன் நீங்கள் பசியிலிருந்து அவர்களது உடலைக் காப்பாற்ற முயற்சி செய்யக்கூடாது?

இந்தியாவில் கொடூரமான பஞ்சங்களின்போது பசியால் ஆயிரக்கணக்கானோர் மாண்டுபோகிறார்கள். அப்படியும் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் ஏதும் செய்வதில்லை. இந்தியா முழுக்க நீங்கள் தேவாலயங்களைக் கட்டுகிறீர்கள். ஆனால் இந்தியர்கள் ஏற்கெனவே போதுமான அளவுக்கு மதத்தைக் கொண்டிருக்கிறார்கள். எரியும் இந்தியாவின் கோடிக்கணக்கான வறியவர் தொண்டை வறளக் கத்துவது ரொட்டிக்காகத்தான்.

இந்தியாவில் பஞ்சம் நேர்ந்தபோது நிவாரணம் தந்தவர்கள், கஞ்சித் தொட்டி திறந்தவர்கள் கிறிஸ்தவ மிஷனரிகளே என்பது வரலாற்று உண்மை.

இந்துமடாதிபதிகள் அப்படியெல்லாம் பஞ்ச நிவாரண வேலையில் இறங்கியதில்லை. பிராமணர்களுக்குப் போஜனம் செய்விப்பதே சொர்க்கத்தின் கதவுகளைத் திறக்கும் வழி என தர்ம சாஸ்திரங்கள் சொல்லியதை அட்சரம் பிசகாமல் பின்-பற்றினார்கள்.

அடித்தட்டு ஜாதியினர் பஞ்சத்தால் செத்தால் அது அவர்களது பூர்வஜென்ம வினை. அதில் தாங்கள் தலையிடக் கூடாது என்றிருந்தார்கள்.அமெரிக்காவுக்குப் போன விவேகானந்தரோ கிறிஸ்தவ மிஷனரி-களின் பணிகளை அப்படியே மூடிமறைத்துப் பேசினார்.

ஓர் உண்மையை மட்டும் ஒப்புக்கொண்டார். இங்கே பஞ்சகாலத்தில் பாமரர்கள் பசியால் மாண்டார்கள் என்பதை. ஆனால் அப்போது அவரது பெருமைமிகு இந்து மதம் என்ன செய்து கொண்டிருந்தது என்பதை மட்டும் சொல்லவில்லை. அந்த அந்நியர்களிடம் ரொட்டிக்காக இவரும் சேர்ந்து கையேந்த வேண்டிய நிலை ஏன் வந்தது என்றும் சொல்லவில்லை.அவரது கவலை எல்லாம் அவரது சொந்த மதத்தை _ பசியால் வாடினாலும் கோடிக்கணக்கான இந்தியர்-களுக்குச் சோறு போடாத பிராமணிய மதத்தை _ கட்டிக் காப்பதுதான். அதைச் சரியவைக்கும் வேலையில் கிறிஸ்தவ மிஷனரிகள் ஈடுபடக்கூடாது என்றவர், மாற்று வழியாக ரொட்டி கொடுக்கும் வேலையைச் செய்யச் சொன்னார்! ஆதாயம் இல்லாமல் யாரேனும் உபகாரம் செய்வார்களோ அடுத்த நாட்டவருக்கு என்பதையும் மறந்தார்!

தனது சொந்த மதம் தனது சொந்த மக்களுக்குச் சோறு போடவில்லை என்பதை நாசூக்காக மறைத்துவிட்டு அதன் பெருமை-களை எடுத்தோத ஆரம்பித்தார் அமெரிக்கர்-களுக்கு.சமீபத்திய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் எதன் எதிரொலியாக இருக்கின்றனவோ அந்த உயர் ஆன்மிகமாகிய வேதாந்தத் தத்துவம் முதல் பலவித புராணங்களைக் கொண்ட தாழ்நிலையான உருவ வழிபாடு வரை, பவுத்தர்களின் அறியொணாவாதமும் சமணர்-களின் நாத்திகமும் என்று சகலமும் இந்து மதத்தில் இடம் பெற்றுள்ளன என்று ஒரு போடு போட்டார். நவீன விஞ்ஞானங்கள் எல்லாம் தங்கள் வேதங்களில் இருப்பதாக மார்தட்டுகிற இந்துப் பழமைவாதிகள் இன்றைக்கும் இருக்கிறார்கள் என்றால், அவர்களின் முன்னோடி விவேகானந்தர். எல்லாம் வேதங்களில் உள்ளன என்றால் ஏன் நீராவிச் சக்தியையும், அதில் இயங்கும் இயந்திரங்களையும், அதில் ஓடும் ரயிலையும் இந்து அறிவுஜீவிகள் கண்டுபிடிக்கவில்லை என்பதை மட்டும் அவரும் விளக்கவில்லை, அவருக்குப் பின்பு வந்தவர்களும் விளக்கவில்லை. மற்றொரு பொய்யுரை பவுத்தமும் சமணமும் இந்து மதத்தின் அங்கங்கள் என்று அவர் பேசியது. அவற்றை ஒழித்துக்கட்ட ஆதிசங்கரர் வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்ததை, முதன்முதலில் நானாதிசைகளிலும் மடங்கள் அமைத்து ஆள் திரட்டியதைத் திட்டமிட்டு மறைத்தார்.

இன்றளவும் பவுத்தமும், சமணமும் உலகில் தனித்தனி மதங்களாகத்தான் இயங்குகின்றன எனும் நடப்பு யதார்த்தத்தைக்-கூட கணக்கில் கொள்ளவில்லை மனிதர்.இந்து மதம் ஜாதியை ஓர் அங்கமாகக் கொண்டிருக்கிறது எனும் விஷயம் அமெரிக்கா வரை போயிருந்தது. அந்த உண்மையை ஒப்புக்கொண்டு பேசவில்லை விவேகானந்தர். மாறாக முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கப் பார்த்தார். காணுங்கள் அதை: இந்துக்களின் மதம் இரு பகுதிகளைக் கொண்டது.

அவை: 1. சடங்குப் பூர்வமானது. 2. ஆன்மிகப் பூர்வமானது.

பிந்தியதைத் துறவிகள் சிறப்பாக ஆராய்கிறார்கள். அங்கே ஜாதி கிடையாது. மிக உயர்ந்த ஜாதியைச் சார்ந்த மனிதரும், மிகத் தாழ்ந்த ஜாதியைச் சார்ந்த மனிதரும் இந்தியாவில் துறவியாகலாம்; இரண்டு ஜாதிகளும் சமமாக மாறுகின்றன. மதத்தில் ஜாதி இல்லை; ஜாதி என்பது ஒரு சமூக நிறுவனமே. (செப்.26இல் நிகழ்த்திய உரை)———– மேலும் அறிய, புத்தகத்தை வாங்கிப் படியுங்கள்!Posted by தமிழ் ஓவியா 47 commentsEmail ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to PinterestLabels: விவேகானந்தர்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை-அரசியல்-சமூகம்

12.7.14

விவேகானந்தருக்கு விழா எடுப்போரே அவரின் மறுபக்கத்தை மறைப்பது ஏன்?

விவேகானந்தருக்கு விழா எடுப்போரே அவரின் மறுபக்கத்தை மறைப்பது ஏன்?

விவேகானந்தரின் 150ஆம் ஆண்டு விழாவாம்; இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று பார்ப்பன சக்திகள் ஊதிப் பெருக்கி உலகை வலம் வருகின்றன.
அஞ்சல் தலை வெளியீடு, நினைவு நாணயம் வெளியிடுதல், முக்கிய வீதி களுக்குப் பெயர் சூட்டுதல் பல்கலைக் கழகங்களில் ஆய்வு மய்யம் என்று களே பரமாகக் காரியங்கள் நடந்து கொண் டுள்ளன.

விவேகானந்தர் ரதம் என்ற ஒன்றைக் கிளப்பி விட்டுள்ளனர். கல்வி நிலையங்களில் எல்லாம் புகுந்து புகுந்து வருகிறது. உளுந்தூர்ப் பேட்டையில் ரதம் வந்த போது 10 ஆயிரம் லிட்டர் பாலாபிஷேகம் செய்தனராம். 100 வகைப் பலகாரங்கள் நிவேதிக்கப்பட்டனவாம்.

ராமகிருஷ்ண மடங்களும், தமிழ்நாடு ராமகிருஷ்ண விவேகானந்த பால பிரச்சார பிரச்சார் பரிஷத்தும் இணைந்தும் இவற்றை நடத்திக் கொண்டுள்ளன.போதும் போதாதற்குத் தமிழ்நாட்டில் ஜெயலலிதா அம்மையாரின் ஆட்சியா யிற்றே! கேட்கவா வேண்டும்?

ஒன்பது பல்கலைக் கழகங்களில் 25 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கி சுவாமி விவேகானந்தர் உயர் ஆய்வு மற்றும் கல்வி மய்யம் அமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவித்தவர் இவர் (8.4.2003).

சென்னையில் விவேகானந்தரின் 150 ஆம் ஆண்டு விழாவை முதல் அமைச் சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார் (27.2.2013).

அவ்விழாவில் அம்மையார் ஜெய லலிதா  என்ன பேசினார்?

தொண்டு என்பது சுயநலமின்றி, பிறர் நலத்துக்காக உழைப்பது. அனைத்து மதங்களும் பிறருக்கு உதவுவதைப் போதிக்கின்றன. இதனால்தான், நமது நாட்டில் பல தொண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன.

தொண்டுகளில் பல வகை உண்டு. நாட்டுக்குச் செய்யும் சேவை தேசத் தொண்டு. மக்களுக்குச் செய்யும் சேவை மக்கள் தொண்டு. இறைவனுக்குச் செய்யும் சேவை திருத்தொண்டு.

ஒவ்வொரு தொண்டு நிறுவனமும் ஒவ்வொரு விதமான சேவையைச் செய் கிறது. ஆனால், இந்த மூன்று சேவைகளை யும் செய்கிற அமைப்பாக ராமகிருஷ்ண மடம் திகழ்கிறது.

லாப நோக்குடன் செயல்படும் மிகப்பெரிய வணிக நிறுவனங்கள்கூட, லாபத்தின் ஒரு பகுதியை கல்வி, மருத் துவம் போன்ற பொது நலத் தொண்டுக்காக, சமூக சேவைக்காக ஒதுக்குகின்றன.

அதே நேரத்தில், பொதுத் தொண்டு, பொது வாழ்வு என்று சொல்லி தன்னலத் துக்காக அதையே தொழிலாக மாற்றிக் கொண்டவர்களும் இந்த நாட்டில் இருக் கத்தான் செய்கிறார்கள். தொழில் தொண் டாகலாம். தொண்டு தொழிலாகக் கூடாது.

நான் அரசியலுக்கு வருவதற்கு சுவாமி விவேகானந்தர் ஒரு மிகப் பெரிய தூண்டுகோலாக விளங்கினார். இதை அரசியலில் காலடி எடுத்து வைத்தபோதே ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறேன். சுவாமி விவேகானந்தர் துறவியாக இருந்து மக்கள்  சேவையைப் புரிந்தார். நானும் அவர் வழியில் அரசியலில் துறவறம் பூண்டு மக்கள் சேவையைச் செய்து வருகிறேன். எனக்கு சுயநலம் என்பது அறவே கிடையாது. எனக்கென்று எதுவும் தேவையில்லை. எனக்கென்று யாரும் கிடையாது. எனக்கு எல்லாமே தமிழக மக்கள் தான். தமிழக மக்களால் நான், தமிழக மக்களுக்காகவே நான்.என்னைப் பொறுத்தவரையில், எனக்கு வருகின்ற சோதனைகளை, முட்டுக்கட்டை களை, தடைகளை சுவாமி விவேகானந்தர் வழியில்தான் தகர்த்து வருகிறேன். என்று பேசினார்.

இதுகுறித்த விமர்சனத்தைத் தொடங்கினால் அது நம்மை வேறு தளத்திற்கு இழுத்துச் செல்லும்!எண் சோதிடம் (பெயரில் மேலும் ஒரு ணீயைச் சேர்த்துக் கொண்டது வரை) யாகம், யோகம்  மகா மகக் குளியல் என்ற வகையில் அசல் இந்துத்துவா பிச்சை வாங்கும் வகையில்  நடந்து கொள்பவர் தானே தமிழக முதல் அமைச்சர் அத்தகைய ஒருவர் விவேகானந்தர் பெயரால் இந்துத் துவாவை விசிறி விடும் வேலையில் இறங்குபவர்களுக்கு அதிகப் படியான இறக்கைகளை இலவசமாக வழங்க மாட்டாரா என்ன!

அந்த விழாவில் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கவுதமானந்தர் என்பவர் பேசிய பேச்சே முதல்வரின் ஈடுபாடு எத்தகையது என்பது சொல்லாமலேயே விளங்கும்.

விவேகானந்தரின் 150ஆவது ஆண்டு விழா, ஓராண்டுத் தொடர் கொண்டாட்ட மாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. விவேகானந்தர் இல்லத்துக்கு அருகே உள்ள 1803 சதுர அடி பரப்பிலான காலிமனையை 99 ஆண்டுகளுக்குக் குத்தகை அடிப்படையில் வழங்க வேண்டும் என முந்தைய அரசிடம் (கலைஞர் தலைமையிலான ஆட்சியிடம்) கோரிக்கை வைத்தோம். அந்த மனு நிராகரிக்கப்பட்டது. 2012ஆம் ஆண்டில் மீண்டும் கோரிக்கை வைத்தோம். உடனடியாக காலிமனையை 99 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கி முதல் அமைச்சர் ஜெயலலிதா உத்தர விட்டார். இதன் மூலம் விவேகானந்தர் இல்லம் புதுப்பிக்கப்பட்டு காலிமனையில் விவே கானந்தர் பெயரில் பண்பாட்டு மய்யம் அமைக்கப்படும் என்று அவர் பேசினார் என்றால் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் எண்ணமும் இதயமும் எந்தத் திசையில் என்பதை அறிந்து கொள்ளலாம்.

அவர் அரசியலுக்கு வந்ததற்குக் காரணம் அண்ணா கொள்கையோ, எம்.ஜி.ஆரோ அல்ல;  விவேகானந்தர் தானாம் – குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

சென்னையில் ராமகிருஷ்ண மடம் சார்பில் நிறுவப்பட்டுள்ள விவேகானந்தர் பண்பாட்டு மய்யத்தை முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா திறந்து வைத்தார். (9.7.2014) ஏற்கெனவே விவேகானந்தர் 150 ஆம் ஆண்டு அறிவித்தபடி தமிழ்நாடு அரசின் சார்பில் இரண்டு கோடி ரூபாய்க்கான உத்தரவையும் பிறப்பித்தார்.

(கட்சியின் பெயரில் அண்ணா; கொடியில் அண்ணா உருவம்; திராவிட என்ற இனக் கலாச்சார அடையாளம் வேறு.  தந்தை பெரியார் நினைவைப் போற்றும் வகையிலோ, அறிஞர் அண்ணாவின் கருத்துக்களைப் பரப்பும் திசையிலோ, திராவிடர் இயக்கத்தின் சிறப்பினை நிலை நிறுத்தும் வகையிலோ, முதல் அமைச்சர் ஒரு சிறு துரும்பை அசைத்திருப்பாரா? என்று எண்ணிப் பார்க்கட்டும் நம் தமிழ்நாட்டு மக்கள் ஏன், அக்கட்சியில் உள்ளவர்கள்தான் சிந்திக்கட்டுமே!

கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் என்னாயிற்று? மேலும் வளர்ச்சிக்கு அடிகோலினாரா அம்மையார்?)
இவையெல்லாம் இருக்கட்டும்; இந்த விவேகானந்தர் யார்? அவரின் ஒரு பக்கத்தை மட்டுமே பெரிதுபடுத்திக் காட்டு கிறார்களே!

பார்ப்பனீயத்தைப் பற்றியும், இந்து மதத்தின் ஜாதிய தன்மை குறித்தும் ஆர்.எஸ்.எஸின் இந்து வெறி குறித்தும் ஆதி சங்கரரின் குறுகிய இதயம் குறித்தும் விவேகானந்தர் விளாசியுள்ளாரே – அவற்றை ஏன் இவர்கள் வெளிப்படுத்த வில்லை?

உண்மையிலேயே விவேகானந்தர் மீது பற்றும் அவர்தம் சிந்தனைகளைப் பரப்ப வேண்டும் என்ற நல்லெண்ணமும் அவர் களிடத்தில் இருக்குமேயானால் விவே கானந்தர் கருத்துக்கள் அனைத்தையும் ஒளிவு மறைவின்றி பரப்பும் வகை செய்திட வேண்டாமா?
அவர்கள் செய்யாவிட்டால் என்ன நாம் அந்த வேலையைச் செய்யலாம் அல்லவா!

இதோ விவேகானந்தர் பேசுகிறார்: அவரின்  மறு பக்கத்தைக் காண்பீர்!
மத மாற்றத்துக்கும் கீழ்மைக்கும் யார் பொறுப்பாளி?

இந்தியாவிலுள்ள ஏழை மக்களிடையில் முகமதியர்கள் அதிகம் இருக்கின்றார்கள். அதற்கு காரணம் என்ன? கத்தியையும், வாளையும் காட்டிப் பயமுறுத்தி இந்துக்கள் முகமதியர்களாக மாற்றப்பட்டார்கள் என்று சொல்வது அறிவுடைமை ஆகாது.

நம் நாட்டிலுள்ள ஜமீன்தார்களிடமி ருந்தும், புரோகிதர்களிடமிருந்தும் சுதந்திரம் பெற்று வாழ்வதற்குத்தான் இந்துக்கள் முஸ்லீம் மதத்துக்கு மாறினார்கள்.

வங்காளத்தில் விவசாயிகளுக்கிடையில் இந்துக்களைவிட முஸ்லீம்கள் அதிகமாக இருப்பதைக் காணலாம். அதற்குக் காரணம் என்னவென்று தெரியுமா? அக்காலத்தில் விவசாயிகளுக்கிடையிலிருந்த ஜமீன்தார் களுடைய கொடுமையிலிருந்து விலகிக் கொள்வதற்காக இஸ்லாம் மதத்துக்கு மாறியுள்ளார்கள்.

தோட்டிகளையும், பறையர்களையும் இன்றைய இழிநிலைக்குக் கீழே இறக்கிக் கொண்டு வந்தவர்கள் யார்? அவர்கள் கீழ்மை அடைவதற்குப் பொறுப்பாளிகள் யார் என்னும் கேள்வி எழுமாயின் அதற்கு விடை வருமாறு: 
அவர்கள் கீழ்நிலை அடைவதற்கு ஆங்கிலேயர்கள் பொறுப் பாளிகள் அல்லர்.அவர்கள் கீழ்நிலைக்கு வந்ததற்கு நாமே பொறுப்பாளிகளாவோம். நம்முடைய துன்பத்துக்கும் நம்முடைய கீழ்மைக்கும் நாம் தாம் பொறுப்பாளிகள், மதத்தில் போலிகளும், அவநம்பிக்கை உடையவர் களும் இருக்கிறார்கள்.

அத்தகைய நயவஞ்சகர்கள் மதத்தின் உட்கருத்தை வலியுறுத்தாமல் வெளி ஆசாரங்களைப் பிரமாதப்படுத்திச் சுய நலத்தை வளர்ப்பவர்களா யிருக்கிறார்கள். அவர்கள் பாரமார்த்திகம், வியவகாரிகம் என்ற கொள்கைகளின் வடிவங்களில் கொடுமையான செயல்கள் பலவற்றை உருவாக்கியுள்ளார்கள். அவை அவர்களுடைய குற்றங்களாகும்.
ஏழைகள் என்று கூக்குரலிடுவதற்குப் பலர் இருக்கிறார்கள். ஏழைகளின் நலனுக் காக ஏதாவது செய்வதற்குச் சங்கங்கள் எத்தனை இருக்கின்றன? இந்தியாவிலுள்ள லட்சக்கணக்கான ஏழைகளுடைய துன்பத்திலும் துக்கத்திலும் பங்கு கொண்டு உண்மையாகவே உருகி அழுபவர்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள்?


மக்கள் இனத்துக்காகப் பாடுபடும் மக்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? மனிதர்களாகப் பிறந்துள்ள நாம் மனிதர்களுக்காக உருகா விட்டால் நம்மை மனிதர்கள் என்று சொல்லிக் கொள்ள முடியுமா? பசியின்றி பட்டினியின்றி மக்களினம் வாழ நாம் என்ன செய்கின்றோம்? மக்களையெல்லாம் மகேசுவரன் நிலைக்கு உயர்த்த நாம் என்ன செய்கின்றோம்? இவ்வுலக வாழ்வை கடந்து அப்பால் செல்லுவதற்கும் இந்துமதம் சிறந்த வழிகாட்டியாகவிருக்கின்றது.இந்தமதத்தைச் சரியாக அறிந்து அதை மக்களுக்குப் புரியும்படி செய்வது இந்துவினுடைய பொறுப்பாகும். இதைச் செய்யாததால் இந்து மதத்திலிருந்து மற்ற மதங்களுக்கு மக்கள் போகின்றார்கள். பொதுவாக நம்மவர்களிடையே பேச்சு அதிகம். செயல் குறைவு. கிளிப்பிள்ளை போன்று புத்தகத்தில் படித்தவற்றையும் பிறரிடமிருந்து கேட்டவற்றையும் பேசிக் கொண்டிருப்போம்.

நமக்குப் பேசத்தான் தெரியும் நமக்கு எதையும் செயல்படுத்தத் தெரியாது. அதற்கு காரணம் என்ன தெரியுமா? நம்மிடம் போதுமான உடல் பலம் இல்லை. நம் முடைய துன்பத்துக்கு நம்மிடமுள்ள உடல் பலகீனமே காரணமாகும்.மேலும் நாம் சோம்பேறிகளாகவிருக் கின்றோம். செயல்புரிய வேண்டும் என்ற உற்சாகம் நம்மிடம் இல்லை. நம்மிடம் ஒற்றுமையும் இல்லை. ஒருவரை ஒருவர் நேசிக்கும் தன்மையும் இல்லை. நம்மிடம் சுயநலம் மிகவும் அதிகம். கீழ்நிலையி லுள்ள மக்களைப் புறக்கணிப்பது மதமாற்றத்துக்கு ஒரு காரணமாகும்.
(தர்மசக்கரம் துந்துபி ஆண்டு கார்த்திகை மாதம் சக்கரம் -31, ஆரம் 11)

அட, அயோக்கிய புரோகிதர்களே!
மைசூர் ராஜ்யத்திலிருந்து புறப்பட்ட சுவாமிஜி, கொச்சி ராஜ்யத்தை அடைந்தார். அங்கு சில தினங்கள் தங்கிவிட்டு திருவனந்தபுரத்துக்குப் போனார். வழிநெடுகிலும் வனப்பு மிக்க இயற்கைக் காட்சிகளைக் கண்ணுற்று மகிழ்ந்தவாறே திருவனந்தபுரத்தை அடைந்தார். அப்போது டிசம்பர் மாதம்.பேராசிரியர் சுந்தரராம அய்யர் வீட்டில் சுவாமிஜி தங்கினார். சுந்தரராம அய்யர், திருவிதாங்கூர் இளவரசருக்கு ஆங்கிலக் கல்வி போதிக்கும் ஆசிரியர் ஆவார்.சுந்தரராம அய்யர் பிராமண உணர்வு மிகுந்தவர், வைதிக ஹிந்து சமயத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர், எதையும் பிராமண இயல்போடு நோக்குபவர், பிராமணர் அல்லாதவர்களை சமபுத்தி இல்லாதவர் என்று சுவாமிஜி கூறியதாக எழுதி இருப்பவர். இவர் கூற்றில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்பது ஆராயற்பாலது. பிராமண குலம் இந்தி யாவுக்கு மகத்தான காரியங்களைச் செய்திருக்கிறது.

இப்பொழுதும் மகத்தான காரியங்களை செய்து வருகிறது. இனியும் மகத்தான காரியங்களைச் செய்யும் என்று சுவாமிஜி கூறியதாகச் சுந்தரராம அய்யர் எழுதி இருக்கிறார் பிராமணர்களைப் பற்றிச் சுவாமிஜி கூறியிருக்கும் கருத்துக்கு இந்தக் கருத்து முற்றும் முரண்படுகிறது.

வேதங்களை இயற்றிவர்கள்?

வேதாந்தத்துக்கு ஆதாரமாய் இருப் பவை உபநிடதங்கள்; வேதங்களிலுள்ள இந்தப் பகுதிகள் க்ஷத்திரியர்களால் இயற்றப்பட்டவை என்பது சுவாமிஜியின் கருத்து. இது பிராமணர்கள் மகத்தான காரியங்களை இந்தியாவுக்கு செய்தார்கள் என்ற கருத்தோடு மாறுபடுகிறது.

வேதவியாசர், வசிஷ்டர், நாரதர் போன்றவர்கள் பிராமணர் குலத்தில் பிறந்தவர்கள் அல்லர். பிராமணர்களின் கருணையின்மை காரணமாகவே நம்நாடு முகம்மதியர்களின் ஆட்சிக்கு இலக்காக நேர்ந்தது என்று சுவாமிஜி திட்டவட்டமாய்க் கூறி இருக்கிறார். அந்தக் கருத்துகளைத் தொகுத்து அடியில் தந்திருக்கிறோம்.

உப நிடதங்களிலுள்ள தத்துவங்கள் எல்லாம் அரசர்களுடைய மூளைகளில் அரும்பியவை. புரோகிதர்களிடமிருந்து பிறக்கவில்லை (3.280)
முன் காலத்திலே ரிஷிகள் ஆனோர் பலர். வசிஷ்டர் பிறப்பினால் இழிந்தவர்; வியாசர் மீனவப் பெண்ணுக்குப் பிறந்தவர்; நாரதர் பணிப்பெண்ணின் பிள்ளையாகப் பிறந்தவர். இவ்வாறு பிறந்தவர்கள் பலர் ரிஷிகள் ஆனார்கள் (6.433). நெடுங்காலமாகத் தான் சேகரித்து வைத்திருக்கும் ஞானத்தைப் பிராமணன் இப்பொழுது பொது ஜனங்களுக்கு அளிக்க வேண்டும், இங்ஙனம் அவன் கொடுக்காத காரணத்தினால் முகம்மதியப் படையெடுப் புகள் சாத்தியமாயின. (6.234)

பார்ப்பனரல்லாதார் துயில் நீக்கம்!

குமரிலர், சங்கரர், ராமானுஜர் போன்ற முனிவர்கள், பிராமணர் சக்தியை மீண்டும் நிலைநாட்ட முயன்றனர். சிறிது காலம் அச்சக்தி இராசபுத்திர அரசரது வாளின் ஆதரவையும் பெற்றது. சமண புத்த எதிரிகளின் வீழ்ச்சிக்குப்பின், அது தனது அமைப்பை மறுபடியும் புதுப்பிக்கவும் முயன்றது. ஆயினும், அது, முகம்மதியரது ஆட்சியின் கீழ் என்றைக்கும் உறங்கும்படி செய்யப்பட்டது. (1.172)

பிராமணரல்லாத வகுப்பார் படிப் படியாகத் துயில் நீங்கி எழுகிறார்கள். பிரா மணருடைய சாத்திரங்களிலும் மந்திரங்களி லும் அவர்களுக்குள்ள நம்பிக்கை நீங்கு கிறது. மேலை நாட்டுக் கல்வி பரவியதனால் பிராமணருடைய தந்திரங்கள் எல்லாம் மழைக் காலத்திலே பதுமா நதியினுடைய கரைகள் இடிந்து விழுவதுபோல அழிந்து போகின்றன! (5.180) இந்த அயோக்கியப் புரோகிதர்களோ, அல்லது இவர்களுடைய முன்னோர்களோ, சென்ற நானூறு தலைமுறைகளாக, வேதப் புத்தகம் ஒன்றைக் கூடப் பார்த்தது இல்லை. கலியுகத்துப் பிராமண ரூபத்தில் இருக்கின்ற இராட்சசர்களிடமிருந்து இந்த அப்பாவி மக்களை, இறைவா! காத்து இரட்சிப்பாயாக! (9.126)————–ஆதாரம்: சுவாமி விவேகானந்தர் வரலாறு (பக்கம் 162 முதல் 164 வரை)

சுவாமி விவேகானந்தர்: சங்கரருடைய புத்தி நாவிதன் கத்தியைப் போல மிகவும் கூர்மையாய் இருந்தது; அவர் வாதம் புரிவதில் வல்லவர்; மஹா பண்டிதர்; அதில் அய்யமில்லை. என்றாலும், அவரிடத்தில் அகன்ற நோக்கமில்லை;  அவருடைய இதயமும் அத்தகையதாகவே காணப் பட்டது. மேலும், அவர் தமது பிராம்மணத் துவத்தில் பெருமை பாராட்டுபவர். இக்காலத்துத் தென்னிந்திய பிராம்மணப் புரோகித வகுப்பார்போல, அவர் இயற்றிய வேதாந்த சூத்திர வியாக்கியானத்தில் பிராமணர் அல்லாத வகுப்பார் மேலாகிய பிரம்மஞானத்தை அடைய மாட்டார் என்று எவ்வளவு வாதாடுகிறார்! அவர் காட்டும் நியாயங்களோ எவ்வளவு நகைப்புக் கிடமாகின்றன.

விதுரன் பிரம்ம ஞானத்தை அடைந்தான்; அது முற்பிறவியிலே அவன் பிராம்மணத் திருமேனியோடு பிறந்த காரணத்தினால், என்கின்றார். நல்லது; இந்நாளில் சூத்திரன் ஒருவன் பிரம்ம ஞானத்தையடைந்தால், உங்கள் சங்கரர் சொல்லுவது போலவே, அவன் முற்பிறப் பிலே பிராம்மணனாயிருந்த காரணத்தினால் அத்தகைய ஞானத்தை அடைந்தானென்று சொல்ல வேண்டுமா? அய்யோ பாவம்! பிராம்மணத்துவத்தை இவ்வளவு தூரம் இழுத்து வாதாடுவதில் என்ன பயன்? உயர்ந்த மூன்று வருணத்தாரும் வேதங் களை ஓதுவதற்கும் பிரம்மத்தை அடைவ தற்கும் உரியவரென்று வேதம் கூறவில் லையா? வேதப் பிராம்மணத்திற்கு எதிராகச் சங்கரர், இந்த விஷயத்தில் தமது புத்தி சாலித்தனத்தைக் காட்டுவது வேண்டப் படாத தொன்று. வாதத்திலே தோல்வி யடைந்த எத்தனையோ புத்த சந்நியாசி களை நெருப்புக்கு இரையாக்கின.

அவருடைய இதயத்தை என்ன வென்று சொல்வது! வாதத்திலே தோல்வியுற்றோம்! என்று நெருப்பிற் புகச் சித்தமாயிருந்த பவுத்தரும் மூடர்.சங்கரர் இந்தச் செய்கையைச் செய்தது மூடப் பிடிவாதமின்றி வேறு என்ன? புத்தர் தேவருடைய இதயத்தை இதனோடு ஒப்பு வைத்து நோக்குவாயாக, சிறு ஆட்டுக் குட்டியினுடைய உயிரைக் காப்பாற்றத் தமது உயிரைக் கொடுக்கச் சித்தமாயிருந்தார் புத்தர்; பஹுஜன ஹிதாய பஹுஜன ஸுகாய பலருடைய இதத்திற் காகவும் பலருடைய நலத்திற்காகவும் வாழ்ந்தார். எவ்வளவு அகன்ற சிந்தை! எவ்வளவு இரக்கம்!
***
பசுவதையும் – இந்துமதமும் விவேகானந்தர்

பசுக்களைப் பரிபாலிக்கிற சபை ஒன்றினுக்குரிய ஊக்கமுள்ள பிரசாரகர் ஒருவர் சுவாமிஜியைக் காணும் பொருட்டு வந்தார். அவர் தம் தலையிலே காஷாயத் தலைப்பாகை அணிந்திருந்தார்; தோற்றத் தில் வடநாட்டினரைப் போலக் காணப்பட் டார். அவரது உடை ஏறக்குறைய சந்நியாசிகளுடைய உடை போன்றிருந்தது. அந்தப் பசு பரிபாலன சபைப் பிரசாரகர் வந்தார் என்று கேள்விப்பட்டதும் சுவாமிஜி சாலை அறைக்கு வந்தார். பிரசாரகர் சுவாமிஜியை வணங்கிப் பசுத்தாயினுடைய படம் ஒன்றினைச் சுவாமிஜிக்குக் கொடுத் தார். சுவாமிஜி படத்தைப் பெற்று அருகில் நின்ற ஒருவர் கையில் கொடுத்த பின்னர், பின்வரும் சம்பாஷணை நிகழ்ந்தது.

சுவாமி: உங்களுடைய சங்கத்தின் நோக்கம் என்ன?

பிரசாரகர்: நமது நாட்டிலுள்ள பசுத் தாய்களைக் கசாப்புக் காரர்களிடமிருந்து நாங்கள் பாதுகாக்கிறோம். நோயுற்ற பசுக்களும் வலுவிழந்தனவும் கசாப்புக்காரர் களிடமிருந்து வாங்கப்பட்டனவும் பரிபாலிக்கப்படுவததற்காகப் பசு வைத்திய சாலைகளை ஏற்படுத்தியிருக்கிறோம்.

சுவாமி: அது மிக நல்லது. உங்கள் வருவாய்க்கு வழி என்ன?

பிரசாரகர்: உங்களைப் போன்ற பெரிய மனிதர் அன்போடு கொடுக்கின்ற நன்கொடைகளைக் கொண்டே சபையின் வேலை நடந்து வருகின்றது.

சுவாமி: இப்பொழுது எவ்வளவு பணம் சேர்த்து வைத்திருக்கிறீர்கள்?

பிரசாரகர்; இந்த முயற்சிக்கு மார்வாடி வணிகர் கூட்டம் சிறந்த உதவி புரிகின்றது. இந்த நன்முயற்சிக்காக அவர்கள் பெருந்தொகை கொடுத்திருக்கின்றார்கள்.

சுவாமி: மத்திய இந்தியாவிலே ஒரு கொடிய பஞ்சம் எழுந்து விட்டது. ஒன்பது லட்சம் மக்கள் பட்டினியால் இறந்தார்கள் என்று இந்திய அரசாங்கத்தார் செய்தி வெளியிட்டிருக்கின்றனர். இதற்கு உதவி புரிவதற்கு உங்களுடைய சபை ஏதாவது செய்திருக்கின்றதா? மக்களுக்கு இரங்கோம்: மாடுகளுக்கே இரங்குவோம்.

பிரசாரகர்: பஞ்சம் முதலிய துன்பம் வரும்பொழுது நாங்கள் உதவி புரிவதில்லை. எங்கள் சபை பசுத்தாய்களைப் பரிபாலிக்கும் பொருட்டே ஏற்படுத்தப்பட்டது.

சுவாமி: உங்களுடைய சொந்தச் சகோதர சகோதரிகளாகிய லட்சக்கணக் கான மக்கள் பஞ்சத்தினால் துன்பம் அடைந்து மரணத்தின் வாயில் விழும் பொழுது அவர்களுக்கு எவ்வழியிலாவது உணவளித்துக் காப்பாற்ற வேண்டுவது உங்கள் கடமை என நீங்கள் நினைக்க வில்லையா?

பிரசாரகர்: இல்லை. இந்தப் பஞ்சம் மக்களுடைய பாவகருமத்தினாலே ஏற் பட்டது. கருமம் எப்படியோ, பயனும் அப்படியே.

பிரச்சாரகர்: இந்த வார்த்தைகளைக் கூற, இவறறைக் கேட்டுச் சுவாமிஜியினுடைய கண்களிலிருந்து நெருப்புப் பொறி பறப்பது போன்றிருந்தது. முகம் சிவந்தது. அவர் தம் சினத்தை அடக்கிக் கொண்டு, பின்வருமாறு சொல்லுவராயினார்:

தம்முடைய சொந்தச் சகோதரர் பட்டினியினால் இறக்க, அவர்களுடைய உயிரைக் காப்பாற்றும் பொருட்டு ஒருபிடி அரிசி கொடாமல், மனிதர் மேல் அனுதாபமின்றிப் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் குவியல் குவியலாக உணவைக் கொடுக்கின்ற இத்தகைய சபைகளில் நான் புகுவதில்லை. மக்கள் சங்கம் இவற்றினால் நன்மை அடை கிறதென நான் எண்ணவில்லை.மனிதர் தம் கருமத்தினால் இறக்கின்றனரென்று நீர் வாதிப்பீராயின், இவ்வுலகத்திலே எதைக் கருதியும் முயல வேண்டுவதில்லை என்பது தீர்மானமாகின்றது. விலங்கு களைப் பரிபாலிப்பதற்காக நீர் செய்கிற வேலையும் இவ்விதிக்குப் புறம்பாகாது. பசுத்தாய்களும் தம்முடைய கருமத்தினால் கசாப்புக்காரர்களுடைய கையிலகப்பட்டு இறக்கின்றன வென்று சொல்லிவிட்டுச் சும்மா இருக்கலாமே?

பிரசாரகர் சிறிது நாணி, ஆம். நீங்கள் சொல்வது உண்மை. ஆனால், பசு நம் அன்னை என்று சாத்திரங்கள் சொல்லு கின்றனவே? என்றார்.
சுவாமிஜி நகைத்துக் கொண்டே, ஆம், பசு நம் அன்னை என்பதை  நான் அறிந்து கொண்டேன்; இத்தகைய புத்திசாலிகளான பிள்ளைகளை வேறு யார்தான் பெறுதல் கூடும்!

    —————-(சுவாமி விவேகானந்தர் சம்பாஷணை பக்கம் 5,7)

பசுவைப் பாதுகாப்போம் என்று தேர்தல் அறிக்கையிலேயே குறிப்பிட்டுள்ள பா.ஜ.க.வினரே விவேகானந்தர் எழுப்பிய இந்த வினாவுக்கு என்ன பதில்?
பசுவை கோமாதா என்று போற்றும் மாட்டுக்குப் பிறந்த ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., உள்ளிட்ட சங்பரிவார்க்  கூட்டமே, உங்களையெல்லாம் மாட்டுக்குப் பிறந்தவர்கள் என்று கூறிப் பிய்த்து எடுக்கிறாரே – விவேகானந்தர் – இதற்குப் பதிலைச் சொல்லி விட்டு, விவேகானந்தரின் 150 ஆம் ஆண்டு விழாவை விசேடமாக நடத்துங்கள்; அதற்குப் பெயர்தான் அறிவு நாணயம் என்பது. அவர்கள் செய்ய மாட்டார்கள்  காரணம் தெரிந்ததே!
பகுத்தறிவாளர்களே நாம் ஏன் செய்யக் கூடாது? யோசிப்போம்!**************************************************************************************
விவேகானந்தர் பார்வையில்…

சுவாமி விவேகானந்தர், மதச் சண்டைகளும், சாதி வேற்றுமைக் கலகங்களும் பல்குதற்கு ஒரு பெருங் கருவியாய் இருந்ததும் – இருப்பதும் ஸமஸ்கிருத மொழியேயாகும் என்றும், ஸமஸ்கிருத மொழி நூல்கள் தொலைந்து போகுமானால், இப்போராட்டங்களும் தொலைந்து போகுமென்று வருந்திக் கூறினார்.- மறைமலைஅடிகள் –
(தமிழர் மதம் நூலில் – பக்கம் 24)
 
——————- மின்சாரம் அவர்கள் 12-07-2014 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

Read more: http://viduthalai.in/page-1/83867.html#ixzz37G6Iv1sIPosted by தமிழ் ஓவியா 26 commentsEmail ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to PinterestLabels: விவேகானந்தர்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை-அரசியல்-சமூகம்

21.9.12
விவேகானந்தர் ஒரு கிறுக்கன் மாதிரி – பெரியார்

கறுப்புச் சட்டை அணிந்த விவேகானந்தரா?

தந்தை பெரியார் அவர்களின் 134 ஆம் ஆண்டு பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் நாளிட்ட தினமலர் ஏட்டில் ஒரு விளம்பரம் வெளிவந்துள்ளது.

கறுப்புச் சட்டை அணிந்த விவேகானந்தர் தந்தை பெரியாரை வணங்குகிறேன் என்று தலைப்பிட்டு  தந்தை பெரியார் உருவப் படத்துடன் அந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

படத்தின் கீழ் இடம் பெற்றுள்ள வாசகமும் முக்கியமானது.

ஆன்மீகம் இல்லாமல் அறிவியல் இல்லை. அறிவியல் இல்லாமல் ஆன்மீகம் இல்லை என்பதுதான் அந்த வாசகம். தனியார் நிறுவனம் ஒன்றின் விளம்பரம் அது.

விளம்பரம் என்பதால் தாங்கள் வெளியிட்டுள்ளோம் என்று தினமலர் தப்பித்துக் கொள்ளப் பார்க்கும். அது எப்படியோ தொலையட்டும்!

ஆனால் அதில் வெளி வந்துள்ள வாசகங்கள் சரியானதுதானா?


பெரியார் கறுப்புச் சட்டை அணிந்த விவேகானந்தர் என்பது எப்படி சரி ஆகும்?

இந்து என்று சொல்லாதே, இழிவைத் தேடிக் கொள்ளாதே என்று சொன்ன தந்தை பெரியார் எங்கே? இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று பரப்பிய விவேகானந்தர் எங்கே?

ஒரு முறை அமெரிக்கர் ஒருவர் தந்தை பெரியாரைச் சந்தித்தார். அப்பொழுது விவேகானந்தரைப் பற்றி உங்கள் கருத்து என்ன? என்று தந்தை பெரியார் அவர்களிடம் அந்த அமெரிக்கர் கேட்டபோது, பட்டென்று அளித்த பதில் – அந்த ஆள் ஒரு கிறுக்கன் மாதிரி. இப்படியும் அப்படியு மாகப் பேசியவர் என்று பதில் சொன்னார்.

அப்படிச் சொல்லாதீர்கள். எங்கள் அமெரிக்காவிலேயே விவேகானந்தரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறோமே? என்றார்.

அவ்வளவுதான், முட்டாள்தனம் என்பது இந்தியாவுக்கு மட்டுமே தான் சொந்தமா? என்று செவுளில் அறைந்தாற் போல் தந்தை பெரியார் சொன்னாரே பார்க்கலாம் – பொறி கலங்கிப் போனார் அந்த அமெரிக்கர்!

உண்மை இவ்வாறு இருக்க, தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளில் பெரியாரின் படத்தைப் போட்டு, கறுப்புச் சட்டை அணிந்த விவேகானந்தர் என்று விளம்பரம் செய்திருப்பது அசல் திரிபுவாத மாகும்.

பார்ப்பனர்கள் பற்றி தந்தை பெரியார் சொன்னது போல ஒன்றிரண்டு விவேகானந்தர் சொல்லியிருக்கலாம். அதை வைத்துக் கொண்டு பெரியாரும் விவேகானந்தரும் ஒன்று என்ற முடிவுக்கு வந்துவிட முடியாதே!

அந்த விளம்பரத்தில் இடம் பெற்ற இரு வாசகங்கள் கோணிப்பைக் குள்ளிருந்து பூனை வெளியில் வந்துவிட்டதைக் காட்டக் கூடியதாகும்.

ஆன்மீகம் இல்லாமல் அறிவியல் இல்லையாமே! ஏதாவது புரிகிறதா? சூடான அய்ஸ் கிரீம் என்று சொல்வது போல் இல்லையா?

அறிவியல், சந்திரனை பூமியின் துணைக் கோள் என்கிறது. ஆனால் ஆன் மீகமோ குரு பத்தினியின் கற்பினை அழித்தவன் சந்திரன் என்கிறது. குருவின் சாபத்தால் சந்திரன் தேய்கிறான் – ராகு, கேது என்கிற பாம்பு சந்திரனை விழுங்குகிறது. அதுதான் கிரகணம் என்கிறது ஆன்மீகம்.

பூமியின் சுழற்சியால் சூரியனின் ஒளி சந்திரனில் விழாமல் தடுக்கப்படுவ தால் கிரகணம் ஏற்படு கிறது என்கிறது அறிவியல். முரண்பட்ட இரண்டும் எப்படி ஒன்றாகும்?

அறிவியல் இல்லாமல் ஆன்மீகம் இல்லை என்பதை இப்படி எடுத்துக் கொள்ளலாம்.

அறிவியலை வைத்துத் தானே ஆன்மீகத்தின் பிழைப்பு நடக்கிறது! அறிவியல் நன்கொடையான தொலைக் காட்சியில் காலையிலிருந்து சோதி டம், வாஸ்து, எந்த நிறத்தில் உடை, எந்த நிறத்தில் மோதிரக் கல் அணிவது உட்பட எல் லாம் பிரச்சாரம் செய்யப் படுவது இல்லையா?

கம்ப்யூட்டர் சோதிடம் என்கிற அளவுக்கு வயிற்றுப் பிழைப்பு நடக்க வில்லையா?

ஆரிய மதத்தின் ஆணி வேரை அசைத்த புத்தரையே மகாவிஷ்ணுவின் பத்தாவது அவதாரம் ஆக்கிய பார்ப்பனர்கள் கொஞ்சம் நாம் அசந்தால் தந்தை பெரியாரையும் அவதாரப் புருஷர் ஆக்கி விடுவார்கள். அதன் ஒரு முன் னோட்டம்தான்  இந்தத் தினமலர் விளம்பரம்!

எச்சரிக்கை!              ——————–“விடுதலை” 21-9-2012

Posted by தமிழ் ஓவியா 21 commentsEmail ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to PinterestLabels: விவேகானந்தர்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை-அரசியல்-சமூகம்

20.5.11

ஆதிசங்கரர் பற்றி விவேகானந்தர்

ஆதிசங்கரர் ஜெயேந்திரரை ஒட்டி பாலாபிஷேகம் செய்கிறாரே – அந்த ஆதி சங்கரர் யார்? பார்ப்பனர் வெறியர் தானே? அதற்காகத் தானே அவருக்குப் பாலாபிஷேகம்?

இந்துத்துவவாதிகள் விவேகானந்தர் பற்றி தலையில் தூக்கி வைத்து ஆடுகிறார்களோ அவர் ஆதி சங்கரர் குறித்து என்ன கூறகிறார்? இதோ…

சுவாமி விவேகானந்தர்: சங்கரருடைய புத்தி நாவிதன் கத்தியைப்போல மிகவும் கூர்மையாய் இருந்தது; அவர் வாதம் புரிவதில் வல்லவர்; மஹா பண் டிதர்; அதில் அய்யமில்லை. என்றாலும், அவரிடத்தில் அகன்ற நோக்கமில்லை; அவருடைய இதயமும் அத்தகையதாகவே காணப்பட்டது. மேலும், அவர் தமது பிராம்மணத்துவத்தில் பெருமை பாராட்டுபவர்.

இக்காலத்துத் தென்னிந்திய பிராம்மணப் புரோகித வகுப்பார் போல, அவர் இயற்றிய வேதாந்த சூத்திர வியாக்கியானத்தில் பிராம்மணர் அல்லாத வகுப்பார் மேலாகிய பிரம்மஞானத்தை அடைய மாட்டார் என்று எவ்வளவு வாதாடுகிறார்! அவர் காட்டும் நியாயங்களோ எவ்வளவு நகைப்புக் கிடமாகின்றன. விதுரன் பிரம்மஞானத்தை அடைந்தான்; அது முற்பிறவியிலே அவன் பிராம்மணத் திருமேனியோடு பிறந்த காரணத்தினால் என்கின்றார்.

நல்லது; இந்நாளில் சூத்திரன் ஒருவன் பிரம்ம ஞானத்தை யடைந்தால், உங்கள் சங்கரர் சொல்லுவது போலவே, அவன் முற் பிறப்பிலே பிராம்மணனாயிருந்த காரணத்தினால் அத்தகைய ஞானத்தை அடைந்தானென்று சொல்ல வேண்டுமா?

அய்யோ பாவம்! பிராம்மணத்துவத்தை இவ்வளவு தூரம் இழுத்து வாதாடுவதில் என்ன பயன்? உயர்ந்த மூன்று வருணத்தாரும் வேதங்களை ஓதுவதற்கும் பிரம்மத்தை அடைவதற்கும் உரியவ ரென்று வேதம் கூறவில்லையா? வேதப் பிராம்மணத்திற்கு எதிராகச் சங்கரர், இந்த விஷயத்தில் தமது புத்திசாலித்தனத்தைக் காட்டுவது வேண்டப்படாத தொன்று.

வாதத்திலே தோல்வியடைந்த எத்தனையோ புத்த சந்நியாசிகளை நெருப்புக்கு இரையாக்கின. அவருடைய இதயத்தை என்னவென்று சொல்வது! வாதத்திலே தோல்வியுற்றோம்! என்று நெருப்பிற் புகச் சித்தமாயிருந்த பவுத்தரும் மூடர். சங்கரர் இந்தச் செய்கையைச் செய்தது மூடப் பிடிவாதமன்றி வேறு என்ன?

புத்தர் தேவருடைய இதயத்தை இதனோடு ஒப்பு வைத்து நோக்குவாயாக, சிறு ஆட்டுக் குட்டியினுடைய உயிரைக் காப்பாற்றத் தமது உயிரைக் கொடுக்கச் சித்தமாயிருந்தார் புத்தர்; பஹுஜன ஹிதாய பஹுஜன ஸுகாய – பலருடைய இதத்திற்காகவும் பலருடைய நலத்திற் காகவும் வாழ்ந்தார். எவ்வளவு அகன்ற சிந்தை! எவ்வளவு இரக்கம்!

உண்மையே உருவெடுத்தவர் புத்தர்

சிஷ்: அய்யா, புத்தவேர் இப்படிச் செய்ததையும் மற்றொரு வகை மூடப் பிடிவாதமென்று நாம் சொல்லுதல் கூடாதா? அவர் இழிவான ஒரு விலங்கின் பொருட்டுத் தம்முடைய சொந்த உடலைக் கொடுத்துவிட நினைத்தாரே!

சுவாமி விவேகானந்தர்: ஆனால் இந்த மூடப் பிடிவாதத்தினால் உலகுக்கு எவ்வளவு நன்மை விளைந்ததென்பதை எண்ணிப் பார்! எத்தனை மடங்கள், எத்தனை பாடசாலைகள், கலாசாலைகள், வைத்தியசாலைகள்,

விலங்குக்குச் சிகிச்சை புரியும் சாலைகள் ஏற்பட்டன என்பதை நினைத்துப் பார்! சிற்பறம் எவ்வளவு சிறந்து விளங்கியது! புத்த தேவருடைய வருகைக்கு முன் இந்த நாட்டில் என்ன இருந்தது?

ஓலைச் சுவடிகளிலே எழுதப்பட்டு ஒரு சிலரால் மாத்திரம் அறியப்பட்டிருந்த சமய உண்மைகள் சில இருந்தன. புத்ததேவர் அவற்றைத் தம் வாழ்க்கையில் மெய்ப் பித்து, மக்களுடைய வாழ்க்கையிலே அவற்றைப் பயன்படுத்தும் நெறிகளைக் காட்டினார். இங்ஙனம் நோக்கும்போது, அவர் உண்மை வேதாந்தம் உருவெடுத்தது போன்றவர் ஆவார்.


(சுவாமி விவேகானந்தர் சம்பாஷைணைகள் நூல் – _ பக்கம் 81-_ 82)Posted by தமிழ் ஓவியா 1 commentsEmail ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to PinterestLabels: விவேகானந்தர்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை-அரசியல்-சமூகம்

1.2.11

பார்ப்பனர்பற்றி விவேகானந்தர்

நான் ஆரியன் மற்றையோர் மிலேச்சர் என்று எண்ணுகிற எண்ணம் அறியாமையிலிருந்து பிறந்தது. அறிவு விளக்கத்தின் வடிவமாய் வேதத்துக்கு பாஷ்யகாரராய் விளங்குகின்றவரிடத்து வர்ணாசிரமப் பிரிவுகள் இருத்தல் தகுமா?

வேதங்களில் ரிஷி என்பதற்கு மந்திர திரஷ்டா எனப்பொருள் காணப் பட்டது. அம் மொழி கழுத்திலே பூணூலைத் தாங்கிய அனைவர்களையும் குறிப்பதில்லை. வருணப்பிரிவு பின்பு ஏற்பட்டது. வேதம் சத்தத்தின் இயற்கையை உடையது.

புத்தருடைய துறவுக் கொள்கையை இந்து சமயம் கவர்ந்து கொண்டது: புத்தரைப் போன்ற துறவு வாழ்க்கையுடைய வேறு ஒரு மனிதன் இவ்வு லகத்தில் பிறக்கவில்லை

புராணங்களில் பலவும், மனுதர்மம் போன்றனவும் மகாபாரதத்தில் பெரும்பகுதியும் பிற்காலத்திலெழுந்தன. பகவான் புத்தர் அவற்றுக்கு முற்பட்டவர்

(ஆதி) சங்கரருடைய புத்தி நாவிதன் கத்தியைப்போல மிகவும் கூர்மையாக இருந்தது. அவர் வாதம் புரிவதில் வல்லவர், மகாபண்டிதர்; அதில் அய்ய மில்லை. என்றாலும் அவரிடத்தில் அகன்ற நோக்கமில்லை; அவருடைய இதயமும் அத்தகையதாகவே காணப்பட்டது.

மேலும் அவர் தமது பிராம்மணத் தத்துவத்தில் பெருமை பாராட் டுபவர். இக்காலத்துத் தென்னிந்திய பிராம்மண புரோகித வகுப்பார் போல, அவர் இயற்றிய வேதாந்த சூத்திர வியாக்கியானத்தில் பிராம்மணர் அல்லாத வகுப்பார், மேலாகிய பிரம்ம ஞானத்தை அடையமாட்டார் என்று எவ்வளவு வாதாடுகிறார்! அவர் காட்டும் நியாயங்களோ எவ்வளவு வியப்பாக இருக்கின்றன!

விதுரன் பிரம்ம ஞானத்தை அடைந்தான்; அது முற் பிறவியிலே அவன் பிராம்மணத் திருமேனியோடு பிறந்த காரணத்தால் அத்தகைய ஞானத்தை அடைந்தான் என்று சொல்லவும் வேண்டுமா? அய்யோ பாவம்! பிராம்மணத்துவத்தை இவ்வளவு தூரம் இழுத்து வாதாடுவதில் என்ன பயன்?

உயர்ந்த மூன்று வருணத்தாரும் வேதங்களை ஓதுவதற்கும் பிரம்மத்தை அடைவதற்கும் உரியவர் என்று வேதம் கூறவில்லையா? வேதப்பிராமணத்திற்கு எதிராகச் சங்கரர், இந்த விஷயத்தில் தமது புத்திசாலித்தனத்தைக் காட்டுவது வேண்டப்படாத ஒன்று.

* இந்நாள்களில் தாழ்ந்த வகுப்பார் வேலை நிறுத்தம் செய்யும் இயக்கம் எவ்விடத்திலும் பரவிவருவது இதற்கு ஒரு சான்றாகும். உயர்ந்த வகுப்பார் எவ்வளவு முயன்று பார்ப்பினும், தாழ்ந்த வகுப்பாரை இனி அடக்கி வைக்க முடியாது.

தாழ்ந்த வகுப்பாருக்கு உரிமையாகிய நலன்களை அவர்கள் அடையச் செய்வதே உயர்ந்த வகுப்பார் தாமும் நன்மையடைவதற்குத் தகுந்த நெறியாகும்.

புரோகிதராகிய நீங்கள் வேத வேதாந்தங்களையும், அத்தகைய உயர்வு டைய சாத்திரங்களையும் பிராமண ரல்லாதார் படித்தல் கூடாது என்றும் தொடுதலுங்கூடாதென்றும் கட்டளை யிட்டு விட்டீர்கள்;

நீங்கள் அவர்களை எப்போதும் தாழ்த்தினீர்கள்; சுயநலத் தைக் கருதி இவ்வண்ணம் செய்தீர்கள். சமய சாத்திரங்களை உங்களுக்கே உரியவை என்றீர்கள். விதிவிலக்கு உங் கள் கையில் உள்ளவை எனச் சொல்லி விட்டீர்கள்.

இந்தியாவில் உள்ள ஏனைய ஜாதியார்களைக் கீழானவர்கள் என்றும் தீயவர்கள் என்றும் பலமுறை சொல்லி, அவர்கள் தங்களை உண் மையில் அத்தகையவர்களே என்று நம் பும்படி செய்து விட்டீர்கள்.

ஒரு மனிதனைப் பார்த்து நீ தாழ்ந்தவன்; இழிவுடையவன் எனக் காணும் போதெல்லாம் சொல்லி வருவானாயின் நாளடைவில் அவன் அதை விரும்பி உண்மையிலேயே தான் தாழ்ந்தவன் என்று நினைப்பது இயல்பு, இதனை மனோவசியம் என்பர். பிராம்மணரல் லாத வகுப்பார் படிப்படியாகத் துயில் நீங்கி எழுகின்றார்கள்.

பிராமணர்களுடைய சாத்திரங்களிலும் மந்திரங்களிலும் அவர்கட்குள்ள நம்பிக்கைகள் நீங்குகின்றது. மேலை நாட்டுக் கல்வி பரவியதால், பிராமணருடைய தந்திரங்கள் எல்லாம் மழைக் காலத்தில் பதுமாநதியினுடைய கரைகள் இடிந்து விழுவது போல அழிந்து போகின்றன.

பெண்கள் ஞானத்தையும், பக்தியையும் அடைவதற்குத் தகுதியற்றவர்கள் என்று எந்த சாத்திரத்திலே கண்டாய்? புரோகிதர்கள் வேதங்களை அத்தியாயனம் பண்ணுவதற்கு ஏனைய ஜாதி மக்கள் தகுதியற்றவர்கள் என்று ஒதுக்கித் தள்ளிய இந்த இழிவான காலத்தில், பெண்களுடைய உரிமை களையும் நீக்கிவிட்டார்கள்.

நமது நாட்டு ஏழை மக்கள் உணவின்றிப் பட்டினியாயிருப்பதைக் காணும் பொழுது பூஜை முதலிய கிரியைகளையும், கல்வியையும் எடுத் தெறிந்து விட்டு, ஊர் ஊராகச் சென்று சாதனையினாலும், அய்ம்புலன் அடக் கத்தினால் வந்த ஆற்றலினாலும் பணக்காரருடைய மனத்தைத்திருப்பி பணம் திரட்டி ஏழைகளுக்குத் தொண்டு புரிவதில் வாழ்நாள் முழு வதையும் கழிக்க வேண்டுமென்னும் எண்ணம் எனக்கு உண்டாகிறது.
——————-” விடுதலை” 29-1-2011
Posted by தமிழ் ஓவியா 0 commentsEmail ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to PinterestLabels: விவேகானந்தர்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை-அரசியல்-சமூகம்

7.11.10
கீதைபற்றி விவேகானந்தர்

கீதை என்ற நூல் மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். கதையைச் சரிவர புரிந்துகொள்ள மிகமிக முக்கியமான பலவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.

முதன் முதலில் மகாபாரதத்தின் ஒரு பகுதியாக அதாவது வேத வியாசர் எழுதியதா? அல்லது அதில் புகுத்தப்பட்டதா? இரண்டாவதாக கிருஷ்ணன் என்பவர் சரித்திர ரீதியாக உயிர் வாழ்ந்த ஒருவரா?

மூன்றாவதாக கீதையில் கூறப் படுவதுபோல குருக்ஷேத்திரப் போர் உள்ளபடியே நடந்ததா?

நான்காவதாக அர்ஜுனனும் ஏனையவர்களும் உள்ளபடியே உயிர் வாழ்ந்தவர்கள்தானா? என்பன கீதையைச் சங்கராச்சாரியார் எழுதி மகாபாரதத்தில் புகுத்தினார் என்று சிலர் கருதுகிறார்கள்.

எது எப்படியிருந்தாலும் சரி, யார் கீதையை வெளியிட்டிருந்தாலும் சரி _ குருக்ஷேத்திர யுத்தம் நடைபெற்றது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

யுத்தத்தில் கிருஷ்ணன் அர்ஜுன னுடன் எல்லையற்ற விவாதத்தில் இறங்கினான் என்றால் இதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? அப்படியே உரையாடினார்கள் என்றால் பக்கத்தில் ஒரு சுருக்கெழுத்தாளரை வைத்துக் கொண்டா என்ற பிரச்சனை எழுகிறது.

அர்ஜுனன், ஏனையப் பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனவே தவிர, இவர்கள் இருந்தனர் என்றோ, குரு க்ஷேத்திர யுத்தம் செய்தனர் என்றோ கூறுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

—————- விவேகானந்தர் – கீதையைப்பற்றிக் கருத்துக்கள் என்ற நூலில
(ஆதாரம்: ஏ.எஸ்.கே. அய்யங்கார் எழுதிய பகுத்தறிவுச் சிகரம் பெரியார் என்ற நூலில் – பக்கம் 116, 117)Posted by தமிழ் ஓவியா 0 commentsEmail ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to PinterestLabels: விவேகானந்தர்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை-அரசியல்-சமூகம்

17.7.09
முகம்மதியர் நுழைவுக்குப் பார்ப்பனர் காரணம்

அய்யரின் திரிபுவாதங்களுக்குச் சாவுமணி

மைசூர் ராஜ்யத்திலிருந்து புறப்பட்ட சுவாமிஜி, கொச்சி ராஜ்யத்தை அடைந்தார். அங்கு சில தினங்கள் தங்கிவிட்டு திருவனந்த புரத்துக்குப் போனார். வழிநெடுகிலும் வனப்பு மிக்க இயற்கைக் காட்சிகளைக் கண்ணுற்று மகிழ்ந்தவாறே திருவனந்தபுரத்தை அடைந்தார். அப்போது டிசம்பர் மாதம்.

பேராசிரியர் சுந்தரராம அய்யர் வீட்டில் சுவாமிஜி தங்கினார். சந்தரராம அய்யர், திருவிதாங்கூர் இளவரசருக்கு ஆங்கிலக் கல்வி போதிக்கும் ஆசிரியர் ஆவார்.

சுந்தரராம அய்யர் பிராமண உணர்வு மிகுந்தவர், வைதிக ஹிந்து சமயத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர், எதையும் பிராமண இயல்போடு நோக்குபவர், பிராமணர் அல்லாதவர்களை சமபுத்தி இல்லாதவர் என்று சுவாமிஜி கூறியதாக எழுதி இருப்பவர். இவர் கூற்றில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்பது ஆராயற்பாலது. பிராமண குலம் இந்தியாவுக்கு மகத்தான காரியங்களைச் செய்திருக்கிறது. இப்பொழுதும் மகத்தான காரியங்களை செய்து வருகிறது. இனியும் மகத்தான காரியங்களைச் செய்யும் என்று சுவாமிஜி கூறியதாகச் சுந்தரராம அய்யர் எழுதி இருக்கிறார் பிராமணர்களைப் பற்றிச் சுவாமிஜி கூறியிருக்கும் கருத்துக்கு இந்தக் கருத்து முற்றும் முரண்படுகிறது.

வேதங்களை இயற்றிவர்கள் பார்ப்பனரா? வேதாந்தத்துக்கு ஆதாரமாய் இருப்பவை உபநிடதங்கள்; வேதங்களிலுள்ள இந்தப் பகுதிகள் ஷத்திரியர்களால் இயற்றப்பட்டவை என்பது சுவாமிஜியின் கருத்து. இது பிராமணர்கள் மகத்தான காரியங்களை இந்தியாவுக்கு செய்தார்கள் என்ற கருத்தோடு மாறுபடுகிறது.

வேதவியாசர், வசிஷ்டர், நாரதர் போன்றவர்கள் பிராமணர் குலத்தில் பிறந்தவர்கள் அல்லர். பிராமணர்களின் கருணையின்மை காரணமாகவே நம்நாடு முகம்மதியர்களின் ஆட்சிக்கு இலக்காக நேர்ந்தது என்று சுவாமிஜி திட்டவட்டமாய்க் கூறி இருக்கிறார். அந்தக் கருத்துகளைத் தொகுத்து அடியில் தந்திருக்கிறோம்.

உப நிடதங்களிலுள்ள தத்துவங்கள் எல்லாம் அரசர்களுடைய மூளைகளில் அரும்பியவை. புரோகிதர்களிடமிருந்து பிறக்கவில்லை (3.280)

முன் காலத்திலே ரிஷிகள் ஆனோர் பலர். வசிஷ்டர் பிறப்பினால் இழிந்தவர்; வியாசர் மீனவப் பெண்ணுக்குப் பிறந்தவர்; நாரதர் பணிப்பெண்ணின் பிள்ளையாகப் பிறந்தவர். இவ்வாறு பிறந்தவர்கள் பலர் ரிஷிகள் ஆனார்கள் (6.433).

முகம்மதியர் நுழைவுக்குப் பார்ப்பனர் காரணம்

நெடுங்காலமாகத் தான் சேகரித்து வைத்திருக்கும் ஞானத்தைப் பிராமணன் இப்பொழுது பொது ஜனங்களுக்கு அளிக்க வேண்டும், இங்ஙனம் அவன் கொடுக்காத காரணத்தினால் முகம்மதியப் படையெடுப்புகள் சாத்தியமாயின. (6.234)

குமரிலர், சங்கரர், ராமானுஜர் போன்ற முனிவர்கள், பிராமணர் சக்தியை மீண்டும் நிலைநாட்ட முயன்றனர். சிறிது காலம் அச்கத்தி இராசபுத்திர அரசரது வாளின் ஆதரவையும் பெற்றது. சமண புத்த எதிரிகளின் வீழ்ச்சிக்குப்பின், அது தனது அமைப்பை மறுபடியும் புதுப்பிக்கவும் முயன்றது. ஆயினும், அது, முகம்மதியரது ஆட்சியின் கீழ் என்றைக்கும் உறங்கும்படி செய்யப்பட்டது. (1.172)

நானூறு தலைமுறையாக வேதத்தை தொடாத பார்ப்பனர்கள்

இந்த அயோக்கியப் புரோகிதர்களோ, அல்லது இவர்களுடைய முன்னோர்களோ, சென்ற நானூறு தலைமுறைகளாக, வேதப் புத்தகம் ஒன்றைக் கூடப் பார்த்தது இல்லை. கலியுகத்துப் பிராமண ரூபத்தில் இருக்கின்ற இராட்சசர்களிடமிருந்து இந்த அப்பாவி மக்களை, இறைவா! காத்து இரட்சிப்பாயாக! (9.126)

——————–சுவாமி விவேகானந்தர் சம்பாஷணைகள் என்ற நூல் (சுவாமி விபுலானந்தர் மொழி பெயர்ப்பு) ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் மயிலாப்பூர் சென்னை -4 (1965) வெளியீடு.Posted by தமிழ் ஓவியா 4 commentsEmail ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to PinterestLabels: விவேகானந்தர்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை-அரசியல்-சமூகம்

14.7.09
ஜாதிகளை ஏற்படுத்தியவர்கள் பார்ப்பனர்கள்-சுவாமி விவேகானந்தர்


விவேகானந்தர் விஜயம் சர்மா எழுதுகிறார்

பார்ப்பானுக்கு பரம்பரைத் தகுதியா?

கல்வியறிவு பரம்பரையாய் வரவேண்டும் என்றும் திடீரென்று ஒருவனுக்கு அதைப் புகட்டினால் அவன் விர்த்தியடையான் என்றும் அவர்கள் (பார்ப்பனர்கள்)வாதம் செய்கிறார்கள். இஃது உண்மையல்ல என்பதற்கு என் கண்ணில் கண்ட நிதர்சனம் கூறுகிறேன். கேளுங்கள்! அமெரிக்காவில் நடந்த சர்வ மத சபைக்கு வந்திருந்த பலருள் ஒரு நீக்ரோ ஜாதி இளைஞனும் வந்திருந்தான்.அவன் நாகரிகமற்ற ஆப்ரிக்கா கண்டத்திற் பிறந்த நீக்ரோவன்.அவன் அந்தச் சபையில் அழகிய பிரசங்கமொன்று செய்தான்.

அது முதல் அவனிடத்தில் நான் குதூகலம் கொண்டு அடிக்கடி அவனிடம் பேசினேன். நீங்கள் சொல்லும் பரம்பரை வாசனை வாதத்தைப் பற்றி நான் என்ன நினைப்பது? ஓ பிராமணர்களே! பிராமணர்களுக்குப் பரம்பரை வாசனையின் காரணமாகப் படிப்பில் பறையனுக்கிருப்பதைவிட அதிக ஊற்றம் இருக்குமாயின், பிராமணன் படிப்புக்காக கொஞ்சகூடப் பணம் செலவிட வேண்டாம். அதையெல்லாம் பறையனுக்கே செலவிடுங்கள்! — பக்கம் 292_294

நம்பூதிரிப் பார்ப்பனர்கள் வெறிபிடித்த

நான் மலையாளச் சீமையிற் பார்த்ததைவிட அற்ப காரிய மிருக்குமோ? உயர்ந்த ஜாதியான் செல்லும் தெருவிற் பறையன் போதல் கூடாதாம். ஆனால் அப்பறையன் தன் பெயரை மாற்றி ஆங்கிலேய அல்லது துருக்கப் பெயர் பூண்டு கொள்வானாகில், அவ்வீதியிற் பேகலாமாம். இதனால் மலையாளத்தாரை வெறி-பிடித்தவர்களென்று கொள்ளாமல் வேறெவ்வாறு அவர்களை மதிக்கக் கூடும்? இப்படிப் பட்ட துராசாரங்களை அநுசரிக்கும் அவர்களை மற்றைய இந்து தேசத்தில் ஞானமுள்ள வகுப்பினரெல்லாரும் இகழக்கடவர். தனக்கு உரிமையான குழந்தை-யாய் இருக்கும்போது அதைப் பட்டினி போடுவதும். அதுவே வேறொருவனுக்குச் சொந்தமானால் அதற்கு வெண்ணெயூட்டி வளர்ப்பதும் போலிருக்கிறது –
பக்கம் 432

ஜாதிகளை ஏற்படுத்தியவர்கள் பார்ப்பனர்கள்

சங்கராச்சாரியார் முதலிய பெரியோர்கள் ஜாதிகளை யேற்படுத்தினவர்கள் அவர்கள் செய்தனவெல்லாம் சொல்வேனாகில் நீங்கள் சிலர் என்மீது கோபம் கொள்வீர்கள். ஆனாலும், என்னுடைய யாத்திரைகளிலும், என் அனுபவத்திலும் ஏற்பட்டவரையில் அவர்கள் செய்த காரியங்களின் முடிவு வெகு விரோதமாகவே தோற்றுகின்றது. அவர்கள் கும்பல் கும்பலாய்ப் பெலுச்சிஸ்தானம் தேசத்தாரைப் பிடித்து ஒரே நிமிஷத்தில் ஷத்திரியராக்கிவிடுவதும், வலையர் கூட்டத்தை ஒரே ஷணத்திற் பிராமணராக்கிவிடுவதுமாகிய இவையெல்லாம் செய்தார்கள் – பக்கம் 434

உலகம் ஒப்பும் ஒரு தத்துவ சாத்திரமுண்டா?

உலக முழுமைக்கும் ஸமரஸமாயுள்ள ஒரே தத்துவ சாத்திரம் ஏதேனுமிருக்கின்றதா? இது காறும் இல்லை. ஒவ்வொரு மதமும் தன்கொள்கைகளையே எடுத்துக் காட்டி அவற்றையே உண்மையென வற்புறுத்துகின்றது. அஃது இவ்வளவு வற்புறுத்துவதுடன் மாத்திரம் நில்லாது, அஃது உண்மையெனக்கூறும் உண்மைகளை நம்பாதவர்கள் பயங்கரமான ஓரிடத்திற்குப் போகவேண்டுமென்றும் பயமுறுத்துகின்றது. இஃது அவர்களது இயற்கையான துஷ்டத் தன்மையால் உண்டாவது என்று நினைக்கக்கூடாது. மற்றென்னையெனின், அது மனிதர்களது மூளையைச் சம்பந்தித்த மதாவேசம் என்னும் ஒரு வித வியாதி விசேஷமாம்.

———- ஸ்ரீ விவேகாநந்த விஜயம் எனும் நூல் மஹேச குமார சர்மா எழுதியது. 1922 ஆம் ஆண்டில் 4 ஆவது பதிப்பாக மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை அச்சிட்டது.Posted by தமிழ் ஓவியா 0 commentsEmail ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to PinterestLabels: விவேகானந்தர்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை-அரசியல்-சமூகம்

5.7.09

ஆதிசங்கரப் பார்ப்பனர் பற்றி விவேகானந்தர்
ஆணவக்காரர், இதயமில்லாதவர், கொலைகாரர்

சுவா: சங்கரருடைய புத்தி நாவிதன் கத்தியைப் போல மிகவும் கூர்மையாய் இருந்தது. அவர் வாதம் புரிவதில் வல்லவர் மஹா பண்டிதர், அதில் அய்யமில்லை, என்றாலும், அவரிடத்தில் அகன்ற நோக்கமில்லை, அவருடைய இதயமும் அத்தகையதாகவே காணப்பட்டது. மேலும், அவர் தமது பிராம்மணத்துவத்தில் பெருமை பாராட்டுபவர். இக்காலத்துத் தென்னிந்திய பிராம்மணப் புரோகித வகுப்பார் போல, அவர் இயற்றிய வேதாந்த சூத்திர வியாக்கியானத்தில் பிராம்மணர் அல்லாத வகுப்பார் மேலாகிய பிரம்மஞானத்தை அடைய மாட்டார் என்று எவ்வளவு வாதாடுகிறார். அவர் காட்டும் நியாயங்களோ எவ்வளவு நகைப்புக்கிடமாகின்றன.

விதுரன் பிரம்ம ஞானத்தை அடைந்தான். அது முற்பிறவியிலே அவன் பிராம்மணத் திருமேனியோடு பிறந்த காரணத்தால் என்கின்றார். நல்லது, இந்நாளில் சூத்திரன் ஒருவன் பிரம்ம ஞானத்தையடைந்தால், உங்கள் சங்கரர் சொல்லுவது போலவே, அவன் முற்பிறப்பிலே பிராம்மணனாயிருந்த காரணத்தினால் அத்தகையை ஞானத்தை அடைந்தானென்று சொல்ல வேண்டுமா? அய்யோ பாவம்! பிராம்மணத்துவத்தை இவ்வளவு தூரம் இழுத்து வாதாடுவதில் என்ன பயன்? உயர்ந்த மூன்று வருணத்தாரும் வேதங்களை ஓதுவதற்கும் பிரம்மத்தை அடைவதற்கும் உரியவரென்று வேதம் கூறவில்லையா? 

வேதப் பிராமாணத்திற்கு எதிராகச் சங்கரர், இந்த விஷயத்தில் தமது புத்திசாலித்தனத்தைக் காட்டுவது வேண்டப்படாததொன்று. வாதத்திலே தோல்வியடைந்த எத்தனையோ புத்த சந்நியாசிகளை நெருப்புக்கு இரையாக்கின அவருடைய இதயத்தை என்னவென்று சொல்வது. வாதத்திலே தோல்வியுற்றோம் என்று நெருப்பிற் புகச் சித்தமாயிருந்த பவுத்தரும் மூடர். சங்கரர் இந்தச் செய்கையைச் செய்தது மூடப் பிடிவாதமன்றி வேறு என்ன! புத்தர் தேவருடைய இதயத்தை இதனோடு ஒப்பு வைத்து நோக்குவாயாக. சிறு ஆட்டுக் குட்டியினுடைய உயிரைக் காப்பாற்றத் தமது உயிரைக் கொடுக்கச் சித்தமாயிருந்தார் புத்தர். பஹூஜன ஹிதாய பஹூஜன ஸூகாய பலருடைய சுகத்திற்காகவும் பலருடைய நலத்திற்காகவும் வாழ்ந்தார். எவ்வளவு அகன்ற சிந்தை! எவ்வளவு இரக்கம்!

உண்மையே உருவெடுத்தவர் புத்தர்

சிஷ்: அய்ய, புத்ததேவர் இப்படிச் செய்ததையும் மற்றொரு வகை மூடப்பிடிவாதமென்று நாம் சொல்லுதல் கூடாதா? அவர் இழிவான ஒரு விலங்கின் பொருட்டுத் தம்முடைய சொந்த உடலைக் கொடுத்து விட நினைத்தாரே!

சுவா: ஆனால் இந்த மூடப் பிடிவாதத்தினால் உலககுக்கு எவ்வளவு நன்மை விளைந்ததென்பதை எண்ணிப் பார்! எத்தனை மடங்கள், எத்தனை பாடசாலைகள், கலாசாலைகள், வைத்திய சாலைகள், விலங்குக்குச் சிகிச்சை புரியும் சாலைகள் ஏற்பட்டன என்பதை நினைத்துப்பார்! சிற்பம் எவ்வளவு சிறந்து விளங்கியது! புத்த தேவருடைய வருகைக்கு முன் இந்த நாட்டில் என்ன இருந்தது? ஓலைச் சுவடிகளிலே எழுதப்பட்டு ஒரு சிலரால் மாத்திரம் அறியப்பட்டிருந்த சமய உண்மைகள் சில இருந்தன. புத்ததேவர் அவற்றைத் தம் வாழ்க்கையில் மெய்ப்பித்து, மக்களுடைய வாழ்க்கையிலே அவற்றைப் பயன்படுத்தும் நெறிகளைக் காட்டினார். இங்ஙனம் நோக்கும்போது, அவர் உண்மைவேதாந்தம் உருவெடுத்தது போன்றவர் ஆவார்.

————– நூல்:- சுவாமி விவோகானந்தர் சம்பாஷணைகள் பக்கம் 81-21

புரட்டாசி சனிக்கிழமை என்னும் மூடநம்பிக்கை -பெரியார்

புரட்டாசி சனிக்கிழமை

அடுத்தாற்போல் வரும் புரட்டாசி சனிக்கிழமை உற்சவங்களும், திருப்பதி முதலிய நூற்றுக்கணக்கான சனிக்கிழமைப் பெருமாள்கள் உள்ள ஊர்களின் உற்சவங் களும், சனிக்கிழமை பிடிப்பதன் மூலம் அவரவர்கள் வீட்டில் ஏராளமாய் சமைத்துக்கொண்டு சோம்பேறிகளையும் அயோக்கியர்களையும் மெனக்கட்டுத் தேடிப் பிடித்து வந்து அவர்களுக்கு வயிறு நிறையவும் போட்டு மற்றும் மூட்டை கட்டிக் கொண்டும் போகக்கூடிய அளவு மேல்க் கொண்டும் போட்டு கஞ்சாவுக்கோ கள்ளுக்கோ சூதாடவோ கையில் பணமும் கொடுத்து, இவ்வளவும் போதாமல் அந்த நாளெல்லாம் பட்டினி கிடந்து அந்தச் சோம்பேறிகளின் காலிலும் விழுந்து மாலை 3 மணி 4 மணி சுமாருக்கு சாப்பிடும் பண்டிகையிலோ விரதத்திலோ கடுகளவு அறிவு இருக்கின்றதா என்று கேட்கின்றேன்.

புரட்டாசி சனிக்கிழமை வந்தால் எத்தனை பேர்கள் தங்களுக்கும் பட்டை நாமம் போட்டுக் கொண்டு செம்புக்கும் நாமத்தை குழைத்து போட்டுக் கொண்டு, துளசியை அரளிப்பூவையும் அந்த செம்புக்கு சுத்திக் கொண்டு வெங்கிடாசலபதி கோவிந்தா என்றும் நாராயணா கோவிந்தா என்றும் கூப்பாடு போட்டு அரிசியோ காசோ வாங்கிக் கொண்டு போவதில் ஏதாவது பலனுண்டா? என்றுதான் கேட்கின்றேன்.

மற்றும் திருப்பதிக்குப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டு தலை மயிரும் தாடி மயிரும் வளர்த்து வெறும் மஞ்சள் நனைத்த துணிக்கட்டிக் கொள்ளுவதும் மேளம் வைத்துக் கொள்வதும் பெண்டுபிள்ளைகள் சுற்றத்தார்களை அழைத்துக் கொள்வதும் வருஷமெல்லாம் பணம் போட்டு மொத்த மாய் பணம் சேர்ப்பதும் அல்லது வேண்டு தலையின் மேல் இவ்வளவு பணம் என்று கடன் வாங்கியாவது எடுத்துக் கொள்வதும் அல்லது வியாபாரத்திலோ வேறு வரும் படியிலோ லாபத்தில் இத்தனை பங்கு என்று கணக்கு வைத்து சேர்த்து எடுத்துக் கொள்வதும் ஆன பணமூட்டை கை கட்டிக்கொண்டு கடைவாயிலும் நாக்கிலும் வெள்ளிக் கம்பியைக் குத்திக் கொண்டு போதாக்குறைக்குத் தெருவில் கூட்டமாய் கோவிந்தா கோவிந்தா- கோவிந்தா! என்று கூப்பாடு போட்டு வீட்டுக்கு வீடு, கடை கடைக்கு காசு பணம் வாங்கி ஒருபகுதியை ரயிலுக்குக் கொடுத்து திருப்பதி போவதும், அங்கு முழங்கால் முறிய மலையேறுவதும் ஆண்களும் பெண்களும் தலைமொட்டை அடித்துக் கொள்வதும் அந்தமலைச்சுனைத் தண்ணீரில் குளிப்பதும் அந்த பட்டை நாமம் போட்டுக் கொள்வதும் கொண்டு போன பணத்தைக் கடாரத்தில் காணிக் கையாக கொட்டுவதும் ஆண்களும் பெண் களும் நெருக்கடியில் இடிபடு வதும் பிடிபடுவதும் வெந்ததும் வேகாததுமான சோற்றை தின்பதும் மற்றும் பல சோம் பேறிகளுக்கும் மேக வியாதிக்காரர் களுக்கும் வேக வைத்தோ விலைக்கு வாங்கியோ போடுவதும் விறகு கட்டை யிலும் வேர்களிலும் செய்த மரமணி மாலைகளை வாங்கி கழுத்தில் போட்டுக் கொள்வதும். மலைக் காய்ச்சலோடு மலையைவிட்டு இறங்கி வருவதும் வீட்டுக்கு வந்து மகேஸ்வரபூஜை பிராமண சமார்த்தனை செய்வதும் தவிர மற்றபடி இவைகளால் ஏதாவது செய்தவனுக்கோ, கூடப்போன மக்களுக்கோ நாட்டுக்கோ ஒழுக்கத்திற்கோ மதத்திற்கோ கடுகளவு நன்மை உண்டாகுகின்றதா என்று கேட் கின்றேன்.

திருப்பதிக்குப் போய் வந்த பிறகாவது யாராவது தங்கள் துர்க் குணங்களையோ கெட்ட செய்கைகளையோ விட்டு விட்ட தாகவாவது அல்லது திருப்பதி யாத்திரை யானது இம்மாதிரி குணங்களை விடும்படி செய்ததாகவாவது நம்மில் யாராவது பார்த்திருக்கின்றோமா? என்று கேட்பதுடன் இம்மாதிரி அறிவீனமான காரியத்திற்கு நமது நாட்டில் வருஷத்திற்கு எத்தனை கோடி ரூபாய் செலவாகின்றது என்பதை எந்தப் பொருளாதார இந்திய தேசிய நிபுணராவது கணக்கு போட்டார்களா என்று கேட்கின்றேன்.

சிவராத்திரி

இனி அதற்கடுத்த மாசி மாதம் வந்தால் சிவராத்தி என்று கண்டபடி கிழங்கு வகைகளையும் தானியவகை களையும் பலகார வகைகளையும் ஒரே நாளில் செய்து அளவுக்கு மேல் தின்று குழந்தைகளையும் தின்னச் செய்து அஜீரணத்தையும் வயிற்று வலியையும் உண்டாக்கிக் கொள்வதோடு இதனால் ஏற்படும் செலவு எவ்வளவு என்பதை யாராவது யோசித்துப் பார்க் கின்றார்களா? என்று கேட்கின்றோம். இப்படியே ஒவ்வொரு மாதமும் உற்சவமும், பண்டிகைகளும், விரதங்களும், சடங்கு களும் ஏற்பட்டு மொத்தத்தில் வருஷத்தில் எவ்வளவு கோடி ரூபாய்கள் செலவு, எவ்வளவு வியாதிகள் வரவு, எவ்வளவு உயிர்கள் போக்கு என்பவைகளை யார் கவனிக்கின்றார்கள்? இந்தப் பணம் எல்லாம் தேசிய பணமல்லவா? ஏழைத் தேசம், தரித்திர தேசம், அடிக்கடி பஞ்சம் வரும் தேசம், வேலையில்லாமல் தொழி லில்லாமல் கூலிக்காரர்கள் கும்பல் கும்பலாய் பட்டினி கிடந்து மடிவதுடன் பெண்டுபிள்ளை குழந்தைகளுடன் வெளிநாட்டிற்குக் கூலியாக கப்பலேறும் தேசம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற நாம் எத்தனை நாட்களை, எத்தனை ரூபாய்களை எத்தனை ஊக்கங்களை இந்த பாழும் அர்த்தமற்ற பொய்யான ஒரு காசுக்கும் உதவாததான நமக்கு இழிவையும் அவமானத்தையும் தருவதான பண்டி கைக்கும் உற்சவத்திற்கும் பூஜைக்கும் சடங்குக்குமாக ஒவ்வொரு வரும் செலவு செய்கின்றோம் என்பதை கவனித்தால் இந்த நாடு பணமில்லாத நாடா அல்லது புத்தி இல்லாத நாடா என்பது நன்றாய் விளங்கும்.

இது யார் சூழ்ச்சி?

எனவே, இப்படிக்கெல்லாம் சொல் வதைப் பார்த்தால் இந்த பண்டிகை களையும் உற்சவம் முதலியவைகளையும் ஏற்படுத்தியவர்கள் எல்லோரும் அறிவில் லாதவர்களா என்கின்ற கேள்வி பிறக்கலாம். நான் அவர்களை அறிவில்லாதவர் என்று சொல்ல இஷ்டப்படமாட்டேன். மற்ற படியோ, என்றால் பெரும்பாலும் அவர் களைச் சுயநலக்காரர்களும், தந்திரக் காரர்களும் அதிகார ஆசை உடைய வர்களுமாயிருக்க வேண்டுமென்றே சொல்வேன்.  என்புத்திக்குட்பட்ட வரை யில் இந்த பண்டிகை உற்சவம் முதலி யவைகள் எல்லாம் புரோகிதர்களான பார்ப்பனர்களும் ஆட்சிக்காரர்களான அரசர்களும் கலந்து கண்டுபிடித்து செய்த தந்திரமென்பதே எனது அபிப்பிராயம். உலகத்தில் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அறியாமைக்கும் கொடுமைக்கும் புரோ கிதர்களும் அரசர்களுமே சேர்ந்து கூட்டுப் பொறுப்பாளர்களாவார்கள். சாதாரணமாக உலக சரித்திரத்தில் கொடுமைக்காரர்களும் சூழ்ச்சிச்காரர்களாய் இருந்தவர்களே புரோகிதர்கள் என்கின்ற உயர்ந்த ஜாதிக் காரர்களாகவும் கொள்ளைக் காரர்களும் மூர்க்கர்களுமாயிருந்தவர்களே அரசர் களாகவும் ஏற்பட்டு இருக்கிறார்கள்.

இவ்விருவரும் ஜனங்களை ஏய்த்து ஆதிக்கம் செலுத்த வகை கண்டு பிடிக்க வேண்டிய அவசிய முடையவர்கள்.

அந்தப்படி மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி வாழ வேண்டுமானால் அந்த மக்களை அறிவினாலும் செல்வத்தினாலும் தாழ்மைப்படுத்தி வைத்திருந்தால் தான் முடியும். ஒரு மனிதன் அறிவுடையவனா யிருப்பானானால் புரோகிதர்களுக்கு ஏமாற மாட்டான். செல்வமிருக்குமானால் அரச னுக்குப் பயப்பட மாட்டான். ஆகையால் அறிவும் செல்வமும் இல்லாமல் செய்வ தற்கே கோயில் உற்சவம் பண்டிகை சடங்கு ஆகியதான செலவுக்கு ஏற்றவழிகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள். மக்கள் சம் பாதிக்கும் பணங்களில் கணக்குப் பார்த்தால் பெரும்பாகமும் இவைகளுக்கே செலவு செய்யும்படியாகவும் மற்றும் மேல் கொண்டு மீதி ஆவதெல்லாம் இவர்கள் சமுகத் திற்கே பயன்படும்படியாகவும் மற்றும் மேற்கொண்டு ஒவ்வொரு குடும் பமும் அதாவது நூற்றுக்குத் தொண்ணூறு குடும்பங்கள் இவைகளின் பயனாய் கடன் காரர்களாக இருக்கவுமே இருந்து வரப்படுகின்றது.எனவே, நமது நாடு என்றைக் காவது அறிவுள்ள நாடாகவும் செல்வ முள்ள நாடாகவும், சுயமரியாதை உள்ள நாடாகவும் இருக்கவேண்டுமானால் முதலில் உற்சவம், பண்டிகை, சடங்கு, கோயில் பூஜை ஆகியவைகள் ஒழிந்தாக வேண்டும். இவைகளை வைத்துக் கொண்டு மலைகளை எல்லாம் தங்கமும் வைரமுமாக ஆக்கினாலும் சமுத்திரங் களையெல்லாம் பாலும் நெய்யும் தேனுமாக ஆக்கினாலும் மேல்கண்ட உற்சவம், சடங்கு, கோவில் பூஜை, பண்டிகை ஆகியவைகளே சாப்பிட்டு விடும். ஆதலால் இனி மேலாவது இம்மாதிரியான காரியங்களுக்கு அடிமை யாகி வீண் செலவு செய்யக் கூடாது என்பதே எனது ஆசை.

http://thamizhoviya.blogspot.com/2014/09/blog-post_93.html

About editor 3043 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply