இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என மனித உரிமை ஆணையர் பரிந்துரை!

நக்கீரன்  

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை (ஐநாமஉபேரவை) அடுத்த மாதம் பெப்ரவரி  22  தொடங்கி மார்ச் 23 வரை  அதன் 46 வது அமர்வு நடைபெறயிருக்கிறது. புதிய தீர்மானங்களை பட்டியலிடுவதற்கான காலக்கெடு மார்ச் 18 வியாழக்கிழமை நண்பகலில் இடம் பெறும். இலங்கை இந்த முறை நிகழ்ச்சி நிரலில் உள்ளது.

மொத்தம் 47 நாடுகளைக் கொண்ட ஐநாமஉபே  15 மார்ச்,  2006 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. அதற்கு முன்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம்  (The United Nations Commission on Human Rights (UNCHR) என்ற பெயரில் 1946  தொடக்கம் இயங்கி வந்தது.

BBC NEWS | South Asia | Sri Lanka's rebel leader 'killed'

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையர் (Office of the United Nations High Commissioner for Human Rights, OHCHR) என்பது பன்னாட்டுச் சட்டங்களுக்கு அமைய, 1948 ஆம் ஆண்டில்  ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பிரகடனத்திற்கு அமைய மனித உரிமைகளைப் பேணவும் அதன் மேன்மைக்காக உழைக்கவும்  உருவாக்கப்பட்ட ஓர் ஐக்கிய நாடுகள் நிறுவனமாகும்.

இந்த நாடுகள் சமமான புவியியல் பங்கீட்டை அடிப்படையாகக் கொண்டது. இருக்கைகள் பின்வருமாறு ஒதுக்கப்பட்டுள்ளன:

(1) ஆபிரிக்க நாடுகள் – 13

(2) ஆசியா – பசிவிக் நாடுகள் – 13

(3) இலத்தீன் மற்றும் கரிபீன் நாடுகள் – 8

(4) மேற்கு ஐரோப்பிய நாடுகள் – 7

(5) கிழக்கு ஐரோப்பிய நாடுகள் – 6

ஒவ்வொரு நாடும் 3 ஆண்டுகள்  பதவியில்  நீடிக்கலாம். எந்தவொரு நாடும் தொடர்ச்சியாக இரண்டு முறை பணியாற்றிய பின்னர் உடனடியாக மறுதேர்தலுக்கு நிற்கத் தகுதியற்றவை.

இன்று ஐநாமஉ பேரவையில்  இல் உறுப்பினர்களாக இருக்கும் நாடுகளும் அவற்றின் காலவதியாகிற காலமும் பின்வருமாறு:

2021 இல் – அர்ஜென்டினா, ஆஸ்திரியா,  பஹாமாஸ், பஹ்ரைன், பங்களாதேஷ், பல்கேரியா, புர்கினா பாசோ, கேமரூன், செக்கியா, டென்மார்க், எரித்திரியா, பிஜி, இந்தியா, இத்தாலி, பிலிப்பைன்ஸ், சோமாலியா,  டோகோ, உருகுவே.

2022 இல்  – ஆர்மீனியா,  பிரேசில், இந்தோனேசியா, மார்ஷல் தீவுகள், மவுரித்தேனியா, நமீபியா, நெதர்லாந்து, போலந்து, கொரியா

குடியரசு, சூடான், வெனிசுலா (பொலிவரியன் குடியரசு).

2023 இல் – பொலிவியா, சீனா, கோட் டி ஐவோயர், கியூபா, பிரான்ஸ், காபோன், 2023, மலாவி, மெக்சிகோ, நேபாளம், பாகிஸ்தான்,  உருசிய கூட்டமைப்பு, செனகல், உக்ரைன், கிரேட் பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம், உஸ்பெகிஸ்தான்.

கடந்த காலங்களில் இலங்கை தொடர்பான தீர்மானங்களை ஐக்கிய இராச்சியம், கனடா, ஜெர்மனி, மொன்ரெனநீக்றோ, வடக்கு மசிடோனிய ஆகிய நாடுகள் முன்மொழிந்திருந்தன. அமெரிக்கா மனித உரிமைப் பேரவையில் இருந்து கடந்த யூன் 2018 இல்   வெளியேறியது தெரிந்ததே. அமெரிக்காவின் இடத்தை ஐக்கிய இராச்சியம் மற்றம் கனடா  நிரப்பியுள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை (ஐநாமஉபேரவை) அடுத்த மாதம் பெப்ரவரி  22  தொடங்கி மார்ச் 23 வரை  அதன் 46 வது அமர்வு நடைபெறயிருக்கிறது. புதிய தீர்மானங்களை பட்டியலிடுவதற்கான காலக்கெடு மார்ச் 18 வியாழக்கிழமை நண்பகலில் இடம் பெறும். இலங்கை இந்த முறை நிகழ்ச்சி நிரலில் உள்ளது.

மொத்தம் 47 நாடுகளைக் கொண்ட ஐநாமஉபே  15 மார்ச்,  2006 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. அதற்கு முன்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம்  (The United Nations Commission on Human Rights (UNCHR) என்ற பெயரில் 1946  தொடக்கம் இயங்கி வந்தது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையர் (Office of the United Nations High Commissioner for Human Rights, OHCHR) என்பது பன்னாட்டுச் சட்டங்களுக்கு அமைய, 1948 ஆம் ஆண்டில்  ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பிரகடனத்திற்கு அமைய மனித உரிமைகளைப் பேணவும் அதன் மேன்மைக்காக உழைக்கவும்  உருவாக்கப்பட்ட ஓர் ஐக்கிய நாடுகள் நிறுவனமாகும்.

இந்த நாடுகள் சமமான புவியியல் பங்கீட்டை அடிப்படையாகக் கொண்டது. இருக்கைகள் பின்வருமாறு ஒதுக்கப்பட்டுள்ளன:

(1) ஆபிரிக்க நாடுகள் – 13

(2) ஆசியா – பசிவிக் நாடுகள் – 13

(3) இலத்தீன் மற்றும் கரிபீன் நாடுகள் – 8

(4) மேற்கு ஐரோப்பிய நாடுகள் – 7

(5) கிழக்கு ஐரோப்பிய நாடுகள் – 6

ஒவ்வொரு நாடும் 3 ஆண்டுகள்  பதவியில்  நீடிக்கலாம். எந்தவொரு நாடும் தொடர்ச்சியாக இரண்டு முறை பணியாற்றிய பின்னர் உடனடியாக மறுதேர்தலுக்கு நிற்கத் தகுதியற்றவை.

இன்று ஐநாமஉ பேரவையில்  இல் உறுப்பினர்களாக இருக்கும் நாடுகளும் அவற்றின் காலவதியாகிற காலமும் பின்வருமாறு:

2021 இல் – அர்ஜென்டினா, ஆஸ்திரியா,  பஹாமாஸ், பஹ்ரைன், பங்களாதேஷ், பல்கேரியா, புர்கினா பாசோ, கேமரூன், செக்கியா, டென்மார்க், எரித்திரியா, பிஜி, இந்தியா, இத்தாலி, பிலிப்பைன்ஸ், சோமாலியா,  டோகோ, உருகுவே.

2022 இல்  – ஆர்மீனியா,  பிரேசில், இந்தோனேசியா, மார்ஷல் தீவுகள், மவுரித்தேனியா, நமீபியா, நெதர்லாந்து, போலந்து, கொரியா குடியரசு, சூடான், வெனிசுலா (பொலிவரியன் குடியரசு).

2023 இல் – பொலிவியா, சீனா, கோட் டி ஐவோயர், கியூபா, பிரான்ஸ், காபோன், 2023, மலாவி, மெக்சிகோ, நேபாளம், பாகிஸ்தான்,  உருசிய கூட்டமைப்பு, செனகல், உக்ரைன், கிரேட் பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம், உஸ்பெகிஸ்தான்.

கடந்த காலங்களில் இலங்கை தொடர்பான தீர்மானங்களை ஐக்கிய இராச்சியம், கனடா, ஜெர்மனி, மொன்ரெனநீக்றோ, வடக்கு மசிடோனிய ஆகிய நாடுகள் முன்மொழிந்திருந்தன. அமெரிக்கா மனித உரிமைப் பேரவையில் இருந்து கடந்த யூன் 2018 இல்   வெளியேறியது தெரிந்ததே. அமெரிக்காவின் இடத்தை ஐக்கிய இராச்சியம் மற்றம் கனடா  நிரப்பியுள்ளன.

ஐநா மனித உரிமை உயர்  ஆணையருக்கு பல கடமைகள் உண்டு. அனைவருக்குமான மனித உரிமைகளை மேம்படுத்துவதும்  பாதுகாப்பதும் அவரது பொறுப்பாககும். இவரது அலுவலகம் மனித உரிமைகள் தொடர்பான கடமைகளை நிறைவேற்றுவதில் அரசாங்கங்களுடன் இணைந்து செயல்படுகிறது. உலகளவில் மனித உரிமை மீறல்களை எதிர்கொண்டு இன்றைய மனித உரிமைச் சவால்களுக்கான பதில்களை அடையாளம் காணவும், முன்னிலைப்படுத்தவும், வளர்க்கவும் பாடுபடுகிறது.

மேலும் மனித உரிமைகள் ஆராய்ச்சி, கல்வி, பொதுத் தகவல் மற்றும் மேம்படுத்தல் நடவடிக்கைகளின் முக்கிய மையப் புள்ளியாகவும் உலகெங்கிலும் மனித உரிமைகளுக்கான களத்தை விரிவுபடுத்துவதற்காக பரந்த அளவில்  நாடுகளுடன் இணைந்து செயல்படுகிறது.

மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான முதன்மைப்  பொறுப்பு அரசாங்கங்களுக்கு இருப்பதால், மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் மற்றும் அவரது அலுவலகம் அரசாங்கங்களுக்கு உதவிகளை வழங்குகின்றன.  இதனால் உயர் ஆணையர் உறுதியளித்த சர்வதேச மனித உரிமைத் தரங்களை உயர்வுபடுத்த முடியும். நீதி நிருவாகம், சட்டமன்ற சீர்திருத்தம் மற்றும் தேர்தல் செயல்முறைகள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு  நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சிகள் போன்றவற்றை அளிக்கிறது.

கடந்த செப்தெம்பர் 1 2018 அன்று ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ கட்டெரஸ் மனித உரிமைகளுக்கான  ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையராக   மிச்செல் பச்சலெட் (Michelle Bachelet) அவர்களை நியமித்தார். அதற்கு முன்னர் இளவரசர்  ஜீத் ராத் அல் ஹுசைன் அந்தப் பதவியில் நான்கு ஆண்டுகள் இருந்தார்.

மிச்செல் பச்சலெட்  29 செப்டம்பர் 1951 இல் பிறந்தவர். இவர், சிலி நாட்டின் சனாதிபதி பதவியை வகித்த முதல் பெண்மணி ஆவார். 2010 இல் சனாதிபதி பதவியில் இருந்து விலகிய பின்னர், உடனடியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்படாத நிலையில், பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அதிகாரம் பெறுவதற்காக புதிதாக உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் முதல் நிருவாக இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

பல்கலைக் கழக மட்டத்தில் இராணுவ மூலோபாயத்தைப் படித்த மருத்துவரான மிச்செல் பச்சலெட் நல்வாழ்வு அமைச்சராகவும் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்திருக்கிறார். அவர் தன்னை ஒரு அஞ்ஙானவாதி  (agnostic)  என்று வருணிக்கிறார்.  தனது சொந்தத் தாய்மொழியான ஸ்பானிஷ் தவிர, ஆங்கிலம், ஜெர்மன் மற்றும் போர்த்துக்கீசிய மொழிகளைச்  சரளமாகப் பேசக் கூடியவர்.

ஐநா மனித உரிமை அலுவலக உயர் ஆணையர் ஐநா அமைப்பு முழுவதற்கும் மனித உரிமைகளுக்காகப் பேசும் அதிகாரம் படைத்தவர் ஆவர்.  ஐநா மனித உரிமை  உயர்ஆணையர் அலுவலகம்  வணிக மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐநா  செயற்குழு மற்றும் சர்வதேச அரசு செயற்குழு ஆகியவற்றுடன் பணியாற்றுகிறது.

ஜெனீவாவில்  அடுத்த மாதம்  இடம்பெறவுள்ள ஐநாமஉ பேரவையின் 46 ஆவது அமர்வில் ஐநா சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையர் மிச்செல் பச்சலெட் இலங்கை குறித்த தனது அறிக்கையில்  கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். எதிர்பார்த்தது போலவே முன்னரைவிட இம்முறை அவர் 17 பக்க காரசாரமான அறிக்கை ஒன்றை இலங்கையின் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனாவிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்.  அதில் ஏதாவது கருத்துப் பிழை அல்லது சட்டத் தவறுகள் இருந்தால் அதைச் சுட்டிக்காட்டலாம் என ஆணையர் தெரிவித்துள்ளார்.  அதற்கான பதில் இந்த வாரம் ஜெனீவாவுக்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரியவருகிறது.

பொதுவாக இதுபோன்ற அறிக்கை வெளிவராமல் இரகசியம் காக்கப்படுவது மரபாகும். ஆனால் வெளியுறவு அமைச்சு அதனை ஊடகங்களுக்குக்  கசிய விட்டுள்ளது. அந்த அறிக்கையைப் பின்னர் படித்துவிட்டு மக்கள் அதிர்ச்சி அடைவதைத் தவிர்ப்பதற்காகவே அதனை முன்கூட்டியே வெளியுறவு கசிய விட்டுள்ளது என்கிறார்கள். அந்த அறிக்கையில்:

2015 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட 30/1 மற்றும் 40/1 தீர்மானங்களின் அடிப்படையில் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்.  முந்தைய அரசாங்கத்தின் கீழ் இந்தத் தீர்மானங்களுக்கு இலங்கை இணை அனுசரணை  வழங்கியிருந்தது.  இருப்பினும், சனாதிபதி கோட்டாபய இராசபச்ச தலைமையிலான புதிய அரசாங்கம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இணை அனுசரணையில் இருந்து விலகியது. அப்படி இலங்கை விலக்கிக் கொண்டாலும் தீர்மானங்கள் உயிர்ப்போது தொடர்ந்து இருக்கும்.

2030 நிகழ்ச்சி நிரலுக்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை உயர் ஆணையர் வரவேற்கிறார், அமைதி கட்டமைத்தல் மற்றும் மறுசீரமைத்தல் போன்ற சில நடவடிக்கைகளைத் தொடர வேண்டும் என்கிறார்.

ஆனால், இலங்கை நல்லிணக்கத்தை உறுதிசெய்து, நிறுவனமயமாக்கப்பட்ட மற்றும் முறையான தண்டனையற்ற கலாசாரத்தைத் திறம்பட நிவர்த்தி செய்தால் மட்டுமே நிலையான வளர்ச்சி மற்றும் அமைதியை அடைய முடியும்.

எவ்வாறாயினும் தீர்மானம் 30/1 மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கான ஆதரவைத் திரும்பப் பெற்றதன் மூலமும், அந்தத் தீர்மானத்தின் முழு அளவிலான அர்த்தமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியதன் மூலமும், உள்நாட்டுப் பொறிமுறை மூலமாக உண்மையை வெளிக்கொணர்வதற்கான சாத்தியப்பாட்டை அரசாங்கம் பெருமளவில் மூடிவிட்டது என்கிறார்.

அத்துடன், அண்மைக்காலமாக போக்குகளைப் பார்க்கும்போது, ​​அரசாங்கத்தின் புதிய முயற்சிகளில் முன்னேற்றம் உட்பட இலங்கையில் மனித உரிமைகள் நிலைமையைக் கண்காணிப்பதை மேம்படுத்தவும், பொறுப்புக்கூறல் விடயங்களை முன்னேற்றுவதற்கான ஒரு ஒத்திசைவான மற்றும் பயனுள்ள திட்டத்தை வகுக்கவும் சர்வதேச மட்டத்தில் மனித உரிமைகள் பேரவையை உயர் ஆணையர் அழைக்கிறார்.

குற்றவியல் பொறுப்புணர்வை முன்னெடுப்பதற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நடவடிக்கைகளை வழங்குவதற்கும் உறுப்பு நாடுகளுக்கு பல கடமைகள் உள்ளன.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு மட்டுமல்லாமல், இலங்கையில் உள்ள அனைத்துத் தரப்பினரும் செய்த குற்றங்களை விசாரிப்பதற்கும், வழக்குத் தொடுப்பதற்கும் உறுப்பு நாடுகள் தீவிர நடவடிக்கையைத் தொடர வேண்டும். (https://www.aljazeera.com/news/2021/1/27/un-rights-chief-seeks-sanctions-against-sri-lankan-generals-afp)

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு முன் நிறுத்தி போர்க் குற்றம், மனித உரிமை மீறல் மற்றும் மானிடத்துக்கு எதிரான குற்றம் இழைத்தவர்களைத் தண்டிக்கப்பட வேண்டும் என்பது தமிழர்களது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.

ஐக்கிய நாடு பாகாப்புச் சபையில் 15 உறுப்பு நாடுகள் இருக்கின்றன. அதில் சீனா, உருசியா உட்பட ஐந்து நாடுகளுக்கு தடுப்பு (வீட்டோ) உரிமை இருக்கிறது.

இலங்கையை  சர்வதேச குற்றவியல்  நீதிமன்றத்திற்கு முன் நிறுத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை சீனா தனக்குள்ள தடுப்பு வாக்கு மூலம் தோற்கடிக்கும் என்பதுதான் யதார்த்தம். ஏற்கனவே சீனா, இலங்கையைப் பாதுகாக்கும் எனக் கூறிவிட்டது. இருந்தும்  அமெரிக்கா, ஐக்கியராச்சியம் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் முயற்சித்துப் பார்க்கலாம்.

opsrilanka : In the rememberance of Massacre on Tamils in Tamil Eelam

ஆனால், இலங்கை நல்லிணக்கத்தை உறுதிசெய்து, நிறுவன மயமாக்கப்பட்ட மற்றும் முறையான தண்டனையற்ற கலாசாரத்தைத் திறம்பட நிவர்த்தி செய்தால் மட்டுமே நிலையான வளர்ச்சி மற்றும் அமைதியை அடைய முடியும்.

எவ்வாறாயினும் தீர்மானம் 30/1 மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கான ஆதரவைத் திரும்பப் பெற்றதன் மூலமும், அந்தத் தீர்மானத்தின் முழு அளவிலான அர்த்தமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியதன் மூலமும், உள்நாட்டுப் பொறிமுறை மூலமாக உண்மையை வெளிக்கொணர்வதற்கான சாத்தியப்பாட்டை அரசாங்கம் பெருமளவில் மூடிவிட்டது என்கிறார்.

அத்துடன், அண்மைக்காலமாக போக்குகளைப் பார்க்கும்போது, ​​அரசாங்கத்தின் புதிய முயற்சிகளில் முன்னேற்றம் உட்பட இலங்கையில் மனித உரிமைகள் நிலைமையைக் கண்காணிப்பதை மேம்படுத்தவும், பொறுப்புக்கூறல் விடயங்களை முன்னேற்றுவதற்கான ஒரு ஒத்திசைவான மற்றும் பயனுள்ள திட்டத்தை வகுக்கவும் சர்வதேச மட்டத்தில் மனித உரிமைகள் பேரவையை உயர் ஆணையர் அழைக்கிறார்.

குற்றவியல் பொறுப்புணர்வை முன்னெடுப்பதற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நடவடிக்கைகளை வழங்குவதற்கும் உறுப்பு நாடுகளுக்கு பல கடமைகள் உள்ளன.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு மட்டுமல்லாமல், இலங்கையில் உள்ள அனைத்துத் தரப்பினரும் செய்த குற்றங்களை விசாரிப்பதற்கும், வழக்குத் தொடுப்பதற்கும் உறுப்பு நாடுகள் தீவிர நடவடிக்கையைத் தொடர வேண்டும். (https://www.aljazeera.com/news/2021/1/27/un-rights-chief-seeks-sanctions-against-sri-lankan-generals-afp)

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு முன் நிறுத்தி போர்க் குற்றம், மனித உரிமை மீறல் மற்றும் மானிடத்துக்கு எதிரான குற்றம் இழைத்தவர்களைத் தண்டிக்கப்பட வேண்டும் என்பது தமிழர்களது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.

ஐக்கிய நாடு பாகாப்புச் சபையில் 15 உறுப்பு நாடுகள் இருக்கின்றன. அதில் சீனா, உருசியா உட்பட ஐந்து நாடுகளுக்கு தடுப்பு (வீட்டோ) உரிமை இருக்கிறது.

இலங்கையை  சர்வதேச குற்றவியல்  நீதிமன்றத்திற்கு முன் நிறுத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை சீனா தனக்குள்ள தடுப்பு வாக்கு மூலம் தோற்கடிக்கும் என்பதுதான் யதார்த்தம். ஏற்கனவே சீனா, இலங்கையைப் பாதுகாக்கும் எனக் கூறிவிட்டது. இருந்தும்  அமெரிக்கா, ஐக்கியராச்சியம் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் முயற்சித்துப் பார்க்கலாம்.

தீர்மானம் வெற்றிபெறா விட்டாலும் இலங்கையை ஒரு உளவியல் ரீதியான தாக்குதலுக்கு உட்படுத்தலாம்.

About editor 2996 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply