நரபலி கொடுக்கப்பட்ட சிறுமி: மூடநம்பிக்கையால் மகளையே கொலை செய்த தந்தை

நரபலி கொடுக்கப்பட்ட சிறுமி: மூடநம்பிக்கையால் மகளையே கொலை செய்த தந்தை

4 யூன் 2020

கந்தர்வகோட்டை சிறுமி நரபலி மகளையே கொலை செய்த தந்தை

புதையல் கிடைக்க வேண்டும் மற்றும் சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக மந்திரவாதி ஒருவரின் பேச்சைக் கேட்டு 13 வயது மகளை தந்தையே நரபலி கொடுத்த சம்பவம் புதுக்கோட்டையில் நிகழ்ந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே நொடியூர் கிராமத்தை சேர்ந்த பன்னீர் கட்டட வேலை செய்து வருகிறார். இவருக்கு இரு மனைவிகள் உள்ளனர்.

முதல் மனைவி இந்திராவுக்கு மூன்று பெண் குழந்தைகளும், ஓர் ஆண் குழந்தையும் உள்ளனர். இரண்டாவது மனைவி மூக்காயிக்கு இரு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

கடந்த மே 18ஆம் தேதி பன்னீரின் முதல் மனைவியான இந்திராவின் இளைய மகள் வித்யா (13) அருகில் உள்ள பிடாரி கோவில் குளத்தில் தண்ணீர் எடுக்க சென்றார். வெகுநேரமாகியும் அவரைக் காணாததால் பெற்றோரும் உறவினர்களும் வித்யாவைத் தேடினர்.

சிறுமி கொலை செய்யப்பட்டது எப்படி?

அப்போது பாப்பான்குளம் அருகேயுள்ள தைல மரக்காட்டு பகுதியில் வித்யா ஆடைகள் கிழிந்த நிலையில், முகத்தில் காயத்துடன், கழுத்து இறுக்கப்பட்டு மயங்கி கிடந்துள்ளார்.

இரு மனைவிகளைக் கொண்ட பன்னீர் கட்டட வேலை செய்து வந்தார்.
படக்குறிப்பு,இரு மனைவிகளைக் கொண்ட பன்னீர் கட்டட வேலை செய்து வந்தார்.

இதனைக் கண்ட உறவினர்கள் மற்றும் அப்பகுதியினர் சிறுமி வித்யாவை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த மே19-ம் தேதி வித்யா உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக கந்தர்வகோட்டை மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வித்யா, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்தது.

ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்பது உறுதியானது.

காவல்துறை விசாரணையில் வித்யாவின் அப்பா பன்னீர், முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் பன்னீரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் தானும் தனது இரண்டாவது மனைவியும் சேர்ந்து பணப் பிரச்சனையைத் தீர்க்க புதுக்கோட்டையை சேர்ந்த மந்திரவாதியான வசந்தியின் பேச்சை கேட்டு தனது மகளை நரபலி கொடுத்ததாக ஒப்புக் கொண்டதையடுத்து பன்னீரை கடந்த ஜீன் 01ம் தேதி போலீசார் கைது செய்தனர்.

மேலும், இவருக்கு உடந்தையாக இருந்த உறவினர் குமார் தெம்மாவூர் கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்தார். இந்த கொலைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள், சேலை, துண்டு மற்றும் செல்போன்கள் கைப்பற்றப்பட்டன.

கொலைக்கு உடந்தையாக இருந்த உறவினர் குமார்
படக்குறிப்பு,கொலைக்கு உடந்தையாக இருந்த உறவினர் குமார்

பன்னீருக்கு ஆசை வார்த்தை காட்டி மகளை நரபலி கொடுக்க சொன்ன மந்திரவாதி வசந்தி மற்றும் உறவினர் முருகாயியை போலீசார் தேடி வந்த நிலையில் இன்று (04.06.2020) அதிகாலை இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இரண்டாவது மனைவி மர்ம மரணம்

இதனிடையே வித்யாவை நரபலி கொடுக்க உடந்தையாக இருந்த பன்னீரின் இரண்டாவது மனைவி மூக்காயி வடுகவயலில் உள்ள தனது அம்மா வீட்டில் கடந்த மே 31 அன்று மர்மமான முறையில் இறந்துள்ளார். மூக்காயின் மரணம் குறித்தும், உடையாளிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கின் விசாரணையில் என்ன நடந்தது என்பது குறித்து பிபிசி தமிழிடம் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் விரிவாக பேசினார்.

“பன்னீர் தனது வறுமை மற்றும் பண ஆசை காரணமாக மந்திரவாதியான வசந்தியிடம் ஆலோசனை கேட்டுள்ளார் அப்போது மந்திரவாதி ‘உன் மகளை நரபலி கொடுத்தால் உனக்கு பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும், புதையல் கிடைக்கும், செல்வாக்கு பெருகும்’ எனக் கூறியதால் அதனை நம்பி மகளை நரபலி கொடுக்க திட்டமிட்டுள்ளார்.”

‘பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும்’

“கடந்த மே மாதம் 17ம் தேதி நள்ளிரவு பிடாரி அம்மன் கோயில் அருகே பூஜை செய்துள்ளனர். மறுநாள் காலை 7 மணியளவில் பன்னீர் தனது இரு மகள்களிடம் பிடாரி அம்மன் கோயிலுக்கு சென்று தண்ணீர் எடுத்து வரும்படி கூறியுள்ளார். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் இளைய மகள் வித்யா ‘அக்கா நீ வர வேண்டாம் வீட்டில் இரு, நான் போய் தண்ணீர் எடுத்து விட்டு வருகிறேன்’ என சொல்லி விட்டு குடத்துடன் சென்றுள்ளார்.”

“சிறுமியை பின் தொடர்ந்து சென்ற பன்னீர், தனியாக பேச வேண்டும் என்று தைல மரக்காட்டின் அடர்ந்த பகுதிக்கு அழைத்துச் சென்று சிறுமி தண்ணீர் சுமக்க கொண்டு வந்த துண்டால் கழுத்தை நெரித்துள்ளார். அப்போது அந்த காட்டில் மறைந்திருந்த பன்னீரின் உறவினர் குமார், பன்னீர் இரண்டாவது மனைவி மூக்காயி, மந்திரவாதி வசந்தி, ஆகியோர் சிறுமியின் கை, கால்களை இறுக்கமாக பிடித்து மூச்சு திணற செய்துள்ளனர்.”

கந்தர்வகோட்டை சிறுமி நரபலி மகளையே கொலை செய்த தந்தை
படக்குறிப்பு,நள்ளிரவு பூஜை நடந்த பிடாரி அம்மன் கோயில் மற்றும் அதன் அருகே உள்ள குளம்

“சிறுமி உயிரிழந்ததை உறுதி செய்த பின்னர் மூக்காயியை மட்டும் அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு மந்திரவாதி உள்ளிட்ட அனைவரையும் அனுப்பிவைத்துள்ளார் பன்னீர்.”

“பின்னர் யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க பாலியல் தொந்தரவால் நிகழ்ந்த சம்பவம் போல இருக்க வேண்டும் என்று நம்ப வைப்பதற்காக பன்னீர் தனது மகளின் ஆடைகளை களைந்து, உள்ளாடையைக் கழற்றி அப்பகுதியில் போலீசார், பொதுமக்களுக்கு கண்ணில் படும்படி வீசி எறிந்துவிட்டு மகள் இறந்து விட்டதாக நினைத்து ஒன்றும் நடக்காதது போல வீட்டிற்கு சென்றுவிட்டார்.”

“ஆனால், சிறுமி இறக்காமல் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தததை கண்ட உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் அங்கு சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.”

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார்
படக்குறிப்பு,புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார்

“பன்னீர் நீண்ட நாட்களாக மிகவும் ஆழமாக திட்டமிட்டு இந்த கொலையை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் மகளை கொன்ற பதற்றம் சிறுதளவும் இல்லாமல் ஊர் மக்கள் சந்தேகப்படாத வகையில் இருந்துள்ளார். மகள் இறந்த அடுத்த நாள் பன்னீர் தினசரி செல்லும் இடங்களுக்கு சென்று அங்கு உள்ளவர்களிடம் தான் கவலைப்படாததை போல் சகஜமாக பழகியுள்ளார்.”

‘மந்திரவாதிகள் மனநோயாளிகள்’

நரபலி சம்பவம் குறித்து சென்னையை சேர்ந்த மன நல மருத்துவர் சிவபாலன் பிபிசி தமிழிடம், “அந்த சிறுமியின் தந்தை யாரை பற்றியும் கவலைப்படாமல், தன்னை பற்றி மட்டுமே யோசிக்கும் ஒரு சுய நலவாதியாகத் தான் இருந்திருப்பார், தனது பிரச்சனை சரியாக வேண்டும் என்பதற்காக பெற்ற குழந்தைகளை கூட கொலை செய்ய தயாராகியுள்ளார் என்றால் அவர் ஆளுமையற்றவர் என்பது தெரிய வருகிறது. இவர் இந்த கொலையை நீண்ட நாட்களாய் திட்டமிட்டுத்தான் செய்து இருக்க வேண்டும்.”

“இப்படியான மன நிலையில் உள்ளவர்களை கண்டுபிடிப்பது சிரமம் ஆனால் அவர்களுடன் மிக நெருக்கமாக இருப்பவர்கள் மட்டும் இதனை எளிதில் கண்டுபிடித்து விடலாம்,” என்று கூறினார்.

மந்திரவாதி வசந்தி நிச்சயம் ஒரு மனநோயாளி காரணம் மூட நம்பிக்கையால் இல்லாத ஒன்றை இருப்பதாக நம்பி, ஒரு கட்டத்தில் மன நலம் பாதிக்கப்பட்டவராகவே மாறிவிடுகிறார்கள். மக்களின் மூட நம்பிக்கையை முதலாக்கி பேய், பூதம், புதையல் என மோசடி செய்துவரும் மந்திரவாதிகளை கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் மன நல மருத்துவர் சிவபாலன்.

https://www.bbc.com/tamil/india-52917435

————————————————————————————————————-

சொர்க்கத்திலிருந்து தகவல் வந்தது! உலகம் முழுவதும்.. 2 மகள்களை நிர்வாணமாக்கி நரபலி தந்த பெற்றோர் வெளியிட்ட புதிய அதிர்ச்சி தகவல் –

இந்தியாவில் நன்கு படித்த பெற்றோர் தங்களது இரண்டு மகள்களை நரபலி கொடுத்த சம்பவத்தில் புதிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலத்தின் மதனப்பள்ளியைச் சேர்ந்த தம்பதி, புருசோத்தம் நாயுடு- பத்மஜா.எம்.எஸ்சி., பிஎச்டி பட்டம் பெற்ற புருசோத்தம், மதனப்பள்ளி அரசு மகளிர் கல்லூரியில் துணை முதல்வராக இருக்கிறார்.

முதுநிலை பட்டதாரியான பத்மஜா, பல்கலைக்கழகத்தில் சிறந்த மாணவியாக தங்கப்பதக்கம் பெற்றவர்.இவர் உள்ளூர் தனியார் பள்ளி ஒன்றில் தாளாளர் மற்றும் முதல்வராக இருக்கிறார்.

இந்த தம்பதிக்கு 2 மகள்கள். அவர்களில் மூத்தவரான அலேக்கியா (27) முதுநிலை பட்டப்படிப்பு பயின்று வந்தார். இளைய மகள் சாய் திவ்யா (22), சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் கே.எம். இசைக்கல்லூரியில் பயின்று வந்ததாகக் கூறப்படுகிறது.

முதுநிலை பட்டதாரியான பத்மஜா, பல்கலைக்கழகத்தில் சிறந்த மாணவியாக தங்கப்பதக்கம் பெற்றவர்.

இவர் உள்ளூர் தனியார் பள்ளி ஒன்றில் தாளாளர் ம

ற்றும் முதல்வராக இருக்கிறார்.இந்த தம்பதிக்கு 2 மகள்கள். அவர்களில் மூத்தவரான அலேக்கியா (27) முதுநிலை பட்டப்படிப்பு பயின்று வந்தார். இளைய மகள் சாய் திவ்யா (22), சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் கே.எம். இசைக்கல்லூரியில் பயின்று வந்ததாகக் கூறப்படுகிறது.

கொரோனா விடுமுறை காரணமாக மகள்கள் இருவரும் மதனப்பள்ளியில் பெற்றோருடன் தங்கியிருந்தனர்.

இந்நிலையில், புருசோத்தமும், பத்மஜாவும் நேற்று முன்தினம் இரவு 2 மகள்களின் சம்மதத்துடன் வீட்டில் வைத்து பூஜை செய்திருக்கின்றனர். அப்போது ஒரு மகளுக்கு தலையை முழுவதுமாக மொட்டை அடித்திருக் கின்றனர். பின்னர், பாசத்தாய் பத்மஜா, ஒரு சூலாயுதத்தால் இளைய மகளை குத்திக்கொன்றிருக்கிறார். தொடர்ந்து, மூத்த மகளை ஒரு உடற்பயிற்சி எடைக்கருவியால் துடிதுடிக்க தாக்கி உயிரைப் பறித்திருக்கிறார்.

இருவரும் நிர்வாணமாக்கி கொல்லப்பட்டனர். அதையெல்லாம், தந்தை புருசோத்தம் அமைதியாக வேடிக்கை பார்த்திருக்கிறார்.

சரத்த வெள்ளத்தில் மகள்கள் மாண்டபின், அதுகுறித்து புருசோத்தமே தன்னுடன் பணிபுரியும் ஒருவருக்கு தொலைபேசியில் கூறியிருக்கிறார்.

அதிர்ச்சி அடைந்தபோன அவர்கள், உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். விரைந்து சென்று புருசோத்தம் வீட்டை அடைந்த பொலிசார் உயிரற்ற சடலங்களாக இரு பெண்களையும் கண்டனர். சுற்றிலும் பல பூஜைப்பொருட்கள் காணப்பட்டன.

அப்போது கோபப்பட்ட கொடூர தாய்-தந்தை, ஏன் எங்கள் பூஜைக்கு நடுவில் வந்தீர்கள்? ஒருநாள் பொறுத்தால் தங்கள் மகள்கள் மீண்டும் உயிர்பெற்று விடுவார்கள் என்று கூறி அதிரவைத்துள்ளனர்.

மேலும் தனது இளையமகளின் தலைக்குள் தீயசக்தி இருந்தது எனவும் கூறினர்.அப்போது அவர்கள் இருவரும் சிவப்பு நிற ஆடையில் இருந்துள்ளனர்.கணவன்-மனைவியை கைது செய்த பொலிசார் 2 பெண்களின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

பொலிசாரிடம் தம்பதி கூறுகையில், எங்களுக்கு சொர்க்கத்திலிருந்து தகவல் வந்தது, இது அற்புதங்களின் வீடு. நிகழும் அற்புதத்துக்கு பிறகு உலகம் முழுவதும் நாங்கள் பேசப்படுவோம் என கூறியுள்ளனர்.

இதனிடையில் மகள்களை கொன்றபின், தாங்களும் தற்கொலை செய்துகொள்ள புருசோத்தமும், பத்மஜாவும் முடிவு செய்திருந்ததாகவும், மகள்களுடன் தாங்களும் திரும்பவும் உயிர்பெற்று விடுவோம் என்று நம்பிக் கொண்டிருந்ததாகவும் தெரிகிறது. ஆனால் பொலிசார் உடனடியாக அவர்கள் வீட்டுக்கு சென்றுவிட்டதால் தற்கொலை தடுக்கப்பட்டுவிட்டது.

சொர்க்கத்திலிருந்து தகவல் வந்தது! உலகம் முழுவதும்.. 2 மகள்களை நிர்வாணமாக்கி நரபலி தந்த பெற்றோர் வெளியிட்ட புதிய அதிர்ச்சி தகவல் –

இந்தியாவில் நன்கு படித்த பெற்றோர் தங்களது இரண்டு மகள்களை நரபலி கொடுத்த சம்பவத்தில் புதிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலத்தின் மதனப்பள்ளியைச் சேர்ந்த தம்பதி, புருசோத்தம் நாயுடு- பத்மஜா.எம்.எஸ்சி., பிஎச்டி பட்டம் பெற்ற புருசோத்தம், மதனப்பள்ளி அரசு மகளிர் கல்லூரியில் துணை முதல்வராக இருக்கிறார்.

முதுநிலை பட்டதாரியான பத்மஜா, பல்கலைக்கழகத்தில் சிறந்த மாணவியாக தங்கப்பதக்கம் பெற்றவர்.இவர் உள்ளூர் தனியார் பள்ளி ஒன்றில் தாளாளர் மற்றும் முதல்வராக இருக்கிறார்.

இந்த தம்பதிக்கு 2 மகள்கள். அவர்களில் மூத்தவரான அலேக்கியா (27) முதுநிலை பட்டப்படிப்பு பயின்று வந்தார். இளைய மகள் சாய் திவ்யா (22), சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் கே.எம். இசைக்கல்லூரியில் பயின்று வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில் நன்கு படித்த பெற்றோர் தங்களது இரண்டு மகள்களை நரபலி கொடுத்த சம்பவத்தில் புதிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலத்தின் மதனப்பள்ளியைச் சேர்ந்த தம்பதி, புருசோத்தம் நாயுடு- பத்மஜா.எம்.எஸ்சி., பிஎச்டி பட்டம் பெற்ற புருசோத்தம், மதனப்பள்ளி அரசு மகளிர் கல்லூரியில் துணை முதல்வராக இருக்கிறார்.

முதுநிலை பட்டதாரியான பத்மஜா, பல்கலைக்கழகத்தில் சிறந்த மாணவியாக தங்கப்பதக்கம் பெற்றவர்.

இவர் உள்ளூர் தனியார் பள்ளி ஒன்றில் தாளாளர் மற்றும் முதல்வராக இருக்கிறார்.இந்த தம்பதிக்கு 2 மகள்கள். அவர்களில் மூத்தவரான அலேக்கியா (27) முதுநிலை பட்டப்படிப்பு பயின்று வந்தார். இளைய மகள் சாய் திவ்யா (22), சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் கே.எம். இசைக்கல்லூரியில் பயின்று வந்ததாகக் கூறப்படுகிறது.

கொரோனா விடுமுறை காரணமாக மகள்கள் இருவரும் மதனப்பள்ளியில் பெற்றோருடன் தங்கியிருந்தனர்.

இந்நிலையில், புருசோத்தமும், பத்மஜாவும் நேற்று முன்தினம் இரவு 2 மகள்களின் சம்மதத்துடன் வீட்டில் வைத்து பூஜை செய்திருக்கின்றனர். அப்போது ஒரு மகளுக்கு தலையை முழுவதுமாக மொட்டை அடித்திருக் கின்றனர். பின்னர், பாசத்தாய் பத்மஜா, ஒரு சூலாயுதத்தால் இளைய மகளை குத்திக்கொன்றிருக்கிறார். தொடர்ந்து, மூத்த மகளை ஒரு உடற்பயிற்சி எடைக்கருவியால் துடிதுடிக்க தாக்கி உயிரைப் பறித்திருக்கிறார்.

இருவரும் நிர்வாணமாக்கி கொல்லப்பட்டனர். அதையெல்லாம், தந்தை புருசோத்தம் அமைதியாக வேடிக்கை பார்த்திருக்கிறார்.

சரத்த வெள்ளத்தில் மகள்கள் மாண்டபின், அதுகுறித்து புருசோத்தமே தன்னுடன் பணிபுரியும் ஒருவருக்கு தொலைபேசியில் கூறியிருக்கிறார்.

அதிர்ச்சி அடைந்தபோன அவர்கள், உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். விரைந்து சென்று புருசோத்தம் வீட்டை அடைந்த பொலிசார் உயிரற்ற சடலங்களாக இரு பெண்களையும் கண்டனர். சுற்றிலும் பல பூஜைப்பொருட்கள் காணப்பட்டன.

அப்போது கோபப்பட்ட கொடூர தாய்-தந்தை, ஏன் எங்கள் பூஜைக்கு நடுவில் வந்தீர்கள்? ஒருநாள் பொறுத்தால் தங்கள் மகள்கள் மீண்டும் உயிர்பெற்று விடுவார்கள் என்று கூறி அதிரவைத்துள்ளனர்.

மேலும் தனது இளையமகளின் தலைக்குள் தீயசக்தி இருந்தது எனவும் கூறினர்.அப்போது அவர்கள் இருவரும் சிவப்பு நிற ஆடையில் இருந்துள்ளனர்.கணவன்-மனைவியை கைது செய்த பொலிசார் 2 பெண்களின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

பொலிசாரிடம் தம்பதி கூறுகையில், எங்களுக்கு சொர்க்கத்திலிருந்து தகவல் வந்தது, இது அற்புதங்களின் வீடு. நிகழும் அற்புதத்துக்கு பிறகு உலகம் முழுவதும் நாங்கள் பேசப்படுவோம் என கூறியுள்ளனர்.

இதனிடையில் மகள்களை கொன்றபின், தாங்களும் தற்கொலை செய்துகொள்ள புருசோத்தமும், பத்மஜாவும் முடிவு செய்திருந்ததாகவும், மகள்களுடன் தாங்களும் திரும்பவும் உயிர்பெற்று விடுவோம் என்று நம்பிக் கொண்டிருந்ததாகவும் தெரிகிறது. ஆனால் பொலிசார் உடனடியாக அவர்கள் வீட்டுக்கு சென்றுவிட்டதால் தற்கொலை தடுக்கப்பட்டுவிட்டது.

பத்மஜாவுக்கு வலிப்புநோய் உள்ளதாகவும், அதற்கு பல இடங்களில் சிகிச்சை பெற்றும் சரியாகவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், மகள்களை நரபலி கொடுத்தால் தாய்க்கு வலிப்பு சரியாகும் என்று கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு சாமியார் கூறிய ஆலோசனையின் பேரில் அவர்கள் இந்த முட்டாள்தனமான முடிவுக்கு வந்ததாகவும் ஒரு பகீர் தகவல் தற்போது வெளியாகியுள்ளதுஃ

About editor 3087 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply